முஸ்லிமின் தகுதி

அல்லாஹ்வுடைய அடியார்கள் சம்பந்தமான அல்லாஹ்வின் கட்டளைகளை நபி (ஸல்) அவர்களின் வழியில் நிறைவேற்றல். இதில் முஸ்லிம்களின் தகுதிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குர்ஆன் வசனங்கள்:-
وَقَالَ تَعَالي: (وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ أَعْجَبَكُمْ۞).
(البقرة:٢٢١)
1.இணைவைக்கும் ஓர் ஆணைவிட – அவர் (அழகும் செல்வமும்) உங்களைக் கவர்ந்தாலும் – முஃமினான ஓர் அடிமை சிறந்தவராவார்.
(அல்பகரா:221)
وَقَالَ تَعَالي: (أَوَمَنْ كَانَ مَيْتاً فَأَحْيَيْنهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَّمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَّثَلُهُ فِي الظُّلُمتِ لَيْسَ بِخَارِجٍ مِّنْهَا۞).
(الانعام:١٢٣)
2.ஒருவன் மரணித்து இருந்து, பிறகு அவனை நாம் உயிர்ப்பித்து, அவனுக்கு ஒளியை (யும்) நாம் உண்டாக்கி, அதன் மூலம் மனிதர்கள் மத்தியில் நடக்கின்ற அவன் – (நிராகரிப்பு எனும்) இருள்களில் இருந்து அவற்றை விட்டும் வெளியேற முடியாமலிருக்கிறவனைப் போன்றவனா?
(அல்அன்ஆம்:123)
وَقَالَ تَعَالي: (أَفَمَنْ كَانَ مُؤْمِناً كَمَنْ كَانَ فَاسِقاً ط لاَيَسْتَوُونَ۞).
(السجدة:١٨)
3.எனவே, எவர் நம்பிக்கையாளராக ஆகிவிட்டாரோ அவர், பாவியாக ஆனவரைப் போன்றவராவாரா? (இருவரும்) சமமாகமாட்டார்கள்.
(அஸ்ஸஜ்தா:18)
وَقَالَ تَعَالي: (ثُمَّ أَوْرَثْنَا الْكِتبَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا۞).
(فاطر:٣٢)
4.பிறகு நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோமே அவர்களை (நம்) வேதத்திற்கு நாம் வாரிசாக்கினோம்.
(ஃபாதிர்:32)
ஹதீஸ்கள்:-
١– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: أَمَرَنَا رَسُولُ اللهِ ﷺ أَنْ نُنْزِلَ النَّاسَ مَنَازِلَهُمْ.
رواه مسلم في اول صحيحه
1.”நாங்கள் மக்களின் தரங்களுக்கேற்றவாறு அவர்களுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்” என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முகத்திமா ஸஹீஹ் முஸ்லிம்)
٢– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: نَظَرَ رَسُولُ اللهِ ﷺ إِلَي الْكَعْبَةِ فَقَالَ: لاَإِلهَ إِلاَّ اللهُ مَاأَطْيَبَكِ وَأَطْيَبَ رِيحَكِ، وَأَعْظَمَ حُرْمَتَكِ، وَالْمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً مِنْكِ، إِنَّ اللهَ تَعَالَي جَعَلَكِ حَرَاماً، وَحَرَّمَ مِنَ الْمُؤْمِنِ مَالَهُ وَدَمَهُ وَعِرْضَهُ، وَأَنْ نَظُنَّ بِهِ ظَنّاً سَيِّئاً.
رواه الطبراني في الكبير وفيه الحسن بن ابي جعفر وهو ضعيف وقد وثق مجمع الزوائد:٣ /٦٣٠
2.ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கஃபாவைப் பார்த்து மகிழ்ச்சி மிகுதியால் “கஃபாவே! நீ எத்துணை பரிசுத்தமாக இருக்கிறாய்! உனது நறுமணம் எந்த அளவு உயர்ந்தது! நீ எத்துணை அதிகமான மரியாதைக்குரியதாக இருக்கிறாய்! (ஆனால்) முஃமினுடைய கண்ணியம், மரியாதை உன்னைவிட மகத்தானது, அல்லாஹுதஆலா உன்னை மரியாதைக்குரியதாக ஆக்கியுள்ளான். (அதேபோன்று) முஃமினுடைய பொருள், இரத்தம், மானம் முதலியவற்றை மரியாதைக்குரியவையாக ஆக்கியுள்ளான். மேலும் (இதே கண்ணியத்தின் காரணமாக) ஒரு முஃமினின் மீது தீய எண்ணம் கொள்வதையும் அல்லாஹ் விலக்கியுள்ளான்” என்று கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: يَدْخُلُ فُقَرَاءُ الْمُسْلِمِينَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِأَرْبَعِينَ خَرِيفاً.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء ان فقراء المهاجرين …رقم:٢٣٥٥
3.”செல்வந்தர்களான முஸ்லிம்களைவிட ஏழை முஸ்லிம்கள் நாற்பது வருடங்கள் முன்னதாக சுவர்க்கத்தில் நுழைவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
٤– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ اْلاَغْنِيَاءِ بِخَمْسِ مِائَةِ عَامٍ، نِصْفِ يَوْمٍ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء ان فقراء المهاجرين …رقم:٢٣٥٣
4.”பணக்காரர்களைவிட ஏழைகள் அரைநாள் முன்னதாக சொர்க்கத்தில் நுழைவார்கள், அரைநாள் என்பது ஐந்நூறு வருடங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- முந்திய ஹதீஸில் பணக்காரரை விட ஏழை நாற்பது வருடத்திற்கு முன்னதாகச் சுவனம் செல்வார் எனக் கூறப்பட்டது ஏழை, பணக்காரர் இருவரிடமும் பொருள் ஆசை இருக்கும் நிலையிலாகும். இந்த ஹதீஸில் உள்ளபடி ஐநூறு வருடங்கள் முந்திச் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஏழையிடம் பொருள் ஆசை இல்லாத போதும் பணக்காரரிடம் பொருளாசை இருக்கும் போதும் ஆகும்.
(இப்னு அஸீரின் ஜாமிஉல் உஸூல்)
٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: تَجْتَمِعُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ: أَيْنَ فُقَرَاءُ هذِهِ اْلأُمَّةِ وَمَسَاكِينُهَا؟ قَالَ: فَيَقُومُونَ فَيُقَالُ لَهُمْ: مَاذَا عَمِلْتُمْ؟ فَيَقُولُونَ: رَبَّنَا ابْتَلَيْتنَا فَصَبَرْنَا وَآتَيْتَ اْلاَمْوَالَ وَالسُّلْطَانَ غَيْرَنَا فَيَقُولُ اللهُ: صَدَقْتُمْ قَالَ: فَيَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ النَّاسِ، وَيَبْقَي شِدَّةُ الْحِسَابِ عَلَي ذَوِي اْلاَمْوَالِ وَالسُّلْطَانِ.
(الحديث) رواه ابن حبان (واسناده حسن):١٦ /٤٣٦
5.”கியாமத் நாளில், நீங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கும் போது, “இந்தச் சமுதாயத்தின் ஏழை, எளியோர்கள் எங்கே?” என்று அறிவிப்புச் செய்யப்படும், (அறிவிப்பைக் கேட்டதும்) ஏழை, எளியோர்கள் எழுவார்கள்.”நீங்கள் என்ன அமல்கள் செய்தீர்கள்?” என அவர்களிடம் வினவப்படும். “எங்கள் இரட்சகனே! நீ எங்களைச் சோதித்தாய், நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீ மற்றவர்களுக்குச் செல்வத்தையும், ஆட்சியையும், கொடுத்தாய்!” என்று அவர்கள் கூறுவார்கள். “நீங்கள் உண்மையே கூறினீர்கள்” என்று அல்லாஹுதஆலா கூறுவான். எனவே, மற்ற பொது மக்களுக்கு முன்னதாக அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். செல்வந்தர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் கடினமான கேள்வி கணக்குக் கேட்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٦– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: هَلْ تَدْرُونَ مَنْ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ؟ قَالُوا: اَللّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ الْفُقَرَاءُ الْمُهَاجِرُونَ الَّذِينَ يُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً، فَيَقُولُ اللهُ لِمَنْ يَشَاءُ مِنْ مَلاَئِكَتِهِ: إِيتُوهُمْ فَحَيُّوهُمْ، فَيَقُولُ الْمَلاَئِكَةُ: رَبَّنَا نَحْنُ سُكَّانُ سَموَاتِكَ وَخِيَرَتُكَ مِنْ خَلْقِكَ، أَفَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هؤُلاَءِ فَنُسَلِّمَ عَلَيْهِمْ؟ قَالَ: إِنَّهُمْ كَانُوا عِبَاداً يَعْبُدُونِي لاَيُشْرِكُونَ بِي شَيْئاً، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً قَالَ: فَتَأْتِيهِمُ الْمَلاَئِكَةُ عِنْدَ ذلِكَ فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ: سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَي الدَّارِ.
رواه ابن حبان (واسناده صحيح):١٦ /٤٣٨
6.ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “அல்லாஹுதஆலாவின் படைப்பினங்களில் முதன்முதலாகச் சுவனம் செல்பவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் வினவ, “அல்லாஹுதஆலாவும் அவனது ரஸூலுமே மிக அறிந்தவர்கள்” என ஸஹாபாக்கள் (ரலி) பதில் கூறினார்கள்.”முதன் முதலாகச் சொர்க்கம் செல்பவர்கள் ஏழை முஹாஜிர்கள், அவர்கள் மூலம் எல்லைப்புறப்பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன. சிரமமான வேலைகளில் (அவர்களை முன் வைத்து) அவர்கள் மூலம் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தம்தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய நெஞ்சங்களில் இருக்க அத்தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அவர்களுக்கு மரணம் வந்துவிடுகிறது. கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா மலக்குகளிடம், “நீங்கள் அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்” என்று கூறுவான், மலக்குகள் (ஆச்சரியமடைந்தவர்களாக) “எங்கள் இரட்சகனே! நாங்களோ உன்னுடைய வானத்தில் வசிப்பவர்கள், உன்னுடைய படைப்பினங்களில் சிறந்தவர்கள். (அப்படியிருந்தும்) நீ எங்களை அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லக் கட்டளையிடுகிறாயே?” (இதன் காரணமென்ன) என்று வினவுவார்கள். “இவர்கள் என்னை வணங்கிக் கொண்டிருந்தவர்கள். எனக்கு வேறு யாரையும் இணை ஆக்காமல் இருந்தவர்கள். இவர்கள் மூலம் எல்லைப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டன. சிரமமான காரியங்களில் (இவர்களை முன்னிறுத்தி) இவர்கள் மூலம் பாதுகாப்புப் பணி மேற் கொள்ளப்பட்டது. தம் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை இவர்களின் நெஞ்சங்களில் இருந்த நிலையிலேயே, அத்தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இவர்களுக்கு மரணம் வந்தது‘ என்று அல்லாஹுதஆலா கூறுவான். எனவே, மலக்குகள் அச்சமயம் எல்லா வாசல்களிலிருந்தும், “நீங்கள் பொறுமையை மேற்கொண்டதால் உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்! இவ்வுலகில் உங்கள் முடிவு எவ்வளவு உயர்ந்ததாகி விட்டது!” என்று கூறியவர்களாக அவர்களிடம் வருவார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: سَيَأْتِي أُنَاسٌ مِنْ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ نُورُهُمْ كَضَوْءِ الشَّمْسِ، قُلْنَا: مَنْ أُولئِكَ يَارَسُولَ اللهِ؟ فَقَالَ: فُقَرَاءُ الْمُهَاجِرِينَ الَّذِينَ تُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، يَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ يُحْشَرُونَ مِنْ أَقْطَارِ اْلاَرْضِ.
رواه احمد:٢ /١٧٧
7.”கியாமத் நாளன்று என் சமுதாயத்தினரில் சிலர் வருவார்கள், அவர்களின் ஒளி சூரியனுடைய ஒளியைப் போன்று பிரகாசமாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ், அவர்கள் யார்?” என நாங்கள் வினவினோம்.”அவர்கள் ஏழை முஹாஜிர்கள், சிரமமான காரியங்களில் அவர்களை முன்னிறுத்தி, அவர்கள் மூலம் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் நெஞ்சங்களில் இருக்கும் நிலையிலேயே அவர்களுக்கு மரணம் வந்தது, அவர்கள் பூமியின் பல்வேறு பகுதிகளிலிருந்து உயிர்பெறச் செய்து ஒன்று கூட்டப்படுவார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٨– عَنْ أَبِي سَعِيدٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: اَللّهُمَّ أَحْيِنِي مِسْكِيناً، وَتَوَفَّنِي مِسْكِيناً، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ.
(الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٤ /٣٢٢
8.”யாஅல்லாஹ், என்னை ஏழைகளின் சுபாவத்தில் வாழவைப்பாயாக! ஏழ்மையான நிலையில் உலகிலிருந்து என்னை மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளின் கூட்டத்தில் என்னை எழுப்புவாயாக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٩– عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ؓ أَنَّ أَبَا سَعِيدِ نِ الْخُدْرِيَّ ؓ شَكَا إِلَي رَسُولِ اللهِ ﷺ حَاجَتَهُ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: اِصْبِرْ أَبَا سَعِيدٍ، فَإِنَّ الْفَقْرَ إِلي مَنْ يُحِبُّنِي مِنْكُمْ أَسْرَعُ مِنَ السَّيْلِ مِنْ أَعْلَي الْوَادِي، وَمِنْ أَعْلَي الْجَبَلِ إِلَي أَسْفَلِهِ.
رواه احمد ورجاله رجال الصحيح الا انه شبه المرسل مجمع الزوائد :١٠/٤٨٦
9.ஹஜ்ரத் ஸஈதுப்னு அபீஸஈத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் தமது வறுமையையும் தனக்கு ஏற்பட்டுள்ள தேவையையும் எடுத்துக் கூறினார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “அபூஸஈத்! பொறுமை கொள்வீராக! வெள்ளப் பெருக்கின்போது வெள்ளம் ஆற்றின் மேல் பகுதியிலிருந்தும் மலை முகட்டிலிருந்தும், பள்ளத்தை நோக்கிப் பாய்வதைப் போல் உங்களில் என் மீது நேசங்கொண்டவருக்கு வறுமை வேகமாக வந்தடையும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠– عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا أَحَبَّ اللهُ عَبْداً حَمَاهُ الدُّنْيَا كَمَا يَظَلُّ أَحَدُكُمْ يَحْمِي سَقِيمَهُ الْمَاءَ.
رواه الطبراني واسناده حسن مجمع الزوائد:١٠/ ٥٠٨
10.”எவ்வாறு நீங்கள் உங்களுடைய நோயாளியை தண்ணீரைவிட்டும் பாதுகாப்பீர்களோ அவ்வாறு பாதுகாப்பான், ஏதேனும் ஒரு அடியானை அல்லாஹுதஆலா நேசிப்பானேயானால் அவனை உலகத்தைவிட்டும் பாதுகாப்பான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ராஃபி இப்னு கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١١–عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَحِبُّوا الْفُقَرَاءَ وَجَالِسُوهُمْ، وَأَحِبَّ الْعَرَبَ مِنْ قَلْبِكَ، وَلْتَرُدَّ عَنِ النَّاسِ مَاتَعْلَمُ مِنْ قَلْبِكَ.
رواه الحاكم وقال: صحيح الاسناد ووافقه الذهبي:٤/٣٣٢
11.”ஏழைகளை நேசியுங்கள் அவர்களுடன் அமருங்கள், அரபுகளை உள்ளத்தால் நேசியுங்கள், மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டும் உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٢– عَنْ أَنَسٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: رُبَّ أَشْعَثَ أَغْبَرَ ذِي طِمْرَيْنِ مُصَفَّحٍ عَنْ أَبْوَابِ النَّاسِ، لَوْ أَقْسَمَ عَلَي اللهِ لأَبَرَّهُ.
رواه الطبراني في الاوسط وفيه: عبدالله بن موسي التيمي وقد وثق وبقية رجاله رجال الصحيح مجمع الزوائد:١٠/٤٦٦
12.”பரட்டைத்தலை உடைய, புழுதி படிந்த, பழைய போர்வையைப் போர்த்திய வீட்டு வாசல்களிலிருந்து மக்களால் விரட்டப்படுபவர்களில் எத்தனையோ பேர் அல்லாஹுதஆலாவின் மீது (உறுதியான நம்பிக்கையுடன்) சத்தியம் செய்தால், அல்லாஹுதஆலா அவர்களின் சத்தியத்தை நிச்சயம் நிறைவேற்றி வைப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- இந்த ஹதீஸின் கருத்து: அல்லாஹுதஆலாவின் அடியார்களில் யாரேனும் ஓர் அடியார் அழுக்கடைந்து பரட்டைத் தலையுடன் காணப்பட்டால், அவரைத் தம்மைவிடத் தாழ்ந்தவராகக் கருதக்கூடாது. இந்த நிலையில் இருக்கும் பலர் அல்லாஹுதஆலாவின் சிறப்பான அடியார்களாக இருக்கின்றனர். ஹதீஸின் நோக்கம் ஓர் அடியான் பரட்டைத்தலையுடனும், அழுக்கடைந்தும் இருப்பதை ஆர்வமூட்டுவது அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
١٣– عَنْ سَهْلِ بْنِ سَعْدِ نِ السَّاعِدِيِّ ؓ أَنَّهُ قَالَ: مَرَّ رَجُلٌ عَلَي رَسُولِ اللهِ ﷺ فَقَالَ لِرَجُلٍ عِنْدَهُ جَالِسٍ: مَارَأْيُكَ فِي هذَا؟ فَقَالَ: رَجُلٌ مِنْ أَشْرَافِ النَّاسِ، هذَا وَاللهِ حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ ﷺ ثُمَّ مَرَّ رَجُلٌ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: مَا رَأْيُكَ فِي هذَا؟ فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ هذَا رَجُلٌ مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ، هذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْمَعَ لِقَوْلِهِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: هذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هذَا.
رواه البخاري باب فضل الفقر رقم:٦٤٤٧
13.ஹஜ்ரத் ஸஹ்லு இப்னு ஸஃத் ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது, நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம், ”இவரைப் பற்றி உம்முடைய கருத்து என்ன?” என்று கேட்டார்கள். “இவர் கண்ணியவான்களில் ஒருவர், அல்லாஹ் மீது ஆணையாக! இவர் எவரிடத்திலேனும் பெண் கேட்டால், திருமணம் செய்து வைக்கப்படும். எவருக்கேனும் இவர் பரிந்து பேசினால், இவர் பரிந்து பேசுவது ஏற்றுக் கொள்ளப்படும் தகுதி வாய்ந்தவர்” என அவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மௌனமாகி விட்டார்கள், அதற்குப் பிறகு இன்னோருவர் அந்த வழியாகச் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், “இவரைப் பற்றி உமது கருத்து என்ன?” என்று கேட்டார்கள். “யாரஸூலல்லாஹ், இவர் ஒர் ஏழை முஸ்லிம், இவர் ஏதேனும் ஓர் இடத்தில் பெண் கேட்டால் திருமணம் செய்து வைக்கப்படமாட்டாது. எவருக்கேனும் பரிந்து பேசினால், அவரது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, இவர் பேசினால் இவர் பேச்சு கேட்கப்படமாட்டாது” என்று சொன்னார். “முந்தைய மனிதரைப் போன்றவர்கள் உலகம் முழுவதும் நிரம்பிவிட்டாலும் அவர்கள் அனைவரையும் விட இந்த மனிதர் மேலானவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
١٤– عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ ؓ قَالَ: رَأَي سَعْدٌ ؓ أَنَّ لَهُ فَضْلاً عَلَي مَنْ دُونَهُ، فَقَالَ النَّبِيُّ ﷺ: هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلاَّ بِضُعَفَائِكُمْ؟
رواه البخاري باب من استعان بالضعفاء …رقم:٢٨٩٦
14.ஹஜ்ரத் முஸ்பி இப்னு ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (அவர்களது தந்தை) ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்களுக்கு, (செல்வத்திலும், வீரத்திலும்) தன்னைவிடக் குறைந்த நிலையிலுள்ள ஸஹாபாக்களைவிட தனக்குச் சிறப்பும் மேன்மையும் இருக்கிறதென்ற எண்ணம் இருந்தது. “உங்களில் பலவீனர்கள், இயலாதவர்களின் பரக்கத்தால்தான் உங்களுக்கு உதவி செய்யப்படுகிறது. உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படு கின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி(அவர்களின் எண்ணத்தைச் சீர் திருத்தி)னார்கள்.
(புகாரி)
١٥– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: اِبْغُونِي الضُّعَفَاءَ فَإِنَّمَا تُرْزَقُونَ وَتُنْصَرُونَ بِضُعَفَائِكُمْ.
رواه ابوداؤد باب في الانتصار … رقم:٢٥٩٤
15.”பலவீனர்களில் என்னைத் தேடுங்கள், ஏனேனில், உங்களில் பலவீனர்களின் காரணத்தால்தான் உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப் படுகின்றன. உங்களுக்கு உதவி செய்யப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٦– عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ ؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: أَلاَ أَدُلُّكُمْ عَلَي أَهْلِ الْجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ لَوْ أَقْسَمَ عَلَي اللهِ لأَبَرَّهُ، وَأَهْلِ النَّارِ كُلُّ جَوَّاظٍ عُتُلٍّ مُسْتَكْبِرٍ.
رواه البخاري باب قول الله تعالي واقسموا بالله… رقم:٦٦٥٧
16.”சுவர்க்கவாசி யாரென உங்களுக்கு நான் அறிவிக்கவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (பிறகு தாங்களாகவே பதில் கூறலானார்கள்) “தம் கொடுக்கல், வாங்கல், நடத்தையில் கடினமற்ற பணிவையும், நளினத்தையும், தன்னுடைய இயல்பாக ஆக்கிக் கொண்ட ஒவ்வொரு பலவீனமான அப்பாவியான மனிதரும் சுவர்க்கவாசி, மக்களோ அவரை பலவீனராகக் கருதுவர். (ஆனால் அல்லாஹுதஆலாவுடன் அவரது தொடர்பு எத்தகையதெனில்) ஏதேனும் ஒரு காரியத்தில் அல்லாஹுதஆலாவின் மீது சத்தியம் செய்து, “இந்தக் காரியம் இப்படித்தான் நடக்கும்” என்று கூறினால் அல்லாஹுதஆலா அவரது சத்தியத்துக்கு முக்கியத்துவம் அளித்து அவரது காரியத்தை நிச்சயம் நிறைவேற்றுவான். “நரகவாசி யாரென்று உங்களுக்குச் சொல்லவா?” என்று (கேட்டுவிட்டு பிறகு தாங்களே பதில் சொன்னார்கள்) “செல்வத்தைச் சேகரித்து வைக்கும் கருமியான, கடின உள்ளமும், அகந்தையும் உடைய ஒவ்வொரு மனிதனும் நரகவாசி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஹாரிஸதுப்னு வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ عِنْدَ ذِكْرِ النَّارِ: أَهْلُ النَّارِ كُلُّ جَعْظَرِيٍّ جَوٍّاظٍ مُسْتَكْبِرٍ جَمَّاعٍ مَنَّاعٍ، وَأَهْلُ الْجَنَّةِ الضُّعَفَاءُ الْمَغْلُوبُونَ.
رواه احمد ورجاله رجال الصحيح مجمع الزوائد:١٠/٧٢١
17.ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நரகவாசிகளைப்பற்றிக் கூறும் போது, “கடின உள்ளம் படைத்த, தடித்த உடலுடைய, பெருமையுடன் செல்லக்கூடிய, அகந்தை கொண்ட, சொத்து செல்வங்களை ஏராளமாகச் சேர்த்து, மேலும் அந்தச் செல்வங்களை யாசிப்பவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்து வைத்துக்கொள்ளும் ஒவ்வொருவனும் நரகவாசி. சுவனவாசி யாரெனில் பலவீனர்கள், மக்களுடன் பணிவாக நடந்து கொள்பவர்கள், மக்களால் ஒடுக்கப்படுபவர்கள் (மக்கள் அவர்களைப் பலகீனர்கள் எனக் கருதி ஒடுக்கப்படும் ஒவ்வொருவரும் சுவர்க்கவாசி) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٨– عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ نَشَرَ اللهُ عَلَيْهِ كَنَفَهُ وَأَدْخَلَهُ الْجَنَّةَ: رِفْقٌ بِالضَّعِيفِ، وَالشَّفَقَةُ عَلَي الْوَالِدَيْنِ، وَالْإِحْسَانُ إِلَي الْمَمْلُوكِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب فيه اربعة احاديث ….:رقم:٢٤٩٤
18.”மூன்று நற்பண்புகள் யாரிடம் உள்ளனவோ அவருக்கு அல்லாஹுதஆலா (கியாமத் நாளன்று) தன் அருள் என்னும் நிழலில் இடமளிப்பான். மேலும், அவரைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவை, பலவீனர்களுடன் நளினமாக நடந்து கொள்ளுதல், பெற்றோருடன் கருணை காட்டுதல், அடிமைக்கு (வேலையாட்களுக்கு) உபகாரம் செய்தல்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٩– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يُؤْتَي بِالشَّهِيدِ يَوْمَ القْيَامَةِ فَيُنْصَبُ لِلْحِسَابِ، ثُمَّ يُؤْتَي بِالْمُتَصَدِّقِ فَيُنْصَبُ لِلْحِسَابِ، ثُمَّ يُؤْتَي بِأَهْلِ الْبَلاَءِ فَلاَ يُنْصَبُ لَهُمْ مِيزَانٌ، وَلاَ يُنْصَبُ لَهُمْ دِيوَانٌ، فَيُصَبُّ عَلَيْهِمُ الأَجْرُ صَبّاً حَتَّي إِنَّ أَهْلَ الْعَافِيَةِ لَيَتَمَنَّوْنَ فيِ الْمَوَاقِفِ أَنَّ أَجْسَادَهُمْ قُرِضَتْ بِالْمَقَارِيضِ مِنْ حُسْنِ ثَوَابِ اللهِ لَهُمْ.
رواه الطبراني في الكبير وفيه: مجاعة بن الزبير وثقه احمد وضعفه الدار قطني مجمع الزوائد: ٣ /٣٤
19.”கியாமத் நாளன்று (உயிர் தியாகம் செய்த) ஷஹீதை கொண்டு வரப்பட்டு, விசாரணைக்காக நிறுத்திவைக்கப்படும். பிறகு தான, தர்மம் செய்தவரை கொண்டுவரப்பட்டு அவரையும் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்படும். பிறகு உலகில் பல்வேறு சோதனைகள், சிரமங்களில் சிக்குண்டவர்கள் கொண்டு வரப்படுவர், அவர்களுக்காக மீஸான் (தராசு) வைக்கப்பட மாட்டாது, நீதிமன்றமும் அமைக்கப்படமாட்டாது. அவர்கள் மீது வெகுமதியும், கூலியும் மழையைப் போன்று பொழியப்படும், உலகில் சுகமாக வாழ்ந்தவர்கள் (இந்தச் சிறப்பான வெகுமதிகளைக் கண்டு) “தங்கள் உடல்கள் (உலகில்) கத்தரிகளால் வெட்டப்பட்டிருந்தால் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருந்திருப்போமே!‘ என ஆசைப்படுவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٠– عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا أَحَبَّ اللهُ قَوْماً اِبْتَلاَهُمْ، فَمَنْ صَبَرَ فَلَهُ الصَّبْرُ وَمَنْ جَزِعَ فَلَهُ الْجَزَعُ.
رواه احمد ورجاله ثقات مجمع الزوائد: ٣/١١
20.”ஏதேனும் ஒரு கூட்டத்தாரை அல்லாஹுதஆலா நேசிக்க நாடினால் அவர்களைச் சிரமங்களில் ஆழ்த்திச் சோதிப்பான், எவர் பொறுமை கொள்வாரோ அவருக்குப் பொறுமை (யின் கூலி) எழுதப்படுகிறது; எவர் பொறுமை கொள்ள வில்லையோ அவருக்குப் பொறுமையின்மை எழுதப்படுகிறது” (பிறகு அவர் அழுது புலம்பிக் கொண்டிருப்பார்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மஹ்மூதுப்னு லபீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢١– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ الرَّجُلَ لَيَكُونُ لَهُ عِنْدَ اللهِ الْمَنْزِلَةَ فَمَا يَبْلُغُهَا بِعَمَلِهِ، فَمَا يَزَالُ اللهُ يَبْتَلِيهِ بِمَا يَكْرَهُ حَتَّي يَبْلُغَهَا.
رواه ابو يعلي وفي رواية له: يَكُونُ لَهُ عِنْدَ اللهِ الْمَنْزِلَةَ الرَّفِيعَةَ. ورجاله ثقات مجمع الزوائد:٣ /١٣
21.”அல்லாஹுதஆலாவிடம் ஒரு மனிதனுக்கான ஓர் உயர்ந்த பதவி நிர்ணயிக்கப்படுகிறது, (ஆனால்) அவர் தனது அமலின் மூலம் அந்தப் பதவியை அடையவில்லை என்றால் அல்லாஹுதஆலா அவரை (வியாதிகள், சிரமங்கள் முதலியவைகளைக் கொண்டு) சோதிக்கிறான். அவை அவருக்கு வெறுப்பாக இருக்கும், இறுதியில் அவர் அந்தச் சோதனையின் வெறுப்பான நிலைகளால் தனக்குரிய பதவியை அடைந்து விடுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٢– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّ ؓ وَعَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَايُصِيبُ الْمُسْلِمُ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حَزَنٍ وَلاَ أَذًي وَلاَ غَمٍّ حَتَّي الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ.
رواه البخاري باب ماجاء في كفارة المرض رقم:٥٦٤١
22.”ஒரு முஸ்லிமுக்கு களைப்போ, நோயோ, கவலையோ, துக்கமோ, சோர்வோ ஏற்படுமேயானால் அவருக்கு ஏதேனும் முள் தைத்து விட்டாலும் கூட, அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவரது பாவங்களை மன்னித்துவிடுவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ, மற்றும் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٣– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَامِنْ مُسْلِمٍ يُشَاكُ شَوْكَةً فَمَا فَوْقَهَا، إِلاَّ كُتِبَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَمُحِيَتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ.
رواه مسلم باب ثواب المؤمن فيما يصيبه من مرض…. رقم:٦٥٦١
23.”எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு முள் தைத்துவிட்டால் அல்லது அதைவிட குறைந்த நோவினை ஏற்பட்டாலோ அதற்குப் பகரமாக அல்லாஹுதஆலாவிடம் அவருக்கு ஒரு பதவி எழுதப்படுகிறது. அவரது ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٤– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا يَزَالُ الْبَلاَءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي نَفْسِهِ وَوَلَدِهِ وَمَالِهِ حَتَّي يَلْقَي اللهَ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في الصبر علي البلاء رقم:٢٣٩٩
24.”உண்மை விசுவாசிகளான ஆண், பெண்களில் சிலர் மீது அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து சோதனைகளும் விபத்துகளும் வந்து கொண்டே இருக்கும். சில சமயம் உயிர் மீது, சில சமயம் பிள்ளைகள் மீது, சில சமயம் செல்வத்தின் மீதும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும் அதன் காரணமாக அவருடைய பாவங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் இறுதியில் அவர் மரணித்த பிறகு ஒரு பாவம் கூட இல்லாத நிலையில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பார் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا اِبْتَلَي اللهُ الْعَبْدَ الْمُسْلِمَ بِبَلاَءٍ فِي جَسَدِهِ، قَالَ اللهُ لِلْمَلَكِ: اُكْتُبْ لَهُ صَالِحَ عَمَلِهِ الَّذِي كَانَ يَعْمَلُهُ، فَإِنْ شَفَاهُ غَسَلَهُ وَطَهَّرَهُ، وَإِنْ قَبَضَهُ غَفَرَ لَهُ وَرَحِمَهُ.
رواه ابو يعلي واحمد ورجاله ثقات مجمع الزوائد: ٣ /٣٣
25.”அல்லாஹுதஆலா ஒரு முஸ்லிம் அடியானின் உடலில் நோயைக் கொடுத்துச் சோதித்தால் “இந்த அடியானுக்கு அவர் (ஆரோக்கியமான நிலையில்) செய்து வந்த அனைத்து நற்செயல்களையும் எழுதுங்கள்” என்று ஒரு மலக்குக்கு அல்லாஹுதஆலாவுக்கு கட்டளையிடுகிறான்.”பிறகு அவருக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்துவிட்டால் அவரை (ப் பாவங்களை விட்டும்) கழுவிச் சுத்தம் செய்கிறான், அவரது உயிரைக் கைப்பற்றிவிட்டால் அவரது பாவங்களை மன்னித்து அவர் மீது அருள் பொழிகிறான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூயஃலா, முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٦– عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ اللهَ يَقُولُ: إِذَا ابْتَلَيْتُ عَبْداً مِنْ عِبَادِي مُؤْمِناً، فَحَمِدَنِي عَلَي مَاابْتَلَيْتُهُ فَأَجْرُوا لَهُ كَمَا كُنْتُمْ تُجْرُونَ لَهُ وَهُوَ صَحِيحٌ.
رواه احمد والطبراني في الكبير والاوسط كلهم من رواية اسماعيل بن عياش عن راشد الصنعاني وهو ضعيف في غير الشاميين وفي الحاشية: راشد بن داؤد شامي فرواية اسماعيل عنه صحيحة مجمع الزوائد :٣ /٣٣
26.”ஒரு முஃமினான என் அடியார்களில் எவரையேனும் (ஏதேனும் சிரமம், நோய் முதலியவைகளைக் கொண்டு) நான் சோதிக்கும் பொழுது, அவன் என் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட சிரமத்தைக் கண்டு (பொறுமையுடன்) என்னைப் புகழ்ந்தால், “இவர் ஆரோக்கியமாக இருந்தபோது செய்து வந்த செயல்களுக்குரிய கூலியை நீங்கள் எழுதி வந்ததைப்போல அனைத்து அமல்களின் நன்மையையும் அப்படியே எழுதிவிடுங்கள்” (என நான் மலக்குகளுக்கு கட்டளையிடுகிறேன்) என்று அல்லாஹுதஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் குத்ஸியை ஹஜ்ரத் ஷத்தாதுப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٧– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَزَالُ الْمَلِيلَةُ وَالصُّدَاعُ بِالْعَبْدِ وَالأَمَةِ وَإِنْ عَلَيْهِمَا مِنَ الْخَطَايَا مِثْلَ أُحُدٍ، فَمَا يَدَعُهُمَا وَعَلَيْهِمَا مِثْقَالُ خَرْدَلَةٍ.
رواه ابو يعلي ورجاله ثقات مجمع الزوائد :٣ /٢٩
27.”யாரேனும் ஒரு முஃமினான ஆணுக்கோ, பெண்ணுக்கோ நிரந்தரமான உள் காய்ச்சலோ, தலைவலியோ இருந்தால், அது அவரது பாவங்களில் கடுகளவையும் விட்டுவைக்காது. அவரது பாவம் உஹுத் மலையளவு இருந்தாலும் சரியே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٨– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: صُدَاعُ الْمُؤْمِنِ وَشَوْكَةٌ يُشَاكُهَا أَوْ شَيْءٌ يُؤْذِيهِ يَرْفَعُهُ اللهُ بِهَا يَوْمَ الْقِيَامَةِ دَرَجَةً، وَيُكَفِّرُ عَنْهُ بِهَا ذُنُوبَهُ.
رواه ابن ابي الدنيا ورواته ثقات الترغيب:٤ /٢٩٧
28.”ஒரு முஃமினுக்கு ஏற்படும் தலைவலியும், முள் தைத்தலும், அல்லது வேறு ஏதேனும் சிரமமும் ஏற்பட்டால் அதன் காரணமாக அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று அந்த முஃமினுக்கு ஒரு பதவியை உயர்த்துகிறான், அச்சிரமத்தின் காரணமாக அவரது பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுபித்துன்யா, தர்ஙீப்)
٢٩– عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ عَبْدٍ تَضَرَّعَ مِنْ مَرَضٍ إِلاَّ بَعَثَهُ اللهُ مِنْهُ طَاهِرًا.
رواه الطبراني في الكبير ورجاله ثقات مجمع الزوائد: ٣ /٣١
29.”எந்த அடியான் நோயினால் (அல்லாஹுதஆலாவிடம்) அழுது மன்றாடுகிறனோ, அல்லாஹுதஆலா அவரைப் பாவங்களிலிருந்து தூய்மையான நிலையில் ஆரோக்கியம் அளிக்கிறான்”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٠– عَنِ الْحَسَنِ رَحِمَهُ اللَهُ مُرْسَلاً مَرْفُوعاً قَالَ: إِنَّ اللهَ لَيُكَفِّرُ عَنِ الْمُؤْمِنِ خَطَايَاهُ كُلَّهَا بِحُمَّي لَيْلَةٍ.
رواه ابن ابي الدنيا وقال ابن المبارك عقب رواية له: انه من جيدالحديث ثم قال وشواهده كثيرة يؤكد بعضها بعضا اتحاف:٩ /٥٢٦
30.”ஒரு முஃமினுக்கு ஓர் இரவு ஏற்பட்ட காய்ச்சலால் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹுதஆலா மன்னித்து விடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு பித்துன்யா, இத்ஹாஃப்)
٣١– عَنْ أَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: قَالَ اللهُ تَعَالَي: إِذَا ابْتَلَيْتُ عَبْدِيَ الْمُؤْمِنَ وَلَمْ يَشْكُنِي إِلَي عُوَّادِهِ أَطْلَقْتُهُ مِنْ أَسَارِي، ثُمَّ أَبْدَلْتُهُ لَحْماً خَيْرًا مِنْ لَحْمِهِ وَدَمًاخَيْرًا مِنْ دَمِهِ، ثُمَّ يَسْتَأْنِفُ الْعَمَلَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط الشيخين ولم يخرجاه ووافقه الذهبي:١ /٣٤٩
31.”என்னுடைய முஃமினான அடியானை ஏதேனுமொரு நோயைக் கொண்டு நான் சோதித்தால், அவர் நோய் விசாரிக்க வருபவர்களிடம் என்னைப் பற்றி முறையிடாமல் இருந்தால் என்னுடைய கைதிகளிலிருந்து அவரை விடுதலை செய்துவிடுவேன் (அவரது பாவத்தை மன்னித்து விடுவேன்). பிறகு, அவரது (உடலில் இருக்கும்) மாமிசத்தைவிட சிறந்த மாமிசத்தை அவருக்குக் கொடுப்பேன், அவரது இரத்தத்தைவிடச் சிறந்த ரத்தத்தை அவருக்குக் கொடுப்பேன், அவருக்கு ஆரோக்கியத்தை வழங்குவேன், இனி அவர் (வியாதியிலிருந்து ஆரோக்கியம் பெற்ற பின்) புதியதாக அமல் செய்யத் தொடங்குகிறார், (அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன) என்ற ஹதீஸ் குத்ஸியை நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٣٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ وُعِكَ لَيْلَةً فَصَبَرَ وَرَضِيَ بِهَا عَنِ اللهِ خَرَجَ مِنْ ذُنُوْبِهِ كَيَوْمٍ وَلَدَتْهُ اُمُّهُ.
رواه ابن ابي الدنيا في كتاب الرضي وغيره الترغيب:٤ /٢٩٩
32.”எவரொருவருக்கு ஓர் இரவு காய்ச்சல் வந்து, அவர் அதைப் பொறுமையுடன் இருந்து அந்தக் காய்ச்சலிலும் அவர் அல்லாஹுதஆலாவுடன் திருப்தி கொண்டவராக இருந்தாரென்றால், பிறந்த பாலகனைப் போன்று தன் பாவங்களை விட்டும் பரிசுத்தமாகி விடுகிறார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு பித்துன்யா, தர்ஙீப்)
٣٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ رَفَعَهُ اِلَي النَّبِيِّ ﷺ قَالَ: يَقُوْلُ اللهُ : مَنْ اَذْهَبْتُ حَبِيْبَتَيْهِ فَصَبَرَ وَاحْتَسَبَ لَمْ اَرْضَ لَهُ ثَوَابًا دُوْنَ الْجَنَّةِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في ذهاب البصر رقم:٢٤٠١
33.”எந்த அடியானின் பிரியமான இரு பொருட்களை (இரு கண்களை) நான் பறித்துக்கொள்ள, அவர் அதைச் சகித்துக் கொண்டு அதனுடைய நன்மையையும், கூலியையும், என்னிடம் ஆதரவு வைத்தால், அவருக்குச் சொர்க்கத்தைவிடக் குறைந்த அன்பளிப்பு வழங்குவதை நான் விரும்பமாட்டேன்” என்னும் ஹதீஸ் குத்ஸியை நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٤– عَنْ أَبِيْ مُوْسي ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيْمًا صَحِيْحًا.
رواه البخاري, باب يكتب للمسافر …, رقم:٢٩٩٦
34.ஓர் அடியான் நோயுற்றால் அல்லது பயணம் மேற்கொண்டால், (நோயின் காரணமாக அல்லது பிரயாணத்தின் காரணமாக அமல் செய்ய முடியாததால்) அவர் ஆரோக்கிய நிலையில் அல்லது வீட்டிலிருக்கும் போது செய்த செயல்களின் கூலி அவருக்கு எழுதப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٥– عَنْ اَبِيْ سَعيْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلتَّاجِرُ الصَّدُوْقُ الْاَمِيْنُ، مَعَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَاءِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء في التجار …رقم:١٢٠٩
35.”முழு உண்மையுடனும், நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்யும் வியாபாரி, நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (உயிர்த் தியாகி) களுடன் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٦– عَنْ رِفَاعَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِنَّ التُّجَّارَ يُبْعَثُوْنَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا، اِلاَّ مَنِ اتَّقَي اللهَ وَبَرَّ وَصَدَقَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في التجار …. رقم:١٢١٠
36.”அல்லாஹ்வை அஞ்சி பேணுதலைக் கடைப்பிடித்து, (மோசடி, சூழ்ச்சியில் ஈடுபடாமல்) நல்லது செய்து, (தன் வியாபாரம், கொடுக்கல் வாங்கலில் மக்களுடன் நன்னடத்தை மேற்கொண்டு சத்தியத்தின் மீது நிலைத்து நின்று வியாபாரம் செய்த) வியாபாரிகளைத் தவிர மற்ற வியாபாரிகள் கியாமத் நாளன்று பாவிகளாக எழுப்பப்படுவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ரிஃபாஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٧– عَنْ اُمِّ عُمَارَةَ ابْنَةِ كَعْبِ نِ اْلاَنْصَارِيَّةِ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ دَخَلَ عَلَيْهَا فَقَدَّمَتْ اِلَيْهِ طَعَامًا، فَقَالَ: كُلِيْ، فَقَالَتْ: اِنِّيْ صَائِمَةٌ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ الصَّائِمَ تُصَلِّيْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ اِذَا اُكِلَ عَنْدَهُ حَتَّي يَفْرُغُوْا، وَرُبَّمَا قَالَ: حَتَّي يَشْبَعُوْا.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في فضل الصائم اذا اكل عنده رقم:٧٨٥
37.ஹஜ்ரத் கஅப் (ரலி) அவர்களின் மகள் உம்மு உமாரா அன்ஸாரிய்யா அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் வந்தபோது அன்னாரின் சமுகத்தில் உணவு கொண்டு வந்து வைத்தார்கள். நீரும் உண்பீராக! என நபி (ஸல்) அவர்கள் கூற, “நான் நோன்பு வைத்துள்ளேன்” என்று அவ்வம்மையார் கூறினார். “நோன்பாளிக்கு முன்பு உணவு உண்ணப்படும் போது உண்பவர் உண்டு முடிக்கும் வரை மலக்குகள் அந்த நோன்பாளிக்கு அருள் வேண்டி துஆச் செய்கின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் உம்மு உமாரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِنَّ شَجَرَةً كَانَتْ تُؤْذِي الْمُسْلِمِيْنَ، فَجَاءَ رَجُلٌ فَقَطَعَهَا فَدَخَلَ الْجَنَّةَ.
رواه مسلم باب فضل ازالة الاذي عن الطريق رقم:٦٦٧٢
38.”மரம் ஒன்று முஸ்லிம்களுக்கு இடையூறாக இருந்தது, ஒருவர் வந்து அதை வெட்டிவிட்டார், (இந்தச் செயலால்) அவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٩– عَنْ اَبِيْ ذَرٍّ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لَهُ: اُنْظُرْ فَاِنَّكَ لَسْتَ بِخَيْرٍ مِنْ اَحْمَرَ وَلاَ اَسْوَدَ اِلاَّ اَنْ تَفْضُلَهُ بِتَقْوَي.
رواه احمد:٥ /١٥٨
39.”அபூதரே! அறிந்து கொள்ளும்! நீர் ஒரு சிவப்பு மனிதரைவிடவோ அல்லது கறுப்பு நிறத்தவரைவிடவோ சிறந்தவரல்ல, ஆயினும் நீங்கள் தக்வாவின் (இறையச்சத்தின்) காரணமாக அவரைவிட மேன்மை உடையவராக ஆகலாம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٤٠– عَنْ ثَوْبَانَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اُمَّتِيْ مَنْ لَوْ جَاءَ اَحَدَكُمْ يَسْاَلُهُ دِيْنَارًا لَمْ يُعْطِهِ، وَلَوْ سَاَلَهُ دِرْهَمًا لَمْ يُعْطِهِ، وَلَوْ سَاَلَهُ فِلْسًا لَمْ يُعْطِهِ، وَلَوْ سَأَلَ اللهُ الْجَنَّةَ اَعْطَاهُ اِيَّاهَا، ذِيْ طِمْرَيْنِ لاَ يُؤْبَهُ لَهُ لَوْ اَقْسَمَ عَلَي اللهُ لَاَبَرَّهُ.
رواه الطبراني في الاوسط ورجاله رجال الصحيح مجمع الزوائد:١٠/٤٦٦
40.”என் உம்மத்தில் சிலர் இருக்கின்றனர், அவர்களிலிருந்து யாரேனும் ஒருவர் உங்களில் ஒருவரிடம் வந்து ஒரு தங்க நாணயம் யாசித்தால் அவருக்குக் கொடுக்கமாட்டார், ஒரு வெள்ளி நாணயம் கேட்டால் அதையும் கொடுக்கமாட்டார், ஒரு பைசா கேட்டால் ஒரு பைசாவும் கொடுக்கமாட்டார். (ஆயினும் அல்லாஹுதஆலாவிடம் அவரது தகுதியாவது) அவர் அல்லாஹுதஆலாவிடம் சொர்க்கத்தை வேண்டினால் அல்லாஹுதஆலா அவருக்கு சொர்க்கத்தைக் கொடுத்துவிடுவான். (அம்மனிதரின் மேனியில் வெறும்) இரு பழைய போர்வைகள் இருக்கும், அவரை யாரும் சிறிதும் பொருட்படுத்தமாட்டார்கள். (ஆயினும்) அவர் அல்லாஹுதஆலா(வின் மீது தன் காரியங்களை ஒப்படைக்கும் மனவலிமையுடன்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அல்லாஹுதஆலா நிச்சயமாக அவரது சத்தியத்தை நிறை வேற்றி வைப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)


நற்குணங்கள்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِيْنَ۞).
(الحجر:٨٨)
1.நம்பிக்கையாளர்களுக்காக உம்முடைய (பணிவென்னும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!
(அல்ஹிஜ்ர்:88)
وَقَالَ تَعَالي: (وَسَارِعُوْا اِلَي مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَاْلاَرْضُ لا اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَ ۞ الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ ط وَاللهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ۞).
(ال عمران:١٣٣)
2.இன்னும் உங்களுடைய ரப்பின் மன்னிப்பின் பக்கமும் சுவர்க்கத்தின் பக்கமும் நீங்கள் விரைந்து செல்லுங்கள்; அதன் விசாலம் வானங்களும், பூமியுமாகும்; (இறை) அச்சமுடையவர்களுக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது.. அவர்கள் எத்தகையோரென்றால், இன்பத்திலும் துன்பத்திலும் (வளமையிலும், வறுமையிலும் அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்வார்கள்; கோபத்தை மென்று விழுங்கிவிடுபவர்கள்; மனிதர்க(ளின் தவறுக)ளை மன்னிப்பவர்கள் – அல்லாஹ் (இவ்வாறு) நன்மை செய்கிறவர்களை நேசிக்கிறான்.
(ஆலுஇம்ரான்:133,134)
وَقَالَ تَعَالي: (وَعِبَادُ الرَّحْمنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَي اْلاَرْضِ هَوْنًا۞).
(الفرقان:٦٣)
3.அளவற்ற அருளாளனின் அடியார்கள் எத்தகையவர்களென்றால், பூமியின் மீது பணிவாக அவர்கள் நடப்பார்கள்.
(அல்ஃபுர்கான்:63)
وَقَالَ تَعَالي: (وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ج فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهُ عَلَي اللهِ ط اِنَّهُ لاَيُحِبُّ الظَّالِمِيْنَ۞).
(الشوري:٤٠)
4.தீமைக்குக் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆயினும், எவர் மன்னித்து சமாதானம் செய்து கொண்டாரோ அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருக்கிறது, நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.
(அஷ்ஷூரா:40)
وَقَالَ تَعَالي: (وَاِذَا مَا غَضِبُوْا هُمْ يَغْفِرُوْنَ۞).
(الشوري:٣٧)
5.இன்னும் அவர்களுக்கு கோபம் ஏற்படும்போது மன்னிப்பார்கள்.
(அஷ்ஷூரா:37)
وَقَالَ تَعَالي حِكَايَةً عَنْ قَوْلِ لُقْمنَؑ: (وَلاَتُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلاَ تَمْشِ فِي اْلاَرْضِ مَرَحًا ط اِنَّ اللهَ لاَيُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ ۞ وَاقْصِدْ فِيْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ط اِنَّ اَنْكَرَ اْلاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ۞).
(لقمن:١٩–١٨)
6.இன்னும் (பெருமை கொண்டு) உன்னுடைய முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பாதே; பூமியில் கர்வமாக நடக்காதே; நிச்சயமாக அல்லாஹ் பெருமையடித்து கர்வங்கொள்ளும் எவரையும் நேசிக்கமாட்டான்.உன்னுடைய நடையில் நடுநிலையைக் கடைப்பிடிப்பாயாக! உன்னுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வாயாக! நிச்சயமாக சப்தங்களில் மிக வெறுக்கத்தக்கது, கழுதைகளின் சப்தமாகும் (என்று லுக்மான் (அலை) தன்மகனுக்குக் கூறினார்கள்.
(லுக்மான்:18,19)

ஹதீஸ்கள்:-
٤١– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ.
رواه ابوداؤد باب في حسن الخلق رقم:٤٧٩٨
41.”உண்மை விசுவாசி தன் நற்குணத்தால், பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணங்கக் கூடியவரின் பதவியை அடைந்து விடுவார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٤٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَكْمَلُ الْمُؤْمِنِيْنَ اِيْمَانًا اَحْسَنُهُمْ خُلُقَا، وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِكُمْ.
رواه احمد:٢/٤٧٢
42.”ஈமான் உடையவர்களில் அழகிய குணம் படைத்தவரே பூரணமான விசுவாசம் (ஈமான்) உடையவர். உங்களில் மிகச் சிறந்தவர் தன் மனைவிமார்களுடன் நன்முறையில் நடந்து கொள்பவரே” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٤٣– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اَكْمَلِ الْمُؤْمِنِيْنَ اِيْمَانًا اَحْسَنُهُمْ خُلُقًا وَاَلْطَفُهُمْ بِاَهْلِهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب في استكمال الايمان ….رقم:٢٦١٢
43.”எவரது குணம் மிகவும் சிறந்ததோ, எவரது நடத்தை தம் வீட்டாருடன் மிக நளினமானதாக இருக்குமோ அவரே பரிபூரண விசுவாசம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٤٤– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: عَجِبْتُ لِمَنْ يَشْتَرِي الْمَمَالِيْكَ بِمَالِهِ ثُمَّ يُعْتِقُهُمْ، كَيْفَ لاَ يَشْتَرِي اْلاَحْرَارَ بِمَعْرُوْفِهِ؟ فَهُوَ اَعْظَمُ ثَوَابًا.
رواه ابو الغنائم النوسي في قضاء الحوائج وهو حديث حسن الجامع الصغير:٢ /١٤٩
44.நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “தன் செல்வத்திலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கி, பிறகு அவர்களை உரிமைவிடக் கூடிய மனிதரைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். அவர் மக்களுடன் நன் முறையில் நடந்து சுதந்திரமானவர்களை ஏன் விலைக்கு வாங்குவதில்லை? அதன் நன்மை அதிகமானதல்லவா? (அவர் மக்களுடன் அழகிய முறையில் நடந்து கொண்டால் மக்கள் அவரது அடிமைகளாகி விடுவார்கள்)
(அபுல் ஙனாயிம், ஜாமிஉஸ் ஸஙீர்)
٤٥– عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَنَازَعِيْمٌ بِبَيْتٍ فِيْ رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَاِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِيْ وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَاِنْ كَانَ مَازِحًا، وَبِبَيْتٍ فِيْ اَعْلَي الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ.
رواه ابوداؤد باب في حسن الخلق رقم:٤٨٠٠
45.”தான் சத்தியத்தின் மீது இருந்தும், வாதம் புரிவதை விட்டுவிடும் மனிதருக்கு சுவனத்தின் ஓரத்தில் ஒரு மாளிகையை வாங்கித் தர நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். விளையாட்டாகக் கூடப் பொய் பேசுவதை விட்டுவிடும் மனிதருக்கு சொர்க்கத்தின் மத்திய பகுதியில் ஒரு மாளிகையை வாங்கித்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தனது குணத்தை அழகாக ஆக்கிக் கொள்கிறோரோ, அவருக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு மாளிகையை வாங்கித்தரப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٤٦– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ لَقِيَ اَخَاهُ الْمُسْلِمَ بِمَا يُحِبُّ اللهُ لِيَسُرَّهُ بِذلِكَ، سَرَّهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ.
رواه الطبراني في الصغير واسناده حسن مجمع الزوائد:٨ /٣٥٣
46.”எவர் ஒருவர் ஒரு முஸ்லிம் சகோதரரை அல்லாஹுதஆலா விரும்பும் வகையில் மகிழ்விக்க (இன்முகத்துடன்) சந்தித்தால் அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று அவரை மகிழ்விப்பான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٤٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ يَقُوْلُ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ الْمُسْلِمَ الْمُسَدِّدَ لَيُدْرِكُ دَرَجَةَ الصَّوَّامِ الْقَوَّامِ بِآيَاتِ اللهِ بِحُسْنِ خُلُقِهِ وَكَرَمِ ضَرِيْبَتِهِ.
رواه احمد:٢ /١٧٧
47.”மார்க்க முறைப்படி செயல்படும் ஒரு முஸ்லிம், தன்னுடைய கண்ணிய மான இயல்பாலும், அழகிய குணத்தாலும், இரவில் தொழுகையில் சங்கைமிக்க குர்ஆனை ஓதும், அதிகமாக நோன்பு நோற்கும் மனிதரின் பதவியை அடைந்துவிடுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٤٨– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَامِنْ شَيْءٍ اَثْقَلُ فِي الْمِيْزَانِ مِنْ حُسْنِ الْخُلُقِ.
رواه ابوداؤد باب في حسن الخلق رقم:٤٧٩٩
48. (கியாமத் நாளன்று) “முஃமினுடைய அமல்களை எடைபோடும் தராசில் நற்குணத்தைவிட அதிக பாரமான செயல்கள் வேறு எதுமிருக்காது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٤٩– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ قَالَ: آخِرُ مَااَوْصَانِيْ بِهِ رَسُوْلُ اللهِ ﷺ حِيْنَ وَضَعْتُ رِجْلِيْ فِي الْغَرْزِاَنْ قَالَ لِيْ: اَحْسِنْ خُلُقَكَ لِلنَّاسِ مُعَاذَ بْنَ جَبَلٍ.
رواه الامام مالك في الموطا، ماجاء في حسن الخلق ص:٧٠٤
49.நான் வாகனத்தில் ஏறும் வளையத்தில் என்னுடைய காலை வைத்த போது நபி (ஸல்) அவர்கள் எனக்குச் செய்த கடைசி உபதேசம், “முஆதே! உம்முடைய குணத்தை மக்களுக்காக அழகாக்கிக் கொள்க!” என்பதாம் என்று ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முத்தா இமாம் மாலிக்)
٥٠– عَنْ مَالِكٍ اَنَّهُ بَلَغَهُ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: بُعِثْتُ لِأُتَمِّمَ حُسْنَ اْلاَخْلاَقِ.
رواه الامام مالك في الموطا، ماجاء في حسن الخلق ص:٧٠٥
50.”நற்குணத்தை முழுமையாக்க நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எனக்குக் கிடைத்துள்ளது என ஹஜ்ரத் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(முத்தாமாலிக்)
٥١– عَنْ جَابِرٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِنَّ مِنْ اَحَبِّكُمْ اِلَيَّ وَاَقْرَبِكُمْ مِنِّيْ مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ اَحَاسِنَكُمْ اَخْلاَقًا.
(الحديث) رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في معالي الاخلاق رقم:٢٠١٨
51.”தன் குணத்தால் அழகானவரே, உங்களில் யாவரிலும் எனக்கு மிக விருப்பமானவர், கியாமத் நாளில் எனக்கு மிக அருகில் இருப்பவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٥٢– عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ اْلاَنْصَارِيِّ ؓ قَالَ: سَاَلْتُ رَسُوْلَ اللهِ ﷺ عَنِ الْبِرِّ وَاْلاِثْمِ؟ فَقَالَ: اَلْبِرُّ حُسْنُ الْخُلْقِ، وَاْلاِثْمُ مَاحَاكَ فِيْ صَدْرِكَ وَكَرِهْتَ اَنْ يَّطَّلِعَ عَلَيْهِ النَّاسُ.
رواه مسلم باب تفسيرالبر والاثم رقم:٦٥١٦
52.ஹஜ்ரத் நவ்வாஸிப்னு ஸம்ஆன் அன்ஸாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம், நன்மை, தீமையைப் பற்றிக் கேட்டேன், நன்மை என்பது நற்குணத்தின் பெயராகும், எது உமது உள்ளத்தை உறுத்துகிறதோ, மேலும் உம் செயல்களில் எதை மக்கள் அறிவதை நீர் வெறுப்பீரோ அது தான் தீமையாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(முஸ்லிம்)
٥٣– عَنْ مَكْحُوْلٍؒ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُوْنَ هَيِّنُوْنَ لَيِّنُوْنَ كَالْجَمَلِ اْلآنِفِ اِنْ قِيْدَ انْقَادَ، وَاِنْ اُنِيْخَ عَلَي صَخْرَةٍ اِسْتَنَاخَ.
رواه الترمذي مرسلا مشكوة المصابيح رقم:٥٠٨٦
53.”ஈமான் கொண்ட மக்கள், அல்லாஹுதஆலாவின் கட்டளைகளை அதிகம் நிறைவேற்றுபவர் மிக்க மென்மையான சுபாவமுடையோருமாவர். எவ்வாறு மேய்ப்பவருக்கு கட்டுப்படுகின்ற ஓர் ஒட்டகம் அதை எங்கு இழுத்துச் சென்றாலும் சென்றுவிடுகிறதோ, பாறை மீது அதை உட்கார வைக்கப்பட்டால் உட்கார்ந்து கொள்கிறதோ அதைப்போலவே ஈமான் கொண்டவர்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மக்ஹுல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ, மிஷ்காதுல் மஸாபீஹ்)
தெளிவுரை:- பாறை மீது அமர்வது ஒட்டகத்துக்கு மிக சிரமமான காரியம், அப்படியிருந்தும் அது தன் எஜமானனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அதன் மீது உட்கார்ந்து கொள்கிறது.
(மஜ்மஃபிஹாருல் அன்வார்)
٥٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلاَ اُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَي النَّارِ، وَبِمَنْ تَحْرُمُ عَلَيْهِ النَّارُ؟ عَلَي كُلِّ قَرِيْبٍ هَيِّنٍ سَهْلٍ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب فضل كل قريب هين سهل رقم:٢٤٨٨
54.”நரகத்தில் நுழைவது எவருக்கு ஹராம், எவரை நரகம் தீண்டுவது ஹராம் என்பதை உங்களுக்கு நான் சொல்லவா? கவனமாகக் (கேளுங்கள்), மக்களுடன் நெருங்கியிருப்பவர், மிக்க மென்மையான சுபாவமும், நளினமான இயல்பும் கொண்ட ஒவ்வொருவரையும் நரக நெருப்புத் தீண்டுவது ஹராமாக்கப்படும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- மக்களுடன் நெருங்கியிருப்பவர் என்பதன் பொருள், தன் மென்மையான சுபாவத்தின் காரணமாக மக்களுடன் அதிகம் கலந்துறவாடுவார், அவரது நல்ல பண்பின் காரணமாக மக்களும் அவருடன் எந்தவித தயக்கமுமின்றி, பாசத்துடன் பழகுவர் என்பதாம்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٥٥– عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ اَخِيْ بَنِيْ مُجَاشِعٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اللهَ اَوْحَي اِلَيَّ اَنْ تَوَاضَعُوْا حَتَّي لاَ يَفْخَرَ اَحَدٌ عَلَي اَحَدٍ، وَلاَ يَبْغِيْ اَحَدٌ عَلَي اَحَدٍ.
(وهو جزء من الحديث) رواه مسلم باب الصفات التي يعرف بها في الدنيا … رقم:٧٢١٠
55.”உங்களில் எவரும் எவர் மீதும் பெருமை கொள்ளாமலும், எவரும் எவருக்கும் அநீதி இழைக்காமலும் பரஸ்பரம் உங்களுக்கிடையில் பணிவாக நடந்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹுதஆலா எனக்கு வஹீ அறிவித்துள்ளான், என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பனீ முஜாஷீஃ கோத்திரத்தைச் சார்ந்த ஹஜ்ரத் இயாழிப்னு ஹிமார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٥٦– عَنْ عُمَرَ ؓقَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ تَوَاضَعَ لِلّهِ رَفَعَهُ اللهُ فَهُوَ فِيْ نَفْسِهِ صَغِيْرٌ وَفِيْ اَعْيُنِ النَّاسِ عَظِيْمٌ، وَمَنْ تَكَبَّرَ وَضَعَهُ اللهُ فَهُوَ فِيْ اَعْيُنِ النَّاسِ صَغِيْرٌ وَفِيْ نَفْسِهِ كَبِيْرٌ حَتَّي لَهُوَ اَهْوَنُ عَلَيْهِمْ مِنْ كَلْبٍ اَوْ خِنْزِيْرٍ.
رواه البيهقي في شعب الايمان:٦ /٢٧٦
56.”எவர் அல்லாஹுதஆலாவுடைய பொருத்தத்தை நாடி பணிவை மேற்கொள்வாரோ, அவரை அல்லாஹுதஆலா உயர்த்தி விடுவான். அதன் காரணமாக அவர் தன்னைத் தாழ்வாகக் கருதுவார், மக்களின் பார்வையில் உயர்ந்து விடுவார். மேலும் எவர் பெருமையடிக்கிறாரோ, அவரை அல்லாஹுதஆலா தாழ்த்திவிடுகிறான். அதனால் அவர் தன்னை உயர்வாக கருதுவார் மக்கள் பார்வையில் தாழ்ந்துவிடுகிறார். பிறருடைய பார்வையில் அவர் நாய், பன்றியைவிடவும் இழிவடைந்து விடுகிறார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٥٧– عَنْ عَبْدِ اللهِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِيْ قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ.
رواه مسلم باب تحريم الكبر وبيانه رقم:٢٦٧
57.”எவரது உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்குமோ அவர் சொர்க்கம் செல்லமாட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٥٨– عَنْ مُعَاوِيَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ سَرَّهُ اَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء في كراهية قيام الرجل للرجل رقم:٢٧٥٥
58.”மக்கள் (தன்னைக் கண்ணியப்படுத்த) தன் முன் எழுந்து நிற்பதை எவர் விரும்புகிறாரோ, அவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளவும்” என நபி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- மக்கள் தம்மைக் கண்ணியப்படுத்த எழுந்து நிற்க வேண்டுமென விரும்புபவருக்குத்தான் இந்த எச்சரிக்கை. ஆனால் ஒருவர் தான் விரும்பாமலேயே மக்கள் கண்ணியம், நேசத்தின் காரணமாக அவருக்காக எழுந்து நிற்பது என்பது வேறு செயல்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٥٩– عَنْ اَنَسٍ ؓ قَالَ: لَمْ يَكُنْ شَخْصٌ اَحَبَّ اِلَيْهِمْ مِنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: وَكَانُوْا اِذَا رَاَوْهُ لَمْ يَقُوْمُوْا لِمَا يَعْلَمُوْنَ مِنْ كَرَاهِيَّتِهِ لِذلِكَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب باب ماجاء في كراهية قيام الرجل للرجل رقم:٢٧٥٤
59.”நபி (ஸல்) அவர்களைவிட வேறுயாரும் ஸஹாபாக்களுக்கு மிக்க நேசத்திற்குரியவர்களாக இருந்ததில்லை, அவ்வாறு இருந்தும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைப் பார்த்தால் ஸஹாபாக்கள் எழுந்து நிற்கமாட்டார்கள். ஏனேனில், எழுந்து நிற்பதை நபி (ஸல்) அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்” என்று ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(திர்மிதீ)
٦٠– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَا مِنْ رَجُلٍ يُصَابُ بِشَيْءٍ فِيْ جَسَدِهِ فَيَتَصَدَّقُ بِهِ اِلاَّ رَفَعَهُ اللهُ بِهِ دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهِ خَطِيْئَةً.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في العفو رقم:١٣٩٣
60. “யாரேனும் ஒருவருக்கு (பிறரால்) உடல் ரீதியான சிரமம் ஏற்பட்டு, பிறகு அதை மன்னித்துவிட்டால், அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவருக்கு ஒரு பதவியை உயர்த்துகிறான், ஒரு பாவத்தை மன்னிக்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٦١– عَنْ جَوْدَانَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنِ اعْتَذَرَ اِلَي اَخِيْهِ بِمَعْذِرَةٍ فَلَمْ يَقْبَلْهَا، كَانَ عَلَيْهِ مِثْلُ خَطِيْئَةِ صَاحِبِ مَكْسٍ.
رواه ابن ماجه باب المعاذير رقم:٣٧١٨
61.”யாரேனும் ஒரு மனிதர் தன் முஸ்லிம் சகோதரரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க, இவர் அவரை மன்னிக்கவில்லையென்றால், அநியாயமாக வரி வசூலிப்பவருக்குரிய பாவம் இவருக்குக் கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜவ்தான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٦٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: قَالَ مُوْسَي بْنُ عِمْرَانَؑ: يَارَبِّ! مَنْ اَعَزُّ عِبَادِكَ عِنْدَكَ؟ قاَلَ: مَنْ اِذَا قَدَرَ غَفَرَ.
رواه البيهقي في شعب الايمان:٦ /٣١٩
62.ஹஜ்ரத் மூஸா இப்னு இம்ரான் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவிடம், “எனது இரட்சகனே, உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் கண்ணியத்துக்குரியவர் யார்?’ எனக் கேட்டார்கள், “பழி வாங்க சக்தியிருந்தும் மன்னித்துவிட்டவர் தான்” என்று அல்லாஹுதஆலா கூறினான் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٦٣– عَنْ عَبْدِاللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ كَمْ اَعْفُوْ عَنِ الْخَادِمِ؟ فَصَمَتَ عَنْهُ النَّبِيُّ ﷺ ثُمَّ قَالَ: يَارَسُوْلَ اللهَﷺ كَمْ اَعْفُوَ عَنِ الْخَادِمِ؟ قَالَ: كُلَّ يَوْمٍ سَبْعِيْنَ مَرَّةً.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في العفو عن الخادم رقم:١٩٤٩
63.ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “யாரஸூலல்லாஹ், நான் (என்னுடைய) பணியாளரின் தவறை எத்தனை தடவை மன்னிப்பது?” என வினவினார், நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர் மீண்டும் அவ்வாறே, “யாரஸூலல்லாஹ், நான் (எனது) பணியாளரின் தவறை எத்தனை முறை மன்னிப்பது?” எனக் கேட்க, “தினமும் எழுபது முறை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
٦٤– عَنْ حُذَيْفَةَ ؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: اِنَّ رَجُلاً كَانَ فِيْمَنْ كَانَ قَبْلَكُمْ اَتَاهُ الْمَلَكُ لِيَقْبِضَ رُوْحَهُ فَقِيْلَ لَهُ: هَلْ عَمِلْتَ مِنْ خَيْرٍ؟ قَالَ: مَااَعْلَمُ، قِيْلَ لَهُ: اُنْظُرْ، قَالَ: مَااَعْلَمُ شَيْئًا غَيْرَ اَنِّيْ كُنْتُ اُبَايِعُ النَّاسَ فِي الدُّنْيَا وَاُجَازِيْهِمْ فَاُنْظِرُ الْمُوْسِرَ وَاَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ،فَاَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ.
رواه البخاري باب ماذكر عن بني اسرائيل رقم:٣٤٥١
64.”உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவருடைய உயிரைக் கைப்பற்ற (மலக்கு) வானவர் வந்தார். அப்பொழுது அவரிடம், “நீர் உலகில் ஏதேனும் நற்செயல் செய்தீரா?” எனக் கேட்கப் பட்டது, “எனக்குத் தெரிந்த வரை (அப்படி) எந்தச் செயலும் இல்லை” என்றார். “உன் வாழ்நாளைப் பற்றிச் சிந்தித்துப்பார்”, என்று அவரிடம் சொல்லப்பட்டது, அவர் மீண்டும் “எனக்குத் தெரிந்தவரை (அப்படி) எந்த அமலும் இல்லை, ஆயினும் ஓர் அமல் உண்டு. நான் உலகில் மக்களுடன் கொடுக்கல், வாங்கல் வியாபாரம் செய்யும் பொழுது, அதில் செல்வந்தர்களுக்கு அவகாசம் தருவேன், ஏழை எளியோரை மன்னித்து விடுவேன்” என்றார். அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவரைச் சொர்க்கத்தில் நுழைய வைத்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٦٥– عَنْ اَبِيْ قَتَادَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ سَرَّهُ اَنْ يُنْجِيَهُ اللهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ اَوْ يَضَعْ عَنْهُ.
رواه مسلم باب فضل انظارالمعسر… رقم:٤٠٠٠
65.”கியாமத் நாளின் சிரமங்களிலிருந்து அல்லாஹுதஆலா தன்னைக் காக்க வேண்டுமென எவர் விரும்புகிறாரோ, அவர், வறுமையில் வாடுபவர் களுக்கு (கடன் பட்டவருக்கு)த் தவணை கொடுக்கவும், அல்லது (தனக்குச் சேர வேண்டியவை அனைத்தையும் அல்லது ஒரு பகுதியை மன்னித்து விடவும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٦٦– عَنْ اَنَسٍ ؓ قَالَ: خَدَمْتُ النَّبِيَّ ﷺ عَشْرَ سِنِيْنَ بِالْمَدِيْنَةِ وَاَنَا غُلاَمٌ لَيْسَ كُلُّ اَمْرِيْ كَمَا يَشْتَهِيْ صَاحِبِيْ اَنْ يَكُوْنَ عَلَيْهِ، مَاقَالَ لِيْ فِيْهَا اُفٍّ قَطُّ، وَمَا قَالَ لِيْ لِمَ فَعَلْتَ هذَا اَمْ اَلاَّ فَعَلْتَ هذَا.
رواه ابوداؤد باب في الحلم واخلاق النبي ﷺ رقم:٤٧٧٤
66.”நான் நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். நான் வயதில் சிறியவனாக இருந்ததால் என்னுடைய வேலை யாவும் நபி (ஸல்) அவர்களின் விருப்பப்படி இருக்கவில்லை. சிறு வயதின் காரணமாக என்னால் பல தவறுகள் நிகழ்ந்துவிடும், (ஆனால் இந்தப் பத்து வருடக் காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் என்னை “சீ” என்று கூடச் சொன்னதில்லை. “இந்த வேலையை ஏன் செய்தாய்?” என்றோ, “ஏன் இந்த வேலையைச் செய்யவில்லை?” என்றோ ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை”.
(அபூதாவூத்)
٦٧–عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ ﷺ: اَوْصِنِيْ قَالَ: لاَ تَغْضَبْ، فَرَدَّدَ مِرَارًا، قَالَ: لاَ تَغْضَبْ.
رواه البخاري باب الحذر من الغضب رقم:٦١١٦
67.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்” என்று வேண்டினார், “நீர் கோபப்படாதீர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அம்மனிதர் மீண்டும் மீண்டும் அதே வேண்டுகோளை விடுத்தார், நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு முறையும் “கோபப்படாதீர்” என்றே பதில் சொன்னார்கள்.
(புகாரி)
٦٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَيْسَ الشَّدِيْدُ بِالصُّرَعَةِ، اِنَّمَا الشَّدِيْدُ الَّذِيْ يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ.
رواه البخاري باب الحذر من الغضب رقم:٦١١٤
68.(தன் எதிரியை) வீழ்த்துபவர் பலசாலி அல்ல. மாறாக கோபம் வந்த சமயம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலி” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٦٩– عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: اِنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لَنَا: اِذَا غَضِبَ اَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ، فَاِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَاِلاَّ فَلْيَضْطَجِعْ.
رواه ابوداؤد باب مايقال عند الغضب رقم:٤٧٨٢
69. “உங்களில் யாரேனும் ஒருவருக்குக் கோபம் வந்தபோது, அவர் நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து கொள்ளவும், கோபம் நீங்கிவிட்டால் சரி; இல்லையெனில் படுத்துக்கொள்ளவும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- கோபத்தின் விளைவு ஆகக் குறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த நிலைமைக்கு மாறினால் மனதுக்கு அமைதி கிடைக்குமோ அந்த நிலைமைக்கு மாறிவிடவேண்டும் என்பதே ஹதீஸின் கருத்தாகும், நிற்பதைவிட உட்கார்வதாலும், உட்கார்வதைவிட படுப்பதாலும் குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
(மளாஹிர்ஹக்)
٧٠– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: عَلِّمُوْا وَبَشِّرُوْا وَلاَ تُعَسِّرُوْا، وَاِذَا غَضِبَ اَحَدُكُمْ فَلْيَسْكُتْ.
رواه احمد:١ /٢٣٩
70.”மக்களுக்கு மார்க்கத்தைக் கற்பியுங்கள், நற்செய்திகளைக் கூறுங்கள், சிரமங்களை உண்டாக்காதீர்கள், உங்களில் எவருக்கேனும் கோபம் வந்தால் அவர் மௌனமாகிவிடவும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٧١– عَنْ عَطِيَّةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ الْغَضَبَ مِنَ الشَّيْطَانِ، وَاِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنَ النَّارِ، وَاِنَّمَا تُطْفَاُ النَّارُ بِالْمَاءِ، فَاِذَا غَضِبَ اَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ.
رواه ابوداؤد باب مايقال عندالغضب رقم:٤٧٨٤
71.”கோபம் ஷைத்தானின் (தாக்கத்தால்) ஏற்படுகிறது, ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன், தண்ணீரைக் கொண்டுதான் நெருப்பு ணைக்கப்படும். ஆகவே, உங்களில் யாருக்கேனும் கோபம் வந்தால் அவர் உளூச் செய்து கொள்ளவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٧٢– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَاتَجَرَّعَ عَبْدٌ جُرْعَةً اَفْضَلَ عِنْدَ اللهِ مِنْ جُرْعَةِ غَيْظٍ يَكْظِمُهَا اِبْتِغَاءَ وَجْهِ اللهِ تَعَالَي.
رواه احمد:٢ /١٢٨
72.”அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தை நாடியவனாக ஓர் அடியான் அருந்தும் பானங்களில் கோபம் என்ற பானத்தின் மிடரைவிட சிறந்த மிடர் அல்லாஹுதஆலாவிடம் வேறு எதும் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٧٣– عَنْ مُعَاذٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَي اَنْ يُنَفِّذَهُ دَعَاهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَي رُؤُوْسِ الْخَلاَئِقِ حَتَّي يُخَيِّرَهُ مِنْ أَيِّ الْحُوْرِ الْعِيْنِ شَاءَ.
رواه ابوداؤد باب من كظم غيظا رقم:٤٧٧٧
73.”கோபத்தை வெளிப்படுத்தத் தனக்குச் சக்தி இருந்தும் (தான் கோபப்பட்டவரைத் தண்டிக்காமல்) தன் கோபத்தை விழுங்கி விடுகின்றவரை கியாமத் நாளன்று அனைத்து படைப்புகளுக்கு மத்தியில் அழைத்து சுவர்க்கக் கன்னிகளில் விரும்பிய பெண்ணை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள அல்லாஹுதஆலா அவருக்கு உரிமை வழங்குவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٧٤– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ خَزَنَ لِسَانَهُ سَتَرَاللهُ عَوْرَتَهُ، وَمَنْ كَفَّ غَضَبَهُ كَفَّ اللهُ عَنْهُ عَذَابَهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنِ اعْتَذَرَ اِلَي اللهِ قَبِلَ عُذْرَهُ.
رواه البيهقي في شعب الايمان:٦ /٣١٥
74.”எவர் தன் நாவைக் கட்டுப்படுத்தி வைக்கிறாரோ, அவரது குறைகளை அல்லாஹுதஆலா மறைத்துவிடுவான், எவர் தன் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறாரோ, அவரை கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா தன் வேதனையிலிருந்து காப்பாற்றுவான். எவர் (தன் பாவங்கள் மீது கைசேதப்பட்டு) அல்லாஹுதஆலாவிடம் மன்னிப்பு வேண்டுகிறாரோ, அவரது மன்னிப்பு வேண்டுதலை அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்வான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٧٥– عَنْ مُعَاذٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لِلْاَشَجِّ – اَشَجِّ عَبْدِ الْقَيْسِ -: اِنَّ فِيْكَ لَخَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللهُ: اَلْحِلْمُ وَاْلاَنَاةُ.
(وهو جزء من الحديث) رواه مسلم باب الامر بالايمان بالله تعالي…رقم:١١٧
75.அப்துல் கைஸ் கோத்திரத்தாரின் தலைவர் ஹஜ்ரத் அஷஜ்ஜி (ரலி) அவர்களிடம், “அஷஜ்ஜே, அல்லாஹுதஆலாவுக்குப் பிரியமான இரு குணங்கள் உம்மிடம் இருக்கின்றன, ஒன்று சகிப்புத்தன்மை, மற்றோன்று நிதானம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அஷஜ்ஜி (ரலி) அவர்களிடம் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٧٦– عَنْ عَائِشَةَ ؓ زَوْجِ النَّبِيِّ ﷺ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: يَاعَائِشَةُ! اِنَّ اللهَ رَفِيْقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيُعْطِيْ عَلَي الرِّفْقِ مَا لاَ يُعْطِيْ عَلَي الْعُنْفِ وَمَا لاَ يُعْطِيْ عَلَي مَاسِوَاهُ.
رواه مسلم باب فضل الرفق رقم:٦٦٠١
76.”ஆயிஷாவே! அல்லாஹுதஆலா (தானும்) மென்மையான சுபாவமும், இரக்கமும் உடையவன். (அடியார்களும் தங்களுக்கிடையே) மென்மை யாகவும், இரக்கமாகவும் பழகுவதை அவன் விரும்புகிறான். அல்லாஹுதஆலா மென்மையில் எந்த கூலி, நன்மை, நோக்கங்களில் வெற்றி முதலியவற்றை கொடுப்பானோ, அவற்றைக் கடினத் தன்மையில் கொடுப்ப தில்லை, (மென்மையைத்தவிர வேறு எதிலும் கொடுப்பதில்லை)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்முல் முஃமினீன் ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٧٧– عَنْ جَرِيْرٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ.
رواه مسلم باب فضل الرفق رقم:٦٥٩٨
77.”எவர் மென்மை (யான தன்மை)யை விட்டும் பாக்கியமற்று விடுவாரோ அவர் (எல்லாவித) நலவுகளை விட்டும் பாக்கியமற்றுவிடுவார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٧٨– عَنْ عَائِشَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ اُعْطِيَ حَظَّهُ مِنَ الرِّفْقِ اُعْطِيَ حَظَّهُ مِنْ خَيْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ، وَمَنْ حُرِمَ حَظَّهُ مِنَ الرِّفْقِ حُرِمَ حَظَّهُ مِنْ خَيْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ.
رواه البغوي في شرحالسنة:١٣ /٧٤
78. (அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து) “எவருக்கு மென்மையில் பங்கு கொடுக்கப்பட்டதோ, அவருக்கு இம்மை, மறுமையின் நலவுகளிலிருந்து பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எவர் மென்மையான சுபாவத்தின் பங்கை இழந்துவிட்டரோ, அவர் இம்மை, மறுமையின் நலவுகளை இழந்து விட்டார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஷரஹுஸ்ஸுன்னா)
٧٩– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يُرِيْدُ اللهُ بِاَهْلِ بَيْتٍ رِفْقًا اِلاَّ نَفَعَهُمْ وَلاَ يَحْرِمُهُمْ اِيَّاهُ اِلاَّ ضَرَّهُمْ.
رواه البيهقي في شعب الايمان مشكوة المصابيح رقم:٥١٠٣
79.”எந்த வீட்டாருக்கு அல்லாஹுதஆலா மென்மையை வழங்குகிறானோ, அந்த மென்மையின் மூலம் அவர்களுக்குப் பலன் அளிக்கிறான். எந்த வீட்டாருக்கு மென்மை கிடைக்கவில்லையோ, அவர்களுக்கு கடினத் தன்மையின் மூலம் நஷ்டமடையச் செய்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ, மிஷ்காத்)
٨٠– عَنْ عَائِشَةَ ؓ اَنَّ يَهُوْدَ اَتَوُا النَّبِيَّ ﷺ فَقَالُوْا: اَلسَّامُ عَلَيْكُمْ فَقَالَتْ عَائِشَةُ: عَلَيْكُمْ وَلَعَنَكُمُ اللهُ وَغَضِبَ اللهُ عَلَيْكُمْ، قَالَ: مَهْلاً يَاعَائِشَةُ! عَلَيْكِ بِالرِّفْقِ، وَاِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ، قَالَتْ: اَوَلَمْ تَسْمَعْ مَاقَالُوْا؟ قَالَ: اَوَلَمْ تَسْمَعِيْ مَاقُلْتُ؟ رَدَدْتُ عَلَيْهِمْ فَيُسْتَجَابُ لِيْ فِيْهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ.
رواه البخاري باب لم يكن النبي ﷺ فاحشا ولا متفاحشا رقم:٦٠٣٠
80.ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யூதர்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸாமு அலைக்கும்” (உமக்கு மரணம் உண்டாகுக) என்று கூறினர். நான் அவர்களுக்கு பதில் தரும் வகையில், “உங்களுக்கே மரணம் வரட்டும்!, மேலும் உங்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டாகட்டும்!” என்று சொன்னேன். “ஆயிஷாவே! பொறு! மென்மையைக் கடைப்பிடி! கடுமை, தகாத வார்த்தையைத் தவிர்த்துக்கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். “இவர்கள் சொன்னதைத் தாங்கள் கேட்கவில்லையா?’ என நான் கேட்டேன், ”அவர்களுக்கு பதிலாக நான் என்ன சொன்னேன் என்று நீ கேட்கவில்லையா? (உங்கள் மீதே வரட்டும்) என்று அவர்களின் சொல்லை அவர்கள் மீதே திருப்பிவிட்டேன். அவர்கள் மீது நான் இட்ட சாபம் ஏற்றுக் கொள்ளப்பட்டது, அவர்கள் என் மீது இட்ட சாபம் ஒப்புக் கொள்ளப்படவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
٨١– عَنْ جَابِرِ بْنِ عَبْدِاللهِ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: رَحِمَ اللهُ رَجُلاً سَمْحًا اِذَا بَاعَ وَاِذَا اشْتَرَي وَاِذَا اقْتَضَي.
رواه البخاري باب السهولة والسماحة في الشراء والبيع …رقم:٢٠٧٦
81.”விற்கும்போதும், வாங்கும்போதும், உரிமையைக் கேட்கும் போதும் மென்மையைக் கையாளுபவருக்கு அல்லாஹுதஆலா அருள் புரிவானாக!” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٨٢– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُ الَّذِيْ يُخَالِطُ النَّاسَ وَيَصْبِرُ عَلَي اَذَاهُمْ، اَعْظَمُ اَجْرًا مِنَ الْمُؤْمِنِ الَّذِيْ لاَيُخَالِطُ النَّاسَ وَلاَيَصْبِرُ عَلَي اَذَاهُمْ.
رواه ابن ماجه باب الصبر علي البلاء رقم:٤٠٣٢
82.”மக்களுடன் கலந்துறவாடாத, அவர்களால் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்ளாத முஃமினை (விசுவாசியை) விட மக்களுடன் கலந்துறவாடி அவர்களால் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் விசுவாசியே சிறந்தவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٨٣– عَنْ صُهَيْبٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: عَجَبًا لِاَمْرِ الْمُؤْمِنِ اِنَّ اَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ، وَلَيْسَ ذلِكَ لِاَحَدٍ اِلاَّ لِلْمُؤْمِنِ، اِنْ اَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَاِنْ اَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ.
رواه مسلم باب المؤمن امره كله خير رقم:٧٥٠٠
83.”முஃமினின் செயல்களே ஆச்சரியமானவைதான்! அவருடைய ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நிலையிலும் அவருக்கு மகத்தான நன்மையையே அளிக்கின்றன. இந்தப் பாக்கியம் முஃமினுக்கு மட்டுமே கிடைக்கிறது, அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சிக்குரிய காரியம் நிகழ்ந்தால் இரட்சகனுக்கு நன்றி செலுத்துகிறார். இந்த நன்றி செலுத்துதல் அவரது நன்மைக்குக் காரணமாகும், (இதில் அவருக்குக் கூலியுண்டு) அவருக்குத் துன்பம் வந்தால் பொறுமை மேற்கொள்வார். அவர் பொறுமையாக இருப்பதும் அவரது நன்மைக்குக் காரணமாகும், (அவரது பொறுமையிலும் கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٨٤– عَنِ ابْنِ مَسْعُوْدٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ كَانَ يَقُوْلُ: اَللّهُمَّ اَحْسَنْتَ خَلْقِيْ فَاَحْسِنْ خُلُقِيْ.
رواه احمد:١ /٤٠٣
84.”நபி (ஸல்) அவர்கள் (اَللّهُمَّ اَحْسَنْتَ خَلْقِيْ فَاَحْسِنْ خُلُقِيْ) யாஅல்லாஹ், என் வெளித்தோற்றத்தை அழகாக்கினாய்! என் குணங்களையும் அழகாக்குவாயாக!” என்று துஆ செய்து வந்தார்கள் என்று ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٨٥– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اَقَالَ مُسْلِمًا اَقَالَهُ اللهُ عَثْرَتَهُ.
رواه ابوداؤد باب في فضل الاقالة رقم:٣٤٦٠
85.”ஒரு முஸ்லிம் விற்பனை செய்த அல்லது விலைக்கு வாங்கிய பொருட்களைத் திரும்பப் பெறுவதை எவர் பொருந்திக் கொள்கிறாரோ, அவருடைய தவறுகளை அல்லாஹுதஆலா மன்னித்து விடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٨٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اَقَالَ مُسْلِمًا عَثْرَتَهُ اَقَالَهُ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ.
رواه ابن حبان (واسناده صحيح):١١/٤٠٥
86.”எவர், ஒரு முஸ்லிமுடைய குறைகளை மன்னித்துவிடுகிறாரோ, அவருடைய குறைகளை கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா மன்னித்து விடுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)


முஸ்லிம்களின் உரிமைகளும், கடமைகளும்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ۞).
(الحجرات:١٠)
1.நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் (தமக்கிடையே) சகோதரர்களே!
(அல்ஹுஜுராத்:10)
وَقَالَ تَعَالي: (يآاَيُّهَا الَّذِيْنَ امَنُوْا لاَ يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسَي اَنْ يَكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلاَ نِسَاءٌ مِّنْ نِّسَاءٍ عَسَي اَنْ يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ ج وَلاَ تَلْمِزُوْا اَنْفُسَكُمْ وَلاَ تَنَابَزُوْا بِالْاَلْقَابِ ط بِئْسَ الاِسْمُ الْفُسُوْقُ بَعْدَ اْلاِيْمَانِ ج وَمَنْ لَمْ يَتُبْ فَاُؤلئِكَ هُمُ الظَّالِمُوْنَ ۞ يآَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اجْتَنِبُوْا كَثِيْرًا مِنَ الظَّنِّ ز اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلاَ تَجَسَّسُوْا وَلاَ يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ط اَيُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ ط وَاتَّقُوا اللهَ ط اِنَّ اللهَ تَوَّابٌ رَّحِيْمٌ ۞ ياَ يُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثي وَجَعَلْنكُمْ شُعُوْبًا وَّقَبَائِلَ لِتَعَارَفُوْا ط اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللهِ اَتْقَاكُمْ ط اِنَّ اللهَ عَلِيْمٌ خَبِيْرٌ۞).
(الحجرات: ١٣–١١)
2.நம்பிக்கையாளர்களே, எந்த ஒரு கூட்டத்தினரும், மற்றோரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்யவேண்டாம்; (ஏனேனில்) இவர்களைவிட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும்; எந்தப் பெண்களும் மற்றப் பெண்களை பரிகாசம் செய்யவேண்டாம்; இவர்களைவிட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும்; இன்னும் உங்களிடையே குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்; (மேலும் கெட்ட) பட்டப் பெயர்களைக் கொண்டு (ஒருவருக்கொருவர்) அழைத்துக் கொள்ளாதீர்கள்; நம்பிக்கை கொண்ட பின்னால் தீய பெயரா(ல் அழைப்பதா)னது மிகக் கெட்டதாகும் – (இத்தகு தீமைகளைக் செய்கின்ற) எவரொருவர் (பாவ மன்னிப்புக் கோரி) மீளவில்லையோ, அத்தகையோர் தாம் அநியாயக்காரர்கள்.நம்பிக்கையாளர்களே, (சந்தேக) எண்ணங்களில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அவ்வெண்ணங்களில் சில பாவமாகும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம்; இன்னும் உங்களில் சிலர் சிலரைப் புறம்பேசிக் கொண்டிருக்க வேண்டாம்; உங்களில் ஒருவர் தம் சகோதரரின் மாமிசத்தை (அவன்) பிணமாயிருக்கும் நிலையில் உண்ணவிரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுப்பீர்களே; அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புக் கோரலை ஏற்கிறவன்; மிகக் கிருபையுடையவன். மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஓர் பெண்ணிலிருந்து படைத்தோம்; மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களைப் பல கிளையினராகவும் பல கோத்திரங்களாகவும் நாம் ஆக்கினோம்; (யாராயிருப்பினும்) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக உங்களில் மிக்க கண்ணியமானவர் உங்களில் (அவனை) மிக்க அஞ்சுவோர் தாம்; நிச்சயமாக அல்லாஹ் முற்றும் அறிந்தவன்; (அனைத்துச் செய்திகளையும்) நன்கு தெரிந்தவன்.
(அல்ஹுஜுராத்:١١–١٣)
குறிப்பு:- புறம் பேசுவதை இறந்த சகோதரனின் இறைச்சியை உண்பதற்குச் சமமாக அல்லாஹுதஆலா குறிப்பிட்டுள்ளான். மனித இறைச்சியைப் பிய்த்துப் பிய்த்துத் தின்பதால் அவனுக்கு வேதனை ஏற்படுவதுபோல் முஸ்லிமைப் பற்றிப் புறம் பேசுவதால் அவருக்கு வேதனை ஏற்படுகிறது. இறந்த மனிதனுக்கு வேதனையின் தாக்கம் தெரியாததைப் போன்றே எவரைப் பற்றிப் புறம் பேசப்பட்டதோ அவருக்குப் புறம் பேசியதின் விபரம் தெரியாமல் இருக்கும்வரை வேதனையடையமாட்டார்.
وَقَالَ تَعَالى: (يآيُّهَا الَّذِيْنَ امَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلّهِ وَلَوْ عَلَى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَاْلاَقْرَبِيْنَ ج اِنْ يَكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّهُ اَوْلى بِهِمَا قف فَلاَ تَتَّبِعُوا الْهَوَى اَنْ تَعْدِلُوْا ج وَاِنْ تَلْوُوْا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا۞).
(النساء:١٣٥)
3.நம்பிக்கையாளர்களே, நீதியில் நீங்கள் நிலைத்திருப்பவர்களாக – அல்லாஹ்விற்காக (உண்மையைக் கொண்டு) சாட்சி கூறுபவர்களாக இருங்கள்; (அச்சாட்சி, உங்களுக்கோ, அல்லது (உங்களின்) பெற்றோருக்கோ இன்னும் (உங்களின்) உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரி (நீங்கள் எவருக்கு எதிராக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராக இருந்தாலும் அல்லது வறியவராக இருந்தாலும் (சரியே), ஏனேனில் அல்லாஹ் அவ்விருவருக்கும் (நன்மையை நாடுவதில் உங்களைவிட) மிக மேலானவன்; எனவே, நீதி செய்வதை விட்டு (உங்கள்) மனோ இச்சையை நீங்கள் பின்பற்றாதீர்கள்; மேலும் நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினாலும், அல்லது (சாட்சியம் கூறாது) நீங்கள் புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் செய்கின்றவற்றை அறிந்தவனாக இருக்கிறான்.
(அந்நிஸா:135)
وَقَالَ تَعَالي: (وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَا اَوْ رُدُّوْهَا ط اِنَّ اللهَ كَانَ عَلي كُلِّ شَيْءٍ حَسِيْبًا۞).
(النساء:٨٦)
4.உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்படும்பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு ஸலாம்) முகமன் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
(அந்நிஸா:86)
وَقاَلَ تَعَالي: (وَقَضَي رَبُّكَ اَلاَّ تَعْبُدُوْا اِلاَّ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ط اِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَا اَوْ كِلاَهُمَا فَلاَ تَقُلْ لَّهُمَا اُفٍّ وَّلاَ تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلاً كَرِيْمًا ۞ وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَارَبَّينِيْ صَغِيْرًا۞).
(بني اسرائيل:٢٤، ٢٣)
5.உம்முடைய ரப்பு – அவனைத் தவிர (வேறு எவரையும், எதனையும்) நீங்கள் வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான்; இன்னும் தாய், தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்யவேண்டும் என்றும் (விதியாக்கியுள்ளான்); அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமையை அடைந்துவிட்டால், அவர்களை (நோக்கி) “சீ‘ என்றும் சொல்லவேண்டாம்; இன்னும் அவ்விருவரையும் விரட்டவேண்டாம்; அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லையே கூறவும். இன்னும் கிருபையினால் பணிவென்னும் இறக்கையை அவ்விருவருக்கும் தாழ்த்துவீராக! “என்னுடைய ரப்பே, சிறு குழந்தையாக இருந்தபோது என்னை அவ்விருவரும் (பரிவுடன்) வளர்த்தது போன்று அவ்விருவருக்கும் நீ அருள்புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறுவீராக!
(பனீஇஸ்ராயீல்:23,24)

ஹதீஸ்கள்:-
٨٧– عَنْ عَلِيٍّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لِلْمُسْلِمِ عَلَي الْمُسْلِمِ سِتَّةٌ بِالْمَعْرُوْفِ: يُسَلِّمُ عَلَيْهِ اِذَا لَقِيَهُ، وَيُجِيْبُهُ اِذَا دَعَاهُ، وَيُشَمِّتُهُ اِذَا عَطَسَ، وَيَعُوْدُهُ اِذَا مَرِضَ، وَيَتْبَعُ جَنَازَتَهُ اِذَا مَاتَ، وَيُحِبُّ لَهُ مَايُحِبُّ لِنَفْسِهِ.
رواه ابن ماجه باب ماجاء في عيادة المريض رقم:١٤٣٣
87.”ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்குச் செலுத்த வேண்டிய கடமைகள் ஆறு, 1. அவரைச் சந்திக்கும் போது “ஸலாம்” சொல்லவும், 2. அவர் அழைத்தால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளவும், 3. அவர் தும்மியபின் (அல்ஹம்துலில்லாஹ் சொன்னால்) அதற்கு பதிலாக “யர்ஹமுகல்லாஹ்” சொல்லவும், 4. நோய்வாய்ப்பட்டால் அவரை நலன் விசாரிக்கவும், 5. அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவுடன் செல்லவும், 6. தனக்கு விருப்பமானதையே அவருக்கும் விரும்பவும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٨٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: حَقُّ الْمُسْلِمِ عَلَي الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ الْمَرِيْضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَاِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيْتُ الْعَاطِسِ.
رواه البخاري باب الامر باتباع الجنائز رقم:١٢٤٠
88.”ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்குச் செலுத்தவேண்டிய கடமைகள் ஐந்து, 1. ஸலாமுக்குப் பதில் சொல்வது, 2. நோயாளியை நலன் விசாரிப்பது, 3. ஜனாஸாவுடன் செல்வது, 4. அழைப்பை ஏற்றுக்கொள்வது, 5. தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் அவருக்கு பதிலாக “யர்ஹமுகல்லாஹ்” சொல்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٨٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتَّي تُؤْمِنُوْا، وَلاَتُؤْمِنُوْا حَتَّي تَحَابُّوْا، اَوَلاَ اَدُلُّكُمْ عَلي شَيْءٍ اِذَا فَعَلْتُمُوْهُ تَحَابَبْتُمْ؟ اَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ.
رواه مسلم باب بيان انه لا يدخل الجنة الا المؤمنون…رقم:١٩٤
89.”நீங்கள் முஃமினாக ஆகாதவரை (உங்கள் வாழ்க்கை ஈமான் உள்ள வாழ்க்கையாக ஆகாதவரை) சுவர்க்கத்தில் நுழைய முடியாது, நீங்கள் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை உண்மை விசுவாசி ஆகமுடியாது. உங்களுக்கிடையில் நேசத்தை உண்டாக்கும் செயலை உங்களுக்கு நான் சொல்லவா? (அது தான்) உங்களுக்கிடையே ஸலாமைத் தாராளமாகப் பரப்புவது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٩٠– عَنْ اَبِى الدَّرْدَاءِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللّهِ ﷺ: اَفْشُوا السَّلاَمَ كَىْ تَعْلُوْا.
رواه الطبرانى واسناده حسن مجمع الزوائد:٨/٦٥
90.”நீங்கள் உயர்வு அடைய ஸலாமைத் தாராளமாகப் பரப்புங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٩١– عَنْ عَبْدِ اللهِ يَعْنِيْ اِبْنَ مَسْعُوْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلسَّلاَمُ اِسْمٌ مِنَ اَسْمَاءِ اللهِ تَعَالَي وَضَعَهُ فِي اْلاَرْضِ فَاَفْشُوْهُ بَيْنَكُمْ، فَاِنَّ الرَّجُلَ الْمُسْلِمَ اِذَا مَرَّ بِقَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ فَرَدُّوْا عَلَيْهِ كَانَ لَهُ عَلَيْهِمْ فَضْلُ دَرَجَةٍ بِتَذْكِيْرِهِ اِيَّاهُمُ السَّلاَمَ، فَاِنْ لَمْ يَرُدُّوْا عَلَيْهِ رَدَّ عَلَيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُمْ.
رواه البزار والطبراني واحد اسنادي البزار جيد قوي الترغيب:٣ /٤٢٧
91. “ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹுதஆலாவின் பெயர்களில் ஒன்று. அல்லாஹுதஆலா அதை பூமியில் இறக்கி வைத்துள்ளான், எனவே உங்களுக்கிடையே அதை நன்றாகப் பரப்புங்கள். ஏனேனில் ஒரு முஸ்லிம் ஒரு கூட்டத் தாரைக் கடந்து செல்லும்போது அவர் அக்கூட்டத்தாருக்கு ஸலாம் சொல்ல, அவர்கள் இவருக்குப் பதில் சொன்னால், அவர்களுக்கு ஸலாமை ஞாபக மூட்டியதன் காரணத்தால் ஸலாம் சொல்லியவருக்கு அந்தக் கூட்டத்தாரை விட ஒரு படித்தரம் சிறப்புக் கிடைக்கிறது. அவர்கள் இவருக்குப்பதில் சொல்லவில்லை யெனில் மனிதர்களைவிடச் சிறந்த மலக்குகள் இவருடைய ஸலாமுக்குப் பதில் சொல்கின்றனர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், தபரானீ, தர்ஙீப்)
٩٢– عَنِ ابْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اَشْرَاطِ السَّاعَةِ اَنْ يُسَلِّمَ الرَّجُلُ عَلَي الرَّجُلِ لاَ يُسَلِّمُ عَلَيْهِ اِلاَّ لِلْمَعْرِفَةِ.
رواه احمد:١ /٤٠٦
92.”(முஸ்லிம் என்ற காரணம் அல்லாமல்) அறிமுகத்தின் காரணமாக (அறிமுகமானவருக்கு) மட்டும் ஸலாம் சொல்வது கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்று” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹமத்)
٩٣– عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ فَرَدَّ عَلَيْهِ السَّلاَمَ ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ ﷺ: عَشْرٌ، ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: عِشْرُوْنَ، ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاَتُهُ فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: ثَلاَثُوْنَ.
رواه ابوداؤد باب كيف السلام رقم:٥١٩٥
93. ஹஜ்ரத் இம்ரானிப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஒருவர் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, (اَلسَّلاَمُ عَلَيْكُمْ) என்று சொன்னார், அவரது ஸலாமுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். பிறகு அவர் சபையில் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள், “பத்து” என்று சொன்னார்கள், (அவரது ஸலாமின் காரணமாக அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்பட்டுவிட்டன) பிறகு மற்றோருவர் வந்து (اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ) என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் சொன்னார்கள், பிறகு அவர் அச்சபையில் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் “இருபது” என்றார்கள், (இருபது நன்மைகள் இவருக்கு எழுதப்பட்டுவிட்டன). பின்பு மூன்றாவதாக ஒரு மனிதர் வந்து (اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاَتُهُ) என்றார், நபி (ஸல்) அவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் சொன்னார்கள், பிறகு அவர் அச்சபையில் உட்கார்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் “முப்பது” என்றார்கள், (முப்பது நன்மைகள் வருக்கு எழுதப்பட்டுவிட்டன)”.
(அபூதாவூத்)
٩٤– عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اَوْلَي النَّاسِ بِاللهِ تَعَالَي مَنْ بَدَأَهُمْ بِالسَّلاَمِ.
رواه ابوداؤد باب في فضل من بدا بالسلام رقم:٥١٩٧
94.”அல்லாஹுதஆலாவின் நெருக்கம் பெற மிகவும் தகுதியுடையவர் “ஸலாம்‘ சொல்வதில் முந்துபவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٩٥– عَنْ عَبْدِ اللهِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلْبَادِيئُ بِالسَّلاَمِ بَرِيْيءٌ مِنَ الْكِبْرِ.
رواه البيهقي في شعب الايمان:٦ /٤٣٣
95.”ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர் பெருமையை விட்டும் நீங்கிவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٩٦– عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ لِيْ رَسُوْلُ اللهِ ﷺ: يَا بُنَيَّ! اِذَا دَخَلْتَ عَلَي اَهْلِكَ فَسَلِّمْ يَكُوْنُ بَرَكَةً عَلَيْكَ وَعَلي اَهْلِ بَيْتِكَ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن صحيح غريب باب ماجاء في التسليم … رقم:٢٦٩٨
96.”என் அருமை மகனே! நீர் உமது வீட்டில் நுழையும்போது வீட்டாருக்கு ஸலாம் சொல்லும்! இது உமக்கும், உமது வீட்டாருக்கும் பரக்கத் உண்டாகக் காரணமாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٩٧– عَنْ قَتَادَةَؒ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: اِذَا دَخَلْتُمْ بَيْتًا فَسَلِّمُوْا عَلي اَهْلِهِ، وَاِذَا خَرَجْتُمْ فَاَوْدِعُوْا اَهْلَهُ السَّلاَمَ.
رواه عبدالرزاق في مصنفه:١٠ /٣٨٩
97.”நீங்கள் யார் வீட்டுக்காவது சென்றால், அந்த வீட்டாருக்கு “ஸலாம்” சொல்லுங்கள்! (வீட்டைவிட்டு) வெளியேறும் போதும் அவ்வீட்டாருக்கு “ஸலாம்” சொல்லி விடைபெறுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் கதாதா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்)
٩٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اذَا انْتَهَي اَحَدُكُمْ اِلي مَجْلِسٍ فَلْيُسَلِّمْ، فَاِنْ بَدَا لَهُ اَنْ يَجْلِسَ فَلْيَجْلِسْ، ثُمَّ اِذَا قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ اْلاُوْلي بِاَحَقَّ مِنَ اْلآخِرَةِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء في التسليم عند القيام …رقم:٢٧٠٦
98.”உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு சபைக்குச் சென்றால் சபையிலுள் ளோருக்கு ஸலாம் சொல்லட்டும். பிறகு உட்கார விரும்பினால் உட்கார்ந்து கொள்ளவும், பின்பு அச்சபையை விட்டு எழுந்து சென்றால் மீண்டும் ஸலாம் சொல்லவும். ஏனேனில், முந்திய ஸலாம் பிந்திய ஸலாமை விட உயர்ந்ததல்ல”, (சந்திக்கும் போது ஸலாம் சொல்வது எவ்வாறு சுன்னத்தோ அவ்வாறே விடைபெறும் போது ஸலாம் கூறுவதும் சுன்னத்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٩٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يُسَلِّمُ الصَّغِيْرُ عَلَي الْكَبِيْرِ، وَالْمَارُّ عَلَي الْقَاعِدِ، وَالْقَلِيْلُ عَلَي الْكَثِيْرِ.
رواه البخاري باب تسليم القليل علي الكثير رقم:٦٢٣١
99.”சிறியவர் பெரியவருக்கு ஸலாம் கூறவும், கடந்து செல்பவர் உட்கார்ந்திருப் பவருக்கு ஸலாம் கூறவும், குறைந்த தொகையினர் அதிக எண்ணிக்கை யுடையோருக்கு ஸலாம் சொல்லவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٠٠– عَنْ عَلِيٍّ ؓ مَرْفُوْعًا: يُجْزِئئُ عَنِ الْجَمَاعَةِ اِذاَ مَرُّوْا اَنْ يُسَلِّمَ اَحَدُهُمْ، وَيُجْزِئئُ عَنِ الْجُلُوْسِ اَنْ يَرُدَّ اَحَدُهُمْ.
رواه البيهقي في شعب الايمان:٦ /٤٦٦
100.”கடந்து செல்லும் கூட்டத்திலிருந்து ஒருவர் ஸலாம் கூறினால், அது அவர்கள் அனைவரின் சார்பாகப் போதுமானதாகிவிடும். அமர்ந்திருப் பவர்களில் ஒருவர் பதில் சொன்னால் அது அவர்கள் அனைவரின் சார்பாகப் போதுமானதாகிவிடும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(பைஹகீ)
١٠١– عَنِ الْمِقْدَادِ بْنِ اْلاَسْوَدِ ؓ قَالَ (فِي حَدِيْثٍ طَوِيْلٍ۞): فَيَجِيْءُ رَسُوْلُ اللهُ ﷺ مِنَ اللَّيْلِ فَيُسَلِّمُ تَسْلِيْمًا لاَ يُوْقِظُ النَّائِمَ وَيُسْمِعُ الْيَقْظَانَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب كيف السلام رقم:٢٧١٩
101.ஹஜ்ரத் மிக்தாதுப்னு அஸ்வத் (ரலி) கூறுகிறார்கள், “இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள், தூங்குபவர் விழித்துவிடாதபடியும், விழித்திருப்பவர் செவியுறும்படியும் ஸலாம் சொல்வார்கள்”.
(திர்மிதீ)
١٠٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَعْجَزُ النَّاسِ مَنْ عَجِزَ فِي الدُّعَاءِ، وَاَبْخَلُ النَّاسِ مَنْ بَخِلَ فِي السَّلاَمِ.
رواه الطبراني في الاوسط وقال: لا يروي عن النبي ﷺ الابهذا الاسناد ورجاله رجال الصحيح غير مسروق بن المرزبان وهو ثقة مجمع الزوائد :٨/٦١
102.”மக்களில் மிகவும் இயலாதவர் துஆச் செய்ய இயலாதவர், (துஆச் செய்யாதவர்) மக்களில் மிகவும் கருமித்தனம் உடையவர் ஸலாம் சொல்வதில் கருமித்தனம் செய்பவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠٣– عَنِ ابْنِ مَسْعُوْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مِنْ تَمَامِ التَّحِيَّةِ اَلْاَخْذُ بِالْيَدِ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في المصافحة رقم:٢٧٣٠
103.”முஸாஃபஹா (கைலாகு) கொடுப்பதால் ஸலாம் பூரணத்துவம் பெறுகிறது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٠٤– عَنِ الْبَرَاءِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ اِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ اَنْ يَفْتَرِقَا.
رواه ابوداؤد باب في المصافحة رقم:٥٢١٢
104.”முஸ்லிம்கள் இருவர் சந்தித்து முஸாபஹா (கைலாகு) செய்தால், அவர்கள் பிரிந்து செல்வதற்கு முன்பே அவ்விருவருடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் பராஃ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
١٠٥– عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ الْمُؤْمِنَ اِذَا لَقِيَ الْمُؤْمِنَ، فَسَلَّمَ عَلَيْهِ، وَاَخَذَ بِيَدِهِ فَصَافَحَهُ، تَنَاثَرَتْ خَطَايَاهُمَا كَمَا يَتَنَاثَرُ وَرَقُ الشَّجَرِ.
رواه الطبراني في الاوسط ويعقوب محمد بن طحلاء روي عنه غير واحد ولم يضعفه احد وبقية رجاله ثقات مجمع الزوائد :٨/٧٥
105.”ஒரு முஃமின் இன்னோரு முஃமினைச் சந்தித்து, அவருக்கு ஸலாம் சொல்லி அவரது கையைப் பிடித்து முஸாஃபஹா செய்தால், மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் இருவருடைய பாவங்களும் உதிர்ந்து விடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைஃபதிப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠٦– عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِنَّ الْمُسْلِمَ اِذَا لَقِيَ اَخَاهُ الْمُسْلِمَ فَاَخَذَ بِيَدِهِ تَحَاتَّتْ عَنْهُمَا ذُنُوْبُهُمَا كَمَا يَتَحَاتُّ الْوَرَقُ عَنِ الشَّجَرَةِ الْيَابِسَةِ فِيْ يَوْمِ رِيْحٍ عَاصِفٍ، وَاِلاَّ غُفِرَ لَهُمَا وَلَوْ كَانَتْ ذُنُوْبُهُمَا مِثْلَ زَبَدِ الْبَحْرِ.
رواه الطبراني ورجاله رجال الصحيح غير سالم بن غيلان وهو ثقة مجمع الزوائد:٨/٧٧
106.”ஒரு முஸ்லிம் மற்றோரு முஸ்லிம் சகோதரரைச் சந்தித்து, அவரது கரத்தைப் பிடித்தால், (“முஸாஃபஹா” செய்தால்). வேகமாகக் காற்று வீசும் நாளில் காய்ந்த மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல அவ்விருவரின் பாவங்களும் உதிர்ந்துவிடுகின்றன, அவ்விருவருடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன, அவர்களுடைய பாவங்கள் கடல் நுரையின் அளவு மிகுதியாக இருந்தாலும் சரியே!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠٧– عَنْ رَجُلٍ مِنْ عَنَزَةَؒ اَنَّهُ قَالَ لِأَبِيْ ذَرٍّ: هَلْ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يُصَافِحُكُمْ اِذا لَقِيْتُمُوْهُ؟ قَالَ: مَا لَقِيْتُهُ قَطُّ اِلاَّ صَافَحَنِيْ، وَبَعَثَ اِلَيَّ ذَاتَ يَوْمٍ وَلَمْ اَكُنْ فِيْ اَهْلِيْ، فَلَمَّا جِئْتُ اُخْبِرْتُ اَنَّهُ اَرْسَلَ اِلَيَّ فَاَتَيْتُهُ وَهُوَ عَلَي سَرِيْرِهِ، فَالْتَزَمَنِيْ فَكَانَتْ تِلْكَ اَجْوَدَ وَاَجْوَدَ.
رواه ابوداؤد باب في المعانقة رقم:٥٢١٤
107.”அனஸா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அறிவிக்கிறார், “நீங்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது உங்களுடன் முஸாஃபஹாகைலாகு செய்வார்களா?” என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களிடம் வினவினேன்.”ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை நான் எப்பொழுது சந்தித்தாலும் என்னுடன் முஸாஃபஹா செய்வார்கள், ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் என்னைக் கூப்பிட்டுவர என் வீட்டுக்கு ஆள் னுப்பினார்கள், அச்சமயம் நான் வீட்டில் இல்லை. நான் திரும்பி வந்ததும் என்னைக் கூப்பிட நபி (ஸல்) அவர்கள் ஆள் அனுப்பிய செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தேன், அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் கட்டிலின் மீது மர்ந்திருந்தார்கள், நபி (ஸல்) அவர்கள் என்னை அணைத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னை அணை(த்து முஆனகா செய்)தது மிக நன்றாக இருந்தது! மிகவும் நன்றாக இருந்தது!” என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(அபூதாவூத்)
١٠٨– عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍؒ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ سَاَلَهُ رَجُلٌ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ اَسْتَاْذِنُ عَلَي اُمِّيْ؟ فَقَالَ: نَعَمْ فَقَالَ الرَّجُلُ: اِنِّيْ مَعهَا فِي الْبَيْتِ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِسْتَاْذِنْ عَلَيْهَا فَقَالَ الرَّجُلُ: اِنِّيْ خَادِمُهَا، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِسْتَاْذِنْ عَلَيْهَا اَتُحِبُّ اَنْ تَرَاهَا عُرْيَانَةً؟ قَالَ: لاَ، قَالَ: فَاسْتَاْذِنْ عَلَيْهَا.
رواه الامام مالك في الموطا، باب في الاستعذان، ص:٧٢٥
108.ஹஜ்ரத் அதா இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் அறிவிப்பாவது, “யாரஸூலல்லாஹ்! என் தாயாருடைய வீட்டுக்குள் செல்ல என் தாயாரிடம் அனுமதி கேட்க வேண்டுமா?” என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார், “ஆம்” என்று பதில் அளித்தார்கள். “நானும் என் தாயும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறோம்! என்று கூறினார், “அனுமதி வாங்கிக் கொண்டே செல்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நான் தான் அவருக்குப் பணிவிடை செய்கிறேன்” (தனால் அடிக்கடி சென்றுவர வேண்டியுள்ளது) என்று மீண்டும் வினவினார். “நீர் அனுமதி வாங்கிக் கொண்டே செல்வீராக! ஆடையற்ற நிலையில் உமது தாயாரை நீர் பார்க்க விரும்புவீரா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “விரும்பமாட்டேன்” என்றார் அவர். “அப்படி யென்றால் அனுமதி வாங்கிக்கொண்டு செல்லும்!” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(முத்தா இமாம் மாலிக்)
١٠٩– عَنْ هُزَيْلٍؒ قَالَ: جَاءَ سَعْدٌ ؓ فَوَقَفَ عَلَي بَابِ النَّبِيِّ ﷺ يَسْتَاْذِنُ فَقَامَ مُسْتَقْبِلَ الْبَابِ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ: هكَذَا عَنْكَ اَوْ هكَذَا فَاِنَّمَا اْلاِسْتِئْذَانُ مِنَ النَّظَرِ.
رواه ابوداؤد باب في الاستئذان رقم:٥١٧٤
109.ஹஜ்ரத் ஹுஸைல் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது, ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்கள் வந்தார்கள், நபி (ஸல்) அவர்களின் (வீட்டு) வாசலில் (உள்ளே செல்ல) அனுமதி கேட்க வாசலுக்கு நேராக நின்று கொண்டார்கள், (வாசலுக்கு நேராக நிற்காதீர் மாறாக) வலப்புறமாகவோ, இடப்புறமாகவோ நின்று கொள்ளும்! (காரணம் வாசலுக்கு நேராக நிற்பதால் உள்ளே பார்வை செல்ல வாய்ப்பு உள்ளது) பார்வை உள்ளே செல்லக்கூடாது என்பதற்காகவே அனுமதி கேட்பது விதியாக்கப்பட்டது‘ என்று ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்களிடம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
١١٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِذَا دَخَلَ الْبَصَرُ فَلاَ اِذْنَ.
رواه ابوداؤد باب في الاستئذان رقم:٥١٧٣
110.”வீட்டுக்குள் பார்வை சென்றுவிட்டால், அனுமதி கேட்பதில் அர்த்தம் இல்லை! அனுமதி கேட்பதில் எந்தப் பலனும் இல்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١١١– عَنْ عَبْدِ اللهِ بْنِ بِشْرٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: لاَ تَاْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا وَلكِنِ ائْتُوْهَا مِنْ جَوَانِبِهَا، فَاسْتَاْذِنُوْا فَاِنْ اُذِنَ لَكُمْ فَادْخُلُوْا وَاِلاَّ فَارْجِعُوْا.
قلت: له حديث رواه ابوداؤد غير هذا رواه الطبراني من طرق ورجال هذا رجال الصحيح غير محمد بن عبدالرحمن بن عرق وهو ثقة مجمع الزوائد: ٨ /٨٧
111.”(மக்களுடைய) வீடுகளின் (உள்ளே நுழைய அனுமதி கேட்பதற்காக) வாசல்களுக்கு எதிராக நிற்காதீர்கள்! (ஏனேனில், பார்வை வீட்டினுள் சென்றுவிடும்) மாறாக வாசல்களின் (வலது அல்லது இடது) புறமாக நின்று அனுமதி கேளுங்கள். உங்களுக்கு அனுமதி கிடைத்தால் உள்ளே செல்லுங்கள், இல்லையெனில் திரும்பி விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு பிஷ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١١٢– عَنِ ابْنِ عُمَرَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لاَيُقِيْمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيْهِ.
رواه البخاري باب لايقيم الرجل الرجل …رقم:٦٢٦٩
112.”ஒருவரை அவர் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுப்பிவிட்டுத் தான் அந்த இடத்தில் அமர்ந்து கொள்ள எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் றிவித்துள்ளார்கள்.
(புகாரி)
١١٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَامَ مِنْ مَجْلِسِهِ، ثُمَّ رَجَعَ اِلَيْهِ، فَهُوَ اَحَقُّ بِهِ.
رواه مسلم باب اذا قام من مجلسه ….رقم:٥٦٨٩
113.”ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து (தேவைக்காக) எழுந்து சென்று, பிறகு அவர் திரும்பி வந்தால் அந்த இடத்தில் (அமர) அவரே அதிக தகுதியுடையவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١١٤– عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يُجْلَسْ بَيْنَ رَجُلَيْنِ اِلاَّ بِاِذْنِهِمَا.
رواه ابوداؤد باب في الرجل يجلس ….رقم:٤٨٤٤
114.”இரு மனிதர்களுக்கிடையே அவ்விருவரின் அனுமதியின்றி அமர்வது கூடாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னு ஷுஐப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١١٥– عَنْ حُذَيْفَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ لَعَنَ مَنْ جَلَسَ وَسْطَ الْحَلْقَةِ.
رواه ابوداؤد باب الجلوس وسط الحلقة رقم:٤٨٢٦
115.ஹஜ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சபைக்கு மத்தியில் உட்காருபவரைச் சபித்துள்ளார்கள்”.
(அபூதாவூத்)
தெளிவுரை:- சபைக்கு நடுவே அமருபவர் என்பது, மக்களின் பிடரிகளைத் தாண்டிக் கொண்டு போய் நடுவே அமருபவர் என்பதாம். மற்றோரு பொருள், ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக அமர்ந்திருக்கையில், சபைக்கு நடுவே வந்து ஒருவர் அமர்ந்து கொண்டு அவர்களில் சிலர் சிலரது முகத்தைப் பார்க்க இயலாதபடித் தடையாக இருப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
١١٦– عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيُكْرِمُ ضَيْفَهُ، قَالَهَا ثَلاَثًا قَالَ: وَمَا كَرَامَةُ الضَّيْفِ يَارَسُوْلَ اللهِ؟ قَالَ: ثَلاَثَةُ اَيَّامٍ فَمَا جَلَسَ بَعْدَ ذلِكَ فَهُوَ عَلَيْهِ صَدَقَةٌ.
رواه احمد:٣ /٧٦
116.”அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் எவர் விசுவாசம் கொண்டுள்ளாரோ, அவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தவும்”, இதை நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். ஒரு மனிதர் “யாரஸூலல்லாஹ், விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதென்றால் என்ன?” என்று கேட்க, “விருந்தினரை மூன்று நாட்களுக்கு உபசரிப்பது, மூன்று நாட்களுக்குப் பிறகும் விருந்தினர் தங்கி இருந்தால் அவரை உபசரிப்பது விருந்தளிப்பவருடைய உபகாரமாகும்” (மூன்று தினங்களுக்குப் பிறகு உணவளிக்காமல் இருப்பது மனித இயல்புக்கு மாற்றமான செயலாகாது) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அஹ்மத்)
١١٧– عَنِ الْمِقْدَامِ اَبِيْ كَرِيْمَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَيُّمَا رَجُلٍ اَضَافَ قَوْمًا فَاَصْبَحَ الضَّيْفُ مَحْرُوْمًا فَاِنَّ نَصْرَهُ حَقٌّ عَلَي كُلِّ مُسْلِمٍ حَتَّي يَاْخُذَ بِقِرَي لَيْلَةٍ مِنْ زَرْعِهِ وَمَالِهِ.
رواه ابوداؤد باب ماجاء في الضيافة رقم:٣٧٥١
117.”யாரேனும் ஒருவர் ஒரு கூட்டத்தாரில் (ஒருவரிடம்) விருந்தாளியாக வந்து, மறுநாள் காலை வரை அவர் உபசரிக்கப்படவில்லை (அவரை விருந்தாளியாக ஏற்றவர் அன்றைய இரவில் அவருக்கு விருந்துபசாரம் செய்யவில்லை) என்றால் அவருக்கு உதவி செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. மேலும், விருந்துபசரிப்பவரின் பொருள், மற்றும் அவருடைய விவசாய விளைச்சலிருந்து விருந்தாளி இரவு விருந்துண்ணத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும் அவருக்கு உரிமை உண்டு” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மிக்தாம் அபூகரீமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- இது விருந்து உபசரிப்பவரிடத்தில் உண்ண, அருந்த எந்தவித ஏற்பாடும் இல்லாமல், அவர் நிர்பந்தமான சூழ்நிலையில் இருக்கும்போது தான். அவ்வாறு இல்லையெனில் மனிதத் தன்மை, மாண்பு என்ற அடிப்படையில் விருந்துபசாரம் செய்வது விருந்து அளிப்பவரின் மீது கடமையாம்.
(மளாஹிர் ஹக்)
١١٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍؒ قَالَ: دَخَلَ عَلَيَّ جَابِرٌ ؓ فِيْ نَفرٍ مِنْ اَصْحَابِ النَّبِيِّ ﷺ: فَقَدَّمَ اِلَيْهِمْ خُبْزًا وَخَلاًّ فَقَالَ: كُلُوْا فَاِنِّيْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: نِعْمَ اْلاِدَامُ الْخَلُّ، اِنَّهُ هَلاَكٌ بِالرَّجُلِ اَنْ يَدْخُلَ عَلَيْهِ النَّفَرُ مِنْ اِخْوَانِهِ فَيَحْتَقِرَ مَا فِيْ بَيْتِهِ اَنْ يُقَدِّمَهُ اِلَيْهِمْ، وَهَلاَكٌ بِالْقَوْمِ اَنْ يَحْتَقِرُوْا مَا قُدِّمَ اِلَيْهِمْ.
رواه احمد والطبراني في الاوسط وابو يعلي الا انه قال: وَكَفَي بِالْمَرْءِ شَرًّا اَنْ يَحْتَقِرَ مَا قُرِّبَ اِلَيْهِ وفي اسناد ابي يعلي ابو طالب القاص ولم اعرفه وبقية رجال ابي يعلي وثقوا وفي الحاشية: ابو طالب القاص هو يحيي بن يعقوب بن مدرك ثقة مجمع الزوائد:٨ /٣٢٨
118.ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உபைதிப்னி உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஸஹாபாக்கள் சிலருடன் என்னிடம் வந்தார்கள். ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் தமது தோழர்களுக்கு முன்னால் ரொட்டியையும் சிர்காவை (வினாகரியை)யும் எடுத்து வைத்து, “சாப்பிடுங்கள்!” ஏனேனில், “சிர்கா சிறந்த குழம்பு, மேலும் ஒருவரிடம் அவரது சகோதரர்களில் சிலர் (விருந்தாளிகளாக) வந்து அவர் தம் வீட்டில் என்ன பொருள் உள்ளதோ அப்பொருளை விருந்தாளிக்கு முன் எடுத்துவைப்பதை அற்பமாகக் கருதுபவர் நாசமாகட்டும். மேலும் தமக்குமுன் எடுத்துவைக்கப்பட்ட பொருட்களை அற்பமாக இழிவாகக் கருதும் மக்களும் நாசமாகட்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள். “தனக்கு முன் வைக்கப்பட்டதை அற்பமாகக் கருதுவது மனிதன் தியவன் என்பதற்குப் போதுமானது” என்று மற்றோர் அறிவிப்பிலும் கூறப்பட்டுள்ளது.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
١١٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ اللهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَاِذَا عَطَسَ اَحَدُكُمْ وَحَمِدَ اللهَ كَانَ حَقًّا عَلي كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ اَنْ يَقُوْلَ لَهُ: يَرْحَمُكَ اللهُ، وَاَمَّا التَّثَاؤُبُ فَاِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَاِذَا تَثَاءَبَ اَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَاِنَّ اَحَدَكُمْ اِذَا تَثَاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ.
رواه البخاري باب اذا تثاءب فليضع يده علي فيه رقم:٦٢٢٦
119.”அல்லாஹுதஆலா தும்முவதை விரும்புகிறான், கொட்டாவி விடுவதை வெறுக்கிறான், உங்களில் ஒருவர் தும்மி “அல்ஹம்துலில்லாஹ்” சொன்னால், அதைக்கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீது “யர்ஹமுகல்லாஹ்” சொல்வது அவசியமாகும். கொட்டாவி விடுவது ஷைத்தானின் புறத்திலிருந்து ஏற்படுகிறது, ஆகையால் உங்களில் யாருக்கேனும் கொட்டாவி வந்தால் அவர் முடிந்த அளவு அதை தடுத்துக்கொள்ளவும். ஏனேனில், உங்களில் யாரேனும் ஒருவர் கொட்டாவி விட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٢٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهُ ﷺ: مَنْ عَادَ مَرِيْضًا اَوْ زَارَ اَخًا لَهُ فِي اللهِ، نَادَاهُ مُنَادٍ اَنْ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّاْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في زيارة الاخوان رقم:٢٠٠٨
120.”எவர் நோயாளியை நலன் விசாரிக்க அல்லது தன் முஸ்லிம் சகோதரரை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால், “நீங்கள் பரக்கத் பெற்றுவிட்டீர்கள், உங்கள் நடையும் பரக்கத் பொருந்தியது. மேலும் உங்களுடைய தங்குமிடத்தை நீங்கள் சொர்க்கத்தில் ஆக்கிக் கொண்டீர்கள்!” என்று உரத்த குரலில் ஒரு மலக்கு அறிவிப்புச் செய்கிறார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٢١– عَنْ ثَوْبَانَ ؓ مَوْلَي رَسُوْلِ اللهِ ﷺ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ عَادَ مَرِيْضًا لَمْ يَزَلْ فِيْ خُرْفَةِ الْجَنَّةِ، قِيْلَ: يَارَسُوْلَ اللهِﷺ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ؟ قَالَ: جَنَاهَا.
رواه مسلم باب فضل عيادة المريض رقم:٦٥٥٤
121.எவர் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்கிறாரோ, அவர் சொர்க்கத்தின் “குர்ஃபா”வில் இருப்பார் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! சொர்க்கத்தின் “குர்ஃபா” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. “அது சொர்க்கத்தில் பறிக்கப்பட்ட பழம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்ற ஹதீஸை நபி (ஸல்) அவர்களால் உரிமைவிடப்பட்ட அடிமை ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٢٢– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ تَوَضَّأَ فَاَحْسَنَ الْوُضُوْءَ، وَعَادَ اَخَاهُ الْمُسْلِمَ مُحْتَسِبًا، بُوْعِدَ مِنْ جَهَنَّمَ مَسِيْرَةَ سَبْعِيْنَ خَرِيْفًا، قُلْتُ: يَا اَبَا حَمْزَةَ! وَمَا الْخَرِيْفُ؟ قَالَ: الْعَامُ.
رواه ابوداؤد باب في فضل العيادة علي وضوء رقم:٣٠٩٧
122.”எவர் நல்ல முறையில் உளூச் செய்து, நன்மையையும், கூலியையும் ஆதரவு வைத்தவராகத் தன் முஸ்லிம் சகோதரரை நலன் விசாரிக்கச் செல்வாரோ, அவர் நரகைவிட்டு எழுபது கரீஃப் தூரமாக்கப்படுவார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஹஜ்ரத் ஸாபித் பன்னானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்களிடம் “அபூஹம்ஸா! கரீஃப் என்றால் என்ன?” என்று நான் வினவினேன், “ஒரு வருடத்திற்கு “கரீஃப்” என்று சொல்லப்படும்” என பதிலளித்தார்கள் (எழுபது வருடத் தொலைதூரம் அவர் நரகத்தை விட்டு தூரமாக்கப்படுவார்).
(அபூதாவூத்)
١٢٣– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَيُّمَا رَجُلٍ يَعُوْدُ مَرِيْضًا فَاِنّمَا يَخُوْضُ فِي الرَّحْمَةِ، فَاِذَا قَعَدَ عِنْدَ الْمَرِيْضِ غَمَرَتْهُ الرَّحْمَةُ، قَالَ: فَقُلْتُ: يَارَسُوْلَ اللهِ! هذَا لِلصَّحِيْحِ الَّذِيْ يَعُوْدُ الْمَرِيْضَ فَالْمَرِيْضُ مَالَهُ؟ قَالَ: تُحَطُّ عَنْهُ ذُنُوْبُهُ.
رواه احمد: ٣ /١٧٤
123.”எவர் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்கிறாரோ அவர் அருள் என்னும் வெள்ளத்தில் மூழ்கி விடுவார். அவர் நோயாளிக்கு அருகில் உட்கார்ந்தால் ரஹ்மத் அவரை மூடிக்கொள்கிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! தாங்கள் கூறிய இச்சிறப்பு நோயாளியைச் சந்திக்கும் ஆரோக்கியமானவருக்குக் கிடைக்கிறது. நோயாளிக்கு என்ன கிடைக்கும்?” என்று நான் வினவினேன். “அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٢٤– عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ عَادَ مَرِيْضًا خَاضَ فِي الرَّحْمَةِ، فَاِذَا جَلَسَ عِنْدَهُ اسْتَنْقَعَ فِيْهَا.
رواه احمد: ٣ /٤٦٠, وفي حديث عمرو بن حزم ١ عند الطبراني في الكبير والاوسط: وَاِذَا قَامَ مِنْ عِنْدِهِ فَلاَ يَزَالُ يَخُوْضُ فِيْهَا حَتَّي يَرْجِعَ مِنْ حَيْثُ خَرَجَ. ورجاله موثقون مجمع الزوائد: ٣ /٢٢
124.”எவர் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்வாரோ அவர் ரஹ்மத்தில் மூழ்குவார், நோயாளிக்கு அருகில் (நோய் விசாரிக்க) உட்கார்ந்தால், அவர் ரஹ்மத்தில் தங்கிவிடுகிறார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் கஃபிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- “எங்கிருந்து நலம் விசாரிக்கப் புறப்பட்டாரோ, அங்கு திரும்பி வரும் வரை ரஹ்மத்தில் மூழ்கியிருப்பார்” என்று ஹஜ்ரத் அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٢٥– عَنْ عَلِيٍّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَا مِنْ مُسْلِمٍ يَعُوْدُ مُسْلِمًا غُدْوَةً اِلاَّ صَلَّي عَلَيْهِ سَبْعُوْنَ اَلْفَ مَلَكٍ حَتَّي يُمْسِيَ، وَاِنْ عَادَهُ عَشِيَّةً اِلاَّ صَلَّي عَلَيْهِ سَبْعُوْنَ اَلْفَ مَلَكٍ حَتَّي يُصْبِحَ، وَكَانَ لَهُ خَرِيْفٌ فِي الْجَنَّةِ.
رواه الترمذي وقال: هذا حديث غريب حسن باب ماجاء في عيادة المريض رقم:٩٦٩
125.”எவர் முஸ்லிம் மற்றோரு முஸ்லிமைக் காலையில் நலன் விசாரிக்கச் செல்வாரோ மாலை வரை எழுபதாயிரம் மலக்குகள், அவருக்காக துஆச் செய்துகொண்டிருப்பர். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்துகொண்டு இருப்பர். மேலும் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٢٦– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ؓ قَالَ: قَالَ لِيَ النَّبِيُّ ﷺ: اِذَا دَخَلْتَ عَلي مَرِيْضٍ فَمُرْهُ اَنْ يَدْعُوَ لَكَ فَاِنَّ دُعَاءَهُ كَدُعَاءِ الْمَلاَئِكَةِ.
رواه ابن ماجه باب ماجاء في عيادة المريض رقم:١٤٤١
126.”நீங்கள் நோயாளியிடம் சென்றால், அவரிடம் உங்களுக்காக துஆச் செய்யக் கூறுங்கள். ஏனேனில், அவரது துஆ மலக்குகளின் துஆவைப் போல” (ஒப்புக்கொள்ளப்படுகிறது) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எனக்குக் கூறினார்கள் என ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
١٢٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ اَنَّهُ قَالَ: كُنَّا جُلُوْسًا مَعَ رَسُوْلِ اللهِ ﷺ اِذْ جَاءَهُ رَجُلٌ مِنَ اْلاَنْصَارِ فَسَلَّمَ عَلَيْهِ، ثُمّ اَدْبَرَ اْلاَنْصَارِيُّ، فَقَالَ رَسُوْلُ الله ﷺ: يَا اَخَا اْلاَنْصَارِ! كَيْفَ اَخِيْ سَعْدُ بْنُ عُبَادَةَ؟ فَقَالَ: صَالِحٌ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ يَعُوْدُهُ مِنْكُمْ؟ فَقَامَ وَقُمْنَا مَعَهَ وَنَحْنُ بِضْعَةَ عَشَرَ، مَا عَلَيْنَا نِعَالٌ وَلاَ خِفَافٌ وَلاَ قَلاَنِسُ وَلاَ قُمُصٌ نَمْشِيْ فِيْ تِلْكَ السِّبَاخِ حَتَّي جِئْنَاهُ، فَاسْتَاْخَرَ قَوْمُهُ مِنْ حَوْلِهِ حَتَّي دَنَا رَسُوْلُ اللهِ ﷺ وَاَصْحَابُهُ الَّذِيْنَ مَعَهُ.
رواه مسلم باب في عيادة المرضي رقم :٢١٣٨
127.ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம், அன்ஸாரி ஸஹாபி ஒருவர் வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லியபின் திரும்பிச் செல்லலானார். “அன்ஸாரி சகோதரரே! எனது சகோதரர் ஸஃதுப்னு உபாதாவின் உடல்நிலை எப்படி உள்ளது”? என நபி (ஸல்) அவர்கள் கேட்க, “அவர் நலமாக உள்ளார்” என அன்ஸாரி ஸஹாபி சொன்னார். “அவரை நலன் விசாரிக்கச் செல்ல உங்களில் யார் தயார்?” என நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருகில் இருந்த ஸஹாப்பாக்களிடம்) கேட்டபின், நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள், நாங்களும் அன்னாருடன் எழுந்து சென்றோம், நாங்கள் பத்து நபர்களை விட அதிகமாக இருந்தோம், எங்களிடம் காலணிகளோ, காலுறைகளோ, தொப்பிகளோ, சட்டைகளோ இல்லை. நாங்கள் கரடுமுரடான நிலத்தில் நடந்து கொண்டே ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம், (அச்சமயம்) அவருக்கருகில் இருந்த அவரது கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பின்னால் நகர்ந்து கொள்ள, நபி (ஸல்) அவர்களும், அவர்களுடன் சென்ற தோழர்களும் அவருக்கு அருகே சென்றடைந்தனர்”.
(முஸ்லிம்)
١٢٨– عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّ ؓ اَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: خَمْسٌ مَنْ عَمِلَهُنَّ فِيْ يَوْمٍ كَتَبَهُ اللهُ مِنْ اَهْلِ الْجَنَّةِ: مَنْ عَادَ مَرِيْضًا، وَشَهِدَ جَنَازَةً، وَصَامَ يَوْمًا، وَرَاحَ يَوْمَ الْجُمْعَةِ، وَاَعْتَقَ رَقَبَةً.
رواه ابن حبان (واسناده قوي):٧ /٦
128.”1. நோயாளியை நலன் விசாரித்தல், 2. ஜனாஸாவின் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளுதல், 3. நோன்பு வைத்தல், 4. ஜும்ஆ தொழச் செல்லுதல், 5. அடிமையை உரிமை விடுதல்” ஆகிய ஐந்து காரியங்களை எவர் ஒரு நாளில் செய்வாரோ, அவரை அல்லாஹுதஆலா சுவர்க்க வாசிகளில் ஒருவராக எழுதி விடுவான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
١٢٩– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ جَاهَدَ فِيْ سَبِيْلِ اللهِ كَانَ ضَامِنًا عَلَي اللهِ، وَمَنْ عَادَ مَرِيْضًا كَانَ ضَامِنًا عَلَي اللهِ،وَمَنْ غَدَا اِلَي الْمَسْجِدِ اَوْ رَاحَ كَانَ ضَامِنًا عَلَي اللهِ،وَمَنْ دَخَلَ عَلَي اِمَامٍ يُعَزِّزُهُ كَانَ ضَامِنًا عَلَي اللهِ، وَمَنْ جَلَسَ فِيْ بَيْتِهِ لَمْ يَغْتَبْ اِنْسَانًا كَانَ ضَامِنًا عَلَي اللهِ.
رواه ابن حبان (واسناده حسن):٢ /٩٥
129.”எவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார். எவர் நோயாளியிடம் நலம் விசாரிப்பாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார். எவர் காலையிலோ, மாலையிலோ பள்ளிக்குச் செல்வாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார். யாரேனும் ஓர் அதிகாரியிடத்தில் அவருக்கு உதவ எவர் செல்வாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார். எவர் பிறரைப் பற்றிப் புறம் பேசாமல் தன் வீட்டில் இருப்பாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
١٣٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهُ ﷺ: مَنْ اَصْبَحَ مِنْكُمُ اْليَوْمَ صَائِمًا؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنِ اتَّبَعَ مِنْكُمُ اْليَوْمَ جَنَازَةً؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنْ اَطْعَمَ مِنْكُمُ اْليَوْمَ مِسْكِيْنًا؟ قَالَ اَبُوْبَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنْ عَادَ مِنْكُمُ اْليَوْمَ مَرِيْضًا؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَااجْتَمَعْنَ فِي امْرِيءٍ اِلَّا دَخَلَ الْجَنَّةَ.
رواه مسلم باب من فضائل ابي بكر الصديق ١ رقم:٦١٨٢
130.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “இன்று உங்களில் யார் நோன்பு நோற்றார்?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “நான் நோற்றேன்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.”இன்று ஜனாஸாவில் கலந்துகொண்டவர் உங்களில் யார்? என்று கேட்க, “நான்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். “இன்று மிஸ்கீனுக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, “நான்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். “இன்று உங்களில் நோயாளியை நலன் விசாரித்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என பதிலளித்தார்கள். “எவரிடத்தில் இந்தக் காரியங்கள் ஒன்று சேர்ந்து விடுமோ, அவர் நிச்சயம் சுவர்க்கம் செல்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
١٣١– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَعُوْدُ مَرِيْضًا لَمْ يَحْضُرْ اَجَلُهُ فَيَقُوْلُ سَبْعَ مَرَّاتٍ: اَسْاَلُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ اَنْ يَشْفِيَكَ اِلاَّ عُوْفِيَ.
رواه الترمذي وقال هذا حديث حسن غريب باب مايقول عند عيادة المريض رقم: ٢٠٨٣
131.”யாரேனும் ஒரு முஸ்லிமான அடியான் மரண நேரம் நெருங்காத ஒரு நோயாளியை நலன் விசாரிக்கச் சென்று, (اَسْاَلُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ اَنْ يَشْفِيَكَ) “மகத்தான அர்ஷுக்கு அதிபதியும், மகத்தானவனுமான அல்லாஹுதஆலாவிடம் உமக்கு ஆரோக்கியமளிக்க வேண்டுகிறேன்” என்ற துஆவை ஏழுமுறை ஓதினால் அவருக்கு நிச்சயம் குணம் கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
١٣٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّي يُصَلَّي عَلَيْهَا فَلَهُ قِيْرَاطٌ، وَمَنْ شَهِدَهَا حَتَّي تُدْفَنَ فَلَهُ قِيْرَاطَانِ، قِيْلَ: وَمَاالْقِيْرَاطَانِ؟ قَالَ: مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيْمَيْنِ.
رواه مسلم باب فضل الصلوة علي الجنازة واتباعها رقم:٢١٨٩ وفي رواية له: اَصْغَرُهُمَا مِثْلُ اُحُدٍ. رقم:٢١٩٢
132.”எவர் ஜனாஸாத் தொழுகை முடியும் வரை ஜனாஸாவுடன் இருப்பாரோ அவருக்கு ஒரு “கீராத்” நன்மை கிடைக்கும். எவர் ஒருவர் ஜனாஸாவை அடக்கம் செய்யும் வரை ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவருக்கு இரண்டு “கீராத்” நன்மைகள் கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது “இரு கீராத்கள் என்றால் என்ன?” என்று ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “இரு கீராத் என்பது இரண்டு பெரிய மலைகளுக்குச் சமமானது” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள், “இரண்டு மலைகளில் மிகச் சிறியது உஹுது மலையைப் போன்று இருக்கும்” என்று மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது.
(முஸ்லிம்)
١٣٣– عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ مَيِّتٍ يُصَلِّيْ عَلَيْهِ اُمَّةٌ مِنَ الْمُسْلِمِيْنَ يَبْلُغُوْنَ مِائَةً، كُلُّهُمْ يَشْفَعُوْنَ لَهُ اِلاَّ شُفِّعُوْا فِيْهِ.
رواه مسلم باب من صلي عليه مائة … رقم:٢١٩٨
133.”நூறு பேர் கொண்ட முஸ்லிம்களின் ஒரு பெரும் கூட்டம் ஏதேனும் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு இறந்த மனிதருக்காக அல்லாஹ்விடம் (மன்னிப்புக்காகவும், அருளுக்காகவும்) பரிந்து பேசினால் நிச்சயமாக அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
١٣٤– عَنْ عَبْدِ اللهِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ عَزَّي مُصَابًا فَلَهُ مِثْلُ اَجْرِهِ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في اجر من عزي مصابا رقم:١٠٧٣
134.”எவரேனும் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பத்தில் சிக்குண்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٣٥– عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قاَلَ: مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّيْ اَخَاهُ بِمُصِيْبَةٍ اِلاَّ كَسَاهُ اللهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ.
رواه ابن ماجه باب ماجاء في ثواب من عزي مصابا رقم:١٦٠١
135.”எந்த ஒரு முஃமின் துன்பத்தில் சிக்கிய முஃமினான சகோதரருக்குப் பொறுமையையும் ஆறுதலையும் கூறி அவரைத் தேற்றுவாரோ அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று அவருக்குக் கண்ணியம் என்னும் ஆடையை அணிவிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் முஹம்மதிப்னு அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
١٣٦– عَنْ اُمِّ سَلَمَةَ ؓ قَالَتْ: دَخَلَ رَسُوْلُ اللهِ ﷺ عَلَي اَبِيْ سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ، فَاَغْمَضَهُ، ثُمَّ قَالَ: اِنَّ الرُّوْحَ اِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ، فَضَجَّ نَاسٌ مِنْ اَهْلِهِ فَقَالَ: لاَ تَدْعُوْا عَلَي اَنْفُسِكُمْ اِلاَّ بِخَيْرٍ، فَاِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُوْنَ عَلَي مَاتَقُوْلُوْنَ، ثُمَّ قَالَ: اَللّهُمَّ! اغْفِرْ لِاَبِيْ سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْلَنَا وَلَهُ يَارَبَّ الْعَالَمِيْنَ! وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ.
رواه مسلم باب في اغماض الميت والدعاء له اذا حضر رقم:٢١٣٠
136.ஹஜ்ரத் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஹஜ்ரத் அபூஸலமா (ரலி) அவர்கள் மரணித்த சமயம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அச்சமயம் ஹஜ்ரத் அபூஸலமா (ரலி) அவர்களின் கண்கள் திறந்த நிலையில் இருந்தன, அன்னாரின் கண்களை நபி (ஸல்) அவர்கள் மூடினார்கள், “உயிர் கைப்பற்றப்படும் போது பிரிந்து செல்லக் கூடிய அந்த உயிரைப் பார்த்த வண்ணம் இருப்பதால் கண்களும் மேல் நோக்கித் திறந்தவாறு இருந்துவிடுகின்றன” என்று கூறினார்கள், (இதனால் தான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அன்னாரின் கண்களை மூடினார்கள்) அச்சமயம் அவரது வீட்டாரில் சிலர் சப்தமிட்டு அழ ஆரம்பித்தார்கள் (சொல்லக் கூடாத வார்த்தைகளும் கூறியிருக்கலாம்). “நீங்கள் உங்களுக்காக நன்மையான துஆக்களையே கேளுங்கள், ஏனேனில், மலக்குகள் உங்களுடைய துஆவுக்கு ஆமீன் கூறுகின்றனர்” என்று சொல்லியபின், நபி (ஸல்) அவர்கள் (اَللّهُمَّ! اغْفِرْ لِاَبِيْ سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْلَنَا وَلَهُ يَارَبَّ الْعَالَمِيْنَ! وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ) “யாஅல்லாஹ், அபூஸலமாவின் பாவத்தை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடைய கூட்டத்தில் அவரைச் சேர்த்து அவருடைய பதவியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு அவருடைய குடும்பத்தார்களைக் கண்காணித்துக் கொள்வாயாக! ரப்புல் ஆலமீனே! எங்களையும், அவரையும் மன்னிப்பாயாக! அவருடைய மண்ணறையை (கப்ரை) விசாலமாக்கி வைப்பாயாக! அவருடைய கப்ரை ஒளிமயமாக்குவாயாக!” என்ற துஆவை ஓதினார்கள்.
(முஸ்லிம்)
குறிப்பு:- இதர முஸ்லிம்களுக்காக இந்த துஆவை யாரேனும் ஓதினால் என்ற இடத்தில் மரணித்தவரின் பெயரைக் கூறிக்கொள்ளவும், மேலும் பெயருக்கு முன்னால் ஜேர் குறியிட்ட லாமை இணைத்துக் கொள்ளவும், உதாரணமாக என்பதைப்போல.
١٣٧– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ يَقُوْلُ: دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيْهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَاْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِاَخِيْهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِيْنَ، وَلَكَ بِمِثْلٍ.
رواه مسلم باب فضل الدعاء للمسلمين بظهر الغيب رقم:٦٩٢٩
137.”ஒரு முஸ்லிம் தன் முஸ்லிம் சகோதரருக்காக அவர் இல்லாத பொழுது கேட்கும் துஆ ஒப்புக்கொள்ளப்படுகிறது. துஆச் செய்பவரின் தலைக்கு அருகில் ஒரு மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தன் சகோதரரின் நன்மைக்காக துஆச் செய்யும் பொழுதெல்லாம் அந்த மலக்கு “ஆமீன்” கூறுகிறார். மேலும் “நீர் உமது சகோதரனுக்காக எந்த நலவை வேண்டுகிறீரோ, அதுபோன்ற நலவை அல்லாஹுதஆலா உமக்கும் தந்தருள்வானாக! (என்று துஆச் செய்பவரிடம் கூறுகிறார்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுவார்கள் என ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٣٨– عَنْ اَنَسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لاَيُؤْمِنُ اَحَدُكُمْ حَتَّي يُحِبَّ لِاَخِيْهِ مَايُحِبُّ لِنَفْسِهِ.
رواه البخاري باب من الايمان ان يحب لاخيه …رقم: ١٣
138.”தனக்கு விருப்பமானதைத் தன் முஸ்லிமான சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் (பரிபூரண) முஃமின் ஆக முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٣٩– عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللهِ الْقُسَرِيُّؒ قَالَ: حَدَّثَنِيْ اَبِيْ عَنْ جَدِّيْ ؓ اَنَّهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَتُحِبُّ الْجَنَّةَ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ! قَالَ: فَاَحِبَّ لِاَخِيْكَ مَاتُحِبُّ لِنَفْسِكَ.
رواه احمد:٤/٧٠
139.”நீர் சுவர்க்கத்தை விரும்புகிறீரா?” (நீ சுவர்க்கம் செல்ல விரும்புகிறீரா?)” என்று நபி (ஸல்) அவர்கள் என் பாட்டனாரிடம் கேட்டார்கள், “ஆம்‘ என்றார். “நீர் உமக்கு பிரியமானதை உமது சகோதரருக்கும் பிரியப்படு!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் காலிதுப்னு அப்துல்லாஹ் கஸரீ (ரஹ்) அவர்களின் பாட்டனார் அறிவிப்பதாக அவர்களின் தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٤٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: اِنَّ الدِّيْنَ النَّصِيْحَةُ، اِنَّ الدِّيْنَ النَّصِيْحَةُ، اِنَّ الدِّيْنَ النَّصِيْحَةُ، قَالُوْا: لِمَنْ يَارَسُوْلَ اللهِ؟ قَالَ: لِلّهِ، وَلِكِتَابِهِ، وَلِرَسُوْلِهِ، وَلِاَئِمَّةِ الْمُسْلِمِيْنَ وَعَامَّتِهِمْ.
رواه النسائي باب النصيحة للامام رقم:٤٢٠٤
140.”நிச்சயமாக மார்க்கம் (தீன்) என்பது மனத் தூய்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்வதற்குப் பெயர். நிச்சயமாக மார்க்கம் (தீன்) என்பது மனத் தூய்மையாகவும், விசுவாசமாகவும் நடந்து கொள்வதற்குப் பெயர். நிச்சயமாக மார்க்கம் (தீன்) என்பது மனத்தூய்மையாகவும், விசுவாசமாகவும் நடந்து கொள்வதற்குப் பெயர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “மனத் தூய்மையாகவும், விசுவாசமாகவும் யாருடன் நடந்து கொள்வது?” என்று ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். “அல்லாஹுதலாவுடனும், அல்லாஹுதஆலாவுடைய தூதருடனும், அல்லாஹுதஆலாவுடைய வேதத்துடனும், முஸ்லிம்களின் அதிகாரிகளுடனும், முஸ்லிம் பொதுமக்களுடனும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
தெளிவுரை:- அல்லாஹுதஆலாவுடன் மனத்தூய்மையாகவும், விசுவாசமாகவும் நடந்து கொள்வது என்பது அவன் மீது ஈமான் கொள்வது, அவன் மீது அளவற்ற அன்பு கொள்வது, அவனுக்குப் பயப்படுவது, அவனுக்கு வழிப்படுவது, அவனை வணங்குவது, அவனுக்கு இணை வைக்காமல் இருப்பது.அல்லாஹ்வுடைய வேதத்துடன் மனத் தூய்மையாகவும், விசுவாசமாகவும் நடப்பது என்பது வேதத்தின் மீது ஈமான் கொள்வது, அதற்குரிய மகத்துவத்தின் கடமையை நிறைவேற்றுவது, வேதத்தைக் கற்பது, அதன் கல்வியைப் பரப்புவது, கற்றபடி செயல்படுவது.அல்லாஹ்வுடைய தூதருடன் மனத்தூய்மையாகவும், விசுவாசமாகவும் நடந்துகொள்வது என்பது, அவர்கள் சொன்னதை உண்மைப்படுத்துவது, அவர்களின் மகத்துவத்தை மனதில் தங்க வைப்பது, அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையின் மீதும் நேசம் கொள்வது, உள்ளத்தாலும், உயிராலும் அவர்களைப் பின்பற்றுவதில்தான் ஈடேற்றம் இருக்கிறது என்று நம்வுவது. முஸ்லிம் அதிகாரிகளுடன் மனத்தூய்மையாகவும், விசுவாசமாகவும் நடப்பது என்பது அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்ற உதவியாகவும், உறுதுணையாகவும் இருப்பது, அவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது, அவர்களுக்கு நல்ல, ஆலோசனைகளைக் கூறுவது, மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியங்களில் அவர்களுக்கு வழிப்படுவது. முஸ்லிம் பொது மக்களுடன் மனத்தூய்மையாகவும், விசுவாசமாகவும் நடப்பது என்பது அவர்களுடன் ஒன்றுபட்டு வாழ்வது, அவர்களுக்கு உதவி, ஒத்தாசை செய்வது அவர்களுடைய காரியங்களில் பங்கெடுத்து முழுக்கவனம் செலுத்துவது, தீனின் பக்கம் அவர்களின் கவனத்தைத் திருப்புவதும் அதில் சாரும். அவர்களுடைய நலனைத் தன்னுடைய நலனாகவும் அவர்களுடைய நஷ்டத்தைத் தனக்கு ஏற்பட்ட நஷ்டமாகவும் கருத வேண்டும், தன்னால் இயன்ற அளவு அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும், அவர்களுடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்).
١٤١– عَنْ ثَوْبَانَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ حَوْضِيْ مَابَيْنَ عَدَنَ اِلَي عَمَّانَ، اَكْوَابُهُ عَدَدُ النُّجُوْمِ، مَاؤُهُ اَشَدُّ بَيَاضًا مِنَ الثَّلْجِ وَاَحْلَي مِنَ الْعَسَلِ، اَوَّلُ مَنْ يَرِدُهُ فُقَرَاءُ الْمُهَاجِرِيْنَ، قُلْنَا: يَارَسُوْلَ اللهﷺ صِفْهُمْ لَنَا قَالَ: شُعْثُ الرُّؤُوْسِ، دُنْسُ الثِّيَابِ الَّذِيْنَ لاَ يَنْكِحُوْنَ الْمُتَنَعِّمَاتِ، وَلاَ تُفتَّحُ لَهُمُ السُّدَدُ، الَّذِيْنَ يُعْطُوْنَ مَاعَلَيْهِمْ وَلاَ يُعْطَوْنَ مَالَهُمْ.
رواه الطبراني مجمع الزوائد:١٠/٤٥٧
141.”என்னுடைய ஹவ்ள் (நீர்த்தடாகம்) உடைய அளவு “அதன்” முதல் “அம்மான்‘ வரையில் உள்ள தொலை தூரத்துக்குச் சமமாகும். அதனுடைய கிண்ணங்கள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அளவு (கணக்கின்றி) இருக்கும், அதன் நீர் பனிக்கட்டியைவிட வெண்மையாகவும், தேனைவிட இனிமையாகவும் இருக்கும். ஏழை முஹாஜிர்கள்தான் அந்த ஹவ்ளுக்கு முதன் முதலாக வருவார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ், அவர்களின் தன்மைகளைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்?” என்று நாங்கள் வினவினோம். “அவர்கள் பரட்டைத் தலையுடையவர்களாகவும், வசதி படைத்த மங்கையர்களை மணமுடிக்க இயலாதவர்களாகவும், அழுக்கு ஆடை அணிந்தவர்களாகவும் இருப்பர்”. அவர்களுக்காக வீட்டு வாசல்கள் திறக்கப்படாது, அவர்களுக்கு வரவேற்பு கிடைக்காது, தமக்குரிய உரிமைகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் பிறருக்குரிய கடமைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள்” என்று கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- “அதன்‘ என்பது யமன் நாட்டிலுள்ள பிரபலமான ஒரு நகரம் “அம்மான்” என்பது ஜோர்டானிலுள்ள ஒரு நகரத்தின் பெயராகும். அடையாளத்திற்காக இந்த ஹதீஸில் “அதன்‘, “அம்மான்‘ என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இதன் கருத்து, இவ்வுலகத்தில் “அதனு‘க்கும் “அம்மானு‘க்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு தூரம் மறுமையில் “ஹவ்ள்” உடைய நீளமும், கலமும் இருக்கும் என்பதாம். ஆனால் “ஹவ்ள்‘ உடைய இடம் இவ்வளவு தூர அளவில் தான் அமைந்து இருக்கும் என்பது இதன் கருத்தல்ல, மாறாக “ஹவ்ள்‘ உடைய நீளமும், கலமும் பல நூறு மைல்கள் தூரம் வரை பரவியிருக்கும் என்பதை விளக்கவே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
١٤٢– عَنْ حُذَيْفَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تَكُوْنُوْا اِمَّعَةً تَقُوْلُوْنَ: اِنْ اَحْسَنَ النَّاسُ اَحْسَنَّا، وَاِنْ ظَلَمُوْا ظَلَمْنَا، وَلكِنْ وَطِّنُوْا اَنْفُسَكُمْ اِنْ اَحَسْنَ النَّاسُ اَنْ تُحْسِنُوْا، وَاِنْ اَسَاءُوْا فَلاَ تَظْلِمُوْا.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في الاحسان والعفو رقم :٢٠٠٧
142.”நீங்கள் மற்றவர்களின் நடைமுறைகளைப் பார்த்து அவர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள். “மக்கள் நமக்கு நல்லது செய்தால் நாமும் அவர்களுக்கு நல்லது செய்வோம், மக்கள் நமக்கு அநியாயம் செய்தால் நாமும் அவர்களுக்கு அநியாயம் செய்வோம்‘ என்று சொல்லாதீர்கள். “மக்கள் உங்களுக்கு நல்லது செய்தால் நீங்களும் நல்லது செய்வது, மக்கள் தவறான முறையில் நடந்துகொண்டாலும் நீங்கள் அநியாயம் செய்வதில்லை‘ என்ற குணத்தின் மீது உங்களை நீங்களே நிலைப்படுத்திக் கொள்ளுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٤٣– عَنْ عَائِشَةَ ؓ اَنَّهَا قَالَتْ: مَاانْتَقَمَ رَسُوْلُ اللهِ ﷺ لِنَفْسِهِ فِيْ شَيْءٍ قَطُّ اِلاَّ اَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللهِ فَيَنْتَقِمُ بِهَا لِلّهِ.
(وهو بعض الحديث) رواه البخاري باب قول النبي ﷺ: يسروا ولاتعسروا …رقم:٦١٢٦
143.”ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தன் சொந்தக் காரியத்திற்காக எப்பொழுதும் யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹுதஆலாவினால் விலக்கப்பட்ட காரியம் நடைபெற்றால் அல்லாஹுதஆலாவின் கட்டளையை மீறியதற்காகத் தண்டனை கொடுப்பார்கள்” என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٤٤– عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِنَّ الْعَبْدَ اِذَا نَصَحَ لِسَيِّدِهِ، وَاَحْسَنَ عِبَادَةَ اللهِ فَلَهُ اَجْرُهُ مَرَّتَيْنِ.
رواه مسلم باب ثواب العبد…. رقم:٤٣١٨
144.”தன் எஜமானனின் நலனை நாடி விசுவாசத்துடன் நடந்து, அல்லாஹுதஆலாவை அழகிய முறையில் வணங்கும் அடிமைக்கு இரு மடங்கு கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٤٥– عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ؓ قَالَ: قَالَ: رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ لَهُ عَلَي رَجُلٍ حَقٌّ فَمَنْ اَخَّرَهُ كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ.
رواه احمد:٤/٤٤٢
145.”ஒருவருக்கு மற்றோருவர் செலுத்தவேண்டிய (கடன் போன்றவை) ஏதேனும் இருந்து, கடன் கொடுத்தவர், அந்தக் கடனாளிக்கு அதைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தவணை கொடுத்தால், ஒவ்வொரு நாளுக்குப் பகரமாகத் தருமம் செய்த நன்மை கடன் கொடுத்தவருக்குக் கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இம்ரானிப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٤٦– عَن اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اِجْلاَلِ اللهِ اِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِيْ فِيْهِ وَالْجَافِيْ عَنْهُ، وَاِكْرَامَ ذِيْ السُّلْطَانِ الْمُقْسِطِ.
رواه ابوداؤد باب فِيْ تنزيل الناس منازلهم رقم : ٤٨٤٣
146.”முஸ்லிமான வயோதிகர், வரம்புமீறாத ஹாபிள், நீதி செலுத்தும் அரசன் ஆகிய மூன்று வகையினரைக் கண்ணியப்படுத்துவது அல்லாஹுதஆலாவை மேன்மைப்படுத்துவதைச் சார்ந்தது” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- வரம்புமீறாமல் இருப்பது என்பது, சிறப்புமிகு குர்ஆனைப் பேணுதலாக ஓதிவருவதோடு, முகஸ்துதிக்காரர்களைப் போன்று திருத்தமாக ஓதுவதிலும், எழுத்துக்களை உச்சரிப்பதிலும் வரம்பு மீறாமல் இருப்பது என்பதாம்.
(பத்லுல் மஜ்ஹூத்)
١٤٧– عَنْ اَبِيْ بَكْرَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ اَكْرَمَ سُلْطَانَ اللهِ تَبَارَكَ وَتَعَالَي فِي الدُّنْيَا اَكْرَمَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ اَهَانَ سُلْطَانَ اللهِ فِي الدُّنْيَا اَهَانَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ.
رواه احمد والطبراني باختصار ورجال احمد ثقات مجمع الزوائد:٥ /٣٨٨
147.”அல்லாஹுதஆலாவால் நியமிக்கப்பட்ட அரசரை எவர் கண்ணியப் படுத்துவாரோ, அவரை அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று கண்ணியப்படுத்துவான். மேலும், அல்லாஹுதஆலாவால் நியமிக்கப்பட்ட அரசரை எவர் கேவலப்படுத்துவாரோ அவரை அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று கேவலப்டுத்துவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٤٨– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُمْ.
رواه الحاكم وقال: صحيح علي شرط البخاري ووافقه الذهبي:١/٦٢
148.”உங்களுடைய பெரியவர்களுடன் பரக்கத் இருக்கிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
தெளிவுரை:- எவருடைய வயது அதிகமாக இருந்து, அதன் காரணமாக நன்மைகளும் அதிகமாக இருக்குமோ அதில் நலவும் பரக்கத்தும் இருக்கிறது என்பதாம்.
(ஹாஷியத்துத் தர்ஙீப்)
١٤٩– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؓ اَنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ: لَيْسَ مِنْ اُمَّتِيْ مَنْ لَمْ يُجِلَّ كَبِيْرَنَا، وَيَرْحَمْ صَغِيْرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا حَقَّهُ.
رواه احمد والطبراني في الكبير واسناده حسن مجمع الزوائد:١ /٣٣٨
149.”நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும், ஆலிம்களின் உரிமைகளை அறியாதவரும் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உபாதத் இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٥٠– عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اُوْصِي الْخَلِيْفَةَ مِنْ بَعْدِيْ بِتَقْوَي اللهِ، وَاُوْصِيْهِ بِجَمَاعَةِ الْمُسْلِمِيْنَ، اَنْ يُعَظِّمَ كَبِيْرَهُمْ، وَيَرْحَمَ صَغِيْرَهُمْ، وَيُوَقِّرَ عَالِمَهُمْ، وَاَنْ لاَ يَضْرِبَهُمْ فَيُذِلَّهُمْ، وَلاَ يُوَحِّشَهُمْ فَيُكْفِرَهُمْ، وَاَنْ لاَ يُخْصِيَهُمْ فَيَقْطَعَ نَسْلَهُمْ، وَاَنْ لاَ يُغْلِقَ بَابَهُ دُوْنَهُمْ فَيَأْكُلَ قَوِيُّهُمْ ضَعِيْفَهُمْ.
رواه البيهقي في السنن الكبري:٨/١٦١
150.”அல்லாஹுதஆலாவைப் பயப்பட வேண்டுமென்றும், முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பற்றியும், முஸ்லிம்களில் பெரியவர்களை மதிக்க வேண்டுமென்றும், அவர்களில் சிறியவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுமென்றும், அவர்களில் ஆலிம்களைக் கண்ணியப்படுத்த வேண்டுமென்றும், இழிவடையும் அளவுக்கு முஸ்லிம்களை அடிக்க வேண்டாமென்றும், இஸ்லாத்தைவிட்டுவிடும் அளவுக்கு அச்சுறுத்த வேண்டாமென்றும், அவர்கள் சந்ததியற்றுவிட வேண்டும் என்பதற்காக அவர்களைக் காயடிக்க வேண்டாமென்றும், அவர்கள் உங்களிடம் முறையிடுவதற்காக வரும்போது உங்கள் கதவுகளை மூட வேண்டாமென்றும், அவ்வாறு செய்தால் அவர்களில் பலசாலிகள் பலவீனர்களை விழுங்கிவிடுவார்கள். (அநியாயம் பரவிவிடும்) என்றும் எனக்குப் பிறகு வரும் என் கலீஃபாவு (பிரதிநிதி)க்கு இறுதி உபதேசம் செய்கிறேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
١٥١– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ الله ﷺ: اَقِيْلُوْا ذَوِي الْهَيْئَاتِ عَثَرَاتِهِمْ اِلاَّ الْحُدُوْدَ.
رواه ابوداؤد باب في الحد يشفع فيه رقم:٤٣٧٥
151.”நல்லோர்களின் தவறுகளை மன்னியுங்கள், ஆனால் அவர்கள் (இஸ்லாத்தின் எல்லையை மீறும்) பாவத்தைச் செய்தாலே தவிர! அவ்வாறு செய்துவிட்டால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٥٢– عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ نَهَي عَنْ نَتْفِ الشَّيْبِ وَقَالَ: اِنَّهُ نُوْرُ الْمُسْلِمِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء في النهي عن نتف الشيب رقم:٢٨٢١
152.”நபி (ஸல்) அவர்கள் நரை முடிகளைப் பிடுங்குவதைத் தடுத்துள்ளார்கள். மேலும் நரை முஸ்லிமுடைய ஒளி” என்று கூறினார்கள் என ஹஜ்ரத் அம்ருப்னு ஷுஜப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
١٥٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ: لاَ تَنْتِفُوا الشَّيْبَ فَاِنَّهُ نُوْرٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ شَابَّ شَيْبَةً فِي اْلاِسْلاَمِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيْئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ.
رواه ابن حبان (واسناده حسن):٧ /٢٥٣
153.”நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள், ஏனேன்றால், கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்குக் காரணமாகும், எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிறாரோ, (ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்), அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஒரு பதவி உயர்த்தப்படுகிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
١٥٤– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ لِلّهِ تَعَالَي اَقْوَامًا يَخْتَصُّهُمْ بِالنِّعَمِ لِمَنَافِعِ الْعِبَادِ وَيُقِرُّهَا فِيْهِمْ مَا بَذَلُوْهَا، فَاِذَا مَنَعُوْهَا نَزَعَهَا مِنْهُمْ فَحَوَّلَهَا اِلَي غَيْرهِمْ.
رواه الطبراني في الكبير وابو نعيم في الحلية وهوحديث حسن الجامع الصغير:١/٣٥٨
154.”மக்கள் பலன் பெறவேண்டும் என்பதற்காக அல்லாஹுதஆலா சிலருக்கு குறிப்பாக நிஃமத்துகளை (பாக்கியங்களை) வழங்குகிறான். அப்பாக்கியங்களைப் (நிஃமத்துகளை) பெற்றவர்கள் மக்களுக்குப் பலன் அளிக்கும் வரை அந்த பாக்கியங்(நிஃமத்து)களை அல்லாஹுதஆலா அவர்களிடமே இருக்கச் செய்கிறான். அப்பாக்கியங்(நிஃமத்து)களைக் கொண்டு அவர்கள் மக்களுக்குப் பலனளிக்கவில்லை என்றால் அவர்களிடமிருந்து அப்பாக்கியங்(நிஃமத்து)களை எடுத்து மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ஹில்யத்துல் அவ்லியா, ஜாமிஉஸ் ஸஙீர்)
١٥٥– عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: تَبَسُّمُكَ فِيْ وَجْهِ اَخِيْكَ لَكَ صَدَقَةٌ، وَاَمْرُكَ بِالْمَعْرُوْفِ وَنَهْيُكَ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ، وَاِرْشَادُكَ الرَّجُلَ فِيْ اَرْضِ الضَّلاَلِ لَكَ صَدَقَةٌ، وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيْءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ، وَاِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَ وَالْعَظْمَ عَنِ الطَّرِيْقِ لَكَ صَدَقَةٌ، وَاِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِيْ دَلْوِ اَخِيْكَ لَكَ صَدَقَةٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في صنائع المعروف رقم:١٩٥٦
155.”உங்களுடைய (முஸ்லிமான) சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவது தர்மம்; நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது தர்மம்; வழியை தவறியவருக்கு வழிகாட்டுவது தர்மம்; பார்வையற்றோருக்கு வழிகாட்டுவது தர்மம்; கல், முள், எலும்பு போன்றவைகளை நடை பாதையிலிருந்து அகற்றுவது தர்மம்; உங்கள் வாலியிலிருந்து உங்கள் சகோதரருடைய வாலியில் தண்ணீர் நிரப்புவது தர்மம்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٥٦– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ مَشَي فِيْ حَاجَةِ اَخِيْهِ كَانَ خَيْرًا لَهُ مِنْ اِعْتِكَافِهِ عَشْرَ سِنِيْنَ، وَمَنْ اِعْتَكَفَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللهِ جَعَلَ اللهُ بَيْنَهُ وَبَيْنَ النّارِ ثَلاَثَ خَنَادِقَ، كُلُّ خَنْدَقٍ اَبْعَدُ مَابَيْنَ الْخَافِقَيْنِ.
رواه الطبراني في الاوسط واسناده جيد مجمع الزوائد:٨/٣٥١
156.”யாரேனும் ஒருவர் தன் சகோதரரின் தேவைக்காக (உதவிட) நடந்து செல்வது பத்து ஆண்டுகள் பள்ளியில் தங்கி (இஃதிகாஃப்) இருப்பதைவிடச் சிறந்தது. ஒருவர் அல்லாஹுதஆலாவின் திருப் பொருத்தத்திற்காக ஒரு நாள் இஃதிகாஃப் இருந்தால், அவருக்கும், நரகத்திற்கும் இடையே மூன்று அகழிகளை அல்லாஹுதஆலா தடையாக ஏற்படுத்தி விடுகிறான். ஒவ்வொரு அகழியும் வானம், பூமிக்கிடையே உள்ள தூரத்தைவிட அதிக விசாலமனது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٥٧– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَاَبِيْ طَلْحَةَ بْنِ سَهْلِ نِ اْلاَنْصَارِيِّ ؓ يَقُوْلاَنِ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا مِنِ امْرِيءٍ يَخْذُلُ اِمْرَءًا مُسْلِمًا فِيْ مَوْضِعٍ يُنْتَهَكُ فِيْهِ حُرْمَتُهِ وَيُنْتَقَصُ فِيْهِ مِنْ عِرْضِهِ اِلاَّ خَذَلَهُ اللهُ فِيْ مَوْطِنٍ يُحِبُّ فِيْهِ نُصْرَتَهُ، ومَا مِنِ امْرِيءٍ يَنْصُرُ مُسْلِمًا فِيْ مَوْضِعٍ يُنْتَقَصُ فِيْهِ مِنْ عِرْضِهِ وَيُنْتَهَكُ فِيْهِ مِنْ حُرْمَتِهِ اِلاَّ نَصَرَهُ اللهُ فِيْ مَوْطِنٍ يُحِبُّ نُصْرَتَهُ.
رواه ابوداؤد باب الرجل يذب عن عرض اخيه رقم:٤٨٨٤
157.”ஒரு முஸ்லிமுடைய மானம் பறிக்கப்படும் போது, அவருடைய மரியாதைக்குப் பங்கம் வரும் போது எவர் உதவி செய்யாமலிருந்து விடுவாரோ, அவருக்கு அல்லாஹுதஆலாவின் உதவி தேவைப்படும் போது அல்லாஹுதஆலா அவரைத் தன் உதவியைவிட்டும் தடுத்து விடுகின்றான். மேலும், ஒரு முஸ்லிமுடைய மானம் பறிக்கப்படும் போது, அவருடைய மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் போது எவர் உதவுகிறாரோ, அவருக்கு அல்லாஹுதஆலாவின் உதவி தேவைப்படும் போது அல்லாஹுதஆலா அவருக்கு உதவுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ், ஹஜ்ரத் அபூதல்ஹதுப்னு ஸஹ்ல் அன்ஸாரி (ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٥٨– عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ لاَيَهْتَمُّ بِاَمْرِ الْمُسْلِمِيْنَ فلَيْسَ مِنْهُمْ، وَمَنْ لَمْ يُصْبِحْ وَيُمْسِ نَاصِحًا لِلّهِ وَلِرَسُوْلِهِ وَلِكِتَابِهِ وَلِاِمَامِهِ وَلِعَامَّةِ الْمُسْلِمِيْنَ فَلَيْسَ مِنْهُمْ.
رواه الطبراني من رواية عبد الله بن جعفر الترغيب:٢ /٥٧٧
158.”எவர் முஸ்லிம்களின் காரியங்களில் கவனம் செலுத்தாமலும், அவைகளைப் பற்றிச் சிந்திக்காமலும் இருக்கிறாரோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல. மேலும், எவர் காலை, மாலை அல்லாஹுதஆலாவுடன், அவனது ரஸூலுல்லாஹி (ஸல்) உடன், அவனது வேதத்துடன், முஸ்லிம்களின் தலைவர் மற்றும் பொது (மக்கள்) முஸ்லிம்களுடன் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லையோ, மேலும் (எவர் இரவு, பகல் ஏதாவது நேரத்தில் மனத் தூய்மையுடனும் அவர்களுக்கு உதவி, ஒத்தாசை செய்யவில்லையோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபதுப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
١٥٩– عَنْ سَالِمٍ عَنْ اَبِيْهِ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ كَانَ فِيْ حَاجَةِ اَخِيْهِ كَانَ اللهُ فِيْ حَاجَتِهِ.
(وهو جزء من الحديث) رواه ابوداؤد باب المؤاخاة رقم: ٤٨٩٣
159.”எவர் தமது சகோதரனுடைய தேவையை நிறைவேற்றுவாரோ, அவருடைய தேவையை அல்லாஹுதஆலா நிறைவேற்றி வைப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٦٠– عَنْ اَنَسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلدَّالُّ عَلَي الْخَيْرِ كَفَاعِلِهِ، وَاللهُ يُحِبُّ اِغَاثَةَ اللَّهْفَانِ.
رواه البزار من رواية زياد بن عبد الله النميري وقد وثق وله شواهد الترغيب:١ /١٢٠
160.”நற்செயலுக்கு வழிகாட்டுபவருக்கு, நற்செயல் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும், சிரமப்படுபவருக்கு உதவி செய்வதை அல்லாஹுதஆலா விரும்புகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், தர்ஙீப்)
١٦١– عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُ يَاْلَفُ وَيُؤْلَفُ، وَلاَ خَيْرَ فِيْ مَنْ لاَ يَاْلَفُ وَلاَ يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ اَنْفَعُهُمْ لِلنَّاسِ.
رواه الدار قطني وهو حديث صحيح الجامع الصغير:٢/٦٦١
161.”முஃமின் (விசுவாசி) நேசிப்பார், நேசிக்கப்படுவார், எவர் நேசிக்கவுமில்லை; நேசிக்கப்படவுமில்லையோ அவரில் எந்த நன்மையும் இல்லை. எவர் மக்களுக்கு அதிகம் பலனளிக்கிறாரோ அவரே மக்களில் மிகச் சிறந்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தாரகுத்னீ, ஜாமிஉஸ் ஸஙீர்)
١٦٢– عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: عَلَي كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ، قَالُوْا: فَاِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ، قَالُوْا: فَاِنْ لَمْ يَسْتَطِعْ اَوْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَيُعِيْنُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوْفِ، قَالُوْا: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيَاْمُرْ بِالْخَيْرِ اَوْ قَالَ: بِالْمَعْرُوْفِ، قَالَ: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَاِنَّهُ لَهُ صَدَقَةٌ.
رواه البخاري باب كل معروف صدقة رقم:٦٠٢٢
162.”முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் தர்மம் செய்வது அவசியம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது “அவரிடத்தில் தர்மம் செய்ய எதுமில்லையென்றால் என்ன செய்வது?” என மக்கள் கேட்டார்கள். “அத்தகையவர் தமது கரங்களால் உழைத்துத் தானும் பலனடைந்து தர்மமும் செய்யவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “இதும் அவருக்கு இயலவில்லை யென்றால்”, அல்லது (செய்ய முடிந்தும்) செய்ய வில்லையென்றால்? என மக்கள் கேட்டார்கள் “துன்பத்தில் சிக்குண்ட தேவையுடையோருக்கு உதவி செய்யவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “இதும் செய்யவில்லையென்றால்?” என மக்கள் கேட்டார்கள், “எவருக்கேனும் நல்லதை ஏவவும்” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். “இதும் செய்யவில்லை யென்றால்!” என்று மக்கள் கேட்க “குறைந்த பட்சம் பிறருக்கு சிரமம் கொடுக்காமலாவது இருக்கட்டும், ஏனேனில், பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் அவருக்கு தர்மம் தான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்ற ஹதீஸை ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٦٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ، وَالْمُؤْمِنُ اَخُو الْمُؤْمِنِ، يَكُفُّ عَلَيْهِ ضَيْعَتَهُ وَيَحُوْطُهُ مِنْ وَرَائِهِ.
رواه ابوداؤد باب في النصيحة والحياطة رقم:٤٩١٨
163.”ஒரு முஃமின் மற்றோரு முஃமினுக்கு கண்ணாடி, மேலும், ஒரு முஃமின் மற்றோரு முஃமினுக்குச் சகோதரர், தன் மூலம் அவருக்குத் தீங்கு ஏற்படுவதைத் தடுக்கிறார், மேலும் எல்லாப் பக்கங்களில் இருந்தும் அவரைப் பாதுகாக்கிறார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٦٤– عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اُنْصُرْ اَخَاكَ ظاَلِمًا اَوْ مَظْلُوْمًا، فَقَالَ رَجُلٌ: يَارَسُوْلَ اللهِﷺ اَنْصُرُهُ اِذَا كَانَ مَظْلُوْمًا، اَفَرَاَيْتَ اِذَا كَانَ ظَالِمًا كَيْفَ اَنْصُرُهُ؟ قَالَ: تَحْجُزُهُ اَوْ تَمْنَعُهُ مِنَ الظُّلْمِ، فَاِنَّ ذلِكَ نَصْرُهُ.
رواه البخاري باب يمين الرجل لصاحبه انه اخوه …… رقم:٦٩٥٢
164.”உங்களுடைய முஸ்லிம் சகோதரருக்கு எல்லா நிலையிலும் உதவுங்கள், அவர் அநீதி இழைக்கக்கூடியவராகவோ, அநீதி இழைக்கப்பட்டவராகவோ இருந்தாலும் சரியே!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ், அநீதி இழைக்கப்பட்டவருக்கு நான் உதவுவேன், அநியாயம் செய்பவருக்கு எவ்வாறு உதவுவது?” என்று ஒருவர் கேட்டார், “அநியாயம் செய்வதை விட்டும் அவரைத் தடுங்கள். ஏனேனில், அநியாயம் செய்வதைவிட்டும் அநியாயக்காரரைத் தடுப்பது அவருக்குச் செய்யும் உதவி” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(புகாரி)
١٦٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ: الرَّاحِمُوْنَ يَرْحَمُهُمُ الرَّحْمنُ، ارْحَمُوْا اَهْلَ اْلاَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ.
رواه ابوداؤد باب فِي الرحمة رقم:٤٩٤١
165.”கருணைபுரிபவர்கள் மீது கருணையாளனான “அல்லாஹ்” கருணை புரிவான், நீங்கள் பூமியில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٦٦– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمَجَالِسُ بِالْاَمَانَةِ اِلاَّ ثَلاَثَةَ مَجَالِسَ: سَفْكُ دَمٍ حَرَامٍ، اَوْ فَرْجٌ حَرَامٌ، اَوِ اقْتِطَاعُ مَالٍ بِغَيْرِ حَقٍّ.
رواه ابوداؤد باب في نقل الحديث رقم:٤٨6٩
166.”சபைகளின் அமானிதம் பாதுகாக்கப்படவேண்டும், அவற்றில் பேசப்பட்ட ரகசியங்கள் பாதுகாக்கப்படவேண்டும், மூன்று சபைகளைத் தவிர! (அவை பாதுகாக்கப்படக் கூடியவையல்ல, மாறாக அவற்றைப் பிறரிடம் சொல்லிவிடுவது அவசியமாகும்) 1. அநியாயமாக கொலை செய்வதற்காக பேசிய ரகசியம், 2. விபச்சாரம் பற்றி பேசிய ரகசியம், 3. அநியாயமாகப் பொருள்களை அபகரிப்பதற்காக பேசிய ரகசியம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- ஹதீஸில் இம்மூன்று செயல்கள் உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டுள்ளன, ஏதேனும் ஒரு சபையில் பாவதரமான ரகசியம், அல்லது அநியாயமான ரகசியம் ஆலோசனை நடைபெற்று, அச்சபையில் நீங்களும் பங்கு பெற்றிருந்தால் அந்த ரகசியத்தை ஒருபோதும் மறைக்கக்கூடாது என்பதே ஹதீஸின் கருத்தாகும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
١٦٧– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُ مَنْ اَمِنَهُ النَّاسُ عَلَي دِمَائِهِمْ وَاَمْوَالِهِمْ.
رواه النسائي باب صفة المؤمن رقم:٤٩٩٨
167.”மக்கள் தமது உயிர், பொருள்களின் பாதுகாப்புப் பற்றி எவரை விட்டும் அச்சமற்று இருப்பார்களோ, அவர்தான் (விசுவாசி) முஃமின்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
١٦٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُوْنَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَي اللهُ عَنْهُ.
رواه البخاري باب المسلم من سلم المسلمون …. رقم:١٠
168.”எவருடைய நாவு மற்றும் கையைவிட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரோ அவரே முஸ்லிம், மேலும், அல்லாஹுதஆலா தடுத்த அனைத்துக் காரியங்களையும் விட்டு விடுபவரே முஹாஜிர் (விடுபவர்)” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٦٩– عَنْ اَبِيْ مُوْسَي ؓ قَالَ: قَالُوْا: يَارَسُوْلَ اللهِﷺ أَيُّ اْلاِسْلاَمِ اَفْضَلُ؟ قَالَ: مَنْ سَلِمَ الْمُسْلِمُوْنَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ.
رواه البخاري باب أي الاسلام افضل رقم:١١
169.”யாரஸூலல்லாஹ்! எந்த முஸ்லிமுடைய இஸ்லாம் சிறந்தது?” என ஸஹாபாக்கள் கேட்டனர், “எந்த முஸ்லிமுடைய நாவை விட்டும், கரத்தை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றுள்ளனரோ அவருடைய இஸ்லாம் தான் சிறந்தது!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- யாரையேனும் பரிகசிப்பது, பழிசுமத்துவது, ஏசிப்பேசுவது ஆகியவை நாவால் நோவினை செய்வதில் சாரும், அநியாயமாக அடித்தல், பொருளை அபகரித்தல் போன்ற செயல்கள் கைகளால் நோவினை செய்வதில் சாரும்.
(பத்ஹுல்பாரீ)
١٧٠– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ؓ عَنْ رَسُوْل اللهِ ﷺ: قَالَ: مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَي غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيْرِ الَّذِيْ رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ.
رواه ابوداؤد باب فِي العصبية رقم :٥١١٧
170.”எவன் தன் இனத்தாருக்கு அநியாயமான முறையில் உதவி செய்கிறானோ, அவனுக்கு உதாரணம், கிணற்றில் விழுந்துவிட்ட ஒட்டகத்தை அதன் வாலைப் பிடித்துக் கிணற்றிலிருந்து வெளியேற்றப்படுவதைப் போன்றது” என நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- எவ்வாறு கிணற்றில் விழுந்த ஒட்டகத்தை அதன் வாலைப் பிடித்து வெளியேற்றுவது முடியாத காரியமோ அதேப் போன்று தன் கூட்டத்தாருக்கு அநியாயமான முறையில் உதவி செய்து கண்ணியத்தை அடைந்து கொள்ளமுடியாது.
(மஜ்மஉ பிஹாரில் அன்வார்)
١٧١– عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَيْسَ مِنَّا مَنْ دَعَا اِلَي عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَي عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَي عَصَبِيَّةٍ.
رواه ابوداؤد باب في العصبية رقم:٥١٢١
171.”தன் இனத்தாருக்கு அநியாயமான முறையில் உதவி செய்ய எவன் அழைக்கிறானோ, அவன் நம்மைச் சார்ந்தவனல்ல, தன் இனத்தாருடன் சேர்ந்து கொண்டு அநியாயமான முறையில் (உணர்ச்சி வசப்பட்டு) சண்டையிடுபவன் நம்மைச் சார்ந்தவனல்ல. தன் இனத்தாரைக் காக்க அநியாயமான முறையில் சண்டையிட்டு மரணிப்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுபைரிப்னு முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٧٢– عَنْ فُسَيْلَةَ 7 اَنَّهَا سَمِعَتْ اَبَاهَا يَقُوْلُ: سَاَلْتُ رَسُوْلَ اللهِ ﷺ فَقُلْتُ: يَارَسُوْلَ اللهِﷺ أَمِنَ الْعَصَبِيَّةِ اَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ، قَالَ: لاَ، وَلكِنْ مِنَ الْعَصَبِيَّةِ اَنْ يَنْصُرَ الرَّجُلُ قَوْمَهُ عَلَي الظُّلْمِ.
رواه احمد:٤ /١٠٧
172.”தன் தந்தையார் வாயிலாக ஹஜ்ரத் ஃபுஸைலா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தன் சமூகத்தாரை நேசிப்பது இனவெறியைச் சார்ந்ததா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள், (தன்னுடைய சமூகத்தாரை நேசிப்பது) இனவெறி அல்ல! மாறாக, தன் சமூகத்தார் அநியாயமான முறையில் செயல்படுகிறார்கள் என்று தெரிந்த பின்பும் ஒருவர் தனது சமூகத்தாருக்கு உதவுவதே இனவெறியாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٧٣– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ قَالَ: قِيْلَ لِرَسُوْلِ اللهِ ﷺ: اَيُّ النَّاسِ اَفْضَلُ؟ قَالَ: كُلُّ مَخْمُوْمِ الْقَلْبِ صَدُوْقِ اللِّسَانِ، قَالُوْا: صَدُوْقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُوْمُ الْقَلْبِ؟ قَالَ: هُوَ التَّقِيُّ النَّقِيُّ لاَ اِثْمَ فِيْهِ وَلاَ بَغْيَ وَلاَ غِلَّ وَلاَ حَسَدَ.
رواه ابن ماجه باب الورع والتقوي رقم:٤٢١٦
173.”மனிதர்களில் மிகச்சிறந்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, “மக்மூமான உள்ளமும், உண்மை பேசும் நாவும் உடையவர்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உண்மை பேசும் நாவு உள்ளவரை நாங்கள் அறிவோம். மக்மூமான உள்ளம் என்பதன் பொருள் என்ன?” என்று ஸஹாபாக்கள் (ரலி) வினவியதற்கு, “பேணுதலுள்ள, தூய்மையான, தன் மீது பாவத்தின் அல்லது அநியாயத்தின் எந்தச் சுமையும் இல்லாத, தன் உள்ளத்தில் பிறரைப் பற்றிய கபடம், பொறாமை இல்லாத உள்ளம் உடையவரே மக்மூம் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
தெளிவுரை:- தூய்மையான உள்ளம் உடையவர் என்பது அல்லாஹுதஆலா அல்லாதவற்றின் சிந்தனை, தவறான சிந்தனை, தவறான எண்ணங்கள் ஆகியவற்றை விட்டும் தூய்மையானவர் என்பது பொருளாகும்.
(மளாஹிர்ஹக்)
١٧٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْل اللهِ ﷺ: لاَ يُبَلِّغْنِيْ اَحَدٌ مِنْ اَصْحاَبِيْ عَنْ اَحَدٍ شَيْئًا فَاِنّيْ اُحِبُّ اَنْ اَخْرُجَ اِلَيْكُمْ وَاَنَا سَلِيْمُ الصَّدْرِ.
رواه ابوداودباب في رفع الحديث من المجلس. رقم:٤٨٦٠
174.”என்னுடைய தோழர்களில் யாரும் யாரைப் பற்றியும் எந்தக் குறையையும் என்னிடம் கொண்டுவந்துவிட வேண்டாம். ஏனேனில், என்னுடைய உள்ளம் உங்கள் அனைவரைப் பற்றியும் நல்லெண்ணம் கொண்ட நிலையில் நான் உங்களிடம் வருவதையே விரும்புகிறேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٧٥– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: كُنَّا جُلُوْسًا مَعَ رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: يَطْلُعُ اْلآنَ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ اَهْلِ الْجَنَّةِ، فَطَلَعَ رَجُلٌ مِنَ اْلاَنْصَارِ تَنْطِفُ لِحْيَتَهُ مِنْ وُضُوْئِهِ وَقَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ بِيَدِهِ الشّمَالِ، فَلَمَّا كَانَ الْغَدُ قَالَ النَّبِيُّ ﷺ مِثْلَ ذلِكَ، فَطَلَعَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِاْلاُوْلَي، فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّا لِثُ قَالَ النَّبِيُّ ﷺ مِثْلَ مَقَالَتِهِ اَيْضًا، فَطَلَعَ ذلِكَ الرَّجُلُ مِثْلَ حَالِهِ اْلاُوْلي، فَلَمَّا قَامَ النَّبِيُّ ﷺ تَبِعَهُ عَبْدُ اللهِ بْنِ عَمْرٍو فَقَالَ: اِنَّيْ لاَحَيْتُ اَبِيْ فَاَقْسَمْتُ اَنْ لاَ اَدْخُلَ عَلَيْهِ ثَلاَثًا فَاِنْ رَاَيْتَ اَنْ تُؤْوِيَنِيْ اِلَيْكَ حَتَّي تَمْضِيَ فَعَلْتُ؟ قَالَ: نَعَمْ. قَالَ اَنَسٌ 1: فَكَانَ عَبْدُ اللهِ يُحَدِّثُ اَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ الثَّلاَثَ اللَّيَالِيَ فَلَمْ يَرَهُ يَقُوْمُ مِنَ اللَّيْلِ شَيْئًا غَيْرَ اَنَّهُ اِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَي فِرَاشِهِ ذَكَرَ اللهَ ، وَكَبَّرَ حَتَّي يَقُوْمَ لِصَلاَةِ الْفَجْرِ. قَالَ عَبْدُ اللهِ: غَيْرَ اَنِّيْ لَمْ اَسْمَعْهُ يَقُوْلُ اِلاَّ خَيْرًا فَلَمَّا مَضَتِ الثَّلاَثُ اللَّيَالِيْ، وَكِدْتُ اَنْ اَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ: يَاعَبْدَ اللهِ! لَمْ يَكُنْ بَيْنِيْ وَبَيْنَ اَبِيْ غَضَبٌ وَلاَ هُجْرٌ، وَلكِنِّيْ سَمِعْتُ رَسُوْلَ الله ﷺ يَقُوْلُ لَنَا ثَلاَثَ مَرَّاتٍ: يَطْلُعُ عَلَيْكُمُ اْلآنَ رَجُلٌ مِنْ اَهْلِ الْجَنَّةِ، فَطَلَعْتَ اَنْتَ الثَّلاَثَ الْمَرَّاتِ، فَاَرَدْتُ اَنْ آوِيَ اِلَيْكَ فَاَنْظُرَ مَاعَمَلُكَ؟ فَاَقْتَدِيْ بِكَ، فَلَمْ اَرَكَ عَمِلْتَ كَثِيْرَ عَمَلٍ، فَمَا الَّذِيْ بَلَغَ بِكَ مَا قَالَ رَسُوْلُ اللهِ ﷺ؟ قَالَ: مَا هُوَ اِلاَّ مَارَاَيْتَ، قَالَ: فَلَمَّا وَلَّيْتُ دَعَانِيْ فَقَالَ: مَاهُوَ اِلاَّ مَارَاَيْتَ غَيْرَ اَنِّيْ لاَ اَجِدُ فِيْ نَفْسِيْ لِاَحَدٍ مِنَ الْمُسْلِمِيْنَ غَشًّا، وَلاَ اَحْسِدُ اَحَدًا عَلَي خَيْرٍ اَعْطَاهُ اللهُ اِيّاهُ، فَقَالَ عَبْدُ اللهِ: هذِهِ الَّتِيْ بَلَغَتْ بِكَ وَهِيَ الَّذِيْ لاَ نُطِيْقُ.
رواه احمد والبزار بنحوه ورجال احمد رجال الصحيح مجمع الزوائد:٨/١٥٠
175.ஹஜ்ரத் அனஸ்இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது, “இப்பொழுது உங்களிடம் சுவனவாசியொருவர் வருவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிறிது நேரத்தில் அன்ஸாரி ஸஹாபியொருவர், அவரது தாடியிலிருந்து உளூவுடைய தண்ணீர் சொட்டிய நிலையில் தமது செருப்பை இடது கையில் சுமந்தவாறு வந்தார். இரண்டாம் நாளும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முதல் நாள் கூறியது போன்று கூறினார்கள். பிறகு அதே அன்ஸாரி ஸஹாபி (ரலி) முதல் நாள் வந்த அதே நிலையில் இம்முறையும் வந்தார். மூன்றாம் நாள் மீண்டும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அதே போன்று சொன்னார்கள். அதே அன்ஸாரி ஸஹாபி (ரலி) முதல் நாள் வந்த அதே நிலையில் வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அச்சபையிலிருந்து) எழுந்து சென்றதும், ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அந்த அன்ஸாரியைப் பின்தொடர்ந்து சென்று, “எனது தகப்பனாருடன் எனக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது, அதனால் அவரிடம் மூன்று நாட்களுக்குச் செல்லமாட்டேன் என்று நான் சத்தியம் செய்துள்ளேன், தாங்கள் விரும்பினால் என்னைத் தங்களிடத்தில் மூன்று நாட்கள் தங்க வைத்துக்கொள்ளவும்” என்று கேட்க, அவரும் “சரி” என்று சொல்லிவிட்டார். நான் அவரிடத்தில் மூன்று இரவுகளைக் கழித்தேன், இரவில் எழுந்து வணங்க அவரை நான் பார்க்கவில்லை. ஆனால், இரவில் எப்பொழுது கண்விழித்தாலும், படுக்கையில் புரண்டு படுத்தாலும் அல்லாஹுதஆலாவை திக்ரு செய்வார். “அல்லாஹு அக்பர்” எனக் கூறுவார். இதே நிலையில் பஜ்ருத் தொழ படுக்கையிலிருந்து எழுந்துவிடுவார், அவரிடத்தில் இன்னோரு செயலையும் கண்டேன், அவரிடமிருந்து நல்ல சொற்களைத் தவிர வேறெதையும் நான் கேட்கவில்லை. மூன்று இரவுகள் கழிந்ததும் அவருடைய அமலை மிகச் சாதாரணமானதாகக் கருதினேன், (ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இவரைப் பற்றி இவ்வளவு பெரிய நற்செய்தியைக் கூறி இருக்க, அவரிடம் அப்படி யொன்றும் சிறப்பான செயல் இல்லையே!” என எனக்கு வியப்பாக இருந்தது) அவரிடம் நான், “அல்லாஹ்வின் அடியானே! எனக்கும், எனது தகப்பனாருக்குமிடையே எந்தக் கோபமும் இல்லை, கருத்து வேறுபாடும் இல்லை. “இப்பொழுது உங்களிடம் ஒரு சுவர்க்கவாசி வர இருக்கிறார்” என்று மூன்று முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் (உம்மைப்பற்றி) கூறியதாகக் கேட்டேன். மூன்று முறையும் நீரே வந்தீர். நான் உம்மிடத்தில் வந்து தங்கியிருந்து உமது குறிப்பான அமலைக் கண்டு உம்மைப் பின்பற்ற வேண்டுமென்று நினைத்தேன். நீர் அதிகமான அமல்கள் செய்ய நான் பார்க்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறிய பதவியை நீர் அடைவதற்குக் காரணமான, குறிப்பான அமல் என்ன? (என்று இனி நீர் சொல்லவேண்டும்) இதுதான் உண்மை நிகழ்ச்சி என்றேன். (என்னிடம் அப்படியொன்றும் எந்தக் குறிப்பான அமலும் இல்லை) நீர் பார்த்த செயல்களைத் தவிர வேறு எந்தச் செயல்களும் இல்லை” என்று அந்த அன்ஸாரி ஸஹாபி கூறினார். ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், (இதைக் கேட்ட பின் நான் திரும்பிவிட்டேன்) நான் அவரை விட்டும் திரும்பிச் செல்ல ஆரம்பித்ததும், அவர் என்னை அழைத்து, “நீங்கள் பார்த்தவை தான் என்னுடைய அமல்கள், ஆனால், என்னுடைய வழக்கம் யாதெனில் என் உள்ளத்தில் எந்த முஸ்லிமைப் பற்றியும் கபடம் இல்லை. மேலும் யாருக்காவது அல்லாஹுதஆலா தனிப்பட்ட பாக்கியங்களைக் கொடுத்திருந்தால் அதைப் பார்த்து அவர் மீது நான் பொறாமைப்பட மாட்டேன்” என்று கூறினார். “இந்த வழக்கத்தின் காரணமாகத் தான் நீர் அந்தப் பதவியை அடைந்தீர், இந்த காரியம் எங்களால் செய்ய இயலாத காரியம்” என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த அன்ஸாரி ஸஹாபியுடன் தங்கிய இந்த சம்பவத்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் என ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٧٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وَسَّعَ عَلَي مَكْرُوْبٍ كُرْبَةً فِي الدُّنْيَا وَسَّعَ اللهُ عَلَيْهِ كُرْبَةً فِي اْلآخِرَةِ، وَمَنْ سَتَرَ عَوْرَةَ مُسْلِمٍ فِي الدُّنْيَا سَتَرَ اللهُ عَوْرَتَهُ فِي اْلآخِرَةِ، وَاللهُ فِيْ عَوْنِ الْمَرْءِ مَاكَانَ فِيْ عَوْنِ اَخِيْهِ.
رواه احمد:٢ /٢٧٤
176.”உலகில் துன்பத்தில் சிக்கியவரின் துன்பத்தை யார் நீக்குகிறாரோ, அவருடைய மறுமையின் துன்பத்தை அல்லாஹுதஆலா நீக்கிவைக்கிறான். உலகில் ஒருவர் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைத்தால், மறுமையில் அவருடைய குறையை அல்லாஹுதஆலா மறைத்துவிடுவான். ஒருவன் தன் சகோதரருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹுதஆலாவும் அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٧٧– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: كَانَ رَجُلاَنِ فِيْ بَنِيْ اِسْرَائِيْلَ مُتَوَاخِيَيْنِ، فَكَانَ اَحَدُهُمَا يُذْنِبُ وَاْلآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ، فَكَانَ لاَ يَزَالُ الْمُجْتَهِدُ يَرَي اْلآخَرَ عَلَي الذَّنْبِ فَيَقُوْلُ: اَقْصِرْ، فَوَجَدَهُ يَوْمًا عَلَي ذَنْبٍ فَقَالَ لَهُ: اَقْصِرْ فَقَالَ: خَلِّنِيْ وَرَبِّيْ أَبُعِثْتَ عَلَيَّ رَقِيْبًا؟ فَقَالَ: وَاللهِ! لاَ يَغْفِرُ اللهُ لَكَ اَوْ لاَ يُدْخِلُكَ اللهُ الْجَنَّةَ، فَقُبِضَ اَرْوَاحُهُمَا، فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِيْنَ، فَقَالَ لِهذَا الْمُجْتَهِدِ: أَكُنْتَ بِيْ عَالِمًا اَوْ كُنْتَ عَلَي مَا فِيْ يَدِيْ قَادِرًا؟ وَقَالَ لِلْمُذْنِبِ: اِذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ بِرَحْمَتِيْ، وَقَالَ لِلْآخَرِ: اِذْهَبُوْا بِهِ اِلَي النَّارِ.
رواه ابوداؤد باب في النهي عن البغي رقم:٤٩٠١
177.”பனீ இஸ்ரவேலர்களில் இரண்டு நண்பர்கள் இருந்தனர், அவர்களில் ஒருவர் பாவம் செய்துகொண்டும், மற்றவர் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டும் இருந்தார். அந்தப் பாவம் செய்யும் மனிதர் பாவம் செய்வதை வணக்கசாலி கண்டால், “பாவத்தை விட்டுவிடு” என்பார். ஒரு நாள் அவர் பாவம் செய்து கொண்டிருப்பதைக் கண்ட இவர் “பாவம் செய்வதை விட்டு விடு” என்று சொன்னார், அவர் “என்னை என் இரட்சகனுடன் விட்டுவிடு” (நான் உண்டு; என் இரட்சகன் உண்டு) என்னைக் கண்காணிக்கவா நீ அனுப்பப்பட்டாய்?” என்று பாவம் செய்யும் அம்மனிதர் கேட்டார், (கோபமடைந்த) வணக்கசாலி, “அல்லாஹ் மீது சத்தியமாக! அல்லாஹுதஆலா உன்னை மன்னிக்கமாட்டான்” அல்லது “அல்லாஹுதஆலா உன்னைச் சுவர்க்கத்தில் நுழையவைக்கமாட்டான்” என்று சொன்னார். அதன் பிறகு இருவரும் மரணமடைந்ததும், உயிர்கள் ஒன்று கூடும் (ஆன்மாக்களின் உலகில்) அல்லாஹுதஆலாவின் முன்னிலையில் ஒன்று சேர்ந்தனர். அல்லாஹுதஆலா அந்த வணக்கசாலியிடம், (நான் மன்னிக்கமாட்டேன் என்று) முன்பே உனக்குத் தெரியுமா? அல்லது (அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்று அவனிடம் வாதிட்டாயே! மன்னிப்பது என்பது என் கைவசமிருக்க), நான் அவனை மன்னிப்பதை விட்டும் என்னைத் தடுக்க நீ சக்தி பெற்றுவிட்டாயா?’ என்று கேட்டான். அந்தப் பாவியிடம், “என்னுடைய அருளால் நீ சுவனத்திற்குச் செல்! (காரணம் அவன் அல்லாஹ்வுடைய அருள் மீது நம்பிக்கை கொண்டிருந்தான்) “இந்த வணக்கசாலியை நரகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்று அல்லாஹுதஆலா மலக்குகளுக்கு கட்டளையிட்டான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- துணிந்து பாவம் செய்யலாம் என்பது இந்த ஹதீஸின் கருத்தல்ல, அல்லாஹுதஆலாவின் பேரருளால் தான் அந்தப் பாவி மன்னிக்கப்பட்டான். ஒவ்வொரு பாவியுடனும் இவ்வாறு தான் நடந்து கொள்ளப்பட வேண்டும் என்பது நியதி அல்ல, ஏனேன்றால் பாவத்திற்குத் தண்டனை கொடுக்கப்படுவதுதான் நியதி. பாவங்கள் மற்றும் மார்க்கத்தில் விலக்கப்பட்ட காரியங்களைத் தடுக்கக்கூடாது என்பதும் கருத்தல்ல. குர்ஆனிலும், ஹதீஸிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் தீமைகளைத் தடுக்கவேண்டுமென்ற கட்டளையும், தடுக்காவிட்டால் என்ன நிகழுமென்ற எச்சரிக்கையும் கூறப்பட்டுள்ளன. ஆயினும் வணக்கசாலி தன்னுடைய வணக்கத்தின் மீது மட்டும் நம்பிக்கை கொள்வதோ, பாவத்தில் ஓடுபடுவோர் மீது தாருமாறாக சட்டங்களை திணிப்பதும் அவரை இழிவாக கருதுவதோ கூடாது என்பது மேற்கண்ட ஹதீஸின் கருத்தாகும்.
١٧٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يُبْصِرُ اَحَدُكُمْ الْقَذَاةَ فِيْ عَيْنِ اَخِيْهِ وَيَنْسَي الْجِذْعَ فِيْ عَيْنِهِ.
رواه ابن حبان (ورجاله ثقات): ١٣/٧٣
178.”மனிதனுக்குத் தன் சகோதரனுடைய கண்ணிலுள்ள ஒரு சிறு துரும்பும் தென்பட்டுவிடுகிறது. ஆனால், தன் கண்ணிலுள்ள பெரும் மரத்தை கூடத் மறந்துவிடுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
தெளிவுரை:- “பிறரின் மிகச் சாதாரண குறையும் தென்பட்டுவிடுகிறது, தன்னுடைய பெரும்பெரும் குறைகளும் தனக்குத் தென்படுவதில்லை” என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
١٧٩– عَنْ اَبِيْ رَافِعٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ غَسَلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غَفَرَ اللهُ لَهُ اَرْبَعِيْنَ كَبِيْرَةً، وَمَنْ حَفَرَ لِأَخِيْهِ قَبْرًا حَتَّي يُجِنَّهُ فَكَاَنَّمَا اَسْكَنَهُ مَسْكَنًا حَتَّي يُبْعَثَ.
رواه الطبراني في الكبير ورجاله رجال الصحيح مجمع الزوائد: ٣ /١١٤
179.”எவர் ஒருவர் மரணித்தவரைக் குளிப்பாட்டும் போது மரணித்தவரின் (மர்மஸ்தானங்களையும், அவரது உடம்பில் இருக்கும்) குறைகளை மறைப்பாரோ, அல்லாஹுதஆலா அவருடைய நாற்பது பெரும்பாவங்களை மன்னித்துவிடுவான். எவர் (இறந்த) தன்னுடைய சகோதரனுக்காகக் குழி (கப்ரு) தோண்டி, இறந்தவரை அதில் அடக்கம் செய்வாரோ, (கியாமத் நாளன்று) மீண்டும் எழுப்பப்படும் வரை அவரை ஓரிடத்தில் தங்க வைத்தவரைப் போன்றவராவார்” (கியாமத் நாள் வரை அந்த மனிதருக்குத் தங்க இடம் கொடுத்த கூலி அவருக்குக் கிடைக்கும்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூராஃபிஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٨٠– عَنْ اَبِيْ رَافِعٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ غَسَلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غُفِرَ لَهُ اَرْبَعِيْنَ مَرَّةً، وَمَنْ كَفَّنَ مَيِّتًا كَسَاهُ اللهُ مِنَ السُّنْدُسِ وَاِسْتَبْرَقِ الْجَنَّةِ.
(الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط مسلم ووافقه الذهبي:١/٣٥٤
180.”எவர் மரணித்தவரைக் குளிப்பாட்டும் போது (இறந்தவரின் மர்மஸ்தானத்தையும், மரணித்தவரின் உடலில் இருக்கும்) குறைகளை மறைப்பாரோ அவருக்கு நாற்பது முறை பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. எவர் இறந்தவருக்கு கஃபன் அணிவிப்பாரோ, அவருக்கு அல்லாஹுதஆலா சுவனத்தின் மெல்லிய, (தங்க இழை) மின்னுகின்ற பட்டாடை அணிவிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூராபிஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٨١– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ: اَنَّ رَجُلاً زَارَ اَخًا لَهُ فِيْ قَرْيَةٍ اُخْرَي، فَاَرْصَدَ اللهُ لَهُ عَلَي مَدْرَجَتِهِ مَلَكًا، فَلَمَّا اَتَي عَلَيْهِ قَالَ: اَيْنَ تُرِيْدُ؟ قَالَ: اُرِيْدُ اَخًا لِيْ فِيْ هذِهِ الْقَرْيَةِ، قَالَ: هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا؟ قَالَ: لاَ، غَيْرَ اَنِّيْ اَحْبَبْتُهُ فِي اللهِ ، قَالَ: فَاِنِّيْ رَسُوْلُ اللهِ اِلَيْكَ بِاَنَّ اللهَ قَدْ اَحَبَّكَ كَمَا اَحْبَبْتَهُ فِيْهِ.
رواه مسلم باب فضل الحب في الله تعالي رقم:٦٥٤٩
181.”ஒருவர் தன்னுடைய (முஸ்லிம்) சகோதரரைச் சந்திக்க மற்றோர் ஊருக்குச் சென்றார், அல்லாஹுதஆலா அவர் செல்லும் பாதையில் ஒரு மலக்கை அமரச் செய்தான், அம்மனிதர் அந்த மலக்குக்கு சமீபமாக சென்றதும் “நீர் எங்கு செல்கிறீர்?’ என மலக்கு கேட்க, “நான் இந்த ஊரிலுள்ள என்னுடைய ஒரு சகோதரரைச் சந்திக்கச் செல்கிறேன்‘ என்று அம்மனிதர் கூறினார்.”அவர் உமக்குக் கொடுக்க வேண்டியதை எதையேனும் வாங்கச் செல்கிறீரா?’ என மலக்கு வினவ “இல்லை‘! நான் அல்லாஹுதஆலாவுக்காக அவரை நேசிக்கும் காரணத்தினால் தான் அங்கு செல்கிறேன்” என அவர் பதிலளித்தார், “எவ்வாறு நீர் அல்லாஹுதஆலாவுக்காக அந்தச் சகோதரரை நேசிக்கிறீரோ அவ்வாறே அல்லாஹுதஆலாவும் உம்மை நேசிக்கிறான் என்பதைச் சொல்ல என்னை உம்மிடம் அல்லாஹுதஆலா அனுப்பி வைத்தான்” என்று அந்த மலக்கு கூறினார் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٨٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: مَنْ سَرَّهُ اَنْ يَجِدَ طَعْمَ اْلاِيْمَانِ فَلْيُحِبَّ الْمَرْءَ لاَيُحِبُّهُ اِلاَّ لِلّهِ .
رواه احمد والبزار ورجاله ثقات مجمع الزوائد:١/ ٢٦٨
182.”எவர் ஈமானின் சுவையை சுவைக்க விரும்புகிறாரோ அவர் அல்லாஹுதஆலாவின் பொருத்தம் மற்றும் திருப்திக்காக வேண்டி மட்டும், பிற (முஸ்லிமை) நேசிக்கவும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٨٣– عَنْ عَبْدِ اللهِ يَعْنِي ابْنَ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنَ اْلاِيْمَانِ اَنْ يُحِبَّ الرَّجُلُ رَجُلاً لاَ يُحِبُّهُ اِلاَّ لِلّهِ مِنْ غَيْرِ مَالٍ اَعْطَاهُ فَذلِكَ اْلاِيْمَانُ.
رواه الطبراني في الاوسط ورجاله ثقات مجمع الزوائد:١٠ /٤٨٥
183.”அல்லாஹ்வின் பொருத்தத்துக்காக மட்டும் ஒருவர் மற்றவரை நேசிப்பது ஈமானுடைய அடையாளங்களில் ஒன்று. மற்றவர் உலகச் செல்வங்களை அவருக்குக் கொடுக்காவிட்டாலும் சரியே!. அல்லாஹுதஆலாவுக்காக மட்டுமே நேசங்கொள்வது பூரணமான ஈமான் ஆகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٨٤– عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا تَحَابَّ رَجُلاَنِ فِي اللهِ تَعَالَي اِلاَّ كَانَ اَفْضَلُهُمَا اَشَدَّ حُبًّا لِصَاحِبِهِ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم١ يخرجاه ووافقه الذهبي:٤/١٧١
184.”அல்லாஹுதஆலாவின் பொருத்தம், மற்றும் திருப்திக்காக ஒருவர் மற்றவருடன் நேசம் கொண்டு, அவ்விருவரில், எவர் தமது நண்பரிடம் அதிகம் நேசத்தை வெளிப்படுத்துகிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٨٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ اَحَبَّ رَجُلاً لِلّهِ فَقَالَ: اِنِّيْ اُحِبُّكَ لِلّهِ فَدَخَلاَ جَمِيْعَا نِ الْجَنَّةَ، فَكَانَ الَّذِيْ اَحَبَّ اَرْفَعَ مَنْزِلَةً مِنَ اْلآخَرِ، وَاَحَقَّ بِالَّذِيْ اَحَبَّ لِلّهِ.
رواه البزار باسناد حسن الترغيب:٤ /١٧
185.”ஒருவர் அல்லாஹுதஆலாவின் பொருத்தம், மற்றும் திருப்திக்காக மற்றவருடன் அன்பு கொண்டு, “நான் அல்லாஹுதஆலாவுக்காக உம்மை நேசிக்கிறேன்” என்று கூறித் தம் நேசத்தை வெளிப்படுத்தினால் பிறகு அவ்விருவரும் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டால், எவர் நேசங்கொண்டாரோ அவர் மற்றவரைவிட உயர்ந்த பதவியில் இருப்பார். மேலும் அவரே அந்தப் பதவிக்கு அதிகம் தகுதி பெற்றவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், தர்ஙீப்)
١٨٦– عَنْ اَبِيْ الدَّرْدَاءِ ؓ يَرْفَعُهُ قَالَ: مَا مِنْ رَجُلَيْنِ تَحَابَّا فِي اللهِ بِظَهْرِ الْغَيْبِ اِلاَّ كَانَ اَحَبُّهُمَا اِلَي اللهِ اَشَدَّهُمَا حُبًّا لِصَاحِبِهِ.
رواه الطبراني في الاوسط ورجاله رجال الصحيح غير المعافي بن سليمان وهو ثقة مجمع الزوائد:١٠ /٤٨٩
186.”எவரேனும் இருவரில் ஒருவர் மற்றவர் இல்லாத போது அல்லாஹுதஆலாவின் பொருத்தம், மற்றும் திருப்தியையே நோக்கமாகக் கொண்டு நேசங்கொண்டால், அவ்விருவரில் எவர் தமது நண்பரிடத்தில் அதிக நேசம் கொள்கிறாரோ, அவரே அல்லாஹுதஆலாவிடம் அதிக நேசத்திற்குரியவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٨٧–عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَثَلُ الْمُؤْمِنِيْنَ فِيْ تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ، اِذَا اشْتَكَي مِنْهُ عُضْوٌ تَدَاعَي لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّي.
رواه مسلم باب تراحم المؤمنين….رقم:٦٥٨٦
187.”விசுவாசிகள் ஒருவர் பிறரை நேசிப்பதில், பிறர் மீது இரக்கங்காட்டுவதில், பிறர் மீது பாசத்துடனும் இரக்கங்காட்டுவதில் உடலுக்கு ஒப்பாவர். அவ்வுடலின் ஓர் உறுப்பு நோயுற்றாலும், அந்நோயினால் உடலின் ஏனைய உறுப்புகளும் காய்ச்சலிலும், தூக்கமின்மையிலும் அவ்வுறுப்புடன் கூட்டாகி விடுகின்றன” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٨٨– عَنْ مُعَاذٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَلْمُتَحَابُّوْنَ فِي اللهِ فِيْ ظِلِّ الْعَرْشِ يَوْمَ لاَ ظِلَّ اِلاَّ ظِلُّهُ، يَغْبِطُهُمْ بِمَكَانِهِمُ النَّبِيُّوْنَ وَالشُّهَدَاءُ.
رواه ابن حبان (واسناده جيد):٢ /٣٣٨
188.”அல்லாஹுதஆலாவின் பொருத்தம் மற்றும் திருப்திக்காக ஒருவருக்கொருவர் நேசம் கொள்பவர்கள் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத கியாமத் நாளன்று அர்ஷுடைய நிழலில் இருப்பர், அவர்களுடைய தனிப்பட்ட பதவியையும் தகுதியையும் பார்த்து நபிமார்களும் ஷஹீத் (உயிர்த் தியாகி) களும் பொறாமைப்படுவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
١٨٩– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَي: حُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَحَابِّيْنَ فِيَّ، وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَنَاصِحِيْنَ فِيَّ،وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَزَاوِرِيْنَ فِيَّ، وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَبَاذِلِيْنَ فِيَّ، وَهُمْ عَلي مَنَابِرٍ مِّنْ نُوْرٍ يَغْبِطُهُمُ النَّبِيُّوْنَ وَالصِّدِّيْقُوْنَ بِمَكَانِهِمْ.
رواه ابن حبان (واسناده جيد): ٢ /٣٣٨، وعند احمد:٥ /٢٣٩, عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ 1: وَحُقَّتْ مَحَبَّتِيْ لِلْمُتَوَاصِلِيْنَ فِيَّ. وعند مالك ص:٧٢٣، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ: وَجَبَتْ مَحَبَّتِيْ لِلْمُتَجَالِسِيْنَ فِيَّ. وعند الطبراني في الثلاثة عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ 1: وَقَدْ حُقَّتْ مَحَبَّتِيْ لِلَّذِيْنَ يَتَصَادَقُوْنَ مِنْ اَجْلِيْ. مجمع الزوائد:١٠/٤٩٥
189.”எனக்காக ஒருவருக்கொருவர் நேசம் கொள்வோர் மீது நான் நேசம் கொள்வது கடமையாகிவிட்டது, எனக்காக ஒருவர் பிறரின் நன்மையை நாடுபவர் மீது நான் நேசம் கொள்வது கடமையாகிவிட்டது. எனக்காக ஒருவர் பிறரை சந்திப்பவர்களை நான் நேசிப்பது என் மீது கடமையாகிவிட்டது. எனக்காக ஒருவொருக்கொருவர் செலவு செய்பவர்களை நான் நேசிப்பது என் மீது கடமையாகிவிட்டது. அவர்கள் ஒளியால் ஆன மேடைகள் மீது அமர்ந்திருப்பார்கள் அவர்களுக்கே சொந்தமான இந்தப் பதவியைப் பார்த்து நபிமார்கள், உண்மையாளர்கள் பொறாமைப்படுவார்கள்” என்று அல்லாஹுதஆலா கூறியதாக நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் உபாதத்திப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
“எனக்காக ஒருவருக்கொருவருடன் தொடர்பு கொள்பவர்களை நான் நேசிப்பது என் மீது கடமையாகிவிட்டது” என்று ஹஜ்ரத் உபாததுப்னு ஸாமித் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது
(முஸ்னத் அஹ்மத்)
“எனக்காக ஒருவருக்கொருவராய் சேர்ந்து அமர்பவர்கள் மீது நான் நேசம் கொள்வது கடமையாகிவிட்டது” என்று ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில் வந்துள்ளது.
(முத்தா இமாம் மாலிக்)
“எனக்காக ஒருவர் மற்றவருடன் நட்பு கொள்பவர்களை நான் நேசிப்பது என் மீது கடமையாகிவிட்டது” என்று ஹஜ்ரத் அம்ருப்னு அபஸா (ரலி) அவர்களின் வேறோரு அறிவிப்பில் வந்துள்ளது.
(தபரானி, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٩٠– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: قَالَ اللهُ : اَلْمُتَحَابُّوْنَ فِيْ جَلاَلِيْ لَهُمْ مَنَابِرُ مِنْ نُوْرٍ يَغْبِطُهُمُ النَّبِيُّوْنَ وَالشُّهَدَاءُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في الحب في الله رقم:٢٣٩٠
190.”என்னுடைய மகத்துவம் மற்றும், கம்பீரத்திற்காகத் தமக்குள் நேசமும், அன்பும் வைப்பவர்களுக்கு ஒளியினால் ஆன மேடைகள் உண்டு. அவர்களைப் பார்த்து நபிமார்களும், ஷஹீது(வீரத்தியாகி)களும் பொறாமைப்படுவார்கள்” என்ற அல்லாஹுதஆலாவின் ஹதீஸ் குத்ஸியை நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٩١– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِنَّ لِلّهِ جُلَسَاءَ يَوْمَ الْقِيَامَةِ عَنْ يَمِيْنِ الْعَرْشِ، وَكِلْتَا يَدَيِ اللهِ يَمِيْنٌ، عَلَي مَنَابِرَ مِنْ نُوْرٍ وُجُوْهُهُمْ مِنْ نُوْرٍ، لَيْسُوْا بِاَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ وَلاَ صِدِّيْقِيْنَ قِيْلَ: يَارَسُوْلَ اللهِﷺ مَنْ هُمْ؟ قَالَ: هُمُ الْمُتَحَابُّوْنَ بِجَلاَلِ اللهِ تَبَارَكَ وَتَعَالَي.
رواه الطبراني ورجاله وثقوا مجمع الزوائد:١٠/٤٩١
191.”நிச்சயமாக கியாமத் நாளன்று அல்லாஹுதஆலாவின் நல்லடியார்களில் சிலர் அர்ஷுக்கு வலப் பக்கமாக அல்லாஹுதஆலாவுக்குச் சமீபமாக அமரக் கூடியவர்கள் இருப்பார்கள். அல்லாஹுதஆலாவின் இருகரங்களும் வலக்கரமே! அவர்கள் பிரகாசமான மேடைகளில் அமர்ந்திருப்பார்கள். அவர்களின் முகங்கள் ஒளி பொருந்தியதாக இருக்கும். அவர்கள் நபிமார்களும் அல்லர், ஷஹீது (தீனுக்காக உயிரை அர்ப்பணித்தவர்)களும் அல்லர், சித்தீகீன்களும் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ், அப்படியானால் அவர்கள் யார்?” எனக் கேட்கப்பட்டது, “அவர்கள் அல்லாஹுதஆலாவின் கண்ணியம், மற்றும் கம்பீரத்திற்காக ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٩٢– عَنْ اَبِيْ مَالِكِ نِ اْلاَشْعَرِيِّ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: ياَيُّهَا النَّاسُ اسْمَعُوْا وَاعْقِلُوْا، وَاعْلَمُوْا اَنَّ لِلّهِ عِبَادًا لَيْسُوْا بِاَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ، يَغْبِطُهُمُ اْلاَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ عَلَي مَجَالِسِهِمْ وَقُرْبِهِمْ مِنَ اللهِ، فَجَاءَ رَجُلٌ مِنَ اْلاَعْرَابِ مِنْ قَاصِيَةِ النَّاسِ وَاَلْوَي بِيَدِهِ اِلَي نَبِيِّ اللهِ ﷺ فَقَالَ: يَانَبِيَّ اللهِﷺ نَاسٌ مِنَ النَّاسِ لَيْسُوْا بِاَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ، يَغْبِطُهُمُ اْلاَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ عَلَي مَجَالِسِهِمْ وَقُرْبِهِمْ مِنَ اللهِ، اِنْعَتْهُمْ لَنَا يَعْنِيْ: صِفْهُمْ لَنَا، فَسُرَّ وَجْهُ رَسُوْلِ اللهِ ﷺ لِسُؤَالِ اْلاَعْرَابِيِّ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: هُمْ نَاسٌ مِنْ اَفْنَاءِ النَّاسِ وَنَوَازِعِ الْقَبَائِلِ، لَمْ تَصِلْ بَيْنَهُمْ اَرْحَامٌ مُتَقَارِبَةٌ، تَحَابُّوْا فِي اللهِ وَتَصَافُوْا، يَضَعُ اللهُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ مَنَابِرَ مِنْ نُوْرٍ فَيُجْلِسُهُمْ عَلَيْهَا، فَيَجْعَلُ وُجُوْهَهُمْ نُوْرًا وَثِيَابَهُمْ نُوْرًا، يَفْزَعُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَفْزَعُوْنَ، وَهُمْ اَوْلِيَاءُ اللهِ الَّذِيْنَ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَهُمْ يَحْزَنُوْنَ.
رواه احمد:٥/٣٤٣
192.”மனிதர்களே, கேட்டுக் கொள்ளுங்கள்! விளங்கிக்கொள்ளுங்கள்! அறிந்து கொள்ளுங்கள்! நபிமார்களோ, ஷஹீதுகளோ (வீரத்தியாகி) அல்லாத அல்லாஹுதஆலாவின் சில நல்லடியார்கள், அவர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட பதவியில் இருப்பர், அல்லாஹுதஆலாவுக்கும் அவர்களுக்குமுள்ள தனிப்பட்ட நெருக்கம், தொடர்பு ஆகியவற்றின் காரணமாக நபிமார்களும், ஷஹீதுகளும் அவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மதீனா முனவ்வராவுக்கு வெகு தொலைவில் வசிக்கின்ற கிராமவாசி யொருவர் அச்சமயம் மதீனா வந்திருந்தார், (மக்களின் கவனத்தைத் திருப்பத்) தமது கரத்தை நபி (ஸல்) அவர்களின் பக்கம் சைகை காட்டி “யாரஸூலல்லாஹ், நபிமார்களுமல்லாத, ஷஹீதுமல்லாத சிலர் அவர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட பதவியைப் பெற்று, அல்லாஹுதஆலாவுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட நெருக்கம், தொடர்பின் காரணமாக நபிமார்களும் ஷஹீது(உயிர்த்தியாகி)களும் பொறாமை கொள்ளும், அத்தகைய மனிதர்களுடைய தன்மைகளை விவரியுங்கள் எனக் கேட்டார். அவர் கேட்ட கேள்வியால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறிகள் தென்படலாயின. “அவர்கள் பொதுமக்களில் முன்பின் அறிமுகமில்லாத நபர்களும், பல்வேறு கோத்திரத்தைச் சார்ந்தவர்களுமாவார்கள். அவர்களுக்கிடையில் எந்த ஒரு நெருங்கிய உறவு முறையும் இருக்காது, அவர்கள் அல்லாஹுதஆலாவின் பொருத்தம், திருப்திக்காக ஒருவர் மற்றவருடன் தூய்மையான, அன்பு கொண்டவர்கள். கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா அவர்களுக்காக ஒளியினாலான மேடைகளை அமைத்து அவற்றின் மீது அவர்களை அமரவைப்பான். பிறகு அல்லாஹுதஆலா அவர்களது முகங்களையும், ஆடைகளையும் ஒளிமயமாக ஆக்கிவிடுவான். கியாமத் நாளில் பொதுமக்கள் திடுக்கத்தில் இருக்கும்போது, இவர்களுக்கு எந்தவிதத் திடுக்கமும் இருக்காது, அவர்கள் அல்லாஹுதஆலாவின் நேசர்களாவார்கள், அவர்களுக்கு பயம் இருக்காது, கவலைப்படவும் மாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٩٣– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ كَيْفَ تَقُوْلُ فِيْ رَجُلٍ اَحَبَّ قَوْمًا وَلَمْ يَلْحَقْ بِهِمْ؟ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ.
رواه البخاري باب علامة الحب في الله …رقم:٦١٦٩
193.ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்களின் சமுகத்துக்கு ஒருவர் வந்து, “யாரஸூலல்லாஹ், ஒருவர் ஒரு கூட்டத்தாரை நேசிக்கிறார், ஆனால், அவரால் அவர்களுடன் இணைய முடியவில்லை! (அமலாலும், நன்மையாலும் முழுமையாக அவர்களைப் பின்பற்ற இயலவில்லை), அவரைப் பற்றித் தாங்களின் அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்க, “யார் எவரை நேசிக்கிறாரோ அவர் அவருடன் இருப்பார், மறுமையில் அவர்களுடன் சேர்க்கப்பட்டுவிடுவார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(புகாரி)
١٩٤– عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَااَحَبَّ عَبْدٌ عَبْدًا لِلّهِ اِلاَّ اَكْرَمَ رَبَّهُ .
رواه احمد:٥ /٢٥٩
194.”எந்த அடியார் மற்றோர் அடியாரை அல்லாஹுதஆலாவுக்காக நேசிக்கிறாரோ, அவர் தன்னுடைய மகத்துவமிக்க இரட்சகனைக் கண்ணியப்படுத்திவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٩٥– عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَفْضَلُ اْلاَعْمَالِ الْحُبُّ فِي اللهِ وَالْبُغْضُ فِي اللهِ.
رواه ابوداؤد باب مجانبة اهل الاهواء وبغضهم رقم:٤٥٩٩
195.”செயல்களில் மிகச் சிறந்தது, அல்லாஹுதஆலாவுக்காக நேசிப்பது, அல்லாஹுதஆலாவுக்காக பகைமை கொள்வது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٩٦– عَنْ اَنَسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ عَبْدٍ اَتَي اَخَاهُ يَزُوْرُهُ فِي اللهِ اِلاَّ نَادَاهُ مَلَكٌ مِنَ السَّمَاءِ: اَنْ طِبْتَ، وَطَابَتْ لَكَ الْجَنَّةُ، وَاِلاَّ قَالَ اللهُ فِيْ مَلَكُوْتِ عَرْشِهِ: عَبْدِيْ زَارَ فِيَّ، وَعَلَيَّ قِرَاهُ، فَلَمْ يَرْضَ لَهُ بِثَوَابٍ دُوْنَ الْجَنَّةِ.
(الحديث) رواه البزار وابو يعلي باسناد جيد الترغيب: ٣ /٣٦٤
196.”யாரேனும் ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்திற்காகத் தனது (முஸ்லிம்) சகோதரரைச் சந்திக்கச் சென்றால், வானிலிருந்து மலக்கு ஒருவர் அவரை அழைத்து, “நீங்கள் மகிழ்ச்சிகரமாக வாழுங்கள், உமக்கு மகிழ்ச்சிகரமான சொர்க்கம் உண்டு” என்று கூறுகிறார். மேலும், அல்லாஹுதஆலா அர்ஷுடைய மலக்குகளிடம், “என்னுடைய அடியான் எனக்காகச் சந்தித்துள்ளான். அவனை விருந்துபசரிப்பது எனது பொறுப்பு” எனக் கூறுகிறான். அல்லாஹுதஆலா அவருக்குச் சொர்க்கத்தைவிடக் குறைவான கூலி கொடுக்கமாட்டான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், அபூயஃலா, தர்ஙீப்)
١٩٧– عَنْ زَيْدِ بْنِ اَرْقَمَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِذَا وَعَدَ الرَّجُلُ اَخَاهُ وَمِنْ نِيَّتِهِ اَنْ يَفِيَ فَلَمْ يَفِ وَلَمْ يَجِيءْ لِلْمِيْعَادِ فَلاَ اِثْمَ عَلَيْهِ.
رواه ابوداؤد باب فِي العدة رقم:٤٩٩٥
197.”ஒருவர் தன் சகோதரனுக்கு ஏதேனும் வாக்களித்து, அவருக்கு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால், அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. வாக்களித்த நேரத்திற்கு அவரால் வர இயலவில்லை என்றால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸைதுப்னு அர்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٩٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن باب ماجاء ان المستشار مؤتمن رقم:٢٨٢٢
198.”ஆலோசனை கேட்கப்படுபவர் நம்பிக்கைகுரியவர் ஆவார்” (எனவே, எவரிடத்திலாவது ஏதேனும் ஒரு காரியம் பற்றி ஆலோசனை கேட்கப்பட்டால் அந்தக் காரியத்தில் ஆலோசனை கேட்கப்படுபவர் ஆலோசனை கேட்பவரின் ரகசியத்தை பகிரங்கப்படுத்தக்கூடாது. ஆலோசனை கேட்பவருக்கு அதிகம் பலன் தரக் கூடியதையே ஆலோசனை கூறவேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٩٩– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِذَا حَدَّثَ الرَّجُلُ بِالْحَدِيْثِ ثُمَّ الْتَفَتَ فَهِيَ اَمَانَةٌ.
رواه ابوداؤد باب في نقل الحديث رقم:٤٨٦٨
199.”ஒருவர் மற்றவரிடம் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டால் அந்தச் செய்தி பாதுகாக்கப்பட வேண்டியது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- ஒருவர் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைச் சொல்லி, இதை ரகசியமாக வைக்க வேண்டும் என்று அவர் உங்களிடம் கூறவில்லை. ஆயினும், அவரது செய்கையைப் பார்த்து அவருடைய இந்தச் செய்தி பகிரங்கப் படுத்தக்கூடாதது என்பதை இவர் உணர்ந்தால், உதாரணமாக அவர் பேசிக்கொண்டே அங்குமிங்கும் பார்ப்பதை உணர்ந்தால், அந்தச் செய்தி அமானிதமாகும். அமானிதத்தை(உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளை)ப் பாதுகாப்பதைப் போல அதை நீங்கள் பாதுகாத்து வரவேண்டும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٢٠٠– عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ اَنَّهُ قَالَ: اِنَّ اَعْظَمَ الذُّنُوْبِ عِنْدَ اللهِ اَنْ يَلْقَاهُ بِهَا عَبْدٌ بَعْدَ الْكَبَائِرِ الَّتِيْ نَهَي اللهُ عَنْهَا اَنْ يَمُوْتَ رَجُلٌ وَعَلَيْهِ دَيْنٌ لاَ يَدَعُ لَهُ قَضَاءً.
رواه ابوداؤد باب في التشديد في الدين رقم:٣٣٤٢
200.”அல்லாஹுதஆலா விலக்கிய (ஷிர்க், விபச்சாரம் போன்ற) பெரும் பாவங்களுக்குப் பிறகு, மிகப்பெரும் பாவம், ஒரு மனிதனுக்குக் கடன் இருந்து அதை நிறைவேற்றுவதற்குரிய எந்த ஏற்பாடும் செய்யாத நிலையில் மரணித்து விடுவதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٠١– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّي يُقْضَي عَنْهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء ان نفس المؤمن…. رقم:١٠٧٩
201.”முஃமினுடைய உயிர் அவரது கடன் நிறைவேற்றப்படும் வரை (நல்லோர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுகபோகமான, அருள்நிறைந்த பதவியை அடைய முடியாமல்) தொங்கிக் கொண்டிருக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٠٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: يُغْفَرُ لِلشَّهِيْدِ كُلُّ ذَنْبٍ اِلاَّ الدَّيْنَ.
رواه مسلم باب من قتل في سبيل الله…رقم:٤٨٨٣
202.”கடனைத்தவிர ஷஹீதின் (உயிர்த்தியாகியின்) அனைத்துப்பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
٢٠٣– عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَحْشٍ ؓ قَالَ: كُنَّا جُلُوْسًا بِفِنَاءِ الْمَسْجِدِ حَيْثُ تُوْضَعُ الْجَنَائِزُ وَرَسُوْلُ اللهِ ﷺ جَالِسٌ بَيْنَ ظَهْرَيْنَا، فَرَفَعَ رَسُوْلُ اللهِ ﷺ بَصَرَهُ قِبَلَ السَّمَاءِ، فَنَظَرَ ثُمَ طَاْطَاَ بَصَرَهُ، وَوَضَعَ يَدَهُ عَلَي جَبْهَتِهِ، ثُمَّ قَالَ: سُبْحَانَ اللهِ! سُبْحَانَ اللهِ! مَاذَا نَزَلَ مِنَ التَّشْدِيْدِ! قَالَ: فَسَكَتْنَا يَوْمَنَا وَلَيْلَتَنَا فَلَمْ نَرَهَا خَيْرًا حَتَّي اَصْبَحْنَا، قَالَ مُحَمَّدٌ: فَسَاَلْتُ رَسُوْلَ اللهِ ﷺ مَا التَّشْدِيْدُ الَّذِيْ نَزَلَ؟ قَالَ: فِي الدَّيْنِ، وَالَّذِيْ نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ اَنَّ رَجُلاً قُتِلَ فِيْ سَبِيْلِ اللهِ ثُمَّ عَاشَ ثُمَّ قُتِلَ فِيْ سَبِيْلِ اللهِ ثُمَّ عَاشَ وَعَلَيْهِ دَيْنٌ مَادَخَلَ الْجَنَّةَ حَتَّي يُقْضَي دَيْنُهُ.
رواه احمد:٥ /٢٨٩
203.ஹஜ்ரத் முஹம்மதுப்னு அப்துல்லாஹிப்னு ஜஹஷ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ஒரு நாள் நாங்கள் பள்ளியில் ஜனாஸா கொண்டுவந்து வைக்கப்படும் திறந்த வெளியில் ஒன்று கூடி இருந்தோம். எங்களுக்கு மத்தியில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள், நபி (ஸல்) அவர்கள் தமது பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தி எதையோ பார்த்தார்கள். பிறகு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். (ஒருவித கவலை கொண்டவர்களாக) தமது கரத்தைத் தமது புனித நெற்றி மீது வைத்துக்கொண்டு” சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இறங்கியுள்ளது!” எனக் கூறினார்கள், ஹஜ்ரத் முஹம்மதிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “அன்றைய பகலும், அன்றைய இரவும் மறுநாள் காலை வரையும் நாங்கள் யாவரும் மௌனமாக இருந்தோம். இந்த மௌனத்தை நாங்கள் நல்லதெனக் கருதவில்லை, (மறுநாள் காலை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கியுள்ளது?” என கேட்டேன். “கடுமையான எச்சரிக்கை கடன் காரணமாக இறங்கியுள்ளது, முஹம்மதின் உயிர் எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! யாரேனும் ஒரு மனிதர் அல்லாஹுதஆலாவின் பாதையில் (உயிர் துறந்து) ஷஹீத் ஆகி, பிறகு உயிர் பெற்று, பிறகு (உயிர் துறந்து) ஷஹீதாகி, பிறகு உயிர்பெற்றாலும் அவர் மீது கடன் இருக்க, அவரது கடன் நிறைவேற்றப்படும் வரை அவர் சுவர்க்கத்தில் நுழைய முடியாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٠٤– عَنْ سَلَمَةَ بْنِ اْلاَكْوَعِ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ اُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا فَقَالَ: هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟ فَقَالُوْا: لاَ، فَصَلَّي عَلَيْهِ، ثُمّ اُتِيَ بِجَنَازَةٍ اُخْرَي فَقَالَ: هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟ قَالُوْا: نَعَمْ، قَالَ: فَصَلُّوْا عَلَي صَاحِبِكُمْ، قَالَ اَبُوْ قَتَادَةَ: عَلَيَّ دَيْنُهُ يَارَسُوْلَ اللهِﷺ فَصَلَّي عَلَيْهِ.
رواه البخاري باب من تكفل عن ميت …رقم:٢٢٩٥
204.ஹஜ்ரத் ஸலமத்திப்னு அக்வஃ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்களிடம் தொழ வைக்கப்படுவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது, “இறந்துவிட்ட இந்த மனிதரின் மீது கடன் இருக்கிறதா?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் விசாரிக்க, “இல்லை” என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்த அந்த மனிதருக்குத் தொழுகை நடத்தினார்கள், பிறகு இன்னோரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. “இறந்த இந்த மனிதர் மீது கடன் உள்ளதா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் விசாரிக்க, “ஆம்” என்று ஸஹாபாக்கள் (ரலி) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், “நீங்களே உங்கள் நண்பருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துங்கள்” எனக் கூறினார்கள். ஹஜ்ரத் அபூகதாதா (ரலி) அவர்கள், “யாரஸூலல்லாஹ், இவரது கடனை நிறைவேற்றும் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கிறேன்” எனக் கூற நபி (ஸல்) அவர்கள் அவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.
(புகாரி)
٢٠٥– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ اَخَذَ اَمْوَالَ النَّاسِ يُرِيْدُ اَدَاءَهَا اَدَّي اللهُ عَنْهُ، وَمَنْ اَخَذَ يُرِيْدُ اِتْلاَفَهَا اَتْلَفَهُ اللهُ.
رواه البخاري باب من اخذ اموال الناس… رقم:٢٣٨٧
205.”எவர் மக்களிடமிருந்து (கடனாக) பணம் வாங்கி அதைத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென எண்ணம் கொண்டிருக்கிறாரோ, அல்லாஹுதஆலா அவர் சார்பாகக் கடனை நிறைவேற்றிவிடுவான். மேலும், எவர் மக்களிடமிருந்து (கடனாகப்) பொருள் பெற்று அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் கொள்ளவில்லையோ, அல்லாஹுதஆலா அவரது பொருளை வீணாக்கிவிடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- “அவர் சார்பாக அல்லாஹுதஆலா நிறைவேற்றுவான்” என்பதன் பொருள், கடனை நிறைவேற்ற அல்லாஹுதஆலா அவருக்கு உதவி புரிவான், தன் வாழ்நாளில் அதை நிறைவேற்ற முடியவில்லை யென்றால், மறுமையில் அவர் சார்பாக நிறைவேற்றுவான் என்பதாம்”. “அவரது பொருளை அல்லாஹுதஆலா வீணாக்கிவிடுவான்” என்பதன் பொருள், இத்தீய எண்ணத்தினால் அவருக்கு உயிர் அல்லது பொருள் சேதம் ஏற்படும் என்பதாம்.
(பத்ஹுல்பாரீ)
٢٠٦– عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: كَانَ اللهُ مَعَ الدَّائِنِ حَتَّي يَقْضِيَ دَيْنَهُ مَالَمْ يَكُنْ فِيْمَا يَكْرَهُ اللهُ.
رواه ابن ماجه باب من ادّي دينا وهو ينوي قضاءه رقم:٢٤٠٩
206.”அல்லாஹ்வுக்கு வெறுப்பான காரியங்களுக்காக கடன் வாங்காமல் இருக்கும் காலமெல்லாம், கடன்பட்டவர் கடனை நிறைவேற்றும் வரை, அல்லாஹுதஆலா கடன்பட்டவருடன் இருக்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு ஜஃபர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٢٠٧– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: اِسْتَقْرَضَ رَسُوْلُ اللهِ ﷺ سِنًّا، فَاَعْطَي سِنًّا فَوْقَهُ، وَقَالَ: خِيَارُكُمْ مَحَاسِنُكُمْ قَضَاءً.
رواه مسلم باب جواز اقتراض الحيوان …رقم:٤١١١
207.”ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒட்டகமொன்றைக் கடனாக வாங்கியிருந்தார்கள். பிறகு கடனைத்திருப்பிக் கொடுக்கும்போது, அதை விட அதிக வயதுள்ள ஒட்டகத்தைக் கொடுத்தார்கள். “கடனை நிறைவேற்றும் போது அழகிய முறையில் கடனை நிறைவேற்றுபவரே உங்களில் சிறந்தவர்” எனக் கூறினார்கள்.
(முஸ்லிம்)
٢٠٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ اَبِيْ رَبِيْعَةَ ؓ قَالَ: اِسْتَقْرَضَ مِنِّي النَّبِيُّ ﷺ اَرْبَعِيْنَ اَلْفًا، فَجَاءَهُ مَالٌ فَدَفَعَهُ اِلَيَّ وَقَالَ: بَارَكَ اللهُ لَكَ فِيْ اَهْلِكَ وَمالِكَ، اِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَاْلاَدَاءُ.
رواه النسائي باب الاستقراض رقم:٤٦٨٧
208.”நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்து நாற்பதாயிரம் கடன் வாங்கினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களுக்குப் பொருள் வந்ததும், கடனை எனக்குத் திருப்பிக் கொடுத்து, “அல்லாஹுதஆலா உமது குடும்பத்திலும், செல்வத்திலும் பரக்கத் செய்வானாக! கடனுக்குரிய பகரம், அதைத் திருப்பிக் கொடுப்பதும் (கடன் கொடுத்தவரைப்) புகழ்ந்து அவருக்கு நன்றி சொல்வதுமாகும்” எனக் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அபூ ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٢٠٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَوْ كَانَ لِيْ مِثْلُ اُحُدٍ ذَهَبًا مَا يَسُرُّنِيْ اَنْ لاَ يَمُرَّ عَلَيَّ ثَلاَثٌ وَعِنْدِيْ مِنْهُ شَيْءٌ اِلاَّشَيْءٌ اُرْصِدُهُ لِدَيْنٍ.
رواه البخاري باب اداء الديون …رقم:٢٣٨٩
209.”என்னிடத்தில் உஹுது மலையளவு தங்கம் இருந்து, அதில் மூன்று நாட்கள் வரை சிறிதளவு பொருளும் என்னிடம் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. எனினும், கடனை அடைப்பதற்குத் தேவையான சொற்ப தொகையைத் தவிர” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢١٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ لاَ يَشْكُرِ النَّاسَ لاَ يَشْكُرِ اللهَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في الشكر …رقم:١٩٥٤
210.”எவர் மக்களுக்கு நன்றி செலுத்தமாட்டாரோ, அவர் அல்லாஹுதஆலா வுக்கும் நன்றி செலுத்தமாட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- தனக்கு உபகாரம் செய்தவருக்கு எவர் நன்றி செலுத்த மாட்டாரோ அவர் நன்றி மறக்கும் இந்தப் பழக்கத்தின் காரணமாக அல்லாஹுதஆலாவுக்கும் நன்றி செலுத்தாதவராகிவிடுவார்‘ என்று இந்த ஹதீஸுக்கு விரிவுரையாளர்களில் சிலர் விளக்கம் கூறுகின்றனர்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٢١١– عَنْ اُسَامَةَ بْنِ زَيْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ صُنِعَ اِلَيْهِ مَعْرُوْفٌ فَقَالَ لِفَاعِلِهِ: جَزَاكَ اللهُ خَيْرًا، فَقَدْ اَبْلَغَ فِي الثَّناَءِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن جيد غريب. باب ماجاء في الثناء بالمعروف. رقم:٢٠٣٥
211.”ஒருவருக்கு உபகாரம் செய்யப்பட்டு, அவர் அந்த உபகாரிக்கு, (جَزَاكَ اللهُ خَيْرًا) (அல்லாஹுதஆலா உமக்கு இதற்குச் சிறந்த பிரதிபலனைக் கொடுப் பானாக!) என்று கூறினால், (இந்த துஆவின் மூலம்) முழுமையாகப் புகழ்ந்து உபகாரிக்கு நன்றி செலுத்திவிட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸாமத்துப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- இந்த வார்த்தைகளால் துஆச் செய்வதன் மூலம், “நான் இதற்குரிய பகரம் தருவதற்கு இயலாதவனாக இருக்கிறேன். ஆகவே, உமக்கு இந்த உபகாரத்திற்குரிய சிறந்த பகரத்தைக் கொடுக்கவேண்டுமென அல்லாஹுதஆலாவிடம் துஆச் செய்கிறேன்‘ என்று சொல்வதற்குச் சமமாகும், இந்த துஆவின் வார்த்தைகளின் மூலம் உபகாரம் செய்தவரைப் புகழும் வாசகமும் உண்டு.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٢١٢– عَنْ اَنَسٍ ؓ قَالَ: لَمَّا قَدِمَ النَّبِيُّ ﷺ الْمَدِيْنَةَ اَتَاهُ الْمُهَاجِرُوْنَ فَقَالُوا: يَارَسُوْلَ اللهِﷺ مَارَاَيْنَا قَوْمًا اَبْذَلَ مِنْ كَثِيْرٍ وَلاَ اَحْسَنَ مُوَاسَاةً مِنْ قَلِيْلٍ مِنْ قَوْمٍ نَزَلْنَا بَيْنَ اَظْهُرِهِمْ، لَقَدْ كَفَوْنَا الْمُؤْنَةَ وَاَشْرَكُوْنَا فِي الْمَهْنَإِ، حَتَّي لَقَدْ خِفْنَا اَنْ يَذْهَبُوْا بِالْاَجْرِ كُلِّهِ، فَقَالَ النَّبِيُّ ﷺ: لاَ، مَادَعَوْتُمُ اللهَ لَهُمْ وَاَثْنَيْتُمْ عَلَيْهِمْ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب باب ثناء المهاجرين ….رقم:٢٤٨٧
212.ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து (குடிபெயர்ந்து) மதீனா முனவ்வராவுக்கு வந்த சமயம், (ஒருநாள்) முஹாஜிர் (மக்காவாசி)கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “யாரஸூலல்லாஹ், நாம் யாரிடத்தில் வந்துள்ளோமோ (மதினாவாசிகள் அன்ஸாரிகள்) இவர்களைப் போன்று வேறு யாரையும் நாம் பார்த்ததில்லை. அவர்கள் செல்வ நிலையில் இருந்தால் நன்றாகச் செலவழிக்கிறார்கள். வசதிக்குறைவு ஏற்பட்டாலும் எங்களுக்கு ஆறுதலும், உதவியும் செய்கிறார்கள். உழைப்பிலும், சிரமத்திலும், எங்களுடைய பங்கையும் அவர்களே எடுத்துக்கொண்டு, லாபத்தில் எங்களைக் கூட்டாக்கிக் கொள்கிறார்கள். (தம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கும் அவர்களின் இந்த சாதாரண செயலால்) எல்லா நன்மைகளும், கூலியும் அவர்களுக்கே போய்விடுமோ, (மறுமையில் நாங்கள் நன்மை இழந்து விடுவோமோ) என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று கூறினார்கள். “இல்லை! அப்படியில்லை! இந்த உபகாரத்திற்குப் பகரமாக நீங்கள் அவர்களுக்கு “துஆ” செய்து, அவர்களைப் புகழ்ந்து வரும் வரை. (அவர்களுக்கு நன்றி சொல்லி வரும் வரை), அவ்வாறு ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(திர்மிதீ)
٢١٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلاَ يَرُدُّهُ فَاِنَّهُ خَفِيْفُ الْمَحْمِلِ طَيِّبُ الرِّيْحِ.
رواه مسلم باب استعمال المسك… رقم: ٥٨٨٣
213.”எவருக்கேனும் நறுமணமுள்ள பூ அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம், ஏனேனில், இது மிகவும் சாதாரணமான, விலை குறைவான பொருளாகும். மேலும், இது மிகவும் நறுமணம் கமழக்கூடியது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- பூ போன்ற விலை மதிப்பற்ற பொருளை வாங்க மறுத்தால் அதைக் கொடுப்பவர், “என்னுடைய பொருள் விலை மதிப்பற்ற காரணத்தால் தான் இவர் வாங்க மறுக்கிறார்” என்று அவரது உள்ளம் புண்படக் கூடும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٢١٤– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: ثَلاَثٌ لاَ تُرَدُّ: اَلْوَسَائِدُ وَالدُّهْنُ وَاللَّبَنُ (الدُّهْنُ يَعْنِيْ بِهِ الطِّيْبَ).
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في كراهية رد الطيب رقم:٢٧٩٠
214.”தலையணை, நறுமணம், பால் ஆகிய மூன்று பொருட்களை மறுக்கக் கூடாது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢١٥– عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ شَفَعَ لٍاَخِيْهِ شَفَاعَةً فَاَهْدَي لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا فَقَدْ اَتَي بَابًا عَظِيْمًا مِنْ اَبْوَابِ الرِّبَا.
رواه ابوداؤد باب في الهدية لقضاء الحاجة رقم:٣٥٤١
215.”எவர், தன் முஸ்லிம் சகோதரருக்கு ஏதேனும் காரியத்திற்காக) பரிந்துரைத்து, பிறகு அவர் பரிந்து பேசியவருக்கு (பரிந்து பேசியதற்குப் பகரமாக) ஏதேனும் ஒரு பொருளை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டால் அவர் வட்டியின் வாசல்களுள் பெரியதொரு ஒன்றில் வாசலுக்குள் நுழைந்துவிட்டார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢١٦– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَامِنْ مُسْلِمٍ لَهُ اِبْنَتَانِ فَيُحْسِنُ اِلَيْهِمَا مَا صَحِبَتَاهُ اَوْ صَحِبَهُمَا، اِلاَّ اَدْخَلَتَاهُ الْجَنَّةَ.
رواه ابن حبان (واسناده ضعيف وهو حديث حسن بشواهده):٧ /٢٠٧
216.”எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு இரு பெண் மக்கள் இருந்து இவர் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவ்விருவரும் இவரிடத்தில் இருக்கும் வரை, அல்லது இவர் அவர்களிடத்தில் இருக்கும் வரை அவ்விரு பெண் மக்களும் இவரை நிச்சயம் சொர்க்கத்தில் நுழையவைப்பார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٢١٧– عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ عَالَ جَارِيَتَيْنِ دَخَلْتُ اَنَا وَهُوَ الْجَنَّةَ كَهَاتَيْنِ، وَاَشَارَ بِاِصْبَعَيْهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في النفقة علي البنات والاخوات رقم:١٩١٤
217.”எவர் இரு பெண் மக்களை வளர்த்துப் பரிபாலித்து வந்தாரோ, அவரும் நானும் இணைந்து இந்த இரு விரல்களைப் போல் சுவர்க்கத்தில் நுழைவோம்” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தமது இரு விரல்களைச் சுட்டிக் காட்டினார்கள் என ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢١٨– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ يَلِيْ مِنْ هذِهِ الْبَنَاتِ شَيْئًا، فَاَحْسَنَ اِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ.
رواه البخاري باب رحمة الولد … رقم:٥٩٩٥
218.”எவர் தம் பெண் மக்களின் ஏதேனுமொரு காரியத்துக்குப் பொறுப் பேற்று, மேலும் அவர்களை நன்முறையில் பராமரித்தால் அவர்கள், அவரை நரக நெருப்பை விட்டும் தடுக்கும் திரையாகிவிடுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢١٩– عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَتْ لَهُ ثَلاَثُ بَنَاتٍ اَوْ ثَلاَثُ اَخَوَاتٍ اَوْ اِبْنَتاَنِ اَوْ اُخْتَانِ فَاَحْسَنَ صُحْبَتَهُنَّ وَاتَّقَي اللهَ فِيْهِنَّ فَلَهُ الْجَنَّةُ.
رواه الترمذي باب ماجاء في النفقة علي البنات والاخوات رقم:١٩١٦
219.”எவருக்கு மூன்று பெண் மக்கள் அல்லது மூன்று சகோதரிகள் அல்லது இரண்டு பெண் மக்கள் அல்லது இரண்டு சகோதரிகள் இருந்து, அவர்களை நன்முறையில் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளில் அல்லாஹுதஆலாவைப் பயந்து நடந்தால், அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٢٠– عَنْ اَيُّوْبَ بْنِ مُوْسَيؒ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ 1 اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ اَفْضَلَ مِنَ اَدَبٍ حَسَنٍ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في ادب الولد رقم:١٩٥٢
220.”ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விடச் சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தன் பாட்டனார் வாயிலாகத் தம் தந்தை கூறியதாக ஹஜ்ரத் அய்யூப் (ரஹ்) அறிவிக்கிறார்கள்”.
(திர்மிதீ)
٢٢١– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وُلِدَتْ لَهُ اُنْثَي فَلَمْ يَئِدْهَا وَلَمْ يُهِنْهَا وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ يَعْنِي الذَّكَرَ عَلَيْهَا اَدْخَلَهُ اللهُ بِهَا الْجَنَّةَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٤ /١٧٧
221.”எவருக்குப் பெண் குழந்தை பிறந்து அவர் அதை (அறியாமைக் காலத்தில் செய்தது போல்) உயிருடன் புதைக்காமல், அதை இழிவாகக் கருதாமல் (அவர்களுடன் பழகுவதில்) பெண் பிள்ளையைவிட ஆண் பிள்ளைக்கு முன்னுரிமை தராமல், (மகனுடன் நடந்து கொள்வது போலவே மகளுடனும்) நடந்தார் என்றால், மகளுடன் நடந்து கொண்ட முறைக்குப் பிரதிபலனாக அல்லாஹுதஆலா அவரைச் சுவர்க்கத்தில் நுழைய வைப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٢٢– عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ ؓ اَنَّ اَبَاهُ اَتَي بِهِ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: اِنِّيْ نَحَلْتُ اِبْنِيْ هذَا غُلاَمًا، فَقَالَ: اَكُلَّ وَلدِكَ نَحَلْتَ مِثْلَهُ؟ قَالَ: لاَ، قَالَ: فَاَرْجِعْهُ.
رواه البخاري باب الهبة للولد رقم:٢٥٨٦
222.ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “என்னுடைய தந்தை என்னை அழைத்துக் கொண்டு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்குச் சென்றார்கள், “என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறே உமது மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்தீரா?” என அவரிடம் கேட்க அவர், “இல்லை” என்றார், “அடிமையைத் திரும்ப பெற்றுக் கொள்ளும்!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குவதிலும் சரிசமமாக நடந்து கொள்ள வேண்டுமென்று இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகிறது.
٢٢٣– عَنْ اَبِيْ سَعِيْدٍ وَابْنِ عَبَّاسٍ ؓ قَالَا: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنْ اِسْمَهُ وَاَدَبَهُ، فَاِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ، فَاِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَاَصَابَ اِثْمًا فَاِنَّمَا اِثْمُهُ عَلَي اَبِيْهِ.
رواه البيهقي في شعب الايمان:٦ /٤٠١
223.”எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் அவருக்கு மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னும் (தனது அலட்சியப்போக்கின் காரணமாக) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்தப் பாவம் அவனுடைய தந்தையைச் சேரும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் மற்றும் ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٢٢٤– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: جَاءَ اَعْرَابِيٌّ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: تُقَبِّلُوْنَ الصِّبْيَانَ؟ فَمَا نُقَبِّلُهُمْ، فَقَالَ النَّبِيُّ ﷺ: اَوَ اَمْلِكُ لَكَ اَنْ نَزَعَ اللهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ.
رواه البخاري باب رحمة الولد وتقبيله ومعانقته رقم: ٥٩٩٨
224.ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “உங்கள் சிறுவர்களை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” எனக் கூறினார். “அல்லாஹுதஆலா உம்முடைய உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால் அதற்கு நான் என்ன செய்வது?” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(புகாரி)
٢٢٥– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: تَهَادَوْا فَاِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ، وَلاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب في حث النبي ﷺ علي الهدية رقم:٢١٣٠
225.”ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கிக் கொள்ளுங்கள்!, அன்பளிப்பு உள்ளத்தின் கறையை நீக்கிவிடும். எந்த அண்டை வீட்டுப் பெண்ணும், தன் பக்கத்து வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பைக் கேவலமாகக் கருத வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே!” (அதேபோல் அன்பளிப்புக் கொடுக்கும் பெண்ணும் இந்த அன்பளிப்பைச் சாதாரணமாகக் கருத வேண்டாம்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٢٦– عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَحْقِرَنَّ اَحَدُكُمْ شَيْئًا مِنَ الْمَعْرُوْفِ، وَاِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ اَخَاهُ بِوَجْهٍ طَلِيْقٍ، وَاِنِ اشْتَرَيْتَ لَحْمًا اَوْ طَبَخْتَ قِدْرًا فَاكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في اكثار ماء المرقة رقم: ١٨٣٣
226.”உங்களில் எவரும் ஒரு சிறிய நன்மையையும் சாதாரணமாகக் கருத வேண்டாம், எவ்வித நன்மையும் செய்ய இயலவில்லை என்றால், தன் சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதும் நன்மைதான். சமைக்க நீங்கள் மாமிசம் வாங்கினாலோ அல்லது ஏதேனும் குழம்பு சமைத்தாலோ அதன் அளவை அதிகப்படுத்துங்கள், அதில் சிறிதளவு உங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٢٧– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لاَ يَاْمَنُ جَارُهُ بَوَائِقَهُ.
رواه مسلم باب بيان تحريم ايذاء الجار رقم:١٧٢
227.”எவருடைய தீங்கைவிட்டும் அவரது அண்டைவீட்டார் அச்சமற்று இருக்கமாட்டாரோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
٢٢٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، قَالُوا: يَارَسُوْلَ اللهِﷺ وَمَا حَقُّ الْجَارِ؟ قَالَ: اِنْ سَأَلَكَ فَاَعْطِهِ، وَاِنِ اسْتَغَاثَكَ فَاَغِثْهُ، وَاِنِ اسْتَقْرَضَكَ فَاَقْرِضْهُ، وَاِنْ دَعَاكَ فَاَجِبْهُ، وَاِنْ مَرِضَ فَعُدْهُ، وَاِنْ مَاتَ فَشَيِّعْهُ، وَاِنْ اَصَابَتْهُ مُصِيْبَةٌ فَعَزِّهِ، وَلاَ تُؤْذِهِ بِقُتَارِ قِدْرِكَ اِلاَّ اَنْ تَغْرِفَ لَهُ مِنْهَا، وَلاَ تُرْفِعْ عَلَيْهِ الْبِنَاءَ لِتَسُدَّ عَلَيْهِ الرِّيْحَ اِلاَّ بِاِذْنِهِ.
رواه الاصبهاني في كتاب الترغيب:١/٤٨٠. وقال في الحاشية: عزاه المنذري في الترغيب: ٣ /٣٥٧, للمصنف بعد ان رواه من طرق اخري، ثم قال المنذري: لايخفي ان كثرة هذه الطرق تكسبه قوة والله اعلم.
228.”எவர் அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தவும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! அண்டை வீட்டாருக்குச் செலுத்தவேண்டிய கடமைகள் யாவை?” என ஸஹாபாக்கள் (ரலி) வினவினர். “உங்களிடம் எதையேனும் அவர் கேட்டால் அவருக்கு அதைக் கொடுங்கள், உங்களிடம் அவர் உதவி வேண்டினால் அவருக்கு உதவி செய்யுங்கள், தேவைக்காக அவர் கடன் கேட்டால் அவருக்குக் கடன் கொடுங்கள், அவர் உங்களை விருந்துக்கு அழைத்தால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், அவர் நோயுற்றால் அவரை நலன் விசாரியுங்கள், அவர் இறந்துவிட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்லுங்கள், அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவருக்கு ஆறுதல் கூறுங்கள், தனது வீட்டில் சமைத்த இறைச்சியின் வாசனையின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் (ஏனேனில், வறுமையின் காரணமாக அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்பு கிடைக்காமலிருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து சிறிதளவு அவரது வீட்டுக்கு அனுப்புங்கள். அவரது அனுமதியின்றி உங்கள் வீட்டை உயர்த்தி அவரது வீட்டிற்குக் காற்று வராதபடிக் கட்டாதீர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தர்ஙீப்)
٢٢٩– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَيْسَ المُؤْمِنُ الَّذِيْ يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ.
رواه الطبراني وابو يعلي ورجاله ثقات مجمع الزوائد:٨ /٣٠6
229.”அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் வயிறு நிரம்பச் சாப்பிடுபவர் (முழுமையான) முஃமின் அல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித், பூயஃலா)
٢٣٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَجُلٌ: يَارَسُوْلَ اللهِﷺ اِنَّ فُلاَنَةً يُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلاَتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ اَنَّهَا تُؤْذِيْ جِيْرَانَهَا بِلِسَانِهَا، قَالَ: هِيَ فِي النَّارِ، قَالَ: يَارَسُوْلَ اللهِﷺ فَاِنَّ فُلاَنَةً يُذْكَرُ مِنْ قِلَّةِ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلاَتِهَا وَاِنَّهَا تَصَدَّقُ بِالْاَتْوَارِ مِنَ اْلاِقِطِ وَلاَ تُؤْذِيْ جِيْرَانَهَا بِلِسَانِهَا، قَالَ: هِيَ فِي الْجَنَّةِ.
رواه احمد:٢ /٤٠
230.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யாரஸூலல்லாஹ், இன்ன பெண் தொழுகை, நோன்பு, ஸதகா போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்யக்கூடியவள். (ஆயினும்) தன் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை கொடுக்கிறாள்” (ஏசிப் பேசுகிறாள்) என்று அவளைப் பற்றிப் பிரபல்யமாக பேசப்படுகிறது‘ என ஒருவர் வந்து சொன்னார், “அவள் நரகத்தில் இருப்பாள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “யாரஸூலல்லாஹ், இன்ன பெண் நபிலான தொழுகை, நோன்பு, ஸதகா போன்றவைகளைக் குறைவாகச் செய்கிறாள், பால் கட்டியின் ஒரு சில துண்டுகள் தான் தர்மம் செய்கிறார். ஆனால், தன் அண்டை வீட்டாரைத் தன் நாவால் துன்புறுத்தமாட்டாள்” என அவளைப் பற்றிப் பிரபல்யமாகப் பேசப்படுகிறது‘ என்று அந்த ஸஹாபி கூறியதற்கு “அவள் சுவனத்தில் இருப்பாள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٣١– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ يَاْخُذُ عَنِّيْ هؤُلاَءِ الْكَلِمَاتِ فَيَعْمَلُ بِهِنَّ اَوْ يُعَلِّمُ مَنْ يَعْمَلُ بِهِنَّ؟ فَقَالَ اَبُوْ هُرَيْرَةَ ؓ: قُلْتُ: اَنَا يَارَسُوْلَ اللهِﷺ فَاَخَذَ بِيَدِيْ فَعَدَّ خَمْسًا وَقَالَ: اِتَّقِ الْمَحَارِمَ تَكُنْ اَعْبَدَ النَّاسِ، وَارْضَ بِمَا قَسَمَ اللهُ لَكَ تَكُنْ اَغْنَي النَّاسِ، وَاَحْسِنْ اِلَي جَارِكَ تَكُنْ مُؤْمِنًا، وَاَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا، وَلاَ تُكْثِرِ الضَّحِكَ فَاِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيْتُ الْقَلْبَ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب من اتقي المحارم فهو اعبد الناس رقم:٢٣٠٥
231.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “பின்வரும் வார்த்தைகளை என்னிடமிருந்து கற்றுக்கொண்டு பிறகு அதன்படிச் செயல்படுபவர் அல்லது அதன்படிச் செயல்படும்படி மக்களுக்குக் கற்றுக் கொடுப்பவர் யார்?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், “யாரஸூலல்லாஹ்! நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினேன். “நபி (ஸல்) அவர்கள் அன்பாக என்னுடைய கரத்தைத் தமது புனிதமான கரத்துடன் இணைத்தவாறு, கீழ்க்கண்ட ஐந்து காரியங்களை எண்ணிச் சொன்னார்கள், 1. மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியங்ளைத் தவிர்ந்து கொள்க, நீர் எல்லோரையும்விட அதிகம் வணங்கக் கூடியவராகிவிடுவீர், 2. அல்லாஹுதஆலா உமக்குக் கொடுத்தவற்றைப் பொருந்திக்கொள்க, நீர் மக்களில் மிகப்பெரும் சீமானாகி விடுவீர், 3. உமது அண்டை வீட்டாரோடு நல்ல முறையில் நடந்து கொள்ளும், நீர் முஃமினாகிவிடுவீர், 4. நீர் உமக்கு எதை விரும்புகிறீரோ அதையே பிறருக்கும் விரும்புக, நீர் (முழுமையான) முஸ்லிமாகிவிடுவீர், 5. நீர் அதிகமாகச் சிரிக்காதீர், ஏனேனில், அதிகமாகச் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்”.
(திர்மிதீ)
٢٣٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ ﷺ: يَارَسُوْلَ اللهِﷺ كَيْفَ لِيْ اَنْ اَعْلَمَ اِذَا اَحْسَنْتُ وَاِذَا اَسَاْتُ؟ فَقَالَ النَّبِيُّ ﷺ: اِذَا سَمِعْتَ جِيْرَانَكَ يَقُوْلُوْنَ قَدْ اَحْسَنْتَ فَقَدْ اَحْسَنْتَ، وَاِذَا سَمِعْتَهُمْ يَقُوْلُوْنَ قَدْ اَسَاْتَ فَقَدْ اَسَاْتَ.
رواه الطبراني ورجاله رجال الصحيح مجمع الزوائد:١٠/٤٨٠
232.ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “யாரஸூலல்லாஹ், நான் மற்றவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறேனா அல்லது தீய முறையில் நடந்து கொள்கிறேனா என்பதை எப்படி நான் அறிந்து கொள்வது?” என்று ஒருவர் கேட்டார்.”நீர் நல்ல முறையில் நடந்து கொண்டீர்‘ என்று உமது அண்டைவீட்டார் சொல்லச் செவியுற்றால் நீர் நிச்சயமாக நல்லது செய்தீர்! “நீர் தீய முறையில் நடந்து கொண்டீர் என உமது அண்டைவீட்டார் சொல்லச் செவியுற்றால் நிச்சயமாக நீர் தீயது செய்தீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٣٣– عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ اَبِيْ قُرَادٍ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ تَوَضَّاَ يَوْمًا، فَجَعَلَ اَصْحَابُهُ يَتَمَسَّحُوْنَ بِوَضُوْئِهِ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ ﷺ: مَايَحْمِلُكُمْ عَلَي هذَا؟ قَالُوْا: حُبُّ اللهِ وَرَسُوْلِهِ، فَقَالَ النَّبِيُّ ﷺ: مَنْ سَرَّهُ اَنْ يُحِبَّ اللهَ وَرَسُوْلُهَ اَوْ يُحِبَّهُ اللهُ وَرَسُوْلُهُ فَلْيَصْدُقْ حَدِيْثَهُ اِذَا حَدَّثَ، وَلْيُؤَدِّ اَمَانَتَهُ اِذَا اؤْتُمِنَ، وَلْيُحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَهُ.
رواه البيهقي في شعب الايمان مشكوة المصابيح رقم:٤٩٩٠
233.ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அபீ குராத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நபி (ஸல்) அவர்களுடைய மேனியிலிருந்து கொட்டும் உளூவுடைய நீரைத் தமது முகம் மற்றும் உடலின் மீது தடவிக் கொண்டார்கள். “உங்களை இவ்வாறு செய்யத் தூண்டியது எது?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் உள்ள நேசம் எங்களை இவ்வாறு செய்யத் தூண்டியது” என அவர்கள் கூறினர், “எவர் அல்லாஹுதஆலாவையும், அவனது தூதரையும் நேசிக்க விரும்புகிறாரோ, அல்லது அல்லாஹுதஆலாவும், அவனது தூதரும் தன்னை நேசிக்க வேண்டுமென விரும்புகிறாரோ, அவர் பேசினால் உண்மையே பேசவும், தன்னிடம் அமானிதப் பொருள் வைக்கப்பட்டால் அதை உரிய முறையில் நிறைவேற்றவும். மேலும் தனது அண்டைவீட்டாருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பைஹகீ, மிஷ்காத்)
٢٣٤– عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَازَالَ جِبْرِيْلُؑ يُوْصِيْنِيْ بِالْجَارِ حَتَّي ظَنَنْتُ اَنَّهُ سَيُوَرِّثُهُ.
رواه البخاري باب الوصاءة بالجار رقم:٦٠١٤
234.”ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அண்டைவீட்டாருக்குச் செலுத்த வேண்டிய கடமையைப் பற்றி உபதேசித்தார்கள், (அந்த உபதேசத்தின் மூலம்) அண்டை வீட்டார் சொத்தில் பங்கு பெற உரிமை பெற்று விடுவாரோ என எண்ணலானேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٣٥– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَوَّلُ خَصْمَيْنِ يَوْمَ الْقِيَامَةِ جَارَانِ.
رواه احمد باسناد حسن مجمع الزوائد:١٠/٦٣٢
235.”கியாமத் நாளில் முதன் முதலில் வழக்குத் தொடுப்போர் தமக்குள் சண்டையிட்டுக்கொண்ட இரு அண்டைவீட்டார்களாவர், (அடியார்களின்) உரிமைகள் பற்றிய விவகாரத்தில் (முதலிடம் பெறுவது) இரு அண்டைவீட்டாரைப் பற்றியதாக இருக்கும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்உஸ்ஸவாயித்)
٢٣٦– عَنْ سَعْدٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يُرِيْدُ اَحَدٌ اَهْلَ الْمَدِيْنَةِ بِسُوْءٍ اِلاَّ اَذَابَهُ اللهُ فِي النَّارِ ذَوْبَ الرَّصَاصِ اَوْ ذَوْبَ الْمِلْحِ فِي الْمَاءِ.
رواه مسلم باب فضل المدينة ….رقم:٣٣١٩
236.”எவன் மதீனாவாசிகளுக்கு ஏதேனும் தீங்கிழைக்க நாடுவானோ அவனை ஈயத்தை தீயில் உருக்குவது போல் அல்லது நீரில் உப்பைக் கரைப்பது போல் அல்லாஹுதஆலா அவனை (நரகத்தின்) தீயில் உருக்கி (கரைத்து) விடுவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٣٧– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ اَخَافَ اَهْلَ الْمَدِيْنَةِ فَقَدْ اَخَافَ مَا بَيْنَ جَنْبَيَّ.
رواه احمد ورجاله رجال الصحيح مجمع الزوائد: ٣ /6٥٨
237.”எவன் மதீனாவாசிகளைப் பயமுறுத்துவானோ அவன் நிச்சயமாக என்னைப் பயமுறுத்திவிட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٣٨– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ اَنْ يَمُوْتَ بِالْمَدِيْنَةِ، فَلْيَمُتْ بِالْمَدِيْنَةِ فَاِنِّيْ اَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا.
رواه ابن حبان (واسناده صحيح): ٩/٥٧
238.”உங்களில் யாரேனும் மதீனாவில் மரணிக்க முடிந்தால் அவர் (மதீனாவில் மரணிக்க முயற்சி செய்யவும்) எவர் மதீனாவில் இறந்து, மதீனாவிலேயே அடக்கம் செய்யப்படுவாரோ அவருக்கு நான் பரிந்து பேசுவேன்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
தெளிவுரை:- ஆலிம்கள் எழுதியிருப்பதாவது, பரிந்துரைத்தல் என்பது தனிப்பட்ட குறிப்பான பரிந்துரைத்தலாகும், ஏனேனில், நபி (ஸல்) அவர்களின் பொதுவான பரிந்துரைத்தல் முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டு, முயற்சிப்பது, சக்தி பெறுவது என்பதன் பொருள், அங்கேயே (மதீனாவில்) மரணிக்கும் வரை தங்கிவிடுவதாகும்.
٢٣٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يَصْبِرُ عَلَي لَأْوَاءِ الْمَدِيْنَةِ وَشِدَّتِهَا اَحَدٌ مِنْ اُمَّتِيْ اِلاَّ كُنْتُ لَهُ شَفِيْعًا يَوْمَ الْقِيَامَةِ اَوْ شَهِيْدًا.
رواه مسلم باب الترغيب في سكني المدينة …رقم:٣٣٤٧
239.”என்னுடைய சமுதாயத்தில் எவர் மதீனாவில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக்கொண்டு இங்கு தங்கியிருப்பாரோ, அவருக்கு கியாமத் நாளன்று நான் பரிந்துரைப்பேன்; அல்லது சாட்சியாகிவிடுவேன்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٤٠– عَنْ سَهْلٍ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَنَا وَكَافِلُ الْيَتِيْمِ فِي الْجَنَّةِ هكَذَا، وَاَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطي وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا.
رواه البخاري باب اللعان …رقم:٥٣٠٤
240.”நானும், அனாதையை பராமரிப்பவரும் சுவர்க்கத்தில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம்” என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் தம் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலை காட்டி இரண்டு விரல்களுக் கிடையே சிறிதளவு இடைவெளி விட்டு சுட்டிக் காட்டினார்கள்” என்று ஹஜ்ரத் ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٤١– عَنْ عَمْرِو بْنِ مَالِكِ نِ الْقُشَيْرِيِّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ ضَمَّ يَتِيْمًا بَيْنَ اَبَوَيْنِ مُسْلِمَيْنِ اِلَي طَعَامِهِ وَشَرَابِهِ حَتَّي يُغْنِيَهُ اللهُ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ.
رواه احمد والطبراني وفيه: علي بن زيد وهو حسن الحديث وبقية رجاله رجال الصحيح مجمع الزوائد: ٨/٢٩٤
241.”முஸ்லிமான பெற்றோர்களுக்குப் பிறந்த ஆதரவற்றக் குழந்தையை (தனது தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்ளும் காலம் வரை) உண்ணும் போதும், பருகும் போதும் எவர் தன்னுடன் சேர்த்துக் கொள்வாரோ (தனது பராமரிப்பில் வைத்துக் கொள்வாரோ) அவருக்குச் சுவர்க்கம் கடமையாகிவிட்டது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னுமாலிக் குஷைரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٤٢– عَنْ عَوْفِ بْنِ مَالِكِ نِ اْلاَشْجَعِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَنَا وَامْرَاَةٌ سَفْعَاءُ الْخَدَّيْنِ كَهَاتَيْنِ يَوْمَ الْقِيَامَةِ، وَاَوْمَاَ يَزِيْدُ بِالْوُسْطَي وَالسَّبَابَةِ، اِمْرَاَةٌ آمَتْ مِنْ زَوْجِهَا ذَاتُ مَنْصَبٍ وَجَمَالٍ، حَبَسَتْ نَفْسَهَا عَلَي يَتَامَاهَا حَتَّي بَانُوْا اَوْ مَاتُوْا.
رواه ابوداؤد باب في فضل من عال يتامي رقم :٥١٤٩
242.”ஆதரவற்ற தனது பிள்ளைகளின் பராமரிப்பின் காரணமாக சிரமத்தால் முகம் கறுத்துவிட்ட பெண்ணும், நானும் கியாமத் நாளன்று இவ்வாறு இருப்போம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஜ்ரத் யஸீத் (ரஹ்) இந்த ஹதீஸை அறிவித்த பிறகு ஆட்காட்டி விரல், மற்றும் நடுவிரலை சுட்டிக் காட்டினார். இந்த இரண்டு விரல்களும் எவ்வாறு நெருங்கியிருக்கிறதோ அவ்வாறு கியாமத் நாளன்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் அப்பெண்மணியும் நெருங்கியிருப்பார்கள் என்பதாம், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முகம் கறுத்த பெண்மணி என்பதைப் பற்றி விவரித்தவாறு விளக்கம் கூறினார்கள்: “விதவையான அப்பெண்மணி அழகு சௌந்தர்யமும், மதிப்பும், மரியாதையும் உள்ள பெண்ணாக இருந்தும் தனது அனாதைக் குழந்தைகளின் பராமரிப்பைக் கருதி (அக்குழந்தைகள் பருவமடைந்து தனது தாயாரிடம் தேவை யாகாமல் இருக்கும் வரை அல்லது அவர்கள் மரணிக்கும் வரை) மறுமணம் செய்யாமல் இருந்தாள்”, என்ற இந்த ஹதீஸை ஹஜ்ரத் அவ்ஃபுப்னு மாலிக் அஷ்ஜஈ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٤٣– عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا قَعَدَ يَتِيْمٌ مَعَ قَوْمٍ عَلَي قَصْعَتِهِمْ فَيَقْرُبَ قَصْعَتَهُمْ شَيْطَانٌ.
رواه الطبراني في الاوسط وفيه: الحسن بن واصل وهو الحسن بن دينار وهو ضعيف لسوء حفظه وهو حديث حسن والله اعلم مجمع الزوائد:٨ /٢٩٣
243.”எந்தக் கூட்டத்தினருடன் ஓர் அனாதை பிள்ளையும் அவர்களுடைய பாத்திரத்தில் சேர்ந்து சாப்பிடுமோ அப்பாத்திரத்தின் அருகில் ஷைத்தான் நெருங்கமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٤٤– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَجُلاً شَكَا اِلَي رَسُوْلِ اللهِ ﷺ قَسْوَةَ قَلْبِهِ، فَقَالَ: اِمْسَحْ رَاْسَ الْيَتِيْمِ، وَاَطْعِمِ الْمِسْكِيْنَ.
رواه احمد ورجاله رجال الصحيح مجمع الزوائد: ٨ /٢٩٣
244.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு மனிதர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் தனது உள்ளம் கடினமாக இருப்பதாக முறையிட்டார்”, “அனாதையின் தலையைத் தடவிக்கொடுத்து வருவீராக! மேலும் ஏழைக்கு உணவு அளிப்பீராக!” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٤٥– عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ ؓ يَرْفَعُهُ اِلَي النَّبِيِّ ﷺ: اَلسَّاعِيْ عَلَي اْلاَرْمَلَةِ وَالْمِسْكِيْنِ كَالْمُجَاهِدِ فِيْ سَبِيْلِ اللهِ، اَوْ كَالَّذِيْ يَصُوْمُ النَّهَارَ وَيَقُوْمُ اللَّيْلِ.
رواه البخاري باب الساعي علي الارملة رقم:٦٠٠٦
245.”விதவைப் பெண் மற்றும் ஏழைகளுடைய தேவையை நிறைவேற்ற விரைந்து செயல்படுபவர்களின் நன்மை, அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்பவரின் நன்மையைப் போன்றது அல்லது பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கும் மனிதரின் நன்மையைப் போன்றது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃப்வானிப்னு ஸுலைம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٤٦– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: خَيْرُكُمْ خَيْرُكُمْ لِاَهْلِهِ، وَاَنَا خَيْرُكُمْ لِاَهْلِيْ.
(وهو جزء من الحديث) رواه ابن حبان (واسناده صحيح):٩/٤٨٤
246.”உங்களில் நல்லவர் உங்கள் வீட்டாரிடத்தில் நல்லவராக இருப்பவரே! நான் உங்கள் அனைவரிலும் எனது வீட்டாருக்கு நல்லவனாக இருக்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٢٤٧– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: جَاءَتْ عَجُوْزٌ اِلَي النَّبِيِّ ﷺ وَهُوَ عِنْدِيْ، فَقَالَ لَهَا: مَنْ اَنْتِ؟ فَقَالَتْ: اَنَا جُثَامَةُ الْمَدَنِيَّةُ، قَالَ: كَيْفَ حَالُكُمْ؟ كَيْفَ اَنْتُمْ بَعْدَنَا؟ قَالَتْ: بِخَيْرٍ بِاَبِيْ اَنْتَ وَاُمِّيْ يَارَسُوْلَ اللهِﷺ فَلَمَّا خَرَجَتْ قُلْتُ: يَارَسُوْلَ اللهِ تُقْبِلُ عَلَي هذِهِ الْعَجُوْزِ هذَا اْلاِقْبَالَ، فَقَالَ: اِنَّهَا كَانَتْ تَاْتِيْنَا اَيَّامَ خَدِيْجَةَ ؓ ، وَاِنَّ حُسْنَ الْعَهْدِ مِنَ اْلاِيْمَانِ.
اخرجه الحاكم بنحوه وقال حديث صحيح علي شرط الشيخين وليس له علة ووافقه الذهبي:١/١٦، الاصابة:٤ /٢٧٢
247.ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “என் வீட்டில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இருந்த சமயம் ஒரு மூதாட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள், “நீர் யாரென்று கேட்க, “நான் தான் ஜுஸாமா மதனிய்யா” என்று கூறினாள். “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? எங்களுக்குப் பிறகு (நாங்கள் மதீனாவிற்கு வந்த பிறகு) உங்கள் நிலைமை எப்படி இருந்தது?” என நபி (ஸல்) அவர்கள் வினவ, “யாரஸூலல்லாஹ், என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகுக! எல்லோரும் நலமாக உள்ளோம்” என்று கூறிவிட்டு அம்மூதாட்டி சென்றுவிட்டாள். “யாரஸூலுல்லாஹி, அந்த மூதாட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவரின் பக்கம் இந்த அளவு கவனம் செலுத்தினீர்களே” என நான் (வியப்புடன்) கேட்டேன். இந்த மூதாட்டி கதீஜா (ரலி) அவர்களின் வாழ்நாட்களில் நம்மிடம் வரப்போக இருப்பார், பழைய நட்புகளைப் பேணுவது ஈமான் (உடைய அடையாளம்) ஆகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இஸாபா)
٢٤٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، اِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ اَوْ قَالَ غَيْرَهُ.
رواه مسلم باب الوصية بالنساء رقم:٣٦٤٥
248.”தன் முஃமின் மனைவியிடம் வெறுப்புற்று இருப்பது ஒரு முஃமின் கணவனுடைய பண்பல்ல. அவளது ஒரு குணம் வெறுப்பானதாக இருந்தால் இன்னோரு குணம் விருப்பமானதாக இருக்கும் அல்லவா?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அழகிய ஒரு சுருக்கமான வழிமுறையைக் கூறிவிட்டார்கள். ஒரு மனிதரிடம் தீய தன்மைகள் இருந்தாலும் அவரிடத்தில் சில நல்ல தன்மைகளும் இருக்கத்தானே செய்யும்! எந்தத் தீய குணமும் இல்லாத அல்லது எந்த நல்ல குணமும் இல்லாத மனிதன் யார் இருக்க முடியும்? ஆகையால், தீயவைகளை பார்க்காமல் நல்லவைகளைப் பார்க்க வேண்டும்.
(தர்ஜுமானுஸ்ஸுன்னா)
٢٤٩– عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَوْ كُنْتُ آمِرًا اَحَدًا اَنْ يَسْجُدَ لِاَحَدٍ لَاَمَرْتُ النِّسَاءَ اَنْ يَسْجُدْنَ لِاَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنَ الْحَقِّ.
رواه ابوداؤد باب في حق الزوج علي المرأة رقم:٢١٤٠
249..”எவருக்காவது எவரையும் ஸஜ்தா செய்ய நான் கட்டளையிடுவதாக இருந்தால், அல்லாஹுதஆலா கணவர்களுக்குரிய கடமைகளை மனைவியர்களின் மீது கடமையாக்கி இருப்பதின் காரணமாக, பெண்கள் தமது கணவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கட்டளையிட்டிருப்பேன்”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் கைஸுப்னு ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٥٠– عَنْ اُّمِّ سَلَمَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَيُّمَا امْرَاَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ، دَخَلَتِ الْجَنَّةَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في حق الزوج علي المراة رقم:١١٦١
250.”கணவர் தன் மீது திருப்திகொண்ட நிலையில் எந்த பெண்மணி மரணிப்பாளோ, அவள் சுவர்க்கம் செல்வாள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உம்முஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥١– عَنِ اْلاَحْوَصِ ؓ اَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: اَلاَ وَاسْتَوْصُوْا بِالنِّسَاءِ خَيْرًا، فَاِنَّمَا هُنَّ عَوَانٍ عِنْدَكُمْ لَيْسَ تَمْلِكُوْنَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذلِكَ، اِلاَّ اَنْ يَاْتِيْنَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ، فَاِنْ فَعَلْنَ فَاهْجُرُوْهُنَّ فِي الْمَضَاجِعِ، وَاضْرِبُوْهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، فَاِنْ اَطَعْنَكُمْ فَلاَ تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلاً، اَلاَ اِنَّ لَكُمْ عَلَي نِسَائِكُمْ حَقًّا، وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا، فَاَمَّا حَقُّكُمْ عَلي نِسَائِكُمْ فَلاَ يُؤْطِئْنَ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُوْنَ، وَلاَ يَاْذَنَّ فِيْ بُيُوْتِكُمْ لِمَنْ تَكْرَهُوْنَ، اَلاَ وَحَقُّهُنَّ عَلَيْكُمْ اَنْ تُحْسِنُوْا اِلَيْهِنَّ فِيْ كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في حق المراة علي زوجها رقم: ١١٦٣
251.”கவனமாகக் கேளுங்கள். பெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனேனில், அவர்கள் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதை தவிர உங்களுக்கு அவர்களிடம் எந்த வேறு அதிகாரமும் இல்லை. ஆனால், அவர்கள் பகிரங்கமாக வெட்கக் கேடான காரியம் செய்தால் அவர்களைத் தனியாக விட்டுவிடுங்கள், (அவர்களுடன் சேர்ந்து உறங்காதீர்கள், அவர்களை வீட்டிலேயே இருக்கச் செய்யுங்கள்) தேவைப்பட்டால் இலேசாக அடியுங்கள், அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால் (அநியாயமாக) வீண் சாக்கு போக்குகளை தேடாதீர்கள், கவனமாகக் கேளுங்கள்! உங்களுக்குரிய உரிமை உங்கள் மனைவியர் மீது இருப்பது போன்றே மனைவியரின் உரிமை உங்கள் மீதும் இருக்கிறது. நீங்கள் வெறுக்கும் நபர்கள் உங்களுடைய படுக்கையறைக்கு வராமல் இருக்கவும், நீங்கள் வெறுக்கும் மனிதர்களை உங்கள் வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் மனைவியர்கள் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும், கவனமாகக் கேளுங்கள்! உணவு, உடை ஆகியவற்றில் உங்கள் மனைவியர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுவது உங்களுடைய தகுதிக்குத் தக்கவாறு உங்கள் மனைவியருக்கு உணவு, உடைக்குரிய ஏற்பாடு செய்வது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யவேண்டிய கடமையாகும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அஹ்வஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَعْطُوا اْلاَجِيْرَ اَجْرَهُ قَبْلَ اَنْ يَجِفَّ عَرَقُهُ.
رواه ابن ماجه باب اجر الاجراء رقم: ٢٤٤٣
252.”கூலி வேலை செய்தவரின் வியர்வை காய்வதற்கு முன் அவர்களுக்குரிய கூலியைக் கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)


உறவினர்களுடன் சேர்ந்து வாழ்தல்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَاعْبُدُوْا اللهَ وَلاَ تُشْرِكُوْا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَبِذِي الْقُرْبي وَالْيَتمي وَالْمَسكِيْنِ وَالْجَارِ ذِي الْقُرْبي وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيْلِ لا وَمَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ط اِنَّ اللهَ لاَ يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالاً فَخُوْرًا۞).
النساء:٣٦
1.அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு எப்பொருளையும் இணையாக்காதீர்கள்; தாய் தந்தையருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும் (உறவினரல்லாத) அண்டைவீட்டாருக்கும் (தொழிலில், பிரயாணத்தில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கருக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(களான அடிமை)களுக்கும், (நீங்கள்) உபகாரம் செய்யுங்கள் – கர்வமுடையோராக, வீண் பெருமையுடையோராக இருப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அந்நிஸா:36)
குறிப்பு:- அண்டைவீட்டு உறவினர் என்பது உறவினராகவும் இருந்து அண்டை வீட்டிலும் இருப்பவர், அந்நிய அண்டைவீட்டார் என்பது சொந்தமற்ற அண்டைவீட்டார். மேலும், அண்டை வீட்டு உறவினர் என்பது உங்கள் வீட்டு வாசலுக்கு சமீபத்தில் இருப்பவர் என்றும்,அந்நிய அண்டைவீட்டார் என்பது உங்கள் வீட்டு வாசலுக்கும் தூரமான அண்டைவீட்டார் என்றும் பொருள் கொள்ளலாம்.
(கஷ்ஃபுர்ரஹ்மான்)
وَقَالَ تَعَالي: (اِنّ اللهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَاْلاِحْسَانِ وَاِيْتَائئِ ذِي الْقُرْبي وَيَنْهي عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ ج يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ۞).
النحل:٩٠
2.நிச்சயமாக அல்லாஹ், நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினருக்குக் கொடு(த்து ஆதரி)க்குமாறும் கட்டளையிடுகிறான்; மேலும் மானக்கேடானவை, வெறுக்கப்பட்டவை, அழிச்சாட்டியம் ஆகியவற்றைவிட்டும் (உங்களை) விலக்குகிறான்; நீங்கள் நினைவில் நிறுத்துவதற்காக (இதனை) உங்களுக்கு அவன் உபதேசிக்கிறான்.
(அந்நஹ்ல்:90)
தெளிவுரை:- இந்த வசனம் குர்ஆனின் பல கருத்துக்களை உள்ளடக்கிய வசனம் என்று கூறப்படும், இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் கூறப்பட்டுள்ளன: 1. நீதி செலுத்தும் படியும், 2. உபகாரம் செய்யும் படியும், 3. உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளும் படியும் கூறப்பட்டுள்ளது. மூன்று காரியங்களை விட்டும் தடுக்கப்பட்டுள்ளது: 1. வெட்கமற்ற தன்மை, 2. எல்லா வகையான தீய காரியம், 3. அநியாயம். மனிதன் தான் நல்ல தன்மைகள் உள்ளவனாக ஆகி மற்றவர்களுக்கும் நல்லதை நாடுவது நேர்மை என்ற அந்தஸ்தையும் கடந்து கிருபை, மன்னித்தல், மென்மையாக நடந்து கொள்ளுதல் ஆகியவை இஹ்ஸானுடைய மறுபெயராகும்.
(தஃப்ஸீர் உஸ்மானீ)
ஹதீஸ்கள்:-
٢٥٣– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَلْوَالِدُ اَوْسَطُ اَبْوَابِ الْجَنَّةِ، فَاِنْ شِئْتَ فَاَضِعْ ذلِكَ الْبَابَ اَوِ احْفَظْهُ.
رواه الترمذي وقال: هذا حديث صحيح باب ماجاء من الفضل في رضا الوالدين رقم:١٩٠٠
253.”தந்தை சுவர்க்க வாசல்களில் சிறந்த வாசல், (அவருக்கு மாறு செய்து அவரது மனதை புண்படுத்தி) அவ்வாசலை அழித்துவிடு! அல்லது அவருக்குக் கீழ்படிந்து நடந்து (அவரைத் திருப்திப்படுத்தி) அவ்வாசலைப் பாதுகாத்துக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: رِضَا الرَّبِّ فِيْ رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِيْ سَخَطِ الْوَالِدِ.
رواه التر مذي باب ماجاء من الفضل في رضا الوالدين رقم:١٨٩٩
254.”அல்லாஹுதஆலாவின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலும். அல்லாஹுதஆலாவின் வெறுப்பு தந்தையின் வெறுப்பிலும் உள்ளது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنّ اَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ اَهْلَ وُدِّ اَبِيْهِ.
رواه مسلم باب فضل صلة اصدقاء الاب …رقم: ٦٥١٣
255.”நன்மைகளில் சிறந்த நன்மை, (தந்தையின் மரணத்துக்குப்பின்) தந்தையுடன் நட்பு கொண்டவர்களுடன் மகன் அழகிய முறையில் நடந்து கொள்வது” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٥٦– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ اَحَبَّ اَنْ يَصِلَ اَبَاهُ فِيْ قَبْرِهِ فَلْيَصِلْ اِخْوَانَ اَبِيْهِ بَعْدَهُ.
رواه ابن حبان (واسناده صحيح):٢ /١٧٥
256.”எவர் தன் தந்தையின் மரணத்திற்குப்பின், கப்ரில் இருக்கும் தந்தையுடன் சேர்ந்து (வாழ) உறவு வளர்க்க விரும்புவாரோ அவர் தனது தந்தையின் சகோதரர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٢٥٧– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ سَرَّهُ اَنْ يُمَدَّ لَهُ فِيْ عُمُرِهِ، وَيُزَادَ لَهُ فِيْ رِزْقِهِ، فَلْيَبُرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ.
رواه احمد: ٣ /٢٦٦
257.”தனது ஆயுள் அதிகமாக்கப்பட வேண்டும், தனக்குத் தேவையானவைகள் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என எவர் விரும்புகிறாரோ, அவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து, தன் சொந்த பந்தங்களின் உறவு முறையைப் பாதுகாக்கவும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٥٨– عَنْ مُعَاذٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوْبي لَهُ زَادَ اللهُ فِيْ عُمُرِهِ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٤/١٥٤
258″எவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்தாரோ, அவரது ஆயுளை அல்லாஹுதஆலா அதிகரிப்பான் என்ற நற்செய்தி அவருக்கு உண்டு” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٥٩– عَنْ اَبِيْ اُسَيْدٍ مَالِكِ بْنِ رَبِيْعَةَ السَّاعِدِيِّ ؓ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُوْلِ اللهِ ﷺ اِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِيْ سَلَمَةَ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ هَلْ بَقِيَ مِنْ بِرِّ اَبَوَيَّ شَيْءٌ اَبِرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا؟ قَالَ: نَعَمْ اَلصَّلوةُ عَلَيْهِمَا، وَاْلاِسْتِغْفَارُ لَهُمَا، وَاِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا، وَصِلَةُ الرَّحْمِ الَّتِيْ لاَ تُوْصَلُ اِلاَّ بِهِمَا، وَاِكْرَامُ صَدِيْقِهِمَا.
رواه ابوداؤد باب في برالوالدين رقم:٥١٤٢
259.ஹஜ்ரத் அபூஉஸைத் மாலிகிப்னு ரபீஆ ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமுகத்தில் அமர்ந்திருந்த சமயம், பனீஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து, “யாரஸூலல்லாஹ், என்னுடைய பெற்றோருடைய மரணத்திற்குப்பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள ஏதேனும் வழியுள்ளதா?” எனக் கேட்டார்.”ஆம்!” அவர்களுக்காக துஆச் செய்வது, அல்லாஹுதஆலாவிடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது, அவர்களுடைய மரணத்துக்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களுக்கு யாருடன் உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது ஆகியவை பெற்றோர்களுடன் நன்முறையில் நடப்பதாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(அபூதாவூத்)
٢٦٠– عَنْ مَالِكٍ اَوِ ابْنِ مَالِكٍ ؓ اَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: مَنْ اَدْرَكَ وَالِدَيْهِ اَوْ اَحَدَهُمَا ثُمَّ لَمْ يَبِرَّهُمَا، دَخَلَ النَّارَ فَاَبْعَدَهُ اللهُ، وَاَيُّمَا مُسْلِمٍ اَعْتَقَ رَقَبَةً مُسْلِمَةً كَانَتْ فِكَاكَهُ مِنَ النَّارِ.
(وهوبعض الحديث) رواه ابويعلي والطبراني واحمدمختصرا باسنادحسن، الترغيب: ٣ /٣٤٧
260.”எவருக்குப் பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ இருந்து, அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவில்லை என்றால், அவர் நரகத்தில் நுழைவார். மேலும், அல்லாஹுதஆலா அவனைத் தனது அருளை விட்டும் தூரமாக்கிவிடுவான், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம் அடிமையை உரிமையிடுவது அவரை நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்குக் காரணமாகிவிடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மாலிக் அல்லது இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூயஃலா, முஸ்னத் அஹ்மத், தபரானீ, தர்ஙீப்)
٢٦١– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، قِيْلَ: مَنْ يَارَسُوْلَ اللهِ؟ قَالَ: مَنْ اَدْرَكَ اَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، اَحَدَهُمَا اَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ.
رواه مسلم باب رغم من ادرك ابويه، رقم:٦٥١٠
261.”கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ், யார் கேவலமடைவான்?” எனக் கேட்கப்பட்டது. “தனது பெற்றோரில் இருவர் அல்லது ஒருவர் முதுமை அடைந்த நிலையில் இருக்க, (அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்வித்து) சுவர்க்கத்தில் நுழையாதவன் கேவலமடையவும்!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٦٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِ مَنْ اَحَقُّ بِحُسْنِ صَحَابَتِيْ؟ قَالَ: اُمُّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: ثُمَّ اُمُّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: ثُمَّ اُمُّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: ثُمَّ اَبُوْكَ.
رواه البخاري، باب من احق الناس بحسن الصحبة، رقم:٥٩٧١
262.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருவர் நபி (ஸல்) அவர்களின் சமுகம் வந்து, “நான் அழகிய முறையில் நடந்துகொள்ள அதிக தகுதியுடைவர் யார்?” என வினவியதற்கு, “உமது தாய்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.”பிறகு யார்?” என அவர் கேட்க “உமது தாய்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், “பிறகு யார்?” என அவர் கேட்க, “உமது தாய்” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், “பிறகு யார்?” எனக் கேட்க, “உமது தந்தை!” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(புகாரி)
٢٦٣– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: نِمْتُ فَرَأَيْتُنِيْ فِي الْجَنَّةِ فَسَمِعْتُ صَوْتَ قَارِيءٍ يَقْرَأُ، فَقُلْتُ: مَنْ هذَا؟ قَالُوْا: هذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ لَهَا رَسُوْلُ اللهِ ﷺ: كَذَاكَ الْبِرُّ كَذَاكَ الْبِرُّ وَكَانَ اَبَرَّ النَّاسِ بِأُمِّهِ.
رواه احمد:٦ /١٥١.
263.நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், “நான் உறங்கிக் கொண்டிருந்தேன் நான் சுவனத்தில் இருக்கக் கனவு கண்டேன். அங்கு நான் குர்ஆன் ஓதுபவரின் சப்தத்தைச் செவியுற்று, “யார் இவர்?” (சுவனத்தில் வந்து குர்ஆன் ஓதுகிறார்) என வினவினேன். “இவர் ஹாரிஸத்துப்னு நுஃமான்” என மலக்குகள் பதிலளித்தார்கள். பிறகு “நன்மை இவ்வாறுதான் இருக்கும், நன்மை இவ்வாறுதான் இருக்கும், நன்மை என்னும் பழம் இவ்வாறு தான் இருக்கும்” என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் ஹாரிஸதுப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாயாருடன் மிகவும் அழகிய முறையில் நடந்து கொள்ளக் கூடியவராக இருந்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٦٤– عَنْ اَسْمَاءَ بِنْتِ اَبِيْ بَكْرٍ ؓ قَالَتْ: قَدِمَتْ عَلَيَّ اُمِّيْ وَهِيَ مُشْرِكَةٌ فِيْ عَهْدِ رَسُوْلِ اللهِ ﷺ، فَاسْتَفْتَيْتُ رَسُوْلَ اللهِ ﷺ، قُلْتُ: اِنَّ اُمِّيْ قَدِمَتْ وَهِيَ رَاغِبَةٌ، اَفَاَصِلُ اُمِّيْ؟ قَالَ: نَعَمْ، صِلِيْ اُمَّكِ.
رواه البخاري، باب الهدية للمشركين، رقم:٢٦٢٠
264.ஹஜ்ரத் அஸ்மா பின்து அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எனது தாயார் இணை வைப்பவராக இருந்தார், (மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவிற்கு என்னிடத்தில் வந்த சமயம், “எனது தாயார் வந்துள்ளார், அவர் என்னைச் சந்திக்க விரும்புகிறார், நான் என்னுடைய தாயாருடன் உறவு முறையைப் பேணலாமா?” என “நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் மார்க்கச் சட்டம் கேட்டேன், “ஆம்‘ உனது தாயாருடன் உறவு முறையைப் பேணிக்கொள்ளவும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(புகாரி)
٢٦٥– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قُلْتُ يَا رَسُوْلَ اللهِﷺ اَيُّ النَّاسِ اَعْظَمُ حَقًّا عَلَي الْمَرْأَةِ؟ قَالَ: زَوْجُهَا، قُلْتُ: فَاَيُّ النَّاسِ اَعْظَمُ حَقًّا عَلَي الرَّجُلِ؟ قَالَ: اُمُّهُ.
رواه الحاكم في المستدرك:٤/١٥٠
265.ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “யாரஸூலல்லாஹ், ஒரு பெண் யார் மீது அதிகம் கடமைப்பட்டுள்ளாள்?” என நான் கேட்டதற்கு, “அவளுடைய கணவன் மீது அதிகம் கடமைப்பட்டுள்ளாள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.”ஓர் ஆண் யார் மீது அதிகம் கடமைப்பட்டுள்ளான்?” என நான் கேட்டதற்கு, “அவனுடைய தாயார் மீது அதிகம் கடமைப்பட்டுள்ளான்” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٦٦– عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ رَجُلاً اَتَي النَّبِيَّ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِﷺ اِنَّيْ اَصَبْتُ ذَنْبًا عَظِيْمًا فَهَلْ لِيْ تَوْبَةٌ؟ قَالَ: هَلْ لَكَ مِنْ اُمٍّ؟ قَالَ: لاَ، قَالَ: هَلْ لَكَ مِنْ خَالَةٍ؟ قَالَ: نَعَمْ قَالَ: فَبِرَّهَا.
رواه الترمذي، باب في بر الخالة، رقم:١٩٠٤
266.ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: “ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “யாரஸூலல்லாஹ், நான் பெரும் பாவமொன்றைச் செய்து விட்டேன். என்னுடைய (தவ்பா) ஏற்றுக் கொள்ளப்படுமா?” என்று கேட்டார். “உமது தாயார் உயிருடன் உள்ளாரா?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க “இல்லை‘ என்றார் அவர், “உமது தாயின் சகோதரி உள்ளாரா?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வினவ, “ஆம்‘ என்று சொன்னார், “நீர் அவருடன் அழகிய முறையில் நடந்துகொள்ளும் (அதன் காரணமாக அல்லாஹுதஆலா உமது தவ்பாவை ஏற்றுக்கொள்வான்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
٢٦٧– عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: صَنَائِعُ الْمَعْرُوْفِ تَقِيْ مَصَارِعَ السُّوْءِ، وَصَدَقَةُ السِّرِّ تُطْفِيءُ غَضَبَ الرَّبِّ، وَصِلَةُ الرَّحِمِ تَزِيْدُ فِي الْعُمُرِ.
رواه الطبراني في الكبير واسناده حسن، مجمع الزوائد: ٣ /٢٩٣.
267.”நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது, இரகசியமாக தர்மம் செய்வது அல்லாஹுதஆலாவின் கோபத்தைத் தணிக்கிறது. உறவு முறையினைப் பேணுவது (சொந்த பந்தங்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது) ஆயுளை அதிகரிக்கிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- தன் சம்பாத்தியத்திலிருந்து உறவினர்களுக்குப் பொருளுதவி செய்வதும், அல்லது தன்னுடைய நேரத்தை அவர்களுடைய காரியங்களுக்காக ஒதுக்குவதும் உறவு முறையைப் பேணுவதில் கட்டுப்பட்டதாகும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
ஆயுளை அதிகரிப்பது என்பதன் பொருள் சொந்த பந்துக்களை சேர்ந்து வாழ்பவருடைய வயதில் பரகத் செய்யப்படுகிறது, நற்காரியங்கள் செய்ய நல்லுதவி வழங்கப்படுகிறது, மறுமையில் பலன் தரும் காரியங்களில் இவருடைய நேரங்கள் செலவாகும்.
(நவவீ)
٢٦٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قاَلَ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيَصِلْ رَحِمَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيَقُلْ خَيْرًا اَوْ لِيَصْمُتْ.
رواه البخاري، باب اكرام الضيف… رقم:٦١٣٨
268.”எவர் அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டாரோ, அவர் தனது விருந்தினரை உபசரிக்கவும். எவர் அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டாரோ அவர் உறவினரைச் சேர்ந்து வாழவும். எவர் அல்லாஹுதஆலாவின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டாரோ அவர் நல்லதையே பேசட்டும்!, இல்லையெனில் மவுனமாக இருக்கட்டும்!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٦٩– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ اَحَبَّ اَنْ يُبْسَطَ لَهُ فِيْ رِزْقِهِ، وِيُنْسَأَ لَهُ فِيْ اَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ.
رواه البخاري، باب من بسط له في الرزق…، رقم: ٥٩٨٦
269.”எவர் தமது தேவைக்குரிய சாதனங்கள், ஆயுள் நீளமாக்கப்படவும் விரும்புவாரோ, அவர் தம்முடைய சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழவும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٧٠– عَنْ سَعِيْدِ بْنِ زَيْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: اِنَّ هذِهِ الرَّحِمَ شُجْنَةٌ مِنَ الرَّحْمنِ فَمَنْ قَطَعَهَا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ.
(وهو بعض الحديث) رواه احمد والبزار ورجال احمد رجال الصحيح غير نوفل بن مساحق وهو ثقة، مجمع الزوائد:٨/٢٧٤
270.”நிச்சயமாக உறவினரை சேர்ந்து வாழ்வது ரஹ்மானுடைய ரஹ்மத்தின் ஒரு கிளை ஆகும், எவர் உறவைத் துண்டித்து வாழ்வாரோ அவர் மீது அல்லாஹுதஆலா சுவர்க்கத்தை ஹராமாக்கிவிடுவான்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ஸஈதுப்னு யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٧١– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِيءِ، وَلكِنِ الْوَاصِلُ الَّذِيْ اِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا.
رواه البخاري، باب ليس الواصل بالمكافيء، رقم:٥٩٩١
271.”இரு உறவினர்களும் பரஸ்பரம் நன்முறையில் நடந்து கொள்வது உறவினரைச் சேர்ந்து வாழ்வதாக கணிக்கப்படமாட்டாது (உறவினர் தன்னுடன் நல்லமுறையில் நடந்து கொள்வதற்காகத் தாம் உறவைப் பேணி நடப்பது உறவு முறையைப் பாதுகாத்ததாக ஆகாது) உறவினர் உறவைத் துண்டித்து வாழ்ந்தாலும் தாம் அவருடன் சேர்ந்து வாழ்பவரே உறவினரைச் சேர்ந்து வாழ்பவராக கருதப்படும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٧٢– عَنِ الْعَلاَءِ بْنِ خَارِجَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: تَعَلَّمُوْا مِنْ اَنْسَابِكُمْ مَا تَصِلُوْنَ بِهِ اَرْحَامَكُمْ.
رواه الطبراني في الكبير ورجاله موثقون، مجمع الزوائد:١/٤٥٦
272.”தமது வம்ச வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள், அதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களோடு சேர்ந்து வாழ ஏதுவாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலாஇப்னு காரிஜா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٧٣– عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: اَمَرَنِيْ خَلِيْلِيْ ﷺ بِسَبْعٍ: اَمَرَنِيْ بِحُبِّ الْمَسَاكِيْنِ وَالدُّنُوِّ مِنْهُمْ، وَاَمَرَنِيْ اَنْ اَنْظُرَ اِلَي مَنْ هُوَ دُوْنِيْ وَلاَ اَنْظُرَ اِلَي مَنْ هُوَ فَوْقِيْ، وَاَمَرَنِيْ اَنْ اَصِلَ الرَّحِمَ وَاِنْ اُدْبِرْتُ، وَاَمَرَنِيْ اَنْ لاَ اَسْأَلَ اَحَدًا شَيْئًا،وَاَمَرَنِيْ اَنْ اَقُوْلَ بِالْحَقِّ وَاِنْ كاَنَ مُرًّا،وَاَمَرنِيْ اَنْ لاَ اَخَافَ فِي اللهِ لَوْمَةَ لاَئِمٍ، وَاَمَرَنِيْ اَنْ اُكْثِرَ مِنْ قَوْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ باِللّهِ فَإِنَّهُنَّ مِنْ كَنْزٍ تَحْتَ الْعَرْشِ.
رواه احمد:٥ /١٥٩
273.ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “எனது நேசர் (ஸல்) அவர்கள் ஏழு காரியங்களைச் செய்ய எனக்குக் கட்டளையிட்டார்கள். 1. நான் ஏழைகளை நேசிக்க வேண்டுமென்றும், அவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டுமென்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள், 2. வசதி வாய்ப்பில் என்னைவிடத் தாழ்ந்தவர்களை கவனிக்க வேண்டுமென்றும், என்னைவிட உயர்ந்தவர்களை கவனிக்க வேண்டாமென்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள், 3. என்னுடைய உறவினர்கள் என்னைப் புறக்கணித்தாலும் அவர்களோடு உறவு முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டார்கள், 4. நான் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாதென எனக்குக் கட்டளையிட்டார்கள், 5. மக்களுக்குக் கசப்பாக இருந்தாலும் நான் உண்மையே பேச வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள், 6. நான் அல்லாஹுதஆலாவின் மார்க்கம் மற்றும் அவன் கட்டளைகளைப் பரப்புவதில் எவரது பழிப்பையும் கண்டு பயப்படக்கூடாதென எனக்குக் கட்டளையிட்டார்கள், 7. (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ باِللّهِ) என்ற கலிமாவை அதிகமாக ஓதிவருமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள், ஏனேனில் இந்தக் கலிமாக்கள் அர்ஷின் கீழுள்ள புதையலில் உள்ளவை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- இக்கலிமாவை வழக்கமாக ஓதிவருபவருக்கு அளவில்லா உயர்ந்த பதவியுள்ள கூலியும், நன்மையும் பாதுகாக்கப்படுகின்றன என்பதாகும்.
(மளாஹிர்ஹக்)
٢٧٤– عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ؓ اَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ.
رواه البخاري، باب اثم القاطع، رقم:٥٩٨٤
274.”உறவைத் துண்டிப்பவர் சுவர்க்கம் செல்லமாட்டார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜுபைருப்னு முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- உறவு முறையைத் துண்டிப்பது அல்லாஹுதஆலாவிடம் எத்தனை கடுமையான பாவமென்றால், இந்தப்பாவக் கறையுடன் யாரும் சுவர்க்கம் செல்ல முடியாது. ஆனால், அதற்குரிய தண்டனை கொடுக்கப்பட்டு அந்தக் கறையைவிட்டும் சுத்திகரிக்கப்பட்டால் அல்லது ஏதேனுமொரு காரணத்தால் அவர் மன்னிக்கப்பட்டு விட்டால் சுவனத்திற்குச் செல்ல முடியும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٢٧٥– عَنْ اَبِيْ هُرَيْرَة ؓ اَنَّ رَجُلاً قَالَ: يَارَسُوْلَ اللهِﷺ اِنَّ لِيْ قَرَابَةً، اَصِلُهُمْ وَيَقْطَعُونِّيْ، وَاُحْسِنُ اِلَيْهِمْ وَيُسِيْئُوْنَ اِلَيَّ، وَاَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُوْنَ عَلَيَّ، فَقَالَ: لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ، فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ، وَلاَ يَزَالُ مَعَكَ مِنَ اللهِ ظَهِيْرٌ عَلَيْهِمْ، مَا دُمْتَ عَلي ذلِكَ.
رواه مسلم، باب صلة الرحم…، رقم:٦٥٢٥
275.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “யாரஸூலல்லாஹ்! எனக்கு உறவினர்கள் சிலர் இருக்கின்றனர், நான் அவர்களுடன் ஒற்றுமையாக வாழ விரும்புகிறேன், ஆனால், அவர்கள் என்னுடன் உள்ள தொடர்பைத் துண்டிக்கின்றனர். நான் அவர்களுடன் அழகிய முறையில் பழகுகிறேன், அவர்கள் என்னுடன் தீய முறையில் நடந்து கொள்கின்றனர். அவர்கள் என்னுடன் வரம்பு மீறுவதை நான் பொறுத்துக் கொள்கிறேன், அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கின்றனர்” என்று முறையிட்டார். “நீர் சொல்வது போன்றே நிலைமை இருக்குமானால், நீர் அவர்களுடைய வாயில் சூடான சாம்பலைத் திணிக்கிறீர், எதுவரை நீர் இந்தக் காரியத்தில் நீடித்து நிலைத்து இருப்பீரோ அதுவரை எல்லா நேரமும் அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து ஓர் உதவியாளர் உம்முடன் இருந்துகொண்டிருப்பார்” என்று நபி (ஸல்) சொன்னார்கள்.
(முஸ்லிம்)


குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا۞).>
(الاحزاب:٥٨)
1.(ஓரிறை) நம்பிக்கை கொண்ட ஆண்களையும், (ஓரிறை) நம்பிக்கை கொண்ட பெண்களையும் – அவர்கள் செய்யாதவற்றைக் கொண்டு நோவினை செய்கிறார்களே அவர்கள், அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் திட்டமாகச் சுமந்து கொள்கின்றனர்.
(அல்அஹ்ஸாப்:58)
தெளிவுரை:- நாவினால் துன்புறுத்தினால் அவதூறாகும், மற்ற உறுப்பிகளால் துன்புறுத்தினால் பகிரங்கமான பாவமாகும்.
قَالَ اللهُ تَعَالي: (وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَ ۞ الّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَي النَّاسِ يَسْتَوْفُوْنَ ۞ وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَزَنُوْهُمْ يُخْسِرُوْنَ ۞ اَلاَ يَظُنُّ اُولئِكَ اَنَّهُمْ مَبْعُوْثُوْنَ ۞ لِيَوْمٍ عَظِيْمٍ ۞ يَوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِيْنَ۞).
(المطففين:٦–١)
2.(எடையிலும் அளவிலும்) குறைவு செய்கிறவர்களுக்குக் கேடு உண்டாவதாக! அவர்கள் எத்தகையோரென்றால், மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குவார்கள், ஆனால் அவர்களுக்குத் தாங்கள் அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் குறைவு செய்(து நஷ்டமுண்டாக்கு)வார்கள்.நிச்சயமாக தாம் (இறந்த பின்) எழுப்பப்படுவோர் என்பதை அவர்கள் உறுதி கொள்ளவில்லையா? மகத்தான ஒரு நாளில், (மண்ணறைகளை விட்டும்) மனிதர்கள் அகிலத்தாரின் ரப்பின் முன் எழுந்து நிற்கும் நாளில்.
(அல்முதஃப்ஃபிஃபீன்:1-6)
وَقَالَ تَعَالي: (وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ۞).
(الهمزة:١)
3.குறை கூறி, புறம் பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் கேடுதான்!
(அல்ஹுமஸா:1)
ஹதீஸ்கள்:-
٢٧٦– عَنْ مُعَاوِيَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّكَ اِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ اَفْسَدْتَهُمْ، أَوْ كِدْتَ اَنْ تُفْسِدَهُمْ.
رواه ابو داؤد، باب في التجسس، رقم:٤٨٨٨
276.”நீர் மக்களின் குறைகளைத் தேடித்திரிந்தால், நீர் அவர்களைக் கெடுத்து விட்டீர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- மக்களின், குறைகளைத் தேடித்திரிவதால் அவர்களுக்குள் வெறுப்பு, கோபம், மற்றும் ஏராளமான தீமைகள் உண்டாகும். மேலும் மக்களுடைய குறைகளைத் தேடுவதாலும், அதைப் பரப்புவதாலும், அந்த மக்கள் பாவம் செய்யத் துணிவு ஏற்பட்டுவிடும். இவைகள் அனைத்தும் அவர்கள் மேலும் கெடுவதற்குக் காரணங்களாகும்.
(பத்லுல் மஜ்ஹூத்)
٢٧٧– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تُؤْذُوا الْمُسْلِمِيْنَ وَلاَ تُعَيِّرُوْهُمْ، وَلاَ تَطْلُبُوْا عَثَرَاتِهِمْ.
(وهو جزء من الحديث) رواه ابن حبان (واسناده قوي): ١٣/٧٥
277.”முஸ்லிம்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களைக் குறை கூறாதீர்கள்; அவர்களுடைய தவறுகளைத் தேடித் திரியாதீர்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٢٧٨– عَنْ اَبِيْ بَرْزَةَ اْلاَسْلَمِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلِ اْلاِيْمَانُ قَلْبَهُ: لاَ تَغْتَابُوا الْمُسْلِمِيْنَ وَلاَ تَتَّبِعُوْا عَوْرَاتِهِمْ، فَاِنَّهُ مَنِ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعِ اللهُ عَوْرَتَهُ، وَمَنْ يَتَّبِعِ اللهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِيْ بَيْتِهِ.
رواه ابو داؤد، باب في الغيبة، رقم:٤٨٨٠
278.”நாவால் மட்டும் முஸ்லிமானவர்களே! உள்ளங்களில் ஈமான் நுழையாத மக்களே! நீங்கள் முஸ்லிம்களை புறம் பேசாதீர்கள்! அவர்களுடைய குறைகளைத் தேடித் திரியாதீர்கள்! ஏனேனில், எவர் அவர்களுடைய குறைகளைத் தேடித்திரிகிறாரோ, அல்லாஹுதஆலா அவருடைய குறைகளை பின் தொடர்கிறான். அல்லாஹுதஆலா எவருடைய குறைகளைப் பின்தொடர ஆரம்பித்து விடுவானோ அவனை வீட்டில் இருக்க வைத்தே கேவலப்படுத்துவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- “முஸ்லிம்களைப் பற்றிப் புறம் பேசுவது நயவஞ்சகர் களுடைய வேலையாகத்தான் இருக்க முடியும், ஒரு முஸ்லிமின் வேலையாக இருக்க முடியாது‘ என்பது இந்த ஹதீஸின் முதல் வாசகத்தின் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
(பத்லுல்மஜ்ஹூத்)
٢٧٩– عَنْ اَنَسِ نِ الْجُهَنِيِّ ؓ عَنْ اَبِيْهِ قَالَ: غَزَوْتُ مَعَ نَبِيِّ اللهِ ﷺ غَزْوَةَ كَذَا وَكَذَا فَضَيَّقَ النَّاسُ الْمَنَازِلَ وَقَطَعُوا الطَّرِيْقَ، فَبَعَثَ النَّبِيُّ ﷺ مُنَادِيًا يُنَادِيْ فِي النَّاسِ: اَنَّ مَنْ ضَيَّقَ مَنْزِلاً اَوْ قَطَعَ طَرِيْقًا فَلاَ جِهَادَ لَهُ.
رواه ابو داؤد باب ما يؤمر من انضمام العسكر وسعته، رقم:٢٦٢٩
279.ஹஜ்ரத் அனஸ் ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு யுத்தத்தில் கலந்து கொண்டேன், மக்கள் ஒருவொருக்கொருவர் மிகவும் நெருக்கமாகத் தங்க இடம் அமைத்துக் கொண்டதால் நடைபாதை அடைபட்டுவிட்டது. பொதுவழியை எவர் அடைத்துவிடுவாரோ அவருக்கு யுத்தத்தில் கலந்துகொண்ட நன்மை கிடைக்காது” என்று அந்த மக்களிடம் அறிவித்து வரும்படி ஒருவரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
(அபூதாவூத்)
٢٨٠– عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مَنْ جَرَّدَ ظَهْرَ امْرِئئٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ لَقِيَ اللهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ.
رواه الطبراني في الكبير والاوسط واسناده جيد، مجمع الزوائد:٦ /٣٨٤
280.”எவன் ஒரு முஸ்லிமின் முதுகின் ஆடையை நீக்கிவிட்டு அநியாயமாக அடிப்பானோ, அல்லாஹுதஆலா அவன் மீது கோபங்கொண்ட நிலையில் அவன் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٨١– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اَتَدْرُوْنَ مَا الْمُفْلِسُ؟ قَالُوْا: اَلْمُفْلِسُ فِيْنَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ، فَقَالَ : اِنَّ الْمُفْلِسَ مِنْ اُمَّتِيْ مَنْ يَأْتِيْ يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكوةٍ، وَيَأْتِيْ قَدْ شَتَمَ هذَا، وَقَذَفَ هذَا، وَاَكَلَ مَالَ هذَا، وَسَفَكَ دَمَ هذَا، وَضَرَبَ هذَا، فَيُعْطَي هذَا مِنْ حَسَنَاتِهِ، وهذَا مِنْ حَسَنَاتِهِ، فَاِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ، قَبْلَ اَنْ يُقْضي مَا عَلَيْهِ، اُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ.
رواه مسلم، باب تحريم الظلم. رقم:٦٥٧٩
281.”நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் (ரலி) எல்லாவற்றையும் இழந்தவர் (முஃப்லிஸ்) யார்? என்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்கள், “எவரிடம் திர்ஹமோ (காசோ) உலகப் பொருளோ இல்லையோ அவரே நம்மிடம் (முஃப்லிஸ்) என ஸஹாபாக்கள் (ரலி) கூறினார்கள். “எனது உம்மத்தில் முஃப்லிஸ் எல்லாவற்றையும் இழந்தவர் என்பது, கியாமத் நாளன்று ஏராளமான தொழுகை, நோன்பு, ஸகாத் (இன்னபிற ஒப்புக்கொள்ளப்பட்ட வணக்கங்கள்) போன்ற நல்ல அமல்களைக் கொண்டு வருவார், ஆனால், அவர் எவரையேனும் திட்டியிருப்பார், எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார், எவர் பொருளையாவது சாப்பிட்டிருப்பார், எவரையேனும் கொலை செய்திருப்பார், எவரையேனும் அடித்திருப்பார், அதனால் அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்து உரிமையுடையவருக்கு, (அவர் செய்த அநியாயத்தின் அளவு) நன்மைகள் கொடுக்கப்படும். இவ்வாறே ஏனைய உரிமையுடையவர் களுக்கும் அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்து (அவர் செய்த அநியாயத்தின் உரிமை அளவுக்கு) நன்மைகள் வழங்கப்படும். பிறருக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளுக்கு முன்பே அவருடைய நன்மைகள் யாவும் தீர்ந்து விட்டால் (அவர் செய்த அநியாயத்தின் அளவு) உரிமையுடையவர்களின், (அநீதி) பாவங்களை அவர்களிடமிருந்து பெற்று, அவர் மீது போடப்படும். மேலும் அவர் நரகத்தில் எறியப்படுவார். இவர் தான் (முஃப்லிஸ்) யாவற்றையும் இழந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٨٢– عَنْ عَبْدِ اللهِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: سِبَابُ الْمُسْلِمِ فُسُوْقٌ، وَقِتَالُهُ كُفْرٌ.
رواه البخاري، باب ما ينهي من السباب واللعن، رقم:٦٠٤٤
282.”முஸ்லிமைத் திட்டுவது மார்க்கத்துக்குப் புறம்பான செயல், அவனைக்கொல்வது இறை நிராகரிப்பு – குப்ர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- எந்த முஸ்லிம் பிற முஸ்லிமைக் கொலை செய்கிறானோ, அவன் தான் உண்மை முஸ்லிம் இல்லை என்று செயலில் காட்டுகிறான். மேலும் அல்லாஹுதஆலாவை நிராகரித்த (குப்ருடைய) நிலையில் மரணிப்பதற்கு இந்தக் கொலை காரணமாகலாம்.
(மளாஹிர்ஹக்)
٢٨٣– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ رَفَعَهُ قَالَ: سَابُّ الْمُسْلِمِ كَالْمُشْرِفِ عَلَي الْهَلَكَةِ.
رواه الطبراني في الكبير وهو حديث حسن، الجامع الصغير:٢ /٣٨
283.”முஸ்லிமைத் திட்டுபவன், அழிந்தொழிந்து நாசத்தின் பால் செல்லும் மனிதனைப் போன்றவன்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ஜாமிஉஸ்ஸஙீர்)
٢٨٤– عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ ؓ قَالَ: قُلْتُ: يَا نَبِيَّ اللهِﷺ اَلرَّجُلُ مِنْ قَوْمِيْ يَشْتِمُنِيْ وَهُوَ دُوْنِيْ، أَفَاَنْتَقِمُ مِنْهُ؟ فَقَالَ النَّبِيُّ ﷺ: اَلْمُسْتَبَّانِ شَيْطَانَانِ يَتَهَاتَرَانِ وَيَتَكَاذَبَانِ.
رواه ابن حبان (واسناده صحيح): ١٣/٣٤
284.ஹஜ்ரத் இயாழிப்னு ஹிமார் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “அல்லாஹ்வின் நபியே! என்னுடைய சமுகத்தைச் சார்ந்த, என்னைவிடக் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் என்னைத் திட்டுகிறார், அவரைப் பழி வாங்கலாமா?” என்று நான் வினவினேன். “தங்களுக்குள் திட்டிக் கொள்ளும் இருவர், தமக்குள் வெட்கக்கேடான பேச்சுக்களைப் பேசும் இருவர், ஒருவர் மற்றவரைப் பொய்யன் என்று கூறும் இரு ஷைத்தான்களாவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٢٨٥– عَنْ اَبِيْ جُرَيٍّ جَابِرِ بْنِ سُلَيْمٍ ؓ قَالَ: قُلْتُ لِرَسُوْلِ اللهِ ﷺ: اعْهَدْ اِلَيَّ، قَالَ: لاَ تَسُبَّنَّ اَحَدًا، قَالَ: فَمَا سَبَبْتُ بَعْدَهُ حُرًّا وَلاَ عَبْدًا وَلاَ بَعِيْرًا وَلاَ شَاةً، قَالَ: وَلاَ تَحْقِرَنَّ شَيْأً مِنَ الْمَعْرُوْفِ، وَاَنْ تُكَلِّمَ اَخَاكَ وَاَنْتَ مُنْبَسِطٌ اِلَيْهِ وَجْهُكَ، اِنَّ ذلِكَ مِنَ الْمَعْرُوْفِ وَارْفَعْ اِزَارَكَ اِلي نِصْفِ السَّاقِ، فَاِنْ اَبَيْتَ فَإِلَي الْكَعْبَيْنِ، وَاِيَّاكَ وَاِسْبَالَ اْلاِزَارِ فَإِنَّهَا مِنَ الْمَخِيْلَةِ وَاِنَّ اللهَ لاَ يُحِبُّ الْمَخِيْلَةَ، وَاِنِ امْرُؤٌ شَتَمَكَ وَعَيَّرَكَ بِمَا يَعْلَمُ فِيْكَ فَلاَ تُعَيِّرْهُ بِمَا تَعْلَمُ فِيْهِ فَإِنمَّاَ وَباَلُ ذلِكَ عَلَيْهِ.
(وهو بعض الحديث) رواه ابو داؤد، باب ما جاء في اسبال الازار، رقم:٤٠٨٤
285.ஹஜ்ரத் அபூஜுரய் ஜாபிரிப்னு ஸுலைம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன், “எவரையும் எப்பொழுதும் திட்டாதீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்குப் பிறகு நான் சுதந்திரமானவரையோ, அடிமையையோ, ஒட்டகத்தையோ, ஆட்டையோ திட்டியதில்லை என்று ஹஜ்ரத் அபூஜுரய் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் “எந்த ஒரு நன்மையையும் இலேசாகக் கருதி விட்டுவிடாதீர், நீர் உம்முடைய சகோதரனுடன் முக மலர்ச்சியுடன் பேசுவதும் நன்மையைச் சார்ந்தது, உமது கைலியை முழங்காலின் பாதி வரை உயர்த்திக்கட்டுவீராக! இந்த அளவு உயர்த்த முடியவில்லையென்றால் (குறைந்தது கரண்டைக்கால் வரை உயர்த்திக் கொள்வீராக! கைலியை கரண்டைக் காலுக்கு கீழ் பூமியில் இழுபடுவதை தவிர்ந்து கொள்வீராக, ஏனேனில் இது பெருமையின் அடையாளம், பெருமை கொள்வதை அல்லாஹுதஆலா விரும்புவதில்லை. யாரேனும் உம்முடைய குறைகளைத் தெரிந்து அக்குறைகளைக் கூறி உம்மைத் திட்டினால், (பதிலுக்கு) நீரும், அவருடைய குறைகளை அறிந்து அவரைக் குறை கூறாதீர், நீர் அவரைப் பற்றிக் குறை கூறாமல் இருந்தால் அவர் உம்மைக் குறை கூறுவதால் அதன் விளைவு அவர் மீதே வந்து சாரும்” என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
٢٨٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَجُلاً شَتَمَ اَبَا بَكْرٍ وَالنَّبِيُّ ﷺ جَالِسٌ، فَجَعَلَ النَّبيُّ ﷺ يَعْجَبُ وَيَتَبَسَّمُ، فَلَمَّا اَكْثَرَ رَدَّ عَلَيْهِ بَعْضَ قَوْلِهِ، فَغَضِبَ النَّبِيُّ ﷺ وَقَامَ فَلَحِقَهُ اَبُوْ بَكْرٍ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِﷺ كَانَ يَشْتِمُنِيْ وَاَنْتَ جَالِسٌ فَلَمَّا رَدَدْتُ عَلَيْهِ بَعْضَ قَوْلِهِ غَضِبْتَ وَقُمْتَ، قَالَ: اِنَّهُ كَانَ مَعَكَ مَلَكٌ يَرُدُّ عَنْكَ، فَلَمَّا رَدَدْتَ عَلَيْهِ بَعْضَ قَوْلِهِ وَقَعَ الشَّيْطَانُ فَلَمْ اَكُنْ لِأَقْعُدَ مَعَ الشَّيْطَانِ ثُمَّ قَالَ: يَا اَبَا بَكْرٍ ثَلاَثٌ كُلُّهُنَّ حَقٌّ، مَا مِنْ عَبْدٍ ظُلِمَ بِمَظْلَمَةٍ فَيُغْضِيْ عَنْهَا لِلّهِ اِلاَّ اَعَزَّ اللهُ بِهَا نَصْرَهُ وَمَا فَتَحَ رَجُلٌ بَابَ عَطِيَّةٍ يُرِيْدُ بِهَا صِلَةً اِلاَّ زَادَهُ اللهُ بِهَا كَثْرَةً وَمَا فَتَحَ رَجُلٌ بَابَ مَسْأَلَةٍ يُرِيْدُ بِهَا كَثْرَةً اِلاَّ زَادَهُ اللهُ بِهَا قِلَّةً.
رواه احمد:٢ /٤٣٦
286.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த சபையில் ஒருவர் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களைத் திட்டினார் (அவர் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருக்க ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) பொறுமையாகவும், மௌனமாகவும் இருப்பதைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றுப் புன்முறுவல் கொண்டிருந்தார்கள். பிறகு அவர் அதிகமாகத் திட்ட, ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள், அவரின் சில வார்த்தைகளுக்கு பதில் கொடுத்தார்கள், இதனால் கோபமுற்ற நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்கள். ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்று நபி (ஸல்) அவர்களிடம் “யாரஸூலல்லாஹ், அவர் என்னைத் திட்டிக் கொண்டிருக்கும்வரை தாங்கள் அமர்ந்திருந்தீர்கள், பிறகு நான் அவருடைய சில வார்த்தைகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கியதும் தாங்கள் அதிருப்தியுற்று எழுந்து சென்று விட்டீர்களே ஏன்?” என்று வினவினார்கள். (நீர் மவுனமாகவும், பொறுமையாகவும் இருந்தவரை) “உம்முடன் ஒரு மலக்கு இருந்துகொண்டு உமது சார்பாக பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு நீர் அவருடைய சில வார்த்தைகளுக்குப் பதில் கொடுத்ததும் (அந்த மலக்கு போய்விட்டார்) ஷைத்தான் வந்துவிட்டான், நான் ஷைத்தானுடன் அமர்வதில்லை” (ஆகவே எழுந்து வந்து விட்டேன்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்குப் பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! மூன்று காரியங்கள் அவை ஒவ்வொன்றும் திட்டவட்டமாக சத்தியமானவை: 1. யாரேனும் ஓர் அடியான் மீது அநியாயம் செய்யப்பட்டு, அத்துமீறப்பட்டு, அவர் அல்லாஹுதஆலாவுக்காக அதை மன்னித்து (பழிவாங்காமல்) விட்டு விட்டால், அதற்குப் பகரமாக அல்லாஹுதஆலா அவருக்கு உதவி செய்து அவரை பலசாலியாக ஆக்குவான், 2. எவர் உறவு முறையை பாதுகாக்க தான, தர்மத்தின் வாசலைத் திறந்துவிடுவாரோ, அல்லாஹுதஆலா அதற்குப் பிரதிபலனாக அவருக்கு அதிகமாக வழங்குவான், 3 எவர் செல்வத்தைப் பெருக்க யாசகத்தின் வாசலைத் திறப்பாரோ, அல்லாஹுதஆலா அவரது பொருளில் மேலும் குறைவை ஏற்படுத்தி விடுவான்” என்று கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٨٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ، قَالُوْا: يَا رَسُوْلَ اللهِﷺ وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قاَلَ: نَعَمْ، يَسُبُّ اَبَا الرَّجُلِ، فَيَسُبُّ اَباَهُ، وَيَسُبُّ اُمَّهُ، فَيَسُبُّ اُمَّهُ.
رواه مسلم، باب الكبائر واكبرها، رقم: ٢٦٣
287.”மனிதன் தன் பெற்றோரைத் திட்டுவது, பெரும்பாவத்தைச் சார்ந்தது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ், மனிதன் தன் பெற்றோரையுமா திட்டுவான்?” என ஸஹாபாக்கள் (ரலி) வினவினர்.”ஆம்” இவர் எவருடைய தந்தையைத் திட்டுகிறாரோ, அவர் பதிலுக்கு இவருடைய தந்தையைத் திட்டுவார். இவர் எவருடைய தாயைத் திட்டுவாரோ, அவர் பதிலுக்கு இவருடைய தாயைத் திட்டுவார்” (இவ்வாறு இவர் பிறருடைய தாய், தந்தையைத் திட்டி, தன்னுடைய தாய், தந்தையர் திட்டுப் பெறக் காரணமாகிறார்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٨٨– عَنْ اَبِيْ هُرَيْرَة ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اَللّهُمَّ! اِنِّيْ اَتَّخِذُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيْهِ، فَإِنَّمَا اَنَا بَشَرٌ، فَأَيُّ الْمُؤْمِنِيْنَ آذَيْتُهُ، شَتَمْتُهُ، لَعَنْتُهُ، جَلَدْتُهُ، فَاجْعَلْهَا لَهُ صَلاَةً وَزَكَاةً وَقُرْبَةً، تُقَرِّبُهُ بِهَا اِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ.
رواه مسلم، باب من لعنه النبي ﷺ ….رقم:٦٦١٩
288.”யாஅல்லாஹ், நான் மனிதனேயன்றி வேறில்லை, நான் யாரையேனும் ஒரு முஃமினை (விசுவாசியை)த் துன்புறுத்தி இருந்தால், அவரைத் திட்டியிருந்தால், சபித்திருந்தால், அல்லது நான் அடித்திருந்தால் நீ இவை அனைத்தையும் அந்த முஃமினுக்கு அருளாகவும் பாவத்தை விட்டும் பரிசுத்தமடையவும் கியாமத் நாளில் உன்னுடைய நெருக்கம் கிடைக்கக் காரணமாகவும் ஆக்கிவைக்க உன்னிடத்தில் ஒப்பந்தம் செய்கிறேன். இதற்கு மாற்றம் செய்துவிடாதே!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٨٩– عَنِ الْمُغِيْرَةِ بْنِ شُعْبَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تَسُبُّوا اْلاَمْوَاتَ فَتُؤْذُوا اْلاَحْيَاءَ.
رواه الترمذي، باب ما جاء في الشتم، رقم:١٩٨٢
289.”இறந்தவர்களைத் திட்டாதீர்கள். அதனால், உயிருடன் இருப்போரைத் துன்புறுத்தியவராக ஆகிவிடுவீர்கள்” என ரஸூலுல்லலாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஙீரதுப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- “இறந்தவர்களைத் திட்டுவதால் உயிருடன் இருக்கும் அவருடைய உறவினர்களுக்குத் துன்பம் உண்டாகும், திட்டப்பட்ட இறந்தவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது” என்பதாம்.
٢٩٠– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اُذْكُرُوْا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوْا عَنْ مَسَاوِيْهِمْ.
رواه ابو داؤد، باب في النهي عن سب الموتي، رقم:٤٩٠٠
290.”(முஸ்லிமான) மரணித்தவர்களின் நன்மைகளை நினைவு கூருங்கள் அவர்களுடைய தீமைகளை நினைவுகூறாதீர்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٩١– عَنْ اَبِيْ هُرَيْرَة ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِاَخِيِهِ مِنْ عِرْضِهِ اَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ اَنْ لاَ يَكُوْنَ دِيْنَارٌ وَلاَ دِرْهَمٌ، اِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ اُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَاِنْ لَمْ يَكُنْ لَهُ حَسَنَاتٌ اُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ.
رواه البخاري، باب من كانت له مظلمة عند الرجل…، رقم:٢٤٤٩
291.”ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமின் மானம், மரியாதை (உரிமை) யை அநியாயமாகப் பறித்திருந்தால், தங்கம், வெள்ளி நாணயங்கள் பலன் தராத நாள் வரும் முன்பு இன்றே அவருடைய உரிமையைப் பறித்ததற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். (ஏனேனில், அன்றைய தினம் அனைத்துக் கணக்கு வழக்குகளும், நன்மை, தீமையின் அடிப்படையில்தான் நடைபெறும்) எனவே, அநியாயம் செய்தவரிடம் நற்செயல் ஏதேனும் இருந்தால் அவருடைய அநியாயத்துடைய அளவு அவரிடம் இருந்து வாங்கி அநியாயம் இழைக்கப்பட்டவருக்குக் கொடுக்கப்படும். அநியாயம் செய்தவரிடம் நன்மைகள் ஏதும் இல்லை என்றால் அநியாயம் இழைப்பட்டவருடைய பாவத்திலிருந்து எடுத்து அநியாயத்துடைய அளவு அநியாயம் செய்தவரின் மீது சுமத்தப்படும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٩٢– عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: وَاَرْبَي الرِّبَا اِسْتِطاَلَةُ الرَّجُلِ فِيْ عِرْضِ اَخِيْهِ.
(وهو بعض الحديث) رواه الطبراني في الاوسط وهو حديث صحيح، الجامع الصغير:٢/٢٢
292.”மிகத் தீய வட்டி தன் முஸ்லிம் சகோதரரை மானபங்கப்படுத்துவது” (அவரது கண்ணியத்தை குறைப்பது, அது எந்த வழியில் செய்தாலும் சரியே! உதாரணமாகப் புறம் பேசுவதன் மூலமோ, கேவலமாகக் கருதுவதன் மூலமோ, இழிவுபடுத்துவதன் மூலமோ இருந்தாலும் சரியே) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் பராஇப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ஜாமிஉஸ்ஸஙீர்)
தெளிவுரை:- முஸ்லிமை மானபங்கப்படுத்துவது மிகக் கெட்ட வட்டி என்று சொல்லப்பட்டதன் காரணம், வட்டியில் பிறருடைய பொருளை அநியாயமாக வாங்கிக் கொண்டு அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது போல, முஸ்லிமை மானபங்கப்படுத்துவதால் அவருடைய கண்ணியக் குறைவு நஷ்டம் உண்டாக்கப்படுகிறது என்பதாகும். மேலும், முஸ்லிமுடைய பொருளைவிட அவரது கண்ணியம் மதிப்பு வாய்ந்தது. எனவே தான் மானபங்கப்படுத்துவதைத் தீயவட்டி என்று கூறப்பட்டுள்ளது.
(ஃபைளுல் கதீர், பத்லுல்மஜ்ஹூத்)
٢٩٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اَكْبَرِ الْكَبَائِرِ اسْتِطَالَةُ الْمَرْءِ فِيْ عِرْضِ رَجُلٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ.
(الحديث) رواه ابو داؤد ، باب في الغيبة، رقم:٤٨٧٧
293.”முஸ்லிமுடைய கண்ணியத்தை வரம்பு மீறிக் கெடுப்பது, மிகப் பெரும்பாவங்களில் ஒன்று” என நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٩4- عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنِ احْتَكَرَ حُكْرَةً يُرِيْدُ اَنْ يُغْلِيَ بِهَا عَلَي الْمُسْلِمِيْنَ فَهُوَ خَاطِيءٌ.
رواه احمد وفيه: ابو معشر وهو ضعيف وقد وثق، مجمع الزوائد:٤/١٨١
294.”எவன் முஸ்லிம்களின் மீது விலைவாசி உயர (தானியத்தை)ப் பதுக்கி வைப்பானோ அவன் பாவி” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٩٥– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنِ احْتَكَرَ عَلَي الْمُسْلِمِيْنَ طَعَامًا ضَرَبَهُ اللهُ بِالْجُذَامِ وَاْلاِفْلاَسِ.
رواه ابن ماجه، باب الحكرة والجلب، رقم:٢١٥٥
295.”எவன் முஸ்லிம்களுக்குத் தேவையான தானியத்தை (உணவுப் பொருளை) மக்களுக்கு அத்தியாவசியத் தேவையிருந்தும் அதை விற்காமல் பதுக்கி வைக்கிறானோ, அவன் மீது அல்லாஹுதஆலா குஷ்டத்தையும், வறுமையையும் சாட்டிவிடுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத உமரிப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
தெளிவுரை:- பதுக்கிவைப்பவன் என்பது ஜனங்களுக்கு மிகவும் தேவைப்படுகின்ற சமயம், பொதுவாக தானியங்கள் கிடைக்காத நேரத்தில் விலைவாசி உயர்வை எதிர்பார்த்து தானியங்களைப் பதுக்கி வைத்திருப்பவன் என்பதாம்.
(மளாஹிர்ஹக்)
٢٩٦– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ؓ يَقُوْلُ: اِنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اَلْمُؤْمِنُ اَخُو الْمُؤْمِنِ، فَلاَ يَحِلُّ لِلْمُؤْمِنِ اَنْ يَبْتَاعَ عَلَي بَيْعِ اَخِيْهِ، وَلاَ يَخْطُبَ عَلَي خِطْبَةِ اَخِيْهِ حَتّي يَذَرَ.
رواه مسلم، باب تحريم الخطبة علي خطبة اخيه …، رقم:٣٤٦٤
296.”ஒரு முஃமின் பிற முஃமினுக்குச் சகோதரன், தனது சகோதரன் விலை பேசிக் கொண்டிருக்கும் போது தான் விலை பேசுவது ஒரு விசுவாசிக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! இவ்வாறே, தனது சகோதரன் பெண் கேட்டுத் தூது அனுப்பி இருக்க, அதே பெண்ணைக் கேட்டுத் தூது அனுப்புவது அனுமதிக்கப்பட்டதல்ல!. ஆனால், முதலில் பெண் கேட்டவருக்கும் பெண் வீட்டாருக்கும் உறவு ஏற்படவில்லையெனில், பிறகு பெண் கேட்டுத் தூது அனுப்புவது தவறல்ல” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- விலை பேசிக் கொண்டிருக்கும்போது விலை பேசுவது என்பதற்குப் பல கருத்துகள் உள்ளன. அவற்றிலொன்று, இருவருக்கிடையே விலை பேசி முடிந்துவிட்ட தருணத்தில் மூன்றாமவர் விற்பவரிடம், “இவரிடம் வியாபாரத்தை வெட்டிவிட்டு எனக்கு உன் பொருளை விற்றுவிடு” என்று கூறுவதாகும். கொடுக்கல் வாங்கலில் சரியாகச் செயல்பட ஆலிம்களிடம் சட்டங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும், திருமணத்தூதின் மீது திருமணத்தூது என்பதன் பொருள், ஒருவர் ஓரிடத்தில் பெண் கேட்டு இருந்தார், பெண்வீட்டார் அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள். இந்த நேரத்தில் மூன்றாம் மனிதர் (பெண் கேட்டது பற்றி அவருக்குத் தெரிந்திருந்தும் அவர்) இதே பெண்ணைப் பெண் கேட்டுத் தூது அனுப்பக் கூடாது.
(பத்ஹுல்முல்ஹிம்)
٢٩٧– عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا.
(الحديث) رواه مسلم، باب قول النبي ﷺ من حمل علينا السلاح …، رقم:٢٨٠
297.”எவர் நமக்கு எதிராக ஆயுதத்தை எடுத்தாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٩٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَايُشِيْرُ اَحَدُكُمْ عَلَي اَخِيْهِ بِالسِّلاَحِ فَاِنَّهُ لاَ يَدْرِيْ لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِيْ يَدِهِ فَيَقَعُ فِيْ حُفْرَةٍ مِنَ النَّارِ.
رواه البخاري، باب قول النبي ﷺ من حمل علينا السلاح فليس منا، رقم:٧٠٧٢
298.”உங்களில் எவரும் பிற முஸ்லிம் சகோதரரை நோக்கி ஆயுதத்தை சைக்கினையாகக் காட்ட வேண்டாம். ஏனேனில், ஷைத்தான் அவருடைய கையிலிருந்து ஆயுதத்தைப் பறித்து, (அந்த ஆயுதம் சைக்கினையாகவே விளையாட்டாகவே) முஸ்லிம் சகோதரனைத் தாக்க அதற்குத் தண்டனையாக) அவர் நரகத்தில் விழுந்து விடுவார் என்பதை அவர் அறியமாட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٩٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ يَقُوْلُ: قَالَ اَبُوْ الْقَاسِم ﷺ: مَنْ اَشَارَ اِلَي اَخِيْهِ بِحَدِيْدَةٍ، فَإِنَّ الْمَلاَئِكَةَ تَلْعَنُهُ حَتَّي يَدَعَهُ وَاِنْ كَانَ اَخَاهُ لِأَبِيْهِ وَاُمِّهِ.
رواه مسلم، باب النهي عن الاشارة بالسلاح الي مسلم، رقم:٦٦٦٦
299.”எவரேனும் தன் முஸ்லிம் சகோதரனை நோக்கி இரும்பினால் ஆன ஆயுதம் போன்றவற்றால் சைக்கினை செய்தால், அவர் (சைக்கினை செய்வதை) விடும்வரை அவர்மீது மலக்குகள் சாபமிடுகின்றனர். அது அவருடைய உடன் பிறந்த சகோதரனாக இருந்தாலும் சரியே!” என அபுல் காஸிம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஒருவர் தமது சொந்தச் சகோதரனை நோக்கி இரும்பு போன்ற ஆயுதத்தால் சைக்கினை செய்தால், இவர் அவரைக் கொல்லவோ, அல்லது அவருக்கு தீங்கிழைக்கவோ விரும்புகிறார் என்பது பொருளல்ல. மாறாக அவர் விளையாட்டாகத்தான் அவ்வாறு செய்வார், அப்படியிருந்தும் மலக்குகள் அவரைச் சபிக்கின்றனர். சைக்கினையாகக் கூட ஒரு முஸ்லிமை நோக்கி ஆயுதத்தை அல்லது இரும்பைத் தூக்குவதை கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(மளாஹிர்ஹக்)
٣٠٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ مَرَّ عَلَي صُبْرَةِ طَعَامٍ، فَاَدْخَلَ يَدَهُ فِيْهَا، فَنَالَتْ اَصَابِعُهُ بَلَلاً، فَقَالَ: مَا هذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟ قَالَ: اَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُوْلَ اللهِﷺ قَالَ: أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّيْ.
رواه مسلم، باب قول النبي ﷺ من غشنا فليس منا، رقم:٢٨٤
300.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒரு தானியக் குவியலைக் கடந்து சென்ற போது, தமது புனிதமான கரத்தை அக்குவியலுள் நுழைத்ததும், கையில் ஈரத்தை உணர்ந்தார்கள்.”இந்த ஈரம் எப்படி வந்தது?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அந்தத் தானிய வியாபாரியிடம் கேட்டதற்கு. “யாரஸூலல்லாஹ், மழையில் தானியம் நனைந்துவிட்டது” என்றார் அவர். “நனைந்த தானியத்தை, அதை வாங்குபவர் பார்க்கும்படி குவியலின் மேற்பகுதியில் ஏன் நீர் மாற்றவில்லை? எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல” (என்னைப் பின்பற்றுபவரில் உள்ளவரல்ல) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
٣٠١– عَنْ مُعَاذِ بْنِ اَنَسِ نِ الْجُهَنِيِّ ؓ عَنِ النَّبِيِّ ﷺ: مَنْ حَمي مُؤْمِنًا مِنْ مُنَافِقٍ، اُرَاهُ قَالَ: بَعَثَ اللهُ مَلَكًا يَحْمِيْ لَحْمَهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ نَارِ جَهَنَّمَ، وَمَنْ رَمَي مُسْلِمًا بِشَيْءٍ يُرِيْدُ شَيْنَهُ بِهِ حَبَسَهُ اللهُ عَلَي جِسْرِ جَهَنَّمَ حَتَّي يَخْرُجَ مِمَّا قَالَ.
رواه ابو داؤد، باب الرجل يذب عن عرض اخيه، رقم:٤٨٨٣
301.”நயவஞ்சகனுடைய தீங்கை விட்டும் எவர் ஒரு முஸ்லிமின் மானம், மரியாதையைக் காப்பாற்றுவாரோ, கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா ஒரு மலக்கை நியமிக்கிறான். அவர் அவரது சதையை (அவரது உடலை) நரகநெருப்பிலிருந்து காப்பாற்றுவார். மேலும், எவன் ஒரு முஸ்லிமைக் கேவலப்படுத்த அவர் மீது அவதூறு கூறுகிறாரோ, (அவர் தண்டனை பெற்று) தனது அவதூறுடைய அழுக்கி)லிருந்து தூய்மை பெறும் வரை, நரகத்துடைய பாலத்தின்மீது அல்லாஹுதஆலா அவனை நிறுத்தி வைத்துவிடுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதிப்னு அனஸினில் ஜுஹனிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٠٢– عَنْ اَسْمَاءَ بِنْتِ يَزِيْدَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ ذَبَّ عَنْ عِرْضِ اَخِيْهِ بِالْغَيْبَةِ كَانَ حَقًّا عَلَي اللهِ اَنْ يُعْتِقَهُ مِنَ النَّارِ.
رواه احمد والطبراني واسناد احمد حسن، مجمع الزوائد:٨ /١٧٩
302.”ஒரு முஸ்லிம் சகோதரரின் மானம், மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில், அவர் இல்லாதபோது பேசப்படுவதை எவர் தடுப்பாரோ (புறம் பேசுவதை தடுப்பது போன்று) அவரை நரகிலிருந்து விடுதலை செய்யவது அல்லாஹுதஆலாவின் கடமையாகிவிட்டது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அஸ்மா பின்து யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٠٣– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ رَدَّ عَنْ عِرْضِ اَخِيْهِ الْمُسْلِمِ كَانَ حَقًّا عَلَي اللهِ اَنْ يَرُدَّ عَنْهُ نَارَ جَهَنَّمَ يَوْمَ الْقِيَامَةِ.
رواه احمد:٦ /٤٤٩
303.”ஒரு முஸ்லிம் சகோதரரின் மானம், மரியாதையை பாதுகாக்க எவர் எதிர்த்துப் போராடுவாரோ, கியாமத் நாளன்று அவரை விட்டும் நரக நெருப்பை அகற்றுவதை அல்லாஹுதஆலா தன் மீது பொறுப்பாக ஆக்கிக் கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٣٠٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُوْنَ حَدٍّ مِنْ حُدُوْدِ اللهِ، فَقَدْ ضَادَّ اللهَ، وَمَنْ خَاصَمَ فِيْ بَاطِلٍ وَهُوَ يَعْلَمُهُ لَمْ يَزَلْ فِيْ سَخَطِ اللهِ حَتَّي يَنْزِعَ عَنْهُ، وَمَنْ قَالَ فِيْ مُؤْمِنٍ مَا لَيْسَ فِيْهِ اَسْكَنَهُ اللهُ رَدْغَةَ الْخَبَالِ حَتّي يَخْرُجَ مِمَّا قَالَ.
رواه ابو داؤد باب في الرجل يعين علي خصومة…، رقم:٣٥٩٧
304.”அல்லாஹுதஆலாவுடைய வரம்பை மீறியதற்குரிய தண்டனையைத் தடைசெய்ய எவரேனும் பரிந்து பேசினால், (உதாரணமாக திருடியவனின் கை துண்டிக்கப்படாமல் இருக்க பரிந்து பேசியது போன்று) அவன் அல்லாஹுதஆலாவுடன் போர் தொடுத்துவிட்டான், தான் சத்தியத்தின் மீது இருக்கிறோம் எனத் தெரிந்தும் எவர் தர்க்கம் செய்வாரோ அவர் தர்க்கத்தை விடும் வரை அல்லாஹுதஆலாவின் கோபத்தில் இருக்கிறார். ஒரு முஃமினைப் பற்றி அவரிடத்தில் இல்லாத(தீய)தை எவர் கூறுவாரோ அவரை தான் அவதூறு கூறியதற்குரிய தண்டனையைப் பெற்று அப்பாவத்திலிருந்து பரிசுத்தம் அடையும் வரை அல்லாஹுதஆலா நரகத்தில் சீழ், இரத்தத்தின் சகதியிலே குடியிருக்க வைப்பான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٠٥– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تَحَاسَدُوْا، وَلاَ تَنَاجَشُوْا، وَلاَ تَبَاغَضُوْا، وَلاَ تَدَابَرُوْا، وَلاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَي بَيْعِ بَعْضٍ، وَكُوْنُوْا عِبَادَ اللهِ اِخْوَانًا، اَلْمُسْلِمُ اَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ، وَلاَ يَخْذُلُهُ، وَلاَ يَحْقِرُهُ، اَلتَّقْوَي ههُنَا، وَيُشِيْرُ اِلَي صَدْرِهِ ثَلاَثَ مِرَارٍ: بِحَسْبِ امْرِئئٍ مِنَ الشَّرِّ اَنْ يَحْقِرَ اَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَي الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ.
رواه مسلم، باب تحريم ظلم المسلم …، رقم:٦٥٤١
305.”உங்களுக்கிடையில் பொறாமை கொள்ளாதீர்கள், விலைக்கு வாங்கும் எண்ணம் இல்லாமல் ஏமாற்றுவதற்காக உங்களுக்கிடையில் விலையை அதிகரிக்கச் செய்யாதீர்கள். உங்களுக்கிடையில் கோபம் கொள்ளாதீர்கள், ஒருவர் மற்றவரைவிட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள், உங்களில் ஒருவர் விலை பேசிக் கொண்டிருக்க மற்றவர் விலை பேச வேண்டாம்! அல்லாஹுதஆலாவின் அடியார்களாகி சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ளுங்கள், ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்குச் சகோதரர், சகோதரர் அநியாயம் செய்யமாட்டார், (வேறு யாரேனும் அவர் மீது வரம்பு மீறி நடந்தால்) அவரை ஆதரவற்றவராக, உதவி இழந்தவராக விட்டுவிட மாட்டார். மேலும், அவரைக் கேவலமாகவும் கருதமாட்டார். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சின் பக்கமாகச் சுட்டிக் காட்டி, “தக்வா (அல்லாஹ்வின் அச்சம்) இங்கு இருக்கின்றது‘ என்று மூன்று முறை கூறினார்கள். ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனை இழிவாக நினைப்பதே அவன் தீயவன் என்பதற்குப் போதுமானது. ஒரு முஸ்லிமுடைய ரத்தம், அவனது உடமை, அவனது மானம், மரியாதை பிற முஸ்லிமுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய “தக்வா இங்கு உள்ளது” என்பதன் கருத்து, அல்லாஹுதஆலாவின் பயம் என்பது மறுமையின் கேள்வி கணக்கு பற்றிய சிந்தனைக்குப் பெயராகும் “தக்வா‘ என்பது உள்ளத்தின் அந்தரங்க நிலை. தக்வா இருக்கிறதா? இல்லையா? என்பதை மற்ற மனிதர்கள் கண்களால் கண்டு தெரிந்து கொள்ள முடியாது. ஆகையால் ஒரு முஸ்லிம் இன்னோரு முஸ்லிமைக் கேவலமாகக் கருத உரிமை கிடையாது. வெளிப்படையை வைத்து யாரை இழிவாகக் கருதப்படுகிறதோ அவருடைய உள்ளத்தில் தக்வா இருந்து, அவர் அல்லாஹுதஆலாவிடம் கண்ணியமானவராக இருக்கலாம் என்பதை யார்தான் அறிவார்?
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٣٠٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قاَلَ: اِيَّاكُمْ وَالْحَسَدَ، فَاِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ، اَوْ قَالَ: الْعُشْبَ.
رواه ابوداؤد، باب في الحسد، رقم: ٤٩٠٣
306.”பொறாமையை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள், ஏனேனில், தீ விறகைத் தின்றுவிடுவதைப்போல், அல்லது வைக்கோலைத் தின்றுவிடுவது போல், பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٠٧– عَنْ اَبِيْ حُمَيْدِ نِ السَّاعِدِيِّ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: لاَ يَحِلُّ لِامْرِئئٍ اَنْ يَأْخُذَ عَصَا اَخِيْهِ بِغَيْرِ طِيْبِ نَفْسٍ مِنْهُ.
رواه ابن حبان (واسناده صحيح): ١٣/٣١٦
307.”தனது சகோதரரின் தடியை (ப் போன்ற சாதாரண பொருளை)க் கூட அவரது விருப்பமின்றி எடுப்பது எவருக்கும் ஆகுமானதல்ல” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுமைத் ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٣٠٨– عَنْ يَزِيْدَ ؓ اَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: لاَ يَأْخُذَنَّ اَحَدُكُمْ مَتَاعَ اَخِيْهِ لاَعِبًا وَلاَ جَادًّا
رواه ابو داؤد، باب من يأخذ الشيء من مزاح، رقم: ٥٠٠٣
308.”உங்களில் எவரும் தமது சகோதரருடைய பொருளை அனுமதியின்றி வேண்டுமென்றோ விளையாட்டாகவோ எடுக்க வேண்டாம்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٠٩– عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ اَبِيْ لَيْلَيؒ قَالَ: حَدَّثَنَا اَصْحَابُ مُحَمَّدٍ ﷺ اَنَّهُمْ كَانُوْا يَسِيْرُوْنَ مَعَ النَّبِيِّ ﷺ، فَنَامَ رَجُلٌ مِنْهُمْ، فَانْطَلَقَ بَعْضُهُمْ اِلَي حَبْلٍ مَعَهُ فَأَخَذَهُ فَفَزِعَ،فَقَالَ النَّبِيُّ ﷺ: لاَ يَحِلُّ لِمُسْلِمٍ اَنْ يُرَوِّعَ مُسْلِمًا.
رواه ابو داؤد، باب من يأخذ الشيء من مزاح، رقم:٥٠٠٤
309.ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அபூலைலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், எங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் கீழ்க்காணும் நிகழ்ச்சியைச் சொன்னார்கள். “ஒரு முறை அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவருக்குத் தூக்கம் வந்து தூங்கிவிட்டார். இன்னோருவர் விளையாட்டாக அவருடைய கயிற்றை எடுத்துக்கொண்டார், தூங்கிக்கொண்டிருந்தவர் விழித்ததும், தன் கயிற்றைக் காணாது பதற்றமடைந்தார். “எந்த ஒரு முஸ்லிமும் பிற முஸ்லிமைப் பதற்றமடையச் செய்வது கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
٣١٠– عَنْ بُرَيْدَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: قَتْلُ الْمُؤْمِنِ اَعْظَمُ عِنْدَ اللهِ مِنْ زَوَالِ الدُّنْيَا.
رواه النسائي، باب تعظيم الدم، رقم:٣٩٩٥
310.”ஒரு முஃமின் கொல்லப்படுவது, அல்லாஹுதஆலாவிடம் முழுஉலகமும் அழிந்து போவதைவிடப் பயங்கரமானது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
தெளிவுரை:- உலகம் அழிந்துவிடுவதை எவ்வாறு மக்கள் பயங்கர மானதாக கருதுகிறார்களோ, அதைவிடவும் முஃமின் கொல்லப்படுவது அல்லாஹுதஆலாவிடம் மிக பயங்கரமான செயலாகும் என்பதாம்.
٣١١– عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّ ؓ وَاَبِيْ هُرَيْرَةَ ؓ يَذْكُرَانِ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قاَلَ: لَوْ اَنَّ اَهْلَ السَّمَاءِ وَاَهْلَ اْلاَرْضِ اِشْتَرَكُوْا فِيْ دَمِ مُؤْمِنٍ لَأَكَبَّهُمُ اللهُ فِي النَّارِ.
رواه الترمذي وقال: هذا حديث غريب، باب الحكم في الدماء، رقم:١٣٩٨
311.”ஒரு முஃமினைக் கொலை செய்ய, வானம் பூமியிலுள்ளோர் அனைவரும் கூட்டாக ஒன்று சேர்ந்தாலும், அல்லாஹுதஆலா அவர்கள் அனைவரையும் முகங்குப்புற நரகத்தில் போட்டுவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரி மற்றும் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣١٢– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: كُلُّ ذَنْبٍ عَسَي اللهُ اَنْ يَغْفِرَهُ اِلاَّ مَنْ مَاتَ مُشْرِكًا، اَوْ مُؤْمِنٌ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا.
رواه ابو داؤد، باب في تعظيم قتل المؤمن، رقم:٤٢٧٠
312.”எல்லாப் பாவத்தையும் அல்லாஹுதஆலா மன்னித்துவிடுவான் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கலாம். ஆனால், இரண்டு (மனிதர்கள் செய்த) பாவத்தைத்தவிர அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தவரின் பாவத்தையும் ஒரு முஸ்லிமை வேண்டும் என்றே கொலை செய்த முஸ்லிமின் பாவத்தையும் தவிர!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣١٣– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ قَتَلَ مُؤْمِنًا، فَاغْتَبَطَ بِقَتْلِهِ، لَمْ يَقْبَلِ اللهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً.
رواه ابو داؤد ،باب في تعظيم قتل المؤمن، رقم:٤٢٧٠،سنن ابي داؤد طبع دار الباز، مكة المكرمة.
313.”எவர் ஒரு முஃமினைக் கொலை செய்துவிட்டு அக்கொலையைப் பற்றி மகிழ்ச்சியடைகிறாரோ, அல்லாஹுதஆலா அவரது பர்ளான வணக்கங் களையும் ஒப்புக் கொள்ளமாட்டான். நஃபிலான வணக்கங்களையும் ஒப்புக் கொள்ளமாட்டான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உபாததுப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣١٤– عَنْ اَبِيْ بَكْرَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا، فَالْقَاتِلُ وَالْمَقْتُوْلُ فِي النَّارِ قَالَ: فَقُلْتُ اَوْ قِيْلَ: يَا رَسُوْلَ اللهِﷺ هذَا الْقَاتِلُ، فَمَا بَالُ الْمَقْتُوْلِ؟ قَالَ: اِنَّهُ قَدْ اَرَادَ قَتْلَ صَاحِبِهِ.
رواه مسلم، باب اذا تواجه المسلمان بسيفيهما، رقم:٧٢٥٢
314.”இரு முஸ்லிம்கள் தமது வாள்களால் ஒருவர் மற்றவருடன் மோதிக் கொண்டு (அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட) கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர் இருவரும் நரகில் இருப்பார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, நான் அல்லது வேறு ஒருவர் “யாரஸூலல்லாஹ், கொலை செய்தவர் நரகிற்குச் செல்வது எல்லோரும் அறிந்ததே!, ஆனால், கொலை செய்யப்பட்டவர் ஏன் நரகிற்குச் செல்கிறார்?” எனக் கேட்டதற்கு, “கொல்லப்பட்டவனும் தனது (முஸ்லிம்) சகோதரனைக் கொல்லவேண்டுமென எண்ணினான் என்ற காரணத்தால்” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣١٥– عَنْ اَنَسٍ ؓ قَالَ: سُئِلَ النَّبِيُّ ﷺ عَنِ الْكَبَائِرِ قَالَ : اَلْاِشْرَاكُ بِاللهِ، وَعُقُوْقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَشَهَادَةُ الزُّوْرِ.
رواه البخاري، باب ما قيل في شهادة الزور، رقم: ٢٦٥٣
315.ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்களைப் பற்றிக் கேட்கப்பட்டது, அல்லாஹுதஆலாவுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு மாறுசெய்தல், கொலை செய்தல், பொய் சாட்சி சொல்லுதல்” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(புகாரி)
٣١٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِجْتَنِبُوا السَّبْعَ الْمُوْبِقَاتِ قَالُوْا: يَا رَسُوْلَ اللهِﷺ وَمَا هُنَّ؟ قَالَ: اَلشِّرْكُ بِاللهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِيْ حَرَّمَ اللهُ اِلاَّ بِالْحَقِّ، وَاَكْلُ الرِّبَا، وَاَكْلُ مَالِ الْيَتِيْمِ، وَالتَّوَلِّيْ يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ.
رواه البخاري، باب قول الله تعالي: ان الذين يأكلون اموال اليتامي…، رقم:٢٧٦٦
316.”நாசமாக்கக் கூடிய ஏழு பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய போது, “யாரஸூலல்லாஹ், அந்த ஏழு பாவங்கள் யாவை”? என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். 1. அல்லாஹுதஆலாவுக்கு இணைவைத்தல், 2. சூனியம் செய்தல், 3. அநியாயமாகக் கொலை செய்தல், 4. வட்டிப் பொருளைச் சாப்பிடுதல், 5. அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், 6. (தன் உயிரைக் காக்க) போரிலிருந்து படையினரை விட்டுப் புறமுதுகிட்டு ஓடிவிடுதல், 7. பரிசுத்தமான ஈமான் உள்ள–தீயவைகளை அறியாத அப்பாவிப் பெண்கள் மீது விபச்சாரம் புரிந்ததாக அவதூறு கூறுதல்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்‘ என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣١٧– عَنْ وَاثِلَةَ بْنِ اْلاَسْقَعِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تُظْهِرِ الشَّمَاتَةَ لِأَخِيْكَ، فَيَرْحَمَهُ اللهُ وَيَبْتَلِيْكَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب لا تظهر الشماتة لاخيك، رقم:٢٥٠٦
317.”உங்களது சகோதரர் சிரமத்தில் இருக்கக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையாதீர்கள், ஏனேனில், அல்லாஹுதஆலா அவர் மீது இரக்கப்பட்டு அவரை சிரமத்திலிருந்து ஈடேற்றமளித்து உம்மைச் சிரமத்தில் ஆழ்த்திவிடலாம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣١٨– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ عَيَّرَ اَخَاهُ بِذَنْبٍ لَمْ يَمُتْ حَتَّي يَعْمَلَهُ، قَالَ اَحْمَدُ: قَالُوْا: مِنْ ذَنْبٍ قَدْ تَابَ مِنْهُ.
رواه الترمذي وقال:حديث حسن غريب، باب في وعيد من عير اخاه بذنب، رقم:٢٥٠٥
318.”எவர் தன் (முஸ்லிம்) சகோதரரின், பாவமீட்சி பெற்று (தவ்பா செய்து)விட்ட குற்றத்தைப் பற்றிக் குறை கூறுகிறாரோ, அவர் அந்தப் பாவத்தில் சிக்காதவரை மரணம் அடையமாட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣١٩– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَيُّمَا امْرِئئٍ قَالَ لِأَخِيْهِ: ياَكاَفِرُ! فَقَدْ باَءَ بِهَا اَحَدُهُمَا، اِنْ كَانَ كَمَا قَالَ، وَاِلاَّ رَجَعَتْ عَلَيْهِ.
رواه مسلم، باب بيان حال ايمان….، رقم:٢١٦
319.”எவர் தன் முஸ்லிம் சகோதரரைப் பார்த்து, “காஃபிரே” (அல்லாஹ்வை நிராகரித்தவரே,) எனக் கூறினால் குஃப்ரு அவ்விருவரில் ஒருவரிடம் அவசியம் வந்தே தீரும், இவர் கூறியது போல் அவர் உண்மையிலேயே காஃபிராக இருந்தால் சரி, இல்லையானால், காஃபிர் என்று சொன்னவரிடமே குஃப்ரு (இறை நிராகரிப்பு) திரும்பி வந்துவிடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٢٠– عَنْ اَبِيْ ذَرٍّ ؓ اَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: وَمَنْ دَعَا رَجُلاً بِالْكُفْرِ اَوْ قَالَ: عَدُوَّ اللهِ وَلَيْسَ كَذلِكَ اِلاَّ حَارَ عَلَيْهِ.
(وهو جزء من الحديث) رواه مسلم، باب بيان حال ايمان ….، رقم: ٢١٧
320.”எவரையேனும் “காஃபிர்” என்றோ “அல்லாஹ்வின் விரோதியே” என்றோ யாரேனும் அழைத்தாரனால், அவர் காஃபிராக அவ்வாறு இல்லையெனில் இவன் சொன்ன வார்த்தை இவரிடமே திரும்ப வந்து விடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٢١– عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيْهِ: يَا كَافِرُ! فَهُوَ كَقَتْلِهِ.
رواه البزار ورجاله ثقات، مجمع الزوائد: ٨/١٤١
321.”எவரேனும் தன் சகோதரரை “காஃபிர்‘ என அழைப்பது அவரைக் கொலை செய்ததைப் போன்று” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இம்ரானிப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٢٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لاَ يَنْبَغِيْ لِلْمُؤْمِنِ اَنْ يَكُوْنَ لَعَّاناً.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في اللعن والطعن، رقم: ٢٠١٩
322.”ஒரு முஃமின் சாபமிடுபவனாக, (பழிப்பவனாக) இருப்பது அவனுக்கு முறையல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٢٣– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَكُوْنُ اللَّعَّانُوْنَ شُفَعَاءَ وَلاَ شُهَدَاءَ، يَوْمَ الْقِيَامَةِ.
رواه مسلم، باب النهي عن لعن الدواب وغيرها، رقم:٦٦١٠
323.”அதிகமாகச் சாபமிடுவோர் கியாமத் நாளில் (பாவிகளுக்கு) பரிந்து பேசுபவராகவும் ஆக முடியாது, (நபிமார்களின் தப்லீஃக் (அழைப்புப்) பணிக்கு)ச் சாட்சி சொல்பவராகவும் ஆக முடியாது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٢٤– عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ.
(وهو جزء من الحديث) رواه مسلم، باب بيان غلظ تحريم قتل الانسان نفسه ….، رقم: ٣٠٣
324.”முஃமினைச் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்ற குற்றம்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ஸாபித்திப்னு ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٢٥– عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ غَنْمٍ ؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ: خِيَارُ عِبَادِ اللهِ الَّذِيْنَ اِذَا رُؤُوْا ذُكِرَ اللهُ، وَشِرَارُ عِبَادِ اللهِ الْمَشَّاءُوْنَ بِالنَّمِيْمَةِ، الْمُفَرِّقُوْنَ بَيْنَ اْلاَحِبَّةِ الْبَاغُوْنَ لِلْبُرَآءِ الْعَنَتَ.
رواه احمد وفيه: شهر بن حوشب وبقية رجاله رجال الصحيح، مجمع الزوائد:٨ /١٧٦
325.”எவரைப் பார்த்தால் அல்லாஹுதஆலாவின் நினைவு வருமோ அவரே அல்லாஹுதஆலாவின் சிறந்த அடியார், கோள் சொல்பவர்கள், நண்பர்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்குபவர்கள், மேலும், அல்லாஹுதஆலாவின் பரிசுத்த அடியார்களை ஏதேனும் பாவத்தில், அல்லது சஞ்சலத்தில் ஆழ்த்திவிட முயற்சிப்பவர்கள் அல்லாஹ்வுடைய அடியார்களில் தீயவர்கள் ஆவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு ஙன்ம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٢٦– عَنِ ابْنِ عَباَّسٍ ؓ قَالَ: مَرَّ رَسُوْلُ اللهِ ﷺ عَلَي قَبْرَيْنِ فَقَالَ: اِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِيْ كَبِيْرٍ، اَمَّا هذَا فَكَانَ لَايَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَاَمَّا هذَا فَكَانَ يَمْشِيْ بِالنَّمِيْمَةِ
(الحديث) رواه البخاري، باب الغيبة …. ، رقم:٦٠٥٢
326.ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும்போது, “இந்த இரண்டு கப்ராளி (புதை குழியில் உள்ளவர்)களும் வேதனை செய்யப்படுகிறார்கள், (தவிர்ந்து கொள்வது சிரமமான) பெரும் பாவத்தின் காணரமாக வேதனை செய்யப்படவில்லை. ஆயினும், இருவரில் ஒருவர் சிறுநீர்த் துளிகள் உடலில் படுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளாமலிருந்தவர், மற்றவர் கோள் சொல்லித் திரிந்தவர்” என்று சொன்னார்கள்.
(புகாரி)
٣٢٧– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَمَّا عُرِجَ بِيْ مَرَرْتُ بِقَوْمٍ، لَهُمْ اَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمِشُوْنَ وُجُوْهَهُمْ وَصُدُوْرَهُمْ، فَقُلْتُ: مَنْ هؤُلاَءِ يَا جِبْرِيْلُ؟ قَالَ: هؤُلاَءِ الَّذِيْنَ يَأْكُلُوْنَ لُحُوْمَ النَّاسِ وَيَقَعُوْنَ فِيْ اَعْرَاضِهِمْ.
رواه ابو داؤد، باب في الغيبة، رقم:٤٨٧٨
327.”நான் வானுலகப் பயணம் சென்றிருந்த போது, ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றேன். அவர்களின் நகங்கள் செம்புகளால் ஆனதாக இருந்தன, அவற்றால் தமது முகங்கள், மார்புகளைக் கீறியவர்களாகக் காயப்படுத்திக் கொண்டு இருந்தனர். நான் ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் “இவர்கள் யார்?’ எனக் கேட்டேன், “இவர்கள் மனிதர்களுடைய மாமிசங்களைச் சாப்பிட்டு மனிதர்களைப் பற்றி புறம் பேசி அவர்களுடைய மானத்தை பறித்தவர்கள்” என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) சொன்னார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٢8- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ فَارْتَفَعَتْ رِيْحٌ مُنْتِنَةٌ.فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: أَتَدْرُوْنَ مَا هذِهِ الرِّيْحُ؟ هذِهِ رِيْحُ الَّذِيْنَ يَغْتَابُوْنَ الْمُؤْمِنِيْنَ.
رواه احمد ورجاله ثقات، مجمع الزوائد: ٨ /١٧٢
328.ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது ஒரு துர்நாற்றம் வீசியது, “இந்த துர்நாற்றம் யாருடையதென உங்களுக்குத் தெரியுமா? முஸ்லிம்களைப் பற்றிப் புறம் பேசிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து வீசும் துர்நாற்றம் இது” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٢٩– عَنْ اَبِيْ سَعْدٍ ؓ وَجَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالاَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْغِيْبَةُ اَشَدُّ مِنَ الزِّنَا قَالُوْا: يَا رَسُوْلَ اللهِﷺ وَكَيْفَ الْغِيْبَةُ اَشَدُّ مِنَ الزِّنَا؟ قَالَ: اِنَّ الرَّجُلَ لَيَزْنِيْ فَيَتُوْبُ فَيَتُوْبُ اللهُ عَلَيْهِ، وَاِنَّ صَاحِبَ الْغِيْبَةِ لاَ يُغْفَرُ لَهُ حَتَّي يَغْفِرَهَا لَهُ صَاحِبُهُ.
رواه البيهقي في شعب الايمان: ٥٥٥/ ٥٣٠٦
329.”புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியது” என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியதாக எவ்வாறு ஆகும்?” என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். “ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டுத் தவ்பா செய்தால் அல்லாஹுதஆலா அவனது தவ்பாவை ஒப்புக்கொள்வான், ஆனால், எவரைப் பற்றிப் புறம் பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து புறம் பேசியவனுக்கு மன்னிப்புக் கிடையாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஃத் மற்றும் ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٣٣٠– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قُلْتُ لِلنَّبِيِّ ﷺ: حَسْبُكَ مِنْ صَفِيَّةَ كَذَا وَكَذَا. تَعْنِيْ قَصِيْرَةً. فَقَالَ: لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَ بِهَا الْبَحْرُ لَمَزَجَتْهُ، قَالَتْ: وَحَكَيْتُ لَهُ اِنْسَانًا، فَقَالَ: مَا اُحِبُّ اَنِّيْ حَكَيْتُ اِنْسَانًا وَاَنَّ لِيْ كَذَا وَكَذَا.
رواه ابو داؤد، باب في الغيبة، رقم:٢٨٧٥
330.ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “குட்டையான ஸபிய்யா (ரலி) அவர்களே தங்களுக்குப் போதுமானவர்‘ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன், “நீர் கூறிய வார்த்தையை கடல் நீரில் கலக்கச் செய்தால், அந்த வார்த்தையின் கசப்பு கடல் நீரின் உப்புச் சுவையையும் மாற்றிவிடும்”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) மேலும் கூறுகிறார்கள், ஒரு தடவை நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் ஒருவருடைய செயலை அப்படியே செய்து காண்பித்தபோது, நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஏராளமான செல்வம் கிடைத்தாலும், பிறரது செயலை அவர் செய்தது போன்று செய்து காண்பிப்பதை நான் விரும்பவில்லை” என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
٣٣١– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: أَتَدْرُوْنَ مَا الْغِيْبَةُ؟ قَالُوْا: اَللّهُ وَرَسُوْلُهُ اَعْلَمُ، قَالَ: ذِكْرُكَ اَخَاكَ بِمَا يَكْرَهُ قِيْلَ: اَفَرَاَيْتَ اِنْ كَانَ فِيْ اَخِيْ مَا اَقُوْلُ؟ قَالَ: اِنْ كَانَ فِيْهِ مَا تَقُوْلُ، فَقَدِ اغْتَبْتَهُ، وَاِنْ لَمْ يَكُنْ فِيْهِ، فَقَدْ بَهَتَّهُ.
رواه مسلم، باب تحريم الغيبة، رقم: ٦٥٩٣
331.”புறம் பேசுவது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என ரஸூலுல்லாஹி அவர்கள் ஸஹாபாக்களிடம் (ரலி) கேட்டார்கள் “அல்லாஹ்வும் அவனது ரஸூலுமே மிக அறிவார்கள்‘ என ஸஹாபாக்கள் (ரலி) அவர்கள் கூறினார்கள்.”தனது (முஸ்லிம்) சகோதரர் (இல்லாதபோது) அவரைப் பற்றி அவர் வெறுக்கும் வார்த்தையைப் பேசுவது (இதுவே புறம்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “எனது சகோதரரிடமுள்ள குறையைக் கூறினால் அது புறமாகுமா?” என ஒரு ஸஹாபி கேட்க, “நீர் கூறுகின்ற குறை அவரிடம் இருந்தால் நீர் புறம் பேசிவிட்டீர் (எதை நீர் கூறுகிறீரோ). அந்தக் குறை அவரிடம் இல்லை யெனில் நீர் அவர் மீது அவதூறு கூறிவிட்டீர்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٣٢– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓعَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ ذَكَرَ امْرَأً بِشَيْءٍ لَيْسَ فِيْهِ لِيَعِيْبَهُ بِهِ حَبَسَهُ اللهُ فِيْ نَارِ جَهَنَّمَ حَتَّي يَأْتِيَ بِنَفَاذِ مَا قَالَ فِيْهِ.
رواه الطبراني في الكبير ورجاله ثقات، مجمع الزوائد:٤/٣٦٤
332.”எவர் பிறரைப் பற்றி அவரை இழிவு படுத்துவதற்காக அவரிடம் இல்லாத குறையைக் கூறுவாரோ, அந்தத் தீமையை நிரூபிக்கும் வரை அல்லாஹுதஆலா அவரை நரக நெருப்பில் கைது செய்து வைத்திருப்பான்” (அவர் எப்படி நிரூபிப்பார்?) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٣٣– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِنَّ اَنْسَابَكُمْ هذِهِ لَيْسَتْ بِسَبَابٍ عَلَي اَحَدٍ، وَاِنَّمَا اَنْتُمْ وُلْدُ آدَمَ طَفُّ الصَّاعِ لَمْ تَمْلَؤُوْهُ لَيْسَ لِأَحَدٍ فَضْلٌ اِلاَّ بِالدِّيْنِ، اَوْ عَمَلٍ صَالِحٍ حَسْبُ الرَّجُلِ اَنْ يَكُوْنَ فَاحِشًا بَذِيًّا بَخِيْلاً جَبَانًا.
رواه احمد:٤/١٤٥
333.”வம்சப் பரம்பரை பிறரைத் தூற்றுவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ ஏற்படுத்தப்படவில்லை, நீங்கள் அனைவரும் ஆதமுடைய மக்கள், நீங்கள் நிரப்பப்படாத (தானியங்களை அளிக்கும்) மரக்காலைப் போன்றவர்கள், உங்களில் எவரும் முழுமை பெற்றவர் இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் ஏதேனுமொரு குறை உண்டு (உங்களில்) ஒருவர் இன்னோருவரைவிட எவ்விதத்திலும் சிறப்புடையவரல்ல, ஆயினும், மார்க்கப் பற்று அல்லது நற்செயலின் காரணமாக ஒருவர் மற்றவரை விடச் சிறப்புப் பெற்றவர் ஆவர். ஒருவன் வெட்கக் கேடான தீய பேச்சுக்களைப் பேசுபவராகவும், கருமியாகவும், கோழையாகவும் இருப்பதே (அவர் தீயவர் என்பதற்கு) போதுமானது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٣٣٤– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: اِسْتَاْذَنَ رَجُلٌ عَلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: بِئْسَ ابْنُ الْعَشِيْرَةِ، اَوْ بِئْسَ رَجُلُ الْعَشِيْرَةِ، ثُمَّ قَالَ: اِئْذَنُوْا لَهُ، فَلَمَّا دَخَلَ اَلاَنَ لَهُ الْقَوْلَ، فَقَالَتْ عَائِشَةُ: يَا رَسُوْلَ اللهِﷺ اَلَنْتَ لَهُ الْقَوْلَ وَقَدْ قُلْتَ لَهُ مَا قُلْتَ، قَالَ: اِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ مَنْ وَدَعَهُ – اَوْ تَرَكَهُ – النَّاسُ لِاتِّقَاءِ فُحْشِهِ.
رواه ابو داؤد، باب في حسن العشرة، رقم:٤٧٩١
334.ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வர அனுமதி கேட்டார், “இவரது கூட்டத்தாரில் இவர் தீயவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அவரை உள்ளே வர அனுமதி அளித்தார்கள், அவர் வந்ததும் அவரிடம் நபி (ஸல்) அவர்கள் நளினமாகப் பேசினார்கள், அவர் சென்ற பிறகு “யாரஸூலல்லாஹ், (இவரது கூட்டத்தாரில் இவர் மிகத் தீயவர்) எனத் தாங்கள் கூறிவிட்டு அவரிடம் மென்மையாகப் பேசினீர்களே?” என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதற்கு, “எவருடைய தீய வார்த்தைகளின் காரணமாக மக்கள் அவருடன் சேருவதை விட்டு விடுகிறார்களோ, அவர் கியாமத் நாளன்று அல்லாஹுதஆலாவிடம் மிகத் தீய தரத்தில் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- வரவிருக்கும் நபரைப் பற்றி பழிப்பானப் வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் சொன்னது அந்த மனிதரைப் பற்றிய உண்மை நிலையைத் தெரியப்படுத்தி அவரது தீங்கிலிருந்து மக்களைக் காப்பதற்காகவே. எனவே இது புறம் பேசுவதைச் சேராது, மேலும், வந்தவரிடத்தில் நளினமாகப் பேசியதன் மூலம், இத்தகைய மனிதர்களுடன் எந்த முறையில் நடந்து கொள்ளவேண்டும் என்பதை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துவிட்டார்கள், அவரை எவ்வாறு சீர்திருத்த வேண்டும் என்ற பாடமும் இதில் உண்டு.
(மளாஹிர்ஹக்)
٣٣٥– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُ غِرٌّ كَرِيْمٌ، وَالْفَاجِرُ خَبٌّ لَئِيْمٌ.
رواه ابوداؤد، باب في حسن العشرة، رقم:٤٧٩٠
335.”(விசுவாசி) கள்ளம் கபடமற்றவராகவும், கண்ணியமானவராகவும் இருப்பார், பாவியோ, ஏமாற்றுபவனாகவும், கீழ்த்தரமானவனாகவும் இருப்பான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- சூழ்ச்சி, தந்திரம், போன்றவை முஃமினுடைய இயற்கைச் சுபாவமாக இருக்காது. தனது இயற்கையான உயர் குணத்தைக் கொண்டு மக்களுக்கு சிரமம் கொடுப்பது, அவர்களைப் பற்றித் தவறாக எண்ணுவது போன்றவைகளைவிட்டும் முஃமின் விலகியிருப்பார். அதற்கு மாற்றமாகப் பாவியின் இயல்பே ஏமாற்றுவதும் சதி மோசடி செய்வதும், குழப்பமுண்டாக்குவதும் அவனது வழக்கமாகும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(தர்ஜுமானுஸ்ஸுன்னா)
٣٣٦– عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ آذَي مُسْلِمًا فَقَدْ آذَانِيْ، وَمَنْ آذَانِيْ فَقَدْ آذَي اللهَ.
رواه الطبراني في الاوسط وهو حديث حسن، فيض القدير:٦ /١٩
336.”எவர் முஸ்லிமுக்குத் தீங்கு விளைவிப்பாரோ அவர் எனக்குத் தீங்கு விளைவித்துவிட்டார், எவர் எனக்குத் தீங்கு விளைவித்தாரோ அவர் உறுதியாக அல்லாஹுதஆலாவுக்குத் தீங்கு விளைவித்துவிட்டார் (அல்லாஹுதஆலாவைக் கோபமடையச் செய்துவிட்டார்)” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ஜாமிஉஸ்ஸஙீர்)
٣٣٧– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اَبْغَضَ الرِّجَالِ اِلَي اللهِ اْلاَلَدُّ الْخَصِمُ.
رواه مسلم، باب في الالد الخصم، رقم:٦٧٨٠
337.”கடுமையாகச் சண்டை சச்சரவு செய்பவன் அல்லாஹுதஆலாவிடம் மிகவும் வெறுப்பிற்குரியவன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٣٨– عَنْ اَبِيْ بَكْرِ نِ الصِّدِّيْقِ ؓ قاَلَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَلْعُوْنٌ مَنْ ضَارَّ مُؤْمِنًا اَوْ مَكَرَ بِهِ.
رواه الترمذي وقال: هذا حديث غريب، باب ما جاء في الخيانة والغش، رقم:١٩٤١
338.”எவர் முஸ்லிமுக்குத் தீங்கு விளைவிக்கிறாரோ அல்லது முஸ்லிமை ஏமாற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளானவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٣٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ وَقَفَ عَلَي اُنَاسٍ جُلُوْسٍ فَقَالَ: اَلاَ اُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ؟ قَالَ: فَسَكَتُوْا، فَقَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ، فَقَالَ رَجُلٌ: بَلَي يَا رَسُوْلَ اللهِﷺ اَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا، قَالَ: خَيْرُكُمْ مَنْ يُرْجَي خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ، وَشَرُّكُمْ مَنْ لاَ يُرْجَي خَيْرُهُ وَلاَ يُؤْمَنُ شَرُّهُ.
رواه الترمذي وقال : هذا حديث حسن صحيح، باب حديث خيركم من يرجي خيره….، رقم:٢٢٦٣
339.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஸஹாபாக்கள் (ரலி) சிலர் அமர்ந்திருந்த சமயம், நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அருகில் வந்து நின்றவாறு, “உங்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று வினவினார்கள். ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஸஹாபாக்கள் (ரலி) மௌனமாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே மூன்று முறை கேட்டார்கள், “யாரஸூலல்லாஹ், எங்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று அறிவித்துத் தாருங்கள்‘ என்று ஒருவர் கேட்டார், “எவரிடம் நற்செயலை ஆதரவு வைக்கப்படுமோ, மேலும் தீயது ஏற்படும் என்ற பயமும் இல்லையோ அவரே உங்களில் நல்லவர், எவரைக் கொண்டு நற்செயலை ஆதரவு வைக்க முடியாதோ, தீங்கு ஏற்படும் என்ற பயம் எந்நேரமும் இருக்குமோ, அவரே உங்களில் தீயவர்” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(திர்மிதீ)
٣٤٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ: اَلطَّعْنُ فِي النَّسَبِ، وَالنِّيَاحَةُ عَلَي الْمَيِّتِ.
رواه مسلم، باب اطلاق اسم الكفر علي الطعن….، رقم:٢٢٧
340.”வம்சப் பரம்பரையைத் தூற்றுதல், இறந்தவர்கள் மீது ஒப்பாரி வைத்தல்” ஆகிய இரு குஃப்ருடைய காரியங்கள் மக்களிடம் இருக்கின்றன என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٤١– عَنِ ابْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لاَ تُمَارِ اَخَاكَ وَلاَ تُمَازِحْهُ وَلاَ تَعِدْهُ مَوْعِدًا فَتُخْلِفَهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في المراء، رقم:١٩٩٥
341.”உம்முடைய சகோதரருடன் சண்டையிடாதீர்! (அவரது மனம் புண்படும்படி) அவரைக் கேலி செய்யாதீர்! உம்மால் நிறைவேற்ற முடியாத காரியங்களில் வாக்களிக்காதீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٤٢– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ: اِذَا حَدَّثَ كَذَبَ، وَاِذَا وَعَدَ اَخْلَفَ، وَاِذَا ائْتُمِنَ خَانَ.
رواه مسلم، باب خصال المنافق، رقم:٢١١
342.”நய வஞ்சகனின் அடையாளங்கள் மூன்று, பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் நிறைவேற்றமாட்டான், அமானிதம் (பாதுகாக்க ஏதேனும் பொருள் அவனிடம்) ஒப்படைக்கப்பட்டால் மோசடி செய்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٤٣– عَنْ حُذَيْفَةَؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ.
رواه البخاري، باب ما يكره من النميمة، رقم: ٦٠٥٦
343.”கோள் சொல்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- சொர்க்கம் போகத் தடையாக இருக்கும் பெரும்பாவங்களில் கோள் மூட்டுவதும் ஒன்று, இந்தத் தீய பழக்கத்துடன் யாரும் சுவர்க்கத்தில் நுழையமுடியாது. ஆனால் அல்லாஹுதஆலா தன்னுடைய கிருபையாலும், அருளாலும் அவரை மன்னித்த பின்பு அல்லது அந்தப் பாவத்திற்குரிய தண்டனை கொடுத்து பரிசுத்தப்படுத்திய பின்பு சுவனம் செல்வான்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٣٤٤– عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍؓ قَالَ: صَلَّي رَسُوْلُ اللهِ ﷺ صَلاَةَ الصُّبْحِ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ: عُدِلَتْ شَهَادَةُ الزُّوْرِ بِاْلاِشْرَاكِ بِاللهِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ قَرَأَ: (فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ اْلاَوْثَانِ وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِ ۞ حُنَفَاءَ لِلّهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِه۞).
(الحج:٣١،٣٠) رواه ابو داؤد، باب في شهادة الزور، رقم: ٣٥٩٩
344.ஹஜ்ரத் குறைமிப்னு ஃபாதிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுதார்கள், தொழுது முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று கொண்டு, “பொய் சாட்சி சொல்வது அல்லாஹுதஆலாவுக்கு இணை வைப்பதற்குச் சமமாக ஆக்கப்பட்டுள்ளது” என மூன்று முறை கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ( ) “சிலை வணக்கம் என்னும் அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள், மேலும் பொய்சாட்சி சொல்வதை விட்டும் விலகியிருங்கள், ஓர்மையாக அல்லாஹுவுக்காகவே ஆகி, அவனுடன் யாரையும் கூட்டாளியாக ஆக்காதீர்கள்” என்ற ஆயத்தை ஓதினார்கள்.
(சூரா ஹஜ்:30,31) (அபூதாவூத்)
தெளிவுரை:- பொய்சாட்சி சொல்வது, ஷிர்க், (இணை வைத்தல்) சிலை வணக்கத்தைப் போன்ற அசுத்தமான பாவமாகும், இணைவைத்தல், சிலையை வணங்குதல் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதுபோல், பொய்சாட்சி சொல்வதிலிருந்தும் ஈமான் உடையவர்கள் விலகியிருக்க வேண்டும் என்பது இந்த ஹதீஸின் கருத்து.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٣٤٥– عَنْ اَبِيْ اُمَامَةَؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئئٍ مُسْلِمٍ بِيَمِيْنِهِ، فَقَدْ اَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ، فَقَالَ لَهُ رَجُلٌ: وَاِنْ كَانَ شَيْئًا يَسِيْرًا يَا رَسُوْلَ اللهِ؟ قَالَ وَاِنْ قَضِيْبٌ مِنْ اَرَاكٍ.
رواه مسلم، باب وعيد من اقتطع حق مسلم…،رقم: ٣٥٣
345.”எவர் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய பொருளை பறித்துக் கொள்வாரோ, அவர் மீது அல்லாஹுதஆலா நரகத்தைக் கட்டாயமாக்கிச் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபொழுது யாரஸூலல்லாஹ், அது அற்பமான பொருளாக இருந்தாலுமா? (இந்தத் தண்டனை கிடைக்கும்?) என்று ஒருவர் வினவினார், “உஹா மரத்தின் ஒரு கிளையாக இருந்தாலும் சரியே!” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٤٦– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مَنْ اَخَذَ مِنَ اْلاَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ اِلَي سَبْعِ اَرْضِيْنَ.
رواه البخاري، باب اثم من ظلم شيئا من الارض، رقم:٢٤٥٤
346.”எவர் சிறிதளவு நிலத்தைக் கூட அநியாயமாகப் பறித்துக்கொள்வாரோ, அதன் காரணமாக கியாமத் நாளன்று அவர் ஏழு பூமி வரை பூமியில் புதையுண்டு போவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٤٧– عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنِ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا.
(وهو جزء من الحديث) رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء في النهي عن نكاح الشغار، رقم: ١١٢٣
347.”எவன் கொள்ளையடித்தாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இம்ரானிப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٤٨– عَنْ اَبِيْ ذَرٍّؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ اِلَيْهِمْ، وَلاَ يُزَكِّيْهِمْ ، وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ، قَالَ: فَقَرَأَهَا رَسُوْلُ اللهِ ﷺ ثَلاَثَ مَرَّاتٍ، قَالَ اَبُوْ ذَرٍّؓ: خَابُوْا وَخَسِرُوْا، مَنْ هُمْ يَا رَسُوْلَ اللهِ؟ قَالَ: اَلْمُسْبِلُ اِزَارَهُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ.
رواه مسلم، باب بيان غلظ تحريم اسبال الازار….، رقم:٢٩٣
348.”மூன்று மனிதர்களிடம் அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று பேசவும்மாட்டான், அவர்களை ரஹ்மத்துடைய பார்வையால் பார்க்கவும் மாட்டான், பாவங்களிலிருந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்ற ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை ஓதினார்கள். யாரஸூலுல்லாஹி நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள் யார்?” என ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் கேட்டார்கள், “தமது கைலியைக் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கவிடுபவர், உபகாரம் செய்துவிட்டுச் சொல்லிக்காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது பொருளை விற்பவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٤٩– عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ ضَرَبَ مَمْلُوْكَهُ ظُلْمًا اُقِيْدَ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ.
رواه الطبراني ورجاله ثقات، مجمع الزوائد:٤/٤٣٦
349.”எவர் தன் அடிமைப் பெண்ணை அநியாயமாக அடிப்பாரோ, அவரிடம் கியாமத் நாளன்று பழிவாங்கப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்மாரிப்னு யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- ஊழியர்களை அடிப்பதும் இந்த எச்சரிக்கையில் கட்டுப்படும்.(மஆரிஃபுல் ஹதீஸ்)


முஸ்லிம்களுக்கிடையே வேற்றுமையைக் களைதல்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللهِ جَمِيْعًا وَّلاَ تَفَرَّقُوْا۞).
(ال عمران: ١٠٣
1.இன்னும் நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் (வேதமாகிய) கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்.
(ஆலுஇம்ரான்:103)

ஹதீஸ்கள்:-
٣٥٠– عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلاَ اُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلوةِ وَالصَّدَقَةِ؟ قَالُوْا: بَلي، قَالَ: صَلاَحُ ذَاتِ الْبَيْنِ، فَإِنَّ فَسَادَ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ.
رواه الترمذي وقال: هذا حديث صحيح، باب في فضل صلاح ذات البين، رقم: ٢٥٠٩
350.”நோன்பு, தொழுகை, தான தர்மங்களை விடச் சிறந்த காரியத்தைச் நான் உங்களுக்கு சொல்லட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்க, “அவசியம் கூறுங்கள்” என ஸஹாபாக்கள் (ரலி) கூறினர். “மக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது இவை அனைத்திலும் சிறந்தது, ஏனேனில், ஒற்றுமையின்றி இருப்பது தீனை (மார்க்கத்தை)ச் சிரைத்துவிடக் கூடியது” (சவரக்கத்தி) தலைமுடியை முழுமையாகச் சிரைத்துவிடுவது போலத் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தீனை இல்லாமலாக்கிவிடும்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٥١– عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمنِ عَنْ اُمِّهِ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: لَمْ يَكْذِبْ مَنْ نَمَي بَيْنَ اِثْنَيْنِ لِيُصْلِحَ.
رواه ابو داؤد في اصلاح ذات البين، رقم:٤٩٢٠
351.”இரு சாராருக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்த எவர் (கற்பனையான செய்திகளை) எடுத்துச் சொல்கிறாரோ, அவர் சொல்லியது பொய்யல்ல” (அவருக்குப் பொய் சொன்ன பாவம் உண்டாகாது) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுமைதுப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள் தமது தாயார் (ரலி) வாயிலாக அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٥٢– عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقُوْلُ: وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ مَا تَوَادَّ اثْنَانِ فَيُفَرَّقُ بَيْنَهُمَا اِلاَّ بِذَنْبٍ يُحْدِثُهُ اَحَدُهُمَا.
(وهو طرف من الحديث) رواه احمد واسناده حسن، مجمع الزوائد: ٨ /٣٣٦
352.”என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவரை யொருவர் நேசித்து வந்த இரு முஸ்லிம்களுக்குள் பிளவு ஏற்படுவதற்கு, அவ்விருவரில் ஒருவரால் நிகழ்ந்த பாவத்தைவிட வேறு காரணம் இருக்க முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٥٣– عَنْ اَبِيْ اَيُّوْبَ اْلاَنْصَارِيِّ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يَحِلُّ لِمُسْلِمٍ اَنْ يَهْجُرَ اَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هذَا وَيُعْرِضُ هذَا، وَخَيْرُهُمَا الَّذِيْ يَبْدَأُ بِالسَّلاَمِ.
رواه مسلم، باب تحريم الهجر فوق ثلاثة ايام….، رقم:٦٥٣٢
353.”தன் முஸ்லிம் சகோதரருடன் மூன்று இரவுகளுக்கு மேல் (நட்பை முறித்து) பிரிந்து, இருவரும் சந்திக்கும் போது ஒருவர் மற்றவரை புறக்கணித்து முகத்தைத் திருப்பிக் கொள்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல! நட்புக்கொள்வதற்காக ஸலாம் சொல்ல முந்திக் கொள்பவரே அவ்விருவரில் சிறந்தவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٥٤– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَحِلُّ لِمُسْلِمٍ اَنْ يَهْجُرَ اَخَاهُ فَوْقَ ثَلاَثٍ، فَمَنْ هَجَرَ فَوْقَ ثَلاَثٍ فَمَاتَ دَخَلَ النَّارَ.
رواه ابو داؤد، باب في هجرة الرجل اخاه، رقم:٤٩١٤
354.”தன் முஸ்லிம் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து இருப்பது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல! எவர் மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் நட்பை முறித்து அதே நிலையில் இறந்துவிட்டால் அவர் நரகத்திற்குச் செல்வார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٥٥– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: لاَ يَحِلُّ لِمُؤْمِنٍ اَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلاَثٍ، فَإِنْ مَرَّتْ بِهِ ثَلاَثٌ فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَاِنْ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ فَقَدْ اشْتَرَكَا فِي اْلاَجْرِ، وَاِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِالْاِثْمِ زَادَ اَحْمَدَ: وَخَرَجَ الْمُسَلِّمُ مِنَ الْهِجْرَةِ.
رواه ابو داؤد ، باب في هجرة الرجل اخاه، رقم: ٤٩١٢
355.”ஒரு முஃமின் தன் முஃமினான சகோதரருடன் (நட்பை முறித்து) மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து இருப்பது ஒரு முஃமினுக்கு ஆகுமானதல்ல! எனவே, மூன்று தினங்கள் கழிந்ததும் தன் சகோதரரைச் சந்தித்து ஸலாம் சொல்லவும், அவர் ஸலாமுக்கு பதில் சொல்லிவிட்டால் நன்மையிலும் கூலியிலும் இருவரும் கூட்டாகிவிடுவர், ஸலாமுக்குப் பதில் சொல்ல வில்லையென்றால் அவர் பாவியாகிவிடுவார், ஸலாம் சொல்லியவர் (நட்பைத் முறித்த பாவத்திலிருந்து) நீங்கிவிடுவார்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٥٦– عَنْ عَائِشَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يَكُوْنُ لِمُسْلِمٍ اَنْ يَهْجُرَ مُسْلِمًا فَوْقَ ثَلاَثَةٍ، فَاِذَا لَقِيَهُ سَلَّمَ عَلَيْهِ ثَلاَثَ مِرَارٍ كُلُّ ذلِكَ لاَ يَرُدُّ عَلَيْهِ، فَقَدْ بَاءَ بِاِثْمِهِ.
رواه ابو داؤد، باب في هجرة الرجل اخاه، رقم: ٤٩١٣
356.”தன் முஸ்லிம் சகோதரருடன் (நட்பை முறித்து) அவரை மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் நட்பு கொள்ளாமல் விட்டுவைப்பது ஒரு முஸ்லிமுக்கு முறையல்ல. எனவே, அவரைச் சந்தித்தால் மூன்று முறை அவருக்கு ஸலாம் கூறவும், அவர் ஒரு தடவை கூட ஸலாமுக்குப் பதில் சொல்லவில்லையென்றால், ஸலாம் சொன்னவரின் (மூன்று நாள் நட்பை முறித்ததின்) பாவமும் ஸலாமுக்கு பதில் கூறாதவரின் மீது வந்து விடும்” என நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٥٧– عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: لاَ يَحِلُّ لِمُسْلِمٍ اَنْ يُصَارِمَ مُسْلِمًا فَوْقَ ثَلاَثٍ، وَاِنَّهُمَا نَاكِبَانِ عَنِ الْحَقِّ مَا كَانَ عَلَي صِرَامِهِمَا، وَاِنَّ اَوَّلَهُمَا فَيْئًا يَكُوْنُ سَبْقُهُ بِالْفَيْءِ كَفَّارَةً لَهُ، وَاِنْ سَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَقْبَلْ سَلاَمَهُ، رَدَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ، وَرَدَّ عَلَي اْلآخَرِ الشَّيْطَانُ، وَاِنْ مَاتَ عَلَي صِرَامِهِمَا لَمْ يَدْخُلاَ الْجَنَّةَ وَلَمْ يَجْتَمِعَا فِي الْجَنَّةِ.
رواه ابن حبان (واسناده صحيح علي شرط الصحيحين):١٢/٤٨٠
357.”தன் முஸ்லிம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து வாழ்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல, எதுவரை அவ்விருவரும் நட்பை முறித்து இருப்பார்களோ அதுவரை சத்தியத்தைவிட்டும் விலகி இருப்பர். அவ்விருவரில் யார் (நட்புக் கொள்ள) முன் வருவாரோ அவருடைய இச்செயல் நட்பை முறித்த அவருடைய பாவத்திற்குப் பரிகாரமாகிவிடும், நட்புக் கொள்ள முன்வந்தவர் ஸலாம் சொன்னால், மற்றவர் அவரது ஸலாமை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், (பதில் சொல்லவில்லையென்றால்), ஸலாம் சொன்னவருக்கு மலக்குகள் பதில் சொல்வார்கள், மற்றவருக்கு ஷைத்தான் பதில் சொல்வான். நட்பைத் முறித்த நிலையிலேயே இருவரும் மரணித்துவிட்டால் சுவர்க்கமும் செல்லமாட்டார்கள், சொர்க்கத்தில் ஒன்று சேரவும்மாட்டார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற கேட்டதாக ஹஜ்ரத் ஹிஷாமிப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٣٥٨– عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ هَجَرَ اَخَاهُ فَوْقَ ثَلاَثٍ فَهُوَ فِي النَّارِ، اِلاَّ اَنْ يَتَدَارَكَهُ اللهُ بِرَحْمَتِهِ.
رواه الطبراني ورجاله رجال الصحيح، مجمع الزوائد: ٨ /١٣١
358.”எவர் தன் முஸ்லிம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து (அதே நிலையில் மரணித்து)விட்டால் அவர் நரகத்திற்குச் செல்வார். ஆனால், அல்லாஹுதஆலா தனது அருளால் அவருக்கு உதவி செய்தால் (அவர் நரகத்தைவிட்டுத் தப்பிவிடுவார்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஃபழாலதுப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٥٩– عَنْ اَبِيْ خِرَاشِ نِ السُّلَمِيِّ ؓ اَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ هَجَرَ اَخَاهُ سَنَةً، فَهُوَ كَسَفْكِ دَمِهِ.
رواه ابو داؤد، باب في هجرة الرجل اخاه، رقم:٤٩١٥
359.”எவர் தன் முஸ்லிம் சகோதரருடன் (கோபம் கொண்டு) ஓர் ஆண்டு காலம் வரை நட்புகொள்ளாமல் இருப்பது அவரது இரத்தத்தை ஒட்டியதைப் போன்று!” (வருடம் முழுவதும் நட்பை முறித்த பாவமும், அநியாயமாகக் கொலை செய்த பாவமும் ஒன்றுக்கொன்று சமமானது)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூகிராஷ் ஸுலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٦٠– عَنْ جَابِرٍ ؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: اِنَّ الشَّيْطَانَ قَدْ اَيِسَ اَنْ يَعْبُدَهُ الْمُصَلُّوْنَ فِيْ جَزِيْرَةِ الْعَرَبِ، وَلكِنْ فِي التَّحْرِيْشِ بَيْنَهُمْ.
رواه مسلم، باب تحريش الشيطان…، رقم: ٧١٠٣
360.”ரேபியத் தீபகற்பத்தில் முஸ்லிம்கள் ஷைத்தானை வணங்குவதை விட்டும் (குஃப்ரு, ஷிர்க்கில், மூழ்குவதை விட்டும்) ஷைத்தான் நம்பிக்கையிழந்து விட்டான். ஆனால், அவர்களுக்கிடையில் ஒருவரை மற்றவருக்கு எதிராக விரோதம் கொள்வதிலும், குழப்பம் உண்டாக்குவதிலும் நம்பிக்கை இழக்கவில்லை” என நபி (ஸல்) அவர்கள் சொல்லத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٦١–عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: تُعْرَضُ اْلاَعْمَالُ فِيْ كُلِّ يَوْمِ خَمِيْسٍ وَاِثْنَيْنِ، فَيَغْفِرُ اللهُ فِيْ ذلِكَ الْيَوْمِ لِكُلِّ اِمْرِئئٍ لاَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا اِلاَّ امْرَأً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ اَخِيْهِ شَحْنَاءُ، فَيُقَالُ: ارْكُوْا هذَيْنِ حَتَّي يَصْطَلِحَا، ارْكُوْ هذَيْنِ حَتَّي يَصْطَلِحَا.
رواه مسلم، باب النهي عن الشحناء، رقم:٦٥٤٦
361.”ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமையும் அல்லாஹுதஆலாவிடம் அடியார்களின் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன, அந்த நாளில் அல்லாஹுதஆலா தனக்கு இணை வைக்காதவர்களை மன்னித்து விடுவான். ஆனால், யார் தனது (முஸ்லிம்) சகோதரனுடன் பகைமை கொண்டுள்ளாரோ, அந்த மனிதர் இந்த மன்னிப்புக் கிடைக்காமல் பாக்கியமற்றுவிடுவார். “அவ்விருவரும் தமக்குள் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், தமக்குள் சமாதானம் செய்துகொள்ளும் வரை அவ்விருவரையும் விட்டு விடுங்கள்” என்று (அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து மலக்குகளுக்கு) கூறப்படும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٦٢– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَطَّلِعُ اللهُ اِلَي جَمِيْعِ خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيْعِ خَلْقِهِ اِلاَّ لِمُشْرِكٍ اَوْ مُشَاحِنٍ.
رواه الطبراني في الكبير والاوسط ورجالهما ثقات، مجمع الزوائد: ٨ /١٢٦
362.”ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு அல்லாஹுதஆலா தன் அனைத்து படைப்பினங்கள் பக்கமும் கவனம் செலுத்துகிறான். படைப்புகள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஆனால், இருவர் மன்னிக்கப் படுவதில்லை அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்; எவருடனாவது விரோதம் கொள்பவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதிப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٦٣– عَنْ جَابِرٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: تُعْرَضُ اْلاَعْمَالُ يَوْمَ اْلاِثْنَيْنِ وَالْخَمِيْسِ، فَمِنْ مُسْتَغْفِرٍ فَيُغْفَرُ لَهُ، وَمِنْ تَائِبٍ فَيُتَابُ عَلَيْهِ، وَيُرَدُّ اَهْلُ الضَّغَائِنِ بِضَغَائِنِهِمْ حَتَّي يَتُوْبُوْا.
رواه الطبراني في الاوسط ورواته ثقات، الترغيب: ٣ /٤٥٨
363.”அல்லாஹுதஆலாவின் சமுகத்தில் ஒவ்வொரு திங்களன்றும், வியாழனன்றும் அடியார்களுடைய அமல்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன, மன்னிப்பு வேண்டுபவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும், தௌபா செய்பவர்களுக்கு பாவ மீட்சி அளிக்கப்படும். (ஆனால்) பகைமை கொண்டவர்களை, அவர்களுடைய பகைமையின் காரணத்தால் விட்டுவைக்கப்படும், அவர்கள் (பகைமையிலிருந்து விலகி தவ்பாச் செய்யும் வரை) அவர்களுடைய இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) ஒப்புக் கொள்ளப்படுவதில்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
٣٦٤– عَنْ اَبِيْ مُوْسَي ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ بَيْنَ اَصَابِعِهِ.
رواه البخاري، باب نصر المظلوم، رقم:٢٤٤٦
364.”ஒரு முஸ்லிமுக்கு மற்ற முஸ்லிமுடன் இருக்கும் நட்பு ஒரு கட்டிடத்தைப் போன்றது, அதன் ஒரு பகுதி இன்னோரு பகுதியை பலப்படுத்துகிறது” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், தமது ஒரு கையின் விரல்களை மற்றோரு கை விரல்களோடு கோர்த்துக் காட்டினார்கள். முஸ்லிம்களும் இவ்வாறே ஒருவர் மற்றோருவருடன் இணைந்திருக்க வேண்டும், (மேலும், ஒருவர் மற்றவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதை விளக்கினார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٦٥– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَي زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَي سَيِّدِهِ.
رواه ابو داؤد، باب فيمن خبب امرأة علي زوجها، رقم:٢١٧٥
365.”ஒரு பெண்ணை அவளுடைய கணவனுக்கு எதிராக, அல்லது ஓர் அடிமையை அவனுடைய எஜமானனுக்கு எதிராக எவர் தூண்டி விடுவாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٦٦– عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: دَبَّ اِلَيْكُمْ دَاءُ اْلاُمَمِ قَبْلَكُمْ: اَلْحَسَدُ وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ، لاَ اَقُوْلُ تَحْلِقُ الشَّعْرَ وَلكِنْ تَحْلِقُ الدِّيْنَ.
(الحديث) رواه الترمذي، باب في فضل صلاح ذات البين، رقم:٢٥١٠
366.”உங்களுக்கு முன் சென்ற சமூகத்தாரின் நோய் உங்களிடத்திலும் குடிகொண்டுள்ளது, சிரைத்துவிடக் கூடிய அந்த நோய் பொறாமையும், குரோதமும் ஆகும், முடிகளை சிரைத்துவிடக் கூடியவை என்று நான் சொல்லவில்லை, மாறாக அவை தீனைச் சிரைத்துவிடும்” (இந்த நோயினால் மனிதனுடைய நற்குணங்கள் அழிந்து நாசமாகிவிடுகின்றன) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுபைரிப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٦٧– عَنْ عَطَاءِ بْنِ عَبْدِ اللهِ الْخُرَاسَانِيِؒ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: تَصَافَحُوْا يَذْهَبُ الْغِلُّ، تَهَادُوْا تَحَابُّوْا وَتَذْهَبُ الشَّحْنَاءُ.
رواه الامام مالك في الموطا، ما جاء في المهاجرة، ص:٧٠٦
367.”உங்களுக்கிடையில் முஸாஃபஹா (கைலாகு) செய்து கொள்ளுங்கள். (அதனால்) கபடம் நீங்கிவிடும். உங்களுக்கிடையில் அன்பளிப்பு வழங்கிக்கொள்ளுங்கள். (அதனால்) நேசம் உண்டாகும், பகைமை நீங்கிவிடும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அதா இப்னு அப்துல்லாஹ் குராஸானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஅத்தா இமாம் மாலிக்)


முஸ்லிம்களுக்குப் பொருளுதவி செய்தல்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِيْ سَبِيْلِ اللهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِيْ كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ ط وَاللهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ ط وَاللهُ وَاسِعٌ عَلِيْمٌ۞).
(البقرة:٢٦١)
1.எவர்கள் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உதாரணம், ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கின்ற ஒரு வித்தைப் போன்றதாகும்; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதனை இன்னும்) இரட்டிப்பாக்குகின்றான் – அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; முற்றும் அறிந்தவன்.
(அல்பகரா:261)
وَقَالَ تَعَالي: (اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلاَنِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ج وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُوْنَ۞).
(البقرة:٢٧٤)
2.எவர்கள் தங்களுடைய செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்பகரா:274)
وَقَالَ تَعَالي: (لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّي تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ۞).
(ال عمران:٩٢)
3.நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து (அல்லாஹ்வுக்காக) நீங்கள் செலவு செய்யும் வரை நீங்கள் நன்மையைப் பெற்றுக் கொள்ளவேமாட்டீர்கள்.
(ஆலுஇம்ரான்:92)
وَقَالَ تَعَالي: (وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلي حُبِّهِ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا ۞ اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللهِ لاَ نُرِيْدُ مِنْكُمْ جَزَاءً وَّلاَ شُكُوْرًا۞).
(الدهر:٩، ٨)
4.இன்னும் அவனுடைய அன்பினால் ஏழைக்கும் அநாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் திருமுகத்திற்காகத்தான்! (அதற்காக) உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும் நன்றி செலுத்துதலையும் நாங்கள் நாடவில்லை” (என்று கூறுவார்கள்).
(அத்தஹ்ரு:8,9)
ஹதீஸ்கள்:-
٣٦٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اَطْعَمَ اَخَاهُ خُبْزًا حَتَّي يُشْبِعَهُ، وَسَقَاهُ مَاءً حَتَّي يُرْوِيَهُ، بَعَّدَهُ اللهُ عَنِ النَّارِ سَبْعَ خَنَادِقَ، بُعْدُ مَا بَيْنَ خَنْدَقَيْنِ مَسِيْرَةُ خَمْسِمِائَةِ سَنَةٍ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٤ /١٢٩
368.”எவர் தன் (முஸ்லிம்) சகோதரருக்கு வயிறு நிரம்ப உணவளித்து, தண்ணீர் அருந்தச் செய்வாரோ அவருக்கும் நரகத்திற்கும் இடையே அல்லாஹுதஆலா ஏழு அகழிகள் தொலைவு தூரத்தை ஏற்படுத்தி விடுவான், இரு கழிகளுக்கிடையே உள்ள இடைவெளி ஐநூறு வருடத் தொலை தூரமாகும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٣٦٩– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ مُوْجِبَاتِ الْمَغْفِرَةِ اِطْعَامُ الْمُسْلِمِ السَّغْبَانِ.
رواه البيهقي في شعب الايمان: ٣ /٢١٧
369.”பசியால் வாடும் முஸ்லிமுக்கு உணவளிப்பது, மன்னிப்பைக் கட்டாயமாக்கும் காரியங்களைச் சார்ந்தது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٣٧٠– عَنْ ابَيْ سَعِيْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَيُّمَا مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا عَلَي عُرْيٍ، كَسَاهُ اللهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ، وَاَيُّمَا مُسْلِمٍ اَطْعَمَ مُسْلِمًا عَلَي جُوْعٍ، اَطْعَمَهُ اللهُ مِنْ ثِمَارِ الْجَنَّةِ، وَاَيُّمَا مُسْلِمٍ سَقي مُسْلِمًا عَلَي ظَمَإٍ، سَقَاهُ اللهُ مِنَ الرَّحِيْقِ الْمَخْتُوْمِ.
رواه ابو داؤد، باب في فضل سقي الماء:١٦٨٢
370.”எவர் ஆடையற்ற நிலையில் இருக்கும் முஸ்லிமுக்கு ஆடை அணிவிப்பாரோ, அல்லாஹுதஆலா அவருக்கு சுவனத்தின் பச்சைநிற ஆடையை அணிவிப்பான்; எவர் பசித்திருக்கும் முஸ்லிமுக்கு உணவு அளிப்பாரோ, அல்லாஹுதஆலா அவருக்கு சுவர்க்கக் கனிகளைப் புசிக்க செய்வான்; எவர் தாகித்த நிலையில் உள்ள முஸ்லிமுக்கு நீர் அருந்தச் செய்வாரோ, அல்லாஹுதஆலா அவருக்கு முத்திரையிடப்பட்ட தூய்மையான மதுவை அருந்தச் செய்வான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٧١– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ اَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ ﷺ: اَيُّ اْلاِسْلاَمِ خَيْرٌ؟ فَقَالَ: تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلي مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ.
رواه البخاري، باب اطعام الطعام من الاسلام، رقم:١٢
371.”இஸ்லாத்தில் மிகச் சிறந்த செயல் எது?” என ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்டார், “உணவு அளித்தல், அறிந்தவர், அறியாதவர் (அனைவருக்கும்) ஸலாம் சொல்லுதல்” என நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள் என ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٧٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اُعْبُدُوْا الرَّحْمنَ، وَاَطْعِمُوْا الطَّعَامَ، وَاَفْشُوْا السَّلاَمَ تَدْخُلُوْا الْجَنَّةَ بِسَلاَمٍ.
رواه الترمذي وقال هذا حديث حسن صحيح، باب ما جاء في فضل اطعام الطعام، رقم:١٨٥٥
372.”ரஹ்மானை வணங்கிக் கொண்டிருங்கள், உணவளித்து வாருங்கள். ஸலாமைப் பரப்பிக் கொண்டிருங்கள். (இந்தச் செயல்களால்) நீங்கள் ஸலாமத்தாக (சாந்தமாக) சுவர்க்கத்தினுள் நுழைவீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٧٣– عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْحَجُّ الْمَبْرُوْرُ لَيْسَ لَهُ جَزَاءٌ اِلاَّ الْجَنَّةُ قَالُوْا: يَا نَبِيَّ اللهِﷺ مَا الْحَجُّ الْمَبْرُوْرُ؟ قَالَ: اِطْعَامُ الطَّعَامِ، وَاِفْشَاءُ السَّلاَمِ.
رواه احمد: ٣ /٣٢٥
373.”ஹஜ்ஜுல் மப்ரூர் (ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜு)க்குரிய பிரதிபலன் சுவர்க்கத்தைத் தவிர வேறு எதுமில்லை” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, “அல்லாஹ்வின் நபியே! ஹஜ்ஜுல் மப்ரூர் என்றால் என்ன?” என்று ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். “(எந்த ஹஜ்ஜில்) உணவளிக்கப்படுமோ ஸலாமைப் பரப்பப்படுமோ அந்த ஹஜ்ஜே ஹஜ்ஜுல்மப்ரூர்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٣٧٤– عَنْ هَانِيءٍ ؓ اَنَّهُ لَمَّا وَفَدَ عَلَي رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: يَا رَسُوْلَ اللهِﷺ اَيُّ شَيْءٍ يُوْجِبُ الْجَنَّةَ؟ قَالَ: عَلَيْكَ بِحُسْنِ الْكَلاَمِ، وَبَذْلِ الطَّعَامِ.
رواه الحاكم وقال: هذا حديث مستقيم وليس له علة ولم يخرجاه ووافقه الذهبي:١ /٢٣
374.”ஹஜ்ரத் ஹானி (ரலி) அவர்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “யாரஸூலல்லாஹ், சுவனத்தைக் கடமையாக்கும் செயல் எது?” என்று கேட்டார், “நீங்கள் அழகிய முறையில் உரையாடுவதையும், உணவளிப்பதையும் அவசியமாகக் கடைபிடித்து வாரும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٣٧٥– عِنِ الْمَعْرُوْرِؒ قَالَ: لَقِيْتُ اَبَا ذَرٍّ ؓ بِالرَّبَذَةِ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلي غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذلِكَ فَقَالَ: اِنِّيْ سَابَبْتُ رَجُلاً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ ﷺ: يَا اَبَا ذَرٍّ! اَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ اِنَّكَ امْرَؤٌ فِيْكَ جَاهِلِيَّةٌ، اِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللهُ تَحْتَ اَيْدِيْكُمْ، فَمَنْ كَانَ اَخُوْهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوْهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوْهُمْ فَأَعِيْنُوْهُمْ.
رواه البخاري، باب المعاصي من امر الجاهلية….، رقم:٣٠
375.ஹஜ்ரத் மஃரூர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “நான், ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களை “ரபதா” என்ற இடத்தில் சந்தித்த போது, அவர்களும், அவர்களுடைய அடிமையும் ஒரே வகையான ஆடைகளை அணிந்திருந்தனர். தங்களின் உடைகளுக்கும் தங்கள் அடிமையின் உடைகளுக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லையே! “காரணம் என்ன?” என்று அவர்களிடம் கேட்டேன், “ஒரு முறை நான், என்னுடைய அடிமையைத் திட்டிவிட்டேன், அவரது தாயாரைத் திட்டி உரோஷ மூட்டினேன். இந்த செய்தி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்துவிட்டது “அபூதர்ரே, நீர் இவரை திட்டி, இவரது தாயாரைத் ரோஷமூட்டினீரா? அறியாமைக் காலத்தின் பழக்கம் இன்னும் உம்மில் குடிகொண்டிருக்கிறது. உம்முடைய அடிமைகள் உம்முடைய சகோதரர்கள்! அல்லாஹுதஆலா அவர்களை உமது ஆதிக்கத்தில் வைத்துள்ளான். எனவே, எவர் அடிமையைச் சகோதரராகப் பெற்று இருக்கிறாரோ, அவர் தான் உண்பதையே அவருக்கும் உண்ணக் கொடுக்கவும், தான் அணிவதையே அவருக்கும் அணியக் கொடுக்கவும், நீங்கள் பாரமான வேலையை அவர்கள் மீது சுமத்தாதீர்கள், அவர்களிடம் சிரமமமான வேலையை ஒப்படைத்தால் அவர்களுடன் ஒத்துழையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
(புகாரி)
٣٧٦– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: مَا سُئِلَ رَسُوْلُ اللهِ ﷺ شَيْئًا قَطُّ فَقَالَ: لاَ.
رواه مسلم، باب في سخائه !، رقم: ٦٠١٨
376.”நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் பொருள் கேட்கப்பட்டு, நபி (ஸல்) அவர்கள் அதை மறுத்துக் கூறியதாக ஒரு போதும் நடந்ததில்லை” என ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- எந்த நிலையிலும் நபி (ஸல்) அவர்கள் யாசிப்பவருக்கு இல்லையென்று மறுத்துக் கூறமாட்டார்கள். தம்மிடம் இருந்தால் உடனே கொடுத்துவிடுவார்கள், எதும் இல்லை யென்றால் வாக்குறுதி அளிப்பார்கள்; அல்லது மௌனமாக இருந்து விடுவார்கள் அல்லது தகுந்த காரணங்கள் சொல்வார்கள் அல்லது அவருக்காக துஆச் செய்வார்கள்.
(மளாஹிர்ஹக்)
٣٧٧– عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓعَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَطْعِمُوا الْجَائِعَ، وَعُوْدُوا الْمَرِيْضَ، وَفُكُّوا الْعَانِيَ.
رواه البخاري، باب قول الله تعالي: كلوا من طيبات ما رزقناكم…، رقم: ٥٣٧٣
377.”பசித்தவருக்கு உணவளியுங்கள்! நோயாளியை நலன் விசாரியுங்கள்! (அநியாயமாகச்) சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்க முயற்சி செய்யுங்கள்!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٧٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اللهَ يَقُوْلُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ! مَرِضْتُ فَلَمْ تَعُدْنِيْ، قَالَ: يَا رَبِّ! كَيْفَ اَعُوْدُكَ؟ وَاَنْتَ رَبُّ الْعَالَمِيْنَ، قَالَ: اَمَا عَلِمْتَ اَنَّ عَبْدِيْ فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، اَمَا عَلِمْتَ اَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِيْ عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ! اِسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِيْ، قَالَ: يَا رَبِّ! وَكَيْفَ اُطْعِمُكَ؟ وَاَنْتَ رَبُّ الْعَالَمِيْنَ، قَالَ: اَمَا عَلِمْتَ اَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِيْ فُلاَنٌ فَلَمْ تُطْعِمْهُ، اَمَا عَلِمْتَ اَنَّكَ لَوْ اَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذلِكَ عِنْدِيْ؟ يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تُسْقِنِيْ، قَالَ: يَا رَبِّ! كَيْفَ اَسْقِيْكَ؟ وَاَنْتَ رَبُّ الْعَالَمِيْنَ، قَالَ: اِسْتَسْقَاكَ عَبْدِيْ فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ، اَمَا اِنَّكَ لَوْ اَسْقَيْتَهُ وَجَدْتَ ذلِكَ عِنْدِيْ.
رواه مسلم، باب فضل عيادة المريض، رقم:٦٥٥٦
378.கியாமத் நாளன்று, “ஆதமுடைய மகனே! நான் நோயாளியாக இருந்தேன். நீ என்னை நலன் விசாரிக்கவில்லை?” என்று அல்லாஹுதஆலா கூறுவான், “என் இரட்சகனே! நான் எப்படி உன்னை நலன் விசாரிப்பேன்? நீயோ அகிலங்களின் இரட்சகன், (நீயோ நோய் என்ற குறையை விட்டும் பரிசுத்தமானவன்)” என்று அடியான் கூறுவான். “என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தது உனக்குத் தெரியாதா? நீ அவனை நலன் விசாரிக்கவில்லை. நீ அவனை நலன் விசாரித்திருந்தால் அங்கே என்னை அடைந்துதிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?” என அல்லாஹுதஆலா கூறுவான். “ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவு தரவில்லை” என்று அல்லாஹுதஆலா கூறுவான். “என்னுடைய இரட்சகனே! நான் எப்படி உனக்கு உணவு அளிப்பேன்? நீயோ அகிலங்களின் இரட்சகன்‘ என அடியான் கூறுவான். “என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவு கொடுக்கவில்லை, நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?” என்று அல்லாஹுதஆலா கூறுவான். “ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன், நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று அல்லாஹுதஆலா கூறுவான், “என்னுடைய இரட்சகனே! நான் எப்படி உனக்குத் தண்ணீர் கொடுப்பேன்? நீயோ அகிலங்களின் இரட்சகன்‘ என்று அடியான் கூறுவான். “என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் நீர் அருந்தக் கேட்டான், நீ அவனுக்குத் தண்ணீர் புகட்டவில்லை, நீ அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் என்னிடம் அதன் நன்மையை பெற்றிருப்பாய்” என்று அல்லாஹுதஆலா கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٧٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِذَا صَنَعَ لِأَحَدِكُمْ خَادِمُهُ طَعَامَهُ ثُمَّ جَاءَهُ بِهِ، وَقَدْ وَلِيَ حَرَّهُ وَدُخَانَهُ، فَلْيُقْعِدْهُ مَعَهُ، فَلْيَأْكُلْ، فَاِنْ كَانَ الطَّعَامُ مَشْفُوْهًا قَلِيْلاً، فَلْيَضَعْ فِيْ يَدِهِ مِنْهُ اُكْلَةً اَوْ اُكْلَتَيْنِ.
رواه مسلم، باب اطعام المملوك مما ياكل…، رقم:٤٣١٧
379.”உங்களின் பணியாள் உங்களுக்கு உணவு தயாரித்த பின் நெருப்பின் வெப்பத்திலும் புகையிலும் பல சிரமங்கள் மேற்கொண்டு அவ்வுணவை எடுத்துக் கொண்டு வந்தால், எஜமானன் தன்னுடன் சாப்பிட அவரையும் உட்காரவைக்கவும், அந்த உணவு (இருவருக்குப் போதாமல்) குறைவாக இருந்தால் அந்த உணவிலிருந்து ஓரிரு கவளமாவது எஜமானன் தன் பணியாளருக்குக் கொடுக்கவும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٨٠– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَا مِنْ مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا اِلاَّ كَانَ فِيْ حِفْظِ اللهِ مَا دَامَ مِنْهُ عَلَيْهِ خِرْقَةٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في ثواب من كسا مسلما، رقم:٢٤٨٤
380.”எவரொரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு ஆடை அணிவித்தால், உடுத்துபவரின் உடம்பில் அந்த ஆடையின் ஒரு பகுதி இருக்கும்வரை அணிவித்தவர் அல்லாஹுதஆலாவின் பாதுகாப்பில் இருப்பார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٨١– عَنْ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مُنَاوَلَةُ الْمِسْكِيْنِ تَقِيْ مِيْتَةَ السُّوْءِ.
رواه الطبراني في الكبير والبيهقي في شعب الايمان والضياء وهو حديث صحيح، الجامع الصغير:٢ /٦٥٧
381.”வறியவருக்குத் தனது கையால் தானம் வழங்குவது தீய மரணத்தைவிட்டும் பாதுகாக்கும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் ஹாரிஸதுப்னு நுஃமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, பைஹகீ, ளியாஉ, ஜாமிஉஸ்ஸஙீர்)
٣٨٢– عَنْ اَبِيْ مُوْسَي ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ الْخَازِنَ الْمُسْلِمَ اْلاَمِيْنَ الَّذِيْ يُنَفِّذُ – وَرُبَّمَا قَالَ يُعْطِيْ – مَا اُمِرَ بِهِ، فَيُعْطِيْهِ كَامِلاً مُوَفَّرًا، طَيِّبَةً بِهِ نَفْسُهُ، فَيَدْفَعُهُ اِلَي الَّذِيْ اُمِرَ لَهُ بِهِ اَحَدُ الْمُتَصَدِّقَيْنِ.
رواه مسلم، باب اجر الخازن الامين…، رقم:٢٣٦٣
382.”நம்பிக்கைக்குரிய முஸ்லிம் காசாளர் தன் முதலாளியின் உத்தரவுப்படி, யாருக்கு எவ்வளவு பொருள் கொடுக்க வேண்டுமென்றுச் சொல்லப்பட்டதோ, அதை மனப்பூர்வமாக கொடுத்தால், அவருக்கும் முதலாளியைப் போன்று தர்மம் செய்த நன்மை கிடைக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٨٣– عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا اِلاَّ كَانَ مَا اُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا اَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَمَا اَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَلاَ يَرْزَؤُهُ اَحَدٌ اِلاَّ كَانَ لَهُ صَدَقَةٌ.
رواه مسلم، باب فضل الغرس والزرع، رقم: ٣٩٦٨
383.”எவர் ஒரு முஸ்லிம் மரம் நடுவாரோ பிறகு அம்மரத்திலிருந்து எவ்வளவு உண்ணப்படுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை மரம் நட்டவருக்குக் கிடைக்கும். அதிலிருந்து எவ்வளவு திருடப்பட்டதோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை கிடைக்கும், (திருடியதன் மீது சொந்தக்காரருக்குத் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்) எவ்வளவு அதிலிருந்து பிராணிகள் உண்ணுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை அவருக்குக் கிடைக்கும். எவ்வளவு அதிலிருந்து பறவைகள் உண்ணுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை அவருக்குக் கிடைக்கும். யார் அந்த மரத்திலிருந்து சிறிதளவு (பழம் போன்றவைகளை) குறைத்தாலும் அந்த மரத்தின் சொந்தக்காரருக்குக் அதைத் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٨٤– عَنْ جَابِرٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ اَحْيَي اَرْضًا مَيْتَةً، فَلَهُ فِيْهَا اَجْرٌ.
(الحديث) رواه ابن حبان (واسناده علي شرط مسلم):١١/٦١٥
384.”எவர் வறண்ட நிலத்தை விளைச்சல் நிலமாக்குவாரோ அதில் அவருக்குக் கூலி உண்டு” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٣٨٥– عَنِ الْقَاسِمِؒ عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ اَنَّ رَجُلاً مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا بِدِمَشْقَ فَقَالَ لَهُ: أَتَفْعَلُ هذَا وَاَنْتَ صَاحِبُ رَسُوْلِ اللهِ ﷺ، فَقَالَ: لاَ تَعْجَلْ عَلَيَّ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ غَرَسَ غَرْسًا لَمْ يَأْكُلْ مِنْهُ آدَمِيٌّ وَلاَ خَلْقٌ مِنْ خَلْقِ اللهِ اِلاَّ كَانَ لَهُ صَدَقَةٌ.
رواه احمد:٦/٤٤٤
385.ஹஜ்ரத் காஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “திமஷ்க் நகரத்தில், ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் மரம் நட்டுக் கொண்டிருந்த போது, ஒருவர் ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்களைக் கடந்து சென்றார். அவர் ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்களிடம், “தாங்களோ நபி (ஸல்) அவர்களின் தோழராக இருக்க தாங்களும் (உலக) அலுவல்களில் ஈடுபடுகிறீர்களா?’ என்று கேட்டார். ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள், “என்னைக் குறை சொல்வதில் அவசரப்படாதீர், “எவர் ஒரு மரம் நட்டு, அம்மரத்திலிருந்து மனிதரோ அல்லது அல்லாஹுதஆலாவுடைய படைப்புகளில் ஏதேனும் ஒரு படைப்போ சாப்பிட்டால், மரம் நட்டது அவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கக் காரணமாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٣٨٦– عَنْ اَبِيْ اَيُّوْبَ اْلاَنْصَارِيِّ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ اَنَّهُ قَالَ: مَا مِنْ رَجُلٍ يَغْرِسُ غَرْسًا اِلاَّ كَتَبَ اللهُ لَهُ مِنَ اْلاَجْرِ قَدْرَ مَا يَخْرُجُ مِنْ ثَمَرِ ذلِكَ الغِرَاسِ.
رواه احمد:٥/٤١٥
386.”எவர் ஒருவர் மரம் ஒன்றை நட்டு, அம்மரத்திலிருந்து எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ, அவைகளின் அளவுக்கு அல்லாஹுதஆலா மரத்தை நட்டவருக்குக் கூலியை எழுதுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅய்யூப் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٣٨٧– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: كَانَ رَسُوْلَ الله ﷺ يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيْبُ عَلَيْهَا.
رواه البخاري، باب المكافاة في الهبة، رقم:٢٥٨٥
387.”நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது, மேலும் அதற்குப் பதிலாக (அதே சமயம் அல்லது வேறோரு சமயத்தில்) தாமும் ஏதேனும் கொடுக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்” என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٨٨– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اُعْطِيَ عَطَاءً فَوَجَدَ فَلْيَجْزِ بِهِ، فَاِنْ لَمْ يَجِدْ فَلْيُثْنِ بِهِ، فَمَنْ اَثْنَي بِهِ فَقَدْ شَكَرَهُ، وَمَنْ كَتَمَهُ فَقَدْ كَفَرَهُ.
رواه ابو داؤد، باب في شكر المعروف، رقم:٤٨١٣
388.”எவர் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டு, அவரிடம் கொடுப்பதற்கு ஏதேனும் இருந்தால், அதற்குப் பதிலாக அன்பளிப்பு வழங்கியவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கவும். எதுமில்லை யென்றால், (நன்றி கூறும் வகையில்) கொடுத்தவரைப் புகழவும். ஏனேனில், யார் புகழ்ந்தாரோ அவர் நிச்சயமாக நன்றி செலுத்திவிட்டார், யார் (புகழாமல் உபகாரத்தை) மறைத்தாரோ அவர் நன்றி மறந்தவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٨٩– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَجْتَمِعُ الشُّحُّ وَاْلاِيْمَانُ فِيْ قَلْبِ عَبْدٍ اَبَدًا.
(وهو جزء من الحديث) رواه النسائي، باب فضل من عمل في سبيل الله….، رقم:٣١١٢
389.”அடியானின் உள்ளத்தில் கருமித்தனமும், ஈமானும் ஒருபோதும் ஒன்று சேராது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٣٩٠– عَنْ اَبِيْ بَكْرِ نِ الصِّدِّيْقِ ؓعَنِ النّبِيِّ ﷺ قَالَ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ خَبٌّ وَلاَ بَخِيْلٌ وَلاَ مَنَّانٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في البخل: ١٩٦٣
390.”ஏமாற்றுபவர், கருமித் தனம் உள்ளவர், உபகாரம் செய்த பின் சொல்லிக்காட்டுபவர் ஆகியோர் சுவனம் செல்லமாட்டார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)