எண்ணத்தைச் சரிசெய்தல்

அல்லாஹுதஆலாவின் கட்டளைகளை அல்லாஹுதஆலாவின் பொருத்தத்திற்காக மட்டுமே நிறைவேற்றுவது.
குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (بَلَي ق مَنْ اَسْلَمَ وَجْهَهُ لِلّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ اَجْرُهُ عِنْدَ رَبِّهِ ص وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُوْنَ۞).
(البقرة:١١٢)
1.ஆம்! எவனொருவன் நன்மை செய்கிறவனாயிருக்கும் நிலையில் தன்னை (முற்றிலும்) அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்கிறானோ, அவனுக்கு அவனுடைய (நற்) கூலி அவனுடைய ரப்பிடம் இருக்கிறது; (அத்தகைய)வர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்பகரா:112)
وَقَالَ تَعَالي: (وَمَا تُنْفِقُوْنَ اِلاَّ ابْتِغَاءَ وَجْهِ اللهِ۞).
(البقرة:٢٧٢)
2.அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கேயன்றி (பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்.
(அல்பகரா:272)
وَقَالَ تَعَالي: (وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا ج وَمَنْ يُرِدْ ثَوَابَ اْلآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا ط وَسَنَجْزِي الشَّاكِرِيْنَ۞).
(ال عمران:١٤٥)
3.எவரேனும் இவ்வுலக நன்மையை (மட்டும்) நாடி (நற்செயல் செய்வாரா) னால், அதிலிருந்தே அவருக்கு நாம் கொடுப்போம்; இன்னும் எவர் மறுமையின் நன்மையை நாடி (நற்செயல் செய்வாரா)னால் அவருக்கு அதிலிருந்து நாம் கொடுப்போம்; நன்றியுள்ளவர்களுக்கு விரைவில் நாம் (நற்)கூலி வழங்குவோம்.
(ஆலுஇம்ரான்:145)
وَقَالَ تَعَالي: (وَمآ اَسْئَلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ ج اِنْ اَجْرِيَ اِلاَّ عَلَي رَبِّ الْعَالَمِيْنَ۞).
(الشعراء:١٤٥)
4.இதற்காக எந்தக் கூலியையும் நான் உங்களிடம் கேட்கவில்லை; என்னுடைய கூலி அகிலத்தாரின் ரப்பிடமே தவிர (வேறு எவரிடத்தும்) இல்லை”.
(அஷ்ஷுரா:145)
وَقَالَ تَعَالي: (وَمآ آتَيْتُمْ مِنْ زَكوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللهِ فَاُولئِكَ هُمُ الْمُضْعِفُوْنَ۞).
(الروم:٣٩)
5.அல்லாஹ்வின் திருமுகத்தை (திருப்பொருத்தத்தை) நாடியவர்களாக ஜகாத்திலிருந்து நீங்கள் கொடுப்பது (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்); அத்தகையோர் தாம் (தம் நன்மைகளை) இரட்டிப்பாக்கிக் கொள்கிறவர்கள்.
(அர்ரூம்:39)
وَقَالَ تَعَالي: (وَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ۞).
(الاعراف:٢٩)
6.நீங்கள் அவனுக்கே இந்த மார்க்கத்தைக் கலப்பற்றதாக்கி வைத்தவர்களாக, அவனையே நீங்கள் பிரார்த்தியுங்கள்.
(அல்அஃராஃப்:29)
وَقَالَ تَعَالي: (لَنْ يَنَالَ اللهَ لُحُوْمُهَا وَلاَ دِمآؤُهَا وَلكِنْ يَنَالُهُ التَّقْوَي مِنْكُمْ۞).
(الحج:٣٧)
7.(பலிப் பிராணிகளாகிய) அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருக்காலும் அல்லாஹ்வை அடைவதில்லை; என்றாலும் உங்களிலுள்ள (இறை) அச்சம் தான் அவனை அடையும்.
(அல்ஹஜ்:37)
ஹதீஸ்கள்:-
١– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اللهَ لاَ يَنْظُرُ اِلَي صُوَرِكُمْ وَاَمْوَالِكُمْ، وَلكِنْ يَنْظُرُ اِلَي قُلُوْبِكُمْ وَاَعْمَالِكُمْ.
رواه مسلم، باب تحريم ظلم المسلم…، رقم:٦5٤٣
1,”நிச்சயமாக அல்லாஹுதஆலா உங்களின் உருவங்களையோ, செல்வங்களையோ பார்க்கமாட்டான். ஆயினும், உங்களுடைய உள்ளங் களையும், செயல்களையுமே பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- உங்களின் உருவங்கள், செல்வங்களின் அடிப்படையில் அல்லாஹுதஆலாவின் பொருத்தம் முடிவு செய்யப்படுவதில்லை. மாறாக, உங்களது உள்ளங்கள், செயல்களைப் பார்த்து உள்ளத்தில் எந்த அளவு தூய எண்ணம் இருந்தது என்பதைப் பார்த்து முடிவு செய்யப்படுகிறது.
٢– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّمَا اْلاَعْمَالُ بِالنِّيَّةِ، وَاِنَّمَا لِامْرِءٍ مَا نَوَي، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ اِلَي اللهِ وَرَسُوْلِهِ فَهِجْرَتُهُ اِلَي اللهِ وَرَسُوْلِهُ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ اِلَي دُنْيَا يُصِيْبُهَا اَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ اِلَي مَا هَاجَرَ اِلَيْهِ.
رواه البخاري، باب النية في الايمان، رقم:٦٦٨٩
2.”அனைத்து அமல்களுடைய கூலிகளும் எண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும், மனிதன் எதை எண்ணுகிறானோ அது தான் அவனுக்குக் கிடைக்கும். எனவே, எவர் அல்லாஹுதஆலாவுக்காகவும், அவனது ரஸூலுக்காகவும் ஹிஜ்ரத் (குடிபெயர்ந்தாரோ) செய்தாரோ, அல்லாஹுதஆலா, அவனது ரஸூலின் திருப்தியைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் (குடிபெயர்ந்தாரோ) ஹிஜ்ரத் செய்தாரோ, அந்த ஹிஜ்ரத்தின் நன்மை அவருக்குக் கிடைக்கும். எவர் உலக நோக்கத்திற்காகவோ, பெண்ணை மணமுடிக்கவோ ஹிஜ்ரத் செய்தாரோ, (அவரது ஹிஜ்ரத் அல்லாஹுதஆலா, அவனது ரஸூலுக்காக இருக்காது, மேலும்) வேறு எந்த நோக்கத்திற்காக ஹிஜ்ரத் செய்தாரோ (அல்லாஹுதஆலாவிடத்திலும்) அவரது ஹிஜ்ரத் அந்த நோக்கத்திற்கே என்று முடிவு செய்யப்படும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلي نِيَّاتِهِمْ.
رواه ابن ماجه، باب النية، رقم: ٤٢٢٩
3.”(கியாமத் நாளன்று) மனிதர்களை அவர்களுடைய எண்ணத்திற்கேற்பவே எழுப்பப்படும்” (ஒவ்வொரு மனிதருடனும் அவரது எண்ணத்திற்கேற்றவாறு நடந்து கொள்ளப்படும்) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٤– عَنْ عَائِشَةَ ؓ قاَلَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَغْزُوْ جَيْشٌ الْكَعْبَةَ، فَاِذَا كَانُوْا بِبَيْدَاءَ مِنَ اْلاَرْضِ يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ ﷺ كَيْفَ يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيْهِمْ اَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ؟ قَالَ: يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُوْنَ عَلَي نِيَّاتِهِمْ.
رواه البخاري، باب ما ذكر في الاسواق، رقم:٢١١٨
4.”புனித கஃபத்துல்லாஹ்வைத் தாக்கும் எண்ணத்துடன் ஒரு படை புறப்படும். அப்படை செடி, கொடிகளற்ற ஒரு மைதானத்தை அடைந்ததும் அவர்கள் அனைவரையும் பூமியில் புதைந்துவிடச் செய்யப்படும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, “யாரஸூலல்லாஹ், அனைவரும் எவ்வாறு பூமியில் புதைந்து போவார்கள்? அங்கு கடைவீதியில் வியாபாரம் செய்வோரும் இருப்பார்கள், அப்படையில் சேராதவர்களும் இருப்பார்களே!” என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதற்கு, “அனைவரும் புதைந்துவிடுவர், பிறகு தத்தமது எண்ணத்திற்கேற்ப அவர்கள் எழுப்பப்படுவார்கள். அதாவது, கியாமத் நாளில் அவர்களுடைய எண்ணத்திற்கேற்ப அவர்களுடன் நடந்து கொள்ளப்படும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٥– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَقَدْ تَرَكْتُمْ بِالْمـَدِيْنَةِ اَقْوَامًا مَا سِرْتُمْ مَسِيْرًا، وَلاَ اَنْفَقْتُمْ مِنْ نَفَقَةٍ، وَلاَ قَطَعْتُمْ مِنْ وَادٍ اِلاَّ وَهُمْ مَعَكُمْ فِيْهِ قَالُوْا: يَا رَسُوْلَ اللهِﷺ وَكَيْفَ يَكُوْنُوْنَ مَعَنَا وَهُمْ بِالْمَدِيْنَةِ؟ قَالَ: حَبَسَهُمُ الْعُذْرُ.
رواه ابو داؤد، باب الرخصة في القعود من العذر، رقم:٢٥٠٨
5.”நீங்கள் கடந்த வழி, செலவு செய்த பொருள், நீங்கள் கடந்த பள்ளத்தாக்கு ஆகியவைகளில் உங்களுக்குக் கிடைக்கும் நன்மையில் கூட்டாக உள்ள சிலரை நீங்கள் மதீனாவில் விட்டுவிட்டு வந்துள்ளீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, “யாரஸூலல்லாஹ், அவர்கள் மதீனாவில் இருக்கும் நிலையில் எப்படி எங்களுடன் நன்மையில் கூட்டாக முடியும்?” என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். (அவர்கள் உங்களுடன் வெளியேற ஆசைப்பட்டனர். ஆனால்) “இயலாமை அவர்களைத் தடுத்துவிட்டது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٦– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ فِيْمَا يَرْوِيْ عَنْ رَبِّهِ قَالَ: قَالَ: اِنَّ اللهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَاِنْ هَمَّ بِهَا وَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ اِلَي سَبْعِ مِائَةِ ضِعْفٍ اِلَي اَضْعَافٍ كَثِيْرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَاِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً.
رواه البخاري، باب من هم بحسنة أو بسيئة، رقم:٦٤٩١
6.”நன்மை, தீமைகளை எழுதுவதில், அல்லாஹுதஆலா மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான்” என்று கூறிவிட்டு, “ஒருவர் ஒரு நற்செயல் செய்ய நாடினார். பிறகு, (ஏதேனுமொரு காரணத்தால்) செய்ய முடியவில்லையென்றால் அல்லாஹுதஆலா அவருக்கு முழுமையான ஒரு நன்மையை எழுதுகிறான். அவர் நற்செயல் செய்ய நாடியபின் அதைச் செய்துவிட்டால், அவருக்கு அல்லாஹுதஆலா பத்து நன்மையிலிருந்து எழுநூறு வரை, அதைவிடவும் அதிகமாக–பன்மடங்காக எழுதுகிறான். ஒருவன் தீயசெயல் செய்ய நினைத்து, பிறகு அதைவிட்டு விலகிவிட்டா றென்றால், அல்லாஹுதஆலா அவருக்கு முழுமையான ஒரு நன்மையை எழுதுகிறான். (தீயதை விட்டும் விலகி இருந்தது அல்லாஹுதஆலாவின் பயத்தின் காரணமாகலாம்) அவன் பாவம் செய்ய நாடி அந்தப் பாவத்தைச் செய்துவிட்டால் அல்லாஹுதஆலா அவனுக்கு ஒரு தீமையை மட்டுமே எழுதுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٧– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: قَالَ رَجُلٌ: لَأَ تَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ عَلي سَارِقٍ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ زَانِيَةٍ، فَأَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ اللَّيْلَةَ عَلي زَانِيَةٍ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ، عَلي زَانِيَةٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ غَنِيٍّ، فَاَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ عَلي غَنِيٍّ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ عَلي سَارِقٍ، وَعَلي زَانِيَةٍ، وَعَلي غَنِيٍّ، فَاُتِيَ فَقِيْلَ لَهُ: اَمَّا صَدَقَتُكَ عَلي سَارِقٍ فَلَعَلَّهُ اَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ، وَاَمَّا الزّانِيَةُ فَلَعَلَّهَا اَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا، وَاَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ اَنْ يَعْتَبِرَ، فَيُنْفِقَ مِمَّا اَعْطَاهُ اللهُ.
رواه البخاري، باب اذا تصدق علي غني…،رقم:١٤٢١
7. (பனீஇஸ்ராயிலைச் சேர்ந்த) ஒரு மனிதர் (இன்று இரவு இரகசியமாக நான்) “தர்மம் செய்வேன்‘ என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார். அவ்வாறே, இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக் கொண்டு வெளியேறினார், விவரம் அறியாமல் இரகசியமாக ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். (நேற்றிரவு) “திருடனுக்கு ஸதகா கொடுக்கப்பட்டுள்ளது‘ என்று மறுநாள் காலையில் மக்களிடையே (பேசப்பட்டது) ஸதகாச் செய்தவர். “யால்லாஹ், (திருடனுக்கு ஸதகா போய்ச் சேர்ந்ததற்கும்) உனக்கே புகழ் அனைத்தும்! (இல்லையென்றால் அவனைவிடவும் கெட்ட மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?) என்று சொன்னார். பிறகு, அவர் “முந்திய ஸதகா வீணாகிவிட்டது, இன்று இரவு(ம்) ஸதகா செய்வேன்” என உறுதி கொண்டார். அதன்படியே இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். (விபரம் அறியாமல்) ஒரு விபச்சாரிக்கு அந்த ஸதகாவைக் கொடுத்துவிட்டார். “நேற்றிரவு விபச்சாரிக்கு ஸதகா கொடுக்கப்பட்டுள்ளது‘ என மறுநாள் காலையில் மக்களுக்கிடையே பேசப்பட்டது. “யால்லாஹ்! விபச்சாரிக்கு (ஸதகா போய்ச் சேர்ந்ததில்) உனக்கே புகழ் அனைத்தும்” (என்னுடைய பொருள் அதற்கும் தகுதியானதல்லவே!) என்று கூறினார். பிறகு (மூன்றாம் முறையாக) “இன்று இரவு அவசியம் ஸதகாச் செய்வேன்” என்று உறுதி கொண்டார். அவ்வாறே, இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டவர், அதை ஒரு பணக்காரனுடைய கையில் கொடுத்துவிட்டார். “நேற்றிரவு செல்வந்தருக்கு ஸதகா கொடுக்கப்பட்டிருக்கிறது‘ என மறுநாள் காலையில் மக்களுக்கிடையே பேசப்பட்டது. ஸதகாக் கொடுத்தவர், “யால்லாஹ்! திருடன், விபச்சாரி, செல்வந்தர் ஆகியோருக்கு ஸதகாவைச் சேர்த்ததற்கு, உனக்கே புகழ் யாவும்! (என் பொருள் இத்தகையவர்களுக்குக் கொடுக்கவும் தகுதியற்றது) எனக் கூறினார். அவருக்கு கனவில், (உன்னுடைய ஸதகா ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது) “திருடனுக்கு உனது ஸதகா(வை கொடுக்க வைத்ததின் காரணம்) அவன் திருந்தி தவ்பாச் செய்து திருட்டை விட்டுவிடலாம் என்பதற்காகவே! விபச்சாரிக்கு, அவள் விபச்சாரத்திலிருந்து தவ்பா செய்துவிடலாம். விபச்சாரம் செய்யாமலும் நமக்கு அல்லாஹுதஆலா கொடுத்திருக்கிறான் என்பதைப் பார்த்து அவளுக்கு ரோஷம் வரும் என்பதற்காக ஸதகாவை கொடுக்க வைக்கப் பட்டது. செல்வந்தருக்கு அவர் (அல்லாஹுதஆலாவின் அடியார்கள் எவ்வாறெல்லாம் ரகசியமாக ஸதகாச் செய்கிறார்கள் என்ற) படிப்பினை பெற்று, அல்லாஹுதஆலா தனக்குக் கொடுத்த பொருளிலிருந்து அவரும் (அல்லாஹுதஆலாவின் பாதையில்) செலவு செய்யலாம் என்பதற்காக ஸதகாவைக் கொடுக்கவைக்கப்பட்டது” என சொல்லப்பட்டது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- அந்த மனிதரின் தூய எண்ணத்தின் காரணமாக மூன்று ஸதகாக்களையும் அல்லாஹுதஆலா அங்கீகரித்துக் கொண்டான்.
٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّي اَوَوْا الْمَبِيْتَ اِلَي غَارٍ فَدَخَلُوْهُ، فَانْحَدَرَتْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهَا الْغَارَ، فَقَالُوْا: اِنَّهُ لاَ يُنْجِيْكُمْ مِنْ هذِهِ الصَّخْرَةِ اِلاَّ اَنْ تَدْعُوا اللهَ بِصَالِحِ اَعْمَالِكُمْ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: اَللّهُمَّ! كَانَ لِيْ اَبَوَانِ شَيْخَانِ كَبِيْرَانِ، وَكُنْتُ لاَ اَغْبِقُ قَبْلَهُمَا اَهْلاً وَلاَ مَالاً فَنَأَي بِيْ فِيْ طَلَبِ شَيْءٍ يَوْمًا فَلَمْ اُرِحْ عَلَيْهِمَا حَتَّي نَامَا فَحَلَبْتُ لَهُمَا غَبُوْقَهُمَا فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ، فَكَرِهْتُ اَنْ اَغْبِقَ قَبْلَهُمَا اَهْلاً اَوْ مَالاً، فَلَبِثْتُ وَالْقَدَحُ عَلي يَدَيَّ اَنْتَظِرُ اِسْتِيْقَاظَهُمَا حَتَّي بَرَقَ الْفَجْرُ فَاسْتَيْقَظَا فَشَرِبَا غَبُوْقَهُمَا، اَللّهُمَّ اِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ مِنْ هذِهِ الصَّخْرَةِ، فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيْعُوْنَ الْخُرُوْجَ، قَالَ النَّبِيُّ ﷺ: وَقاَلَ اْلآخَرُ: اَللّهُمَّ! كَانَتْ لِيْ بِنْتُ عَمٍّ، كَانَتْ اَحَبَّ النَّاسِ اِلَيَّ فَاَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَامْتَنَعَتْ مِنِّيْ حَتَّي اَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِيْنَ فَجَاءَتْنِيْ فَاَعْطَيْتُهَا عِشْرِيْنَ وَمِائَةَ دِيْنَارٍ عَلي اَنْ تُخَلِّيَ بَيْنِيْ وَبَيْنَ نَفْسِهَا فَفَعَلَتْ، حَتَّي اِذَا قَدَرْتُ عَلَيْهَا قَالَتْ: لاَ اُحِلُّ لَكَ اَنْ تَفُضَّ الْخَاتَمَ اِلاَّ بِحَقِّهِ، فَتَحَرَّجْتُ مِنَ الْوُقُوْعِ عَلَيْهَا فَانْصَرَفْتُ عَنْهَا وَهِيَ اَحَبُّ النَّاسِ اِلَيَّ فَتَرَكْتُ الذَّهَبَ الَّذِيْ اَعْطَيْتُهَا، اَللّهُمَّ اِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ غَيْرَ اَنَّهُمْ لاَ يَسْتَطِيْعُوْنَ الْخُرُوْجَ مِنْهَا، قَالَ النَّبِيُّ ﷺ: وَقاَلَ الثَّالِثُ: اَللّهُمَّ! اِنِّيْ إِسْتَأْجَرْتُ اُجَرَاءَ فَاَعْطَيْتُهُمْ اَجْرَهُمْ غَيْرَ رَجُلٍ وَاحِدٍ، تَرَكَ الَّذِيْ لَهُ وَذَهَبَ ، فَثَمَّرْتُ اَجْرَهُ حَتَّي كَثُرَتْ مِنْهُ اْلاَمْوَالُ فَجَاءَنِيْ بَعْدَ حِيْنٍ فَقَالَ: يَا عَبْدَ اللهِ! اَدِّ اِلَيَّ اَجْرِيْ، فَقُلْتُ لَهُ: كُلُّ مَا تَرَي مِنْ أَجْرِكَ مِنَ اْلاِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ وَالرَّقِيْقِ فَقَالَ: يَا عَبْدَ اللهِ! لاَ تَسْتَهْزِئئْ بِيْ، فَقُلْتُ: اِنِّيْ لاَ اَسْتَهْزِئئُ بِكَ، فَاَخَذَهُ كُلَّهُ فَاسْتَاقَهُ فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا، اَللّهُمَّ! فَاِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ فَخَرَجُوْا يَمْشُوْنَ.
رواه البخاري، باب من استأجر اجيرا فترك اجره…، رقم:٢٢٧٢
8. “உங்களுக்கு முன் இருந்த ஒரு சமுதாயத்தினரில் மூன்று நபர்கள் ஒன்றாகப் பயணம் செய்தார்கள். (இரவு நேரமாகிவிட்டதால்) இரவைக் கழிக்க ஒரு குகையில் நுழைந்தார்கள். அந்த நேரம் மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகையின் வாயிலை அடைத்துவிட்டது. (இதைப்பார்த்த) அவர்கள், “எல்லோரும் தத்தமது நற்செயல்கள் மூலம் அல்லாஹுதஆலாவிடம் துஆக் கேட்டுத்தான் இந்தப் பாறையிலிருந்து ஈடேற்றம் பெறமுடியும்” என்று சொன்னார்கள். (அவ்வாறே அவர்கள் தத்தமது நற்செயல்களின் பொருட்டால் துஆச் செய்தார்கள்) அவர்களில் ஒருவர், “யாஅல்லாஹ், (உனக்குத் தெரியும்) எனது பெற்றோர் மிக வயது முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு முன்னதாக எனது மனைவி, மக்கள், அடிமைகளுக்குப் பால் கொடுக்கமாட்டேன். ஒரு நாள் நான் ஒரு பொருளைத் தேடி வெகுதூரம் சென்று விட்டுத் திரும்பி வந்தபோது பெற்றோர் தூங்கி விட்டிருந்தனர். என்றாலும், நான் அவர்களுக்காக மாலை நேரப் பாலைக் கறந்து (அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அவர்களிடம் சென்றபோது. அவர்கள் (அப்பொழுதும்) உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. அவர்களுக்குமுன் மனைவி, மக்கள், அடிமைகளுக்குப் பால் கொடுப்பதையும் விரும்பவில்லை. நான் பால் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு, அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தேன். காலைப்பொழுது ஆகிவிட்டது, அவர்கள் விழித்துவிட்டார்கள், (நான் அவர்களுக்குப் பாலைக் கொடுத்தேன்) அந்நேரத்தில் அவர்கள் முதல் நாள் மாலை நேரத்துப் பாலைக் குடித்தார்கள். யாஅல்லாஹ், உன்னுடைய திருப்பொருத்தத்திற்காக இச்செயலை செய்திருந்தேனென்றால், இப்பொழுது இந்த பாறையின் காரணமாக சிரமத்தில் சிக்கி இருக்கும் எங்களை இதிலிருந்து ஈடேற்றம் பெறச் செய்வாயாக!” என்று துஆச் செய்தார். அவருடைய துஆவின் பலனால் அந்தப் பாறை சிறிதளவு விலகியது. ஆனால், வெளியேற முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், “இரண்டாம் மனிதர், “யாஅல்லாஹ்! என்னுடைய சிறிய தந்தைக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் எனக்கு மிக அன்புக்குரியவளாக இருந்தாள். நான் (ஒருமுறை) அவளுடன் என் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள நினைத்தேன். ஆனால், அவள் அதற்கு இணங்கவில்லை. இந்நிலையில் வறுமையின் காரணமாக அவள் (என்னிடம்) வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. “அவள் என்னைத் தனிமையில் சந்திக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் அவளுக்கு நான் நூற்றி இருபது தங்க நாணயங்களைக் கொடுத்தேன், அவளும் அதற்குச் சம்மதித்துவிட்டாள். இறுதியில் (என் இச்சையைப் பூர்த்தி செய்யச் சரியான சந்தர்ப்பம் பெற்றிருந்த போது) “அநியாயமாக இந்த முத்திரையை உடைப்பதை உனக்கு ஆகுமானதாக நான் கருதவில்லை” என்று சொன்னாள். (இதைக்கேட்டதும்) நான் என் தீய எண்ணத்தை விட்டுவிட்டேன், உண்மையில் அவள் எனக்கு மிகப்பிரியமானவளாக இருந்தும், அவளை விட்டும் விலகிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த அந்தத் தங்கக் காசுகளையும் விட்டுவிட்டேன். யாஅல்லாஹ்! உன்னுடைய பொருத்தத்திற்காக இச்செயலை நான் செய்திருந்தால், எங்களின் இந்தச் சிரமத்தை நீக்குவாயாக!” என்று துஆ செய்தார், அவ்வாறே பாறை இன்னும் கொஞ்சம் விலகியது, ஆயினும் வெளியே வரமுடியவில்லை. மூன்றாமவர், “யாஅல்லாஹ், நான் கூலியாட்கள் சிலரை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அனைவருக்கும் நான் கூலியைக் கொடுத்துவிட்டேன். ஒருவர் மட்டும் கூலிவாங்காமல் சென்றுவிட்டார். நான் அவருடைய கூலிப் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்தேன். இறுதியாக அவர் செல்வம் பெருகிவிட்டது, சிலநாட்கள் கழித்து ஒரு நாள் அவர் வந்தார், வந்தவர், “அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குத் தாருங்கள்” என்றார். அதற்கு நான், “நீ பார்க்கின்ற இந்த ஒட்டகம், மாடு, ஆடுகள் மற்றும் அடிமைகள் இவையெல்லாம் உம்முடைய கூலிப்பணம் தான்!”. உம்முடைய கூலிப் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்ததால் இந்த லாபங்கள் கிடைத்துள்ளன” என்றேன். “அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்” என்று அவர் கூறினார்”, “நான் கேலி செய்யவில்லை” (உண்மையைக் கூறுகிறேன்) என்றேன். (என்னுடைய விளக்கத்திற்குப்) பிறகு அவர் பொருள்கள் அனைத்தையும் கொண்டு சென்று விட்டார், எதையும் விட்டுவைக்கவில்லை. யாஅல்லாஹ், நான் இந்தச் செயலை உன்னுடைய பொருத்தத்திற்காகவே செய்திருந்தேனென்றால், நாங்கள் சிக்கியுள்ள இந்தச் சிரமத்தை நீக்குவாயாக!” என்று துஆச் செய்தார். அப்படியே அந்தப் பாறை முழுமையாக விலகியது, (குகையின் வாசல் திறந்து கொண்டது) எல்லோரும் வெளியேறிவிட்டனர்” என்ற ஹதீஸைத் தாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி
٩– عَنْ اَبِيْ كَبْشَةَ اْلاَنْمَارِيِّ ؓ اَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: ثَلاَثٌ اُقْسِمُ عَلَيْهِنَّ وَاُحَدِّثُكُمْ حَدِيْثًا فَاحْفَظُوْهُ، قَالَ: مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ، وَلاَ ظُلِمَ عَبْدٌ مَظْلَمَةً صَبَرَ عَلَيْهَا اِلاَّ زَادَهُ اللهُ عِزًّا، وَلاَ فَتَحَ عَبْدٌ بَابَ مَسْئَلَةٍ اِلاَّ فَتَحَ اللهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ – اَوْ كَلِمَةً نَحْوَهَا – وَاُحَدِّثُكُمْ حَدِيْثًا فَاحْفَظُوْهُ، قَالَ: اِنَّمَا الدُّنْيَا لِأَرْبَعَةِ نَفَرٍ: عَبْدٍ رَزَقَهُ اللهُ مَالاً وَعِلْمًا فَهُوَ يَتَّقِيْ رَبَّهُ فِيْهِ وَيَصِلُ بِهِ رَحِمَهُ وَيَعْلَمُ لِلّهِ فِيْهِ حَقًّا فَهذَا بِأَفْضَلِ الْمَنَازِلِ. وَعَبْدٍ رَزَقَهُ اللهُ عِلْمًا وَلَمْ يَرْزُقْهُ مَالاً فَهُوَ صَادِقُ النِّيَّةِ، يَقُوْلُ: لَوْ اَنَّ لِيْ مَالاً لَعَمِلْتُ فِيْهِ بِعَمَلِ فُلاَنٍ فَهُوَ بِنِيَّتِهِ فَاَجْرُهُمَا سَوَاءٌ، وَعَبْدٍ رَزَقَهُ اللهُ مَالاً وَلَمْ يَرْزُقْهُ عِلْمًا فَهُوَ يَخْبِطُ فِيْ مَالِهِ بِغَيْرِ عِلْمٍ لاَ يَتَّقِيْ فِيْهِ رَبَّهُ وَلاَ يَصِلُ فِيْهِ رَحِمَهُ، وَلاَ يَعْلَمُ لِلّهِ فِيْهِ حَقًّا فَهذَا بَأَخْبَثِ الْمَنَازِلِ، وَعَبْدٍ لَمْ يَرْزُقْهُ اللهُ مَالاً وَلاَ عِلْمًا فَهُوَ يَقُوْلُ: لَوْ اَنَّ لِيَ مَالاً لَعَمِلْتُ فِيْهِ بِعَمَلِ فُلاَنٍ فَهُوَ بِنِيَّتِهِ فَوِزْرُهُمَا سَواَءٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء مثل الدنيا مثل أربعة نفر، رقم:٢٣٢٥
9. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூகப்ஷா அன்மாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நான் சத்தியமிட்டு மூன்று காரியங்களைக் கூறுகிறேன். அதற்குப் பிறகு இன்னோரு செய்தியையும் குறிப்பாக உனக்குக் கூறுவேன். அதை நல்ல முறையில் பாதுகாத்துக்கொள்ளவும். (நான் சத்தியமிட்டுக் கூறும் மூன்று காரியங்களில் முதலாவது) ஓர் அடியானின் பொருள், தர்மம் செய்வதால் குறைந்து போவதில்லை. (இரண்டாவது) அநீதம் செய்யப்பட்டவர் பொறுமை மேற்கொண்டால் அல்லாஹுதஆலா அந்தப் பொறுமையின் காரணமாக அவரது கண்ணியத்தை உயர்த்துகிறான். (மூன்றாவது) யார் மக்களிடம் யாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்வாரோ, அல்லாஹுதஆலா அவருக்கு வறுமையின் வாசலைத் திறந்து விடுவான்”. பிறகு, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒரு செய்தியைக் கூறுகிறேன் நினைவில் வைப்பீராக, உலகில் நான்குவிதமான மனிதர்கள் உள்ளனர். முதலாம் வகை மனிதர், அல்லாஹுதஆலா பொருளையும், மார்க்கக் கல்வியையும் அவருக்கு கொடுத்திருந்தான். (தனது கல்வியால்) தன்னுடைய பொருளை, (அல்லாஹுதஆலாவுக்குப் பொருத்தமான வழியில் செலவழிக்கிறேனா? இல்லையா?) உறவு முறையைப் பேணுவதில் செலவு செய்கிறேனா? இல்லையா? (என்பதில்) அல்லாஹுதஆலாவை பயப்படுகிறார். இந்த செல்வத்தில் அல்லாஹுதஆலாவுக்குரிய கடமை உள்ளது என்பதையும் அறிந்திருக்கிறார். (அதனால் செல்வத்தை நல்ல வழிகளில் செலவு செய்கிறார்) இவர் கியாமத் நாளன்று மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார். இரண்டாம் வகை மனிதர், அவருக்கு அல்லாஹுதஆலா மார்க்க ஞானத்தைக் கொடுத்து செல்வத்தைக் கொடுக்கவில்லை. அவர் உண்மையான எண்ணமுள்ளவராக இருக்கிறார். மேலும், அவர் “தனக்கும் செல்வம் கிடைத்திருந்தால் தானும் இன்னாரைப் போன்று (நல்ல வழிகளில்) செலவழிப்பேன்‘ என்று ஆசைப்படுகிறார். அதனால் (அல்லாஹுதஆலா) அவருடைய நல்ல எண்ணத்தின் காரணமாக (முந்தியவரைப் போல் இவருக்கும் நன்மை கொடுக்கிறான்) இவ்வாறு இவ்விருவருடைய நன்மையும் சமமாகிவிடுகிறது. மூன்றாம் வகை மனிதர், அவருக்கு அல்லாஹுதஆலா செல்வத்தை கொடுத்திருந்தான். ஆனால், மார்க்க ஞானத்தைக் கொடுக்கவில்லை. அவர் அறிவீனத்தால் தனது செல்வத்தை தவறான முறையில் (வீண்) செலவு செய்துவிடுகிறார். அவர் தனது செல்வத்தைப் பற்றி அல்லாஹுதஆலாவையும் அஞ்சுவதில்லை. உறவு முறைகளை பேணுவதுமில்லை. இந்தப் பொருளில் அல்லாஹுதஆலாவுக்குரிய கடமை என்னவென்பதை அறியவுமில்லை. இவர் கியாமத் நாளன்று மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பார். நான்காம் வகை மனிதர், இவருக்கு அல்லாஹுதஆலா செல்வமும் அளிக்கவில்லை, மார்க்க ஞானத்தையும் அளிக்கவில்லை. “என்னிடம் பொருள் இருந்தால் தானும் இன்னாரைப் போல் (மூன்றாம் வகை மனிதரைப் போல்) வீண் செலவு செய்திருப்பேனே!’ என்று ஆசைப்படுகிறார், இவர் இவருடைய தீய எண்ணத்தின் காரணமாக தண்டிக்கப்படுவார். மேலும், இவரும் மூன்றாம் வகை மனிதரும் பாவத்தில் சரிசமமாவர். (நல்ல செயலுக்குரிய கூலியைப் போன்று நல்ல எண்ணத்துக்கு கூலியும் தீய செயலுக்குரிய தண்டனையைப் போன்று தீய எண்ணத்துக்குரிய தண்டனையும் கிடைக்கும் என்பதாம்).
(திர்மிதீ)
١٠– عَنْ رَجُلٍ مِنْ اَهْلِ الْمَدِيْنَةِ قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ ؓ اِلَي عَائِشَةَؓ اَنِ اكْتُبِيْ اِلَيَّ كِتَابًا تُوْصِيْنِيْ فِيْهِ وَلاَ تُكْثِرِيْ عَلَيَّ، قَالَ: فَكَتَبَتْ عَائِشَةُؓ اِلَي مُعَاوِيَةَؓ: سَلاَمٌ عَلَيْكَ اَمَّا بَعْدُ فَاِنِّيْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: «مَنِ الْتَمَسَ رِضَا اللهِ بِسَخَطِ النَّاسِ كَفَاهُ اللهُ مُؤْنَةَ النَّاسِ، وَمَنِ الْتَمَسَ رِضَا النَّاسِ بِسَخَطِ اللهِ وَكَلَهُ اللهُ اِلَي النَّاسِ» وَالسَّلاَمُ عَلَيْكَ.
رواه الترمذي، باب منه عاقبة من التمس رضا الناس…، رقم:٢٤١٤
10. மதீனா முனவ்வராவைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார், “ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள், தமக்கு உபதேசம் எழுதி அனுப்பும் படியும், அது சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதாகவும், ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஸலாம் எழுதியதற்குப் பிறகு, “ஒருவர் மக்களுடைய வெறப்பையும் பொருட்படுத்தாமல் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தைத் தேடுவதில் ஈடுபட்டிருந்தால், மக்களுடைய வெறுப்பின் தீங்கைவிட்டுப் பாதுகாக்க அல்லாஹுதஆலா அவருக்குப் போதுமானவனாக ஆகிவிடுவான். மேலும், ஒருவன் அல்லாஹுதஆலாவின் வெறுப்பை பொருட்படுத்தாமல் மக்களைத் திருப்திபடுத்துவதில் ஈடுபட்டிருந்தால், அல்லாஹுதஆலா அவனை மக்களிடமே ஒப்படைத்து விடுவான்” என நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். தங்களின் மீது சலாம் உண்டாகட்டும் என்று ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்களுக்கு பதில் எழுதி அனுப்பினார்கள்.
(திர்மிதீ)
١١– عَنْ اَبِيْ اُمَامَةَ الْبَاهِلِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اللهَ لاَ يَقْبَلُ مِنَ الْعَمَلِ اِلاَّ مَا كَانَ لَهُ خَالِصًا وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ.
رواه النسائي، باب من غزا يلتمس الاجر والذكر، رقم:٣١٤٢
11. “செயல்களில், அல்லாஹ்வுக்காக வேண்டி மட்டும் செய்யப்பட்ட செயலையும் அல்லாஹுதஆலாவை திருப்திபடுத்த செய்யப்படும் செயலை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
١٢– عَنْ سَعْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا يَنْصُرُ اللهُ هذِهِ اْلاُمَّةَ بِضَعِيْفِهَا بِدَعْوَتِهِمْ وَصَلاَتِهِمْ وَاِخْلاَصِهِمْ.
رواه النسائي، باب الاستنصار بالضعيف، رقم:٣١٨٠
12. “தகுதி, ஆற்றலின் அடிப்படையில் அல்லாஹுதஆலா இந்த உம்மத்துக்கு உதவி செய்வதில்லை, மாறாக இந்த உம்மத்திலுள்ள பலவீனமான, இயலாதவர்களின் துஆக்கள், தொழுகைகள், அவர்களின் தூய எண்ணத்தின் காரணமாகவே உதவி செய்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
١٣– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ اَتَي فِرَاشَهُ وَهُوَ يَنْوِيْ اَنْ يَقُوْمَ يُصَلِّيْ مِنَ اللَّيْلِ فَغَلَبَتْهُ عَيْنَاهُ حَتَّي اَصْبَحَ، كُتِبَ لَهُ مَا نَوَي وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ .
رواه النسائي، باب من اتي فراشه…، رقم:١٧٨٨
13. “ஒருவர் (உறங்குவதற்காக) தன் படுக்கைக்கு வந்தார், இரவில் எழுந்து தஹஜ்ஜூத் தொழவேண்டுமென்று நாடி இருந்தார், பிறகு தூக்கம் மிகைத்துவிட்டதால் சுபுஹுக்கு தான் கண்விழித்தார், இவருக்கு தஹஜ்ஜூத்துடைய நன்மை எழுதப்படும். அவருடைய தூக்கம் அவருடைய இறைவனிடமிருந்து அவருக்கு வெகுமதியாகக் கிடைத்துவிட்டது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
١٤– عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ، فَرَّقَ اللهُ عَلَيْهِ اَمْرَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا اِلاَّ مَا كُتِبَ لَهُ، وَمَنْ كَانَتِ اْلآخِرَةُ نِيَّتَهُ، جَمَعَ اللهُ لَهُ اَمْرَهُ، وَجَعَلَ غِنَاهُ فِيْ قَلْبِهِ، وَاَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ.
رواه ابن ماجه، باب الهم بالدنيا، رقم:٤١٠٥
14. “தன் உலக தேவைகள் நிறைவடைய வேண்டும் என்ற நோக்குடன் எவர் செயல்படுவாரோ அவருடைய காரியங்களை அல்லாஹுதஆலா சிதறச் செய்துவிடுகிறான். ஒவ்வொரு வேலையிலும் அவருக்குச் சிரமத்தை உண்டாக்கிவிடுகிறான். வறுமை (யின் பயத்தை) அவனுடைய கண்களுக்கு முன்னால் கொண்டுவந்துவிடுகிறான். அவனுடைய விதியில் எழுதப்பட்டது தான் அவனுக்குக் கிடைக்கும். மறுமை வாழ்க்கை சீர்பெற வேண்டும் என்ற நிய்யத் எவருடைய உள்ளத்தில் இருக்குமோ, அவருடைய வேலைகளை அல்லாஹுதஆலா இலேசாக்கிவிடுகின்றான். அவருடைய உள்ளத்தை சீமானாக்கிவிடுகிறான், உலகம் இழிவடைந்து அவரிடம் வந்து சேர்கிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜா
١٥– عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: ثَلاَثُ خِصَالٍ لاَ يَغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمٍ: اِخْلاَصُ الْعَمَلِ لِلّهِ وَمُنَاصَحَةُ وُلاَةِ اْلاَمْرِ، وَلُزُوْمُ الْجَمَاعَةِ، فَاِنَّ دَعْوَتَهُمْ تُحِيْطُ مِنْ وَرَائِهِمْ.
(وهو بعض الحديث) رواه ابن حبان (واسناده صحيح):١/٢٧٠
15. “மூன்று வகையான பழக்கங்கள் முஃமினுடைய உள்ளத்தை கபடம், மோசடி (போன்றவை) களை விட்டும் சுத்தமாக்கிவிடுகிறது. 1. அல்லாஹுதஅலாவின் திருப்திக்காகச் செயல்படுதல் 2. தலைவர்களின் நலனை நாடுதல் 3. முஸ்லிம்களின் ஜமாஅத்துடன் சேர்ந்திருத்தல். ஏனேனில், ஜமாஅத்திலுள்ளவர்களின் துஆக்கள் ஜமாத்துடன் சேர்ந்திருப்பவர்களை நாலாபுறங்களிலும் சூழ்ந்து கொள்கின்றன” (அதன் காரணமாக ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
١٦– عَنْ ثَوْبَانَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: طُوْبَي لِلْمُخْلِصِيْنَ، اُولئِكَ مَصَابِيْحُ الدُّجي، تَتَجَلّي عَنْهُمْ كُلُّ فِتْنَةٍ ظَلْمَاءَ.
رواه البيهقي:٥ /٣٤٣
16. “தூய எண்ணம் உடையோருக்கு நற்செய்தி! அவர்கள் இருள்களின் ஒளி விளக்குகள், அவர்களின் காரணத்தால் பெரும் பெரும் குழப்பங்களும் விலகிவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத்தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
١٧– عَنْ اَبِيْ فِرَاسؒ رَجُلٌ مِنْ اَسْلَمَ قَالَ: نَادَي رَجُلٌ فَقَالَ:يَا رَسُوْلَ اللهِ مَا اْلاِيْمَانُ؟ قَالَ: اَلْإِخْلَاصُ.
(وهو جزء من الحديث) رواه البيهقي:٥/٣٤٢
17. அஸ்லம் என்ற கோத்திரத்தைச் சார்ந்த ஹஜ்ரத் அபூஃபிராஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கூவி அழைத்து, “யாரஸூலல்லாஹ், ஈமான் என்றால் என்ன?” என்று கேட்டார், “ஈமான் என்பது தூய எண்ணம்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(பைஹகீ)
١٨– عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: صَدَقَةُ السِّرِّ تُطْفِيءُ غَضَبَ الرَّبِّ.
(وهو طرف من الحديث) رواه الطبراني في الكبير واسناده حسن، مجمع الزوائد:٣ /٢٩٣
18. “ரகசியமாக தருமம் செய்வது அல்லாஹுதஆலாவின் கோபத்தை அணைத்து விடுகிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٩– عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قِيْلَ لِرَسُوْلِ اللهِ ﷺ: اَرَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْعَمَلَ مِنَ الْخَيْرِ وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ؟ قَالَ: تِلْكَ عَاجِلُ بُشْرَي الْمُؤْمِنِ.
رواه مسلم، باب اذا اثني علي الصالح…، رقم:٦٧٢١
19. “ஒருவர் நற்செயல்கள் செய்கிறார், அதனால் மக்கள் அவரைப் புகழ்கின்றனர். அவருக்கு அந்த நற்செயலின் கூலி கிடைக்குமா? மக்கள் அவரைப் புகழ்வது முகஸ்துதியில் சேராதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “இது முஃமினுக்கு உடனடியாக கிடைக்கின்ற நற்செய்தி” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஹதீஸின் கருத்து, ஒரு நற்செய்தி மறுமையில் கிடைக்கக் கூடியது, மற்றோன்று, மக்கள் இவரைப் புகழ்வதன் மூலம் உலகில் கிடைக்கக் கூடியது. அவருடைய எண்ணம் அல்லாஹுதஆலாவின் திருப்திக்காகவே என்று இருக்க வேண்டும், அவருடைய நற்செயல் புகழப்படும் நோக்கமாக இல்லையென்றால் அவர் விரும்பாமல் மக்களால் புகழப்படுவது அவருக்கு உலகில் கிடைக்கும் உடனடியான நற்செய்தி என்பதாம்.
٢٠– عَنْ عَائِشَةَ ؓ زَوْجِ النَّبِيِّ ﷺ قَالَتْ: سَاَلْتُ رَسُوْلَ اللهِ ﷺ عَنْ هذِهِ اْلآيَةِ (وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مآ آتَوْا وَقُلُوْبُهُمْ وَجِلَةٌ۞) (المؤمنون:٦٠) قَالَتْ عَائِشَةُ ؓ: اَهُمُ الَّذِيْنَ يَشْرَبُوْنَ الْخَمْرَ وَيَسْرِقُوْنَ؟ قَالَ: لاَ، يَا بِنْتَ الصِّدِّيْقِ! وَلكِنَّهُمُ الَّذِيْنَ يَصُوْمُوْنَ وَيُصَلُّوْنَ وَيَتَصَدَّقُوْنَ وَهُمْ يَخَافُوْنَ اَنْ لاَ يُقْبَلَ مِنْهُمْ أُولئِكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُوْنَ.
رواه الترمذي، باب ومن سورة المؤمنين: رقم:٣١٧٥
20. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நான் நபி (ஸல்) அவர்களிடம், (وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مآ آتَوْا وَقُلُوْبُهُمْ وَجِلَةٌ) “தானம் கொடுத்ததின் பேரில் அவர்களின் உள்ளம் அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையில் கொடுப்பவர்கள் என்ற இந்த ஆயத்தின் கருத்து, மது அருந்துபவர்கள், திருடுபவர்களா?” (பாவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் பயப்படுகிறார்களா?) என நான் கேட்டேன். “சித்தீக்கின் மகளே, இதுவல்ல கருத்து, ஆயத்தின் கருத்து, அவர்கள் நோன்புவைத்து, தொழுது, தானதர்மங்கள் செய்பவர்கள். ஆனால், அவர்கள் (ஏதேனுமொரு தீவினையின் காரணமாக) தங்களது நல்ல அமல்கள் ஏற்கப்படாமல் போய்விடுமோ என்பதை பயப்படக் கூடியவர்கள், இவர்கள் தாம் விரைவாக நன்மைகளைச் சேர்க்கின்றவர்கள், இவர்கள் தாம் அந்த நன்மைகளின் பக்கம் முன்னேறுபவர்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(திர்மிதீ)
٢١– عَنْ سَعْدٍ ؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اللهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ.
رواه مسلم، باب الدنيا سجن للمؤمن…، رقم:٧٤٣٢
21. “மக்களிடம் தேவையற்ற, இறையச்சம் கொண்ட, பிரபலமற்ற அடியானை அல்லாஹுதஆலா நேசிக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸஃத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٢– عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَوْ اَنَّ رَجُلاً عَمِلَ عَمَلاً فِيْ صَخْرٍ لاَ بَابَ لَهَا وَلاَ كُوَّةَ، خَرَجَ عَمَلُهُ اِلَي النَّاسِ كَائِنًا مَا كَانَ.
رواه البيهقي:٥ /٣٥٩
22. “கதவோ, துவாரமோ இல்லாத ஒரு பாறைக்குள் அமர்ந்து ஒருவர் ஏதேனுமொரு செயலைச் செய்தாலும் அது மக்களுக்குத் தெரிந்தே தீரும். அந்தச் செயல் நல்லதானாலும், தீயதானாலும் சரியே!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(பைஹகீ)
தெளிவுரை:- எல்லாச் செயல்களும் மக்களுக்குத் தெரிந்துவிடும் என்ற நிலை இருக்கும்போது மார்க்க சம்பந்தமான காரியங்களில் ஈடுபடக்கூடியவர், பேரையும் புகழையும் நாடி தமது அமலை நாசமாக்குவதால் என்ன பலன்? தீயவன் தன் தீமையை மறைப்பதால் என்ன பயன்? இரண்டுமே மக்களுக்கு மத்தியில் வந்தே தீரும்.
(தர்ஜூமானுஸ்ஸுன்னா)
٢٣– عَنْ مَعْنِ بْنِ يَزِيْدَ ؓ قَالَ: كَانَ اَبِيْ يَزِيْدُ اَخْرَجَ دَنَانِيْرَ يَتَصَدَّقُ بِهَا،فَوَضَعَهَا عِنْدَ رَجُلٍ فِي الْمَسْجِدِ،فَجِئْتُ فَأَخَذْتُهَا فَاَتَيْتُهُ بِهَا، فَقَالَ:وَاللهِ! مَا اِيَّاكَ اَرَدْتُ، فَخَاصَمْتُهُ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: لَكَ مَا نَوَيْتَ، يَا يَزِيْدُ! وَلَكَ مَا اَخَذْتَ، يَا مَعْنُ!.
رواه البخاري، باب اذا تصدق علي ابنه وهو لا يشعر، رقم:١٤٢٢
23. ஹஜ்ரத் மஃனுப்னு யஸீது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “எனது தந்தையார் ஹஜ்ரத் யஸீத் (ரலி) அவர்கள், ஸதகாச் செய்யும் எண்ணத்துடன் சில தங்க நாணயங்களை எடுத்துக்கொண்டு தேவைப்படுவோருக்கு (கொடுப்பதற்காக) பள்ளியில் இருந்த ஒருவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு வந்து விட்டார்கள். நான் பள்ளிக்கு வந்தேன், (நான் தேவையுள்ளவனாக இருந்ததால்) அந்த மனிதரிடமிருந்து அந்தப் பொற்காசுகளை வாங்கி வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டேன். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உனக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் நாடவில்லை‘ என என் தந்தை என்னிடம் கூறினார். நான் எனது தந்தையாரை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சபைக்குக் கூட்டிச் சென்று, நடந்த விபரத்தை எடுத்துரைத்தேன். “யஸீதே! நீர் (ஸதகாவின்) நிய்யத் செய்தீர், அதன் நன்மை உமக்குக் கிடைத்துவிட்டது. மஃனே, நீ வாங்கியது உமக்கு உரியதாகிவிட்டது” (அதை நீர் உபயோகிக்கலாம்) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
٢٤– عَنْ طَاؤُؤْسٍؒ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُوْلَ اللهِﷺ اِنِّيْ اَقِفُ الْمَوَاقِفَ اُرِيْدُ وَجْهَ اللهِ، وَاُحِبُّ اَنْ يُرَي مَوْطِنِيْ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُوْلُ اللهِ ﷺ شَيْئًا حَتَّي نَزَلَتْ عَلَيْهِ هذِهِ اْلآيَةُ (فَمَنْ كَانَ يَرْجُوْ لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا وَلاَ يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ اَحَدًا۞).
تفسير ابن كثير:٣ /١١٤
24. ஹஜ்ரத் தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஒருவர், “யாரஸூலல்லாஹ், நான் சில வேளைகளில் ஏதேனுமொரு நற்காரியம் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தை நாடிச் செய்ய எண்ணுகிறேன். அத்துடன் மனதில் மக்கள் என் அமலைக்காண வேண்டுமென்ற ஆசையும் பிறக்கிறது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேட்டு மௌனமாக இருந்தார்கள், சிறிது நேரத்தில் கீழ்காணும் ஆயத் இறங்கியது (فَمَنْ كَانَ يَرْجُوْ لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا وَلاَ يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ اَحَدًا) எவர் தன் இரட்சகனைச் சந்திப்பதை ஆசைப்படுகிறாரோ, (அவனுடைய நேசனாக விரும்புகிறாரோ) அவர் நல் அமல் செய்து வரவும், மேலும் தன் ரப்புடைய இபாதத்தில் யாரையும் இணையாக ஆக்க வேண்டாம்”.
(தப்ஸீர் இப்னுகஸீர்)
தெளிவுரை:- இந்த ஆயத்தில் தடுக்கப்பட்ட ஷிர்க், முகஸ்துதியாகும். மேலும் அமல் அல்லாஹுதஆலாவுக்காக இருந்தாலும், அத்துடன் ஏதேனுமொரு மனோ இச்சையும் சேர்ந்து இருந்தால், அதும் ஒருவகையான மறைமுகமான ஷிர்க்கே! இதும் மனிதனுடைய அமலை வீணாக்கிவிடுகிறது.
(தப்ஸீர் இப்னுகஸீர்)


முழுமையான ஈமானுடனும் நன்மை கிடைக்குமென்ற உறுதியுடனும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அமல் செய்தல்

ஹதீஸ்கள்:-
٢٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَرْبَعُوْنَ خَصْلَةً اَعْلاَهُنَّ مَنِيْحَةُ الْعَنْزِ، مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيْقَ مَوْعِدِهَا اِلاَّ اَدْخَلَهُ اللهُ بِهَا الْجَنَّةَ.
رواه البخاري، باب فضل المنيحة، رقم:٢٦٣١
25. “நாற்பது நல்ல தன்மைகள் உள்ளன, அவற்றில் உயர்ந்த தரத்திலுள்ளது, ஒருவர் தனது ஆட்டை இன்னோருவருக்குக் கொடுத்து, அதனை வாங்கியவர், அதனுடைய பாலிலிருந்து பலனடைந்து கொண்டு, பிறகு அதை அதன் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவது. எவர் இந்த காரியங்களில் ஏதேனும் ஒரு காரியத்தில் அல்லாஹுதஆலாவால் வாக்களிக்கப்பட்ட நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அமல் செய்தாலும், அந்த நம்பிக்கையின் காரணமாக அல்லாஹுதஆலா அவரைச் சுவனத்தில் நுழையச் செய்வான்” என்று நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- நபி (ஸல்) அவர்கள் நாற்பது நல்ல காரியங்களை விபரமாகச் சொல்லாதது, ஒருவன் ஒவ்வொரு நன்மையையும், ஹதீஸில் சிறப்பித்துக் கூறப்பட்ட நாற்பது காரியங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றெண்ணி அமல் செய்யவேண்டும் என்பதற்காகவேயாம்.
(பத்ஹுல் பாரீ)
மனிதன் ஒவ்வொரு அமலையும் நம்பிக்கையுடனும், நன்மையை ஆதரவு வைத்தும் அமல் செய்யவேண்டும் என்பதே இந்த ஹதீஸின் கருத்து. இந்த அமலின் மீது அல்லாஹுதஆலாவால் வாக்களிக்கப்பட்ட இன்ன நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும், அந்த அமலுக் குரிய சிறப்புகளைக் கவனத்தில் வைத்தும் அமல் செய்யவேண்டும் என்பதாம்.
٢٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ اِيْمَانًا وَاحْتِسَابًا وَكَانَ مَعَهُ حَتَّي يُصَلَّي عَلَيْهَا، وَيُفْرَغَ مِنْ دَفْنِهَا فَاِنَّهُ يَرْجِعُ مِنَ اْلاَجْرِ بِقِيْرَاطَيْنِ كُلُّ قِيْراطٍ مِثْلُ اُحُدٍ، وَمَنْ صَلَّي عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ اَنْ تُدْفَنَ فَاِنَّهُ يَرْجِعُ بِقِيْرَاطٍ.
رواه البخاري، باب اتباع الجنائز من الايمان، رقم:٤٧
26. “அல்லாஹுதஆலாவுடைய வாக்குறுதியின் மீது நம்பிக்கை கொண்டவராக வெகுமதி, மற்றும் சன்மானங்கள் மீது ஆர்வமும் கொண்டவராக எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸா உடன் சென்று, ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு, ஜனாஸாவை அடக்கம் செய்யப்படும்வரை கூடவே இருப்பாரோ, அவர் இரு கீராத் நன்மை பெற்றுத் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹது மலைக்குச் சமமாகும். ஒருவர் ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு (அடக்கம் செய்யப்படும் முன்) திரும்பிவிட்டால், அவர் ஒரு கீராத் நன்மை பெற்றுத் திரும்புகிறார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- கீராத் என்பது ஒரு வெள்ளி நாணயத்தின் பன்னிரெண்டில் ஒரு பங்காகும். அக்காலத்தில் கூலி வேலை செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலைக்குரிய கூலி கீராத்துடைய கணக்கின்படி கொடுக்கப்பட்டு வந்ததால் நபி (ஸல்) அவர்களும் அந்தச் சந்தர்ப்பத்தில் கீராத் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த கீராத்தை இவ்வுலகத்துடைய கீராத்தாகக் கருத வேண்டாம், இது மறுமையுடைய கீராத்தின் அளவாகும். உலகத்துடைய கீராத்தைக் கணக்கிட்டால், உஹது மலை போன்று பெரியதும் பிரமாண்டமானது என்பதையும் விவரித்துவிட்டார்கள்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٢٧– عَنْ اَبِي الدَّرْدَاءِؓ يَقُوْلُ: سَمِعْتُ اَبَا الْقَاسِمِ ﷺ يَقُوْلُ: اِنَّ اللهَ قَالَ: يَا عِيْسَي اِنِّيْ بَاعِثٌ مِنْ بَعْدِكَ اُمَّةً اِنْ اَصَابَهُمْ مَا يُحِبُّوْنَ حَمِدُوا اللهَ وَاِنْ اَصَابَهُمْ مَا يَكْرَهُوْنَ احْتَسَبُوْا وَصَبَرُوْا وَلاَ حِلْمَ وَلاَ عِلْمَ فَقَالَ: يَا رَبِّ كَيْفَ يَكُوْنُ هذَا لَهُمْ وَلاَ حِلْمَ وَلاَ عِلْمَ؟ قَالَ: اُعْطِيْهِمْ مِنْ حِلْمِيْ وَعِلْمِيْ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط البخاري ولم يخرجاه ووافقه الذهبي:١ /٣٤٨
27. “அல்லாஹுதஆலா ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களிடம், “ஈசாவே, உங்களுக்குப் பிறகு ஒரு உம்மத்தை அனுப்ப இருக்கிறேன். அவர்களுக்கு விருப்பமான (ஆரோக்கியம் மற்றும் பாக்கியங்கள், போன்ற) கள்வை கிடைத்தால் அதற்காக அல்லாஹுதஆலாவுக்கு நன்றி செலுத்துவார்கள். அவர்களுக்கு விருப்பமில்லாத சோதனை, சிரமம் வந்துவிட்டால் அதைச் சகித்துக் கொள்வதின் மீது நான் வாக்களித்த நன்மையை ஆதரவு வைப்பார்கள். மேலும், அவர்களுக்குள் (சாந்த குணமும் மென்மையான சுபாவமும்) சகிப்புத் தன்மையும் கல்வியறிவும் இல்லாதிருந்தும் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்” என்று சொன்னான். ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள், “எனது இரட்சகனே, அவர்களில் பொறுமையும், கல்வி ஞானமும் இல்லாதபோது பொறுமையுடனிருக்கவும், நன்மையை ஆதரவு வைப்பதற்கும் அவர்களால் எவ்வாறு இயலும்?” என்று கேட்டதற்கு, “எனது பொறுமையிலிருந்து பொறுமையும், எனது அறிவு ஞானத்திலிருந்து, அறிவு ஞானமும் அவர்களுக்கு நான் கொடுப்பேன்” என்று அல்லாஹுதஆலா கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக ஹாகிம்)
٢٨– عَنْ اَبِيْ اُمَامَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَقُوْلُ اللهُ سُبْحَانَهُ: اِبْنَ آدَمَ اِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ عِنْدَ الصَّدَمَةِ اْلاُوْلي، لَمْ اَرْضَ لَكَ ثَوَابًا دُوْنَ الْجَنَّةِ.
رواه ابن ماجه، باب ما جاء في الصبر علي المصيبة، رقم:١٥٩٧
28. “ஆதமுடைய மகனே! ஆரம்ப நிலையிலேயே நீ பொறுமை கொண்டு, நன்மையை ஆதரவு வைத்தால், சுவனத்தைவிடக் குறைந்த பிரதிபலனை உனக்குக் கொடுப்பதை நான் பொருந்திக் கொள்ளமாட்டேன்” என அல்லாஹ் கூறியதாக (ஹதீஸ் குத்ஸியில்) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٢٩– عَنْ اَبِيْ مَسْعُوْدٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِذَا اَنْفَقَ الرَّجُلُ عَلي اَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ.
رواه البخاري، باب ما جاء ان الاعمال بالنية والحسبة، رقم:٥٥
29. “நன்மையை ஆதரவு வைத்து, ஒருவர் தன் வீட்டாருக்குச் செலவழித்தால், அவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٠– عَنْ سَعْدِ بْنِ اَبِيْ وَقَّاصٍؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِيْ بِهَا وَجْهَ اللهِ اِلاَّ اُجِرْتَ عَلَيْهَا حَتَّي مَا تَجْعَلُ فِيْ فَمِ امْرَاَتِكَ.
رواه البخاري، باب ما جاء ان الاعمال بالنية والحسبة، رقم:٥٦
30. “நீங்கள் அல்லாஹுதஆலாவின் திருப்பொருத்தத்தை நாடி எதைச் செலவு செய்தாலும், அதனுடைய நன்மை உங்களுக்கு நிச்சயமாகக் கொடுக்கப்படும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் கவளத்திற்கும்” (உங்களுக்கு நன்மை கிடைக்கும்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣١– عَنْ اُسَامَةَؓ قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ اِذْ جَاءَهُ رَسُوْلُ اِحْدَي بَنَاتِهِ وَعِنْدَهُ سَعْدٌ واُبَيُّ بْنُ كَعْبٍ وَمُعَاذٌؓ اَنَّ ابْنَهَا يَجُوْدُ بِنَفْسِهِ فَبَعَثَ اِلَيْهَا: لِلّهِ مَا اَخَذَ، وَلِلّهِ مَا اَعْطَي، كُلٌّ بِاَجَلٍ، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ.
رواه البخاري، باب وكان امر الله قدرا مقدورا، رقم:٦٦٠٢
31. ஹஜ்ரத் உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நானும், ஹஜ்ரத் ஸஃது, ஹஜ்ரத் உபையிப்னு கஅப், ஹஜ்ரத் முஆத் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தபோது, “நபி (ஸல்) அவர்களுடைய பெண் மக்களில் ஒருவருடைய குழந்தை உயிர் பிரியும் நிலையில் உள்ளது” என்ற செய்தியை ஒருவர் வந்து சொன்னார்.”அல்லாஹுதஆலா எடுத்துக் கொண்டது அவனுக்கே உரியது! அவன் நமக்குத் தந்ததும் அவனுக்கே உரியது! அவனிடத்தில் ஒவ்வொன்றுக்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொறுமையை மேற்கொள்ளவும். மேலும் இந்தத் துன்பத்தின் மீது பொறுமையை மேற்கொள்வதால் அல்லாஹுதஆலா வாக்களித்த வெகுமதிகள் கிடைக்கும் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கவும்” என்று வந்தவரிடம் நபி (ஸல்) அவர்கள் தன் மகளுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
(புகாரி)
٣٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لِنِسْوَةٍ مِنَ اْلاَنْصَارِ: لاَ يَمُوْتُ لِإِحْدَاكُنَّ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ فَتَحْتَسِبَهُ، اِلاَّ دَخَلَتِ الْجَنَّةَ، فَقَالَتِ امْرَاَةٌ مِنْهُنَّ: اَوِ اثْنَانِ؟ يَا رَسُوْلَ اللهِﷺ قَالَ: اَوِ اثْنَانِ.
رواه مسلم، باب فضل من يموت له ولد فيحتسبه، رقم:٦٦٩٨
32. “உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் இறந்துவிட, அவர் அல்லாஹுதஆலாவிடம் நன்மையை ஆதரவு வைத்தால் உறுதியாக அவர் சொர்க்கம் சென்றுவிடுவார்” என்று அன்ஸாரிப் பெண்களிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, அவர்களில் ஒரு பெண்மணி, “யாரஸூலல்லாஹ், இரு பிள்ளைகள் இறந்துவிட்டால்?” எனக் கேட்டார். ” இருபிள்ளைகள் மரணித்தாலும் இதே நன்மை கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٣– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اللهَ لاَ يَرْضَي لِعَبْدِهِ الْمُؤْمِنِ، اِذَا ذَهَبَ بِصَفِيِّهِ مِنْ اَهْلِ اْلاَرْضِ فَصَبَرَ وَاحْتَسَبَ وَقَالَ مَا اُمِرَ بِهِ بِثَوَابٍ دُوْنَ الْجَنَّةِ.
رواه النسائي، باب ثواب من صبر واحتسب، رقم:١٨٧٢
33. “ஒரு முஃமின் அடியானுக்குப் பிரியமானதை அல்லாஹுதஆலா அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள, அவர் அதைப் பொறுத்துக் கொண்டு, நன்மையை ஆதரவு வைத்தவராக, அவருக்குக் கட்டளையிடப்பட்ட (اِنَّالِلّهِ وَاِنَّا اِلَيهِ رَاجِعُوْنَ) என்று கூறினால், அவருக்கு, சுவனத்தைவிடக் குறைந்த பிரதிபலன் அளிப்பதை அல்லாஹுதஆலா விரும்பமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٣٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ اَخْبِرْنِيْ عَنِ الْجِهَادِ وَالْغَزْوِ، فَقَالَ: يَا عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو! اِنْ قَاتَلْتَ صَابِرًا مُحْتَسِبًا بَعَثَكَ اللهُ صَابِرًا مُحْتَسِبًا، وَاِنْ قَاتَلْتَ مُرَائِيًا مُكَاثِرًا بَعَثَكَ اللهُ مُرَائِيًا مُكَاثِرًا، يَا عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو! عَلَي اَيِّ حَالٍ قَاتَلْتَ اَوْ قُتِلْتَ بَعَثَكَ اللهُ عَلي تِيْكَ الْحَالِ.
رواه أبو داؤد، باب من قاتل لتكون كلمة الله هي العليا، رقم:٢٥١٩
34. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் நபி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ், எனக்கு தியாகம் மற்றும் போர் பற்றி விபரமாகக் கூறுங்கள்” எனக் கேட்டதற்கு, “அப்துல்லாஹிப்னு அம்ரே, நீர் பொறுமை கொண்டவராக, நன்மையை ஆதரவு வைத்தவராக போரிட்டால், பொறுமையாளருடைய நன்மையை ஆதரவு வைத்தவருடைய பட்டியலில் கணிக்கப்பட்டவராக, அல்லாஹுதஆலா உம்மை கியாமத் நாளன்று எழுப்புவான். பிறரால் புகழப்படவேண்டும், ஙனீமத் பொருள் அதிகமாகக் கிடைக்க வேண்டு மென்பதற்காக நீர் போரிட்டால், கியாமத் நாளில் தற்புகழ்ச்சி விரும்பியவர், ஙனீமத் பொருள் அதிகம் கிடைக்கவேண்டு மென்று போரிட்டவர் என்ற பட்டியலில் உம் பெயர் பதியப்பட்டவராக உம்மை அல்லாஹுதஆலா எழுப்புவான், (மஹ்ஷர் மைதானத்தில் இவன் முகஸ்துதிக்காக, அதிகப் பொருள் பெறுவதற்காகப் போரிட்டான் என்று அறிவிப்புச் செய்யப்படும்). அப்துல்லாஹ்வே, எந்த நிலையில் (எந்த எண்ணத்தில்) நீர் போரிடுவீரோ, அல்லது கொல்லப்படுவீரோ, அதே நிலையில் (அதே எண்ணத்திலேயே) கியாமத் நாளில் உம்மை அல்லாஹுதஆலா எழுப்புவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(அபூதாவூத்)


முகஸ்துதியி (புகழ்விரும்புதலி) ன் இழிவு

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَاِذَا قَامُوْا اِلَي الصَّلوةِ قَامُوْا كُسَالي لا يُرَآءُوْنَ النَّاسَ وَلاَ يَذْكُرُوْنَ اللهَ اِلاَّ قَلِيْلاً۞).
(النساء:١٤٢)
1. அவர்கள் தொழுகையில் நின்றால், சோம்பேறிகளாக, மனிதர்களுக்கு (த் தங்களையும் தொழுகையாளிகளாக்கி)க் காண்பிப்பவர்களாகவே நிற்கின்றனர். இன்னும் மிகக் குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் (தொழுது) நினைவு கூர்வதில்லை.
(அந்நிஸா:142)
وَقَالَ تَعَالي: (فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَ ۞ الَّذِيْنَ هُمْ عَنْ صَلاَتِهِمْ سَاهُوْنَ ۞ الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَ۞).
(الماعون:٦–٤)
2. எனவே, (கவனமில்லாமல்) தொழுகிறவர்களுக்குக் கேடுதான் – அவர்கள் எத்தகையவர்களென்றால், தங்களுடைய தொழுகையை விட்டும் பராமுகமானவர்களாக அவர்கள் இருப்பார்கள், இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் பிறருக்குக் காண்பிக்(கத் தொழு)கிறார்கள்.
(அல்மாஊன்:4-6)
தெளிவுரை:- தொழுகையில் பாராமுகமாயிருத்தல் என்பது, நேரம் தவறித் தொழுதல், உலகச் சிந்தனையுடன் தொழுகையை விட்டு, விட்டுத் தொழுதல் முதலியவையாம்.
(கஷ்ஃபுர் ரஹ்மான்)

ஹதீஸ்கள்:-
٣٥– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: بِحَسْبِ امْرِئئٍ مِنَ الشَّرِّ اَنْ يُشَارَ اِلَيْهِ بِالْأَصَابِعِ فِيْ دِيْنٍ اَوْ دُنْيَا اِلاَّ مَنْ عَصَمَهُ اللهُ.
رواه الترمذي، باب منه حديث ان لكل شيء شرة، رقم:٢٤٥٣
35. “அல்லாஹுதஆலா யாரைப் பாதுகாத்தானோ அவரைத் தவிர உலகக் காரியங்களிலோ, தீனுடைய காரியங்களிலோ, ஒருவரை நோக்கி விரல்களை நீட்டி (சுட்டிக் காட்டிப்) பேசப்படுவதே அவன் தீயவன் என்பதற்குப் போதுமாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- விரல்களால் சுட்டிக் காட்டப்படுதல் என்பதன் பொருள் பிரபல்யம் ஆகிவிடுதல் என்பதாம். பிரபல்யம் ஆகுதல் ஆபத்தை விட்டும் நீங்கியதல்ல. ஏனேனில், புகழ் கிடைத்தபின், தான் பெரியவன் என்ற உணர்விலிருந்து தப்பிப்பது எவராலும் முடியாத காரியம். ஆனால், ஒருவர் அவர் விரும்பாமலேயே அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து புகழ் பெற்றிருந்து, அல்லாஹுதஆலா அவரைத் தனது பேரருளால் நப்ஸ், ஷைத்தானுடைய தீங்கை விட்டும் பாதுகாத்துவிட்டால் அது அவனது தனிப்பெரும் கருணை! இத்தகைய இக்லாஸுடையோர் புகழ் அடைவது ஆபத்தானதல்ல.
(மளாஹிர்ஹக்)
٣٦– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ اَنَّهُ خَرَجَ يَوْمًا اِلَي مَسْجِدِ رَسُوْلِ اللهِ ﷺ، فَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ ﷺ يَبْكِيْ، فَقَالَ: مَا يُبْكِيْكَ؟ قَالَ: يُبْكِيْنِيْ شَيْيءٌ سَمِعْتُهُ مِنْ رَسُوْلِ اللهِ ﷺ، سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ:اِنَّ يَسِيْرَ الرِّيَاءِ شِرْكٌ، وَاِنَّ مَنْ عَادَي لِلّهِ وَلِيًّا، فَقَدْ بَارَزَ اللهُ بِالْمُحَارَبَةِ، اِنَّ اللهَ يُحِبُّ اْلاَبْرَارَ اْلاَتْقِيَاءَ اْلاَخْفِيَاءَ، الَّذِيْنَ اِذَا غَابُوْا لَمْ يُفْتَقَدُوْا، وَاِذَا حَضَرُوْا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوْا، قُلُوْبُهُمْ مَصَابِيْحُ الْهُدَي، يَخْرُجُوْنَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ.
رواه ابن ماجه، باب من ترجي له السلامة من الفتن، رقم:٣٩٨٩
36. ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருநாள் அவர்கள் மஸ்ஜிதுந்நபவிக்குச் சென்றபோது, அங்கு ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் புனித கப்ருக்கருகில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கக் கண்டு, “தாங்கள் ஏன் அழுகிறீர்கள்? எனக் கேட்டார்கள். “நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு செய்தியின் காரணமாக அழுகிறேன், நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “சிறிதளவு தற்புகழை விரும்புதலும் இணைவைத்தலைச் சாரும், ஒருவன் அல்லாஹுதஆலாவின் நேசனுடன் பகைமை கொண்டால் அவன் அல்லாஹுதஆலாவுடன் போர் புரிய அழைப்பு விடுத்து விட்டான். நல்லோர்களான–இறையச்சமுடையவர்களான–ஊரில் இல்லாதபோது தேடப்படாமலும் ஊரில் இருக்கும் பொழுது அழைக்கப்படாமலும், அறியப்படாமலும் இருக்கும் மக்களை நிச்சயமாக அல்லாஹுதஆலா நேசிக்கிறான், அவர்களின் உள்ளம் நேர்வழியின் ஒளிவிளக்குகள் ஆகும். (அவர்கள் தம் உள்ளத்தின் ஒளியால் தமது தீனைப் பாதுகாத்தவர்களாக) குழப்பங்களின் இருண்ட புழுதிக் காற்றிலிருந்து வெளியேறிவிடுவார்கள்.
(இப்னு மாஜா)
٣٧– عَنْ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا ذِئْبَانِ جَائِعَانِ اُرْسِلاَ فِيْ غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَي الْمَالِ وَالشَّرَفِ لِدِيْنِهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب حديث ما ذئبان جائعان ارسلا في غنم…، رقم:٢٣٧٦
37. “ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரு ஓநாய்களால் ஆடுகளுக்கு ஏற்படும் தீங்கைவிட, பொருளாசையும், பதவி ஆசையும், மனிதனுடைய தீனுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ طَلَبَ الدُّنْيَا حَلاَلاً مُفَاخِرًا مُكَاثِرًا مُرَائِيًّا لَقِيَ اللهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ، وَمَنْ طَلَبَ الدُّنْيَا حَلاَلاً اِسْتِعْفَافًا عَنِ الْمَسْئَلَةِ وَسَعْيًا عَلَي عِيَالِهِ وَتَعَطُّفًا عَلي جَارِهِ لَقِيَ اللهَ يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ.
رواه البيهقي في شعب الايمان:٧ /٢٩٨
38. “பெருமை அடையவும், பணக்காரனாகவும், பேரும் புகழும் பெறும் எண்ணத்துடம் ஒருவன் பொருள் சம்பாதித்தால், அவன் ஹலாலான வழியில் சம்பாதித்தாலும், அல்லாஹுதஆலா அவன் மீது கோபம் கொண்ட நிலையில் கியாமத் நாளில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பான். பிறரிடம் யாசிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளவும், தனது வீட்டாருடைய தேவையைப் பூர்த்தி செய்யவும், அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடம் ஒருவன், ஹலாலான வழியில் பொருள் ஈட்டினால், கியாமத் நாளன்று அவரது முகம் பதினான்காம் நாள் இரவின் பூரணச் சந்திரனைப் போன்று பிரகாசிக்கும் நிலையில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٣٩– عَنِ الْحَسَنِؒ قَالَ:قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:مَا مِنْ عَبْدٍ يَخْطُبُ خُطْبَةً اِلاَّ اللهُ سَائِلُهُ عَنْهَا: مَا اَرَادَ بِهَا؟ قَالَ جَعْفَرُ: كَانَ مَالِكُ بْنُ دِيْنَارٍ اِذَا حَدَّثَ هذَا الْحَدِيْثَ بَكَي حَتَّي يَنْقَطِعَ ثُمَّ يَقُوْلُ: يَحْسَبُوْنَ اَنَّ عَيْنِيْ تَقَرُّ بِكَلاَمِيْ عَلَيْكُمْ فَاَنَا اَعْلَمُ اَنَّ اللهَ سَائِلِيْ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ مَا اَرَدْتَ بِهِ.
رواه البيهقي:٢ /٢٨٧
39. “ஒருவர் பிரசங்கம் செய்தால், அவர் பிரசங்கம் செய்ததின் நோக்கம் என்னவென்பதைப்பற்றி அல்லாஹுதஆலா அவரிடம் நிச்சயமாகக் கேட்பான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஜ்ரத் ஜஃபர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஹஜ்ரத் மாலிக்கிப்னு தீனார் (ரஹ்) அவர்கள் சப்தம் அடைத்துக் கொள்ளுமளவு தேம்பித் தேம்பி அழுவார்கள். பிறகு, “உங்களுக்கு முன்னால் பயான் செய்வதால் என் கண்கள் குளிர்ச்சியடைகின்றன (நான் சந்தோஷ மடைகின்றேன்) என்று மக்கள் நினைத்துக்கொள்கின்றனர். என்னிடம் என்ன நோக்கத்திற்காக நீ பிரசங்கம் செய்தாய் என்று அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று நிச்சயமாக விசாரிப்பான் என்பது எனக்குத் தெரியும்” என்றும் கூறுவார்கள்.
(பைஹகீ)
٤٠– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اَسْخَطَ اللهَ فِيْ رِضَي النَّاسِ سَخِطَ اللهُ عَلَيْهِ، وَاَسْخَطَ عَلَيْهِ مَنْ اَرْضَاهُ فِيْ سَخَطِهِ، وَمَنْ اَرْضَي اللهَ فِيْ سَخَطِ النَّاسِ رَضِيَ اللهُ عَنْهُ، وَاَرْضَي عَنْهُ مَنْ اَسْخَطَهُ فِيْ رِضَاهُ حَتَّي يَزِيْنَهُ وَيَزِيْنَ قَوْلَهُ وَعَمَلَهُ فِيْ عَيْنِهِ.
رواه الطبراني ورجاله رجال الصحيح غير يحيي بن سليمان الجعفي، وقد وثقه الذهبي في آخر ترجمة يحي بن سليمان الجعفي، مجمع الزوائد:١٠/٣٨٦
40. “யார் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அல்லாஹுதஆலாவை வெறுப்படையச் செய்கின்றானோ, அவன் மீது அல்லாஹுதஆலா வெறுப்படைகின்றான். மேலும் அல்லாஹுதஆலாவை வெறுப்புறச் செய்து எம்மக்களைத் திருப்திப்படுத்தினானோ அம்மக்களையும் அவன் மீது வெறுப்படையச் செய்வான். எவர் அல்லாஹுதஆலாவைத் திருப்திப்படுத்த மக்களின் வெறுப்புக்கு ஆளானாரோ, அவரைக் கொண்டு அல்லாஹுதஆலா திருப்தியடைகிறான். மேலும், அல்லாஹுதஆலாவைத் திருப்திப்படுத்த, எவருடைய வெறுப்புக்கு ஆளானாரோ அவர்களுடைய உள்ளத்தில் இவருடைய அன்பைப் போட்டுவிடுகிறான். கோபங்கொண்ட அந்த மக்கள் அவரை நல்லவர் என்று பாராட்டுவர். இன்னும் அவருடைய சொல், செயலை அந்த மக்களின் பார்வையில் அழகாக்கி விடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٤١– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اَوَّلَ النَّاسِ يُقْضي يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ، رَجُلٌ اُسْتُشْهِدَ،فَاُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعْمَتَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيْكَ حَتَّي اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ جَرِيْءٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ فَسُحِبَ عَلي وَجْهِهِ حَتَّي اُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَاَ الْقُرْآنَ، فَاُتِيَ بِهِ، فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ وَقَرَاْتُ فِيْكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ وَلكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ، وَقَرَاْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ قَارِئئٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ فَسُحِبَ عَلي وَجْهِهِ حَتَّي اُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ وَاَعْطَاهُ مِنْ اَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَاُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيْلٍ تُحِبُّ اَنْ يُنْفَقَ فِيْهَا اِلاَّ اَنْفَقْتُ فِيْهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ، فَسُحِبَ عَلي وَجْهِهِ، ثُمَّ اُلْقِيَ فِي النَّارِ.
رواه مسلم، باب من قاتل للرياء والسمعة استحق النار، رقم:٤٩٢٣
41. “கியாமத் நாளில், முதன்முதலாக தனக்குப் பாதகமான தீர்ப்பை பெறுபவர்களில் அல்லாஹ்வுடைய பாதையில் உயிரிழந்தவரும் ஒருவர், அல்லாஹுதஆலாவுக்கு முன் அவரைக் கொண்டுவரப்படும், அவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துக் கூறுவான், அவரும் அதை ஒப்புக் கொள்வார்.”இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன செய்தாய்?” என்று அல்லாஹுதஆலா கேட்பான். “நான் உன்னுடைய பொருத்தத்திற்காகப் போரிட்டு உயிரிழந்தேன்” என்பார். “நீ பொய் சொல்கிறாய், மக்கள் உன்னை வீரனேன்று சொல்லவேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய், அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்று அல்லாஹுதஆலா கூறுவான். பிறகு அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவார். இரண்டாவது மனிதர், மார்க்கக் கல்வி கற்று பிறருக்கும் கற்பித்தவர். மேலும், குர்ஆன் ஓதியவர், அவர் அல்லாஹுதஆலாவின் முன் கொண்டுவரப்படுவார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துரைப்பான், அவரும் ஒப்புக்கொள்வார். “இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன வேலை செய்தாய்?” என அல்லாஹுதஆலா அவரிடம் கேட்பான். “நான் உனது பொருத்தத்திற்காக மார்க்கக் கல்வி கற்று, பிறருக்கும் கற்பித்தேன், உனது பொருத்தத்திற்காகவே சிறப்புமிகு குர்ஆனை ஓதினேன்” என்பார் அவர். “நீ பொய் சொல்கிறாய்! மக்கள் உன்னை ஆலிம் என்று சொல்லவேண்டும் என்பதற்காக இல்மைக் கற்றாய். மக்கள் உன்னை காரீ என்று சொல்ல வேண்டும் என்பதற்காக குர்ஆனை ஓதினாய், அது அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்பான். பிறகு, அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் தூக்கியெறியப்படுவார். மூன்றாவது மனிதர் செல்வந்தர், அவருக்கு அல்லாஹுதஆலா உலகில் மிகுந்த செல்வம் கொடுத்திருந்தான், மேலும், அனைத்து வசதிகளையும் வழங்கியிருந்தான், அவர் அல்லாஹுதஆலாவுக்கு முன் கொண்டுவரப்படுவார். அவருக்கு கொடுக்கப்பட்ட பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துக் கூறுவான். அவர் அதை ஒப்புக் கொள்வார். “இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன வேலை செய்தாய்?” என அல்லாஹ் கேட்பான், “நீ செலவழிக்கச் சொன்ன வழிகளிலெல்லாம் நீ கொடுத்த பொருளை உன் பொருத்தத்திற்காகச் செலவிட்டேன்” என்று சொல்வார். “நீ பொய் சொல்கிறாய் மக்கள் உன்னைக் கொடை வள்ளல் எனச் சொல்லவேண்டும் என்பதற்காக நீ செலவழித்தாய், அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்பான். பிறகு அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٤٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ تَعَلَّمَ عِلْمًا، مِمَّا يُبْتَغَي بِهِ وَجْهُ اللهِ، لاَ يَتَعَلَّمُهُ اِلاَّ لِيُصِيْبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا، لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِيْ رِيْحَهَا.
رواه ابو داؤد، باب في طلب العلم لغير الله، رقم:٣٦٦٤
42. “அல்லாஹுதஆலாவின் பொருத்தத்திற்காக கற்கவேண்டிய இல்மை, உலகத்துடைய சொத்து, செல்வங்களைப் பெறவேண்டும் என்பதற்காக எவர் கற்பாரோ, அவர் கியாமத் நாளன்று சுவர்க்கத்தின் நறுமணத்தைக்கூட சுவாசிக்க முடியாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٤٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ يَقُوْلُ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَخْرُجُ فِيْ آخِرِ الزَّمَانِ رِجَالٌ يَخْتِلُوْنَ الدّنُيْاَ باِلدِّيْنِ، يَلْبَسُوْنَ لِلنَّاسِ جُلُوْدَ الضَّاْنِ مِنَ اللِّيْنِ، اَلْسِنَتُهُمْ اَحْلي مِنَ السُّكَّرِ، وَقُلُوْبُهُمْ قُلُوْبُ الذِّئَابِ يَقُوْلُ اللهُ : اَبِيَ يَغْتَرُّوْنَ اَمْ عَلَيَّ يَجْتَرِئُوْنَ؟ فَبِيْ حَلَفْتُ لَأَبْعَثَنَّ عَلي اُولئِكَ مِنْهُمْ فِتْنَةً تَدَعُ الْحَلِيْمَ مِنْهُمْ حَيْرَانًا.
رواه الترمذي، باب حديث خاتلي الدنيا بالدين وعقوبتهم، رقم:٢٤٠٤. الجامع الصحيح وهو سنن الترمذي – دار الباز مكة المكرمة.
43. “கடைசிக்காலத்தில் சிலர் தோன்றுவார்கள், அவர்கள் மார்க்கம் என்னும் போர்வையில் உலகச் செல்வங்களை வேட்டையாடுவார்கள், (தம்மை உலக ஆசையற்றவர்கள் என்று மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காக) ஆடுகளின் மிருதுவான தோலினாலான ஆடை அணிவார்கள். அவர்களின் நாவுகள் சர்க்கரையைவிட இனிமையானதாக இருக்கும். ஆனால், அவர்களுடைய உள்ளமோ ஓநாய்களின் உள்ளத்தை போன்றிருக்கும். “நான் இவர்களுக்குச் சந்தர்ப்பம் அளித்திருப்பதால் இவர்கள் ஏமாந்து விட்டார்களா? அல்லது என்னைப் பற்றிய பயமின்றி என்னுடன் மோத இவர்கள் துணிந்துவிட்டார்களா?. என் மீது சத்தியமாக! நான் இவர்களிலிருந்தே இவர்களுக்குள் குழப்பத்தை ஏற்ப்படுத்துவேன். அது இவர்களிலுள்ள அறிவாளிகளையே திகைக்கச் செய்துவிடும்.” என்று அல்லாஹுதஆலா கூறுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٤٤– عَنْ اَبِيْ سَعِيْدِ بْنِ اَبِيْ فَضَالَةَ اْلاَنْصَارِيِّؓ وَكَانَ مِنَ الصَّحَابَةِ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِذَا جَمَعَ اللهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ لِيَوْمٍ لاَ رَيْبَ فِيْهِ، نَادَي مُنَادٍ: مَنْ كَانَ اَشْرَكَ فِيْ عَمَلٍ عَمِلَهُ لِلّهِ اَحَدًا، فَلْيَطْلُبْ ثَوَابَهُ مِنْ عِنْدِ غَيْرِ اللهِ، فَاِنَّ اللهَ اَغْنَي الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ومن سورة الكهف، رقم:٣١٥٤
44. “எந்த நாள் வருவதில் எவ்வித சந்தேகமும் இல்லையோ அந்த (கியாமத்) நாளில் அல்லாஹுதஆலா எல்லா மக்களையும், ஒன்று சேர்த்ததும், “அல்லாஹுதஆலாவுக்காக வேண்டி செய்த அமலில், பிறரையும் அதில் எவர் கூட்டாக்கினாரோ அவர் அதனுடைய நன்மையை அவரிடமே சென்று பெற்றுக்கொள்ளட்டும். ஏனேனில், இணைவைப்பதில் அல்லாஹுதஆலா எல்லா இணையாளர்களையெல்லாம் விட மிகத் தேவையற்றவன் என ஓர் அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்வார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈதுப்னு அபூபளாலா அன்ஸாரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- “இணைவைப்பதில் எல்லா இணையாளர்களின் இணையை விட்டும் அல்லாஹுதஆலா மிகத் தேவையற்றவன்” என்பதன் கருத்து, மற்றவர்கள் தம்முடன் பிறர் கூட்டாக இருப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்களோ அவ்வாறு அல்லாஹுதஆலாவுடன் எவரும் கூட்டாக இருப்பதை அல்லாஹ் ஒருபோதும் விரும்புவதில்லை.
٤٥– عَنِ ابْنِ عُمَرَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ تَعَلَّمَ عِلْمًا لِغَيْرِ اللهِ اَوْ اَرَادَ بِهِ غَيْرَ اللهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ.
رواه الترمذي وقال هذا حديث حسن غريب، باب في من يطلب بعلمه الدنيا، رقم:٢٦٥٥
45. “அல்லாஹுதஆலாவின் திருப்தி அல்லாமல் வேறு நோக்கத்திற்காக (கண்ணியம், பிரபல்யம், செல்வம் போன்றவைகளைப் பெறுவதற்காக) ஒருவர் மார்க்கக் கல்வியை கற்றால் அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٤٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: تَعَوَّذُوْا باِللّهِ مِنْ جُبِّ الْحَزَنِ قَالُوْا: يَا رَسُوْلَ اللهِﷺ وَمَا جُبُّ الْحَزَنِ؟ قَالَ: وَادٍ فِيْ جَهَنَّمَ يَتَعَوَّذُ مِنْهُ جَهَنَّمُ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ قِيْلَ: يَا رَسُوْلَ اللهِﷺ وَمَنْ يَدْخُلُهُ؟ قَالَ: اَلْقُرَّاءُ الْمُرَاؤُوْنَ بِاَعْمَالِهِمْ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في الرياء والسمعة، رقم:٢٣٨٣
46. “நீங்கள் ஜுப்புல் ஹஸனை விட்டும் பாதுகாப்புத் தேடுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதற்கு, ஜுப்புல் ஹஸன்” என்றால் என்ன?” என்று ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர்.”அது நரகத்திலுள்ள ஓர் ஓடை, நரகமே அந்த ஓடையைவிட்டும் தினமும் நூறு முறை பாதுகாப்புத் தேடுகிறது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யாரஸூலல்லாஹ், அதில் எத்தகைய மக்கள் நுழைவார்கள்?” எனக் கேட்கப்பட்டதற்கு, “அமல் செய்து தன் புகழை விரும்பும் குர்ஆன் ஓதக்கூடியவர்கள்” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٤٧– عَنِ ابْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ اُنَاسًا مِنْ اُمَّتِيْ سَيَتَفَقَّهُوْنَ فِي الدِّيْنِ، وَيَقْرَءُوْنَ الْقُرْآنَ، وَيَقُوْلُوْنَ: نَاْتِي اْلاُمَرَاءَ فَنُصِيْبُ مِنْ دُنْيَاهُمْ وَنَعْتَزِلُهُمْ بِدِيْنِنَا، وَلاَ يَكُوْنُ ذلِكَ، كَمَا لاَ يُجْتَنَي مِنَ الْقَتَادِ اِلاَّ الشَّوْكُ، كَذلِكَ لاَ يُجْتَنَي مِنْ قُرْبِهِمْ اِلاَّ.قَالَ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ: كَاَنَّهُ يَعْنِيْ: الْخَطَايَا.
رواه ابن ماجه، ورواته ثقات، الترغيب:٣ /١٩٦
47. “வெகுவிரைவில் என்னுடைய உம்மத்தில் சிலர் தோன்றுவார்கள், அவர்கள் தீனுடைய விளக்கத்தைப் பெற்றிருப்பார்கள், குர்ஆன் ஓதுவார்கள். (பிறகு தன்னுடைய ஆதாயத்திற்காக செல்வந்தர்களிடம் செல்வார்கள்) “அந்த செல்வந்தர்களிடம் சென்று அவர்களின் உலகச் செல்வங்களிலிருந்து நாங்கள் பலனடைந்து கொள்வோம். (ஆனால்) எங்களுடைய மார்க்கப் பற்றின் காரணமாக அவர்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பாக இருந்து கொள்வோம்” எனக் கூறிக்கொள்வர். (தமது ஆதாயத்திற்காக செல்வந்தர் களிடம் சென்றுவிட்டு அவர்களுடைய தீங்குடைய தாக்கம் ஏற்படாமலிருப்பது) ஒருபோதும் முடியாத காரியம், எவ்வாறு முள் மரத்திலிருந்து முள்ளைத்தவிர வேறு எதும் கிடைக்காதோ, அவ்வாறே அந்த செல்வந்தர்களிடமிருந்து தீயவைகளைத்தவிர வேறேதுவும் கிடைக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா, தர்ஙீப்)
٤٨– عَنْ اَبِيْ سَعِيْدٍؓ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُوْلُ اللهِ ﷺ وَنَحْنُ نَتَذَاكَرُ الْمَسِيْحَ الدَّجَّالَ، فَقَالَ: اَلاَ اُخْبِرُكُمْ بِمَا هُوَ اَخْوَفُ عَلَيْكُمْ عِنْدِيْ مِنَ الْمَسِيْحِ الدَّجَّالِ؟ قَالَ، قُلْنَا: بَلي، فَقَالَ: اَلشِّرْكُ الْخَفِيُّ: اَنْ يَقُوْمَ الرَّجُلُ يُصَلِّيْ فَيُزَيِّنُ صَلاَتَهُ لِمَا يَرَي مِنْ نَظَرِ رَجُلٍ.
رواه ابن ماجه، باب الرياء والسمعة، رقم:٤٢٠٤
48. ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் (தமது அறையைவிட்டு) வெளியேறி எங்களிடம் வந்தார்கள். அச்சமயம் நாங்கள் மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்” தஜ்ஜாலைவிட உங்களுக்கு அதிகமாக பயத்தை உண்டாக்கும் காரியத்தை நான் சொல்லவா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு, “யாரஸூலல்லாஹ், அவசியம் அறிவியுங்கள்” என்று நாங்கள் கூறினோம். “அது மறைமுகமான இணை வைத்தல்”. (அதற்கு உதாரணம்) ஒருவர் தொழுவதற்காக நின்று கொண்டிருக்கிறார். மற்றொரு மனிதர் தான் தொழுவதைப் பார்க்கிறார் என்பதற்காக இவர் தனது தொழுகையை அலங்காரம் செய்வது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜா)
٤٩– عَنْ اُبَيِّ بْنِ كَعْبٍؓ قَالَ:قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:بَشِّرْ هذِهِ اْلاُمَّةَ باِلسِّنَاءِ وَالرِّفْعَةِ وَالنَّصْرِ وَالتَّمْكِيْنِ فِي اْلاَرْضِ، وَمَنْ عَمِلَ مِنْهُمْ عَمَلَ اْلآخِرَةِ لِلدُّنْيَا لَمْ يَكُنْ لَهُ فِي اْلآخِرَةِ نَصِيْبٌ.
رواه احمد: ٥ /١٣٤
49. “இந்த உம்மத்திற்கு, கண்ணியம், உயர்வு, உதவி, ஆட்சி அதிகாரம் ஆகியன கிடைக்குமென்ற நற்செய்தியைக் கூறுங்கள். (இந்த வெகுமதி பொதுவாக இந்தச் சமுதாயத்துக்குக் கிடைத்தே தீரும். பிறகு ஒவ்வொருவருடனும் அவரவருடைய எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் அவருடன் நடந்து கொள்வான்) எனவே, மறுமையுடைய வேலையை உலக ஆதாயத்துக்காக யார் செய்வாரோ, மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உபய்யிப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٥٠– عَنْ شَدَّادِ بْنِ اَوْسٍؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ صَلَّي يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ، وَمَنْ صَامَ يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ، وَمَنْ تَصَدَّقَ يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ.
(وهو بعض الحديث) رواه احمد:٤/١٢٦
50. “மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தொழுதாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் நோன்பு நோற்றாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தர்மம் செய்தாரோ, அவர் நிச்சயமாக இணைவைத்துவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- எவர்களுக்குக் காட்டவேண்டுமென்பதற்காக அமல் செய்தாரோ, அவர்களை அல்லாஹுதஆலாவுக்கு இணையாக ஆக்கிவிட்டார். இந்நிலையில் இந்த அமல்கள் அல்லாஹுதஆலாவுக்காக இல்லாமல் எவர்களுக்கு காட்டவேண்டும் என்று செய்தாரோ அவர்களுக்காக ஆகிவிடுகிறது. இதைச் செய்தவர் நன்மைக்குப் பதிலாக வேதனைக்கு உரியவராகிவிடுகிறார் என்பதாம்.
٥١– عَنْ شَدَّادِ بْنِ اَوْسٍؓ اَنَّهُ بَكَي، فَقِيْلَ لَهُ: مَا يُبْكِيْكَ؟ قَالَ: شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُوْلِ اللهِ ﷺ يَقُوْلُهُ، فَذَكَرْتُهُ، فَاَبْكَانِيْ، سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَتَخَوَّفُ عَلي اُمَّتِي الشِّرْكَ وَالشَّهْوَةَ الْخَفِيَّةَ، قَالَ: قُلْتُ: يَارَسُوْلَ اللهِﷺ اَتُشْرِكُ اُمَّتُكَ مِنْ بَعْدِكَ؟ قَالَ: نَعَمْ، اَمَا اِنَّهُمْ لاَ يَعْبُدُوْنَ شَمْسًا، وَلاَ قَمَرًا، وَلاَ حَجَرًا، وَلاَ وَثَنًا، وَلكِنْ يُرَاؤُوْنَ بِاَعْمَالِهِمْ، وَالشَّهْوَةُ الْخَفِيَّةُ اَنْ يُصْبِحَ اَحَدُهُمْ صَائِمًا فَتَعْرِضُ لَهُ شَهْوَةٌ مِنْ شَهَوَاتِهِ فَيَتْرُكُ صَوْمَهُ.
رواه احمد:٤/١٢٤
51. ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளதாவது, “ஒருமுறை அவர்கள் அழத்தொடங்கிவிட்டார்கள். அழுவதற்குரிய காரணம் கேட்கப்பட்டது, “நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அந்த வார்த்தை என்னை அழவைத்துவிட்டது. “எனது சமுதாயம் இணை வைப்பதிலும், மறைமுகமான இச்சையிலும் பீடிக்கப்படுவது பற்றி நான் பயப்படுகிறேன்” எனக் கூறக்கேட்டேன். ஹஜ்ரத் ஷத்தாத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “யாரஸூலல்லாஹ், தங்களுக்குப் பிறகு தங்களுடைய சமுதாயம் இணை வைப்பதில் பீடிக்கப்படுமா?” என நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, “ஆம்” (ஆனால்) அவர்கள் சூரியனையோ, சந்திரனையோ, கல்லையோ, சிலையையோ வணங்கமாட்டார்கள். மாறாக, முகஸ்துதிக்காக அமல் செய்வார்கள். மறைமுகமான மனோ இச்சை என்பது, உங்களில் ஒருவர் காலையில் நோன்பாளியாக இருப்பார் பிறகு, அவருக்கு முன்னால் அவருக்கு விருப்பமான பொருள் வந்துவிட்டால், அவர் தனது நோன்பை முறித்துவிடுவார்”, (இவ்வாறு தன்னுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٥٢– عَنْ مُعَاذٍؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: يَكُوْنُ فِيْ آخِرِ الزَّمَانِ اَقْوَامٌ اِخْوَانُ الْعَلاَنِيَةِ اَعْدَاءُ السَّرِيْرَةِ، فَقِيْلَ: يَا رَسُوْلَ اللهِﷺ فَكَيْفَ يَكُوْنُ ذلِكَ؟ قَالَ: ذلِكَ بِرَغْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ وَرَهْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ.
رواه احمد:٥/٢٣٥
52. “இறுதிக் காலத்தில் சிலர், வெளித்தோற்றத்தில் நண்பர்களாகவும், அந்தரங்கத்தில் விரோதிகளாகவும் இருப்பார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதற்கு, “யாரஸூலல்லாஹ், இது எதன் காரணமாக ஏற்படும்?” எனக் கேட்கப்பட்டது.”தன்னுடைய சுய நலத்துக்காக வெளிரங்கத்தில் ஒருவர் மற்றவருடன் நட்புக்கொள்வார். அந்தரங்க விரோதத்தினால் அவ்விருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து பயப்படுவார்” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- மக்களின் விரோதமும், நட்பும் தத்தமது உலக ஆதாயத்தின் அடிப்படையில் இருக்கும். அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தைப் பெறுவதற்காக இருக்காது என்பதாம்.
٥٣– عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّؓ قَالَ:خَطَبَنَا رَسُوْلُ اللهِ ﷺ ذَاتَ يَوْمٍ، فَقَالَ: يَا اَيُّهَا النَّاسُ اتَّقُوْا هذَا الشِّرْكَ، فَاِنَّهُ اَخْفَي مِنْ دَبِيْبِ النَّمْلِ، فَقَالَ لَهُ مَنْ شَاءَ اللهُ اَنْ يَقُوْلَ: وَكَيْفَ نَتَّقِيْهِ، وَهُوَ اَخْفَي مِنْ دَبِيْبِ النَّمْلِ يَا رَسُوْلَ اللهِ؟ قَالَ: قُوْلُوْا: اَللّهُمَّ اِنَّا نَعُوْذُ بِكَ مِنْ اَنْ نُشْرِكَ شَيْأً نَعْلَمُهُ، وَنَسْتَغْفِرُكَ لِمَا لاَ نَعْلَمُ.
رواه احمد:٤ /٤٠٣
53. ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பயான் செய்கையில், “மக்களே, இந்த (புகழ் விரும்பல் என்னும்) இணை வைப்பதிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள், இது எறும்பு ஊறும் ஓசையைவிட மிகவும் மறைவானது”. அச்சபையில் ஒருவருடைய மனதில் கேள்வியொன்று எழ, “யாரஸூலல்லாஹ், எறும்பு ஊர்ந்து செல்லும் ஓசையைவிட மறைவானதாக இருக்கும்போது நாங்கள் அதிலிருந்து தப்பிப்பது எப்படி?” எனக் கேட்டதற்கு, (اَللّهُمَّ اِنَّا نَعُوْذُ بِكَ مِنْ اَنْ نُشْرِكَ شَيْأً نَعْلَمُهُ، وَنَسْتَغْفِرُكَ لِمَا لاَ نَعْلَمُ) யாஅல்லாஹ், அறிந்து இணை வைப்பதைவிட்டும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம். மேலும் நாங்கள் அறியாத நிலையில் இணை வைத்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறோம் என்று ஓதிவாருங்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٥٤– عَنْ اَبِيْ بَرْزَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا اَخْشَي عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَيِّ فِيْ بُطُوْنِكُمْ وَفُرُوْجِكُمْ وَمُضِلاَّتِ الْهَوَي.
رواه احمد والبزار والطبراني في الثلاثة ورجاله رجال الصحيح لان ابا الحكم البناني الراوي عن ابي برزة بينه الطبراني فقال: عن ابي الحكم، هو علي بن الحكم، وقد روي له البخاري، واصحاب السنن، مجمع الزوائد:١ /٤٤٦
54. “உங்கள் வயிறுகள், மர்மஸ்தானங்கள் சம்பந்தப்பட்ட (ஹராமைச் சாப்பிடுதல், விபச்சாரம் போன்ற) மன இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும், (உங்களை சத்தியப் பாதையிலிருந்து வழி தவறி) வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் மனஇச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும் நான் பயப்படுகிறேன்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், பஸ்ஸார், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ سَمَّعَ النَّاسَ بِعَمَلِهِ سَمَّعَ اللهُ بِهِ سَامِعَ خَلْقِهِ، وَصَغَّرَهُ، وَحَقَّرَهُ.
رواه الطبراني في الكبير واحد اسانيد الطبراني في الكبير رجال الصحيح، مجمع الزوائد:١٠/٣٨١
55. “எவர் தன்னுடைய செயலை மக்களிடையே விளம்பரப்படுத்துவாரோ, அவருடைய முகஸ்துதியான அந்த செயலைக் கொண்டு (இவர் புகழ் விரும்பி என்பதை) அல்லாஹுதஆலா தனது படைப்புகளின் காதுகள் வரை கொண்டு சேர்த்துவிடுவான். மேலும், மக்களின் பார்வையில் அவரை இழிவடையவும், கேவலமடையவும் செய்துவிடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٦– عَنْ مُعاَذِ بْنِ جَبَلٍؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَا مِنْ عَبْدٍ يَقُوْمُ فِي الدُّنْيَا مَقَامَ سُمْعَةٍ وَرِيَاءٍ اِلاَّ سَمَّعَ اللهُ بِهِ عَلي رُؤُوْسِ الْخَلاَئِقِ يَوْمَ الْقِيَامَةِ.
رواه الطبراني واسناده حسن، مجمع الزوائد:١٠ /٣٨٣
56. “எவரொருவர் உலகில் புகழ் பெறுவதற்காக, மற்றவர்கள் பாராட்டுவதற்காக ஏதேனுமொரு நல்ல செயல் செய்வாரோ, அல்லாஹுதஆலா கியாமத் நாளில் அந்தச் செயலை படைப்பினங்கள் அனைத்தின் முன்னிலையில் பிரபலப்படுத்தி விடுவான்”. (அவன் நல்ல செயல்களை மக்களுக்குக் காட்டுவதற்காகச் செய்தான், அதன் காரணமாக அவனை கேவலப்படுத்தப்படுகிறது) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٧– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يُؤْتَي يَوْمَ الْقِيَامَةِ بِصُحُفٍ مُخَتَّمَةٍ، فَتُنْصَبُ بَيْنَ يَدَيِ اللهِ تَبَارَكَ وَتَعَالَي، فَيَقُوْلُ تَبَارَكَ وَتَعَالَي: اَلْقُوْ هذِهِ وَاقْبَلُوْا هذِهِ، فَتَقُوْلُ الْمَلاَئِكَةُ: وَعِزَّتِكَ وَجَلاَلِكَ، مَا رَاَيْنَا اِلاَّ خَيْرًا، فَيَقُوْلُ اللهُ : اِنَّ هذَا كَانَ لِغَيْرِ وَجْهِيْ، وَاِنَّيْ لاَ اَقْبَلُ الْيَوْمَ اِلاَّ مَا ابْتُغِيَ بِهِ وَجْهِيْ.
وَفِيْ رِوَايَةٍ: فَتَقُوْلُ الْمَلاَئِكَةُ: وَعِزَّتِكَ، مَا كَتَبْنَا اِلاَّ مَا عَمِلَ، قَالَ: صَدَقْتُمْ، اِنَّ عَمَلَهُ كَانَ لِغَيْرِ وَجْهِيْ. رواه الطبراني في الاوسط باسنادين، ورجال احدهما رجال الصحيح، ورواه البزار، مجمع الزوائد:١٠ /٦٣٥
57. “கியாமத் நாளில் முத்திரையிடப்பட்ட பட்டோலைகள் கொண்டுவரப்பட்டு, அல்லாஹுதஆலாவின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும். சிலரின் பட்டோலைகளை, “ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றும், இன்னும் சிலரின் பட்டோலைகளை, “வீசி எறியுங்கள்” என்றும் அல்லாஹுதஆலா கூறுவான். “உன்னுடைய கண்ணியம், கம்பீரத்தின்மீது சத்தியமாக! நாங்கள் இந்தப் பட்டோலைகளில் நன்மையைத்தவிர வேறு எதையும் பார்க்கவில்லையே?” என்று மலக்குகள் கூறுவார்கள். “அந்தச் செயல்கள் எனக்காகச் செய்யப்படவில்லை. இன்றைய தினம் நான் எனது பொருத்தத்திற்காகச் செய்யப்பட்ட அமலையே ஏற்றுக்கொள்வேன்” என்று அல்லாஹுதஆலா கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக! நாங்கள் அவர் செய்தவற்றைத் தான் எழுதினோம்” (அந்த அமல்கள் எல்லாம் நல்லவையாகத் தான் இருந்தன) என்று மலக்குகள் கூறுவர். “மலக்குகளே! நீங்கள் உண்மையையே கூறினீர்கள்! (ஆனால்) அவனுடைய அமல்கள் என்னுடைய பொருத்தத்திற்காக அல்லாமல் வேறு நோக்கத்திற்காகச் செய்யப்பட்டவை” என்று அல்லாஹுதஆலா பதில் கூறுவான் என்று மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது.
(தபரானீ, பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٨– عَنْ اَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: وَاَمَّا الْمُهْلِكَاتُ: فَشُحٌّ مُطَاعٌ، وَهَوًي مُتَّبَعٌ، وَاِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ.
(وهو طرف من الحديث) رواه البزار واللفظ له والبيهقي وغيرهما وهو مروي عن جماعة من الصحابة واسانيده وان كان لا يسلم شييء منها من مقال فهو بمجموعها حسن ان شاء الله تعالي، الترغيب:١/٢٨٦
58. “வழிபடக்கூடிய கருமித்தனம், பின்பற்றப்படக்கூடிய மனஇச்சை, தன்னைத்தானே சிறந்தவனாகக் கருதுதல் ஆகிய மூன்று காரியங்களும் மனிதனை நாசமாக்கக் கூடியவை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், பைஹகீ, தர்ஙீப்)
٥٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مِنْ اَسْوَءِ النَّاسِ مَنْزِلَةً مَنْ اَذْهَبَ آخِرَتَهُ بِدُنْيَا غَيْرِهِ.
رواه البيهقي: ٣ /٣٥٨
59. “பிறருடைய உலக ஆதாயத்துக்காகத் தனது மறுமையை நஷ்டமடையச் செய்பவனே மனிதர்களில் மிகத் தீயவன். மற்றவர்களுக்கு உலக லாபங்கள் கிடைப்பதற்காக, அல்லாஹுதஆலாவை வெறுப்படையச் செய்யும் காரியத்தைச் செய்து, தன்னுடைய மறு உலக நன்மையை இழந்தவன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٦٠– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنِّيْ اَخْوَفَ مَا اَخَافُ عَلي هذِهِ اْلاُمَّةِ مُنَافِقٌ عَلِيْمُ اللِّسَانِ.
رواه البيهقي:٢ /٢٨٤
60. “இந்தச் சமுதாயத்தின் மீது நான் அதிகமாகப் பயப்படுவது, நாவளவில் அறிஞராக இருக்கும் நயவஞ்சகர்களைப் பற்றித்தான்” (தன்னுடைய ஈமான் மற்றும் அமல் பற்றி கவலைப்படாமல் மார்க்க ஞானங்களைப் பேசுபவன்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
தெளிவுரை:- முனாஃபிக் என்பதன் கருத்து புகழ் விரும்பி அல்லது பாவி என்பதாம்.
(மளாஹிர் ஹக்)
٦١– عَنْ عَبْدِ اللهِ بْنِ قَيْسِ نِ الْخُزَاعِيِّؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ قاَمَ رِيَاءً وَسُمْعَةً لَمْ يَزَلْ فِيْ مَقْتِ اللهِ حَتَّي يَجْلِسَ.
تفسير ابن كثير:٣ /١١٦
61. “பிறர் பார்க்க வேண்டும் அல்லது புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு எவர் நல்ல காரியத்தில் ஈடுபடுவாரோ, அவர் அந்த எண்ணத்தை விடாதவரை அல்லாஹுதஆலாவின் கடும் வெறுப்புக்கு ஆளாகி இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் குஸாயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ஸீர் இப்னுகஸீர்)
٦٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا، اَلْبَسَهُ اللهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ اَلْهَبَ فِيْهِ نَارًا.
رواه ابن ماجه ، باب من لبس شهرة من الثياب، رقم:٣٦٠٧
62. “எவர் பிரபல்யம் என்ற ஆடையை உலகில் அணிவாரோ, கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா அவருக்கு கேவலம் என்னும் ஆடையை அணிவித்து, அதற்கு நெருப்பை மூட்டிவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.