தனது நம்பிக்கை மற்றும் அமலைச் சரிசெய்யவும், சரியான நம்பிக்கை மற்றும், அமலின் மீது முழு மனித சமுதாயத்தைக் கொண்டுவரவும், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடைய வழிமுறையிலான உழைப்பை, முழு உலகிலும் நிலை நாட்ட முயற்சி செய்தல்!

தஃவத்தும், அதன் சிறப்புகளும்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَاللهُ يَدْعُوآ إِلي دَارِ السَّلاَمِ ط وَيَهْدِي مَنْ يَّشَاءُ إِلي صِرَاطٍ مُسْتَقِيمٍ۞).
(يونس:٢٥)
1. (மனிதர்களே,) அல்லாஹ் சாந்தி அளிக்கக் கூடிய (சுவன) வீட்டின் பால் அழைக்கின்றான்; மேலும், தான் நாடியவரை நேரான வழியின் பால் செலுத்துகிறான்.
(யூனுஸ்:25)
وَقَالَ تَعَالي: (هُوَ الَّذِي بَعَثَ فِي اْلأُمِّيِّينَ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ أَياَتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتبَ وَالْحِكْمَةَ ق وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلاَلٍ مُبِينٍ۞).
(الجمعة:٢)
2. அவன் எத்தகையவனென்றால், எழுத்தறிவில்லா மக்களில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான்; அவர்களுக்கு அவனுடைய வசனங்களை அவர் ஓதிக் காண்பித்து, அவர்களைத் தூய்மையாக்கி, வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார் – நிச்சயமாக, இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே அவர்கள் இருந்தனர்.
(அல்ஜுமுஆ:2)
وَقَالَ تَعَالي: (وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِي كُلِّ قَرْيَةٍ نَذِيرًا ۞ فَلاَ تُطِعِ الْكفِرِينَ وَجَاهِدْهُمْ بِهِ جِهَادًا كَبِيرًا۞).
(الفرقان:٥٢،٥١)
3. (மேலும்) நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஊரிலும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பியிருப்போம், ஆகவே, (நபியே) நீர் இந்த நிராகரிப்பாளர்களுக்குக் கீழ்ப்படியாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பலமாகப் போராடுவீராக!
(அல்ஃபுர்கான்:51,52)
وَقَالَ تَعَالي: (اُدْعُ إِلي سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ۞).
(النحل:١٢٥)
4. (நபியே, மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்துடனும் உம்முடைய ரப்பின் வழியின் பக்கம் அழைப்பீராக!
(அந்நஹ்ல்:125)
وَقَالَ تَعَالي: (وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَي تَنْفَعُ الْمُؤْمِنِينَ۞).
(الذاريات:٥٥)
5. மேலும், நீர் உபதேசம் செய்வீராக! ஏனெனில் நிச்சயமாக உபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு (நற்) பயனளிக்கும்.
(அத்தாரியாத்:55)
وَقَالَ تَعَالي: (يَا أَيُّهَا الْمُدَّثِّرُ۞ قُمْ فَأَنْذِرْ۞ وَرَبَّكَ فَكَبِّرْ۞).
(المدثر: ١/٣)
6. போர்த்திக் கொண்டிருப்பவரே, எழுந்திருப்பீராக! பிறகு (மக்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பீராக! உம்முடைய ரப்பைப் பெருமைப்படுத்துவீராக!
(அல்முத்தஸ்ஸிர்:1-3)
وَقَالَ تَعَالي: (لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ أَلاَّ يَكُونُوا مُؤْمِنِينَ۞).
(الشعراء:٣)
7. (நபியே, அல்லாஹ்வை) விசுவாசங் கொள்பவர்களாக அவர்கள் இல்லாததன் காரணமாக (த் துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக் கொள்வீர் போலும்!
(அஷ்ஷுஅரா:3)
وَقَالَ تَعَالي: (لَقَدْ جَآءَكُمْ رَسُولٌ مِّنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَّحِيمٌ۞).
(التوبة:١٢٨)
8. (மனிதர்களே,) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் திட்டமாக வந்துவிட்டார், நீங்கள் வருத்தப்படுவது அவருக்குக் கஷ்டமாயிருக்கும்; (நீங்கள் நேர்வழி பெற்று நன்மையடைய வேண்டுமென்று) உங்களின் மீது பேராசை கொண்டவர்; (மேலும் ஓரிறை) நம்பிக்கையாளர்களின் மீது அன்பும் கிருபையும் உள்ளவர்.
(அத்தவ்பா:128)
وَقَالَ تَعَالي: (فَلاَ تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَاتٍ۞).
(فاطر: ٨)
9. எனவே, அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விட வேண்டாம்.
(ஃபாதிர்:8)
وَقَالَ تَعَالي: (إِنَّا أَرْسَلْنَا نُوحاً إِلَي قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ ۞ قَالَ يقَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ ۞ أَنِ اعْبُدُوا اللهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ ۞ يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَي أَجَلٍ مُسَمًّي ط إِنَّ أَجَلَ اللهِ إِذَا جَآءَ لاَ يُؤَخَّرُم لَوْ كُنْتُمْ تَعْلَمُونَ ۞ قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلاً وَّنَهَارًا ۞ فَلَمْ يَزِدْهُمْ دُعَآئِي إِلاَّ فِرَارًا ۞ وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوآ أَصَابِعَهُمْ فِي اذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ۞ ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا ۞ ثُمَّ إِنَّيْ أَعْلَنْتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا ۞ فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ قف إِنَّهُ كَانَ غَفَّارًا ۞ يُرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِدْرَارًا ۞ وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَّبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنّتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهرًا ۞ مَا لَكُمْ لاَ تَرْجُونَ لِلّهِ وَقَارًا ۞ وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا ۞ أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللهُ سَبْعَ سَموتٍ طِبَاقاً ۞ وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجاً ۞ وَاللهُ أَنْبَتَكُمْ مِنَ اْلاَرْضِ نَبَاتاً ۞ ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجاً ۞ وَاللهُ جَعَلَ لَكُمُ اْلاَرْضَ بِسَاطاً ۞ لِتَسْلُكُوا مِنْهَا سُبُلاً فِجَاجاً۞).
(نوح:٢٠–١)
10. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரின் பால், “நோவினை தரும் வேதனை அவர்களுக்கு வரும் முன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்று (தூதராக) நாம் அனுப்பினோம்.”என்னுடைய சமூகத்தினரே, நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று அவர் கூறினார்.”அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்; இன்னும் எனக்கு நீங்கள் கீழ்படியுங்கள்” (என்று கூறினார்) “(அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால்) உங்களுடைய பாவங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான்; இன்னும் குறிப்பிட்ட ஒரு தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை – அது வந்துவிட்டால் – அது பிற்படுத்தப்பட மாட்டாது; (இதனை) நீங்கள் அறிய வேண்டுமே!” (என்றும் கூறினார்).”என்னுடைய ரப்பே, நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தினரை (நேர்வழியின் பக்கம்) இரவிலும் பகலிலும் அழைத்தேன்” என்று கூறினார். “ஆனாலும் என்னுடைய அழைப்பு வெருண்டோடுவதைத் தவிர அவர்களுக்கு (வேù”தனையும்) அதிகமாக்கவில்லை” (என்றும் கூறினார்), “அவர்களை நீ மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைக்கும் போதெல்லாம் தம் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொண்டார்கள்; தம் ஆடைகளால் (முகத்தையும்) அவர்கள் மூடிக் கொண்டனர்; மேலும், (தம் நிராகரிப்பில்) அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்; பெரும் அகம்பாவம் கொண்டும் இருந்தனர், பின்னரும் நிச்சயமாக நான் அவர்களை (நேர்வழியின் பால்) சப்தமிட்டும் அழைத்தேன், “பின்னும் நிச்சயமாக நான் அவர்களுக்கு (அழைப்பை) பகிரங்கப்படுத்தினேன்; அவர்களுக்கு (எனது பிரச்சாரத்தை) மறைமுகமாக மறைத்தும் செய்தேன், பின்னர், “உங்களுடைய ரப்பிடத்தில் பாவமன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் அதிகம் மன்னிக்கிறவனாக இருக்கிறான் என்றும் நான் கூறினேன். (அப்படிச் செய்வீர்களாயின்) உங்கள் மீது தொடராக மழையை அவன் அனுப்புவான் – இன்னும் செல்வங்களையும் புதல்வர்களையும் (கொடுப்பது) கொண்டு அவன் உங்களுக்கு உதவி செய்து, உங்களுக்குத் தோட்டங்களை உண்டாக்கி, உங்களுக்கு ஆறுகளையும் (அவை பெருகி ஓடுமாறு) உண்டாக்குவான். உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வுக்குரிய கண்ணியத்தை நீங்கள் உணர்வதில்லை, உங்களைப் பல கட்டங்களாகத் திட்டமாக அவன் படைத்துள்ளான், ஏழு வானங்களையும் எவ்வாறு அடுக்கடுக்காக அல்லாஹ் படைத்துள்ளான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனை ஒளியாகவும் சூரியனை விளக்காகவும் (எவ்வாறு) ஆக்கி வைத்துள்ளான் (என்பதையும் பார்க்கவில்லையா)? மேலும் “அல்லாஹ் உங்களை (ப் புற் பூண்டுகளைப் போல்) பூமியி(ன் மண்ணி)லிருந்து தாவரங்களாக முளைப்பித்தான், பிறகு அதிலேயே உங்களை அவன் மீள வைப்பான்; இன்னும் (அந்த பூமியிலிருந்தே) உங்களை (மீண்டும்) வெளிப்படுத்துவான், அல்லாஹ் (இந்த) பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கியுள்ளான் – அதில் நின்றுமுள்ள விசாலமான பாதைகளில் நீங்கள் நடப்பதற்காக” (என்றும் நூஹ் கூறினார்)
(நூஹ்:1-20)
وَقَالَ تَعَالي: (قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ ۞ قَالَ رَبُّ السَّموتِ وَاْلاَرْضِ وَمَا بَيْنَهُمَا ط إِنْ كُنْتُمْ مُوقِنِينَ ۞ قَالَ لِمَنْ حَوْلَهُ أَلاَ تَسْتَمِعُونَ ۞ قَالَ رَبُّكُمْ وَرَبُّ آبآئِكُمُ اْلاَوَّلِينَ ۞ قَالَ إِنَّ رَسُولَكُمُ الَّذِي أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ ۞ قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ط إِنْ كُنْتُمْ تَعْقِلُونَ۞).
(الشعراء :٢٨–٢٣)
11. (பின்னர்) “அகிலத்தாரின் ரப்பு என்றால் என்ன?” என்று ஃபிர்அவ்ன் கேட்டான், “(அவன்) வானங்கள், பூமி இவையிரண்டுக்கும் இடையிலுள்ளவை ஆகியவற்றின் ரப்பு – நீங்கள் உறுதி கொள்கிறவர்களாக இருந்தால் (அவனை நம்பிக்கைக் கொள்ளுங்கள்)” என்று அவர் கூறினார்.”தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் “(இவர் கூறியதாக) நீங்கள் செவியுறுகிறீர்கள் அல்லவா?” என்று அவன் கூறினான், “(மேலும் அல்லாஹ்) உங்களுடைய ரப்பும் முன்னோர்களான உங்களுடைய மூதாதையர்களின் ரப்புமாவான்” என்று அவர் கூறினார்.”நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கும் உங்களுடைய தூதர் பைத்தியக்காரர் தான்!” என்று அவன் கூறினான்.”கிழக்கிற்கும் மேற்கிற்கும் அவை இரண்டிற்குமிடைய உள்ளவற்றிற்கும் ரப்பாக இருக்கிறான்; நீங்கள் விளங்குபவர்களாக இருந்தால் (அவன்) (அதை உணர்ந்து அவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்)” என்று அவர் கூறினார்.
(அஷ்ஷுஅரா:23-28)
وَقَالَ تَعَالي: (قَالَ فَمَنْ رَّبُّكُمَا يَمُوسي۞ قَالَ رَبُّنَا الَّذِي أَعْطي كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَي۞ قَالَ فَمَا بَالُ الْقُرُونِ اْلأُولي ۞ قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّي فِي كِتَابٍ ج لاَ يَضِلُّ رَبِّي وَلاَ يَنْسَي ۞ اَلَّذِي جَعَلَ لَكُمُ اْلأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلاً وَأَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً۞).
(طه :٥٤–٤٩)
12. (அவ்விருவரும் ஃபிர்அவ்னிடம் வந்து பேசியபோது) “மூஸாவே, உங்களிருவருடைய ரப்பு யார்?” என்று அவன் கேட்டான், “எங்களுடைய ரப்பு ஒவ்வொரு பொருளுக்கும் அதனதன் வடிவத்தைக் கொடுத்து, பிறகு (அதற்கு) நேர்வழியையும் காட்டினானே அத்தகைய ஒருவனாவான்” என்று அவர் கூறினார்.”முந்தைய தலைமுறையினர்களின் நிலை என்ன?” என்று அவன் கேட்டான், “அதனுடைய அறிவு என்னுடைய ரப்பிடத்திலுள்ள பதிவுப் புத்தகத்திலிருக்கிறது; என்னுடைய ரப்பு தவறிடவும் மாட்டான்; (எதையும்) அவன் மறந்துவிடவும் மாட்டான்” என்று அவர் கூறினார். அவன் எத்தகையவனென்றால், பூமியை உங்களுக்கு அவனே விரிப்பாக ஆக்கினான்; உங்களுக்கு அதில் (போய் வரப்) பல வழிகளையும் அமைத்தான்; இன்னும் வானத்திலிருந்து நீரை (மழையை)யும் இறக்கிவைத்தான்.
(தாஹா:49-53)
وَقَالَ تَعَالي: (وَلَقَدْ أَرْسَلْنَا مُوسي بِآيتِنآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمتِ إِلَي النُّورِ لا وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللهِ ط إِنَّ فِي ذلِكَ لأَيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ۞).
(ابراهيم:٥)
13. மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு திட்டமாக நாம் (தூதராக) அனுப்பிவைத்து, “உம்முடைய சமுதாயத்தினரை இருள்களிலிருந்து ஒளியின்பால் நீர் வெளியேற்றி, அவர்களுக்கு அல்லாஹ்வினுடைய (உத்தரவினால் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் பற்றிய) நாள்களை நினைவூட்டுவீராக!” (என்று நாம் ஏவினோம்); நிச்சயமாக அவற்றில் ஒவ்வொரு பொறுமையாளருக்கும் நன்றி செலுத்துவோருக்கும் உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(இப்ராஹீம்:5)
وَقَالَ تَعَالي: (أُبَلِّغُكُمْ رِسلتِ رَبِّي وَأَنَا لَكُمْ نَاصِحٌ أَمِينٌ۞).
(الاعراف:٦٨)
14. “என்னுடைய ரப்பின் தூதுச் செய்திகளை உங்களுக்கு நான் எத்தி வைக்கிறேன்; மேலும், நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கிறேன்”.
(அல்அஃராஃப்:68)
وَقَالَ تَعَالي: (وَقَالَ الَّذِي امَنَ يقَوْمِ اتَّبِعُونِ أَهْدِكُمْ سَبِيلَ الرَّشَادِ ۞ يقَوْمِ إِنَّمَا هذِهِ الْحَيوةُ الدُّنْيَا مَتَاعٌ ز وَإِنَّ أْلاخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ۞ مَنْ عَمِلَ سَيِّئَةً فَلاَ يُجْزَي إِلاَّ مِثْلَهَا ج وَمَنْ عَمِلَ صَالِحاً مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَي وَهُوَ مُؤْمِنٌ فَأُولئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ ۞ وَيقَوْمِ مَا لِي أَدْعُوكُمْ إِلَي النَّجوةِ وَتَدْعُونَنِي إِلَي النَّارِ ۞ تَدْعُونَنِي لِأَكْفُرَ بِاللهِ وَأُشْرِكَ بِهِ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ز وَأَنَا أَدْعُوكُمْ إِلَي الْعَزِيزِ الْغَفَّارِ ۞ لاَ جَرَمَ أَنَّمَا تَدْعُونَنِي إِلَيْهِ لَيْسَ لَهُ دَعْوَةٌ فيِ الدُّنْيَا وَلاَ فِي اْلآخِرَةِ وَأَنَّ مَرَدَّنآ إِلَي اللهِ وَأَنَّ الْمُسْرِفِينَ هُمْ أَصْحبُ النَّارِ ۞ فَسَتَذْكُرُونَ مآ أَقُولُ لَكُمْ ط وَأُفَوِّضُ أَمْرِي إِلَي اللهِ ط إِنَّ اللهَ بَصِيرٌم بِالْعِبَادِ ۞ فَوَقهُ اللهُ سَيِّآتِ مَا مَكَرُوا وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ۞).
(المؤمن:٤٥–٣٨)
15. (ஓரிறை) நம்பிக்கையாளரான அவர், “என் சமூகத்தினரே, என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; உங்களுக்கு நேரிய வழியை நான் காட்டுகிறேன்” என்று கூறினார்.”என் சமூகத்தினரே, இந்த உலகின் வாழ்க்கையெல்லாம் அற்ப சுகந்தான்; நிச்சயமாக மறுமையாகிறது – அது தான் நிலையான வீடாகும். எவரேனும் ஒரு தீமையைச் செய்தால், அதைப் போன்றதே தவிர அவர் கூலி கொடுக்கப்படமாட்டார்; இன்னும், ஆணோ, பெண்ணோ எவரேனும் – அவர் (ஓரிறை) நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் – நற்செயலைச் செய்தால் அத்தகையோர் சொர்க்கத்தில் புகுவர் – அதில் கணக்கின்றி அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்”.”என்னுடைய சமூகத்தினரே, எனக்கென்ன? உங்களை ஈடேற்றத்தின் அளவில் நான் அழைக்கிறேன்; நீங்களோ என்னை நரகத்தின் பால் அழைக்கிறீர்கள்; அல்லாஹ்வை நான் நிராகரிப்பதற்கும் எதைப் பற்றி எனக்கு(ப் போதிய) அறிவில்லையோ அந்த ஒன்றை அவனுக்கு நான் இணை வைப்பதற்கும் என்னை நீங்கள் அழைக்கிறீர்கள்; நானோ (யாவற்றையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்பவனின் பக்கம் உங்களை அழைக்கிறேன், சந்தேகத்துக்கு இடமில்லாமல் எதன் பக்கம் (நான் வணங்க வேண்டுமென) என்னை நீங்கள் அழைக்கிறீர்களோ அது – இவ்வுலகிலும் மறுமையிலும் (தெய்வமென) அழைக்கப்படுவதற்கு அதற்கு(த் தகுதி) இல்லை; மேலும் நிச்சயமாக நம்முடைய மீளுமிடம் அல்லாஹ்வின் பக்கமேயாகும் – இன்னும், நிச்சயமாக வரம்பு மீறுகிறவர்கள் தாம் நரகவாசிகள். ஆகவே, உங்களுக்கு நான் கூறுகின்றவற்றை விரைவில் நீங்கள் நினைவு கூருவீர்கள்; என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடம் நான் ஒப்படைக்கிறேன்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கிறான்” (என்றும் அவர் கூறினார்).எனவே அவர்கள் செய்த சூழ்ச்சியின் தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் பாதுகாத்தான்; மேலும் தீய வேதனை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
(அல்முஃமின்:38-45)
وَقَالَ تَعَالي: (يبُنَيَّ أَقِمِ الصَّلوةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلي مَآ أَصَابَكَ ط إِنَّ ذلِكَ مِنْ عَزْمِ اْلأُمُورِ۞).
(لقمن:١٧)
16. என்னருமை மகனே, தொழுகையை நீ நிலைநிறுத்துவாயாக! நன்மையை ஏவுவாயாக! தீமையை விட்டும் (மக்களைத்) தடுப்பாயாக! (இதன் மூலம்) உனக்கு ஏற்படும் துன்பத்தின் மீது பொறுமை கொள்வாயாக! நிச்சயமாக இது உறுதிமிக்க காரியங்களில் உள்ளதாகும்.
(லுக்மான்:17)
وَقَالَ تَعَالي: (وَإِذْ قَالَتْ أُمَّة ٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمَانِ لا اللهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَاباً شَدِيدًا ط قَالُوا مَعْذِرَةً إِليَ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ ۞ فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ م بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ۞).
(الاعراف:١٦٥–١٦٤)
17. “ஒரு கூட்டத்தினருக்கு – அல்லாஹ் அவர்களை அழிக்கிறவனாக அல்லது அவர்களைக் கடினமான வேதனையாக வேதனை செய்கிறவனாக இருக்க – ஏன் நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தினர் சொன்னபோது, ”உங்களுடைய ரப்பிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் (அல்லாஹ்வை) அவர்கள் அஞ்சுபவர்களாகி விடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்து கொண்டிருக்கிறோம்)” என்று அவர்கள் கூறினர்.எதைக் கொண்டு அவர்கள் உபதேசிக்கப்பட்டார்களோ அதனை அவர்கள் மறந்துவிட்ட பொழுது தீமையை விட்டும் (அவர்களைத்) தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றி, அநியாயம் செய்தவர்களை – அவர்கள் பாவங்கள் செய்து கொண்டிருந்த காரணத்தால் கடினமான வேதனையைக் கொண்டு நாம் பிடித்தோம்.
(அல்அஃராஃப்:164, 165)
وَقَالَ تَعَالي: (فَلَوْ لاَ كَانَ مِنَ الْقُرُونِ مِنْ قَبْلِكُمْ أُولُو بَّقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِي اْلاَرْضِ إِلاَّ قَلِيلاً مِّمَّنْ أَنْجَيْنَا مِنْهُمْ ج وَاتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا مَآ أُتْرِفُوا فِيهِ وَكَانُوا مُجْرِمِينَ ۞ وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَي بِظُلْمٍ وَّأَهْلُهَا مُصْلِحُونَ۞).
(هود:١١٧،١١٦)
18. உங்களுக்கு முன்னிருந்த தலைமுறைகளில், பூமியில் குழப்பம் செய்வதை விட்டும் (மக்களைத்) தடுக்கின்ற நல்லவர்கள் இருந்திருக்கக் கூடாதா? அவர்களிலிருந்து (நம் தண்டனையை விட்டும்) நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர; அநியாயம் செய்தார்களே அத்தகையோர் எதில் அவர்கள் சுகங் கொடுக்கப்பட்டார்களோ அதனைப் பின்பற்றினார்கள்; இன்னும் அவர்கள் குற்றவாளிகளாகவே இருந்தார்கள்.உம்முடைய ரப்பு ஊர்களை – அதனுடைய மக்கள் (தம்மையும், பிறரையும்) சீர் திருத்துபவர்களாக இருக்கும் நிலையில் அநியாயமாக – அழிப்பவனாக இல்லை.
(ஹூது:116,117)
وَقَالَ تَعَالي: (وَالْعَصْرِ ۞ إِنَّ اْلإِنْسَانَ لَفِي خُسْرٍ ۞ إِلاَّ الَّذِينَ امَنُوا وَعَمِلُوا الصّلِحتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ لا وَتَوَاصَوْا بِالصَّبْرِ۞).
(العصر:٣–١)
19. காலத்தின் மீது சத்தியமாக – நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான், (ஓரிறை) நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் கொள்கின்றனரே அத்தகையோரைத் தவிர!
(அல்அஸ்ர்:1-3)
குறிப்பு:- இந்த சூரா நமக்கு மிகப்பெரும் வழிக்காட்டுதலை வழங்குகிறது, ஒருவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தன்னுடைய அமலை அமைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அதே போன்று பிற முஸ்லிம்களை ஈமான், நல்ல அமல்களின் பால் அழைக்க முழுமையாக முயற்ச்சிக்க வேண்டும். அவ்வாறு முயற்ச்சிக்காவிடில் தன்னுடைய நற்செயல்கள் மட்டும் ஈடேற்றம் பெற போதாது. குறிப்பாக தன் உற்றார் ஒறவினர், நன்பர்கள் தன்னுடன் தொடர்புடையவர்களின் தீயச் செயல்களை கண்டும் காணாமல் இருப்பது தன் வெற்றிக்கு தடையாக இருக்கும். இவர் எவ்வளவு நல்ல அமல்களை பேணுதலாக செய்து வந்தாலும் சரியே! எனவே தான் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் குர்ஆன், ஹதீஸின் மூலம் கடமையாக்கப்பட்டுள்ளது. இக்காரியத்தில் முஸ்லிம்களில் பொது மக்களும், முக்கியஸ்தர்களும் கவனக்குறைவாக இருக்கின்றனர், அல்லாஹுதஆலா இந்த ஆயத் காட்டிய வழியில் நம் அனைவருக்கும் அமல் செய்ய நல்லுதவி செய்வானாக! ஆமீன்.
(மஆரிஃபுல் குர்ஆன்)
وَقَالَ تَعَالى: (كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللّهِ۞).
(ال عمران:١١٠)
20. மனிதர்களுக்காக வெளியாக்கப்பட்ட சிறந்த சமுதாயத்தினராக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள்; தீமையை விட்டும் தடுக்கிறீர்கள்; அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள்.
(ஆலுஇம்ரான்:110)
தெளிவுரை:- முஸ்லிம்களே, மற்ற உம்மத்தை விட உங்களை அல்லாஹுதலா சிறந்த உம்மத்தாக ஆக்கியுள்ளான், அல்லாஹுதஆலாவுடைய ஞானத்திலேயே விதிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சிறந்த உம்மத் என்ற செய்தியை சில நபிமார்களுக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது, எவ்வாறு எல்லா நபிமார்களை விட நபி (ஸல்) அவர்கள் சிறந்தவர்களோ அவ்வாறே மற்ற உம்மத்தினரை விட நீங்கள் சிறந்த உம்மத்தினர். ஏனெனில் இந்த உம்மத் மிகவும் கண்ணியம் பொருந்திய சிறப்புமிக்க நபியை பெறும், பரிபூரண நிரந்தரமான ஷரீஅத்தை பெறும். அறிவு, ஞானத்தின் கதவு இந்த உம்மத்துக்காக திறக்கப்படும். ஈமான், அமல், இறையச்சம் ஆகியவற்றின் கிளைகள் இந்த உம்மத்தின் முயற்சி, தியாகத்தின் பலனாக செழிப்பெறும். இந்த ஒரு நாட்டிலோ ஒரு மாநிலத்திலோ ஒரு சமூதாயத்திலோ மட்டுபட்டதல்ல. இந்த உம்மத்தின் செயல் வட்டம் முழு உலகத்தையும் மனித வாழ்வின் அனைத்து வகுப்பையும் சூழ்ந்திருக்கும், இந்த சமூதாயம் உலகத்தில் இருப்பதே பிறரின் நலனை நாடியே இருக்கிறது, எவ்வளவு முடியுமோ அவர்களை சொர்க்கத்தின் வாசலில் இந்த உம்மத் கொண்டு போய் நிறுத்தும்.
(தஃப்ஸீர் உஸ்மானியா)
وَقَالَ تَعَالي: (قُلْ هذِهِ سَبِيلِي أَدْعُو إِلَي اللهِ قف عَلي بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي۞).
(يوسف:١٠٨)
21. (நபியே,) நீர் கூறுவீராக! “இது என்னுடைய (நேரான) வழியாகும்; அல்லாஹ்வின் பக்கம் நான் அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஆதாரத்தின் மீதே இருக்கிறோம்.
(யூசுப்:108)
وَقَالَ تَعَالي: (وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ م يَأْمُرُونَ باِلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصّلَوةَ وَيُؤْتُونَ الزّكوةَ وَيُطِيعُونَ اللهَ وَرَسُولَهُ ط أُولئِكَ سَيَرْحَمُهُمُ اللهُ ط إِنَّ اللهَ عَزِيزٌ حَكِيمٌ۞).
(التوبة:٧١)
22. நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாயிருக்கின்றனர்; நன்மையை (ப் பிறருக்கு) அவர்கள் ஏவுகின்றனர்; தீமையை விட்டும் (பிறரைத்) தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்; இத்தகையோர் – விரைவில் இவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான் – நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமுள்ளவன்.
(அத்தவ்பா:71)
وَقَالَ تَعَالي: (وَتَعَاوَنُوا عَلَي الْبِرِّ وَالتَّقْوَي ص وَلاَ تَعَاوَنُوا عَلَي اْلإِثْمِ وَالْعُدْوَانِ۞).
(المائدة:٢)
23. நன்மைக்கும் இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்துக்கும் அநியாயத்துக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ளவேண்டாம்.
(அல்மாயிதா:2)
وَقَالَ تَعَالي: (وَمَنْ أَحْسَنُ قَوْلاً مِمَّنْ دَعَا إِلَي اللهِ وَعَمِلَ صَالِحاً وَقاَل إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ ۞ وَلاَ تَسْتَوِي الْحَسَنَةُ وَلاَ السَّيِّئَةُ ط اِدْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ ۞ وَمَا يُلَقَّاهَا إِلاَّ الَّذِينَ صَبَرُوا ج وَمَا يُلَقّهَآ إِلاَّ ذُو حَظٍّ عَظِيمٍ۞).
(حم السجدة:٣٥–٣٣)
24. அல்லாஹ்வின் பால் (மக்களை) அழைத்து நற்செயலும் செய்து “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்‘ என்று கூறினானே, அந்த ஒருவனைவிடச் சொல்லால் மிக அழகானவன் யார்? நன்மையும் தீமையும் சமமாகமாட்டா; (நபியே,) எது மிக அழகியதாக இருக்கிறதோ அ(ந்த நன்மையான) தைக் கொண்டு (தீமையைத்) தடுப்பீராக! அப்போது உமக்கும், எவருக்குமிடையே பகைமை இருக்கிறதோ, அந்த ஒருவர் – நிச்சயமாக அவர் நெருங்கிய நண்பரைப் போலாகிவிடுவார்.பொறுமையாய் இருந்தவர்களைத் தவிர (வேறெவரும், நன்மையைக் கொண்டு தீமையை இல்லாமற் செய்யும் அழகிய பண்பான) இதனைக் கிடைக்கப் பெறமாட்டார்; மகத்தான பாக்கியம் உடையோரே தவிர (வேறெவரும்) இது கிடைக்கப் பெறமாட்டார்.
(ஹாமீம் ஸஜ்தா:33-35)
وَقَالَ تَعَالي: (يَاأَيُّهَا الِّذيْنَ امَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلاَئِكَةٌ غِلاَظٌ شِدَادٌ لاَ يَعْصُونَ اللهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُون۞).
(التحريم:٦)
25. நம்பிக்கையாளர்களே, உங்களையும் உங்களுடைய குடும்பத்தினரையும் (நரக) நெருப்பை விட்டும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; அதனுடைய எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும்; கடுமையான, பலமான மலக்குகள் அதன் மீது (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்; அல்லாஹ்வுக்கு – அவர்களை அவன் ஏவியதில் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள்; அவர்கள் (தமக்குக்) கட்டளையிடப்படுகின்றதையே செய்வார்கள்.
(அத்தஹ்ரீம்:6)
وَقَالَ تَعَالي: (اَلَّذِينَ إِنْ مَّكَّنّهُمْ فِي اْلاَرْضِ أَقَامُوا الصَّلوةَ وَآتَوُوا الزَّكوةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ط وَلِلِّهِ عَاقِبَةُ اْلأُمُورِ۞).
(الحج:٤١)
26. (அல்லாஹ்வுக்கு உதவி செய்கிற) அவர்கள் எத்தகையோரென்றால், பூமியில் அவர்களுக்கு நாம் சக்தியளித்தால், தொழுகையை அவர்கள் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுப்பார்கள்; மேலும், நன்மையை ஏவி தீமையை விட்டும் (மக்களைத்) தடுப்பார்கள், காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.
(அல்ஹஜ்:41)
وَقَالَ تَعَالي: (وَجَاهِدُوا فِي اللهِ حَقَّ جِهَادِهِ ط هُوَ اجْتَبكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ ط مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ط هُوَ سَمّكُمُ الْمُسْلِمِينَ لا مِنْ قَبْلُ وَفِي هذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَآءَ عَلَي النَّاس۞).
(الحج: ٧٨)
27. இன்னும், அல்லாஹ்வின் விஷயத்தில் அவனுக்கு அறப்போர் செய்யும் முறைப்படி நீங்கள் அறப்போர் செய்யுங்கள் – அவன் (தன் மார்க்கத்திற்கு) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான்; இந்த மார்க்கத்தில் உங்களின் மீது எவ்வித சிரமத்தையும் அவன் ஆக்கவில்லை; உங்களுடைய தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை(ப்பற்றிப் பிடியுங்கள்); அவன் (அல்லாஹ்) முன்னமே உங்களுக்கு “முஸ்லிம்கள்‘ என்று பெயரிட்டுள்ளான் – இன்னும் (குர்ஆனாகிய) இதிலும் (அதே பெயர்) தான்; (இது ஏனெனில், நமது) தூதர் உங்களின் மீது சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீங்கள் (மற்ற) மனிதர்களின் மீது சாட்சியாளர்களாக இருப்பதற்காகவுமாகும்.
(அல்ஹஜ்:78)
தெளிவுரை:- கியாமத் நாளன்று முந்திய சமுதாயத்தினர் தம்மிடத்தில் எந்த நபியும் வரவில்லை என்று மறுத்துக் கூறும்பொழுது, மற்ற நபிமார்கள், நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தைத் தங்களுக்கு சாட்சியாக முன்னிறுத்துவார்கள். நிச்சயமாக முந்தைய நபிமார்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை அந்தந்த சமுதாயத்துக்கு எத்தி வைத்தார்கள் என்று நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தினர் சாட்சி சொல்வார்கள். “அவர்கள் எத்தி வைத்தார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தினரிடம் கேள்வி கேட்கப்படும், “எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என்று பதில் கூறுவார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், “இந்த உம்மத்தினரின் சாட்சியத்தை சரியானதே!‘ என்று உண்மைப்படுத்தி வைப்பார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் உங்களுக்கு தீனை கற்றுக் கொடுத்து, நீங்கள் அந்த தீனை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நாம் தேர்ந்தெடுத்தோம் என்று சில விரிவுரையாளர்கள் இந்த ஆயத்துக்கு விளக்கம் கூறியுள்ளனர்.
(கஷ்ஃபுர் ரஹ்மான்)

ஹதீஸ்கள்:-
١– عَنْ مُعَاوِيَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّمَا أَنَا مُبَلِّغٌ وَاللهُ يَهْدِي، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللهُ يُعْطِي.
رواه الطبراني في الكبير وهو حديث حسن، الجامع الصغير:١/٣٩٥
1. நிச்சயமாக நான் தீனை மக்கள் வரையில் எத்திவைக்கக்கூடியவனே அல்லாஹ் தான் நேர்வழி காட்டுகிறான், மேலும் நிச்சயமாக நான் அறிவு ஞானத்தை பங்கு வைக்கக்கூடியவனே அல்லாஹ் தான் விளக்கத்தை கொடுக்கிறான், என்று ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ஜாமிஉஸ் ஸஙீர்)
٢– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ لِعَمِّهِ : قُلْ لاَ إِلهَ إِلاّ اللهُ، أَشْهَدُ لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ، قَالَ: لَوْ لاَ أَنْ تُعَيِّرَنِي قُرَيْشٌ يَقُولُونَ: إِنَّمَا حَمَلَهُ عَلي ذلِكَ الْجَزَعُ لأَقْرَرْتُ بِهَا عَيْنَيْكَ، فَأَنْزَلَ اللهُ: (إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلكِنَّ اللهَ يَهْدِي مَنْ يَشَآءُ۞) الآية.
رواه مسلم ، باب الدليل علي صحة اسلام…، رقم:١٣٥
2. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை (அபூதாலிப் அவர்களிடம், அவரது மரண நேரத்தில்) “தாங்கள் “லாஇலாஹ இல்லல்லாஹு” என்ற கலிமா சொல்லிவிடுங்கள், நான் கியாமத் நாளில் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன்” என்று சொன்னபோது, “அபுதாலிப் மரணத்திற்குப் பயந்து கலிமாச் சொல்லிவிட்டாரென்று குறைஷியர்கள் குத்திப் பேசுவார்கள் என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால், நிச்சயமாக நான் கலிமாச் சொல்லி உம்முடைய கண்களைக் குளிரவைத்துவிடுவேன்” என்று கூறினார். அப்பொழுது, (إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلكِنَّ اللهَ يَهْدِي مَنْ يَشَآءُ) “நபியே, நீங்கள் விரும்புபவர்களுக்கு நேரான வழியைக் கொடுக்க முடியாது, அல்லாஹுதஆலா தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் கொடுப்பான்” என்ற ஆயத்தை அல்லாஹுதஆலா இறக்கி வைத்தான்”.
(முஸ்லிம்)
٣– عَنْ عَائِشَةَؓ قَالَتْ: خَرَجَ أَبُو بَكْرٍؓ يُرِيدُ رَسُولَ اللهِ ﷺ، وَكَانَ لَهُ صَدِيقاً فِي الْجَاهِلِيَّةِ، فَلَقِيَهُ، فَقَالَ: يَا أَبَا الْقَاسِمِ، فُقِدْتَ مِنْ مَجَالِسِ قَوْمِكَ، وَاتَّهَمُوكَ بِالْعَيْبِ لِآبَائِهَا وَأُمَّهَاتِهَا، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنِّي رَسُولُ اللهِ، أَدْعُوكَ إِلَي اللهِ فَلَمَّا فَرَغَ مِنْ كَلاَمِهِ أَسْلَمَ أَبُو بَكْرٍؓ،فَانْطَلَقَ عَنْهُ رَسُولُ اللهِﷺ وَمَا بَيْنَ اْلاَخْشَبَيْنِ أَحَدٌ أَكْثَرَ سُرُورًا مِنْهُ بِاسْلاَمِ أَبِي بَكْرٍؓ، وَمَضَي أَبُوبَكْرٍ فَرَاحَ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ وَطَلْحَةَ بْنِ عُبَيْدٍ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍؓ، فَأَسْلَمُوا، ثُمَّ جَاءَ الْغَدَ بِعُثْمَانَ بْنِ مَظْعُونٍ وَأَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَعَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ اْلاَسَدِ وَاْلاَرْقَمِ بْنِ أَبِي اْلاَرْقَمِ، فَأَسْلَمُواؓ.
البداية والنهاية:٣ /٨٠
3. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் நண்பராக இருந்தார்கள். ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் எண்ணத்தோடு வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களைச் சந்தித்ததும், “அபுல்காஸிம், (இது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சைக்கினை பெயர்) தங்களின் சமூகத்தினரின் சபைகளில் உங்களைக் காண முடிவதில்லையே! தங்களின் சமூகத்தினரின் மூதாதையரைத் தாங்கள் குறை கூறுவதாகத் தங்கள் மீது பழி சுமத்துகின்றனரே” என்று சொன்னார்கள். “நான் அல்லாஹுதஆலாவின் தூதர், உங்களை நான் அல்லாஹுதஆலாவின் பால் அழைக்கிறேன்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தம் பேச்சை முடித்ததுமே ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து திரும்பி வந்துவிட்டார்கள். ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதால் நபி (ஸல்) அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று மக்காவின் இரு மலைகளுக்கிடையே இருக்கின்ற மக்களில் எவரும் வேறு எந்த காரியத்துக்கும் இவ்வாறு மகிழ்ச்சி அடைந்திருக்கமாட்டார்கள். அங்கிருந்து ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான், ஹஜ்ரத் தல்ஹத்துப்னு உபைதுல்லா, ஹஜ்ரத் ஸுபைரிப்னு அவ்வாம் மற்றும் ஹஜ்ரத் ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) ஆகியோரை இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். மறுநாள் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள், ஹஜ்ரத் உஸ்மானிப்னு மழ்ஊன், ஹஜ்ரத் அபூஉபைதத்துப்னு ஜர்ராஹ், ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அவ்ப், ஹஜ்ரத் அபூஸலமத்துப்னு அப்துல் அஸத், ஹஜ்ரத் அர்கமிப்னு அபீஅர்கம் (ரலி) ஆகியோரை அழைத்துக் கொண்டு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவிவிட்டனர்” (இரண்டு நாட்களில் ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் அழைப்பால் ஒன்பது நபர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்)
(அல்பிதாயா வந்நிஹாயா)
٤– عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍؓ قَالَتْ (فِي قِصَّةِ إِسْلاَمِ أَبِي قُحَافَةَ): فَلَمَّا دَخَلَ رَسُولُ اللهِ ﷺ (مَكَّةَ يَوْمَ الْفَتْحِ) وَدَخَلَ الْمَسْجِدَ أَتَي أَبُو بَكْرؓ بِأَبِيهِ يَقُودُهُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللهِ ﷺ قَالَ: هَلاَّ تَرَكْتَ الشَّيْخَ فِي بَيْتِهِ حَتَّي أَكُونَ أَنَا آتِيهِ فِيهِ؟ فَقَالَ أَبُو بَكْرٍؓ: يَا رَسُولَ اللهِﷺ هُوَ أَحَقُّ أَنْ يَمْشِيَ إِلَيْكَ مِنْ أَنْ تَمْشِيَ إِلَيْهِ، قَالَ: فَأَجْلَسَهُ بَيْنَ يَدَيْهِ، ثُمَّ مَسَحَ صَدْرَهُ، ثُمَّ قَالَ لَهُ: أَسْلِمْ، فَأَسْلَمَ، وَدَخَلَ بِهِ أَبُو بَكْرٍؓ عَلَي رَسُولِ اللهِ ﷺ وَرَأْسُهُ كَأَنَّهَا ثَغَامَةٌ فَقَالَ رَسُولُ اللهِﷺ: غَيِّرُوا هذَا مِنْ شَعْرِهِ.
رواه احمد والطبراني ورجالهما ثقات، مجمع الزوائد:٦ /٢٥٤
4. ஹஜ்ரத் அஸ்மா பின்து அபீபக்ரு (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “(மக்காவை வெற்றி கொண்ட சமயம்) ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்ததும் மஸ்ஜிதுல் ஹராமுக்குச் சென்றார்கள். அங்கு ஹஜ்ரத் அபூபக்ர் அவர்கள் தமது தகப்பனார் ஹஜ்ரத் அபூகுஹாஃபா (ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்தவாறு நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அவர்களைக் கண்டதும், “அபூபக்ரே, இந்தப் பெரியவரை வீட்டில் இருக்க வைத்திருந்தால், நானே அவர் இடத்திற்கு வந்திருப்பேனே” என்றார்கள். “யாரஸூலல்லாஹ்! இவர் இருப்பிடத்திற்குத் தாங்கள் வருவதைவிட தங்களை நாடி இவர் வருவதே மிக தகுதியானது” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தமக்கு முன் அமர வைத்து அவரது நெஞ்சில் தங்களது கரத்தால் தடவியவாறு, “தாங்கள் முஸ்லிமாகிவிடுங்கள்” என்று சொல்ல, அவ்வாறே ஹஜ்ரத் அபூகுஹாபா (ரலி) அவர்கள் முஸ்லிமாகி விட்டார்கள். ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தகப்பனாரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்த சமயம், அவர்களுடைய முடி ஸஙாமா மரத்தைப் போன்று வெண்மையாக இருந்தது. “இந்த முடிகளின் நரையை (மருதாணி போன்றவைகளால்) மாற்றி விடுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- “ஸஙாமா” என்பது பனிக்கட்டியைப் போன்று வெண்ணிறத்தில் இருக்கும் ஒரு மரமாகும்.
(மஜ்மஉ பிஹாருல் அன்வார்)
٥– عَنِ ابْنِ عَبَّاسٍؓقَالَ: لَمَّا أَنْزَلَ اللهُ تَعَالَي: (وَأَنْذِرْ عَشِيرَتَكَ اْلاَقْرَبِينَ۞) قَالَ: أَتَي النَّبِيُّ ﷺ الصَّفَا فَصَعِدَ عَلَيْهِ، ثُمَّ نَادَي: يَا صَبَاحَاهُ، فَاجْتَمَعَ النَّاسُ إِلَيْهِ بَيْنَ رَجُلٍ يَجِيءُ إِلَيْهِ وَبَيْنَ رَجُلٍ يَبْعَثُ رَسُولَهُ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي يَابَنِي، أَرَأَيْتُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً بِسَفْحِ هذَا الْجَبَلِ تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ صَدَّقْتُمُونِي؟ قَالُوا: نَعَمْ! قَالَ: فَإِنّيْ نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ! فَقَالَ أَبُو لَهَبٍ – لَعَنَهُ اللهُ – تَبّاً لَكَ سَائِرَ الْيَوْمِ! أَمَا دَعَوْتَنَا إِلِاَّ لِهذَا؟ فَأَنْزَلَ اللهُ : تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَّتَبَّ۞).
اخرجه الامام احمد، البداية والنهاية:٣ /٨٨
5. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (وَأَنْذِرْ عَشِيرَتَكَ اْلاَقْرَبِينَ) (நபியே) நீங்கள் தமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற வசனத்தை அல்லாஹுதஆலா இறக்கிவைத்ததும், நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையின் மேல் ஏறி உரத்த குரலில், “யாஸபாஹாஹ்” மக்களே! அதிகாலையில் எதிரிப் படைகள் நம்மைத் தாக்க இருக்கின்றன. எனவே, இங்கு ஒன்று கூடுங்கள்” என்று அழைத்ததும், மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒன்று சேர்ந்துவிட்டனர், சிலர் தாமே வந்தனர், சிலர் தம் தூதுவரை அனுப்பி வைத்தனர். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள், “அப்துல் முத்தலிபுடைய சந்ததியினரே! ஃபிஹ்ருடைய சந்ததியினரே! கஅபுடைய சந்ததியினரே! இந்த மலைக்குப் பின்னால் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் நடத்த இருக்கின்றது என்று நான் உங்களுக்குச் சொன்னால் என் சொல்லை நீங்கள் நம்புவீர்களா?” என வினவினார்கள், அவர்கள் அனைவரும், “ஆம்” என்றனர். “கடும் வேதனை வரும் முன் நான் உங்களுக்கு அவ்வேதனையைப் பற்றி எச்சரிக்கிறேன்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நஊதுபில்லாஹ்) “நீர் நிரந்தரமாக நாசமடைந்து போவீர்! எங்களை இதற்காகவா அழைத்தீர்?” என்று சபிக்கப்பட்ட அபூலஹப் கூறினான். அச்சமயம் அல்லாஹுதஆலா (تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَّتَبَّ) “அபூலஹபின் இரு கைகளும் முறிந்து போகட்டும். நாசமடைந்து போகட்டும்” என்ற சூராவை அல்லாஹுதஆலா இறக்கிவைத்தான்.
(முஸ்னத் அஹ்மத், அல்பிதாயா வந்நிஹாயா)
٦– عَنْ مُنِيبِ اْلاَزْدِيِّؓقَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ فِي الْجَاهِلِيَّةِ وَهُوَ يَقُولُ: يأَيُّهَاالنَّاسُ قُولُوا «لآ إِلهَ إِلاَّ اللهُ تُفْلِحُوا» فَمِنْهُمْ مَنْ تَفَلَ فِي وَجْهِهِ، وَمِنْهُمْ مَنْ حَثَا عَلَيْهِ التُّرَابَ، وَمِنْهُمْ مَنْ سَبَّهُ حَتَّي انْتَصَفَ النَّهَارُ، فَأَقْبَلَتْ جَارِيَةٌ بِعُسٍّ مِنْ مَاءٍ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَقَالَ: يَا بُنَيَّةُ! لاَ تَخْشَي عَلَي أَبِيكِ غِيلَةً وَلاَ ذِلَّةً، فَقُلْتُ: مَنْ هذِهِ؟ قَالُوا: زَيْنَبُ بِنْتِ رَسُولِ اللهِ ﷺ وَهِيَ جَارِيَةٌ وَضِيئَةٌ.
رواه الطبراني وفيه: منيب بن مدرك ولم اعرفه، وبقيه رجاله ثقات مجمع الزوائد:٦ /١٨، وفي الحاشية: منيب بن مدرك ترجمه البخاري في تاريخه وابن ابي حاتم ولم يذكرا فيه جرحا ولا تعديلا.
6. ஹஜ்ரத் முனீப் அஸ்தீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நான் எனது அறியாமைக் காலத்தில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் “மக்களே, வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அச்சமயம் சிலர் அன்னாரின் திருமுகத்தில் எச்சில் துப்பினர், வேறு சிலர் அன்னாரின் மீது மண்ணைப் போட்டனர், இன்னும் சிலர் அன்னாரைத் திட்டினர், (இப்படியே) பகல் நேரம் வரை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிறகு, ஒரு சிறுமி தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வந்தார், தண்ணீரால் தமது முகத்தையும், கைகளையும் நபி (ஸல்) அவர்கள் கழுவிக் கொண்டார்கள். “என் அருமை மகளே, எவ்வகையிலேனும் உன் தந்தை திடீரென கொல்லப்படுவார் என்றோ, கேவலப்படுத்தப்படுவார் என்றோ, நீ பயப்பட வேண்டாம்” என்று கூறினார்கள். “இந்தச் சிறுமி யார்?” என்று நான் மக்களிடம் வினவினேன். “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் மகள் ஹஜ்ரத் ஸைனப் (ரலி) ” என்று கூறினர், அச்சிறுமி அழகு சௌந்தர்யமுள்ள சிறுமியாக இருந்தார்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٧– عَنْ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ بْنِ حَوْشَبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِؓقَالَ: لَمَّا أَنْ أَظْهَرَ اللهُ مُحَمَّدًا أَرْسَلْتُ إِلَيْهِ أَرْبَعِينَ فَارِساً مَعَ عَبْدِ شَرٍّ فَقَدِمُوا عَلَيْهِ بِكِتَابِي فَقَالَ لَهُ: مَا اسْمُكَ؟ قَالَ عَبْدُ شَرٍّ قَالَ: بَلْ أَنْتَ عَبْدُ خَيْرٍ، فَبَايَعَهُ عَلَي اْلإِسْلاَمِ وَكَتَبَ مَعَهُ الْجَوَابَ إِلَي حَوْشَبٍ ذِي ظُلَيْمٍ فَآمَنَ حَوْشَبٌ.
الاصابة:١/٣٨٢
7. ஹஜ்ரத் முஹம்மதுப்னு உஸ்மான் தன் பாட்டனார் ஹஜ்ரத் ஹவ்ஷப் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கிறார்கள், “அல்லாஹுதஆலா ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு வெற்றி அளித்த சமயம், நான் அப்து ஷர்ருடன் நாற்பது குதிரை வீரர்கள் கொண்ட ஒரு ஜமாஅத்தை அன்னாரின் சமூகத்திற்கு என்னுடைய கடிதத்துடன் அனுப்பி வைத்தேன். அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சபைக்குச் சென்றதும். “உமது பெயர் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், “எனது பெயர் அப்துஷர்ரு” (தீயவன்) என்றார்”, இல்லை! நீங்கள் “அப்துகைர்” (நல்லவர்). என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவரை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள், அவர் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்). நபி (ஸல்) அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்தார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் கூறுகிறார்: “நபி (ஸல்) அவர்கள் கடிதத்திற்கு பதில் எழுதி அவரிடமே கொடுத்து ஹவ்ஷபுக்கு அனுப்பி வைத்தார்கள். (அக்கடிதத்தில் இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்திருந்தார்கள்) அதைப் படித்த ஹவ்ஷப் ஈமான் கொண்டுவிட்டார்.
(இஸாபா)
٨– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ رَأَي مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذلِكَ أَضْعَفُ اْلإِيمَانِ.
رواه مسلم، باب بيان كون النهي عن المنكر من الايمان…، رقم :١٧٧
8. “உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் மாற்றிவிடவும் (கையால் மாற்றும்) சக்தி இல்லையெனில், நாவால் அதை மாற்றிவிடவும். அதற்கும் சக்தியில்லையென்றால், உள்ளத்தால் அது தீயதென அறிந்துகொள்ளவும். (உள்ளத்தில் அத்தீமையைப் பற்றி கவலை கொள்ளவும்) இது ஈமானுடைய மிகப் பலவீனமான தரமாகும்”. என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٩– عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍؓعَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَثَلُ الْقَائِمِ عَلي حُدُودِ اللهِ وَالْوَاقِعِ فِيهَا كَمَثَلِ قَوْمٍ اِسْتَهَمُوا عَلي سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ الْمَاءِ مَرُّوا عَلَي مَنْ فَوْقَهُمْ فَقَالُوا: لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقاً وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا، فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعاً، وَإِنْ أَخَذُوا عَلي أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعاً.
رواه البخاري، باب هل يقرع في القسمة والاستهام فيه؟ رقم:٢٤٩٣
9. “அல்லாஹுதஆலாவுடைய கட்டளைகளுக்கு உட்பட்டு நடப்பவருக்கும், அல்லாஹுதஆலாவுடைய கட்டளைகளை மீறுபவருக்கும் உதாரணம், கப்பலில் பயணம் செய்யும் மக்களைப் போன்று! சீட்டுக்குலுக்கிப் போட்டு பயணிகளின் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, சிலர் கப்பலின் மேல் தளத்திலும், சிலர் கப்பலின் கீழ் தளத்திலும் உறுதி செய்யப்பட்டது. கீழ் தளத்திலுள்ளோருக்குத் தண்ணீர் தேவைப்பட்டால், மேல் தளத்துக்கு வந்து, அங்குள்ளோரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. “நாம் நமது (கீழ்ப்) பகுதியில் துவாரம் போட்டுக் கொண்டால் (மேலே போவதற்குப் பதிலாக அந்தத் துவாரம் வழியாக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்), மேலும் மேள்தளத்தில் உள்ளோருக்குச் சிரமம் கொடுக்காமல் இருக்கலாம், (இப்படிச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!) என்று கீழ் தளத்தினர் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர். மேள்தளத்திலுள்ளவர்கள், கீழ் தளத்திலுள்ளவர்களை அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப விட்டுவிட்டால், (அவர்கள் துவாரம் போட்டுக் கொண்டால்) கப்பல் மூழ்கி எல்லோருமே அழிந்து போவார்கள். அவர்களை (கப்பலில் துவாரம் போடவிடாமல் தடுத்துவிட்டால்) அவர்களும், மற்ற பயணிகளும் காப்பாற்றப்படுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- இந்த ஹதீஸில், இந்த உலகத்திற்கு உதாரணமாகக் கப்பலைக் கூறப்பட்டுள்ளது, அதில் பயணம் செய்யும் கூட்டத்தினரில் ஒரு சாராரின் தவறால் மற்றவர்களுக்கு தாக்கம் ஏற்படாமல் இருக்க முடியாது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒரு கப்பலில் பயணம் செய்யும் ஒரு சமுதாயத்தினரைப் போல, அக்கப்பலில் நல்லோர், தீயோர் அனைவரும் உள்ளனர். நன்மையைவிட தீமை மிகைத்துவிட்டால், தீமையில் மூழ்கி இருக்கும் தீயவர்கள் மட்டும் அந்தத் தீங்கின் தாக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். நல்லோர், தீயோர் முழு சமுதாயமும், முழு உலகமும் அத்தீமையின் தாக்கத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, மனித சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக அல்லாஹுதஆலாவிற்கு மாறுசெய்பவர்களை தீங்கை விட்டும் தடுப்பது அவசியம், இல்லையெனில், முழுசமுதாயமும் அல்லாஹுதஆலாவின் வேதனைக்கு ஆளாக நேரிடும்.
١٠– عَنِ الْعُرْسِ بْنِ عَمِيرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ لاَ يُعَذِّبُ الْعَامَّةَ بِعَمَلِ الْخَاصَّةِ حَتَّي تَعْمَلَ الْخَاصَّةُ بِعَمَلٍ تَقْدِرُ الْعَامَّةُ أَنْ تُغَيِّرَهُ، وَلاَ تُغَيِّرُهُ، فَذَاكَ حِينَ يَأْذَنُ اللهُ فِي هَلاَكِ الْعَامَّةِ وَالْخَاصَّةِ.
رواه الطبراني ورجاله ثقات، مجمع الزوائد:٧ /٥٢٨
10. “சிலருடைய குற்றங்களின் காரணமாக, குற்றம் செய்யாதவர்களை அல்லாஹுதஆலா வேதனை செய்வதில்லை. ஆயினும், அவனுக்கு வழிப்பட்டு நடப்போர், குற்றம் புரிவோரைத் தடுப்பதற்குச் சக்தியிருந்தும் தடுக்கவில்லையென்றால், நல்லோர், தீயோர், அனைவரையும் வேதனை செய்வான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உர்ஸுப்னு அமீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١١– عَنْ أَبِي بَكْرَةَؓ (فِي حَدِيثٍ طَوِيلٍ) عَنِ الرَّسُولِ ﷺ قَالَ: أَلاَ هَلْ بَلَّغْتُ؟ قُلْنَا: نَعَمْ! قَالَ: اَللّهُمَّ اشْهَدْ فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَإِنَّهُ رُبَّ مُبَلِّغٍ يُبَلِّغُهُ مَنْ هُوَ أَوْعَي لَهُ.
رواه البخاري، باب قول النبي ﷺ لا ترجعوا بعدي كفارا….، رقم :٧٠٧٨
11. “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் நிகழ்த்திய உரையின் இறுதியில்) “நான் அல்லாஹுதஆலாவின் கட்டளைகளை உங்களுக்கு எத்திவைத்து விட்டேனா?” என்று கேட்டார்கள். (ஸஹாபிகளாகிய) நாங்கள், “ஆம்!” தாங்கள் எத்திவைத்துவிட்டீர்கள்” என்று கூறினோம். “யாஅல்லாஹ்! (இவர்கள் ஒப்புக் கொண்டதற்கு) நீ சாட்சியாக இரு” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இங்கு வந்துள்ளவர்கள், இங்கு வராதவர்களுக்கு எத்திவைத்துவிடுங்கள். ஏனெனில், சில சமயங்களில் யாருக்கு தீனுடைய செய்திகள் எத்திவைக்கப்படுகிறதோ, அவர் எத்திவைப்பவரைவிட அதிக நினைவாற்றல் உள்ளவராக இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்‘ என்று ஹஜ்ரத் அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- அல்லாஹுதஆலா மற்றும் அவனது ரஸூல் (ஸல்) அவர் களிடமிருந்து தான் செவியுற்ற செய்திகளை தன்னிடம் மட்டும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் எத்திவைத்துவிட வேண்டுமென இந்த ஹதீஸ் வலியுறுத்துகிறது. ஏனெனில், ஹதீஸ்களை சொல்பவரைவிட செவியுறுபவர் அதிக நினைவாற்றல் உள்ளவராக இருக்கலாம்.
(பத்ஹுல்பாரீ)
١٢– عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَاباً مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلاَ يَسْتَجِيبُ لَكُمْ.
رواه الترمذي وقال هذا حديث حسن ، باب ما جاء في الامر بالمعروف والنهي عن المنكر، رقم:٢١٦٩
12. “என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவசியம் நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள், இல்லையென்றால் விரைவில் அல்லாஹுதஆலா உங்கள் மீது தனது வேதனையை இறக்கிவிடுவான். பிறகு நீங்கள் துஆச் செய்தால் அல்லாஹுதஆலா உங்களது துஆவை ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபத்துப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٣– عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍؓ قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِﷺ أَفَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ.
رواه البخاري، باب ياجوج ومأجوج، رقم:٧١٣٥
13. ஹஜ்ரத் ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் “யாரஸூலல்லாஹ், எங்களில் நல்லோர்கள் இருக்கும் நிலையிலும் நாங்கள் நாசமாகி விடுவோமா?” என்று வினவினேன், “ஆம்!” தீமைகள் மிகைத்துவிட்டால்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(புகாரி)
١٤– عَنْ أَنَسٍؓ قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ ﷺ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ ﷺ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ: أَسْلِمْ، فَنَظَرَ إِلي أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا الْقَاسِمِ ﷺ،فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ ﷺ وَهُوَ يَقُولُ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ.
رواه البخاري، باب اذا اسلم الصبي فمات…، رقم:١٣٥٦
14. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “யூதச் சிறுவன் ஒருவன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தான். அவன் நோயுற்றபோது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவனை நலன் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவனது தலைப் பக்கம் அமர்ந்தார்கள், “நீ முஸ்லிமாகிவிடு” என்றார்கள். அவன் தனக்கருகில் நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்தான், அவன் தந்தை, “அபுல்காஸிம் (ஸல்) அவர்களுக்கு வழிப்படு!” என்று சொன்னார். எனவே அவன் முஸ்லிமாகிவிட்டான். “இந்தச் சிறுவனை (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிய அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்!” என்று கூறியவர்களாக நபி (ஸல்) அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.
(புகாரி)
١٥– عَنْ سَهْلِ بْنِ سَعْدٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِنَّ هذَا الْخَيْرَ خَزَائِنُ، وَلِتِلْكَ الْخَزَائِنِ مَفَاتِيحُ فَطُوبي لِعَبْدٍ جَعَلَهُ اللهُ مِفْتَاحاً لِلْخَيْرِ مِغْلاَقاً لِلشَّرِّ وَوَيْلٌ لِعَبْدٍ جَعَلَهُ اللهُ مِفْتَاحاً لِلشَّرِّ مِغْلاَقاً لِلْخَيْرِ.
رواه ابن ماجه، باب من كان مفتاحا للخير، رقم: ٢٣٨
15. “இந்த மார்க்கம் பாக்கியங்களின் கருவூலம், அந்த பாக்கியங்களின் கருவூலங்களுக்குத் திறவு கோல்கள் உள்ளன. அல்லாஹுதஆலா எந்த அடியானை நன்மைக்குத் திறவு கோலாகவும், தீமையை அடைக்கும் பூட்டாகவும் (ஹிதாயத்திற்குரிய காரணமாகவும்) ஆக்கிவைத்தானோ, அந்த அடியானுக்கே நல்வாழ்த்துக்கள்! எந்த அடியானை அல்லாஹுதஆலா தீமைக்குத் திறவு கோலாகவும், நன்மையை அடைக்கும் பூட்டாகவும் (வழிகேட்டிற்குக் காரணமாகவும்) ஆக்கிவைத்தானோ அந்த அடியானுக்கு நாசம்தான்!” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
١٦– عَنْ جَرِيرٍؓقَالَ: وَلَقَدْ شَكَوْتُ إِلَي النَّبِيِّ ﷺ أَنِّي لاَ أَثْبُتُ عَلَي الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ: اَللّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِياً مَهْدِيّاً.
رواه البخاري، باب من لا يثبت علي الخيل: ٣ /١١٠٤، دار ابن كثير دمشق
16. ஹஜ்ரத் ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களிடம், “என்னால் சரியான முறையில் குதிரையில் அமர்ந்து பயணம் செய்ய முடிவதில்லை” என முறையிட்டேன், நபி (ஸல்) அவர்கள் தமது கையால் என் நெஞ்சில் தட்டி, “யாஅல்லாஹ், இவரை நல்ல முறையில் குதிரையில் அமர்ந்து பயணம் செய்பவராக ஆக்கிவிடு! நேர்வழியில் தாமும் நடந்து மற்றவர்களுக்கும் நேரான வழியைக் காட்டக்கூடியவராக இவரை ஆக்கிவிடு” என துஆ செய்தார்கள்.
(புகாரி)
١٧– عَنْ أَبِي سَعِيدٍؓقَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَحْقِرْ أَحَدُكُمْ نَفْسَهُ قَالُوا: يَا رَسُولَ اللهِﷺ كَيْفَ يَحْقِرُ أَحَدُنَا نَفْسَهُ؟ قَالَ: يَرَي أَمْرًا لِلّهِ عَلَيْهِ فِيهِ مَقَالٌ، ثُمَّ لاَ يَقُولُ فِيهِ، فَيَقُولُ اللهُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ: مَا مَنَعَكَ أَنْ تَقُولَ فِي كَذَا وَكَذَا؟ فَيَقُولُ: خَشْيَةُ النَّاسِ، فَيَقُولُ: فَإِيَّايَ كُنْتَ أَحَقَّ أَنْ تَخْشَي.
رواه ابن ماجه، باب الامر بالمعروف والنهي عن المنكر، رقم:٤٠٠٨
17. “உங்களில் எவரும் தன்னைத் தானே தாழ்வாகக் கருதவேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, “தன்னைத் தானே தாழ்வாகக் கருதுவது என்றால் என்ன?” என்று ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர்.”அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து சீர்திருத்தம் செய்யும் பொறுப்பு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டு, அதுபற்றி அவர் ஏதும் சீர் திருத்தம் செய்யாமல் இருந்து அல்லாஹுதஆலா கியாமத் நாளில், “இன்ன இன்ன காரியங்களில் சீர் திருத்தம் செய்யவிடாமல் உன்னை தடை செய்தது எது?” என்று அவரிடம் கேட்பான். “மக்கள் எனக்குத் தீங்கு விளைவிப்பார்கள் என்று பயந்து சீர் திருத்தம் செய்யாமல் இருந்துவிட்டேன்” என்று அவர் பதில் சொல்வார். “நீ என்னையல்லவா பயப்படவேண்டும்? பயப்படுவதற்கு நான் தான் அதிகத் தகுதி பெற்றவன்” என்று அல்லாஹுதஆலா கூறுவான்” என்ற ஹதீஸை ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
தெளிவுரை:- தீமையை விட்டும் மக்களைத் தடுக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்டு மக்களின் பேச்சுக்கு பயந்து தீமையைத் தடுக்கும் காரியத்தை விடுவது, தன்னைத் தானே தாழ்வாகக் கருதுவதாம்.
١٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍؓقَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ أَوَّلَ مَا دَخَلَ النَّقْصُ عَلَي بَنِي إِسْرَائِيلَ كَانَ الرَّجُلُ يَلْقَي الرَّجُلَ فَيَقُولُ: يَا هذَا! إِتَّقِ اللهَ وَدَعْ مَا تَصْنَعُ، فَإِنَّهُ لاَ يَحِلُّ لَكَ، ثُمَّ يَلْقَاهُ مِنَ الْغَدِ، فَلاَ يَمْنَعُهُ ذلِكَ أَنْ يَكُونَ أَكِيلَهُ وَشَرِيبَهُ وَقَعِيدَهُ، فَلَمَّا فَعَلُوا ذلِكَ ضَرَبَ اللهُ قُلُوبَ بَعْضِهِمْ بِبَعْضٍ، ثُمَّ قَالَ: (لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ م بَنِي إِسْرَائِيلَ عَلي لِسَانِ دَاوُدَ وَعِيسَي بْنِ مَرْيَمَ۞) – إِلي قَوْلِهِ – (فَاسِقُونَ۞). (المائدة:٨١–٧٨). ثُمَّ قَالَ: كَلاَّ وَاللهِ! لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ، وَلَتَأْخُذُنَّ عَلي يَدَيِ الظَّالِمِ، وَلَتَأْطِرُنَّهُ عَلي الْحَقِّ أَطْرًا، وَلَتَقْصُرُنَّهُ عَلَي الْحَقِّ قَصْرًا.
رواه ابو داؤد، باب الامر والنهي، رقم:٤٣٣٦
18. “இஸ்ராயீல் சந்ததியினருக்கு முதன் முதலாக ஏற்பட்ட வீழ்ச்சி, ஒருவர் தன் நண்பரை சந்திக்கும் போது, “நண்பரே, அல்லாஹுதஆலாவைப் பயந்துகொள்! நீ செய்கின்ற காரியத்தை விட்டு விடு, ஏனெனில், நீ செய்கின்ற காரியம் உமக்குத்தகாதது” என்று சொல்வார். பிறகு, மறுநாள் அவரைச் சந்திக்கும் போது, அவர் தன் பேச்சைக் கேட்காதிருந்தும் அவருடன் தனக்குள்ள நட்பின் காரணமாக முன் இருந்ததைப் போல அவருடன் உண்ணவும், பருகவும். சபையில் அமருவதிலும் கூட்டாக ஈடுபட்டிருப்பார். இவ்வாறான நிலை பொதுவாக ஏற்பட்டு நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் வேலையை விட்டு விட்டதும், அல்லாஹுதஆலா, நல்லோர்களின் உள்ளத்தைத் தீயோரின் உள்ளத்தைப்போன்று கடினமானதாக ஆக்கிவிட்டான்” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் (لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ م بَنِي إِسْرَائِيلَ عَلي لِسَانِ دَاوُدَ وَعِيسَي بْنِ مَرْيَم) என்று தொடங்கும் ஆயத்திலிருந்து (فَاسِقُونَ) வரை ஓதினார்கள். (முந்தைய இரு ஆயத்தின் பொருளாவது) “ஹஜ்ரத் தாவூத் (அலை) மற்றும் ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களின் நாவால் பனீஇஸ்ராயீல் சபிக்கப்பட்டனர். இதன் காரணமென்னவென்றால், அவர்கள் மாறு செய்தார்கள், இன்னும் வரம்புமீறினார்கள். அவர்கள் ஈடுபட்டிருந்த தீமையைவிட்டும் ஒருவர் மற்றவரைத் தடுக்காதிருந்தனர். உண்மையில் அவர்களுடைய இந்தக் காரியம் மிகத் தீயது” அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் அவசியம் நன்மையை ஏவிக் கொண்டே இருங்கள் தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள். அநியாயக்காரனை அநியாயத்தைவிட்டும் தடுத்துக் கொண்டிருங்கள், அவனைச் சத்தியத்தின் பால் இழுத்துக்கொண்டு வாருங்கள். அவனைச் சத்தியத்தின் மீது நிலை நிறுத்துங்கள்” என்று மிகவும் வலியுறுத்திக் கட்டளையிட்டார்கள்” என்று ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٩– عَنْ أَبِي بَكْرِ نِ الصِّدِّيقِؓ أَنَّهُ قَالَ: يَاأَيُّهَا النَّاسُ! إِنَّكُمْ تَقْرَءُونَ هذِهِ اْلآيَةَ: (يآأَيُّهَا الَّذِينَ امَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ ج لاَ يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ۞) (المائدة:١٠٥). وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلي يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللهُ بِعِقَابٍ مِنْهُ.
رواه الترمذي وقال: حديث صحيح، باب ما جاء في نزول العذاب اذا لم يغير المنكر، رقم:٢١٦٨
19. ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் சொன்னார்கள், “மக்களே! நீங்கள், (يآأَيُّهَا الَّذِينَ امَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ ج لاَ يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ) “ஈமான் உடையவர்களே! உங்களைப் பற்றிச் சிந்தியுங்கள், நீங்கள் நேர்வழியில் சென்று கொண்டிருக்கையில் வழிகெட்டவர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது” என்ற ஆயத்தை ஓதுகிறீர்கள். “அநியாயக்காரன் அநியாயம் செய்வதைக் கண்டு, அவனை அநியாயத்திலிருந்து தடுக்கவில்லையென்றால், அல்லாஹுதஆலா அவர்கள் அனைவரையும் தனது பொதுவான வேதனையில் சிக்க வைத்திடும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் சொன்னதன் கருத்தாவது, மனிதன் நேர்வழியில் இருந்தால், அவனுக்கு நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் வேலை அவசியமில்லை, ஏனென்றால் மற்றவர்களைப் பற்றி இவரிடம் விசாரணை செய்யப்படமாட்டாது என்பது இந்த ஆயத்தின் கருத்து என நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால், ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைக் கூறி இந்த ஆயத்தின் தவறான விளக்கத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்கள். இயன்றவரை தீமையிலிருந்து தடுப்பது இந்த சமுதாயத்தினர் ஒவ்வொருவரின் மீதும் பொறுப்பாகும். மேலும், இது ஒவ்வொரு நபரின் கடமையுமாகும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். ஆயத்திற்குரிய சரியான விளக்கம் என்னவென்றால், ஈமான் உடையவர்களே! தமது சீர்திருத்தத்தைப் பற்றிக் கவலைப்படுங்கள். நீங்கள் தீனுடைய வழியில் தன்னை சீர்திருத்திக் கொள்வது, பிறருடைய சீர்திருத்தத்தில் கவனம் செலுத்திய வண்ணமாக இருத்தல் வேண்டும். பிறகு உங்களுடைய முயற்சிக்குப் பிறகும் வழிகேட்டில் இருந்தால் அவன் வழிகேட்டில் இருப்பது உங்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது” என்பதாம்.
(பயானுல்குர்ஆன்)
٢٠– عَنْ حُذَيْفَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: تُعْرَضُ الْفِتَنُ عَلي الْقُلُوبِ كَالْحَصِيرِ عُودًا عُودًا، فَأَيُّ قَلْبٍ أُشْرِبَهَا نُكِتَ فِيهِ نُكْتَةٌ سَوْدَاءُ، وَأَيُّ قَلْبٍ أَنْكَرَهَا نُكِتَ فِيهِ نُكْتَةٌ بَيْضَاءُ، حَتَّي تَصِيرَ عَلَي قَلْبَيْنِ، عَلي أَبْيَضَ مِثْلَ الصَّفَا، فَلاَ تَضُرُّهُ فِتْنَةٌ مَا دَامَتِ السَّمواتُ وَاْلاَرْضُ، وَاْلآخَرُ أَسْوَدُ مِرْبَادّاً كَالْكُوزِ مُجَخِّياً لاَ يَعْرِفُ مَعْرُوفاً وَّلاَ يُنْكِرُ مُنْكَرًا إِلاَّ مَا أُشْرِبَ مِنْ هَوَاهُ.
رواه مسلم، باب رفع الامانة والايمان من بعض القلوب…،رقم:٣٦٩
20. “பாய்க்கோரைகள் ஒன்றோடொன்று முன்னும் பின்னும், சேர்ந்திருப்பது போன்று மக்களின் உள்ளங்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து குழப்பங்கள் வந்து கொண்டிருக்கும். இந்தக் குழப்பங்களிலிருந்து ஏதேனுமொரு குழப்பத்தை எந்த உள்ளம் அங்கீகரிக்குமோ அந்த உள்ளத்தில் ஒரு கருப்புப்புள்ளி ஏற்படும். எந்த உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாதோ அவ்வுள்ளத்தில் வெள்ளை நிறத்தில் ஓர் அடையாளம் பதிந்துவிடும் இவ்வாறு உள்ளம் இரண்டு வகையாகிவிடும், ஒன்று, வெண்ணிறத்தில் பளிங்குக் கல்லைப்போல் இருக்கும் உள்ளம். வானம், பூமி நிலைத்திருக்கும் வரை எந்த குழப்பத்தினாலும் அந்த உள்ளத்துக்குத் தாக்கம் உண்டாக்க முடியாது. (பளிங்குக்கல்லின் வழுவழுப்பால் அதன் மீது எந்தப் பொருளும் தங்காததைப்போல், அவருடைய உள்ளத்தில் ஈமான் உறுதியாக இருப்பதால் எந்தக் குழப்பத்தாலும் தாக்கம் ஏற்படுத்த முடியாது) மற்றோரு வகையான உள்ளம், கறுப்பு நிற கவிழ்த்து வைக்கப்பட்ட மண் கோப்பையைப் போன்றது. அதிகமான பாவத்தின் காரணமாக உள்ளம் கறுப்பு நிறமாக மாறிவிடும், கவிழ்த்து வைக்கப்பட்ட கோப்பையில் எதும் தங்காததுபோல், பாவங்களின் மீது வெறுப்போ, ஈமானுடைய ஒளியோ அந்த உள்ளத்தில் தங்காது, அதன் காரணமாக நல்லதை நல்லதென்றோ, தீயதைக் தீயதென்றோ அப்படிப்பட்ட உள்ளம் உடையவன் அறியமாட்டான். தன்னுள்ளே இடம் பிடித்துக்கொண்ட மனோ இச்சைகளின்படியே நடப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢١– عَنْ أَبِي أُمَيَّةَ الشَّعْبَانِيِّؒ قَالَ: سَاَلْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيِّؓ: فَقُلْتُ: يَا أَبَا ثَعْلَبَةَ! كَيْفَ تَقُولُ فِي هذِهِ اْلآيَةِ؟ (عَلَيْكُمْ أَنْفُسَكُمْ۞) قَالَ: أَمَا وَاللهِ لَقَدْ سَاَلْتَ عَنْهَا خَبِيرًا، سَاَلْتُ عَنْهَا رَسُولَ اللهِ ﷺ فَقَالَ: بَلِ ائْتَمِرُوا بِالْمَعْرُوفِ، وَتَنَاهَوْا عَنِ الْمُنْكَرِ حَتَّي إِذَا رَأَيْتَ شُحّاً مُطَاعاً، وَهَوًي مُتَّبَعاً، وَدُنْيَا مُؤْثَرَةً، وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ، فَعَلَيْكَ يَعْنِي بِنَفْسِكَ، وَدَعْ عَنْكَ الْعَوَامَّ، فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامَ الصَّبْرِ، الصَّبْرُ فِيهِ مِثْلُ قَبْضٍ عَلَي الْجَمْرِ، لِلْعَامِلِ فِيهِمْ مِثْلُ أَجْرِ خَمْسِينَ رَجُلاً يَعْمَلُونَ مِثْلَ عَمَلِهِ فَقَالَ (أَبُو ثَعْلَبَةَ۞): يَا رَسُولَ اللهِﷺ أَجْرُ خَمْسِينَ مِنْهُمْ، قَالَ: أَجْرُ خَمْسِينَ مِنْكُمْ.
رواه ابو داؤد، باب الامر والنهي، رقم:٤٣٤١
21. ஹஜ்ரத் அபூஉமய்யா ஷஃபானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “நான் அபூஸஃலபா குஷனீ (ரலி) அவர்களிடம், (عَلَيْكُمْ أَنْفُسَكُمْ) “நீங்கள் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள், என்ற வசனத்தைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “அல்லாஹ்வின்மீது சத்தியமாக, நன்கு தெரிந்தவரிடமே இதைப்பற்றிக் கேட்டுள்ளீர். நானே இந்த ஆயத்தைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கிறேன். (தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படுங்கள் என்பது பொருளல்ல) மாறாக, ஒருவர் மற்றவருக்கு நன்மையை ஏவிக் கொண்டிருங்கள். தீய காரியங்களைவிட்டும் தடுத்துக் கொண்டிருங்கள், பரவலாக மக்கள் கருமித்தனம் செய்துகொண்டும், தம் இச்சையைப் பூர்த்தி செய்துகொண்டும், தீனைவிட உலகிற்கு முதலிடம் கொடுத்துக்கொண்டும், (பிறருடைய கருத்தை ஏற்காமல்) ஒவ்வொருவரும் தமது கருத்தையே சரியானது என்று நினைத்தால், அந்தச் சமயத்தில் பொதுமக்களை விட்டுவிட்டுத் தன் சீர்திருத்தத்தைப் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டுவிடுங்கள். ஏனெனில், கடைசிக் காலத்தில் தீனுடைய சட்டங்களின் மீது நிலைத்து நின்று அமல் செய்வது நெருப்புக் கங்கைப் பிடித்திருப்பதைப் போன்றிருக்கும். வெகுவிரைவில் ஒரு நாள் வரவிருக்கிறது அந்நாட்களில் அமல் செய்யக் கூடியவர்களுக்கு, ஐம்பது நபர்கள் ஓர் அமலைச் செய்தால் கிடைக்கின்ற நன்மை அவர்களுடைய ஓர் அமலுக்குக் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஹஜ்ரத் அபூ ஸஃலபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “யாரஸூலல்லாஹ், அவர்களில் ஐம்பது பேரின் நன்மையா?” (அல்லது எங்களில் ஐம்பது பேர்களின் நன்மையா? ஏனெனில் ஸஹாபாக்களின் (ரலி) அமலின் கூலி மகத்தானது) என்று நான் கேட்டதற்கு, “உங்களில் உள்ள ஐம்பது நபர்களின் கூலி அவர்களில் ஒரு மனிதருக்கு கிடைக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- கடைசிக்காலத்தில் அமல் செய்யும் மனிதர் தனது இந்த விசேஷமான சிறப்பால் ஸஹாபாக்களைவிட பதவியில் உயர்ந்துவிடுவார் என்பது இதன் பொருளல்ல, ஏனென்றால் உம்மத்திலுள்ள ஏனையோரைவிட ஸஹாபாக்களின் சிறப்பு உயர்ந்தது. இந்த ஹதீஸின் மூலம், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்து வருவது அவசியமானதென்றும், ஆனால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் முற்றிலும் இல்லாமலாகிவிடும் காலம் வந்துவிட்டால், தனித்திருந்து அமல் செய்யவேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அல்லாஹுதஆலாவின் பேரருளால் இன்னும் அப்படிப்பட்ட காலம் வரவில்லை. ஏனெனில், இந்தக் காலத்தில் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் உம்மத்தில் உண்டு.
٢٢– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِ فَقَالُوا: يَا رَسُولَ اللهِﷺ مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ فِيهَا، فَقَالَ: فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: غَضُّ الْبَصَرِ، وَكَفُّ اْلاَذَي، وَرَدُّ السَّلاَمِ، وَاْلاَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ.
رواه البخاري، باب قول الله تعالي يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا….، رقم:٦٢٢٩
22. “நீங்கள் பாதைகளில் அமர்வதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, “யாரஸூலல்லாஹ், நாங்கள் சில சமயங்களில் பாதைகளில் அமரவேண்டியுள்ளது. அங்கு நாங்கள் உட்காந்து பேசிக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது” என ஸஹாபாக்கள் (ரலி) கூறினார்கள். “அப்படி உட்காரத்தான் வேண்டுமென்றால், பாதசாரிகளின் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். “யாரஸூலல்லாஹ், பாதசாரி(நடைபாதைவாசி)களின் கடமைகள் யாவை?’ என ஸஹாபாக்கள் கேட்க, “பார்வையைத் தாழ்த்துதல், தொல்லைதரும் பொருட்களைப் பாதையைவிட்டும் அப்புறப்படுத்துதல், (அல்லது தான் தொல்லை கொடுக்காமல் இருத்தல்) ஸலாமுக்குப் பதில் சொல்லுதல், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்” என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- பாதைகளில் உட்காருவதைத் தவிர்ப்பது எங்களுக்கு இயலாத காரியம், ஏனெனில், எங்களுக்குரிய சபைகளை அமைத்துக் கொள்ள எங்களிடம் போதிய இடவசதி இல்லை. ஆகையால், நாங்கள் எங்காவது சிலர் சந்தித்துக் கொண்டால் அங்கேயே பாதையில் அமர்ந்துவிடுகிறோம், இன்னும் தமது உலக, மார்க்க சம்பந்தமான காரியங்களைப் பற்றி எங்களுக்குள் ஆலோசனையும் செய்து கொள்கிறோம், ஒருவர் மற்றவருடைய நிலமையை விசாரித்துக் கொள்கிறோம், எங்களில் எவரேனும் நோயுற்றால் அவருக்கு மருத்துவம் செய்வது பற்றி முடிவெடுக்கிறோம், தமக்குள் ஏதேனும் மனக்கசப்பு இருந்தால் அதைச் சமாதானம் செய்து மனதில் ஏற்பட்ட தவறான எண்ணங்களை நீக்கி உள்ளங்களைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம் என்பது தான் ஸஹாபாக்களின் நோக்கம்.
(மளாஹிர்ஹக்)
٢٣– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب ، باب ما جاء في رحمة الصبيان، رقم:١٩٢١
23. “சிறியோர் மீது அன்பு செலுத்தாதவனும், பெரியோரைக் கண்ணியப் படுத்தாதவனும், நன்மையை ஏவாதவனும், தீமையைத் தடுக்காதவனும் நம்மைப் பின்பற்றுவோரில் உள்ளவன் அல்ல” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٤– عَنْ حُذَيْفَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّدَقَةُ وَاْلاَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ.
(الحديث) رواه البخاري، باب الفتنة التي تموج كموج البحر، رقم:٧٠٩٦
24. “ஒருவருடைய மனைவி, பொருள், பிள்ளைகள், அண்டைவீட்டார் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்படுகிற தவறுகளுக்கும், பாவங்களுக்கும், அவருடைய தொழுகை, ஸதகா, நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது முதலானவை குற்றப் பரிகாரமாக ஆகிவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٥– عَنْ جَابِرٍؓقَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَوْحَي اللهُ إِلَي جِبْرِيلَؑ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا قَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلاَناً لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ قَالَ: فَقَالَ: اِقْلِبْهَا عَلَيْهِ وَعَلَيْهِمْ فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ.
مشكاة المصابيح، رقم:٥١٥٢
25. “இன்ன நகரத்தையும் அதில் இருக்கும் நகரவாசிகளையும் சேர்த்துக் கவிழ்த்துவிடும்” என்று அல்லாஹுதஆலா ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர் களுக்குக் கட்டளையிட்டான்.”என்னுடைய இரட்சகனே, இந்த ஊரில் ஒரு நொடிகூட உனக்கு மாறு செய்யாத உன்னுடைய இன்ன அடியாரும் உள்ளாரே!” என ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹுதஆலா ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், “நீர் அந்த நகரத்தை அந்த மனிதரையும் அந்த நகரவாசிகளுடன் சேர்த்துப் புரட்டிவிடுவீராக!. ஏனென்றால், அந்நகரவாசிகள் மாறு செய்வதைக் கண்டும் அந்த மனிதருடைய முகத்தின் நிறம் ஒரு வினாடி கூட மாறியதில்லை” என்று அல்லாஹுதஆலா கூறினான் என்ற ஹதீஸை ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(மிஷ்காத்துல் மஸாபீஹ்)
தெளிவுரை:- என்னுடைய அந்த அடியான் ஒருபோதும் எனக்கு மாறு செய்யவில்லை என்பது உண்மைதான், ஆனால், மக்கள் அவருக்கு முன் பாவங்கள் செய்து கொண்டிருக்க, இவர் நிம்மதியாக அதைப்பார்த்துக் கொண்டிருந்தாரே அந்தப் பாவம் என்ன சிறியதா? தீமைகள் பரவிக் கொண்டிருக்கின்றன, மக்கள் அல்லாஹுதஆலாவுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், தீமைகளைக் கண்டும் அவருடைய முகத்தில் எள்ளளவும் வெறுப்பின் அடையாளம் காணப்படவில்லையே என்பதே இந்த ஹதீஸின் சாராம்சம்.
(மிர்காத்)
٢٦– عَنْ دُرَّةَ ابْنَةِ أَبِي لَهَبٍؓ قَالَتْ: قَامَ رَجُلٌ إِلَي النَّبِيِّ ﷺ وَهُوَ عَلَي الْمِنْبَرِ فَقَالَ: يَا رَسُولَ اللهِﷺ أَيُّ النَّاسِ خَيْرٌ؟ قَالَ: خَيْرُ النَّاسِ أَقْرَؤُهُمْ وَأَتْقَاهُمْ وَآمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَأَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَأَوْصَلُهُمْ لِلرَّحِمِ.
رواه احمد وهذا لفظه، والطبراني ورجالهما ثقات وفي بعضهم كلام لا يضر، مجمع الزوائد:٧ /٥٢٠
26. ஹஜ்ரத் துர்ராபின்து அபீலஹப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மிம்பர் மீது அமர்ந்திருந்த சமயம், ஒருவர் எழுந்து நின்று, “யாரஸூலல்லாஹ், யார் மக்களில் சிறந்தவர்?” என்று வினவினார்.”எல்லோரையும் விட அதிகமாகக் குர்ஆன் ஓதுபவர், எல்லோரையும் விட அதிகமாக அல்லாஹ்வை பயப்படக் கூடியவர், எல்லோரையும் விட அதிகமாக நன்மையை ஏவி, தீமையை விட்டு விலக்கக் கூடியவர், எல்லோரையும் விட அதிகமாக உறவினரைச் சேர்த்து வாழ்பவரே மக்களில் சிறந்தவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٧– عَنْ أَنَسٍؓ أَنَّ نَبِيَّ اللهِ ﷺ كَتَبَ إِلَي كِسْرَي، وَإِلَي قَيْصَرَ، وَإِلَي النَّجَاشِيِّ، وَإِلي كُلِّ جَبَّارٍ، يَدْعُوهُمْ إِلَي اللهِ تَعَالَي، وَلَيْسَ بِالنَّجَاشِيِّ الَّذِي صَلَّي عَلَيْهِ النَّبِيُّ ﷺ.
رواه مسلم، باب كتب النبي ﷺ إلي ملوك الكفار…، رقم:٤٦٠٩
27. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் கிஸ்ரா, கைஸர், நஜாஷி, மற்றும் ஒவ்வொரு பேரரசருக்கும் கடிதம் எழுதினார்கள், அவர்களை அல்லாஹுதஆலாவின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள் (முஸ்லிமாகி), ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களால் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட நஜாஷியல்ல” மாறாக இவர் வேறோரு நஜாஷி (அபிசீனியாவின் ஒவ்வொரு அரசரின் பட்டப் பெயரும் “நஜாஷி” என்று கூறப்பட்டு வந்தது).
(முஸ்லிம்)
٢٨– عَنِ اْلعُرْسِ بْنِ عَمِيرَةَ اْلكِنْدَيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِذَا عُمِلَتِ الْخَطِيئَةُ فِي اْلاَرْضِ كَانَ مَنْ شَهِدَهَا فَكَرِهَهَا كَانَ كَمَنْ غَابَ عَنْهَا، وَمَنْ غَابَ عَنْهَا فَرَضِيَهَا كَانَ كَمَنْ شَهِدَهَا.
رواه ابو داؤد، باب الامر والنهي، رقم: ٤٣٤٥
28. “பூமியில் ஏதேனும் ஒரு பாவம் நிகழ அதை ஒருவர் பார்த்து, அதைத் தீமை என்று அவர் கருதினால், அவர் அப்பாவம் நடைபெறுமிடத்தில் இல்லாத மனிதரைப் போன்று தீமையைவிட்டும் பாதுகாக்கப்படுவார். மேலும், அப்பாவம் நடைபெறுமிடத்தில் இல்லாத ஒருவர், அப்பாவத்தைத் தீமை எனக் கருதாவிட்டால், அவர் அப்பாவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தவரைப்போன்று தீமையில் கூட்டாகிவிடுவார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உர்ஸுப்னு அமீரா கிந்தீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٩– عَنْ جَابِرٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ أَوْقَدَ نَارًا، فَجَعَل الْجَنَادِبُ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهَا، وَهُوَ يَذُبُّهُنَّ عَنْهَا، وَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ، وَأَنْتُمْ تُفَلِّتُونَ مِنْ يَدِي.
رواه مسلم، باب شفقته ! علي امته….، رقم:٥٩٥٨
29. “எனக்கும் உங்களுக்கும் உதாரணம், ஒருவர் நெருப்பை மூட்டி, அதில் விட்டில், ஈசல்கள் வந்து விழ ஆரம்பிக்க அதை அவர் விரட்டுபவரை போன்று. இதைப்போன்றே நானும் உங்கள் இடுப்புகளைப் பிடித்துப் பிடித்து உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுகிறேன். ஆனால், நீங்களோ என் கையிலிருந்து நழுவிச் செல்கிறீர்கள்” (நரக நெருப்பில் விழப்போகிறீர்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- இந்தச் சிறப்பு மிக்க ஹதீஸில், இந்த உம்மத்தின் மீது நபி (ஸல்) அவர்களின் எல்லையற்ற அன்பும், தனது உம்மத்தை நரக நெருப்பில் இருந்து காக்கவேண்டுமென்ற பேராவலும் விவரிக்கப்பட்டுள்ளன.
(நவவீ)
٣٠– عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَي النَّبِيِّ ﷺ يَحْكِي نَبِيّاً مِنَ اْلاَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ وَهُوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَيَقُولُ: اَللّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لاَ يَعْلَمُونَ.
رواه البخاري، كتاب احاديث الانبياء، رقم:٣٤٧٧
30. ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு நபியுடைய உம்மத்தினர் அவரை அடித்து, அடித்து ரத்தமயமாக்கி விட்டார்கள். அந்த நபி (அலை) தமது முகத்திலுள்ள ரத்தத்தைத் துடைத்தவாறு, “யாஅல்லாஹ், எனது சமுதாயத்தினரை மன்னித்துவிடு, ஏனெனில், அவர்கள் அறியாதவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு நபி (அலை) அவர்களுடைய சம்பவத்தை விவரித்ததை நான் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றிருக்கிறது.
(புகாரி)
(உஹது யுத்தத்தில் இதைப்போன்ற ஒரு சம்பவம் நபி (ஸல்) அவர்களுக்கும் நிகழ்ந்தது).
٣١– عَنْ هِنْدِ بْنِ أَبِي هَالَةَؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ مُتَوَاصِلَ اْلاَحْزَانِ دَائِمَ الْفِكْرَةِ لَيْسَتْ لَهُ رَاحَةٌ طَوِيلَ السَّكْتِ لاَ يَتَكَلَّمُ فِي غَيْرِ حَاجَةٍ.
(وهو طرف من الرواية) الشمائل المحمدية والخصائل المصطفوية، رقم:٢٢٦
31. “நபி (ஸல்) அவர்கள் (தன் உம்மத்தைப்பற்றி) தொடர்ந்த கவலையுடையவர்களாகவும், எப்பொழுதும் கவலையுற்றவர்களாகவும் இருப்பார்கள், (உம்மத்தைப் பற்றிய இந்தக் கவலை காரணமாக) அன்னார் எந்நேரமும் நிம்மதியற்று இருப்பார்கள், அதிகம் மௌனமாகவே இருப்பார்கள், தேவையின்றிப் பேசமாட்டார்கள்” என்று ஹஜ்ரத் ஹிந்துப்னு அபீஹாலா (ரலி) அவர்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் தன்மைகளை கூறுகிறார்கள்.
(ஷமாயில் திர்மிதீ)
٣٢– عَنْ جَابِرٍؓ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللهِ ﷺ أَحْرَقَتْنَا نِبَالُ ثَقِيفٍ فَادْعُ اللهَ عَلَيْهِمْ فَقَالَ: اَللّهُمَّ اهْدِ ثَقِيفاً.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب، باب في ثقيف وبني حنفية، رقم:٣٩٤٢
32. “யாரஸூலல்லாஹ், ஸஃகீப் கிளையாரின் அம்புகள் எங்களை நாசமாக்கிவிட்டன, தாங்கள் அவர்களைச் சபிப்பீர்களாக!” என்று நபி (ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்கள் (ரலி) வேண்டினார்கள்.”யாஅல்லாஹ், ஸஃகீப் கிளையாருக்கு நேர்வழியை கொடுத்தருள்வாயாக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள் என ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٣– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ أَنَّ النَّبِيَّ ﷺ تَلاَ قَوْلَ اللهِ تَعَالي فِي إِبْرَاهِيمَؑ : رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ ج فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّيْ۞). (ابراهيم:٣٦). الآية وَقَالَ عِيسَي : إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ج وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ۞). (المائدة:١١٨). فَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: اَللّهُمَّ أُمَّتِي أُمَّتِي،وَبَكَي فَقَالَ اللهُ : يَا جِبْرِيلُ! اِذْهَبْ إِلي مُحَمَّدٍ، وَرَبُّكَ أَعْلَمُ، فَاسْأَلْهُ مَا يُبْكِيكَ؟ فَأَتَاهُ جِبْرِيلُؑفَسَأَلَهُ، فَأَخْبَرَهُ رَسُولُ اللهِ ﷺ بِمَا قَالَ، وَهُوَ أَعْلَمُ، فَقَالَ اللهُ: يَا جِبْرِيلُ! اِذْهَبْ إِلي مُحَمَّدٍ فَقُلْ: إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ وَلاَ نَسُوءُكَ.
رواه مسلم، باب دعاء النبي ﷺ لامته…، رقم :٤٩٩
33. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சங்கைமிக்க குர்ஆனில் அல்லாஹுதஆலா ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட துஆவுடைய வசனத்தை ஓதினார்கள். (رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ ج فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّيْرَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ ج فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّيْ) “என்னுடைய ரப்பே, இந்தச் சிலைகள் ஏராளமான மனிதர்களை வழிகெடுத்துவிட்டன. (ஆகையால் என்னையும், என்னுடைய சந்ததிகளையும், சிலை வணக்கத்தை விட்டும் காப்பாற்ற துஆ செய்கிறேன். அவ்வாறே என் சமுதாயத்தினரையும், அவற்றை வணங்குவதைவிட்டும் தடுத்துக்கொண்டிருக்கிறேன்) பிறகு (நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்த பின்) யார் எனது பேச்சை ஏற்றுக் கொள்கிறாரோ அவர் என்னுடையவரே, (மேலும் அவருக்கு மன்னிப்பை வாக்களிக்கப்பட்டுள்ளது). யார் எனக்கு வழிப்படவில்லையோ (அவருக்கு ஹிதாயத்தைத் தந்தருள் ஏனெனில்) நீ மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபை உடையவன், (விசுவாசிகளுக்காகப் பரிந்து பேசுவதும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காக நேரான வழியைக் கேட்பதும் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய இந்த துஆவின் நோக்கமாம்).மேலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் ஈசா (அலை) அவர்கள் கேட்ட துஆவுடைய ஆயத்தையும் ஓதினார்கள். (إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ج وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ) “நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உன்னுடைய அடியார்கள் தான் (நீ அவர்களுடைய உரிமையாளன், அடிமைகள் செய்த குற்றங்களுக்குத் தண்டனை வழங்க உரிமையாளனுக்கு உரிமை உண்டு. அவர்களை நீ மன்னித்துவிட்டால் நீ மிகைத்தவன் (சக்தி உள்ளவன்).(ஆகவே மன்னிப்பதற்கும் சக்தி பெற்றவன்) மேலும் நீ ஞானமிக்கவனாகவும், நுணுக்கமுள்ளவனாகவும் இருக்கிறாய். எனவே, உன்னுடைய மன்னிப்பும், உனது ஆழ்ந்த ஞானத்துக்கு இணக்கமானதாகவே இருக்கும். இந்த இரு ஆயத்துகளை ஓதியதும் (நபி (ஸல்) அவர்களுக்குத் தமது உம்மத்துடைய நினைவு வந்துவிட்டது) நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்யத் தமது கரங்களை உயர்த்தியவாறு, “யாஅல்லாஹ், எனது உம்மத், எனது உம்மத்” என்று கூறி அழ ஆரம்பித்துவிட்டார்கள். “ஜிப்ரயீலே! முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லும்!, உனது ரப்பு யாவற்றையும் அறிந்திருக்கின்றான், ஆயினும், நீர் அவரிடம், “அழக் காரணம் என்ன? என்று கேட்டுவருமாறு ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களை அனுப்பி வைத்தான். அவ்வாறே ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “மறுமையில், என்னுடைய உம்மத்துக்கு என்ன நேருமோ என்ற சிந்தனை என்னை அழவைத்துவிட்டது” என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் கூறினார்கள். (ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அங்கிருந்து சென்று அல்லாஹுதஆலாவிடம் இந்தச் செய்தியைக் கூறினார்கள்) “ஜிப்ரயீலே! முஹம்மத் (ஸல்) அவர்களிடம் சென்று, “உம்முடைய சமுதாயத்தினருடைய காரியத்தில் உம்மை மகிழ்விப்போம், உம்மைக் கவலைக்குள்ளாக்க மாட்டோம்” என்று கூறும் எனச் சொல்லி அனுப்பினான்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- அல்லாஹுதஆலா ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் சொல்லியனுப்பிய செய்தியை நபி (ஸல்) அவர்கள் கேட்டதும், “என்னுடைய சமுதாயத்தினர் அனைவரும் நரகை விட்டு வெளியேறியபின் தான் நான் மகிழ்ச்சியடைவேன்” என்று சொன்னதாக சில அறிவிப்புகளில் வந்துள்ளது. அல்லாஹுதஆலா எல்லாவற்றையும் அறிந்திருந்தும், ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களை அனுப்பி அழ வேண்டிய காரணம் பற்றி விசாரிக்கச் சொன்னது, நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்தவும், சங்கைப்படுத்தவும் தான்.
(மஆரிஃபுல்ஹதீஸ்)
٣٤– عَنْ عَائِشَةَؓ قَالَتْ: لَمَّا رَأَيْتُ مِنَ النَّبِيِّ ﷺ طِيبَ نَفْسٍ قُلْتُ: يَا رَسُولَ اللهِﷺ اُدْعُ اللهَ لِي، قَالَ: اَللّهُمَّ اغْفِرْ لِعَائِشَةَ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهَا وَمَا تَأَخَّرَ، وَمَا أَسَرَّتْ وَمَا أَعْلَنَتْ فَضَحِكَتْ عَائِشَةُؓحَتَّي سَقَطَ رَأْسُهَا فِي حِجْرِهَا مِنَ الضِّحْكِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: أَيَسُرُّكِ دُعَائِي؟ فَقَالَتْ: وَمَا لِي لاَ يَسُرُّنِي دُعَاؤُكَ؟ فَقَالَ: وَاللهِ إِنَّهَا لَدَعْوَتِي لِأُمَّتِيْ فِي كُلِّ صَلاَةٍ.
رواه البزار ورجاله رجال الصحيح غير احمد بن منصور الرمادي وهو ثقة، مجمع الزوائد:٩/٣٩٠
34. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கண்டு, “யாரஸூலல்லாஹ், எனக்காக அல்லாஹுதஆலாவிடம் துஆச் செய்யுங்கள்” என்று வேண்டினேன்.”யாஅல்லாஹ், ஆயிஷாவுடைய முன், பின் பாவங்களை மன்னித்துவிடு. மேலும், அவர் மறைமுகமாக, பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் மன்னித்து விடு!” என்று துஆச் செய்தார்கள். இந்த துஆவைக் கேட்டதும், எனது தலை எனது மடியில் போய் முட்டும் அளவு எனக்கு மகிழ்ச்சி உண்டானது”. “என்னுடைய துஆவால் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறீரா?” என நபியவர்கள் வினவியதற்கு, “தங்களுடைய துஆவால் எனக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படாமல் இருக்கும்?” என்றேன்.”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த துஆவை ஒவ்வொரு தொழுகையிலும் எனது உம்மத்தினருக்காக கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٥– عَنْ عَمْرِو بْنِ عَوْفٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِنَّ الدِّينَ بَدَأَ غَرِيباً وَيَرْجِعُ غَرِيباً فَطُوبي لِلْغُرَبَاءِ الَّذِينَ يُصْلِحُونَ مَا أَفْسَدَ النَّاسُ مِنْ بَعْدِي مِنْ سُنَّتِي.
(وهو بعض الحديث) رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء ان الاسلام بدا غريبا…، رقم: ٢٦٣٠
35. “இப்புனிதமார்க்கம் ஆரம்பத்தில் அறிமுகமற்ற அந்நியரைப் போன்று ஆரம்பமானது, வெகுவிரைவில் மீண்டும் முன் இருந்ததைப்போல் அறிமுகமற்ற அந்நியரைப் போன்று ஆகிவிடும். எனவே, தீனுடைய காரணத்தால் அறிமுகமற்ற அன்னியரைப் போன்று எவர் கருதப்படுகிறாரோ, அத்தகைய முஸ்லிம்களுக்கு நற்செய்தி உண்டாகட்டும்!‘ இவர்கள்தான் எனக்குப் பிறகு மக்கள் சீர்கெடச் செய்துவிட்ட எனது வழிமுறையைச் சீர் செய்பவர்கள்” என்று நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٦– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِﷺ اُدْعُ عَلَي الْمُشْرِكِينَ، قَالَ: إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّاناً وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً.
رواه مسلم، باب النهي عن لعن الدواب وغيرها، رقم:٦٦١٣
36. அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் முஷ்ரிக்குகள் மீது சாபமிடும்படி நபி (ஸல்) அவர்களிடம் வேண்டுகோள் விlடப்பட்டது. “நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை, ரஹ்மத்தாக (இரக்கம் காட்டுபவனாக)வே அனுப்பப்பட்டுள்ளேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٧– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَسَكِّنُوا وَلاَ تُنَفِّرُوا.
رواه مسلم، باب في الامر بالتيسير…، رقم:٤٥٢٨
37. செயல்களை எளிதாக்கி காட்டுங்கள், கடினமானதாக ஆக்காதீர்கள், மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சிக்குரிய வழியை ஏற்படுத்துங்கள், வெறுப்பை உண்டாக்காதீர்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٨– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا مِنْ رَجُلٍ يَنْعَشُ لِسَانَهُ حَقّاً يُعْمَلُ بِهِ بَعْدَهُ إِلاَّ أَجْرَي اللهُ عَلَيْهِ أَجْرَهُ إِلَي يَوْمِ الْقِيَامَةِ ثُمَّ وَفَّاهُ اللهُ ثَوَابَهُ يَوْمَ الْقِيَامَةِ.
رواه احمد:٣ /٢٦٦
38. “எவரொருவர் தமது நாவால் உண்மையான வார்த்தையைக் கூறி, அவருக்குப் பிறகு (ம்) அந்த வார்த்தையின்படி அமல் செய்யப்படுமோ இறுதித் தீர்ப்பு நாள் வரை அல்லாஹுதஆலா அதன் கூலியை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். பிறகு, அல்லாஹுதஆலா இறுதித் தீர்ப்பு நாளன்று அவருக்கு அதன் நன்மையை முழுமையாகக் கொடுத்து விடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٣٩– عَنْ أَبِي مَسْعُودِ نِ الْبَدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ دَلَّ عَلَي خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.
(وهو جزء من الحديث)رواه ابو داؤد، باب في الدال علي الخير، رقم:٥١٢٩
39. “எவர் நன்மையின் பால் வழிகாட்டுவாரோ, அவருக்கு அந்த நன்மையைச் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமஸ்வூத் பத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٤٠– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ دَعَا إِلَي هُدًي كَانَ لَهُ مِنَ اْلاَجْرِ مِثْلَ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئاً، وَمَنْ دَعَا إِلي ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ اْلإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئاً.
رواه مسلم، باب من سن سنة حسنة…، رقم:٦٨٠٤
40. “எவரொருவர் நேர்வழி மற்றும் நன்மையான காரியத்தின் பால் அழைப்பாரோ அதைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் கிடைப்பது போன்று சமமான கூலி அவருக்கும் கிடைக்கும். மேலும், அதைப் பின்பற்றுபவர்களின் நன்மையில் எதும் குறையாது, அதேபோல், எவனொருவன் தவறான வழியின்பால் அழைப்பானோ, அந்தத் தவறான வழியைப் பின்பற்றியவர்கள் அனைவருக்கும் கிடைப்பது போன்று சமமான பாவம் அவனுக்கும் கிடைக்கும். தவறான வழியை பின்பற்றுபவர்களின் பாவங்களில் எதும் குறையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٤١– عَنْ عَلْقَمَةَ بْنَ سَعِيدٍؓ قَالَ: خَطَبَ رَسُولُ اللهِ ﷺ ذَاتَ يَوْمٍ فَأَثْنَي عَلي طَوَائِفَ مِنَ الْمُسْلِمِينَ خَيْرًا، ثُمَّ قَالَ: مَا بَالُ أَقْوَامٍ لاَ يُفَقِّهُونَ جِيرَانَهُمْ، وَلاَ يُعَلِّمُونَهُمْ، وَلاَ يَعِظُونَهُمْ، وَلاَ يَأْمُرُونَهُمْ، وَلاَ يَنْهَوْنَهُمْ، وَمَا بَالُ أَقْوَامٍ لاَ يَتَعَلَّمُونَ مِنْ جِيرَانِهِمْ، وَلاَ يَتَفَقَّهُونَ، وَلاَ يَتَّعِظُونَ، وَاللهِ لَيُعَلِّمَنَّ قَوْمٌ جِيرَانَهُمْ، وَيُفَقِّهُونَهُمْ، وَيَعِظُونَهُمْ، وَيَأْمُرُونَهُمْ، وَيَنْهَوْنَهُمْ، وَلَيَتَعَلَّمَنَّ قَوْمٌ مِنْ جِيرَانِهِمْ، وَيَتَفَقَّهُونَ، وَيَتَّعِظُونَ أَوْ لَأُعَاجِلَنَّهُمُ الْعُقُوبَةَ، ثُمَّ نَزَلَ فَقَالَ قَوْمٌ: مَنْ تَرَوْنَهُ عَنَي بِهؤُلاَءِ؟ قَالُوا: الأَشْعَرِيِّينَ، هُمْ قَوْمٌ فُقَهَاءُ، وَلَهُمْ جِيرَانٌ جُفَاةٌ مِنْ أَهْلِ الْمِيَاهِ وَاْلاَعْرَابِ فَبَلَغَ ذلِكَ اْلاَشْعَرِيِّينَ فَأَتَوْا رَسُولَ اللهِ ﷺ فَقَالُوا: يَا رَسُولَ اللهِﷺ ذَكَرْتَ قَوْماً بِخَيْرٍ وَذَكَرْتَنَا بِشَرٍّ، فَمَا بَالُنَا؟ فَقَالَ: لَيُعَلِّمَنَّ قَوْمٌ جِيرَانَهُمْ، وَلَيَعِظُنَّهُمْ، وَلَيَأْمُرُنَّهُمْ، وَلَيَنْهَوُنَّهُمْ، وَلَيَتَعَلَّمَنَّ قَوْمٌ مِنْ جِيرَانِهِمْ، وَيَتَّعِظُونَ، وَيَتَفَقَّهُونَ أَوْ لَأُعَاجِلَنَّهُمُ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، فَقَالُوا: يَارَسُولَ اللهِﷺ أَنُفَطِّنُ غَيْرَنَا، فَأَعَادَ قَوْلَهُ عَلَيْهِمْ وَأَعَادُوا قَوْلَهُمْ، أَنُفَطِّنُ غَيْرَنَا، فَقَالَ ذلِكَ أَيْضاً، فَقَالُوا: أَمْهِلْنَا سَنَةً، فَأَمْهَلَهُمْ سَنَةً لِيُفَقِّهُوهُمْ، وَيُعَلِّمُوهُمْ، وَيَعِظُوهُمْ ثُمَّ قَرَأَ رَسُولُ اللهِ ﷺ هذِهِ اْلآيَةَ: (لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ م بَنِي إِسْرَائِيلَ عَلي لِسَانِ دَاؤُدَ وَعِيسَي بْنِ مَرْيَمَ۞) الآية.
رواه الطبراني في الكبيرعن بكير بن معروف عن علقمة، الترغيب:١/١٢٢، بكيربن معروف صدوق فيه لين، تقريب التهذيب.
41. ஹஜ்ரத் அல்கமத்துப்னு ஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்தார்கள், முஸ்லிம் களில் சில கூட்டத்தாரைப் புகழ்ந்து கூறினார்கள். பிறகு சொன்னதாவது: “சில சமூகத்தினர்களுக்கு என்ன வந்துவிட்டது? அவர்கள் ஏன் தங்களை அடுத்து வாழும் மக்களுக்கு மார்க்க ஞானத்தை போதிப்பதும் இல்லை, தீனைக் கற்பிப்பதும் இல்லை, அவர்களுக்கு உபதேசிப்பதும் இல்லை, அவர்களுக்கு நல்ல காரியங்களை ஏவுவதும் இல்லை, அவர்களைத் தீயவைகளை விட்டு தடுப்பதும் இல்லை, மேலும், சில சமூகத்தாருக்கு என்னவந்துவிட்டது? அவர்கள் ஏன் தங்களுக்கு அருகில் வசிப்போரிடம் இருந்து தீனைக் கற்பதில்லை, தீனுடைய விளக்கத்தைப் பெறுவதுமில்லை, உபதேசத்தை பெற்றுக் கொள்வதுமில்லை. அல்லாஹுதஆலாவின் மீது சத்தியமாக! இந்த மக்கள் தங்களுக்கு அருகில் வசிப்போருக்கு இல்மைக் கற்பிக்கவும், அவர்களுக்குள் தீனுடைய விளக்கத்தை உண்டாக்கவும், அவர்களுக்கு உபதேசம் செய்யவும், அவர்களுக்கு நல்ல காரியங்களை ஏவவும், தீயவைகளை விட்டுத் தடுக்கவும், மற்ற மக்கள் தங்களை அடுத்து வாழ்வோரிடமிருந்து தீனைக் கற்கவும். அவர்களிடமிருந்து தீனுடைய விளக்கத்தைப் பெறவும், அவர்களுடைய உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவும், இவ்வாறு செய்யவில்லையென்றால், இவர்கள் அனைவருக்கும் உலகிலேயே கடுமையான முறையில் தண்டனை அளிப்பேன்”, இதற்குப் பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து கீழே இறங்கி விட்டார்கள். “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தாரைப் பற்றி பேசினார்கள்?’ என்று மக்கள் தங்களுக்கிடையில் வினவிக் கொண்டனர். “அஷ்அரீ கூட்டத்தாரைப் பற்றித்தான் பேசினார்கள். அவர்கள் மார்க்க ஞானமுடையவர்கள், அவர்களுக்கு அக்கம்பக்கத்தில் வசிக்கும் கிராமவாசிகள் தீனை அறியாதவர்களாக உள்ளனர்‘ என மக்கள் பேசிக் கொண்டனர்.இந்த செய்தி அஷ்அரீ கூட்டத்தாருக்குத் தெரியவந்ததும் அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து, “யாரஸூலல்லாஹ்! தாங்கள் சில கூட்டத்தினரைப் புகழ்ந்தீர்கள். எங்களின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினீர்கள், எங்களுடைய தவறு என்ன?” என்று கேட்டனர். “ஒன்று இந்த மக்கள் தங்களுக்கு அருகில் வசிப்போருக்கு இல்மைக் கற்பிக்கட்டும், அவர்களுக்கு உபதேசிக்கட்டும், அவர்களுக்கு நல்ல காரியங்களை ஏவட்டும், தீய காரியங்களை விட்டுத் தடுக்கட்டும். இவ்வாறே அவர்கள் தங்களுக்கு அருகில் வசிப்போரிடமிருந்து தீனைக் கற்கட்டும், அவர்களிடமிருந்து உபதேசம் பெறட்டும், தீனுடைய விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளட்டும். இல்லையென்றால், இவர்கள் அனைவருக்கும் உலகிலேயே நான் கடுமையான முறையில் தண்டனை அளிப்பேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் (இரண்டாவது முறையாக) கூறினார்கள். இதைக் கேட்ட அஷ்அரீ கூட்டத்தார், “யாரஸூலல்லாஹ், நாங்கள் மற்றவர்களைக் கல்வியறிவுள்ளவர்களாக மாற்ற வேண்டுமா?” என்று வினவ, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீண்டும் முன் சொன்ன வார்த்தைகளை கூறினார்கள். அவர்கள் மூன்றாம் முறையும் இவ்வாறே வினவியதற்கு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அவ்வாறே சொன்னார்கள். அதன் பிறகு, “யாரஸூலல்லாஹ், ஒரு வருடம் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு அருகில் வசிப்போருக்குள் தீனுடைய விளக்கத்தை உண்டாக்கவும் அவர்களுக்கு கற்பிக்கவும், உபதேசிக்கவும் ஒரு வருடகாலம் அவகாசம் கொடுத்தார்கள். இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் (لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ م بَنِي إِسْرَائِيلَ عَلي لِسَانِ دَاؤُدَ وَعِيسَي بْنِ مَرْيَمَ) “பனீ இஸ்ராயீலில் நிராகரித்தவர்கள் ஹஜ்ரத் தாவூத், ஹஜ்ரத் ஈசா ஆகியோரின் நாவால் சபிக்கப்பட்டார்கள். இந்தச் சாபத்திற்குரிய காரணம் யாதெனில் அவர்கள் கட்டளைக்கு மாறு செய்தார்கள் வரம்பு மீறினார்கள். எந்தப் பாவத்தில் மூழ்கியிருந்தார்களோ அதைவிட்டும் ஒருவர் மற்றவரைத் தடுக்காமல் இருந்தனர். உண்மையில் அவர்களுடைய இத்தகைய செயல் மிகக் கெட்டது” என்ற ஆயத்தை ஓதினார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
٤٢– عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍؓ أَنَّهُ سَمِعَ رَسُولَ الله يَقُولُ: يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَي فِي النَّارِ فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ فَيَدُورُ كَمَا يَدُورُ الْحِمَارُ بِرَحَاهُ، فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ فَيَقُولُونَ: يَا فُلاَنُ! مَا شَأْنُكَ، أَلَيْسَ كُنْتَ تَأْمُرُ بِالْمَعْرُوفِ وَتَنْهَانَا عَنِ الْمُنْكَرِ؟ قَالَ: كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ.
رواه البخاري، باب صفة النار وانها مخلوقة، رقم: ٣٢٦٧
42. “இறுதித் தீர்ப்பு நாளன்று ஒரு மனிதனைக் கொண்டு வரப்படும், அவனை நரகில் வீசப்படும், அதன் காரணமாக அவனுடைய குடல்கள் வெளியே வந்துவிடும். திருகையை இயக்கும் கழுதை திருகையைச் சுற்றி வருவது போல் அவன் அந்தக் குடல்களின் நாலாபுறமும் சுற்றி வருவான். (மாவரைக்கும் திருகையை இயக்குவதற்காக எவ்வாறு பிராணியைச் சுற்றவைக்கப்படுகிறதோ அவ்வாறே இந்த மனிதன் தன் குடல்களின் நாலாபுறத்திலும் சுற்றிக் கொண்டிருப்பான்) நரகவாசிகள் அவனை நலாபுறத்திலும் சூழ்ந்து கொண்டு, “நண்பனே, நீ நல்ல காரியங்களை ஏவிக்கொண்டும், தீயவைகளைவிட்டும் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்தாயே உனக்கென்ன ஆனது?” என்று அவனிடம் கேட்பர். “நான் உங்களுக்கு நல்ல காரியங்களை ஏவிக்கொண்டிருந்தேன். ஆனால், நான் அதன்படி நடக்காமலிருந்தேன், தீயவைகளை விட்டுத் தடுத்து வந்தேன். ஆனால், நான் அதைச் செய்து கொண்டிருந்தேன்‘ எனச் சொல்வான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸாமத்துப்னுஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٤٣– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَي قَوْمٍ تُقْرَضُ شِفَاهُهُمْ بِمَقَارِيضَ مِنْ نَارٍ قَالَ: قُلْتُ: مَنْ هؤُلاَءِ؟ قَالُوا: خُطَبَاءُ مِنْ أَهْلِ الدُّنْيَا كَانُوا يَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَيَنْسَوْنَ أَنْفُسَهُمْ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ أَفَلاَ يَعْقِلُونَ.
رواه احمد:٣ /١٢٠
43. “மிஃராஜ் இரவில் ஒரு கூட்டத்தாரை நான் கடந்து சென்றபோது, அவர்களுடைய உதடுகள் நரக நெருப்பாலான கத்தரிக்கோல்களால் கத்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நான் ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், “இவர்கள் யார்?” என்று வினவினேன். “இவர்கள் உபதேசம் செய்பவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்படி ஏவிக்கொண்டிருந்தார்கள். மேலும் தன்னை மறந்தவர்களாக (செயல்படாமல்) இருந்தனர். இவர்கள் அல்லாஹுதஆலாவின் வேதத்தை ஓதி வந்தனர். இவர்கள் விளங்கியிருக்க வேண்டாமா?” என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)


அல்லாஹ்வின் பாதையில் புறப்படுவதன் சிறப்புகள்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَالَّذِينَ امَنُوا وَهَاجَرُوا وَجهَدُوا فِي سَبِيلِ اللهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوآ أُولئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقّاً ط لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيم۞).
(الانفال:٧٤)
1. எவர்கள் நம்பிக்கை கொண்டு, நாட்டைத் துறந்து, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்தார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் (அவர்களுக்குத் தங்கும்) இடமளித்து உதவி செய்தார்களோ அவர்களும் – இத்தகையோர் தாம் உண்மையான நம்பிக்கையாளர்கள் – அவர்களுக்கு (பாவ) மன்னிப்பும் சங்கையான உணவும் (மறுமையில்) உண்டு.
(அல்அன்ஃபால்:74)
وَقَالَ تَعَالي: (أَلَّذِينَ امَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ لا أَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللهِ ط وَأُولئِكَ هُمُ الْفَائِزُونَ ۞ يُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَجَنّتٍ لَهُمْ فِيهَا نَعِيمٌ مُّقِيمٌ ۞ خَالِدِينَ فِيهَا أَبَدًا ط إِنّ اللهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ۞).
(التوبة: ٢٢–٢٠)
2. எவர்கள் நம்பிக்கை கொண்டு, நாட்டைத் துறந்தும் அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களாலும் தங்களுடைய உயிர்களாலும் அறப்போர் புரிந்தார்களோ அத்தகையோர் அல்லாஹ்விடத்தில் மகத்தான பதவிக்குரியவர்கள் – இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.அவர்களுக்கு அவர்களுடைய ரப்பு தன்னிலிருந்து அருளைக் கொண்டும், திருப்பொருத்தத்தைக் கொண்டும், சொர்க்கங்களைக் கொண்டும் நற்செய்தி கூறுகிறான் – அவற்றில் அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியம் உண்டு. அவற்றில் என்றென்றும் அவர்கள் இருப்பார்கள்; நிச்சயமாக அல்லாஹ் – அவனிடம்தான் மகத்தான (நற்) கூலி இருக்கிறது.
(அத்தவ்பா:20-22)
وَقَالَ تَعَالي: (وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ط وَإِنَّ اللهَ لَمَعَ الْمُحْسِنِينَ۞).
(العنكبوت:٦٩)
3. எவர்கள் நம்முடைய மார்க்கத்தில் (செல்ல) முயல்கின்றனரோ அவர்களுக்கு நம்முடைய (நேரிய) வழிகளை திண்ணமாக நாம் காட்டுவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்கிறவர்களுடன் இருக்கிறான்.
(அல்அன்கபூத்:69)
وَقَالَ تَعَالي: (وَمَنْ جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ ط إِنَّ اللهَ لَغَنِيٌّ عَنِ الْعلَمِينَ۞).
(العنكبوت:٦)
4. மேலும் எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் உழைப்பதெல்லாம் தம(து நன்மை)க்காகத்தான்; நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
(அல்அன்கபூத்:6)
وَقَالَ تَعَالي: (إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ امَنُوا بِاللهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللهِ ط أُولئِكَ هُمُ الصّدِقُونَ۞).
(الحجرات:١٥)
5. (உண்மையான) நம்பிக்கையாளர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, பிறகு (எவ்விதச்) சந்தேகமும் கொள்ளாமல் தங்களுடைய செல்வங்களாலும் தம் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தார்களே அத்தகையோர் – அவர்கள் தாம் (தங்களுடைய நம்பிக்கையில்) உண்மையாளர்கள்.
(அல்ஹுஜுராத்:15)
وَقَالَ تَعَالي: (يأَيُّهَا الَّذِينَ امَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلي تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ ۞ تُؤْمِنُونَ بِاللهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ط ذلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ ۞ يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا اْلاَنْهرُ وَمَسكِنَ طَيِّبَةً فِي جَنّتِ عَدْنٍ ط ذلِكَ الْفَوْزُ الْعَظِيمُ۞).
(الصف: ١٢–١٠)
6. நம்பிக்கையாளர்களே, உங்களுக்கு ஒரு வியாபாரத்தை நான் அறிவிக்கட்டுமா? நோவினை தரும் வேதனையிலிருந்து அது உங்களை ஈடேற்றும்.(அது) அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்வதும், அல்லாஹ்வின் பாதையில் உங்களுடைய செல்வங்களாலும் உங்களுடைய உயிர்களாலும் நீங்கள் அறப்போர் செய்வதுமாகும்; நீங்கள் அறிந்தவர்களாயிருந்தால் இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.(இவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; இன்னும் அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கச் சோலைகளிலும் நிலையான சொர்க்கச் சோலைகளிலுள்ள தூய குடியிருப்புகளிலும் உங்களை அவன் புகச் செய்வான் – அது மகத்தான வெற்றியாகும்.
(அஸ்ஸஃப்:10-12)
وَقَالَ تَعَالي: (قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالُ نِ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِّنَ اللهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّي يَأْتِيَ اللهُ بِأَمْرِهِ ط وَاللهُ لاَ يَهْدِي الْقَوْمَ الْفسِقِينَ۞).
(التوبة:٢٤)
7. (நபியே,) நீர் கூறுவீராக: “உங்கள் தந்தையரும், உங்கள் மக்களும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவியரும், உங்கள் குடும்பத்தினரும் எவற்றை நீங்கள் சம்பாதித்தீர்களோ, அத்தகைய (உங்களுடைய) செல்வங்களும், எதனுடைய நஷ்டத்தை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அத்தகைய (உங்களுடைய) வியாபாரமும், எவற்றை(க் கொண்டு) நீங்கள் திருப்தி கொள்கிறீர்களோ அத்தகைய (உங்களுடைய) வீடுகளும், அல்லாஹ்வைவிட, அவனது தூதரைவிட அவனுடைய பாதையில் போர் புரிவதைவிட உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால், அல்லாஹ் தன்னுடைய (தண்டனை பற்றிய) கட்டளையைக் கொண்டுவரும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
(அத்தவ்பா:24)
وَقَالَ تَعَالي: (وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللهِ وَلاَ تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَي التَّهْلُكَةِ ج وَأَحْسِنُوا ج إِنَّ اللهَ يُحِبُّ الْمُحْسِنِين۞).
(البقرة:١٩٥)
8. அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யுங்கள் (அவ்வாறு செலவு செய்யாமல்) உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்; இன்னும், நீங்கள் நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்கின்றவர்களை நேசிக்கிறான்.
(அல்பகரா:195)

ஹதீஸ்கள்:-
٤٤– عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَقَدْ أُخِفْتُ فِي اللهِ وَمَا يُخَافُ أَحَدٌ، وَلَقَدْ أُوذِيتُ فِي اللهِ لَمْ يُؤْذَ أَحَدٌ، وَلَقَدْ أَتَتْ عَلَيَّ ثَلاَثُونَ مِنْ بَيْنِ يَوْمٍ وَلَيْلَةٍ وَمَالِي وَلِبِلاَلٍ طَعَامٌ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلاَّ شَيْءٌ يُوَارِيهِ إِبِطُ بِلاَلٍ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب احاديث عائشة وانس…، رقم:٢٤٧٢
44. “புனித மார்க்கத்தின்பால் அழைப்பு விடுத்ததின் காரணமாக என்னைப் பயமுறுத்தப்பட்டது போல் வேறுயாரையும் பயமுறுத்தப்படவில்லை. அல்லாஹுதஆலாவின் பாதையில் நான் துன்புறுத்தப்பட்டது போல் வேறு யாரும் துன்புறுத்தப்படவில்லை. எனக்கும், பிலாலுக்கும் ஓர் உயிர்ப் பிராணி சாப்பிடும் அளவு கூட உணவு கிடைக்காத நிலையில் முப்பது பகல் முப்பது இரவுகள் தொடர்ச்சியாகக் கழிந்துள்ளன. பிலால் அவர்களின் கக்கத்தில் மறைத்துக் கொள்ளும் அளவு குறைந்த உணவே இருந்தது. மிகக் குறைந்த அளவு உணவுப் பொருளே இருந்தது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٤٥– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يَبِيتُ اللَّيَالِيَ الْمُتَتَابِعَةَ طَاوِياً وَأَهْلُهُ لاَ يِجِدُونَ عَشَاءً، وَكَانَ أَكْثَرُ خُبْزِهِمْ خُبْزَ الشَّعِيرِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء في معيشة النبي ﷺ واهله، رقم: ٢٣٦٠
45. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வெறும் வயிற்றுடன் (பட்டினியாக) தொடர்ந்து பல இரவுகளைக் கழித்துள்ளார்கள். அவர்களிடம் இரவு நேர உணவு கூட இருந்ததில்லை. பொதுவாக அவர்களுடைய உணவு (தரம் குறைந்த) தொலிக் கோதுமை ரொட்டியாக இருந்தது”.
(திர்மிதீ)
٤٦– عَنْ عَائِشَةَؓ أَنَّهَا قَالَتْ: مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ ﷺ مِنْ خُبْزِ شَعِيرٍ، يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ حَتَّي قُبِضَ رَسُولُ اللهِ ﷺ.
رواه مسلم، باب الدنيا سجن للمؤمن وجنة للكافر، رقم:٧٤٤٥
46. “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மரணமடையும் வரை அவர்களது வீட்டார், தொலிக் கோதுமை ரொட்டி கூடத் தொடர்ந்து இரண்டு நாள் வயிறார உண்டதில்லை” என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٤٧– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: إِنَّ فَاطِمَةَؓ نَاوَلَتِ النَّبِيَّﷺ كِسْرَةً مِنْ خُبْزِ شَعِيرٍ فَقَالَ: هذَا أَوَّلُ طَعَامٍ أَكَلَهُ أَبُوكِ مُنْذُ ثَلاَثَةِ أَيَّامٍ.
رواه احمد والطبراني وزاد: فَقَالَ: مَا هذِهِ؟ فَقَالَتْ: قُرْصٌ خَبَزْتُهُ، فَلَمْ تَطِبْ نَفْسِيْ حَتَّي أَتَيْتُكَ بِهذِهِ الْكِسْرَةِ. ورجالهما ثقات، مجمع الزوائد:١٠/٥٦٢
47. ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு தொலிக் கோதுமை ரொட்டித்துண்டு ஒன்றைக் கொடுத்தார்கள்.”சென்ற மூன்று நாட்களில் இதுதான் உமது தந்தை சாப்பிடும் முதல் உணவாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
“நபி (ஸல்) அவர்கள் தமது மகளாரிடம், “இது என்ன?” என்று வினவியதற்கு, “நான் ரொட்டி ஒன்றைச் சமைத்தேன். தங்களை விட்டு விட்டு நான் மட்டும் உண்பதை என் மனம் விரும்பவில்லை” என்று ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று இன்னோர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٤٨– عَنْ سَهْلِ بْنِ سَعْدِ نِ السَّاعِدِيِّؓ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ ﷺ بِالْخَنْدَقِ وَهُوَ يَحْفِرُ وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ، وَبَصُرَ بِنَا فَقَالَ: اَللّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ اْلآخِرَةِ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَةِ.
رواه البخاري باب الصحة والفراغ ….، رقم:٦٤١٤
48. ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃத் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நாங்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் அகழி யுத்தத்தின் போது, நபி (ஸல்) அவர்கள் அகழி வெட்டிக் கொண்டிருக்க, நாங்கள் அகழியிலிருந்த மண்ணையெடுத்து வேறிடத்தில் போட்டுக் கொண்டிருந்தோம் (இந்நிலையில்) எங்களைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் “யாஅல்லாஹ், மறு உலக வாழ்க்கையே வாழ்க்கை, அன்ஸாரிகள், முஹாஜிர்களை நீ மன்னிப்பாயாக!” என்று துஆச் செய்தார்கள்.
(புகாரி)
٤٩– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَؓ قَالَ: أَخَذَ رَسُولُ اللهِ ﷺ بِمَنْكِبِي فَقَالَ: كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ.
رواه البخاري، باب قول النبي ﷺ كن في الدنيا كانك غريب….،رقم:٦٤١٦
49. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் (தன் பக்கம் கவனத்தைத் திருப்பி) எனது தோளைப் பிடித்தவாறு, “அந்நியனைப் போல அல்லது வழிப்போக்கரைப் போல நீர் உலகில் வாழ்வீராக!” என்று கூறினார்கள்.
(புகாரி)
٥٠– عَنْ عَمْرِو بْنِ عَوْفٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: فَوَاللهِ مَا الْفَقْرَ أَخْشَي عَلَيْكُمْ، وَلكِنْ أَخْشَي عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا كَمَا بُسِطَتْ عَلي مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُلْهِيَكُمْ كَمَا أَلْهَتْهُمْ.
(وهو بعض الحديث) رواه البخاري، باب ما يحذر من زهرة الدنيا…، رقم:٦٤٢٥
50. “அல்லாஹுதஆலாவின் மீது ஆணை! உங்களுக்குப் பசி, பட்டினி ஏற்படுவதைப் பற்றி நான் பயப்படவில்லை, மாறாக, உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு உலகச் செல்வங்கள் கொடுக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் உலகச் செல்வங்கள் கொடுக்கப்பட்டு பிறகு, உலகை அடைவதற்காக உங்களுக்கு முன்னிருந்தோர் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டதைப் போல், நீங்களும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொண்டு பிறகு, அவர்களை உலகம் மறதியில் ஆழ்த்தியதைப் போல் உங்களையும் மறதியில் ஆழ்த்திவிடும் என்பதையே நான் அஞ்சுகிறேன்.” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் “உங்களுக்கு வறுமை வருவதைப் பற்றி நான் பயப்டவில்லை” என்பதன் பொருள், உங்கள் மீது வறுமையும், ஏழ்மையும் வராது என்பதாம், அல்லது எந்த அளவு உலகச் செல்வங்கள் வந்தால் தீனின் படி நடக்க பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவு வறுமை வந்துவிட்டால் நீங்கள் தீனின் படி நடப்பதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதாம்.
٥١– عَنْ سَهْلِ بْنِ سَعْدٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ اللهِ جَنَاحَ بَعُوضَةٍ مَا سَقَي كَافِرًا مِنْهَا شَرْبَةَ مَاءٍ.
رواه الترمذي وقال: هذا حديث صحيح غريب، باب ما جاء في هوان الدنيا علي الله ، رقم:٢٣٢٠
51. “உலகின் மதிப்பு அல்லாஹ்விடத்தில் ஒரு கொசுவின் இறக்கைக்குச் சமமாக இருக்குமாயின் எந்த ஒரு காபிருக்கும் இதிலிருந்து ஒருமிடர் தண்ணீர் கூட அல்லாஹுதஆலா புகட்டமாட்டான். (ஏனெனில், அல்லாஹுதஆலாவிடத்தில் உலகத்தின் மதிப்பு அந்த அளவிற்கு கூட இல்லை. எனவே தான், காபிர்களுக்கும், பாவிகளுக்கும் உலகப் பொருள்கள் தாராளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٥٢– عَنْ عُرْوَةَؒ عَنْ عَائِشَةَؓ: أَنَّهَا كَانَتْ تَقُولُ: وَاللهِ يَا ابْنَ أُخْتِي! إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَي الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللهِ ﷺ نَارٌ، قَالَ: قُلْتُ: يَا خَالَةُ! فَمَا كَانَ يُعَيِّشُكُمْ؟ قَالَتْ: الأَسْوَدَانِ: اَلتَّمَرُ وَالْمَاءُ.
(وهو طرف من الرواية) رواه مسلم، باب الدنيا سجن للمؤمن…، رقم:٧٤٥٢
52. “சகோதரியின் மகனே! நாங்கள் முதல் பிறையைப் பார்ப்போம், பிறகு மறுபிறையையும் பார்ப்போம், பிறகு மூன்றாம் பிறையையும் பார்ப்போம், இவ்வாறே இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்துவிடுவோம். ஆனால், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் வீடுகளில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாமல் கழிந்துவிடும்” என்று கூறுவார்கள். இதைக் கேட்ட நான், “சிறிய தாயாரே, பிறகு எதைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தீர்கள்?” என வினவியதற்கு, “பேரீச்சம் பழத்தைக் கொண்டும், தண்ணீரைக் கொண்டும் வாழ்க்கையை கழித்து வந்தோம்” என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٥٣– عَنْ عَائِشَةَؓ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَا خَالَطَ قَلْبَ امْرِئئٍ مُسْلِمٍ رَهْجٌ فِي سَبِيلِ اللهِ إِلاَّ حَرَّمَ اللهُ عَلَيْهِ النَّارَ.
رواه احمد والطبراني في الاوسط ورجال احمد ثقات، مجمع الزوائد:٥/٥٠٢
53. “எவருடைய உடம்பில் அல்லாஹுதஆலா உடைய பாதையின் புழுதி நுழைந்துவிட்டதோ, அல்லாஹுதஆலா அந்த உடம்பை விட்டும் நரக நெருப்பைத் தூரமாக்கிவிடுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٤– عَنْ أَبِي عَبْسٍؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللهِ حَرَّمَهُمَا اللهُ عَلَي النَّارِ.
رواه احمد:٣ /٤٧٩
54. “எவருடைய பாதங்களில் அல்லாஹுதஆலாவுடைய பாதையின் புழுதி படிந்துவிடுமோ, அவற்றை நரக நெருப்புத் தீண்டுவதை அல்லாஹுதஆலா ஹராமாக்கி விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅப்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٥٥– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللهِ وَدُخَانُ جَهنَّمَ فِي جَوْفِ عَبْدٍ أَبَدًا وَلاَ يَجْتَمِعُ الشُّحُّ وَاْلإِيمَانُ فِي قَلْبِ عَبْدٍ أَبَدًا.
رواه النسائي، باب فضل من عمل في سبيل الله علي قدمه، رقم:٣١١٢
55. “அல்லாஹுதஆலாவுடைய பாதையில் படியும் புழுதியும், நரகத்தின் புகையும் ஓர் அடியானின் வயிற்றில் ஒரு போதும் ஒன்று சேர முடியாது. கருமித்தனமும், (பரிபூரண) ஈமானும் ஓர் அடியானுடைய உள்ளத்தில் ஒரு போதும் ஒன்று சேர முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٥٦– عَنْ أَبِي هُر َيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لاَ يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللهِ ، وَدُخَانُ جَهَنَّمَ فِي مَنْخَرَيْ مُسْلِمٍ أَبَدًا.
رواه النسائي، باب فضل من عمل في سبيل الله علي قدمه، رقم:٣١١٥
56. “அல்லாஹுதஆலாவுடைய பாதையின் புழுதியும், நரகின் புகையும் ஒருபோதும் ஒரு முஸ்லிமின் மூக்குத்துவாரங்களில் ஒன்று சேர முடியாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٥٧– عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّؓ أَنَّ النَّبِيَّ ﷺ: قَالَ: مَا مِنْ رَجُلٍ يَغْبَارُّ وَجْهُهُ فِي سَبِيلِ اللهِ إِلاَّ أَمَّنَ اللهُ وَجْهَهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَا مِنْ رَجُلٍ يَغْبَارُّ قَدَمَاهُ فِي سَبِيلِ اللهِ إِلاَّ أَمَّنَ اللهُ قَدَمَيْهِ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ.
رواه البيهقي في شعب الايمان:٤/٤٣
57. “அல்லாஹுதஆலாவின் பாதையில் எவருடைய முகம் புழுதிபடிந்ததாக ஆகிவிட்டதோ, அவருடைய முகத்தை அல்லாஹுதஆலா கியாமத் நாளில் நிச்சயம் (நரக நெருப்பைவிட்டும்) பாதுகாப்பான். அல்லாஹுதஆலாவின் பாதையில் எவருடைய பாதங்கள் புழுதி படிந்ததாக ஆகிவிட்டதோ, அவருடைய இருபாதங்களையும் அல்லாஹுதஆலா இறுதித் தீர்ப்பு நாளன்று நரக நெருப்பைவிட்டும் (நிச்சயமாகப்) பாதுகாப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٥٨– عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: يَوْمٌ فِي سَبِيلِ اللهِ خَيْرٌ مِنْ اَلْفِ يَوْمٍ فِيمَا سِوَاهُ.
رواه النسائي، باب فضل الرباط، رقم:٣١٧٢
58. “அல்லாஹுதஆலாவின் பாதையில் ஒரு நாள் கழிப்பது அல்லாஹ்வுடைய பாதை அல்லாததில் ஆயிரம் நாட்கள் கழிப்பதை விட மேலானது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٥٩– عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: غَدْوَةٌ فِي سَبِيلِ اللهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.
(وهو بعض الحديث) رواه البخاري، باب صفة الجنة والنار، رقم:٦٥٦٨
59. “அல்லாஹுதஆலாவின் பாதையில் ஒரு காலை அல்லது ஒரு மாலை (செல்வது) உலகமும், அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(புகாரி)
தெளிவுரை: உலகத்தையும், அதிலுள்ள அனைத்தையும், அல்லாஹுதஆலாவின் பாதையில் செலவழித்துவிட்டாலும், அல்லாஹுதஆலாவின் பாதையின் ஒரு காலை அல்லது ஒரு மாலை செல்வது அதைவிட அதிகமான கூலியைப் பெற்றுத்தரும் என்பதாம்.
٦٠– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ رَاحَ رَوْحَةً فِي سَبِيلِ اللهِ، كَانَ لَهُ بِمِثْلِ مَا أَصَابَهُ مِنَ الْغُبَارِ مِسْكًا يَوْمَ الْقِيَامَةِ.
رواه ابن ماجة، باب الخروج في النفير، رقم:٢٧٧٥٦٠
60. “எவரோருவர் ஒரு மாலைப்பொழுதேனும் அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்றால், அதில் அவர் மீது புழுதி படியும் அளவு கியாமத் நாளன்று அவருக்குக் கஸ்தூரி கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٦١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: مَرَّ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ بِشِعْبٍ فِيهِ عُيَيْنَةٌ مِنْ مَاءٍ عَذْبَةٍ فَأَعْجَبَتْهُ لِطِيبِهَا، فَقَالَ: لَوِ اعْتَزَلْتُ النَّاسَ فَأَقَمْتُ فِي هذَا الشِّعْبِ وَلَنْ أَفْعَلَ حَتَّي أَسْتَأْذِنَ رَسُولَ اللهِ ﷺ، فَذَكَرَ ذلِكَ لِرَسُولِ اللهِ ﷺ فَقَالَ: لاَ تَفْعَلْ، فَإِنَّ مَقَامَ أَحَدِكُمْ فِي سَبِيلِ اللهِ أَفْضَلُ مِنْ صَلاَتِهِ فِي بَيْتِهِ سَبْعِينَ عَاماً، أَلاَ تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللهُ لَكُمْ، وَيُدْخِلَكُمُ الْجَنَّةَ؟ اغْزُوا فِي سَبِيلِ اللهِ مَنْ قَاتَلَ فِي سَبِيلِ اللهِ فَوَاقَ نَاقَةٍ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن، با ب ما جاء في الغدو…، رقم:١٦٥٠
61. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (ஒரு பிரயாணத்தின் போது) ஸஹாபியொருவர் ஒரு கணவாவில் (இரு மலைகளுக்கு இடைப்பட்ட இடம்) மதுரமான தண்ணீருள்ள ஒரு சிறிய நீரூற்றைக் கடந்து சென்ற சமயத்தில் அந்த நீரூற்று மதுரமானதாக இருந்ததால் அவர் (தன் மனதிற்குள்ளேயே)” (என்ன அழகான ஊற்று!) “நான் மக்களைவிட்டுத் தனித்து இந்தப் பள்ளத்தாக்கிலேயே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் நான் இந்தச் செயலை நபி (ஸல்) அவர்களின் அனுமதி இன்றி ஒருக்காலும் செய்யமாட்டேன்” என்று கூறிக் கொண்டார். அவ்வாறே அவர் தமது எண்ணத்தை நபி (ஸல்) அவர்களிடம் வெளியிட்டார், “அவ்வாறு செய்யாதீர்!” ஏனெனில், உங்களில் ஒருவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் (சிறிதுநேரம்) நிற்பது, அவர் தன் வீட்டில் இருந்தவாறு எழுபது வருடங்கள் தொழுவதைவிடச் சிறந்தது. அல்லாஹுதஆலா உங்களை மன்னித்து, உங்களைச் சொர்க்கம் புகச் செய்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹுதஆலாவின் பாதையில் ஜிஹாத் செய்யுங்கள். ஒட்டகத்தில் பால் கறக்கும் போது அதன் மடுவை முதல் முறையாக அழுத்துவதற்கும் இரண்டாம் முறையாக அழுத்துவதற்கும் இடைப்பட்ட நேரம் (ஒரு சில நொடிப்பொழுது) ஒருவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் போரிட்டாலும் அவருக்குச் சொர்க்கம் கடமையாகிவிடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(திர்மிதீ)
٦٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ صُدِعَ رَأْسُهُ فِي سَبِيلِ اللهِ فَاحْتَسَبَ، غُفِرَ لَهُ مَا كَانَ قَبْلَ ذلِكَ مِنْ ذَنْبٍ.
رواه الطبراني في الكبير واسناده حسن، مجمع الزوائد:٣ /٣٠
62. “அல்லாஹுதஆலாவின் பாதையில் எவரொருவருக்குத் தலைவலி ஏற்பட்டு, அவர் அதற்குரிய நன்மை கிடைக்கும் என அல்லாஹ்விடம் ஆதரவு வைத்தால், அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٦٣– عَنِ ابْنِ عُمَرَؓ عَنِ النَّبِيِّ ﷺ فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَي قَالَ: أَيُّمَا عَبْدٍ مِنْ عِبَادِي خَرَجَ مُجَاهِدًا فِي سَبِيلِي ابْتِغَاءَ مَرْضَاتِيْ ضَمِنْتُ لَهُ أَنْ أَرْجِعَهُ بِمَا أَصَابَ مِنْ أَجْرٍ وَغَنِيمَةٍ وَإِنْ قَبَضْتُهُ أَنْ أَغْفِرَ لَهُ، وَأَرْحَمَهُ وَأُدْخِلَهُ الْجَنَّةَ.
رواه احمد:٢ /١١٧
63. “என்னுடைய அடியார்களில் எவர் என்னுடைய திருப்தியை நாடியவராக என்னுடைய பாதையில் தியாகம் செய்யப் புறப்படுகிறாரோ, அவருக்குரிய கூலியுடனும் ஙனீமத் பொருளுடனும் வீட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் அல்லது நான் அவரை என்னிடம் அழைத்துக் கொண்டால் அவரை மன்னித்து விடுவதற்கும், அவர் மீது அருள்மாரி பொழிவதற்கும், அவரை சுவனத்தில் நுழைய வைப்பதற்கும், நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்ற ஹதீஸ் குத்ஸியை நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٦٤– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: تَضَمَّنَ اللهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ إِلاَّ جِهَادًا فِي سَبِيلِي، وَإِيمَاناً بِي وَتَصْدِيقاً بِرُسُلِي، فَهُوَ عَلَيَّ ضَامِنٌ أَنْ أُدْخِلَهُ الْجَنَّةَ أَوْ أَرْجِعَهُ إِلي مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ، نَائِلاً مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، مَا مِنْ كَلْمٍ يُكْلَمُ فِي سَبِيلِ اللهِ تَعَالَي، إِلاَّ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ كَهَيْئَتِهِ حِينَ كُلِمَ، لَوْنُهُ لَوْنُ دَمٍ وَرِيحُهُ مِسْكٌ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْلاَ أَنْ يَشُقَّ عَلَي الْمُسْلِمِينَ، مَا قَعَدْتُ خِلاَفَ سَرِيَّةٍ تَغْزُو فِي سَبِيلِ اللهِ أَبَدًا، وَلكِنْ لاَ أَجِدُ سَعَةً فَأَحْمِلُهُمْ، وَلاَ يَجِدُونَ سَعَةً وَيَشُقُّ عَلَيْهِمْ أَنْ يَتَخَلَّفُوا عَنِّي، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوَدِدْتُ أَنِّي أَغْزُو فِي سَبِيلِ اللهِ فَأُقْتَلُ، ثُمَّ أَغْزُو فَأُقْتَلُ، ثُمَّ أَغْزُو فَأُقْتَلُ.
رواه مسلم، باب فضل الجهاد..، رقم:٤٨٥٩
64. “எவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படுகிறாரோ, “என்னுடைய பாதையில் தியாகம் செய்யவேண்டும் என்ற ஆசையும், என் மீது கொண்ட நம்பிக்கையும் என் தூதர்களை உண்மைப்படுத்த வேண்டும் என்ற உணர்வும் தவிர வேறு எந்தச் செயலும் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றவில்லை யென்றால், அவரை நான் சொர்க்கத்தில் நுழையவைப்பதற்கும், அவருக்குரிய கூலியுடனும், ஙனீமத் பொருளுடனும் வீட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று அல்லாஹுதஆலா கூறுகிறான்.”முஹம்மது (ஸல்) அவர்களின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹுதஆலாவின் பாதையில் (யாருக்கேனும்) காயம் ஏற்பட்டால், காயம் புதிதாக இருக்கும் நிலையில் கியாமத் நாளன்று வருவார், அதன் நிறமோ ரத்த நிறமாக இருக்கும், அதன் நறுமணமோ கஸ்தூரியின் மணமாக இருக்கும். முஹம்மது (ஸல்) அவர்களின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக! முஸ்லிம்களுக்குச் சிரமம் ஏற்படும் என்ற பயம் மட்டும் இல்லையென்றால், அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படுகின்ற ஒவ்வொரு கூட்டத்தாருடன் நானும் புறப்படுவேன். ஆனால் எல்லோருக்கும் வாகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க நான் வசதி பெறவில்லை, மக்களுக்கும் அதற்கான வசதி இல்லை, நான் போரில் சென்றுவிட மக்கள் என்னுடன் செல்லாமல் வீட்டில் தங்கி விடுவது அவர்கள் மீது பெரும் சுமையாகும். முஹம்மது (ஸல்) அவர்களின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக! நான் விரும்புவ தெல்லாம், அல்லாஹுதஆலாவின் பாதையில் போரிட வேண்டும், பிறகு கொல்லப்பட வேண்டும், பின் போரிட வேண்டும், பிறகு கொல்லப்பட வேண்டும், பின் போரிட வேண்டும், பிறகு கொல்லப்பட வேண்டும்” என்பதே என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٦٥– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ الله ﷺ يَقُولُ: إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ وَأَخَذْتُمْ أَذْنَابَ الْبَقَرِ وَرَضِيتُمْ بِالزَّرْعِ وَتَرَكْتُمُ الْجِهَادَ، سَلَّطَ اللهُ عَلَيْكُمْ ذُلاًّ لاَ يَنْزِعُهُ حَتَّي تَرْجِعُوا إِلي دِينِكُمْ.
رواه ابو داؤد، باب في النهي عن العينة، رقم:٣٤٦٢
65. “நீங்கள் வியாபாரத்திலும், தொழில்களிலும் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டும், காளை மாடுகளின் வாலைப் பிடித்துக்கொண்டு விவசாயங்களில் மூழ்கிக் கொண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்வதை விட்டுவிடுவீர்களாயின், அல்லாஹுதஆலா உங்கள் மீது இழிவைச் சாட்டிவிடுவான், மீண்டும் நீங்கள் (அல்லாஹுதஆலாவின் பாதையில் ஜிஹாது செய்து) தீனின் பக்கம் மீண்டுவராத வரை அந்த இழிவு உங்களை விட்டும் நீங்காது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٦٦– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ لَقِيَ اللهَ بِغَيْرِ أَثَرٍ مِنْ جِهَادٍ لَقِيَ اللهَ وَفِيهِ ثُلْمَةٌ.
رواه الترمذي وقال: هذا حديث غريب، باب ما جاء في فضل المرابط، رقم:١٦٦٦
66. “அல்லாஹுதஆலாவுடைய பாதையில் தியாகம் செய்த எந்த அடையாளமும் இல்லாத நிலையில், ஒருவன் அல்லாஹுதஆலாவிடம் வந்தால், அவன் தன்னில் (தன்னுடைய தீனில்) குறை உள்ள நிலையில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- தியாகத்துடைய அடையாளம் என்பது, அல்லாஹுதஆலாவுடைய பாதையில் சென்ற சமயம் அவருடைய உடம்பில் ஏதேனுமொரு காயத்தின் வடு ஏற்பட்டிருப்பது, அல்லது அல்லாஹுதஆலாவின் பாதையில் படிந்த புழுதி அல்லது பணிவிடை போன்றவைகளினால் உடம்பில் ஏற்பட்ட அடையாளங்கள் போன்றவை என்பதாம்.
(ஷரஹுத்தீபீ)
٦٧– عَنْ سُهَيْلٍؓ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَقَامُ أَحَدِكُمْ فِي سَبِيلِ اللهِ سَاعَةً خَيْرٌ لَهُ مِنْ عَمَلِهِ عُمُرَهُ فِي أَهْلِهِ.
رواه الحاكم:٣ /٢٨٢
67. “உங்களில் ஒருவர் சிறிது நேரம் அல்லாஹுதஆலாவின் பாதையில் நிற்பது, தமது இல்லத்தில் இருந்து கொண்டே வாழ்நாள் முழுதும் செய்யும் நற்செயல்களைவிடச் சிறந்தது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸுஹைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٦٨– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: بَعَثَ النَّبِيُّ ﷺ عَبْدَ اللهِ بْنَ رَوَاحَةَ فِي سَرِيَّةٍ فَوَافَقَ ذلِكَ يَوْمَ الْجُمُعَةِ، فَغَدَا أَصْحَابُهُ فَقَالَ: أَتَخَلَّفُ فَأُصَلِّيْ مَعَ رَسُولِ اللهِ ﷺ ثُمَّ اَلْحَقُهُمْ، فَلَمَّا صَلَّي مَعَ النَّبِيِّ ﷺ رَآهُ فَقَالَ لَهُ: مَا مَنَعَكَ أَنْ تَغْدُوَ مَعَ أَصْحَابِكَ؟ فَقَالَ: أَرَدْتُ أَنْ أُصَلِّيَ مَعَكَ ثُمَّ اَلْحَقَهُمْ، فَقَالَ: لَوْ أَنْفَقْتَ مَا فِي اْلاَرْضِ جَمِيعاً مَا أَدْرَكْتَ فَضْلَ غَدْوَتِهِمْ.
رواه الترمذي وقال: هذا حديث غريب، باب ما جاء في السفر يوم الجمعة، رقم:٥٢٧
68. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு ரவாஹா (ரலி) அவர்களை ஒரு ஜமாஅத்துடன் அனுப்பிவைத்தார்கள். அன்று ஜும்ஆவுடைய நாளாக இருந்தது, ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு ரவாஹா (ரலி) அவர்களின் தோழர்கள் அனைவரும் அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டனர். ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு ரவாஹா (ரலி) அவர்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் ஜும்ஆத் தொழுதுவிட்டு, பிறகு தமது தோழர்களுடன் சேர்ந்து கொள்ளலாமென்று எண்ணியவர்களாகத் தங்கிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுது முடித்ததும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார்கள், “காலையில் உமது தோழர்களுடன் செல்லாமல் ஏன் தங்கிவிட்டீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதற்கு, “நான் தங்களுடன் ஜும்ஆதொழுதுவிட்டு புறப்பட்டுச் சென்று அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம் என்று விரும்பினேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். “பூமியில் உள்ள அனைத்தையும் நீர் செலவிட்டாலும் காலையில் சென்ற உமது தோழர்களுக்கு நன்மையை போன்று பெற்றுக் கொள்ளமுடியாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
٦٩– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: أَمَرَ رَسُولُ اللهِ ﷺ بِسَرِيَّةٍ تَخْرُجُ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، أَنَخْرُجُ اللَّيْلَةَ أَمْ نَمْكُثُ حَتَّي نُصْبِحَ؟ فَقَالَ: أَوَلاَ تُحِبُّونَ أَنْ تَبِيتُوا فِي خَرِيفٍ مِنْ خَرَائِفِ الْجَنَّةِ وَالْخَرِيفُ الْحَدِيقَةُ.
السنن الكبري: ٩ /١٥٨
69. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒரு ஜமாஅத்தை அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படக் கட்டளையிட்டார்கள்.”யாரஸூலல்லாஹ், நாங்கள் இப்பொழுது இரவிலேயே செல்லவேண்டுமா? அல்லது இரவில் தங்கி காலையில் செல்லலாமா?” என்று வினவியதற்கு, “சுவனத்தோட்டங்களில் ஒன்றில் இன்றைய இரவைக் கழிப்பதை நீங்கள் விரும்பவில்லையா?” (அல்லாஹுதஆலாவின் பாதையில் இரவைக் கழிப்பது சுவனத் தோட்டத்தில் இரவைக் கழிப்பதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஸுனன் குப்ரா)
٧٠– عَنِ ابْنِ مَسْعُودٍؓ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ ﷺ: أَيُّ اْلاَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: اَلصَّلاَةُ لِوَقْتِهَا، وَبِرُّ الْوَالِدَيْنِ، ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ.
رواه البخاري، باب وسمي النبي ﷺ الصلاة عملا، رقم:٧٥٣٤
70. ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அமல்களில் சிறந்த அமல் எது?’ என்று ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வினவியதற்கு, “உரிய நேரத்தில் தொழுதல், பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுதல், பிறகு அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்தல்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(புகாரி)
٧١– عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَي اللهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ إِلَي الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ.
رواه ابن حبان، (والحديث صحيح): ٢ /٢٥٢
71. “மூன்று நபர்கள் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளனர், அவர்கள் உயிர் வாழ்ந்தால் அவர்களுக்கு இரணம் அளிக்கப்படும், அவர்களுடைய வேலைகளில் உதவி செய்யப்படும், அவர்கள் மரணித்துவிட்டால் அல்லாஹுதஆலா அவர்களைச் சுவனத்தில் நுழையவைப்பான். அவர்களில் முதலாமவர், தமது வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்பவர் இரண்டாமவர், பள்ளிக்குச் செல்பவர் மூன்றாமவர், அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுஹிப்பான்)
٧٢– عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍؒ قَالَ: كَانَ رَجُلٌ مِنَ الطُّفَاوَةِ، طَرِيقُهُ عَلَيْنَا، يَأْتِي عَلَي الْحَيِّ، فَيُحَدِّثُهُمْ، قَالَ: أَتَيْتُ الْمَدِينَةَ فِي عِيرٍ لَنَا، فَبِعْنَا بِضَاعَتَنَا، ثُمَّ قُلْتُ: لأَنْطَلِقَنَّ إِلي هذَا الرَّجُلِ فَلَآتِيَنَّ مَنْ بَعْدِي بِخَبَرِهِ، قَالَ: فَانْتَهَيْتُ إِلي رَسُولِ اللهِ ﷺ، فَإِذَا هُوَ يُرِينِي بَيْتاً، قَالَ: إِنَّ امْرَأَةً كَانَتْ فِيهِ، فَخَرَجَتْ فِي سَرِيَّةٍ مِنَ الْمُسْلِمِينَ وَتَرَكَتْ ثِنْتَيْ عَشْرَةَ عَنْزَةً وَصِيصَتَهَا الَّتِي تَنْسِجُ بِهَا، فَفَقَدَتْ عَنْزاً مِنْ غَنَمِهَا وَصِيصَتِهَا، قَالَتْ: يَا رَبِّ! (إِنَّكَ) قَدْ ضَمِنْتَ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِكَ أَنْ تَحْفَظَ عَلَيْهِ، وَإِنِّي قَدْ فَقَدْتُ عَنْزاً مِنْ غَنَمِي وَصِيصَتِي، وَإِنِّي أَنْشُدُكَ عَنْزِي وَصِيصَتِي، قَالَ: فَجَعَلَ رَسُولُ اللهِ ﷺ يَذْكُرُ لَهُ شِدَّةَ مُنَاشَدَتِهَا لِرَبِّهَا تَبَارَكَ وَتَعَالَي، قَالَ رَسُولُ اللهِ ﷺ: فَأَصْبَحَتْ عَنْزَهَا وَمِثْلَهَا، وَصِيصَتَهَا وَمِثْلَهَا، وَهَاتِيكَ، فَأْتِهَا، فَاسْئَلْهَا إِنْ شِئْتَ، قَالَ: قُلْتُ: بَلْ أُصَدِّقُكَ.
رواه احمد، ورجاله رجال الصحيح، مجمع الزوائد:٥/٥٠٤
72. ஹஜ்ரத் ஹுமைதுப்னு ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “துஃபாவா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், அவர் வசிக்கும் இடத்திற்குப் போகும் வழியில், எங்களுடைய கோத்திரத்தார் வசித்து வந்தனர், (அவர் எங்களைக் கடந்து செல்லும் சமயம்) எங்களது கோத்திரத்தாரைச் சந்திப்பார், எங்களுடைய கூட்டத்தினருக்கு ஹதீஸ்களைக் கூறுவார், ஒரு முறை நான் எங்களுடைய வியாபாரக் கூட்டத்துடன் மதீனா முனவ்வராவுக்குச் சென்றேன். அங்கு எங்களுடைய பொருட்களை விற்றோம். “அவசியம் அந்த மனிதரிடம் (ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம்) செல்லவேண்டும், அவர்களிடன் நிலமைகளைத் தெரிந்து என் கூட்டத்தாரிடம் சொல்லவேண்டும்” என்று மனதில் எண்ணியவாறு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி, “இந்த வீட்டில் ஒரு பெண் வசித்து வந்தார். அவர் முஸ்லிம்களின் ஒரு ஜமாஅத்துடன் அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டுச் சென்றார். அவர் பனிரென்டு ஆடுகள், ஆடைகள் நெய்யும் ஒரு ஊசி ஆகியவற்றைத் தம் வீட்டில் விட்டுச் சென்றார். அவருடைய ஓர் ஆடும், ஊசியும் காணாமல் போய்விட்டது. அந்தப் பெண், “என் இரட்சகனே! உன்னுடைய பாதையில் புறப்பட்ட மனிதனையும் அவனுடைய உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை நீ ஏற்றுக்கொண்டுள்ளாய்!. (நான் உன்னுடைய பாதையில் சென்றிருந்தேன், நான் இல்லாத சமயம்) என்னுடைய ஆடுகளில் ஒன்றும், ஆடை நெய்யும் ஊசி ஒன்றும் காணாமல் போய்விட்டது. நான் என்னுடைய ஆடு, ஊசி (என் உடமைகள் திரும்ப கிடைக்கவேண்டுமென) உன்னிடம் நான் சத்தியம் செய்து கேட்கிறேன்” என்று கூறினார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் கூறுகிறார், “நபி (ஸல்) அவர்கள் அந்த துஃபாவா கோத்திரத்து மனிதருக்கு, அந்தப் பெண் எவ்வாறு தன் இரட்சகனிடம் மிகப் பணிந்து துஆ செய்தார் என்பதை விளக்கினார்கள். “அப்பெண்ணுடைய ஆடும், அது போன்று மற்றோர் ஆடும், அவருடைய ஊசியும், அதைப் போன்று மற்றோர் ஊசியும் அல்லாஹுதஆலாவின் கருவூலத்தி(கஜானாவி)லிருந்து அந்தப் பெண்மணிக்குக் கொடுக்கப்பட்டன”. “இவள் தான் அந்தப் பெண், நீர் விரும்பினால் அப்பெண்ணிடம் சென்று விசாரித்துக் கொள்ளும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.”இல்லை” அந்தப் பெண்ணிடம் விசாரிக்கவேண்டிய அவசியம் இல்லை, நான் தங்களிடமிருந்து கேட்டதை உண்மை என்று ஏற்றுக் கொள்கிறேன் (எனக்குத் தங்களின் மீது முழுமையான நம்பிக்கை உண்டு) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கூறினேன்”, என அந்த துஃபாவா கோத்திரத்து மனிதர் கூறினார்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٧٣– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: عَلَيْكُمْ بِالْجِهَادِ فِي سَبِيلِ اللهِ ، فَإِنَّهُ بَابٌ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ، يُذْهِبُ اللهُ بِهِ الْهَمَّ وَالْغَمَّ (وَزَادَ فِيهِ غَيْرُهُ۞) وَجَاهِدُوا فِي سَبِيلِ اللهِ الْقَرِيبَ وَالْبَعِيدَ، وَأَقِيمُوا حُدُودَ اللهِ فِي الْقَرِيبِ وَالْبَعِيدِ، وَلاَ تَأْخُذْكُمْ فِي اللهِ لَوْمَةُ لاَئِمٍ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه، ووافقه الذهبي:٢ /٧٤
73. “அல்லாஹுதஆலாவின் பாதையில் அவசியம் தியாகம் செய்துவாருங்கள். ஏனெனில், அது சுவனவாசல்களில் ஒரு வாசலாகும். அல்லாஹுதஆலா இதன் மூலம் கவலையையும், துக்கத்தையும் போக்குகிறான்”. இன்னோர் அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “அல்லாஹுதஆலாவின் பாதையில் தூரமாகவும், சமீபமாகவும் சென்று தியாகம் செய்யுங்கள், தூரத்திலும், சமீபத்திலும் இருப்போரிடம் அல்லாஹுதஆலாவின் சட்ட, திட்டங்களையும் எடுத்துக் கூறி அவர்களை மார்க்கத்தின் மீது நிலை நிறுத்துங்கள். அல்லாஹுதஆலா உடைய காரியத்தில் யாருடைய பழிப்யையும் நீங்கள் சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உபாதத்துப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٧٤– عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَجُلاً قَالَ: يَا رَسُولَ اللهِﷺ إِئْذَنْ لِي بِالسِّيَاحَةِ، قَالَ النَّبِيُّ ﷺ: إِنَّ سِيَاحَةَ أُمَّتِي الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ .
رواه ابو داؤد، باب في النهي عن السياحة، رقم: ٢٤٨٦
74 ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “உல்லாசப் பயணம் செல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினார், “எனது உம்மத்தின் உல்லாசப் பயணம் அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வதாகும்” என பதில் சொன்னார்கள்.
(அபூதாவூத்)
٧٥– عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَقْرَبُ الْعَمَلِ إِلَي اللهِ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ، وَلاَ يُقَارِبُهُ شَيْءٌ.
رواه البخاري في التاريخ وهو حديث حسن، الجامع الصغير:١/٢٠١
75. “எல்லா அமல்களையும் விட அல்லாஹுதஆலாவின் நெருக்கம் பெறுவதற்குரிய வழி, அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வதாகும். அல்லாஹுதஆலாவின் நெருக்கத்திற்குக் காரணமான அமல்களில் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்யும் அமலை எந்த அமலும் நெருங்கக் கூட இயலாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி பித்தாரீக், ஜாமிஉஸ்ஸஙீர்)
٧٦– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ ﷺ: أَيُّ النَّاسِ أَفْضَلُ؟ قَالَ: رَجُلٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللهِ قَالُوا: ثُمَّ مَنْ؟ قَالَ: ثُمَّ مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَتَّقِي رَبَّهُ وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء اي الناس افضل، رقم:١٦٦٠
76. ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்களிடம், “மக்களில் மிகச்சிறந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டபோது, “அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்பவர்” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.”அதற்கடுத்து யார்?” என்று கேட்கப்பட்டது, “ஏதேனுமொரு பள்ளத்தாக்கில் (தனிமையில்) இருந்துகொண்டு, தனது ரப்பைப் பயந்தவாறு, தனது தீங்கைவிட்டும் மக்களைப் பாதுகாப்பவர்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(திர்மிதீ)
٧٧– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ سُئِلَ: أَيُّ الْمُؤْمِنِينَ أَكْمَلُ إِيمَاناً؟ قَالَ: رَجُلٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللهِ بِنَفْسِهِ وَمَالِهِ، وَرَجُلٌ يَعْبُدُ اللهَ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ، قَدْ كَفَي النَّاسَ شَرَّهُ.
رواه ابو داؤد، باب في ثواب الجهاد، رقم:٢٤٨٥
77. ஹஜ்ரத் அபூஸஈத்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்களிடம், “ஈமான் உடையவர்களில் பரிபூரண ஈமான் உடையவர் யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஈமான் உடையவர்களில் பரிபூரண ஈமான் உடையவர், தமது உயிராலும், தமது பொருளாலும் அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்பவர், மற்றோருவர் ஒரு பள்ளத்தாக்கில் தனித்து இருந்து அல்லாஹுதஆலாவை வணங்கிக் கொண்டும், தன்னுடைய தீங்கைவிட்டும் மக்களைக் காத்துக்கொண்டும் இருப்பவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(அபூதாவூத்)
٧٨– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَوْقِفُ سَاعَةٍ فِي سَبِيلِ اللهِ خَيْرٌ مِنْ قِيَامِ لَيْلَةِ الْقَدْرِ عِنْدَ الْحَجَرِ اْلاَسْوَدِ.
رواه ابن حبان (واسناده صحيح):١٠ /٤٦٣
78. “அல்லாஹுதஆலா உடைய பாதையில் சிறிது நேரம் நிற்பது, லைலத்துல் கத்ருடைய இரவில் ஹஜ்ருல் அஸ்வதுக்கு முன் (நின்று) வணங்குவதைவிட மேலானது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுஹிப்பான்)
٧٩– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لِكُلِّ نَبِيٍّ رَهْبَانِيَّةٌ، وَرَهْبَانِيَّةُ هذِهِ اْلأُمَّةِ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ .
رواه احمد: ٣ /٢٦٦
79. “ஒவ்வொரு நபிக்கும் ஒரு துறவறம் உண்டு, எனது சமுதாயத்துடைய துறவறம் அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- உலகத்தையும், அதனுடைய இன்பங்களை விட்டும் தொடர்பற்று இருப்பதற்கு துறவறம் என்று சொல்லப்படும்.
٨٠– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ، وَاللهُ أَعْلَمُ بِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الْخَاشِعِ الرَّاكِعِ السَّاجِدِ.
رواه النسائي،باب مثل المجاهد في سبيل الله ، رقم:٣١٢٩
80. “அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்பவருக்கு உதாரணம், (அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காகத் தியாகம் செய்பவர் யார் என்பதை அல்லாஹுதஆலாவே மிக அறிவான்) நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கி, அல்லாஹ்வின் பயத்தால் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் இயலாமையை வெளிப்படுத்தி, ருகூ, சுஜூது செய்கின்றவருக்கு ஒப்பாவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٨١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ، كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الْقَانِتِ بِآيَاتِ اللهِ لاَ يَفْتُرُ مِنْ صَوْمٍ وَلاَ صَدَقَةٍ حَتَّي يَرْجِعَ الْمُجَاهِدُ إِلي أَهْلِهِ.
(وهو بعض الحديث) رواه ابن حبان (واسناده صحيح):١٠ /٤٨٦
81. “அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்ட தியாகிக்கு உதாரணம், நோன்பு வைத்து, இரவெல்லாம் தொழுகையில் பரிசுத்த குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கின்றவரைப் போன்று, அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்ட தியாகி திரும்பி வரும்வரை நோன்பிலும், தருமம் செய்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் மனிதரைப் போன்று. தொடர்ந்து வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றவருக்குக் கிடைக்கின்ற நன்மையைப் போன்று அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்பவருக்கும் கிடைக்கிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٨٢– عَنِ ابْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا.
رواه ابن ماجه، باب الخروج في النفير، رقم:٢٧٧٣
82. “அல்லாஹுதஆலா உடைய பாதையில் புறப்படும்படி உங்களிடம் சொல்லப்பட்டால் நீங்கள் புறப்பட்டுவிடுங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்.னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٨٣– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: يَا أَبَا سَعِيدٍ مَنْ رَضِيَ بِاللهِ ربًا، وَبِالْإِسْلاَمِ دِيناً، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيّاً، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ فَعَجِبَ لَهَا أَبُو سَعِيدٍ فَقَالَ: أَعِدْهَا عَلَيَّ، يَا رَسُولَ اللهِ ﷺ فَفَعَلَ ثُمَّ قَالَ: وَأُخْرَي يُرْفَعُ بِهَا الْعَبْدُ مِائَةَ دَرَجَةٍ فِي الْجَنَّةِ، مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَاْلاَرْضِ قَالَ: وَمَا هِيَ؟ يَا رَسُولَ اللهِﷺ قَالَ: اَلْجِهَادُ فِي سَبِيلِ اللهِ، الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ.
رواه مسلم، باب بيان ما اعده الله تعالي للمجاهد…، رقم: ٤٨٧٩
83. “அபூஸஈதே, அல்லாஹுதஆலாவை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக்கொள்வதையும் யார் பொருந்திக் கொள்கிறார்களோ, அவருக்குச் சொர்க்கம் கடமையாகிவிடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த வார்த்தை ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்களை மிகவும் கவர்ந்தது. “யாரஸூலல்லாஹ், தாங்கள் அதை மீண்டும் கூறுங்களேன்” என்று வேண்டினார், நபி (ஸல்) அவர்கள் மீண்டும் சொன்னார்கள். “அடியானுக்குச் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுகின்ற மற்றோரு அமலும் உண்டு. நூறு படித்தரங்களில் ஒவ்வோர் இருபடித்தரங்களுக்கு மத்தியில் உள்ள தொலை தூரம் வானம், பூமிக்கும் இடையே உள்ள தொலை தூரத்துக்குச் சமமானது” “யாரஸூலல்லாஹ், அது எது?” எனக் கேட்டேன், “அதுதான் அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வது, அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٨٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: مَاتَ رَجُلٌ بِالْمَدِينَةِ مِمَّنْ وُلِدَ بِهَا فَصَلَّي عَلَيْهِ رَسُولُ اللهِ ﷺ ثُمَّ قَالَ: يَا لَيْتَهُ مَاتَ بِغَيْرِ مَوْلِدِهِ قَالُوا: وَلِمَ ذَاكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ بِغَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَي مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّةِ.
رواه النسائي، باب الموت بغير مولده، رقم:١٨٣٣
84. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “மதீனாவில் பிறந்த ஒருவர் மதீனாவிலேயே இறந்துவிட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்திவிட்டு. “அந்தோ! இந்த மனிதர் தான் பிறந்த இடம் அல்லாத வேறு இடத்தில் மரணித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!” என்று கூறினார்கள். ஸஹாபாக்கள் (ரலி) “யாரஸூலல்லாஹ், தாங்கள் ஏன் அவ்வாறு கூறினீர்கள்?” என்று வினவினர், “ஒரு மனிதன் தான் பிறந்த இடத்தை விட்டுவிட்டு வேறிடத்தில் இறந்தால், பிறந்த இடத்திலிருந்து இறந்த இடம் வரையுள்ள தொலை தூரத்தை அளந்து அந்தளவு இடத்தைச் சுவனத்தில் அவருக்கு வழங்கப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(நஸாயீ)
٨٥– عَنْ أَبِي قِرْصَافَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يأَيُّهَا النَّاسُ هَاجِرُوا وَتَمَسَّكُوا بِالْإِسْلاَمِ، فَإِنَّ الْهِجْرَةَ لاَ تَنْقَطِعُ مَا دَامَ الْجِهَادُ.
رواه الطبراني ورجاله ثقات، مجمع الزوائد:٩ /٦٥٨
85. “மக்களே! (அல்லாஹுதஆலாவின் பாதையில்) குடிபெயர்ந்து செல்லுங்கள், இஸ்லாத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வது இருக்கும் வரை (அல்லாஹுதஆலாவின் பாதையில்) குடிபெயர்வதும் நீடித்து இருக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூகிர்ஸாஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வது இறுதித் தீர்ப்பு நாள் வரை தொடர்ந்து இருப்பது போல அல்லாஹ்வுக்காகக் குடிபெயர்வதும் தொடர்ந்து இருக்கும். இந்த குடிபெயர்வ(ஹிஜ்ரத்)தில் தீனைப் பரப்ப, தீனைக் கற்க, தீனைப் பாதுகாக்கத் தமது ஊரை விட்டு வெளியேறுவதும் அடங்கும்.
٨٦– عَنْ مُعَاوِيَةَؓ وَعَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍؓ وَعَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اَلْهِجْرَةُ خَصْلَتَانِ، إِحْدَاهُمَا: هَجْرُ السَّيِّئَاتِ، وَاْلأُخْري: يُهَاجِرُ إِلَي اللهِ وَرَسُولِهِ، وَلاَ تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا تُقُبِّلَتِ التَّوْبَةُ، وَلاَ تَزَالُ التَّوْبَةُ مَقْبُولَةً حَتَّي تَطْلُعَ الشَّمْسُ مِنَ الْمَغْرِبِ، فَإِذَا طَلَعَتْ طُبِعَ عَلي كُلِّ قَلْبٍ بِمَا فِيهِ، وَكُفِيَ النَّاسُ الْعَمَلَ.
رواه احمد والطبراني في الاوسط والصغير ورجال احمد ثقات، مجمع الزوائد:٥/٤٥٦
86. “ஹிஜ்ரத் (குடிபெயர்தல்) இருவகைப்படும்: ஒன்று, தீமைகளை விடுவது. மற்றோன்று, அல்லாஹுதஆலாவின் பாலும் அவனது தூதரின் (ஸல்) பாலும் ஹிஜ்ரத் செய்வ(குடிபெயர்வ)து. (தன் உடைமைகளை விட்டுவிட்டு) அல்லாஹுதஆலா மற்றும் அவனது தூதரின் (ஸல்) பாதையில் ஹிஜ்ரத் செய்வ(குடிபெயர்வ)து. தவ்பா (பாவ மீட்சி ஏற்றுக் கொள்ளப்படும்) வரை அல்லாஹ்வுக்காகக் குடிபெயர்வதும் இருந்து கொண்டிருக்கும். சூரியன் மேற்கில் உதயமாகாத வரை பாவமீட்சி (தவ்பா) ஏற்கப்படும், சூரியன் மேற்கில் உதித்துவிட்டால், மனிதனின் மனம் எந்த நிலையில் இருக்குமோ (ஈமான் அல்லது குஃப்ரு) அதே நிலையில் உள்ளங்களின் மீது முத்திரை இடப்படும். மக்கள் இதற்குமுன் செய்த அமலே (அவர்களின் நிரந்தர வெற்றி அல்லது நிரந்தரத் தோல்விக்குப் போதுமாகிவிடும்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆவியா, ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٨٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِﷺ أَيُّ الْهِجْرَةِ أَفْضَلُ؟ قَالَ: أَنْ تَهْجُرَ مَا كَرِهَ رَبُّكَ وَقَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْهِجْرَةُ هِجْرَتَانِ هِجْرَةُ الْحَاضِرِ وَهِجْرَةُ الْبَادِي، فَأَمَّا الْبَادِي فَيُجِيبُ إِذَا دُعِيَ وَيُطِيعُ إِذَا أُمِرَ، وَأَمَّا الْحَاضِرُ فَهُوَ أَعْظَمُهُمَا بَلِيَّةً وَأَعْظَمُهُمَا أَجْرًا.
رواه النسائي باب هجرة البادي، رقم:٤١٧٠
87. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “யாரஸூலல்லாஹ், ஹிஜ்ரத்களில் சிறந்தது எது?” என்று ஒருவர் வினவினார்.”நீர் உமது இரட்சகன் வெறுக்கும் செயல்களை விட்டுவிடுவது” என்று கூறினார்கள். “ஹிஜ்ரத் இரண்டு வகைப்படும், 1. நகரவாசியின் ஹிஜ்ரத் 2. கிராமவாசியின் ஹிஜ்ரத், கிராமத்தில் வசிப்போரின் ஹிஜ்ரத், அவரை (அவரது இடத்தைவிட்டு) அழைக்கப்பட்டால் அவர் வந்துவிடுவார், அவருக்கு ஏதேனும் கட்டளையிடப்பட்டால் அதற்கு வழிப்படுவார், (நகரத்தில் வசிப்பவரின் ஹிஜ்ரத்தும் இதுவே) எனினும், அவர்களின் ஹிஜ்ரத் பெரும் சோதனைக்குட்பட்டது, அதற்குரிய நன்மையும் மகத்தானது.
(நஸாயீ)
தெளிவுரை:- நகரில் வசிப்பவர் தம் உடமைகள், சாதனங்கள் பல வேலைகளை விட்டு விட்டு அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படுகிறார். எனவே, அல்லாஹுதஆலாவின் பாதையில் அவர் ஹிஜ்ரத் (குடிபெயர்வது) செய்வது பெரிய சோதனையாகும், எனவே, அது அதிகமான கூலி கிடைப்பதற்குக் காரணமாகிறது என்பதாம்.
(ஃபத்ஹுர் ரப்பானீ)
٨٨– عَنْ وَاثِلَةَ بْن ِاْلاَسْقَعِؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ ﷺ: وَتُهَاجِرُ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: هِجْرَةُ الْبَادِيَةِ أَوْ هِجْرَةُ الْبَاتَّةِ؟ قُلْتُ: أَيُّهُمَا أَفْضَلُ؟ قَالَ: هِجْرَةُ الْبَاتَّةِ، وَهِجْرَةُ الْبَاتَّةِ: أَنْ تَثْبُتَ مَعَ رَسُولِ اللهِ ﷺ، وَهِجْرَةُ الْبَادِيَةِ: أَنْ تَرْجِعَ إِلي بَادِيَتِكَ،وَعَلَيْكَ السَّمْعُ وَالطَّاعَةُ فِي عُسْرِكَ وَيُسْرِكَ وَمَكْرَهِكَ وَمَنْشَطِكَ، وَأَثَرَةٍ عَلَيْكَ.
(وهو بعض الحديث) رواه الطبراني ورجاله ثقات، مجمع الزوائد:٥/٤٥٨
88. ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத் செய்வீரா?” என என்னிடம் கேட்டார்கள், “ஆம்” என்று சொன்னேன்.”ஹிஜ்ரத்துல் பாதியாவா? “ஹிஜ்ரத்துல் பாத்தாவா?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவ, “இவ்விரண்டில் எது சிறந்தது?” என்று நான் கேட்டேன், “ஹிஜ்ரத்துல் பாத்தா சிறந்தது, ஹிஜ்ரத்துல் பாத்தா என்பது நீர் (உமது ஊரைவிட்டுக் குடிபெயர்ந்து நபி (ஸல்) அவர்களுடன் நிரந்தரமாகத் தங்கிவிடுவது) (இந்த ஹிஜ்ரத் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிக்கு முன் மக்கா முகர்ரமாவிலிருந்து மதீனா முனவ்வராவிற்குச் செய்த ஹிஜ்ரத்தாகும்) ஹிஜ்ரத்துல் பாதியா என்பது, நீர் தற்காலிகமாக தீனுடைய தேவைக்காக உமது ஊரைவிட்டு அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படுவது. பிறகு திரும்பவும் உமது ஊருக்குத் திரும்பிவிடுவது. நீர் (எல்லா நிலமையிலும்), வறுமையிலும், செழிப்பிலும் உன் மனம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், உம்மைவிட மற்றவர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டாலும் சரி, அமீருடைய பேச்சைக் கேட்டு அவருக்கு வழிப்படுவது அவசியமாகும்”, என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٨٩– عَنْ أَبِي فَاطِمَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: عَلَيْكَ بِالْهِجْرَةِ فَإِنَّهُ لاَ مِثْلَ لَهَا.
رواه النسائي باب الحث علي الهجرة، رقم:٤١٧٢
89. “நீங்கள் அவசியம் அல்லாஹுதஆலாவின் பாதையில் ஹிஜ்ரத் செய்து வாருங்கள். ஏனெனில், ஹிஜ்ரத்தைப் போன்ற அமல் வேறில்லை” (ஹிஜ்ரத் எல்லாவற்றிலும் சிறந்த அமல்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٩٠– عَنْ أَبِي أُمَامَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَفْضَلُ الصَّدَقَاتِ ظِلُّ فُسْطَاطٍ فِي سَبِيلِ اللهِ، وَمَنِيحَةُ خَادِمٍ فِي سَبِيلِ اللهِ، أَوْ طَرُوقَةُ فَحْلٍ فِي سَبِيلِ اللهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب صحيح، باب ما جاء في فضل الخدمة في سبيل الله، رقم:١٦٢٧
90. “தர்மத்தில் சிறந்தது, அல்லாஹுதஆலாவின் பாதையில் கூடாரம் அமைத்து பகலில் களைப்பாற ஏற்பாடு செய்வதும், அல்லாஹுதஆலாவின் பாதையில் பலன் தரக் கூடிய பணியாளை நியமிப்பதும், இளம் ஒட்டகத்தை அல்லாஹுதஆலாவின் பாதையில் அளிப்பதும் ஆகும்” (இதன் மூலம் பிரயாணம் போன்ற காரியங்களுக்குப் பயன் படலாம்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٩١– عَنْ أَبِي أُمَامَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ لَمْ يَغْزُ أَوْ يُجَهِّزْ غَازِياً أَوْ يَخْلُفْ غَازِياً فِي أَهْلِهِ بِخَيْرٍ، أَصَابَهُ اللهُ بِقَارِعَةٍ. قَالَ يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ فِي حَدِيثِهِ: قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ.
رواه ابو داؤد، باب كراهة ترك الغزو، رقم:٢٥٠٣
91. “எவர் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்யவுமில்லை, அல்லாஹ்வுடைய பாதையில் செல்பவருக்குப் பயணத்திற்குரிய ஏற்பாடும் செய்யவுமில்லை, அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்ற தியாகிகளின் வீட்டாரின் வேலைகளில் உதவி ஒத்தாசையாக இருக்கவுமில்லையோ, அவர் அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து ஏதேனுமொரு சிரமம் அவரிடம் வந்து சேரும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.”அவரை வந்து அடையும் சிரமம் கியாமத் நாளைக்கு முன்னால் வரக்கூடிய சிரமம்” என்று இந்த ஹதீஸுடைய ஓர் அறிவிப்பாளர் யஸீதுப்னு அப்துரப்பிஹி கூறுகிறார்.
(அபூதாவூத்)
٩٢– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ بَعَثَ إِلي بَنِي لِحْيَانَ فَقَالَ: لِيَخْرُجْ مِنْ كُلِّ رَجُلَيْنِ رَجُلٌ ثُمَّ قَالَ لِلْقَاعِدِ: أَيُّكُمْ خَلَفَ الْخَارِجَ فِي أَهْلِهِ وَمَالِهِ بِخَيْرٍ، كَانَ لَهُ مِثْلُ نِصْفِ أَجْرِ الْخَارِجِ.
رواه مسلم، باب فضل اعانة الغازي في سبيل الله، رقم: ٤٩٠٧
92. “ஒவ்வொரு இரண்டு நபர்களில் ஒரு நபர் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட வேண்டுமென்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், பனூலிஹ்யான் கோத்திரத்தாருக்குச் சொல்லி அனுப்பினார்கள். பிறகு “உங்களில் எவர், அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டவரின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் உடைமைகளை அவர் இல்லாத சமயத்தில் நல்ல முறையில் கவனித்துக்(பாதுகாத்துக்)கொண்டாரோ, அவருக்கு அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டவரின் கூலியில் பாதி கூலி கிடைக்கும்” என்று ஊரில் தங்கிவிட்டவர்களிடம் கூறினார்கள்” என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٩٣– عَنْ زَيْدِ بْنِ خَالِدِ نِ الْجُهَنِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ جَهَّزَ حَاجّاً، أَوْ جَهَّزَ غَازِياً، أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ، أَوْ فَطَّرَ صَائِماً، فَلَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئاً.
رواه البيهقي في شعب الايمان:٣ /٤٨٠
93. “எவர் ஹஜ்ஜுக்குச் செல்பவரின், அல்லது அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படுபவரின் பயணத்துக்குரிய ஏற்பாடு செய்வாரோ, அல்லது அவர் சென்ற பிறகு அவருடைய வீட்டாரின் காரியங்களில் உதவி ஒத்தாசையாக இருப்பாரோ அல்லது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவி செய்வாரோ, அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்றவருக்கு, அல்லது ஹஜ்ஜுக்குப் புறப்பட்டவருக்கு அல்லது நோன்பு வைத்தவருக்கு சமமான கூலி அவருக்கும் கிடைக்கும். மேலும், அவர்களுடைய நன்மையில் எந்தக் குறைவும் உண்டாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸைது இப்னு காலிதில் ஜுஹனிய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٩٤– عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ جَهَّزَ غَازِياً فِي سَبِيلِ اللهِ فَلَهُ مِثْلُ أَجْرِهِ وَمَنْ خَلَفَ غَازِياً فِي أَهْلِهِ بِخَيْرٍ، وَأَنْفَقَ عَلي أَهْلِهِ فَلَهُ مِثْلُ أَجْرِهِ.
رواه الطبراني في الاوسط ورجاله رجال الصحيح، مجمع الزوائد:٥/٥١٥
94. “எவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படுகிறவரின் பயணத்திற்குரிய ஏற்பாடு செய்வாரோ அவருக்கு அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டவருக்குச் சமமான நன்மை கிடைக்கும். மேலும் எவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்றவருடைய குடும்பத்தாருக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்காகச் செலவு செய்வாரோ அவருக்கும் அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டவருக்குச் சமமான நன்மை கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٩٥– عَنْ بُرَيْدَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: حُرْمَةُ نِسَاءِ الْمُجَاهِدِينَ عَلَي الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ، وَإِذَا خَلَفَهُ فِي أَهْلِهِ فَخَانَهُ قِيلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ: هذَا خَانَكَ فِي أَهْلِكَ فَخُذْ مِنْ حَسَنَاتِهِ مَا شِئْتَ، فَمَا ظَنُّكُمْ؟
رواه النسائي، باب من خان غازيا في اهله، رقم:٣١٩٢
95. “ஊரில் தங்கி இருப்பவர்கள், தன் தாயைக் கண்ணியப்படுத்துவது போல் அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்றவர்களின் மனைவிமார்களை கண்ணியப்படுத்தவேண்டும். (எனவே, அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்றவர்களின் மனைவியருடைய மானம், மரியாதையைக் காப்பாற்றுவதில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தவேண்டும்) அல்லாஹுதஆலாவின் பாதையில் செல்கிறவர், தனது மனைவி, மக்களுக்கு கண்கானிப்பாளராக ஒருவரை நியமித்துவிட்டுச் செல்ல, அவர் சென்ற பிறகு இவர் அவருடைய மனைவி, மக்களுடைய மானம், மரியாதைக்கு பங்கம் விளைவித்தால், கியாமத் நாளன்று, “இவன் தான் உமது குடும்பத்தாருடன் தகாத முறையில் நடந்தவன் ஆகையால், இவனுடைய நன்மை களிலிருந்து எவ்வளவு தேவையோ எடுத்துக் கொள்ளும்” என்று அவரிடம் சொல்லப்படும். பிறகு, நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மனிதன் ஒவ்வொரு நன்மைக்காகத் தவித்து கொண்டு இருக்கும் அந்நேரத்தில் இவருடைய நன்மையில் சிறிதையேனும் அவர் விட்டு வைப்பாரா? என்று கேட்டார்கள் என்ற ஹதீஸை ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٩٦– عَنْ أَبِي مَسْعُودِ نِ اْلاَنْصَارِيِّؓ قَالَ: جَاءَ رَجُلٌ بِنَاقَةٍ مَخْطُومَةٍ فَقَالَ: هذِهِ فِي سَبِيلِ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ سَبْعُ مِائَةِ نَاقَةٍ، كُلُّهَا مَخْطُومَةٌ.
رواه مسلم، باب فضل الصدقة في سبيل الله….،رقم:٤٨٩٧
96. ஹஜ்ரத் அபூ மஸ்ஊத் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு ஒருவர் மூக்கணாங்கயிறு பொருத்தப்பட்ட ஓர் ஒட்டகத்தைக் கொண்டு வந்து, “நான் இந்த ஒட்டகத்தை அல்லாஹுதஆலாவின் பாதையில் கொடுக்கிறேன்” என்று சொன்னார்.கியாமத் நாளில் இதற்குப் பகரமாக உமக்கு மூக்கணாங் கயிறு பொருத்தப்பட்ட எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- மூக்கணாங் கயிறு பொருத்தப்பட்ட ஒட்டகம் பிரயாணிக்குக் கட்டுப்பட்டு இருக்கும், பயணம் செய்வது எளிது.
٩٧– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ أَنَّ فَتًي مِنْ أَسْلَمَ قَالَ: يَا رَسُولَ اللهِﷺ إِنِّي أُرِيدُ الْغَزْوَ وَلَيْسَ مَعِي مَا أَتَجَهَّزُ، قَالَ: إِئْتِ فُلاَناً فَإِنَّهُ قَدْ كَانَ تَجَهَّزَ فَمَرِضَ، فَأَتَاهُ فَقَالَ: إِنَّ رَسُولَ اللهِ ﷺ يُقْرِئُكَ السَّلاَمَ وَيَقُولُ: أَعْطِنِيَ الَّذِي تَجَهَّزْتَ بِهِ، قَالَ: يَا فُلاَنَةُ! أَعْطِيه ِالَّذِي تَجَهَّزْتُ بِهِ، وَلاَ تَحْبِسِي عَنْهُ شَيْئاً، فَوَاللهِ! لاَ تَحْبِسِي مِنْهُ شَيْئاً فَيُبَارَكَ لَكِ فِيهِ.
رواه مسلم، باب فضل اعانة الغازي…، رقم: ٤٩٠١
97. “அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவர், “யாரஸூலல்லாஹ், நான் அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்ய விரும்புகிறேன். ஆனால், அதற்குரிய பொருட்கள் என்னிடம் இல்லை” என்று சொன்னார், “நீர் இன்ன நபரிடம் செல்லும்! அவர் ஜிஹாதுக்குரிய ஏற்பாட்டுடன் இருந்தார். இப்பொழுது அவர் நோயுற்றுள்ளார் (ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் உமக்கு ஸலாம் சொல்லியனுப்பினார்கள் என்று சொல்லும். மேலும், அவர் ஜிஹாதுக்குத் தயார் செய்து வைத்திருந்த பொருள்களை உமக்குக் கொடுக்கும்படி அவரிடம் சொல்லும் என சொல்லியனுப்பினார்கள்) அவ்வாறே அந்த வாலிபர் அந்த அன்ஸாரி ஸஹாபியிடம் சென்று, “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஸலாம் சொல்லியனுப்பினார்கள். மேலும், தாங்கள் ஜிஹாதுக்கு தயாராக வைத்திருந்த பொருள்களை எனக்குக் கொடுக்கச் சொன்னார்கள்” என்று கூறினார். அவர் (தன் மனைவியிடம்), “இன்னவளே! நான் தயாரித்து வைத்திருந்த பொருள்களை இவருக்குக் கொடுத்துவிடு. அதிலிருந்து எந்தப் பொருளையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டாம். அல்லாஹுதஆலாவின் மீது சத்தியம்! அதிலிருந்து நீ எதை எடுத்து வைத்துக் கொண்டாலும் அதில் உமக்கு பரக்கத் இருக்காது” என்று கூறினார் என்று ஹஜ்ரத் அனஸ் இப்னுமாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٩٨– عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ حَبَسَ فَرَساً فِي سَبِيلِ اللهِ كَانَ سِتْرَهُ مِنْ نَارٍ.
رواه عبد بن حميد، المسند الجامع:٥ /٥٤٧
98. “எவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் ஒரு குதிரையை வக்ஃப் செய்வாரோ, அவரது இச்செயல் நரக நெருப்புக்குத் திரையாகிவிடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அப்துப்னு ஹுமைத், அல்முஸ்னதுல் ஜாமிஃ)


அல்லாஹ்வின் பாதையில் புறப்படுவதன் ஒழுக்கங்களும், அதில் ஆற்ற வேண்டிய செயல்களும்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (اِذْهَبْ أَنْتَ وَأَخُوكَ بِايتِي وَلاَ تَنِيَا فيِ ذِكْرِي ۞ اِذْهَبَآ إِلي فِرْعَوْنَ إِنَّهُ طَغي ۞ فَقُولاَ لَهُ قَولاً لَّيِّناً لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَي ۞ قَالاَ رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَنْ يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَنْ يَطْغَي ۞ قَالَ لاَ تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَي۞).
(طه :٤٦–٤٢)
1. நீரும், உம்முடைய சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளைக் கொண்டு (மக்களிடம்) செல்லுங்கள்; என்னை நினைவு கூர்வதில் நீங்கள் இருவரும் சோர்வடைந்துவிட வேண்டாம்.நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான், “அவனுக்குக் கனிவான (மிருதுவான) சொல்லை நீங்கள் இருவரும் சொல்லுங்கள்; (அதனால்) அவன் நல்லுபதேசமோ, அல்லது (என்னைப் பற்றிய) அச்சமோ அடையக் கூடும்” (என்று அல்லாஹ் கூறினான்).”எங்களின் ரப்பே, எங்களின் மீது (தண்டனையளிக்க) அவன் தீவிரமடைந்து விடுவானோ, அல்லது அவன் வரம்பு மீறிவிடுவானோ என்று நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.”நீங்கள் இருவரும் பயப்படவேண்டாம்; நிச்சயமாக நான் உங்களிருவருடன் (அனைத்தையும்) செவியேற்றுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.
(தாஹா:42-46)
وَقَالَ تَعَالي: (فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللهِ لِنْتَ لَهُمْ ج وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ ص فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي اْلاَمْرِ ج فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَي اللهِ ط إِنَ اللهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ۞).
(ال عمران:١٥٩)
2. அல்லாஹ்விடமிருந்துள்ள அருட்கொடையின் காரணமாகவே (தூதரே,) அவர்களிடம் நீர் மிருதுவாக (ஈவிரக்கத்துடன்) நடந்து கொண்டீர்; நீர் கடுகடுப்பானவராக – கடின உள்ளமுடையவராக இருந்திருப்பீரானால் உம்மைவிட்டும் அவர்கள் பிரிந்து போயிருப்பார்கள்; ஆகவே, அவர்களை நீர் மன்னித்துவிடுவீராக! இன்னும் அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கேட்பீராக! காரியத்தில் அவர்களிடம் கலந்தாலோசனை செய்வீராக! (அவற்றைச் செய்ய) நீர் உறுதிகொண்டால், அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! (தன்னை) சார்ந்திருப்போரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.
(ஆலுஇம்ரான்:159)
وَقَالَ تَعَالي: (خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ ۞ وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللهِ ط إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ۞).
(الاعراف:٢٠٠، ١٩٩)
3. (நபியே,) மன்னிப்பதை நீர் பற்றிப் பிடிப்பீராக! நன்மையை (மக்களுக்கு) ஏவி அறிவீனர்களை நீர் புறக்கணித்து விடுவீராக! ஷைத்தானிலிருந்து ஏதேனும் தீண்டுதல் உமக்குத் திண்ணமாக ஏற்படுமானால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் (செயல்களை) முற்றும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
(அல்அஃராஃப்:199,200)
وَقَالَ تَعَالي: (وَاصْبِرْ عَلي مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلاً۞).
(المزمل:١٠)
4. அவர்கள் சொல்வதின் மீது நீர் பொறுமையுடனிருப்பீராக! இன்னும் அவர்களை அழகான கண்ணியமான முறையில் வெறுத்து ஒதுக்கிவிடுவீராக! (அல்முஸ்ஸம்மில்:10)

ஹதீஸ்கள்:-
٩٩– عَنْ عَائِشَةَؓ زَوْجِ النَّبِيِّ ﷺ حَدَّثَتْ أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللهِ: يَا رَسُولَ اللهِﷺ هَلْ اتَي عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ؟ فَقَالَ: لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَي ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ، فَلَمْ يُجِبْنِي إِلَي مَا أَرَدْتُ،فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلي وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلاَّ بِقَرْنِ الثَّعَالِبِ،فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي، فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرَئِيلُؑ ، فَنَادَانِي، فَقَالَ: إِنَّ اللهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ وَمَا رَدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الْجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ، قَالَ: فَنَادَانِيْ مَلَكُ الْجِبَالِ وَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ ﷺ إِنَّ اللهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَأَنَا مَلَكُ الْجِبَالِ، وَقَدْ بَعَثَنِي رَبُّكَ إِلَيْكَ لِتَأْمُرَنِيْ بِأَمْرِكَ،فَمَا شِئْتَ، (إِنْ شِئْتَ۞) أَطْبَقْتُ عَلَيْهِمُ اْلاَخْشَبَيْنِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللهُ تَعَالَي مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللهَ وَحْدَهُ، لاَ يُشْرِكُ بِهِ شَيْئاً.
رواه مسلم، باب ما لقي النبي ﷺ من اذي المشركين والمنافقين، رقم:٤٦٥٣
99. “யாரஸூலல்லாஹ், தாங்கள் உஹதுடைய நாளைவிடக் கடினமான நாளைச் சந்தித்துள்ளீர்களா?” என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் வினவினார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “உமது கோத்திரத்தாரால் நான் மிகுந்த சிரமத்திற்குள்ளானேன். (தாயிஃபிலுள்ள) அகபா நாளன்று மிகவும் சிரமப்பட நேர்ந்தது. (தாயிஃவாசிகளின் தலைவன்) இப்னு அப்து யாலீல்இப்னு அப்தி குலால் இடம், “என் மீது ஈமான் கொள்ளுங்கள், எனக்கு உதவியாக இருங்கள். சுதந்திரமாக தஃவத்துடைய பணி செய்யத் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவுங்கள்” என்ற என் வேண்டுகோளை முன் வைத்தபோது, அவன் என் பேச்சைக் கேட்கவில்லை. நான் (தாயிஃபைவிட்டு) மிகுந்த துக்கத்துடனும், கவலையுடனும் என் வழியில் (திரும்பி) நடக்கலானேன். “கர்ணே ஸஆலிப்‘ என்ற இடத்தை அடைந்ததும், எனது துக்கமும், கவலையும்) சிறிது தணிந்தது. அச்சமயம் என் தலைக்குமேல் ஒரு மேகத்துண்டு எனக்கு நிழலிடக் கண்டேன், நான் கூர்ந்து பார்த்தபோது அதில் ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை அழைத்து, “உமது கூட்டத்தார் உம்மிடம் பேசிய வார்த்தையையும், அவர்களுடைய பதிலையும் அல்லாஹுதஆலா கேட்டான். மலைகளுக்குரிய மலக்கைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளான், தாங்கள் விரும்பியதைக் கட்டளையிடுங்கள்” என்று கூறினார். அதற்குப்பின் மலைகளுக்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு என்னை அழைத்து, ஸலாம் சொல்லிவிட்டு, “முஹம்மதே! (ஸல்) அல்லாஹுதஆலா உமது கூட்டத்தார் உம்மிடம் பேசிய பேச்சுக்களைக் கேட்டான். நான் மலைகளுக்குரிய மலக்கு. தாங்கள் விரும்பியதை எனக்குக் கட்டளையிடச் சொல்லி தங்கள் இரட்சகன் தங்களிடம் என்னை அனுப்பி வைத்துள்ளான். தாங்கள் என்ன விரும்புகிறீர்கள்? தாங்கள் விரும்பினால் மக்காவுடைய (அபூகுபைஸ், அஹ்மர் என்ற) இருமலைகளையும் இணையவைத்து (அம்மலைகளுக் கிடையில் இருக்கும் இவர்களை) நசுக்கிவிடுகிறேன்” என்று கேட்டார், “வேண்டாம்!” இவர்களது சந்ததிகளிலிருந்து அல்லாஹுதஆலாவை மட்டும் வணங்கி, அவனுக்கு எதையும் இணைவைக்காத மக்களை அல்லாஹுதஆலா பிறக்கச் செய்வான் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
١٠٠– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ ﷺ فِي سَفَرٍ فَأَقْبَلَ أَعْرَابِيٌّ فَلَمَّا دَنَا قَالَ لَهُ النَّبِيُّ ﷺ: أَيْنَ تُرِيدُ؟ قَالَ: إِلَي أَهْلِي قَالَ: هَلْ لَكَ فِي خَيْرٍ؟ قَالَ: وَمَا هُوَ؟ قَالَ: تَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، قَالَ: مَنْ شَاهِدٌ عَلَي مَا تَقُولُ؟ قَالَ: هَذِهِ الشَّجَرَةُ فَدَعَاهَا رَسُولُ اللهِ ﷺ وَهِيَ بِشَاطِيءِ الْوَادِي فَاقْبَلَتْ تَخُدُّ اْلاَرْضَ خَدّاً حَتَّي جَاءَتْ بَيْنَ يَدَيْهِ فَاسْتَشْهَدَهَا ثَلاَثاً فَشَهِدَتْ أَنَّهُ كَمَا قَالَ: ثُمَّ رَجَعَتْ إِلَي مَنْبَتِهَا وَرَجَعَ اْلاَعْرَإِبيُّ إِلي قَوْمِهِ وَقَالَ: إِنْ يَتَّبِعُونِي آتِيكَ بِهِمْ وَإِلاَّ رَجَعْتُ إِلَيْكَ فَكُنْتُ مَعَكَ.
رواه الطبراني ورجاله رجال الصحيح، ورواه ابو يعلي ايضا والبزار، مجمع الزوائد :٨ /٥١٧
100. ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள், “நாங்கள் ஒரு பயணத்தில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டு இருந்தோம். கிராமவாசி ஓருவர் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும், “எங்கு செல்கிறீர்?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்டார்கள், “வீட்டுக்குச் செல்கிறேன்” என்றார். “உமக்கு ஏதேனும் நல்ல செய்தி வேண்டுமா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வினவ, “அதென்ன நல்ல காரியம்?” என்று கேட்டார். “நீர் (لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ) என்ற ஷஹாதத் கலிமா கூறும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “தாங்கள் சொல்கின்ற இந்தச் சொல்லுக்கு யார் சாட்சி?” என்று கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கின் ஒரத்தில் இருந்த மரத்தை வருமாறு அழைக்க, அந்த மரம் பூமியைப் பிளந்து கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்து நின்றது. நபி (ஸல்) அவர்கள் அதனிடம் மூன்று முறை சாட்சி (ஷஹாதத் கலிமா) சொல்லச் சொன்னார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதுபோல் மூன்று முறை சாட்சி (ஷஹாதத் கலிமா) சொல்லிவிட்டு தன் இடத்திற்குத் திரும்பச் சென்றுவிட்டது. (இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கிராமவாசி பிரமித்துவிட்டார்). ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “எனது சமுதாயத்தினர் எனது பேச்சை ஏற்றுக்கொண்டால் அவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு தங்களிடம் வருவேன், இல்லையெனில், நானே தங்களிடம் திரும்பி வந்து தங்களுடன் தங்கிவிடுகிறேன் என்று கூறிவிட்டு தனது கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்றார்.
(தபரானீ, அபூயஃலா, பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠١– عَنْ سَهْلِ بْنِ سَعْدٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لِعَلِيٍّ يَوْمَ خَيْبَرَ: انْفُذْ عَلَي رِسْلِكَ، حَتَّي تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَي اْلإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللهِ فِيهِ، فَوَاللهِ! لأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمُرُ النَّعَمِ.
(وهو جزء من الحديث) رواه مسلم، باب من فضائل علي بن ابي طالبؓ رقم:٦٢٢٣
101. ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்தின்போது ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களிடம், “நீர் நிம்மதியாகப் புறப்பட்டுச் செல்லும். கைபர் வாசிகளின் மைதானத்தில் முகாமிடவும், பிறகு, அவர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கவும், அல்லாஹுதஆலாவுக்கு செலுத்தவேண்டிய கடமைகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும். அல்லாஹுதஆலாவின் மீது ஆணை!. உம்மின் காரணமாக அல்லாஹுதஆலா ஒருவரையேனும் நேர்வழியில் செலுத்துவது, சிவப்பு நிற ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்தது” என்று சொன்னார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- அரபியர்களிடம் சிவப்பு நிற ஒட்டகங்கள் அதிக விலை மதிப்புடையவையாகக் கருதப்பட்டன.
١٠٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً.
(الحديث) رواه البخاري ، باب ما ذكر عن بني اسرائيل، رقم:٣٤٦١
102. “என்னிடமிருந்து கேட்டது ஒரு வாக்கியமாக இருந்தாலும் அதையும் மற்றவர்களிடம் சேர்ப்பித்துவிடுங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- உங்களால் முடிந்த அளவு தீனுடைய பேச்சுகளை மற்றவர்களுக்கு எத்திவைத்துவிடுங்கள். நீங்கள் பிறருக்கு சொல்லுகின்ற செய்தி, சிறியதாக இருந்தாலும் அதனால் அவர்களுக்கு நேர்வழி கிடைக்கக் கூடும் அதனுடைய கூலியும் உங்களுக்குக் கிடைக்கும். எண்ணற்ற நன்மைகளால் நீங்கள் சிறப்பிக்கப்படுவீர்கள் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(மளாஹிர்ஹக்)
١٠٣– عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ عَائِذٍؓ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا بَعَثَ بَعْثاً قَالَ: تَأَلَّفُوا النَّاسَ، وَتَأَنَّوْا بِهِمْ، وَلاَ تُغِيرُوا عَلَيْهِمْ حَتَّي تَدْعُوَهُمْ فَمَا عَلَي اْلاَرْضِ مِنْ أَهْلِ بَيْتِ مَدَرٍ وَلاَ وَبَرٍ إِلاَّ وَأَنْ تَأْتُونِي بِهِمْ مُسْلِمِينَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تَقْتُلُوا رِجَالَهُمْ، وَتَأْتُونِي بِنسَائِهِمْ.
المطالب العالية:٢ /١٦٦، وذكر صاحب الاصابة بنحوه:٣ /١٥٢.
103. “மக்களுக்கிடையில் அன்பை உருவாக்குங்கள், அவர்களுடைய நேசத்துக்கு ஆளாகுங்கள், அவர்களிடம் மிருதுவான முறையில் நடந்து கொள்ளுங்கள், அவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்காமல் அவர்கள் மீது போர் தொடுக்காதீர்கள். ஏனெனில், எத்தனை குடிசைகள், வீடுகள் உள்ளனவோ (எத்தனை நகரம் அல்லது கிராமங்கள் உள்ளனவோ) அங்கு வசிப்பவர்களில் ஆண்களைக் கொன்றுவிட்டு, பெண்களை (அடிமைகளாக்கி) என்னிடம் கொண்டு வருவதைவிட அவர்கள் அனைவரையும் முஸ்லிம்களாகக் கொண்டுவருவது எனக்கு மிகப்பிரியமானது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் படையை அனுப்பி வைக்கும்போது சொல்லி அனுப்புவார்கள் என ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு ஆஇத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(மதாலிபே ஆலியா, இஸாபா)
١٠٤– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: تَسْمَعُونَ وَيُسْمَعُ مِنْكُمْ، وَيُسْمَعُ مِمَّنْ يَسْمَعُ مِنْكُمْ.
رواه ابوداؤد، باب فضل نشر العلم، رقم:٣٦٥٩
104. “இன்று நீங்கள் என்னிடமிருந்து தீனுடைய பேச்சுக்களை கேட்கிறீர்கள், நாளை உங்களிடமிருந்து தீனுடைய பேச்சுக்கள் கேட்கப்படும். பிறகு, உங்களிடமிருந்து யார் தீனுடைய பேச்சுக்களைச் கேட்டார்களோ, அவர்களிடமிருந்து தீனுடைய பேச்சுக்கள் கேட்கப்படும் எனவே, நன்கு கவனமாகக் கேளுங்கள், உங்களுக்குப் பின்னால் வருவோருக்கு அதை எத்தி வையுங்கள், பிறகு அவர்கள் தங்களுக்குப் பின்னால் வருவோருக்கு எத்திவைக்கட்டும். இந்தக் காரியம் இவ்வாறு தொடர்ந்து நடைபெறட்டும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٠٥– عَنِ اْلاَحْنَفِ بْنِ قَيْسٍؓ قَالَ: بَيْنَا أَنَا أَطُوفُ بِالْبَيْتِ فِي زَمَنِ عُثْمَانَ بْنِ عَفَّانٍؓ إِذْ جَاءَ رَجُلٌ مِنْ بَنِي لَيْثٍ وَأَخَذَ يَدِي فَقَالَ: أَلاَ أُبَشِّرُكَ؟ قُلْتُ: بَلي! فَقَالَ: هَلْ تَذْكُرُ إِذْ بَعَثَنِي رَسُولُ اللهِ ﷺ إِلَي قَوْمِكَ بَنِي سَعْدٍ فَجَعَلْتُ أَعْرِضُ عَلَيْهِمُ اْلإِسْلاَمَ وَأَدْعُوهُمْ إِلَيْهِ فَقُلْتَ أَنْتَ أَنَّكَ تَدْعُو إِلَي الْخَيْرِ وَتَأْمُرُ بِالْخَيْرِ وَإِنَّهُ لَيَدْعُو إِلَي الْخَيْرِ وَيَأْمُرُ بِالْخَيْرِ فَبَلَّغْتُ ذلِكَ إِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: اَللّهُمَّ اغْفِرْ لِلْأَحْنَفِ بْنِ قَيْسٍ، فَكَانَ اْلاَحْنَفؓ يَقُولُ: مَا مِنْ عَمَلِي شَيْءٌ أَرْجَي لِي مِنْهُ.
رواه الحاكم في المستدرك: ٣ /٦١٤
105. ஹஜ்ரத் அஹ்னஃப் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்து கொண்டிருக்கையில் பனூ லைஸ் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் வந்தார், எனது கையைப்பிடித்துக் கொண்டு, “நான் உமக்கு நற்செய்தி ஒன்று சொல்லவா?” என்று கேட்டார், “சொல்லுங்கள்” என்றேன்.”உமக்கு ஞாபகம் இருக்கிறதா? ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என்னை பனீ ஸஃத் என்ற உமது சமுதாயத்தினரிடம் (மார்க்கத்தின் பால் அழைப்பு விடுக்க) அனுப்பிய சமயம், நான் அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து அவர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தேன். அச்சமயம் நீர் என்னிடம், “நீர் எங்களை நன்மையின் பால் அழைக்கின்றீர், நன்மையானதையே ஏவுகின்றீர். (ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும்) நலவின் பால் அழைப்பு விடுக்கிறார்கள், நலவானதையே ஏவுகின்றார்கள். நீர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை உண்மைப் படுத்தினீர், நீர் கூறிய அதை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறினேன். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் (اَللّهُمَّ اغْفِرْ لِلْأَحْنَفِ بْنِ قَيْسٍ) “யாஅல்லாஹ், அஹ்னஃப் இப்னு கைஸுடைய பாவங்களை மன்னித்துவிடு” என்று துஆச் செய்தார்கள் என்று கூறினார். “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் இந்த துஆவின் மீது எனக்கு ஏற்பட்ட ஆதரவைப் போன்று எனது வேறு எந்த அமல் மீதும் எனக்கு ஆதரவு ஏற்படவில்லை” என்று ஹஜ்ரத் அஹ்னஃப் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٠٦– عَنْ أَنَسٍؓ قَالَ: أَرْسَلَ رَسُولُ اللهِ ﷺ رَجُلاً مِنْ أَصْحَابِهِ الِي رَأْسٍ مِنْ رُؤُوسِ الْمُشْرِكِينَ يَدْعُوهُ إِلَي اللهِ فَقَالَ: هذَا الْإِلهُ الَّذِي تَدْعُو إِلَيْهِ أَمِنْ فِضَّةٍ هُوَ؟ أَمْ مِنْ نُحَاسٍ هُوَ؟ فَتَعَاظَمَ مَقَالَتُهُ فِي صَدْرِ رَسُولِ رَسُولِ اللهِ ﷺ فَرَجَعَ إِلَي النَّبِيِّ ﷺ فَأَخْبَرَهُ فَقَالَ: اِرْجِعْ إِلَيْهِ فَادْعُهُ إِلَي اللهِ، فَرَجَعَ فَقَالَ لَهُ مِثْلَ مَقَأَلِتِه فَأَتَي رَسُولَ اللهِ ﷺ فَأَخْبَرَهُ فَقَالَ: اِرْجِعْ إِلَيْهِ فَادْعُهُ إِلَي اللهِ، وَرَسُولُ اللهِ ﷺ فِي الطَّرِيقِ لاَ يَعْلَمُ فَأَتَي النبَّيَّ ﷺ فَأَخْبَرُه أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ صَاحِبَهُ وَنَزَلَتْ عَلَي النَّبِيِّ ﷺ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَنْ يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللهِ۞).
رواه ابو يعلي (واسناده حسن):٣ /٣٥١
106. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இணை வைப்போரின் தலைவர்களில் ஒருவனிடம் அல்லாஹுதஆலாவின் பால் அழைக்க ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒரு ஸஹாபியை அனுப்பி வைத்தார்கள். (அந்த ஸஹாபி அவனிடம் சென்று அழைத்தபோது) “எந்தத் தெய்வத்தின் பால் நீர் என்னை அழைக்கிறீரோ, அது வெள்ளியால் செய்யப்பட்டதா? பித்தளையால் செய்யப்பட்டதா?” என்று அந்த முஷ்ரிக் கேட்டான். முஷ்ரிக்குடைய இந்த வார்த்தையை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் தூதுவரால் சகிக்கமுடியவில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, முஷ்ரிக் கூறியவற்றை விவரித்தார். ”நீர் திரும்ப அந்த முஷ்ரிக்கிடம் சென்று தீனின் பால் அழையும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, அவரும் திரும்பச் சென்று அந்த முஷ்ரிக்கை அழைத்தார், முன்பு சொன்னதையே மீண்டும் கூறினான். அந்த ஸஹாபி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து முஷ்ரிக் கூறியவற்றை கூறினார். நபி (ஸல்) அவர்கள் “மீண்டும் அவரிடம், திரும்பச் சென்று அவரை அழையும்” என்று சொன்னார்கள். (அவரும் மூன்றாம் முறையாக அழைக்கச் சென்றார்) திரும்பி வந்து, “அல்லாஹுதஆலா அந்த முஷ்ரிக்கை (இடி முழக்கத்தின் மூலம்) அழித்துவிட்டான்” என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொன்னார். அவர் வந்த போது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள், அன்னாருக்கு நடந்த நிகழ்ச்சி பற்றித் தெரியாது. அந்த சமயத்தில் அல்லாஹுதஆலா ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு கீழ்க்கண்ட ஆயத்தை இறக்கி வைத்தான் (وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَنْ يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللهِ) மேலும் அல்லாஹுதஆலா பூமியில் இடி முழக்கங்களை அனுப்பி, தான் நாடியவர் மீது விழ வைக்கிறான். அவர்களோ அல்லாஹுதஆலாவைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருக்கின்றனர்”.
(முஸ்னத் அபூயஃலா)
١٠٧– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ لِمُعَاذِ بْنِ جَبَلٍؓ حِينَ بَعَثَهُ إِلي الْيَمَنِ: إِنَّكَ سَتَأْتِي قَوْماً أَهْلَ كِتَابٍ، فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلي أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلي فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللهِ حِجَابٌ.
رواه البخاري ، باب اخذ الصدقة من الاغنياء…، رقم:١٤٩٦
107. “நீர் வேதக்காரர்களிடம் செல்ல இருக்கின்றீர், அவர்களிடம் நீர் சென்றதும், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹுதஆலாவைத்தவிர வேறுயாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹுதஆலாவின் தூதர் என்று அவர்கள் சாட்சி சொல்ல வேண்டுமென அவர்களுக்கு அழைப்புக் கொடுக்கவும். அவர்கள் உமது பேச்சை ஏற்றுக்கொண்டால், அல்லாஹுதஆலா இரவு, பகலில் ஐந்து வேளைத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கி உள்ளான் என்பதைச் சொல்லவும். அவர்கள் இதையும் ஏற்றுக்கொண்டால், அல்லாஹுதஆலா அவர்கள் மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வாங்கி அவர்களின் ஏழைகளுக்கு கொடுக்கப்படும்” என்று கூறும். இதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டால், அவர்களுடைய விலை உயர்ந்த பொருள்களை வாங்குவதை விட்டும் நீர் தவிர்ந்து கொள்ளவும். நடுத்தரமான பொருளை ஸகாத்தாக வாங்கவேண்டும், உயர்ந்த பொருட்களை வாங்கக் கூடாது. அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்தை பயந்து கொள்ளும்! ஏனென்றால், அவருடைய சாபத்துக்கும், அல்லாஹுதஆலாவிற்குமிடையே எந்தத் திரையுமில்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பொழுது உபதேசித்தார்கள் என்று ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٠٨– عَنِ الْبَرَاءِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ بَعَثَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلي أَهْلِ الْيَمَنِ يَدْعُوهُمْ إِلَي اْلإِسْلاَمِ، قَالَ الْبَرَاءُ: فَكُنْتُ فِيمَنْ خَرَجَ مَعَ خَالِدِ بْنِ الْوَلِيدِ فَأَقَمْنَا سِتَّةَ أَشْهُرٍ يَدْعُوهُمْ إِلَي اْلإِسْلاَمِ فَلَمْ يُجِيبُوهُ، ثُمَّ إِنَّ رَسُولَ اللهِ ﷺ بَعَثَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍؓ وَأَمَرَهُ أَنْ يُقْفِلَ خَالِدًا إِلاَّ رَجُلاً كَانَ مِمَّنْ مَعَ خَالِدٍ فَأَحَبَّ أَنْ يُعَقِّبَ مَعَ عَلِيٍّ فَلْيُعَقِّبْ مَعَهُ، قَالَ الْبَرَاءُ: فَكُنْتُ فِيمَنْ عَقَّبَ مَعَ عَلِيٍّ، فَلَمَّا دَنَوْنَا مِنَ الْقَوْمِ خَرَجُوا إِلَيْنَا ثُمَّ تَقَدَّمَ فَصَلَّي بِنَا عَلِيٌّ ثُمَّ صَفَّنَا صَفّاً وَاحِدًا ثُمَّ تَقَدَّمَ بَيْنَ أَيْدِينَا وَقَرَأَ عَلَيْهِمْ كِتَابَ رَسُولِ اللهِ ﷺ فَأَسْلَمَتْ هَمْدَانُ جَمِيعاً، فَكَتَبَ عَلِيٌّ إِلَي رَسُولِ اللهِ ﷺ بِإِسْلاَمِهِمْ، فَلَمَّا قَرَأَ رَسُولُ اللهِ ﷺ الْكِتَابَ خَرَّ سَاجِدًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: «أَلسَّلاَمُ عَلي هَمْدَانَ أَلسَّلاَمُ عَلَي هَمْدَانَ».
قال البيهقي: رواه البخاري مختصرا من وجه آخر عن ابراهيم بن يوسف، البداية والنهاية:٥/١٠١
108. ஹஜ்ரத் பராஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் யமன் நாட்டு மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதற்காக ஹஜ்ரத் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். ஹஜ்ரத் காலித் இப்னு வலீத் (ரலி) சென்ற ஜமாஅத்தில் நானும் இருந்தேன். அங்கு நாங்கள் ஆறு மாதங்கள் வரை தங்கியிருந்தோம், ஹஜ்ரத் காலித் (ரலி) அந்த மக்களை அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனால், அவர்கள் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அலீ யிப்னு அபூதாலிப் (ரலி) அவர்களை அங்கு அனுப்பி வைத்து, “ஹஜ்ரத் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைத் திரும்பி வந்து விடும்படியும். அவருடைய தோழர்களில் யார் உம்முடன் தங்க விரும்புகிறார்களோ அவர்கள் அங்கேயே தங்கிக் கொள்ளும்படியும்” சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஹஜ்ரத் பராஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களுடன் தங்கிவிட்டவர்களில் நானும் இருந்தேன். நாங்கள் யமன் வாசிகளுக்குச் சமீபமாகச் சென்றதும், அவர்களும் வெளியேறி எங்களுக்கு முன்னால் வந்தார்கள், ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் முன்னேறி எங்களுக்குத் தொழ வைத்தார்கள். பிறகு, எங்களை ஒரே அணியாக நிற்க வைத்துவிட்டு முன்னேறிச் சென்று அந்த மக்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடைய கடிதத்தைப் படித்துக் காண்பித்தார்கள், கடிதத்தைப் படிக்கக் கேட்டதும், “ஹம்தான்” கோத்திரத்தார் அனைவரும் முஸ்லிமாகிவிட்டார்கள். ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு, ஹம்தான் கோத்திரத்தார் இஸ்லாத்தைத் தழுவிய மகிழ்ச்சிகரமான செய்தியைக் கடிதம் மூலம் அனுப்பிவைத்தார்கள். அக்கடிதத்தைப் படித்ததும் மகிழ்ச்சியடைந்து, நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் விழுந்துவிட்டார்கள். பிறகு, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இருந்து தலையை உயர்த்தி, “ஹம்தான் கோத்திரத்தார் மீது சாந்தி உண்டாகட்டும்! ஹம்தான் கோத்திரத்தார் மீது சாந்தி உண்டாகட்டும்!” என்று துஆச் செய்தார்கள்.
(புகாரி, பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா)
١٠٩– عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللهِ كُتِبَتْ لَهُ سَبْعُمِائَةِ ضِعْفٍ.
رواه الترمذي وقال: هذا حديث حسن، باب ما جاء في فضل النفقة في سبيل الله، رقم:١٦٢٥
109. “அல்லாஹுதஆலாவின் பாதையில் எவர் சிறிது செலவு செய்கிறாரோ, அவருடைய பட்டோலையில் எழுநூறு மடங்காக அதை எழுதப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் குரைமிப்னு ஃபாதிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١١٠– عَنْ مُعَاذٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ الصَّلاَةَ وَالصَّيَامَ وَالذِّكْرَ يُضَاعَفُ عَلَي النَّفَقَةِ فِي سَبِيلِ اللهِ بِسَبْعِ مِائَةِ ضِعْفٍ.
رواه ابوداؤد، باب في تضعيف الذكر في سبيل الله ، رقم: ٢٤٩٨
110. “நிச்சயமாக அல்லாஹுதஆலாவின் பாதையில், தொழுவது, நோன்பு நோற்பது மற்றும் திக்ரு செய்வது ஆகியவற்றின் நன்மையை அல்லாஹுதஆலாவின் பாதையில் பொருளைச் செலவழிப்பதற்குக் கிடைக்கும் நன்மையைவிட எழுநூறு மடங்காக இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١١١– عَنْ مُعَاذٍؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ: إِنَّ الذِّكْرَ فِي سَبِيلِ اللهِ يُضَعَّفُ فَوْقَ النَّفَقَةِ بِسَبْعِ مِائَةِ ضِعْفٍ.
قَالَ يَحْي فِي حَدِيثِهِ: بِسَبْعِمِائَةِ اَلْفِ ضِعْفٍ. رواه احمد:٣ /٤٣٨
111. “நிச்சயமாக அல்லாஹுதஆலாவின் பாதையில் திக்ரு செய்வதின் நன்மை (அல்லாஹுதஆலாவின் பாதையில்) செலவு செய்வதற்குக் கிடைக்கும் நன்மையைவிட எழுநூறு மடங்காக இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இன்னோர் அறிவிப்பில், “ஏழு இலட்சம் மடங்காக நன்மை இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
(முஸ்னத் அஹ்மத்)
١١٢– عَنْ مُعَاذِ نِ الْجُهَنِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَرَأَ اَلْفَ آيَةٍ فِي سَبِيلِ اللهِ كَتَبَهُ اللهُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٢ /٨٧
112. “எவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் ஆயிரம் ஆயத்துகளை ஓதுகிறாரோ அவரை நபிமார்கள், உண்மையாளர்கள், வீரமரணம் அடைந்தவர்கள், (ஷஹீதுகள்) மற்றும் நல்லோர்கள் ஆகியவர்களுடைய பட்டியலில் அல்லாஹுதஆலா எழுதிவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١١٣– عَنْ عَلِيٍّؓ قَالَ: مَا كَانَ فِينَا فَارِسٌ يَوْمَ بَدْرٍ غَيْرَ الْمِقْدَادِ وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا فِينَا إِلاَّ نَائِمٌ إِلاَّ رَسُولُ اللهِ ﷺ تَحْتَ شَجَرَةٍ يُصَلِّي وَيَبْكِي حَتَّي أَصْبَحَ.
رواه احمد:١/١٢٥
113. “பத்ருடைய தினத்தன்று எங்களில், ஹஜ்ரத் மிக்தாத் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் குதிரையின் மீது சவாரி செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் உறங்கிவிட்டோம், நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே காலைப் பொழுது உதயமாகும் வரை தொழுது கொண்டும், அழுது கொண்டும் இருந்தார்கள்” என்று ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١١٤– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَامَ يَوْماً فِي سَبِيلِ اللهِ بَاعَدَ اللهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ بِذلِكَ الْيَوْمِ سَبْعِينَ خَرِيفاً.
رواه النسائي، باب ثواب من صام…، رقم: ٢٢٤٧
114. “அல்லாஹுதஆலாவின் பாதையில் எவர் ஒருநாள் நோன்பு நோற்பாரோ, அந்த ஒரு நாள் நோன்புக்குப் பகரமாக அவருக்கும், நரகத்திற்குமிடையே அல்லாஹுதஆலா எழுபது வருட தொலை தூரத்தை ஏற்படுத்தி விடுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
١١٥– عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَامَ يَوْماً فِي سَبِيلِ اللهِ بَعُدَتْ مِنْهُ النَّارُ مَسِيرَةَ مِائَةِ عَامٍ.
رواه الطبراني في الكبير والاوسط ورجاله موثقون، مجمع الزوائد: ٣ /٤٤٤
115. “அல்லாஹுதஆலாவின் பாதையில் எவர் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவரைவிட்டு நூறு வருடத் தொலை தூரம் நரகம் தூரமாகிவிடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னு அபஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١١٦– عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ صَامَ يَوْماً فِي سَبِيلِ اللهِ جَعَلَ اللهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ خَنْدَقاً كَمَا بَيْنَ السَّمَاءِ وَاْلاَرْضِ.
رواه الترمذي، وقال: هذا حديث غريب، باب ما جاء في فضل الصوم في سبيل الله، رقم:١٦٢٤
116. “அல்லாஹுதஆலாவின் பாதையில் எவர் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ, அல்லாஹுதஆலா அவருக்கும், நரகத்திற்குமிடையே வானம், பூமிக்கிடையே உள்ள தூரமளவு ஒரு பெரிய அகழியைத் தடையாக்கி விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١١٧– عَنْ أَنَسٍؓ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ أَكْثَرُنَا ظِلاًّ مَنْ يَسْتَظِلُّ بِكِسَائِهِ، وَأَمَّا الَّذِينَ صَامُوا فَلَمْ يَعْمَلُوا شَيْئاً، وَأَمَّا الَّذِينَ أَفْطَرُوا فَبَعَثُوا الرِّكَابَ وَامْتَهَنُوا وَعَالَجُوا، فَقَالَ النَّبِيُّ ﷺ: ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ.
رواه البخاري، باب فضل الخدمة في الغزو، رقم:٢٨٩٠
117. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் இருந்தோம், எங்களில் எவரிடம் போர்வை இருந்ததோ அவர்தான் சூரிய வெப்பத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள நிழல் பெற்றிருந்தார். எங்களில் எவர் நோன்பு நோற்றிருந்தாரோ அவரால் எந்த அமலும் செய்ய முடியவில்லை. நோன்பு நோற்காதவர்கள், வாகனங்களுக்கு தண்ணீர் புகட்டவும், வாகனங்களை மேய்க்கவும் சிரமம் மேற்கொண்டு மற்றும் பல சேவைகளும் செய்தார்கள். இதைக் கண்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் “இன்று நோன்பு வைக்காதவர்கள் நன்மைகள் அனைத்தையும் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள்.
(புகாரி)
١١٨– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ قَالَ: كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللهِ ﷺ فِي رَمَضَانَ، فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ، فَلاَ يَجِدُ الصَّائِمُ عَلَي الْمُفْطِرِ، وَلاَ الْمُفْطِرُ عَلَي الصَّائِمِ، يَرَوْنَ أَنَّ مَنْ وَجَدَ قُوَّةً فَصَامَ،فَإِنَّ ذلِكَ حَسَنٌ، وَيَرَوْنَ أَنَّ مَنْ وَجَدَ ضَعْفاً فَأَفْطَرَ، فَإِنَّ ذلِكَ حَسَنٌ.
رواه مسلم، باب جوازالصوم والفطر في شهر رمضان….، رقم: ٢٦١٨
118. ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் யுத்தத்திற்குச் செல்வோம். அப்பொழுது எங்களில் சிலர் நோன்பு நோற்பார்கள், சிலர் நோன்பு நோற்கமாட்டார்கள். நோன்பாளி நோன்பில்லாதவர் மீது வெறுப்படைய மாட்டார், அதேபோல், நோன்பில்லாதவர் நோன்பாளி மீது வெறுப்படைய மாட்டார், தனக்கு பலம் இருக்கிறதென்று நினைப்பவர் நோன்பு நோற்றுக் கொள்வார். இவ்வாறு அவர் செய்தது அவருக்குச் சரிதான், தன்னுள் பலவீனத்தை உணர்ந்தவர் நோன்பு வைக்கமாட்டார், இவர் செய்ததும் சரியே!” என்று எங்களில் அனைவரும் கருதுவார்கள்.
(முஸ்லிம்)
١١٩– عَنْ عَبْدِ اللهِ الْخَطْمِيِّؓ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا أَرَادَ أَنْ يَسْتَوْدِعَ الْجَيْشَ قَالَ: أَسْتَوْدِعُ اللهَ دِينَكُمْ وَأَمَانَتَكُمْ وَخَوَاتِيمَ أَعْمَالِكُمْ.
رواه ابو داؤد، باب في الدعاء عند الوداع، رقم:٢٦٠١
119. ஹஜ்ரத் அப்துல்லாஹ் கத்மீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நபி (ஸல்) அவர்கள் “ஏதேனும் படையை வழியனுப்பிவைக்க நினைத்தால், (أَسْتَوْدِعُ اللهَ دِينَكُمْ وَأَمَانَتَكُمْ وَخَوَاتِيمَ أَعْمَالِكُمْ) உங்களுடைய தீனையும், உங்களுடைய உடைமைகளையும் உங்கள் அமல்களின் முடிவுகளையும் அல்லாஹுதஆலாவிடம் நான் ஒப்படைக்கிறேன்” என்று கூறுவார்கள். (அவன் பாதுகாப்பில் ஒப்படைக்கப்படுபவை வீணாவதில்லை)
(அபூதாவூத்)
தெளிவுரை:- அமானிதம் என்பதன் பொருள், மனைவி, மக்கள், குடும்பத்தினர், செல்வங்கள், பொருள்கள் ஆகும். இவையனைத்தும் அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து அமானிதமாக அடியானிடம் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், அல்லாஹுதஆலாவுடைய பாதையில் சென்றவரிடம் மக்களால் வைக்கப்பட்ட, அல்லது மக்களிடம் அவர் கொடுத்து வைத்தவைகளும் அமானிதம் என்பதில் அடங்கும். “அல்லாஹுதஆலா உங்களுடைய தீனையும், குடும்பத்தாரையும், உடமைகளையும் பாதுகாக்கட்டும். உங்களுடைய அமல்களின் முடிவை நலவாக்கட்டும்” என்ற இந்தச் சிறிய வாக்கியத்தில் எத்துணை விசாலமான கருத்து, சுருக்கமான வார்த்தைகளால் கூறப்பட்டுள்ளது!.
(பத்லுல் மஜ்ஹூத்)
١٢٠– عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَؒ قَالَ: شَهِدْتُ عَلِيّاًؓ وَأُتِيَ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا، فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي الرِّكَابِ قَالَ: بِسْمِ اللهِ، فَلَمَّا اسْتَوَي عَلَي ظَهْرِهَا قَالَ: اَلْحَمْدُ لِلّهِ، ثُمَّ قَالَ: سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَي رَبِّنَا لَمُنْقَلِبُونَ، ثُمَّ قَالَ: اَلْحَمْدُ لِلَّهِ، ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ: أَللّهُ أَكْبَرُ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ: سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ، ثُمَّ ضَحِكَ، فَقِيلَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ! مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ؟ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ فَعَلَ كَمَا فَعَلْتُ، ثُمَّ ضَحِكَ فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ ﷺ مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ؟ قَالَ: إِنَّ رَبَّكَ تَعَالَي يَعْجَبُ مِنْ عَبْدِهِ إِذَا قَالَ: إِغْفِرْ لِي ذُنُوبِي، يَعْلَمُ أَنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ غَيْرِي.
رواه ابو داؤد، باب ما يقول الرجل اذا ركب، رقم:٢٦٠٢
120. ஹஜ்ரத் அலீஇப்னு ரபீஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன், அவர்களுக்கு முன்னால் வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் தமது பாதத்தை ரிகாபில் (கால் வைக்கும் வளையம்) வைத்தபொழுது, (بِسْمِ اللهِ) என்று சொன்னார்கள், பிறகு வாகனத்தின் முதுகில் அமர்ந்ததும் (اَلْحَمْدُ لِلّهِ) என்றும் பிறகு, (سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَي رَبِّنَا لَمُنْقَلِبُونَ) “இந்த வாகனத்தை நாங்கள் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கும் நிலையில், எங்களுடைய கட்டுப்பாட்டில் இதை ஆக்கிக் கொடுத்த அல்லாஹ் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் எங்களுடைய ரட்சகனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்கள்” என்று சொன்னார்கள். பிறகு, மூன்று முறை (اَلْحَمْدُ لِلَّهِ) என்றும், மூன்று முறை (أَللّهُ أَكْبَرُ) என்று சொல்லியபின், (سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ) “நீ பரிசுத்தமானவன். (உனக்கு மாறுசெய்து) எனக்கு நானே அநியாயம் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது” என்று சொன்னார்கள். இதற்குப் பிறகு ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் சிரித்தார்கள், “தாங்கள் எதற்காக சிரித்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது, “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நான் செய்ததைப் போன்று செய்துவிட்டு அவர்கள் துஆ ஓதியபின் சிரித்ததைக் கண்டேன். “யாரஸூலல்லாஹ்! தாங்கள் ஏன் சிரித்தீர்கள்?” என்று வினவினேன். அடியான், அல்லாஹுதஆலாவிடம் தன்னுடைய பாவங்களை மன்னித்துவிடு என்று சொல்வதாலும், பாவங்களை அவனைத் தவிர வேறு யாரும் மன்னிக்க முடியாது என்று அடியான் விளங்கியுள்ளதாலும், உம்முடைய ரட்சகன் அவனைப்பார்த்து மகிழ்ச்சிடைகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என்பதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை: “ரிகாப்” என்பது இரும்பால் செய்யப்பட்ட வளையத்திற்குச் சொல்லப்படும், இது குதிரையுடைய சேணத்தின் இரு புறத்திலும் இணைக்கப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருக்கும், குதிரை மீது பயணம் செய்பவர் அந்த வளையத்தில் காலை வைத்து குதிரை மீது ஏறுவார்.
١٢١– عَنِ ابْنِ عُمَرَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ إِذَا اسْتَوَي عَلَي بَعِيرِهِ خَارِجاً إِلَي سَفَرٍ، كَبَّرَ ثَلاَثاً، قَالَ: سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَانَّا إِلي رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هذَا الْبِرَّ وَالتَّقْوَي، وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَي، اَللّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذَا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فيِ السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي اْلاَهْلِ، اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَاْلاَهْلِ وَإِذا رَجَعَ قَالَهُنَّ، وَزَادَ فِيهِّن: آئِبُونَ، تَائِبُونَ، عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ.
رواه مسلم، باب استحباب الذكر اذا ركب دابته…، رقم:٣٢٧٥
121. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் பயணம் செய்ய, வாகனத்தில் அமர்ந்ததும், மூன்று முறை “அல்லாஹு அக்பர்” என்று கூறிவிட்டு, (سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَانَّا إِلي رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هذَا الْبِرَّ وَالتَّقْوَي، وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَي، اَللّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذَا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فيِ السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي اْلاَهْلِ، اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَاْلاَهْلِ) “நாங்கள் இந்த வாகனத்தை வசப்படுத்த இயலாத நிலையில் இதை எங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவன் பரிசுத்தமானவன், நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள்!”. யாஅல்லாஹ்! நாங்கள் எங்களுடைய இந்தப் பிரயாணத்தில் நன்மையையும் பயபக்தியையும் மற்றும் நீ பொருந்திக் கொள்கின்ற அமலையும் உன்னிடம் வேண்டுகிறோம். யாஅல்லாஹ்! எங்களுடைய இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்கிவை, அதனுடைய தூரத்தை எங்களுக்குச் சுருக்கிக் கொடு, யாஅல்லாஹ்! நீதான் எங்களுடைய இப்பயணத்தில் எங்களுக்குத் தோழன். எங்களுக்குப் பிறகு நீயே எங்கள் குடும்பத்தினரின் கண்காணிப்பாளன், யாஅல்லாஹ்! பயணத்துடைய சிரமத்தைவிட்டும், பயணத்தில் ஏதேனும் வேதனைக்குரிய காட்சியைக் காண்பதை விட்டும், திரும்பி வந்தபின் பொருள், குடும்பத்தாரில் வேதனைக்குரிய செயலைச் சந்திப்பதைவிட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன்” என்ற துஆவை ஓதுவார்கள். பிறகு பயணத்திலிருந்து திரும்பி வந்ததும் இதே துஆவை ஓதுவார்கள், அத்துடன் இந்த வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்வார்கள், (آئِبُونَ، تَائِبُونَ، عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ) “நாங்கள் பயணத்திலிருந்து திரும்பி வரக்கூடியவர்கள், தவ்பாச் செய்யக் கூடியவர்கள் எங்கள் இறைவனை வணங்கக் கூடியவர்கள், எங்கள் இரட்சகனைப் புகழக் கூடியவர்கள்”.
(முஸ்லிம்)
١٢٢– عَنْ صُهَيْبٍؓ أَنَّ النَّبِيَّ ﷺ لَمْ يَر قَرْيَةً يُرِيدُ دُخُولَهَا إِلاَّ قَالَ: حِينَ يَرَاهَا: اللهُمَّ رَبَّ السَّمواتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ اْلاَرْضِينَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ فَانَّا نَسْأَلُكَ خَيْرَ هذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا وَشَرِّ مَا فِيهَا.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الإسناد ووافقه الذهبي٢/١٠٠
122. ஹஜ்ரத் ஸுஹைப் அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி அவர்கள் எப்பொழுதும் ஏதேனும் ஊரில் செல்ல நாடினால் அந்த ஊரைப் பார்த்தவுடன் (اللهُمَّ رَبَّ السَّمواتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ اْلاَرْضِينَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ فَانَّا نَسْأَلُكَ خَيْرَ هذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا وَشَرِّ مَا فِيهَا) யாஅல்லாஹ், ஏழு வானங்கள் மற்றும் எந்தப் பொருள்களின் மீது ஏழு வானங்கள் நிழலிட்டுக் கொண்டிருக்கின்றனவோ அவைகளின் இரட்சகனே! ஏழு பூமிகள் மற்றும் அவை சுமந்திருக்கும் பொருட்களின் இரட்சகனே! எல்லா ஷைத்தான்கள் மற்றும் அவை வழிகெடுத்தவைகளின் இரட்சகனே! காற்றுகள் அவை சிதறடிக்கும் பொருட்களின் இரட்சகனே! நாங்கள், இந்த ஊரின் நலவையும், இவ்வூர்வாசிகளின் நலவையும் உன்னிடம் வேண்டுகிறோம். மேலும், இவ்வூரின் தீங்கு, இவ்வூர் வாசிகளின் தீங்கு, இவ்வூரிலுள்ளவற்றின் தீங்கைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்” என்ற துஆவை ஓதுவார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٢٣– عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمِ نِ السُّلَمِيَّةِؓ تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ نَزَلَ مَنْزِلاً ثُمَّ قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّي يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذلِكَ.
رواه مسلم، باب في التعوذ من سوء القضاء …، رقم:٦٨٧٨
123. “எவரேனும் ஒருவர் ஏதேனும் ஒர் இடத்தில் இறங்கியதும், (أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ) “நான் அல்லாஹுதஆலாவுடைய (பலன் மற்றும், ஆரோக்கியம் தரும்) அனைத்துக் கலிமாக்களின் மூலம், அவனது சகல படைப்புகளின் தீங்கைவிட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று ஓதிக் கொண்டால், அவர் அங்கிருந்து திரும்பிச் செல்லும் வரை எப்பொருளும் அவருக்குத் தீங்கு இழைக்காது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் கவ்லத் பின்த் ஹகீம் ஸுலமிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٢٤– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ قَالَ: قُلْنَا يَوْمَ الْخَنْدَقِ: يَا رَسُولَ اللهِ ﷺ هَلْ مِنْ شَيْءٍ نَقُولُهُ فَقَدْ بَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ قَالَ: نَعَمْ! اَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا قَالَ: فَضَرَبَ اللهُ وُجُوهَ أَعْدَائِهِ بِالرِّيحِ فَهَزَمَهُمُاللهُ بِالرِّيحِ.
رواه احمد:٣ /٣
124. ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அகழிப்போரின் போது நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ், நாங்கள் இந்த நேரத்தில் ஓத ஏதேனும் துஆ இருக்கிறதா? ஏனெனில், ஈரல் குலைகள் குரல்வளையை எட்டிவிட்டன” (திடுக்கமான சூழ்நிலையில்) என்று கேட்டார்கள், “ஆம்!” (اَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا) “யாஅல்லாஹ், (எதிரிகளுக்கு முன்னால்) எங்களுடைய பலவீனத்தை மறைத்துவிடு பயமுறுத்தும் காரியங்களைவிட்டும் பாதுகாப்பைத் தந்தருள்! என்று ஓதுங்கள்” என சொன்னார்கள். ஹஜ்ரத் அபூ ஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், (நாங்கள் இந்த துஆவை ஓதத் தொடங்கினோம். அதன் பரக்கத்தால்) “அல்லாஹுதஆலா கடுமையான சூறாவளிக் காற்றை அனுப்பி எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்தான்.”
(முஸ்னத் அஹ்மத்)
١٢٥– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللهِ دَعَاهُ خَزَنَةُ الْجَنَّةِ، كُلُّ خَزَنَةِ بَابٍ: أَيْ فُلُ هَلُمَّ، قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللهِﷺ ذَاكَ الَّذِي لاَ تَوَي عَلَيْهِ، فَقَالَ النَّبِيُّ ﷺ: إِنِّي لأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ.
رواه البخاري، باب فضل النفقة في سبيل الله، رقم:٢٨٤١
125. “எவர் ஜோடியை (உதாரணமாக இரு குதிரைகள், இரு ஆடைகள், இரு திர்ஹம்கள், இரு அடிமைகள் போன்றவை) அல்லாஹுதஆலாவின் பாதையில் செலவு செய்வாரோ, அவரைச். சொர்க்கத்தின் பாதுகாவலர்கள் அழைப்பர். (சுவர்க்கத்தின்) ஒவ்வொரு வாசலுடைய பாதுகாவலரும் “இன்னாரே, இந்த வாசல் வழியாக நுழைந்துவிடும்” என்று அழைப்பர். அதைக் கேட்ட ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள், “யாரஸூலல்லாஹ்! அப்படியென்றால் அவருக்கு எந்தப் பயமும் இருக்காதே!” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு வாசலிலிருந்தும் அழைக்கப்படுவோரில் நீரும் இருப்பீர் என்று அல்லாஹுதஆலாவிடம் ஆதரவு வைக்கிறேன்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٢٦– عَنْ ثَوْبَانَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَفْضَلُ دِينَارٍ دِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلي عِيَالِهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ عَلي فَرَسِهِ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلي أَصْحَابِهِ فِي سَبِيلِ اللهِ.
رواه ابن حبان (واسناده صحيح):١٠ /٥٠٣
126. “ஒருவர் செலவிடும் தங்க தீனாரில் தன் வீட்டாருக்குச் செலவிடும் தீனாரும், அல்லாஹுதஆலாவின் பாதையில் தன் குதிரைக்குச் செலவிடும் தீனாரும், ஒருவர் அல்லாஹ்வுடைய பாதையில் தன் தோழர்களுக்குச் செலவிடும் தீனாரும் சிறந்த தீனார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (தீனார் என்பது தங்க நாணயத்திற்குச் சொல்லப்படும்).
(இப்னுஹிப்பான்)
١٢٧– وَيُرْوَي عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ مَشُورَةً لِأَصْحَابِهِ مِنْ رَسُولِ اللهِ ﷺ.
رواه الترمذي، باب ما جاء في المشورة، رقم:١٧١٤
127. “ரஸூலுல்லாஹி (ஸல்) தனது தோழர்களிடம் ஆலோசனை செய்தது போன்று, வேறு யாரும் ஆலோசனை செய்ய நான் பார்த்ததில்லை (அன்னார் அதிகமாக ஆலோசனை செய்து வந்தார்கள்)” என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٢٨– عَنْ عَلِيٍّؓ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللهِﷺ إِنْ نَزَلَ بِنَا أَمْرٌ لَيْسَ فِيهِ بَيَانُ أَمْرٍ وَلاَ نَهْيٍ فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: شَاوِرُوا فِيهِ الْفُقَهَاءَ وَالْعَابِدِينَ وَلاَ تُمْضُوا فِيهِ رَأْيَ خَاصَّةٍ.
رواه الطبراني في الاوسط ورجاله موثقون من اهل الصحيح، مجمع الزوائد:١ / ٤٢٨
128. ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ், தங்களிடமிருந்து எவ்வித கட்டளை, விலக்கல் பற்றிய இல்லாத பிரச்சினை ஏதேனும் எங்களுக்கு ஏற்பட்டால், நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என வினவினேன்.”அச்சமயத்தில் தீனுடைய விளக்கமுள்ளோரிடமும், வணக்கத்தில் ஈடுபாடு உடையவர்களிடமும் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். தனிப்பட்ட நபருடைய அபிப்பிராயப்படி முடிவெடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٢٩– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: لَمَّا نَزَلَتْ هذِهِ اْلآيَةُ (وَشَاوِرْهُمْ فِي اْلاَمْرِ۞) الآية قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَمَا إِنَّ اللهَ وَرَسُولَهُ غَنِيَّانِ عَنْهَا وَلكِنْ جَعَلَهَا اللهُ رَحْمَةً لأُمَّتِي فَمَنْ شَاوَرَ مِنْهُمْ لَمْ يَعْدِمْ رُشْدًا وَمَنْ تَرَكَ الْمَشُورَةَ مِنْهُمْ لَمْ يَعْدِمْ عَنَاءً.
رواه البيهقي:٦ /٧٦
129. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (وَشَاوِرْهُمْ فِي اْلاَمْرِ) “முக்கியமான காரியங்களில் அவர்களிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்” என்ற ஆயத் இறங்கிய போது, நபி (ஸல்) அவர்கள் சொன்னதாவது, “அல்லாஹுதஆலாவுக்கும், அவனது ரஸூலுக்கும் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும், ஆலோசனை செய்வதை அல்லாஹுதஆலா எனது உம்மத்துக்கு ரஹ்மத்தாக ஆக்கியுள்ளான். எனது உம்மத்தில் ஆலோசனை செய்பவர் நேரான வழியில் இருப்பார், ஆலோசனை செய்யாதவர் சிரமத்திலேயே இருப்பார்”.
(பைஹகீ)
١٣٠– عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: حَرْسُ لَيْلَةٍ فِي سَبِيلِ اللهِ تَعَالَي أَفْضَلُ مِنْ اَلْفِ لَيْلَةٍ يُقَامُ لَيْلُهَا وَيُصَامُ نَهَارُهَا.
رواه احمد:١/٦١
130. “அல்லாஹுதஆலாவின் பாதையில் ஓர் இரவு விழித்திருந்து காவல் காப்பது, வணங்கப்பட்ட ஆயிரம் இரவுகள், நோன்பு நோற்கப்பட்ட ஆயிரம் பகல்களை விடச் சிறந்தது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٣١– عَنْ سَهْلِ بْنِ الْحَنْظَلِيَّةِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ (يَوْمَ حُنَيْنٍ۞): مَنْ يَحْرُسُنَا اللَّيْلَةَ؟ قَالَ أَنَسُ بْنُ أَبِي مَرْثَدِ الْغَنَوِيُّؓ: أَنَا يَا رَسُولَ اللهِﷺ قَالَ: فَارْكَبْ، فَرَكِبَ فَرَساً لَهُ وَجَاءَ إِلي رَسُولِ اللهِ ﷺ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: إِسْتَقْبِلْ هذَا الشِّعْبَ حَتَّي تَكُونَ فِي أَعْلاَهُ، وَلاَ نُغَرَّنَّ مِنْ قِبَلِكَ اللَّيْلَةَ، فَلَمَّا أَصْبَحْنَا خَرَجَ رَسُولُ اللهِ ﷺ إِلَي مُصَلاَّهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ، ثُمَّ قَالَ: هَلْ أَحْسَسْتُمْ فَارِسَكُمْ؟ قَالُوا: يَا رَسُولَ اللهِ ﷺ مَا أَحْسَسْنَاهُ، فَثُوِّبَ بِالصَّلاَةِ، فَجَعَلَ رَسُولُ اللهِ ﷺ يُصَلِّيْ وَهُوَ يَتَلَفَّتُ إِلي الشِّعْبِ حَتَّي إِذَا قَضَي صَلاَتَهُ وَسَلَّمَ فَقَالَ: أَبْشِرُوا فَقَدْ جَاءَكُمْ فَارِسُكُمْ، فَجَعَلْنَا نَنْظُرُ إِلَي خِلاَلِ الشَّجَرِ فِي الشِّعْبِ فَإِذَا هُوَ قَدْ جَاءَ حَتَّي وَقَفَ عَلَي رَسُولِ اللهِ ﷺ فَسَلَّمَ وَقَالَ: إِنِّيْ إِنْطَلَقْتُ حَتَّي كُنْتُ فِي أَعْلَي هذَا الشِّعْبِ حَيْثُ أَمَرَنِي رَسُولُ اللهِ ﷺ، فَلَمَّا أَصْبَحْتُ اِطَّلَعْتُ الشِّعْبَيْنِ كِلَيْهِمَا، فَنَظَرْتُ فَلَمْ أَرَ أَحَدًا، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: هَلْ نَزَلْتَ اللَّيْلَةَ؟ قَالَ: لاَ، إِلاَّ مُصَلِّياً أَوْ قَاضِياً حَاجَةً، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: قَدْ أَوْجَبْتَ فَلاَ عَلَيْكَ أَنْ لاَ تَعْمَلَ بَعْدَهَا.
رواه ابو داؤد، باب في فضل الحرس في سبيل الله رقم:٢٥٠١
131. ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஹன்ளலிய்யா (ரலி) அறிவிக்கிறார்கள், (ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஹுனைன் யுத்தத்தின் போது) “இன்றைய இரவு நமக்குக் காவல் காப்பவர் யார்?” என வினவினார்கள், “யாரஸூலல்லாஹ், நான் (காவல் காக்கிறேன்) என ஹஜ்ரத் அனஸ்இப்னு அபீ மர்ஸத் ஙனவீ (ரலி) கூறினார்கள், “வாகனத்தில் ஏறுவீராக!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், தனது குதிரையின் மீதேறி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்தார். அவரிடம், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “முன்னால் இருக்கின்ற அந்தக் கணவாயை நோக்கிச் செல்லும். அந்த உயரமான பகுதிக்குச் சென்று (அங்கு காவல் காப்பீராக! மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்) உம்முடைய அலட்சியம் காரணமாக எதிரிகளின் சூழ்ச்சியால் நாங்கள் ஏமாற்றப்பட்டு விடக் கூடாது” என்று எச்சரித்தார்கள். (ஹஜ்ரத் ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்) “மறுநாள் பொழுது விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்திற்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள். “உங்களுடைய குதிரை வீரரைப்பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா?” எனக் கேட்க, “யாரஸூலல்லாஹ்! எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை!” என ஸஹாபாக்கள் (ரலி) பதிலளித்தார்கள். பிறகு (ஃபஜ்ரு) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. தொழுகையின் போது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கவனம் அந்தக் கணவாயின் பக்கமே இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்து ஸலாம் கொடுத்தபின், “உங்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி! உங்களுடைய குதிரை வீரர் வந்துவிட்டார்” என்று சொன்னார்கள். நாங்கள் அக்கணவாயிலுள்ள மரங்களுக்கிடையே பார்த்த போது, ஹஜ்ரத் அனஸ்இப்னு அபீமர்ஸத் (ரலி) வந்து கொண்டிருந்தார். அவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்ன பின், “நான் (இங்கிருந்து) புறப்பட்டு, நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்ட கணவாயின் உயர்ந்த பகுதியை நடந்தே சென்று அடைந்தேன். (இரவு முழுக்க அங்கு நான் காவல் காத்தேன்) சுபுஹ் ஆனதும், நான் இரு கணவாய்களின் மீதும் ஏறிப்பார்த்தேன், யாரும் எனக்குத் தென்படவில்லை” என்று கூறினார். “இரவில் நீர் உமது வாகனத்திலிருந்து கீழே இறங்கினீரா?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள், “இல்லை!” தொழுகைக்கும், சுயதேவையை நிறைவேற்ற மட்டுமே கீழிறங்கினேன்” என்றார் அவர். நபி (ஸல்) அவர்கள், “நீர் (இன்று இரவு காவல் புரிந்து அல்லாஹுதஆலாவின் பேரருளால்) உம்மீது சொர்க்கத்தைக் கடமையாக்கிக் கொண்டீர். ஆகையால், (காவல் காத்த) இந்த அமலுக்குப் பிறகு நீர் வேறெந்த (நஃபிலான) அமலும் செய்யாவிட்டாலும் உமக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று சொன்னார்கள்.
(அபூதாவூத்)
١٣٢– عَنِ ابْنِ عَائِذٍؓ خَرَجَ رَسُولُ اللهِ ﷺ فِي جَنَازَةِ رَجُلٍ فَلَمَّا وُضِعَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: لاَ تُصَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللهِ ﷺ فَإِنَّهُ رَجُلٌ فَاجِرٌ فَالْتَفَتَ رَسُولُ اللهِ ﷺ إِلَي النَّاسِ فَقَالَ: هَلْ رَآهُ أَحَدٌ مِنْكُمْ عَلي عَمَلِ اْلإِسْلاَمِ، فَقَالَ رَجُلٌ: نَعَمْ يَارَسُولَ اللهِ، حَرَسَ لَيْلَةً فِي سَبِيلِ اللهِ، فَصَلَّي عَلَيْهِ رَسُولُ اللهِ ﷺ وَحَثَي التُّرَابَ عَلَيْهِ وَقَالَ: أَصْحَابُكَ يَظُنُّونَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ وَأَنَا أَشْهَدُ أَنَّكَ مِنْ أَهْلِ الْجَنَّةِ.
رواه البيهقي في شعب الايمان:٤ /٤٣
132. ஹஜ்ரத் இப்னு ஆயித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒருவருடைய ஜனாஸாத் தொழுகையை நடத்துவதற்காக வெளியே வந்தார்கள். ஜனாஸா வைக்கப்பட்டதும், ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள், “யாரஸூலல்லாஹ், தாங்கள் இவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தாதீர்கள், இவர் பாவி” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மக்களின் பக்கம் திரும்பி, “இஸ்லாமிய அமல்களில் ஏதேனும் ஒன்றை இவர் செய்ய உங்களில் எவரேனும் பார்த்திருக்கிறீர்களா?” என வினவினார்கள். “ஆம் யாரஸூலல்லாஹ், இவர் ஒரு நாள் இரவு அல்லாஹுதஆலாவின் பாதையில் காவல் புரிந்தார்” என்று ஒருவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள், மேலும், அவருடைய கப்ரில் மண்ணும் போட்டார்கள். அதற்குப் பிறகு (மய்யித்தை நோக்கியவாறு) “உமது தோழர்கள் உன்னை நரகவாதி என்று எண்ணுகிறார்கள், நீ சொர்க்கவாசி என்பதற்கு நான் சாட்சி சொல்லுகிறேன்” என்று சொன்னார்கள்.
(பைஹகீ)
١٣٣– حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُمْهَانَؒ قَالَ: سَاَلْتُ سَفِينَةَ عَنِ اسْمِهِ، فَقَالَ: إِنِّي مُخْبِرُكَ بِاسْمِي، سَمَّانِي رَسُولُ اللهِ ﷺ سَفِينَةَ، قُلْتُ: لِمَ سَمَّاكَ سَفِينَةَ؟ قَالَ: خَرَجَ وَمَعَهُ أَصْحَابُهُ، فَثَقُلَ عَلَيْهِمْ مَتَاعُهُمْ فَقَالَ: اُبْسُطْ كِسَاءَكَ فَبَسَطْتُهُ فَجَعَلَ فِيهِ مَتَاعَهُمْ، ثُمَّ حَمَّلَهُ عَلَيَّ فَقَالَ: اِحْمِلْ مَا أَنْتَ إِلاَّ سَفِينَةً قَالَ: فَلَوْ حَمَلْتُ يَوْمَئِذٍ وِقْرَ بَعِيرٍ أَوْ بَعِيرَيْنِ أَوْ خَمْسَةٍ أَوْ سِتَّةٍ، مَا ثَقُلَ عَلَيَّ.
حلية الاولياء:١/ ٣٦٩، وذكره في الاصابة بنحوه:٢ /٢٨٥
133. ஹஜ்ரத் ஸஈதுப்னு ஜும்ஹான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “நான் ஹஜ்ரத் ஸஃபீனா (ரலி) அவர்களிடம், அவர்களின் பெயரைப் பற்றி (இப்பெயர் யார் வைத்தது? என்று) வினவினேன். “எனக்கு பெயர் வைக்கப்பட்ட காரணத்தை நான் உமக்குச் சொல்கிறேன், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தான் எனக்கு “ஸஃபீனா” என்று பெயர் வைத்தார்கள்” என்று சொன்னார். நான் அவரிடம், “தங்களுக்கு ஏன் ஸஃபீனா என்று பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டேன், அவர் கூறினார், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒரு முறை பிரயாணம் செய்தபோது, அன்னாருடன் ஸஹாபாக்களும் (ரலி) இருந்தனர். அவர்களுடைய சாமான்கள் அவர்களுக்குப் பெரும் சுமையாக இருந்ததால், நபி (ஸல்) அவர்கள் என்னிடம், உமது போர்வையை விரியும்” என்று சொல்ல, நான் விரித்தேன். நபியவர்கள் ஸஹாபாக்களுடைய சாமான்களை அந்தப் போர்வையில் வைத்துக் கட்டி என் மீது தூக்கி வைத்தார்கள். பிறகு “இதைச் சுமந்துவாரும், நீர் ஸஃபீனா (கப்பலே) தான்” என்று சொன்னார்கள். “அன்றைய தினம் ஒன்றிரண்டு என்ன? ஐந்து அல்லது ஆறு ஒட்டகங்களின் சுமைகளை நான் சுமந்திருந்தாலும், அது எனக்குப் பாரமாக இருந்திருக்காது” என்று ஹஜ்ரத் ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(ஹில்யா, இஸாபா)
١٣٤– عَنْ أَحْمَرَ مَوْلي أُمِّ سَلَمَةَؓ قَالَ: كُنَّا فِي غَزَاةٍ فَجَعَلْتُ أُعَبِّرُ النَّاسَ فِي وَادٍ أَوْ نَهْرٍ فَقَالَ لِيَ النَّبِيُّ ﷺ: مَا كُنْتَ فِي هذَا الْيَوْمِ إِلاَّ سَفِينَةً.
الاصابة:١ /٢٣
134. ஹஜ்ரத் உம்முஸலமா (ரலி) அவர்களால் உரிமைவிடப்பட்ட அடிமை ஹஜ்ரத் அஹ்மர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் ஒரு யுத்தத்தில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் இருந்தோம், (ஒரு ஓடையை அல்லது ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது) அப்பொழுது மக்கள் ஓடையை அல்லது ஆற்றைக் கடக்க உதவியாக இருந்தேன். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து “இன்றைய தினம் நீர் கப்பலே தவிர வேறில்லை” என்று கூறினார்கள்.
(இஸாபா)
١٣٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍؓ قَالَ: كُنَّا يَوْمَ بَدْرٍ كُلُّ ثَلاَثَةٍ عَلَي بَعِيرٍ قَالَ: فَكَانَ أَبُو لُبَابَةَ وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ زَمِيلَيْ رَسُولِ اللهِ ﷺ قَالَ: فَكَانَتْ إِذَا جَاءَتْ عُقْبَةُ رَسُولِ اللهِ ﷺ قَالاَ: نَحْنُ نَمْشِي عَنْكَ، قَالَ: مَا أَنْتُمَا بِأَقْوَي مِنِّيْ وَمَا أَنَا بِأَغْنَي عَنِ اْلاَجْرِ مِنْكُمَا.
رواه البغوي في شرح السنة (اسناده حسن):١١ /٣٥
135. ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “பத்ருப் போரின் போது எங்களில் ஒவ்வொரு மூன்று நபர்களுக்கும் ஓர் ஒட்டகம் வீதம் இருந்தது, அதில் நாங்கள் மாறி மாறிப் பயணம் செய்வோம். ஹஜ்ரத் அபூலுபாபா, ஹஜ்ரத் அலீ இப்னு அபீதாலீப் (ரலி) ஆகிய இருவரும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடைய ஒட்டகத்தில் பயணக் கூட்டாளிகளாக இருந்தனர்”. ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் முறை வரும்போது ஹஜ்ரத் அபூலுபாபா, ஹஜ்ரத் அலீ (ரலி) ஆகிய இருவரும், “(தாங்கள் ஒட்டகத்திலேயே தொடர்ந்து பயணம் செய்யுங்கள்) தங்களுக்குப் பகரமாக நாங்கள் நடந்து வருகிறோம்” என்று கூறுவார்கள். “நீங்கள் இருவரும் என்னைவிட பலசாலிகளும் அல்லர், நன்மை, கூலி பெற நான் உங்களை விடத் தேவை குறைந்தவனும் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வார்கள்.
(ஷரஹுஸ்ஸுன்னா)
١٣٦– عَنْ سَهْلِ بْنِ سَعْدٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: سَيِّدُ الْقَوْمِ فِي السَّفَرِ خَادِمُهُمْ فَمَنْ سَبَقَهُمْ بِخِدْمَةٍ لَمْ يَسْبِقُوهُ بِعَمَلٍ إِلاَّ الشَّهَادَةُ.
رواه البيهقي في شعب الايمان:٦ /٣٣٤
136. “ஒரு பிரயாணக் குழுவின் (ஜமாஅத்) தலைவர் அக்குழுவின் ஊழியர், எவர் சேவை செய்வதில் தன் தோழர்களை விட முந்திவிட்டாரோ, அவருடைய தோழர்களால் உயிர்த்தியாக(ஷஹாத)த்தைத் தவிர வேறு எந்த அமலைக் கொண்டும் அவரை முந்த முடியாது!” எல்லாவற்றிலும் பெரிய அமல் ஷஹாதத் (வீரமரணம் அடைதல்), அதற்குப் பிறகு கித்மத் (சேவை செய்தல்)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
١٣٧– عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْجَمَاعَةُ رَحْمَةٌ وَالْفُرْقَةُ عَذَابٌ.
(وهو بعض الحديث) رواه عبد الله بن احمد والبزار والطبراني ورجالهم ثقات، مجمع الزوائد:٥/٩٢
137. “ஜமாஅத் (துடன் சேர்ந்து இருப்பது) ரஹ்மத், ஜமாஅத்தைவிட்டுத் தனித்துவிடுவது வேதனை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٣٨– عَنِ ابْنِ عُمَرَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي الْوَحْدَةِ مَا أَعْلَمُ مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ.
رواه البخاري، باب السير وحده، رقم: ٢٩٩٨
138. “தனித்துப் பயணம் செய்வதால் ஏற்படுகின்ற (உலக மற்றும் மார்க்க ரீதியான) விளைவுகளை, நான் அறிந்திருப்பதைப் போன்று மக்கள் அறிந்து கொண்டால், எவரும் தன்னந்தனியே இரவில் பயணம் செய்யத் துணியமாட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٣٩– عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: عَلَيْكُمْ بِالدُّلْجَةِ، فَإِنَّ اْلاَرْضَ تُطْوَي بِاللَّيْلِ.
رواه ابو داؤد، باب في الدلجة، رقم:٢٥٧١
139. “நீங்கள் பயணம் மேற்கொண்டால் அவசியம் இரவிலும் சிறிது பயணம் செய்யுங்கள், ஏனெனில், இரவு வேளையில் பூமி சுருட்டப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- பயணத்திற்காக வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டால், பகலில் பயணம் செய்வதை மட்டும் போதுமாக்கிக் கொள்ளாமல் இரவிலும் சிறிது நேரம் பயணம் செய்யுங்கள். ஏனெனில், இரவு நேரத்தில் பகலைப் போன்று தடைகள் இருப்பதில்லை, ஆகையால், பயணம் எளிதில் முடிவடைகிறது. இந்தக் கருத்தையே “பூமி சுருட்டப்பட்டு விடுகிறது” என்ற வாசகம் குறிப்பிடுகிறது.
(மளாஹிருல்ஹக்)
١٤٠– عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: اَلرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلاَثَةُ رَكْبٌ.
رواه الترمذي وقال: حديث عبد الله بن عمرو احسن، باب ما جاء في كراهية ان يسافر وحده، رقم: ١٦٧٤
140. “ஒரு பயணி ஒரு ஷைத்தான், இரு பயணிகள் இரு ஷைத்தான்கள், மூன்று பயணிகள் ஜமாஅத்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- பரிசுத்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட சவாரி என்பதன் பொருள் பயணி, தனியாக ஒருவர் அல்லது இருவர் பயணம் செய்தால், அவர்களை ஷைத்தானால் எளிதில் வழி கெடுத்துவிட முடியும். இதைத் தெளிவுபடுத்தவே தனியாக, இருவராகப் பயணம் செய்வோரை ஷைத்தான் என்று கூறினார்கள். எனவே, பயணத்தில் குறைந்தது மூன்று பேராவது இருக்கவேண்டியது அவசியம். இதனால் இவர்கள் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கப்படுவார்கள். அத்துடன் ஜமாஅத்தாகத் தொழுவதிலும் மற்ற இதர காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(மளாஹிர்ஹக்)
١٤١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلشَّيْطَانُ يَهُمُّ بِالْوَاحِدِ وَاْلاِثْنَيْنِ فَإِذَا كَانُوا ثَلاَثَةً لَمْ يَهُمَّ بِهِمْ.
رواه البزار وفيه عبد الرحمن بن ابي الزناد وهو ضعيف وقد وثق، مجمع الزوائد: ٣ /٤٩١
141. “ஷைத்தான் ஒருவருக்கு, இருவருக்கு தீங்கு இழைக்க நினைக்கிறான், (நஷ்டம் விளைவிக்க முயற்சிக்கிறான்), ஆனால், மூன்று பேராக ஆகிவிட்டால் அவர்களுடன் தீங்கிழைக்க நினைப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٤٢– عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اِثْنَانِ خَيْرٌ مِنْ وَاحِدٍ وَثَلاَثٌ خَيْرٌ مِنِ اثْنَيْنِ وَأَرْبَعَةٌ خَيْرٌ مِنْ ثَلاَثَةٍ فَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ فَإِنَّ اللهَ لَنْ يَجْمَعَ أُمَّتِي إِلاَّ عَلي هُدًي.
رواه احمد:٥/١٤٥
142. “ஒருவரைவிட இருவர் சிறந்தவர்கள், இருவரைவிட மூவர் சிறந்தவர்கள். மூவரைவிட நால்வர் சிறந்தவர்கள். எனவே, நீங்கள் ஜமாஅத்துடன் (கூட்டாக) சேர்ந்து இருப்பதைக் கடைப்பிடித்துவாருங்கள். ஏனெனில், அல்லாஹுதஆலா எனது சமுதாயத்தை நேர்வழியின் மீதே ஒன்றிணைப்பான்” (முழு சமுதாயமும் எப்பொழுதும் வழிகேட்டில் ஒன்று சேர முடியாது. ஆகையால், ஜமாஅத்துடன் சேர்ந்திருப்பவர் வழிகேட்டை விட்டும் பாதுகாக்கப்படுவார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٤٣– عَنْ عَرْفَجَةَ بْنِ شُرَيْحِ نِ اْلاَشْجَعِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: فَإِنَّ يَدَ اللهِ عَلَي الْجَمَاعَةِ، فَإِنَّ الشَّيْطَانَ مَعَ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ يَرْكُضُ.
(وهو بعض الحديث) رواه النسائي، باب قتل من فارق الجماعة…، رقم:٤٠٢٥
143. “அல்லாஹுதஆலாவின் கை ஜமாஅத்தின் மீது இருக்கிறது, (அல்லாஹுதஆலாவுடைய தனிப்பட்ட உதவி ஜமாஅத்துடன் உள்ளது). ஆகையால், யார் ஜமாஅத்தைவிட்டுத் தனித்துவிட்டாரோ அவருடன் ஷைத்தான் சேர்ந்துவிடுகிறான், (தவறான செயல்களுக்கு) அவரைத் தூண்டிக் கொண்டிருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அர்ஃபஜத்துப்னு ஷுரைஹினில் அஷ்ஜஇய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
١٤٤– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ قَالَ: كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يَتَخَلّفُ فِي الْمَسِيْرِ فَيُزْجِي الضَّعِيْفَ وَيُرْدِفُ وَيَدْعُوْ لَهُمْ.
رواه ابو داؤد، باب لزوم الساقة، رقم:٢٦٣٩
144. “(பணிவு, பிறருக்கு உதவுவது, கண்காணிப்பது போன்ற காரியங்களுக்காக) நபி (ஸல்) அவர்கள் பயணக் கூட்டாளிகளுக்குப் பின்னால் செல்வார்கள். அச்சமயம் பலவீனமானவர்களின் வாகனத்தைப் பின் தொடர்ந்து வேகமாக இயக்குவார், நடந்து செல்பவரைத் தமது வாகனத்திற்குப் பின்னால் ஏற்றிக்கொள்வார்கள் (பயணக் கூட்டத்தார்களுக்காக) துஆச் செய்வார்கள்” என்று ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٤٥– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا خَرَجَ ثَلاَثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ.
رواه ابو داؤد، باب في القوم يسافرون…، رقم:٢٦٠٨
145. “மூன்று நபர்கள் பயணம் செய்தால் அவர்களில் ஒருவரை அமீராக நியமித்துக்கொள்ளுங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٤٦– عَنْ أَبِي مُوسَيؓ قَالَ: دَخَلْتُ عَلَي النَّبِيِّ ﷺ أَنَا وَرَجُلاَنِ مِنْ بَنِي عَمِّي، فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ: يَا رَسُولَ اللهِ ﷺ أَمِّرْنَا عَلي بَعْضِ مَا وَلاَّكَ اللهُ ، وَقَالَ اْلآخَرُ مِثْلَ ذلِكَ، فَقَالَ: إِنَّا وَاللهِ لاَ نُوَلِّي عَلي هذَا الْعَمَلِ أَحَدًا سَأَلَهُ، وَلاَ أَحَدًا حَرِصَ عَلَيْهِ.
رواه مسلم، باب النهي عن طلب الامارة والحرص عليها، رقم:٤٧١٧
146. ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நானும் என் சிறிய தந்தையின் மக்கள் இருவரும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்குச் சென்றோம். அவர்களில் ஒருவர் “யாரஸூலல்லாஹ், எந்தப் பகுதிகளின் மீது தங்களுக்கு ஆட்சி செய்யும் பொறுப்பை அல்லாஹுதஆலா கொடுத்துள்ளானோ அவற்றில் ஏதேனுமொரு பகுதிக்கு எங்களை அமீராக நியமியுங்கள்” என்று கூறினார், மற்றவரும் இதேபோன்று தனது ஆசையை வெளிப்படுத்தினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹுதஆலாவின் மீது சத்தியம்! யார் பொறுப்பை விரும்பிக் கேட்கிறாரோ அல்லது அதன் மீது ஆசைகொள்கிறாரோ அத்தகையவரை இக்காரியங்களில் பொறுப்பாளியாக நாம் ஆக்கமாட்டோம்” என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லிம்)
١٤٧– عَنْ حُذَيْفَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ فَارَقَ الْجَمَاعَةَ وَاسْتَذَلَّ اْلإِمَارَةَ لَقِيَ اللهَ وَلاَ وَجْهَ لَهُ عِنْدَهُ.
رواه احمد ورجاله ثقات، مجمع الزوائد:٥/١٠٤
147. “எவன் முஸ்லிம்களுடைய ஜமாஅத்தைவிட்டுப் பிரிந்து, தலைமைப் பதவியை கேவலமாகக் கருதினானோ, அவனுக்கு அல்லாஹுதஆலாவிடம் எந்த அந்தஸ்தும் இல்லாத நிலையில் (அல்லாஹுதஆலா அவனை கேவலமாகக் கருதிய நிலையில்) அல்லாஹுதஆலாவைச் சந்திப்பான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٤٨– عَنْ أَنَسٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِنَّ اللهَ سَائِلٌ كُلَّ رَاعٍ عَمَّا اسْتَرْعَاهُ أَحَفِظَ أَمْ ضَيَّعَ.
رواه ابن حبان (واسناده صحيح علي شرطهما):١٠/٣٤٤
148. “ஒவ்வொரு கண்காணிப்பாளரிடமும் அவன் தன் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றினாரா? அல்லது அதை வீணாக்கினாரா? (அப்பொறுப்பை முழுமையாகப் பூர்த்தி செய்தாரா?, இல்லையா?) என்று நிச்சயமாக அல்லாஹுதஆலா வினவுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுஹிப்பான்)
١٤٩– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، اَلْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ.
رواه البخاري، باب الجمعة في القري والمدن. رقم:٨٩٣
149. “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள், உங்களில் ஒவ்வொருவரிடமும் (அவருக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி) விசாரிக்கப்படும், அரசன் பொறுப்பாளன், அவரிடம் அவரது குடிமக்களைப்பற்றி விசாரிக்கப்படும். குடும்பத் தலைவன் தனது வீட்டாருக்குப் பொறுப்பாளன், அவரிடம் அவரது வீட்டாரைப்பற்றி விசாரிக்கப்படும். பெண் தன் கணவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாளி அவளிடம் அவ்வீட்டில் வசிக்கின்ற குழந்தைகள் போன்றோரைப் பற்றி விசாரிக்கப்படும். வேலைக்காரர் அவரது முதலாளியுடைய பொருளுக்குப் பொறுப்பாளர், அவரிடம் அவருடைய முதலாளியின் உடமைகள், செல்வங்களைப் பற்றி விசாரிக்கப்படும், மகன் அவனுடைய தந்தையுடைய பொருளுக்குப் பொறுப்பாளன், அவனிடம் அவனது தந்தையுடைய பொருளைப்பற்றி விசாரிக்கப்படும். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், ஒவ்வொருவரிடமும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் பற்றி விசாரிக்கப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(புகாரி)
١٥٠– عَنِ ابْنِ عُمَرَؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: لاَ يَسْتَرْعِي اللهُ تَبَارَكَ وَتَعَالَي عَبْدًا رَعِيَّةً قَلَّتْ أَوْ كَثُرَتْ إِلاَّ سَأَلَهُ اللهُ تَبَارَكَ وَتَعَالَي عَنْهَا يَوْمَ الْقِيَامَةِ أَقَامَ فِيهِمْ أَمْرَ اللهِ تَبَارَكَ وَتَعَالَي أَمْ أَضَاعَهُ حَتَّي يَسْأَلَهُ عَنْ أَهْلِ بَيْتِهِ خَاصَّةً.
رواه احمد:٢ /١٥
150. “ஒருவரை அல்லாஹுதஆலா பொறுப்பாளியாக ஆக்கினால், அவருக்குக் கீழ் உள்ளவர்கள் குறைவாக இருந்தாலும் சரி அல்லது அதிகமாக இருந்தாலும் சரி! அவருடைய அந்தப் பொறுப்பில் அல்லாஹுதஆலாவுடைய கட்டளையைப் பாதுகாத்தாரா? அல்லது வீணாக்கினாரா? என்று கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா நிச்சயம் விசாரிப்பான், குறிப்பாக, அவருடைய வீட்டாரைப் பற்றி அவரிடம் விசாரிப்பான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٥١– عَنْ أَبِي ذَرٍّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: يأَ أَبَا ذَرٍّ! إِنِّي أَرَاكَ ضَعِيفاً، وَإِنِّيْ أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي، لاَ تَأَمَّرَنَّ عَلَي اثـْنَيْنِ وَلاَ تَوَلَّيَنَّ مَالَ يَتِيمٍ.
رواه مسلم، باب كراهة الامارة بغير ضرورة، رقم:٤٧٢٠
151. ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என்னிடம் (அன்பான முறையில் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களிடம்), “அபூதரே, நான் உம்மை பலவீனமானவராகக் கருதுகிறேன். (அமீருடைய பொறுப்பை நிறைவேற்ற உம்மால் இயலாது எனக் கருதுகிறேன்) எனக்கு எதை விரும்புகிறேனோ அதையே உமக்கு நான் விரும்புகிறேன். நீர் இருவருக்குக் கூட அமீராகிவிடாதீர், அனாதையுடைய பொருளுக்கு பொறுப்பாளியாவதையும் ஏற்காதீர்” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- “நான் உம்மைப்போன்று பலவீனமானவராக இருந்திருந்தால் ஒரு போதும் இருவருக்குக் கூட அமீராக இருக்கமாட்டேன்” என்பது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களிடம் கூறியதின் கருத்து.
١٥٢– عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قُلْتُ: يَارَسُولَ اللهِﷺ أَلاَ تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَي مَنْكِبِي، ثُمَّ قَالَ: يَا أَبَا ذَرٍّ إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةٌ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلاَّ مَنْ أَخَذَهَا بِحَقِّهَا وَأَدَّي الَّذِي عَلَيْهِ فِيهَا.
رواه مسلم، باب كراهة الامارة بغير ضرورة، رقم: ٤٧١٩
152. நான் நபி (ஸல்) அவர்களிடம் “யாரஸூலல்லாஹ், தாங்கள் ஏன் என்னை அமீராக நியமிப்பதில்லை?” என வினவினேன், நபி (ஸல்) அவர்கள் தமது கையால் என்னுடைய தோள் மீது தட்டிக் கொடுத்தவாறு, “அபூதர்ரே, நீர் பலவீனமானவர்!” அமீருடைய பொறுப்பு அமானிதமாகும். (இதில் அடியார்களுக்குரிய கடமைகள் சம்பந்தப்பட்டுள்ளன) மேலும், (அமீருடைய பொறுப்பு) கியாமத் நாளன்று இழிவுக்கும், கைசேதத்திற்கும் காரணமாக ஆகிவிடும். எவர் இந்தப் பொறுப்பை சரியான முறையில் ஏற்று, அதற்குரிய முறையில் நிறைவேற்றினாலே தவிர, (பிறகு இந்த அமீருடைய பொறுப்பு) கியாமத் நாளில் இழிவிற்கும், கேவலத்திற்கும் காரணமாக ஆகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٥٣– عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ سَمُرَةَؓ قَالَ: قَالَ (لِيَ۞) النَّبِيُّ ﷺ: يَا عَبْدَ الرَّحْمنِ بْنَ سَمُرَةَ: لاَ تَسْأَلِ اْلإِمَارَةَ فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْئَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْئَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا.
(الحديث) رواه البخاري، باب قول الله تبارك وتعالي لا يؤاخذكم الله….، رقم:٦٦٢٢
153. “அதிகாரத்தைக் கேட்டுப் பெறாதீர், நீர் கேட்டு உமக்கு அந்த அதிகாரம் கிடைக்குமானால் உம்மை பதவியிடமே ஒப்படைக்கப்பட்டுவிடும். (பிறகு அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து உமக்கு உதவியோ வழிகாட்டலோ கிடைக்காது) நீர் கேட்காமலேயே உம்மை அமீராக ஆக்கப்பட்டால் அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து அப்பதவியில் உமக்கு உதவி செய்யப்படும்”, என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٥٤– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَي اْلإِمَارَةِ وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ، فَنِعْمَ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الْفَاطِمَةُ.
رواه البخاري، باب ما يكره من الحرص علي الامارة، رقم: ٧١٤٨
154. “ஒரு காலம் வரும், அக்காலத்தில் நீங்கள் அமீர் ஆவதற்குப் பேராசைப் படுவீர்கள். ஆனால், அதிகாரம் உங்களுடைய கைசேதத்திற்குக் காரணமாக ஆகிவிடும், அதிகாரம் என்பது பாலூட்டும் பெண்ணைப் போன்றது. ஆரம்பத்தில் மிகவும் சுகமாக இருக்கும். பால் மறக்கடிக்கும்போது அதுவே மிகுந்த சிரமமாக ஆகிவிடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- அதிகாரம் ஒருவருக்குக் கிடைக்கும்போது, பாலூட்டும் பெண், குழந்தைக்கு நல்லவளாக ஆவது போல் நல்லதாகத் தெரிகிறது. அதிகாரம் கைவிட்டுப்போகும் போது, பாலை மறக்கடிப்பவள் குழந்தைக்கு வெறுப்புக்குரியவளாக ஆவதுபோல் அது வெறுப்புக்குரியதாக ஆகிவிடும் என்பது இந்த ஹதீஸின் கடைசி வாசகத்தின் கருத்தாகும்.
١٥٥– عَنْ عَوْفِ بْنِ مَالِكٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِنْ شِئْتُمْ أَنْبَأْتُكُمْ عَنِ اْلإِمَارَةِ، وَمَا هِيَ؟ فَنَادَيْتُ بِأَعْلَي صَوْتِي ثَلاَثَ مَرَّاتٍ: وَمَا هِيَ يَارَسُولَ اللهِ؟ قَالَ: أَوَّلُهَا مَلاَمَةٌ، وَثانِيهَا نَدَامَةٌ، وَثَالِثُهَا عَذَابٌ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ مَنْ عَدَلَ، وَكَيْفَ يَعْدِلُ مَعَ قَرَابَتِهِ؟
رواه البزار والطبراني في الكبير والاوسط باختصار ورجال الكبير رجال الصحيح، مجمع الزوائد:٥ /٣٦٣
155. ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நீர் விரும்பினால் இந்தத் தலைமைத் தனத்தின் அந்தரங்கத்தைப் பற்றி கூறுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யாரஸூலல்லாஹ், அதனுடைய அந்தரங்கம் என்ன?” என்று நான் மூன்று முறை உரத்த குரலில் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது, “இதனுடைய ஆரம்ப நிலை பழிப்பு, இரண்டாம் நிலை கைசேதம், மூன்றாம் நிலை கியாமத் நாளில் வேதனை, ஆயினும், நீதமாக நடந்து கொண்டவரைத் தவிர! எவர் நீதமாக நடந்தாரோ அவர் வேதனையை விட்டும், பாதுகாக்கப்படுவார், (என்றாலும்) தனக்கு நெருக்கமான உறவினர் போன்றவர்களுடைய காரியங்களில் மனிதன் எப்படி நீதி, நேர்மையுடன் இருக்க முடியும்? நீதி, நேர்மையை அவர் விரும்பினாலும் உறவினர்களின் நேசம் நீதி, நேர்மையுடன் செயல்படவிடாது. மேலும், உறவினர்களின் பக்கம் சாயவேண்டிய நிலை உண்டாகும்.
(பஸ்ஸார், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- ஒருவர் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் அவருக்கு நாலாபுறத்திலிருந்தும், “அவர் அப்படிச் செய்துவிட்டார், இப்படிச் செய்துவிட்டார்‘ என்று பழிச் சொற்கள் அவர் மீது சுமத்தப்படுகின்றன. அதற்குப் பிறகு அவர் மக்களுடைய பழிப்புக்கு ஆளாகி, நான் ஏன் இப்பதவியை ஏற்றேன் என்று கைசேதப்படுவார். பிறகு, இதன் இறுதிநிலை, நீதமாக நடக்காததால் கியாமத் நாளில் வேதனைக்கு காரணமாக ஆகிவிடும். ஆக, உலகிலும் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகிறான், மறுமையிலும் கடினமான கேள்வி கணக்குக்கு ஆளாகிறான்.
١٥٦– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنِ اسْتَعْمَلَ رَجُلاً مِنْ عِصَابَةٍ وَفِي تِلْكَ الْعِصَابَةِ مَنْ هُوَ أَرْضَي لِلّهِ مِنْهُ فَقَدْ خَانَ اللهَ وَخَانَ رَسُولَهُ وَخَانَ الْمُؤْمِنِينَ.
رواه الحاكم في المستدرك وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه :٤ /٩٢
156. “அல்லாஹ்வை அதிகம் திருப்திபடுத்தக்கூடிய நபர் ஒருவர் இருக்க, வேறொருவரை எவர் அமீராக நியமிக்கிறாரோ அவர் அல்லாஹுதஆலாவுக்கும் மோசம் செய்துவிட்டார், அவனுடைய ரஸூலுக்கும் மோசம் செய்து விட்டார், முஃமின்களுக்கும் மோசம் செய்துவிட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
தெளிவுரை:- சிறந்தவர் ஒருவர் இருந்தும் தீனுடைய ஏதேனுமொரு நலனைக் கருதி இன்னொருவரை அமீராக நியமிப்பது, இந்த எச்சரிக்கையில் கட்டுப்படாது. ஏனெனில், ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒரு குழுவை அனுப்பிவைக்கும் போது, அதற்கு அமீராக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நியமித்து, “இவர் உங்களில் அதிக சிறப்பிற்குரியவர் அல்ல, ஆயினும், இவர் பசி, தாகத்தை மிகவும் பொறுத்துக்கொள்பவர்” என்று சொன்னார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٥٧– عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ ثُمَّ لاَ يَجْهَدُ لَهُمْ وَيَنْصَحُ، إِلاَّ لَمْ يَدْخُلْ مَعَهُمُ الْجَنَّةَ.
رواه مسلم، باب فضيلة الامير العادل، رقم:٤٧٣١
157. “ஒருவர் முஸ்லிம்களின் காரியங்களுக்குப் பொறுப்பாளியாக நியமனமாகி முஸ்லிம்களுடைய நன்மைகளுக்காக முயற்சிக்கவில்லையென்றால், அவர் முஸ்லிம்களுடன் சுவர்க்கத்தில் நுழைய முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٥٨– عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنَ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ إِلاَّ حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ.
رواه البخاري، باب من استرعي رعية فلم ينصح، رقم:٧١٥١
158. “எவரொருவர் முஸ்லிம்களுக்கு பொறுப்பாளியாக நியமனமாகி, பிறகு அவர்களை ஏமாற்றிய நிலையிலேயே அவர் இறந்துவிட்டால் அல்லாஹுதஆலா அவர் மீது சொர்க்கத்தை ஹராமாக்கி விடுவான்” எனறு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٥٩– عَنْ أَبِي مَرْيَمَ اْلاَزْدِيِّؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ وَلاَّهُ اللهُ شَيْئاً مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَبَ دُونَ حَاجَتِهِمْ وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمُ احْتَجَبَ اللهُ عَنْهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ وَفَقْرِهِ.
رواه ابوداؤد، باب فيما يلزم الامام من امر الرعية….، رقم:٢٩٤٨
159. “அல்லாஹுதஆலா எவரையேனும் முஸ்லிம்களின் காரியங்களுக்குப் பொறுப்பாளியாக்கி, அவர் முஸ்லிம்களின் சிரமங்கள், தேவைகள், அவர்களுடைய வறுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் (அவர்களுடைய தேவைகளைப் நிறைவேற்றாமலும், அவர்களுடைய வறுமையை ஒழிக்க முயற்சிக்காமலும்) இருந்தால் கியாமத் நாளில் அவனுடைய சிரமம், தேவை மற்றும் ஏழ்மையை விட்டும் அல்லாஹுதஆலாவும் முகம் திருப்பிக் கொள்வான்” (கியாமத் நாளில் அவனுடைய தேவைகள், சிரமங்களை நீக்கமாட்டான்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூ மர்யம் அஸ்தீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٦٠– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا مِنْ أَحَدٍ يُؤَمَّرُ عَلَي عَشَرَةٍ فَصَاعِدًا لاَ يُقْسِطُ فِيهِمْ إِلاَّ جَاءَ يَوْمَ الْقِيمَةِ فِي اْلاَصْفَادِ وَاْلاَغْلاَلِ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٤ /٨٩
160. “பத்து, அல்லது அதைவிட அதிகமான நபர்களுக்கு ஒருவரை அமீராக நியமிக்கப்பட்டு, அவர் அவர்களுடன் நீதி, நேர்மையோடு நடந்து கொள்ளவில்லையென்றால் கியாமத் நாளன்று அவனுடைய கையிலும், கழுத்திலும் விலங்கிடப்பட்ட நிலையில் வருவார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٦١– عَنْ أَبِي وَائِلٍؒ أَنَّ عُمَرَ اِسْتَعْمَلَ بِشْرَ بْنَ عَاصِمٍ عَلَي صَدَقَاتِ هَوَازِنَ فَتَخَلَّفَ بِشْرٌ فَلَقِيَهُ عُمَرُ، فَقَالَ: مَا خَلَّفَكَ، أَمَا لَنَا عَلَيْكَ سَمْعٌ وَطَاعَةٌ، قَالَ: بَلي! وَلكِنْ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ وُلِّيَ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ شَيْئاً أُتِيَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ حَتّي يُوقَفَ عَلي جَسْرِ جَهَنَّمَ.
(الحديث) اخرجه البخاري من طريق سويد، الاصابة:١/١٥٢
161. ஹஜ்ரத் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் பிஷ்ருப்னு ஆஸிம் (ரலி) அவர்களை ஹவாஸின் கோத்திரத்தாரின் ஸதகாப் பொருட்களை வசூல் செய்வதற்கு நியமித்தார்கள். ஆனால் ஹஜ்ரத் பிஷ்ர் (ரலி) அவர்கள் அங்கு செல்லவில்லை, ஹஜ்ரத உமர் (ரலி) அவர்கள் அவரைச் சந்தித்தார்கள். அவரிடம், “நீர் ஏன் செல்லவில்லை? எமக்கு வழிப்படுவது உன் மீது கடமையில்லையா?” எனக் கேட்டார்கள், “ஏன் இல்லை?, ஆயினும், ஒருவரை முஸ்லிம்களின் ஏதேனுமொரு வேலைக்குப் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டால், கியாமத் நாளன்று அவரைக் கொண்டு வந்து நரகத்துடைய பாலத்தின் மீது நிறுத்தப்படும், (பொறுப்பைச் சரியாக நிறைவேற்றியிருந்தால் தப்பிப்பார், இல்லையெனில் நரக நெருப்புதான் கிடைக்கும்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்!” என ஹஜ்ரத் பிஷ்ரு (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
(இஸாபா)
١٦٢– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ أَمِيرِ عَشَرَةٍ إِلاَّ يُؤْتَي بِهِ يَوْمَ الْقِيمَةِ مَغْلُولاً حَتَّي يَفُكَّهُ الْعَدْلُ أَوْ يُوبِقَهُ الْجَوْرُ.
رواه البزار والطبراني في الاوسط ورجال البزار رجال الصحيح ، مجمع الزوائد:٥/٣٧٠
162. “ஒவ்வொரு அமீரும், அவர் பத்து நபர்களுக்கு அமீராக இருந்தாலும் சரியே அவர்கள் அனைவரும் கியாமத் நாளன்று தமது கழுத்தில் விலங்கிடப்பட்ட நிலையில் கொண்டு வரப்படுவர். அவரை அந்த வளையத்திலிருந்து அவரது நீதி விடுவிக்கும், இல்லையெனில், அவரது அநீதி அவரை நாசமாக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٦٣– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: سَيَلِيكُمْ أُمَرَاءُ يُفْسِدُونَ وَمَا يُصْلِحُ اللهُ بِهِمْ أَكْثَرُ، فَمَنْ عَمِلَ مِنْهُمْ بِطَاعَةِ اللهِ فَلَهُمُ اْلاَجْرُ وَعَلَيْكُمُ الشُّكْرُ، وَمَنْ عَمِلَ مِنْهُمْ بِمَعْصِيَةِ اللهِ فَعَلَيْهِمُ الْوِزْرُ وَعَلَيْكُمُ الصَّبْرُ.
رواه البيهقي:٦ /١٥
163. “உங்களில் சில அமீர்கள் குழப்பத்தையும், சீரழிவையும் உண்டாக்குவார்கள். (எனினும்) அல்லாஹுதஆலா அவர்கள் மூலம் செய்யும் சீர்திருத்தப் பணி அவர்களின் சீரழிவு விட அதிகமாக இருக்கும். எனவே, அந்த பணியை அமீர்களில் எவர் அல்லாஹுதஆலாவுக்கு வழிப்படும் காரியங்களில் ஈடுபடுகிறாரோ, அவருக்கு கூலி கிடைக்கும். அதற்காக நீங்கள் நன்றி செலுத்துவது அவசியமாகும். அதேபோல், அந்த அமீர்களில் எவர் அல்லாஹுதஆலாவுக்கு மாறு செய்யும் காரியங்களில் ஈடுபடுகிறாரோ, அதனுடைய தீங்கு அவருக்கே! நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
١٦٤– عَنْ عَائِشَةَؓ قَالَتْ: سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ ﷺ يَقُولُ فِي بَيْتِي هذَا: اَللّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئاً فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئاً فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ.
رواه مسلم، باب فضيلة الامير العادل…، رقم:٤٧٢٢
164. (اَللّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئاً فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئاً فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ) யாஅல்லாஹ், என்னுடைய உம்மத்தின் (உலக அல்லது மார்க்க சம்பந்தமான) காரியங்களில் ஏதேனுமொரு காரியத்திற்கு ஒருவர் பொறுப்பேற்று, பிறகு அவர் மக்களைச் சிரமத்தில் ஆழ்த்தினால், நீயும் அவரைச் சிரமத்தில் ஆழ்த்திவிடு! மேலும், எவர் எனது உம்மத்தின் காரியங்களுக்குப் பொறுப்பேற்று, மக்களுடன் மென்மையான முறையில் நடந்து கொண்டால் நீயும் அந்த மனிதருடன் மென்மையாக நடந்துகொள்” என்று என்னுடைய இந்த வீட்டில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் துஆ செய்யக் கேட்டுள்ளேன் என்பதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٦٥– عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍؓ وَكَثِيرِ بْنِ مُرَّةَؓ وَعَمْرِو بْنِ اْلاَسْوَدِؓ وَالْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَؓ وَأَبِيْ أُمَامَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ اْلاَمِيرَ إِذَا ابْتَغَي الرِّيبَةَ فِي النَّاسِ أَفْسَدَهُمْ.
رواه ابو داؤد، باب في التجسس، رقم:٤٨٨٩
165. “அமீர் மக்களிடத்தில் சந்தேகம், ஐயத்திற்குரிய காரியங்களைத் தேடினால், அவர் மக்களைக் கெடுக்கிறார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுபைரிப்னு நுஃபைர், ஹஜ்ரத் கஸீரிப்னு முர்ரா, ஹஜ்ரத் அம்ருப்னு அஸ்வத், ஹஜ்ரத் மிக்தாம் இப்னு மஃதீகரிப் மற்றும் ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- மக்களின் மீது அமீர் நல்லெண்ணம் கொள்ளாமல் அவர்களுடைய குறைகளைத் தேடிக்கொண்டும், தீய எண்ணம் கொண்டும் இருந்தால், மக்ககளிடம் குழப்பமும், பிரிவினையும் உண்டாக அவரே காரணமாகிவிடுகிறார். எனவே, அமீர் அவர்களுடைய குறைகளை மறைத்தும், அவர்களின் மீது நல்லெண்ணம் கொண்டும் இருக்கவேண்டும் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(பத்லுல் மஜ்ஹூத்)
١٦٦– عَنْ أُمِّ الْحُصَيْنِؓ قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ مُجَدَّعٌ أَسْوَدُ يَقُودُكُمْ بِكِتَابِ اللهِ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا.
رواه مسلم، باب وجوب طاعة الامراء …، رقم:٤٧٦٢
166. “காது, மூக்கு துண்டிக்கப்பட்ட கருத்த அடிமையை உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும், அவர் அல்லாஹுதஆலாவின் கட்டளைப்படி உங்களை நடத்திச் சென்றால் நீங்கள் அவருடைய சொல்லைக் கேளுங்கள் அவருக்கு வழிபடுங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٦٧– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اسْمَعُوا وَأَطِيعُوا، وَإِنِ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ.
رواه البخاري، باب السمع والطاعة للامام….، رقم:٧١٤٢
167. “கருத்த நிறமுடைய, காய்ந்த திராட்சைப் பழத்தைப் போன்ற சிறிய தலையுடைய அபிசீனிய நாட்டைச் சார்ந்த அடிமையை அமீராக உங்களுக்கு நியமிக்கப்பட்டாலும் சரியே! அமீருடைய சொல்லைக் கேட்டு அவருக்கு வழிப்பட்டு வாருங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٦٨– عَنْ وَائِلِ نِ الْحَضْرَمِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِسْمَعُوا وَأَطِيعُوا فَإِنَّمَا عَلَيْهِمْ مَا حُمِّلُوا وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ.
رواه مسلم، باب في طاعة الامراء وان منعوا الحقوق، رقم:٤٧٨٣
168. “நீங்கள் அமீர்களுடைய சொல்லைக் கேட்டு வழிபட்டுவாருங்கள், ஏனெனில், அவர்களுடைய பொறுப்புகள் பற்றி (நேர்மையாக நடந்தார்களா? என்று) அவர்களிடம் விசாரிக்கப்படும். உங்களுடைய பொறுப்புகள் பற்றி (அமீருக்கு வழிபட்டு நடந்தீர்களா? என்று) உங்களிடம் விசாரிக்கப்படும். எனவே, ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பை நிறைவேற்றுவதில் ஈடுபட வேண்டும், பிறர் நிறைவேற்றினாலும் சரி அல்லது நிறைவேற்றாவிட்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாயில் ஹள்ரமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٦٩– عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اعْبُدُوا اللهَ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئاً وَأَطِيعُوا مَنْ وَلاَّهُ اللهُ أَمْرَكُمْ وَلاَ تُنَازِعُوا اْلاَمْرَ أَهْلَهُ وَلَوْ كَانَ عَبْدًا أَسْوَدَ، وَعَلَيْكُمْ بِمَا تَعْرِفُونَ مِنْ سُنَّةِ نَبِيِّكُمْ وَالْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ،وَعَضُّوْا عَلَي نَوَاجِذِكُمْ بِالْحَقِّ.
رواه الحاكم وقال: هذا اسناد صحيح علي شرطهما جميعا ولا اعرف له علة ووافقه الذهبي:١ /٩٦
169. “அல்லாஹுதஆலாவை வணங்குங்கள், அவனுக்கு யாரையும் இணை ஆக்காதீர்கள், அல்லாஹுதஆலா உங்களுடைய காரியங்களுக்கு யாரைப் பொறுப்பாளியாக நியமித்துள்ளானோ அவருக்குக் கட்டுப்படுங்கள். அமீருடைய பொறுப்பைப் பற்றி அமீரிடம் சண்டையிடாதீர்கள்!, அவர் கருத்த அடிமையாக இருந்தாலும் சரியே!. மேலும் நீங்கள் உங்களுடைய நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்தையும், நேர்வழி பெற்ற குலபாயே ராஷிதீன்கள் (ரலி) அவர்களின் வழிமுறைகளையும் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், சத்தியத்தை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٧٠– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ يَرْضَي لَكُمْ ثَلاَثاً وَيَسْخَطُ لَكُمْ ثَلاَثاً، يَرْضَي لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئاً وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيعاً وَلاَ تَفَرَّقُوا وَأَنْ تَنَاصَحُوا مَنْ وَلاَّهُ اللهُ أَمْرَكُمْ وَيَسْخَطُ لَكُمْ قِيلَ وَقَالَ وَإِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ.
رواه احمد:٢ /٣٦٧
170. “அல்லாஹுதஆலா உங்களுடைய மூன்று காரியங்களை நேசிக்கிறான். மூன்று காரியங்களை வெறுக்கிறான். 1. நீங்கள் அல்லாஹுதஆலாவை வணங்குவதையும், அவனுக்கு யாரையும் இணையாக்காதிருப்பதையும், 2. (தனித்தனியாகிச்) சிதறிப் போகாமல் எல்லோரும் ஒருமித்து அல்லாஹுதஆலாவின் ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாகப் பிடித்துக் கொள்வதையும், 3. அல்லாஹுதஆலா உங்கள் மீது எவரை பொறுப்பாளியாக நியமித்துள்ளானோ அவருடன் மனத்தூய்மை, விசுவாசம், அவர் நலனை நாடுவதையும் அல்லாஹுதஆலா விரும்புகிறான். 1. நீங்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதையும், 2. பொருளை விரயம் செய்வதையும், 3. அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும் வெறுக்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٧١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَي اللهَ، وَمَنْ أَطَاعَ اْلإِمَامَ فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ عَصَي اْلإِمَامَ فَقَدْ عَصَانِي.
رواه ابن ماجه، باب طاعة الامام، رقم: ٢٨٥٩
171. “எவர் எனக்கு வழிப்பட்டாரோ அவர் அல்லாஹுதஆலாவுக்கு வழிப்பட்டார், எவர் எனக்கு மாறு செய்தாரோ அவர் அல்லாஹுதஆலாவுக்கு மாறு செய்துவிட்டார், எவர் முஸ்லிம்களின் தலைவருக்குக் வழிப்பட்டாரோ, அவர் எனக்கு வழிப்பட்டார், எவர் முஸ்லிம்களின் அமீருக்கு மாறு செய்தாரோ அவர் எனக்கு மாறுசெய்துவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
١٧٢– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ رَأَي مِنْ أَمِيرِهِ شَيْئاً يَكْرَهُهُ فَلْيَصْبِرْ، فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا فَمَاتَ، فَمِيتَةٌ جَاهِلِيَّةٌ.
رواه مسلم، باب وجوب ملازمة جماعة المسلمين….،رقم:٤٧٩٠
172. “எவரொருவர் தான் வெறுக்கும் செயலை தன் அமீர் செய்யக் கண்டால் அவர் பொறுமையை மேற்கொள்ளவும். ஏனெனில், எவர் முஸ்லிம்களுடைய ஜமாஅத்தைவிட்டு (கூட்டத்தைவிட்டும்) ஒரு சாண் அளவு விலகினாலும், (பிறகு தவ்பாச் செய்யாமல்) அதே நிலையில் இறந்து விட்டால் அவர் அறியாமைக் காலத்து மரணம் எய்தினார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- “அறியாமைக்காலத்து மரணம் எய்தினார்” என்பதன் பொருள் அறியாமைக் காலத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய தலைவருக்கும் கட்டுப்படமாட்டார்கள், தங்கள் வழிகாட்டியின் பேச்சையும் ஏற்கமாட்டார்கள்” என்பதாம்.
(நவவீ)
١٧٣– عَنْ عَلِيٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ طَاعَةَ فِي مَعْصِيَةِ اللهِ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ.
(وهو بعض الحديث) رواه ابو داؤد، باب في الطاعة، رقم:٢٦٢٥
173. “அல்லாஹுதஆலாவுக்கு மாறு செய்வதில் எவருக்கும் வழிப்படவேண்டாம், வழிப்படுதல் நல்ல காரியங்களுக்கு மட்டுமே!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٧٤– عَنِ ابْنِ عُمَرَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ عَلَي الْمَرْءِ الْمُسْلِمِ فِيمَا أَحَبَّ أَوْ كَرِهَ إِلاَّ أَنْ يُؤْمَرَ بِمَعْصِيَةٍ فَإِنْ أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ عَلَيْهِ وَلاَ طَاعَةَ.
رواه احمد،:٢/١٤٢
174. “அமீருக்கு வழிப்பட்டு நடப்பது முஸ்லிமின் மீது கடமையாகும், தன் மனம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி! ஆயினும், அல்லாஹுதஆலாவுக்கு மாறு செய்யக் கட்டளையிடப்பட்டால் வழிப்படக் கூடாது. எனவே, ஏதேனும் பாவம் செய்யக் கட்டளையிட்டால் அதைச் செவியேற்பதும், வழிப்படுதலும் கூடாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٧٥– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا سَافَرْتُمْ فَلْيَؤُمَّكُمْ أَقْرَأُكُمْ، وَإِنْ كَانَ أَصْغَرَكُمْ، وَإِذَا أَمَّكُمْ فَهُوَ أَمِيرُكُمْ.
رواه البزار واسناده حسن، مجمع الزوائد:٢ /٢٠٦
175. “நீங்கள் பயணம் செய்தால் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர் (மார்க்க சட்டத்தை அதிகம் தெரிந்தவர்) உங்களுக்கு இமாமாக ஆகவும். அவர் உங்கள் அனைவரிலும் சிறியவராக இருந்தாலும் சரியே! அவர் உங்களுக்கு இமாமாக ஆகிவிடுவாரானால் அவர்தான் உங்களுக்கு அமீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் குறிப்பான பண்பின் காரணமாக, ஒருவரை அவருடைய தோழர் அவரைவிட சிறந்தவராக இருந்தும், அமீராக நியமித்துள்ளார்கள் என்று வேறு சில அறிவிப்புகள் மூலம் தெரியவருகிறது, இதுபற்றி ஹதீஸ் எண்:156-ன் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
١٧٦– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ عَبَدَ اللهَ تَبَارَكَ وَتَعَالَي لاَ يُشْرِكُ بِهِ شَيْئاً فَأَقَامَ الصَّلاَةَ وَآتي الزَّكَاةَ وَسَمِعَ وَأَطَاعَ فَإِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَي يُدْخِلُهُ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ وَلَهَا ثَمَانِيَةُ أَبْوَابٍ وَمَنْ عَبَدَ اللهَ تَبَارَكَ وَتَعَالَي لاَ يُشْرِكُ بِهِ شَيْئاً وَأَقَامَ الصَّلاَةَ وَآتَي الزَّكَاةَ وَسَمِعَ وَعَصَي فَإِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَي مِنْ أَمْرِهِ بِالْخِيَارِ إِنْ شَاءَ رَحِمَهُ وَإِنْ شَاءَ عَذَّبَهُ.
رواه احمد والطبراني ورجال احمد ثقات، مجمع الزوائد:٥ /٣٨٩
176. “எவர் அல்லாஹுதஆலாவுக்கு யாரையும் இணை ஆக்காத நிலையில் அவனை வணங்கி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து, அமீருடைய சொல்லைக்கேட்டு அவருக்கு வழிப்பட்டு நடந்தாரோ, அவரை அல்லாஹுதஆலா சுவன வாசல்களில் அவர் நாடிய வாசல் வழியே நுழையவைப்பான். சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உள்ளன, மேலும், எவர் அல்லாஹுதஆலாவுக்கு யாரையும் இணை ஆக்காத நிலையில் அல்லாஹ்வை வணங்கி, தொழுகையை நிலைநாட்டி ஸகாத்து கொடுத்து, அமீருடைய சொல்லையும் கேட்டார். (ஆனால்) அவருக்கு வழிப்பட வில்லையெனில், அவருடைய காரியம் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் இருக்கும். அவன் நாடினால் அவர் மீது இரக்கம் காட்டலாம் அல்லது அவன் நாடினால் அவரைத்தண்டிக்கலாம்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உபாதத்திப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானி, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٧٧– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: اَلْغَزْوُ غَزْوَانِ فَأَمَّا مَنِ ابْتَغَي وَجْهَ اللهِ، وَأَطَاعَ اْلإِمَامَ وَأَنْفَقَ الْكَرِيمَةَ وَيَاسَرَ الشَّرِيكَ، وَاجْتَنَبَ الْفَسَادَ، فَإِنَّ نَوْمَهُ وَنَبْهَهُ أَجْرٌ كُلُّهُ، وَأَمَّا مَنْ غَزَا فَخْرًا وَرِيَاءً وَسُمْعَةً وَعَصَي اْلإِمَامَ،وَأَفْسَدَ فِي اْلاَرْضِ،فَإِنَّهُ لَمْ يَرْجِعْ بِالْكَفَافِ.
رواه ابو داؤد، باب فيمن يغزو ويلتمس الدنيا، رقم:٢٥١٥
177. “(அல்லாஹ்வுடைய பாதையில்) ஜிஹாதுக்குப் புறப்படுவது இரண்டு வகைப்படும்: முதலாவது வகை, ஒருவர் அல்லாஹுதஆலாவின் திருப்தியை (யே) நோக்கமாகக்கொண்டு புறப்பட்டு அமீருக்குக் கீழ்ப்படிந்து தனது விலையுர்ந்த பொருளைச் செலவிட்டு, தன் பயண நண்பர்களுடன் மென்மையான முறையில் பழகி (சகலவித) குழப்பத்தைவிட்டும் காத்துக்கொண்டால், இவருடைய தூக்கமும், விழிப்பும் நன்மையே நன்மை. இரண்டாம் வகை, பெருமை, பிறர் பார்க்க வேண்டும், மக்கள் தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜிஹாதுக்குச் சென்று, அங்கு அமீருக்குக் கீழ்ப்படியாமலும், உலகில் குழப்பத்தை விளைவித்துக் கொண்டும் இருந்தால் அவன் ஜிஹாதிலிருந்து திரும்பும்போது நஷ்டமடைந்தவனாகத் திரும்புவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٧٨– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَجُلاً قَالَ: يَا رَسُولَ اللهِﷺ رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللهِ وَهَوَ يَبْتَغِي عَرَضاً مِنْ عَرَضِ الدُّنْيَا؟ فَقَالَ النَّبِيُّ ﷺ: لاَ أَجْرَ لَهُ، فَأَعْظَمَ ذلِكَ النّاسُ وَقَالُوا لِلرَّجُـلِ: عُدْ لِرَسُــولِ اللهِ ﷺ فَلَعَلَّكَ لَمْ تُفَهِّمْـهُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ ﷺ رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللهِ وَهُوَ يَبْتَغِي عَرَضاً مِنْ عَرَضِ الدُّنْيَا؟ قَالَ: لاَ أَجْرَ لَهُ، فَقَالُوا لِلرَّجُلِ: عُدْ لِرَسُولِ اللهِ ﷺ فَقَالَ لَهُ الثَّالِثَةَ، فَقَالَ لَهُ: لاَ أَجْرَ لَهُ.
رواه ابو داؤد، باب فيمن يغدو ويلتمس الدنيا، رقم:٢٥١٦
178. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு மனிதர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ்! தனக்கு ஏதேனும் பொருள் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒருவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்றால் (என்ன நன்மை கிடைக்கும்?)” என்று கேட்டார். “அவனுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நபி (ஸல்) அவர்களின் பதிலை மக்கள் மிகவும் பாரமாகக் கருதினார்கள். “நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் நீர் கேளும், நபி (ஸல்) அவர்களுக்கு நீர் சரியாக விளங்க வைக்கவில்லை போலும்” என்று மக்கள் கேட்டுக் கொண்டனர், அவர் மறுபடியும், “யாரஸூலல்லாஹ்! ஒருவர் தனக்கு உலகப்பொருட்கள் ஏதேனும் கிடைக்கவேண்டுமென்ற நிய்யத்தோடு ஜிஹாதுக்குச் செல்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு நன்மை எதும் கிடைக்காது” என்றார்கள். மக்கள் அவரிடம், “உமது கேள்வியைத் திரும்பக் கேளும்” என்று சொல்ல, அவரும் மூன்றாம் முறையாகக் கேட்டார். மூன்றாம் முறையும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “அவருக்கு நன்மை எதும் கிடைக்காது” என்று சொன்னார்கள்.
(அபூதாவூத்)
١٧٩– عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّؓ قَالَ: وَكَانَ النَّاسُ إِذَا نَزَلَ رَسُولُ اللهِ ﷺ مَنْزِلاً تَفَرَّقُوا فِي الشِّعَابِ وَاْلاَوْدِيَةِ فَقَالَ رَسُولَ اللهِ ﷺ: إِنَّ تَفَرُّقَكُمْ فِي هذِهِ الشِّعَابِ وَاْلاَوْدِيَةِ إِنَّمَا ذلِكُمْ مِنَ الشَّيْطَانِ فَلَمْ يَنْزِلْ بَعْدَ ذلِكَ مَنْزِلاً إِلاَّ انْضَمَّ بَعْضُهُمْ إِلَي بَعْضٍ حَتَّي يُقَالَ: لَوْ بُسِطَ عَلَيْهِمْ ثَوْبٌ لَعَمَّهُمْ.
رواه ابو داؤد، باب ما يؤمر من انضمام العسكر وسعته. رقم:٢٦٢٨
179. ஹஜ்ரத் அபூஸஃலபா குஷனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் எங்காவது தங்க நேர்ந்தால் கூடாரம் அமைத்துக் கொள்வார்கள். ஸஹாபாக்கள் (ரலி) கணவாய்ப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து சென்று தங்கிக் கொள்வார்கள். “நீங்கள் இவ்வாறு கணவாய்கள், பள்ளத்தாக்குகளில் பிரிந்து சென்று தங்குவது ஷைத்தானால் தூண்டப்பட்ட செயலாகும்”. (அவன் உங்களை ஒருவரைவிட்டு மற்றவரைப் பிரித்துவிட விரும்புகிறான்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) சொன்னார்கள். இவ்வாறு சொன்ன பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்குத் தங்கினாலும் ஸஹாபாக்களும் ஒன்று சேர்ந்தே தங்குவார்கள். (ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதைப் பார்த்தால்) இவர்கள் அனைவரின் மீதும் ஒரு போர்வையைப் போர்த்தினால் இவர்கள் அனைவரையும் அந்தப் போர்வை மூடிவிடும் என்று சொல்லப்படுமளவு ஒன்று சேர்ந்து தங்குவார்கள்.
(அபூதாவூத்)
١٨٠– عَنْ صَخْرِ نِ الْغَامِدِيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ: اَللّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشاً بَعَثَهَا مِنْ أَوَّلِ النَّهَارِ، وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ، فَأَثْرَي وَكَثُرَ مَالُهُ.
رواه ابو داؤد، باب في الابتكار في السفر، رقم:٢٦٠٦
180. ஹஜ்ரத் ஸக்ர் ஙாமிதிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (اَللّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا) “யாஅல்லாஹ், என்னுடைய சமுதாயத்தினருக்கு அதிகாலையில் பரக்கத் செய்வாயாக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள். மேலும், அன்னார் சிறிய படை அல்லது பெரும்படையை அனுப்பிவைக்கும் போது அவர்களைக் காலை நேரத்தில் அனுப்பிவைப்பார்கள். ஹஜ்ரத் ஸக்ர் (ரலி) அவர்கள் வியாபாரியாக இருந்தார்கள், அவர்கள் தமது வியாபாரப் பொருட்களைக் காலைப் பொழுதில் தன் வேலையாட்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்கள் செல்வந்தரானார்கள், (அவர்களின் செல்வம் பெருகிவிட்டது).
(அபூதாவூத்)
தெளிவுரை:- என்னுடைய சமுதாயத்தினர் அதிகாலையில் பயணம் செய்யட்டும், உலகம் அல்லது மார்க்கம் சம்பந்தமான வேலைகளில் அந்நேரத்தில் எதைச் செய்தாலும் அதில் அவர்களுக்கு பரக்கத் கிடைக்கும்” என்பது இந்த ஹதீஸில், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் செய்துள்ள துஆவின் நோக்கமாகும்.
١٨١– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لِأَكْثَمَ بْنِ الْجَوْنِ الْخُزَاعِيِّ: يَا أَكْثَمُ! اُغْزُ مَعَ غَيْرِ قَوْمِكَ يَحْسُنْ خُلُقُكَ، وَتَكْرُمْ عَلَي رُفَقَائِكَ، يَا أَكْثَمُ! خَيْرُ اَلرُّفَقَاءِ أَرْبَعَةٌ، وَخَيْرُ السَّرَايَا أَرْبَعُمِائَةٍ، وَخَيْرُ الْجُيُوشِ أَرْبَعَةُ آلاَفٍ وَلَنْ يُغْلَبَ إِثْنَا عَشَرَ اَلْفاً مِنْ قِلَّةٍ.
رواه ابن ماجه، باب السرايا، رقم: ٢٨٢٧
181. ஹஜ்ரத் அனஸ்இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அக்ஸம் (ரலி) அவர்களிடம், “அக்ஸம்! மற்ற சமூகத்தாருடன் சேர்ந்து ஜிஹாது செய்வீராக!, அப்படிச் செய்தால் உம்முடைய குணம் சிறந்ததாக ஆகிவிடும்”. மேலும், இந்நற் குணத்தால் உங்களது நண்பர்களிடத்தில் நீங்கள் கண்ணியத்திற்குரியவராக கருதப்படுவீர். அக்ஸம்! (பயணம் செல்ல) நல்ல துணை (குறைந்தது) நான்கு பேர் இருக்கவேண்டும். சிறந்த ஸரிய்யா (சிறியபடை) நானூறு நபர்கள் கொண்ட படையாகும். சிறந்த ஜைஷ் (பெரும்படை) நாலாயிரம் நபர்கள் கொண்டதாகும். பன்னிரண்டாயிரம் நபர்கள் கொண்ட படை தங்களுடைய எண்ணிக்கைக் குறைவால் தோல்வியுறமாட்டார்கள்” (ஆயினும் அல்லாஹுதஆலாவுக்கு மாறு செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டால் தோல்வியுறலாம்)
(இப்னுமாஜா)
١٨٢– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ ﷺ، إِذْ جَاءَهُ رَجُلٌ عَلَي رَاحِلَةٍ لَهُ، قَالَ: فَجَعَلَ يَصْرِفُ بَصَرَهُ يَمِيناً وَشِمَالاً، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ كَانَ مَعَهُ فَضْلُ ظَهْرٍ فَلْيُعِدَّ بِهِ عَلي مَنْ لاَ ظَهْرَ لَهُ، وَمَنْ كَانَ لَهُ فَضْلٌ مِنْ زَادٍ فَلْيُعِدَّ بِهِ عَلَي مَنْ لاَ زَادَ لَهُ، قَالَ: فَذَكَرَ مِنْ أَصْنَافِ الْمَالِ مَا ذَكَرَ، حَتَّي رَأَيْنَا أَنَّهُ لاَ حَقَّ لأَحَدٍ مِنَّا فيِ فَضْلٍ.
رواه مسلم، باب استحباب المؤاساة بفضول المال، رقم:٤٥١٧
182. ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு சமயம் நாங்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்தோம். அச்சமயம் ஒருவர் தம் வாகனத்தின் மீது அமர்ந்து வந்தார், (தனது தேவையை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில்) வலப்பக்கமும், இடப்பக்கமும் பார்த்தார். (எப்படியாவது தன் தேவை நிறைவேற வேண்டும் என்பதற்காக வலப்புறமும், இடப்புறமும் நோட்டமிட்டார்) “மேலதிகமான வாகனம் வைத்திருப்பவர், வாகனம் இல்லாதவருக்கு அதைக் கொடுத்துவிடவும், (தனது தேவைக்குப்போக) மேலதிகமான உணவுப் பொருட்கள் வைத்திருப்பவர், உணவுப் பொருட்கள் இல்லாதவருக்குக் கொடுத்துவிடவும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஹதீஸின் அறிவிப்பாளர் கூறுகிறார், “இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பல்வேறு பொருட்களைப் பற்றிச் சொன்னார்கள். (ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியதால்) தம்மிடமிருக்கிற மேலதிகமான பொருள் மீது எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. (பொருள் இல்லாதவர்தான் அந்தப் பொருட்களுக்கு அதிகம் உரிமையுடையவர்) என்று நாங்கள் கருதலானோம்.
(முஸ்லிம்)
١٨٣– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ حَدَّثَ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ أَرَادَ أَنْ يَغْزُوَ قَالَ: يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ وَاْلاَنْصَارِ! إِنَّ مِنْ إِخْوَانِكُمْ قَوْماً لَيْسَ لَهُمْ مَالٌ وَلاَ عَشِيرَةٌ فَلْيَضُمَّ أَحَدُكُمْ إِلَيْهِ الرَّجُلَيْنِ أَوِ الثَّلاَثَةَ.
(الحديث) رواه ابو داؤد، باب الرجل يتحمل بمال غيره يغزو، رقم:٢٥٣٤
183. ஹஜ்ரத் ஜாபிருப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “முஹாஜிரீன்கள் மற்றும் அன்ஸாரிகளே! பொருளோ, உறவினரோ இல்லாத சிலர் உங்களில் இருக்கின்றனர். எனவே, உங்களில் ஒவ்வொருவரும் அவர்களில் இருவரை அல்லது மூவரைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளவும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் போருக்கு புறப்படும் போது கூறினார்கள்.
(அபூதாவூத்)
١٨٤– عَنِ الْمُطْعِمِ بْنِ الْمِقْدَامِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا خَلَّفَ عَبْدٌ عَلي أَهْلِهِ أَفْضَلَ مِنْ رَكْعَتَيْنِ يَرْكَعُهُمَا عِنْدَهُمْ حِينَ يُرِيدُ سَفَرًا.
رواه ابن ابي شيبة حديث ضعيف، الجامع الصغير، ٢ /٤٩٥، ورد عليه صاحب الاتحاف وملخص كلامه ان الحديث ليس بضعيف، اتحاف السادة: ٣ /٤٦٥
184. “ஒருவர் பயணம் செல்லும் பொழுது அவர் தமது குடும்பத்தாருக்கு விட்டுச் செல்லும் உதவியாளர்களில் சிறந்த உதவியாளர் தன் குடும்பத்தார்களிடத்தில் தொழுத இரண்டு ரக்அத்துகளாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் முத்இம் இப்னு மிக்தாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஜாமிஉஸ்ஸஙீர்)
١٨٥– عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا.
رواه البخاري، باب ما كان النبي ﷺ يتخولهم بالموعظة….،رقم:٦٩
185. “எளிதான முறையில் மக்களுடன் பழகுங்கள், அவர்களுடன் கடினமான முறையில் நடந்து கொள்ளாதீர்கள், நற்செய்திகளை சொல்லுங்கள், பயமூட்டும் செய்திகளைச் சொல்லாதீர்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- மக்களுக்கு நல்ல அமல்கள் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கூலியைப் பற்றிய நற்செய்திகளைக் கூறுங்கள். அவர்கள் அல்லாஹுதஆலாவின் ரஹ்மத்திலிருந்து நிராசையடைந்து தீனைவிட்டு விலகிப்போகும் அளவு அவர்களுடைய பாவங்களுக்குரிய தண்டனைகளைக் கூறி அவர்களைப் பயமுறுத்தக் கூடாது என்பதாம்.
١٨٦– عَنْ عَبْدِ اللهِ هُوَ إِبْنُ عَمْرٍوؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: قَفْلَةٌ كَغَزْوَةٍ.
رواه ابو داؤد، باب في فضل القفل في الغزو، رقم: ٢٤٨٧
186. “அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திரும்பி வருவதும் அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைப் போலவே!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- அல்லாஹுதஆலாவின் பாதையில் ஜிஹாத் செய்தால் கிடைக்கின்ற நன்மையும், கூலியும், அல்லாஹுதஆலாவின் பாதையிலிருந்து திரும்பி வந்த பிறகும் கிடைக்கிறது. “எந்தத் தேவையை முன்னிட்டுத் திரும்பி வந்தாரோ அந்தத் தேவை முடிந்ததுமே அல்லது அல்லாஹுதஆலாவின் பாதையில் செல்ல அழைப்பு வந்ததும் உடனே நான் அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டுவிடுவேன்” என்ற உறுதியான எண்ணம் இருக்க வேண்டும்.
(மளாஹிருல்ஹக்)
١٨٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ إِذَا قَفَلَ مِنْ غَزْوٍ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ يُكَبِّرُ عَلي كُلِّ شَرَفٍ مِنَ اْلاَرْضِ ثَلاَثَ تَكْبِيرَاتٍ وَيَقُولُ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ آئِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ اْلاَحْزَابَ وَحْدَهُ.
رواه ابو داؤد، باب في التكبير علي كل شرف في المسير، رقم:٢٧٧
187. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஜிஹாத் அல்லது ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பி வரும்பொழுது பூமியின் ஒவ்வொரு உயரமான பகுதியிலும் மூன்று முறை தக்பீர் சொல்வார்கள். பிறகு, (لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ آئِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ اْلاَحْزَابَ وَحْدَهُ) அல்லாஹுதஆலாவைத் தவிர எந்த நாயனும் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை யாருமில்லை, ஆட்சி, அதிகாரம் அவனுக்கே உரியது! சகல புகழும் அவனுக்கே உரியது! அவன் எல்லாவற்றின் மீதும் சக்தி பெற்றவன், நாங்கள் திரும்பக் கூடியவர்கள், தவ்பாச் செய்பவர்கள், வணங்கக் கூடியவர்கள், ஸஜ்தாச் செய்பவர்கள் எங்களுடைய இரட்சகனை புகழக்கூடியவர்கள். அல்லாஹுதஆலா தனது வாக்குறுதியை உண்மையாக்கிவிட்டான், தனது அடியாருக்கு உதவி செய்தான், அவன் தனித்த நிலையில் எதிரிகளைத் தோற்கடித்தான்” என்று கூறுவார்கள்.
(அபூதாவூத்)
١٨٨– عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ الْجُهَنِيِّؓ أَنَّ النَّبِيَّ ﷺ دَعَاهُ إِلَي اْلإِسْلاَمِ، وَقَالَ لَهُ: يَا عَمْرَو بْنَ مُرَّةَ: أَنَا النَّبِيُّ الْمُرْسَلُ إِلَي الْعِبَادِ كَافَّةً أَدْعُوهُمْ إِلَي اْلإِسْلاَمِ وَآمُرُهُمْ بِحَقْنِ الدِّمَاءِ، وَصِلَةِ اْلاَرْحَامِ، وَعِبَادَةِ اللهِ، وَرَفْضِ اْلاَصْنَامِ، وَحَجِّ الْبَيْتِ وَصِيَامِ شَهْرِ رَمَضَانَ مِنِ اثْنَيْ عَشَرَ شَهْرًا، فَمَنْ أَجَابَ فَلَهُ الْجَنَّةُ، وَمَنْ عَصَي فَلَهُ النَّارُ فَآمِنْ بِاللهِ يَا عَمْرُو يُؤَمِّنْكَ اللهُ مِنْ هَوْلِ جَهَنَّمَ، قُلْتُ: أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّكَ رَسُولُ اللهِ، وَآمَنْتُ بِكُلِّ مَا جِئْتَ بِهِ بِحَلاَلٍ وَحَرَامٍ، وَإِنْ أَرْغَمَ ذلِكَ كَثِيرًا مِنَ اْلاَقْوَامِ، فَقَالَ النَّبِيُّ ﷺ: مَرْحَباً بِكَ يَا عَمْرَو بْنَ مُرَّةَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي، إِبْعَثْنِي إِلَي قَوْمِي لَعَلَّ اللهَ أَنْ يَمُنَّ بِي عَلَيْهِمْ كَمَا مَنَّ بِكَ عَلَيَّ فَبَعَثَنِي إِلَيْهِمْ فَقَالَ: عَلَيْكَ بِالرِّفْقِ وَالْقَوْلِ السَّدِيدِ، وَلاَ تَكُنْ فَظّاً وَلاَ مُتَكَبِّرًا وَلاَ حَسُودًا فَأَتَيْتُ قَوْمِي فَقُلْتُ: بَا بَنِي رِفَاعَةَ، يَا مَعَاشِرَ جُهَيْنَةَ، إِنِّي رَسُولُ رَسُولِ اللهِ ﷺ إِلَيْكُمْ أَدْعُوكُمْ إِلَي الْجَنَّةِ وَأُحَذِّرُكُمُ النَّارَ، وَآمُرُكُمْ بِحَقْنِ الدِّمَاءِ، وَصِلَةِ اْلاَرْحَامِ، وَعِبَادَةِ اللهِ، وَرَفْضِ اْلاَصْنَامِ، وَحَجِّ الْبَيْتِ، وَصِيَامِ شَهْرِ رَمَضَانَ، شَهْرٍ مِنِ اثْنَيْ عَشَرَ شَهْرًا، فَمَنْ أَجَابَ فَلَهُ الْجَنَّةُ، وَمَنْ عَصَي فَلَهُ النَّارُ، يَا مَعْشَرَ جُهَيْنَةَ، إِنَّ اللهَ جَعَلَكُمْ خِيَارَ مَنْ أَنْتُمْ مِنْهُ، وَبَغَّضَ إِلَيْكُمْ فِي جَاهِلِيَّتِكُمْ مَا حُبِّبَ إِلَي غَيْرِكُمْ، مِنْ أَنَّهُمْ كَانُوا يَجْمَعُونَ بَيْنَ اْلأُخْتَيْنِ، وَيَخْلُفُ الرَّجُلُ مِنْهُمْ عَلي امْرَأَةِ أَبِيهِ، وَالْغَزَاةِ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَأَجِيبُوا هذَا النَّبِيَّ الْمُرْسَلَ مِنْ بَنِي لُؤَيِّ بْنِ غَالِبٍ، تَنَالُوا شَرَفَ الدُّنْيَا وَكَرَامَةَ اْلآخِرَةِ، وَسَارِعُوا فِي ذلِكَ يَكُنْ لَكُمْ فَضِيلَةٌ عِنْدَ اللهِ، فَأَجَابُوهُ إِلاَّ رَجُلاً وَاحِدًا.
رواه الطبراني مختصرا من مجمع الزوائد:٨/٤٤١
188. ஹஜ்ரத் அம்ருப்னு முர்ரா ஜுஹனீ (ரலி) அவர்களை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பால் அழைத்தபொழுது சொன்னார்கள்; “அம்ருப்னு முர்ரா, நான் அல்லாஹுதஆலாவின் அடியார்கள் அனைவரின் பால் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன், நான் இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அழைக்கிறேன், (எவரையும் அநியாயமாகக் கொல்லாமல்) அவர்கள் இரத்தத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றும், உறவினரை சேர்த்து வாழவேண்டு மென்றும், ஒரே அல்லாஹுதஆலாவை வணங்கவும், சிலை வணக்கத்தை விட்டு விடவும், பைத்துல்லாஹ்வை ஹஜ் செய்யவும், பன்னிரெண்டு மாதங்களில் ஒரு மாதம் நோன்பு வைக்கவும் அவர்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். இவைகளை ஏற்றுக் கொண்டவருக்கு சுவர்க்கம் உண்டு, ஏற்காதவருக்கு நரகம். அம்ரே, அல்லாஹுதஆலாவின் மீது ஈமான் கொள்வீர், அவன் உம்மை நரகத்தின் பயங்கர வேதனையை விட்டும் நிம்மதியளிப்பான்”. இதைக் கேட்ட ஹஜ்ரத் அம்ரு (ரலி) அவர்கள், “அல்லாஹுதஆலாவைத் தவிர வணங்கத் தகுதியானவன் யாருமில்லை. நிச்சயமாகத் தாங்கள் அல்லாஹுதஆலாவின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன். தாங்கள் கொண்டுவந்த ஹலால், ஹராம் அனைத்தின் மீதும் நான் நம்பிக்கை கொள்கிறேன். இந்தக் காரியங்கள் பல சமுகத்தாருக்கு வெறுப்பானதாக இருந்தாலும் சரியே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு, “அம்ர் உமக்கு நல்வாழ்த்துக்கள்” என்றார்கள். “யாரஸூலல்லாஹ், என்னுடைய தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம், தாங்கள் என்னை என் சமூகத்தாரிடம் அனுப்பி வையுங்கள். தங்கள் மூலம் அல்லாஹ் என் மீது அருள் புரிந்ததுபோல், என் மூலம் என் சமூகத்தாருக்கு அல்லாஹுதஆலா அருள் புரியலாம் அல்லவா?” என ஹஜ்ரத் அம்ரு (ரலி) அவர்கள் வேண்டினார். எனவே, நபி (ஸல்) அவர்கள் என்னை என்னுடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள், மென்மையான முறையில் அவர்களுடன் பழகவும், சரியான, மென்மையான வார்த்தையே பேசவும், கடினமான வார்த்தை பேசவோ, துற்குணத்துடன் பழகவோ வேண்டாம், பெருமையோ, பொறாமையோ கொள்ளக்கூடாது” என்றும் உபதேசித்து அனுப்பினார்கள்.நான் எனது சமூகத்தாரிடம் வந்து, “பனூ ரிஃபாஆ, ஜுஹைனாவுடைய மக்களே, உங்களிடம் அல்லாஹுதஆலாவின் ரஸூலுடைய தூதராக நான் வந்துள்ளேன், உங்களை நான் சுவர்க்கத்தின் பால் அழைக்கிறேன், நரகத்தைப் பற்றி எச்சரிக்கிறேன். நீங்கள் இரத்தத்தைப் பாதுகாத்து வாருங்கள். (யாரையும் அநியாயமாகக் கொலை செய்ய வேண்டாம்) உறவினருடன் சேர்ந்து வாழுங்கள். அல்லாஹுதஆலா ஒருவனையே வணங்குங்கள், சிலை வணக்கத்தை விட்டுவிடுங்கள், பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜுச் செய்யுங்கள், பன்னிரெண்டு மாதங்களில் ஒரு மாதம் நோன்பு வையுங்கள், என்று உங்களுக்கு கட்டளையிடுகிறேன்”, இவைகளை ஏற்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும், ஏற்காதவருக்கு நரகம் கிடைக்கும்.ஜுஹைனா கோத்திரத்தாரே, அல்லாஹுதஆலா உங்களை அரபு கோத்திரங்களில் சிறந்த கோத்திரத்தாராக ஆக்கியுள்ளான். எந்தத் தீய காரியங்களை அரபுகளுடைய மற்ற கோத்திரத்தினர் நல்லவையெனக் கருதி வந்தார்களோ, அவற்றின் மீதுள்ள வெறுப்பை அறியாமைக் காலத்திலேயே அல்லாஹுதஆலா உங்களுடைய உள்ளங்களில் போட்டிருந்தான், மற்றவர்கள் ஒரே சமயத்தில் இரு சகோதரிகளைத் திருமணம் செய்துகொள்வார்கள். தனது தந்தையின் மனைவியுடனும் திருமணம் செய்து கொள்வார்கள். கண்ணியமான புனித மாதங்களில் போரிடுவார்கள். (ஆனால், நீங்கள் இத்தீய செயல்களை அறியாமைக் காலத்திலும் கூடச் செய்யா மலிருந்தீர்கள்) ஆகையால், பனீ லுஅய்யிப்னு ஙாலிப் கோத்திரத்தைச் சார்ந்த அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த தூதருடைய பேச்சைக் கேளுங்கள், அதனால், நீங்கள் உலகின் சிறப்பையும், மறுமையின் கண்ணியத்தையும் அடைவீர்கள். நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வதில் துரிதப்படுங்கள். உங்களுக்கு அல்லாஹுதஆலாவிடமிருந்து (இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் முந்தியவர்கள் என்ற) சிறப்புக் கிடைக்கும்” என்று சொன்னார்கள். ஒரு மனிதரைத் தவிர மற்ற அனைவரும் அவருடைய அழைப்பை ஏற்று முஸ்லிமாகிவிட்டனர்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- மகத்துவமிக்க மாதங்கள் நான்கு. அவற்றில் அரபுகள் போரிடமாட்டார்கள். அவை, “முஹர்ரம், ரஜப், துல்கஃதா, துல்ஹஜ்” ஆகியவையாகும்.
(தப்ஸீர் இப்னுகஸீர்)
١٨٩– عَنْ كَعْبِ بْنِ مَالِكٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ لاَ يَقْدُمُ مِنْ سَفَرٍ إِلاَّ نَهَارًا فِي الضُّحَي، فَاذَا قَدِمَ، بَدَأَ بِالْمَسْجِدِ، فَصَلَّي فِيهِ رَكْعَتَيْنِ، ثُمَّ جَلَسَ فِيهِ.
رواه مسلم، باب استحباب ركعتين في المسجد…،رقم:١٦٥٩
189. ஹஜ்ரத் கஅபிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், (முற்பகலில்) லுஹா நேரத்தில் பயணத்திலிருந்து திரும்புவது வழக்கமாக இருந்தது, வந்ததும் முதலில் பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் பள்ளியில் அமர்வார்கள்”.
(முஸ்லிம்)
١٩٠– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ يَقُولُ: فَلَمَّا أَتَيْنَا الْمَدِينَةَ قَالَ (لِي رَسُولُ اللهِ ﷺ): اِئْتِ الْمَسْجِدَ فَصَلِّ رَكْعَتَيْنِ.
رواه البخاري باب الهبة المقبوضة وغير المقبوضة…، رقم:٢٦٠٤
190. ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் (பயணத்திலிருந்து திரும்பி) மதீனாவுக்கு வந்த பொழுது, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் (என்னிடம்) “பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுது கொள்ளும்” என்று சொன்னார்கள்.
(புகாரி)
١٩١– عَنْ شِهَابِ بْنِ عَبَّادٍؒ أَنَّهُ سَمِعَ بَعْضَ وَفْدِ عَبْدِ الْقَيْسِ وَهُمْ يَقُولُونَ: قَدِمْنَا عَلي رَسُولِ اللهِ ﷺ فَاشْتَدَّ فَرْحُهُمْ بِنَا، فَلَمَّا انْتَهْيْنَا إِلَي الْقَوْمِ أَوْسَعُوا لَنَا فَقَعَدْنَا، فَرَحَّبَ بِنَا النَّبِيُّ ﷺ وَدَعَا لَنَا، ثُمَّ نَظَرَ إِلَيْنَا، فَقَالَ: مَنْ سَيِّدُكُمْ وَزَعِيمُكُمْ؟ فَأَشَرْنَا بِأَجْمَعِنَا إِلَي الْمُنْذِرِ بْنِ عَائِدٍ فَقَالَ النَّبِيُّ ﷺ: أَهذَا اْلاَشَجُّ؟ فَكَانَ أَوَّلَ يَوْمٍ وُضِعَ عَلَيْهِ هذَا اْلاِسْمُ بِضَرْبَةٍ لِوَجْهِهِ بِحَافِرِ حِمَارٍ، قُلْنَا: نَعَمْ يَا رَسُولَ اللهِ ﷺ فَتَخَلَّفَ بَعْدَ الْقَوْمِ، فَعَقَلَ رَوَاحِلَهُمْ وَضَمَّ مَتَاعَهُمْ، ثُمَّ أَخْرَجَ عَيْبَتَهُ فَاَلْقَي عَنْهُ ثِيَابَ السَّفَرِ وَلَبِسَ مِنْ صَالِحِ ثِيَابِهِ، ثُمَّ أَقْبَلَ إِلَي النَّبِيِّ ﷺ وَقَدْ بَسَطَ النّبِيُّ ﷺ رِجْلَهُ وَاتَّكَأَ، فَلَمَّا دَنَا مِنْهُ اْلاَشَجُّ أَوْسَعَ الْقَوْمُ لَهُ، وَقَالُوا: ههُنَا يَا أَشَجُّ، فَقَالَ النَّبِيُّ ﷺ وَاسْتَوَي قَاعِدًا وَقَبَضَ رِجْلَهُ: ههُنَا يَا أَشَجُّ، فَقَعَدَ عَنْ يَمِينِ النَّبِيِّ ﷺ فَرَحَّبَ بِهِ وَاَلْطَفَهُ، وَسَأَلَهُ عَنْ بِلاَدِهِ، وَسَمَّي لَهُ قَرْيَةً قَرْيَةَ الصَّفَا وَالْمُشَقَّرَ وَغَيْرَ ذلِكَ مِنْ قُري هَجَرَ، فَقَالَ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللهِﷺ لأَنْتَ أَعْلَمُ بِأَسْمَاءِ قُرَانَا مِنَّا فَقَالَ: إِنِّيْ قَدْ وَطِئْتُ بِلاَدَكُمْ وَفُسِحَ لِي فِيهَا قَالَ: ثُمَّ أَقْبَلَ عَلَي اْلاَنْصَارِ فَقَالَ: يَا مَعْشَرَ اْلاَنْصَارِ! أَكْرِمُوا إِخْوَانَكُمْ فَإِنَّهُمْ أَشْبَاهُكُمْ فِي اْلإِسْلاَمِ، أَشْبَهُ شَيْءٍ بِكُمْ أَشْعَارًا وَأَبْشَارًا، أَسْلَمُوا طَائِعِينَ غَيْرَ مُكْرَهِينَ وَلاَ مَوْتُورِينَ إِذْ أَبَي قَوْمٌ أَنْ يُسْلِمُوا حَتَّي قُتِلُوا، قَالَ: فَلَمَّا أَنْ أَصْبَحُوا قَالَ: كَيْفَ رَأَيْتُمْ كَرَامَةَ إِخْوَانِكُمْ لَكُمْ وَضِيَافَتَهُمْ إِيَّاكُمْ؟ قَالُوا: خَيْرُ إِخْوَانٍ، أَلاَنُوْا فِرَاشَنأَ، وَاطَابُوا مَطْعَمَنَا، وَبَاتُوا وَأَصْبَحُوا يُعَلِّمُونَنَا كِتَابَ رَبِّنَا تَبَارَكَ وَتَعَالَي وَسُنَّةَ نَبِيِّنَاﷺ، فَأَعْجَبَتِ النَّبِيَّ ﷺ وَفَرِحَ بِهَا، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا رَجُلاً رَجُلاً، فَعَرَضْنَا عَلَيْهِ مَا تَعَلَّمْنَا وَعُلِّمْنَا، فَمِنَّا مَنْ عُلِّمَ التَّحِيَّاتِ وَأُمَّ الْكِتَابِ وَالسُّورَةَ وَالسُّورَتَيْنِ وَالسُّنَنَ.
(الحديث) رواه احمد:٣ /٤٣٢
191. ஹஜ்ரத் ஷிஹாபுப்னு அப்பாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அப்துல் கைஸ் கோத்திரத்தைச் சேர்ந்த தூதுக்குழு ஒன்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்குச் சென்றிருந்தது. அக்குழுவிலிருந்த ஒருவர் தமது பயண விபரங்களை விவரிக்க நான் கேட்டேன். அவர் கூறுகிறார்: “நாங்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்குச் சென்றபொழுது, எங்களுடைய வருகையால் முஸ்லிம்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சபைக்குச் சென்றபொழுது மக்கள் எங்களுக்காக இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். நாங்கள் அங்கே அமர்ந்துகொண்டோம். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களை வரவேற்று எங்களுக்காகத் துஆச் செய்தார்கள். பிறகு, எங்களைப் பார்த்து, “உங்களுடைய தலைவர், பொறுப்பாளி யார்?” எனக் கேட்டார்கள். நாங்கள் அனைவரும் முன்திர் இப்னு ஆயிதை நோக்கிச் சுட்டிக் காட்டினோம். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இந்த அஷஜ்ஜாலிகாயத்தின் வடு உள்ளவரா உங்களுடைய தலைவர்?” என்று வினவ, நாங்கள் “ஆம்” என்றோம். (ஒருவருடைய தலையில் அல்லது முகத்தில் காயத்தின் வடுக்கள் இருந்தால் அவருக்கு அஷஜ் என்று கூறப்படும்) அவருடைய முகத்தில் கழுதையுடைய குளம்பு பட்டதால் காயத்துடைய வடு இருந்தது. அதனால் அவருக்கு அஷஜ் என்ற பெயர் ஏற்பட்டது, அன்றுதான் முதன் முறையாக அவருக்கு இப்பெயர் இடப்பட்டது. தன் பிரயாண நண்பர்களைவிட பின்தங்கி விட்டார், அவர் தனது நண்பர்களின் வாகனங்களைக் கட்டிவிட்டு, அவர்களுடைய உடைமைகளை முறையாக வைத்தார். பிறகு, தனது உடைகள் அடங்கிய மூட்டையை எடுத்தார், பிரயாணத்தில் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிவிட்டு சுத்தமான ஆடையை அணிந்து கொண்டு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். (அந்த நேரத்தில்) ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தமது முபாரக்கான கால்களை நீட்டியவாறு சாய்ந்து இருந்தார்கள். ஹஜ்ரத் அஷஜ் (ரலி) அவர்கள் அன்னாரை நெருங்கியதும், மக்கள் அவருக்காக இடம் கொடுத்தனர், நபி (ஸல்) அவர்கள் தன் கால்களை மடக்கியவாறு, “அஷஜ் அவர்களே! இங்கு அமருங்கள்” என்று சொன்னார்கள். அவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு வலதுபுறத்தில் அமர்ந்தார், நபி (ஸல்) அவர்கள் அவரை வரவேற்று, அவருடன் அன்பான முறையில் நடந்துகொண்டார்கள், அவரிடம் அவருடைய ஊர்ப் பகுதியுடைய விபரங்களைக் கேட்டார்கள். மேலும் ஹஜருடைய ஒவ்வொரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டு, “ஸபா‘, “முஷக்கர்‘ போன்ற (ஊர்) பெயர்களைக் கூறினார்கள். ஹஜ்ரத் அஷஜ் (ரலி) அவர்கள், “யாரஸூலல்லாஹ், எனது தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம், தாங்கள் எங்களுடைய ஊர்களின் பெயர்களை எங்களைவிட நன்றாக அறிந்து வைத்து இருக்கிறீர்கள்” என்று சொன்னார். “எனக்கு உங்களுடைய பகுதிகள் திறந்து காட்டப்பட்டன, அவற்றில் நான் சுற்றித்திரிந்தேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, அன்ஸாரிகளை (மதீனாவாசிகளை) நோக்கி, “அன்ஸாரிகளே! உங்களது சகோதரர்களைக் கண்ணியப்படுத்துங்கள். ஏனெனில், இவர்கள் உங்களைப் போன்ற முஸ்லிம்கள், அவர்களுடைய முடிகள், மேனியின் நிறம் உங்களுடைய முடி, நிறத்துடன் மிகவும் ஒத்து இருக்கிறது. இவர்கள் தாங்களே விருப்பப்பட்டு இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்கள். இவர்கள் வற்புறுத்தப்படவில்லை. (முஸ்லிம்களுடைய படை தாக்கி, அவர்களை வெற்றிகொண்டு) இவர்களுடைய எல்லாச் செல்வமும் ஙனீமத் பொருளாக ஆக்கப்படவும் இல்லை. அல்லது இவர்கள் இஸ்லாத்தைத் தழுவ மறுத்ததால் இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற நிலைக்கும் இவர்கள் ஆளாகவில்லை” (பிறகு அந்த தூதுக்குழு அன்ஸாரிகளிடம் தங்கியிருந்தது). மறுநாள் காலையில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “உங்களுடைய சகோதரர்கள் (அன்சாரிகள்) உங்களைக் கண்ணியப்படுத்தி விருந்து உபசாரம் செய்தது எவ்வாறு இருந்தது?” என்று கேட்டார்கள், “மிகவும் நல்ல சகோதரர்கள். எங்களுக்கு மிருதுவான படுக்கைகளை அமைத்துத் தந்தார்கள், உயர்ந்த உணவை உண்ணத் தந்தார்கள், காலையும், மாலையும், எங்களுக்கு எங்களுடைய இரட்சகனுடைய வேதத்தையும், எங்களுடைய நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்துகளையும் கற்றுத்தந்தார்கள்” என்றனர். மதீனாவாசிகளின் இச்செயல் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். பிறகு, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களில் ஒவ்வொருவர் மீதும் தம் கவனத்தைத் திருப்பி விசாரித்தார்கள். அன்னாரிடம், நாங்கள் கற்றதையும், எங்களுக்கு கற்பிக்கப்பட்டவற்றையும் சொன்னோம். எங்களில் சிலருக்கு அத்தஹிய்யாத், சிலருக்கு சூரதுல் ஃபாத்திஹா, சிலருக்கு ஒரு சூரா, சிலருக்கு இரண்டு சூராக்கள், இன்னும் சிலருக்குப் பல சுன்னத்துகள் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன”.
(முஸ்னத் அஹ்மத்)
١٩٢– عَنْ جَابِرٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ أَحْسَنَ مَا دَخَلَ الرَّجُلُ عَلي أَهْلِهِ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ أَوَّلَ اللَّيْلِ.
رواه ابو داؤد، باب في الطروق، رقم:٢٧٧٧
192. “பயணத்திலிருந்து திரும்புகிறவர் தனது வீட்டாரிடம் செல்வதற்குச் சிறந்த நேரம் இரவுடைய ஆரம்ப வேளை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
(இது தன் வருகையைப் பற்றி வீட்டாருக்கு முன்பே செய்தி தெரியப்படுத்தியிருந்தால், அல்லது அவர் அருகில் உள்ள ஊருக்குப் பயணம் சென்றிருந்தால் தான்).
١٩٣– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ قَالَ: نَهَي رَسُولُ اللهِ ﷺ إِذَا أَطَالَ الرَّجُلُ الْغَيْبَةَ، أَنْ يَأْتِيَ أَهْلَهَ طُرُوقاً.
رواه مسلم، باب كراهة الطروق…، رقم: ٤٩٦٧
193. “ஒருவர் தன் குடும்பத்தாரை விட்டு நீண்டகாலம் பிரிந்து வெளியூரில் இருந்தால், அவர் தன் வீட்டிற்கு இரவில் (முன்னறிவிப்பின்றி) திரும்ப வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- நீண்ட பயணம் செய்துவிட்டு இரவு நேரத்தில் முன்னறிவிப்பின்றி வீடு திரும்புவது உசிதமானதல்ல. (ஏனெனில்) முன்னறிவிப்பு இல்லாததால் முதலிலிருந்தே வீட்டார், அவரை வரவேற்க ஏற்பாடு செய்து இருக்கமாட்டார்கள். ஆனால், ஊர் திரும்பும் செய்தி முன்பே அவர்களுக்குத் தெரிந்திருந்தால் இரவில் வீடு திரும்புவதில் எந்தத் தவறும் இல்லை என்பது இந்த ஹதீஸின் மூலம் அறியப்படுகிறது.
(நவவீ)