இல்மு, திக்ரு
இல்மு
அல்லாஹ்விடமிருந்து நேரடியாகப் பலன் பெற்றுக்கொள்ள, அல்லாஹ்வின் கட்டளைகளை முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறையில் நிறைவேற்றும் நோக்கத்துடன் கல்வியைக் கற்றுக் கொள்வது, (இச்சமயம் அல்லாஹ் என்னிடமிருந்து எதை விரும்புகிறான் என்று ஆய்ந்தறிவது).


இல்மின் சிறப்புகள்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولاً مِّنْكُمْ يَتْلُوا عَلَيْكُمْ آيتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتبَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّالَمْ تَكُونُوا تَعْلَمُونَ۞)
البقرة: ١٥١
1. உங்களிலிருந்து – உங்கள் மீது நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைத் தூய்மைப்படுத்தி உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுத் தரும்படியான ஒரு தூதரை உங்களிடையே நாம் அனுப்பியது போன்றே (நம்முடைய அருட்கொடைகளை நிரப்பமாக்குவோம்)
(அல்பகரா:151)
وَقَالَ تَعَالي: (وَأَنْزَلَ اللهُ عَلَيْكَ الْكِتبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ط وَكَانَ فَضْلُ اللهِ عَلَيْكَ عَظِيماً۞).
النساء:١١٣
2. அல்லாஹ் உம்மீது வேதத்தையும், ஞானத்தையும் இறக்கிவைத்து, நீர் அறிந்திராதவற்றையும் உமக்கு அவன் கற்றுக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருள் உம்மீது மகத்தானதாகிவிட்டது.
(அந்நிஸா:113)
وَقَالَ تَعَالي: (وَقُلْ رَّبِّ زِدْنِي عِلْماً۞).
طه:١١٤
3. மேலும், “என்னுடைய ரப்பே, கல்வியை எனக்கு (மென்மேலும்) நீ அதிகப்படுத்துவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறுவீராக!.
(தாஹா:114)
وَقَالَ تَعَالي: (وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ وَسُلَيْمنَ عِلْماً ج وَقَالاَ اَلْحَمْدُ لِلّهِ الَّذِي فَضَّلَنَا عَلَي كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ۞).
النمل:١٥
4. தாவூதுக்கும் சுலைமானுக்கும் கல்வியறிவைத் திட்டமாக நாம் கொடுத்தோம்; “நம்பிக்கையாளர்களான தன் அடியார்களில் பெரும்பாலோரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!” என்று இருவரும் கூறினர்.
(அந்நம்ல்:15)
وَقَالَ تَعَالي: (وَتِلْكَ اْلاَمْثَالُ نَضْرِبُهَا للِنَّاسِ ج وَمَا يَعْقِلُهَا إِلاَّ الْعلِمُونَ۞).
العنكبوت:٤٣
5. இந்த உதாரணங்கள் – மனிதர்களுக்காக இவற்றை நாம் சொல்லிக் காட்டுகிறேம் – அறிவாளிகளைத் தவிர (மற்றவர்) இவற்றை விளங்கமாட்டார்கள்.
(அல்அன்கபூத்:43)
وَقَالَ تَعَالي: (إِنَّمَا يَخْشَي اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمؤُط۞).
فاطر:٢٨
6. அல்லாஹ்வை அவனுடைய அடியார்களிலிருந்து அஞ்சுபவரெல்லாம் அறிஞர்களே.
(ஃபாதிர்:28)
وَقَالَ تَعَالي: (قُلْ هَلْ يَسْتَـوِي الَّذِيـنَ يَعْلَمُونَ وَالَّذِينَ لاَ يَعْلَمُونَ ط۞).
الزمر:٩
7. அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று (நபியே,) நீர் கூறுவீராக!.
(அஸ்ஸுமர்:9)
وَقَالَ تَعَالي: (يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللهُ لَكُمْ ج وَإِذَا قِيلَ انْشُزُوا فَانْشُزُوا يَرْفَعِ اللهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ لاوَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجتٍ ط وَاللهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ۞).
المجادلة:١١
8. நம்பிக்கையாளர்களே, சபைகளில் (நெருங்கியிருந்து) இடமளியுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் இடமளியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு (சுவனத்தில்) இடமளிப்பான்; இன்னும் (சபையிலிருந்து) “நீங்கள் எழுந்து நில்லுங்கள்” என்று கூறப்பட்டால், எழுந்து நில்லுங்கள்; உங்களிலிருந்து நம்பிக்கை கொண்டவர்களுக்கும் (மார்க்க) ஞானம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல தகுதிகளை உயர்த்துகிறான் – அல்லாஹ் – நீங்கள் செய்கின்றவற்றை நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.
(அல்முஜாதலா:11)
وَقَالَ تَعَالي: (وَلاَ تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ۞).
البقرة:٤٢
9. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
(அல்பகரா:42)
وَقَالَ تَعَالي: (أَتَاْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتبَ ط أَفَلاَ تَعْقِلُونَ۞).
البقرة:٤٤
10. நீங்கள் (தவ்ராத்) வேதத்தை ஓதிக் கொண்டே, உங்களை நீங்கள் மறந்துவிட்டு, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு நீங்கள் ஏவுகிறீர்களா? (இதனை) நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
(அல்பகரா:44)
وَقَالَ تَعَالي: (وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَي مَا أَنْهكُمْ عَنْهُ ط۞).
هود:٨٨
11. (ஆகவே,) எதைவிட்டும் உங்களை நான் தடுக்கிறேனோ அத (னை நான் செய்வதி)ன் மூலமாக உங்களுக்கு நான் எதிரானவனாக இருக்க நான் விரும்பவில்லை.
(ஹூது:88)
ஹதீஸ்கள்:-
١– عَنْ أَبِي مُوسَيؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَثَلُ مَا بَعَثَنِيَ اللهُ مِنَ الْهُدَي وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضاً فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتِ الْمَاءَ فَأَنْبَتَتِ الْكَلأَ وَالْعُشْبَ الْكَثِيرَ وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ الْمَاءَ فَنَفَعَ اللهُ بِهَا النَّاسَ فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا وَأَصَابَ مِنْهَا طَائِفَةً أُخْرَي إِنَّمَا هِيَ قِيعَانٌ لاَ تُمْسِكُ مَاءً وَلاَ تُنْبِتُ كَلأً فَذلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِيَ اللهُ بِهِ فَعَلِمَ وَعَلَّمَ وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذلِكَ رَأْساً وَلَمْ يَقْبَلْ هُدَي اللهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ
رواه البخاري باب فضل من علم وعلم رقم:٧٩
1. “அல்லாஹ் எனக்குக் கொடுத்தனுப்பிய அறிவு, ஞானம், நேர்வழிக்கு உதாரணம், நன்றாகப் பொழிந்த மழையைப் போன்று, மழையைப் பெற்ற நிலம் மூன்று வகைப்படும், முதல் வகை: மழை பொழியப்பட்ட பூமி சிறந்த விளைச்சல் தன்மை உடையது, அது நீரைத் தன்னுள் இழுத்துக் கொண்டு ஏராளமான புற்பூண்டுகள், தாவரங்களை விளையச் செய்தது. இரண்டாம் வகை: கடினமானது, அது தண்ணீரைத் தன்னுள் உறிஞ்சிக் கொள்ளவில்லை, ஆனால் தன் மேல் தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டது, அல்லாஹ் அதன் மூலமும் மக்களுக்குப் பயனளிக்கச் செய்தான், அவர்கள் தண்ணீரைத் தாமும் பருகிப் பிராணிகளுக்கும் பருகச் செய்து, வயல்களுக்கும் பாய்ச்சினார்கள். மூன்றாம் வகை: நீரையும் தேக்காத புற் பூண்டுகளையும் விளைவிக்காத பொட்டல் மைதானம். (இவ்வாறே மக்களும் மூன்று வகையினர்) முதல் வகை மனிதர்: தீனில் விளக்கம் பெற்றவர், அல்லாஹ் எனக்குக் கொடுத்தனுப்பிய ஹிதாயத்தைக் கொண்டு அவருக்கும் பயன் அளித்தான், அவர் தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பித்தார். இரண்டாம் வகை மனிதர்: அவர் பலன் பெறவில்லை, ஆனால் மற்றவர்கள் அவர் மூலம் பலன் பெற்றனர். மூன்றாம் வகை மனிதர்: நான் கொண்டு வந்த இல்மை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, அல்லாஹ் எனக்குக் கொடுத்தனுப்பிய நேர்வழியையும் அவர் ஏற்கவில்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢– عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ.
رواه الترمذي وقال:هذا حديث حسن صحيح باب ماجاء في تعليم القران رقم:٢٩٠ ٧
2. “உங்களில் மிகச் சிறந்தவர் குர்ஆனைக் கற்றுக் கொள்பவரும், கற்றுக் கொடுப்பவரும் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣– عَنْ بُرَيْدَةَ اْلاَسْلَمِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ الْقُرْآنَ وَتَعَلَّمَهُ وَعَمِلَ بِهِ أُلْبِسَ يَوْمَ الْقِيَامَةِ تَاجاً مِنْ نُورٍ ضَوْؤُهُ مِثْلُ ضَوْءِ الشَّمْسِ وَيُكْسَي وَالِدَيْهِ حُلَّتَانِ لاَ يَقُومُ بِهِمَا الدُّنْيَا فَيَقُولاَنِ بِمَا كُسِينَا هذَا؟ فَيُقَالُ بِأَخْذِ وَلَدِكُمَا الْقُرْآنَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذهبي:١ /٥٦٨
3. குர்ஆனை ஓதி அதைக் கற்று அதன் படி செயல்படுபவருக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று ஒளியால் ஆன கிரீடம் அணிவிக்கப்படும், அதன் ஒளி சூரியனைப் போன்று இருக்கும், முழு உலகமும் நிகராக முடியாத இரு ஆடைகள் அவருடைய பெற்றோருக்கு அணிவிக்கப்படும், “இந்த ஆடைகள் எங்களுக்கு எதன் காரணமாக அணிவிக்கப்படுகின்றன?” என்று அவர்கள் கேட்பார்கள், “உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் குர்ஆனை கற்றுக் கொடுத்ததற்குப் பகரமாக!” என்று பதில் கூறப்படும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் புரைதா அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٤– عَنْ مُعَاذِنِ الْجُهَنِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجاً يَوْمَ الْقِيَامَةِ ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ فَمَاظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهذَا.
رواه أبوداود باب في ثواب قراءة القرآن رقم: ١٤٥٣
4. “குர்ஆனைக் கற்று அதன்படி செயல்படுபவரின் பெற்றோருக்கு கியாமத் நாளில் சூரியனைவிட ஒளிமிக்க கிரீடம் சூட்டப்படும்”, அந்தச் சூரியன் உங்கள் வீடுகளுக்குள் இருந்தால் (எந்த அளவு ஒளி வீசுமோ அதைவிட அதிகமான ஒளியை அந்தக் கிரீடம் தரும்) இந்நிலையில் குர்ஆன்படி அமல் செய்பவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “பெற்றோருக்கே இந்த வெகுமதியென்றால், அமல் செய்பவருக்கு இதைவிட ஏராளமான வெகு மதிகள் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدْرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لاَ يُوحَي إِلَيْهِ لاَ يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَجِدَ مَعَ مَنْ وَجَدَ وَلاَ يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلاَمُ اللهِ.
رواه الحاكم وقال: صحيح الاسناد الترغيب: ٢/٣٥٢
5. “எவர் குர்னைக் கற்றாரோ அவர் நபித்துவ ஞானங்களைத் தமது விலா எலும்புகளுக்கு மத்தியில் அமைத்துக் கொள்கிறார், ஆயினும் அவருக்கு வஹீ மட்டும் வருவதில்லை. குர்ஆனை மனனம் செய்தவருக்கு கோபம் கொள்வோருடன் சேர்ந்து கோபங் கொள்வதும், அறிவற்றோருடன் சேர்ந்து அறிவற்ற முறையில் நடந்து கொள்வதும் முறையல்ல, ஏனேன்றால், அவர் தமக்குள் அல்லாஹ்வின் வசனங்களைச் சுமந்திருக்கிறார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம், தர்ஙீப்)
٦ – عَنْ جَابِرٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْعِلْمُ عِلْمَانِ: فَعِلْمٌ فِي الْقَلْبِ فَذَاكَ الْعِلْمُ النَّافِعُ وَعِلْمٌ عَلَي اللِّسَانِ فَذَاكَ حُجَّةُ اللهِ عَلَي ابْنِ آدَمَ.
رواه الحافظ ابوبكر الخطيب في تاريخه باسناد حسن الترغيب: ٥/ ١٠٨
6. “கல்வி இருவகைப்படும், ஒன்று, உள்ளத்தில் பதிந்தது இதுவே பலன் தரும் கல்வி, மற்றோன்று, நாவில் இருக்கும் கல்வி, (கற்றபடி) செயல்படாத, மனத் தூய்மையை விட்டும் நீங்கிய கல்வி. அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அம்மனிதனுக்கு எதிராக (அவன் குற்றவாளி என்பதற்கு) வாதிட ஆதாரமாகும். “கற்றிருந்தும் ஏன் செயல்படவில்லை!‘ என்று இந்த இல்மு குற்றம் சாட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தர்ஙீப்)
٧– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: خَرَجَ رَسُولُ اللهِ ﷺ وَنَحْنُ فيِ الصُّفَّةِ فَقَالَ: أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِليَ بُطْحَانَ أَوْ إِليَ الْعَقِيقِ فَيَأْتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ فيِ غَيْرِ إِثْمٍ وَلاَ قَطْعِ رَحِمٍ؟ فَقُلْنَا: يَارَسُولَ اللهِﷺ نُحِبُّ ذلِكَ قَالَ: أَفَلاَ يَغْدُو أَحَدُكُمْ إِلَي الْمَسْجِدِ فَيَعْلَمُ أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللهِ خَيْرٌلَّهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلاَثٌ خَيْرٌ لَّهُ مِنْ ثَلاَثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَّهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ اْلإِبِلِ؟
رواه مسلم باب فضل قراءة القران …رقم: ١٨٧٣
7. ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் திண்ணையில் (ஸுஃப்பா) அமர்ந்திருந்த போது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வந்து,”ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் புத்ஹான் அல்லது அகீக் என்னும் கடை வீதிக்குச் சென்று, (திருட்டு போன்ற) குற்றம் செய்யாமலும் உலூவை முறிக்காமலும் இரு உயர்ந்த ஒட்டகங்களைப் பிடித்துவர உங்களில் எவர் விரும்புவார்?” என்று கேட்டார்கள். “யாரஸூலல்லாஹ், நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம்” என பதில் சொன்னோம். “நீங்கள் காலை நேரத்தில் பள்ளிக்குச் சென்று குர்ஆனிலிருந்து இரண்டு ஆயத்துகளைக் கற்பது அல்லது ஓதுவது இரு ஒட்டகங்களைவிட, மூன்று ஆயத்துகள் மூன்று ஒட்டகங்களை விட, நான்கு ஆயத்துகள் நான்கு ஒட்டகங்களைவிடச் சிறப்பானவை. இன்னும் அதற்குச் சமமான ஒட்டகங்களைவிடச் சிறந்தவை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஆயத்துகளின் எண்ணிக்கை எந்த அளவோ அந்த அளவு ஆண், பெண் ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும், அதாவது ஓர் ஆயத் ஓர் ஆண், பெண் ஒட்டகத்தைவிடச் சிறந்தது என்பது ஹதீஸின் கருத்தாகும்.
٨– عَنْ مُعَاوِيَةَؓ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللهُ يُعْطِي.
(الحديث) رواه البخاري باب من يرد الله به خيرا رقم:٧١
8. “அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ, அவருக்கு தீனுடைய விளக்கத்தைக் கொடுக்கிறான், நான் பங்கிடக் கூடியவனே; அல்லாஹ் தான் வழங்குபவன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறதாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- ஹதீஸின் இரண்டாம் பகுதியின் பொருள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இல்மைப் பங்கிடக் கூடியவர்கள், அந்த இல்மின் விளக்கம், அதனைச் சிந்தனை செய்யும் திறன், அதன்படி நடக்க தவ்பீக் (நல்லுதவி) வழங்கக்கூடியவன் அல்லாஹ் என்பதாகும் (மிர்காத்)
٩–عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: ضَمَّنِي رَسُولُ اللهِ ﷺ وَقَالَ: اَللّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ.
رواه البخاري باب قول النبي ﷺ اللهم علمه الكتاب رقم:٧٥
9. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் என்னைத் தம் நெஞ்சோடு அணைத்து, “யாஅல்லாஹ், இவருக்கு குர்ஆனுடைய இல்மை வழங்குவாயாக!” எனத் துஆச் செய்தார்கள்.
(புகாரி)
١٠ – عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَثْبُتَ الْجَهْلُ وَيُشْرَبَ الْخَمْرُ وَيَظْهَرَ الزِّنَا.
رواه البخاري باب رفع العلم وظهور الجهل رقم:٨٠
10. “உலகிலிருந்து இல்மு உயர்த்தப்படுவதும், அறியாமை பரவுவதும் (பகிரங்கமாக) மது அருந்தப்படுவதும், விபச்சாரம் பரவுவதும், இறுதித் தீர்ப்பு நாளின் அடையாளங்களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١١– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ حَتَّي إِنِّي لأَرَي الرِّيَّ يَخْرُجُ فِي أَظَافِيرِي ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي يَعْنِي عُمَرَ قَالُوا: فَمَا أَوَّلْتَهُ يَارَسُولَ اللهِ؟ قَالَ: الْعِلْمَ.
رواه البخاري باب اللبن رقم:٧٠ ٠٦
11. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு தடவை நான் உறங்கிக் கொண்டிருந்தேன். (கனவில்) எனக்குப் பால் கிண்ணம் தரப்பட்டது அதனை அருந்தினேன். அந்தப் பாலை அருந்தியதும் என் நகங்களும் தாகம் தீருவதை உணர்ந்தேன். பிறகு எஞ்சிய பாலை உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, “இந்தக் கனவிற்கு விளக்கம் என்ன?’ என்று ஸஹாபாப் பெருமக்கள் கேட்டார்கள். “இல்ம்‘ என்பதாக விளக்கமளித்தார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கல்வி ஞானங்களிலிருந்து ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு நிறைவான பங்கு கிடைக்கும், என்பதாகும்.
(புகாரி)
١٢– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ: لَنْ يَشْبَعَ الْمُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّي يَكُونَ مُنْتَهَاهُ الْجَنَّةُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في فضل الفقه علي العبادة رقم:٢٦٨٦
12. “உண்மை விசுவாசி நன்மையை (கல்வி ஞானத்தை)க் கொண்டு ஒருபோதும் மன நிறைவு அடையமாட்டான். கல்வி ஞானங்களை (இல்மை) கற்றுக் கொண்டே இருப்பான், எதுவரை என்றால், அவனுக்கு மரணம் வந்து சுவர்க்கத்தில் நுழையும் வரை!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٣– عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ ﷺ: يَا أَبَا ذَرٍّ! لأَنْ تَغْدُوَفَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللهِ خَيْرٌ لَّكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَاباً مِنَ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ مِّنْ أَنْ تُصَلِّيَ اَلْفَ رَكْعَةٍ.
رواه ابن ماجه باب فضل من تعلم القران وعلمه رقم:٢١٩
13. “அபூதரே, நீர் காலையில் சென்று குர்ஆனிலிருந்து ஓர் ஆயத்தைக் கற்பது, நஃபிலான நூறு ரக்அத்துகள் தொழுவதைவிடச் சிறந்தது. மேலும், நீர் இல்முடைய ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வது, அந்த இல்மின்படி அந்தச் சமயம் செயல்பட்டாலும் அல்லது செயல்படவில்லையானாலும் சரியே! (உதாரணமாக தயம்மும் பற்றிய சட்டங்கள்) அது ஆயிரம் ரக்அத் நஃபில் தொழுவதைவிடச் சிறந்தது” என்று தன்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
١٤– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ جَاءَ مَسْجِدِي هذَا لَمْ يَأْتِهِ إِلاَّ لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ وَمَنْ جَاءَ لِغَيْرِذَلِكَ فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إِلَي مَتَاعِ غَيْرِهِ.
رواه ابن ماجه باب فضل العلماء …رقم:٢٢٧
14. “எவர் என்னுடைய இந்தப் பள்ளிக்கு (மஸ்ஜிதுந்நபவீக்கு) நல்லவைகளை கற்கவோ, கற்பிக்கவோ மட்டும் வருகிறாரோ, அவர் (நன்மையில்) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்பவரின் தகுதியில் உள்ளார். எவர் இது அல்லாத வேறு நோக்கத்திற்காக வருகிறாரோ அவர் பிறரின் பொருட்களைப் பார்ப்பவரைப் போன்றவர் ஆவார்” (மற்றவர்களின் பொருள்களைப் பார்ப்பதால் தனக்கு எந்தப் பயனும் கிட்டாது என்பது தெளிவானதே) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொல்லத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(இப்னுமாஜா)
தெளிவுரை:- ஹதீஸில் கூறப்பட்ட சிறப்புகள் எல்லாப் பள்ளிவாசல் களுக்கும் பொருந்தும். ஏனேனில், பள்ளிகள் யாவும் மஸ்ஜிதுந் நபவிக்குக் கட்டுப்பட்டதாகும்.
(இன்ஜாஹுல் ஹாஜ்ஜா)
١٥– عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَقُولُ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ ﷺ يَقُولُ: خَيْرُكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقاً إِذَا فَقُهُوا.
رواه ابن حبان واسناده صحيح علي شرط مسلم:١ /٢٩٤
15. “எவர் மார்க்க ஞானத்துடன் நற்குணமும் பெற்றிருக்கிறாரோ, அவரே உங்களில் மிகச் சிறந்தவர்” என்று அபுல் காஸிம் (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
١٦– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الذَّهَبِ وَالْفِضَّةِ فَخِيَارُهُمْ فيِ الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فيِ اْلإِسْلاَمِ إِذَا فَقُهُوا.
(الحديث) رواه احمد:٢ /٥٣٩
16. “மக்கள் தங்கம், வெள்ளிச் சுரங்கங்களைப் போலாவார். இஸ்லாத்துக்கு முன் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள், மார்க்க ஞானம் பெற்றிருந்தால் இஸ்லாத்தைத் தழுவிய பின்னும் அவர்களே சிறந்தவர்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- இந்த ஹதீஸில், மனிதர்களை சுரங்கங்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது, பலதரப்பட்ட சுரங்கங்களில் பலதரப்பட்ட கனிமப் பொருட்கள் இருப்பது போன்று, சிலவற்றில் தங்கம், வெள்ளியைப் போன்ற விலை உயர்ந்தவை இருக்கும். சிலவற்றில் சுண்ணாம்பு, நிலக்கரியைப் போன்ற விலை குறைந்தவையிருக்கும். அவ்வாறே, பல்வேறு மனிதர்களில் பற்பல பழக்கங்களும் பண்புகளும் இருக்கும், அதனால் சிலர் உயர்ந்த தரத்திலும், சிலர் தாழ்ந்த தரத்திலும் இருப்பர். தங்கம், வெள்ளி முதலியவை சுரங்கத்தில் இருக்கும்வரை அதற்கு எந்த மதிப்பும் இல்லை. சுரங்கத்திலிருந்து வெளிவந்த பின்பே அதற்கு மதிப்பு ஏற்படுகிறது. அதுபோன்றே குப்ர் என்னும் இருளில் மனிதன் மறைந்திருக்கும் வரை அவனுள் எவ்வளவு தானதர்மம், வீரம் இருந்தாலும் இஸ்லாத்தைத் தழுவியபின் மார்க்க ஞானம் பெறுவதால் மதிப்பைப் பெறுவது போன்று பெறமுடியாது.
(மளாஹிர் ஹக்)
١٧– عَنْ أَبِي أُمَامَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ غَدَا إِلَي الْمَسْجِدِ لاَ يُرِيدُ إِلاَّ أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامّاً حَجَّتَهُ.
رواه الطبراني في الكبير ورجاله موثقون كلهم مجمع الزوائد:١ /١٢٣
17. “நன்மையானவற்றைக் கற்கவோ, கற்பிக்கவோ பள்ளிக்கு வருபவருக்கு கிடைக்கும் நன்மை, பரிபூரண ஹஜ்ஜுச் செய்த ஹாஜிக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٨– عَنِ ابْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: عَلِّمُوا وَيَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا وَإِذَا غَضِبَ احَدُكُمْ فَلْيَسْكُتْ.
رواه احمد والبزاروفيه ليث بن اب سليم وهوضعيف (المجمع):١/١٣١
18. “மக்களுக்கு (தீனைக்) கற்றுக்கொடுங்கள், அவர்களுடன் மென்மையான முறையில் பழகுங்கள், கடினமான முறையை மேற்கொள்ளாதீர்கள், உங்களில் ஒருவர் கோபம் கொண்டால் மௌனமாக இருக்கவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٩– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّهُ مَرَّ بِسُوقِ الْمَدِينَةِ فَوَقَفَ عَلَيْهَا قَالَ: يَا أَهْلَ السُّوقِ مَا أَعْجَزَكُمْ؟ قَالُوا: وَمَا ذَاكَ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: ذَاكَ مِيرَاثُ رَسُولِ اللهِ ﷺ يُقَسَّمُ وَأَنْتُمْ ههُنَا أَلاَ تَذْهَبُونَ فَتَأْخُذُونَ نَصِيبَكُمْ مِنْهُ؟ قَالُوا: وَأَيْنَ هُوَ؟ قَالَ: فِي الْمَسْجِدِ فَخَرَجُوا سِرَاعاً وَوَقَفَ أَبُوهُرَيْرَةَ لَهُمْ حَتَّي رَجَعُوا فَقَالَ لَهُمْ: مَا لَكُمْ؟ قَالُوا: يَا أَبَا هُرَيْرَةَ: فَقَدْ أَتَيْنَا الْمَسْجِدَ فَدَخَلْنَا فَلَمْ نَرَ فِيهِ شَيْئاً يُقَسَّمُ فَقَالَ لَهُمْ أَبُوهُرَيْرَةَ وَمَا رَأَيْتُمْ فِي الْمَسْجِدِ أَحَدًا؟ قَالُوا: بَلَي! رَأَيْنَا قَوْماً يُصَلُّونَ وَقَوْماً يَقْرَءُونَ الْقُرَآنَ وَقَوْماً يَتَذَاكَرُونَ الْحَلاَلَ وَالْحَرَامَ فَقَالَ لَهُمْ أَبُوهُرَيْرَةَ: وَيْحَكُمْ فَذَاكَ مِيرَاثُ مُحَمَّدٍ !.
رواه الطبراني في الاوسط واسناده حسن مجمع الزوائد:١/١٢٣
19. ஒரு முறைமதீனாவின் கடைவீதியில் சென்று கொண்டிருந்த ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கு நின்றுவிட்டார்கள். “கடைவீதியில் இருப்போரே! எது உங்களை இயலாமல் ஆக்கியது?’ எனக் கேட்டார்கள். “அபூஹுரைரா அவர்களே! என்ன விஷயம்?’ என்று மக்கள் கேட்க, “நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்! ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சொத்துகள் பங்கிடப்படுகின்றன. நீங்கள் சென்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சொத்துக்களிலிருந்து தத்தமது பங்கைப் பெற விரும்ப வில்லையா?’ என்று கேட்டார்கள். “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் அனந்தரச் சொத்துக்கள் எங்கே பங்கிடப்படுகின்றன?’ என மக்கள் கேட்க, “பள்ளியில் பங்கிடப்படுகின்றன‘ என்று பதில் அளித்தார்கள். மக்கள் பள்ளிக்கு விரைந்து சென்றார்கள், ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்தவாறு அங்கேயே இருந்தார்கள், அதற்குள் மக்களும் திரும்பி வந்துவிட்டார்கள்‘, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) “ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?” என மக்களிடம் கேட்டார்கள். “நாங்கள் பள்ளிக்குச் சென்று, பார்த்தோம், அங்கு எந்தப் பொருளும் பங்கிடப்படவில்லை‘ என்று சொன்னார்கள். “நீங்கள் பள்ளியில் எவரையும் பார்க்கவில்லையா?’ என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கேட்க, “சிலர் தொழுது கொண்டும் சிலர் குர்ஆன் ஓதிக்கொண்டும், சிலர் ஹலால், ஹராமைப் பற்றி விவாதித்துக் கொண்டும் இருக்கக் கண்டோம்‘ என்றார்கள். “உங்கள் மீது பரிதாபப்படுகிறேன்! இதுதானே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் அனந்தரச் சொத்துக்கள்‘ என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٠ – عَنْ عَبْدِ اللهِ يَعْنِي ابْنَ مَسْعُودؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا أَرَادَ اللهُ بِعَبْدٍ خَيْرًا فَقَّهَهُ فِي الدِّينِ وَاَلْهَمَهُ رُشْدَهُ.
رواه البزار والطبرانى فى الكبير ورجاله موثقون مجمع الزوائد:١/١٢١٢٠
20. “எவருக்கேனும் அல்லாஹ் நன்மையை நாடினால், தீனுடைய விளக்கத்தையும் (நல்ல எண்ணங்களையும்) அவர் உள்ளத்தில் உதிக்கச் செய்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(பஸ்ஸார், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢١– عَنْ أَبِي وَاقِدِنِ اللَّيْثِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ فَأَقْبَلَ اثْنَانِ إِليَ رَسُولِ اللهِ ﷺ وَذَهَبَ وَاحِدٌ قَالَ فَوَقَفَا عَلَي رَسُولِ اللهِ ﷺ فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَي فُرْجَةً فَي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا وَأَمَّا اْلآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِباً فَلَمَّا فَرَغَ رَسُولُ اللهِ ﷺ قَالَ: أَلاَ أُخْبِرُكُمْ عَلَي النَّفَرِ الثَّلاَثَةِ؟ أَمَّا أَحَدُهُمْ فَأَوَي إِلَي اللهِ تَعَالَي فَآوَاهُ اللهُ إِلَيْهِ وَأَمَّا اْلآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللهُ مِنْهُ وَأَمَّا اْلآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللهُ عَنْهُ.
رواه البخاري باب من قعد حيث ينتهي به المجلس …رقم:٦٦
21. ஹஜ்ரத் அபூவாகித் லைஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்த போது, மக்களும் அன்னாருடன் இருந்தனர். அச்சமயம் மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் பக்கம் வந்து அன்னாருக்கு சமீபமாக நின்றனர். மூன்றாமவர் சென்று விட்டார், சபையில் காலியாக இருந்த இடத்தில் அவ்விருவரில் ஒருவர் அமர்ந்து கொண்டார். மற்றவர் மக்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார், மூன்றாம் மனிதர் (முன் சொன்னதுபோன்று) புறமுதுகிட்டுச் சென்றுவிட்டார். சபை முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “இம்மூவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லவா?” எனக் கேட்டுவிட்டு, “முதலாமவர், அல்லாஹ்விடத்தில் தன் இடத்தை அமைத்துக் கொண்டார், சபையில் அமர்ந்துவிட்டார். அல்லாஹ்வும் அவருக்கு (தன் கருணையின் கீழ்) இடமளித்தான். இரண்டாமவர், (சபையில் அமர) வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடம், வெட்கத்துடன், நடந்து கொண்டான். ஆயினும் அவரை அல்லாஹ் தன் கூறிலிருந்து பாக்கியமற்றவராக்கவில்லை. மூன்றாமவர், சபையைப் புறக்கணித்தார் அல்லாஹ்வும் அவரை புறக்கணித்துவிட்டான்” என்று கூறினார்கள்.
(புகாரி)
٢٢– عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّؒ عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَأْتِيكُمْ رِجَالٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ وَيَتَعَلَّمُونَ فَإِذَا جَاؤُوكُمْ فَاسْتَوْصُوابِهِمْ خَيْرًا قَالَ: فَكَانَ أَبُو سَعِيدٍ إِذَا رَآنَا قَالَ: مَرْحَباً بِوَصِيَّةِ رَسُولِ اللهِ ﷺ.
رواه الترمذي باب ماجاء في الاستيصاء ….رقم:٢٦٥١
22. “உங்களிடம் கிழக்கத்திய நாடுகளிலிருந்து தீனைக் கற்றுக் கொள்ள சிலர் வருவார்கள், அவர்கள் உங்களிடம் வரும்போது அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளும்படி உங்களுக்கு உபதேசிக்கிறேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அன்னாரின் மாணவர் அபூஹாரூன் அப்தீ (ரஹ்) கூறுகிறார்கள். “எங்களை ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் பார்த்தால் எம்மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உபதேசித்தார்களோ அம்மக்களின் வரவு நல்வரவாகுக!’ என்று கூறுவார்கள்.
(திர்மிதீ)
٢٣– عَنْ وَاثِلَةَ بْنِ اْلاَسْقَعِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ طَلَبَ عِلْماً فَأَدْرَكَهُ كَتَبَ اللهُ لَهُ كِفْلَيْنِ مِنَ اْلاَجْرِ وَمَنْ طَلَبَ عِلْماً فَلَمْ يُدْرِكْهُ كَتَبَ اللهُ لَهُ كِفْلاً مِنَ اْلاَجْرِ.
رواه الطبراني في الكبير ورجاله موثقون مجمع الزوائد:١/١٢٣
23. “எவரொருவர் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் ஈடுபட்டு பின்பு அந்தக் கல்வியை அடைந்து கொண்டாரோ, அவருக்கு அல்லாஹ் இரண்டு கூலியை எழுதுகிறான். எவரொருவர் இல்மைத் தேடி அதை அடைந்து கொள்ள முடியவில்லையோ, அவருக்கு அல்லாஹ் ஒரு கூலியை எழுதுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٤– عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالِ نِ الْمُرَادِيِّؓ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ ﷺ وَهُوَ فِي الْمَسْجِدِ مُتَّكِيءٌ عَلَي بُرْدٍ لَّهُ أَحْمَرَ فَقُلْتُ لَهُ: يَارَسُولَ اللهِﷺ إِنِّي جِئْتُ أَطْلُبُ الْعِلْمَ فَقَالَ: مَرْحَباً بِطَالِبِ الْعِلْمِ إِنَّ طَالِبَ الْعِلْمِ لَتَحُفُّهُ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا ثُمَّ يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضاً حَتَّي يَبْلُغُوا السَّمَاءَ الدُّنْيَا مِنْ مَحَبَّتِهِمْ لِمَا يَطْلُبُ.
رواه الطبراني في الكبير ورجاله رجال الصحيح مجمع الزوائد:١/١٣١
24. ஹஜ்ரத் ஸஃப்வானிப்னு அஸ்ஸால் முராதீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நான் நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தேன், நபி (ஸல்) சிவப்புக் கோடுகளிட்ட போர்வையின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். “யாரஸூலல்லாஹ், நான் இல்மைக் கற்க வந்துள்ளேன்” என்றேன். “கல்வி கற்க வந்தவரின் வருகை நல்வரவாகட்டும்! கல்வி கற்பவரை மலக்குகள் தங்கள் இறக்கைகளால் மூடிக் கொள்கின்றனர். வானம் வரை எட்டும் அளவு ஒருவர் மீது ஒருவர் ஏறி அடுக்கடுக்காய் ஒன்று சேர்கின்றனர். இவர் கற்கின்ற (மார்க்கக்) கல்வியின் மீதுள்ள நேசத்தால் இவ்வாறு செய்கின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٥–عَنْ ثَعْلَبَةَ بْنِ الْحَكَمِ الصَّحَابِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِﷺ: يَقُولُ اللهُ لِلْعُلَمَاءِ يَوْمَ الْقِيَامَةِ إِذَا قَعَدَ عَلَي كُرْسِيِّهِ لِفَصْلِ عِبَادِهِ: إِنِّي لَمْ أَجْعَلْ عِلْمِي وَحِلْمِي فِيكُمْ إِلاَّ وَأَنَا أُرِيدُ أَنْ أَغْفِرَ لَكُمْ عَلَي مَا كَانَ فِيكُمْ وَلاَ أُبَالِي.
رواه الطبراني في الكبير ورواته ثقات الترغيب:١/١٠ ١ ورجاله موثقون مجمع الزوايد:١ /١٢٦
25. அல்லாஹ் கியாமத் நாளன்று தன் அடியார்களுக்கிடையே தீர்ப்பு வழங்க சிம்மாசனத்தில் (தனது தகுதிக்கேற்ப) அமர்ந்ததும், மார்க்க அறிஞர்களை நோக்கி, “என் இல்மைக் கொண்டும் சகிப்புத் தன்மையைக் கொண்டும் உங்களைக் கௌரவித்ததற்கெல்லாம் காரணம், உங்களிடம் தவறுகள் இருந்தாலும் அதை மன்னித்துவிட வேண்டும் என்பதற்கே! மேலும் நான் அவற்றை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை” என்பான். நீங்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும் உங்களை மன்னிப்பது எனக்குப் பெரும் விஷயமல்ல என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் ஸஃலபத்துப்னு ஹகம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
٢٦– عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ سَلَكَ طَرِيقاً يَطْلُبُ فِيهِ عِلْماً سَلَكَ اللهُ بِهِ طَرِيقاً مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضاً لِّطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فيِ السَّموَاتِ وَاْلاَرْضِ وَالْحِيتَانُ فيِ جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَي الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَي سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ اْلاَنْبِيَاءِ وَإِنَّ اْلاَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلاَ دِرْهَماً وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ.
رواه ابوداؤد باب في فضل العلم رقم:٣٦٤١
26. “எவர் மார்க்கக் கல்வியைக் கற்க ஏதேனும் ஒரு வழியில் நடந்து செல்கிறாரோ, அவரை அல்லாஹ் சுவர்க்க வழிகளில் ஒன்றில் நடக்கச் செய்கிறான். மார்க்கக் கல்வியைக் கற்பது சுவர்க்கத்தில் நுழையக் காரணமாகிறது. மார்க்கக் கல்வி கற்பவரை மகிழ்விப்பதற்காக மலக்குகள் தம் இறக்கைகளை விரிக்கின்றனர். வானம், பூமியிலுள்ள சகல படைப்புகளும் நீரிலிருக்கும் மீனினங்களும் கல்வி கற்றவரின் பாவமன்னிப்புக்காகத் துஆச் செய்கின்றன. நட்சத்திரங்களைவிட பதினான்காம் இரவின் நிலவுக்குச் சிறப்பு இருப்பது போன்று, நிச்சயமாக வணக்கசாலியை(ஆபிதை)விட கற்றவருக்குச் சிறப்பு இருக்கிறது. நிச்சயமாக கற்றவர்கள் நபிமார்களின் வாரிசுகளாவார்கள், நபிமார்கள் தீனார், திர்ஹம்(சொத்து, செல்வங்)களை அனந்தரச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. அவர்களோ, கல்வி ஞானங்களையே அனந்தரச் சொத்தாக விட்டுச் சென்றார்கள். எனவே, தீனுடைய இல்மைப் பெற்றவர் (வாரிசு சொத்திலிருந்து) முழுமையான பங்கைப் பெற்றுக் கொண்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٧– عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: وَمَوْتُهُ (أَيِ الْعَالِمِ۞) مُصِيبَةٌ لاَ تُجْبَرُ وَثُلْمَةٌ لاَ تُسَدُّ وَهُوَ نَجْمٌ طُمِسَ مَوْتُ قَبِيلَةٍ أَيْسَرُ مِنْ مَوْتِ عَالِمٍ.
(وهو بعض الحديث) رواه البيهقي في شعب الايمان:٢ /٢٦٤
27. “ஓர் ஆலிமின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும், நிறைவு செய்ய முடியாத குறையாகும், அவர் தம் மரணத்தின் காரணமாக ஒளியிழந்த நட்சத்திரமாக ஆகிவிடுகிறார். ஓர் ஆலிமுடைய மரணத்தைவிட ஒரு கோத்திரத்தார் அணைவரின் மரணம் மிகச் சாதாரணமானது!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٢٨– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: إِنَّ مَثَلَ الْعُلَمَاءِ كَمَثَلِ النُّجُومِ فِي السَّمَاءِ يُهْتَدَي بِهَا فيِ ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ فَإِذَا انْطَمَسَتِ النُّجُومُ أَوْ شَكَ أَنْ تَضِلَّ الْهُدَاةُ.
رواه احمد:٣ /١٥٧
28. “ஆலிம்கள் கடலிலும், தரையிலும் வழி தெரிந்து கொள்ள இருளில் உதவும் நட்சத்திரங்களுக்கு ஒப்பாவர். நட்சத்திரங்கள் ஒளியிழந்து விடுமாயின் நடந்து செல்வோர் வழி தவறிவிடலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை: ஆலிம்கள் இல்லையென்றால் மக்கள் வழி தவறி விடுவார்கள் என்பதாம்.
٢٩– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: فَقِيهٌ أَشَدُّ عَلَي الشَّيْطَانِ مِنْ اَلْفِ عَابِدٍ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في فضل الفقه علي العبادة رقم:٢٦٨١
29. “மார்க்கத்தைக் கற்றறிந்த ஓர் ஆலிம் ஆயிரம் ஆபிதுகளைவிட ஷைத்தானுக்கு மிகக் கடினமானவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஆயிரம் ஆபிதுகளை ஏமாற்றுவது ஷைத்தானுக்கு எளிது விளக்கம் பெற்ற ஓர் ஆலிமை ஏமாற்றுவது ஷைத்தானுக்கு மிகக் கடினம்.
٣٠ – عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّؓ قَالَ: ذُكِرَ لِرَسُولِ اللهِ ﷺ رَجُلاَنِ أَحَدُهُمَا: عَابِدٌ وَاْلآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللهِﷺ: فَضْلُ الْعَالِمِ عَلَي الْعَابِدِ كَفَضْلِي عَلَي أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلُ السَّموَاتِ وَاْلاَرْضِينَ حَتَّي النَّمْلَةَ فيِ جُحْرِهَا وَحَتَّي الْحُوتَ لَيُصَلُّونَ عَلَي مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب صحيح باب ما جاء في فضل الفقه علي العبادة رقم:٢٦٨٥
30. ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கல்வி கற்ற ஓர் ஆலிம், வணக்கசாலியான ஓர் ஆபித் ஆகிய இரு மனிதர்களைப் பற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்ட போது, “ஆபிதைவிட ஆலிமுக்குள்ள சிறப்பு, உங்களில் சாதாரண மனிதரைவிட எனக்குள்ள சிறப்பைப் போன்றாகும், மேலும், மக்களுக்கு நன்மையானவற்றைக் கற்பிப்பவர் மீது, அல்லாஹ், அவனது மலக்குகள், வானம் பூமியிலுள்ள சகல படைப்புகள், புற்றுகளிலுள்ள எறும்புகள், மீன்களும் கூட (நீரில் தத்தமது முறைப்படி) ரஹ்மத்தைப் பொழியுமாறு துஆச் செய்கின்றன” என்று கூறினார்கள்.
(திர்மிதீ)
٣١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَقُوْلَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: أَلاَ إِنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَّا فِيهَا إِلاَّ ذِكْرُ اللهِ وَمَا وَالاَهُ وَعَالِمٌ أَوْ مُتَعَلِّمٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب منه حديث ان الدنيا ملعونة رقم:٢٣٢٢
31. “கவனமாகக் கேளுங்கள்! உலகமும், உலகத்திலுள்ளவை யாவும் அல்லாஹ்வின் ரஹ்மத்தை (அருளை) விட்டும் தூரமாக்கப் பட்டவை, ஆயினும் அல்லாஹ்வுடைய திக்ரு அவனை நெருங்க உதவியாக இருப்பவை ஆலிம், அல்லது இல்மை கற்றுக் கொள்ளும் மாணவரைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٢– عَنْ أَبِي بَكْرَةَؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: اُغْدُ عَالِماً أَوْ مُتَعَلِّماً أَوْ مُسْتَمِعاً أَوْ مُحِبّاً وَلاَ تَكُنِ الْخَامِسَةَ فَتَهْلِكَ وَالْخِامِسَةُ أَنْ تُبْغِضَ الْعِلْمَ وَأَهْلَهُ.
رواه الطبراني في الثلاثة والبزار ورجاله موثقون مجمع الزوائد:١/١٢٢
32. “நீங்கள் ஆலிமாகவோ அல்லது இல்மைக் கற்பவராகவோ, அல்லது இல்மைக் கவனத்துடன் கேட்பவராகவோ இல்லையெனில், இல்மை, (கல்வி) அறிஞர்களை நேசிப்பவராகவோ இருங்கள், (இந்நான்கல்லாமல்) ஐந்தாம் வகையினராக ஆகிவிடாதீர்கள்! இல்லை யெனில் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள், ஐந்தாம் வகை என்பது கல்வியுடனும், கல்வி மான்களுடனும் வெறுப்புக் கொள்வதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என ஹஜ்ரத் அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(தபரானீ பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٣– عَنِ ابْنِ مَسْعُودؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ: رَجُلٍ آتَاهُ اللهُ مَالاً فَسَلَّطَهُ عَلَي هَلَكَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٍ آتَاهُ اللهُ حِكْمَةً فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا.
رواه البخاري باب انفاق المال في حقه رقم:١٤٠ ٩
33. “இருவரைத் தவிர வேறு எவர் மீதும் பொறாமை கொள்வது கூடாது. (பொறாமை கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்விருவர் மீது பொறாமை கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கும்), முதலாமவர்: ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தந்து, அவர் அதனை அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் வழிகளில் செலவிடும் செல்வந்தர். இரண்டாமவர்: ஒருவருக்கு அல்லாஹ் கல்வி ஞானத்தைக் கொடுத்தான், அவர் அதன்படித் தீர்ப்பளித்து அதைப் பிறருக்குக் கற்பிக்கும் மார்க்க அறிஞர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் இப்னுமஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٤– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ ﷺ ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ الشَّعْرِ لاَ يُرَي عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلاَ يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّي جَلَسَ إِلَي النَّبِيِّ ﷺ فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَي رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَي فَخِذَيْهِ وَقَالَ: يَا مُحَمَّدُ ﷺ أَخْبِرْنِي عَنِ اْلإِسْلاَمِ؟ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَّ إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ وَتُقِيمَ الصَّلاَةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلاً قَالَ: صَدَقْتَ قَالَ: فَعَجِبْنَا لَهُ يَسْاَلُهُ وَيُصَدِّقُهُ قَالَ: فَأَخْبِرْنِي عَنِ اْلإِيمَانِ ؟ قَالَ: أَنْ تُؤْمِنَ بِاللهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ اْلآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ قَالَ: صَدَقْتَ قَالَ: فَأَخْبِرْنِي عَنِ اْلإِحْسَانِ؟ قَالَ: أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ: قَالَ: فَأَخْبِرْنِي عَنِ السَّاعَةِ؟ قَالَ: مَاالْمَسْؤُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ قَالَ: فَأَخْبِرْنِي عَنْ أَمَارَاتِهَا؟ قَالَ: أَنْ تَلِدَ اْلاَمَةُ رَبَّتَهَا وَأَنْ تَرَي الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ قَالَ: ثُمَّ إِنْطَلَقَ فَلَبِثْتُ مَلِيّاً ثُمَّ قَالَ لِي: يَا عُمَرُ! أَتَدْرِي مَنِ السَّائِلُ؟ قُلْتُ اَللّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: فَإِنَّهُ جِبْرِيلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ.
رواه مسلم باب بيان الايمان والاسلام… رقم:٩٣
34. ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நாங்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்த போது, ஒருவர் வந்தார், அவருடைய ஆடைகள் மிகவும் வெண்மையாகவும், அவர் முடிகள் மிகவும் கறுப்பாகவும் இருந்தன. அவர் பிரயாணி என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை (அவர் மதீனாவாசி என்று சொல்ல எங்களில் யாரும் அவரை அறியோம்). தமது முழங்காலை நபி (ஸல்) அவர்களின் முழங்காலோடு சேர்த்தவாறு மிகவும் நெருங்கி அமர்ந்தார், தன் தொடைகளின் மீது இரு கைகளையும் வைத்தவாறு, “முஹம்மத் (ஸல்) அவர்களே! இஸ்லாம் என்றால் என்ன?” என்றார். “இஸ்லாம் என்பது, நீர் வணக்க வழிபாட்டிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை, மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என (மனதாலும் நாவாலும்) சாட்சி சொல்வது, தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுப்பது, ரமளான் நோன்பு வைப்பது, ஹஜ் செய்ய சக்தியிருந்தால் ஹஜ் செய்வது, ஆகியவையாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அவர், “தாங்கள் உண்மையே கூறினீர்கள்” என்றார். (தெரியாதவரைப் போல) கேள்வியும் கேட்கிறார். பதிலைக் கேட்டதும் தெரிந்தவரைப் பதிலை உண்மைப் படுத்தியும் வைக்கும் இவர் செயல் எங்களை வியப்பில் ஆழ்த்தியது‘ என்று ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். பின்பு, “ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டார், “ஈமான் என்பது, அல்லாஹ்வையும், அவனது மலக்குகள், அவன் வேதங்கள், அவன் தூதர்கள், இறுதித் தீர்ப்பு நாள் ஆகியவற்றை உள்ளத்தால் ஒப்புக் கொள்வதும், நன்மை, தீமை விதிப் படியே (நடக்கும்) என்பதில் நம்பிக்கை வைப்பதுமாகும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கும் அந்த மனிதர், “தாங்கள் உண்மையே கூறினீர்கள்‘ என்றார். “இஹ்ஸான் என்றால் என்ன?” என்று கேட்டார். “இஹ்ஸான் என்பது, நீர் அல்லாஹ்வைப் பார்ப்பது போல் வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதாகும். இந்நிலை ஏற்படவில்லை என்றால், அல்லாஹ் உம்மைப் பார்த்துக் கொண்டுள்ளான் என்பதையாவது நினைவில் வையும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். பின்பு அவர், “கியாமத் நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இதைப்பற்றிக் கேட்பவரை விட பதில் சொல்பவர் அதிகம் அறிந்தவர் அல்லர். அதாவது இதைப் பற்றி உம்மைவிட எனக்கு அதிகம் தெரியாது” என்றார்கள். “எனக்கு அதன் அடையாளங்களையாவது அறிவித்துத் தாருங்கள்” என்றார் அவர். “(அதன் அடையாளங்களில் ஒன்று) அடிமைப்பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள். (இரண்டாம் அடையாளம்) ஆடையற்ற, காலணிகள் அற்ற நிலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பரம ஏழைகள் ஒருவர் மற்றவருடன் போட்டி போட்டுக் கொண்டு பெரும் பெரும் கட்டடங்களை எழுப்புவார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். “இதன் பின் அந்த மனிதர் சென்றுவிட்டார். நான் சிறிது நேரம் அமைதியாய் இருந்தேன். (வந்தவரைப் பற்றி எதும் கேட்கவில்லை) பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “உமரே! கேள்வி கேட்டவர் யாரெனத் தெரியுமா?” என்று வினவினார்கள். “அல்லாஹ்வும், அவனது ரஸூலுமே அதிகம் அறிந்தவர்கள்‘ என்றேன். “அவர் ஜிப்ரஈல், உங்களுக்கு தீனைக் கற்பிக்க உங்களிடம் வந்தார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஹதீஸில் கூப்பட்ட, “அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள்” என்பதற்கு இறுதி நாள் சமீபிக்கும் போது பெற்றோருக்கு மாறு செய்வது சர்வ சாதாரணமாகிவிடும். இயற்கையிலேயே தாய்க்கு வழிப்பட்டு நடக்கும் தன்மையுள்ள பெண்மக்களும் தாய்க்கு மாறு செய்வது ஒருபுறமிருக்க, ஓர் எஜமானி தன் அடிமைப் பெண் மீது அதிகாரம் செலுத்துவதைப் போலத் தாய்மார்களின் மீது பெண்மக்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றொரு விளக்கமும் கூறப்பட்டுள்ளது. இதனையே நபி (ஸல்) அவர்கள், “அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் ” என்று சொல்லியுள்ளார்கள். இரண்டாவது அடையாளத்தின் விளக்கம் என்னவென்றால், கியாமத் சமீபமாகும் போது தகுதியற்றவர்களிடம் சொத்து, செல்வங்கள் குவியும் என்பதாகும். அவர்களின் ஆர்வங்களெல்லாம் உயரமான கட்டிடங்களை எழுப்புவதுதான், அதில் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டுக் கொள்வார்கள்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٣٥– عَنِ الْحَسَنِؒ قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ ﷺ عَنْ رَجُلَيْنِ كَانَا فِي بَنِي إِسْرَائِيلَ أَحَدُهُمَا كَانَ عَالِماً يُصَلِّي الْمَكْتُوبَةَ ثُمَّ يَجْلِسُ فَيُعَلِّمُ النَّاسَ الْخَيْرَ وَاْلآخَرُ يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ أَيُّهُمَا أَفْضَلُ؟ قَالَ رَسُولُ اللهِ ﷺ: فَضْلُ هذَا الْعَالِمِ الَّذِي يُصَلِّي الْمَكْتُوبَةَ ثُمَّ يَجْلِسُ فَيُعَلِّمُ النَّاسَ الْخَيْرَ عَلَي الْعَابِدِ الَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ كَفَضْلِي عَلَي أَدْنَاكُمْ رَجُلاً.
رواه الدارمي:١ /١٠٩
35. ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “பனீ இஸ்ராயீலைச் சேர்ந்த இரு மனிதர்களில் ஒருவர் ஆலிம். அவர் பர்ளுத் தொழுதுவிட்டு மக்களுக்கு நன்மையான காரியங்களைக் கற்பிப்பதில் ஈடுபடுவார். மற்றவர் பகலில் நோன்பு வைத்து இரவில் வணக்கத்தில் ஈடுபடுவார், “‘இவ்விருவரில் மிகச்சிறந்தவர் யார்?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “பகலில் நோன்பு வைத்து இரவில் இபாதத் செய்யும் அந்த ஆபிதைவிட, பர்ளுத் தொழுது விட்டு மக்களுக்கு நல்ல காரியங்களைக் கற்பிப்பதில் ஈடுபட்டிருக்கும் அந்த ஆலிமின் சிறப்பு, உங்களில் சாதாரண மனிதரைவிட எனக்குள்ள சிறப்பைப் போன்றது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தாரமீ)
٣٦– عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: تَعَلَّمُوا الْقُرْآنَ وَعَلِّمُوهُ النَّاسَ وَتَعَلَّمُوا الْعِلْمَ وَعَلِّمُوهُ النَّاسَ وَتَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا النَّاسَ فَإِنِّي امْرُؤٌ مَقْبُوضٌ وَإِنَّ الْعِلْمَ سَيُقْبَضُ حَتَّي يَخْتَلِفَ الرَّجُلاَنِ فِي الْفَرِيضَةِ لاَ يَجِدَانِ مَنْ يُّخْبِرُهُمَا بِهَا.
رواه البيهقي في شعب الايمان: ٢/٢٥٥
36. “குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள், மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள், வாரிசுரிமைச் சட்டங்களைக் கற்றுக் கொள்ளுங்கள், அதை மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள். ஏனேனில், என் உயிர் கைப்பற்றப்படும். மார்க்க அறிவு மிகக் குறைந்து விடும் மார்க்க கல்வியும் விரைவில் உயர்த்தப்பட்டுவிடும். ஒரு பர்ளான சட்டம் பற்றி இருவர் தர்க்கித்துக் கொள்வர், அந்தச் சட்டத்தின் சரியான விளக்கத்தைத் தருவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٣٧– عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِﷺ: يَا أَيُّهَا النَّاسُ! خُذُوا مِنَ الْعِلْمِ قَبْلَ أَنْ يُقْبَضَ الْعِلْمُ وَقَبْلَ أَنْ يُرْفَعَ الْعِلْمُ.
(الحديث) رواه احمد: ٥/٢٦٦
37. “மக்களே! இல்ம் திரும்ப எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன் கல்வியை கைப்பற்றப்படுவதற்கு முன் கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٣٨–عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْماً عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدًا صَالِحاً تَرَكَهُ وَمُصْحَفاً وَرَّثَهُ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتاً لاِّبْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّتِهِ وَحَيَاتِهِ يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ.
رواه ابن ماجه باب ثواب معلم الناس الخير رقم:٢٤٢
38. “முதலாவது ஒருவர் தான் கற்ற கல்வியை மற்றவருக்குக் கற்பித்துப் பரப்பச் செய்தல், இரண்டாவது தான் விட்டுச் சென்ற நல்ல பிள்ளைகள், மூன்றாவது அனந்தரச் சொத்தாக விட்டுச் சென்ற குர்ஆன், நான்காவது தான் கட்டிய பள்ளிவாசல், ஐந்தாவது தான் கட்டிய வழிப் போக்கர்கள் தங்கும் விடுதி, ஆறாவது தான் அமைத்த ஆறு, ஏழாவது மரணித்த பின்பும் நன்மைகள் கிடைக்கத் தன் வாழ்நாளில் ஆரோக்கியமான நிலையில் செய்த தானதர்மம் ஆகியவை ஒரு முஃமின் மரணித்த பின்பும், அவருக்கு நன்மைகளைச் சேர்ப்பிக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٣٩– عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثاً حَتَّي تُفْهَمَ.
(الحديث) رواه البخاري باب من اعاد الحديث …رقم:٩٥
39. “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒரு சொல்லை விளங்கிக் கொள்வதற்காக மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள்” என ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முக்கியமான ஒரு செய்தியைக் கூறினால் மக்கள் விளங்கிக் கொள்வதற்காக மூன்று முறை கூறுவார்கள். அதே போன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் பேச்சை மக்கள் இலகுவாக விளங்கிக் கொள்வதற்காக வேண்டி மூன்று திசைகளிலும் திரும்பி மும்முறை கூறுவார்கள்.
(மளாஹிர்ஹக்)
٤٠ – عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ اللهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ إِنْتِزَاعاً يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ وَلكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّي إِذَا لَمْ يَبْقَ عَالِمٌ إِتَّخَذَ النَّاسُ رُؤُوساً جُهَّالاً فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا.
رواه البخاري باب كيف يقبض العلم؟ رقم:١٠٠
40. “இறுதித் தீர்ப்பு நாளின் சமீபத்தில், அல்லாஹ் கல்வி ஞானத்தை மக்களுடைய உள்ளங்களிலிருந்து ஒரே தடவையில் எடுக்கமாட்டான். ஒருவர் பின் ஒருவராக உலமாப் பெருமக்களை அல்லாஹ் மரணிக்கச் செய்வான். இறுதியாக ஒரு ஆலிம் கூட உயிருடன் இருக்கமாட்டார். அப்போது மக்கள் ஆலிம்களுக்குப் பதிலாக அறிவற்றவர்களைத் தங்களது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம், மார்க்கச் சட்டங்கள் கேட்கப்படும், அவர்கள் அறிவற்ற முறையில் சட்டத்துக்கு மாற்றமாகத் தீர்ப்பளிப்பார்கள். இதன் விளைவாக தானும் வழி கெட்டு பிறரையும் அந்தத் தலைவர்கள் வழி கெடுப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்” என ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னுஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٤١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ يُبْغِضُ كُلَّ جَعْظَرِيٍّ جَوَّاظٍ سَخَّابٍ بِالْأَسْوَاقِ جِيفَةٍ بِاللَّيْلِ حِمَارٍ بِالنَّهَارِ عَالِمٍ بِأَمْرِ الدُّنْيَا جَاهِلٍ بِأَمْر اْلآخِرَةِ.
رواه ابن حبان (واسناده صحيح علي شرط مسلم):١/٢٧٤
41. “கடின சுபாவம் உடைய, அதிகமாகச் சாப்பிடக்கூடிய, கடைவீதிகளில் கூச்சலிடக்கூடிய, இரவில் பிணத்தைப் போல் (தூங்கக்கூடிய) பகலில் கழுதையைப் போல் சுற்றித் திரியக்கூடிய உலக காரியங்களை நல்ல முறையில் அறிந்து, மறுமையின் காரியங்களில் அறிவு ஞானமற்று இருக்கும் ஒவ்வொருவரையும் அல்லாஹ் வெறுக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுஹிப்பான்)
٤٢– عَنْ يَزِيدَ بْنِ سَلَمَةَ الْجُعْفِيِّؓ قَالَ قُلْتُ : يَارَسُولَ اللهِﷺ إِنِّي قَدْ سَمِعْتُ مِنْكَ حَدِيثاً كَثِيرًا أَخَافُ أَنْ يُنْسِيَ أَوَّلَهُ آخِرُهُ فَحَدِّثْنِي بِكَلِمَةٍ تَكُونُ جِمَاعاً قَالَ: اِتَّقِ اللهَ فِيمَا تَعْلَمُ.
رواه الترمذي وقال: هذا حديث ليس اسناده بمتصل وهو عندي مرسل باب ما جاء في فضل الفقه علي العبادة رقم:٢٦٨٣
42. ஹஜ்ரத் யஸீதுப்னு ஸலமா ஜுஃபீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “யாரஸூலல்லாஹ், நான் தங்களிடம் எத்தனையோ ஹதீஸ்களைச் கேள்விப்பட்டுள்ளேன். கடைசியில் கேள்விப்பட்டவை ஞாபகத்தில் இருக்க, முதலில் கேட்டவை மறந்துவிடுமோ என அஞ்சுகிறேன். எனவே, தாங்கள் முழுமையான ஒன்றை எனக்குச் சொல்லித்தாருங்கள்” என்று கேட்டபோது, “நீர் அறிந்தவற்றில் அல்லாஹ்வை பயந்து கொள்ளும்”, (கற்றபடி செயல்படுவீராக) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
٤٣– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: لاَ تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ وَلاَ لِتُمَارُوابِهِ السُّفَهَاءَ وَلاَ تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ فَمَنْ فَعَلَ ذلِكَ فَالنَّارُ النَّارُ.
رواه ابن ماجه باب الانتفاع بالعلم والعمل به رقم:٢٥٠
43. “உலமாப் பெருமக்களிடத்தில் தற்பெருமை கொள்ளவும், அறிவீனர்களுடன் தர்க்கம் செய்யவும், (விளக்கமில்லாத பொது மக்களுடன் விவாதிக்கவும்) மக்களை ஒன்று கூட்டவும் இல்மைக் கற்றுக் கொள்ளாதீர்கள். எவரேனும் இவ்வாறு செய்தால் அவருக்கு நெருப்பு தான் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
தெளிவுரை:- சபைகளைக் கூட்ட கல்வி கற்க வேண்டாம் என்பதின் கருத்தாவது, இல்மின் மூலம் மக்களுடைய கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டாம் என்பதாம்.
٤٤– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللهُ بِلِجَامٍ مِّنْ نَارٍ يَوْمَ الْقِيَامَةِ.
رواه ابوداؤد باب كراهية منع العلم رقم:٣٦٥٨
44. “ஒருவரிடம் மார்க்கக் கல்வி பற்றிக் கேட்கப்பட்டு, (அவர் அறிந்திருந்தும்) அதை மறைத்தால், கியாமத் நாளன்று அல்லாஹ் அவரது வாயில் நெருப்புக் கடிவாளத்தை அணிவிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٤٥– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَثَلُ الَّذِي يَتَعَلَّمُ الْعِلْمَ ثُمَّ لاَ يُحَدِّثُ بِهِ كَمَثَلِ الَّذِي يَكْنِزُ الْكَنْزَ ثُمَّ لاَ يُنْفِقُ مِنْهُ.
رواه الطبراني في الاوسط وفي اسناده ابن لهيعة الترغيب:١/١٢٢
45. “மார்க்கக் கல்வியைக் கற்று அதைப் பிறருக்குக் கற்பிக்காதவர் செல்வங்களைச் சேகரித்து அதைச் செலவு செய்யாதவரைப் போன்றவராவார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
٤٦– عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ يَقُولُ: اَللّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا.
(وهو قطعة من الحديث) رواه مسلم باب في الادعية رقم:٦٩٠٦
46. ஹஜ்ரத் ஸைதுப்னு அர்க்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், (اَللّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا) “யாஅல்லாஹ்! பலன் தராத கல்வியை விட்டும், அச்சமற்ற உள்ளத்தைவிட்டும், மனநிறைவு கொள்ளாத ஆத்மா(நப்ஸ்)வை விட்டும், ஏற்றுக் கொள்ளப்படாத துஆவைவிட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன்” என்று துஆச் செய்து கொண்டு இருப்பார்கள்.
(முஸ்லிம்)
٤٧ – عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّؓ قَالَ: قَالَ رَسُـولُ اللهِ ﷺ: لاَ تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّي يُسْاَلَ عَنْ عُمْرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَا فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَا أَبْلاَهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب في القيامة رقم:٢٤١٧
47. “தனது வயதை எவ்வகையில் செலவு செய்தாய்? கற்ற கல்வியின்படி என்ன அமல் செய்தாய்? எவ்வழியில் செல்வத்தைச் சம்பாதித்தாய்? அதை எவ்வழியில் செலவழித்தாய்? தன் உடல் சக்தியை எந்த வேலையில் ஈடுபடுத்தினாய்?, என்பதைப் பற்றி விசாரணை செய்யப்படாத வரை மனிதனின் பாதங்கள் கியாமத் நாளில் கேள்வி கணக்கின் போது அவற்றின் இடத்தைவிட்டு நகராது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
٤٨– عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللهِ اْلاَزْدِيِّؓ صَاحِبِ النَّبِيِّ ﷺ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ: مَثَلُ الَّذِي يُعَلِّمُ النَّاسَ الْخَيْرَ وَيَنْسَي نَفْسَهُ كَمَثَلِ السِّرَاجِ يُضِيءُ لِلنَّاسِ وَيَحْرُقُ نَفْسَهُ.
رواه الطبراني في الكبير واسناده حسن ان شاء الله تعالي الترغيب: ١/١٢٦
48. “மக்களுக்கு நல்லவைகளைச் சொல்லிவிட்டு (தான் அமல் செய்யாமல்) தன்னை மறந்துவிட்ட மனிதர், தன்னை எரித்துக் கொண்டு மக்களுக்கு ஒளி தரும் விளக்கைப் போன்றவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ஜுன்துபுப்னு அப்துல்லாஹ் அஸ்தீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
٤٩– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: رُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرُ فَقِيهٍ وَمَنْ لَمْ يَنْفَعْهُ عِلْمُهُ ضَرَّهُ جَهْلُهُ اِقْرَإِ الْقُرْآنَ مَا نَهَاكَ فَإِنْ لَمْ يَنْهَكَ فَلَسْتَ تَقْرَءُهُ.
رواه الطبراني في الكبير وفيه شهر بن حوشب وهو ضعيف وقد وثق مجمع الزوائد:١/٤٤٠
49. “கல்விமான்களில் சிலர் மார்க்க விளக்கமில்லாமல் இருக்கின்றனர். (கல்விக்குரிய எந்த விளக்கம் தேவையோ அந்த விளக்கம் அற்றவராக உள்ளனர்) எவரது கல்வி அவருக்குப் பலன் தரவில்லையோ, அவரது அறியாமை அவருக்குத் தீங்கை விளைவிக்கும், (பாவங்கள் மற்றும் தீமைகளைவிட்டு) குர்ஆன் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் வரை தான் நீங்கள் (உண்மையில்) குர்ஆனை ஓதக்கூடியவர்களாகக் கணிக்கப்படுவீர்கள். (பாவங்களை விட்டும்) குர்ஆன் உங்களைத் தடுக்கவில்லையென்றால், உண்மையில் நீங்கள் அதை ஒதியவராகக் கணிக்கப்படமாட்டீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٠ – عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَامَ لَيْلَةً بِمَكَّةَ مِنَ اللَّيْلِ فَقَالَ: اَللّهُمَّ هَلْ بَلَّغْتُ؟ ثَلاَثَ مَرَّاتٍ فَقَامَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَكَانَ أَوَّاهاً فَقَالَ: اَللّهُمَّ نَعَمْ وَحَرَّضْتَ وَجَهَدْتَ وَنَصَحْتَ فَقَالَ لَيَظْهَرَنَّ اْلإِيمَانُ حَتَّي يُرَدَّ الْكُفْرُ إِلَي مَوَاطِنِهِ وَلَتُخَاضَنَّ الْبِحَارُ بِاْلإِسْلاَمِ وَلَيَأْتِيَنَّ عَلَي النَّاسِ زَمَانٌ يَتَعَلَّمُونَ فِيهِ الْقُرْآنَ يَتَعَلَّمُونَهُ وَيَقْرَءُونَهُ وَيَقُولُونَ: قَدْ قَرَأْنَا وَعَلِمْنَا فَمَنْ ذَا الَّذِي هُوَ خَيْرٌ مِنَّا؟ (ثُمَّ قَالَ لأَصْحَابِهِ۞) فَهَلْ فِي أُولئِكَ مِنْ خَيْرٍ؟ قَالُوا: يَارَسُولَ اللهِ وَمَنْ أُولئِكَ؟ قَالَ: أُولئِكَ مِنْكُمْ وَأُولئِكَ وَقُودُ النَّارِ.
رواه الطبراني في الكبير ورجاله ثقات الا ان هند بنت الحارث الخثعمية التابعية لم ارمن وثقها ولا جرحها مجمع الزوائد ١/١٩١ طبع مؤسسة المعارف بيروت وهند مقبولة تقريب التهذيب
50. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “மக்காவில் ஓர் இரவு நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில், “யாஅல்லாஹ்,’ நான் எத்திவைத்துவிட்டேனா?’ என்று மூன்று முறை கூறினார்கள். மென்மையான உள்ளம் படைத்த ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “ஆம், (தாங்கள் எத்திவைத்துவிட்டீர்கள் என்பதற்கு அல்லாஹ் வை நான் சாட்சி ஆக்குகிறேன்), மக்கள் இஸ்லாத்தைத் தழுவ தாங்கள் மிக்க ஆர்வ மூட்டினீர்கள். அதற்காக மிகவும் முயற்சி செய்தீர்கள். உபதேசமும் செய்தீர்கள்” என்று சொன்னார்கள். “குப்ர் அதனுடைய இருப்பிடங்களுக்கே திருப்பிவிடப்படும் வரை, நிச்சயமாக ஈமான் மிகைத்துவிடும். இஸ்லாத்தைப் பரப்ப நீங்கள் நிச்சயம் கடல் பயணமும் செய்வீர்கள், நிச்சயமாக வெகு விரைவில் ஒரு காலம் வர இருக்கிறது, மக்கள் குர்ஆனைக் கற்றுக் கொள்வார்கள், அக்காலத்தில் அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். மேலும், “நாம் குர்ஆனை ஓதி விளங்கிக் கொண்டோம். இப்பொழுது நம்மைவிடச் சிறந்தவர் யார் இருக்கிறார்?’ என்று கேட்பார்கள். இந்த மக்களில் ஏதேனும் நன்மை உண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (இவர்களில் அணுவளவும் நன்மை கிடையாது. எங்களைவிடச் சிறந்தவர் யார் இருக்கிறார் என்று வாதிடுகிறார்கள்). “யாரஸூலல்லாஹ், இவர்கள் யார்?’ என்று ஸஹாபாக்கள் கேட்டதற்கு, “இவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள், (இந்த உம்மத்தைச் சார்ந்தவர்கள்) இவர்கள் தான் நரகத்தின் விறகுகள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥١– عَنْ أَنَسٍؓ قَالَ: كُنَّا جُلُوساً عِنْدَ بَابِ رَسُولِ اللهِ ﷺ نَتَذَاكَرُ يَنْزِعُ هذَا بِآيَةٍ وَيَنْزِعُ هذَا بِآيَةٍ فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ ﷺ كَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ فَقَالَ: يَا هؤُلاَءِ بِهذَا بُعِثْتُمْ أَمْ بِهذَا أُمِرْتُمْ؟ لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ.
رواه الطبراني في الاوسط ورجاله ثقات اثبات مجمع الزوائد:١/ ٣٨٩
51. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள், நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். ஒருவர் ஓர் ஆயத்தையும் மற்றவர் மற்றோர் ஆயத்தையும் தத்தமது வாதத்துக்கு ஆதாரமாகக் கூறிக் கொண்டிருந்தனர். (இவ்வாறு அந்த சபையில் வாக்குவாதம் அதிகமாகிவிட்டது) இதற்குள் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்துவிட்டார்கள், அன்னாரின் முகம் மாதுளம் பழத்தைப் பிழிந்ததைப் போல் (கோபத்தால்) சிவந்து காணப்பட்டது, வந்தவர்கள், “மக்களே! நீங்கள் இவ்வாறு தர்க்கம் செய்து கொள்ளவா உலகிற்கு அனுப்பப்பட்டீர்கள்? அல்லது இவ்வாறு செய்ய உங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதா? நான் இவ்வுலகைவிட்டுச் சென்ற பிறகு, சண்டையிட்டுக் கொண்டு ஒருவர் ஒருவரின் தலைகளை வெட்டிக் கொண்டு காஃபிராகி விடாதீர்கள்” (இச்செயல் குப்ரில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٢– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ: أَنَّ عِيسَي ابْنَ مَرْيَمَؑ قَالَ: إِنَّمَا اْلأُمُورُ ثَلاَثَةٌ: أَمْرٌ تَبَيَّنَ لَكَ رُشْدُهُ فَاتَّبِعْهُ وَأَمْرٌ تَبَيَّنَ لَكَ غَيُّهُ فَاجْتَنِبْهُ وَأَمْرٌ أُخْتُلِفَ فِيهِ فَرُدَّهُ إِلَي عَالِمِهِ.
رواه الطبراني في الكبير ورجاله موثقون مجمع الزوائد ١/٣٩٠
52. “காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும், முதலாவது, சத்தியம் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்தது, அதை நீ பின்பற்று, இரண்டாவது, அசத்தியம் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்து கொள், மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவரான வழியா? என்று உனக்குத் தெளிவாகத் தெரியாதது, அதை அறிந்தவர்களிடம், (ஆலிம்களிடம்) கேட்டுத் தெரிந்துகொள்!” என்று ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٣– عَنِ ابْنِ عَبَّاسؓ عَنِ النَّبِيِّﷺ قَالَ: اِتَّقُوا الْحَدِيثَ عَنِّي إِلاَّ مَا عَلِمْتُمْ فَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّاْ مَقْعَدَهُ مِنَ النَّارِ وَمَنْ قَالَ فِي الْقُرْآنِ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ما جاء في الذي يفسر القران برايه رقم:٢٩٥١
53. “என்னிடமிருந்து ஹதீஸைக் கேட்டு பிறருக்குச் சொல்வதில் பேணுதலைக் கடைபிடியுங்கள், ஹதீஸ் என உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்த ஹதீஸ்களையே சொல்லுங்கள், தவறு என்று தெரிந்தும் நான் சொல்லாததை என்னுடைய ஹதீஸ் என்று யார் சொல்வாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்! தன் அபிப்பிராயப்படி குர்ஆனுக்கு விரிவுரை சொல்பவர், தன் இருப்பிடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٥٤– عَنْ جُنْدُبٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ فِي كِتَابِ اللهِ بِرَأْيِهِ فَأَصَابَ فَقَدْ أَخْطَأَ.
رواه ابوداؤد باب الكلام في كتاب الله بلا علم رقم:٣٦٥٢
54. “எவர் குர்ஆனுக்கு விரிவுரை செய்யும்போது தனது அபிப்பிராயப்படி ஒன்றைச் சொல்ல, அது உண்மையில் சரியாக இருந்தாலும், அவர் தவறு செய்துவிட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- ஒருவர் தன் சொந்த அறிவையும் அபிப்பிராயத்தையும் பயன்படுத்தி குர்ஆனுக்கு விளக்கம் தருகிறார். அந்த விளக்கம் சந்தர்ப்பவசமாகச் சரியாக இருந்தபோதிலும், அவர் தவறை செய்தார், ஏனேனில் அவர் இந்த விரிவுரைக்காக (தப்ஸீருக்காக) ஹதீஸ்களையும் அணுகவில்லை, உம்மத்திலுள்ள ஆலிம்களையும் அணுகவில்லை என்ற காரணத்தால்.
(மளாஹிர் ஹக்)


குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَي الرَّسُولِ تَرَي أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ۞).
(المائدة:٨٣)
இன்னும் (நம்) தூதர் மீது இறக்கப்பட்ட (இவ் வேதத்)தை அவர்கள் செவியேற்றால், உண்மையை அறிந்து கொண்ட (காரணத்)தால், அவர்களுடைய கண்கள் கண்ணீர் வடிப்பதை (நபியே,) நீர் காண்பீர்!
(அல்மாயிதா:83)
وَقَالَ تَعَالي: (وَإِذَا قُرِأَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ۞).
(الاعراف:٢٠ ٤)
இன்னும், குர்ஆன் ஓதப்பட்டால் நீங்கள் அருள் செய்யப்படுவதற்காக, அதற்குச் செவி தாழ்த்துங்கள்; நிசப்தமாக இருங்கள்.
(அல்அஃராஃப்:2٠ 4)
وَقَالَ تَعَالي: (قَالَ فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْئَلْنِي عَنْ شَيْءٍ حَتَّي أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا۞).
(الكهف:٧٠ )
“என்னை நீர் பின்தொடர்வீராயின், எதைப் பற்றியும் – நானே உமக்கு அதுபற்றிய விளக்கத்தை அறிவிக்கும் வரை என்னிடம் நீர் (எதும்) கேட்கக்கூடாது” என்று அவர் கூறினார்.
(அல்கஹ்ஃப்:7٠ )
وَقَالَ تَعَالي: (فَبَشِّرْ عِبَادِ۞ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ ط أُولئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللهُ وَأُولئِكَ هُمْ أُولُوا اْلاَلْبَابِ۞).
(الزمر:١٨،١٧)
(நபியே,) என் (நல்) அடியார்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக – அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வின்) சொல்லைச் செவிதாழ்த்திக் கேட்பார்கள்; பிறகு அதில் மிக அழகானதைப் பின்பற்றுவார்கள்; அத்தகையோர் – அல்லாஹ் அவர்களை நேர்வழியில் செலுத்தினான், இன்னும் அவர்கள்தாம் (தெளிவான) புத்தியுடையவர்கள்.
(அஸ்ஸுமர்:17,18)
وَقَالَ تَعَالي: (اَللّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَاباً مُّتَشَابِهاً مَّثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ج ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَي ذِكْرِ اللهِ ط).
(الزمر:٢٣)
அல்லாஹ் அழகான செய்தியை – ஒன்றுக்கொன்று ஒப்பான, திரும்பத் திரும்ப ஓதப்படும் வேதத்தை – இறக்கிவைத்துள்ளான்; தங்களுடைய ரப்பை பயப்படுகிறார்களே அவர்களுடைய தோல்க(ளின் உரோமங்க)ள் அதனால் சிலிர்த்துவிடுகின்றன; பிறகு அவர்களுடைய இதயங்களும் அல்லாஹ்வுடைய நினைவின் பால் இளகிவிடுகின்றன.
(அஸ்ஸுமர்:23)
ஹதீஸ்கள்:-
٥٥- عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ ﷺ: اِقْرَأْ عَلَيَّ قُلْتُ: أأَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ؟ قَالَ: فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ حَتَّي بَلَغْتُ (فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ م بِشَهِيدٍ وَّجِئْنَا بِكَ عَلَي هؤُلاَءِ شَهِيدًا۞) قَالَ: أَمْسِكْ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ.
رواه البخاري باب فكيف اذا جئنا من كل امة بشهيد …الاية رقم:٤٥٨٢
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்” என்றார்கள்.”யாரஸூலல்லாஹ்! தங்கள் மீது குர்ஆன் இறங்கியிருக்க, தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?” என்று நான் கேட்டேன், “வேறோருவர் குர்ஆன் ஓத நான் கேட்க விரும்புகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, நான் சூரா நிஸாவை ஓதினேன். (فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ م بِشَهِيدٍ وَّجِئْنَا بِكَ عَلَي هؤُلاَءِ شَهِيدًا) “நபியே! ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் அவர்களுடைய நபியைச் சாட்சியாக நாம் கொண்டுவரும் போது (உம்மை நிராகரித்த இவர்கள் யாவருக்கும் (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டு வந்தால் உம்மை நிராகரித்த இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்?” என்ற ஆயத்தை அடைந்ததும், “போதும் நிறுத்திக் கொள்வீராக” என்றார்கள். நான் அன்னாரை நோக்கியபோது, அன்னாரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது”.
(புகாரி)
٥٦- عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ قَالَ: إِذَا قَضَي اللهُ اْلاَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَاناً لِّقَوْلِهِ كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَي صَفْوَانٍ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ.
رواه البخاري باب قول الله تعالي ولا تنفع الشفاعة عنده الا لمن اذن لها الاية رقم:٧٤٨١
“அல்லாஹ் ஒரு காரியத்தைச் செயல்படுத்த விரும்பும் போது, வானத்தில் மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையின் பயம், திடுக்கத்தால், நடுங்கியவர்களாகத் தங்கள் இறக்கைகளை அசைக்கிறார்கள். வழுவழுப்பான பாறையில் சங்கிலியால் அடித்தால் எழும் ஒலியைப் போல் அல்லாஹ்வின் கட்டளை மலக்குகளுக்குக் கேட்கிறது. மலக்குகளின் உள்ளத்திலிருந்து திடுக்கம் நீக்கப்பட்டதும், அவர்கள் தமக்குள், ஒருவர் மற்றவரிடம், “உங்கள் இரட்சகன் என்ன கட்டளையிட்டான்?’ என்று கேட்க, “சத்தியத்தைக் கட்டளையிட்டான், அவன் உண்மையிலேயே உயர்ந்தவன், யாவரையும் விடப் பெரியவன்’ என்று பதில் கூறுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٥٧- عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍؒ قَالَ: اِلْتَقَي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ وَعَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاص عَلَي الْمَرْوَةِ فَتَحَدَّثَا ثُمَّ مَضَي عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو وَبَقِيَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَبْكِي فَقَالَ لَهُ رَجُلٌ: مَا يُبْكِيكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمنِ؟ قَالَ: هذَا يَعْنِي عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو زَعَمَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ كِبْرٍ كَبَّهُ اللهُ لِوَجْهِهِ فِي النَّارِ.
رواه احمد والطبراني في الكبير ورجاله رجال الصحيح مجمع الزوائد: ١/٢٨٢
ஹஜ்ரத் அபூஸலமத்துப்னு அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “மர்வா மலைக் குன்றின்மீது ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்களும் ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னுஆஸ் (ரலி) அவர்களும் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் சென்றுவிட்டார்கள், ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அங்கேயே அழுதவாறு நின்று விட்டார்கள். ஒரு மனிதர் அவர்களிடம், “அபூஅப்துர் ரஹ்மானே, தாங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார், “எவரது உள்ளத்தில் கடுகளவும் பெருமை இருக்குமோ, அவரை அல்லாஹ் முகங்குப்புற நரகில் தூக்கியெறிவான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக “இந்த மனிதர் ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) இப்பொழுதுதான் கூறிச் சென்றார்’ என்றார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்


திக்ரு
அல்லாஹுதஆலா என் முன்னால் இருக்கிறான்; என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையுடன், அல்லாஹுதஆலா வின் கட்டளைகளை நிறைவேற்றுதல்.

குர்ஆனின் சிறப்புகள்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ لا وَهُدًي وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۞ قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهِ فَبِذلِكَ فَلْيَفْرَحُوا ط هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ۞).
(يونس:٥٨،٥٧)
1.மனிதர்களே, உங்கள் ரப்பிடமிருந்து நல்லுபதேசமும் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளவற்றிற்கு அருமருந்தும் உங்களுக்குத் திட்டமாக வந்துவிட்டது, மேலும் (ஓரிறை) நம்பிக்கையாளர்களுக்கு (அது) நேர்வழிகாட்டக்கூடியதாகவும் அருளாகவும் இருக்கிறது. (நபியே,) நீர் கூறும்: “(குர்ஆனாகிய இது) அல்லாஹ்வின் அருளாலும் அவனது கருணையினாலும் கிடைத்துள்ளதாகும்; எனவே இதனைக் கொண்டே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும் அது அவர்கள் சேகரிக்கிற (உலகச் செல்வத்)தை விட மிக்க நலமுடையதாக இருக்கும்”.
(யூனுஸ்:57, 58)
وَقَالَ تَعَالي: (قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَّبِكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًي وَّبُشْرَي لِلْمُسْلِمِينَ۞).
(النحل:١٠٢)
2. (நபியே,) “உம்முடைய ரப்பிடமிருந்து – நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துவதற்காகவும் இன்னும் முற்றிலும் கீழ்படிந்து நடப்போர் (முஸ்லிம்) களுக்கு நேர்வழியாகவும் நற்செய்தியாகவும் உண்மையைக் கொண்டு இதனை – “ரூஹுல் குதுஸ்‘ (ஜிப்ரீல்) இறக்கிவைத்தார்” என்று நீர் கூறுவீராக!.
(அந்நஹ்ல்:102)
وَقَالَ تَعَالي: (وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ۞).
(بني اسرائيل:٨٢)
3.நம்பிக்கையாளர்களுக்கு (நோய்) நிவாரணியாகவும் அருளாகவும் இருக்கின்றவற்றை குர்ஆனின் மூலம் நாம் இறக்கிவைத்துள்ளோம்.
(பனீஇராயீல்:82)
وَقَالَ تَعَالي: (أُتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتبِ۞).
(العنكبوت:٤٥)
4. (நபியே,) இவ்வேதத்தின் மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பிப்பீராக!
(அல்அன்கபூத்:45)
وَقَالَ تَعَالي: (إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتبَ اللهِ وَأَقَامُوا الصَّلوةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنهُمْ سِرّاً وَّعَلاَنِيَةً يَّرْجُونَ تِجَارَةً لَّنْ تَبُورَ۞).
(فاطر:٢٩)
5.நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையைக் கடைப்பிடித்து அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ அத்தகையோர், ஒரு போதும் நஷ்டமடையாத வியாபாரத்தை ஆதரவு வைக்கின்றனர்.
(ஃபாதிர்:29)
وَقَالَ تَعَالي: (فَلاَ أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ ۞ وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ۞ إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ ۞ فِي كِتبٍ مَّكْنُونٍ ۞ لاَّ يَمَسُّهُ إِلاَّ الْمُطَهَّرُونَ ۞ تَنْزِيلٌ مِّنْ رَّبِّ الْعلَمِينَ ۞ أَفَبِهذَا الْحَدِيثِ أَنْتُمْ مُّدْهِنُونَ۞).
(الواقعة:٨١–٧٥)
6.ஆகவே, நட்சத்திரங்கள் விழுமிடங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன், நீங்கள் அறிவீர்களாயின் – நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியமாகும். நிச்சயமாக இது சங்கை வாய்ந்த குர்ஆனாகும். (இது லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது, தூய்மையான (வான)வர்களைத் தவிர (வேறு எவரும்) இதனைத் தொடமாட்டார். அகிலத்தாரின் ரப்பிடமிருந்து இறக்கிவைக்கப்பட்டதாகும், எனவே, (குர்ஆனாகிய) இந்தச் செய்தியைப் பற்றியா நீங்கள் அலட்சியமானவர் களாக இருக்கிறீர்கள்?
(அல்வாகிஆ:75-81)
وَقَالَ تَعَالي: (لَوْأَنْزَلْنَا هذَا الْقُرْآنَ عَلَي جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعاً مُّتَصَدِّعاً مِّنْ خَشْيَةِ اللهِ ط).
(الحشر:٢١)
7. (நபியே,) இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கிவைத்திருந்தால் அதனை – அல்லாஹ்வுடைய பயத்தினால் நடுங்குகிறதாகவும் பிளந்து விடுவதாகவும் நீர் காண்பீர்.
(அல்ஹஷ்ர்:21)
ஹதீஸ்கள்:-
١– عَنْ أَبِي سَعِيدٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يَقُولُ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَي: مَنْ شَغَلَهُ الْقُرْآنُ عَنْ ذِكْرِي وَمَسْاَلَتِي أَعْطَيْتُهُ أَفْضَلَ مَا أُعْطِيَ السَّائِلِينَ وَفَضْلُ كَلاَمِ اللهِ عَلَي سَائِرِ الْكَلاَمِ كَفَضْلِ اللهِ عَلَي خَلْقِهِ.ﴈﺭﺍﻝﻪﺭﺭﴈﴈﺍﻝﻪ
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب فضائل القران رقم:٢٩٢٦
1.”எவர் குர்ஆனில் அதிகமாக ஈடுபடுவதின் காரணமாக என்னைத் திக்ரு செய்வதற்கும், என்னிடம் துஆக் கேட்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காதோ அவருக்கு, துஆக் கேட்பவருக்குக் கொடுப்பதைவிட அதிகமாகக் கொடுப்பேன், எல்லாப் படைப்புகளைவிட நான் சிறப்புப் பெற்றிருப்பது போல, எல்லாச் சொற்களையும்விட என்னுடைய சொல் சிறப்புப் பொருந்தியதாகும்” என்று அல்லாஹ் சொன்ன (ஹதீஸ் குத்ஸியை) நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢– عَنْ أَبِي ذَرِّ نِ الْغِفَارِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّكُمْ لاَ تَرْجِعُونَ إِلَي اللهِ بِشَيْءٍ أَفْضَلَ مِمَّا خَرَجَ مِنْهُ يَعْنِي الْقُرْآنَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:١ /٥٥٥
2.”அல்லாஹ்விடமிருந்து வெளியான குர்ஆனைவிடச் சிறந்த வேறு எதன் மூலமாகவும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் ஙிபாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٣– عَنْ جَابِرٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلْقُرْآنُ مُشَفَّعٌ وَمَاحِلٌ مُصَدَّقٌ مَنْ جَعَلَهُ أَمَامَهُ قَادَهُ إِلَي الْجَنَّةِ وَمَنْ جَعَلَهُ خَلْفَ ظَهْرِهِ سَاقَهُ إِلَي النَّارِ.
رواه ابن حبان (واسناده جيد):١/٣٣١
3.”திருக்குர்ஆன் செய்யும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், ஒருவருக்காகக் குர்ஆன் வாதிட்டால் அதனுடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்படும். தனக்கு முன்னால் அதை வைத்துக் கொள்பவரை, (அதன்படி அமல் செய்பவரை) அது சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும், முதுகுக்குப் பின்னால் அதைப் போட்டுவிடுபவரை, (அதன்படி அமல் செய்யாதவரை) நரகத்தில் தள்ளிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுஹிப்பான்)
தெளிவுரை:- குர்ஆனுடைய வாதத்தை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதின் பொருள், குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்பவர்களின் பதவிகள் உயர்த்தப்பட வேண்டுமென அல்லாஹ்வின் சமூகத்தில் குர்ஆன் வாதாடும், மேலும், அதன் கடமைகளை நிறைவேற்றாதவரிடம் என் கடமைகளை ஏன் நிறைவேற்றவில்லை? என்று கேட்கும்.
٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: اَلصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهْوَةَ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ: فَيُشَفَّعَانِ لَهُ.
رواه احمد والطبراني في الكبير ورجال الطبراني رجال الصحيح مجمع الزوائد:٣ /٤١٩
4.”நோன்பும் குர்ஆனும் கியாமத் நாளில் அடியானுக்காகப் பரிந்து பேசும், “இறைவனே! உணவு, மன இச்சைகள் போன்றவற்றை விட்டும் நான் இவரைத் தடுத்திருந்தேன். இவருடைய காரியத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!‘ என்று நோன்பு கூறும், “இரவில் தூங்குவதை விட்டும் இவரை நான் தடுத்திருந்தேன். (இவர் இரவில் நபில் தொழுகைகளில் என்னை ஓதிவந்தார்) இவருடைய காரியத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!‘ என்று குர்ஆன் சொல்லும். இவ்வாறே அவ்விரண்டும் இவருக்காகப் பரிந்து பேசும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥– عَنْ عُمَرَؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: إِنَّ اللهَ يَرْفَعُ بِهذَا الْكِتَابِ أَقْوَاماً وَيَضَعُ بِهِ آخَرِينَ.
رواه مسلم باب فضل من يقوم بالقران …رقم:١٨٩٧
5.”அல்லாஹ் இந்தக் குர்ஆனின் காரணமாக பலரின் பதவிகளை உயர்த்துகிறான், பலரின் பதவிகளைத் தாழ்த்திவிடுகிறான், அதன் படி செயல்படுகிறவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் அல்லாஹ் கண்ணியத்தைத் தருகிறான், அதன்படி செயல்படாதவர்களை அல்லாஹ் இழிவுபடுத்திவிடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٦– عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ (لأَبِي ذَرٍّ:( عَلَيْكَ بِتِلاَوَةِ الْقُرْآنِ وَذِكْرِ اللهِ فَإِنَّهُ ذِكْرٌ لَّكَ فِي السَّمَاءِ وَنُورٌ لَّكَ فِي اْلاَرْضِ.
(وهو جزء من الحديث) رواه البيهقي في شعب الايمان ٤/٢٤٢
6.”அபூதரே, குர்ஆன் ஓதுவதையும் அல்லாஹ்வை திக்ர் செய்வதையும் பேணுதலாகச் செய்து வருவீராக! இந்த அமலால் வானத்தில் உம்மைப் பற்றி நினைவுகூரப்படும். மேலும், இது பூமியில் உமக்கு ஹிதாயத்தின் (நேர்வழியின்) ஒளியாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٧– عَنِ ابْنِ عُمَرَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالاً فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ.
رواه مسلم باب فضل من يقوم بالقران …رقم:١٨٩٤
7.”ஒருவருக்கு அல்லாஹ் குர்ஆனை வழங்கி அவர் இரவு பகலாக அதை ஓதுவதில் ஈடுபட்டுள்ளார், மற்றவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அவர் இரவு பகலாக அதை தருமம் செய்வதில் ஈடுபட்டுள்ளார், இத்தகைய இருவர் மீதே தவிர வேறு எவர் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٨– عَنْ أَبِي مُوسَي اْلاَشْعَرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ اْلأُتْرُجَّةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لاَيَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ التَّمْرَةِ لاَ رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ.
رواه مسلم باب فضيلة حافظ القران رقم:١٨٦٠
8. “குர்ஆன் ஓதும் முஃமின், கொழிஞ்சிப் பழத்துக்கு ஒப்பாவார், அது நறுமணம் உடையது, அதன் சுவையும் இனிமையா‹து. குர்ஆன் ஓதாத முஃமின், பேரீச்சம் பழத்துக்கு ஒப்பாவார். அதற்கு மணமில்லை; ஆனால், சுவை உண்டு. குர்ஆன் ஒதும் முனாஃபிக், நறுமணம் உள்ள மலருக்கு ஒப்பாவான், தன் மணம் சுகந்தமானது, சுவையோ கசப்பானது. குர்ஆன் ஓதாத முனாஃபிக் குமட்டிக் காய்க்கு ஒப்பாவான். அதற்கு எந்த மணமும் இல்லை, சுவையும் கசப்பானது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்ரீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- குமட்டிக்காய் என்பது “கிர்னிப் பழத்தைப் போன்ற வடிவம் உடைய, பார்க்க அழகாகவும் சுவையில் மிகக் கசப்பாகவும் இருக்கும்.
٩– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ حَرْفاً مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لاَ أَقُولُ الم حَرْفٌ وَلكِنْ اَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب باب ما جاء في من قرا حرفا …رقم:٢٩١٠
9.”குர்ஆனை ஓதுபவருக்கு ஓர் எழுத்துக்கு பகரமாக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை பத்து நன்மைகளுக்குச் சமமாகும். அலிஃப், லாம், மீம் அணைத்தும் சேர்ந்து ஓர் எழுத்து என நான் சொல்லவில்லை. ஆயினும் அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்து” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (இவை மூன்று எழுத்துகளாயின. எனவே முப்பது நன்மைகள் கிடைக்கும்).
(திர்மிதீ)
١٠– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: تَعَلَّمُوا الْقُرْآنَ فَاقْرَءُوهُ فَإِنَّ مَثَلَ الْقُرْآنِ لِمَنْ تَعَلَّمَهُ فَقَرَأَهُ وَقَامَ بِهِ كَمَثَلِ جِرَابٍ مَحْشُوٍّ مِسْكاً يَفُوحُ رِيحُهُ فِي كُلِّ مَكَانٍ وَمَثَلُ مَنْ تَعَلَّمَهُ فَيَرْقُدُ وَهُوَ فِي جَوْفِهِ كَمَثَلِ جِرَابٍ أُوكِيَ عَلَي مِسْكٍ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ما جاء في سورة البقرة واية الكرسي رقم:٢٨٧٦
10.”குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள், அதை ஓதி வாருங்கள், எவர் குர்ஆனைக் கற்று அதை ஒதி வருகிறாரோ, மேலும், தஹஜ்ஜத் தொழுகையில் அதை ஓதிக் கொண்டே இருக்கிறாரோ அவருக்கு உதாரணம் கஸ்தூரி நிரப்பப்பட்ட திறந்த பையைப் போன்றதாகும். அதன் நறுமணம் எல்லா இடங்களிலும் கமழ்கிறது. குர்ஆனைக் கற்று அதனை மனனமிட்டு தஹஜ்ஜத் தொழுகையில் ஓதாமல் தூங்கிவிட்டவரின் உதாரணம், வாய்கட்டப்பட்ட கஸ்தூரிப் பையைப் போன்றது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- குர்ஆன் கஸ்தூரியைப் போன்றது, ஹாபிளின் நெஞ்சம் கஸ்தூரி உள்ள பையைப் போன்றதாகும். ஆகவே, குர்ஆனை ஓதும் ஹாபிள் திறந்து வைக்கப்பட்ட கஸ்தூரி பையைப் போன்றவர், ஓதாதவர் மூடிவைக்கப்பட்ட கஸ்தூரிப் பையைப் போன்றவர்.
١١– عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ قَرَأَ الْقُرْآنَ فَلْيَسْأَلِ اللهَ بِهِ فَإِنَّهُ سَيَجِيءُ أَقْوَامٌ يَقْرَءُونَ الْقُرْآنَ يَسْاَلُونَ بِهِ النَّاسَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب من قرا القران فليسال الله به رقم:٢٩١٧
11. “குர்ஆனை ஓதுகிறவர், குர்ஆன் மூலம் அல்லாஹ்விடம் தான் கேட்கவேண்டும். குர்ஆனை ஓதி அதன் மூலம் மக்களிடம் யாசிக்கும் மனிதர்கள் வெகு விரைவில் தோன்றுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இம்ரானிப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٢– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ بَيْنَمَا هُوَ لَيْلَةً يَقْرَأُ فِي مِرْبَدِهِ إِذْ جَالَتْ فَرَسُهُ فَقَرَأَ ثُمَّ جَالَتْ أُخْرَي فَقَرَأَ ثُمَّ جَالَتْ أَيْضاً قَالَ أُسَيْدٌ: فَخَشِيتُ أَنْ تَطَأَ يَحْيَي فَقُمْتُ إِلَيْهَا فَإِذَا مِثْلُ الظُّلَّةِ فَوْقَ رَاْسِي فِيهَا أَمْثَالُ السُّرُجِ عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّي مَا أَرَاهَا قَالَ: فَغَدَوْتُ عَلَي رَسُولِ اللهِ ﷺ فَقُلْتُ: يَارَسُولَ اللهِﷺ بَيْنَمَا أَنَا الْبَارِحَةَ مِنْ جَوْفِ اللَّيْلِ أَقْرَأُ فِي مِرْبَدِي إِذْ جَالَتْ فَرَسِي فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: اِقْرَأِ ابْنَ حُضَيْرٍﷺ قَالَ: فَقَرَأْتُ ثُمَّ جَالَتْ أَيْضاً فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: اِقْرَأِ ابْنَ حُضَيْرٍ! قَالَ: فَقَرَأْتُ، ثُمَّ جَالَتْ أَيْضاً فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: اِقْرَأِ ابْنَ حُضَيْرٍ! قَالَ: فَانْصَرَفْتُ وَكَانَ يَحْيَي قَرِيباً مِنْهَا خَشِيتُ أَنْ تَطَأَهُ فَرَأَيْتُ مِثْلَ الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ السُّرُجِ عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّي مَا أَرَاهَا فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: تِلْكَ الْمَلاَئِكَةُ كَانَتْ تَسْتَمِعُ لَكَ وَلَوْ قَرَأْتَ لأَصْبَحَتْ يَرَاهَا النَّاسُ مَا تَسْتَتِرُ مِنْهُمْ.
رواه مسلم باب نزول السكينة لقراءة القران رقم:١٨٥٩
12. ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஹஜ்ரத் உஸைதிப்னு ஹுளைர் (ரலி) அவர்கள் இரவு நேரத்தில் தமது லாயத்தில் (குதிரை, ஒட்டகம் போன்ற பிராணிகள் கட்டி வைக்கும் இடம்) ஓதிக் கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென அவரது குதிரை மிரள ஆரம்பித்தது. அவர் மேலும் ஓதினார், அக்குதிரை மேலும் மிரளத் தொடங்கியது. இன்னும் ஓதிக்கொண்டேயிருக்க குதிரை இன்னும் மிரண்டது. ஹஜ்ரத் உஸைது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்” (அருகில் இருந்த) என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று எனக்குப் பயம் ஏற்பட்டது. அதனால் குதிரைக்குப் பக்கத்தில் சென்று நின்றேன், என் தலைக்கு மேலே மேகத்தைப் போன்று ஏதோவொன்று இருக்கக் கண்டேன், அதனுள் விளக்குகளைப் போன்று ஒளி வீசிக் கொண்டிருக்கும் சில பொருட்களைக் கண்டேன். பிறகு மேகத்தைப் போன்ற அப்பொருள் வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டே சென்றது. கடைசியாக என் பார்வையை விட்டும் மறைந்துவிட்டது. மறுநாள் காலையில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்தேன். “யாரஸூலல்லாஹ், நேற்றிரவு நான் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கையில் திடீரென என் குதிரை மிரளத் தொடங்கிவிட்டது” என்று சொன்னேன், “இப்னுஹுளைரே! நீர் தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்திருக்கலாமே!‘ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நான் ஓதிக் கொண்டிருக்க அக்குதிரை மிரண்டது” என்றேன். “இப்னுஹுழைரே! நீர் ஓதிக் கொண்டே இருந்திருக்கலாமே” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “நான் ஓதிக் கொண்டிருந்தேன். அது மிரண்டு கொண்டிருந்தது‘ என்றேன் “இப்னுஹுளைரே! ஓதிக்கொண்டே இருந்திருக்கலாமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “என் மகன் யஹ்யா குதிரைக்கு அருகிலேயே இருந்தான், அவனைக் குதிரை மிதித்துவிடுமோ என்று பயப்பட்டேன், அதனால் நான் எழுந்து சென்றுவிட்டேன் அங்குச் சென்றதும், மேகத்தைப் போன்று ஏதோவொரு பொருள் அதில் விளக்குகளைப் போன்று ஒளிவீசக் கண்டேன். பிறகு அப்பொருள் வானை நோக்கி உயர்ந்து சென்று என் பார்வையிலிருந்தே மறைந்துவிட்டது” என்றேன். “அவர்கள் மலக்குகளாவர், நீர் ஓதுவதைக் கேட்க வந்திருந்தார்கள், நீர் காலை வரை ஓதியிருந்தால் மற்ற மக்களும் அவர்களைக் கண்டிருப்பார்கள். அவர்களை விட்டும் அம்மலக்குகள் மறைந்துவிட்டிருக்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
١٣– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّؓ قَالَ: جَلَسْتُ فِي عِصَابَةٍ مِنْ ضُعَفَاءِ الْمُهَاجِرِينَ وَإِنَّ بَعْضَهُمْ لَيَسْتَتِرُ بِبَعْضٍ مِنَ الْعُرْيِ وَقَارِئئٌ يَقْرَأُ عَلَيْنَا إِذْ جَاءَ رَسُولُ اللهِ ﷺ فَقَامَ عَلَيْنَا فَلَمَّا قَامَ رَسُولُ اللهِ ﷺ سَكَتَ الْقَارِي فَسَلَّمَ ثُمَّ قَالَ: مَا كُنْتُمْ تَصْنَعُونَ؟ قُلْنَا: يَارَسُولَ اللهِﷺ إِنَّهُ كَانَ قَارِأٌ لَّنَا يَقْرَأُ عَلَيْنَا فَكُنَّا نَسْتَمِعُ إِلَي كِتَابِ اللهِ تَعَالي قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي جَعَلَ مِنْ أُمَّتِي مَنْ أُمِرْتُ أَنْ أَصْبِرَ نَفْسِي مَعَهُمْ قَالَ: فَجَلَسَ رَسُولُ اللهِ ﷺ وَسْطَنَا لِيَعْدِلَ بِنَفْسِهِ فِينَا ثُمَّ قَالَ بِيَدِهِ هكَذَا فَتَحَلَّقُوا وَبَرَزَتْ وُجُوهُهُمْ لَهُ قَالَ: فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ عَرَفَ مِنْهُمْ أَحَدًا غَيْرِي فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: أَبْشِرُوا يَا مَعْشَرَ صَعَالِيكِ الْمُهَاجِرِينَ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ تَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَاءِ النَّاسِ بِنِصْفِ يَوْمٍ وَذلِكَ خَمْسُمِائَةِ سَنَةٍ.
رواه ابوداؤد باب في القصص رقم:٣٦٦٦
13. ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் ஏழை முஹாஜிரீன்களின் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். (முழு உடம்பையும் மறைப்பதற்குக் கூட அவர்களிடம் ஆடையில்லை) சிலர் சிலரின் முதுகுக்குப் பின்னால் தம் மேனியை மறைத்து உட்கார்ந்திருந்தனர், ஒரு ஸஹாபி புனிதக் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு மிக அருகில் நின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையால் ஓதிக் கொண்டிருந்த ஸஹாபி ஓதுவதை நிறுத்திவிட்டார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொல்லியபின், “நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்க, “ஓதக்கூடிய ஒருவர் எங்களுக்கு மத்தியில் ஓதிக் கொண்டிருக்க, நாங்கள் அல்லாஹ்வின் வேதத்தைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தோம்‘ என நாங்கள் பதில் சொன்னோம். “எவர்களுடன் நான் சேர்ந்து இருக்கவேண்டுமென எனக்குக் கட்டளையிடப்பட்டதோ அப்படிப்பட்டோரை என் சமுதாயத்தில் ஆக்கித் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின், எல்லோருக்கும் சரிசமமாக இருக்க வேண்டுமென எங்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டார்கள், எல்லோரும் வட்டமாக அமரும்படி தமது கையால் சமிக்ஞை செய்தார்கள். அவ்வாறே, அனைவரும் வட்டமாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை முன்னோக்கி உட்கார்ந்து கொண்டோம். ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்‘. அந்தச் சபையில் நபி (ஸல்) அவர்கள் அடையாளம் கண்டு கொண்டவர்களில் என்னைத் தவிர வேறு யாருமில்லை, பிறகு நபி (ஸல்) அவர்கள், “ஏழை முஹாஜிரீன்களின் கூட்டத்தாரே! உங்களுக்கு கியாமத் நாளில் பரிபூரண ஒளி கிடைக்கும். மேலும் நீங்கள் செல்வந்தர்களைவிட அரை நாள் முன்னதாக சுவனம் செல்வீர்கள் என்ற நற்செய்தியையும் உங்களுக்கு அறிவிக்கின்றேன். மறுமையின் அரை நாள் என்பது இம்மையின் ஐநூறு ஆண்டுகளாகும்” என்று சொன்னார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- ஹஜ்ரத் அபூஸஈத்குத்ரீ (ரலி) அவர்களை அறிந்து கொண்டதற்கும் மற்றவர்களை நபி (ஸல்) அவர்கள் அறியாமல் இருந்ததற்கும் இரவின் இருள் காரணமாக இருந்திருக்கலாம். ஹஜ்ரத் அபூஸஈத்குத்ரீ (ரலி) அவர்கள் அன்னாருக்கு அருகில் அமர்ந்திருந்ததால் அவர்களை அறிந்து கொண்டார்கள்.
(பத்லுல் மஜ்ஹூத்)
١٤– عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ هذَا الْقُرْآنَ نَزَلَ بِحَزَنٍ فَإِذَا قَرَأْتُمُوهُ فَابْكُوا فَإِنْ لَمْ تَبْكُوا فَتَبَاكَوْا وَتَغَنَّوْا بِهِ فَمَنْ لَّمْ يَتَغَنَّ بِهِ فَلَيْسَ مِنَّا.
رواه ابن ماجه باب في حسن الصوت بالقران رقم:١٣٣٧
14. “மறுமை பற்றிய கவலை, மறுமை பற்றிய நிம்மதியின்மையை ஏற்படுத்தவே இந்தப் புனித குர்ஆன் அருளப்பட்டது. எனவே, அழுதவாறு ஓதுங்கள். அதை நீங்கள் ஓதும்போது அழுகை வராவிட்டால் அழுபவரைப் போன்று பாவனை செய்யுங்கள், குர்ஆனை இனிய குரலில் ஓதுங்கள், ஏனேனில், இனிமையான குரலில் ஓதாதவர் நம்மைச் சார்ந்தவரல்லர், நம்மை முழுமையாகப் பின்பற்றுபவர்களில் அவர் ஆகமாட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸஅதுப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தெளிவுரை:- “எவர் திருகுர்ஆனின் பொருட்டால் மக்களிடம் இருந்து தேவையற்ற நிலைக்கு வரவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று இந்த ஹதீஸிற்கு மற்றோரு விளக்கத்தை உலமாப் பெருமக்கள் எழுதியுள்ளனர்.
١٥– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أَذِنَ اللهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ يَتَغَنَّي بِالْقُرْآنِ.
رواه مسلم باب استحباب تحسين الصوت بالقرآن رقم:١٨٤٥
15. “திருக்குர்ஆனை இனிமையான குரலில் ஓதும் நபியின் சப்தத்தை கவனமாகக் கேட்பது போல், அல்லாஹ் மற்றவர்களின் சப்தத்தை கவனமாகக் கேட்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٦– عَنِ الْبَرَاءِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ فَإِنَّ الصَّوْتَ الْحَسَنَ يَزِيدُ الْقُرْآنَ حُسْناً.
رواه الحاكم: ١/٥٧٥
16. “இனிமையான குரலைக் கொண்டு குர்ஆன் ஓதுவதை அழகுபடுத்துங்கள், ஏனேனில், இனிய குரல் குர்ஆன் ஓதுவதின் அழகை அதிகரிக்கச் செய்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் பராஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٧–عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: الْجَاهِرُ بِالْقُرْآنِ كَالْجَاهِرِ بِالصَّدَقَةِ وَالْمُسِرُّ بِالْقُرْآنِ كَالْمُسِرِّ بِالصَّدَقَةِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب من قرا القران فليسال الله به رقم:٢٩١٩
17. “சங்கைமிக்க குர்ஆனைச் சப்தமிட்டு ஓதுகிறவர் பகிரங்கமாக ஸதகா செய்கிறவரைப் போன்றவர், சப்தமில்லாமல் ஓதுபவர் ரகசியமாக ஸதகா செய்பவரைப் போன்றவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- இந்த ஹதீஸிலிருந்து மெதுவாக ஓதுவது சிறந்ததெனத் தெரிகிறது, ஆனால், இது முகஸ்துதி ஏற்படும் என்ற சந்தேகமிருக்கும் போது தான், முகஸ்துதி உண்டாகுமென்ற சந்தேகமும் பிறருக்கு இடைஞ்சல் நேரும் என்ற பயமும் இல்லையெனில், மற்ற அறிவிப்புகளை முன்வைத்து உரத்த குரலில் ஓதுவது சிறந்தது. ஏனேனில், இது பிறருக்கு ஆர்வமூட்டக் காரணமாக இருக்கிறது.
(ஷரஹுத்தீபீ)
١٨– عَنْ أَبِي مُوسَيؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ لِأَبِي مُوسَي: لَوْ رَأَيْتَنِي وَانَا أَسْتَمِعُ قِرَاءَتَكَ الْبَارِحَةَ لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَؑ
رواه مسلم باب استحباب تحسين الصوت بالقران رقم:١٨٥٢
18. “நேற்றிரவு நீர் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தபோது, நான் கவனமுடன் கேட்டதை நீர் பார்த்திருந்தால் (நீர் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பீர்), தாவூத் (அலை) அவர்களின் இனிய குரலிலிருந்து ஒரு பகுதி உமக்குக் கிடைத்துள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٩– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يُقَالُ يَعْنِي لِصَاحِبِ الْقُرْآنِ اِقْرَأْ وَارْقَ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ان الذي ليس في جوفه من القران …رقم:٢٩١٤
19. “(கியாமத் நாளில்) குர்ஆன் உடையவரிடம், “சிறப்புமிக்க குர்ஆனை ஓதிக் கொண்டே செல்! சுவனத்தின் படித்தரங்களில் ஏறி நிறுத்திக் கொண்டே செல்! உலகில் நிறுத்தி, நிறுத்தி ஓதிக் கொண்டிருந்ததுபோல், இங்கும் நீர் நிறுத்தி ஓது! நீர் கடைசி ஆயத்தை ஓதி முடிக்கும் இடம் தான் உமது தங்குமிடம்” என்று சொல்லப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை: குர்ஆன் உடையவர் என்பது, குர்ஆனை மனனம் செய்த ஹாபிள் அல்லது குர்ஆனை அதிகமாக ஓதக்கூடியவர் அல்லது குர்ஆனைச் சிந்தித்து அதன்படி அமல் செய்யக்கூடியவர் என்று பொருளாகும்.
(தீபீ, மிர்காத்)
٢٠– عَنْ عَائِشَةؓ قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ.
رواه مسلم باب فضل الماهر بالقران والذي يتتعتع فيه رقم:١٨٦٢
20. “குர்ஆனை மனனம் செய்வதில் தேர்ச்சி பெற்றவரும், அதை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவருமான மனிதரை, நாளை மறுமை நாளில் “லவ்ஹுல் மஹ்பூள்” என்னும் பலகையிலிருந்து குர்ஆனைக் எழுதும் மலக்குகளுடன் எழுப்பப்படும், குர்ஆனை திக்கித் திக்கி ஓதி அதில் சிரமத்தை மேற்கொள்கிறவருக்கு இருமடங்கு கூலி கிடைக்கிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- திக்கித் திக்கி ஓதுபவர் என்பது குர்ஆன் சரியாக மனனம் ஆகாமல் அதை ஞாபகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஹாபிளாக இருக்கலாம், மேலும், பார்த்து ஓதும்போது திக்கித் திக்கி ஓதக் கூடியவராகவும் இருக்கலாம், ஆனால், அவர் திருத்தமாக ஓத முயற்சித்தவராக இருக்கவேண்டும். இத்தகைய மனிதருக்கு இரண்டு கூலி உண்டு, ஓதுவதற்காக ஒரு கூலியும், தொடர்ந்து திக்குவதால் ஏற்படும் சிரமத்தைச் சகித்துக் கொள்வதற்காக இன்னோரு கூலியும் கிடைக்கும்.
(தீபீ, மிர்காத்)
٢١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَجِيءُ صَاحِبُ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: يَارَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجُ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ: يَارَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةُ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ: يَارَبِّ إِرْضَ عَنْهُ فَيَرْضَي عَنْهُ فَيُقَالُ لَهُ اِقْرَأْ وَارْقَ وَيُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ان الذي ليس في جوفه من القران كالبيت الخرب رقم:٢٩١٥
21. “கியாமத் நாளன்று குர்ஆன் உடையவர் (அல்லாஹ்வின் சன்னிதானத்துக்கு) வரும்போது புனிதக் குர்ஆன் அல்லாஹ்விடம், அவருக்கு ஆடை அணிவிக்குமாறு வேண்டிக் கொள்ளும். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்கு கண்ணியத்தின் கிரீடம் அணிவிக்கப்படும், மீண்டும் அது “இரட்சகனே! இன்னும் அணிவிப்பாயாக!” எனக்கூறும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து மரியாதையின் முழு ஆடை அணிவிக்கப்படும். பிறகு அது, “இரட்சகா, இவரை நீ பொருந்திக் கொள்வாயாக!” என்று பரிந்து பேசும், அல்லாஹ்வும் அவரைப் பொருந்திக் கொள்வான். பிறகு அவரிடம், “திருக்குர்ஆனை ஓதிக் கொண்டே செல்வீராக! சொர்க்கத்தின் படித்தரங்களில் ஏறிக்கொண்டே செல்வீராக!” என்று சொல்லப்படும். அவருக்கு ஒவ்வொரு ஆயத்திற்குப் பகரமாக ஒரு நன்மை அதிகரிக்கப்படும்”, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
٢٢– عَنْ بُرَيْدَةَؓ قَالَ: كُنْتُ جَالِساً عِنْدَ النَّبِيِّ ﷺ فَسَمِعْتُهُ يَقُولُ: إِنَّ الْقُرْآنَ يَلْقَي صَاحِبَهُ يَوْمَ الْقِيَامَةِ حِينَ يَنْشَقُّ عَنْهُ قَبْرُهُ كَالرَّجُلِ الشَّاحِبِ فَيَقُولُ لَهُ: هَلْ تَعْرِفُنِي؟ فَيَقُولُ: مَا أَعْرِفُكَ فَيَقُولُ لَهُ: هَلْ قُولُ: أَنَا صَاحِبُكَ الْقُرْآنُ الَّذِي أَظْمَاْتُكَ فِي الْهَوَاجِرِ وَأَسْهَرْتُ لَيْلَكَ وَإِنَّ كُلَّ تَاجِرٍ مِنْ وَرَاءِ تِجَارَتِهِ وَإِنَّكَ الْيَوْمَ مِنْ وَرَاءِ كُلِّ تِجَارَةٍ فَيُعْطَي الْمُلْكُ بِيَمِينِهِ وَالْخُلْدُ بِشِمَالِهِ وَيُوضَعُ عَلَي رَاْسِهِ تَاجُ الْوَقَارِ وَيُكْسَي وَالِدَاهُ حُلَّتَيْنِ لاَ يُقَوِّمُ لَهُمَا أَهْلُ الدُّنْيَا فَيَقُولاَنِ: بِمَ كُسِينَا هذِهِ؟ فَيُقَالُ: بِأَخْذِ وَلَدِكُمَا الْقُرْآنَ ثُمَّ يُقَالُ لَهُ: اِقْرَأْ وَاصْعَدْ فِي دَرَجَةِ الْجَنَّةِ وَغُرَفِهَا فَهُوَ فِي صُعُودٍ مَادَامَ يَقْرَأُ هَذّاً كَانَ أَوْ تَرْتِيلاً.
رواه احمد (الفتح الرباني):١٨ /٦٩
22. “கியாமத் நாளன்று, குர்ஆன் உடையவர் கப்ரிலிருந்து வெளிவரும் போது, பலவீனத்தால் நிறம்மாறிய மனிதனைப்போல் இருப்பார், “நீ என்னை அறிவாயா?’ எனக் குர்ஆன் அவரிடம் கேட்கும்.”நான் உன்னை அறியமாட்டேன்” என்பார். “நீ என்னை அறியவில்லையா?’ என மீண்டும் குர்ஆன் வினவும். “உன்னை எனக்குத் தெரியாது‘ என்பார் அவர். “நான் உனது நண்பன் குர்ஆன் ஆவேன்‘. நான் தான் கடும் வெப்பத்தில் உன்னைத் தாகிக்கச் செய்தேன், இரவில் விழிக்கச் செய்தேன், (அதாவது குர்ஆனின் கட்டளைப்படி செயல்பட்டதால் நீ பகலில் நோன்பு வைத்தும் இரவில் குர்ஆன் ஓதியும் வந்தாய்) வியாபாரிகள் ஒவ்வொரும் தமது வியாபாரத்தால் லாபமடைய விரும்புகின்றனர். இன்று நீ உனது வியாபாரத்தால் எல்லோரையும்விட அதிக லாபம் அடையப்போகின்றாய்!” என்று குர்ஆன் கூறும். அதற்குப் பிறகு குர்ஆன் உடையவரின் வலக்கரத்தில் ஆட்சியும் இடக்கரத்தில் நிரந்தரமாக (சொர்க்கத்தில்) தங்குவதற்கான பத்திரமும் வழங்கப்படும். அவர் தலைமீது கம்பீரம் என்னும் கிரீடம் அணிவிக்கப்படும். அவரது பெற்றோருக்கு உலகில் உள்ளவர்களால் விலைமதிக்கமுடியாத இரு ஆடைகள் அணிவிக்கப்படும். “இந்த ஆடைகள் எங்களுக்கு எதன் காரணமாக அணிவிக்கப்படுகின்றன?” என அப்பெற்றோர் கேட்பார்கள். “உங்கள் மகன் குர்ஆனை மனனம் செய்ததின் காரணமாக!‘ என்று பதில் சொல்லப்படும். பிறகு குர்ஆன் உடையவரிடம், “குர்ஆனை ஓதிக்கொண்டே செல்! சொர்க்கத்தின் உயர்பதவிகளில் ஏறிக் கொண்டே செல்! என்று சொல்லப்படும். அவர் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் வரை, நிறுத்தி நிறுத்தியோ, தாமதமாகவோ ஓதினாலும் சரியே! அவர் சொர்க்கத்தின் உயர் பதவிகளில் உயர்ந்து கொண்டே செல்வார்”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் புரைதா (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்னத் அஹ்மத், பத்ஹுர்ரப்பானீ)
தெளிவுரை:- குர்ஆன் உடையவர் பலவீனத்தால் நிறம் மாறிய மனிதரின் உருவில் வருவது ஒரு வகையான தோற்றமேயாகும், அவர் இரவுகளில் குர்ஆன் ஓதியும், பகலில் அதன் கட்டளைகளை நிறைவேற்றியும் தன்னைத் தானே பலவீனப்படுத்திக்கொண்டார்.
(இன்ஜாஹுல் ஹாஜா)
٢٣– عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ لِلّهِ أَهْلِينَ مِنَ النَّاسِ قَالُوا: مَنْ هُمْ يَارَسُولَ اللهِ؟ قَالَ: أَهْلُ الْقُرْآنِ هُمْ أَهْلُ اللهِ وَخَاصَّتُهُ.
رواه الحاكم وقال الذهبي: روي من ثلاثة اوجه عن انس هذا اجودها:١/٥٥٦
23. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “அல்லாஹ்வுக்கென்றே சொந்தமானோர் சிலர் மக்களில் இருக்கின்றனர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ், அவர்கள் யார்?’ என ஸஹாபாக்கள் வினவினர், “அவர்கள் குர்ஆன் உடையவர்கள். அவர்கள் தான் அல்லாஹ்வுக்குரியவர்கள், அவனுக்குச் சொந்த மானவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٤– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنَ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ان الذي ليس في جوفه شيء ….رقم:٢٩١٣
24. “எவரது உள்ளத்தில் புனிதக் குர்ஆனின் எந்தப் பகுதியும் மனனமாக இல்லையோ, அந்த உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும்” (குடியிருக்கும் மனிதர்களைக் கொண்டு வீடு அழகும் செழிப்பும் பெறுவது போல புனிதக் குர்ஆனை மனனம் செய்வதில் மனித உள்ளத்தின் அழகும் செழிப்பும் உள்ளது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதீ)
٢٥– عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا مِنِ امْرِئئِ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلاَّ لَقِيَ اللهَ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ.
رواه ابوداؤد باب التشديد فيمن حفظ القران ….رقم:١٤٧٤
25. “குர்ஆனை ஓதி மறந்து விடுபவர் நாளை கியாமத் நாளன்று குஷ்ட நோயின் காரணமாகத் தன் உறுப்புகள் ஊனமுற்ற நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃதுப்னு உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- குர்ஆனை மறந்துவிடுவது என்பதற்குப் பல கருத்துகள் கூறப்பட்டுள்ள‹, குர்ஆனைக் கற்றபின் குர்ஆனைப் பார்த்தும் ஓத இயலாமல் மறந்துவிடுவது என்பது ஒரு கருத்து, இரண்டாவது கருத்து, பார்க்காமல் ஓத முடியாமல் மறந்து விடுவது, மூன்றாவது கருத்து, அதை ஓதுவதில் அலட்சியம் காட்டுபவர். நான்காவது கருத்து, குர்ஆனின் சட்டங்களை அறிந்திருந்தும் அதன்படி செயல்படாதவர்.
(பத்லுமஜ்ஹூத், ஷரஹ் ஸுனன், அபுதாவூத் லில் அய்னீ)
٢٦– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَفْقَهُ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلاَثٍ.
رواه ابوداؤد باب تحزيب القران رقم:١٣٩٤
26. “மூன்று நாட்களைவிடக் குறைந்த கால அளவில் குர்ஆனை ஓதி முடிப்பவர் நல்ல விதமாகக் குர்ஆனை விளங்கிக் கொள்ளமாட்டார்” என்று நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது பொது மக்களை கவனித்துக் கூறியதாம், ஸஹாபிகளில் சிலர் மூன்று நாட்களை விடக் குறைவான கால அவகாசத்தில் குர்ஆனை ஓதி முடித்துள்ளதாக சில கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன.
(ஷரஹுத்தீபீ)
٢٧– عَنْ وَاثِلَةَ بْنِ اْلاَسْقَعِؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أُعْطِيتُ مَكَانَ التَّوْرَاةِ السَّبْعَ وَأُعْطِيتُ مَكَانَ الزَّبُورِ الْمِئِينَ وَأُعْطِيتُ مَكَانَ اْلإِنْجِيلِ الْمَثَانِيَ وَفُضِّلْتُ بِالْمُفَصَّلِ.
رواه احمد:٤/١٠٧
27. “எனக்கு தவ்ராத் வேதத்திற்குப் பகரமாக புனித குர்ஆனின் ஆரம்ப ஏழு அத்தியாயங்(சூராக்)களும், ஸபூர் வேதத்திற்குப் பகரமாக “மிஈன்” (அதற்கடுத்துள்ள பதினோரு சூராக்களும்),இன்ஜீல் வேதத்திற்குப் பகரமாக “மஸானீ “(அதற்கடுத்துள்ள இருபது ஸூராக்களும்) கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு குர்ஆனின் இறுதி வரை உள்ள முஃபஸ்ஸல் ஸூராக்கள் எனக்கென்றே குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٨ – عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍؒ قَالَ: قَالَ رَسُولُ اللهِﷺ فِي فَاتِحَةِ الْكِتَابِ شِفَاءٌ مِّنْ كُلِّ دَاءٍ.
رواه الدارمي: ٢ /٥٣٨
28. “சூரத்துல் பாத்திஹா”வில் சகல நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்மலிக் இப்னு உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தாரமீ)
٢٩ – عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا قَالَ أَحَدُكُمْ: آمِينَ، وَقَالَتِ الْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ: آمِينَ، فَوَافَقَتْ إِحْدَاهُمَا اْلأُخْرَي، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
رواه البخاري، باب فضل التامين، رقم:٧٨١
29. “உங்களில் ஒருவர் சூரத்துல் பாத்திஹாவின் முடிவில் ஆமீன் கூறினால் விண்ணிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர், எவரது ஆமீன் மலக்குகளின் ஆமீனுடன் ஒன்று சேர்ந்துவிடுமோ அவரது முந்தைய பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரி)
٣٠ – عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْكِلاَبِيؓ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: يُؤْتَي بِالْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ وَأَهْلِهِ الَّذِينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ، تَقْدُمُهُ سُوَرَةُ الْبَقَرَةِ وَآلُ عِمْرَانَ.
(الحديث) رواه مسلم، باب فضل قراءة القرآن وسورة البقرة، رقم:١٨٧٦
30. “புனித குர்ஆனையும், அதன்படிச் செயல்பட்ட மக்களையும் கியாமத் நாளில் அழைத்து வரப்படும். (குர்ஆனின் ஆரம்ப அத்தியாயங்களான) “சூரத்துல் பகரா”வும், “சூரா ஆல இம்ரானும்” அவர்களுக்காக வாதாட ஒன்றை ஒன்று முந்தும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் கிலாபி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ.
رواه مسلم، باب استحباب صلاة النافلة في بيته….، رقم:١٨٢٤
31. “மய்யித்துகளை அடக்கம் செய்யும் இடமாக உங்கள் வீடுகளை ஆக்கிவிடாதீர்கள்; அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டு வீடுகளைச் செழிப்பாக்குங்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுமோ அவ்வீட்டை விட்டும் ஷைத்தான் ஓடி விடுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்லிம்)
٣٢– عَنْ اَبِيْ اُمَامَةَ الْبَاهِلِيِّؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِﷺ يَقُوْلُ: اِقْرَءُوا الْقُرْآنَ، فَاِنَّهُ يَأْتِيْ يَوْمَ الْقِيَامَةِ شَفِيْعًا لِّاَصْحَابِهِ، اِقْرَءُوْا الزَّهْرَاوَيْنِ: اَلْبَقَرَةَ وَسُوْرَةَ آلِ عِمْرَانَ، فَاِنَّهُمَا يَاْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ، كَأَنَّهُمَا غَمَامَتَانِ، اَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ، اَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ، تُحَاجَّانِ عَنْ اَصْحَابهِمَا، اِقْرَءُوْا سُوْرَةَ الْبَقَرَةِ، فَإِنَّ اَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلاَ يَسْتَطِيْعُهَا الْبَطَلَةُ، قَالَ مُعَاوِيَةُ: بَلَغَنِيْ اَنَّ الْبَطَلَةَ السَّحَرَةُ.
رواه مسلم، باب فضل قراءة القرآن وسورة البقرة، رقم:١٨٧٤
32. “உயர்வுமிக்க புனிதக் குர்ஆனை ஓதுங்கள், ஏனேன்றால் அது கியாமத் நாளில் தன்னை ஓதியவர்களுக்காகப் பரிந்து பேசும், (குறிப்பாக) ஒளிமிக்க இரு சூராக்களான “சூரத்துல் பகரா‘வையும், “சூரா ஆலஇம்ரா‘னையும் ஓதி வாருங்கள், ஏனேனில் இவை தம்மை ஓதி வந்தவர்களைக் கியாமத் நாளன்று மேகத்தின் இரு துண்டுகளைப் போலத் தமது நிழலில் அழைத்து வரும், அல்லது இரு நிழற்குடைகளைப் போல அல்லது பறவைகளின் இரு கூட்டங்களைப் போல நிழல் தரும், தன்னை ஓதியவருக்காக இவ்விரண்டும் பரிந்து பேசும். குறிப்பாக சூரா பகராவை ஓதி வாருங்கள், ஏனேனில், அதை ஓதுவதும் மனனம் செய்வதும் அதை விளங்கிக் கொள்வதும் பரக்கத்திற்குக் காரணமாகும், அதை ஓதாமல் மனனம் செய்யாமல் விட்டுவிடுவது கைசேதத்துக்குக் காரணமாகும், “தீயவர்கள் இந்த சூராவுடன் போட்டியிட முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூ உமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “தீயவர்கள் என்பது சூனியக்காரர்கள்” சூரத்துல் பகரா ஓதிவரும் வழக்கமுடையவருக்கு எந்தச் சூனியக்காரனின் சூனியமும் எந்தத் தாக்கத்தையும் உண்டாக்காது என்று முஆவியத்து இப்னு லாம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
(முஸ்லிம்)
٣٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: سُوْرَةُ الْبَقَرَةِ فِيْهَا آيَةٌ سَيِّدَةُ آيِ الْقُرْآنِ لاَ تُقْرَأُ فِيْ بَيْتٍ وَفِيْهِ شَيْطَانٌ اِلاَّ خَرَجَ مِنْهُ آيَةُ الْكُرْسِيِّ.
رواه الحاكم وقال صحيح الاسناد الترغيب: ٢/٣٧٠
33. “சூரா பகராவில் ஓர் ஆயத் உண்டு, அது சிறப்புமிக்க குர்ஆனின் எல்லா ஆயத்துக்களுக்கும் தலைவனாகும். அந்த ஆயத் எந்த வீட்டில் ஓதப்படுமோ அங்கு ஷைத்தான் இருந்தால் உடனே வெளியேறி விடுவான். அது ஆயத்துல் குர்ஸீ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம், தர்ஙீப்)
٣٤– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: وَكَّلَنِيْ رَسُوْلُ اللهِ ﷺ: بِحِفْظِ زَكوةِ رَمَضَانَ فَاَتَانِيْ آتٍ فَجَعَلَ يَحْثُوْ مِنَ الطَّعَامِ فَاَخَذْتُهُ وَقُلْتُ: لَاَرْفَعَنَّكَ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ: قَالَ: اِنِّيْ مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ وَلِيَ حَاجَةٌ شَدِيْدَةٌ قَالَ: فَخَلَّيْتُ عَنْهُ فَاَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ ﷺ: يَا اَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ اَسِيْرُكَ الْبَارِحَةَ؟ قَالَ: قُلْتُ: يَارَسُوْلَ اللهِ شَكَا حَاجَةً شَدِيْدَةً وَعِيَالاً فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيْلَهُ قَالَ: اَمَا اِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُوْدُ فَعَرَفْتُ اَنَّهُ سَيَعُوْدُ لِقَوْلِ رَسُوْلِ اللهِ ﷺ: اِنَّهُ سَيَعُوْدُ فَرَصَدْتُّهُ فَجَعَلَ يَحْثُوْ مِنَ الطَّعَامِ فَاَخَذْتُهُ فَقُلْتُ: لَاَرْفَعَنَّكَ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: دَعْنِيْ فَاِنِّيْ مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ لاَ اَعُوْدُ فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيْلَهُ فَاَصْبَحْتُ فَقَالَ لِيْ رَسُوْلُ اللهِ ﷺ: يَا اَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ اَسِيْرُكَ؟ قُلْتُ: يَارَسُوْلَ اللهِ شَكَا حَاجَةً شَدِيْدَةً وَعِيَالاً فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيْلَهُ قَالَ: اَمَا اِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُوْدُ فَرَصَدْتُّهُ الثَّالِثَةَ فَجَعَلَ يَحْثُوْ مِنَ الطَّعَامِ فَاَخَذْتُّهُ فَقُلْتُ لَاَرْفَعَنَّكَ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ وَهذَا آخِرُ ثَلاَثِ مَرَّاتٍ اَنَّكَ تَزْعُمُ لاَ تَعُوْدُ ثُمَّ تَعُوْدُ قَالَ: دَعْنِيْ اُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللهُ بِهَا قُلْتُ: مَا هُنَّ؟ قَالَ: اِذَا اَوَيْتَ اِلَي فِرَاشِكَ فَاقْرَاْ آيَةَ الْكُرْسِيِّ (اَللّهُ لاَ اِلهَ اِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ۞) (البقرة:٢٥٥۞) حَتَّي تَخْتِمَ اْلآيَةَ فَاِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللهِ حَافِظٌ وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّي تُصْبِحَ فَخَلَّيْتُ سَبِيْلَهُ فَاَصْبَحْتُ فَقَالَ لِيْ رَسُوْلُ اللهِ ﷺ: مَا فَعَلَ اَسِيْرُكَ الْبَارِحَةَ؟ قُلْتُ: يَارَسُوْلَ اللهِ زَعَمَ اَنَّهُ يُعَلِّمُنِيْ كَلِمَاتٍ يَنْفَعُنِيَ اللهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيْلَهُ قَالَ: مَا هِيَ؟ قُلْتُ: قَالَ لِيْ: اِذَا اَوَيْتَ اِلَي فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ اَوَّلِهَا حَتَّي تَخْتِمَ اْلآيَةَ (اللهُ لاَ اِلهَ اِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ۞) وَقَالَ لِيْ: لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللهِ حَافِظٌ وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّي تُصْبِحَ وَكَانُوْا اَحْرَصَ شَيْءٍ عَلَي الْخَيْرِ فَقَالَ النَّبِيُّ ﷺ: اَمَا اِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوْبٌ تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُذْ ثَلاَثِ لَيَالٍ يَا اَبَا هُرَيْرَةَ؟ قَالَ: لاَ قَالَ: ذَاكَ شَيْطَانٌ.
رواه البخاري باب اذاوكل رجلا فترك الوكيل شيئا …رقم:٢٣١١. وفي رواية الترمذي عَنْ اَبِيْ اَيُّوْبَ اْلاَنْصَارِيِّ ؓ اِقْرَاْهَا فِي بَيْتِكَ فَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ وَلاَ
34. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “ஸதக்கத்துல் பித்ரின் பொருள்களைப் பாதுகாக்க ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். ஒருவன் வந்து தன் இரு கைகள் நிரம்ப தானியத்தை அள்ளினான், நான் அவனைப் பிடித்தேன், “நிச்சயமாக உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கூட்டிச் செல்வேன்‘ என்றேன். “நான் ஓர் ஏழை, மனைவி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் மிகவும் தேவை உடையவன்‘ என்றான், அவனை நான் விட்டுவிட்டேன். மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன், “அபூஹுரைராவே! உன்னுடைய கைதி நேற்று இரவு என்ன செய்தான்?” என்று வினவினார்கள் (இச்சம்பவத்தை அல்லாஹ் முன்பே அன்னாருக்கு அறிவித்திருந்தான்) “யாரஸூலல்லாஹ், அவன் தனது தேவையையும் தன் குடும்பச் சுமையையும் பற்றி முறையிட்டான், அதனால் அவன் மீது இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்‘ என்றேன். “அவன் பொய் சொன்னான், மறுபடியும் அவன் வருவான்”, என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துக் கூறினார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டதால் அவன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது, எனவே அவன் வருகையை எதிர்பார்த்திருந்தேன். அவன் வந்து தன் இரு கைகளால் தானியத்தை அள்ள ஆரம்பித்தான். நான் அவனைப்பிடித்து, “நிச்சயமாக நபி (ஸல்) அவர்களிடம் உன்னை அழைத்துச் செல்வேன்‘ என்றேன், “என்னை விட்டு விடுங்கள். நான் தேவை யுடையவன், என் மீது மனைவி மக்களைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது, இனி நான் இங்கு வரமாட்டேன்‘ என்றான், அவன் மீது எனக்கு இரக்கம் வந்துவிட அவனை விட்டுவிட்டேன். காலையில் நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே, நேற்றிரவு உமது கைதி என்ன செய்தான்?” என்று மீண்டும் கேட்க, “யாரஸூலல்லாஹ், அவன் தன் அதிகமான தேவையையும் தன் குடும்பத்தின் வறுமையையும் பற்றி முறையிட்டான், அதனால் அவன் மீது இரக்கப்பட்டு விட்டுவிட்டேன்‘ என்றேன், எச்சரிக்கையாக இருக்கவும். அவன் பொய் சொல்கிறான், மீண்டும் வருவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகையால் மீண்டும் நான் அவனை எதிர்பார்த்திருந்தேன், மறுநாள் இரவும் (அவன் வந்தான்) தன் இரு கைகளாலும் தானியத்தை அள்ளத் தொடங்கினான். நான் அவனைப் பிடித்து, “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் நிச்சயமாக உன்னை அழைத்துச் செல்வேன், இது மூன்றாவதும் கடைசி முறையுமாகும். இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லியிருந்தாய், மறுபடியும் வந்துவிட்டாய்!‘ என்றேன். “உமக்குச் சில கலிமாக்களைச் சொல்லித் தருகிறேன், அதன் காரணமாக அல்லாஹ் உமக்குப் பலன் அளிப்பான் என்னை விட்டுவிடும்!” என்றான். “அவை யாவை?’ என்றேன். “நீ தூங்கச் சென்றால், ஆயத்துல்குர்ஸியை ஓதிக்கொள்ளும், உமக்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்படுவார். காலை வரை எந்த ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்‘ என்று சொன்னான். காலையில் நபி (ஸல்) அவர்கள், “நேற்றிரவு உமது கைதி என்ன செய்தான்? என்று கேட்க, “யாரஸூலல்லாஹ், அவன் என்னிடம், “உனக்குச் சில வார்த்தைகளைக் கற்பிப்பேன், அதனைக்கொண்டு அல்லாஹ் உனக்குப் பயன் அளிப்பான்” என்று சொன்னான், அதனால் இம்முறையும் அவனை விட்டுவிட்டேன்”, என்று கூறிறேன். “அக்கலிமாக்கள் யாவை?’ என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், “நீர் தூங்கச் சென்றால், ஆயத்துல்குர்ஸியை ஓதிக்கொள்ளும், அல்லாஹ் உமக்காக ஒரு பாதுகாவலரை நியமிப்பான். காலை வரை எந்த ஷைத்தானும் அருகில் வரமாட்டான்” என்று கூறினான் என்றேன். ஹதீஸின் அறிவிப்பாளர் கூறுகின்றார், “ஸஹாபாப் பெருமக்கள் (ரலி) நற்காரியங்களில் அதிகப் பேராசை கொண்டவர்களாக இருந்தனர்‘. (இதனால் கடைசித் தடவை நல்ல வார்த்தைகளைக்கேட்டு அவனை விட்டுவிட்டார்கள்) நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள், அவன் பொய்யன். உம்மிடம் உண்மை கூறிவிட்டான், அபூஹுரைராவே, மூன்று இரவுகளாக உம்மிடம் பேசியவன் யாரெனத் தெரியுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், “தெரியாது” என்றேன், “அவன் தான் ஷைத்தான்”. (ஸதகாவின் பொருட்களில் தனது சூழ்ச்சிகளால் நஷ்டம் ஏற்படுத்த அவன் வந்தான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
ஹஜ்ரத் அபூ அய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்களின் அறிவிப்பில், “உமது வீட்டில் ஆயத்துல்குர்ஸியை ஓதி வாரும். உம்மிடம் ஷைத்தான், ஜின் யாரும் வரமாட்டார்கள்” என்று ஷைத்தான் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது.
(திர்மிதீ)
٣٥– عَنْ اُبَيِّ بْنِ كَعْبٍؓ قَالَ:قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:يَا اَبَا الْمُنْذِرِ! اَتَدْرِيْ أَيُّ آيَةٍ مِّنْ كِتَابِ اللهِ مَعَكَ اَعْظَمُ؟ قَالَ: قُلْتُ: اَللّهُ وَرَسُوْلُهُ اَعْلَمُ قَالَ: يَا اَبَا الْمُنْذِرِ! اَتَدْرِيْ أَيُّ آيَةٍ مِّنْ كِتَابِ اللهِ مَعَكَ اَعْظَمُ؟ قَالَ:قُلْتُ اَللّهُ لاَ اِلهَ اِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ قَالَ: فَضَرَبَ فِيْ صَدْرِيْ وَقَالَ: وَاللهِ! لِيَهْنِكَ الْعِلْمُ اَبَا الْمُنْذِرِ.
رواه مسلم باب فضل سورة الكهف واية الكرسي رقم:١٨٨٥. وَفِيْ رِوَايَةٍ وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ اِنَّ لَهَا لِسَانًا وَشَفَتَيْنِ تُقَدِّسُ الْمَلِكَ عِنْدَ سَاقِ الْعَرْشِ قُلْتُ. رهو في الصحيح باختصار رواه احمد ورجاله رجال الصحيح مجمع الزوائد:٧ /٣٩
35. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஹஜ்ரத் உபய்யிப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அபுல் முன்திர்! (இது ஹஜ்ரத் உபய்யிப்னு கஅப் (ரலி) அவர்களின் புனைப் பெயர்) அல்லாஹ்வின் வேதத்தில் எந்த ஆயத் உம்மிடத்தில் மிக மகத்துவம் வாய்ந்தது என நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனது ரஸூலுமே மிக்க அறிந்தவர்கள்‘ என நான் பதில் கூறிறேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், “உம்மிடத்தில் அல்லாஹ்வின் வேதத்தில் மிக மகத்துவம் வாய்ந்த ஆயத் எது?” எனக் கேட்க (اَللّهُ لاَ اِلهَ اِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ) எனத் தொடங்கும் “ஆயத்துல்குர்ஸி” என்றேன். நபி (ஸல்) அவர்கள் (இந்தப் பதிலைப் பாராட்டும் வண்ணம்) அபுல் முன்திர்! உமது இல்மு (கல்வி ஞானம்) உமக்கு சிறக்கட்டுமாக!” என்று என் நெஞ்சின் மீது தட்டிக் கொடுத்துச் சொன்னார்கள்.
(முஸ்லிம்)
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை! இந்த ஆயத்திற்கு ஒரு நாவும், இரு உதடுகளும் உள்ளன. அவை அல்லாஹ்வின் தூய்மையை அர்ஷின் கால் பகுதியில் இருந்தவாறு துதிக்கின்றன” என்று மற்றோர் அறிவிப்பில் ஆயத்துல் குர்ஸீயைப்பற்றி வந்துள்ளது.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لِكُلِّ شَيْءٍ سَنَامٌ وَاِنَّ سَنَامَ الْقُرْآنِ سُوْرَةُ الْبَقَرَةِ وَفِيْهَا آيَةٌ هِيَ سَيِّدَةُ آيِ الْقُرْآنِ هِيَ آيَةُ الْكُرْسِيِّ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ما جاء في سورة البقرة واية الكرسي رقم:٢٨٧٨
36. “ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சிகரம் உண்டு (அது எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து இருக்கும்) சங்கைமிக்க குர்ஆனின் சிகரம் “சூரத்துல் பகரா”, இந்த சூராவில் புனித குர்ஆனின் அனைத்து ஆயத்துகளின் தலைமையான ஆயத் இருக்கிறது. அதுதான் ஆயத்துல்குர்ஸி” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
٣٧– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ:بَيْنَاجِبْرِيْلُؑ قَاعِدٌ عِنْدَ النَّبِيِّ ﷺ، سَمِعَ نَقِيْضًا مِنْ فَوْقِهِ، فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ : هذَا بَابٌ مِّنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ، لَمْ يُفْتَحْ قَطُّ اِلاَّ الْيَوْمَ، فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ: هذَا مَلَكٌ نَزَلَ اِلَي اْلاَرْضِ، لَمْ يَنْزِلْ قَطُّ اِلاَّ الْيَوْمَ، فَسَلَّمَ وَقَالَ: اَبْشِرْ بِنُوْرَيْنِ اُوْتِيْتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِيٌّ قَبْلَكَ، فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيْمُ سُوْرَةِ الْبَقَرَةِ، لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِّنْهُمَا اِلاَّ اُعْطِيْتَهُ.
رواه مسلم، باب فضل الفاتحة …، رقم:١٨٧٧
37. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “ஒரு முறை ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் உட்கார்ந்திருந்த சமயம் வானில் ஒரு சலசலப்புக் கேட்டது. அவர்கள் தலையை உயர்த்தி, “இப்போது வானத்தின் ஒரு கதவு திறந்துள்ளது. இதற்குமுன் அக்கதவு ஒருபோதும் திறக்கப்படவில்லை. அதிலிருந்து ஒரு மலக்கு இறங்கினார். அவர் இதற்குமுன் பூமிக்கு எப்போதும் இறங்கியதில்லை, அம்மலக்கு நபிகளாரின் சமுகம் வந்து ஸலாம் சொல்லிவிட்டு, “எந்த நபிக்கும் கொடுக்கப்படாத இரு ஒளிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்ற நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒன்று சூரத்துல் ஃபாத்திஹா, மற்றோன்று சூரத்துல் பகராவின் கடைசி இரு ஆயத்துகள். தாங்கள் இதிலிருந்து எதை ஓதினாலும் அது தங்களுக்குக் கிடைக்கும்” என்று சொன்னார்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- அதாவது புகழ் வாசகமாக இருந்தால் புகழ்ந்ததின் நன்மை கிடைக்கும், துஆவுடைய வாசகமாக இருந்தால் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
(ஷரஹ்தீபீ)
٣٨– عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ اللهَ كَتَبَ كِتَابًا قَبْلَ اَنْ يَخْلُقَ السَّموَاتِ وَاْلاَرْضَ بِاَلْفَيْ عَامٍ اَنْزَلَ مِنْهُ آيَتَيْنِ .خَتَمَ بِهِمَا سُوْرَةَ الْبَقَرَةِ وَلاَ يُقْرَآنِ فِيْ دَارٍ ثَلاَثَ لَيَالٍ فَيَقْرَبُهَا شَيْطَانٌ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ما جاء في اخر سورة البقرة رقم:٢٨٨٢
38. “வானம், பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹ் ஒரு நூல் (புத்தகம்) எழுதினான். அந்த நூலிளிருந்து இரு ஆயத்துகளை இறக்கி வைத்தான். அதைக்கொண்டே “சூரத்துல் பகரா“வை அல்லாஹ் முடித்துள்ளான். எந்த வீட்டில் இவ்விரு ஆயத்துகள் மூன்று இரவுகள் தொடர்ந்து ஓதப்படுமோ அந்த வீட்டை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
٣٩– عَنْ اَبِيْ مَسْعُوْدِنِ اْلاَنْصَارِيِّؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ اْلآيَتَيْنِ مِنْ آخِرِ سُوْرَةِ الْبَقَرَةِ فِيْ لَيْلَةٍ كَفَتَاهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ما جاء في اخر سورة البقرة رقم:٢٨٨١
39. எவர் “சூரத்துல் பகரா“வின் கடைசி இரு ஆயத்துகளை இரவில் ஓதுவாரோ அவருக்கு இவ்விரு ஆயத்துகளும் போதுமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமஸ்ஊத் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- இரு ஆயத்துகளும் போதுமாகிவிடும் என்பதற்கு இரு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. முதலாவது, இதை ஓதுபவர் அந்த இரவு முழுமையும் எல்லாத் தீங்குகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவார் என்பதாகும். மற்றோரு கருத்து, இந்த இரு ஆயத்துகளும் தஹஜ்ஜத் தொழுகைக்குப் பகரமாகிவிடும் என்பதாகும்.
(நவவி)
٤٠– عَنْ شَدَّادِ بْنِ اَوْسٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا مِنْ مُسْلِمٍ يَاْخُذُ مَضْجَعَهُ يَقْرَأُ سُوْرَةً مِنْ كِتَابِ اللهِ اِلاَّ وَكَّلَ اللهُ مَلَكًا فَلاَ يَقْرَبُهُ شَيْءٌ يُؤْذِيْهِ حَتَّي يَهُبَّ مَتَي هَبَّ.
رواه الترمذي كتاب الدعوات رقم:٣٤٠٧
40. “முஸ்லிமான ஒருவர் படுக்கைக்குச் சென்றதும் புனிதக் குர்ஆனில் இருந்து ஏதேனும் ஒரு சூராவை ஓதிக்கொண்டால், அல்லாஹ் அவரைப் பாதுகாக்க ஒரு மலக்கை நியமிக்கிறான். பிறகு அவர் எப்பொழுது விழித்தாலும் அவர் விழிக்கும் வரை இடர் தரும் எந்தப் பொருளும் அவரை நெருங்கவும் செய்யாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஷத்தாது இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதீ)
٤١– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ قَرَاَ فِي لَيْلَةٍ مِائَةَ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِيْنَ.
(وهو بعض الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط الشيخين ولم يخرجاه ووافقه الذهبي: ١/٣٠٨
41.”எவரொருவர் நூறு ஆயத்துகளை ஓர் இரவில் ஓதுகிறாரோ, அவர் அன்றிரவை இபாதத்தில் கழித்தவர்கüல் கணிக்கப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٤٢– عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَتَمِيْمِ نِ الدَّارِيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ فِيْ لَيْلَةٍ كُتِبَ لَهُ قِنْطَارٌ وَالْقِنْطَارُخَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا.
(الحديث) رواه الطبراني في الكبير والاوسط وفيه اسماعيل ابن عياش ولكنه من روايته عن الشاميين وهي مقبولة مجمع الزوائد: ٢/٥٤٧
42.”ஓர் இரவில் பத்து ஆயத்துக்களை ஓதுபவருக்கு ஒரு கின்தார் நன்மை எழுதப்படுகிறது. ஒரு கின்தார் என்பது உலகம், உலகிலுள்ள யாவற்றையும் விடச் சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் பளாலத்துப்னு உபைத், ஹஜ்ரத் தமீம் தாரீ (ரலி) ஆகிய இருவரும் அறிவித்துள்ளார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٤٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ قَرَاَ عَشْرَ آيَاتٍ فِيْ لَيْلَةٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِيْنَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط مسلم ووافقه الذهبي: ١/٥٥٥
43.”எவரொருவர் இரவில் பத்து ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் அன்றிரவு அல்லாஹ்வின் வணக்கத்தை விட்டும் மறந்தவர்களில் கணிக்கப் படமாட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٤٤– عَنْ اَبِيْ مُوْسَيؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنِّيْ لَاَعْرِفُ اَصْوَاتَ رُفْقَةِ اْلاَشْعَرِيِّيْنَ بِالْقُرْآنِ حِيْنَ يَدْخُلُوْنَ بِاللَّيْلِ وَاَعْرِفُ مَنَازِلَهُمْ مِنْ اَصْوَاتِهِمْ بِالْقُرْآنِ بِاللَّيْلِ وَاِنْ كُنْتُ لَمْ اَرَ مَنَازِلَهُمْ حِيْنَ نَزَلُوْا بِالنَّهَارِ.
(الحديث) رواه مسلم باب من فضائل الاشعريين ٤ رقم:٦٤٠٧
44.”அஷ்ரீ கூட்டத்தாரின் பயணத் தோழர்கள் இரவில் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு இல்லங்களுக்குத் திரும்பி வந்து புனிதக் குர்ஆனை ஓதுகையில், அவர்களின் சப்தத்தை நான் அறிந்து கொள்கிறேன். மேலும், பகலில் தங்கள் வீடுகளுக்கு அவர்கள் வருவதைப் பார்க்காவிட்டாலும் இரவில் அவர்கள் புனிதக் குர்ஆன் ஓதும் சப்தத்தை வைத்து அவர்கள் இல்லங்களையும் அறிந்து கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
٤٥– عَنْ جَابِرٍؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: مَنْ خَشِيَ مِنْكُمْ اَنْ لاَ يَسْتَيْقِظَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوْتِرْ مِنْ اَوَّلِهِ وَمَنْ طَمِعَ مِنْكُمْ اَنْ يَقُوْمَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوْتِرْ مِنْ آخِرِ اللَّيْلِ فَاِنَّ قِرَاءَةَ الْقُرْآنِ فِيْ آخِرِ اللَّيْلِ مَحْضُوْرَةٌ وَهِيَ اَفْضَلُ.
رواه الترمذي باب ما جاء في كراهية النوم قبل الوتر رقم:٤٥٥
45.”எவர் இரவின் கடைசிப்பகுதியில் கண் விழிக்க இயலாது என்று அஞ்சுவாரோ, அவர் இரவின் ஆரம்பத்திலேயே (தூங்கு முன்பு) வித்ரு தொழுது கொள்ளவும். எவர் இரவின் கடைசிப் பகுதியில் எழ ஆர்வம் கொள்வாரோ, அவர் இரவின் கடைசிப் பகுதியில் வித்ரு தொழுது கொள்ளவும். ஏனேனில், இரவின் கடைசிப்பகுதியில் புனிதக் குர்ஆனை ஓதும் சமயம் மலக்குகள் வருகை தருகிறார்கள், அந்நேரம் ஓதுவதே சிறப்பானது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதீ)
٤٦– عَنْ اَبِي الدَّرْدَاءِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ قَرَأَ ثَلاَثَ آيَاتٍ مِنْ اَوَّلِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ما جاء في فضل سورة الكهف رقم:٢٨٨٦
46.”சூரத்துல் கஹ்பின் ஆரம்ப மூன்று ஆயத்துகளை ஓதுபவர், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٤٧– عَنْ اَبِي الدَّرْدَاءِؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ اَوَّلِ سُوْرَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَفِي رِوَايَةٍ: مِنْ آخِرِ الْكَهْفِ.
رواه مسلم باب فضل سورة الكهف وآية الكرسي رقم:١٨٨٣
47.நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “சூரத்துல் கஹ்பின் ஆரம்பப் பத்து ஆயத்துகளை மனனம் செய்தவர் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுவிட்டார்” என்றும், மற்றோர் அறிவிப்பில், “சூரத்துல் கஹ்பின் இறுதிப் பத்து ஆயத்துகளை மனனம் செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.
(முஸ்லிம்)
٤٨– عَنْ ثَوْبَانَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ قَرَأَ الْعَشْرَ اْلاَوَاخِرَ مِنْ سُوْرَةِ الْكَهْفِ فَاِنَّهُ عِصْمَةٌ لَهُ مِنَ الدَّجَّالِ.
رواه النسائي في عمل اليوم والليلة: رقم:٩٤٨ قال المحقق: هذا الاسناد رجاله ثقات
48.”கஹ்ப்” சூராவின் கடைசிப்பத்து ஆயத்துக்களை ஓதினால் நிச்சயமாக அது தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அவருக்குப் பாதுகாப்பாக ஆகிவிடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதை ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அமலுல் யவ்ம் வல்லைலா அந்நஸயீ)
٤٩– عَنْ عَلِيٍّؓ مَرْفُوْعًا: مَنْ قَرَأَ سُوْرَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ فَهُوَ مَعْصُوْمٌ اِلَي ثَمَانِيَةِ اَيَّامٍ مِنْ كُلِّ فِتْنَةٍ وَاِنْ خَرَجَ الدَّجَّالُ عُصِمَ مِنْهُ.
التفسير لابن كثير عن المختارة للحافظ الضياء المقدسي:٣ /٧٥
49.”ஜும்ஆ நாளன்று கஹ்ப் சூராவை ஓதுபவர் எட்டு நாட்கள் (அடுத்த ஜும்ஆ) வரை சகல குழப்பங்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார். தஜ்ஜால் வந்துவிட்டாலும் அச்சமயத்தில் அவனுடைய குழப்பத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவார்‘, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(தஃப்ஸீர் இப்னு கஸீர்)
٥٠– عَنْ اَبِيْ سَعِيْدِنِ الْخُدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ سُوْرَةَ الْكَهْفِ كَمَا اُنْزِلَتْ كَانَتْ لَهُ نُوْرًا يَوْمَ الْقِيَامَةِ مِنْ مَقَامِهِ اِلي مَكَّةَ وَمَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آخِرِهَا ثُمَّ خَرَجَ الدَّجَّالُ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ.
(الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط مسلم ووافقه الذهبي:١/٥٦٤
50.”எவர் சூரத்துல் கஹ்பை அது இறக்கப்பட்டதைப் போன்று (எழுத்துக்களைச் சரியாக உச்சரித்து) ஓதுகிறாரோ, அவருக்காக கியாமத் நாளன்று இந்த சூரா அவர் இருக்குமிடத்திலிருந்து மக்கா முகர்ரமா வரை ஒளிமயமாகிவிடும். யார் இந்த சூராவின் கடைசிப் பத்து ஆயத்துகளை ஓதுகிறாரோ, பிறகு தஜ்ஜால் வெளியானால் தஜ்ஜாலால் இவர் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٥١– عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ:اَلْبَقَرَةُ سَنَامُ الْقُرْآنِ وَذُرْوَتُهُ، نَزَلَ مَعَ كُلِّ آيَةٍ مِنْهَا ثَمَانُوْنَ مَلَكًا، وَاسْتُخْرِجَتْ (اَللّهُ لاَ اِلهَ اِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ۞) مِنْ تَحْتِ الْعَرْشِ، فَوُصِلَتْ بِسُوْرَةِ الْبَقَرَةِ، وَ»يس» قَلْبُ الْقُرْآنِ لاَ يَقْرَأُهَا رَجُلٌ يُرِيْدُ اللهَ تَبَارَكَ وَتَعَالَي وَالدَّارَ اْلآخِرَةَ اِلاَّ غُفِرَ لَهُ وَاقْرَؤُوْهَا عَلي مَوْتَاكُمْ.
رواه احمد:٥/٢٦
51.”புனிதக் குர்ஆனின் சிகரம் (உயரமான பகுதி) சூரத்துல் பகரா, அதன் ஒவ்வொரு ஆயத்துடனும் எண்பது மலக்குகள் இறங்கியுள்ளனர், அர்ஷின் அடிப்பகுதியிலிருந்து ஆயத்துல்குர்ஸீ எடுக்கப்பட்டுள்ளது (அல்லாஹ்வின் தனிப்பட்ட பொக்கிஷ (கருவூல)த்தில் இருந்து) இறங்கியது, பின்பு அது சூரத்துல் பகராவுடன் இணைக்கப்பட்டது. சூரா யாஸீன் புனித குர்ஆனின் இதயம், அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மறுமையையும் நாடி நம்பிக்கையுடன் இந்த சூராவை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். எனவே, மரணத் தருவாயில் இருப்பவருக்கு எளிதாக உயிர் பிரிய அவர் அருகில் இருந்து இந்த சூராவை ஓதுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மஃகிலுப்னு யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- இஸ்லாமின் அடிப்படைச் சட்டங்கள், கொள்கைகள். ஷரீஅத் சட்டங்கள் எந்த அளவு விரிவாக சூரத்துல் பகராவில் கூறப்பட்டுள்ளனவோ அந்த அளவு விரிவாக புனிதக் குர்ஆனின் வேறொரு அத்தியாயத்தில் கூறப்படவில்லை” என்ற காரணத்தால் சூரத்துல் பகராவைப் புனிதக் குர்ஆனின் சிகரம் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
٥٢– عَنْ جُنْدُبٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ يس فِيْ لَيْلَةٍ اِبْتِغَاءَ وَجْهِ اللهِ غُفِرَ لَهُ.
رواه ابن حبان (ورجاله ثقات):٦ /٣١٢
52.”அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி எவரேனும் இரவில் சூரா யாஸீனை ஓதினால் அவர் பாவம் மன்னிக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுஹிப்பான்)
٥٣– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ قَرَأَ الْوَاقِعَةَ كُلَّ لَيْلَةٍ لَمْ يَفْتَقِرْ.
رواه البيهقي في شعب الايمان:٢/٤٩١
53.எவர் ஒவ்வொரு இரவும் “சூரத்துல் வாஃகிஆ”வை ஓதி வருவாரோ அவருக்கு வறுமை வராது” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٥٤– عَنْ جَابِرٍؓ اَنَّ النَّبِيَّ ﷺ كَانَ لاَ يَنَامُ حَتّي يَقْرَأَ الم تَنْزِيْلُ، وَتَبَارَكَ الَّذِيْ بِيَدِهِ الْمُلْكُ.
رواه الترمذي، باب ما جاء في فضل سورة الملك، رقم:٢٨٩٢
54.ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,”ரஸூலுல்லாஹி (ஸல்) (21ஆம் ஜுஸ்விலிருக்கும்) –அலிப் லாம் மீம் ஸஜ்தா” சூராவையும், “தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க்” சூராவையும், ஓதாமல் ஒருநாளும் தூங்கமாட்டார்கள்.
(திர்மிதீ)
٥٥– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ سُوْرَةً مِّنَ الْقُرْآنِ ثَلاَثُوْنَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتّي غُفِرَ لَهُ وَهِيَ سُوْرَةُ تَبَارَكَ الَّذِيْ بِيَدِهِ الْمُلْكُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن، باب ما جاء في فضل سورة الملك، رقم:٢٨٩١
55.”புனித குர்ஆனில் முப்பது ஆயத்துகளைக் கொண்ட சூரா ஒன்று உள்ளது. அது தன்னை ஓதி வருபவருக்காக அவருடைய பாவம் மன்னிக்கப்படும் வரை அல்லாஹ்விடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கும். அந்த சூரா “தபாரக்கல்லதீ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٥٦–عَنِ اِبْنِ عَبَّاسٍؓ قَالَ:ضَرَبَ بَعْضُ اَصْحَابِ النَّبِيِّ ﷺ خِبَاءَهُ عَلي قَبْرٍ وَهُوَ لاَ يَحْسَبُ اَنَّهُ قَبْرٌ، فَاِذَا فِيْهِ قَبْرُ اِنْسَانٍ يَقْرَأُ سُوْرَةَ الْمُلْكِ حَتَّي خَتَمَهَا، فَاَتَي النَّبِيَّ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِ ﷺ اِنِّيْ ضَرَبْتُ خِبَائِيْ وَاَنَا لاَ اَحْسَبُ اَنَّهُ قَبْرٌ فَاِذَا فَيْهِ اِنْسَانٌ يَقْرَأُ سُوْرَةَ الْمُلْكِ حَتَّي خَتَمَهَا، فَقَالَ النَّبِيُّ ﷺ: هِيَ الْمَانِعَةُ، هِيَ الْمُنْجِيَةُ، تُنْجِيْهِ مِنْ عَذَابِ الْقَبْرِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في فضل سور الملك، رقم:٢٨٩٠
56.ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஸஹாபிகளில் ஒருவர், ஒரு கப்ரின் மீது கூடாரம் அமைத்தார். அவருக்கு அங்கு கப்ரு இருப்பது தெரியாது. திடீரென அந்த இடத்தில் ஒருவர் சூரா “தபாரக்கல்லதீ‘யை ஓதுவதைக் கேட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் ஓரிடத்தில் கூடாரமடித்துத் தங்கியிருந்தேன். அவ்விடத்தில் கப்ரு இருப்பது எனக்குத் தெரியாது, திடீரென அங்கு ஒருவர் “தபாரக்கல்லதீ சூராவை கடைசி வரை ஓதக்கேட்டேன்” என்று சொன்னார். “இந்த சூரா அல்லாஹ்வின் வேதனையை தடுக்கக் கூடியது. மேலும் கப்ரின் வேதனையிலிருந்து விடுதலை தரக் கூடியது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
٥٧– عَنِ ابْنِ مَسْعُوْدٍؓ: يُؤْتَي الرَّجُلُ فِيْ قَبْرِهِ فَتُؤْتي رِجْلاَهُ فَتَقُوْلُ رِجْلاَهُ: لَيْسَ لَكُمْ عَلي مَا قِبَلِيْ سَبِيْلٌ كَانَ يَقُوْمُ يَقْرَاُ بِيْ سُوْرَةَ الْمُلْكِ، ثُمَّ يُؤْتي مِنْ قِبَلِ صَدْرِهِ اَوْ قَالَ بَطْنِهِ فَيَقُوْلُ: لَيْسَ لَكُمْ عَلي مَا قِبَلِيْ سَبِيْلٌ كَانَ يَقْرَأُ بِيْ سُوْرَةَ الْمُلْكِ، ثُمَّ يُؤْتي رَأْسُهُ فَيَقُوْلُ: لَيْسَ لَكُمْ عَلي مَا قِبَلِيْ سَبِيْلٌ كَانَ يَقْرَأُ بِيْ سُوْرَةَ الْمُلْكِ، فَهِيَ الْمَانِعَةُ تَمْنَعُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَهِيَ فِي التَّوْرَاةِ سُوْرَةُ الْمُلْكِ، مَنْ قَرَأَهَا فِيْ لَيْلَةٍ فَقَدْ اَكْثَرَ وَاَطْنَبَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٢ /٤٩٨.
57.”கப்ரில் மனிதரின் கால் பக்கமாக வேதனை வரும் சமயம், “என் பக்கமாக நீ வருவதற்கு எந்த வழியுமில்லை, ஏனேனில் இவர் சூரத்துல் முல்க் ஓதி வந்தார்” என்று அவரது கால் கூறும். பிறகு, அது நெஞ்சு அல்லது வயிற்றுப் பக்கமாக வரும் சமயம், “என் பக்கமாக வருவதற்கு உனக்கு எந்தப் வழியும் இல்லை, காரணம் இவர் “சூரா முல்க்” ஓதி வந்தார்‘ என்று நெஞ்சு அல்லது வயிறு கூறும், பிறகு அந்த வேதனை தலைப்பக்கமாக வரும் போது, “நீ என் பக்கமாக வர எந்த வழியும் இல்லை, ஏனேனில் இவர் “சூரத்துல் முல்க்‘ ஓதி வந்தார்” என்று தலை கூறிவிடும். “சூரத்துல் முல்க்” கப்ரின் வேதனையைத் தடுக்கக் கூடியது என்று ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். தவ்ராத்தில் இதன் பெயர் “சூரத்துல் முல்க்‘ எவர் இந்த சூராவை, ஏதேனும் ஓர் இரவில் ஓதுவாரோ அவர் அதிகமான நன்மைகளைத் தேடிக்கொண்டார்” என்று ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
٥٨– عَنِ ابْنِ عُمَرَؓ يَقُوْلُ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ سَرَّهُ اَنْ يَنْظُرَ اِلي يَوْمِ الْقِيَامَةِ كَأَنَّهُ رَأْيُ عَيْنٍ فَلْيَقْرَأْ:۞)اِذَا الشَّمْسُ كُوِّرَتْ۞) وَ (اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ۞) وَ (اِذَا السَّمَاءُ انْشَقَّتْ۞).
رواه الترمذي وقال هذا حديث حسن غريب، باب ومن سورة «اذا الشمس كورت».رقم:٣٣٣٣
58.”கியாமத் நாளின் காட்சியைத் தன் கண்களால் காண்பது போல் பார்க்க ஆசைப்படுபவர், “சூரா இதஷ் ஷம்ஸு குவ்விரத்‘, “சூரா இதஸ்ஸமாஉன் ஃபதரத்‘, “சூரா இதஸ்ஸமாஉன் ஷக்கத்‘ ஓதிக்கொள்ளவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.(ஏனேனில், நியாயத் தீர்ப்பு நாளின் விபரம் இந்த சூராக்களில் கூறப்பட்டுள்ளது).
(திர்மிதீ)
٥٩– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِذَا زُلْزِلَتْ تَعْدِلُ نِصْفَ الْقُرْآنِ، وَقُلْ هُوَ اللهُ اَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ، وَقُلْ يَآيُّهَا الْكفِرُوْنَ تَعْدِلُ رُبْعَ الْقُرْآنِ.
رواه الترمذي وقال : هذا حديث غريب، باب ما جاء في اذا زلزلت، رقم:٢٨٩٤
59.”சூரா “இதா ஸுல்ஸிலத்தில் அர்ள்‘ குர்ஆனின் பாதிக்கு சமம், சூரா “குல்ஹுவல்லாஹு அஹத்‘ குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமம், சூரா “குல்யா அய்யுஹல் காபிரூன்‘ குர்ஆனின் நான்கிலொரு பகுதிக்குச் சமம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- புனிதக் குர்ஆனில் மனிதனின் இம்மை, மறுமை வாழ்வைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மேலும் “இதா ஸுல்ஸிலத்தில் அர்ள்” சூராவில் மறுமையின் வாழ்வைப் பற்றி மனதில் பதியும் வகையில் கூறப்பட்டுள்ளதால் இது பாதிக் குர்ஆனுக்குச் சமமாகும். சூரா “குல்ஹுவல்லாஹு அஹத்” குர்ஆனின் மூன்றிலொரு பகுதி என்று சொல்லக் காரணம், புனிதக் குர்ஆன் (சம்பவங்கள், கட்டளைகள், ஏகத்துவம் ஆகிய) மூன்று அடிப்படையான தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சூராவில் ஓரிறைக் கொள்கை பற்றி மிகச் சிறந்த முறையில் சொல்லப்பட்டுள்ளது, சூரா “குல்யா அய்யுஹல் காபிரூன்” குர்ஆனின் நான்கில் ஒரு பாகத்திற்கு சமம் என்பதற்கான காரணம், புனிதக் குர்ஆனில் ஏகத்துவம், நபித்துவம், சட்டங்கள், சம்பவங்கள் என நான்கு தலைப்புகளாக பிரிக்கப்பட்டால் இந்த சூராவில் மிக உயர்ந்த நடையில் ஏகத்துவம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. புனிதக் குர்ஆனின் பாதி, மூன்றிலொன்று, நான்கிலொன்றுக்குச் சமம் என்று இந்த சூராக்களைப் பற்றிச் சொல்லக் காரணம், இந்த சூராக்களை ஓதுவதால் பாதி, மூன்றிலொன்று, நான்கிலொன்றுக்குச் சமமான நன்மைகள் கிடைக்கும் என்பதாக அறிஞர்கள் சிலர் கூறுகிறார்கள்.
(மளாஹிர் ஹக்)
٦٠– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلاَ يَسْتَطِيْعُ اَحَدُكُمْ اَنْ يَقْرَأَ اَلْفَ آيَةٍ فِيْ كُلِّ يَوْمٍ، قَالُوْا: وَمَنْ يَسْتَطِيْعُ ذلِكَ قَالَ: اَمَا يَسْتَطِيْعُ اَحَدُكُمْ اَنْ يَقْرَأَ اَلْهكُمُ التَّكَاثُرُ.
رواه الحاكم وقال: رواة هذا الحديث كلهم ثقات وعقبة هذا غير مشهور ووافقه الذهبي:١/٥٦٧
60.”உங்களில் எவருக்கேனும் தினமும் புனித குர்ஆனின் ஆயிரம் ஆயத்துகளை ஓத இயலுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “தினமும் ஆயிரம் ஆயத்துகள் எவரால் ஓத முடியும்?” என்று ஸஹாபாக்கள் (ரலி) கூறினார்கள். “உங்களில் எவருக்கேனும் குறைந்த பட்சம் “அல்ஹாகுமுத்தகாஸுர்” ஓதிக்கொள்ள முடியாதா? (அதன் நன்மை ஆயிரம் ஆயத்துகளுக்குச் சமமானது)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٦١– عَنْ نَوْفَلٍؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لِنَوْفَلٍ: اِقْرَأْ (قُلْ ياَيُّهَا الْكفِرُوْنَ۞) ثُمَّ نَمْ عَلي خَاتِمَتِهَا فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ.
رواه ابو داؤد، باب ما يقول عند النوم رقم:٥٠٥٥
61.”குல்யா அய்யுஹல் காபிரூன் சூரா ஓதிய பின்பு யாருடனும் பேசாமல் உறங்கி விடுங்கள். ஏனேன்றால், இந்த சூராவில் ஷிர்க்கை விட்டும் நீங்கியதற்கான உறுதிப் பத்திரம் உள்ளது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஹஜ்ரத் நவ்ஃபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٦٢– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لِرَجُلٍ مِنْ اَصْحَابِهِ: هَلْ تَزَوَّجْتَ يَا فُلاَنُ؟ قَالَ: لاَ، وَاللهِ يَا رَسُوْلَ اللهِ وَلاَ عِنْدِيْ مَا اَتَزَوَّجُ بِهِ قَالَ: اَلَيْسَ مَعَكَ قُلْ هُوَ اللهُ اَحَدٌ، قَالَ : بَلي، قَالَ: ثُلُثُ الْقُرْآنِ، قَالَ: اَلَيْسَ مَعَكَ اِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ؟ قَالَ: بَلي، قَالَ: رُبْعُ الْقُرْآنِ، قَالَ: اَلَيْسَ مَعَكَ قُلْ يآيُّهَا الْكَافِرُوْنَ؟ قَالَ: بَلي، قَالَ رُبْعُ الْقُرْآنِ، قَالَ: اَلَيْسَ مَعَكَ اِذَا زُلْزِلَتِ اْلاَرْضُ؟ قَالَ: بَلي، قَالَ: رُبْعُ الْقُرْآنِ، قَالَ: تَزَوَّجْ تَزَوَّجْ.
رواه الترمذي وقال: هذا حديث حسن، باب ما جاء في اذا زلزلت، رقم:٢٨٩٥
62.ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸஹாபியிடம் “நீர் மணமுடித்துக் கொண்டீரா?’ எனக் கேட்டார்கள், “யாரஸூலல்லாஹ், மணமுடிக்கவில்லை, மேலும் திருமணம் செய்யுமளவிற்குச் செல்வம் என்னிடம் கிடையாது, நான் ஏழை‘ என்று சொன்னார்.”உமக்கு “சூரத்துல் இக்லாஸ்” மனனமாகத் தெரியுமா?’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “ஆம் மனனம் செய்துள்ளேன்” என்றார். “இது (நன்மையில்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதிக்குச் சமம்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, “உமக்கு சூரா “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி” மனனமில்லையா?’ என்று கேட்க, அவர் “ஆம்” என்றார். “இது (நன்மையில்) குர்ஆனின் நான்கிலொரு பகுதிக்குச் சமம்‘ என்று சொல்லியபின், உமக்கு சூரா குல்யா அய்யுஹல் காஃபிரூன் மனனமாகத் தெரியுமா? என்று கேட்க, அவர் “ஆம்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “இது குர்ஆனின் நான்கிலொரு பங்குக்குச் சமம்” என்று கூறினர். பின்னர் உமக்கு சூரா “இதா ஸுல்ஸிலத்தில் அர்ள்” மனனமாகத் தெரியுமா? என்று கேட்க, அவர் ஆம்! என்றார். “இது (நன்மையில்) குர்ஆனின் நான்கிலொரு பகுதிக்குச் சமம். மணமுடித்துக் கொள்ளுங்கள், மணமுடித்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- நபி (ஸல்) அவர்கள் கூறியதன் நோக்கம் என்னவென்றால், இத்தனை சூராக்களை நீர் மனனம் செய்திருக்கும் போது, நீர் ஏழையல்ல, சீமானாவீர்! எனவே நீர் மணமுடித்துக்கொள்ள வேண்டும் என்பதாம்.
(ஆரிளத்துல் அஹ்வதீ)
٦٣– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ يَقُوْلُ: اَقْبَلْتُ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ فَسَمِعَ رَجُلاً يَقْرَأُ قُلْ هُوَ اللهُ اَحَدٌ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: وَجَبَتْ، فَسَأَلْتُهُ: مَاذَا يَا رَسُوْلَ اللهِ؟ قَالَ: اَلْجَنَّةُ قَالَ اَبُوْ هُرَيْرَةَؓ: فَاَرَدْتُّ اَنْ اَذْهَبَ اِلَي الرَّجُلِ فَاُبَشِّرُهُ ثُمَّ فَرِقْتُ اَنْ يَفُوْتَنِيَ الْغَدَاءُ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ فَآثَرْتُ الْغَدَاءَ ثُمَّ ذَهَبْتُ اِلي الرَّجُلِ فَوَجَدْتُهُ قَدْ ذَهَبَ.
رواه مالك باب ما جاء في قراءة قل هو الله احد ص:١٩٣
63.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுடன் வந்த சமயம், ஒருவர் குல்ஹுவல்லாஹு அஹத் சூரா ஓதுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “கடமையாகிவிட்டது” என்றார்கள். யாரஸூலல்லாஹ், என்ன கடமையாகிவிட்டது? என்று நான் கேட்க, “சொர்க்கம் கடமையாகிவிட்டது” என்று சொன்னார்கள். ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த மனிதரிடம் சென்று இந்நற்செய்தியைச் சொல்ல விரும்பினேன். ஆயினும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் மதிய உணவு உண்பது தவறிப் போய்விடுமே என்ற எண்ணத்தால் உணவிற்கு முதலிடம் கொடுத்தேன். (நபி (ஸல்) அவர்களுடன் உணவு அருந்துவது பெரும் பாக்கியம் ஆகும்) அதன் பிறகு அம்மனிதர் இருந்த இடத்திற்கு வந்த போது அவர் அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டிருந்தார்”.
(முத்தா இமாம் மாலிக்)
٦٤– عَنْ اَبِي الدَّرْدَاءِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَيَعْجِزُ اَحَدُكُمْ اَنْ يَقْرَأَ فِيْ لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ؟ قَالُوْا: وَكَيْفَ يَقْرَأُ ثُلُثَ الْقُرْآنِ؟ قَالَ: (قُلْ هُوَ اللهُ اَحَدٌ۞) يَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ.
رواه مسلم، باب فضل قراءة قل هو الله احد، رقم:١٨٨٦
64.”உங்களில் எவருக்கும் ஓரிரவில் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலாது?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) கேட்டதற்கு, “ஒரு இரவில் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை எவரால் ஓத முடியும்?’ என ஸஹாபாக்கள் கேட்டார்கள்.”குல்ஹுவல்லாஹு அஹத்” சூரா ஓதுவது குர்ஆனின் மூன்றிலொரு பகுதி ஒதியதற்கு சமம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்லிம்)
٦٥– عَنْ مُعَاذِ بْنِ اَنَسِ نِ الْجُهَنِيِّؓ صَاحِبِ النَّبِيِّ ﷺ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ قَرَأَ (قُلْ هُوَ اللهُ اَحَدٌ۞) حَتّي يَخِتِمَهَا عَشْرَ مَرَّاتٍ بَنَي اللهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِؓ: اِذًا اَسْتَكْثِرُ يَا رَسُوْلَ اللهِﷺ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَللّهُ اَكْثَرُ وَاَطْيَبُ.
رواه احمد: ٣ /٤٣٧
65.ஹஜ்ரத் முஆத் இப்னு அனஸ் ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஒருவர் பத்து முறை “குல்ஹுவல்லாஹு அஹத்” சூராவை ஓதினால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை அமைப்பான்”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”யாரஸூலல்லாஹ், அவ்வாறென்றால் நான் அதிகமாக ஓதிவருவேன்” என்று ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், “அல்லாஹ்வும் மிக அதிகமான மிக உயர்ந்த நன்மை வழங்கக் கூடியவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٦٦– عَنْ عَائِشَةَؓ اَنَّ النَّبِيَّ ﷺ بَعَثَ رَجُلاً عَلي سَرِيَّةٍ وَكَانَ يَقْرَأُ لِاَصْحَابِهِ فِيْ صَلاَتِهِ فَيَخْتِمُ بِـ (قُلْ هُوَ اللهُ اَحَدٌ۞) فَلَمَّا رَجَعُوْا ذَكَرُوْا ذلِكَ لِلنَّبِيِّ ﷺ فَقَالَ: سَلُوْهُ لِاَيِّ شَيْءٍ يَصْنَعُ ذلِكَ؟ فَسَأَلُوْهُ فَقَالَ: لِاَنَّهَا صِفَةُ الرَّحْمنِ، وَاَنَا اُحِبُّ اَنْ اَقْرَأَ بِهَا، فَقَالَ النَّبِيُّ ﷺ: اَخْبِرُوْهُ اَنَّ اللهَ يُحِبُّهُ.
رواه البخاري، باب ما جاء في دعاء النبي ﷺ…. رقم:٧٣٧٥
66.ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒருவரை ஒரு குழுக்கு தலைவராக நியமித்து அனுப்பி வைத்தார்கள், அவர் நண்பர்களுக்குத் தொழ வைப்பார். (எந்த சூராவை ஓதினாலும் கடைசியில் “குல்ஹுவல்லாஹு” சூராவை ஓதிமுடிப்பார். அவர்கள் திரும்பி வந்த பின், நபி (ஸல்) அவர்களுக்கு இதைப்பற்றித் தெரிவித்தார்கள், “ஏன் இவ்வாறு செய்தார்? என அவரிடமே கேளுங்கள்‘, என்று நபி (ஸல்) அவர்கள் கூற, மக்கள் அவரிடம் கேட்டனர். “இந்த சூராவில் ரஹ்மானின் தன்மைகள் வர்ணிக்கப்பட்டுள்ளன, அதனால் இதை அதிகமாக ஓத என் மனம் விரும்புகிறது‘ என்றார், அவரது இந்த பதிலைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வும் அவரை நேசிக்கிறான் என்ற செய்தியை அவருக்குச் சொல்லிவிடுங்கள்” என்று கூறினார்கள்.
(புகாரி)
٦٧– عَنْ عَائِشَةَؓ اَنَّ النَّبِيَّ ﷺ كَانَ اِذَا اَوَي اِلَي فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيْهِمَا فَقَرَأَ فِيْهِمَا:(قُلْ هُوَ اللهُ اَحَدٌ۞)، وَ(قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ۞)، وَ(قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاس۞)، ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ، يَبْدَأُ بِهِمَا عَلي رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا اَقْبَلَ مِنْ جَسَدِهِ، يَفْعَلُ ذلِكَ ثَلاَثَ مَرَّاتٍ.
رواه ابو داؤد، باب ما يقول عند النوم رقم:٥٠٥٦
67.”நபி (ஸல்) அவர்கள் இரவில் தூங்கச் செல்லும் போது, தம் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, குல் ஹுவல்லாஹு சூராவையும், குல் அவூதுபிரப்பில் பலக் சூராவையும் குல் அவூது பிரப்பின்னாஸ் சூராவையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி கைகள் எட்டும் அளவுக்கு உடம்பில் தடவிக்கொள்வார்கள், முதலில் தலையில் ஆரம்பித்து முகம், உடம்பின் முன் பகுதி ஆகியவற்றில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். இது நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவும் வழமையாக செய்து வந்த செயல்”, என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(அபூதாவூத்)
٦٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ خُبَيْبٍؓ اَنَّهُ قَالَ: قَالَ رَسُوْلُ الله ﷺ: قُلْ، فَلَمْ اَقُلْ شَئْيًا، ثُمَّ قَالَ: قُلْ، فَلَمْ اَقُلْ شَيْئًا، ثُمَّ قَالَ: قُلْ، فَقُلْتُ: مَا اَقُوْلُ يَا رَسُوْلَ اللهِ؟ قَالَ: قُلْ هُوَ اللهُ اَحَدٌ وَالْمُعَوِّذَتَيْنِ، حِيْنَ تُمْسِيْ وَحِيْنَ تُصْبِحُ، ثَلاَثَ مَرَّاتٍ، تَكْفِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ.
رواه ابو داؤد، باب ما يقول اذا اصبح، رقم:٥٠٨٢
68.”ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு குபைப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “சொல்வீராக!” என்றார்கள். நான் மவுனமாக இருந்தேன், மறுபடியும் “சொல்!” என்று சொல்ல, நான் மவுனமாக இருந்தேன். மூன்றாவது முறை மீண்டும் “சொல்!‘ எனப் பணித்தார்கள், “யாரஸூலல்லாஹ்! என்ன சொல்வது?” என்று கேட்டேன். காலை மாலை மூன்று முறை “குல்ஹுவல்லாஹு அஹத்”, “குல் அவூது பிரப்பில் ஃபலக்”, “குல் அவூது பிரப்பின்னாஸ்” ஓதிக்கொள்ளும்! இந்த சூராக்கள் நோவினை தரும் எல்லாப் தீங்குகளிலிருந்தும் உம்மைப் பாதுகாக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- “அதிகமாக ஓத இயலாதவர்கள் குறைந்தது இந்த மூன்று சூராக்களை காலையும், மாலையும் ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் இதுவே போதுமாகிவிடும்‘ என்பதாக அறிஞர்கள் சிலர் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறுகிறார்கள்.
(ஷரஹுத்தீபி)
٦٩– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَا عُقْبَةَ بْنِ عَامِرٍ! اِنَّكَ لَنْ تَقْرَأَ سُوْرَةً اَحَبَّ اِلَي اللهِ، وَلاَ اَبْلَغَ عِنْدَهُ، مِنْ اَنْ تَقْرَأَ (قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَق۞) فَاِنِ اسْتَطَعْتَ اَنْ لاَ تَفُوْتَكَ فِيْ صَلاَةٍ فَافْعَلْ.
رواه ابن حبان (واسناده قوي) :٥/١٥٠
69.”உக்பதிப்னு ஆமிரே! அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானதும், விரைவில் அவனிடம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமான, “குல் அவூது பிரப்பில் ஃபலக்‘ சூராவைவிட வேறொரு சூராவை நீர் ஓதிட முடியாது. ஆகவே, உம்மால் இயன்ற அளவு அதைத் தொழுகையில் ஓத முடிந்தால் ஓதி வருவீராக!” என்று தன்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٧٠– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلَمْ تَرَ آيَاتٍ اُنْزِلَتِ اللَّيْلَةَ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ؟ (قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ۞) (قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ۞).
رواه مسلم، باب فضل قراءة المعوذتين، رقم:١٨٩١
70.”இன்றிரவு என் மீது இறக்கப்பட்ட ஆயத்துகளை நீர் அறிவீரா? அவ்வாயத்துகள் நிகரற்றவை. இதற்கு முன் இதுபோன்ற ஆயத்துகள் காணப்படவில்லை”. அவை “குல்அவூது பிரப்பில் ஃபலக்“சூராவும், “குல் அவூது பிரப்பின்னாஸ்” சூராவும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பத்இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٧١– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: بَيْنَا اَنَا اَسِيْرُ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ بَيْنَ الْجُحْفَةِ وَاْلاَبْوَاءِ اِذْ غَشِيَتْنَا رِيْحٌ وَظُلْمَةٌ شَدِيْدَةٌ، فَجَعَلَ رَسُوْلُ اللهِ ﷺ يَتَعَوَّذُ بِـ»اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ» وَ»اَعُوْذُ بِرَبِّ النَّاسِ» وَهُوَ يَقُوْلُ: يَا عُقْبَةُ! تَعَوَّذْ بِهِمَا، فَمَا تَعَوَّذَ مُتَعَوِّذٌ بِمِثْلِهِمَا قَالَ: وَسَمِعْتُهُ يَؤُمُّنَا بِهِمَا فِي الصَّلوةِ.
رواه ابو داؤد، باب في المعوذتين، رقم:١٤٦٣
71.ஹஜ்ரத் உக்பத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் “ஜுஹ்ஃபா‘ “அப்வா‘ என்ற இடங்களுக்கிடையே சென்று கொண்டிருந்தேன், அப்போது திடீரென சூறாவளிக் காற்றும் கடும் இருளும் எங்களைச் சூழ்ந்து கொண்டன. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் “குல் அவூது பிரப்பில் ஃபலக்”, “குல் அவூது பிரப்பின்னாஸ்” ஆகிய இரு சூராக்களை ஓதி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடத் தொடங்கினார்கள். மேலும், “உக்பாவே, நீரும் இவ்விரு சூராக்களை ஓதிப் பாதுகாப்புத் தேடும், பாதுகாவல் தேடும், எவரும் இந்த சூராக்களைப் போல வேறு எதைக் கொண்டும் பாதுகாப்புத் தேடவில்லை அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட இவ்விரு சூராக்களைப் போன்று வேறு எந்த துஆவும் இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த சூராக்களுக்கு வேறு எதும் நிகரில்லை, என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இமாமத் செய்யும் போது தொழுகையில் இந்த சூராக்களை ஓதக் கேட்டேன்” என ஹஜ்ரத் உக்பத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- “ஜுஹ்ஃபா‘, “அப்வா‘ என்பது மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வராவின் வழியில் இருந்த இரு பிரபலமான இடங்களின் பெயர்கள்.
(பத்லுல் மஜ்ஹூத்)


அல்லாஹ்வை திக்ரு செய்வதன் சிறப்புகள்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ۞).
(البقرة:١٥٢)
1.ஆகவே, என்னை நீங்கள் நினைவு கூருங்கள், உங்களை நான் நினைவு கூருகிறேன்.
(அல்பகரா:152)
وَقَالَ تَعَالي: (وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلاً۞).
(المزمل:٨)
2.உம்முடைய ரப்பின் திருப்பெயரை நினைவு கூருவீராக! (அவனுக்கே வணக்கத்தையும் பிரார்த்தனையையும் ஆக்கி) அவன் பால் முற்றிலும் சார்ந்திருப்பீராக!.
(அல்முஸ்ஸம்மில்:8)
وَقَالَ تَعَالي: (أَلاَ بِذِكْرِ اللهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ۞).
(الرعد:٢٨)
3.அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வை நினைவு கூர்வதினால் தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன.
(அர்ரஃது:28)
وَقَالَ تَعَالي: (وَلَذِكْرُ اللهِ أَكْبَرُ۞).
(العنكبوت:٤٥)
4.இன்னும் அல்லாஹ்வை திக்ரு செய்வதுதான் மிகப்பெரியது.
(அல்அன்கபூத்:45)
وَقَالَ تَعَالي: (اَلَّذِينَ يَذْكُرُونَ اللهَ قِيَاماً وَّقُعُودًا وَعَلي جُنُوبِهِمْ۞).
(ال عمران:١٩١)
5.அவர்கள் எத்தகையோரென்றால் – நின்ற நிலையிலும் இருந்த நிலையிலும் தங்கள் விலாப்புறங்களின் மீது (படுத்த நிலையிலு)ம் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்.
(ஆலுஇம்ரான்:191)
وَقَالَ تَعَالي: (فَاذْكُرُوا اللهَ كَذِكْرِكُمْ أَبآءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا۞).
(البقرة:٢٠٠)
6. (இஸ்லாத்திற்கு முன்) உங்களுடைய முன்னோர்களை நீங்கள் நினைவு கூர்ந்தது போல், அல்லது அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
(அல்பகரா:200)
وَقَالَ تَعَالي: (وَاذْكُرْ رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعاً وَّخِيفَةً وَّدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَاْلآصَالِ وَلاَ تَكُنْ مِّنَ الْغَافِلِينَ۞).
(الاعراف:٢٠٥)
7. (நபியே,) உம் மனத்திற்குள் பணிவோடும், அச்சத்தோடும் சொல்லில் சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம்முடைய ரப்பை நீர் நினைவு கூருவீராக! மறந்திருப்போரில் உள்ளவராக நீர் இருக்கவேண்டாம்.
(அல் அல்ஃராஃப்:205)
وَقَالَ تَعَالي: (وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَّمَا تَتْلُوا مِنْهُ مِنْ قُرْآنٍ وَّلاَ تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلاَّ كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ۞).
(يونس:٦١)
8.நீர் எவ்விஷயத்தில் இருந்தபோதும், அவனில் நின்றுமுள்ள குர்ஆனிலிருந்து எதனை நீங்கள் ஓதியபோதும் எந்தச் செயலை நீங்கள் செய்தபோதும் – அதில் நீங்கள் ஈடுபட்டிருக்கும்போது, உங்கள் மீது நாம் நோட்டமிடாமல் இருந்ததில்லை.
(யூனுஸ்:61)
وَقَالَ تَعَالى: (وَتَوَكَّلْ عَلى الْعَزِيزِ الرَّحِيمِ ۞ الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ ۞ وَتَقَلُّبَكَ فِي السّجِدِينَ ۞ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ۞).
(الشعراء:٢٢٠–٢١٧)
9. (யாவற்றையும்) மிகைத்தவனான – மிகக் கிருபையுடைய (இறை) வனையே நீர் சார்ந்திருப்பீராக! அவன் எத்தகையவனென்றால் நீர் (தொழுகைக்கு) நிற்கும் நேரத்திலும் உம்மை அவன் பார்க்கிறான், இன்னும் சிரம்பணி(ந்து வணங்கு)வோரில் (நீர் இருக்கின்றபோது) உம்முடைய இயங்குதலையும் (அவன் பார்க்கிறான்) நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியேற்பவன்; முற்றும் அறிந்தவன்.
(அஷ்ஷுரா:217-220)
وَقَالَ تَعَالي: (وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ۞).
(الحديد:٤)
10.நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்.
(அல்ஹதீத்:4)
وَقَالَ تَعَالي: (وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِالرَّحْمنِ نُقَيِّضْ لَهُ شَيْطاَناً فَهُوَ لَهُ قَرِينٌ۞).
(الزخرف:٣٦)
11.எவர் அளவற்ற அருளாளனை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்து விடுகிறாரோ, அவருக்கு ஷைத்தானை நாம் நியமித்திடுவோம்; அவன் அவருக்கு நெருங்கிய நண்பனாக இருப்பான்.
(அல்ஸுக்ருஃப்:36)
وَقَالَ تَعَالي: (فَلَوْ لاَ أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ ۞ لَلَبِثَ فِي بَطْنِهِ إِلي يَوْمِ يُبْعَثُونَ۞).
(الصافات:١٤٤، ١٤٣)
12.மீன் வயிற்றினுள் நிச்சயமாக அவர் (நம்மை) துதி செய்பவர்களில் இல்லாமலிருந்தால் – அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை, அதனுடைய வயிற்றிலேயே அவர் தங்கியிருப்பார்.
(அஸ்ஸாஃப்பாத்:143,144)
وَقَالَ تَعَالي: (فَسُبْحنَ اللهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ۞).
(الروم:١٧)
13.எனவே (நம்பிக்கையாளர்களே,) நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும் நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும் அல்லாஹ்வைத் (தொழுது) துதி செய்து கொண்டிருங்கள்.
(அர்ரூம்:17)
وَقَالَ تَعَالي: (يآيُّهَا الَّذِينَ امَنُوا اذْكُرُوا اللهَ ذِكْرًا كَثِيرًا ۞ وَّسَبِّحُوهُ بُكْرَةً وَّأَصِيلاً۞).
(الاحزاب:٤٢،٤١)
14.நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருதலாக நினைவு கூருங்கள், காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
(அல் அஹ்ஸாப்:41,42)
وَقَالَ تَعَالَي: (إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلي النَّبِيِّ ط يآأَيُّهَا الَّذِينَ امَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً۞).
(الاحزاب:٥٦)
15.நிச்சயமாக இந்த நபியின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான், மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர், (ஆகவே) நம்பிக்கையாளர்களே, நீங்கள் அவர்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்; நல்லமுறையில் ஸலாமும் கூறுங்கள்.
(அல்அஹ்ஸாப்:56)
وَقَالَ تَعَالي: (وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ قف وَمَنْ يَّغْفِرُ الذُّنُوبَ إِلاَّ اللهَ قف وَلَمْ يُصِرُّوا عَلي مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ ۞ أُولئِكَ جَزَآءُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا اْلاَنْهَارُ خَالِدِينَ فِيهَا ط وَنِعْمَ أَجْرُ الْعمِلِينَ۞).
(ال عمران:١٣٦،١٣٥)
16.இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், மானக்கேடான ஏதேனும் ஒன்றை அவர்கள் செய்துவிட்டால், அல்லது தமக்குத்தாமே அநியாயம் செய்துகொண்டால், (உடனே) அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூர்ந்து தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக்கொள்வார்கள்; அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்? அவர்கள் அறிந்து கொண்டே தாம் செய்திட்ட (பாவத்)தின் மீது நிலைத்திருக்கவுமாட்டார்கள். இத்தகையோர் – அவர்களுக்குரிய பிரதிபலன் அவர்களுடைய ரப்பிடமிருந்து பாவமன்னிப்பும் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களுமாகும்; (அவர்கள்) அதில் நிரந்தரமாக இருப்பார்கள் – (இவ்வாறு) நற்செயல்கள் செய்வோரின் கூலி மிகவும் நல்லதாகவே இருக்கும்.
(ஆலுஇம்ரான்:135,136)
وَقَالَ تَعَالي: (وَمَا كَانَ اللهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ۞).
(الانفال: ٣٣)
17.இன்னும் அவர்கள் பாவமன்னிப்புத் தேடுகிறவர்களாயிருக்கும் நிலையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
(அல் அன்ஃபால்:33)
وَقَالَ تَعَالي: (ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوا مِنْ بَعْدِ ذلِكَ وَأَصْلَحُوا إِنَّ رَبَّكَ مِنْ م بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ۞).
(النحل:١١٩)
18.பிறகு, நிச்சயமாக உம்முடைய ரப்பு, எவர்கள் அறியாமையினால் தீமையைச் செய்து, அதற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரி (தங்களைச்) சீர்திருத்திக் கொண்டார்களோ அத்தகையோருக்கு உரியவனாக இருக்கின்றான்; நிச்சயமாக உம்முடைய ரப்பு அதற்குப் பின் மிக்க மன்னிக்கிறவனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.
(அந்நஹ்ல்:119)
وَقَالَ تَعَالي: (لَوْ لاَ تَسْتَغْفِرُونَ اللهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ۞).
(النمل:٤٦)
19.”நீங்கள் அருள் புரியப்படுவதற்காக, அல்லாஹ்விடம் நீங்கள் பாவமன்னிப்புத் தேடக்கூடாதா?” என்று அவர் கூறினார்.
(அந்நம்ல்:46)
وَقَالَ تَعَالي: (وَتُوبُوا إِلَي اللهِ جَمِيعاً أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ۞).
(النور:٣١)
20.இறை நம்பிக்கையாளர்களே, நீங்கள் வெற்றி பெறுவதற்காக நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பால் மீளுங்கள்.
(அந்நூர்:31)
وَقَالَ تَعَالي: (يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَي اللهِ تَوْبَةً نَّصُوحاًط۞).
(التحريم:٨)
21.விசுவாசங்கொண்டோரே, அல்லாஹ்வின் பால் கலப்பற்ற முறையில் நீங்கள் பாவமன்னிப்புக் கோரிக் கொள்ளுங்கள்.
(அத்தஹ்ரீம்:8)
ஹதீஸ்கள்:-
٧٢– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ رَفَعَهُ إِلَي النَّبِيِّ ﷺ قَالَ: مَا عَمِلَ آدَمِيٌّ عَمَلاً أَنْجَي لَهُ مِنَ الْعَذَابِ مِنْ ذِكْرِ اللهِ تَعَالي قِيلَ: وَلاَ الْجِهَادُ فيِ سَبِيلِ اللهِ؟ قَالَ: وَلاَ الْجِهَادُ فيِ سَبِيلِ اللهِ إِلاَّ أَنْ يَّضْرِبَ بِسَيْفِهِ حَتَّي يَنْقَطِعَ.
رواه الطبراني في الصغير والاوسط ورجالهما رجال الصحيح مجمع الزوائد:١٠/٧١
72.”அல்லாஹ்வின் திக்ரைவிட மனிதனை வேதனையிலிருந்து காக்கும் செயல் வேறில்லை”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதுகூட வேதனையிலிருந்து அவனைக் காப்பாற்ற இயலாதா?’ எனக் கேட்கப்பட்டது, “ஜிஹாதும் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து காப்பதில் திக்ரை விடச் சிறந்ததல்ல. ஆனால், ஒருவர் தொடர்ந்து போரிட்டு வாள் முறிந்துவிடும் அளவுக்கு வீரத்துடன் போர் புரிந்தால் இந்த அமலும் திக்ரைப் போல் வேதனையை விட்டு காப்பாற்றக் கூடியதாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٧٣– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ يَقُولُ اللهُ تَعَالي: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرْتُهُ فيِ مَلأٍ خَيْرٍ مِّنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعاً وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعاً تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعاً وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً.
رواه البخاري باب قول الله تعالي ويحذركم الله نفسه:٦/٢٦٩٤, طبع دار ابن كثير بيروت
73.”என் அடியான் என்னைப்பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே அவனுடன் நடந்து கொள்கிறேன், அவன் என்னை நினைக்கும் போது நான் அவனுடன் இருக்கிறேன், அவன் என்னை (தன்) மனதில் நினைத்தால் நானும் அவனை மனதில் நினைக்கிறேன், என்னைப் பற்றிச் சபையில் நினைவு கூர்ந்தால் அச்சபையைவிடச் சிறந்த மலக்குகளின் சபையில் நானும் அவனைப் பற்றி நினைவு கூறுகிறேன், என் அடியான் என் பக்கம் ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் ஒரு முழம் அவன் பக்கம் நெருங்கி வருகிறேன், அவன் என் பக்கம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்குகிறேன், அவன் என் பக்கம் நடந்து வந்தால், நான் அவன் பக்கம் ஓடி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- ஒருவர் எந்த அளவு மிக அதிகமாக நல் அமல்கள் மூலம் என் நெருக்கத்தைப் பெறுகிறாரோ, அதைவிட அதிகமாக எனது கிருபை, உதவியுடன் அவர் பக்கம் நான் கவனம் செலுத்துகிறேன் (கருணை காட்டுகிறேன்) என்பதாம்.
٧٤– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ اللهَ يَقُولُ: أَنَا مَعَ عَبْدِي إِذَا هُوَ ذَكَرَنِي وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ.
رواه ابن ماجه باب فضل الذكر رقم: ٣٧٩٢
74.”என் அடியான் என்னை நினைத்து, அவன் உதடுகள் என் நினைவில் அசைந்து கொண்டிருக்கும் போது, நான் அவனுடன் இருக்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٧٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍؓ أَنَّ رَجُلاً قَالَ: يَارَسُولَ اللهِﷺ إِنَّ شَرَائِعَ اْلإِسْلاَمِ قَدْ كَثُرَتْ عَلَيَّ فَأَخْبِرْنِي بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ قَالَ: لاَ يَزَالُ لِسَانُكَ رَطْباً مِّنْ ذِكْرِ اللهِ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن غريب باب ما جاء في فضل الذكر رقم: ٣٣٧٥
75.”யாரஸூலல்லாஹ்! ஷரீத்தின் சட்டங்கள் ஏராளமாக உள்ளன.(அவற்றின்படி செயல்படுவது அவசியம் தான்), எனினும் நான் வழக்க மாக்கிக் கொள்ளும்படியான ஓரு செயலை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்று ஒரு ஸஹாபி கேட்டதற்கு, “அல்லாஹ்வின் திக்ரால் உமது நாவு எந்நேரமும் நனைந்து இருக்கட்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், என ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٧٦– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ قَالَ: آخِرُكَلِمَةٍ فَارَقْتُ عَلَيْهَا رَسُولَ اللهِﷺ قُلْتُ يَارَسُولَ اللهِﷺ أَخْبِرْنِي بِأَحَبِّ اْلاَعْمَالِ إِلَي اللهِ؟ قَالَ: أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِّنْ ذِكْرِ اللهِ.
رواه ابن السني في عمل اليوم والليلة رقم: ٢ وقَالَ المحقق: اخرجه البزار كما في كشف الاستار ولفظه: قُلْتُ يَارَسُولَ اللّهِ أَخْبِرْنِي بِأَفْضَلِ اْلاَعْمَالِ وَأَقْرَبِهَا إِلَي اللّهِ. الحديث وحسن الهيثمي اسناده في مجمع الزوائد:١٠/٧٤
76. ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்ற சமயம் கடைசியாக கேட்டது, “எல்லா அமல்களிலும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமல் எது?’ என்று கேட்டேன். மற்றோர் அறிவிப்பில், ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், “அனைத்திலும் சிறந்த, அல்லாஹ்விடம் அதிக நெருக்கத்தைப் பெற்றுத்தருகின்ற செயலை எனக்குச் சொல்லித் தாருங்கள்‘ என்று கேட்டதாக உள்ளது. “அல்லாஹ்வின் திக்ரால் உமது நாவு நனைந்திருக்கும் நிலையில் நீ மரணிப்பது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(தன் வாழ்நாளில் அதிகம் திக்ரில் ஈடுபட்டிருந்தால் தான் இந்நிலை சாத்தியமாகும்).
(அமலுல் யவ்ம் வல்லைலா, பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- விடைபெற்றுச் சென்ற சமயம் என்றால், நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு கவர்னராக அனுப்பிய சமயம் இந்தப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
٧٧– عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ وَأَرْفَعِهَا فيِ دَرَجَاتِكُمْ وَخَيْرٍ لَّكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالْوَرِقِ وَخَيْرٍ لَّكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟ قَالُوا: بَلَي قَالَ: ذِكْرُ اللهِ.
رواه الترمذي باب منه كتاب الدعوات رقم:٣٣٧٧
77.”உங்கள் அமல்களில் மிகச் சிறந்ததும், உங்கள் எஜமானனிடத்தில் மிகத் தூய்மையானதும், உங்கள் பதவிகளை மிக உயர்த்தக் கூடியதும், தங்கம், வெள்ளியை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதைவிடச் சிறந்ததும். போரில் நீங்கள் எதிரிகளை வெட்ட, அவர்கள் உங்களை வெட்டுவதைவிடச் சிறந்ததுமான ஓரு செயலை உங்களுக்கு நான் சொல்லித்தரட்டுமா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “அவசியம் சொல்லுங்கள்‘ என்று ஸஹாபாக்கள் கூறினார்கள், “அந்த அமல் அல்லாஹ்வைத் திக்ரு செய்வது”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٧٨–عَنِ ابْنِ عَبَّاسٍؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أَرْبَعٌ مَنْ أُعْطِيَهُنَّ فَقَدْ أُعْطِيَ خَيْرَ الدُّنْيَا وَاْلآخِرَةِ: قَلْباً شَاكِرًا وَلِسَاناً ذَاكِرًا وَبَدَناً عَلَي الْبَلاَءِ صَابِرًا وَزَوْجَةً لاَ تَبْغِيهِ خَوْناً فِي نَفْسِهَا وَلاَ مَالِهِ.
رواه الطبراني في الكبير والاوسط ورجال الاوسط رجال الصحيح مجمع الزوائد:٤/٥٠٢
78.”நன்றி செலுத்தும் உள்ளம், அல்லாஹ்வை தியானிக்கும் நாவு, துன்பங்களைச் சகிக்கும் உடல், தன் கற்பிலும் கணவனின் செல்வத்திலும் மோசடி செய்யாத பத்தினியான மனைவி ஆகிய இந்த நான்கு பாக்கியங்களும் எவருக்குக் கொடுக்கப்பட்டதோ, அவர் இம்மை, மறுமையின் நன்மைகள் யாவற்றையும் பெற்றுக் கொண்டார்”, என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٧٩– عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا مِنْ يَوْمٍ وَلَيْلَةٍ إِلاَّ لِلّهِ مَنٌّ يَمُنُّ بِهِ عَلَي عِبَادِهِ وَصَدَقَةٌ وَمَا مَنَّ اللهُ عَلَي أَحَدٍ مِنْ عِبَادِهِ أَفْضَلَ مِنْ أَنْ يُلْهِمَهُ ذِكْرَهُ.
(وهو جزء من الحديث) رواه الطبراني في الكبير وفيه موسي بن يعقوب الزمعي وثقه ابن معين وابن حبان وضعفه ابن المديني وغيره وبقية رجاله ثقات مجمع الزوائد:٢/٤٩٤
79.”ஒவ்வொரு நாளும் இரவிலும், பகலிலும், அல்லாஹ்விடமிருந்து தன் அடியார்கள் மீது தருமமும், உபகாரமும் பொழிந்து கொண்டே இருக்கின்றன என்றாலும் அல்லாஹ் ஓர் அடியானுக்கு திக்ரு செய்யும் பாக்கியம் கொடுப்பதைவிடப் பெரிய உபகாரம் ஏதுமில்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٨٠– عَنْ حَنْظَلَةَ اْلأُسَيْدِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ! إِنْ لَوْ تَدُومُونَ عَلَي مَا تَكُونُونَ عِنْدِي وَفِي الذِّكْرِ لَصَافَحَتْكُمُ الْمَلاَئِكَةُ عَلَي فُرُشِكُمْ وَفِي طُرُقِكُمْ وَلكِنْ يَا حَنْظَلَةُ! سَاعَةً وَسَاعَةً ثَلاَثَ مِرَارٍ.
رواه مسلم باب فضل دوام الذكر ….رقم: ٦٩٦٦
80.”என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என் முன் இருக்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மனோ நிலை உங்களிடம் நிலைத்திருக்குமாயின், மேலும் எந்நேரமும் அல்லாஹ்வின் திக்ரில் மூழ்கியிருப்பீர்களாயின் உங்கள் படுக்கைகளிலும், நீங்கள் செல்லும் பாதைகளிலும் மலக்குகள் உங்களை முஸாபஹாச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள், ஆயினும், ஹன்ளலா! இந்நிலை சில சமயங்களில் தான் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியதாக ஹஜ்ரத் ஹன்ளலா உஸைதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஒரே விதமான நிலை மனிதனுக்கு எல்லா நேரத்திலும் இருப்பதில்லை, சூழ்நிலைக்குத் தக்கவாறு நிலமைகள் மாறிக் கொண்டிருக்கும் என்பதாம்.
٨١– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَيْسَ يَتَحَسَّرُ أَهْلُ الْجَنَّةِ عَلَي شَيْءٍ إِلاَّعَلَي سَاعَةٍ مَرَّتْ بِهِمْ لَمْ يَذْكُرُو اللهَ فِيهَا.
رواه الطبراني في الكبير والبيهقي في شعب الايمان وهو حديث حسن الجامع الصغير:٢ /٤٦٨
81.”உலகில் அல்லாஹ்வை திக்ரு செய்யாமல் கழிந்த நேரத்தைப் பற்றியே தவிர வேறு எதைப் பற்றியும் சுவர்க்கவாசிகள் கைசேதப்பட மாட்டார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, பைஹகீ, ஜாமிவுஸ்ஸஙீர்)
٨٢– عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: أَدُّوا حَقَّ الْمَجَالِسِ: اُذْكُرُوا اللهَ كَثِيرًا.
(الحديث) رواه الطبراني في الكبير وهو حديث حسن الجامع الصغير:١ /٥٣
82.”சபைகளுக்குரிய கடமையை நிறைவேற்றுங்கள், சபைகளுக்குரிய கடமைகளில் ஒன்று சபைகளில் அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்வது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ஜாமிஃஉஸ்ஸஙீர்)
٨٣–عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ:قَالَ رَسُولُ اللهِ ﷺ:مَا مِنْ رَاكِبٍ يَخْلُو فِي مَسِيرِهِ بِاللهِ وَذِكْرِهِ إِلاَّ رَدِفَهُ مَلَكٌ وَلاَ يَخْلُو بِشِعْرٍ وَنَحْوِهِ إِلاَّ رَدِفَهُ شَيْطَانٌ.
رواه الطبراني واسناده حسن مجمع الزوائد:١٠ /١٨٥
83.”எவரேனும் ஒரு பிரயாணி தான் பிரயாணத்தின் போது, உலக அலுவல்களிலிருந்து அகன்று அல்லாஹ்வின் நினைவில் திளைத்திருந்தால் அவருடன் ஒரு மலக்கு இணைந்து கொள்கிறார். வீணான கவிதைகள் (அல்லது) தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டிருந்தால் ஷைத்தான் அவருடன் இணைந்து கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٨٤– عَنْ أَبِي مُوسَيؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ.
رواه البخاري باب فضل ذكر الله رقم: ٦٤٠٧
وفي رواية لمسلم مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لاَ يُذْكَرُ اللهُ فِيهِ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ.
باب استحباب صلاة النافلة في بيته …رقم:١٨٢٣
84.ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ்வை திக்ரு செய்பவருக்கும், திக்ரு செய்யாத வருக்கும் உதாரணம், உயிருள்ளவர், மற்றும் இறந்தவரைப் போன்றதாகும். திக்ரு செய்பவர் உயிருள்ளவரைப் போன்றும், திக்ரு செய்யாதவர் இறந்தவரைப் போன்றும் இருக்கிறார்”. மற்றோர் அறிவிப்பில், “அல்லாஹ்வை திக்ரு செய்யப்படும் வீடு உயிருள்ளவரைப் போன்றது; (செழிப்பானது), அல்லாஹ்வை திக்ரு செய்யப்படாத வீடு இறந்தவனைப் போன்றது; (பாழடைந்தது)” என்று சொல்லப்பட்டுள்ளது.
(புகாரி, முஸ்லிம்)
٨٥– عَنْ مُعَاذٍؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّ رَجُلاً سَأَلَهُ فَقَالَ: أَيُّ الْجِهَادِ أَعْظَمُ أَجْرًا؟ قَالَ: أَكْثَرُهُمْ لِلّهِ تَبَارَكَ وَتَعَالَي ذِكْرًا قَالَ: فَأَيُّ الصَّائِمِينَ أَعْظَمُ أَجْرًا؟ قَالَ: أَكْثَرُهُمْ لِلّهِ تَبَارَكَ وَتَعَالي ذِكْرًا ثُمَّ ذَكَرَ لَنَا الصَّلاَةَ وَالزَّكاةَ وَالْحَجَّ وَالصَّدَقَةَ كُلُّ ذلِكَ وَرَسُولُ اللهِ ﷺ يَقُولُ: أَكْثَرُهُمْ لِلّهِ تَبَارَكَ وَتَعَالَي ذِكْرًا فَقَالَ أَبُو بَكْرٍ ؓ لِعُمَرَ ؓ: يَا أَبَا حَفْصٍ! ذَهَبَ الذَّاكِرُونَ بِكُلِّ خَيْرٍ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: أَجَلْ.
رواه احمد: ٣ /٤٨٣
85.ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த ஜிஹாதுக்கு அதிகமான கூலி கிடைக்கும்?” என்று கேட்டதற்கு, “எந்த ஜிஹாதில் அதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்யப்படுமோ அந்த ஜிஹாத்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நோன்பாளிகளில் அதிகமான கூலி யாருக்குக் கிடைக்கும்?” என்று அவர் கேட்க, “யார் நோன்பு இருக்கும் சமயம் அதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்கிறாரோ அவருக்கு!” என்றார்கள். பிறகு இதைப் போலவே தொழுகை, ஜகாத், ஹஜ்ஜு, ஸதகா பற்றிக் கேட்கப்பட்டது “அல்லாஹ்வின் திக்ரு அதிகமாகச் செய்யப்பட்ட தொழுகை, ஜகாத், ஹஜ், ஸதகாவே மகத்தான கூலி பெற ஏற்றவை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அபூஹஃப்ஸே! திக்ரு செய்வோர் எல்லா நன்மைகளையும் கொண்டு சென்றுவிட்டனர்” என்று ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள், “நீர் சரியாகச் சொன்னீர்!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- அபூஹஃப்ஸ் என்பது ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் புனைப் பெயராகும்.
٨٦– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: سَبَقَ الْمُفَرِّدُونَ قَالُوا: وَمَا الْمُفَرِّدُونَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: اَلْمُسْتَهْتَرُونَ فيِ ذِكْرِ اللهِ يَضَعُ الذِّكْرُ عَنْهُمْ أَثْقَالَهُمْ فَيَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ خِفَافاً.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن غريب باب سبق المفردون …رقم: ٣٥٩٦
86.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “முஃபர்ரித்கள் முன்னேறிச் சென்றுவிட்டார்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, “யாரஸூலல்லாஹ்! முஃபர்ரித்கள் என்போர் யார்?” என ஸஹாபாக்கள் கேட்டனர். “அல்லாஹ்வின் திக்ருக்காகத் தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்டவர்கள், திக்ரு அவர்களின் சுமையைக் குறைத்துவிடும், எனவே கியாமத் நாளன்று அவர்கள் சுமை அற்றவர்களாக வருவார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
٨٧– عَنْ أَبِي مُوسَيؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَوْ أَنَّ رَجُلاً فِي حِجْرِهِ دَرَاهِمُ يُقَسِّمُهَا وَآخَرُ يَذْكُرُ اللهَ كَانَ ذِكْرُ اللهِ أَفْضَلَ.
رواه الطبراني في الاوسط ورجاله وثقوا مجمع الزوائد:١٠ /٧٢
87.”ஒருவரிடம் ஏராளமான பணம் இருக்கிறது, அவர் அதைப் பங்கு வைத்துக் கொண்டு இருக்கிறார். இன்னோருவர், அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டுள்ளார். இவர்களில், அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருப்பவரே சிறந்தவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٨٨–عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ أَكْثَرَ ذِكْرَ اللهِ فَقَدْ بَرِئئَ مِنَ النِّفَاقِ.
رواه الطبراني في الصغير وهو حديث صحيح الجامع الصغير:٢ /٥٧٩
88.”எவர் அல்லாஹ்வை அதிகமாகத் திக்ரு செய்வாரோ அவர் நயவஞ்சகத் தன்மையை விட்டும் நீங்கிவிட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ஜாமிஉஸ்ஸஙீர்)
٨٩– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: لَيَذْكُرَنَّ اللهَ قَوْمٌ عَلَي الْفُرُشِ الْمُمَهَّدَةِ يُدْخِلُهُمُ الْجَنَّاتِ الْعُلي.
رواه ابو يعلي واسناده حسن مجمع الزوائد:١٠/٨٠
89.”மிருதுவான படுக்கைகளில் இருந்தவாறு அல்லாஹ்வை திக்ரு செய்யும் பலரை, அல்லாஹ் அவர்களது திக்ரின் பரக்கத்தால் சுவனத்தின் உயர் பதவிகளில் நுழையச் செய்வான்”, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
٩٠– عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَؓ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا صَلَّي الْفَجْرَ تَرَبَّعَ فِي مَجْلِسِهِ حَتَّي تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ.
رواه ابوداؤد باب في الرجل يجلس متربعا رقم:٤٨٥٠
90.ஹஜ்ரத் ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகைக்குப்பின், சூரியன் நன்றாக உதயமாகும் வரை சம்மணமிட்டு அமர்ந்திருப்பார்கள்”.
(அபூதாவூத்)
٩١– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لأَنْ أَقْعُدَ مَعَ قَوْمٍ يَذْكُرُونَ اللهَ تَعَالَي مِنْ صَلاَةِ الْغَدَاةِ حَتَّي تَطْلُعَ الشَّمْسُ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُعْتِقَ أَرْبَعَةً مِنْ وُلْدِ إِسْمَاعِيلَؑ وَلأَنْ أَقْعُدَ مَعَ قَوْمٍ يَذْكُرُونَ اللهَ مِنْ صَلاَةِ الْعَصْرِ إِلَي أَنْ تَغْرُبَ الشَّمْسُ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُعْتِقَ أَرْبَعَةً.
رواه ابوداؤد باب في القصص رقم: ٣٦٦٧
91.”நான் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் சூரியன் உதயமாகும் வரை அல்லாஹ்வை திக்ரு செய்யும் கூட்டத்தாருடன் அமர்ந்திருப்பது, ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் நான்கு அடிமைகளை உரிமை விடுவதைவிட எனக்கு மிகப்பிரியமானது. அவ்வாறே, அஸர் தொழுகைக்குப்பின் சூரியன் மறையும் வரை அல்லாஹ்வை திக்ரு செய்யும் கூட்டத்தாருடன் அமர்ந்திருப்பது ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் நான்கு அடிமைகளை உரிமை விடுவதைவிட எனக்குப் பிரியமானது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ்இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- அரபு வம்சத்தில் சிறந்தவர்கள், கண்ணியமானவர்கள் என்பதால் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகள் விலை உயர்ந்தவர்கள் என்பதாம்.
٩٢– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ لِلّهِ مَلاَئِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْماً يَذْكُرُونَ اللهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَي حَاجَتِكُمْ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَي السَّمَاءِ الدُّنْيَا قَالَ: فَيَسْاَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ: مَا يَقُولُ عِبَادِي؟ قَالَ: تَقُولُ: يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ فَيَقُولُ: هَلْ رَأَوْنِي؟ قَالَ فَيَقُولُونَ: لاَ وَاللهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْنِي؟ قَالَ يَقُولُونَ: لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحاً قَالَ يَقُولُ: فَمَا يَسْاَلُونِي؟ قَالَ: يَسْاَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ قَالَ يَقُولُونَ: لاَ وَاللهِ يَارَبِّ مَا رَأَوْهَا قَالَ فَيَقُولُ: فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا؟ قَالَ يَقُولُونَ: لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصاً وَأَشَدَّ لَهَا طَلَباً وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ: فَمِمَّ يَتَعَوَّذُونَ؟ قَالَ يَقُولُونَ: مِنَ النَّارِ قَالَ يَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ قَالَ يَقُولُونَ: لاَ وَاللهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ قَالَ يَقُولُونَ: لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ: فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنَ الْمَلاَئِكَةِ: فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ: هُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَي جَلِيسُهُمْ.
رواه البخاري باب فضل ذكر الله رقم: ٦٤٠٨
92.நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “மலக்குகளின் ஒரு கூட்டத்தினர், அல்லாஹ்வை திக்ரு செய்பவர்களைத் தேடிப் பாதைகளில் சுற்றித் திரிவார்கள், அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டிருக்கும் கூட்டத்தாரை அவர்கள் கண்டுவிட்டால், தமக்குள் கூவியழைத்து “உங்களுக்குரியவர்கள் இங்கே உள்ளனர் விரைந்து வாருங்கள்” என்று அழைப்பார்கள். மலக்குகள் யாவரும் சேர்ந்துகொண்டு முதல் வானம் வரை தங்கள் இறக்கைகளால் அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றனர், அல்லாஹ் மலக்குகளைவிட அதிகம் அறிந்திருந்தும் அம்மலக்குகளிடம், “என் அடியார்கள் என்ன சொல்கின்றனர்?’ என்று கேட்பான். “அவர்கள், உனது தூய்மை, பெருமை, புகழ், மேன்மையைக் கூறுவதில் ஈடுபட்டுள்ளனர்‘ என்று சொல்வார்கள், அவர்கள் என்னைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததே இல்லை‘ என்று பதில் அளிப்பார்கள், “அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் நிலைமை எவ்வாறு இருக்கும்?’ என்று அல்லாஹ் கேட்பான், “அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக இபாதத்தில் ஈடுபடுவர், இதைவிட அதிகமாக உன்னைப் புகழ்வார்கள், உன் மேன்மையைக் கூறுவார்கள்‘ என்று மலக்குகள் கூறுவார்கள். “அவர்கள் என்னிடம் எதை வேண்டுகிறார்கள்?’ என்று அல்லாஹ் கேட்பான், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகிறார்கள்‘, என்று கூறுவார்கள் “அவர்கள் சொர்க்கத்தைப் பார்த்துள்ளனரா?’ என்று கேட்பான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இரட்சகனே! அவர்கள் சொர்க்கத்தைப் பார்த்ததில்லை‘, என மலக்குகள் சொல்வார்கள், “அவர்கள் சொர்க்கத்தைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலைமை எவ்வாறு இருக்கும்?’ என்று அல்லாஹ் வினவுவான், “அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட அதிகமாக சொர்க்கத்தின் ஆசையிலும், ஆர்வத்திலும், தேட்டத்திலும் இருப்பார்கள்‘ என மலக்குகள் சொல்வார்கள். “எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகின்றனர்?’ என்று அல்லாஹ் கேட்பான், “அவர்கள் நரகிலிருந்து பாதுகாப்புத் தேடுகின்றனர்‘ என்று மலக்குகள் பதில் கூறுவர், “அவர்கள் நரகத்தைப் பார்த்துள்ளார்களா?” என்று அல்லாஹ் வினவுவான், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இரட்சகனே! அவர்கள் பார்த்ததில்லை‘ என்று மலக்குகள் கூறுவார்கள், “அவர்கள் நரகத்தை பார்த்திருந்தால் அவர்கள் நிலைமை எவ்வாறு இருக்கும்?’ என்று அல்லாஹ் கேட்பான், “அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதைப் பயப்படுவார்கள், அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள்‘ என மலக்குகள் கூறுவார்கள். “நான் அச்சபையில் உள்ளோரை மன்னித்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாய் இருங்கள்‘ என்று அல்லாஹ் கூறுவான். “அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக அல்லாமல் வேறோரு தேவைக்காக அங்கு ஒருவர் வந்தார்‘ (அவர்களுடன் அமர்ந்து கொண்டார்) என மலக்குகளில் ஒருவர் கூறுவார். “அச்சபையினர் எத்தகைய பாக்கியம் பெற்றவர்களென்றால், அவர்களுடன் அமர்வோரும் அல்லாஹ்வின் அருளைவிட்டும் பாக்கியம் அற்றவராக ஆகமாட்டார்‘ என அல்லாஹ் கூறுவான்”.
(புகாரி)
٩٣– عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ لِلّهِ سَيَّارَةً مِّنَ الْمَلاَئِكَةِ يَطْلُبُونَ حِلَقَ الذِّكْرِ فَإِذَا أَتَوْا عَلَيْهِمْ وَحَفُّوا بِهِمْ ثُمَّ بَعَثُوا رَائِدَهُمْ إِلَي السَّمَاءِ إِلَي رَبِّ الْعِزَّةِ تَبَارَكَ وَتَعَالَي فَيَقُولُونَ: رَبَّنَا أَتَيْنَا عَلَي عِبَادٍ مِنْ عِبَادِكَ يُعَظِّمُونَ آلاَءَكَ وَيَتْلُونَ كِتَابَكَ وَيُصَلُّونَ عَلَي نَبِيِّكَ مُحَمَّدٍ ﷺ وَيَسْاَلُونَكَ لِآخِرَتِهِمْ وَدُنْيَاهُمْ فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَي: غَشُّوهُمْ رَحْمَتِي فَيَقُولُونَ يَا رَبِّ إِنَّ فِيهِمْ فُلاَناً الْخَطَّاءُ إِنَّمَا اِعْتَنَقَهُمْ اِعْتِنَاقاً فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَي: غَشُّوهُمْ رَحْمَتِي فَهُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَي بِهِمْ جَلِيسُهُمْ.
رواه البزار من طريق زائدة بن ابي الرقاد عَنْ زياد النميري وكلاهما وثق علي ضعفه فعاد هذا اسناده حسن مجمع الزوائد:١٠ /٧٧
93. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “திக்ருடைய சபைகளைத் தேடி மலக்குகளின் ஒரு கூட்டம் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும், திக்ருடைய சபைகளுக்கு அவர்கள் வந்துவிட்டால் சபையிலுள்ளோரைச் சூழ்ந்து கொள்கிறார்கள், தங்களின் சார்பாக தங்களில் ஒருவரை அல்லாஹ்விடம் தூது அனுப்புகிறார்கள், “எங்கள் இரட்சகனே! உன்னுடைய பாக்கியங்களைப் பெருமைப்படுத்தியும், உன் வேதத்தை ஓதிக்கொண்டும், உன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதியும், தமது இம்மை மறுமையின் நலவுகளை உன்னிடம் வேண்டுகின்ற உனது அடியார்களிடமிருந்து நாங்கள் வந்துள்ளோம்” என்பார்கள், “அவர்களை எனது அருளைக் கொண்டு மூடுங்கள்‘ என்று அல்லாஹ் கூறுவான். “எங்கள் இரட்சகா! அவர்களுடன் ஒரு பாவியும் உள்ளான்!‘ என மலக்குகள் சொல்வர், “அவர்கள் அனைவரையும் எனது அருளை கொண்டு மூடுங்கள், காரணம் இச்சபையினருடன் அமர்பவனும் (அல்லாஹ்வின் அருளை விட்டும்) விலக்கப்படமாட்டான்” என்று அல்லாஹ் கூறுவான்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٩٤– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ: مَا مِنْ قَوْمٍ اجْتَمَعُوا يَذْكُرُونَ اللهَ لاَ يُرِيدُونَ بِذلِكَ إِلاَّ وَجْهَهُ إِلاَّ نَادَاهُمْ مُنَادٍ مِّنَ السَّمَاءِ: أَنْ قُومُوا مَغْفُورًا لَّكُمْ فَقَدْ بُدِّلَتْ سَيِّئَاتُكُمْ حَسَنَاتٍ.
رواه احمد وابو يعلي والبزار والطبراني في الاوسط وفيه: ميمون المرئي وثقه جماعة وفيه ضعف وبقية رجال احمد رجال الصحيح مجمع الزوائد:١٠/٧٥
94.”எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டும் நாடி அவனைத் திக்ரு செய்ய ஒன்று கூடுகிறார்களோ, (அந்தச் சபையின் முடிவில் அல்லாஹ்வின் கட்டளைப்படி) வானிலிருந்து ஒரு மலக்கு, “மன்னிக்கப்பட்டவர்களாக எழுந்து செல்லுங்கள்!, உங்கள் தீமைகள் நன்மைகளாக மாற்றப்பட்டுவிட்டன‘ என்று அறிவிக்கிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, பஸ்ஸார், பூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
٩٥– عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدِنِ الْخُدْرِيؓ أَنَّهُمَا شَهِدَا عَلَي النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ: لاَ يَقْعُدُ قَوْمٌ يَذْكُرُونَ اللهَ إِلاَّ حَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ.
رواه مسلم باب فضل الاجتماع علي تلاوة القران …رقم: ٦٨٥٥
95.”அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டிருக்கும் கூட்டத்தாரை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றனர். ரஹ்மத் அவர்களை மூடிக் கொள்கிறது. ஸகீனா அவர்கள் மீது இறங்குகிறது. மேலும் அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி மலக்குகளின் சபையில் நினைவுகூர்கிறான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா, ஹஜ்ரத் அபூஸஈத்குத்ரீ (ரலி) ஆகிய இருவரும் சாட்சி சொல்கின்றனர்.
(முஸ்லிம்)
٩٦– عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَيَبْعَثَنَّ اللهُ أَقْوَاماً يَوْمَ الْقِيَامَةِ فِي وُجُوهِهِمُ النُّورُ عَلَي مَنَابِرِ اللُّؤْلُؤِ يَغْبِطُهُمُ النَّاسُ لَيْسُوا بِأَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ قَالَ: فَجَثَا أَعْرَابِيٌّ عَلَي رُكْبَتَيْهِ فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ حَلِّهِمْ لَنَا نَعْرِفْهُمْ قَالَ: هُمُ الْمُتَحَابُّونَ فِي اللهِ مِنْ قَبَائِلَ شَتَّي وَبِلاَدٍ شَتَّي يَجْتَمِعُونَ عَلَي ذِكْرِاللهِ يَذْكُرُونَهُ.
رواه الطبراني واسناده حسن مجمع الزوائد:١٠/٧٧
96.”அல்லாஹ் சிலரை அவர்கள் முகங்கள் ஒளி வீசும் நிலையில் கியாமத் நாளன்று எழுப்புவான். அவர்கள் முத்து மேடைகளில் அமர்ந்திருப்பார்கள், அவர்களைப் பார்த்து மக்கள் பொறாமை கொள்வார்கள். அவர்கள் நபிமார்களோ, ஷுஹதாக்களோ அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, ஒரு (ஸஹாபி) கிராமவாசி முழந்தாளிட்டு அமர்ந்த நிலையில், “யாரஸூலல்லாஹ்! அவர்கள் யாரென்று விளக்குங்கள், அறிந்து கொள்கிறோம்‘ என்று கேட்டார். “அவர்கள் அல்லாஹ்வின் பிரியத்தால், பல்வேறு கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து ஒன்றுகூடி அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டவர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٩٧– عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: عَنْ يَمِينِ الرَّحْمنِ وِكِلْتَا يَدَيْهِ يَمِينٌ رِجَالٌ لَيْسُوا بِأَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ يَغْشَي بَيَاضُ وُجُوهِهِمْ نَظَرَ النَّاظِرِينَ يَغْبِطُهُمُ النَّبِيُّونَ وَالشُّهَدَاءُ بِمَقْعَدِهِمْ وَقُرْبِهِمْ مِنَ اللهِ قِيلَ: يَارَسُولَ اللهِ مَنْ هُمْ؟ قَالَ: هُمْ جُمَّاعٌ مِنْ نَوَازِعِ الْقَبَائِلِ يَجْتَمِعُونَ عَلَي ذِكْرِ اللهِ فَيَنْتَقُونَ أَطَايِبَ الْكَلاَمِ كَمَا يَنْتَقِي آكِلُ التَّمْرِ أَطَايِبَهُ.
رواه الطبراني ورجاله موثقون مجمع الزوائد:١٠ /٧٨
97.”சிலர் ரஹ்மானின் வலது புறத்தில் இருப்பார்கள். (அல்லாஹ்வின் இரு கரங்களும் வலப்புறமே) அவர்கள் நபிமார்களும் அல்லர்; ஷஹீதுகளும் அல்லர். அவர்களுடைய முக ஒளி பார்ப்போரைத் தம் பக்கம் ஈர்க்கும். அவர்களின் உயர்ந்த தகுதி, அல்லாஹ்வுடன் அவர்களுக்கு இருக்கும் நெருக்கம் ஆகியவற்றால் நபிமார்களும், ஷஹீதுகளும், அவர்கள் மீது பொறாமை கொள்வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “அவர்கள் யார்?’ என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அவர்கள், பலதரப்பட்ட கோத்திரங்களிலிருந்தும் தன் உறவினர்களை விட்டும் வெளியாகி அல்லாஹ்வை திக்ரு செய்ய (ஓரிடத்தில்) ஒன்று கூடியவர்கள். பேரீச்சம்பழம் சாப்பிடுபவர் (பேரீச்சம் பழக்குவியளலிலிருந்து) நல்ல பழங்களைப் பொறுக்கியெடுத்து உண்டதைப்போல இவர்கள் நல்லவைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அம்ர் இப்னு அபஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- ரஹ்மானின் வலதுபுறம் என்பதன் பொருள், அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் தனிப்பட்ட தகுதியுண்டு என்பதாகும். மேலும் ரஹ்மானின் இரு கரங்களும் வலக்கரங்களே என்பதன் கருத்து, வலக்கரம் சிறப்பிற்குரியதாக இருப்பதைப்போல அல்லாஹ்வும் சிறப்பிற்குரியவனாக இருக்கிறான் என்பதாகும். அம்மக்களை விட நபிமார்கள், ஷஹீதுகளின் தரம் உயர்ந்ததாக இருந்தும் அவர்கள் இவர்கள் மீது பொறாமை கொள்வது இவர்களின் தனிப்பட்ட அமல்களினால் ஆகும்.
(மஜ்மஉ பிஹாரில் அன்வார்)
٩٨– عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍؓ قَالَ: نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَي رَسُولِ اللهِ ﷺ وَهُوَ فِي بَعْضِ أَبْيَاتِهِ (وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدوَةِ وَالْعَشِيِّ۞) الآية خَرَجَ يَلْتَمِسُ فَوَجَدَ قَوْماً يَذْكُرُونَ اللهَ تَعَالَي مِنْهُمْ ثَائِرُ الرَّاْسِ وَجَافُّ الْجِلْدِ وَذُو الثَّوْبِ الْوَاحِدِ فَلَمَّا رَآهُمْ جَلَسَ مَعَهُمْ وَقَالَ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي جَعَلَ فِي أُمَّتِي مَنْ أَمَرَنِي أَنْ أَصْبِرَ نَفْسِي مَعَهُمْ.
تفسير ابن كثير:٣ /٨٥
98.ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்லுப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் இருந்தபோது, ( وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدوَةِ وَالْعَشِيِّ) (நபியே) காலையிலும் மாலையிலும் தங்கள் இரட்சகனை அழைப்போருடன் அமர உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக! என்ற ஆயத்து இறங்கியது. நபி (ஸல்) அவர்கள் அப்படிப்பட்டவர்களைத் தேடிப் புறப்பட்டார்கள். ஒரு கூட்டத்தார் அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களில் சிலர் தலைவிரி கோலமாகவும், சிலர் காய்ந்த மேனியுடனும் சிலர் ஓர் ஆடைமட்டும் அணிந்தவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கண்டதும் அவர்களுடன் அமர்ந்து கொண்டு, “யாருடன் சேர்ந்து அமர எனக்குக் கட்டளையிடப்பட்டதோ அத்தகையோரை என் சமுதாயத்தில் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்று சொன்னார்கள்.
(தப்ஸீர் இப்னு கஸீர்)
٩٩– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قُلْتُ: يَارَسُولَ اللهِﷺ مَا غَنِيمَةُ مَجَالِسِ الذِّكْرِ؟ قَالَ: غَنِيمَةُ مَجَالِسِ الذِّكْرِ اَلْجَنَّةُ اَلْجَنَّةُ.
رواه احمد والطبراني واسناد احمد حسن مجمع الزوائد:١٠ /٧٨
99.”யாரஸூலல்லாஹ்! திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலியும், வெகுமதியும் என்ன?” என்று நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், கேட்டதற்கு, “திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலி சொர்க்கம்தான்! சொர்க்கம்தான்!” என பதிலளித்தார்கள்” என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத் தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠٠–عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: يَقُولُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ سَيَعْلَمُ أَهْلُ الْجَمْعِ مَنْ أَهْلُ الْكَرَمِ فَقِيلَ: وَمَنْ أَهْلُ الْكَرَمِ يَارَسُولَ اللهِ؟ قَالَ: مَجَالِسُ الذِّكْرِ فيِ الْمَسَاجِدِ.
رواه احمد باسناد ين واحدهمَا حسن وابو يعلي كذلك مجمع الزوائد:١٠ /٧٥
100.கண்ணியத்திற்கும், மரியாதைக்கும் உரியோர் யாரென “இந்த மைதானத்தில் ஒன்று கூடுவோர் அறிந்து கொள்வார்கள்” என்று “கியாமத் நாளில் அல்லாஹ் அறிவிப்புச் செய்வான்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னபொழுது, “யாரஸூலல்லாஹ், அந்த மரியாதைக்குரியோர் யார்?’ எனக் கேட்கப்பட்டது.”பள்ளிகளில் ஒன்று கூடி அல்லாஹ்வை திக்ரு செய்பவர்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠١– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا قَالُوا: وَمَا رِيَاضُ الْجَنَّةِ؟ قَالَ: حِلَقُ الذِّكْرِ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن غريب باب حديث في اسمَاء الله الحسني رقم:٣٥١٠
101.”சுவர்க்கப் பூங்காக்களைக் கடந்து சென்றால் நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ், சுவர்க்கப் பூங்காக்கள் என்றால் எது?” என்று ஸஹாபாக்கள் வினவினர், “திக்ருடைய சபைகள்‘ என்று பதில் சொன்னார்கள் என ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٠٢– عَنْ مُعَاوِيَةَؓ قَالَ: إِنَّ رَسُولَ اللهِ ﷺ خَرَجَ عَلَي حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: مَا أَجْلَسَكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ وَنَحْمَدُهُ عَلَي مَا هَدَانَا لِلاْسْلاَمِ وَمَنَّ بِهِ عَلَيْنَا قَالَ: آللّهِ! مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ؟ قَالُوا: وَاللهِ! مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ قَالَ: أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَّكُمْ وَلكِنَّهُ أَتَانِي جِبْرِيلُؑ فَأَخْبَرَنِي أَنَّ اللهَ يُبَاهِي بِكُمُ الْمَلاَئِكَةَ.
رواه مسلم باب فضل الاجتماع علي تلاوة القران وعلي الذكر رقم:٦٨٥٧
102.ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் தோழர்கள் ஒன்று கூடியிருந்த ஒரு சபையின் பக்கம் சென்றார்கள். “நீங்கள் எதற்காக இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டார்கள், “நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காகவும், எங்கள் மீது அல்லாஹ் உபகாரம் புரிந்து இஸ்லாத்தின் பக்கம் எங்களுக்கு நேர்வழி காட்டியதற்கு நன்றி செலுத்துவதற்காகவும் அமர்ந்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இதற்காகத் தான் இங்கே அமர்ந்துள்ளீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்” என்று ஸஹாபாக்கள் கூறினார்கள். “நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று எண்ணி உங்களைச் சத்தியம் செய்யச் சொல்லவில்லை, அல்லாஹ் உங்களைப் பற்றி மலக்குகளிடம் பெருமை பாராட்டிப் பேசுகிறான் என்ற செய்தியை ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) என்னிடம் வந்து சொல்லிச் சென்றார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
١٠٣– عَنْ أَبِي رَزِينٍؓ أَنَّهُ قَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: أَلاَ أَدُلُّكَ عَلَي مِلاَكِ هذَا اْلاَمْرِ الَّذِي تُصِيبُ بِهِ خَيْرَ الدُّنْيَا وَاْلآخِرَةِ؟ عَلَيْكَ بِمَجَالِسِ أَهْلِ الذِّكْرِ وَإِذَا خَلَوْتَ فَحَرِّكْ لِسَانَكَ مَا اسْتَطَعْتَ بِذِكْرِ اللهِ.
(الحديث) رواه البيهقي في شعب الايمان مشكوة المصابيح رقم: ٥٠٢٥
103.”உங்களுக்கு ஈருலக நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மார்க்கத்தின் அடிப்படையான காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ்வை திக்ரு செய்வோரின் சபைகளில் அமருங்கள். தனிமையில் இயன்ற அளவு அல்லாஹ்வின் திக்ரால் உங்கள் நாவை அசைத்துக் கொண்டிருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூரஸீன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ, மிஷ்காத்)
١٠٤– عَنِ ابْنِ عَبَّاسؓ قَالَ: قِيلَ: يَارَسُولَ اللهِﷺ أَيُّ جُلَسَائِنَا خَيْرٌ؟ قَالَ: مَنْ ذَكَّرَكُمُ اللهَ رُؤْيَتُهُ وَزَادَ فِي عَمَلِكُمْ مَنْطِقُهُ وَذَكَّرَكُمْ بِاْلآخِرَةِ عَمَلُهُ.
رواه ابويعلي وفيه مبارك بن حسان وقد وثق وبقية رجاله رجال الصحيح مجمع الزوائد:١٠/٣٨٩
104.ஹஜ்ரத் இப்னுப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் எவருடன் சேர்ந்திருப்பது சிறந்தது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, “எவரைப்பார்த்தால் உங்களுக்கு அல்லாஹ்வின் ஞாபகம் வருமோ, எவருடைய பேச்சால் உங்கள் அமலில் முன்னேற்றம் உண்டாகுமோ, எவருடைய அமலால் உங்களுக்கு மறுமையின் சிந்தனை வருமோ அவருடன் அமர்ந்திருங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠٥– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ ذَكَرَ اللهَ فَفَاضَتْ عَيْنَاهُ مِنْ خَشْيَةِ اللهِ حَتَّي يُصِيبَ اْلاَرْضَ مِنْ دُمُوعِهِ لَمْ يُعَذِّبْهُ اللهُ تَعَالَي يَوْمَ الْقِيَامَةِ.
رواه الحاكم وقَالَ: هذا حديث صحيح الاسنادولم يخرجاه ووافقه الذهبي:٤/٢٦٠
105.”எவர் அல்லாஹ்வைத் திக்ரு செய்து, பின்பு அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் பூமியில் விழும்வரை கண்ணீர் சிந்துவாரோ அவரை கியாமத் நாளன்று அல்லாஹ் வேதனை செய்ய மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ்இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٠٦– عَنْ أَبِي أُمَامَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَي اللهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ: قَطْرَةٌ مِّنْ دُمُوعٍ مِّنْ خَشْيَةِ اللهِ وَقَطْرَةُ دَمٍ تُهْرَاقُ فِي سَبِيلِ اللهِ وَأَمَّا اْلاَثَرَانِ فَأَثَرٌ فِي سَبِيلِ اللهِ وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِّنْ فَرَائِضِ اللهِ.
رواه الترمذي وقَالَ:هذا حديث حسن غريب باب ما جاءفي فضل المرابط رقم:١٦٦٩
106.இரு துளிகளை விடவும், இரு அடையாளங்களைவிடவும் “அல்லாஹ்விடம் பிரியமானவை வேறு எதுமில்லை. ஒன்று, அல்லாஹ்வின் அச்சத்தால் சிந்திய கண்ணீர்த் துளி, மற்றோன்று, அல்லாஹ்வின் பாதையில் சிந்திய ரத்தத்துளி. இரு அடையாளங்களாவன: ஒன்று, அல்லாஹ்வின் பாதையில் ஏற்பட்ட அடையாளம், (புழுதியின் காரணமாக அல்லது காயத்தின் காரணமாக ஏற்பட்ட வடு), மற்றோன்று, அல்லாஹ்வின் கடமைகளில் ஒன்றை நிறைவேற்றும் போது ஏற்பட்ட அடையாளம் (ஸஜ்தாவின் அடையாளம் அல்லது ஹஜ்ஜுப் பயணம் போன்றவைகளில் ஏற்பட்ட அடையாளம்)” என்று நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٠٧– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ وَّشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْـمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَّجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّي لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللهَ خَالِياً فَفَاضَتْ عَيْنَاهُ.
رواه البخاري باب الصدقة باليمين رقم:١٤٢٣
107.நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமில்லாத (கியாமத்) நாளில் தனது ரஹ்மத் என்னும் நிழலில் ஏழு வகையான மனிதர்களுக்கு இடம் அளிப்பான். அவர்கள், 1. நீதியுள்ள அரசன், 2. அல்லாஹ்வுடைய வணக்கத்தில் வாலிபத்தைக் கழித்த வாலிபன், 3. எந்நேரமும் பள்ளியில் உள்ளத்தை லயிக்கச் செய்தவர், 4. அல்லாஹ்வுக்காகவே நேசம் கொண்டு அவனுக்காகவே ஒன்று கூடி அவனுக்காகப் பிரியும் இரு நபர்கள், 5. உயர் குலத்தைச் சேர்ந்த அழகிய பெண் ஒருத்தி தன்பால் அழைக்க, “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்‘ என்று கூறியவர், 6. தனது இடக்கரத்திற்குத் தெரியாத நிலையில் தானம் செய்தவர், 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்தியவர்.
(புகாரி)
١٠٨– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَاجَلَسَ قَوْمٌ مَجْلِساً لَمْ يَذْكُرُوا اللهَ فِيهِ وَلَمْ يُصَلُّوا عَلي نَبِيِّهِمْ إِلاَّ كَانَ عَلَيْهِمْ تِرَةً فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ.
رواه الترمذي وقَالَ:هذاحديث حسن صحيح باب ماجاء في القوم يجلسون ولايذكرون الله رقم:٣٣٨٠
108.”அல்லாஹ்வை திக்ரு செய்யாமலும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லாமலும் இருக்கும் சபையில் அமர்பவர்களுக்கு நாளை கியாமத் நாளில் பெருத்த நஷ்டத்திற்கு அச்சபை காரணமாகிவிடும். அல்லாஹ் நாடினால் அவர்களை வேதனை செய்வான், அல்லது நாடினால் மன்னித்துவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٠٩– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنْ رَسُولِ الله ﷺ أَنَّهُ قَالَ: مَنْ قَعَدَ مَقْعَدًا لَمْ يَذْكُرِ اللهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللهِ تِرَةٌ وَّمَنِ اضْطَجَعَ مَضْجَعاً لاَّ يَذْكُرُ اللهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللهِ تِرَةٌ.
رواه ابوداؤد باب كراهية ان يقوم الرجل من مجلسه ولايذكرالله رقم:٤٨٥٦
109.”எவரொருவர் சபை ஒன்றில் அமர்ந்து, அச்சபையில் அவர் அல்லாஹ்வை திக்ரு செய்யாவிட்டால், அச்சபை அவருக்கு நஷ்டம் விளைவிக்கக் காரணமாகிவிடும். மேலும் அல்லாஹ்வின் திக்ரு இன்றி உறங்குபவருக்கு அந்த உறக்கம் நஷ்டத்தைத் தரும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١١٠– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا قَعَدَ قَوْمٌ مَقْعَدًا لاَيَذْكُرُونَ اللهَ فِيهِ وَيُصَلُّونَ عَلَي النَّبِيِّ إِلاَّ كَانَ عَلَيْهِمْ حَسْرَةً يَّوْمَ الْقِيَامَةِ وَإِنْ أُدْخِلُوا الْجَنَّةَ لِلثَّوَابِ.
رواه ابن حبان (واسناده صحيح):٢/٣٥٢
110.”அல்லாஹ்வை நினைவு கூறப்படாத, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லப்படாத சபையில் யார் அமர்கின்றார்களோ, அவர்கள் கியாமத் நாளன்று (திக்ரு, ஸலவாத் கூறப்படாததால் நன்மை இழந்து) கைசேதப்படுவார்கள், அவர்கள் தங்களுடைய இதர நன்மைகளின் காரணமாக சொர்க்கத்தில் நுழைந்துவிட்டாலும் சரியே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
١١١– عَنْ أَبِي هُرَيْرَةؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَامِنْ قَوْمٍ يَقُومُونَ مِنْ مَجْلِسٍ لاَ يَذْكُرُونَ اللهَ فِيهِ إِلاَّ قَامُوا عَنْ مِثْلِ جِيفَةِ حِمَارٍ وَّكَانَ لَهُمْ حَسْرَةً.
رواه ابو داؤد باب كراهية ان يقوم الرجل من مجلسه ولايذكرالله رقم:٤٨٥٥
111.”அல்லாஹ்வை நினைவு கூறப்படாத சபையிலிருந்து எழுந்து செல்வோர் (துர்நாற்றமுள்ள) செத்த கழுதைக்கு அருகிலிருந்து எழுந்தவர்களைப் போன்றவர்கள் ஆவர். இச்சபை கியாமத் நாளன்று அவர்கள் கைசேதப்படுவதற்குக் காரணமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- சபைகளில் பெரும்பாலும் வீணான பேச்சுக்கள் பேசப் படாமல் இருப்பதில்லை. அவ்வீண் பேச்சு, பேசியவனுக்கு தண்டனை கிடைக்கக் காரணமாகிவிடும். ஆயினும் இச்சபையில் அல்லாஹ்வை திக்ரு செய்வது தண்டனையை விட்டும் காப்பாற்றும்.
(பத்லுல் மஜ்ஹூத்)
١١٢– عَنْ سَعْدٍؓ قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ ﷺ فَقَالَ: أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَّكْسِبَ كُلَّ يَوْمٍ اَلْفَ حَسَنَةٍ؟ فَسَاَلَهُ سَائِلٌ مِّنْ جُلَسَائِهِ: كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا اَلْفَ حَسَنَةٍ؟ قَالَ: يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ فَيُكْتَبُ لَهُ اَلْفُ حَسَنَةٍ وَتُحَطُّ عَنْهُ اَلْفُ خَطِيئَةٍ.
رواه مسلم باب فضل التهليل والتسبيح والدعاء رقم:٦٨٥٢
112.ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம், அச்சமயம் நபி (ஸல்) அவர்கள், “உங்களில் யாரேனும் ஒருவர் தினமும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க இயலுமா?” என்று கேட்டார்கள், அச்சபையில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “எங்களில் ஒருவர் ஆயிரம் நன்மைகளை எப்படிச் சம்பாதிப்பது?’ என வினவினார்.”சுப்ஹானல்லாஹ் என்று நூறு முறை ஓதினல் அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன, ஆயிரம் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(முஸ்லிம்)
١١٣– عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ مِمَّا تَذْكُرُونَ مِنْ جَلاَلِ اللهِ اَلتَّسْبِيحَ وَالتَّهْلِيلَ وَالتَّحْمِيدَ يَنْعَطِفْنَ حَوْلَ الْعَرْشِ لَهُنَّ دَوِيٌّ كَدَوِيِّ النَّحْلِ تُذَكِّرُ بِصَاحِبِهَا أَمَا يُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَّكُونَ لَهُ أَوْ لاَ يَزَالُ لَهُ مَنْ يُذَكِّرُ بِهِ؟
رواه ابن ماجه باب فضل التسبيح رقم:٣٨٠٩
113.”எந்த வார்த்தைகளால் நீங்கள் அல்லாஹ்வின் பெருமைகளைக் கூறுவீர்களோ, அவற்றில் சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலாஇலாஹ இல்லல்லாஹு, என்ற வார்த்தைகளும் உள்ளன, இந்த வார்த்தைகள் அர்ஷின் நான்கு புறங்களிலும் சுற்றிக் கொண்டே இருக்கின்றன, அவற்றின் ஓசை தேனீக்களின் ரீங்காரத்தைப் போன்றிருக்கும், இக்கலிமாக்கள் தன்னை ஓதிவருவோரைப் பற்றி அல்லாஹ்வின் சமூகத்தில் நினைவு கூறுகின்றன. அல்லாஹவின் சமூகத்தில் எந்நேரமும் உங்களைப் பற்றி ஒருவர் நினைவு கூர்வதை நீங்கள் விரும்பவில்லையா?” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
١١٤– عَنْ يُسَيْرَةؓ قَالَتْ: قَالَ لَنَا رَسُولُ اللهِ ﷺ: عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيْسِ وَاعْقِدْنَ بِاْلاَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْؤُولاَتٌ مُسْتَنْطَقَاتٌ وَّلاَتَغْفَلْنَ فَتَنْسَيْنَ الرَّحْمَةَ.
رواه الترمذي وقَالَ:هذا حديث حسن غريب باب في فضل التسبيح ….رقم:٣٥٨٣
114.”நீங்கள் தஸ்ஃபீஹ் (சுப்ஹானல்லாஹ் சொல்லுதல்), தஹ்லீல் (லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுதல்), தக்தீஸ் (அல்லாஹ்வின் பரிசுத்தம் பற்றிக் கூறுதல், சுப்ஹானல் மலிக்கில் குத்தூஸ்) எனக் கூறுதல் ஆகியவைகளைக் கூறுவதை உங்கள் மீது கடமையாக்கிக் கொள்ளுங்கள். மேலும் அவைகளை விரல்களால் எண்ணிக் கொள்ளுங்கள், விரல்களைக் கொண்டு என்ன அமல் செய்யப்பட்டது என விரல்களிடம் விசாரிக்கப்படும், (பதில் சொல்ல அவற்றிற்கு)ப் பேசும் சக்தி அளிக்கப்படும். அல்லாஹ்வின் திக்ரை மறந்தவர்களாக ஆகி விடாதீர்கள், இல்லையென்றால் உங்களை நீங்களே அல்லாஹ்வின் ரஹ்மத்திலிருந்து விலக்கிக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்!” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறினார்கள் என ஹஜ்ரத் யுஸைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١١٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ.
رواه البزار واسناده جيد مجمع الزوائد :١٠/١١١
115.”எவர் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று சொல்வாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١١٦– عَنْ أَبِي ذَرؓ أَنّ رَسُولَ اللهِ ﷺ سُئِلَ أَيُّ الْكَلاَمِ أَفْضَلُ؟ قَالَ: مَا اصْطَفَاهُ اللهُ لِمَلاَئِكَتِهِ أَوْ لِعِبَادِهِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ.
رواه مسلم باب فضل سبحان الله وبحمده رقم:٦٩٢٥
116. “வார்த்தைகளில் சிறந்தது எது?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது “அல்லாஹ் தன் மலக்குகளுக்காக அல்லது தன் நல் அடியார்களுக்காகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளே வார்த்தைகள், அது “சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி‘ என்பதாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١١٧– عَنْ أَبِي طَلْحَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ لاَ إِلهَ إِلاَّ اللهُ دَخَلَ الْجَنَّةَ أَوْ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَمَنْ قَالَ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه مِائَةَ مَرَّةٍ كَتَبَ اللهُ لَهُ مِائَةَ اَلْفِ حَسَنَةٍ وَأَرْبَعاً وَّعِشْرِينَ اَلْفَ حَسَنَةٍ قَالُوا: يارَسُولَ اللهِﷺ إِذاً لاَّ يَهْلِكُ مِنَّا أَحَدٌ؟ قَالَ: بَلَي إِنَّ أَحَدَكُمْ لَيَجِيءُ بِالْحَسَنَاتِ لَوْ وُضِعَتْ عَلَي جَبَلٍ أَثْقَلَتْهُ ثُمَّ تَجِيءُ النِّعَمُ فَتَذْهَبُ بِتِلْكَ ثُمَّ يَتَطَاوَلُ الرَّبُّ بَعْدَ ذلِكَ بِرَحْمَتِهِ.
رواه الحاكم وقَالَ:صحيح الاسناد الترغيب:٢ /٤٢١
117.”எவரொருவர் “லாஇலாஹ இல்லல்லாஹ்‘ என்னும் கலிமாவைச் சொல்வாரோ அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிடும், யார் “சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி‘ என்று நூறு முறை சொல்வாரோ, அவருக்காக ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நன்மைகள் (1,24,000) எழுதப்படுகின்றன” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! அப்படியென்றால் (கியாமத் நாளில்) நன்மைகள் அதிகமாக இருப்பதால் யாரும் நாசமடையமாட்டார்கள் அல்லவா?’ என ஸஹாபாக்கள் வினவினர்.(சிலர் நாசமடைவார்கள் காரணம்) “உங்களில் ஒருவர் ஏராளமான நன்மைகளைக் கொண்டு வருவார். அவற்றை மலை மீது வைத்தால் மலை தாழ்ந்து விடும் அளவிற்கு நன்மைகளைக் கொண்டு வருவார். அப்போது, அல்லாஹ்வின் நிஃமத்துகள் (பாக்கியங்கள்) கொண்டுவரப்படும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு முன் இந்த நன்மைகள் யாவும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும், பிறகு அல்லாஹ் தனது அருளால் தான் நாடியவருக்கு உதவி செய்து அழிவிலிருந்து காத்துவிடுவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம், தர்ஃகீபு)
١١٨– عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَلاَ أُخْبِرُكَ بِأَحَبِّ الْكَلاَمِ إِلَي اللهِ؟ قُلْتُ: يَارَسُولَ اللهِﷺ أَخْبِرْنِي بِأَحَبِّ الْكَلاَمِ إِلَي اللهِ فَقَالَ: إِنَّ أَحَبَّ الْكَلاَمِ إِلَي اللهِ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ.
رواه مسلم باب فضل سبحان الله وبحمده رقم:٦٩٢٦ والترمذي الاانه قَالَ: سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ. وقَالَ: هذا حديث حسن صحيح باب أي الكلام احب الي الله رقم:٣٥٩٣
118.”அல்லாஹ்வுக்கு எல்லா சொற்களையும் விட மிகப் பிரியமான சொல் எது என்று உங்களுக்குச் சொல்லவா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்ட போது, “யாரஸூலல்லாஹ், அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமான சொல் எதுவென்று எனக்குச் சொல்லுங்கள்” என நான் கூறினேன்.”அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான வார்த்தை சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில், “சொற்களில் மிகப் பிரியமானது சுப்ஹான ரப்பீ வபிஹம்திஹி” என்று கூறப்பட்டுள்ளது.
(திர்மிதீ)
١١٩– عَنْ جَابِرٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ قَالَ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وَبِحَمْدِه غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ.
رواه الترمذي وقَالَ:هذا حديث حسن غريب باب في فضائل سبحان الله وبحمده …رقم:٣٤٦٥
119.”ஒருவர், சுப்ஹானல்லாஹில் அளீம் வபிஹம்திஹீ என்று சொன்னால், அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٢٠– عَنْ أَبِي هُرَيْرَةؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَي الرَّحْمنِ، خَفِيفَتَانِ عَلَي اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ.
رواه البخاري باب قول الله تعالي ونضع الموازين القسط ليوم القيامة رقم:٧٥٦٣
120.”ரஹ்மானுக்கு மிகவும் பிரியமானதும், நாவால் மொழிவதற்கு மிக எளிதானதும், தராசின் தட்டை நன்மையால் கனமாக்கக் கூடியதுமான இரு வார்த்தைகள் உள்ளன, அவை சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம் என்பதாம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٢١– عَنْ صَفِيَّةؓ قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ ﷺ وَبَيْنَ يَدَيَّ أَرْبَعَةُ آلاَفِ نَوَاةٍ أُسَبِّحُ بِهِنَّ فَقَالَ: يَابِنْتَ حُيَيٍّ! مَا هذَا؟ قُلْتُ: أُسَبِّحُ بِهِنَّ قَالَ: قَدْ سَبَّحْتُ مُنْذُ قُمْتُ عَلَي رَاْسِكِ أَكْثَرَ مِنْ هَذَا قُلْتُ: عَلِّمْنِي يَارَسُولَ اللهِ قَالَ: قُولِي سُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ مِنْ شَيْءٍ.
رواه الحاكم في المستدرك وقَالَ:هذا حديث صحيح ولم يخرجاه ووافقه الذهبي:١ /٥٤٧
121.ஹஜ்ரத் ஸஃபியா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள், நான்காயிரம் பேரீச்சங் கொட்டைகளை வைத்துக்கொண்டு நான் தஸ்பீஹ் ஓதிக் கொண்டிருந்த நிலையில் “ஹுயய்யின் மகளே! (ஸஃபியாவே) என்ன இது?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, “இக்கொட்டைகளைக் கொண்டு நான் தஸ்பீஹ் செய்கிறேன்” என்றேன். “நான் உம்மிடம் வந்து நின்றதிலிருந்தே இதைவிட அதிகமாகத் தஸ்பீஹ் செய்துவிட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யாரஸூலல்லாஹ்! அதை எனக்குக் கற்றுத்தாருங்கள்!‘ என்று கேட்டேன். ( سُبْحَانَ اللّهِ عَدَدَ مَا خَلَقَ مِنْ شَيْءٍ) அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கையளவு அல்லாஹ்வைத் துதிக்கிறேன் என்று நீர் ஓதி வருவீராக!‘ என்று கூறினார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٢٢– عَنْ جُوَيْرِيَّةَؓ أَنَّ النَّبِيَّ ﷺ خَرَجَ مِنْ عِنْدِهَا بُكْرَةً حِينَ صَلَّي الصُّبْحَ وَهِيَ فِي مَسْجِدِهَا ثُمَّ رَجَعَ بَعْدَ أَنْ أَضْحَي وَهِيَ جَالِسَةٌ فَقَالَ: مَازِلْتِ عَلَي الْحَالِ الَّتِي فَارَقْتُكِ عَلَيْهَا؟ قَالَتْ: نَعَمْ قَالَ النَّبِيُّ ﷺ: لَقَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ ثَلاَثَ مَرَّاتٍ لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ الْيَوْمِ لَوَزَنَتْهُنَّ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ.
رواه مسلم باب التسبيح اول النهار وعَنْد النوم رقم:٦٩١٣
122.”ஒருநாள், சுப்ஹுத் தொழுகும் நேரம் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் ஜுவைரியா (ரலி) அவர்களிடமிருந்து சென்ற சமயம், அவர்கள் தம் தொழுமிடத்தில் அமர்ந்து (திக்ரு செய்துகொண்டு) இருந்தார்கள். நபி (ஸல்) ளுஹாத் தொழுதுவிட்டு திரும்பி வந்தபோதும் அவர்கள் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். “நான் எந்நிலையில் உம்மை விட்டுச் சென்றேனோ அதே நிலையில் அமர்ந்துள்ளீரா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு, “ஆம்” என்று சொன்னார்கள். “உம்மை விட்டுச்சென்ற பிறகு நான்கு கலிமாக்களை மூன்று முறை கூறினேன். அக்கலிமாக்களையும், நீர் காலையிலிருந்து இதுவரை ஓதியவற்றையும் எடை போட்டுப் பார்த்தால், அக்கலிமாக்களின் எடை கனமுள்ளதாக ஆகிவிடும். ( سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ ) அல்லாஹ்வின் படைப்புகளின் எண்ணிக்கையளவு, அவனது பொருத்தத்தின் அளவு அவனது அர்ஷின் எடையளவு, அவனது கலிமாக்களை எழுதும் மையளவு அல்லாஹ்வைத் துதிக்கிறேன்” என்பதாகும்.
(முஸ்லிம்)
١٢٣– عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍؓ أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللهِ ﷺ عَلَي امْرَأَةٍ وَّبَيْنَ يَدَيْهَا نَوًي أَوْ حَصًي تُسَبِّحُ بِهِ فَقَالَ: أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ؟ فَقَالَ: سُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي اْلاَرْضِ وسُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ بَيْنَ ذلِكَ وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللهُ أَكْبَرُ مِثْلَ ذلِكَ وَالْحَمْدُ لِلّهِ مِثْلَ ذلِكَ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ مِثْلَ ذلِكَ وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ مِثْلَ ذلِكَ.
رواه ابوداؤد باب التسبيح بالحصي رقم:١٥٠٠
123.ஹஜ்ரத் ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஸஹாபிப் பெண்மணியிடம் சென்றேன், அவர் கொட்டைகளையோ அல்லது பொடிக்கற்களையோ வைத்து தஸ்பீஹ் ஓதிக்கொண்டிருந்தார்.”நீர் செய்கின்ற இந்த அமலைவிட மிக எளிதான சிறந்த சில கலிமாக்களை உமக்குச் அறிவிக்கிறேன்” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின் வரும் கலிமாக்களை (سُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي اْلاَرْضِ وسُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ بَيْنَ ذلِكَ وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ) (வானத்தில் அல்லாஹ் படைத்துள்ள பொருட்களின் எண்ணிக்கையளவு அல்லாஹுதஆலாவை நான் தஸ்பீஹ் செய்கிறேன். பூமியில் அவன் படைத்துள்ள பொருட்களின் எண்ணிக்கையளவு அல்லாஹுதஆலாவை நான் தஸ்பீஹ் செய்கிறேன். வானம், பூமிக்கிடையில் அவன் படைத்துள்ள பொருட்களின் எண்ணிக்கையளவு அல்லாஹுதஆலாவை நான் தஸ்பீஹ் செய்கிறேன். அவன் இனி படைக்கப்போகும் பொருட்களின் எண்ணிக்கையளவு அல்லாஹுதஆலாவை நான் தஸ்பீஹ் செய்கிறேன்) மேலும், இவ்வாறே, “அல்லாஹு அக்பர்‘ என்றும் “அல்ஹம்து லில்லாஹ்‘ என்றும் “லா இலாஹ இல்லல்லாஹ்‘ என்றும் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்‘ என்றும் கற்றுத்தந்தார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- மேற்கண்ட நீண்ட கலிமாவில் ஸுப்ஹானல்லாஹ் என்ற இடங்களில் அல்லாஹு அக்பர் என்றும் அதேபோல் மற்ற கலிமாக்களையும் கூற வேண்டும்.
١٢٤– عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيؓ قَالَ: خَرَجَ رَسُولُ اللهِ ﷺ وَأَنَا جَالِسٌ أُحَرِّكُ شَفَتَيَّ فَقَالَ: بِمَ تُحَرِّكُ شَفَتَيْكَ؟ قُلْتُ: أَذْكُرُ اللهَ يَارَسُولَ اللهِ قَالَ: أَفَلاَ أُخْبِرُكَ بِشَيْءٍ إِذَا قُلْتَهُ ثُمَّ دَأَبْتَ اللَّيْلَ وَالنَّهَارَ لَمْ تَبْلُغْهُ؟ قُلْتُ: بَلَي قَالَ: تَقُولُ: اَلْحَمْدُ لِلّهِ عَدَدَ مَاأَحْصَي كِتَابُهُ وَالْحَمْدُ لِلّهِ عَدَدَ مَا فيِ كِتَابِهِ وَالْحَمْدُ لِلّهِ عَدَدَ مَا أَحْصَي خَلْقُهُ وَالْحَمْدُ لِلّهِ مِلْءَ مَافِي خَلْقِهِ وَالْحَمْدُ لِلّهِ مِلْءَ سَمَاوَاتِهِ وَأَرْضِهِ وَالْحَمْدُ لِلّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَالْحَمْدُ لِلّهِ عَلي كُلِّ شَيْءٍ وَتُسَبِّحُ مِثْلَ ذلِكَ وَتُكَبِّرُ مِثْلَ ذلِكَ.
رواه الطبراني من طريقين واسناد احدهما حسن مجمع الزوائد:١٠ /١٠٩
124.ஹஜ்ரத் அபு உமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் அமர்ந்திருந்த சமயம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வந்தார்கள், என் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. “எதற்காக உமது உதடுகளை அசைத்துக் கொண்டிருக்கிறீர்?’ என்று வினவினார்கள், “யாரஸூலல்லாஹ், அல்லாஹுதஆலாவை திக்ரு செய்து கொண்டிருக்கிறேன்‘ என்றேன். “உமக்குச் சில கலிமாக்களைச் சொல்லித்தரட்டுமா? இரவு, பகலாக தொடர்ந்து நீர் திக்ரு செய்தாலும் இந்தக் கலிமாக்களினால் கிடைக்கும் நன்மையை அடைய முடியாது‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவசியம் சொல்லுங்கள்‘ என்றேன். (اَلْحَمْدُ لِلّهِ عَدَدَ مَاأَحْصَي كِتَابُهُ وَالْحَمْدُ لِلّهِ عَدَدَ مَا فيِ كِتَابِهِ وَالْحَمْدُ لِلّهِ عَدَدَ مَا أَحْصَي خَلْقُهُ وَالْحَمْدُ لِلّهِ مِلْءَ مَافِي خَلْقِهِ وَالْحَمْدُ لِلّهِ مِلْءَ سَمَاوَاتِهِ وَأَرْضِهِ وَالْحَمْدُ لِلّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَالْحَمْدُ لِلّهِ عَلي كُلِّ شَيْءٍ) (அல்லாஹ்வின் வேதம் மட்டுப்படுத்திய பொருட்களின் அளவு அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்! அவனது வேதத்திலுள்ள பொருட்களின் எண்ணிக்கையளவு அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்! அவனது படைப்புகள் கணக்கிட்ட பொருட்களின் எண்ணிக்கையளவு அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்! அவனது படைப்புகளில் உள்ள பொருட்கள் நிரம்பும் அளவுக்கு அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்!. வானங்கள் பூமிக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்புமளவு அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்! ஒவ்வொரு பொருளின் எண்ணிக்கையளவு அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்! ஒவ்வொரு பொருளின் மீதும் அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும். இவ்வாறே தஸ்பீஹ் செய்யும்படியும் என்றும் தக்பீர் சொல்லும்படியும் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- மேற்கண்ட நீண்ட கலிமாவில் அல்ஹம்துலில்லாஹ் என்ற இடங்களில் ஸுப்ஹானல்லாஹ் என்றும் அதே போல் அல்லாஹு அக்பர் என்றும் கூற வேண்டும்.
١٢٥– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَوَّلُ مَنْ يُدْعي إِلَي الْجَنَّةِ الَّذِينَ يَحْمَدُونَ اللَّهَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ.
رواه الحاكم وقَالَ: صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذهبي:١/٥٠٢
125.”முதன் முதலாக சொர்க்கத்திற்கு அழைக்கப்படுவோர், செல்வ நிலையிலும், வறிய நிலையிலும் அல்லாஹுதஆலாவைப் புகழ்ந்தவர்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٢٦–عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ لَيَرْضَي عَنِ الْعَبْدِ أَنْ يَاْكُلَ اْلاَكَلَةَ فَيَحْمَدُهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدُهُ عَلَيْهَا.
رواه مسلم باب استحباب حمدالله تعالي بعدالاكل والشرب رقم:٦٩٣٢
126.”ஒரு கவளம் உட்கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் அல்லது ஒரு மிடர் நீர் பருகி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் அடியானைப் பார்த்து அல்லாஹுதஆலா அளவற்ற மகிழ்ச்சியடைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٢٧– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: كَلَمِتَانِ إِحْدَاهُمَا لَيْسَ لَهَا نَاهِيَةٌ دُونَ الْعَرْشِ وَاْلأُخْرَي تَمْلَأُ مَابَيْنَ السَّمَاءِ وَاْلاَرْضِ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ.
رواه الطبراني ورواته الي معاذبن عبدالله ثقة تسوي ابن لهيعة ولحديثه هذا شواهد الترغيب ٢/٤٣٤
127. இரு கலிமாக்கள், அவற்றில் ஒன்று, “லாஇலாஹ இல்லல்லாஹு”; அது அர்ஷை சென்று அடைவதற்கு முன் எங்கும் நிற்பதில்லை. மற்றோன்று “அல்லாஹு அக்பர்‘; அது வானம், பூமிக்கிடையே உள்ள இடைவெளியை (ஒளி அல்லது நன்மையைக் கொண்டு) நிரப்பிவிடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
١٢٨– عَنْ رَجُلٍ مِّنْ بَنِي سُلَيْمٍؓ قَالَ: عَدَّهُنَّ رَسُولُ اللهِ ﷺ فِي يَدِي أَوْ فِي يَدِهِ اَلتَّسْبِيحُ نِصْفُ الْمِيزَانِ وَالْحَمْدُ لِلّهِ يَمْلَؤُهُ وَالتَّكْبِيرُ يَمْلا ُمَابَيْنَ السَّمَاءِ وَاْلاَرْضِ.
(الحديث) رواه الترمذي وقَالَ:حديث حسن باب فيه حديثان التسبيح نصف الميزان رقم:٣٥١٩
128.பனூஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த ஸஹாபி ஒருவர் கூறுகிறார், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என் கையில் அல்லது தங்கள் புனிதக் கைவிரல்களால் எண்ணியவர்களாகப் பின்வரும் செய்திகளைச் சொன்னார்கள். “சுப்ஹானல்லாஹ் சொல்வது தராசின் பாதியை நன்மையால் நிரப்பிவிடும், அல்ஹம்துலில்லாஹ் முழு தராசையும் நன்மையால் நிரப்பிவிடும், “அல்லாஹு அக்பரின் நன்மை வானம், பூமிக்கிடையேயுள்ள காலியிடத்தை நிரப்பிவிடும்”.
(திர்மிதீ)
١٢٩– عَنْ سَعْدٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَلاَ أَدُلُّكَ عَلَي بَابٍ مِّنْ أَبْوَابِ الْجَنَّةِ؟ قُلْتُ: بَلَي يَارَسُولَ اللهِﷺ قَالَ: لاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ.
رواه الحاكم وقَالَ:صحيح علي شرطهما ولم يخرجاه ووافقه الذهبي:٤/٢٩٠
129.ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “சொர்க்கவாசல்களில் ஒன்றை உமக்கு அறிவிக்கட்டுமா?” என ரஸூலல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு, “அவசியம் சொல்லுங்கள்!” என்றேன். அந்த சொர்க்கவாசல் “லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லாஹ்‘ என்று சொன்னார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٣٠–عَنْ أَبِي أَيُّوبَ اْلاَنْصَارِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ عَلي إِبْرَاهِيمَؑ فقَالَ: يَاجِبْرِيلُ مَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ ﷺ قَالَ لَهُ إِبْرَاهِيمُؑ : مُرْ أُمَّتَكَ فَلْيُكْثِرُوا مِنْ غِرَاسِ الْجَنَّةِ فَإِنَّ تُرْبَتَهَا طَيِّبَةٌ وَأَرْضَهَاوَاسِعَةٌ قَالَ: وَمَا غِرَاسُ الْجَنَّةِ؟ قَالَ: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ.
رواه احمد ورجال احمد رجال الصحيح غير عبدالله بن عبدالرحمن ابن عبدالله بن عمر بن الخطاب ٣ وهو ثقة لم يتكلم فيه احد ووثقه ابن حبان مجمع الزوائد:١٠/١١٩
130.ஹஜ்ரத் அபூய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “மிஃராஜ் உடைய இரவில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து செல்லும்போது, “ஜிப்ரயீலே! (அலை) உம்முடன் இருக்கும் இந்த மனிதர் யார்?” என்று வினவினார்கள். “இவர் முஹம்மது (ஸல்) அவர்கள்‘ என ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) கூறினார்கள், “சொர்க்கத்தின் மண் மிகவும் சிறந்தது, அதன் பூமியோ மிகவும் விசாலமானது. முஹம்மதே! சுவர்க்கத்தில் அதிகமாகச் செடிகளை நடும்படி தங்கள் சமுதாயத்தினருக்குச் சொல்லுங்கள்‘ என்று ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள், கூறியதற்கு, “சுவனத்தின் செடிகள் யாவை? என்று கேட்டார்கள், வை “லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லாஹ்‘ என்று பதில் சொன்னார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٣١– عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَحَبُّ الْكَلاَمِ إِلَي اللهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ لاَ يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ.
(وهو جزء من الحديث) رواه مسلم باب كراهية التسمية بالاسماء القبيحة …رقم:٥٦٠١ وزاد احمد: ٥/٢٠ أَفْضَلُ الْكَلاَمِ بَعْدَ الْقُرْانِ أَرْبَعٌ وَهِيَ مِنَ الْقُرْانِ
131.”நான்கு கலிமாக்கள் அல்லாஹுதஆலாவுக்கு மிகப் பிரியமானவை, அவை (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَر) என்பவையாம். இவற்றில் எதைக் கொண்டு ஆரம்பித்தாலும் எந்தக் குற்றமுமில்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸமுரத் இப்னு ஜன்துப் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
இன்னோர் அறிவிப்பில், “இந்நான்கு கலிமாக்களும் மேன்மைமிக்க குர்ஆனுக்குப் பிறகு மிகச் சிறந்தவை, மேலும், இவை சங்கைமிக்க குர்ஆனுடைய கலிமாக்களே” என்று கூறப்பட்டுள்ளது.
(முஸ்னத் அஹ்மத்)
١٣٢– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لأَنْ أَقُولَ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَإِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ.
رواه مسلم باب فضل التهليل والتسبيح والدعاء رقم :٦٨٤٧
132.”சூரியன் எவைகளின் மீது உதயமாகிறதோ அவை அனைத்தையும் விட (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَإِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَر) என்று சொல்வது எனக்கு மிகப்பிரியமானது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
ஏனேனில் இவற்றின் கூலியும், நன்மையும் நிலைத்திருக்கும்; உலகம் தன் சகல பொருட்களுடன் அழிந்து விடும்.
١٣٣– عَنْ أَبِي سَلْمَي قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: بَخٍ بَخٍ بِخَمْسٍ مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّي لِلْمُسْلِمِ فَيَحْتَسِبُهُ.
رواه الحاكم وقَالَ:هذا حديث صحيح الاسناد ووافقه الذهبي:١/٥١١
133.”என்ன ஆச்சரியம்! 1. லாஇலாஹ இல்லல்லாஹ், 2. சுப்ஹானல்லாஹ், 3. அல்ஹம்துலில்லாஹ், 4. அல்லாஹு அக்பர், 5. நற்குணமுள்ள தன் மகன் மரணமடைந்து, அந்த இழப்பின் காரணமாகக் கிடைக்கும் நன்மையை ஆதரவு வைத்துப் பொறுமையை மேற்கொள்வது ஆகிய ஐந்து காரியங்கள், அமல்களை எடைபோடும் தராசை எவ்வளவு கனமானதாக ஆக்குகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் அபூஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٣٤– عَنِ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ قَالَ: سُبْحَانَ الله وَالْحَمْدُ لِلّهِ وَلاَإِلَهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ كُتِبَ لَهُ بِكُلِّ حَرْفٍ عَشْرُ حَسَنَاتٍ.
(وهو جزء من الحديث)، رواه الطبراني في الكبير والاوسط ورجالهما رجال الصحيح غير محمدبن منصور الطوسي وهو ثقة مجمع الزوائد:١٠/١٠٦
134.”ஒருவர் “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் என்று கூறினால், ஒவ்வொரு எழுத்துக்கும் பகரமாக பத்து நன்மைகள் அவரது செயலேட்டில் எழுதப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٣٥– عَنْ أُمِّ هَانِيءٍ بِنْتِ أَبِي طَالِبٍ ؓ قَالَتْ: مَرَّ بِي رَسُولُ اللهِ ﷺ ذَاتَ يَوْمٍ فَقُلْتُ: يَارَسُولَ اللهِﷺ قَدْ كَبِرْتُ وَضَعُفْتُ أَوْ كَمَا قَالَتْ: فَمُرْنِي بِعَمَلٍ أَعْمَلُ وَأَنَا جَالِسَةٌ قَالَ سَبِّحِي اللهَ مِائَةَ تَسْبِيحَةٍ فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ رَقَبَةٍ تُعْتِقِينَهَا مِنْ وُلْدِ إِسْمَاعِيلَؑ وَاحْمَدِي اللهَ مِائَةَ تَحْمِيدَةٍ فَإِنَّهَا تَعْدِلُ مِائَةَ فَرَسٍ مُسْرَجَةٍ مُلْجَمَةٍ تَحْمِلِينَ عَلَيْهَا فِي سَبِيلِ اللهَ وَكَبِّرِي اللهَ مِائَةَ تَكْبِيرَةٍ فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ بَدَنَةٍ مُقَلَّدَةٍ مَتَقَبَّلَةٍ وَهَلِّلِي اللهَ مِائَةً قَالَ ابْنُ خَلَفٍ: أَحْسِبُهُ قَالَ: تَمْلَأُ مَابَيْنَ السَّمَاءِ وَاْلاَرْضِ وَلاَيُرْفَعُ يَوْمَئِذٍ لِأَحَدٍ عَمَلٌ إِلاَّ أَنْ يَاْتِيَ بِمِثْلِ مَاأَتَيْتِ. قلت:رواه ابن ماجه باختصار ورواه احمد والطبراني في الكبير ولم يقل أَحْسِبُهُ ورواه في الاوسط الاانه قَالَ فيه: قلت: يارَسُولَ اللهِ كَبُرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي فَدُلَّنِي عَلي عَمَلٍ يُدْخِلُنِيَ الْجَنَّةَ فَقَالَ: بَخٍ بَخٍ لَقَدْ سَاَلْتِ وَقَالَ خَيْرٌ لَّكِ مِنْ مِائَةِ بَدَنَةٍ مُقَلَّدَةٍ مُجَلَّلَةٍ تُهْدِينَهَا إِلَي بَيْتِ اللهِ تَعَالَي: وَقُولِي: لاَإِلهَ إِلاَّ اللهُ مِائَةَ مَرَّةٍ فَهُوَ خَيْرٌ لَّكِ مِمَّا أَطْبَقَتْ عَلَيْهِ السَّمَاءُ وَاْلاَرْضُ وَلاَيُرْفَعُ يَوْمَئِذٍ لِأَحَدٍ عَمَلٌ أَفْضَلُ مِمَّا رُفِعَ لَكِ إِلاَّ مَنْ قَالَ مِثْلَ مَاقُلْتِ أَوْزَادَ.
واسانيدهم حسنة مجمع الزوائد ١٠ /١٠٨ ورواه الحاكم. وقَالَ: قُولِي: لاَ إِلهَ إِلاَّ اللهُ لاَ تَتْرُكُ ذَنْباً وَلاَيَشْبَهُهَا عَمَلٌ. وقَالَ: هذا حديث صحيح الاسناد ووافقه الذهبي:١ /٥١٤
135.ஹஜ்ரத் உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என்னை கடந்துசென்ற பொழுது, “யாரஸூலல்லாஹ்! நான் வயது முதிர்ந்து பலவீனமானவளாகிவிட்டேன். நான் உட்கார்ந்த நிலையிலேயே செய்யும்படியான ஏதேனும் ஓரு செயலை எனக்குச் சொல்லித்தாருங்கள்” என்று கேட்டேன். “சுப்ஹானல்லாஹ் என்று நூறு தடவை சொல்லுங்கள், ஹஜ்ரத் இஸ்மாயில் (அலை) அவர்களின் சந்ததிகளில் நூறு அடிமைகளை உரிமைவிட்டதற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும். “அல்ஹம்துலில்லாஹ்‘ என நூறு முறை கூறுங்கள், கடிவாளமிட்ட சேனையுடன் நூறு குதிரைகளை அல்லாஹுதஆலா வின் பாதையில் சவாரி செய்யக் கொடுத்ததற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும். “அல்லாஹு அக்பர்‘ என்று நூறு முறை சொல்லுங்கள், தன் கழுத்தில் குர்பானியின் பட்டி அணிவிக்கப்பட்ட நூறு ஒட்டகங்களை அறுப்பதற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும். “லாஇலாஹ இல்லல்லாஹ்‘ என்று நூறு முறை சொல்லுங்கள். அதன் நன்மை வானம் பூமிக்கிடையில் உள்ள பகுதியை நன்மைகளால் நிரப்பிவிடும். மேலும், அந்நாளில் உமது செயலையும் உம்மைப் போன்று செயல்பட்டவரின் செயலையும் தவிர வேறு யாருடைய செயலும் அல்லாஹுதஆலா விடம் ஏற்கப்பட்டதாக ஆகமுடியாது”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஹஜ்ரத் உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “யாரஸூலல்லாஹ்! நான் முதியவளாகிவிட்டேன், என் எலும்புகள் பலவீனமாகிவிட்டன, என்னைச் சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஓர் அமலை எனக்குச் சொல்லித்தாருங்கள்” என்று நான் கேட்டபோது, “மிக்க மகிழ்ச்சி! நீங்கள் நல்லதொரு கேள்வி கேட்டீர்கள்” என்று கூறிய நபி (ஸல்) “அல்லாஹு அக்பர் என நூறு முறை சொல்லுங்கள், இது அடையாளப்பட்டி போடப்பட்ட உயர்ந்த நூறு ஒட்டகங்களை அல்லாஹ்வின் இல்லத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதை விடச் சிறந்தது. நூறுமுறை“லாஇலாஹ இல்லல்லாஹ்‘ எனச் சொல்லுங்கள். இது வானமும், பூமியும் எவைகளைச் சூழ்ந்துள்ளனவோ அவைகளைவிட உமக்கு மேலானது. இன்னும் அந்நாளில் அல்லாஹுதஆலா விடம் ஏற்கப்பட்ட அமலாக உமது அமலைவிட வேறு யாருடைய அமலும் ஏற்கப்படத் தக்கதாக ஆகாது. ஆயினும் இந்தளவு அல்லது இதைவிட அதிகமாகக் கூறுபவரின் அமலைத் தவிர!” என்று கூறினார்கள் என மற்றோரு அறிவிப்பில் வந்துள்ளது.இன்னும் ஓரு அறிவிப்பில்: லாஇலாஹ இல்லல்லாஹ் சொல்லி வாருங்கள். இது எந்தப் பாவத்தையும் விட்டு வைக்காது. இதைப்போன்று எந்த அமலும் இல்லை” என்ற வாசகமும் உள்ளது.
(இப்னுமாஜா, தபரானீ, முஸ்தத்ரக் ஹாகிம், முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٣٦– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْساً فَقَالَ: يَا أَبَا هُرَيْرَةَ! مَا الَّذِي تَغْرِسُ؟ قُلْتُ: غِرَاساً لِّي قَالَ: أَلاَ أَدُلُّكَ عَلَي غِرَاسٍ خَيْرٍ لَّكَ مِنْ هذَا؟ قَالَ: بَلَي يَارَسُولَ اللهِﷺ قَالَ: قُلْ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ يُغْرَسُ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ.
رواه ابن ماجه باب فضل التسبيح رقم:٣٨٠٧
136.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் செடி நட்டுக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். “அபூஹுரைரா! என்ன நட்டுக் கொண்டிருக்கிறீர்?” எனக் கேட்டார்கள், “எனக்காக செடி நடுகிறேன்‘ என்றேன். “இதை விடச் சிறந்த செடியை உமக்கு நான் சொல்லவா?” எனக் கேட்டார்கள், “அவசியம் அறிவியுங்கள் யாரஸூலல்லாஹ்!‘ என்றேன். “சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்” இவற்றில் ஒவ்வொரு வார்த்தைக்குப் பகரமாக சுவனத்தில உமக்கு ஒரு செடி நடப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜா)
١٣٧– عَنْ ابِي هُرَيْرَةَ ؓ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ ﷺ فَقَالَ: خُذُوا جُنَّتَكُمْ قُلْنَا: يَارَسُولَ اللهِﷺ أَمِنْ عَدُوٍّ حَضَرَ؟ فَقَالَ: خُذُوا جُنَّتَكُمْ مِنَ النَّارِ قُولُوا: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَحَوْلَ وَلاَقُوَّةَ إِلاَّبِاللهِ فَإِنَّهُنَّ يَاْتِينَ يَوْمَ الْقِيَامَةِ مُسْتَقْدِمَاتٍ وَمُسْتَاْخِرَاتٍ وَمُنْجِيَاتٍ وَّمُجَنِّبَاتٍ وَهُنَّ الْبَاقِيَاتُ الصَّالِحَاتُ.
مجمع البحرين في زوائد المعجمين :٧ /٣٢٩، قَالَ المحشي اخرجه الطبراني في الصغير وقَالَ الهيثمي في المجمع ورجاله رجال الصحيح غير داؤد بن بلال وهو ثقة.
137.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஒருமுறை எங்களிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், “உங்களை தற்காத்துக் கொள்ளக் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று சொன்னபோது, “யாரஸூலல்லாஹ்! யாரேனும் பகைவன் வந்துவிட்டானா?’ என நாங்கள் கேட்டோம். “நரகத்திலிருந்து தற்காத்துக் கொள்ளக் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறி வாருங்கள். ஏனேன்றால், கியாமத் நாளன்று இக்கலிமாக்கள் தம்மைக் கூறியவர்களுக்கு முன்னும், பின்னும், வலப்புறமும், இடப்புறமும் வந்து அவரை ஈடேற்றம் பெறச் செய்யும், என்றேன்றும் நிரந்தரமாக நன்மை கிடைத்துக் கொண்டிருக்கும் நல் அமல்களும் இவைதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(மஜ்மஉல் பஹ்ரைன்)
தெளிவுரை:- ஹதீஸிலுள்ள “இக்கலிமாக்கள் தம்மை ஓதியவர்களுக்கு முன்புறமாக வரும்” என்ற வாக்கியத்தின் கருத்து, கியாமத் நாளன்று இக்கலிமாக்கள் முன்னால் சென்று தம்மை ஓதியவர்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசும் என்பதாம். மேலும் வலது, இடது, பின்புறமாக வரும் என்பதன் பொருள், தம்மை ஓதியவர்களை வேதனையிலிருந்து பாதுகாக்கும் என்பதாம்.
١٣٨– عَنْ أَنَسٍ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِنَّ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَإِلَهَ إِلاَّاللهُ وَاللهُ أَكْبَرُ تَنْفُضُ الْخَطَايَا كَمَا تَنْفُضُ الشَّجَرَةُ وَرَقَهَا.
رواه احمد: ٣ /١٥٢
138.மரத்தை உலுக்கவதால் மரத்திலிருந்து இலைகள் விழுவது போல் “சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்” என்று சொல்வது சொல்பவருடைய பாவங்களை விழச்செய்து விடுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٣٩– عَنْ عِمْرَانَ يَعْنِي: ابْنَ حُصَيْنٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَمَا يَسْتَطِيعُ أَحَدُكُمْ أَنْ يَعْمَلَ كُلَّ يَوْمٍ مِثْلَ أُحُدٍ عَمَلاً؟ قَالُوا: يَارَسُولَ اللهِﷺ وَمَنْ يَسْتَطِيعُ أَنْ يَعْمَلَ فِي كُلِّ يَوْمٍ مِّثْلَ أُحُدٍ عَمَلاً؟ قَالَ: كُلُّكُمْ يَسْتَطِيعُهُ قَالُوا: يَارَسُولَ اللهِﷺ مَاذَا؟ قَالَ: سُبْحَانَ اللهِ أَعْظَمُ مِنْ أُحُدٍ وَالْحَمْدُ لِلّهِ أَعْظَمُ مِنْ أُحُدٍ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ أَعْظَمُ مِنْ أُحُدٍ وَاللهُ أَكْبَرُ أَعْظَمُ مِنْ أُحُدٍ.
رواه الطبراني والبزار ورجالهما رجال الصحيح مجمع الزوائد: ١٠/١٠٥
139.”உங்களில் எவரேனும் தினமும் உஹுது மலையளவு அமல் செய்ய இயலுமா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “யாரஸூலல்லாஹ்! உஹுது மலையளவு எவரால் அமல் செய்ய முடியும்?” என ஸஹாபாப் பெருமக்கள் கேட்டார்கள். “உங்களில் எல்லோராலும் செய்ய முடியும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யாரஸூலல்லாஹ்! அது என்ன அமல்?’ என ஸஹாபாப் பெருமக்கள் வினவினார்கள், “சுப்ஹானல்லாஹ் (சொல்வதின் நன்மை) உஹுது மலையைவிடப் பெரியது, அல்ஹம்துலில்லாஹ் (சொல்வதின் நன்மை) உஹுது மலையைவிடப் பெரியது, லாஇலாஹ இல்லல்லாஹ் (சொல்வதின் நன்மை) உஹுது மலையைவிடப் பெரியது, அல்லாஹு அக்பர் (சொல்வதின் நன்மை) உஹுது மலையைவிடப் பெரியது” என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள் என ஹஜ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٤٠– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا قُلْتُ: يَارَسُولَ اللهِ وَمَا رِيَاضُ الْجَنَّةِ؟ قَالَ: اَلْمَسَاجِدُ قُلْتُ: وَمَا الرَّتْعُ يَارَسُولَ اللهِ؟ قَالَ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَإِلهَ إِلاَّاللهُ وَاللهُ أَكْبَرُ.
رواه الترمذي وقَالَ:حديث حسن غريب باب حدبث في اسماء الله الحسني مع ذكرها تماما رقم:٣٥٠٩
140.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “நீங்கள் சுவர்க்கப் பூங்காவனங்களைக் கடந்து சென்றால் நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! சுவர்க்கப் பூங்காவனம் என்றால் என்ன?’ என நான் கேட்டேன், “பள்ளி வாசல்கள்” என பதிலளித்தார்கள். “யாரஸூலல்லாஹ்! மேய்தல் என்றால் என்ன?’ என நான் கேட்டேன், “சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்” என்ற சொல்வது என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(திர்மிதீ)
١٤١– عَنْ أَبِي هُرَيْرَة ؓ وَأَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ اللهَ اصْطَفي مِنَ الْكَلاَمِ أَرْبَعاً: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَإِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ فَمَنْ قَالَ: سُبْحَانَ اللهِ كُتِبَ لَهُ عِشْرُونَ حَسَنَةً وَّحُطَّتْ عَنْهُ عِشْرُونَ سَيِّئَةً وَّمَنْ قَالَ: اَللّهُ أَكْبَرُ فَمِثْلُ ذلِكَ وَمَنْ قَالَ لاَإِله َ إِلاَّ اللهُ فَمِثْلُ ذلِكَ وَمَنْ قَالَ: اَلْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ مِنْ قِبَلِ نَفْسِهِ كُتِبَتْ لَهُ ثَلاَثُونَ حَسَنَةً وُحُطَّتْ عَنْهُ ثَلاَثُونَ سَيِّئَةً.
رواه النسائي في عمل اليوم والليلة رقم:٨٤٠
141.”அல்லாஹுதஆலா தன் வேதத்திலிருந்து நான்கு வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துள்ளான். அவை: சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்பவையாகும். “சுப்ஹானல்லாஹ்‘ என ஒருவர் கூறினால், அவருக்கு இருபது நன்மைகள் எழுதப்படுகின்றன, இருபது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. “அல்லாஹு அக்பர்‘ என்று ஒருவர் கூறினால், அவருக்கும் அதேபோன்று கூலி கொடுக்கப்படும், “லாஇலாஹ இல்லல்லாஹ்‘ கூறுபவருக்கும் அதேபோன்று கூலி கொடுக்கப்படும். ஒருவர் மனப்பூர்வமாக “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று கூறினால், அவருக்கு முப்பது நன்மைகள் எழுதப்படுகின்றன, முப்பது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா, ஹஜ்ரத் அபூஸஈது குத்ரீ (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
(அமலுல் யவ்ம் வல்லைலா)
١٤٢– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: اِسْتَكْثِرُوا مِنَ الْبَاقِيَاتِ الصَّالِحَاتِ قِيلَ: وَمَاهُنَّ يَارَسُولَ اللهِ؟ قَالَ: اَلْمِلَّةُ قِيلَ وَمَا هِيَ؟ قَالَ: اَلتَّكْبِيرُ وَالتَّهْلِيلُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ.
رواه الحاكم وقَالَ:هذا اصح اسناد المصريين ووافقه الذهبي:١/٥١٢
142.”என்றென்றும் நன்மைகளை தரும்படியான நற்செயல்களை அதிகமாகச் செய்யுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “அவை யாவை?’ என்று ஒருவர் கேட்டார், “அவை தான் தீனின் அடிப்படைகளாகும்” என்று கூறினார்கள். அந்த அடிப்படையானவை எது?’ என்று கேட்கப்பட்டது, “தக்பீர் (அல்லாஹு அக்பர் சொல்வது) தஹ்லீல் (லாஇலாஹ இல்லல்லாஹ் சொல்வது) தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் சொல்வது) தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ் சொல்வது), லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ்” சொல்வதாகும் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஸஈத்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
தெளிவுரை:- தொடர்ந்து நன்மைகள் கிடைத்துக் கொண்டிருக்கும் நற்செயல்களுக்கு பாகியாதுஸ் ஸாலிஹாத் என்று சொல்லப்படும்.
(பத்ஹுர்ரப்பானி)
١٤٣– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: قُلْ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ فَإِنَّهُنَّ الْبَاقِيَاتُ الصَّالِحَاتُ وَهُنَّ يَحْطُطْنَ الْخَطَايَا كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا وَهُنَّ مِنْ كُنُوزِالْجَنَّةِ.
رواه الطبراني باسنادين في احدهما:عمربن راشد اليمامي وقد وثق علي ضعفه وبقية رجاله رجال الصحيح مجمع الزوائد: ١٠/١٠٤
143.”சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு, அல்லாஹு அக்பர், லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் என்று சொல்லிவாருங்கள், இவைகள் தான் நிலைத்து நிற்கும் நற்செயல்கள். மரத்திலிருந்து (குளிர்காலத்தில்) இலைகள் விழுவதுபோல் இவைகள் பாவங்களை விழச்செய்துவிடுகின்றன. மேலும், இக்கலிமாக்கள் சுவர்க்கத்தின் பொக்கிஷம்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٤٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا عَلَي اْلاَرْضِ أَحَدٌ يَقُولُ: لاَإِله َإِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّبِاللهِ إِلاَّ كُفِّرَتْ عَنْهُ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِالْبَحْرِ.
رواه الترمذي وقَالَ:هذا حديث حسن غريب باب ما جاء في فضل التسبيح والتكبير والتحميد رقم:٣٤٦٠ وزاد الحاكم: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ. وقَالَ الذهبي:حاتم ثقة وزيادته مقبولة:١/٥٠٣
144.”லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் என்று” பூமியில் ஒருவர், கூறினால் அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன. அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் சரியே!”, என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
மற்றோரு அறிவிப்பில்: சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி என்ற வார்த்தைகளையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٤٥– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: مَنْ قَالَ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ قَالَ اللهُ: أَسْلَمَ عَبْدِيْ وَاسْتَسْلَمَ.
رواه الحاكم وقَالَ:صحيح الاسناد ووافقه الذهبي:١/٥٠٢
145.சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹி என ஒரு மனிதர் சொன்னால், “என் அடியான் எனக்கு வழிப்பட்டு விட்டான். தன்னை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்‘, என்று அல்லாஹுதஆலா கூறுகிறான் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٤٦– عَنْ أَبِي سَعِيدٍ ؓ وَأَبِي هُرَيْرَةَ ؓ أَنَّهُمَا شَهِدَا عَلَي النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ: مَنْ قَالَ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ صَدَّقَهُ رَبُّهُ وَقَالَ: لاَإِلهَ إِلاَّأَنَا وَأَنَا أَكْبَرُ وَإِذَا قَالَ: لاَإِلَهَ إِلاَّاللهُ وَحْدَهُ قَالَ: يَقُولُ اللهُ: لاَإِلَهَ إِلاَّ أَنَا وَأَنَا وَحْدِي وَإِذَا قَالَ: لاَ إِلهَ إِلاَّاللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ قَالَ اَللّهُ: لاَإِله َإِلاَّأَنَا وَحْدِي لاَشَرِيكَ لِي وَإِذَا قَالَ: لاَإِلهَ إِلاَّاللهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ قَالَ اللهُ: لاَ إِلهَ إِلاَّ أَنَا لِيَ الْمُلْكُ وِلِيَ الْحَمْدُ وَإِذَا قَالَ: لاَ إِلهَ إِلاَّ اَللّهُ وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ قَالَ الله: لاَإِلهَ إِلاَّ أَنَا وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِيْ وَكَانَ يَقُولُ: مَنْ قَالَهَا فِي مَرَضِهِ ثُمَّ مَاتَ لَمْ تَطْعَمْهُ النَّارُ.
رواه الترمذي وقَالَ هذا حديث حسن غريب باب ماجاء مايقول العبد اذامرض رقم:٣٤٣٠
146.”(لاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ) அல்லாஹுதஆலாவைத் தவிர வணங்கு வதற்குரியவன் யாருமில்லை, அல்லாஹுதஆலா வே யாவற்றையும் விடப் பெரியவன் என்று ஒருவர் சொன்னால், அல்லாஹுதஆலா அதை உண்மைப்படுத்தி (لاَإِلهَ إِلاَّأَنَا وَأَنَا أَكْبَر) “என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, நான் அனைவரையும் விட பெரியவன்” என்று கூறுகிறான். அவர் (لاَإِلَهَ إِلاَّاللهُ وَحْدَه) அல்லாஹுதஆலாவைத்தவிர வேறு நாயன் இல்லை, அவன் தனித்தவன் என்று சொன்னால், அல்லாஹுதஆலாவும் (لاَإِلَهَ إِلاَّ أَنَا وَأَنَا وَحْدِي) “என்னைத் தவிர வேறு இறைவனில்லை, நான் தனித்தவன்” என்று கூறுகிறான். அவர் (لاَ إِلهَ إِلاَّاللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ) அல்லாஹுதஆலாவைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாரும் இல்லை என்று சொல்லும் போது, அல்லாஹுதஆலா(لاَإِله إِلاَّأَنَا وَحْدِي لاَشَرِيكَ لِي) “என்னைத்தவிர வேறுநாயனில்லை, நான் தனித்தவன் எனக்கு யாரும் இணையில்லை” என்று கூறுகிறான். அவர்,( لاَإِلهَ إِلاَّاللهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ) “அல்லாஹுதஆலாவைத் தவிர வேறு நாயனில்லை, அவனுக்கே அரசாட்சி உரியது, எல்லாப்புகழும் அவனுக்கே! என்று சொல்லும்போது, அல்லாஹுதஆலா (لاَ إِلهَ إِلاَّ أَنَا لِيَ الْمُلْكُ وِلِيَ الْحَمْدُ) “என்னைத்தவிர வேறு இறைவனில்லை; அரசாட்சி எனக்கே சொந்தமானது; எல்லாப்புகழும் எனக்கே உரியது” என்று கூறுகிறான். அவர் ( لاَ إِلهَ إِلاَّ اَللّهُ وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ) அல்லாஹுதஆலாவைத் தவிர வேறு இறைவனில்லை, பாவங்களிலிருந்து காத்து, நன்மையில் ஈடுபடுத்தும் சக்தி அல்லாஹுதஆலாவுக்கே உரியது என்று கூறினால், அல்லாஹுதஆலா ,( لاَإِلهَ إِلاَّ أَنَا وَلاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِيْ) “என்னைத்தவிர வேறு நாயனில்லை, பாவங்களிலிருந்து காப்பாற்றி நன்மையில் ஈடுபடுத்தும் சக்தி எனக்கே சொந்தமானது” என்று சொல்கிறான். மேலும், ஒருவர் இந்த கலிமாக்களை நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் கூறி மரணித்து விட்டால் நரக நெருப்பு அவரைத் தீண்டாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈதுகுத்ரீ, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٤٧– عَنْ يَعْقُوبَ بْنِ عَاصِمٍ ؓ أَنَّهُ سَمِعَ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَاقَالَ عَبْدٌ قَطُّ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ مُخْلِصاً بِهَا رُوحُهُ مُصَدِّقاً بِهَا قَلْبُهُ لِسَانَهُ إِلاَّ فُتِقَ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّي يَنْظُرَ اللهُ إِلَي قَائِلِهَا وَحُقَّ لِعَبْدٍ نَظَرَاللهُ إِلَيْهِ أَنْ يُعْطِيَهُ سُؤْلَهُ.
رواه النسائي في عمل اليوم والليلة رقم:٢٨
147.”( لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ ) என்று ஓர் அடியான் மனத் தூய்மையுடனும், தன் நாவு கூறியதை அவருடைய உள்ளம் உண்மை என்று ஏற்றுக் கொண்ட நிலையிலும் சொன்னால், அவருக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இதைக் கூறியவரை அல்லாஹுதஆலா ரஹ்மத்துடைய பார்வையால் பார்க்கிறான். அல்லாஹுதஆலா வின் ரஹ்மத்துடைய பார்வை எந்த அடியான் மீது விழுந்ததோ அவர் அல்லாஹுதஆலா விடம் எதையும் கேட்டுப் பெறுவதற்குத் தகுதி பெற்றவராகி விடுகிறார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக இரு ஸஹாபாக்கள் கூறியதாக ஹஜ்ரத் யஃகூப்இப்னு ஆஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அமலுல் யவ்ம் வல்லைலா)
١٤٨– عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ؓ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيِّ ﷺ قَالَ: خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ


நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்ட திக்ருகளும், துஆக்களும்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ط أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ۞).
البقرة: ١٨٦
1.(நபியே,) உம்மிடம் என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் கேட்டால், “நிச்சயமாக நான் (அவர்களுக்கு மிகச்) சமீபமாகவே இருக்கிறேன்; அழைப்பவரின் அழைப்புக்கு – என்னை அவர் அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன்” (என்று நீர் கூறுவீராக!).
(அல்பகரா: 186)
وَقَالَ تَعَالي: (قُلْ مَايَعْبَؤُ بِكُمْ رَبِّي لَوْلاَ دُعَاؤُكُم۞).
الفرقان: ٧٧
2.(துன்பம் வரும்போது, அதனை நீக்கக் கோரி) உங்களுடைய பிரார்த்தனை (மட்டும்) இல்லையானால், என்னுடைய ரப்பு உங்களைப் பொருட்படுத்தி யிருக்கமாட்டான்” என்று (நபியே,) நீர் கூறுவீராக!.
(அல்ஃபுர்கான்: 77)
وقَالَ تَعَالي: (اُدْعُوا رَبَّكُمْ تَضَرُّعاً وَّخُفْيَةً۞).
الاعراف:٥٥
3.(ஓரிறை நம்பிக்கை கொண்டவர்களே) உங்களுடைய ரப்பை பணிவாகவும் (தாழ்ந்த குரலில்) மெதுவாகவும் நீங்கள் பிரார்த்தியுங்கள்.
(அல்அஃராஃப்:55)
وقَالَ تَعَالي: (وَادْعُوهُ خَوْفاً وَّطَمَعاً۞).
الاعراف:٥٦
4.அச்சத்தோடும் ஆசையோடும் அவனையே நீங்கள் அழையுங்கள்.
(அல்அஃராஃப்:56)
قَالَ تعالي: (وَلِلّهِ اْلاَسْمَاءُ الْحُسْني فَادْعُوهُ بِهَا۞).
الاعراف:١٨٠
5.அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் இருக்கின்றன; எனவே அவற்றைக் கொண்டு அவனை நீங்கள் அழையுங்கள்.
(அல்அஃராஃப்:180)
وقَالَ تَعَالي: (أَمَّنْ يُّجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ۞).
النمل: ٦٢
6.துன்பத்திற்குள்ளானவன், அவனை அழைத்தால், பதில் கொடுத்து மேலும் (இவனுடைய) அத்துன்பத்தை நீக்குபவன் யார்?
(அந்நம்லு:62)
وَقَالَ تَعَالي: (اَلَّذِينَ إِذَآ أَصَابَتْهُمْ مُّصِيبَةٌ لا قَالُوا إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ۞ أُولئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مَّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ قف وَّأُولئِكَ هُمُ الْمُهْتَدُونَ۞).
البقرة:١٥٧، ١٥٦
7.(பொறுமையாளர்களாகிய) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், “நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம்; நிச்சயமாக அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாகவும் இருக்கிறோம்” என்று கூறுவார்கள்.அத்தகையோர் – அவர்களுடைய ரப்பிடமிருந்து அருளும் கிருபையும் அவர்களின் மீது உண்டாகின்றன; இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி அடைந்தவர்கள்.
(அல்பகரா: 156,157)
وَقَالَ تَعَالي: (اِذْهَبْ إِلَي فِرْعَوْنَ إِنَّهُ طَغي ۞ قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ۞ وَيَسِّرْلِي أَمْرِي ۞ وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِي ۞ يَفْقَهُوا قَوْلِي ۞ وَاجْعَلْ لِي وَزِيرًا مِّنْ أَهْلِي ۞ هرُونَ أَخِي ۞ اشْدُدْ بِهِ أَزْرِي ۞ وَأَشْرِكْهُ فِي أَمْرِي ۞ كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا ۞ وَنَذْكُرُكَ كَثِيرًا۞).
طه: ٣٤–٢٤
8.”ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்” (என்று அல்லாஹ் கூறினான்). (அப்பொழுது) அவர் கூறினார்: “என்னுடைய ரப்பே, என்னுடைய நெஞ்சத்தை எனக்கு நீ விரிவாக்கி வைப்பாயாக! என்னுடைய காரியத்தை எனக்கு நீ இலேசாக்கி வைப்பாயாக! என் நாவிலிலுள்ள முடிச்சை (சிக்கலை) நீ விழ்த்துவிடுவாயாக! என்னுடைய சொல்லை அவர்கள் விளங்குவதற்காக! என் குடும்பத்திலிருந்து ஓர் உதவியாளரையும் எனக்கு நீ ஏற்படுத்துவாயாக! என்னுடைய சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்துவாயாக!) அவரைக் கொண்டு என் பலத்தை நீ உறுதிப்படுத்துவாயாக! என் காரியத்தில் அவரை நீ கூட்டாக்கி வைப்பாயாக! உன்னை அதிகமாக நாங்கள் துதிப்பதற்காகவும் அதிகமாக உன்னை நாங்கள் நினைவு கூர்வதற்காகவும்.
(தாஹா:24-34)

ஹதீஸ்கள்:-
١٩٠– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ.
رواه الترمذي وقَالَ:هذا حديث غريب باب منه الدعاء مخ العبادة رقم:٣٣٧١
190. “துஆ வணக்கத்தின் (மூளை) சாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னுமாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٩١– عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: اَلدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَالَ: (وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرينَ۞).
رواه الترمذي وقَالَ هذا حديث حسن صحيح باب ومن سورة المُؤْمِنِ رقم:٣٢٤٧
191.”(துஆ) தான் வணக்கம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் (இதற்கு ஆதாரமாக) நபி (ஸல்) அவர்கள் சங்கை மிக்க குர்ஆனிலிருந்து ( وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرينَ ) “என்னிடம் துஆக்கேட்டு வாருங்கள், நான் உங்கள் துஆவை ஏற்றுக்கொள்வேன் நிச்சயமாக எவர்கள் என்னை வணங்காமல் கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் வெகு சீக்கிரம் இழிவடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்” என்று உங்கள் இரட்சகன் கூறுகிறான்” என்ற வசனத்தை ஓதினார்கள்.
(திர்மிதீ)
١٩٢– عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: سَلُوا اللهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللهَ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ.
رواه الترمذي باب في انتظار الفرج رقم:٣٥٧١
192.”அல்லாஹுதஆலா விடம் அவனது பேரருளைக் கேளுங்கள். ஏனேன்றால், அல்லாஹுதஆலா தன்னிடம் கேட்கப்படுவதை விரும்புகிறான். வசதி வாய்ப்பை கேட்ட பின் அவ்வசதி வாய்ப்பை எதிர் பார்த்திருப்பது வணக்கங்களில் சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- வசதி வாய்ப்பை எதிர்பார்த்தல் என்பதன் பொருள், எந்த ரஹ்மத், ஹிதாயத், நல்வாழ்வுக்காக துஆக் கேட்கப்படுகிறதோ அது இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கிடைக்கும் என்று ஆதரவு வைப்பதாகும்.
١٩٣– عَنْ ثَوْبَانَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَرُدُّ الْقَدْرَ إِلاَّ الدُّعَاءُ وَلاَيَزِيدُ فِي الْعُمُرِ إِلاَّ الْبِرُّ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ.
رواه الحاكم وقَالَ:هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:١ /٤٩٣
193.”துஆவைத் தவிர வேறு எதும் விதியைத் தடுக்க முடியாது, நன்மையைத் தவிர வேறு எதும் ஆயுளை அதிகப்படுத்த முடியாது. மனிதன் (சில சமயங்களில்) பாவத்தின் காரணமாக தனக்குக் கிடைக்கவேண்டிய பொருளைவிட்டும் தடுக்கப்பட்டு விடுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
தெளிவுரை:- இந்த மனிதன் அல்லாஹுதஆலா விடம் துஆக் கேட்டால், அது அவனுடைய “துஆச் செய்வதும் அல்லாஹுதஆலா விடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று ஹதீஸில் வந்துள்ளது. அதேபோல, ஒருவரது வயது அறுபது வருடமென்றால், அவர் ஏதேனுமொரு நன்மை செய்வதால் (உதாரணமாக) ஹஜ்ஜச் செய்வதால் அவரது ஆயுளில் இருபது வருடங்கள் அதிகரிக்கப்பட்டு இவர் எண்பது வருடங்கள் வாழ்வார் என்பதும் அல்லாஹுதஆலா விடத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கும் என்பது மேற்கூறப்பட்ட ஹதீஸின் கருத்தாகும்.
(மிர்காத்)
١٩٤– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَاعَلَي اْلاَرْضِ مُسْلِمٌ يَدْعُو اللهَ تَعَالَي بِدَعْوَةٍ إِلاَّ آتَاهُ اللهُ إِيَّاهَا أَوْ صَرَفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا مَالَمْ يَدْعُ بِمَاْثَمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: إِذاً نُكْثِرُ قَالَ: اَللّهُ أَكْثَرُ.
رواه الترمذي وقَالَ: هذا حديث غريب صحيح باب انتظار الفرج وغير ذلك رقم:٣٥٧٣. ورواه الحاكم وزاد فيه: أَوْ يَدَّخِرُلَهُ مِنَ اْلاَجْرِ مِثْلَهَا. وقَالَ: هذا حديث صحيح الاسناد ووافقه الذهبي:١ /٤٩٣
194.”பூமியில் எந்த முஸ்லிமும் அல்லாஹுதஆலா விடம் பாவமற்ற, உறவு காரிங்களுக்காக முறையைத் துண்டிக்காத காரியங்களுக்காக துஆக்கேட்டால், அல்லாஹுதஆலா அவருக்கு அவர் கேட்டதையே தந்துவிடுகிறான். அல்லது அந்த துஆவினால் அவருக்கு வர இருந்த சிரமத்தை அவருடைய துஆவுடைய அளவுக்கு நீக்கி விடுகிறான். அல்லது அவருடைய துஆவுக்குச் சமமான கூலியைச் சேமிப்பாக ஆக்கி விடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “அவ்வாறென்றால், (துஆ நிச்சயம் கபூலாகிறது, அல்லது அதற்கு பதிலாக ஏதாவதொன்று கிடைத்துவிடுகிறது என்றால்) நாங்கள் அதிகமாக துஆச் செய்வோம்! என்று ஒருவர் சொன்னார். “அல்லாஹுதஆலா வும் மிக அதிகமாகக் கொடுப்பவன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் உபாதத்துப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ, முஸ்தத்ரக் ஹாகிம்)
١٩٥– عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ اللهَ حَيِيٌّي كَرِيمٌ يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ.
رواه الترمذي وقَالَ:هذا حديث حسن غريب باب ان الله حيي كريم …رقم:٣٥٥٦
195.”நிச்சயமாக அல்லாஹுதஆலா மிக அதிகமாக வெட்கமுடையவனாக இருக்கிறான். கேட்காமலேயே அதிகமாகத் தருபவன். மனிதன் அல்லாஹுதஆலாவுக்கு முன்னால் கேட்பதற்குக் கையேந்தினால் அவன் கைகளை வெறுமையாகவும், பயனற்றவையாகவும் திருப்பி அனுப்புவதற்கு அல்லாஹுதஆலா வெட்கப்படுகிறான்”. (ஆகவே நிச்சயம் கொடுத்துவிட வேண்டும் எனத் தீர்மானிக்கிறான்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٩٦– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ يَقُولُ: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا دَعَانِي.
رواه مسلم باب فضل الذكر والدعاء رقم:٦٨٢٩
196.”என் அடியான் என்னைப்பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே நானும் அவனுடன் நடந்து கொள்கிறேன். அவன் என்னிடம் துஆக் கேட்கும் போது அவனுடன் நான் இருக்கிறேன்” என்ற ஹதீஸே குத்ஸியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٩٧– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَي اللهِ تَعَالَي مِنَ الدُّعأَءِ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن غريب باب ماجاء في فضل الدعاء رقم:٣٣٧٠
197.”அல்லாஹுதஆலா விடத்தில் துஆவை விடக் கண்ணியமான அந்தஸ்துள்ள அமல் வேறில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٩٨– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ سَرَّهُ أَنْ يَسْتَجِيبَ اللهُ لَهُ عِنْد الشَّدَائِدِ وَالْكُرَبِ فَلْيُكْثِرِ الدُّعَاءَ فِي الرَّخَاءِ.
رواه الترمذي وقَالَ:هذا حديث حسن غريب باب ماجاء ان دعوة المسلم مستجابة رقم:٣٣٨٢
198.”சிரமமான, பதட்டமான நேரங்களில் அல்லாஹ் தனது துஆவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எவர் நாடுகிறாரோ, அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகமாகத் துஆச் செய்து வரட்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٩٩– عَنْ عَلِيٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلدُّعَاءُ سِلاَحُ المُؤْمِنِ وَعِمَادُ الدِّينِ وَنُورُ السَّموَاتِ وَاْلاَرْضِ.
رواه الحاكم وقَالَ:هذا حديث صحيح ووافقه الذهبي:١/٤٩٢
199.”துஆ முஃமினின் ஆயுதம், தீனின் தூண், வானங்கள், பூமியின் ஒளி” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٠٠– عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ: لاَ يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَالَمْ يَسْتَعْجِلْ قِيلَ: يَارَسُولَ اللهِﷺ مَا اْلاِسْتِعْجَالُ؟ قَالَ: يَقُولُ: قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذلِكَ وَيَدَعُ الدُّعَاءَ.
رواه مسلم باب بيان انه يستجاب للداعي… رقم:٦٩٣٦
200.”அடியான் பாவத்திற்கும், உறவு முறிவுக்கும் துஆக் கேட்காமல், அவன் அவசரப்படாமல் இருக்கும் காலமெல்லாம்” அவனுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதும், யாரஸூலல்லாஹ், அவசரப்படுதல் என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. “நான் துஆக்கேட்டேன், மீண்டும் துஆக்கேட்டேன். ஆனால், எனது துஆ ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று சளைத்து துஆக் கேட்பதை விட்டுவிடுவதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٠١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ رَفْعِهِمْ أَبْصَارَهُمْ عِنْدَ الدُّعَاءِ فِي الصَّلاَةِ إِلي السَّمَاءِ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ.
رواه مسلم باب النهي عَنْ رفع البصر الي السماء في الصلاة صحيح مسلم:١/٣٢١. طبع دار احياء التراث العربي بيروت
201.”தொழுகையில் துஆக்கேட்கும் நேரத்தில் மக்கள் வானத்தின் பக்கம் தங்கள் பார்வையை உயர்த்துவதை தவிர்க்கவும், துஆவின் போது தம் பார்வையை உயர்த்துவார்களேயானால், அவர்களின் பார்வை பறிக்கப் பட்டுப் போகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- தொழும்போது வானைநோக்கிப் பார்வையை உயர்த்துவது தடுக்கப்பட்டுள்ளது துஆச் செய்யும் பொழுது குறிப்பாகப் பார்வை வானத்தின் பக்கம் உயர்ந்து விடுகிறது என்ற காரணத்தினால் தடுக்கப்பட்டுள்ளது.
(பத்ஹுல் முல்ஹிம்)
٢٠٢– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أُدْعُوا اللهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِاْلإِجَابَةِ وَاعْلَمُوا أَنَّ اللهَ لاَ يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لاَهٍ.
رواه الترمذي وقَالَ: هذا حديث غريب كتاب الدعوات رقم:٣٤٧٩
202.”உங்களுடைய துஆ ஒப்புக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் அல்லாஹுதஆலா விடம் துஆக் கேளுங்கள். யாருடைய உள்ளம் (துஆச் செய்யும்போது) அல்லாஹுதஆலாவை மறந்தும், அவனல்லாத வற்றில் ஈடுபட்டும் இருக்குமோ, அவரது துஆவை அல்லாஹுதஆலா ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٠٣–عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ الْفِهْرِيؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: لاَ يَجْتَمِعُ مَلَؤٌ فَيَدْعُوَ بَعْضُهُمْ وَيُؤَمِّنُ الْبَعْضُ إِلاَّ أَجَابَهُمُ اللهُ.
رواه الحاكم: ٣ /٣٤٧
203.”ஒரு கூட்டத்தினர் ஒன்று கூடி, அவர்களில் ஒருவர் துஆச் செய்ய, மற்றவர்கள் ஆமீன் சொன்னால் அல்லாஹுதஆலா அவர்களின் துஆவை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹபீபிப்னு மஸ்லமா ஃபிஹ்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٠٤– عَنْ زُهَيْرِنِ النُّمَيْرِيِّؓ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَأَتَيْنَا عَلَي رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْئَلَةِ فَوَقَفَ النَّبِيُّ ﷺ يَسْتَمِعُ مِنْهُ فَقَالَ النَّبِيُّ ﷺ: أَوْجَبَ إِنْ خَتَمَ فَقَالَ رَجَلٌ مِنَ الْقَوْمِ: بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ فَقَالَ: بِآمِينَ فَإِنَّهُ إِنْ خَتَمَ بِآمِينَ فَقَدْ أَوْجَبَ فَانْصَرَفَ الرَّجُلُ الَّذِي سَأَلَ النَّبِيَّ ﷺ فَأَتي الرَّجُلَ فَقَال: اِخْتِمْ يَافُلاَنُ بِآمِينَ وَأَبْشِرْ.
رواه ابوداؤد باب التامين وراء الامام رقم:٩٣٨
204.ஹஜ்ரத் ஸுஹைர் நுமைரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு நாள் இரவு நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தோம், மிகவும் தாழ்ந்து பணிந்து துஆக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றோம். நபி (ஸல்) அவர்கள் அவரது துஆவைக் கேட்க நின்று விட்டார்கள், “இவர் துஆவின் மீது முத்திரையிட்டால், துஆவை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடுவார்‘ என்று மக்களில் ஒருவர், சொன்னார்கள். “எதைக் கொண்டு முத்திரை இடுவது?’ என்று வினவ, “ஆமீனைக் கொண்டு, நிச்சயமாக அவர் ஆமீனைக் கொண்டு முத்திரையிட்டால், (துஆவின் இறுதியில் ஆமீன் சொன்னால்) துஆ ஏற்றுக்கொள்வதை கடமையாக்கி வைத்து விடுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் முத்திரையைப் பற்றிக் கேட்டவர் (துஆக் கேட்கும்) மனிதரிடம் சென்று, தாங்கள் ஆமீனைக் கொண்டு துஆவை முடித்துக் கொள்வீராக!‘ “துஆ ஏற்கப்படுமென்ற நற்செய்தியை கூறுகிறேன், என்று சொன்னார்.
(அபூதாவூத்)
٢٠٥– عَنْ عَائِشَةَؓ قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يَسْتَحِبُّ الْجَوَامِعَ مِنَ الدُّعَاءِ وَيَدَعُ مَاسِوَي ذلِكَ.
رواه ابوداؤد باب الدعاء رقم:١٤٨٢
205.”சுருக்கமான வார்த்தைகளும் விரிவான கருத்துகளும் உடைய துஆக்களை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் விரும்புவார்கள், மற்றவைகளை விட்டுவிடுவார்கள்” என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை: ஜாமிஃ துஆக்கள் என்பது, வார்த்தைகள் சுருக்கமானதும், கருத்துகள் விரிவானதுமான துஆக்கள் அல்லது இம்மை, மறுமையின் பாக்கியங்களைக் கேட்கும் துஆக்கள் அல்லது முஃமின்கள் அனைவருக்காகவும் கேட்கப்படும் துஆக்கள், உதாரணமாக, ( رَبَّنَا آتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّ فِى الْآخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ) என்ற பொருள் நிறைந்த துஆவை நபி (ஸல்) அவர்கள் அதிகமாகக் கேட்டு வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
(பத்லுல் மஜ்ஹூத்)
٢٠٦–عَنِ ابْنِ سَعْدٍؓ قَالَ: سَمِعَنِي أَبِي وَأَنَا أَقُولُ: اَللّهُمَّ! إِنِّي أَسْاَلُكَ الْجَنَّةَ وَنَعِيمَهَا وَبَهْجَتَهَا وَكَذَا وَكَذَا وَأَعُوذُبِكَ مِنَ النَّارِ وَسَلاَسِلِهَا وَأَغْلاَلِهَا وَكَذَا وَكَذَا فَقَالَ: يَابُنَيَّ! إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: سَيَكُونُ قَوْمٌ يَعْتَدُونَ فِي الدُّعَاءِ فَإِيَّاكَ أَنْ تَكُونَ مِنْهُمْ إِنَّكَ إِنْ أُعْطِيتَ الْجَنَّةَ أُعْطِيتَهَا وَمَافِيهَا مِنَ الْخَيْرِ وَإِنْ أُعِذْتَ مِنَ النَّارِ أُعِذْتَ مِنْهَا وَمَافِيهَا مِنَ الشَّرِّ.
رواه ابوداؤد باب الدعاء رقم:١٤٨٠
206.ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்களின் மகனார் கூறுகிறார்கள், “ஒரு தடவை நான் துஆச் செய்யும்போது, “யால்லாஹ்! சொர்க்கத்தையும், தன் பாக்கியங்களையும், வசந்தங்களையும், இன்னும் இன்னின்னவைகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்திலிருந்தும், அதன் சங்கிலிகள், விலங்கிலிருந்தும், இன்னின்ன வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்‘ என்று துஆக் கேட்டுக்கொண்டிருந்தேன். இதைக்கேட்ட என் தந்தையார் ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்கள், “என்னருமை மகனே! விரைவில் சிலர் தோன்றுவர், அவர்கள் துஆக் கேட்பதில் வரம்பு மீறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டுள்ளேன். அப்படிபட்டவர்களைப் பற்றி உம்மை எச்சரிக்கிறேன், அவர்களை விட்டும் விலகியிருக்கவும். உமக்கு சொர்க்கம் கிடைத்தால் சொர்க்கத்தின் அனைத்து பாக்கியங்களும் கிடைத்துவிடும். நரகத்தை விட்டும் நீர் பாதுகாக்கப்பட்டு விட்டால் நரகத்தின் அனைத்து வேதனைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு விடுவீர்” (எனவே துஆவில் அதைப் பற்றிய விபரம் தேவையில்லை. சொர்க்கத்தைத் கேட்பதும், நரகிலிருந்து பாதுகாப்பு தேடுவதும் போதுமானது) என்று சொன்னார்கள்.
(அபூதாவூத்)
٢٠٧– عَنْ جَابِرٍؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً لاَ يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْاَلُ اللهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَذلِكَ كُلَّ لَيْلَةٍ.
رواه مسلم باب في الليل ساعة مستجاب فيها الدعاء رقم:١٧٧٠
207.”இரவில் ஒரு நேரம் உண்டு. யாரேனும் ஒரு முஸ்லிமான மனிதன் அந்நேரத்தில் இம்மை, மறுமையுடைய காரியங்களில் நன்மையானதை அல்லாஹ்விடம் கேட்டால், அல்லாஹ் அவனுக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை. அந்நேரம் ஒவ்வொரு இரவிலும் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் கேட்டதாக அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٠٨– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَي كُلَّ لَيْلَةٍ إِلَي سَمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقي ثُلُثُ اللَّيْلِ اْلآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْاَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ له؟
رواه البخاري باب الدعاء والصلاة من اخر الليل رقم:١١٤٥
208.”ஒவ்வொரு இரவிலும் மூன்றிலொரு பகுதி எஞ்சியிருக்கும்போது நம்முடைய இரட்சகன் உலக வானத்திற்கு இறங்கி, “என்னிடம் துஆக் கேட்பவர் யார்? அவர் துஆவை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் கேட்ப்பவர் யார்? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்பவர் யார்? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன்” என்று கூறுகிறான், என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٠٩– عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ دَعَا بِهؤُلاَءِ الْكَلِمَاتِ الْخَمْسِ لَمْ يَسْأَلِ اللهَ شَيْئَا إِلاَّ أَعْطَاهُ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ.
رواه الطبراني في الكبير والاوسط واسناده حسن مجمع الزوائد:١٠/٢٤١
209.( لاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ ) என்ற இந்த ஐந்து கலிமாக்களைக் கூறி அல்லாஹுதஆலா விடம் எவர் எதையேனும் கேட்டால், அல்லாஹுதஆலா அவருக்கு அதை நிச்சயம் வழங்குகிறான்”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆவியத்துப்னு அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢١٠– عَنْ رَبِيعَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: أَلِظُّوا بِيَاذَا الْجَلاَلِ وَاْلإِكْرَامِ.
رواه الحاكم وقَالَ: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:١ /٤٩٩
210.நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ரபீத்துப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ( يَاذَا الْجَلاَلِ وَاْلإِكْرَام) என்ற வார்த்தையின் மூலம் துஆவை வலியுறுத்திக் கேளுங்கள் இவ்வார்த்தையை துஆவில் அடிக்கடிச் சொல்லுங்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢١١– عَنْ سَلَمَةَ بْنِ اْلاَكْوَعِ اْلاَسْلَمِيِّؓ قَالَ: ماسَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ دَعَا دُعَاءً إِلاَّ اسْتَفْتَحَهُ بِسُبْحَانَ رَبِّيَ الْعَلِيِّ اْلاَعْلَي الْوَهَّابِ.
رواه احمد والطبراني بنحوه وفيه: عمر بن راشد اليمامي وثقه غير واحد وبقية رجال احمد رجال الصحيح مجمع الزوائد:١٠/٢٤٠
211.நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸலமத்துப்னு அக்வஃ அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் ( سُبْحَانَ رَبِّيَ الْعَلِيِّ اْلاَعْلَي الْوَهَّابِ) என்ற வார்த்தைகளைக் கொண்டு ஆரம்பிக்காமல் எந்த ஒரு துஆவும் செய்ததில்லை” ஒவ்வொரு துஆவின் துவக்கத்திலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வார்த்தைகளைக் கூறுவார்கள். என் இரட்சகன் எல்லாவிதக் குறைகளை விட்டும் தூய்மையானவன், உயர்வுமிக்கவன், அதிகம் வழங்குபவன் என்பது இவ்வார்த்தைகளின் பொருள்.
(தபரானீ, முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢١٢– عَنْ بُرَيْدَةَ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ سَمِعَ رَجُلاً يَقُولُ: اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ اْلاَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ فَقَال: لَقَدْ سَأَلْتَ اللهَ بِاْلاِسْمِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَي وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ.
رواه ابوداؤد باب الدعاء رقم:١٤٩٣
212.( اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ اْلاَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ ) “நிச்சயமாக நீயே அல்லாஹ்! உன்னைத்தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை. நீ தனித்தவன், தேவையற்றவன். அனைத்தும் உன்னிடம் தேவையுள்ளவர்கள். அவன் யாரையும் பெறவும் இல்லை, எவராலும் அவன் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகர் யாருமில்லை என்ற சாட்சியத்தின் பொருட்டால் யால்லாஹ்! நான் உன்னிடம் கேட்கிறேன்”, என்று ஒருவர் துஆச் செய்து கொண்டிருந்ததைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நீர் அல்லாஹுதஆலா விடம், எந்தத் திருநாமத்தின் பொருட்டால் எதைக் கேட்டாலும் கொடுப்பானோ, எந்த துஆக்கேட்டாலும் அங்கீகரிக்கப்படுமோ அந்தப் பெயரால் துஆக் கேட்டுள்ளீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢١٣– عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ َؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِسْمُ اللهِ اْلاَعْظَمُ فِي هَاتَيْنِ اْلآيَتَيْنِ (وَإِلـهُكُمْ إِلهٌ وَّاحِدٌ لاَإِلهَ إِلاَّ هُوَ الرَّحْمنُ الرَّحِيْمُ۞). (البقرة: ١٦٣۞)، وَفَاتِحَةُ آلِ عِمْرَانَ (آلمّ اَللّهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ۞). (ال عمران:٢،١۞)
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن صحيح باب في ايجاب الدعاء بتقديم الحمد والثناء …. رقم:٣٤٧٨
213.”இஸ்முல் அஃளம் (சூரா பகராவிலுள்ள) ( وَإِلـهُكُمْ إِلهٌ وَّاحِدٌ لاَإِلهَ إِلاَّ هُوَ الرَّحْمنُ الرَّحِيْمُ) (சூரா ஆல இம்ரானின் ஆரம்பத்தில் உள்ள) ( آلمّ اَللّهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ) ஆகிய இரு ஆயத்துகளில் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அஸ்மா பின்து யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢١٤– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ َؓ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ فِي حَلْقَةٍ وَرَجُلٌ قَائِمٌ يُصَلِّي فَلَمَّا رَكَعَ وَسَجَدَ تَشَهَّدَ وَدَعَا فَقَالَ فِي دُعَائِهِ: اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ بَدِيعُ السَّمَاوَاتِ وَاْلاَرْضِ يَاذَ الْجَلاَلِ وَاْلإِكْرَامِ يَاحَيُّ يَاقَيُّومُ فَقَالَ النَّبِيُّ ﷺ: لَقَدْ دَعَا بِاسْمِ اللهِ اْلاَعْظَمِ الّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطي.
رواه الحاكم وقَالَ: هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذهبي:١/٥٠٣
214.ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் அமர்ந்திருந்தோம். ஒருவர் தொழுதுகொண்டிருந்தார். அவர் ருகூஉ, ஸுஜூது, தஷஹ்ஹுதை முடித்துவிட்டு, ( اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ بَدِيعُ السَّمَاوَاتِ وَاْلاَرْضِ يَاذَ الْجَلاَلِ وَاْلإِكْرَامِ يَاحَيُّ يَاقَيُّومُ ) யால்லாஹ்! நான் உன்னிடம், உனக்கே சொந்தமான எல்லாப் புகழின் பொருட்டாலும் கேட்கிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ வானங்கள், பூமியை முன் மாதிரியின்றிப் படைத்தவன். மாண்பு, மகத்துவம், வெகுமதி, உபகாரம் இவற்றின் உரிமையாளனே! என்றென்றும் உயிர் வாழ்பவனே! அனைத்தையும் நிலைநாட்டுபவனே!’ என்று தம் துஆவில் கூறலானார். “(இம்மனிதர்) எத்தகைய மகத்துவமிக்க பெயரின் பொருட்டால் எப்பொழுது துஆக் கேட்டாலும் அல்லாஹுதஆலா ஏற்றுக் கொள்வானோ, எப்போது யாசித்தாலும், அல்லாஹுதஆலா நிறைவேற்றுவானோ அத்தகைய, அல்லாஹுதஆலா வின் மகத்துவமிக்க பெயரால் துஆச் செய்துள்ளார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢١٥– عَنْ سَعْدِ بْنِ مَالِكٍ َؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: هَلْ أَدُلُّكُمْ عَلي اسْمِ اللهِ اْلاَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَي اَلدَّعْوَةُ الَّتِي دَعَا بِهَا يُونُسُؑ حَيْثُ نَادَاهُ فِي الظُّلُمَاتِ الثَّلاَثِ (لاَإِلهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ۞) فَقَالَ رَجُلٌ: يَارَسُولَ اللهِﷺ هَلْ كَانَتْ لِيُونُسَؑ خَاصَّةً أَمْ لِلْمُؤْمِنِينَ عَامَّةً؟ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: أَلاَ تَسْمَعُ قَوْلَ اللهِ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ۞ وَقَالَ رَسُولُ اللهِﷺ: أَيُّمَا مُسْلِمٍ دَعَا بِهَا فِي مَرَضِهِ أَرْبَعِينَ مَرَّةً فَمَاتَ فِي مَرَضِهِ ذلِكَ أُعْطِيَ أَجْرَ شَهِيدٍ وَإِنْ بَرِئئَ بَرِئئَ وَقَدْ غُفِرَ لَهُ جَمِيعُ ذُنُوبِهِ.
رواه الحاكم:١ /٥٠٦
215.”எதை கொண்டு துஆக் கேட்டால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானோ. எதை கொண்டு கேட்டால் அல்லாஹ் கொடுப்பானோ அத்தகைய இஸ்முல் அஃளமைக் கற்றுத் தரவா? ஹஜ்ரத் யூனுஸ் (அலை) அவர்கள் மூன்று இருள்களில் அதன் மூலம் தான் அல்லாஹுதஆலாவை அழைத்தார்கள். அது ( لاَإِلهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ) உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ எல்லாக் குறைகளை விட்டும் தூய்மையானவன். நிச்சயமாக நானே குறையுடையவன்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ்! இந்தக் கலிமா ஹஜ்ரத் யூனுஸ் (அலை) அவர்களுக்கு மட்டும் குறிப்பானதா? அல்லது முஃமின்கள் அனைவருக்கும் பொதுவானதா?’ எனக் கேட்டார். ( وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ ) “நாம் ஹஜ்ரத் யூனுஸ் (அலை) அவர்களைச் சிரமங்களிலிருந்து காப்பாற்றியதைப் போல ஈமான் கொண்ட அனைவரையும் காப்பாற்றுவோம்” என்ற அல்லாஹுதஆலா வின் திருவசனத்தைக் நீர் கேட்டதில்லையா?” என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள், மேலும் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் இந்த துஆவைத் தான் நோயுற்ற நிலையில் நாற்பது முறை ஓதி அந்நோயிலேயே அவர் மரணித்து விட்டால் அவருக்கு ஷஹீதுடைய நன்மை கொடுக்கப்படும். அந்நோயிலிருந்து அவர் குணமடைந்துவிட்டால் அந்நோயிலிருந்து நிவாரணமடைவதுடன் அவரது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்” என்ற ஹதீஸை ஹஜ்ரத் ஸஃதுப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
தெளிவுரை:- மூன்று இருள்கள் என்பது இரவுடைய இருள், கடலுடைய இருள், மீன் வயிற்றின் இருள் என்பதாம்.
٢١٦– عَنِ ابْنِ عَبَّاسٍ َؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: خَمْسُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ حِينَ يَسْتَنْصِرُ وَدَعْوَةُ الْحَاجِّ حِينَ يَصْدُرُ، وَدَعْوَةُ الْمُجَاهِدِ حِينَ يَقْفُلُ، وَدَعْوَةُ الْمَرِيضِ حِينَ يَبْرَءُ، وَدَعْوَةُ اْلاَخِ لاَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ ثُمَّ قَالَ: وَأَسْرَعُ هذِهِ الدَّعَوَاتِ إِجَابَةً دَعْوَةُ اْلاَخِ لاَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ.
رواه البيهقي في شعب الايمان:٢ /٤٦
216.”ஐந்து வகையானவர்களின் துஆக்கள் குறிப்பாக ஒப்புக்கொள்ளப் படுகின்றன. 1. அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ அவர் பழிக்குப்பழி வாங்கும் வரை, 2. “ஹஜ்ஜிச் சென்றவரின் துஆ அவர் வீடுவந்து சேரும்வரை, 3. அல்லாஹ்வின் பாதையில் சென்ற முஜாஹிதுடைய துஆ அவர் ஊர் திரும்பும் வரை, 4. நோயாளியின் துஆ அவர் ஆரோக்கியம் அடையும் வரை, 5. ஒரு சகோதரர் மற்றோரு சகோதரருக்காக அவர் பின்னால் (அவர் இல்லாத நேரத்தில்) கேட்கும் துஆ இவை அனைத்திலும் ஒரு சகோதரர் மற்றோரு சகோதரருக்காக அவர் பின்னால் கேட்கும் துஆ விரைவில் ஒப்புக் கொள்ளப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٢١٧– عَنْ أَبِي هُرَيْرَةَ َؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لاَشَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْوَالِدِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْمَظْلُومِ.
رواه ابوداؤد باب الدعاء بظهر الغيب رقم:١٥٣٦
217.”மூன்று துஆக்கள் குறிப்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. தந்தை(தன் பிள்ளைகளுக்காக செய்யும்) துஆ, பிரயாணியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவரின் துஆ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢١٨– عَنْ أَبِي أُمَامَةَ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: لأَنْ أَقْعُدَ أَذْكُرُ اللهَ وَأُكَبِّرُهُ وَأَحْمَدُهُ وَأُسَبِّحُهُ وَأُهَلِّلُهُ حَتَّي تَطْلُعَ الشَّمْسُ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُعْتِقَ رَقَبَتَيْنِ أَوْ أَكْثَرَ مِنْ وُلْدِ إِسْمَاعِيلَؑ وَمِنْ بَعْدِ الْعَصْرِ حَتَّي تَغْرُبَ الشَّمْسُ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُعْتِقَ أَرْبَعَ رِقَابٍ مِنْ وُلْدِ إِسْمَاعِيلَؑ.
رواه احمد:٥/٢٥٥
218.”நான் பஜ்ர் தொழுகைக்குப்பின் சூரியன் உதயமாகும் வரை அல்லாஹுதஆலா வின் திக்ரு, அவனது பெருமை, அவனது புகழ், அவனது பரிசுத்தத்தன்மையைக் கூறுவதிலும், “லாஇலாஹ இல்லல்லாஹு‘ சொல்வதிலும் ஈடுபட்டிருப்பது, ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளிலிருந்து இரண்டு அல்லது இரண்டைவிட அதிகமான அடிமைகளை நான் உரிமைவிடுவதைவிட எனக்குப் பிரியமானது. இதேபோல அஸர் தொழுகைக்குப்பின் சூரியன் மறையும் வரை இதே அமல்களில் ஈடுபட்டிருப்பது ஹஜ்ரத் இஸ்மாயில் (அலை) அவர்களின் சந்ததிகளிலிருந்து நான்கு அடிமைகளை நான் உரிமைவிடுவதைவிட எனக்குப் பிரியமானது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢١٩– عَنِ ابْنِ عُمَرَ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ بَاتَ طَاهِرًا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ فَلَمْ يَسْتَيْقِظْ إِلاَّ قَالَ الْمَلَكُ: اَللّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فُلاَنٍ فَإِنَّهُ بَاتَ طَاهِرًا.
رواه ابن حبان (واسناده حسن): ٣ /٣٢٨
219.”எவர் உளூவுடன் இரவில் உறங்குகிறாரோ, அவருடைய மேனியுடன் இணைந்தவாறு ஒரு மலக்கு இரவைக் கழிக்கின்றார், அவர் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் “யால்லாஹ், உன்னுடைய இந்த அடியானை மன்னிப்பாயாக! ஏனேன்றால், இவர் உளூவுடன் உறங்கினார்‘ என்று மலக்கு அவருக்காக துஆச் செய்கின்றார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுஹிப்பான்)
٢٢٠– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ َؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ عَلَي ذِكْرٍ طَاهِرًا فَيَتَعَارُّ مِنَ اللَّيْلِ فَيَسْأَلُ اللهَ خَيْرًا مِنَ الدُّنْيَا وَاْلآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ.
رواه ابوداؤد باب في النوم علي طهارة رقم:٥٠٤٢
220.”ஒரு முஸ்லிம் இரவில் உளூவுடன் திக்ரு செய்தவாறு உறங்கி, பிறகு இரவில் ஏதேனுமொரு நேரத்தில் இடையே கண்விழிக்கும்போது, அவர் அல்லாஹுதஆலா விடம் இம்மை, மறுமையின் நன்மையானவற்றில் எதைக் கேட்டாலும், அவருக்கு நிச்சயமாக அதை அல்லாஹுதஆலா வழங்கி விடுவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٢١– عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ َؓ قَالَ لِي رَسُولُ الله ﷺ: إِنَّ أَقْرَبَ مَا يَكُونُ الرَّبُّ مِنَ الْعَبْدِ جَوْفَ اللَّيْلِ اْلآخِرِ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ.
رواه الحاكم وقَالَ:هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذهبي: ١ /٣٠٩
221.”நிச்சயமாக, இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹுதஆலா அடியானிடம் மிக நெருக்கமாகிவிடுகிறான். உம்மால் முடிந்தால் அந்த நேரத்தில் அல்லாஹுதஆலாவை திக்ரு செய்து கொள்வீராக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னு அபஸா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٢٢– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ َؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ نَامَ عَنْ حِزْبِهِ أَوْ عَنْ شَيْءٍ مِّنْهُ فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلاَةِ الْفَجْرِ وَصَلاَةِ الظُّهْرِ كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنَ اللَّيْلِ.
رواه مسلم باب جامع صلوة الليل ….رقم:١٧٤٥
222.”ஒருவர் தான் வழக்கமாக ஓதிவரும் அவ்ராதுகளை, அல்லது அதில் சில பகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் இரவில் தூங்கிவிட்டால், பிறகு, (மறுநாள்) பஜ்ர், லுஹர் தொழுகைகளுக்கு இடையே அதைப் பூர்த்தி செய்து விட்டால் அந்த அமல் இரவில் செய்த அமலாகவே அவரது அமல்களின் ஏட்டில் எழுதப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٢٣– عَنْ أَبِي أَيُّوبَ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ كُتِبَ لَهُ بِهِنَّ عَشْرُ حَسَنَاتٍ وَمُحِيَ بِهِنَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَرُفِعَ لَهُ بِهِنَّ عَشْرُ دَرَجَاتٍ وَكُنَّ لَهُ عَدْلَ عِتَاقَةِ أَرْبَعِ رِقَابٍ وَكُنَّ لَهُ حَرَساً مِنَ الشَّيْطَانِ حَتَّي يُمْسِيَ وَمَنْ قَالَهُنَّ إِذَا صَلَّي الْمَغْرِبَ دُبُرَ صَلاَتِهِ فَمِثْلُ ذلِكَ حَتَّي يُصْبِحَ.
رواه ابن حبان وسنده حسن: ٥/ ٣٦٩
223.( لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ) என்று எவர் காலையில் பத்து முறை சொல்கிறாரோ, அவருக்குப் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன, பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, பத்து தகுதிகள் உயர்த்தப்படுகின்றன, நான்கு அடிமைகளை உரிமைவிட்டதற்கு சமமான நன்மைகள் கிடைக்கின்றன. மாலை வரை ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் எவர் மஃரிபுத் தொழுகைக்குப்பின் இதே போன்று சொல்வாரோ, அவருக்கும் சுப்ஹு வரை இந்த வெகுமதிகள் அனைத்தும் கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூய்யூப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(இப்னுஹிப்பான்)
٢٢٤– عَنْ أَبِي هُرَيْرَةَ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ لَمْ يَاْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ.
رواه مسلم باب فضل التهليل والتسبيح والدعاء رقم:٦٨٤٣, وعَنْد ابي داؤد: سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ. باب مَايَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٩١
224.”எவர் காலை, மாலை ( سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه) என நூறு முறை கூறுகிறாரோ, கியாமத் நாளன்று அவரைவிடச் சிறந்த அமலின் நன்மையைக் கொண்டு வருபவர், அவரைப்போன்று அல்லது அவரை விட அதிகமாக அமல் செய்தவரைத்தவிர வேறு யாரும் வரமாட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பில் இந்தச் சிறப்பு ( سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ) என்று சொல்வதால் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
(முஸ்லிம், அபூதாவூத்)
٢٢٥– عَنْ أَبِي هُرَيْرَةَ َؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: مَنْ قَالَ إِذَا أَصْبَحَ مِائَةَ مَرَّةٍ وَإِذَا أَمْسَي مِائَةَ مَرَّةٍ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ غُفِرَتْ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ.
رواه الحاكم وقَالَ: هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذهبي:١ /٥١٨
225.”எவர் காலை, மாலையில், (سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ) என்று நூறு முறை கூறுவாரோ, அவரது பாவங்கள் கடல் நுரையைவிட அதிகமாக இருந்தாலும் மன்னிக்கப்படும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக ஹாகிம்)
٢٢٦– عَنْ رَجُلٍ مِّنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَي: رَضِينَا بِاللهِ رَبًّا وَبِاْلإِسْلاَمِ دِيناً وَبِمُحَمَّدٍ رَسُولاً إِلاَّ كَانَ حَقّاً عَلَي اللهِ أَنْ يُرْضِيَهُ.
رواه ابوداؤد باب مَايَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٧٢. وعَنْد احمد:انه يَقُولُ ذلِكَ ثَلاَثَ مَرَّاتٍ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ : ٤ / ٣٣٧
226.”எவரோருவர் காலை, மாலை (رَضِينَا بِاللهِ رَبًّا وَبِاْلإِسْلاَمِ دِيناً وَبِمُحَمَّدٍ رَسُولاً) நாங்கள் அல்லாஹுதஆலாவை இரட்சகனாகவும், இஸ்லாத்தை தீனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை ரஸூலாகவும் ஏற்றுக் கொள்வதைப் பொருந்திக் கொண்டோம், என்று கூறினால் (கியாமத் நாளில்) அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹுதஆலா வின் மீது கடமையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஒரு ஸஹாபி (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மற்றோர் அறிவிப்பில், இந்த துஆவைக் காலையிலும், மாலையிலும் மூன்று முறை ஓதவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
(அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்)
٢٢٧– عَنْ أَبِي الدَّرْدَاءِ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلّي عَلَيَّ حِينَ يُصْبِحُ عَشْرَا وَحِينَ يُمْسِي عَشْرَا أَدْرَكَتْهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ.
رواه الطبراني باسنادين واسناد احدهمَا جيد ورجاله وثقوا مجمع الزوائد:١٠ /١٦٣
227.”எவர் காலை, மாலையில் பத்து முறை என் மீது ஸலவாத் சொல்வாரோ, அவருக்கு கியாமத் நாளன்று என்னுடைய பரிந்துரை வந்தடையும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٢٨– عَنْ الْحَسَنِؒ قَالَ: قَالَ سَمُرَةُ بْنُ جُنْدُبٍ: أَلاَ أُحَدِّثُكَ حَدِيثاً سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ ﷺ مِرَارًا وَمِنْ أَبِي بَكْرٍ مِرَارًا وَمِنْ عُمَرَ مِرَارًا قُلْتُ: بَلَي قَالَ: مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَي: اَللّهُمَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنْتَ تَهْدِينِي وَأَنْتَ تُطْعِمُنِي وَأَنْتَ تَسْقِينِي وَأَنْتَ تُمِيتُنِي وَأَنْتَ تُحْيِينِي لَمْ يَسْأَلِ اللهَ شَيْئاً إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ قَالَ عَبْدُ اللهِ بْنُ سَلاَمٍ كَانَ مُوسَيؑ يَدْعُو بِهِنَّ فِي كُلَّ يَوْمٍ سَبْعَ مِرَارٍ فَلاَ يَسْأَلُ اللهَ شَيْئاً إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ.
رواه الطبراني في الاوسط باسناد حسن مجمع الزوائد: ١٠/١٦٠
228.ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் நபி (ஸல்) அவர்களிடம் பல முறையும், ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பலமுறையும், ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களிடம் பலமுறையும் கேட்ட ஹதீஸை உமக்குக் கூறவா?” என்று ஹஜ்ரத் ஸமுரத்இப்னு ஜன்துப் (ரலி) அவர்கள் வினவினார்கள், “அவசியம் கூறுங்கள்‘ என்றேன். “எவர் காலையிலும், மாலையிலும், (اَللّهُمَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنْتَ تَهْدِينِي وَأَنْتَ تُطْعِمُنِي وَأَنْتَ تَسْقِينِي وَأَنْتَ تُمِيتُنِي وَأَنْتَ تُحْيِينْي) யால்லாஹ்! நீயே என்னைப் படைத்தாய், நீயே எனக்கு நேர்வழியை வழங்குகிறாய், நீயே எனக்கு உணவளிக்கிறாய், நீயே எனக்கு நீர் புகட்டுகிறாய், நீயே என்னை மரணிக்கச் செய்வாய். நீயே என்னைத் திரும்ப உயிர் கொடுத்து எழுப்புவாய்‘ என்ற துஆவை ஓதி, பிறகு அல்லாஹுதஆலா விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹுதஆலா அவருக்கு அதை நிச்சயம் கொடுப்பான்” என்று கூறினார்கள். மேலும் “ஹஜ்ரத் மூஸா (அலை) அவர்கள் தினமும் ஏழுமுறை இக்கலிமாக்களைக் கூறி துஆச் செய்துவந்தார்கள். எனவே, அவர்கள் எதை அல்லாஹுதஆலா விடம் கேட்டு வந்தார்களோ, அதை அல்லாஹுதஆலா அவர்களுக்குக் கொடுத்து வந்தான்” என்று ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٢٩– عَنْ عَبْدِ اللهِ بْنِ غَنَّامِ نِ الْبَيَاضِيِّ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: اَللّهُمَّ! مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ فَمِنْكَ وَحْدَكَ لاَشَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ فَقَدْ أَدَّي شُكْرَ يَوْمِهِ وَمَنْ قَالَ مِثْلَ ذلِكَ حِينَ يُمْسِي فَقَدْ أَدَّي شُكْرَ لَيْلَتِهِ.
رواه ابوداؤد باب مَايَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٧٣ وفي رواية للنسائي بزيادة: أَوْ بِأَحَدٍ مِّنْ خَلْقِكَ بدون ذكر المساء في عمل اليوم والليلة رقم:٧
229.( اَللّهُمَّ! مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ فَمِنْكَ وَحْدَكَ لاَشَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْر) ‘யால்லாஹ்! இன்று காலையில் எனக்கோ, மற்ற படைப்பினங்களுக்கோ எந்த பாக்கியங்கள் கிடைத்தனவோ அவை தனித்தவனான உன்னிடமிருந்தே கிடைக்கப் பெற்றன. உனக்கு யாரும் இணை இல்லை, உனக்கே எல்லாப் புகழும் சொந்தமானது. எல்லா நன்றிகளும் உனக்கே உரியன‘ என்ற துஆவை எவர் காலையில் ஓதுகிறாரோ அவர் அன்றைய பகல் முழுவதும் கிடைத்த பாக்கியங்களுக்கு நன்றி செலுத்திவிட்டார். எவர் மாலையில் இந்த துஆவை ஓதுகிறாரோ அவர் இரவினுடைய அனைத்து பாக்கியங்களுக்கும் நன்றி செலுத்திவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஃ இப்னு ஙன்னாம் பயாஜீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத், நஸாயீ)
٢٣٠– عَنْ أَنَسِ بْنِ مَالكٍ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ أَوْ يُمْسـِي: اَللّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللهُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ أَعْتَقَ اللهُ رُبْعَهُ مِنَ النَّارِ فَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللهُ نِصْفَهُ وَمَنْ قَالَهَا ثَلاَثاً أَعْتَقَ اللهُ ثَلاَثَةَ أَرْبَاعِهِ فَإِنْ قَالَهَا أَرْبَعاً أَعْتَقَهُ اللهُ مِنَ النَّارِ.
رواه ابوداؤد باب مَايَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٦٩
230.( اَللّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللهُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ) “யால்லாஹ், நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னுடைய அடியாரும் உன்னுடைய தூதரும் ஆவார்கள் என்பதற்கு, நான் உன்னையும், உன்னுடைய அர்ஷைச் சுமப்பவர்களையும், உன்னுடைய மலக்குகளையும், உன்னுடைய அனைத்துப் படைப்புகளையும் சாட்சிகளாக்கிய நிலையில் நான் காலையை அடைந்தேன்” என்ற கலிமாக்களை யார் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு தடவை கூறினால், அல்லாஹுதஆலா அவருடைய உடலின் நான்கிலொரு பகுதியை நரகிலிருந்து விடுதலை செய்துவிடுகிறான். இரண்டு தடவை யாரேனும் ஓதினால் அல்லாஹுதஆலா அவரது உடலின் பாதியை நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்கிறான். மூன்று தடவை யார் கூறினாரோ அவரது உடலின் முக்கால் பகுதியை அல்லாஹுதஆலா நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்கிறான். நான்கு முறை யார் ஓதினாரோ அவருடைய முழு உடலையும் அல்லாஹுதஆலா நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்துவிடுகிறான்”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٣١– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ َؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ لِفَاطِمَةَ: مَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ بِهِ أَنْ تَقُولِي إِذَا أَصْبَحْتِ وَإِذَا أَمْسَيْتِ: يَاحَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلاَ تَكِلْنِي إِلَي نَفْسِي طَرْفَةَ عَيْنٍ.
رواه الحاكم وقَالَ: هذا حديث صحيح علي شرط الشيخين ولم يخرجاه ووافقه الذهبي:١/٥٤٥
231.”என் உபதேசத்தைக் கவனமாகக் கேட்பீராக! நீர் காலையிலும், மாலையிலும் (يَاحَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلاَ تَكِلْنِي إِلَي نَفْسِي طَرْفَةَ عَيْنٍ) என்றென்றும் உயிர் வாழ்பவனே! வானம், பூமி, படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனே! உன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன். என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக! கண் இமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்து விடாதே! என்ற துஆவை ஓதி வாரும்!” என்று நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்குச் சொன்னார்கள் என ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٣٢– عَنْ أَبِي هُرَيْرَةَ َؓ أَنَّهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِيَ الْبَارِحَةَ! قَالَ: أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ تَضُرَّكَ.
رواه مسلم باب في التعوذ مِنْ سوء القضاء …رقم:٦٨٨٠
232.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “யாரஸூலல்லாஹ்! நேற்றிரவு என்னைத் தேள் கொட்டியதால் மிகவும் வேதனையடைந்தேன்” என்று சொன்னார். “நீர் மாலை நேரத்தில் (أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ) அல்லாஹுதஆலா வின் அனைத்து (பலன், குணம் தரும்) கலிமாக்களின் பொருட்டால் அவனது அனைத்துப் படைப்புகளின் தீங்கிலிருந்தும் நான் காவல் தேடுகிறேன், என்ற துஆவை ஓதியிருந்தால் தேள் தீங்கிழைத்திருக்காது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- “அல்லாஹுதஆலா வின் கலிமாக்கள் என்பதன் பொருள், சங்கை மிக்க குர்ஆனாகும்” என ஆலிம்களில் சிலர் கூறுகின்றனர்.(மிர்காத்)
٢٣٣– عَنْ أَبِي هُرَيْرَةَ َؓ عَنِ النبَّيِ ﷺ قَالَ: مَنْ قَالَ حِينَ يُمْسِي ثَلاَثَ مَرَّاتٍ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ حُمَةٌ تِلْكَ اللَّيْلَةَ قَالَ سُهَيْلٌؒ: فَكَانَ أَهْلُنَا تَعَلَّمُوهَا فَكَانُوا يَقُولُونَهَا كُلَّ لَيْلَةٍ فَلُدِغَتْ جَارِيَةٌ مِنْهُمْ فَلَمْ تَجِدْ لَهَا وَجَعاً.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن باب دعاء اعوذ بكلمَات الله التامَات ….رقم:٣٦٠٤
233.( أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ) யார் மாலை நேரத்தில் மூன்று முறை கூறுவாரோ, அன்றைய இரவில் எந்த விஷப்பிராணிகளும் அவருக்குத் தீங்கு செய்யாது” என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஹஜ்ரத் ஸுஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “எங்களுடைய வீட்டார் இந்த துஆவை மனனம் செய்து கொண்டு தினமும் இரவில் ஓதிவந்தனர். ஒரு நாள் இரவு ஒரு பெண் குழந்தையை விஷஜந்து ஒன்று கடித்துவிட்டது, அதன் வலியை அக்குழந்தை சிறிதும் உணரவில்லை”.
(திர்மிதீ)
٢٣٤– عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ َؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ: أَعُوذُ بِاللهِ السَّمِيعِ الْعِلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَقَرَأَ ثَلاَثَ آيَاتٍ مِنْ آخِرِ سُورَةِ الْحَشْرِ وَكَّلَ اللهُ بِهِ سَبْعِينَ اَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ حَتَّي يُمْسِيَ وَإِنْ مَاتَ فِي ذلِكَ الْيَوْمِ مَاتَ شَهِيدًا وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي كَانَ بِتِلْكَ الْمَنْزِلَةِ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن غريب باب في فضل قراءة اخر سورة الحشر رقم: ٢٩٢٢
234.”எவரொருவர் காலையில் மூன்று முறை (أَعُوذُ بِاللهِ السَّمِيعِ الْعِلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ) என்று சொல்லியபின் சூரா ஹஷ்ரின் கடைசி மூன்று ஆயத்துகளை ஓதுவாரோ, அல்லாஹுதஆலா அவருக்காக எழுபதினாயிரம் மலக்குகளை நியமிக்கிறான். அவர்கள் மாலை வரை அவர் மீது ரஹ்மத்தைப் பொழிகின்றனர். அன்றைய தினத்தில் அவர் மரண மடைந்துவிட்டால், ஷஹீதாக மரணிப்பார். இதேபோல எவர் மாலையில் இதை ஓதுவாரோ, அவருக்காக அல்லாஹுதஆலா எழுபதினாயிரம் மலக்குகளை நியமிக்கிறான். அவர்கள் சுப்ஹு வரை அவர்மீது ரஹ்மத்தைப் பொழிகின்றனர். அன்றைய இரவில் அவர் மரணித்தால் ஷஹீதாக மரணிப்பார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மஃகிலுப்னு யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٣٥–عَنْ عُثْمَانَ يَعْنِي ابْنَ عَفَّانٍ َؓ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِﷺ يَقُولُ: مَنْ قَالَ بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي اْلاَرْضِ وَلاَفِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةَ بَلاَءٍ حَتَّي يُصْبِحَ ومَنْ قَالَها حِينَ يُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلاَءٍ حَتَّي يُمْسِيَ.
رواه ابوداؤد باب مَا يَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٨٨
235.( بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي اْلاَرْضِ وَلاَفِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ) “எவனது பெயருடன் வானன் பூமியிலுள்ள எப்பொருளும் தீங்கிழைக்காதோ அத்தகைய அல்லாஹ்வின் பெயரால் (நாங்கள் காலை அல்லது மாலையை அடைந்தோம்) அவன் (அனைத்தையும்) கேட்பவன், அறிந்தவன்” என்று ஒருவர் மாலையில் மூன்று முறை ஓதினால் காலை வரையிலும், அவ்வாறே காலையில் மூன்று முறை ஓதினால் மாலை வரையிலும் அவரை எதிர்பாராமல் வரும் தீங்குகள் நெருங்காது”, என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٣٦– عَنْ أَبِي الدَّرْدَاءِ َؓ قَالَ: مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَي: حَسْبِيَ اللهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَبْعَ مَرَّاتٍ كَفَاهُ اللهُ مَا أَهَمَّهُ صَادِقاً كَانَ بِهَا أَوْ كَاذِباً.
رواه ابوداؤد باب مَا يَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٨١
236.( حَسْبِيَ اللهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيم) “எனக்கு அல்லாஹுதஆலாவே போதுமானவன், அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் மீதே நான் நம்பிக்கை வைத்தேன். அவனே மகத்தான அர்ஷின் அதிபதி‘ என்ற துஆவை ஏழு முறை ஒருவர் காலையிலும் மாலையிலும் நம்பிக்கையுடன் சொன்னாலும் அல்லது நம்பிக்கை இல்லாமல் சொன்னாலும், அல்லாஹுதஆலா அவருக்கு (இம்மை, மறுமையின்) அனைத்துக் கவலைகளிலிருந்தும் பாதுகாப்புத் தருகிறான்‘ என்று ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٣٧– عَنِ ابْنِ عُمَرَ َؓ قَالَ: لَمْ يَكُنْ رَسُولُ اللهِ ﷺ يَدَعُ هؤُلاَءِ الدَّعَوَاتِ حِينَ يُمْسِي وحِينَ يُصْبِحُ: اَللّهُمَّ! إِنَّيْ أَسْاَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ اَللّهُمَّ! إِنَّيْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي اَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي اَللّهُمَّ! احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي.
رواه ابوداؤد باب مَا يَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٧٤
237.( اَللّهُمَّ! إِنَّيْ أَسْاَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ اَللّهُمَّ! إِنَّيْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي اَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي اَللّهُمَّ! احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي) யால்லாஹ்! நான் உன்னிடம் இம்மையிலும், மறுமையிலும் ஆரோக்கியத்தைக் கேட்கிறேன். யால்லாஹ்! நான் உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். இன்னும் எனது தீனில், எனது உலக வாழ்வில், எனது குடும்பத்தினரில், எனது பொருளில் ஆரோக்கியத்தையும், அமைதியையும், வேண்டுகிறேன். யால்லாஹ்! நீ என்னுடைய குறைகளை மறைத்து விடுவாயாக! அச்சமூட்டும் காரியங்களை விட்டும் நிம்மதியைத் தருவாயாக!. யால்லாஹ்! நீ எனக்கு முன் புறத்திலிருந்தும், பின் புறத்திலிருந்தும், வலப் புறத்திலிருந்தும், இடப் புறத்திலிருந்தும், மேலிருந்தும் பாதுகாப்பாயாக! கீழிலிருந்து எதிர்பாராமல் திடீரென நான் அழிந்து விடுவதை விட்டும் உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்பு வேண்டுகிறேன்‘ என்ற இந்த துஆக்களை நபி (ஸல்) அவர்கள் காலையிலும், மாலையிலும் விடாமல் ஓதி வந்தார்கள் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(அபூதாவூத்)
٢٣٨– عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ َؓ عَنِ النَّبِيِّ ﷺ: سَيِّدُ اْلاِسْتِغْفَارِ أَنْ يَقُولَ: اَللّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَي عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْلِي إِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ قَالَ: وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِناً بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ.
رواه البخاري باب افضل الاستغفار رقم:٦٣٠٦
238.”ஸய்யிதுல் இஸ்திஃபார் (மன்னிப்புக் கேட்க மிகச் சிறந்த வழி) இது தான். (اَللّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَي عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْلِي إِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ) யால்லாஹ்! நீயே என்னுடைய இரட்சகன், உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய், நான் உன்னுடைய அடிமை. என்னால் முடிந்த அளவு உன்னிடம் செய்த ஒப்பந்தம், வாக்குறுதியின் மீது இருக்கிறேன். நான் செய்த தீய காரியத்திலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன், நீ என் மீது பொழிந்த பாக்கியங்களை ஒப்புக் கொள்கிறேன், எனது பாவங்களையும் ஒப்புக் கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனேன்றால் உன்னைத்தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது”. ஒருவர் மனஉறுதியுடன் பகலில் ஏதேனுமொரு நேரத்தில் இக்கலிமாக்களை ஓதி அன்று மாலைக்குள் அவர் மரணித்துவிட்டால் அவர் சுவர்க்கவாசிகளில் ஒருவராய் இருப்பார். அதேபோல் மாலையில் ஏதேனுமொரு நேரத்தில் இக்கலிமாக்களை ஒருவர் சொல்லி சுப்ஹுக்கு முன் அவர் மரணித்துவிட்டால் சுவனவாசிகளில் ஒருவராய் இருப்பார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٣٩– عَنِ ابْنِ عَبَّاسٍ َؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ (فَسُبْحنَ اللهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ وَلَهُ الْحَمْدُ فِي السَّمَوَاتِ وَاْلاَرْضِ وَعَشِيّاً وَّحِينَ تُظْهِرُونَ۞) إِلَي (وَكَذلِكَ تُخْرَجُونَ۞). (الروم :١٩–١٧) أَدْرَكَ مَا فَاتَهُ فِي يَوْمِهِ ذلِكَ وَمَنْ قَالَهُنَّ حِينَ يُمْسِي أَدْرَكَ مَافَاتَهُ فِي لَيْلَتِهِ.
رواه ابوداؤد باب مَايَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٧٦
239.”(சூரா ரூமில் உள்ள) (فَسُبْحنَ اللهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ وَلَهُ الْحَمْدُ فِي السَّمَوَاتِ وَاْلاَرْضِ وَعَشِيّاً وَّحِينَ تُظْهِرُونَ) நீங்கள் மாலையை அடையும் போதும், காலையை அடையும் போதும் அல்லாஹுதஆலாவைப் பரிசுத்தப்படுத்தித் துதியுங்கள். வானம், பூமி அனைத்திலும் புகழனைத்தும் அவனுக்கே! நீங்கள் மாலையிலும், நடுப்பகலிலும், (அல்லாஹுதஆலா வின் பரிசுத்தத்தைக் கூறுங்கள்) அவன் உயிருள்ளதை உயிரற்றதிலிருந்து வெளிப்படுத்துகிறான். உயிரற்றதை உயிருள்ளதிலிருந்து வெளிப் படுத்துகிறான். மேலும் அவன் பூமி இறந்த (காய்ந்த) பிறகு உயிருள்ளதாக (செழிப்பானதாக) ஆக்குகிறான். இதைப்போல நீங்கள் (கியாமத் நாளன்று கப்ருகளிலிருந்து) வெளியாக்கப்படுவீர்கள்” (அர்ரூம்: 30:17,18,19) என்ற ஆயத் வரை எவர் காலை நேரத்தில் ஓதுவாரோ, அவர் அன்றைய பகலில் விடுபட்ட (அமல்களின்) நன்மைகளைப் பெற்றுக் கொள்வார். எவர் மாலையில் இந்த ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் இரவில் விடுபட்ட அமல்களின் நன்மைகளைப் பெற்றுக் கொள்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٤٠– عَنْ أَبِي مَالِكِ نِ اْلاَشْعَرِيِّ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَهُ فَلْيَقُلْ: اَللّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَي اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا ثُمَّ لْيُسَلِّمْ عَلَي أَهْلِهِ.
رواه ابوداؤد باب مَايَقُولُ الرجل اذا دخل بيته رقم:٥٠٩٦
240.”ஒருவர் தம் வீட்டில் நுழையும் போது, (اَللّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَي اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا) யால்லாஹ்! வீட்டினுள் நுழைவது, மற்றும் வீட்டிலிருந்து வெளியேறுவதின் நலவை உன்னிடம் நான் கேட்கிறேன். நான் வீட்டில் நுழைவதையும் வெளியேறுவதையும் என்னுடைய நன்மைக்குக் காரணமாக ஆக்குவாயாக! அல்லாஹுதஆலா வின் பெயராலேயே நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம் அல்லாஹுதஆலா வின் பெயராலேயே வீட்டைவிட்டு வெளியேறினோம். எங்கள் இரட்சகனாகிய அல்லாஹுதஆலா வின் மீதே நாங்கள் தவக்குல் (நம்பிக்கை) வைத்தோம்‘ என்ற துஆவை ஓதியபின், வீட்டாருக்கு ஸலாம் கூறிவிட்டு நுழையவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٤١– عَنْ جَابِرِ بنِ عَبْدِ اللهِ َؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ: لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَإِذَا لَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ طَعَامِهِ قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ.
رواه مسلم باب اداب الطعام والشراب واحكامهمَا رقم:٥٢٦٢
241.”ஒருவர் தம் வீட்டில் நுழைந்தால், தாம் நுழையும் போதும், சாப்பிடும் போதும் அல்லாஹுதஆலாவை திக்ரு செய்தால், “இங்கு உங்களுக்கு இரவு தங்கவும் இடமில்லை, இரவு உணவும் இல்லை‘ என்று ஷைத்தான் (தன் சகாக்களிடம்) கூறுகிறான். அவர் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹுதஆலாவை திக்ரு செய்யவில்லையென்றால், “இங்கு உங்களுக்குத் தங்க இடத்தையும், இரவு உணவையும் பெற்றுக் கொண்டீர்கள்!‘ என்று ஷைத்தான் (தன் சகாக்களிடம்) கூறுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٤٢– عَنْ أُمِّ سَلَمَةَ َؓ قَالَتْ: مَا خَرَجَ رَسُولُ اللهِ ﷺ مِنْ بَيْتِي قَطُّ إِلاَّ رَفَعَ طَرَفَهُ إِلَي السَّمَاءِ فَقَال: اَللّهُمَّ! إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ.
رواه ابوداؤد باب مَايَقُولُ اذا خرج مِنْ بيته رقم:٥٠٩٤
242.ஹஜ்ரத் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் எப்பொழுது என் வீட்டைவிட்டு புறப்பட்டாலும் வானத்தை நோக்கித் தம் பார்வையை உயர்த்தியவாறு, (اَللّهُمَّ! إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ) “யால்லாஹ்! நான் வழி தவறுவதை விட்டும், வழி தவற வைக்கப்படுவதை விட்டும், அல்லது நேர் வழியிலிருந்து சருகுவதை விட்டும், அல்லது நேர் வழியிலிருந்து சருக வைக்கப்படுவதை விட்டும், அல்லது நான் அநியாயம் செய்வதை விட்டும், அல்லது என் மீது அநியாயம் இழைக்கப்படுவதை விட்டும், அல்லது நான் அறிவீனமாக நடந்து கொள்வதை விட்டும், அல்லது அறிவீனமாக என்னுடன் நடந்து கொள்ளப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன், என்ற துஆவை ஓதுவார்கள்.
(அபூதாவூத்)
٢٤٣– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ يعَنْي إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ: بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَي اللهِ لاَحَوْلَ وَلاَقُوَّةَ إِلاَّ بِاللهِ يُقَالُ لَهُ: كُفِيْتَ وَوُقِيْتَ وَتَنَحَّي عَنْهُ الشَّيْطَانُ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن صحيح غريب باب مَاجاء مَايَقُولُ الرجل اذا خرج من بيته رقم:٣٤٢٦ وابوداؤد وفيه. يُقَالُ حِينَئِذٍ: هُدِيْتَ وَكُفِيْتَ وَوُقِيْتَ فَتَتَنَحَّي لَهُ الشَّيَاطِينُ فَيَقُولُ شَيْطَانٌ آخَرُ: كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ هُدِيَ وَكُفِيَ وَوُقِيَ. باب مَايَقُولُ اذا خرج من بيته رقم:٥٠٩٥
243. “ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது, (بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَي اللهِ لاَحَوْلَ وَلاَقُوَّةَ إِلاَّ بِاللهِ) (நான் அல்லாஹுதஆலா வின் பெயரைச் சொல்லி வெளியேறுகிறேன். நான் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன், தீமையில் இருந்து திரும்புவதும், நன்மையைச் செய்யச் சக்தி பெறுவதும் அல்லாஹ்வின் கட்டளையால் தான் முடியும் என்ற துஆவை ஓதினால், “உம்முடைய வேலை முடித்து வைக்கப்பட்டது, உம்மை எல்லாத் தீங்கிலிருந்தும் பாதுகாக்கப்பட்டுவிட்டது” என்று அவரிடம் ஒரு மலக்கு கூறுகிறார். ஷைத்தான் தோல்வியடைந்து அவரை விட்டும் தூரமாகி விடுகிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
இன்னோர் அறிவிப்பில்: அந்த நேரத்தில் (இந்த துஆவை ஓதிய பிறகு) அவரிடம், “உமக்கு முழுமையான வழி காட்டுதல் கிடைத்துவிட்டது, உம்முடைய வேலை முடிக்கப்பட்டுவிட்டது. நீர் பாதுகாக்கப்பட்டு விட்டீர்‘ என்று கூறப்படுகிறது. எனவே, ஷைத்தான்கள் அவரை விட்டுத் தூரமாகிவிடுகின்றனர், இன்னோரு ஷைத்தான் முந்திய ஷைத்தானிடம், “எவருக்கு வழிகாட்டுதல் கிடைத்துவிட்டதோ, எவரது வேலை முடித்து வைக்கப்பட்டதோ, அவர் மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்த முடியும்?’ என்று கூறுகிறான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அபூதாவூத்)
٢٤٤– عَنِ ابْنِ عَبَّاسٍ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ: لاَ إِلهَ إِلاَّ اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ لاَ إِلهَ إِلاَّ اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلهَ إِلاَّ اللهُ رَبُّ السَّموَاتِ وَرَبُّ اْلاَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ.
رواه البخاري باب الدعاء عَنْد الكرب رقم:٦٣٤٦
244.ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் சஞ்சலமுற்ற சமயத்தில், (لاَ إِلهَ إِلاَّ اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ لاَ إِلهَ إِلاَّ اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلهَ إِلاَّ اللهُ رَبُّ السَّموَاتِ وَرَبُّ اْلاَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ ) அல்லாஹுதஆலாவைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் மகத்தானவன், சகிப்புத்தன்மை உள்ளவன் (அடியார்களின் பாவங்களின் காரணமாக உடனடியாக தண்டிப்பதில்லை) அல்லாஹுதஆலாவைத் தவிர வணங்கத் தகுதியானவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் இரட்சகன். அல்லாஹுதஆலாவைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் வானங்கள், பூமிகள் மற்றும் சிறப்பிக்கப்பட்ட அர்ஷின் இரட்சகன்” என்று ஓதி வந்தார்கள்.
(புகாரி)
٢٤٥– عَنْ أَبِي بَكْرَةَ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: دَعَوَاتُ الْمَكْرُوبِ: اَللّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلي نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ.
رواه ابوداؤد باب مَايَقُولُ اذا اَصْبَحَ رقم:٥٠٩٠
245.”துயரத்தில் சிக்கியவர் இந்த துஆவை ஒதவும், (للّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلي نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ) “யால்லாஹ்! நான் உன்னுடைய அருளை ஆதரவு வைக்கிறேன். கண் சிமிட்டும் நேரங்கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்துவிடாதே! என்னுடைய சகல நிலமைகளையும் சீராக்குவாயாக! உன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்தவன் எவருமில்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٤٦– عَنْ أُمِّ سَلَمَةَ َؓ زَوْجِ النَّبِيِّ ﷺ تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَا مِنْ عَبْدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ: إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اَللّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْها إِلاَّ أَجَرَهُ اللهُ فِي مُصِيبَتِهِ وَأَخْلَفَ لَهُ خَيْرًا مِنْهَا قَالَت: فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَةَؓ قُلْتُ كَمَا أَمَرَنِي رَسُولُ اللهِ ﷺ فَأَخْلَفَ اللهُ لِي خَيْرًا مِنْهُ، رَسُولَ اللهِ ﷺ.
رواه مسلم باب مايقال عند المصيبة رقم:٢١٢٧
246.ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாகக் அவர்களின் மரியாதைக்குரிய மனைவியார் ஹஜ்ரத் உம்மு ஸலமா (ரலி) அவர்கள், கூறுகிறார்கள்: “எந்த அடியார் துயரம் ஏற்பட்டபோது (إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اَللّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْها ) நிச்சயமாக நாங்கள் அல்லாஹுதஆலாவுக்காகவே இருக்கிறோம். மேலும் அல்லாஹுதஆலா விடமே திரும்பச் செல்பவர்களாக இருக்கிறோம். யால்லாஹ்! என்னுடைய துன்பத்தில் எனக்கு கூலியைத் தருவாயாக! என்னிடமிருந்து எதை நீ எடுத்துக்கொண்டாயோ அதைவிடச் சிறந்ததை எனக்குத் தருவாயாக!‘ என்ற துஆவை ஓதினால், அல்லாஹுதஆலா அவரது துயரத்தில் அவருக்கு நன்மையைத்தருகிறான். மேலும் அவர் இழந்த அந்தப் பொருளுக்குப் பகரமாக அதைவிட மேலானதைத் தருகிறான்‘. ஹஜ்ரத் உம்முஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஹஜ்ரத் அபூஸலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நபி (ஸல்) அவர்கள் சொன்னபடி துஆச் செய்தேன். அல்லாஹுதஆலா எனக்கு அபூஸலமாவை விடச் சிறந்தவரைத் தந்துவிட்டான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை எனக்கு கணவராக்கினான்”.
(முஸ்லிம்)
٢٤٧– عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ َؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ (فِي رَجُلٍ غَضِبَ عَلَي رَجُلٍ آخَرَ) لَوْ قَالَ: أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ ذَهَبَ عَنْه مَا يَجِدُ.
(وهو بعض الحديث) رواه البخاري باب قصة ابليس وجنوده رقم:٣٢٨٢
247.ஹஜ்ரத் ஸுலைமானிப்னு ஸுரத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் மீது கோபப்பட்ட நபரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் பொழுது, “அவர் (أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ) என்று கூறியிருந்தால் அவர் கோபம் மறைந்திருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(புகாரி)
٢٤٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ نَزَلَتْ بِهِ فَاقَةٌ فَأَنْزَلَهَا بِالنَّاسِ لَمْ تُسَدَّ فَاقَتُهُ وَمَنْ نَزَلَتْ بِهِ فَاقَةٌ فأَنْزَلَهَا بِاللهِ فَيُوشِكُ اللهُ لَهُ بِرِزْقٍ عَاجِلٍ أَوْ آجِلٍ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن صحيح غريب باب مَاجاء في الهم في الدنيا وحبها رقم:٢٣٢٦
248.”ஒருவருக்கு வறுமை வந்து, அவ்வறுமை நீங்க அவர் மக்களிடம் சென்று யாசித்தால் அவருடைய வறுமை நீங்காது. அதை நீக்க அவர் அல்லாஹுதஆலா விடம் முறையிட்டால், அல்லாஹுதஆலா அவருக்கு விரைவில் அல்லது சற்றுத் தாமதமாக வறுமையை நீக்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிடுவான்“‘ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٤٩– عَنْ أَبِي وَائِلٍؒ عَنْ عَلِيٍّ َؓ أَنَّ مُكَاتَباً جَاءَهُ فَقَالَ: إِنِّي قَدْ عَجَزْتُ عَنْ كِتَابَتِي فَأَعِنِّي قَالَ: أَلاَ أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللهِ ﷺ؟ لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صِيرٍ دَيْناً أَدَّاهُ اللهُ عَنْكَ قَالَ: قُلْ: اَللّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن غريب احاديث شتي مِنْ ابواب الدعوات رقم:٣٥٦٣
249.ஹஜ்ரத் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு முகாதப் (அடிமை) ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களின் சமூகத்திற்கு வந்து, (நான் விடுதலை பெறுவதற்கு) “முடிவு செய்யப்பட்ட தொகையை என்னால் கொடுக்க முடியவில்லை. தாங்கள் இந்த காரியத்தில் எனக்கு உதவவேண்டும்‘ என்றார், “நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத்தந்த கலிமாக்களை உமக்குக் கற்றுத்தரவா? உமக்கு (யமன் தேசத்து) ஸீர் மலையளவு கடன் இருந்தாலும் அல்லாஹுதஆலா உமக்காக அக்கடனை நிறைவேற்றிவிடுவான். (اَللّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ ) யால்லாஹ்! உனது ஹலாலான ரிஸ்கை எனக்குத் தந்து ஹராமை விட்டும் என்னைக் காப்பாயாக! மேலும் உன் பேரருளால் என்னை நீயல்லாதவர்களைவிட்டும் தேவையற்றவனாக ஆக்குவாயாக!” என ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- முகாதப் என்பது ஒருவர் தன் அடிமையிடம், “இவ்வளவு தொகையை இவ்வளவு காலத்திற்குள் நீ கொடுத்துவிட்டால் நீ விடுதலை‘ என்று கூறப்பட்ட அடிமைக்கு முகாதப் எனப்படும். இந்த ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்ட தொகைக்கு “பத்லே கிதாபத்” (விடுதலை அடைவதற்குரிய தொகை) எனப்படும்.
٢٥٠– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّ َؓ قَالَ: دَخَلَ رَسُولُ اللهِ ﷺ: ذَاتَ يَوْمِ نِ الْمَسْجِدَ فَإِذَا هُوَ بِرَجُلٍ مِنَ اْلاَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو أُمَامَةَ فَقَالَ: يَاأَبَا أُمَامَةَ! مَالِي أَرَاكَ جَالِساً فِي الْمَسْجِدِ فِي غَيْرِ وَقْتِ الصَّلاَةِ؟ قَالَ: هُمُومٌ لَزِمَتْنِي وَدُيُونٌ يَارَسُولَ اللهِﷺ قَالَ: أَفَلاَ أُعَلِّمُكَ كَلاَماً إِذَا قُلْتَهُ أَذْهَبَ اللهُ هَمَّكَ وَقَضَي عَنْكَ دَيْنَكَ؟ قَالَ: قُلْتُ: بَلَي يَارَسُولَ اللهِﷺ قَالَ: قُلْ: إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ: اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبُنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ قَالَ: فَفَعَلْتُ ذلِكَ فَأَذْهَبَ الله هَمِّي وَقَضَي عَنِّي دَيْنِي.
رواه ابوداؤد باب في الاستعاذة رقم:١٥٥٥
250.ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுக்குள் வந்தபோது அபூஉமாமா என்னும் அன்ஸாரித் தோழர் இருக்கக் கண்டார்கள். “அபூஉமாமா! தொழுகை அல்லாத நேரத்தில் பள்ளியில் (தன்னந்தனியாக) உட்கார்ந்திருக்கக் காண்கிறேனே! என்ன செய்தி?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “யாரஸூலல்லாஹ், என்னைக் கவலைகளும், கடன்களும் சூழ்ந்துள்ளன‘ என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள். “உமக்கு ஒரு துஆவைக் கற்றுத்தரவா? அதை நீர் ஒதினால் அல்லாஹுதஆலா உமது கவலையை நீக்கிவிடுவான், கடனை அடைத்துவிடுவான்“என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், “யாரஸூலல்லாஹ், அவசியம் கற்றுத் தாருங்கள்‘, என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் வேண்டினார்கள். “நீர் காலையிலும், மாலையிலும் (اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبُنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ) ) “யால்லாஹ்! நான் கவலை, துக்கத்தை விட்டும் உன்னைக் கொண்டு பாதுகாப்பு வேண்டுகிறேன், இயலாமை, சோம்பலைவிட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், கஞ்சத்தனம், கோழைத்தனத்தை விட்டும் பாதுகாப்பு வேண்டுகிறேன், நான் கடன் சுமையில் மூழ்குவதைவிட்டும், மக்கள் என் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் உன்னுடைய பாதுகாப்பை வேண்டுகிறேன்” என்ற துஆவை ஓதி வருவீராக! என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நான் காலை, மாலையில் இந்த துஆவை ஓதி வந்தேன். அல்லாஹுதஆலா என் கவலையை நீக்கினான், என் கடன் அனைத்தையும் நிறைவேற்றினான்‘ என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(அபூதாவூத்)
٢٥١– عَنْ أَبِي مُوسَي اْلاَشْعَرِيِّ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ قَالَ اللهُ لِمَلاَئِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي؟ فيَقُولُونَ: نَعَمْ فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ فَيَقُولُونَ: نَعَمْ فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي؟ فَيَقُولُونَ حَمِدَكَ وَاسْتَرْجَعَ فَيَقُولُ اللهُ: اِبْنُوا لِعَبْدِي بَيْتاً فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ.
رواه الترمذي وقَالَ: هذا حديث حسن غريب باب فضل المصيبة اذا احتسب رقم:١٠٢١
251.”ஒருவரின் குழந்தை இறந்ததும் அல்லாஹுதஆலா மலக்குகளிடம், “நீங்கள் என்னுடைய அடியானின் குழந்தையை (உயிரை)க் கைப்பற்றி வந்தீர்களா?” எனக் கேட்கிறான், அவர்களும் “ஆம்” என்கிறார்கள். “நீங்கள் என் அடியானின் இதயத் துண்டினை (உயிரை)க் கைப்பற்றி வந்தீர்களா?” என அல்லாஹுதஆலா கேட்கிறான், அவர்கள் “ஆம்” என்கின்றனர். அதற்கு, “என் அடியான் என்ன சொன்னான்?” என அல்லாஹுதஆலா கேட்பான், “உன்னைப் புகழ்ந்தான், மேலும் (إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ) என்று கூறினான்” என மலக்குகள் கூறுவார்கள். அல்லாஹுதஆலா மலக்குகளிடம், “என் அடியானுக்கு சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுங்கள், அதற்குப் புகழ் மாளிகை எனப் பெயர் வையுங்கள்” என்று கட்டளையிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥٢– عَنْ بُرَيْدَةَ َؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَي الْمَقَابِرِ فَكَانَ قَائِلُهُمْ يَقُولُ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ المُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ.
رواه مسلم باب مَا يقَالَ عَنْد دخول القبور والدعاء لاهلها رقم:٢٢٥٧
252.கப்ருஸ்தானுக்குச் சென்றால், (اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ المُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ ) “இவ்வூரில் வசிக்கும் முஃமின்கள், முஸ்லிம்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் விரைவில் வந்து சேர இருக்கிறோம். அல்லாஹுதஆலா விடம் எங்களுக்கும் உங்களுக்கும் ஆரோக்கியத்தைத் தர நாங்கள் இறைஞ்சுகிறோம்” என்று சொல்லவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாப் பெருமக்களுக்கு (ரலி) கற்றுத் தந்தார்கள்” என்று ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٥٣– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ دَخَلَ السُّوقَ فَقَالَ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ كَتَبَ اللهُ لَهُ اَلْفَ اَلْفِ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ اَلْفَ اَلْفِ سَيِّئَةٍ وَرَفَعَ لَهُ اَلْفَ اَلْفِ دَرَجَةٍ.
رواه الترمذي وقَالَ: هذا حديث غريب باب مَايَقُولُ اذا دخل السوق رقم:٣٤٢٨ وقَالَ الترمذي في رواية له مكان. وَرَفَعَ لَهُ اَلْفَ اَلْفِ دَرَجَةٍ وَبََنَي لَهُ بَيْتاً فِي الْجَنَّةِ. رقم:٣٤٢٩
253.”ஒருவர் கடைவீதியில் நுழையும்போது, (لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ) “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை இல்லை. அவனுக்கே ஆட்சி சொந்தமானது, அவனுக்கே அனைத்துப் புகழும்!. அவன் மரித்தவர்களை உயிர்ப்பிப்பான், அவனே உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்வான், அவன் உயிருடன் இருப்பவன்; மரணமடையமாட்டான். அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி பெற்றவன்” என்று கூறுவாரானால், அல்லாஹுதஆலா அவருக்குப் பத்து லட்சம் நன்மைகளை எழுதுகின்றான். அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான். அவருக்குப் பத்து லட்சம் தகுதிகளை உயர்த்துகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.பத்து லட்சம் தகுதிகள் உயர்த்தப்படும் என்பதற்குப் பதில் சுவனத்தில் ஒரு மாளிகை அமைக்கப்படும் என இன்னோர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(திர்மிதீ)
٢٥٤– عَنْ أَبِي بَرْزَةَ اْلاَسْلَمِيِّ َؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ بِأَخَرَةٍ إِذَا أَرَادَ أَنْ يَقُومَ مِنَ الْمَجْلِسِ: سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَّ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ فَقَالَ رَجُلٌ: يَارَسُولَ اللهﷺ إِنَّكَ لَتَقُولُ قَوْلاً مَا كُنْتَ تَقُولُهُ فِيمَا مَضَي؟ قَالَ: كَفَّارَةٌ لِّمَا يَكُونُ فِي الْمَجْلِسِ.
رواه ابوداؤد باب في كفارة المجلس رقم:٤٨٥٩
254.ஹஜ்ரத் அபூபர்ஸா அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் இறுதிக்காலத்தில் (سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَّ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ ) யால்லாஹ்! நீ தூய்மையானவன். நான் உன் புகழைக் கூறுகிறேன், உன்னைத்தவிர வணங்கத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்று சாட்சி சொல்கிறேன். உன்னிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன், உன்னிடத்தில் தவ்பாச் செய்கிறேன்‘ என்று சபையிலிருந்து எழுவதற்கு முன் கூறிவந்தார்கள். “யாரஸூலல்லாஹ்! தாங்கள் ஒரு துஆவை ஓதும் வழக்கத்தை கொண்டுள்ளீர்கள், இதற்கு முன் இதை ஓதியதில்லையே?” என ஒருவர் கேட்டதற்கு, “இந்த துஆ சபைகளில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரம் ஆகும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
٢٥٥– عَنْ جُبَيْرٍ بْنِ مُطْعِمٍ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ فَقَالَهَا فِي مَجْلِسِ ذِكْرٍ كَانَتْ كَالطَّابِعِ يُطْبَعُ عَلَيْهِ وَمَنْ قَالَهَا فِي مَجْلِسِ لَغْوٍ كَانَتْ كَفَّارَةً لَهُ.
رواه الحاكم وقَالَ: هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذهبي:١ /٥٣٧
255.ஒருவர் திக்ருடைய சபையின் (கடைசியில்) (سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ) என்ற துஆவை ஓதினால், இந்த துஆ (முக்கியமான காகிதங்கள் மீது) முத்திரை இடப்படுவதைப் போன்று அந்த திக்ருடைய சபைக்கு முத்திரை. இந்த சபை அல்லாஹுதஆலா விடம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது, அதனுடைய நன்மையும் கூலியும் அல்லாஹ்விடம் பாதுகாக்கப்படுகின்றன, வீண் பேச்சுக்கள் நடைபெற்ற சபையில் இந்த துஆவை ஓதுவது அந்த சபையில் நிகழ்ந்த குற்றத்திற்குப் பரிகாரமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜபைரிப்னு முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٥٦– عَنْ عَائِشَةَ َؓ قَالَتْ: أُهْدِيَتْ لِرَسُولِ اللهِ ﷺ شَاةٌ فَقَالَ: اِقْسِمِيهَا وَكَانَتْ عَائِشَةَ َؓ إِذَا رَجَعَتِ الْخَادِمُ تَقُولُ: مَاقَالُوا؟ تَقُولُ الْخَادِمُ: قَالُوا: بَارَكَ اللهُ فِيكُمْ تَقُولُ عَائِشَةُ َؓ: وَفِيهِمْ بَارَكَ اللهُ نَرُدُّ عَلَيْهِمْ مِثْلَ مَاقَالُوا وَيَبْقَي أَجْرُنَا لَنَا.
اَلْوَابِلُ الصَّيِّبُ مِنَ الْكَلِمِ الطَّيِّبِ قال المحشي: اسناده صحيح:١٨٢
256.ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக ஆடு ஒன்று கொடுக்கப்பட்டது வந்தது, “ஆயிஷா! இதைப் பங்கிட்டுவிடு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களுக்கு மாமிசத்தை பங்கிட்டுவிட்டுப் பணிப்பெண் திரும்பி வந்ததும் “மக்கள் என்ன சொன்னார்கள்?” என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்பது வழக்கம். மக்கள் (بَارَكَ اللهُ فِيكُمْ) அல்லாஹுதஆலா உங்களுக்கு பரக்கத் செய்வானாக!’ எனக் கூறினார்கள் எனப் பணிப் பெண் சொன்னாள். (وَفِيهِمْ بَارَكَ اللهُ) “அல்லாஹுதஆலா அவர்களுக்கு பரக்கத் செய்வானாக” அவர்கள் நமக்கு என்ன துஆச் செய்தார்களோ அதையே நாமும் அவர்களுக்குத் துஆச் செய்துவிட்டோம்.(துஆச் செய்வதில் நாம் அவர்களுக்குச் சமமாகிவிட்டோம், இப்பொழுது மாமிசத்தைப் பங்கிடப்பட்டதின் நன்மை நமக்கு உரியதாகிவிட்டது” என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(ல்வாபிலுஸ்ஸய்யிப்)
٢٥٧– عَنْ أَبِي هُرَيْرَةَ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ يُؤْتَي بِأَوَّلِ الثَّمَرِ فَيَقُولُ: اَللّهُمَّ! بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَةٍ ثُمَّ يُعْطِيهِ أَصْغَرَ مَنْ يَحْضُرُهُ مِنَ الْوِلْدَانِ.
رواه مسلم باب فضل المدينة …رقم:٣٣٣٥
257.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் பருவகாலத்தின் புத்தம் புதிய பழ வகைகள் கொண்டு வரப்பட்டால், (اَللّهُمَّ! بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَةٍ) “யால்லாஹ்! நீ எங்களது மதீனா நகரிலும், எங்கள் பழங்களிலும், எங்களது முத்திலும் எங்களுடைய ஸாஃவிலும், மிகுந்த பரக்கத்தைத் தருவாயாக!” என்று துஆச் செய்வார்கள். பிறகு அந்த நேரத்தில் அங்கு வந்துள்ள குழந்தைகளில் மிகச் சிறியவர்களுக்கு அந்தப் பழத்தைக் கொடுப்பார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- “முத்து‘ என்பது குறைந்த பொருள் அளக்கும் பாத்திரம், அது சுமார் ஒரு கிலோ எடையளவுள்ள பொருளை அளக்க உதவும். “ஸாஃ‘ என்பது அதிகமான பொருளை அளக்கும் பாத்திரம், அது சுமார் நான்கு கிலோ எடையுள்ள பொருளை அளக்க உதவும், இது மரக்கால் என்று சொல்லப்படும்.
٢٥٨– عَنْ وَحْشِيِّ بْنِ حَرْبٍ َؓ أَنَّ أَصْحَابَ النَّبِيِّ ﷺ قَالُوا: يَارَسُولَ اللهﷺ إِنَّا نَاْكُلُ وَلاَ نَشْبَعُ قَالَ: فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ؟ قَالُوا: نَعَمْ قَالَ: فَاجْتَمِعُوا عَلَي طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ.
رواه ابوداؤد باب في الاجتمَاع علي الطعام رقم:٣٧٦٤
258.ஹஜ்ரத் வஹ்ஷிய்யிப்னு ஹர்ப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஸஹாபிகளில் சிலர், “யாரஸூலல்லாஹ், நாங்கள் சாப்பிடுகிறோம், ஆனால் வயிறு நிரம்புவதில்லை‘ எனச் சொன்னார்கள், “நீங்கள் தனித்தனியாகச் சாப்பிடுகிறீர்கள் போலும்?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், அவர்கள் “ஆம்‘ என்றார்கள், “நீங்கள் சாப்பிடும் போது ஒன்று கூடி, அல்லாஹுதஆலா வின் பெயர் சொல்லிச் சாப்பிடுங்கள். உங்கள் உணவில் பரக்கத் உண்டாகும்‘ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
٢٥٩– عَنْ أَنَسٍ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ أَكَلَ طَعَاماً ثُمَّ قَالَ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَطْعَمَنِي هذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنَّيِ وَلاَقُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ: وَمَنْ لَبِسَ ثًوْباً فَقَالَ: اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلاَقُوَّةٍ غُفِرَ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ.
رواه ابوداؤد باب مَا يَقُولُ اذا لبس ثوبا جديدا رقم:٤٠٢٣
259.எவரொருவர் சாப்பிட்ட பின், (اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَطْعَمَنِي هذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنَّيِ وَلاَقُوَّةٍ) “எல்லாப் புகழும் அல்லாஹுதஆலாவுக்கே! அவன் இந்த உணவை எனக்குக் கொடுத்தான். என்னுடைய முயற்சி, ஆற்றல் இன்றி எனக்கு இதை அளித்தான்” என்னும் துஆவை ஓதினால் அவருடைய முந்திய, பிந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் எவர் ஆடை அணிந்ததும், (اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلاَقُوَّةٍ) “எல்லாப் புகழும் அல்லாஹுதஆலாவுக்கே! அவன் எனக்கு இந்த ஆடையை அணிவித்தான், என்னுடைய முயற்சி, ஆற்றல் இன்றி எனக்கு இதை அளித்தான்” என்ற துஆவை ஓதினால் அவருடைய முந்திய, பிந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- பிந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதன் பொருள், வருங்காலத்தில் அல்லாஹுதஆலா தன் அடியானைப் பாவங் களைவிட்டும் பாதுகாப்பான் என்பதாம்.
(பத்லுல் மஜ்ஹூத்)
٢٦٠– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابٍ َؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ لَبِسَ ثَوْباً جَدِيدًا فَقَالَ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَورَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ عَمَدَ إِلَي الثَّوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللهِ وَفِي حِفْظِ اللهِ وَفِي سِتْرِ اللهِ حَيّاًوَّ مَيِّتاً.
رواه الترمذي وقال: هذا حديث غريب احاديث شتي من ابواب الدعوات رقم:٣٥٦٠
260.”ஒருவர் புதிய ஆடை அணிந்த பின், (اَلْحَمْدُ لِلّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَورَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي) புகழனைத்தும் அல்லாஹுதஆலாவுக்கே! அவன் எனக்கு ஆடை அணிவித்தான், அந்த ஆடையினால் நான் என் மறைக்கவேண்டிய உறுப்புகளை மறைத்துக் கொள்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் அதன் மூலம் அலங்காரத்தைப் பெற்றுக் கொள்கிறேன்‘ என்னும் துஆவை ஓதிய பின் தன் பழைய ஆடையை ஸதகாச் செய்துவிட்டால், இவர் தன் வாழ்நாளிலும், மரணத்திற்குப் பிறகும் அல்லாஹுதஆலா வின் பாதுகாப்பிலும், அடைக்கலத்திலும் இருப்பார். மேலும் அவரது பாவங்களை அல்லாஹுதஆலா திரையிட்டு மறைத்துவிடுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
٢٦١– عَنْ أَبِي هُرَيْرَةَ َؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيكَةِ فَاسْئَلُوا اللهَ مِنْ فَضْلِهِ فَإِنَّهَا رَأَتْ مَلَكاً وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحَمِيرِ فَتَعَوَّذُوا بِاللهِ مِنَ الشَّيْطَانِ فَإِنَّهَا رَأَتْ شَيْطَاناً.
رواه البخاري باب خير مَال المسلم … رقم:٣٣٠٣
261.”நீங்கள் சேவல் கூவதைக் கேட்டால், அல்லாஹுதஆலா விடம் அவனது பேரருளைக் கேளுங்கள், ஏனேனில் அது மலக்குகளைப் பார்த்தவுடன் கூவுகிறது. நீங்கள் கழுதையின் சப்தத்தைக் கேட்டால், ஷைத்தானைவிட்டும் அல்லாஹுதஆலா விடம் பாதுகாப்புத் தேடுங்கள், ஏனேனில் அது ஷைத்தானைப் பார்த்ததும் கத்துகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٦٢– عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ َؓ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا رَأَي الْهِلاَلَ قَالَ: اَللّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَاْلإِيمَانِ وَالسَّلاَمَةِ وَاْلإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللهُ.
رواه الترمذي وقال هذا حديث حسن غريب، باب ما يقول عند رؤية الهلال، الجامع الصحيح للترمذي، رقم:٣٤٥١
262.”நபி (ஸல்) அவர்கள் முதல் பிறையைப் பார்த்ததும், (اَللّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَاْلإِيمَانِ وَالسَّلاَمَةِ وَاْلإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللهُ) “யால்லாஹ்! பரக்கத், ஈமான், ஸலாமத், இஸ்லாத்துடன் எங்கள் மீது இப்பிறையை வெளியாக்குவாயாக! பிறையே! என்னுடையவும், உன்னுடையவும் இரட்சகன் அல்லாஹுதஆலா ” என்ற துஆவை ஓதுவார்கள் என ஹஜ்ரத் தல்ஹத்துப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٦٣– عَنْ قَتَادَةَ َؓ أَنَّهُ بَلَغَهُ أَنَّ نَبِيَّ اللهِ ﷺ كَانَ إِذَا رَأَي الْهِلاَلَ قَالَ: هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ آمَنْتُ بِالَّذِي خَلَقَكَ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ يَقُولُ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي ذَهَبَ بِشَهْرِ كَذَا وَجَاءَ بِشَهْرِ كَذَا.
رواه ابوداؤد باب مَايَقُولُ الرجل اذا راي الهلال رقم:٥٠٩٢
263.”ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் புதிய பிறையைக் கண்டால் (هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ) “இது நன்மை, ஹிதாயத்துடைய பிறையாகட்டும், இது நன்மை, ஹிதாயத்துடைய பிறையாகட்டும், இது நன்மை, ஹிதாயத்துடைய பிறையாகட்டும்‘, என்று மூன்று முறை கூறுவார்கள். பிறகு (آمَنْتُ بِالَّذِي خَلَقَكَ) உன்னைப் படைத்த அல்லாஹுதஆலாவை நான் ஈமான் கொண்டேன் என்று சொல்வார்கள். பிறகு, (اَلْحَمْدُ لِلّهِ الَّذِي ذَهَبَ بِشَهْرِ كَذَا وَجَاءَ بِشَهْرِ كَذَا) “இன்ன மாதத்தை முடித்துவைத்து இன்ன மாதத்தை துவக்கி வைத்த அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்!’ என்று கூறுவார்கள், என்ற ஹதீஸ் எனக்குக் கிடைத்ததென ஹஜ்ரத் கதாதா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- மேற்கண்ட துஆவில்كَذَا என்ற இடத்தில் சென்ற மாதத்தின் பெயரையும், அடுத்த என்ற இடத்தில் பிறந்த மாதத்தின் பெயரையும் குறிப்பிடவும்.
٢٦٤– عَنْ عُمَرَ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ رَأَي صَاحِبَ بَلاَءٍ فَقَالَ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلي كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً إِلاَّ عُوفِيَ مِنْ ذلِكَ الْبَلاَءِ كَائِناً مَاكَانَ مَا عَاشَ.
رواه الترمذي وقَالَ: هذا حديث غريب باب مَاجاء مَايَقُولُ اذا راي مبتلي رقم:٣٤٣١
264.”எவரொருவர் துயரத்தால் பீடிக்கப்பட்டவரைக் கண்டு, (اَلْحَمْدُ لِلّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلي كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلا) உன்னை ஆழ்த்திய சோதனை யிலிருந்து என்னைக் காப்பாற்றி மேலும், தன்னுடைய அதிகமான படைப்புகளை விட என்னைச் சிறந்தவனாக ஆக்கிய அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்! என்று ஓதுவாரோ, அவர் அந்தத் துயரத்தைவிட்டு வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்படுவார், அது எப்படிப்பட்ட சிரமமாக இருந்தாலும் சரியே!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- சோதனையால் பீடிக்கப்பட்டவருக்குக் கேட்காதபடி தன் மனதிற்குள்ளேயே இவ்வார்த்தைகளைக் கூறவேண்டுமென ஹஜ்ரத் ஜஃபர் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٦٥– عَنْ حُذَيْفَةَ َؓ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ: اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيي وَإِذَا اسْتَيْقَظَ قَالَ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ.
رواه البخاري باب وضع اليد تحت الخد اليمني رقم:٦٣١٤
265.ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் “நபி (ஸல்) அவர்கள் இரவில் தூங்கும்போது தமது கையைத் தம் கன்னத்திற்குக் கீழே வைத்துக் கொள்வார்கள். பிறகு, (اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيي) “யால்லாஹ்! நான் உன்னுடைய பெயரால் மரணிக்கிறேன் (உறங்குகிறேன்). மேலும் உயிர் பெறுகிறேன் (விழிக்கிறேன்), என்ற துஆவை ஓதுவார்கள். பிறகு விழித்தெழுந்ததும், (اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ) “அனைத்துப் புகழும் அல்லாஹுதஆலாவுக்கே! அவன் நம்மை மரணிக்கச் செய்தபின் உயிர் கொடுத்தான். மேலும் நாம் அவனிடமே கப்ருகளிலிருந்து எழுந்து செல்லவேண்டியுள்ளது” என்ற துஆவை ஓதுவார்கள்.
(புகாரி)
٢٦٦– عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ َؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِﷺ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ ثُمَّ اضْطَجِعْ عَلَي شِقِّكَ اْلاَيْمَنِ وَقُلِ: اَللّهُمَّ! أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَاَلْجَاْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لاَمَلْجَأَ وَلاَمَنْجَأَ مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ قَالَ: فَإِنْ مُتَّ مُتَّ عَلَي الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَقُولُ قاَلَ الْبَرَاءُ: فَقُلْتُ أَسْتَذْكِرُهُنَّ فَقُلْتُ: وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ قَالَ: لاَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ.
رواه ابوداؤد باب مايقول عند النوم رقم:٥٠٤٦ وزاد مسلم. وَإِنْ أَصْبَحْتَ أَصَبْتَ خَيْرًا. باب الدعاء عندالنوم رقم:٦٨٨٥
266.ஹஜ்ரத் பரா உப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நீர் (உறங்குவதற்காக) படுக்கைக்குச் செல்லும் போது முதலில் உளூச் செய்துகொள்ளவும். பிறகு வலப்பக்கமாக திரும்பிப் படுத்து, (اَللّهُمَّ! أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَاَلْجَاْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لاَمَلْجَأَ وَلاَمَنْجَأَ مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ) “யால்லாஹ்! என்னுடைய (முகத்தை) உயிரை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன், என்னுடைய காரியத்தை உன்னிடம் பொறுப்புச் சாட்டிவிட்டேன். உன்னைப் பயந்தவாறும், உன் பக்கம் ஆர்வம் கொண்டும் நான் உன்னுடைய உதவியைத் தேடிவிட்டேன். உன்னைத் தவிர பாதுகாப்பான இடமும், ஈடேற்றம் பெறும் இடமும் வேறில்லை. நீ இறக்கிவைத்த வேதத்தின் மீது நம்பிக்கை கொண்டேன். மேலும், நீ அனுப்பிய நபியின் மீதும் நம்பிக்கை கொண்டேன்‘ என்னும் துஆவை ஓதிக் கொள்ளும்” என்று நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஹஜ்ரத் பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (இந்த துஆவை ஓதியபின் தூங்கி) அன்றிரவு நீ மரணித்தால் இஸ்லாத்தின் மீதே மரணித்தவனாவாய். காலையில் விழித்துவிட்டால் உமக்குப் பெரும் நன்மை கிடைக்கும். இந்த துஆவிறகுப் பிறகு வேறு எதும் பேசாதீர், (உறங்கிவிடும்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் பராஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். “நான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னிலையிலே இந்த துஆவை மனனம் செய்யத் தொடங்கினேன். (கடைசி வாக்கியத்தில்) (وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ) என்பதற்குப் பதில் (وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறில்லை” (وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ) என்று சொல்வீராக! என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
٢٦٧– عَنْ أَبِي هُرَيْرَةَ َؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: إِذَا أَوَي أَحَدُكُمْ إِلَي فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ فَإِنَّهُ لاَيَدْرِي مَاخَلَفَهُ عَلَيْهِ ثُمَّ يَقُولُ: بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ.
رواه البخاري كتاب الدعوات رقم:٦٣٢٠
267.”உங்களில் ஒருவர் தம் படுக்கைக்குச் சென்றால், படுக்கையைத் தம் கைலியைக் கொண்டு மூன்று முறை உதறவும். ஏனேன்றால், அவர் இல்லாதபோது படுக்கையில் என்ன வந்ததென்று அவருக்குத் தெரியாது. (அவர் இல்லாதபோது விஷஜந்துக்கள் ஏதேனும் வந்து அவர் படுக்கைக்குள் மறைந்திருக்கலாம்) தன் பிறகு, (بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ) “என் இரட்சகனே! உன் பெயர் சொல்லி என் விலாவைப் படுக்கையில் வைத்துள்ளேன். உன் பெயரைக் கொண்டே படுக்கையிலிருந்து அதை அகற்றுவேன். தூங்கும் போது என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதன் மீது இரக்கங்காட்டுவாயாக! அதை நீ உயிரோடு வைத்தால் உன் நல் அடியார்களை நீ பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!” என்னும் துஆவை ஓதிக் கொள்ளட்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٦٨– عَنْ حَفْصَةَ َؓ زَوْجِ النَّبِيِّ ﷺ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَرْقُدَ وَضَعَ يَدَهُ الْيُمْني تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ: اَللّهُمَّ! قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ ثَلاَثَ مَرَّاتٍ.
رواه ابوداؤد باب مايقول عند النوم رقم:٥٠٤٥
268.”நபி (ஸல்) அவர்கள் தூங்க நாடினால் தமது வலக்கையை வலது கன்னத்திற்குக் கீழே வைத்து, (اَللّهُمَّ! قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ) யால்லாஹ், உன் அடியார்களைக் கப்ருகளிலிருந்து எழுப்பும் நாளில் உன் வேதனையை விட்டும் என்னைக் காப்பாயாக! என்ற துஆவை மூன்று முறை கூறுவார்கள்” என நபி (ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார் ஹஜ்ரத் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٦٩– عَنِ ابْنِ عَبَّاسٍ َؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: أَمَا لَوْ أَنَّ أَحَدَهُمْ يَقُولُ حِينَ يَاْتِي أَهْلَهُ: بِسْمِ اللهِ اَللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا ثُمَّ قُدِّرَ بَيْنَهُمَا فِي ذلِكَ أَوْ قُضِيَ وَلَدٌ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا.
رواه البخاري باب مايقول اذا اتي اهله رقم:٥١٦٥
269.”எவரேனும் தம் மனைவியிடம் வந்தால் (بِسْمِ اللهِ اَللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا) “அல்லாஹுதஆலா வின் பெயரால் இந்தக் காரியத்தை நான் செய்கிறேன். யால்லாஹ், என்னை ஷைத்தானை விட்டும் காப்பாயாக! எங்களுக்கு நீ கொடுக்கும் சந்ததிகளையும் ஷைத்தானை விட்டும் காப்பாயாக! என்ற துஆவை ஓதிக்கொள்ளவும். பிறகு அந்த நேரத்துத் தாம்பத்திய உறவால் அவருக்குக் குழந்தை பிறந்துவிட்டால், அக்குழந்தைக்கு ஷைத்தானால் எப்போதும் தீங்கிழைக்க முடியாது. அக்குழந்தையை வழிகெடுப்பதில் ஷைத்தான் வெற்றி பெறமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٧٠– عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ قَالَ: فَكَانَ عَبْدُ اللهِ بْنِ عَمْرٍو يُعَلِّمُهَا مَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فِي صَكٍّ ثُمَّ عَلَّقَهَا فِي عُنُقِهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب دعاء الفزع في النوم رقم:٣٥٢٨
270.”உங்களில் எவரொருவர் தூக்கத்தில் திடுக்கிட்டால், ( عُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ) “எல்லாக் குறைகள், குறைபாடுகளை விட்டும் நீங்கிய நிறைவான அல்லாஹ்வின் திருகுர்ஆனின் கலிமாக்களைக் கொண்டு அவனது கோபத்திலிருந்தும், அவனது வேதனையிலிருந்தும், அவனது அடியார்களின் தீங்குகளை விட்டும் ஷைத்தான்களின் ஊசலாட்டங்களை விட்டும் ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்னும் கலிமாக்களைக் கூறினால், அந்தக் கனவு அவருக்கு எந்தத் தீங்கும் செய்யாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் தமது குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் அறிவு தெளிந்த நிலைக்கு வரும்போது இந்த துஆவைக் கற்றுக் கொடுப்பார்கள். அறிவுத் தெளிவில்லாத சிறு குழந்தைகளுக்கு இந்த துஆவை காகிதத்தில் எழுதி அவர்களின் கழுத்தில் தொங்கவிடுவார்கள்.
(திர்மிதீ)
٢٧١– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّ َؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِذَا رَأَي أَحَدُكُمُ الرُّؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللهِ فَلْيَحْمَدِ اللهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِمَا رَأَي وَإِذَا رَأَي غَيْرَ ذلِكَ مِمَّا يَكْرَهُهُ فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ فَلْيَسْتَعِذْ بِاللهِ مِنْ شَرِّهَا وَلاَ يَذْكُرْهَا لإِحَدٍ فَإِنَّهَا لاَ تَضُرُّهُ.
رواه الترمذي وقال هذا حديث حسن غريب صحيح باب مايقول اذا راي رؤيا يكرهها رقم:٣٤٥٣
271.”உங்களில் ஒருவர் நல்ல கனவு கண்டால், அது அல்லாஹுதஆலா வின் புறத்திலிருந்து வந்தது. ஆகையால், அதற்காக அல்லாஹுதஆலாவைப் புகழட்டும். மேலும் அக்கனவை மற்றவர்களிடம் சொல்லட்டும், கெட்ட கனவைக் கண்டால் அது ஷைத்தானின் புறத்திலிருந்து வந்தது. அக்கனவின் தீங்கிலிருந்து அவர் அல்லாஹுதஆலா விடம் பாதுகாப்பைக் கேட்கட்டும். அதை யாரிடமும் கூறாமல் இருந்தால் கெட்ட கனவு அவருக்கு எந்தக் கெடுதலும் செய்யாது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
குறிப்பு:- அல்லாஹுதஆலா விடம் பாதுகாப்புத் தேட (اَعْوْذُ بِاللَهِ مِنْ شَرِّهَا) “இக்கனவின் கெடுதியிலிருந்து அல்லாஹுதஆலா விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” என்று சொல்லவும்.
٢٧٢– عَنْ أَبِي قَتَادَةَ َؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: اَلرُّؤْيَا مِنَ اللهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَي أَحَدُكُمْ شَيْئاً يَكْرَهُهُ فَلْيَنْفِثْ حِيَنَ يَسْتَيْقِظُ ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّهُ.
رواه البخاري باب النفث في الرقية رقم:٥٧٤٧
272.”நல்ல கனவு அல்லாஹுதஆலா விடமிருந்து வருவதாகும், (திடுக்கம் ஊட்டும்) கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் யாரும் கனவில் வெறுப்பானவற்றைக் கண்டால் அவர் அந்நேரத்தில் எழுந்து (தன் இடப்பக்கம்) மூன்று முறை துப்பி விட்டு அக்கனவின் கெடுதியை விட்டும் அல்லாஹுதஆலா விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அவ்வாறு செய்தால் அவருக்கு அக்கனவு தீங்கிழைக்காது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٧٣– عَنْ جَابِرٍ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا أَوَي أَحَدُكُمْ إِلَي فِرَاشِهِ اِبْتَدَرَهُ مَلَكٌ وَشَيْطَانٌ يَقُولُ الشَّيْطَانُ: اِخْتِمْ بِشَرٍّ وَيَقُولُ الْمَلَكُ: اِخْتِمْ بِخَيْرٍ فَإِنْ ذَكَرَ اللهَ ذَهَبَ الشَّيْطَانُ وَبَاتَ الْمَلَكُ يَكْلَؤُهُ وَإِذَا اسْتَيْقَظَ اِبْتَدَرَهُ مَلَكٌ وَشَيْطَانٌ يَقُولُ الشَّيْطَانُ: اِفْتَحْ بِشَرٍّ وَيَقُولُ الْمَلَكُ: اِفْتَحْ بِخَيْرٍ فَإِنْ قَالَ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي رَدَّ إِلَيَّ نَفْسِي بَعْدَ مَوْتِهَا وَلَمْ يُمِتْهَا فِي مَنَامِهَا اَلْحَمْدُ لِلّهِ الَّذِي يُمْسِكُ السَّمَاءَ أَنْ تَقَعَ عَلَي اْلاَرْضِ إِلاَّ بِإِذْنِهِ إِنَّ اللهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ اَلْحَمْدُ لِلّهِ الَّذِي يُحْيِي الْمَوْتَي وَهُوَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ فَإِنْ خَرَّ مِنْ دَابَّةٍ مَاتَ شَهِيدًا وَإِنْ قَامَ فَصَلَّي صَلَّي فِي الْفَضَائِلِ.
رواه الحاكم وقال:هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذهبي:١ /٥٤٨
273.”உங்களில் ஒருவர் தமது படுக்கைக்கு வந்தால், உடனே ஒரு மலக்கும், ஒரு ஷைத்தானும் அவரிடம் வருகின்றனர். “விழித்திருக்கும் நேரத்தை தீய செயலைக் கொண்டு நீ முடித்துவை!’ என ஷைத்தான் கூறுகிறான். “நல்ல செயலைக் கொண்டு முடித்துவை!’ என மலக்கு சொல்கிறார். அவர் அல்லாஹுதஆலாவை திக்ரு செய்தவாறு தூங்கிவிட்டால் ஷைத்தான் அவரை விட்டு நீங்கிவிடுகிறான். இரவு முழுவதும் ஒரு வானவர் அவரைப் பாதுகாக்கிறார், பிறகு அவர் கண் விழிக்கும் போது ஒரு மலக்கும் ஒரு ஷைத்தானும் வருகின்றனர், ஷைத்தான் அவரிடம் “உன் விழிப்பைத் தீயதைக் கொண்டு தொடங்கு!’ என்கிறான். “நல்லதைக் கொண்டு ஆரம்பம் செய்‘ என மலக்கு கூறுகிறார். பிறகு அவர், (اَلْحَمْدُ لِلّهِ الَّذِي رَدَّ إِلَيَّ نَفْسِي بَعْدَ مَوْتِهَا وَلَمْ يُمِتْهَا فِي مَنَامِهَا اَلْحَمْدُ لِلّهِ الَّذِي يُمْسِكُ السَّمَاءَ أَنْ تَقَعَ عَلَي اْلاَرْضِ إِلاَّ بِإِذْنِهِ إِنَّ اللهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ اَلْحَمْدُ لِلّهِ الَّذِي يُحْيِي الْمَوْتَي وَهُوَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ) “என்னை உறக்கத்தில் மரணிக்கச் செய்யாமல் உயிரை எனக்குத் திரும்பக் கொடுத்த அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்!. அவன் தன் அனுமதியின்றி பூமியில் விழுவதை விட்டும் வானைத் தடுத்து வைத்துள்ளான். நிச்சயமாக அல்லாஹுதஆலா தன் படைப்புகள் மீது மிகுந்த கருணை உடையவன். கிருபை செய்பவன், அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்! அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவன். மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தி பெற்றவன்” என்ற துஆவை ஓதி, அதன் பிறகு அவர் வாகனத்திலிருந்து விழுந்து மரணித்தால் (அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தால் மவ்த் வந்துவிட்டால்) அவர் ஷஹீதாக மரணித்தார். அவர் உயிரோடு இருந்தால், எழுந்து தொழுதுவிட்டால் அத்தொழுகைக்காக அவருக்கு மிகப்பெரிய பதவி கிடைக்கிறது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٧٤– عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ َؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ لاَبِي: يَاحُصَيْنُ! كَمْ تَعْبُدُ الْيَوْمَ إِلهاً؟ قَالَ أَبِي: سَبْعَةً: سِتَّةً فِي اْلاَرْضِ وَوَاحِدًا فِي السَّمَاءِ قَالَ: فَأَيُّهُمْ تَعُدُّ لِرَغْبَتِكَ وَرَهْبَتِكَ؟ قَالَ: اَلَّذِي فِي السَّمَاءِ قَالَ: يَاحُصَيْنُ! أَمَا إِنَّكَ لَوْ أَسْلَمْتَ عَلَّمْتُكَ كَلِمَتَيْنِ تَنْفَعَانِكَ قَالَ: فَلَمَّا أَسْلَمَ حُصَيْنٌ قَالَ: يَارَسُولَ اللهِﷺ عَلِّمْنِيَ الْكَلِمَتَيْنِ اللَّتَيْنِ وَعَدْتَّنِي فَقَالَ: قُلِ: اللهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب قصة تعليم دعاء….رقم:٣٤٨٣
274.ஹஜ்ரத் இம்ரானிப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், என் தந்தையிடம், “நீர் ஒரு நாளில் எத்தனை தெய்வங்களை வணங்குகிறீர்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு, “ஏழு தெய்வங்களை வணங்குகிறேன். ஆறு பூமியில் உள்ளவை, ஒன்று வானத்தில் உள்ளது” என என் தந்தையார் பதிலளித்தார். “நீர் நம்பிக்கையும், பயமும் ஏற்படும் நேரம் யாரை அழைக்கிறீர்?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “வானத்திலுள்ள தெய்வத்தை அழைக்கிறேன்” என்றார். “ஹுஸைனே! நீர் இஸ்லாத்தைத் தழுவினால் உமக்குப் பலன் தரும் இரண்டு வாக்கியங்களைக் கற்றுத்தருவேன்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் ஹுஸைன் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ், தாங்கள் எனக்கு வாக்களித்த அந்த இரு வாக்கியங் (கலிமாக்)களைக் கற்றுத்தாருங்கள் எனக் கேட்டார். (اللهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي) “யால்லாஹ், என்னுடைய நலவை என் மனதில் போடு! என் நப்ஸின் தீங்கை விட்டும் என்னைக் காத்தருள்! எனச் சொல்வீராக!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
٢٧٥– عَنْ عَائِشَةَ َؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ أَمَرَهَا أَنْ تَدْعُوَ بِهذَا الدُّعَاءِ: اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَاعَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَاعَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَاقَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ خَيْرَ مَا سَاَلَكَ عَبْدُكَ وَرَسُولُكَ مُحَمَّدٌ ﷺ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ عَنْهُ عَبْدُكَ وَرَسُولُكَ مُحَمَّدٌ ﷺ وَأَسْأَلُكَ مَاقَضَيْتَ ليِ مِنْ أَمْرٍ أَنْ تَجْعَلَ عَاقِبَتَهُ رُشْدًا.
رواه الحاكم وقال:هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:١/٥٢٢
275.( اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَاعَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَاعَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَاقَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ خَيْرَ مَا سَاَلَكَ عَبْدُكَ وَرَسُولُكَ مُحَمَّدٌ ﷺ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ عَنْهُ عَبْدُكَ وَرَسُولُكَ مُحَمَّدٌﷺ وَأَسْأَلُكَ مَاقَضَيْتَ ليِ مِنْ أَمْرٍ أَنْ تَجْعَلَ عَاقِبَتَهُ رُشْدًا) “யால்லாஹ், விரைவாக அல்லது தாமதித்து வரக்கூடிய, நான் அறிந்த, அறியாத, எல்லாவித நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் விரைவாக அல்லது தாமதித்து வரக்கூடிய அறிந்த, அறியாத, எல்லாவிதமான கெடுதிகளை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்பைக் கேட்கிறேன். சொர்க்கத்தையும், சொர்க்கத்திற்கு நெருக்கமாக்கும் செயலையும், சொல்லையும் உன்னிடம் கேட்கிறேன். இன்னும் நரகிலிருந்தும், நரகத்திற்கு நெருக்கமாக்கும் செயலைவிட்டும், சொல்லைவிட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன். உனது அடியார் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் உன்னிடம் கேட்ட அத்தனை நலன்களையும் உன்னிடம் கேட்கிறேன். உனது அடியாரும், ரஸூலுமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் எதைவிட்டுப் பாதுகாப்பு வேண்டினார்களோ அவையனைத்தின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன். என்னைப்பற்றி நீ எதை முடிவு செய்தாலும், அதன் முடிவை எனக்குச் சிறந்ததாக ஆக்குவதை உன்னிடம் கேட்கிறேன்” என்ற இந்த வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் துஆச் செய்து வாருங்கள்‘ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தமக்குக் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٧٦– عَنْ عَائِشَةَ َؓ قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا رَأَي مَايُحِبُّ قَالَ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ وَإِذَا رَأَي مَايَكْرَهُ قَالَ: اَلْحَمْدُ لِلّهِ عَلي كُلِّ حَالٍ.
رواه ابن ماجه باب فضل الحامدين رقم:٣٨٠٣
276.”தனக்குப் பிரியமான பொருளை நபி (ஸல்) அவர்கள் கண்டால், (اَلْحَمْدُ لِلّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ) எல்லாப் புகழும் அல்லாஹுத்அவுக்கே! அவனது பேரருளாலேயே எல்லா நற்காரியங்களும் முடிவு பெறுகின்றன என்று கூறுவார்கள், பிரியமில்லாப் பொருளைக் கண்டால், (اَلْحَمْدُ لِلّهِ عَلي كُلِّ حَالٍ) எல்லா நிலையிலும் அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப்புகழும்! என்று சொல்வார்கள்” என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)