அல்லாஹ்வின் பேரருளால் தாருல் மராஷித் என்ற நிறுவனம் மர்ஹூம் மௌலானா முஹ்யுத்தீன் ஸாஹிப் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் பெரும் முயற்சியால் அவர்களுடைய சகோதரர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்போடு ஹிஜ்ரீ 1423 (கி.பி. 2002)-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஹஜ்ரத் மர்ஹூம் அவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்களின் நேர்வழிக்காகவும் அவர்களின் சரீர மற்றும் ஆத்மீக சீர்திருத்தத்திற்காகவும் தமது வாழ்வையே அர்ப்பணம் செய்துவந்தார்கள். தமது முயற்சிக்கு உறுதுணையாக அது சம்பந்தமான அரபி மற்றும் உருது மொழி நூல்களை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் அறியும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாருல் மராஷிதை ஆரம்பித்தார்கள். இதன் முதல் முயற்சியாக அரபியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட “முன்தப் அஹாதீஸ்” என்ற நூலை, தமிழகமெங்கும் உள்ள அதிகமான பள்ளிவாசல்களில் காண முடியும்.

தாருல் மராஷிதை தமது பொறுப்பில் சிறப்பாக நடத்தி வந்த ஹஜ்ரத் மர்ஹூம் அவர்கள் அல்லாஹ்வின் நாட்டத்தால் நோய்வாய்ப்பட்டு ஹிஜ்ரீ 1433, ஸஃபர் மாதம், 14ம் நாள் (06/01/2012) அன்று இறைவனடி சேர்ந்தார்கள். ஹஜ்ரத் மர்ஹூம் அவர்களின் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வந்த தாருல் மராஷித் தற்போது அவர்களுடைய சகோதர்ரகளின் பொறுப்பில் செயல்பட்டு வருகிறது.

தாருல் மராஷித் எந்தவித இலாப, வியாபார நோக்கமும் இன்றி சமுதாய நலன் கருதி செயல்பட்டு வரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.”