ஈமான்

ஈமான் என்பது அகராதியில், ஒருவரின் சொல்லை அவர் மீதுள்ள நம்பிக்கையால் உறுதியாக ஏற்றுக் கொள்வதற்கு சொல்லப்படும். மார்க்க வழக்கில் ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்கள் கொண்டுவந்த (மறைவான செய்திகள் உட்பட) அனைத்தையும் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியாக ஏற்றுக் கொள்வதாகும்.

குர்ஆன் வசனங்கள்:-

قَالَ اللّٰهُ تَعَالٰي: (وَمٰآ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُولٍ إِلاَّ نُوحِي إِلَيْهِ أَنَّهُ لٰآ إِلهَ إِلاَّ أَنَا فَاعْبُدُونِ۞)

الانبياء:٢٥

1. (நபியே!) உமக்கு முன் எந்த தூதரையும் – அவருக்கு “நிச்சயமாக, என்னைத்தவிர (வேறு) தெய்வம் இல்லை: ஆகவே (மக்களே!) என்னையே நீங்கள் வணங்குங்கள்’’ என்று நாம் வஹீ அறிவித்தே தவிர – நாம் அனுப்பவில்லை.

(அல்அன்பியா: 25)

وَقَالَ تَعَالي: (إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيـٰــتُهُ زَادَتْهُمْ إِيمَاناً وَّعَلَي رَبِّهِمْ يَتَوَكَّلُونَ۞)

الانفال:٢

2. (உண்மையான ஓரிறை) நம்பிக்கையாளர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் என்று (அவர்களின் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கி விடும்; அவர்களிடம் அவனுடைய திருவசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை (மேலும்) அதிகமாக்கும்; மேலும், தங்களுடைய இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

(அல்அன்ஃபால்: 2)

وَقَالَ تَعَالي: (فَأَمَّا الَّذِينَ أٰمَنُوا بِاللّٰهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَّيَهْدِيْهِمْ إِلَيْهِ صِرَاطاً مُّسْتَقِيْماً۞)

النساء : ١٧٥

3. எனவே, யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உறுதியாகப் பற்றிப் பிடித்தார்களோ அவர்களை, அவனிடமிருந்துள்ள அருளிலும் கருணையிலும், அவன் புகச் செய்வான்; இன்னும் தன் பக்கம் (சேர்வதற்குரிய) நேரான வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான்.

(அந்நிஸா: 175)

وَقَالَ تَعَالي: (إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ أٰمَنُوا فِي الـْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ اْلاَشْهَادُ۞)

المؤمن : ٥١

4. நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உலக வாழ்க்கையிலும், சாட்சிகள் (வந்து) நிற்கும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்.

(அல்முஃமின்: 51)

وَقَالَ تَعَالي: (اَلَّذِينَ أٰمَنُوا وَلَمْ يَلْبِسُوآ إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولٰئِكَ لَهُمُ اْلأَمْنُ وَهُمْ مُّهْتَدُونَ۞)

الانعام: ٨٢

5. எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் தங்களுடைய (ஓரிறை) நம்பிக்கையை (இணைவைத்தல் எனும்) அநீதத்தைக் கொண்டு கலக்கவில்லையோ அத்தகையோர் – அவர்களுக்கே அபயமுண்டு; அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.

(அல்அன்ஆம்: 82)

وَقَالَ تَعَالي: (وَالَّذِينَ أٰمَنُوآ أَشَدُّ حُباًّ للّٰهِ۞)

البقرة: ١٦٥

6. ஆனால் (ஓரிறை) நம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை நேசிப்பதில் மிகவும் உறுதியானவர்கள்.

(அல்பகரா: 165)

وَقَالَ تَعَالي: (قُلْ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي للّٰهِ رَبِّ الْعَالَمِينَ۞)

الانعام: ١٦٢

7. “நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (இதர) வணக்கமும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அனைத்துலகங்களின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியவையாகும்’’ என்றும் (நபியே,) நீர் கூறுவீராக!

(அல்அன்ஆம்: 162)

ஹதீஸ்கள்:-

١ -عَنْ أَبِي هُرَيْرَةؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : اَلإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ اْلاَذي عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِّنَ اْلإِيمَانِ.

رواه مسلم باب بيان عدد شعب الايمان رقم: ١٥٣

1. “ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன, அவற்றில் மிக உயர்ந்தது “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுவது, அவற்றில் மிகத் தாழ்ந்தது இடையூறு தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவது, மேலும், வெட்கம் ஈமானின் ஒரு (முக்கிய) கிளையாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

தெளிவுரை:- வெட்கத்தின் அந்தரங்கம் மனிதனைத் தவறான காரியங்களிலிருந்து தடுக்க முயல்கிறது. நல்லோர்களை நற்காரியங்களில் குறை செய்வதைவிட்டும் தடுக்கிறது.

٢- عَنْ أَبِي بَكْرٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ: مَنْ قَبِلَ مِنِّيَ الْكَلِمَةَ الَّتِي عَرَضْتُ عَلَي عَمِّي فَرَدَّهَا عَلَيَّ فَهِيَ لَهُ نَجَاةٌ.

رواه احمد: ١ / ٦

2. “நான் என் சிறிய தந்தை (அபூதாலிபு) க்கு (அவரது மரண வேளையில்) சொல்லித்தந்து அவர் ஏற்க மறுத்த அந்தக் கலிமாவை எவர் ஏற்றுக்கொள்வாரோ, அதுவே அவருக்கு ஈடேற்றமாகும்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்)

٣- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : جَدِّدُوا إِيمَانَكُمْ قِيلَ: يَارَسُولَ اللّٰهِؐ وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا؟ قَالَ: أَكْثِرُوا مِنْ قَوْلِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ.

رواه أحمد والطبراني وإسناد أحمد حسن، الترغيب:٢ /٤١٥

3. “உங்களுடைய ஈமானைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது “யா ரஸூலல்லாஹ்! எங்களுடைய ஈமானை எவ்வாறு புதுப்பிப்பது?’’ என்று கேட்கப்பட்டது “லா இலாஹ இல்லல்லாஹ்’ (என்ற கலிமா)வை அதிகமாகக் கூறிக்கொண்டே இருங்கள்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தப்ரானீ, முஸ்னத் அஹ்மத், தர்ஙீப்)

٤ – عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِؓ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهؐ يَقُولُ: أَفْضَلُ الذِّكْرِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَفْضَلُ الدُّعَاءِ اَلْحَمْدُ للّٰهِ.

رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ماجاء ان دعوة المسلم مستجابة، رقم:٣٣٨٣

4. “திக்ருகளில் மிகச்சிறந்தது லா இலாஹ இல்லல்லாஹ், துஆக்களில் மிகச்சிறந்தது அல்ஹம்துலில்லாஹ்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்!’’ என்று ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

தெளிவுரை:- முழு தீனின் அடிப்படையும் இதன் மீதே அமைந்துள்ளது. இந்தக் கலிமா இல்லாமல் ஈமானும் சரியாவதில்லை, எவரும் முஸ்லிமாகவும் முடியாது. எனவே தான் எல்லாவற்றையும்விட, “லா இலாஹ இல்லல்லாஹ்’ (என்ற கலிமா) சிறந்த திக்ரு என்று கூறப்பட்டுள்ளது.

கண்ணியவானைப் புகழ்வது அவரிடம் கேட்பதற்கே. அல்லாஹு அவிடம் கேட்பதற்குப் பெயர்தான் துஆ! எனவேதான் “அல்ஹம்து லில்லாஹ்’வைச் சிறந்த துஆ என்று கூறப்பட்டுள்ளது.

(மளாஹிரூல் ஹக்)

٥- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَاقَالَ عَبْدٌ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ قَطُّ مُخْلِصاً إِلاَّ فُتِحتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّي تُفْضِيَ إِلَي الْعَرْشِ مَا اجْتَنَبَ الْكَبَائِرَ.

رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب دعاء أم سلمة ٢، رقم:٣٥٩ ٠.

5. “ஓர் அடியான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனத் தூய்மையுடன் சொல்லும்போது, சொல்பவர் பெரும் பாவங்களிலிருந்து விலகியிருக்கும் நிலையில் இக்கலிமாவுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு அது நேரடியாக அர்ஷ் வரை சென்றடையாமல் இருப்பதில்லை. (உடனடியாக இக்கலிமா ஏற்றுக் கொள்ளப்படுகிறது)’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

தெளிவுரை:- மனத்தூய்மையுடன் சொல்வது என்பதன் பொருள், அதை மொழிவதில் எவ்வித முகஸ்துதியோ, நயவஞ்சகமோ இருக்கக் கூடாது என்பதாகும். கலிமா விரைவில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பெரும் பாவங்களை விட்டும் விலகியிருப்பது நிபந்தனையாகும். எனினும் பெரும் பாவங்களுடன் இந்தக் கலிமாவைச் சொன்னாலும் அதற்குரிய நன்மையும் பலனும் கிடைத்தே தீரும்.

(மிர்காத்)

٦- عَنْ يَعْلَي بْنِ شَدَّادٍؓ قَالَ: حَدَّثَنِي أَبِي شَدَّادٌ وَعُبَادَةُ بْنُ الصَّامِتِ 1 حَاضِرٌ يُصَدِّقُهُ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّؐ فَقَالَ: هَلْ فِيكُمْ غَرِيبٌ؟ يَعْنِي أَهْلَ الْكِتَابِ، قُلْنَا: لاَ يَارَسُولَ اللّٰهِؐ فَأَمَرَ بِغَلْقِ الْبَابِ وَقَالَ: اِرْفَعُوا أَيْدِيَكُمْ وَقُولُوا لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ فَرَفَعْنَا أَيْدِيَنَا سَاعَةً ثُمَّ وَضَعَ ! يَدَهُ ثُمَّ قَالَ: اَلْحَمْدُ للّٰهِ اَللّٰهُمَّ إِنَّكَ بَعَثْتَنِي بِهذِهِ الْكَلِمَةِ وَأَمَرْتَنِي بِهَا وَوَعَدْتَّنِي عَلَيْهَا الْجَنَّةَ وَإِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ. ثُمَّ قَالَ: أَلاَ أَبْشِرُوا فَإِنَّ اللّٰهَ قَدْ غَفَرَ لَكُمْ.

رواه احمد والطبراني والبزار ورجاله موثقون، مجمع الزوائد:١/١٦٤

6. ஹஜ்ரத் யஃலா இப்னு ஷத்தாத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: எனது தந்தையார் ஹஜ்ரத் ஷத்தாத் (ரலி) அவர்கள் கீழ்க்காணும் சம்பவத்தைக் கூறினறார்கள். அச்சம்பவத்தின் போது என் தந்தையுடன் இருந்த ஹஜ்ரத் உபாதா (ரலி) அவர்கள் அதை உண்மைப்படுத்தினார்கள்.நாங்கள் ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தோம். நபி (ரலி) அவர்கள், “உங்களில் எவரும் அந்நியர் (முஸ்லிமல்லாதவர்) இருக்கின்றனரா?’’ என்று வினவினார்கள். “ஒருவரும் இல்லை’ என்று நாங்கள் பதிலளித்தோம். பிறகு கதவை மூடச் சொல்லிவிட்டு, உங்கள் கைகளை உயர்த்தி “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லுங்கள்!’’ என்று சொன்னார்கள். நாங்கள் சிறிது நேரம் கைகளை உயர்த்தி (கலிமாவை கூறி)ய வண்ணம் இருந்தோம். பின்பு நபி (ரலி) அவர்கள் தங்கள் கரத்தைத் தாழ்த்தி “அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறி “யா அல்லாஹ், நீ இக்கலிமாவைத்தந்து என்னை அனுப்பியுள்ளாய்! இதை (எத்திவைக்க) எனக்குக் கட்டளையிட்டுள்ளாய்! இக்கலிமாவுக்காக சொர்க்கத்தை வாக்களித்துள்ளாய்! நீ வாக்குமீறாதவன்’’ என்று சொன்னார்கள். பிறகு எங்களைப் பார்த்து, “அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான் என்” நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என மொழிந்தார்கள்.

(முஸ்னத் அஹ்மத், தப்ரானீ, பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)

٧- عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : مَامِنْ عَبْدٍ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ ثُمَّ مَاتَ عَلَي ذلِكَ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ قُلْتُ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ؟ قَالَ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ قُلْتُ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ قَالَ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ قُلْتُ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ قَالَ: وَإِنْ زَنَي وَإِنْ سَرَقَ عَلَي رَغْمِ أَنْفِ أَبِي ذَرٍّ.

رواه البخاري باب الثياب البيض، رقم:٥٨٢٧

7. ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற” கலிமாவை மொழிந்து அதன் மீதே இறந்து விடுவாரானால் அவர் சுவனம் சென்றடைவார்’’ என்று நபி (ரலி) அவர்கள் அருளிய போது, “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?’’ என்று நான் கேட்டேன். “ஆம் அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலும்’’ என பதிலளித்தார்கள்; “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடியிருந்தாலுமா?’’ என்று மீண்டும் கேட்டேன். “ஆம் அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலும் சரியே!’’ என மறுமுறையும் பதிலளித்தார்கள். (மூன்றாம் முறையும்) “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?’’ என்று கேட்டேன். “ஆம் அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலும் சரியே!’ அபூதருடைய மனம் விரும்பாவிடினும் அவர் சொர்க்கத்தில் நுழைந்தே தீருவார்!’’ என்று பதில் சொன்னார்கள்.

(புகாரி)

தெளிவுரை:- ஹதீஸில் வந்துள்ள “அலர்ரங்ம்’ என்னும் சொல் அரபி மொழிக்கே உரிய வழக்குச் சொல்லாகும். அதன் கருத்தாவது: இதை நீங்கள் விரும்பாவிட்டாலும், அது நிகழக் கூடாது என நினைத்தாலும் அது நிகழ்ந்தே தீரும் என்பதாகும். பெரும் பாவங்கள் செய்திருந்தாலும் ஒரு முஃமின் சுவனம் செல்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது அபூதர் (ரலி) அவர்களுக்கு வியப்பை அளித்தது. எனவேதான் அதே கேள்வியை நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அதே பதிலைக் கூறி அவர்களது வியப்பைக் போக்கும் வகையில், “உங்கள் உள்ளம் ஏற்காவிட்டாலும் அவர் சுவனம் சென்றே” தீருவார்’ என்று சொன்னார்கள். இனி அவர் குற்றம் புரிந்த பிறகு ஈமானின் உணர்வால் தூண்டப்பட்டு தௌபா, இஸ்திங்ஃபார் செய்து தனது பாவத்திற்குரிய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அல்லாஹு தனது கிருபையினால் அவருக்கு மன்னிப்பு வழங்கி எவ்விதத் தண்டனையும் இல்லாமலோ அல்லது பாவத்திற்குரிய தண்டனைக் கொடுத்தோ அவரை நிச்சயம் சுவனம் புகச் செய்வான்.

இந்த ஹதீஸில் “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்வதன் பொருள், முழு தீனின் மீதும், ஏகத்துவத்தின் மீதும் ஈமான் கொண்டு அதன்படி நடப்பதாகும் என்று உலமாக்கள் எழுதியுள்ளார்கள்.

(மஆரிஃபுல் ஹதீஸ்)

٨- عَنْ حُذَيْفَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : يَدْرُسُ اْلإِسْلاَمُ كَمَا يَدْرُسُ وَشْيُ الثَّوْبِ حَتَّي لاَيُدْري مَاصِيَامٌ وَلاَصَدَقَةٌ وَلاَنُسُكٌ وَيُسْرَي عَلَي كِتَابِ اللّٰهِ فِي لَيْلَةٍ فَلاَ يَبْقَي فِي اْلاَرْضِ مِنْهُ آيَةٌ وَيَبْقَي طَوَائِفُ مِنَ النَّاسِ اَلشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ الْكَبِيرَةُ يَقُولَوْنَ أَدْرَكْنَا آبَاءَنَا عَلَي هذِهِ الْكَلِمَةِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ فَنَحْنُ نَقُولُهَا قَالَ صِلَةُ بْنُ زُفَرَ لِحُذَيْفَةَ فَمَا تُغْنِي عَنْهُمْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَهُمْ لاَيَدْرُونَ مَاصِيَامٌ وَلاَصَدَقَةٌ وَلاَنُسُكٌ فَأَعْرَضَ عَنْهُ حُذَيْفَةُ فَرَدَّدَهَا عَلَيْهِ ثَلاَثاً كُلُّ ذلِكَ يُعْرِضُ عَنْهُ حُذَيْفَةُ ثُمَّ أَقْبَلَ عَلَيْهِ فِي الثَّالِثَةِ فَقَالَ: يَاصِلَةُ تُنَجِّيهِمْ مِنَ النَّارِ.

رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجه:٤/٤٧٣

8. நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆடையின் அலங்கார வேலைப்பாடுகள் மறைந்து நிறம் மங்கிவிடுவது போல் இஸ்லாமும் பிற்காலத்தில் மங்கிப் போய்விடும். ஒருவர் நோன்பு என்றால் என்ன? ஸதகா என்றால் என்ன? இன்னும் ஹஜ் என்றால் என்ன? என்று கூட அறியமாட்டார். இந்நிலையில் ஓர் இரவு வரும். அந்த இரவில் குர்ஆன் (நெஞ்சங்களை விட்டும்) உயர்த்தப்பட்டுவிடும். பூமியில் குர்ஆனின் எந்த வசனமும் மீதம் இருக்காது. அக்காலத்தில் பற்பல இடங்களில் வயது முதிர்ந்த ஆண்கள், பெண்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். “நாங்கள் எங்கள் மூதாதையர் வழியாக லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவைக் கேள்விப்பட்டுள்ளோம். நாங்களும் அதைக் கூறுகிறோம்’’ என்று சொல்வார்கள்.“நோன்பு, ஸகாத், ஹஜ், பற்றி அவர்களுக்கு ஏதுவும் தெரியாத நிலையில் இந்தக் கலிமாவைச் சொல்வதால் என்ன பலன் தரும்?’’ என்று ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்களின் மாணவர் ஸிலா என்பவர் வினவினார். ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் பதிலளிக்கவில்லை. இவ்வாறு மூன்று முறை கேட்டார். மூன்றாம் முறை அவரை நோக்கி, “ஸிலாவே! இக்கலிமா தான் அவர்களை நரகிலிருந்து ஈடேற்றம் பெறச் செய்யும்’’ என்று கூறினார்கள்.

(முஸ்தத் ரக் ஹாகிம்)

٩- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَنْ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ نَفَعَتْهُ يَوْماً مِنْ دَهْرِهِ يُصِيبُهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ.

رواه البزار والطبراني ورواته رواة الصحيح، الترغيب:٢/٤١٤

9. “லா இலாஹ இல்லல்லாஹ்’’ என்று சொன்னவருக்கு இக்கலிமா என்றேனும் ஒரு நாள் நிச்சயம் பலன் அளிக்கும் (ஈடேற்றமளிக்கும்) அவர் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை அதற்குமுன் அனுபவிக்க நேர்ந்தாலும் சரியே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பஸ்ஸார், தப்ரானீ, தர்ஙீப்)

١٠- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : أَلاَ أُخْبِرُكُمْ بِوَصِيَّةِ نُوحِ نِ اِبْنَهُ قَالُوا: بَلَي قَالَ:أَوْصي نُوحُ نِ اِبْنَهُ فَقَالَ لاِبْنِهِ: يَابُنَيَّ إِنِّي أُوصِيكَ بِاثْنَتَيْنِ وَأَنْهَاكَ عَنِ اثْنَتَيْنِ أُوصِيكَ بِقَوْلِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ فَإِنَّهَا لَوْ وُضِعَتْ فِي كِفَّةِ الْمِيزَانِ وَوُضِعَتِ السَّموَاتُ وَاْلاَرْضُ فِي كِفَّةٍ لَرَجَحَتْ بِهِنَّ وَلَوْ كَانَتْ حَلْقَةً لَقَصَمَتْهُنَّ حَتَّي تَخْلُصَ إِلَي اللّٰهِ وَبِقَوْلِ سُبْحَانَ اللّٰهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ فَإِنَّهَا عِبَادَةُ الْخَلْقِ وَبِهَا تُقْطَعُ أَرْزَاقُهُمْ وَأَنْهَاكَ عَنِ اثْنَتَيْنِ الشِّرْكِ وَالْكِبْرِ فَإِنَّهُمَا يَحْجُبَانِ عَنِ اللّٰهِ.

(الحديث) رواه البزار وفيه محمد بن اسحاق وهو مدلس وهوثقة وبقية رجاله رجال الصحيح، مجمع الزوائد:١ ٠ /٩٢

10. ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்கள் தமது மகனுக்குச் செய்த உபதேசத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் வினவினார்கள். “அவசியம் அறிவித்துத் தாருங்கள் நாயகமே!’ என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்.“மகனே! உனக்கு இரு காரியங்களைச் செய்ய உபதேசிக்கிறேன். இரு காரியங்களை விட்டும் தடுக்கிறேன். செய்ய வேண்டிய காரியங்களில் முதலாவது “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லக் கட்டளையிடுகிறேன். ஏனனில், இக்கலிமாவைத் தராசின் ஒரு தட்டிலும், ஏழு வானங்கள், ஏழு பூமிகளையும் மற்றொரு தட்டிலும் வைக்கப்பட்டால் கலிமாவின் தட்டு கனத்தால் தாழ்ந்து விடும். அவ்வாறே” ஏழு வானங்கள், ஏழு பூமிகளைத் தடுப்பு வளையமாக்கினாலும் இக்கலிமா அதை உடைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் சென்றடையும். செய்ய வேண்டிய காரியங்களில் இரண்டாவது, “ஸுப்ஹானல்லாஹில் அளீமி வ பிஹம்திஹீ’ என்ற” தஸ்பீஹை ஓதும்படி கட்டளையிடுகிறேன். ஏனனில், இது அனைத்து படைப்பினங்களின் வணக்கமாகும். இதன் பரக்கத்தாலேயே அவற்றின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.மேலும் இரு காரியங்களை விட்டும் உன்னை விலக்குகிறேன். ஒன்று, இணைவைத்தல். மற்றொன்று பெருமை அடித்தல். ஏனனில், இவ்விரு தீய காரியங்களும் அடியானை அல்லாஹ் அவை விட்டும் தூரமாக்கக் கூடியவை’’ என ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்கள் தம் மகனுக்கு உபதேசித்தார்கள்.

(பஸ்ஸார்)

١١- عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللّٰهِؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : إِنِّي لاَعْلَمُ كَلِمَةً لاَيَقُولُهَا رَجُلٌ يَحْضُرُهُ الْمَوْتُ إِلاَّ وَجَدَ رُوحُهُ لَهَا رَوْحاً حَتَّي تَخْرُجَ مِنْ جَسَدِهِ وَكَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَة.

رواه ابويعلي ورجاله رجال الصحيح، مجمع الزوائد:٣ /٦٧

11. “நான் ஒரு கலிமாவை அறிவேன். ஒருவர் தன் மரணவேளையில் அக்கலிமாவைக் கூறினால். அவரது உயிர் உடலை விட்டுப் பிரியும் போது இக்கலிமாவின் பரக்கத்தால் உயிர் நிம்மதி பெறும். மேலும் கியாமத் நாளில் அக்கலிமா, அவருக்கு ஒளியாகிவிடும்’’ (அது “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்னும் கலிமாவாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)

١٢- عَنْ أَنَسٍؓ (فِي حَدِيثٍ طَوِيلٍ) أَنَّ النَّبِيَّؐ قَالَ: يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَايَزِنُ شَعِيرَةً ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ بُرَّةً ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَكَانَ فِي قَلْبِهِ مَايَزِنُ مِنَ الْخَيْرِ ذَرَّةً.

(وهو جزء من الحديث) رواه البخاري، باب قول الله تعالي:لما خلقت بيدي، رقم:٧٤١ ٠

12. “எவரது உள்ளத்தில் ஒரு தொலிக் கோதுமை அளவேனும் நன்மை (ஈமான்) இருக்க “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை மொழிந்தாரோ, அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவரது உள்ளத்தில் ஒரு மணிக் கோதுமை அளவேனும் நன்மை (ஈமான்) இருக்க “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை மொழிந்தாரோ, அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவரது உள்ளத்தில் அணு அளவேனும் நன்மை (ஈமான்) இருக்க “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை மொழிந்தாரோ, அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

١٣- عَنِ الْمِقْدَادِ بْنِ اْلاَسْوَدِؓ يَقُولُ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: لاَ يَبْقي عَلَي ظَهْرِ اْلاَرْضِ بَيْتُ مَدَرٍ وَلاَ وَبَرٍ إِلاَّ أَدْخَلَهُ اللّٰهُ كَلِمَةَ اْلإِسْلاَمِ بِعِزِّ عَزِيزٍ أَوْذُلِّ ذَلِيلٍ إِمَّا يُعِزُّهُمُ اللّٰهُ فَيَجْعَلُهُمْ مِنْ أَهْلِهَا أَوْ يُذِلُّهُمْ فَيَدِينُونَ لَهَا.

رواه احمد:٦ /٤

13. “பூமிப்பரப்பின் மீதுள்ள (நகரங்கள் மற்றும் கிராமங்களின்) ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கூடாரத்திலும் இஸ்லாத்தின் இந்தக் கலிமாவை அல்லாஹ் நுழையவைத்தே தீருவான். இதை ஏற்றுக் கொள்பவர்களை அல்லாஹ் கலிமா உடையவர்களாக்கி கண்ணியமளிப்பான். ஏற்காதவர்களை இழிவுபடுத்துவான். பிறகு அவர்கள் முஸ்லிம்களுக்கு (நிர்பந்தமாக) கட்டுப்பட்டு வாழ்வார்கள்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

١٤- عَنِ ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّؒ قَالَ: حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ 1 وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ يَبْكِي طَوِيلاً وَحَوَّلَ وَجْهَهُ إِلَي الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ: يَا أَبَتَاهُ! أَمَا بَشَّرَكَ رَسُولُ اللّٰهِؐ بِكَذَا؟ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللّٰهِؐ بِكَذَا؟ قَالَ: فَأَقْبَلَ بِوَجْهِهِ وَقَالَ: إِنَّ أَفْضَلَ مَانُعِدُّ شَهَادَةُ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللّٰهِؐ إِنِّي قَدْ كُنْتُ عَلَي أَطْبَاقٍ ثَلاَثٍ لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضاً لِرَسُولِ اللّٰهِ مِنِّي وَلاَ أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَي تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللّٰهُ اْلإِسْلاَمَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّؐ فَقُلْتُ: اُبْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ فَبَسَطَ يَمِينَهُ قَالَ: فَقَبَضْتُ يَدِي قَالَ: مَالَكَ يَاعَمْرُو؟ قَالَ قُلْتُ: أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ قَالَ: تَشْتَرِطُ بِمَاذَا؟ قُلْتُ: أَنْ يُغْفَرَ لِي قَالَ: أَمَا عَلِمْتَ يَاعَمْرُو أَنَّ اْلإِسْلاَمَ يَهْدِمُ مَاكَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَاكَانَ قَبْلَهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَاكَانَ قَبْلَهُ وَمَاكَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ رَسُولِ اللّٰهِ وَلاَ أَجَلَّ فِي عَيْنَيَّ مِنْهُ وَمَاكُنْتُ أُطِيقُ أَنْ أَمْلأَ عَيْنِيَّ مِنْهُ إِجْلاَلاً لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لِأَنِّي لَمْ أَكُنْ أَمْلأُ عَيْنَيَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَي تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِي مَا حَالِي فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلاَ تَصْحَبْنِي نَائِحَةٌ وَلانَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي فَسُنُّوا عَلَيَّ التُّرَابَ سَنّاً ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَاتُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّي أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي.

رواه مسلم، باب كون الاسلام يهدم ماقبله…..، رقم:٣٢١

14. ஹஜ்ரத் இப்னு ஷிமாஸா மஹ்ரீ (ரஹ்) கூறுவதாவது: ஹஜ்ரத் அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களின் மரணத் தருவாயில் அவர்கள் அருகில் இருந்தோம். அவர்கள் சுவற்றின் பக்கம் முகத்தைத் திருப்பியவர்களாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள். அன்னாரின் மகனார், “என் அருமை தந்தையே, நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு இன்னின்ன நற்செய்தி சொல்லவில்லையா? இன்னின்ன சுபச் செய்தி வழங்கவில்லையா? தங்களுக்கு கிடைக்க இருக்கும் பாக்கியங்களைப் பற்றிய சுபசெய்தியை தங்களுக்கு சொல்லி இருக்கிறார்களே! அவ்வாறு இருக்க நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? என்று ஆறுதல் கூறித் தேற்றினார்கள். இதைக் கேட்டதும் தங்களது முகத்தை திருப்பி “நாம் மறுமைக்காகத் தயார் செய்து வைத்திருப்பதில் மிக உயர்ந்தது, வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் அவைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்ற சாட்சியம்தான். என் வாழ்நாளில் நான் மூன்று வகையான காலங்களை கடந்துள்ளேன். ஒரு காலத்தில் என்னைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் மீது வெறுப்புக் கொண்டவன் யாரும் இருந்ததில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று மிக்க ஆவல் கொண்டிருந்தேன். இது தான் என் வாழ்நாüல் மிகத் தீய காலமாகும். (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) இதே நிலையில் நான் மரணித்திருந்தால் நிச்சயம் நரகவாசியாகியிருப்பேன்.பிறகு இஸ்லாம் சத்தியமார்க்கம் என்பதை அல்லாஹ் என் உள்ளத்தில் உதிக்கச் செய்தான். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களிடம் உடன் படிக்கை செய்ய வேண்டும். தங்களது திருக்கரங்களை நீட்டுங்கள்’ என்று வேண்டினேன். நபியவர்கள் தங்கள் கைகளை நீட்டினார்கள். நான் என் கையை விலக்கிக் கொண்டேன். “அம்ரே! ஏன் கையை விலக்கிக் கொண்டீர்’’ என்று வினவினார்கள். “தங்களிடம் சில நிபந்தனைகள் இட விரும்புகிறேன்’ என்றேன். என்ன நிபந்தனை?’’ என்றார்கள். “என் பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட வேண்டும்’’ என்றேன். அம்ரே! “குஃப்ருடைய சமயத்தில் நிகழ்ந்த பாவங்கள் அனைத்தையும் இஸ்லாம் அழித்துவிடுகிறது. ஹிஜ்ரத் (அல்லாஹ்வுக்காக குடிபெயர்வது) அதற்கு முன்னுள்ள பாவங்களை அழித்துவிடுகிறது. ஹஜ் அதற்கு முன்னால் செய்த பாவங்களை அழித்துவிடுகிறது என்பது உமக்குத் தெரியாதா?’’ என்று கேட்டார்கள். (என்னுடைய இந்த இரண்டாம் வகையான காலம் எத்தகையதெனில்,) நபி (ஸல்) அவர்களைவிட நேசத்திற்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர் என் பார்வையில் வேறு யாருமில்லை. அன்னாரின் மீதுள்ள கண்ணியத்தின் காரணமாக முழுமையாகக் கண்கொண்டு காண்பதற்கும் எனக்குத் துணிவு பிறக்கவில்லை. என்னிடம் அன்னாரின் தோற்றத்தைப் பற்றி வர்ணிக்குமாறு கூறப்பட்டால் என்னால் வர்ணிக்க இயலாது. ஏனனில் அன்னாரை ஒருபோதும் நான் முழுமையாகப் பார்த்ததில்லை. இந்நிலையில் நான் மரணித்திருந்தால் சுவனவாசிகளில் ஒருவனாக இருப்பேன் என்று ஆதரவு வைக்கிறேன்.பிறகு நாங்கள் சில பொருட்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆனோம். இவைகளுக்கு மத்தியில் எனது நிலை எவ்வாறு இருந்தது என்பதை என்னால் சொல்ல இயலாது. (இது என் வாழ்நாளின் மூன்றாம் பகுதி.) நான் மரணமடைந்ததும் ஒப்பாரிவைத்துக் கூச்சலிடும் பெண்கள் என் ஜனாஸாவைத் தொடர வேண்டாம். (அறியாமைக் காலத்தில் செய்தது போல்) என் ஜனாஸாவுடன் நெருப்பையும் எடுத்துச் செல்லவேண்டாம். என்னை அடக்கம் செய்ததும் கப்ரில் நன்றாக மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள். அதன் பின் என் கப்ருக்கருகில், ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியை பங்கு வைக்கும் நேரமளவு (கலிமாவை நீனைவூட்டியபடி) நில்லுங்கள். அதன் மூலம் உங்களைக் கொண்டு என் மனம் மகிழ்வடையும். மேலும் என் இரட்சகனால் அனுப்பப்படும் மலக்குகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்பதையும் நான் கூர்ந்து கவனித்துக் கொள்வேன் என்று ஹஜ்ரத் அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்)

١٥- عَنْ عُمَرَؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : يَا ابْنَ الْخَطَّابِ! اِذْهَبْ فَنَادِ فِي النَّاسِ إِنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ الْمُؤْمِنُونَ.

رواه مسلم، باب غلظ تحريم الغلول ……، رقم:٣ ٠٩

15. “கத்தாபின் மகனே! முஃமின்கள் மட்டும்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று மக்களிடம் சென்று அறிவிப்புச் செய்வீராக!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

١٦-عَنْ أَبِي لَيْلَيؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: وَيْحَكَ يَا أَبَا سُفْيَانَ! قَدْ جِئْتُكُمْ بِالدُّنْيَا وَاْلآخِرَةِ فَأَسْلِمُوا تَسْلَمُوا.

(وهو بعض الحديث) رواه الطبراني وفيه حرب بن الحسن الطحان وهو ضعيف وقد وثق، مجمع الزوائد:٦/٢٥ ٠

16. “அபூஸுஃப்யானே! உமது நிலை கண்டு நான் பரிதாபப்படுகிறேன். உங்களிடம் இம்மை, மறுமை(யின் நன்மை)யைக் கொண்டு வந்துள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் சாந்தி பெறுவீர்கள்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூஸுஃப்யான் (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறியதாக ஹஜ்ரத் அபூலைலா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்).

١٧- عَنْ أَنَسٍؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّؐ يَقُولُ: إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ شُفِّعْتُ فَقُلْتُ: يَارَبِّ! أَدْخِلِ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ خَرْدَلَةٌ فَيَدْخُلُونَ ثُمَّ أَقُولُ أَدْخِلِ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ أَدْني شَيْءٍ.

رواه البخاري، باب كلام الرب تعالي يوم القيامة…، رقم: ٧٥ ٠٩

17. “கியாமத் நாளில் பரிந்து பேச எனக்கு அனுமதி வழங்கப்படும். “இரட்சகனே! எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் உள்ளதோ அவரைச் சுவனத்தில் நுழைய வைப்பாயாக!’ என்று நான் வேண்டுவேன். அல்லாஹ் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வான். அவர்கள் சுவனம் செல்வார்கள். பிறகு நான் “எவருடைய உள்ளத்தில் அணுவளவேனும் ஈமான் உள்ளதோ அவரையும் சுவனத்தில் சேர்ப்பாயாக!’’ என்று வேண்டுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

١٨- عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ اللّٰهُ تَعَالَي: أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهْرِالْحَيَاةِ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحَبَّةُ فِي جَانِبِ السَّيْلِ اَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً.

رواه البخاري، باب تفاضل اهل الايمان في الاعمال، رقم:٢٢

18. “சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்ற பின், “எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருக்குமோ அவர்களையும் நரகத்திலிருந்து வெளியாக்குங்கள்!’ என்று அல்லாஹ் கூறுவான். அவர்களும் அவ்வாறே நரகிலிருந்து கருகிய நிலையில் வெளியேற்றப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் ஜீவ நதியில் போடப்படுவார்கள். நீர் கண்டதில்லையா? நதிக்கரை ஓரத்தில் வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்ட வித்து (நீரும், எருவும் கலப்பதால்) எவ்வாறு முளையிட்டு பசுமையாக வெளிவருமோ அவ்வாறே புத்தம் புதியவர்களாய் ஜீவ நதியிலிருந்து அவர்கள் வெளியாவார்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

١٩- عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ سَأَلَهُ رَجُلٌ فَقَالَ: يَارَسُولَ اللّٰهِؐ مَااْلإِيمَانُ؟ قَالَ: إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ.

رواه الحاكم وصححه ووافقه الذهبي:١/١٣,١٤

19. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “ஈமான் என்றால் என்ன?’’ என்று வினவினார். “உமது நற்செயல்கள் உம்மை மகிழ்ச்சியடையச் செய்து, உமது தீய செயல்கள் உமக்கு கவலையை உண்டாக்குமேயானால் நீர் முஃமின்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஹாகிம்)

٢٠- عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِؓ أَنَّهُ سَمِعَ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: ذَاقَ طَعْمَ اْلإِيمَانِ مَنْ رَضِيَ بِاللّٰهِ رَبّاً وَّبِاْلإِسْلاَمِ دِيناً وَّبِمُحَمَّدٍ رَسُولاً.

رواه مسلم، باب الدليل علي ان من رضي بالله ربا……، رقم:١٥١

20. நபி (ரலி) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “எவர் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொள்வாரோ, அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக் கொண்டார்.

(முஸ்லிம்)

தெளிவுரை:- அல்லாஹ்வுக்கு அடிபணிவது, இஸ்லாமிய முறைப்படி செயல்படுவது, நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவது ஆகியவைகள் அல்லாஹ் மீதும் அவனுடைய தூதர் மீதும், இஸ்லாத்தின் மீதும் நேசம் கொண்ட நிலையில் ஒருவருக்கு கிடைத்துவிடுமேயானால் நிச்சயமாக ஈமானுடைய ருசியை அவர் பெற்றுக் கொள்வார்.

٢١- عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: ثَلثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ اْلإِيمَانِ: أَنْ يَكُونَ اللّٰهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَيُحِبُّهُ إِلاَّ للّٰهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ.

رواه البخاري، باب حلاوة الايمان، رقم:١٦

21. “(1) அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூல் மீதும் உள்ள நேசம் மற்றவைகளின் நேசத்தைவிட மிகைத்திருப்பதும், (2) யாரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பதும், (3) நெருப்பில் தான் எறியப்படுவதை வெறுப்பது போல் (ஈமான் கொண்ட பிறகு) குஃப்ரின் பக்கம் திரும்புவதை வெறுப்பதும் ஆகிய மூன்று தன்மைகள் எவரிடத்தில் இருக்குமோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٢٢- عَنْ أَبِي أُمَامَةَؓ عَنْ رَسُولِ اللّٰهِ أَنَّهُ قَالَ: مَنْ أَحَبَّ للّٰهِ وَأَبْغَضَ للّٰهِ وَأَعْطَي للّٰهِ وَمَنَعَ للّٰهِ فَقَدِ اسْتَكْمَلَ اْلإِيمَانَ.

رواه ابوداود، باب الدليل علي زيادة الايمان ونقصانه، رقم:٤٦٨١

22. “எவர் அல்லாஹ்வுக்காகவே நேசித்தாரோ, எவர் அல்லாஹ்வுக்காகவே விரோதம் கொண்டாரோ, எவர் அல்லாஹ்வுக்காகவே கொடுத்தாரோ, எவர் அல்லாஹ்வுக்காகவே (கொடுக்காமல்) தடுத்துக் கொண்டாரோ அவர் ஈமானை பரிபூரணமாக்கிக் கொண்டார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்)

٢٣- عَنِ ابْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّؐ أَنَّهُ قَالَ لأَبِي ذَرٍّ: يَا أَبَا ذَرٍّ! أَيُّ عُرَي اْلإِيمَانِ أَوْثَقُ؟ قَالَ: اللّٰهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: اَلْمُوَالاَةُ فيِ اللّٰهِ وَالْحُبُّ فيِ اللّٰهِ وَالْبُغْضُ فيِ اللّٰهِ.

رواه البيهقي في شعب الايمان:٧ /٧٠

23. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களிடம் “அபூதரே! ஈமானின் முடிச்சுகளில் உறுதி வாய்ந்தது எது?’’ என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவன் ரஸூலுமே மிக அறிந்தவர்கள்’’ என்று கூறினார்கள். “அல்லாஹ்வுக்காகவே ஒருவருக்கொருவர் உதவி புரிவது, அல்லாஹ்வுக்காகவே (ஒருவர் மற்றவரை) நேசிப்பது, அல்லாஹ்வுக்காகவே (ஒருவர் மற்றவரை) வெறுப்பது!’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.

(பைஹகீ)

தெளிவுரை:- உலகில் ஒருவர் மற்றவருடன் நட்புக் கொள்வதாக இருந்தாலும் சரி; நட்பைத் துண்டிப்பதாக இருந்தாலும் சரி தன் மனோ இச்சைக்காக அல்லாமல் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டும் இருப்பது ஈமானுடைய கிளைகளில் மிக முக்கியமானதும், உறுதியானதுமாகும்.

٢٤- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : طُوبَي لِمَنْ آمَنَ بِي وَرَآنِي مَرَّةً وَطُوبَي لِمَنْ آمَنَ بِي وَلَمْ يَرَنِي سَبْعَ مِرَارٍ.

رواه احمد:٣ /١٥٥

24. “யார் என்னைப் பார்த்து என் மீது ஈமான் கொண்டாரோ அவருக்கு ஒரு முறை சுபச் செய்தி உண்டாவதாக! யார் என்னைப் பார்க்காமல் என் மீது ஈமான் கொண்டாரோ அவருக்கு ஏழு முறை சுபச் செய்தி உண்டாவதாக!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٢٥- عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ يَزِيدَؒ قَالَ: ذَكَرُوا عِنْدَ عَبْدِ اللّٰهِ أَصْحَابَ مُحَمَّدٍ وَإِيمَانَهُمْ قَالَ: فَقَالَ عَبْدُ اللّٰهِ: إِنَّ أَمْرَ مُحَمَّدٍ كَانَ بَيِّناً لِمَنْ رَآهُ وَالَّذِي لاٰ إِلٰهَ غَيْرُهُ مَا آمَنَ مُؤْمِنٌ أَفْضَلَ مِنْ إِيمَانٍ بِغَيْبٍ ثُمَّ قَرَأَ (المّ ذلِكَ الْكِتبُ لاَرَيْبَ فِيهِ۞) إِلَي قَوْلِهِ تَعَالي (يُؤْمِنُونَ بِالْغَيْب۞).

رواه الحاكم وقال هذا حديث صحيح علي شرط الشيخين ولم يخرجاه ووافقه الذهبي:٢ /٢٦ ٠

25. ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சபையில் நபித் தோழர்கள் பற்றியும், அவர்களது ஈமானுடைய நிலைகள் பற்றியும் சிலர் நினைவு கூர்ந்தார்கள். அச்சமயம் ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களை (ஈமானுடன்) கண்கூடாகப் பார்த்த ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்களின் சத்தியத் தன்மையைப் பற்றி நன்றாகத் தெரிந்து இருந்தார்கள். வணக்கத்திற்குரிய நாயன் எவனைத் தவிர யாருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறைவானவற்றை ஈமான் கொள்வதைவிட சிறந்த ஒன்றை எவரும் ஈமான் கொண்டதில்லை, பிறகு (இதற்கு ஆதாரமாக) (المّ ذلِكَ الْكِتبُ لاَرَيْبَ فِيهِ) ) யிலிருந்து (يُؤْمِنُونَ بِالْغَيْب)வரை ஓதினார்கள். (பொருள்:- அலிப் லாம் மீம், இது (இறை) வேதம். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மறைவானவற்றை நம்பும் பயபக்தியாளர்களுக்கு இது வழிகாட்டுகிறது)

(ஹாகிம்)

٢٦- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؒ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : وَدِدْتُ أَنِّي لَقِيتُ إِخْوَانِي قَالَ: فَقَالَ أَصْحَابُ النَّبِيِّ : أَوَلَيْسَ نَحْنُ إِخْوَانَكَ؟ قَالَ: أَنْتُمْ أَصْحَابِي وَلكِنْ إِخْوَانِيَ الَّذِينَ امَنُوا بِي وَلَمْ يَرَوْنِي.

رواه احمد:٣ /١٥٥

26. “நான் எனது சகோதரர்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “நாங்கள் தங்களின் சகோதரர்கள் இல்லையா?’’ என்று ஸஹாபாக்கள் கேட்டனர். “நீங்கள் என்னுடைய தோழர்கள். எனது சகோதரர்கள் யாரென்றால், என்னைப் பார்க்காமலேயே என் மீது ஈமான் கொள்பவர்கள்’’ என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٢٧- عَنْ أَبِي عَبْدِالرَّحْمنِ الْجُهَنِيِّؓ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللّٰهِ طَلَعَ رَاكِبَانِ فَلَمَّا رَآهُمَا قَالَ: كِنْدِيَّانِ مَذْحِجِيَّانِ حَتَّي أَتَيَاهُ فَإِذَا رِجَالٌ مِنْ مَذْحِجٍ قَالَ فَدَنَا إِلَيْهِ أَحَدُهُمَا لِيُبَايِعَهُ قَالَ فَلَمَّا أَخَذَ بِيَدِهِ قَالَ: يَارَسُولَ اللّٰهِ أَرَأَيْتَ مَنْ رَآكَ فَآمَنَ بِكَ وَصَدَّقَكَ وَاتَّبَعَكَ مَاذَا لَهُ قَالَ: طُوبَي لَهُ قَالَ: فَمَسَحَ عَلَي يَدِهِ فَانْصَرَفَ َثُمَّ أَقْبَلَ اْلآخَرُ حَتَّي أَخَذَ بِيَدِهِ لِيُبَايِعَهُ قَالَ: يَارَسُولَ اللّٰهِ أَرَأَيْتَ مَنْ آمَنَ بِكَ وَصَدَّقَكَ وَاتَّبَعَكَ وَلَمْ يَرَكَ قَالَ: طُوبَي لَهُ ثُمَّ طُوبَي لَهُ ثُمَّ طُوبَي لَهُ قَالَ: فَمَسَحَ عَلَي يَدِهِ فَانْصَرَفَ.

رواه احمد:٤/١٥٢

27. ஹஜ்ரத் அபூஅப்துர்ரஹ்மான் ஜுஹனி (ரலி) அறிவிப்பதாவது: “நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் அமர்ந்திருந்த போது, இரு நபர்கள் தம் வாகனங்களில் வந்தார்கள். அவர்களைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “இவ்விருவரும் கிந்தா மற்றும் மத்ஹிஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்று கூறினார்கள். அவர்களுடன் அவர்களுடைய கோத்திரத்தைச் சேர்ந்த வேறு சிலரும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சத்தியப்பிரமாணம் (பைஅத்) செய்ய நபி (ஸல்) அவர்களை நெருங்கி அவர்களது திருக்கரங்களைப் பற்றிய வண்ணம், “யா ரஸூலல்லாஹ்! யார் தங்களைச் பார்த்துத் தங்கள் மீது நம்பிக்கை கொண்டு தங்களை உண்மைப்படுத்தித் தங்களைப் பின்பற்றினாரோ அவருக்கு என்ன கிடைக்கும்?’’ என்று வினவ, “அவருக்கு நற்பாக்கியங்கள் கிடைக்கும்’ என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர், பெருமானாரின் திருக்கரங்களை (பரக்கத்திற்காக) தடவிய பின் (பைஅத் செய்துவிட்டு) சென்றுவிட்டார்.அதற்குப் பிறகு மற்றோருவர் முன்னேறி சத்தியப்பிரமாணம் செய்ய அன்னாரது கரங்களைப் பற்றி, “யா ரஸூலல்லாஹ்! எவர் தங்களைப் பார்க்காமலே தங்கள் மீது ஈமான் கொண்டு தங்களை உண்மைப்படுத்தி, தங்களைப் பின்பற்றினாரோ அவருக்கு என்ன கிடைக்கும்?’’ என வினவினார். “அவருக்கு நற்பாக்கியங்கள் கிடைக்கும். இன்னும் (அதிகமாக) அவருக்கு நற்பாக்கியங்கள் கிடைக்கும். மேலும் (அதிகமாக) அவருக்கு நற்பாக்கியங்கள் கிடைக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அவரும், பெருமானாரின் திருக்கரங்களை (பரக்கத்திற்காக) தடவிய பின் (பைஅத் செய்துவிட்டுச்) சென்றுவிட்டார்.

(அஹ்மத்)

٢٨- عَنْ أَبِي مُوسيؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ: ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ: رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّد ، وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّي حَقَّ اللّٰهِ تَعَالَي وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ.

رواه البخاري، باب تعليم الرجل امته واهله، رقم:٩٧

28. “மூவருக்கு இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும், (முதலாமவர்) வேதம் அருளப்பட்ட (கிருஸ்தவர் அல்லது யூதர் அவர், தம் முந்தைய நபியின் மீது விசுவாசம் கொண்டு பின்பு முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் ஈமான் கொண்டவர். (இரண்டாமவர்) அல்லாஹ்வின் கடமைகளையும் நிறைவேற்றி, தன் எஜமானனின் கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. (மூன்றாமவர்), தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்ணுக்கு நல்ல முறையில் நல்லொழுக்கம் கற்றுத்தந்து, நல்ல முறையில் (மார்க்கக்) கல்வியை கற்றுத்தந்து, அவளை உரிமைவிட்டு தானே மணமுடித்துக் கொண்டவர். (இம்மூவருக்கும் இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும்)’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

தெளிவுரை:- இவர்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கு பிறருக்கு வழங்கப்படுவதைப் போன்று இருமடங்கு நன்மைகள் வழங்கப்படும். உதாரணமாக, தொழுபவருக்குப் பத்து நன்மைகள் கிடைக்குமென்றால், இம்மூவரில் ஒருவர் தொழுதால் அவருக்கு இருபது நன்மைகள் கிடைக்கும் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.

(மளாஹிரூல் ஹக்)

٢٩- عَنْ أَوْسَطَؒ قَالَ: خَطَبَنَا أَبُو بَكْرٍ 1 فَقَالَ: قَامَ رَسُولُ اللّٰهِؐ مَقَامِي هذَا عَامَ اْلاَوَّلِ وَبَكَي أَبُو بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ: سَلُوا اللّٰهَ الْمُعَافَاةَ أَوْقَالَ الْعَافِيَةَ فَلَمْ يُؤْتَ أَحَدٌ قَطُّ بَعْدَ الْيَقِينِ أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ أَوِالْمُعَافَاةِ.

رواه احمد:١ /٣

29. “ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு முறை பிரசங்கம் நிகழ்த்தும் போது, “கடந்த வருடம் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் நிற்கும் இதே இடத்தில் (பிரசங்கம் செய்ய) நின்றிருந்தார்கள்’’ என்று கூறி அழ ஆரம்பித்தார்கள். பிறகு “அல்லாஹ்விடம் சுகத்தைக் கேளுங்கள். ஏனேனில், இறை நம்பிக்கைக்குப் பிறகு சுகத்தைவிட சிறந்த பாக்கியம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை’’ என்று கூறியதாக ஹஜ்ரத் அவ்ஸத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٣٠ – عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِؓ أَنَّ النَّبِيَّؐ قَالَ: أَوَّلُ صَلاَحِ هذِهِ اْلاَمَّةِ بِالْيَقِينِ وَالزُّهْدِ وَأَوَّلُ فَسَادِهَا بِالْبُخْلِ وَاْلاَمَلِ.

رواه البيهقي:٧ /٤٢٧

30. “இந்த சமுதாயத்தின் சீர்திருத்தம் உறுதியான நம்பிக்கை (யகீன்) மற்றும் உலகப் பற்றின்மையைக் கொண்டு ஆரம்பமானது. இந்த சமுதாயத்தின் சீரழிவு, கருமித்தனம் மற்றும் (உலகின் மீதான) அதீத நம்பிக்கையைக் கொண்டு ஆரம்பமாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) அவர்களின் பேரனார் ஹஜ்ரத் அம்ர் இப்னு ஷுஐப் (ரலி) அவர்கள் தன் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்.

(பைஹகீ)

٣١ – عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَتَوَكَّلُونَ عَلَي اللّٰهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا تُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصاً وَتَرُوحُ بِطَاناً.

رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب في التوكل علي الله، رقم:٢٣٤٤

31. “நீங்கள் அல்லாஹ்வின் மீது முறையாக (தவக்குல்) பரஞ்சாட்டுவீர்களாயின் பறவைகளுடைய (ரிஸ்க்) தேவைகள் நிறைவேற்றப்படுவது போல், உங்களுடைய தேவைகளும் நிறைவேற்றப்படும். அப்பறவைகள் அதிகாலையில் பசித்த நிலையில் வெளியேறுகின்றன. மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

٣٢ – عَنْ جَابِر ِبْنِ عَبْد ِاللّٰهِؓ أَخْبَرَهُ أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللّٰهِ قِبَلَ نَجْدٍ فَلَمَّا قَفَلَ رَسُولُ اللّٰهِؐ قَفَلَ مَعَهُ فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ فَنَزَلَ رَسُولُ اللّٰهِؐ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ فَنَزَلَ رَسُولُ اللّٰهِؐ تَحْتَ شَجَرَةٍ وَعَلَّقَ بِهَا سَيْفَهُ وَنِمْنَا نَوْمَةً فَإِذَا رَسُولُ اللّٰهِؐ يَدْعُونَا وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ فَقَالَ: إِنَّ هذَا اِخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتاً فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ فَقُلْتُ: اللّٰهُ ثَلاَثاً وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ.

رواه البخاري، باب من علق سيفه بالشجر……، رقم:٢٩١ ٠

32. ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பதாவது: “ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் நஜ்து நாட்டுக்கருகில் நடைபெற்ற ஒரு போரில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்கள். போர் முடிந்தபின் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். ஸஹாபாக்கள் அனைவரும் நண்பகல் நேரத்தில் முள் செடிகள் நிறைந்த ஒரு காட்டை அடைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அங்கு ஓய்வெடுக்கத் தங்கினார்கள். மற்ற ஸஹாபாக்கள் ஆங்காங்கே மரநிழலைத் தேடிச் சென்றுவிட்டார்கள். தமது வாளை மரக்கிளையில் தொங்கவைத்துவிட்டு நபி (ஸல்) அவர்களும் ஒரு மரத்திற்குக் கீழே ஓய்வெடுத்தார்கள். நாங்களும் சிறிது நேரம் (மரங்களுக்குக் கீழே) உறங்கினோம். திடீரென ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (அவ்விடத்தை நாங்கள் சென்று பார்த்த போது) அங்கே நபி (ஸல்) அவர்களின் அருகில் ஒரு காபிர் கிராமவாசி இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவன் எனது வாளை உருவிக் கொண்டான். நான் விழித்ததும் இவன் கையில் எனது வாள் உருவிய நிலையில் இருக்கக் கண்டேன். “என்னிடமிருந்து உம்மைக்காப்பவன் யார்?’ என்று என்னிடம் கேட்டான். நான் “அல்லாஹ்!’ என்று மூன்று முறை கூறினேன்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிராமவாசியை தண்டிக்கவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

(புகாரி)

٣٣ – عَنْ صَالِحِ بْنِ مِسْمَارٍ وَجَعْفَرِ بْنِ بُرْقَانَؒ أَنَّ النَّبِيَّؐ قَالَ لِلْحَارِثِ بْنِ مَالِكٍ:مَاأَنْتَ يَاحَارِثَ بْنَ مَالِكٍ قَالَ: مُؤْمِنٌ يَارَسُولَ اللّٰهِ قَالَ: مُؤْمِنٌ حَقّاً؟ قَالَ: مُؤْمِنٌ حَقّاً قَالَ: فَإِنَّ لِكُلِّ حَقٍّ حَقِيقَةً فَمَا حَقِيقَةُ ذلِكَ؟ قَالَ: عَزَفْتُ نَفْسِي مِنَ الدُّنْيَا وَأَسْهَرْتُ لَيْلِي وَأَظْمَأْتُ نَهَارِي وَكَأَنِّي أَنْظُرُ إِلي عَرْشِ رَبِّي حِينَ يُجَاءُ بِهِ وَكَأَنِّي أَنْظُرُ إِلي أَهْلِ الْجَنَّةَ يَتَزَاوَرُونَ فِيهَا وَكَأَنِّي أَسْمَعُ عُوَاءَ أَهْلِ النَّارِ فَقَالَ النَّبِيُّؐ : مُؤْمِنٌ نُوِّرَ قَلْبُهُ.

رواه عبدالرزاق في مصنفه، باب الايمان والاسلام:١١/ ١٢٩

33. “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் ஹாரிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், “ஹாரிஸ் இப்னு மாலிக்கே! நீர் எந்த நிலையில் உள்ளீர்?’’ என்று கேட்டார்கள். (அல்லாஹ்வின் அருளால்) “ஈமானுடன் உள்ளேன்!’ எனக் கூறினார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் “உண்மையான முஃமினாக உள்ளீரா?’’ என்று கேட்க “ஆம்! உண்மையான முஃமின்’’ என அவர்கள் பதிலளித்தார்கள். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் “ஒவ்வொரு பொருளுக்கும் அந்தரங்கம் ஒன்று உண்டு. உமது ஈமானின் அந்தரங்க நிலை என்ன?’’ என்று கேட்க, “எனது உள்ளத்தை உலக சிந்தனையை விட்டும் அகற்றிவிட்டேன். இரவில் விழித்து (வணக்கத்தில் ஈடுபட்டு) இருக்கிறேன். பகலில் தாகித்து (நோன்பு நோற்று) இருக்கிறேன். எனது ரப்பின் அர்ஷ் என் முன் கொண்டு வரப்படும்போது கண்ணால் பார்ப்பதைப் போல் உணர்கிறேன். சுவனவாசிகள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதை காண்பது போல் உணர்கிறேன். நரகவாசிகள் கூக்குரலிடுவதை கேட்பதைப் போல் உணர்கிறேன். (ஆக மறுமையின் சிந்தனை எந்நேரமும் எனது சிந்தனையில் இருக்கிறது) என்று பதில் கூறினார்கள். அவர்களது பதிலைக் கேட்டதும் “(நீர் ஈமானின்) பிரகாசத்தால் உள்ளம் ஒளியூட்டப்பட்ட முஃமின்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் ஸாலிஹ் இப்னு மிஸ்மார் மற்றும் ஹஜ்ரத் ஜஃபர் இப்னு ஃபுர்கான் (ரஹ்) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.

(முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்)

٣٤- عَنْ مَاعِزٍؓ عَنِ النَّبِيِّؐ أَنَّهُ سُئِلَ: أَيُّ اْلاَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: إِيمَانٌ بِاللّٰهِ وَحْدَهُ ثُمَّ الْجِهَادُ ثُمَّ حَجَّةٌ بَرَّةٌ تَفْضُلُ سَائِرَ الْعَمَلِ كَمَا بَيْنَ مَطْلَعِ الشَّمْسِ إِلي مَغْرِبِهَا.

رواه احمد:٤/٣٤٢

34. நபி (ஸல்) அவர்களிடம், “அமல்களில் மிகச் சிறந்தது எது? என்று கேட்கப்பட்டபோது, “ஏகனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வது, பிறகு ஜிஹாது, பிறகு ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ், இந்த அமல்கள் மற்ற ஏனைய அமல்களைவிட மிகச்சிறந்தவைகளாகும். இவற்றிற்கும் மற்ற அமல்களுக்கும் இடையிலான வித்தியாசம் கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் போன்”தாகும்’’ என்று நபி (ஸல்) சொன்னார்கள் என ஹஜ்ரத் மாஇஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٣٥- عَنْ أَبِي أُمَامَةَؓ قَالَ: ذَكَرَ أَصْحَابُ رَسُولِ اللّٰهِ يَوْماً عِنْدَهُ الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللّٰهِؐ : أَلاَ تَسْمَعُونَ أَلاَ تَسْمَعُونَ! إِنَّ الْبَذَاذَةَ مِنَ اْلإِيمَانِ إِنَّ الْبَذَاذَةَ مِنَ اْلإِيمَانِ يَعْنِي: اَلتَّقَحُّلَ.

رواه ابوداود، باب النهي عن كثير من الارفاه رقم:٤١٦١

35. “ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் சபையில் ஸஹாபாக்கள் உலகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். “கவனமாகக் கேளுங்கள்! கவனமாகக் கேளுங்கள்! நிச்சயமாக எளிமை ஈமானின் ஒது பகுதியாகும். நிச்சயமாக எளிமை ஈமானின் ஒது பகுதியாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்)

தெளிவுரை:- தகஹ்ஹுல் என்பது அகராதியில் பசுமையான பொருள் வறட்சியால் காய்ந்து போவதற்கு சொல்லப்படும். தன் வாழ்க்கையில் பகட்டையும், அலங்காரத்தையும், ஆடம்பரத்தையும் விட்டுவிட்டு சிரமமான கடினமான வாழ்க்கையை மேற்கொள்வதால் ஏற்படும் வறட்சி நிலையே ஹதீஸில் கூறப்பட்டுள்ள “தகஹ்ஹுல்’ என்ற வார்த்தையின் கருத்தாகும்.

(பத்லுல் மஜ்ஹூத்)

٣٦- عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَؓ قَالَ فَأَيُّ اْلإِيمَإِن أَفْضَلُ؟ قَالَ: الْهِجْرَةُ قَالَ: فَمَا الْهِجْرَةُ؟ قَالَ: تَهْجُرُالسُّوءَ.

(وهو بعض/ الحديث) رواه احمد:٤/١١٤

36. நபி (ஸல்) அவர்களிடம் “மிகச்சிறந்த ஈமான் எது? என்று ஒருவர் கேட்டார். “ஹிஜ்ரத் (துடன் சேர்ந்த ஈமான்)’’ என்று பதில் சொன்னார்கள். மீண்டும் அவர் “ஹிஜ்ரத் என்றால் என்ன? என்று கேட்க, “தீய காரியங்களை நீர் விட்டு விடுவது’’ என்று பதிலளித்தார்கள் என்று ஹஜ்ரத் அம்ர் இப்னு அபஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٣٧- عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِاللّٰهِ الثَّقَفِيِّؓ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللّٰهِؐ قُلْ لِي فِي اْلإِسْلاَمِ قَوْلاً لاَأَسْاَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ وَفِي حَدِيثِ أَبِي أُسَامَةَ: غَيْرَكَ قَالَ: قُلْ آمَنْتُ بِاللّٰهِ ثُمَّ اسْتَقِمْ.

رواه مسلم، باب جامع اوصاف الاسلام، رقم:١٥٩

37. நான் நபி (ஸல்) அவர்களிடம், “யா ரஸூலல்லாஹ்! தங்களுக்குப் பிறகு யாரிடமும் கேட்கத் தேவைப்படாத வகையில் இஸ்லாத்தைப் பற்றித் தாங்கள் விளக்கமாகக் கூறுங்கள் என்று வேண்டினேன். “அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டேன்’’ என்று சொல்லி அதன் மீது நீர் உறுதியாக நிலைத்திருப்பீராக! என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள் என்று ஹஜ்ரத் ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் ஸகபீ [ரஹ்] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

தெளிவுரை:- முதலில் அல்லாஹ்வின் மீதும், அவனது பண்புகளின் மீதும் மனதால் ஈமான் கொண்டு பிறகு அல்லாஹ்வுடைய சட்டங்களையும் அவனது ரஸூலுடைய வழிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஈமான் கொள்வதும், அமல் செய்வதும் தற்காலிகமானதாக இல்லாமல் அதன் மீது உறுதியாக நிலைத்திருக்கவும் வேண்டும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.

(மளாஹிரூல் ஹக்)

٣٨- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ اْلإِيمَانَ لَيَخْلُقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلُقُ الثَّوْبُ الْخَلِقُ فَاسْئَلُوا للّٰهَ أَنْ يُّجَدِّدَ اْلإِيمَانَ فِي قُلُوبِكُمْ.

رواه الحاكم وقال هذا حديث لم يخرج في الصحيحين ورواته مصريون ثقات، وقداحتج مسلم في الصحيح، ووافقه الذهبي:١/٤

38. “துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமடைந்து) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானைப் புதுப்பிக்க அல்லாஹ்விடம் துஆச் செய்து வாருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்தத்ரக் ஹாகிம்)

٣٩- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : إِنَّ اللّٰهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَاوَسْوَسَتْ بِهِ صُدُورُهَا مَالَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ.

رواه البخاري، باب الخطأ والنسيان في العتاقة.رقم:٢٥٢٨

39. “எனது உம்மத்தினரின் உள்ளங்கள் (ஈமானுக்குப் புறம்பாகவும் பாவங்கள் பற்றியும்) ஏற்படுத்தும் ஊசலாட்டங்களை அதை செயல்படுத்தாமலும் அல்லது அதைப் பற்றிப் (மற்றவர்களிடம்) பேசாமலும் இருக்கும்வரை அல்லாஹ் மன்னித்துவிடுவான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٤٠- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّؐ فَسَاَلُوهُ: إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَايَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ قَالَ: أَوَقَدْ وَجَدْتُّمُوهُ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: ذلِكَ صَرِيحُ اْلإِيمَانِ.

رواه مسلم، باب بيان الوسوسة في الايمان……، رقم :٣٤٠

40. “சில ஸஹாபாக்கள் நபி (ரலி) அவர்களின் சமூகத்திற்கு வந்து “எங்கள் உள்ளங்களில் சில எண்ணங்கள் உதிக்கின்றன. அவைகளை நாவால் மொழிவதை நாங்கள் பாவமாக கருதுகிறோம்’ என்றார்கள். உண்மையாகவே அவற்றை நாவால் மொழிவதை வெறுக்கிறீர்களா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க “ஆம்!’’ என்றார்கள். “இதுதான் வெளிப்படையான ஈமான்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

தெளிவுரை:- இந்த ஊசலாட்டங்களை நம்புவது ஒரு புறமிருக்க அவைகளை நாவால் மொழிவதை பாவமாக கருதுகிறீர்கள். அவ்வாறு பாவமாக கருதுவதே நிறைவான ஈமானின் அடையாளமாகும்.

(நவவி)

٤١- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : أَكْثِرُوا مِنْ شَهَادَةِ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ قَبْلَ أَنْ يُحَالَ بَيْنَكُمْ وَبَيْنَهَا.

رواه ابو يعلي باسناد جيد قوي، الترغيب:٢ /٤١٦

41. “(மரணம், வியாதி போன்ற காரணத்தால்) உங்களுக்கும் “லா இலாஹ இல்லல்லாஹ்’’ வின் சாட்சியத்திற்கும் இடையில் தடை ஏற்படும் முன் நீங்கள் அதை அதிகமாகக் கூறிக்கொள்ளுங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூயஃலா, தர்ஙீப்)

٤٢- عَنْ عُثْمَانَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ دَخَلَ الْجَنَّةَ.

رواه مسلم، باب الدليل علي ان من مات ……، رقم:١٣٦

42. “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதியாக அறிந்த நிலையில் எவர் மரணமடைகிறாரோ அவர் சுவனத்தில் நுழைவார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

٤٣-عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَؓ قَالَ:قَالَ رَسُولُ اللّٰهِؐ :مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّ اللّٰهَ حَقٌّ دَخَلَ الْجَنَّةَ.

رواه ابو يعلي في مسنده١/ ١٥٩

43. “அல்லாஹ் இருப்பது உண்மை என்று உறுதியாக அறிந்த நிலையில் எவர் மரணிப்பாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூயஃலா)

٤٤- عَنْ عَلِيٍّؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : قَالَ اللّٰهُ تَعَالَي: إِنِّي أَنَا اللّٰهُ لاٰ إِلٰهَ إِلاَّ أَنَا مَنْ أَقَرَّ لِي بِالتَّوْحِيدِ دَخَلَ حِصْنِي وَمَنْ دَخَلَ حِصْنِي أَمِنَ مِنْ عَذَابِي.

رواه الشيرازي وهو حديث صحيح الجامع الصغير:٢ /٢٤٣

44. “நிச்சயமாக நானே அல்லாஹ்; என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எவர் எனது ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டாரோ அவர் எனது கோட்டையில் நுழைந்துவிட்டார். எவர் எனது கோட்டையில் நுழைந்துவிட்டாரோ, அவர் எனது வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெற்றுவிட்டார்’’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் என்று ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஷீராஸீ)

٤٥- عَنْ مَكْحُولٍؒ يُحَدِّثُ قَالَ: جَاءَ شَيْخٌ كَبِيرٌ هَرِمٌ قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَي عَيْنَيْهِ فَقَالَ: يَارَسُولَ اللّٰهِ رَجُلٌ غَدَرَ وَفَجَرَ وَ لَمْ يَدَعْ حَاجَةً وَلاَدَاجَةً إِلاَّ اقْتَطَفَهَا بِيَمِينِهِ لَوْ قُسِمَتْ خَطِيئَتُهُ بَيْنَ أَهْلِ اْلاَرْضِ لأَوْبَقَتْهُمْ فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟ فَقَالَ النَّبِيُّؐ : أَأَسْلَمْتَ؟ فَقَالَ: أَمَّا أَنَا فَأَشْهَدُ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَقَالَ النَّبِيُّؐ : فَإِنَّ اللّٰهَ غَافِرٌ لَكَ مَاكُنْتَ كَذلِكَ وَمُبَدِّلٌ سَيِّئَاتِكَ حَسَنَاتٍ فَقَالَ: يَارَسُولَ اللّٰهِ وَغَدَرَاتِي وَفَجَرَاتِي؟ فَقَالَ: وَغَدَرَاتِكَ وَفَجَرَاتِكَ فَوَلَّي الرَّجُلُ يُكَبِّرُ وَيُهَلِّلُ.

التفسير لابن الكثير:٣ /٣٤ ٠

45. ஹஜ்ரத் மக்ஹூல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “மிகவும் வயது முதிர்ந்த ஒருவர், (முதுமையால்) அவரது விழிகளின் மீது புருவங்கள் தொங்கி கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, யா ரஸூலல்லாஹ் “ஒரு மனிதர், வாக்குமீறியவர்; தீய காரியம் (அதிகம்) செய்தவர்; அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத எந்த மனோ இச்சையையும் விடாமல் பூர்த்தி செய்தவர்; அவர் செய்த பாவங்கள் பூமியில் உள்ளோருக்குப் பங்கிடப்பட்டால் அனைவரையும் அழித்துவிடும் (அளவுக்கு அதிகமானவை); அவர் பாவமீட்சி பெறமுடியுமா? என்று கேட்டார். “நீர் இஸ்லாத்தைத் தழுவிவிட்டீரா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “ஆம்! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையும் இல்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதரும் ஆவார்கள் என சாட்சி கூறுகிறேன்’’ என்று கூறினார். “இவ்வாறே” நீர் (இக்கலிமாவின் மீது உறுதியாக) இருந்தால் அல்லாஹ் உமது (பாவங்கள் அனைத்தையும்) மன்னிக்ககூடியவன். மேலும், உமது தீமைகளை நன்மைகளாக மாற்றக்கூடியவன்’’ என்று கூறினார்கள். “யா ரஸூலல்லாஹ்! (நான் முன் செய்த) எனது வாக்குமீறல்களையும், பாவங்களையும்கூட அல்லாஹ் மன்னித்து விடுவானா?’’ என்று கேட்டார். “ஆம்! உமது வாக்குமீறல்களையும், பாவங்களையும் மன்னித்து விடுவான்’’ என பதிலளித்தார்கள். இதைக் கேட்ட அம்முதியவர், (மிக்க மகிழ்ச்சி கொண்டவராக) “அல்லாஹு அக்பர் . லா இலாஹ இல்லல்லாஹ்!’ எனக் கூறியவராகத் திரும்பிச் சென்றார்.

(தஃப்ஸீர் இப்னு கஸீர்)

٤٦- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ يَقُولُ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِنَّ اللّٰهَ سَيُخَلِّصُ رَجُلاً مِنْ أُمَّتِي عَلَي رُؤُوسِ الْخَلاَئِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَّتِسْعِينَ سِجِلاًّ كُلُّ سِجِلٍّ مِّثْلُ مَدِّ الْبَصَرِ ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هذَا شَيْئاً؟ أَظَلَمَكَ كَتَبَتِيَ الْحَافِظُونَ؟ يَقُولُ: لاَ يَارَبِّ! فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ؟ فَيَقُولُ: لاَ يَارَبِّ! فَيَقُولُ: بَلَي إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً فَإِنَّهُ لاَظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ فَيُخْرَجُ بِطَاقَةٌ فِيهَا أَشْهَدُ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيَقُولُ: اُحْضُرْ وَزْنَكَ فَيَقُولُ: يَارَبِّ! مَا هذِهِ الْبِطَاقَةُ مَعَ هذِهِ السِّجِلاَّتِ؟ فَقَالَ: فَإِنَّكَ لاَ تُظْلَمُ قَالَ: فَتُوضَعُ السِّجِلاَّتُ فِي كِفَّةٍ وَالْبِطَاقَةُ فِي كِفَّةٍ فَطَاشَتِ السِّجِلاَّتُ وَثَقُلَتِ الْبِطَاقَةُ وَلاَ يَثْقُلُ مَعَ اسْمِ اللّٰهِ شَيْءٌ.

رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ماجاء فيمن يموت:٢٦٣٩

46. “கியாமத் நாளில் அல்லாஹ் எனது உம்மத்திலிருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து மக்கள் அனைவருக்கும் முன்னால் நிறுத்துவான். அம்மனிதனுக்கு முன்னால் அவனது செயல்கள் பதிவு செய்யப்பட்ட 99 ஏடுகளைப் அல்லாஹ் பரப்புவான். ஒவ்வொன்றும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை இருக்கும். “இந்த ஏடுகளில் எதையாவது மறுக்கிறாயா? அமல்களை எழுத நியமிக்கப்பட்ட எனது வானவர்கள் உனக்கு ஏதேனும் அநீதம் இழைத்தார்களா? (செய்யாத பாவத்தை எழுதிவிட்டனரா? அல்லது செய்த பாவத்தைவிட அதிகமாக எழுதிவிட்டனரா?) என்று அவனிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், “இல்லை, என் இரட்சகனே!’’ (மறுப்பதற்கும் இடமில்லை. வானவர்களும் அநீதம் இழைக்கவில்லை) என்பான்.“உனது தீய செயல்களுக்கு ஏதேனும் காரணம் கூறுகிறாயா?’’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கும் அவன் “இல்லை, என் இரட்சனே!’’ என்பான். “சரி! உனது நன்மையொன்று நம்மிடம் உள்ளது. இன்று உன் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது!’’ என்று அல்லாஹ் கூறுவான். பின்னர் “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ’ என்று எழுதப்பட்ட ஒரு துண்டுச் சீட்டு வெளியாக்கப்படும். அல்லாஹ் “அதை எடைபோடு’’ என்பான். “இறைவா! இத்தனை ஏடுகளுக்கு முன் இந்தத் துண்டுக் காகிதம் என்ன பலன் தரும்!’’ என்று அவன் கேட்பான். “உனக்கு எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது!’’ என்று கூறப்படும். பின்பு அத்தனை ஏடுகளும் தராசுடைய ஒரு தட்டிலும், அந்தத் துண்டுச் சீட்டு இன்னோரு தட்டிலும் வைக்கப்படும். அந்தத் துண்டுச் சீட்டின் கனத்தால் ஏடுகள் நிறைந்த தட்டு (மேலே உயர்ந்து) பறந்துவிடும். அல்லாஹ்வின் திருநாமத்திற்கு முன் எந்தப் பொருளுக்கும் எந்தவித மதிப்பும் இல்லை (என்பதுதான் உண்மை)’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(திர்மிதீ)

٤٧- عَنْ أَبِي عَمْرَةَ اْلاَنْصَارِيِّؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : أَشْهَدُ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنِّي رَسُولُ اللّٰهِؐ لاَيَلْقَي اللّٰهَ عَبْدٌ مُؤْمِنٌ بِهَا إِلاَّ حَجَبَتْهُ عَنِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَفِي رِوَايَةٍ: لاَيَلْقَي اللّٰهَ بِهِمَا أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ أُدْخِلَ الْجَنَّةَ عَلَي مَاكَانَ فِيهِ.

رواه احمد والطبراني في الكبير والاوسط ورجاله ثقات، مجمع الزوائد:١/١٦٥

47. “அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்’ என்” சாட்சியத்துடன் அதன் மீது முழு நம்பிக்கை கொண்டவராக எந்த அடியார் கியாமத் நாளில் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவரை இக்கலிமா நிச்சயம் நரகத்தைவிட்டும் தடுக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஅம்ரா அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“(அல்லாஹ்வின் ஏகத்துவம், நபி (ஸல்) அவர்களின் நபித்துவம் ஆகிய) இவ்விரு சாட்சியங்களின் மீது உறுதி கொண்டவராக எந்த அடியார் கியாமத் நாளில் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவர் சுவனத்தில் நுழைவிக்கப்படுவார். அவரது அமல்களின் ஏட்டில் பாவங்கள் எவ்வளவு இருந்தாலும் சரியே’’ என்று மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளது.

(அஹ்மத்)

தெளிவுரை:- “எவர் கலிமா ஷஹாதத்தை, அதாவது அல்லாஹ்வின் ஏகத்துவம் மற்றும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் அல்லாஹ்வை சந்திப்பாரோ அவரது பட்டோலையில் பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் தனது பேரருளால் அவற்றை மன்னித்து உடனடியாகவோ அல்லது பாவங்களுக்குத் தக்க தண்டனை கொடுத்து அதன் பின்னரோ நிச்சயம் அவரை சுவனத்தில் நுழைய வைப்பான்’’ என்று இந்த ஹதீஸ் மற்றும் இது போன்” ஹதீஸ்களுக்கு மற்ற ஹதீஸ்களின் ஒளியில் விரிவுரையாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.

(மஆரிஃபுல் ஹதீஸ்)

٤٨- عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: لاَ يَشْهَدُ أَحَدٌ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنِّي رَسُولُ اللّٰهِؐ فَيَدْخُلَ النَّارَ أَوْ تَطْعَمَهُ.

(وهو بعض الحديث) رواه مسلم باب الدليل علي ان من مات … رقم:١٤٩

48. “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நான் (முஹம்மது (ஸல்) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி சொன்ன ஒருவர் நரகில் நுழையவும் மாட்டார். நரக நெருப்பு அவரைப் புசிக்கவும் செய்யாது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இத்பான் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

٤٩- عَنْ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَنْ شَهِدَ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنْ مُحَمَّدًا رَسُولُ اللّٰهِؐ فَذَلَّ بِهَا لِسَانُهُ وَاطْمَأَنَّ بِهَا قَلْبُهُ لَمْ تَطْعَمْهُ النَّارُ.

رواه البيهقي في شعب الايمان:١/٤١

49. “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், நான் (முஹம்மது (ஸல்) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் என்றும் எவர் சாட்சி கூறி அவரது நாவும் இந்தக் கலிமா(தய்யிபா)வில் திலைத்து அவரது உள்ளமும் இந்தக் கலிமாவால் நிம்மதி அடைகிறதோ அவரை நரக நெருப்புத் தீண்டாது’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று தம் தந்தை வாயிலாக ஹஜ்ரத் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பைஹகீ)

٥٠- عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: مَا مِنْ نَفْسٍ تَمُوتُ وَهِيَ تَشْهَدُ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنِّي رَسُولُ اللّٰهِؐ يَرْجِعُ ذلِكَ إِليَ قَلْبٍ مُوقِنٍ إِلاَّ غَفَرَ اللّٰهُ لَهَا.

رواه احمد:٥/ ٢٢٩

50. “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்றும், நான் அல்லாஹ்வின் ரஸூல் என்றும் உறுதியான உள்ளத்துடன் சாட்சி சொல்லிய நிலையில் எம்மனிதர் மரணமடைகிறாரோ, அவரை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் என ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்)

٥١- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ وَمُعَاذٌ رَدِيفُهُ عَلَي الرَّحْلِ قَالَ: يَامُعَاذَ بْنَ جَبَلٍ؟ قَالَ: لَبَّيْكَ يَارَسُولَ اللّٰهِ وَسَعْدَيْكَ قَالَ: يَامُعَاذُ! قَالَ: لَبَّيْكَ يَارَسُولَ اللّٰهِ وَسَعْدَيْكَ ثَلاَثاً قَالَ: مَامِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللّٰهِؐ صِدْقاً مِّنْ قَلْبِهِ إِلاَّ حَرَّمَهُ اللّٰهُ عَلَي النَّارِ قَالَ: يَارَسُولَ اللّٰهِ أَفَلاَ أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِرُوا؟ قَالَ: إِذاً يَتَّكِلُوا وَأَخْبَرَ بِهَا مُعَاذٌ عِنْدَ مَوْتِهِ تَأَثُّماً.

رواه البخاري، باب من خص بالعلم قوما.، رقم:١٢٨

51. “ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களும் ஒரே வாகனத்தில் பயணம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “முஆத் இப்னு ஜபலே!’’ என்று அழைத்தபோது, “லப்பைக் யா ரஸூலல்லாஹ் வ ஸஃதைக் (அல்லாஹ்வின் தூதரே, இதோ தங்கள் சமூகத்தில் வந்து விட்டேன்) என்று முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு மீண்டும் “முஆதே!’ என்று அழைக்க “லப்பைக் யா ரஸூலல்லாஹ் வ ஸஃதைக்’’ என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறே மூன்று முறை அழைத்த பிறகு “எம்மனிதர் உண்மையான உள்ளத்துடன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “இந்த (சுபச்) செய்தியை மக்களுக்கு நான் சொல்லட்டுமா? அவர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்களே!’’ என்று ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். “அவர்கள் இதன் மீதே நம்பிக்கைக் கொண்டு (அமல் செய்வதை விட்டு) விடுவார்கள்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸை மறைத்த) குற்றம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் மரண வேளையில் இந்த ஹதீஸை அறிவித்தார்கள்’’ என்று ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

தெளிவுரை: ‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற உறுதி மொழி இருந்தால் மட்டும் போதும் நரகம் ஹராமாக்கப்படும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ள இத்தகைய ஹதீஸ்களுக்கு விரிவுரையாளர்கள் இரண்டு வித கருத்துகளைக் கூறுகின்றனர். 1. இக்கலிமாவை உண்மையான மனதுடன் கூறி அதில் உறுதியாக இருப்பவர்கள் (அவர்கள் வேறு பாவங்கள் செய்திருந்தாலும்) நிரந்தரமாக நரக வேதனை என்பது கிடையாது. காஃபிர்களையும். முஷ்ரிக்குகளையும் போல் நிரந்தரமாக அவர்கள் நரகிலிருக்கமாட்டார்கள். மாறாக அவர்களின் தீய செயல்களுக்காகக் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நரகில் போடப்படுவார்கள். 2. இக்கலிமாவின் சாட்சியம் முழு இஸ்லாத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. எனவே எவர் உண்மையான மனதுடன் நன்றாக விளங்கி சாட்சி பகர்கிறாரோ அவரது வாழ்க்கை முழுமையாக இஸ்லாமிய முறைப்படி இருக்கும்.

(மளாஹிரூல் ஹக்)

٥٢- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَاَلَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ خَالِصاً مِنْ قِبَلِ نَفْسِه.

(وهو بعض الحديث) رواه البخاري، باب صفة الجنة والنار، رقم:٦٥٧٠

52. “எம்மனிதர் மனத்தூய்மையுடன் “லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுகிறாரோ அவர்தான் எனது சிபாரிசைக் கொண்டு நற்பாக்கியம் பெற்றவர்’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٥٣- عَنْ رِفَاعَةَ الْجُهَنِيِّؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : أَشْهَدُ عِنْدَ اللّٰهِ لاَيَمُوتُ عَبْدٌ يَشْهَدُ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنِّي رَسُولُ اللّٰهِؐ صِدْقاً مِّنْ قَلْبِهِ ثُمَّ يُسَدِّدُ إِلاَّ سَلَكَ فِي الْجَنَّةِ.

رواه احمد:٤/١٦

53. “வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்று எவர் உண்மையான உள்ளத்துடன் சாட்சி சொல்லித் தனது அமல்களையும் சரி செய்த நிலையில் மரணிப்பாரோ, அவர் நிச்சயம் சுவனம் செல்வார்’’ என நான் அல்லாஹ்விடம் சாட்சி சொல்கிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ரிஃபாஆ அல்ஜூஹனீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்)

٥٤- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِنِّي لاَعْلَمُ كَلِمَةً لاَيَقُولُهَا عَبْدٌ حَقّاً مِنْ قَلْبِهِ فَيَمُوتُ عَلَي ذلِكَ إِلاَّ حَرَّمَهُ اللّٰهُ عَلَي النَّارِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ.

رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط الشيخين ولم يخرجاه ووافقه الذهبي:١/٧٢

54. “நான் ஒரு கலிமாவை அறிவேன். எந்த அடியார் அதனை தன் மனதால் உண்மையென விளங்கி (நாவினால்) அதனைக் கூறி, அதே நிலையில் மரணிப்பாரோ அல்லாஹ் அவர் மீது நரக நெருப்பை ஹராமாக்கி விடுவான். அது “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்னும் கலிமாவாகும்’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்தத்ரக் ஹாகிம்)

٥٥- عَنْ عِيَاضِ نِ اْلاَنْصَارِيِّؓ رَفَعَهُ قَالَ: إِنَّ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ كَلِمَةٌ عَلَي اللّٰهِ كَرِيمَةٌ لَهَا عِنْدَ اللّٰهِ مَكَانٌ وَهِيَ كَلِمَةٌ مَنْ قَالَهَا صَادِقاً أَدْخَلَهُ اللّٰهُ بِهَا الْجَنَّةَ وَمَنْ قَالَهَا كَاذِباً حَقَنَتْ دَمَهُ وَأَحْرَزَتْ مَالَهُ وَلَقِيَ اللّٰهَ غَدًا فَحَاسَبَهُ.

رواه البزار ورجاله موثقون، مجمع الزوائد:١/١٧٤

55. ஹஜ்ரத் இயாழ் அல்அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற திருக்கலிமா அல்லாஹ்விடம் மிகக் கண்ணியம் வாய்ந்ததாகும். இதற்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த அந்தஸ்து உள்ளது. எம்மனிதர் அக்கலிமாவை உண்மையான மனதுடன் கூறுகிறாரோ, அவரை அதன் காரணத்தால் அல்லாஹ் சுவனம் புகச் செய்வான். எவன் பொய்யான மனதுடன் அக்கலிமாவை சொல்கிறானோ, அவனுடைய உயிர் மற்றும் பொருளை அது (இவ்வுலகில்) பாதுகாக்கும். எனினும் நாளை (கியாமத் நாளில்) அல்லாஹ்வை அவன் சந்திப்பான். அப்போது அல்லாஹ் (அது பற்றி) அவனிடம் விசாரணை செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(பஸ்ஸார்)

தெளிவுரை:- பொய்யான மனதுடன் கலிமாவைக் கூறுவதால் இவன் வெளிப்படையில் முஸ்லிமாக தெரிகிறான். எனவே அவனது உயிர் மற்றும் பொருளுக்கு பாதுகாப்புக் கிடைக்கும். முஸ்லிம்களுடன் மோதும் காஃபிரைப் போல அவன் கொல்லப்படமாட்டான். அவனது பொருட்களில் இருந்து ஜிஸ்யாவும் வசூலிக்கப்பட மாட்டாது.

٥٦- عَنْ أَبِي بَكْرِنِ الصِّدِّيْقِؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : مَنْ شَهِدَ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ يُصَدِّقُ قَلْبُهُ لِسَانَهُ دَخَلَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ.

رواه ابو يعلي:١ / ٦٨

56. “எவர் தன்னுடைய உள்ளம், தனது நாவை உண்மைப்படுத்தும் நிலையில் “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சாட்சி சொல்கிறாரோ அவர் சொர்க்கத்தின் (தான் விரும்பும்) எந்த வாசல் வழியாகவும் நுழையலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அபூயஃலா)

٥٧- عَنْ أَبِي مُوسيؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : أَبْشِرُوا وَبَشِّرُوا مَنْ وَرَاءَكُمْ أَنَّهُ مَنْ شَهِدَ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ صَادِقاً بِهَا دَخَلَ الْجَنَّةَ.

رواه احمد والطبراني في الكبير ورجاله ثقات، مجمع الزوائد:١/١٥٩

57. “எம்மனிதர் “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று உண்மையான மனதுடன் சாட்சி சொல்கிறாரோ, அவர் சுவனம் செல்வார்!” என்ற சுபச் செய்தியை நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் தெரிவித்துவிடுங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத், தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

٥٨- عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَنْ شَهِدَ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ مُخْلِصاً دَخَلَ الْجَنَّةَ.

مجمع البحرين في زوائد المعجمين:١ /٥٦. قال المحقق: صحيح لجميع طرقه.

58. “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், அவனது ரஸூலும் ஆவார்கள்’’ என்று எவர் தூய உள்ளத்துடன் சாட்சி சொல்வாரோ, அவர் சொர்க்கம் செல்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(மஜ்மஉல் பஹ்ரைன்)

٥٩- عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : دَخَلْتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِي عَارِضَتَيِ الْجَنَّةِ مَكْتُوباً ثَلاَثَةَ أَسْطُرٍ بِالذَّهَبِ: اَلسَّطْرُ اْلاَوَّلُ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِؐ، وَالسَّطْرُ الثَّانِي مَا قَدَّمْنَا وَجَدْنَا وَمَاأَكَلْنَا رَبِحْنَا وَمَاخَلَّفْنَا خَسِرْنَا، وَالسَّطْرُ الثَّالِثُ أُمَّةٌ مُذْنِبَةٌ وَرَبٌّ غَفُورٌ.

رواه الرافعي وابن النجاروهو حديث صحيح، الجامع الصغير:١ /٦٤٥

59. “நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அதன் இரு ஓரங்களிலும் மூன்று வரிகள் தங்கத்தால் எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். முதல் வரியில், “லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரஸூலுல்லாஹி’ என்றும், இரண்டாம் வரியில், “நாம் (நற்செயல்கள் செய்து) முற்படுத்தி அனுப்பி வைத்தவைகளின் நன்மைகளை அடைந்து கொண்டோம். நாம் உலகில் உண்டு (உடுத்தி) அனுபவித்தவைகளின் பலன்களை (உலகில்) அடைந்து கொண்டோம். நாம் விட்டு வந்தவைகள் நமக்கு நஷ்டமாகிவிட்டது’ என்றும், மூன்றாம் வரியில், “சமுதாயத்தினர் பாவம் செய்யக் கூடியவர்கள். ரப்பு மன்னிக்கக் கூடியவன்’ என்றும் எழுதப்பட்டிருந்தது’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ராஃபிஈ, இப்னு நஜ்ஜார்)

٦٠- عَنْ عِتْبَانَ بْنِ مَالِكِ نِ اْلاَنْصَارِيِّؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : لَنْ يُّوَافِيَ عَبْدٌ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ يَبْتَغِي بِهَا وَجْهَ اللّٰهِ إِلاَّحَرَّمَ اللّٰهُ عَلَيْهِ النَّارَ.

رواه البخاري، باب العمل الذي يبتغي به وجه الله تعالي، رقم:٦٤٢٣

60. “எந்த அடியார் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியவராக கியாமத் நாளன்று வருவாரோ அல்லாஹ் அவர் மீது நரக நெருப்பை நிச்சயம் ஹராமாக்கிவிடுவான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இத்பான் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٦١- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ عَنْ رَسُولِ اللّٰهِ قَالَ: مَنْ فَارَقَ الدُّنْيَا عَلَي اْلإِخْلاَصِ للّٰهِ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ، فَارَقَهَا وَاللّٰهُ عَنْهُ رَاضٍ.

رواه الحاكم وقال هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٢ /٣٣٢

61. “தனித்தவன், இணையில்லாதவனாகிய, அல்லாஹ்வுக்காக மனத்தூய்மையுடன் வாழ்ந்து, தொழுகையைக் கடைபிடித்து, (பொருள் வசதியுள்ளவராய் இருந்தால்) ஜகாத்தை நிறைவேற்றி எவர் உலகை விட்டும் பிரிகிறாரோ, அவரைக்கொண்டு அல்லாஹ் திருப்தியடைந்த நிலையில் அவர் உலகைவிட்டுப் பிரிவார்’’ என நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்தத்ரக் ஹாகிம்)

தெளிவுரை:- அல்லாஹ்வுக்காக (இக்லாஸ்) மனத்தூய்மையுடன் இருப்பது என்பதன் பொருள் உள்ளத்தால் அல்லாஹ்வுக்கு வழிபடுவதை தேர்ந்தெடுத்துக் கொள்வதாகும்.

٦٢- عَنْ أَبِي ذَرٍّؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: قَدْ أَفْلَحَ مَنْ أَخْلَصَ قَلْبَهُ لِلْإِيمَانِ وَجَعَلَ قَلْبَهُ سَلِيماً وَلِسَانَهُ صَادِقاً وَنَفْسَهُ مُطْمَئِنَّةً وَخَلِيقَتَهُ مُسْتَقِيمَةً وَجَعَلَ أُذُنَهُ مُسْتَمِعَةً وَعَيْنَهُ نَاظِرَةً.

(الحديث) رواه احمد:٥/١٤٧

62. “எவர் ஈமானுக்காக தனது உள்ளத்தை (குஃப்ர், ஷிர்க்கை விட்டும்) தூய்மைப்படுத்தி, அதை (உலகப் பற்றை விட்டும்) அமைதியாக்கி தனது நாவை உண்மையானதாக்கி தனது நப்ஸை (அல்லாஹ்வின் நினைவாலும், அவனது திருப்திக் கேற்றவாறு நடப்பதாலும்) நிம்மதி உடையதாக்கி தனது குணத்தை (தீமைகளின் பால் ஈடுபாடு கொள்ளாமல்) சீராக்கி, தனது காதுகளை (நல்ல விஷயங்களை) ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் கேட்கக் கூடியதாக்கி, தனது கண்களை (நல்லவைகளை கவனமாக) பார்க்கக் கூடியதாக்கினாரோ அவர் நிச்சயம் வெற்றியடைந்துவிட்டார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٦٣- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللّٰهِؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: مَنْ لَقِيَ اللّٰهَ لاَيُشْرِكُ بِهِ شَيْئاً دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ لَقِيَهُ يُشْرِكُ بِهِ شَيْئاً دَخَلَ النَّارَ.

رواه مسلم، باب الدليل علي من مات لايشرك بالله شيئا دخل الجنة……رقم:٢٧ ٠

63. “எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பாரோ, அவர் சுவனம் செல்வார். மேலும் எவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பாரோ அவர் நரகம் செல்வார்’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

٦٤- عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: مَنْ مَاتَ لاَيُشْرِكُ بِاللّٰهِ شَيْئاً فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ النَّارَ.

عمل اليوم والليلة للنسائي، رقم:١١٢٩

64. “எந்த ஒன்றையும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத எவர் நிலையில் மரணிப்பாரோ, அவர் மீது நிச்சயமாக அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிடுவான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அமலுல் யவ்ம் வல்லைலா)

٦٥- عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّؐ يَقُولُ: مَنْ مَاتَ وَهُوَ لاَيُشْرِكُ بِاللّٰهِ شَيْئاً فَقَدْ حَلَّتْ لَهُ مَغْفِرَتُهُ.

رواه الطبراني في الكبير واسناده لاباس به، مجمع الزوائد:١/١٦٤

65. “அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் எவர் மரணிப்பாரோ, அவருக்கு மன்னிப்பு கிடைப்பது கட்டாயமாகிவிட்டது’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தப்ரானீ, மஜ்உஸ்ஸவாயித்)

٦٦- عَنْ مُعَاذٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: يَامُعَاذُ! هَلْ سَمِعْتَ مُنْذُ اللَّيْلَةِ حِساًّ؟ قُلْتُ: لاَ، قَالَ: إِنَّهُ أَتَانِي آتٍ مِنْ رَّبِّي فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَيُشْرِكُ بِاللّٰهِ شَيْئاً دَخَلَ الْجَنَّةَ قُلْتُ: يَارَسُولَ اللّٰهِؐ أَفَلاَ أَخْرُجُ إِلَي النَّاسِ فَأُبَشِّرُهُمْ قَالَ: دَعْهُمْ فَلْيَسْتَبِقُوا الصِّرَاطَ.

رواه الطبراني في الكبير:٢ ٠ /٥٩

66. “முஆதே! நேற்று இரவு ஏதேனும் சப்தத்தைக் கேட்டீரா?’’ என்று ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “எந்த சப்தத்தையும் நான் கேட்கவில்லையே’’ என்று பதிலளித்தார்கள். “என்னுடைய ரப்பிடமிருந்து ஒரு வானவர் என்னிடம் வந்து எனது சமுதாயத்தினரில் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காத நிலையில் எவர் மரணிப்பாரோ, அவர் சுவனம் செல்வார் என்ற நற்செய்தியை எனக்கு கூறினார்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யா ரஸூலல்லாஹ், நான் மக்களிடம் சென்று அவர்களுக்கு இந்த (நற்)செய்தியை சொல்லிவிடவா?’’ என்று கேட்டேன். அவர்களை(த் தத்தமது நிலையிலேயே) விட்டுவிடுங்கள்! (நல்ல அமல்களின்) பாதையில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு முந்திக் கொண்டிருக்கட்டும்’’, என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தப்ரானீ)

٦٧- عَنْ مُعَاذِبْنِ جَبَلٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: يَامُعَاذُ! أَتَدْرِي مَاحَقُّ اللّٰهِ عَلَي الْعِبَادِ، وَمَا حَقُّ الْعِبَادِ عَلَي اللّٰهِ؟ قَالَ قُلْتُ: اللّٰهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: فَإِنَّ حَقَّ اللّٰهِ عَلَي الْعِبَادِ أَنْ يَّعْبُدُوا اللّٰهَ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئاً وَحَقُّ الْعِبَادِ عَلَي اللّٰهِ أَنْ لاَيُعَذِّبَ مَنْ لاَيُشْرِكُ بِهِ شَيْئاً.

(الحديث) رواه مسلم، باب الدليل علي ان من مات……، رقم:١٤٤

67. ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “முஆதே! அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? அடியார்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கவேண்டிய உரிமை என்ன? என்று உமக்குத் தெரியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக்க அறிந்தவர்கள்’’ என நான் பதில் கூறினேன். “அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைக்காமல் அவனையே வணங்குவதுதான் அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமையாகும். எந்த அடியான் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்கவில்லையோ அவனை வேதனை செய்யாமலிருப்பது அல்லாஹ்விடமிருந்து அடியார்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்)

٦٨- عَنِ ابْنِ عَبَّاسٍؓ أَنَّ رَسُولَ اللّٰهِ قَالَ: مَنْ لَقِيَ اللّٰهَ لاَيُشْرِكُ بِهِ شَيْئاً، وَلاَيَقْتُلُ نَفْساً لَقِيَ اللّٰهَ وَهُوَ خَفِيفُ الظَّهْرِ.

رواه الطبراني في الكبير وفي اسناده ابن لهيعة، مجمع الزوائد:١/١٦٧

68. “எந்த ஒன்றையும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நிலையிலும் எவரையும் (மார்க்கத்திற்கு முரணாக) கொலை செய்யாத நிலையிலும் எவர் அல்லாஹ்வைச் சந்திப்பாரோ, அவர் (இவ்விரு பாவங்களின் சுமை இல்லாததால்) சுமை குறைந்தவராக அல்லாஹ்வைச் சந்திப்பார்”! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்)

٦٩- عَنْ جَرِيرٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: مَنْ مَاتَ لاَيُشْرِكُ بِاللّٰهِ شَيْئاً وَلَمْ يَتَنَدَّ بِدَمٍ حَرَامٍ أُدْخِلَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ.

رواه الطبراني في الكبير ورجاله موثقون، مجمع الزوائد:١ /١٦٥

69. “எந்த ஒன்றையும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையிலும், மார்க்கத்தில் தடுக்கப்பட்ட (முறையில்) எவருடைய ரத்தத்தையும் (கொலை செய்து) ஓட்டாத நிலையிலும் எவர் மரணிப்பாரோ, அவர் சுவன வாசல்களில் தான் விரும்பிய வாசல் வழியாக நுழைவிக்கப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)


மறைவானவற்றை நம்புதல்

அல்லாஹ்வின் மீதும் (மார்க்கம் கூறும்) மறைவான அனைத்துக் காரியங்களின் மீதும் ஈமான் கொள்வது, ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களது ஒவ்வொரு செய்தியையும் அன்னாரின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியாக ஏற்றுக்கொள்வது, அவர்களது சொல்லுக்கு புறம்பாக உள்ள அழியும் இன்பங்களையும் கண்ணால் காணும் காட்சிகளையும், உலக அனுபவங்கள் அனைத்தையும் விட்டுவிடுவது.

அல்லாஹ், அவனது உயர் பண்புகள், அவனது தூதர் மற்றும் விதியின் மீது நம்பிக்கை கொள்வது.

குர்ஆன் வசனங்கள்:-

قَالَ اللّٰهُ تَعَالي: (لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ اْلآخِرِ وَالْمَلـئِكَةِ وَالْكِتبِ وَالنَّبِيِّينَ ج واتَي الْمَالَ عَلَي حُبِّهِ ذَوِي الْقُرْبَي وَالْيَتمَي وَالْمَسكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ ج وَأَقَامَ الصَّلوةَ واتَي الزَّكَاةَج وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عهَدُوا ج وَالصَّابِرِينَ فِي الْبَأْسَآءِ وَالضَّرَّآءِ وَحِينَ الْبَأْسِ ط أُولئِكَ الَّذِينَ صَدَقُوا ط وَأُولئِكَ هُمُ الْمُتَّقُونَ ۞).

البقرة: ١٧٧

1. கிழக்குத் திசையிலும், மேற்குத் திசையிலும் உங்களுடைய முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையாக(க் கொள்ளப்படுவது) இல்லை. எனினும், நன்மை உடையவர் (யாரென்றால்) அல்லாஹ்வைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும், வானவர்களைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும், இறைத்தூதர்களைக் கொண்டும் நம்பிக்கைக் கொண்டவரும்; உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகளையும், சிறைப்பட்டவர்களையும்) விடுவிப்பதிலும் (தம்) பொருளை தம் மன விருப்பத்துடன் கொடுப்பவரும்; இன்னும் தொழுகையை கடைப்பிடித்து, ஜகாத்தை கொடுப்பவரும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதியை நிறைவேற்றுபவரும், (வறுமையின்) துன்பத்திலும், (நோய் நொடியின்) சிரமத்திலும், கடினமான போர் நேரத்திலும், பொறுமையாய் இருப்பவர்களுமேயாவார்கள்; இத்தகையோர்தாம் (தங்கள் ஓரிறை நம்பிக்கையில்) உண்மையாளர்கள்; இன்னும் இவர்களே தாம் பயபக்தியாளர்கள்.

(அல்பகரா: 177)

وَقَالَ تَعَالي: (يَاأَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ ط هَلْ مِنْ خَالِقٍ غَيْرُاللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَاءِ وَاْلاَرْضِ ط لاَإِلهَ إِلاَّ هُوَ ز فَأَنَّي تُؤْفَكُونَ۞).

فاطر:٣

2. மனிதர்களே! அல்லாஹ் உங்களின் மீது செய்துள்ள அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அல்லாஹ் அல்லாத (வேறு) படைக்கிறவன் உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிக்கிறானா? அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை – எனவே. எவ்வாறு நீங்கள் (அவனை விட்டுத்) திருப்பப்படுகிறீர்கள்?

(ஃபாதிர்: 3)

وَقَالَ تَعَالي: (بَدِيعُ السَّموَاتِ وَاْلاَرْضِ ط أَنَّي يَكُونُ لَهُ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهُ صَاحِبَةٌ ط وَخَلَقَ كُلَّ شَيْءٍ ج وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ۞).

الانعام: ١ ٠١

3. (அவன்) வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி (நூதனமாக)ப் படைத்தவன்; அவனுக்கு மனைவி (எவரும்) இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? எல்லாப் பொருட்களையும் அவனே படைத்தான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களையும் முற்றும் அறிந்தவன்.

(அல்அன்ஆம்:101)

وَقَالَ تَعَالي: (أَفَرَءَيْتُمْ مَّاتُمْنُونَ ۞ ءَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحــــــــْنُ الْخلِقُــــــــــــــونَ ۞).

الواقعة: ٥٨,٥٩

4. (அன்றியும்) நீங்கள் (கர்ப்பத்தில்) செலுத்துகின்ற (விந்)தை நீங்கள் பார்த்தீர்களா? அதனை (குழந்தையாக) நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் (அதனை) படைக்கின்றோமா?

(அல்வாகிஆ: 58, 59)

وَقَالَ تَعَالي: (أَفَرَءَيْتُمْ مَّا تَحْرُثُونَ ۞ ءَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُــــــــونَ ۞).

الواقعة:٦٣,٦٤

5. (பூமியை உழுது) நீங்கள் பயிரிடுகின்றதைக் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

(அல்வாகிஆ: 63, 64)

وَقَالَ تَعَالي: (أَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِي تَشْرَبُونَ۞ ءَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ۞ لَوْ نَشَآءُ جَعَلْنهُ أُجَاجاً فَلَوْلاَ تَشْكُرُونَ۞ أَفَرَءَيْتُمُ النَّارَالَّتِي تُورُونَ۞ ءَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْـــــنُ الْمُنْشِئُــــــــونَ ۞).

الواقعة:٧٢-٦٨

6. மேலும் நீங்கள் பருகுகிறீர்களே அத்தண்ணீரை கவனித்தீர்களா? அதை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகிறீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால் அதை(க் குடிக்க முடியாதபடி) உவர்ப்பாக ஆக்கி விடுவோம் – எனவே, (இதற்காக) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? பிறகு நீங்கள் மூட்டுகின்ற நெருப்பை கவனித்தீர்களா? அதனுடைய மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டாக்குகிறோமா?

(அல்வாகிஆ: 68-72)

وَقَالَ تَعَالي: (إِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوَي ط يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ط ذلِكُمُ اللّٰهُ فَأَنَّي تُؤْفَكُونَ۞ فَالِقُ اْلإِصْبَاحِ ج وَجَعَلَ اللَّيْلَ سَكَناً وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَاناًط ذلِكَ تَقْدِيرُ الْعَزِيزِالْعَلِيمِ۞ وَهُوَالَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمتِ الْبَرِّ وَالْبَحْرِط قَدْ فَصَّلْنَا اْلآيتِ لِقَوْمٍ يَّعْلَمُونَ۞ وَهُوَ الَّذِي أَنْشَأَكُمْ مِّنْ نَفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ ط قَدْ فَصَّلْنَا اْلآيتِ لِقَوْمٍ يَّفْقَهُونَ۞ وَهُوَالَّذِي أَنْزَلَ مِنَ السَّمَآءِ مَاءً ج فَأَخْرَجْنَابِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبّاً مُّتَرَاكِباً ج وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ لا وَّجَنّتٍ مِّنْ أَعْنَابٍ وَّالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهاً وَّغَيْرَ مُتَشَابِهٍ ط اُنْظُرُوآ إِلَي ثَمَرِهِ إِذَآ أَثْمَرَ وَيَنْعِهِ ط إِنَّ فِي ذلِكُمْ لَآيتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُونَ۞).

الانعام:٩٩-٩٥

7. நிச்சயமாக அல்லாஹ் தான் விதையையும். கொட்டையையும் பிள(ந்து முளைப்பி)க்கிறவன்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் வெளிப்படுத்துகிறான் – அவன்தான் அல்லாஹ்! எனவே, (அவன் மீது நம்பிக்கைக் கொள்வதை விட்டும்) எவ்வாறு நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்? அதிகாலை நேர(வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து அவன்) வெளிப்படுத்துகிறான்; இரவை ஓய்வெடுப்பதற்கும், சூரியனையும், சந்திரனையும் (காலத்தின்) கணக்காகவும் (அவனே) ஆக்கினான் – இது (யாவற்றையும்) மிகைத்தவனும் முற்றும் அறிந்தவனுடைய ஏற்பாடாகும். இன்னும் அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக நட்சத்திரங்களை – அவற்றைக் கொண்டு கரை, கடல் ஆகியவற்றின் இருள்களில் நீங்கள் நேர்வழி பெறுவதற்காக – உண்டாக்கினான்; அறிந்து கொள்கின்ற சமூகத்தினருக்கு (நம்) திருவசனங்களைத் திட்டமாக நாம் விவரித்துள்ளோம். இன்னும் அவன் எத்தகையவனென்றால், ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை அவன் படைத்தான்; பிறகு (உங்களுக்கு தாயின் கர்ப்பத்தில்) தங்குமிடமும், (உங்கள் தந்தையில்) ஒப்படைக்கும் இடமும் உண்டு. விளங்கிக் கொள்கின்ற சமூகத்தினருக்கு (நம்முடைய) வசனங்களைத் திட்டமாக நாம் விவரித்துள்ளோம். இன்னும் அவன் எத்தகையவனென்றால் வானிலிருந்து மழையை அவன் இரக்கினான். பிறகு அதனைக் கொண்டு ஒவ்வொரு பொருளின் தாவரங்களையும் நாம் வெளியாக்கினோம்; இன்னும், அதிலிருந்து பசுமையானதை நாம் வெளிப்படுத்தி, அதிலிருந்து அடுக்கடுக்கான தானியங்களையும் நாம் வெளியாக்குகிறோம்; பேரீச்ச மரத்திலிருந்து – அதன் பாளையிலிருந்து – (தாழ்ந்து) தொங்குகின்ற (பழக்) குலைகளும் உள்ளன; (இன்னும் அத்தண்ணீரின் மூலம்) திராட்சை தோட்டங்களையும், (தோற்றத்தில்) ஒரே மாதிரியாகவும் (சுவையில்) வெவ்வேறாகவும் உள்ள ஸைத்தூனை(ஒலிவத்தை)யும், மாதுளையையும் (நாம் வெளிப்படுத்துகிறோம்); அதனுடைய பழத்தை – அது காய்த்து(ப் பின்) அதனுடைய கனியை – கவனித்துப் பாருங்கள் – நிச்சயமாக இதில் (ஓரிறை) நம்பிக்கை கொள்கின்ற சமூகத்தினருக்கு உறுதியான (பல) அத்தாச்சிகள் இருக்கின்றன.

(அல்அன்ஆம்: 95-99)

وَقَالَ تَعَالي: (فَللّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوَاتِ وَرَبِّ اْلاَرْضِ رَبِّ الْعٰلَمِينَ۞ وَلَهُ الْكِبْرِيَآءُ فيِ السَّمٰوَاتِ وَاْلاَرْضِ ط وَهُوَ الْعَزِيـــــزُ الْحَكِيمُ ۞).

الجاثية: ٣٦,٣٧

8. ஆகவே, வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், அகிலத்தாரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது – அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன்.

(அல்ஜாஸியா:36,37)

وَقَالَ تَعَالي: (قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ط بِيَدِكَ الْخَيْرُ ط إِنَّكَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ ۞ تُولِجُ الَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي الَّيْلِ ز وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ز وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ ۞).

اٰل عمران: ٢٦,٢٧

9. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ்வே! ஆட்சிக்கு அதிபதியே! நீ நாடுகிவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்; நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைக் கழற்றியும் விடுகிறாய்; இன்னும் நீ நாடியவரைக் கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவுப்படுத்துகிறாய்; நன்மை(தீமை)யெல்லாம் உன் கைவசமே உள்ளன – நிச்சயமாக நீ எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி உள்ளவன். இரவைப் பகலில் நீ நுழையச் செய்கிறாய்; பகலை இரவில் நுழையச் செய்கிறாய்; உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளிப்படுத்துகிறாய்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை நீ வெளிப்படுத்துகிறாய்; மேலும் நீ நாடியவருக்குக் கணக்கின்றி (வாழ்க்கை வசதிகளை)க் கொடுக்கிறாய்.

(ஆலுஇம்ரான்: 26.27)

وَقَالَ تَعَاليٰ: (وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لاَيَعْلَمُهَا إِلاَّ هُوَ ط وَيَعْلَمُ مَافِي الْبَرِّ وَالْبَحْرِ ط وَمَاتَسْقُطُ مِنْ وَّرَقَةٍ إِلاَّ يَعْلَمُهَا وَلاَحَبَّةٍ فِي ظُلُمٰتِ اْلاَرْضِ وَلاَرَطْبٍ وَّلاَ يَابِسٍ إِلاَّ فِي كِتٰبٍ مُّبِينٍ۞ وَهُوَالَّذِي يَتَوَفـــّٰكُمْ بِاللَّيْلِ وَيَعْلَمُ مَاجَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَيٰ أَجَلٌ مُّسَمًّي ج ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ۞).

الانعام: ٥٩,٦ ٠

10. மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன; அவற்றை அவனைத் தவிர (வேறு எவரும்) அறிய மாட்டார்; இன்னும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான்; ஓர் இலை கூட – அதனை அவன் அறியாமல் உதிவதில்லை – பூமியின் இருள்களிலுள்ள எந்த விதையும், எந்தப் பசுமையானதும், எந்தக் காய்ந்ததும் (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) இல்லாமலில்லை. இன்னும் அவன் எத்தகையோனேன்றால், இரவில் (நித்திரையில்) அவன்தான் உங்களை மரணிக்கச் செய்கிறான்; பகலில் நீங்கள் சம்பாதிக்கின்றவற்றையும் அவன் அறிகிறான்; பிறகு அதில் (பகலில்) குறிப்பிடப்பட்ட தவணை பூர்த்தி செய்யப்படுவதற்காக உங்களை அவன் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீளுதல் அவன் பக்கமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான்.

(அல்அன்ஆம்: 59.60)

وَقَالَ تَعَالي: (قُلْ أَغَيْرَ اللّٰهِ أَتَّخِذُ وَلِياًّ فَاطِرِالسَّموَاتِ وَاْلاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلاَيُطْعَمُ۞).

الانعام:١٤

11. (நபியே,) நீர் கூறுவீராக! வானங்களையும் பூமியையும் படைத்தவகினாய அல்லாஹ் அல்லாத (வேறொரு)வனை (வணக்கத்துக்கும் உதவி தேடுவதற்குமுரிய) பாதுகாவலனாக நான் ஆக்கிக் கொள்வேனா? அவன் (அனைவருக்கும்) உணவளிக்கிறான்; (ஆனால், பிறரால்) அவன் உணவளிக்கப்படுவதில்லை.

(அல்அன்ஆம்:14)

وَقَالَ تَعَالي: (وَإِنْ مِّنْ شَيْءٍ إِلاَّ عِنْدَنَا خَزَائِنُهُ ز وَمَا نُنَزِّلُهُ إِلاَّ بِقَدَرٍ مَّعْلُومٍ۞).

الحجر:٢١

12. எந்தப் பொருளும் – அதனுடைய பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர (வேறு எவரிடமும்) இல்லை – அதனைக் குறிப்பிட்ட அளவைக் கொண்டே தவிர நாம் இறக்கி வைப்பதில்லை.

(அல்ஹிஜ்ர்:21)

وَقَالَ تَعَالي: (أَيَبْتَغُونَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ للّٰهِ جَمِيعاً۞).

النساء:١٣٩

13. (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் அ(ந்த நிராகரிப்ப)வர்களிடத்தில் கண்ணியத்தைத் தேடுகின்றனரா? (அப்படி கண்ணியம் கிடைப்பதில்லை) ஏனேனில், நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன.

(அன்னிஸா:139)

وَقَالَ تَعَالي: (وَكَأَيِّنْ مِّنْ دَابَّةٍ لاَّ تَحْمِلُ رِزْقَهَا ق اللّٰهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ ز وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ۞).

العنكبوت:٦ ٠ ١٤.

14. எத்தனையோ உயிரினங்கள் தங்களுடைய உணவை அவை சுமந்து செல்வ தில்லை; அல்லாஹ்தான் அவற்றிற்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான் – அவன் (யாவற்றையும்) செவியேற்கிறவன்; முற்றும் அறிந்தவன்.

(அல்அன்கபூத்:60)

وَقَالَ تَعَالي: (قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذ اللّٰهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَي قُلُوبِكُمْ مَّنْ إِلهٌ غَيْرُاللّٰهِ يَأْتِيكُمْ بِهِ ط اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ اْلآيتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ۞).

الانعام:٤٦

15. (நபியே,) நீர் கூறுவீராக: “உங்களுடைய கேள்விப் புலனையும், உங்களுடைய பார்வையையும் அல்லாஹ் எடுத்துவிட்டு, உங்களுடைய இதயங்களின் மீதும் அவன் முத்திரையிட்டுவிட்டால், அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுள் அதனை உங்களுக்குக் கொண்டு வருவான்’’ என்பதை நீங்கள் சிந்தித்(துப் பார்த்)தீர்களா? (நம்முடைய) அத்தாட்சிகளை நாம் எவ்வாறு விவரிக்கிறோம் என்பதை (நபியே,) நீர் கவனிப்பீராக! பிறகும் அவர்கள் (அவற்றைப்) புறக்கணிக்கின்றனர்.

(அல்அன்ஆம்:46)

وَقَالَ تَعَالي: (قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَي يَوْمِ الْقِيمَةِ مَنْ إِلهٌ غَيْرُاللّٰهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ ط أَفَلاَ تَسْمَعُونَ ۞ قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَي يَوْمِ الْقِيمَةِ مَنْ إِلهٌ غَيْرُ اللّٰهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ ط أَفَلاَ تُبْصِرُونَ۞).

القصص:٧١,٧٢

16. (நபியே,) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உங்கள் மீது மறுமை நாள் வரை இரவை நிரந்தரமானதாய் ஆக்கிவிட்டால், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவரும் கடவுள் யார்?’’ என்பதை (சிந்தித்து)ப் பார்த்தீர்களா? (இதனை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (நபியே,) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உங்கள் மீது மறுமை நாள் வரை பகலை நிரந்தரமானதாய் ஆக்கிவிட்டால், நீங்கள் எதில் ஓய்வு கொள்கிறீர்களோ அந்த இரவை அல்லாஹ்வையன்றி உங்களுக்குக் கொண்டுவரும் கடவுள் யார்?’’ என்று நீங்கள் பார்த்தீர்களா? நீங்கள் (இதனைச் சிந்தித்துக்) பார்க்க வேண்டாமா?

(அல்கஸஸ்:71.72)

وَقَالَ تَعَالي: (وَمِنْ آيتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَاْلاَعْلاَمِ ۞ إِنْ يَّشَأْ يُسْكِنِ الرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَي ظَهْرِهِ ط إِنَّ فِي ذلِكَ لآيتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ ۞ أَوْ يُوبِقْهُنَّ بِمَا كَسَبُوا وَيَعْفُ عَنْ كَثِيرٍ۞).

الشوري:٣٤-٣٢

17. இன்னும் கடலில் மலைகளைப் போன்று செல்லும் கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அவன் நாடினால் காற்றை (வீசச் செய்யாமல்) நிறுத்திவிடுவான்; அப்பொழுது அவை அதன் மேற்பரப்பில் (அசையாமல்) நின்றவையாகிவிடும்; நிச்சயமாக இதில் அதிகமாகப் பொறுமை கொள்வோர், நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன அல்லது அவர்கள் சம்பாதித்த (தீய)வற்றினால், அவற்றை (மூழ்கச் செய்து) அழித்துவிடுவான் (எனினும் பாவங்களில்) பெரும்பாலானவற்றை அவன் மன்னிக்கிறான்.

(அஷ்ஷுரா:32-34)

وَقَالَ تَعَالي:(وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلاً ط يـجِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ ج وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ۞).

سبأ: ١ ٠

18. மேலும், தாவூதுக்கு நம்மிடமிருந்து அருளை திட்டமாக நாம் கொடுத்தோம்; “மலைகளே, அவருடன் (சேர்ந்து) திரும்பத் திரும்ப துதி செய்யுங்கள்’’ (என்று கட்டளையிட்டோம்); இன்னும் பறவைகளுக்கும் (அவ்வாறே கட்ளையிட்டோம்) இரும்பை அவருக்கு (மெழுகு போல்) நாம் இளகச் செய்தோம்.

(ஸபா:10)

وَقَالَ تَعَالي: (فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ اْلاَرْضَ قف فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَّنْصُرُونَهُ مِنْ دُونِ اللّٰهِ ق وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ۞).

القصص:٨١

19. எனவே, அவனையும் அவனுடைய வீட்டையும் நாம் பூமிக்குள் அழுந்தச் செய்துவிட்டோம்; அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவி செய்கின்ற எந்தக் கூட்டமும் அவனுக்கு இருக்கவில்லை; மேலும் அவன் தன்னைத் தானே தற்காத்துக் கொள்வோரில் உள்ளவனாகவும் ஆகியிருக்கவில்லை.

(அல்கஸஸ்:81)

وَقَالَ تَعَالي: (فَأَوْحَيْنَا إِلَي مُوسَي أَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ ط فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ۞).

الشعراء:٦٣

20. அப்போது மூஸாவிடம், “உம்முடைய கைத்தடியினால் கடலை நீர் அடிப்பீராக!’’ என்று நாம் வஹீ அறிவித்தோம்; (அவ்வாறே அவர் செய்ததும்) உடனே அது பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பிரிவும் பெரும் மலைபோன்று ஆகிவிட்டது.

(அஷ்ஷுஅரா:63)

وَقَالَ تَعَالي: (وَمَا أَمْرُنَا إِلاَّ وَاحِدَةٌ كَلَمْحٍ م بِالْبَصَرِ۞).

القمر:٥٠

21. நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண்மூடி விழிப்பது போன்று ஒரு கணமே தவிர (தாமதம்) இல்லை.

(அல்கமர்:50)

وَقَالَ تَعَالي: (أَلاَ لَهُ الْخَلْقُ وَاْلاَمْرُ۞).

الاعراف:٥٤

22. படைத்தலும் கட்டளையிடுதலும் அவனுக்கே சொந்தம்.

(அல்அஃராஃப்:54)

وَقَالَ تَعَالي: (مَالَكُمْ مِّنْ إِلهٍ غَيْرُهُ۞).

الاعراف:٥٩

23. அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் உங்களுக்கு இல்லை.

(அல்அஃராஃப்:59)

وَقَالَ تَعَالي: (وَلَوْ أَنَّ مَا فِي اْلاَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلاَمٌ وَّالْبَحْرُ يَمُدُّهُ مِنْ م بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمتُ اللّٰهِ ط إِنَّ اللّٰهَ عَزِيزٌ حَكِيمٌ۞).

لقمن:٢٧

24. நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் (யாவும்) எழுதுகோல்களாக இருந்து, கடல் (நீர் மையாக இருந்து) அ(து எழுதி முடிக்கப்பட்ட) தன் பின்னர் (வேறு) ஏழு கடல்கள் அதனுடன் (மையாக) சேர்ந்து கொண்டிருந்தாலும் அல்லாஹ்வுடைய வார்த்தைகள் (எழுதி) முடிவடையமாட்டாது – நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானமுள்ளவன்.

(லுக்மான்:27)

وَقَالَ تَعَالي: (قُلْ لَنْ يُّصِيبَنَآ إِلاَّ مَا كَتَبَ اللّٰهُ لَنَا ج هُوَ مَوْلَـنَا ج وَعَلَي اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ۞).

التوبة:٥١

25. (நபியே,) நீர் கூறுவீராக, “அல்லாஹ் எங்களுக்கு எதை விதித்துள்ளானோ அதைத் தவிர (வேறொன்றும்) எங்களுக்கு உறுதியாக ஏற்படாது; அவன் (தான்) எங்களுடைய பாதுகாவலன்’’ நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அத்தவ்பா:51)

وَقَالَ تَعَالي: (وَإِنْ يَمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلاَ كَاشِفَ لَهُ إِلاَّ هُوَ ج وَإِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلاَ رآدَّ لِفَضْلِهِ ط يُصِيبُ بِهِ مَنْ يَّشَاءُ مِنْ عِبَادِهِ ط وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ۞).

يونس:١٠٧

26. அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைத் தீண்டும்படிச் செய்தால், அதனை நீக்குபவன் அவனைத் தவிர (வேறு எவரும்) இல்லை; உமக்கு ஒரு நன்மையை அவன் நாடினால், அவனுடைய அருளைத் தடுப்பவன் (வேறு எவரும்) இல்லை – தன் அடியார்களில் தான் நாடியவருக்கு அதனை (நன்மையை) அவன் வழங்குகிறான் – மேலும் அவன் மிக்க மன்னிக்கிறவன்; மிகக் கிருபையுடையவன்.

(யூனுஸ்:107)

ஹதீஸ்கள்:-

٧٠- عَنِ ابْنِ عَبَّاسٍؓ أَنَّ جِبْرِيلَ قَالَ لِلنَّبِيِّؐ : حَدِّثْنِي مَا اْلإِيمَانُ؟ قَالَ: اْلإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِالله وَالْيَوْمِ اْلآخِرِ وَالْمَلاَئِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَتُؤْمِنَ بِالْمَوْتِ وَبِالْحَيَاةِ بَعْدَ الْمَوْتِ وَتُؤْمِنَ بِالْجَنَّةِ وَالنَّارِ وَالْحِسَابِ وَالْمِيزَانِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ كُلِّهِ خَيْرِهِ وَشَرِّهِ قَالَ: فَإِذَا فَعَلْتُ ذلِكَ فَقَدْ آمَنْتُ؟ قَالَ: إِذَا فَعَلْتَ ذلِكَ فَقَدْ آمَنْتَ.

(وهو قطعة من حديث طويل) رواه احمد:١ /٣١٩

70. ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “ஈமான் என்றால் என்ன?” என்பதை எனக்கு சொல்லித்தாருங்கள் என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதங்களின் மீதும், நபிமார்களின் மீதும் நீர் (ஈமான்) நம்பிக்கை கொள்வது. அவ்வாறே (படைப்புகள் அனைத்தும்) இறந்துப் போவதன் மீதும், இறந்தபின் மீண்டும் (அவையனைத்தும்) உயிர் பெற்று எழு(ப்பப்படு)வதன் மீதும் நீர் நம்பிக்கை கொள்வது, இன்னும் சொர்க்கத்தின் மீதும், நரகத்தின் மீதும் (தீர்ப்பு நாளில் கேட்கப்படும்) கேள்வி கணக்கின் மீதும் (அமல்கள் அனைத்தையும் எடைபோடும்) தராசின் மீதும் நீர் நம்பிக்கை கொள்வது, இன்னும் (இவ்வுலகில் ஏற்படும்) நல்லவை, தீயவை அனைத்தும் (அல்லாஹ் நிர்ணயித்து, எழுதி வைத்து விட்ட) விதிப்படியே நடைபெறும் என்பதன் மீதும் நீர் நம்பிக்கை கொள்வது. இதற்குப் பெயரே ஈமான் ஆகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவை அனைத்தின் மீதும் நான் நம்பிக்கை கொள்வதால் நான் ஈமான் உடையவனாக ஆகிவிடுவேனா?” என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் மீண்டும் கேட்க, “(ஆம்) இவையனைத்தின் மீதும் நீர் உறுதியாக நம்பிக்கை கொள்வீரானால் நிச்சயமாக நீர் ஈமான் உடையவராக ஆகிவிடுவீர்!” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்று ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٧١- عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اْلإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللّٰهِ وَمَلاَئِكَتِهِ وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ، وَتُؤْمِنَ بِالْبَعْثِ.

(الحديث) رواه البخاري، باب سؤال جبريل النبي ! ……، رقم:٥ ٠

71. “அல்லாஹு அவின் மீதும் அவனது மலக்குகளின் மீதும் (மறுமையில் நிகழவிருக்கும்) அவனது சந்திப்பின் மீதும் (இவ்வுலகில் அனுப்பப்பட்ட) அவனது தூதர்களின் மீதும் உறுதியான நம்பிக்கை கொள்வதும் (மரணத்திற்குப் பின் மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்பப்படுவதை உண்மையென விளங்கி ஏற்றுக் கொள்வதுமே ஈமான் ஆகும்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٧٢- عَنْ عُمَرَ بْنِ الخْطَّابِؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّؐ يَقُولُ: مَنْ مَاتَ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ اْلآخِرِ قِيلَ لَهُ أُدْخُلْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ شِئْتَ.

رواه احمد وفي اسناده شهربن حوشب وقد وثق، مجمع الزوائد:١/١٨٢

72. “அல்லாஹ்வின் மீதும், கியாமத் நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட நிலையில் எவர் மரணிக்கிறாரோ, அவரிடம் “சுவனத்தின் எட்டு வாசல்களில் நீர் விரும்பும் எந்த வாசல் வழியாகவும் சுவனத்திற்குள் நுழைவீராக!’’ என்று சொல்லப்படும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)

٧٣ -عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُودٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً بِاِبْنِ آدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً، فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ، وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فِإِيعَادٌ بإِلْخَيْرِ وَتَصْدِيقٌ باِلْحَقِّ، فَمَنْ وَجَدَ ذلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللّٰهِ فَلْيَحْمَدِ اللّٰهَ، وَمَنْ وَّجَدَ اْلاَخْري فَلْيَتَعَوَّذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ثُمَّ قَرَأَ: (اَلشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ۞).

الاية رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب، باب ومن سورة البقرة، رقم:٢٩٨٨

73. “மனிதனுக்கு ஷைத்தானுடைய தீண்டுதல் (மூலம் ஓர் எண்ணமும்) இன்னும் மலக்கின் தூண்டுதல் (மூலம் ஓர் எண்ணமும்) ஏற்படுகிறது. (மனிதன் நற்காரியங்கள் செய்யும்போது அதன் பலனாக) தீங்கு ஏற்பட்டுவிடும் என்று அச்சுறுத்துவதும், உண்மையானவற்றை பொய்ப்படுத்திக் காட்டுவதும் ஷைத்தானின் தீண்டுதல் ஆகும். (நன்மையான காரியங்கள் செய்யும்போது அதன் பலனாக) நன்மையே விளையும் என்பதை வாக்களிப்பதும், உண்மையானவற்றை மெய்ப்படுத்திக் காட்டுவதும் மலக்கின் தூண்டுதல் ஆகும். எனவே யார் இந்த (நல்ல) நிலையை பெற்றுக் கொண்டாரோ அவர், இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது என்பதை அறிந்துக் கொள்ளட்டும். அதற்காக அவர் அல்லாஹ்வை புகழட்டும். எவர் இதற்கு மாற்றமான நிலையை பெற்றுக் கொண்டாரோ, அவர் எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளட்டும் என்று கூறியபின் நபி (ஸல்) அவர்கள் (தான தருமங்கள் செய்வதினால் ஏழையாகி விடுவீர்களென்று) ஷைத்தான், வருமையைப் பற்றி உங்களுக்கு பயங்காட்டி, மானக்கேடானவற்றை(ச் செய்யும்படி)யும் உங்களுக்கு ஏவுகிறான்’ எனும் குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

٧٤- عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: قَالَ رَسُولُ الله : أَجِلُّوا اللّٰهَ يَغْفِرْ لَكُمْ.

رواه احمد: ٥ /١٩٩

74. “அல்லாஹ்வின் மகத்துவத்தை உங்களுடைய உள்ளங்களில் பதியவையுங்கள், அல்லாஹ் உங்களை மன்னிப்பான்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٧٥- عَنْ أَبِي ذَرٍّؓ عَنِ النَّبِيِّؐ فِيمَا رُوِيَ عَنِ اللّٰهِ تَبَارَكَ وَتَعَالَي أَنَّهُ قَالَ: يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَي نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّماً، فَلاَ تَظَالَمُوا، يَا عِبَادِي! كُلُّكُمْ ضَالٌّ إِلاَّ مَنْ هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يَا عِبَادِي! كُلُّكُمْ جَائِعٌ إِلاَّ مَنْ أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يَا عِبَادِي! كُلُّكُمْ عَارٍ إِلاِّاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعاً، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْلَكُمْ، يَاعِبَادِي! إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي، وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي، يَاعِبَادِي! لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ، وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ، كَانُوا عَلَي أَتْقَي قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَازَادَ ذلِكَ فِي مُلْكِي شَيْئاً، يَاعِبَادِي! لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ، وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ، كَانُوا عَلَي أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَانَقَصَ ذلِكَ مِنْ مُلْكِي شَيْئاً، يَاعِبَادِي! لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ، وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ، قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي، فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ، مَانَقَصَ ذلِكَ مِمَّا عِنْدِي إِلاَّ كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ، يَاعِبَادِي! إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدِ اللّٰهَ، وَمَنْ وَجَدَ غَيْرَ ذلِكَ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ.

رواه مسلم باب تحريم الظلم رقم:٦٥٧٢

75. “அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்த “ஹதீஸே குத்ஸியை’ ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “என் அடியார்களே! அநீதம் செய்வதை எனக்கு நானே விலக்கிக் கொண்டேன். உங்களுக்கு மத்தியிலும் அதனை தடை செய்துவிட்டேன். எனவே, உங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்யாதீர்கள். என் அடியார்களே! நான் யாருக்கு நேர்வழி காட்டினேனோ அவர்களைத் தவிர நீங்கள் அனைவரும் வழி தவறியவர்களே. எனவே என்னிடமே நேர்வழியைத் தேடுங்கள், உங்களுக்கு நான் (ஹிதாயத்) நேர்வழிகாட்டுகிறேன். என் அடியார்களே! நான் எவருக்கு உணவளித்தேனோ அவர்களைத் தவிர நீங்கள் அனைவரும் பசித்தவர்களே. எவவே என்னிடமே உணவு தேடுங்கள், உங்களுக்கு நான் உணவளிக்கிறேன். என் அடியார்களே! நான் எவருக்கு ஆடையணிவித்தேனோ அவர்களைத் தவிர நீங்கள் அனைவரும் ஆடையற்றவர்களே. எனவே என்னிடமே ஆடையை வேண்டுங்கள், உங்களுக்கு நான் ஆடை அளிக்கிறேன். என் அடியார்களே! இரவிலும் பகலிலும் நீங்கள் பாவம் செய்கிறீர்கள், நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கக்கூடியவன். எனவே என்னிடமே நீங்கள் பாவமன்னிப்புத் தேடுங்கள், உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிடுகிறேன். என் அடியார்களே, நீங்கள் எனக்கு எந்தத் தீங்கும் விளைவித்துவிட முடியாது. நீங்கள் எனக்கு எந்தப் பயனும் அளித்துவிட முடியாது. என் அடியார்களே! உங்களில் முன் சென்றவர்கள், பின் வர இருப்பவர்கள் மனிதர்கள் இன்னும் ஜின்கள் யாவரும், உங்களில் மிகுந்த இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்ற உள்ளம் உடையோராக ஆகிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எந்த ஒன்றையும் அதிகரிக்கச் செய்யாது. என் அடியார்களே! உங்களில் முன் சென்றவர்கள், பின்வர இருப்பவர்கள் மனிதர்கள் இன்னும் ஜின்கள் யாவரும், உங்களில் ஒரு பெரும்பாவியைப் போன்ற உள்ளம் உடையோராக மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எந்தக் குறைவையும் ஏற்படுத்திவிடாது. என் அடியார்களே! உங்களது முன்னோர், பின்னோர், மனிதர்கள், ஜின்கள் அனைவரும் ஒரு பெருந்திடலில் ஒன்று கூடி (தமது தேவைகள் அனைத்தையும்) அவர்கள் என்னிடம் கேட்டாலும், அவர்களில் ஒவ்வொருவரின் தேவையையும் நான் முழுமையாக நிறைவேற்றி வைத்தாலும், கடலில் ஊசியை முக்கி எடுத்தால் கடல் நீர் எந்த அளவு குறையுமோ அந்த அளவைத் தவிர என் கருவூலத்திலிருந்து எதுவும் குறைந்து விடாது. (கடலில் ஊசியை முக்கி எடுப்பதால் கடல் நீரின் அளவில் எந்தக் குறைவும் ஏற்படப்போவதில்லை. அதுபோலவே அல்லாஹ் தன் கருவூலத்திலிருந்து எல்லோருக்கும் வழங்கினாலும் எந்தக் குறைவும் ஏற்படப்போவதில்லை) என் அடியார்களே! உங்களுடைய (நல்ல, தீய) செயல்களையே உங்களுக்காக நான் கணக்கிட்டு வைத்து பிறகு அச்செயல்களின் பிரதிபலனையே உங்களுக்கு நான் முழுமையாக நிறைவேற்றுவேன். எனவே எவர் நன்மை செய்யும் வாய்ப்பை பெற்றுக்கொண்டாரோ, அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். எவர் நன்மையல்லாத(பாவத்)தை பெற்றுக்கொண்டாரோ அவர் அதற்காகத் தன்னையே பழித்துக் கொள்ளட்டும்’’ (ஏனேனில் அவர் மனம் அவரைத் தூண்டியதால்தான் பாவம் நிகழ்ந்தது).

(முஸ்லிம்)

٧٦- عَنْ أَبِي مُوسَي اْلاَشْعَرِيِّؓ قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللّٰهِؐ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ: إِنَّ اللّٰهَ لاَيَنَامُ وَلاَيَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجَابُهُ النُّورُ لَوْكَشَفَهُ لاَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَاانْتَهَي إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ.

رواه مسلم باب في قوله @ ان الله لاينام……، رقم:٤٤٥

76. “1. அல்லாஹ் உறங்குவதில்லை, உறக்கம் அவனுக்குப் பொருத்தமானதும் இல்லை 2. அவன் இரணத்தைக் குறைக்கவும், அதிகரிக்கவும் செய்கிறான் 3. இரவில் செய்யப்படும் செயல்கள் (அனைத்தும் அடுத்து வரும்) பகலின் செயல்களுக்கு முன்னால் 4. பகலில் செய்யப்படும் செயல்கள் (அனைத்தும் அடுத்து வரும்) இரவின் செயல்களுக்கு முன்னால் அவன் பக்கம் உயர்த்தப்பட்டு விடுகின்றன 5. (அவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையே உள்ள) அவனது திரையாகிறது ஒளியினால் ஆனதாகும். ஒருவேளை அவன் அத்திரையை அகற்றினால் அவனது படைப்புகளில் எவற்றின் பார்வை அவன் பக்கம் திரும்புமோ அவையனைத்தையும் அவனது திருமுகத்தின் பிரகாசங்கள் எரித்துவிடும்’’ என்ற ஐந்து வாக்கியங்களை ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

٧٧- عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ اللّٰهَ خَلَقَ إِسْرَافِيلَ مُنْذُ يَوْمِ خَلَقَهُ صَآفاًّ قَدَمَيْهِ لاَ يَرْفَعُ بَصَرَهُ، بَيْنَهُ وَبَيْنَ الرَّبِّ تَبَارَكَ وَتَعَالَي سَبْعُونَ نُورًا مَا مِنْهَا مِنْ نُورٍ يَدْنُو مِنْهُ إِلاَّ احْتَرَقَ.

مصابيح السنة:٤/٣١

77. “அல்லாஹ் ஹஜ்ரத் இஸ்ராஃபீல் (அலை) அவர்களை படைத்த நாள் முதல் அவர்கள் தம் இரு பாதங்களையும் சீராக வைத்த வண்ணம், பார்வையை மேலே உயர்த்தாமல் நின்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே எழுபது ஒளிகள் திரையாக உள்ளன. (அந்த ஒளித்திரைகள் எத்தகையதெனில்) ஹஜ்ரத் இஸ்ராஃபீல் (அலை) அவர்கள் அதன் அருகில் சென்றால் அவை ஒவ்வொன்றும் அவர்களை எரித்துவிடும்!’’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(மஸாபீஹுஸ் ஸுன்னா)

٧٨- عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَيؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ لِجِبْرِيلَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَانْتَفَضَ جِبْرِيلُ وَقَالَ: يَامُحَمَّدُ! إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَاباً مِّنْ نُورٍ لَوْدَنَوْتُ مِنْ بَعْضِهَا لَاَحْتَرَقْتُ.

مصابيح السنة:٤/٣ ٠

78. “ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் “ஜிப்ரஈலே! நீர் உமது இரட்சகனைப் பார்த்துள்ளீரா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், இதைக் கேட்டவுடனே ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் நடுநடுங்கினார்கள். “முஹம்மது (ஸல்) அவர்களே! எனக்கும், எனது இரட்சகனுக்குமிடையே ஒளியினாலான எழுபது திரைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றின் அருகில் சென்றாலும் நான் எரிந்துவிடுவேன்’’ என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸுராரதுப்னு அவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٧٩- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: قَالَ اللّٰهُ : أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ وَقَالَ: يَدُ اللّٰهِ مَلْآي لاَ يَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلِ وَالنَّهَارِ وَقَالَ: أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاءَ وَاْلاَرْضَ فَإِنَّهُ لَمْ يَغِضْ مَافِي يَدِهِ وَكَانَ عَرْشُهُ عَلَي الْمَاءِ، وَبِيَدِهِ الْمِيزَانُ يَخْفِضُ وَيَرْفَعُ.

رواه البخاري باب قوله وكان عرشه علي الماء رقم:٤٦٨٤

79. “நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களுக்கு நான் தருகிறேன்!’’ என்று அல்லாஹ் கூறுகிறான் என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் வின் திருக்கரம் (அவனது கருவூலம் எப்பொழுதும்) நிரம்பியதாகவே உள்ளது. இரவு பகலாகத் தொடர்ந்து செலவு செய்வது அக்கருவூலத்தைக் கொஞ்சமும் குறைத்து விடாது’’ என்றும் சொன்னார்கள். மேலும் அவன் வானம், பூமியைப் படைத்ததிலிருந்து செலவு செய்து வருகிறான். (அவ்வாறிருந்தும்) அவனது பொக்கிஷத்தில் ஏதும் குறையவில்லை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? (வானம் பூமியைப் படைப்பதற்கு முன்பு) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. (அந்நேரத்திலேயே அவன் நிர்ணயித்து விட்ட அளவின்படி சிலருக்கு) கூடுதலாகவும் (சிலருக்கு) குறைவாகவும் அளந்து தரக்கூடிய தராசு அவனிடமே உள்ளது’’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٨٠ – عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: يَقْبِضُ اللّٰهُ اْلاَرْضَ يَوْمَ الْقِيَامَةِ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ اْلاَرْضِ؟

رواه البخاري باب قول الله تعالي ملك الناس رقم:٧٣٨٢

80. “அல்லாஹ் கியாமத் நாளன்று பூமியை தன் கைவசம் வைத்துக் கொள்வான், மேலும் வானத்தைத் தன் வலக்கரத்தில் சுருட்டிவிடுவான், பிறகு நானே அரசன் இந்த பூமியில் ஆட்சி செய்த அரசர்கள் எல்லாம் எங்கே? என்று கேட்பான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٨١- عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنِّي أَرَي مَالاَ تَرَوْنَ وَأَسْمَعُ مَالاَ تَسْمَعُونَ، أَطَّتِ السَّمَاءُ وَحُقَّ لَهَا أَنْ تَئِطَّ مَافِيهَا مَوْضِعُ أَرْبَعِ أَصَابِعَ إِلاَّ وَمَلَكٌ وَاضِعٌ جَبْهَتَهُ للّٰهِ سَاجِدًا، وَاللّٰهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا وَمَا تَلَذَّذْتُمْ بِالنِّسَاءِ عَلَي الْفُرُشِ وَلَخَرَجْتُمْ إِلَي الصُّعُدَاتِ تَجْأَرُونَ إِلَي اللّٰهِ، لَوَدِدْتُ أَنِّي كُنْتُ شَجَرَةً تُعْضَدُ.

رواه الترمذي وقال هذا حديث حسن غريب باب ماجاء في قول النبي ! لو تعلمون…. رقم:٢٣١٢

81. “நீங்கள் கண்டிராத காட்சிகளை நான் காணுகின்றேன். நீங்கள் கேட்டிராத விஷயங்களை நான் கேட்கின்றேன். (கட்டில் போன்றவைகள் தன் மீதுள்ள பளுவால் கிரீச்சிடுவதைப் போல்) வானம் (அல்லாஹ்வின் மகத்துவம் என்னும் பளுவால்) கிரீச்சிடுகிறது. (அல்லாஹ்வின் மகத்துவம் என்னும் சுமை மிகுதியால்) வானம் அவ்வாறு சப்தமெழுப்புவது அதன் இன்றியமையாத நிலையாகும். மலக்குகள் அல்லாஹ்வுக்காக தங்களது நெற்றியைப் பதித்து ஸஜ்தா செய்யாத, நான்கு விரல் இடைவெளியுள்ள சிறு இடம் கூட வானத்தில் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணை! நான் அறிந்தவைகளை நீங்கள் அறிந்துகொண்டால் குறைவாகச் சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள், படுக்கையில் தம் மனைவியர்களுடன் இன்புற்றிருக்கமாட்டீர்கள், அந்தோ! நான் வேரோடு வெட்டப்படக் கூடிய ஒரு மரமாக இருந்திருக்கக் கூடாதா?’’ என்று அல்லாஹ்விடம் முறையிட்டவர்களாக காடுகளுக்குச் சென்றுவிடுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

٨٢- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ للّٰهِ تِسْعَةً وَّتِسْعِينَ إِسْماً مِائَةً غَيْرَ وَاحِدَةٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ هُوَ اللّٰهُ الَّذِي لاٰ إِلٰهَ إِلاَّ هُوَ (١)الرَّحْمنُ (٢)الرَّحِيمُ (٣)الْمَلِكُ (٤)الْقُدُّوسُ (٥)السَّلاَمُ (٦)الْمُؤْمِنُ (٧)الْمُهَيْمِنُ (٨)الْعَزِيزُ (٩)الْجَبَّارُ (١٠)الْمُتَكَبِّرُ (١١)الْخَالِقُ (١٢)الْبَارِيءُ (١٣)الْمُصَوِّرُ (١٤)الْغَفَّارُ (١٥)الْقَهَّارُ (١٦)الْوَهَّابُ (١٧)الرَّزَّاقُ (١٨)الْفَتَّاحُ (١٩)العَلِيْمُ (٢ ٠)القَابِضُ (٢١)الْبَاسِطُ (٢٢)الـْخَافِضُ (٢٣)الرَّافِعُ (٢٤)الـْمُعِزُّ (٢٥)الـْمُذِلُّ (٢٦)السَّمِيْعُ (٢٧)الـْبَصِيْرُ (٢٨)الْحَكَمُ (٢٩)الْعَدْلُ (٣٠)اللَّطِيفُ (٣١)الْخَبِيرُ (٣٢)الْحَلِيمُ (٣٣)الْعَظِيمُ (٣٤)الْغَفُورُ (٣٥)الشَّكُورُ (٣٦)الْعَلِيُّ (٣٧)الْكَبِيرُ (٣٨)الْحَفِيظُ (٣٩)الْمُقِيتُ (٤٠)الْحَسِيبُ (٤١)الْجَلِيلُ (٤٢)الْكَرِيمُ (٤٣)الرَّقِيبُ (٤٤)الْمُجِيبُ (٤٥)الْوَاسِعُ (٤٦)الْحَكِيمُ (٤٧)الْوَدُودُ (٤٨)الْمَجِيدُ (٤٩)الْباَعِثُ (٥٠)الشَّهِيدُ (٥١)الْحَقُّ (٥٢)الْوَكِيلُ (٥٣)الْقَوِيُّ (٥٤)الْمَتِينُ (٥٥)الْوَلِيُّ (٥٦)الْحَمِيدُ (٥٧)الْمُحْصِي (٥٨)الْمُبْدِيءُ (٥٩)الْمُعِيدُ (٦٠)الْمُحْيِ (٦١)الْمُمِيتُ (٦٢)الْحَيُّ (٦٣)الْقَيُّومُ (٦٤)الْوَاجِدُ (٦٥)الْمَاجِدُ (٦٦)الْوَاحِدُ (٦٧)اْلاَحَدُ (٦٨)اْلصَّمَدُ (٦٩)الْقَادِرُ (٧٠)الْمُقْتَدِرُ (٧١)الْمُقَدِّمُ (٧٢)الْمُؤَخِّرُ (٧٣)اْلاَوَّلُ (٧٤)اْلآخِرُ (٧٥)الظَّاهِرُ (٧٦)الْبَاطِنُ (٧٧)الْوَالِي (٧٨)الْمُتَعَالِي (٧٩)الْبَرُّ (٨٠)التَّوَّابُ (٨١)الْمُنْتَقِمُ (٨٢)الْعَفُوُّ (٨٣)الرَّؤُوفُ (٨٤)مَالِكُ الْمُلْكِ (٨٥)ذُو الْجَلاَلِ وَاْلإِكْرَامِ (٨٦)الْمُقْسِطُ (٨٧)الْجَامِعُ (٨٨)الْغَنِيُّ (٨٩)الْمُغْنِي (٩٠)الْمَانِعُ (٩١)الضَّارُّ (٩٢)النَّافِعُ (٩٣)النُّورُ (٩٤)الْهَادِي (٩٥)الْبَدِيعُ (٩٦)الْبَاقِي (٩٧)اْلوَارِثُ (٩٨)الرَّشِيدُ (٩٩)الصَّبُورُ.

رواه الترمذي وقال هذا حديث غريب باب حديث في اسماء الله….، رقم: ٣٥ ٠٧

82. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்றொன்பது திருநாமங்கள் (நூற்றுக்கு ஒன்று குறைவாக) உள்ளன. அதை நன்றாக மனனம் செய்தவர் சுவனம் செல்வார். அவன் அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் (99 பண்புப் பெயர்கள் பின்வருமாறு) (1)அளவற்ற அருளாளன் (2)நிகரற்ற கிருபையுடையவன் (3)உண்மையான அரசன் (4)குறைகளை விட்டும் தூய்மையானவன் (5)ஆபத்துக்களை விட்டும் சாந்தி பெற்றவன் (6)அடைக்கலமும் நம்பிக்கையும் அளிப்பவன் (7)முழுமையாகப் பொறுப்பேற்பவன் (8)யாவற்றையும் மிகைத்தவன் (9)சீர்குலைந்ததைச் சரி செய்பவன் (10)பெருமை மிக்கவன் (11)படைக்கக் கூடியவன் (12)செம்மையாகப் படைப்பவன் (13)உருவம் அமைப்பவன் (14)பாவங்களை மிகுதமாக மன்னிப்பவன் (15)யாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் (16)வாரி வழங்குபவன் (17)அதிகமாகத் தேவைகளைப் பூர்த்தி செய்பவன் (18)எல்லோருக்கும் ரஹ்மத்துடைய வாயில்களைத் திறக்கக் கூடியவன் (19)அனைத்தையும் அறிபவன் (20)நெருக்கடியை அளிப்பவன் (21)விசாலத்தைத் தருபவன் (22)தாழ்த்துபவன் (23)உயர்த்துபவன் (24)கண்ணியம் அளிப்பவன் (25)இழிவுபடுத்துபவன் (26)யாவற்றையும் கேட்பவன் (27)அனைத்தையும் பார்ப்பவன் (28)உறுதியாகத் தீர்ப்பளிப்பவன் (29)முழுமையான நீதம் உடையவன் (30)உள்ளங்களில் உள்ளதை அறியக் கூடியவன் (31)எல்லா செய்திகளையும் அறிந்தவன் (32)சாந்தம் நிறைந்தவன் (33)மகத்துவம் மிக்கவன் (34)மிக மன்னிப்பவன் (35)மதிப்பவன், குறைவானவற்றுக்குப் பகரமாக அதிகமாக கொடுப்பவன் (36)உயர்ந்த பதவி உடையவன் (37)மிகப் பெரியவன் (38)பாதுகாவலன் (39)யாவருக்கும் வாழ்வதற்குரிய பொருட்களைக் கொடுப்பவன் (40)அனைவருக்கும் போதுமானவன் (41)மாண்புமிக்கவன் (42)கேட்காமலேயே கொடுப்பவன் (43)கண்காணிப்பவன் (44)ஏற்றுக் கொள்பவன் (45)விசாலமானவன் (46)நுண்ணறிவாளன் (47)தன் அடியார்களை நேசிப்பவன் (48)கண்ணியமும், சிறப்பும் மிக்கவன் (49)உயிர் கொடுத்து கப்ரிலிருந்து எழுப்புபவன் (50)எல்லாவற்றையும் பார்ப்பவன், அறிபவன் (51)தனது சகல தன்மைகளுடன் உள்ளவன் (52)காரியத்துக்குப் பொறுப்பேற்பவன் (53)சக்திமிக்கவன் (54)உறுதிமிக்கவன் (55)உதவி செய்பவன் (56)புகழுக்குரியவன் (57)படைப்புகள் அனைத்தையும் பற்றி தெரிந்திருப்பவன் (58)முதன் முதலாக படைப்பவன் (59)மீண்டும் படைப்பவன் (60)வாழ்வு அளிப்பவன் (61)மரணமளிப்பவன் (62)என்றென்றும் நிரந்தரமாக உயிருடனிருப்பவன் (63)அனைத்தையும் நிலைநிறுத்தி வருபவன் (64)அனைத்தையும் தன்னிடம் வைத்திருப்பவன் (65)பெருமைமிக்கவன் (66)ஒருவன் (67)தனித்தவன் (68)எல்லாவற்றை விட்டும் தேவையற்றவன், எல்லாப் படைப்பினங்களும் அவனிடமே தேவையுடைய தலைவன் (69)சக்தி மிக்கவன் (70)எல்லாவற்றின் மீதும் முழுமையான சக்திமிக்கவன் (71)முற்படுத்துபவன் (72)பிற்படுத்துபவன் (73)எல்லாவற்றையும் விட முந்தியவன் (74)எல்லாவற்றையும் விடப் பிந்தியவன் (யாரும் இல்லாத, ஏதும் இல்லாத போது அவன் இருந்தது போல், யாரும் இருக்காத, ஏதும் இருக்காத போதும், அதற்குப் பிறகும் அவன் இருப்பான்) (75)வெளிப்படையானவன் (அவன் இருப்பது ஆதாரங்களின் மூலம் முற்றிலும் வெளிப்படையாக உள்ளது) (76)பார்வையை விட்டும் மறைந்து இருப்பவன் (77)சகல பொருட்களின் பொறுப்பாளி (78)படைப்புகளின் தன்மைகளை விட்டும் உயர்ந்தவன் (79)அதிகம் உபகாரமளிப்பவன் (80)தௌபாச் செய்ய வாய்ப்பு அளிப்பவன், தவ்பாவை ஏற்பவன் (81)பாவிகளிடமிருந்து (பழிக்குப்பழி) பகரம் வாங்குபவன் (82)அதிகம் பிழை பொறுப்பவன் (83)மிக இரக்கம் உள்ளவன் (84)அகிலங்களின் அரசன் (85)மகத்துவமும், கம்பீரமும், கிருபையும், கண்ணியமும் உடையவன் (86)உரிமையாளர்களுக்குரிய உரிமையைக் கொடுப்பவன் (87)படைப்புகளை கியாமத் நாளில் ஒன்று சேர்ப்பவன் (88)எவரிடமும் எந்தத் தேவையுமற்றவன் (89)தனது அருளால் அடியார்களைத் தேவையற்றவர்களாக ஆக்குபவன் (90)தடுப்பவன் (91)(தன் நுண்ணறிவு நாட்டத்தின் அடிப்படையில்) துன்பங்களை ஏற்படுத்துபவன் (92)பலன் அளிப்பவன் (93)பிரகாசமானவன், பிரகாசம் அளிப்பவன் (94)நேர்வழி காட்டி, அதில் நடத்துபவன் (95)முன் மாதிரியின்றிப் படைப்பவன் (96)எவ்வித அழிவும் இல்லாமல் நிரந்தரமாக இருப்பவன் (97)அனைவரும் அழிந்தபின்னும் நீடிப்பவன் (98)அனைத்துச் செயல்களும் தீர்ப்புகளும் சீராக அமையப் பெற்றவன், நுட்பம் உடையவன் (99)பொறுமைமிக்கவன் (தன் அடியார்கள் பெருங்குற்றங்கள் செய்வதைக் கண்டும் உடனடியாக வேதனையை அனுப்பி அழிக்காமலிருப்பவன்)

தெளிவுரை:- குர்ஆன், ஹதீஸில் அல்லாஹ்வின் பெயர்கள் ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றில் 99 பெயர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன.

(மளாஹிருல் ஹக்)

٨٣- عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍؓ أَنَّ الْمُشْرِكِينَ قَالُوا لِلنَّبِيِّ : يَامُحَمَّدُؐ أُنْسُبْ لَنَا رَبَّكَ فَأَنْزَلَ اللّٰهُ تَبَارَكَ وَتَعَالَي (قُلْ هُوَاللّٰهُ أَحَدٌ۞ اللّٰهُ الصَّمَدُ۞ لَمْ يَلِدْ لا وَلَمْ يُولَدْ۞ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ۞).

رواه أحمد: ٥/١٣٤

83. “ஒரு முறை முஷ்ரிக்கு (இணைவைப்பவர்)கள் நபி (ஸல்) அவர்களிடம் “முஹம்மதே (ஸல்) உமது இரட்சகனின் வம்சாவளியைப் பற்றி எங்களுக்கு விவரிப்பீராக!’ என்று கேட்டார்கள். (அதற்கு பதிலாக) “நபியே! நீர் கூறுவீராக! அவன் அல்லாஹுதஆலா) ஒருவனே. அல்லாஹுதஆலா (எவரிடமிருந்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை. அவன் (எவராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை! என்ற சூரத்துல் இக்லாஸை அல்லாஹுதஆலா இறக்கி வைத்தான்’’ என்று ஹஜ்ரத் உபைய் இப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٨٤- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : قَالَ اللّٰهُ : كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذلِكَ، أَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: إِنِّي لَنْ أُعِيدَهُ كَمَا بَدَأْتُهُ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: إِتَّخَذَ اللّٰهُ وَلَدًا وَأَنَا الصَّمَدُ الَّذِي لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ وَلَمْ يَكُنْ لِي كُفُواً أَحَدٌ.

رواه البخاري باب قوله الله الصمد رقم:٤٩٧٥

84. “ஆதமின் மகன் என்னைப் பொய்படுத்துகின்றான். அவனுக்கு அது முறையல்ல. அவன் என்னைத் திட்டுகின்றான். அவனுக்கு அந்த தகுதியுமல்ல. நான் அவனை ஆரம்பத்தில் படைத்தது போல், (இறந்தபின்) மீண்டும் அவனைப் படைத்து உயிர் கொடுக்க முடியாது என்று சொல்வது அவன் என்னைப் பொய்ப்படுத்துவதாகும். அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை ஆக்கிக் கொண்டான் என்று சொல்வது அவன் என்னைத் திட்டுவதாகும். ஆனால் நானோ யாருடைய தேவையும் அற்றவன். நான் (யாரையும்) பெறவுமில்லை. நான் (யாராலும்) பெறப்படவுமில்லை. இன்னும் எனக்கு நிகராக எவருமில்லை’’ என்று அல்லாஹ் கூறிய ஹதீஸே குத்ஸியை நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٨٥- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: لاَ يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّي يُقَالَ هذَا: خَلَقَ اللّٰهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللّٰهَ؟ فَإِذَا قَالُوا ذلِكَ فَقُولُوا: اللّٰهُ أَحَدٌ اللّٰهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ ثُمَّ لْيَتْفُلْ عَنْ يَسَارِهِ ثَلاَثاً وَلْيَسْتَعِذْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ.

رواه ابوداؤود مشكوة المصابيح ، رقم:٧٥

85. “அல்லாஹு (வின் உள்ளமையை)ப் பற்றி மக்கள் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். (அதன் தொடரிலே) படைப்புகள் அனைத்தையும் அல்லாஹுதஆலா படைத்தான். அல்லாவை யார் படைத்தது?’’ என்று கூடக் கேட்பார்கள். (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக) மக்கள் இப்படிக் கேட்டால், “அல்லாஹ் தனித்தவன். அவன் எவருடைய தேவையுமற்றவன். (அனைவரும் அவனிடம் தேவையுள்ளவர்கள்) அல்லாஹ் (எவரையும்) பெற்றெடுக்கவுமில்லை. அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை’, என்ற வாசகங்களைக் கூறிக் கொள்ளுங்கள். பிறகு தனது இடப்புறத்தில் மூன்று முறை துப்பி, எடுத்தெறியப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹுதஆலா விடம் பாதுகாவல் தேடுங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத், மிஷ்காத்)

٨٦- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : قَالَ اللّٰهُ تَعَالَي: يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيِ اْلاَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ.

رواه البخاري باب قول الله تعالي يريدون ان يبدلوا كلام الله، رقم:٧٤٩١

86. “ஆதமுடைய மகன் காலத்தைச் சபித்து என்னைத் துன்புறுத்துகிறான், ஆனால் நான் தான் காலமாக இருக்கிறேன். என் கட்டுப்பாட்டில் தான் செயல்கள் அனைத்தும் உள்ளன. என் விருப்பப்படி இரவு, பகலை மாறி, மாறி வரச் செய்கிறேன்’’ என்று அல்லாஹுதஆலா கூறியதாக நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٨٧- عَنْ أَبِي مُوسَي اْلاَشْعَرِيِّؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : مَا أَحَدٌ أَصْبَرَ عَلَي أَذًي سَمِعَهُ مِنَ اللّٰهِ يَدَّعُونَ لَهُ الْوَلَدَ ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ.

رواه البخاري باب قول الله تعالي ان الله هوالرزاق ….، رقم:٧٣٧٨

87. “மனம் துன்புறும் சொல்லைக் கேட்டு அதிகம் சகித்துக் கொள்பவர், அல்லாஹ்வைவிட வேறு யாரும் இல்லை, முஷ்ரிக்குகள் (இணை வைப்பாளர்கள்) அவனுக்கு மகன் இருப்பதாக வாதிடுகின்றனர். பின்னரும், அவர்களுக்கு ஆரோக்கியம் அளித்து, அவர்களுடைய தேவைகளை அவன் நிறைவேற்றுகிறான்’’, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٨٨- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ النَّبِيَّؐ قَالَ: لَمَّا خَلَقَ اللّٰهُ الْخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ فَهُوَ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ: إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي.

رواه مسلم باب في سعة رحمة الله تعالي….، رقم:٦٩٦٩

88. “அல்லாஹுதஆலா படைப்பினங்களைப் படைத்தபொழுது தன்னிடமுள்ள பதிவேட்டில் “என் கருணை (ரஹ்மத்) என் கோபத்தை மிகைத்துவிட்டது’ என்று எழுதி வைத்துவிட்டான். இந்த ஏடு அர்ஷுக்கு மேலே அவனிடத்தில் இருக்கிறது’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

٨٩- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللّٰهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمِعَ بِجَنَّتِهِ أَحَدٌ، وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَاعِنْدَ اللّٰهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنِطَ مِنْ جَنَّتِهِ أَحَدٌ.

رواه مسلم باب في سعة رحمة الله تعالي ….، رقم:٦٩٧٩

89. “அல்லாஹுதஆலா வுக்கு மாறு செய்பவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கும் தண்டனைகளை ஒரு முஃமின் சரியாகத் தெரிந்து கொண்டால், எவருக்கும் சொர்க்கம் கிடைக்காதோ என்று கருதுவான். மேலும் அல்லாஹுதஆலா வின் (ரஹ்மத்) அருளைப் பற்றி ஒரு காஃபிர் சரியாகத் தெரிந்துகொண்டால், எவரும் சுவனம் கிடைப்பதை விட்டும் நிராசை கொள்ளமாட்டான்’’ (நம்பிக்கை இழக்கமாட்டான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

٩٠- عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: إِنَّ للّٰهِ مِائَةَ رَحْمَةٍ أَنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الْجِنِّ وَاْلإِنْسِ وَالْبَهَائِمِ وَالْهَوَامِّ، فَبِهَا يَتَعَاطَفُونَ، وَبِهَا يَتَرَاحَمُونَ، وَبِهَا تَعْطِفُ الْوَحْشُ عَلَي وَلَدِهَا، وَأَخَّرَ اللّٰهُ تِسْعاً وَّتِسْعِينَ رَحْمَةً يَرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ الْقِيَامَةِ.

رواه مسلم باب في سعة رحمة الله تعالي…، رقم:٦٩٧٤. وفي رِواية لمسلم: فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَكْمَلَهَا بِهذِهِ الرَّحْمَةِ. رقم: ٦٩٧٧

90. “அல்லாஹு அவிடம், நூறு அருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் ஜின்கள், மனிதர்கள், மிருகங்கள், புழுப் பூச்சிகளுக்கிடையே இறக்கிவைத்துள்ளான். அந்த ஒரு பங்கின் காரணமாகத் தான் ஒருவர் மற்றவரிடம் மென்மையுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாகவே காட்டு விலங்குகள், தமது குட்டிகளிடம் பாசம் கொள்கின்றன, மீதமுள்ள தொண்ணூற்றொன்பது அருள்களை கியாமத் நாளில் தனது அடியார்களின் மீது பொழிவதற்காகத் தன்னிடம் வைத்துள்ளான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் கியாமத் நாளில் இந்த ரஹ்மத்துகளோடு உலகத்தார்களுக்கு கொடுத்த ரஹ்மத்தையும் சேர்த்து முழுமையாக ஆக்கிவிடுவான் (பிறகு இந்த நூறு ரஹ்மத்துகளின் மூலம் தன் அடியார்களின் மீது அருள் மாரி பொழிவான்) என்று மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது.

(முஸ்லிம்)

٩١- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ أَنَّهُ قَالَ: قُدِمَ عَلَي رَسُولِ اللّٰهِ بِسَبْيٍ فَإِذَا امْرَأَةٌ مِنَ السَّبْيِ تَبْتَغِي إِذَا وَجَدَتْ صَبِيّاً فِي السَّبْيِ أَخَذَتْهُ فَاَلْصَقَتْهُ بِبَطْنِهَا وَأَرْضَعَتْهُ، فَقَالَ لَنَا رَسُولُ اللّٰهِؐ : أَتَرَوْنَ هذِهِ الْمَرْأَةَ طَارِحَةً وَلَدَهَا فِي النَّارِ؟ قُلْنَا: لاَ وَاللّٰهِ وَهِيَ تَقْدِرُ عَلَي أَنْ لاَ تَطْرَحَهُ، فَقَالَ رَسُولُ اللّٰهِؐ : للّٰهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ هذِهِ بِوَلَدِهَا.

رواه مسلم باب في سعة رحمة الله تعالي…..رقم: رقم: ٦٩٧٨

91. “ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமூகத்தில் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் தனது குழந்தையை தேடிக் கொண்டிருந்தாள். குழந்தை கிடைத்ததுமே அதை வாரியெடுத்துத் தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டு அதற்குப் பாலுட்டினாள். இக்காட்சியைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இப்பெண் தன்னுடைய குழந்தையை நெருப்பில் எறிந்துவிடுவாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’’ என்று எங்களிடம் கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவள் எறியமாட்டாள். அவளால் எறியவும் முடியாது’’ என்று கூறினோம். இந்தப் பெண் தனது குழந்தையிடம் வைத்திருக்கும் பாசத்தைவிடப் பன்மடங்கு அதிகமாக அல்லாஹ் தன் அடியார்களிடம் பாசம் வைத்துள்ளான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

٩٢- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَامَ رَسُولُ اللّٰهِؐ فِي صَلوةٍ وَقُمْنَا مَعَهُ، فَقَالَ أَعْرَابِيٌّ وَهُوَ فِي الصَّلوةِ: اللّٰهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلاَ تَرْحَمْ مَعَنَا أَحَدًا، فَلَمَّا سَلَّمَ النَّبِيُّؐ قَالَ لِلْأَعْرَابِيِّ: لَقَدْ حَجَّرْتَ وَاسِعاً يُرِيدُ رَحْمَةَ اللّٰهِ.

رواه البخاري باب رحمة الناس والبهائم، رقم:٦ ٠١ ٠

92. “(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றார்கள். நாங்களும் அன்னாருடன் சேர்ந்து தொழுதோம். அப்பொழுது கிராமவாசி (புதிய முஸ்லிம்) ஒருவர் “யாஅல்லாஹ்! எனக்கும், முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் நீ கிருபை செய்வாயாக! எங்களுடன் வேறு எவருக்கும் நீ கிருபை செய்யாதே!’’ என்று தொழுகையிலேயே சொன்னார். ஸலாம் கொடுத்த பின் அந்தக் கிராமவாசியிடம் (அல்லாஹ்வின்) விசாலமான (ரஹ்மத்)தை நீர் சுருக்கி விட்டீர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٩٣- عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنْ رَسُولِ اللّٰهِ أَنَّهُ قَالَ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لاَ يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هذِهِ اْلاَمَّةِ يَهُودِيٌّ وَلاَ نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلاَّ كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ.

رواه مسلم باب وجوب الايمان …..، رقم:٣٨٦

93. “எவன் கைவசம் முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! இந்த (எனது) சமுதாயத்தில் உள்ள ஒருவர் – அவர் யூதராக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் – என்னைப் பற்றி கேள்விப்பட்ட பின்பும் நான் கொண்டு வந்த(மார்க்கத்)தை ஏற்றுக் கொள்ளாமல் (அதே நிலையிலேயே) மரணித்து விடுவாராயின் அவர் நிச்சயமாக நரகவாசிகளைச் சேர்ந்தவராவார்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

٩٤- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهؓ قَالَ: جَاءَتْ مَلاَئِكَةٌ إِلَي النَّبِيِّؐ وَهُوَ نَائِمٌ فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا: إِنَّ لِصَاحِبِكُمْ هذَا مَثَلاً قَالَ: فَاضْرِبُوا لَهُ مَثَلاً فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا: مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَي دَارً وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِياً فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنَ الْمَأْدُبَةِ وَمَنْ لَمْ يُجِبِ الدَّاعِيَ لَمْ يَدْخُلِ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنَ الْمَأْدُبَةِ فَقَالُوا: أَوِّلُوهَا لَهُ يَفْقَهْهَا فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا: فَالدَّارُ: الْجَنَّةُ، وَالدَّاعِي: مُحَمَّدٌ، فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا فَقَدْ أَطَاعَ اللّٰهَ وَمَنْ عَصَي مُحَمَّدًا فَقَدْ عَصَي اللّٰهَ وَمُحَمَّدٌ فَرْقٌ بَيْنَ النَّاسِ.

رواه البخاري باب الاقتداء بسنن رسول الله ! رقم: ٧٢٨١

94. ஹஜ்ரத் ஜாபிருப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபொழுது, சில மலக்குகள் அன்னாரிடம் வந்து தமக்கிடையே பேசிக்கொண்டனர். ஒருவர் “அன்னார் உறங்குகிறார்கள்’ என்றார், மற்றவர், “கண்கள்தான் உறங்குகின்றன. உள்ளமோ விழித்திருக்கின்றது’’ என்றார். (பிறகு தங்களுக்கிடையே பேசிக் கொண்டனர்.) ஒருவர், “உங்களுடைய இந்தத் தோழருக்கு ஒரு உதாரணம் உண்டு’’ என்றார்.மற்றொருவர் “அந்த உதாரணத்தை அவருக்குச் சொல்லிக் காட்டுங்கள்!’’ என்றார். இன்னோருவர், “அவரோ உறங்குகிறார்’’ (இதைக் கூறுவதால் என்ன பலன்?) என்றார். அவர்களில் ஒருவர், “நிச்சயமாகக் கண்கள்தான் உறங்குகின்றன, ஆனால், உள்ளமோ விழித்துக் கொண்டிருக்கிறது!’’ என்றார். பின்பு மலக்குகள் தமக்குள் ஒருவர் மற்றவரிடம், இவருக்கு உதாரணம், ஒரு மனிதர் வீடொன்று கட்டினார். அதில் விருந்துக்கு ஏற்பாடு செய்து மக்களை அழைக்க ஒருவரை அனுப்பிவைத்தார். எவர் அழைப்பாளரின் அழைப்பை ஏற்றுக் கொண்டாரோ, அவர் வீட்டிலும் நுழைவார், உணவும் அருந்துவார். அந்த அழைப்பாளரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாதவர், வீட்டிலும் நுழையமாட்டார், உணவும் உண்ணமாட்டார்’ என்று கூறினார். இதைக்கேட்ட மலக்குகள் “அதனை அவருக்குத் தெளிவாகக் கூறுங்கள், அவர் விளங்கிக் கொள்ளட்டும்!’’ என்றனர் அவரோ உறங்குகிறார். (தெளிவாகக் கூறுவதால் என்ன பலன்?) என்று ஒரு மலக்கு சொன்னார் “கண்கள்தான் உறங்குகின்றன; உள்ளமோ விழித்துக் கொண்டிருக்கிறது’ என்று மற்றவர் கூறினார். பிறகு, வீடு என்பது சொர்க்கம் (அதை அல்லாஹுதஆலா படைத்து, அதில் விதவிதமான பாக்கியங்களை வைத்து அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தான்) (அந்தச் சொர்க்கத்தின் பக்கம் அழைக்கும்) அழைப்பாளர் ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களாவார்கள். எவர் நபி (ஸல்) அவர்களுக்கு வழிப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டார். (ஆகவே அவர் சொர்க்கத்தில் நுழைந்து அங்குள்ள பாக்கியங்களைப் பெற்றுக் கொள்வார்) எவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தாரோ, அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார். (எனவே சொர்க்கத்தின் பாக்கியங்களை இழந்துவிடுவார்) முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களை வழிப்படுபவர்கள், வழிப்படாதவர்கள் என) பிரித்து காட்டிவிட்டார்கள்’’ என்று சொன்னார்.

தெளிவுரை:- நபிமார்களின் (அலை) உறக்கம் ஏனைய மனிதர்களின் உறக்கத்தை விட்டும் வேறுபட்டிருப்பது அவர்களுக்கே உரிய சிறப்புத் தன்மையாகும். பொதுவாக மனிதர்கள் உறங்கும்போது நடக்கும் எதனையும் உணரமாட்டார்கள். ஆனால், நபிமார்களோ (அலை) உறக்கத்தின் போதும் தம்மைச் சுற்றி நடப்பவைகளை முழுமையாக அறிந்து கொள்வே செய்வார்கள். அந்நேரத்தில் கண்கள் மட்டுமே உறங்கும். உள்ளமோ அல்லாஹ் வின் சிந்தனையில் ஈடுபட்டபடி முழுமையாக விழித்திருக்கும்.

(பத்லுல் மஜ்ஹூத்)

٩٥- عَنْ أَبِي مُوسَيؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: إِنَّمَا مَثَلِي وَمَثَلُ مَا بَعَثَنِيَ اللّٰهُ بِهِ كَمَثَلِ رَجُلٍ أَتَي قَوْماً فَقَالَ: يَا قَوْمِ إِنِّي رَأَيْتُ الْجَيْشَ بِعَيْنَيَّ، وَإِنِّي أَنَا النَّذِيرُ الْعُرْيَانُ فَالنَّجَاءَ، فَأَطَاعَهُ طَائِفَةٌ مِنْ قَوْمِهِ فَأَدْلَجُوا فَانْطَلَقُوا عَلَي مَهَلِهِمْ فَنَجَوْا، وَكَذَّبَتْ طَائِفَةٌ مِنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ، فَصَبَّحَهُمُ الْجَيْشُ فَأَهْلَكَهُمْ وَاجْتَاحَهُمْ، فَذلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي فَاتَّبَعَ مَا جِئْتُ بِهِ، وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذَّبَ بِمَا جِئْتُ بِهِ مِنَ الْحَقِّ.

رواه البخاري باب الاقتداء بسنن رسول الله ! رقم: ٧٢٨٣

95. “எனக்கும், அல்லாஹ் என்னிடம் கொடுத்தனுப்பிய மார்க்கத்துக்கும் உதாரணம், ஒரு மனிதர் தமது சமூகத்தாரிடம் வந்து, “எனது சமூகத்தாரே! (எதிரிகளின்) படையை என் இரு கண்களால் நான் கண்டேன். நான் உண்மையான எச்சரிக்கையாளன். எனவே உடனடியாக தப்பித்துக் கொள்ளுங்கள்!’’ என்று சொன்னார். அக்கூட்டத்திலிருந்த சிலர் அவரது பேச்சை ஏற்று மெல்ல மெல்ல இரவோடு இரவாக வெளியேறிச் சென்று எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொண்டனர். வேறுசிலர் அம்மனிதரின் பேச்சைப் பொய்யென்று கருதி காலை வரை தத்தமது வீடுகளிலேயே தங்கிவிட்டனர். காலை உதயமானதும் எதிரிகள் அவர்களின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைச் சின்னா பின்னமாக்கிவிட்டனர் (அழித்துவிட்டனர்). இதுவே எனது பேச்சை ஏற்று நான் கொண்டு வந்த(மார்க்கத்)தைப் பின்பற்றியவர்களுக்கும் எனக்கு மாறு செய்து நான் கொண்டு வந்த(மார்க்கத்)தைப் பொய்யாகக் கருதியவர்களுக்குமான உதாரணமாகும்’’ என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

தெளிவுரை:- அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தும் பழக்கம் அரபுகளிடம் இருந்தது, எனவே தான், எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இரவோடு இரவாகப் பயணம் செய்ததாக உதாரணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

٩٦- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ ثَابِتٍؓ قَالَ: جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِؓ إِلَي النَّبِيِّؐ فَقَالَ: يَارَسُولَ اللّٰهِؐ إِنِّي مَرَرْتُ بِأَخٍ لِي مِنْ قُرَيْظَةَ فَكَتَبَ لِي جَوَامِعَ مِنَ التَّوْرَاةِ أَلاَ أَعْرِضُهَا عَلَيْكَ؟ قَالَ: فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللّٰهِ قَالَ عَبْدُ اللّٰهِ يَعْنِي ابْنَ ثَابِتٍؓ: فَقُلْتُ لَهُ: اَلاَ تَرَي مَابِوَجْهِ رَسُولِ اللّٰهِ ؟ فَقَالَ عُمَرُؓ: رَضِينَا بِاللّٰهِ تَعَالَي رَبّاً وَّبِاْلإِسْلاَمِ دِيناً وَبِمُحَمَّدٍ رَسُولاً قَالَ: فَسُرِّيَ عَنِ النَّبِيِّؐ وَقَالَ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَصْبَحَ فِيكُمْ مُوسَي ثُمَّ اتَّبَعْتُمُوهُ وَتَرَكْتُمُونِي لَضَلَلْتُمْ إِنَّكُمْ حَظِّي مِنَ اْلاَمَمِ وَأَنَا حَظُّكُمْ مِنَ النَّبِيِّينَ.

رواه احمد:٤ /٢٦٥

96. ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து “யா ரஸூலல்லாஹ்! பனூகுரைளா கோத்திரத்தைச் சேர்ந்த எனது சகோதரர் ஒருவரை வழியில் சந்தித்தேன். அவர் (என்னுடைய நன்மையைக் கருதி) தவ்ராத்திலிருந்து கருத்துச் செறிவுள்ள நிறைந்த சில வாசகங்களை எனக்கு எழுதிக் கொடுத்தார், தாங்கள் அனுமதியளித்தால் தங்கள் முன் அதைச் சமர்ப்பிக்கிறேன்!’ என்றார்கள். ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், (இதைச் செவுயுற்றதும்) நபி (ஸல்) அவர்களின் முகத்தின் நிறம் மாறிவிட்டது. “உமரே, நபி (ஸல்) அவர்களின் புனித முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரிவதை நீர் பார்க்கவில்லையா?’’ என்று நான் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன், ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உடனடியாக (த் தனது தவற்றை உணர்ந்து) “அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் ஏற்றுக் கொண்டு பொருந்திக் கொண்டோம்’ என்று சொன்னார்கள். இந்த வாசகங்களைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் திருமுகத்திலிருந்து கோபத்தின் அறிகுறிகள் நீங்கலாயின. பிறகு, “முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! ஒரு வேளை ஹஜ்ரத் மூஸா (அலை) அவர்கள் (இப்பொழுது) உங்களுக்கு மத்தியில் இருந்து, நீங்களும் அவர்களைப் பின்பற்றி நடந்து, என்னை (பின்பற்றாமல்) விட்டு விடுவீர்களாயின் நிச்சயமாக நீங்கள் வழித்தவறிவிடுவீர்கள்! உம்மத்துகளில் எனது பங்காக நீங்கள் வந்துள்ளீர்கள். நபிமார்களில் உங்களுடைய பங்காக நான் வந்துள்ளேன்’’ (எனவே என்னைப் பின்பற்றுவதில் தான் உங்களது வெற்றி உள்ளது) என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

٩٧- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلاَّ مَنْ أَبَي قَالُوا: يَارَسُولَ اللّٰهِؐ وَمَنْ يَأْبيَ؟ قَالَ: مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَي.

رواه البخاري باب الاقتداء بسنن رسول الله ! رقم:٧٢٨٠

97. “எனது உம்மத்தில் மறுத்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் சுவனம் செல்வர்’’ என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, “யா ரஸூலல்லாஹ் (சுவனம் செல்வதை விட்டும்) யார் மறுப்பார்கள்?’’ என ஸஹாபாக்கள் கேட்டார்கள். “எனக்கு வழிப்பட்டவர் சொர்க்கத்தில் பிரவேசிப்பார், எனக்கு மாறு செய்தவர், நிச்சயமாக (சொர்க்கம் செல்வதை விட்டும்) மறுத்துவிட்டார்!’’ என நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

٩٨- عَنْ عَبْدِ اللّٰهِ بنِ عَمْـرٍوؓ قَالَ: قَـالَ رَسُولُ اللّٰهِؐ : لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّي يَكُونَ هَوَاهُ تَبَعاً لِّمَا جِئْتُ بِهِ.

رواه البغوي في شرح السنة:١/٢١٣، قال النووي: حديث صحيح رويناه في كتاب الحجة باسناد صحيح جامع العلوم والحكم ص:٣٦٤

98. “நான் கொண்டு வந்த(மார்க்கத்)தை உங்களில் ஒருவருடைய மனோ இச்சை பின்பற்றாதவரை அவர் (முழுமையான) முஃமின் ஆகமாட்டார்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஷரஹுஸ் ஸுன்னா)

٩٩- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللّٰهِؐ: يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لأَحَدٍ فَافْعَلْ، ثُمَّ قَالَ لِي: يَابُنَيَّ وَذلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ.

(وفي الحديث قصة طويلة) رواه الترمذي وقال: هذاحديث حسن غريب باب ماجاء في الاخذ بالسنة……رقم: ٢٦٧٨

99. “என்னருமை மகனே! நீர் காலையும், மாலையும் (எல்லா நேரங்களிலும்) உன் மனதில் பிறரைப் பற்றி எந்தக் குறையும் இல்லாத நிலையில் இருக்க முடிந்தால் அவசியமாக அவ்வாறே” இருந்து கொள்ளவும். எனது மகனே! இது எனது வழியைச் சேர்ந்தது, எவர் எனது வழியை உயிர்ப்பித்தாரோ, அவர் என்னை நேசித்தார், எவர் என்னை நேசித்தாரோ அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார்!’’ என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

١٠٠- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ يَقُولُ: جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَي بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّؐ يَسْاَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّؐ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا: وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّؐ قَدْ غَفَرَ اللّٰهُ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، فَقَالَ أَحَدُهُمْ: أَمَّا أَنَا فَأَنَا أُصَلِّي اللَّيْلَ أَبَدًا، وَقَالَ آخَرُ: أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ أُفْطِرُ، وَقَالَ آخَرُ: أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا، فَجَاءَ إِلَيْهِمْ رَسُولُ اللّٰهِؐ فَقَالَ: أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا؟ أَمَا وَاللّٰهِ إِنِّي لاَخْشَاكُمْ للّٰهِ وَأَتْقَاكُمْ لَهُ لكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي.

رواه البخاري باب الترغيب في النكاح، رقم:٥ ٠٦٣

100. ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த மனைவியரிடம் வந்தனர். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வணக்க நிலைகளை பற்றி அறிவிக்கப்பட்ட போது அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்கங்களை குறைவானதாக கருதினார்கள். எனவே “அல்லாஹ்வின் திருத்தூதருடன் நம்மை எவ்வாறு ஒப்பிட முடியும்?’ “அல்லாஹ் அன்னாரின் முன், பின் பாவங்களை (பாவங்கள் இருந்தாலும்) மன்னித்துவிட்டான்’, என்று சொல்லி (தம்மை சமாதானப்படுத்தி)க் கொண்டார்கள். அவர்களில் ஒருவர், “இனி எப்பொழுதும் இரவு முழுதும் நான் தொழுது கொண்டேயிருப்பேன்’ என்றும், இரண்டாமவர், ‘இனி எப்பொழுதும் நிரந்தரமாக நோன்பு வைத்து வருவேன்’. என்றும் மூன்றாமவர், “இனி பெண்களை விட்டும் விலகியிருப்பேன்! எக்காலமும் மணமுடிக்கமாட்டேன்’ என்றும் கூறினார். (அவர்களுக்குள் இந்தப் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்) ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வந்து சொன்னார்கள்: “இவ்வாறு, இவ்வாறு எல்லாம் நீங்கள் பேசிக்கொண்டு இருந்தீர்களல்லவா? கவனமாகக் கேளுங்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் உங்களில் அனைவரையும் விட அதிகம் அல்லாஹ்வை அஞ்சுபவன், உங்களில் அனைவரையும் விட அதிகம் அவன்மீது பயபக்தியுள்ளவன், எனினும், நான் நோன்பு வைக்கவும் செய்கிறேன்’ நோன்பு வைக்காமலும் இருக்கிறேன், தொழவும் செய்கிறேன், தூங்கவும் செய்கிறேன், பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன், (இதுதான் எனது வழி முறை) எனவே யார் எனது வழி முறையைப் புறக்கணித்தாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்!’’ என்று கூறினார்கள்.

(புகாரி)

١٠١- عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ أَجْرُ شَهِيدٍ.

رواه الطبراني باسناد لاباس به الترغيب:١/٨ ٠

101. “எனது சமுதாயம் சீர்கெட்ட நேரத்தில் எனது வழிமுறையை எவர் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்வாரோ, அவருக்கு ஷஹீதுடைய நன்மை கிடைக்கும்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தப்ரானீ, தர்ஙீப்)

١٠٢- عَنْ مَالِكِ بْنِ أَنَسٍؓ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ:تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابُ اللّٰهِ وَسُنَّةُ نَبِيِّهِ.

رواه مالك في الموطا , النهي عن القول في القدر ص:٧ ٠٢

102. “உங்களிடம் நான் இரு காரியங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாகப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவற மாட்டீர்கள். அவை, அல்லாஹ் வின் வேதமும் அவனது நபியுடைய வழிமுறையுமாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளிய ஹதீஸ் தமக்கு கிடைத்ததாக ஹஜ்ரத் மாலிக் இப்னு அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(முஅத்தா இமாம் மாலிக்)

١٠٣- عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَؓ قَالَ: وَعَظَنَا رَسُولُ اللّٰهِؐ يَوْماً بَعْدَ صَلوةِ الْغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقَالَ رَجُلٌ: إِنَّ هذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَبِمَاذَا تَعْهَدُ إِلَيْنَا يَارَسُولَ اللّٰهِ؟ قَالَ: أُوصِيكُمْ بِتَقْوَي اللّٰهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدٌ حَبَشِيٌّ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَ اخْتِلاَفاً كَثِيرًا، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ اْلاَمُورِ فَإِنَّهَا ضَلاَلَةٌ، فَمَنْ أَدْرَكَ ذلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ.

رواه الترمذي وقال هذا حديث حسن صحيح باب ماجاء في الاخذ بالسنة……،رقم:٢٦٧٦

103. “ஒரு நாள் சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு எங்களிடையே நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்தார்கள். (அப்பிரசங்கம் எங்களுக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.) அதைக் கேட்டு கண்களிருந்து கண்ணீர் வழிந்தோடியது. உள்ளங்கள் பயந்து நடுங்கின. அச்சமயம் ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்) யா ரஸூலல்லாஹ்! இது (நீண்ட பயணத்திற்காக விடைபெற்றுச் செல்லக்கூடிய ஒருவரின் உபதேசம் போன்றல்லவா இருக்கிறது? தாங்கள் எங்களுக்கு எதைப் பற்றி உபதேசிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதையும் (உங்களது தலைவர்) கறுப்பு இன அடிமையாக இருந்தாலும் அவரது பேச்சை செவிமடுத்து, அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதையும் உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன். (எனக்குப் பிறகு) உங்களில் உயிருடன் இருப்பவர் பலவித குழப்பங்களைக் காண்பார். அப்பொழுது மார்க்கத்தில் (இல்லாத) புதுப்புது காரியங்களை உருவாக்குவதை விட்டும் முழுமையாக நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனேனில், (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் வழிகேடாகும். இப்படிப்பட்ட காலத்தில் நீங்கள் வாழநேர்ந்தால் என்னுடைய வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களுடைய வழிமுறையையும் நீங்கள் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! உங்களுடைய கடவாய்ப் பற்களால் அவற்றை நன்கு கடித்துக் கொள்ளுங்கள்! எந்நிலையிலும் அதனை தவற விட்டு விடாதீர்கள்!’’ என்று கூறினார்கள் என ஹஜ்ரத் இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

١٠٤- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَبَّاسٍؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ رَأَي خَاتَماً مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ: يَعْمِدُ أَحَدُكُمْ إِلَي جَمْرَةٍ مِّنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ، فَقِيلَ للِرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللّٰهِؐ : خُذْ خَاتَمَكَ اِنْتَفِعْ بِهِ قَالَ: لاَ وَاللّٰهِ لاَآخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللّٰهِؐ .

رواه مسلم باب تحريم خاتم الذهب…، رقم:٥٤٧٢

104. ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருவர் தன் கை விரலில் தங்க மோதிரம் அணிந்திருப்பதைக் கண்டு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அதைக் கழற்றி வீசி எறிந்துவிட்டு “உங்களில் ஒருவர் நெருப்புக் கங்கை எடுத்து தனது கையிலே அதனை வைத்துக் கொள்ள விரும்புகிறாரா? என்று கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து சென்ற பின்) “உமது மோதிரத்தை எடுத்துக் கொள்வீராக! (அதை விற்றோ, பிறருக்கு அன்பளிப்பு செய்தோ) அதைக் கொண்டு பலன் பெற்றுக் கொள்வீராக!’ என்று அவருக்குச் சொல்லப்பட்டது, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எப்பொருளை நபி (ஸல்) அவர்கள் வீசி எறிந்துவிட்டார்களோ, அதை நான் ஒருபோதும் எடுக்கமாட்டேன்’’ என்று அவர் கூறினார்.

தெளிவுரை:- தங்க அணிகலன்களை அணிவது ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே எவர் தனது கரத்தில் தங்கம் அணிகிறாரோ அவரது கரம் நரகத்திற்குச் செல்லும் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.

(முஸ்லிம்)

١٠٥- قَالَتْ زَيْنَبُؓ: دَخَلْتُ عَلَي أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّؐ حِينَ تُؤُفِّيَ أَبُوهَا أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍؓ فَدَعَتْ أُمُّ حَبِيبَةَؓ بِطِيبٍ فِيهِ صُفْرَةٌ خَلُوقٌ أَوْغَيْرُهُ فَدَهَنَتْ مِنْهُ جَارِيَةً ثُمَّ مَسَّتْ بِعَارِضَيْهَا ثُمَّ قَالَتْ: وَاللّٰهِ مَالِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ اْلآخِرِ أَنْ تُحِدَّ عَلَي مَيِّتٍ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ إِلاَّ عَلَي زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا.

رواه البخاري باب تحد المتوفي عنها اربعة اشهر وعشرا

105. நபி (ஸல்) அவர்களின் மனைவி ஹஜ்ரத் உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் தந்தை ஹஜ்ரத் அபூஸுஃப்யானிப்னு ஹர்ப் (ரலி) அவர்கள் மரணமான சமயம் ஹஜ்ரத் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். ஹஜ்ரத் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், கலூக் போன்ற ஒரு பொருள் கலக்கப்பட்டதால் மஞ்சள் நிறமாய் இருந்த ஒரு வாசனைப் பொருளை வரவழைத்து அதிலிருந்து சிறிதை எடுத்துத் தமது அடிமைப் பெண்ணுக்குத் பூசிவிட்டார்கள். பின்பு அதிலிருந்து தாமும் எடுத்துத் தமது கன்னங்களில் தேய்த்துக் கொண்டார்கள், அதன் பிறகு “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்போது நறுமணம் பூச வேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை. அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்ட எந்தப் பெண்ணும், தனது கணவரின் மரணத்திற்காக தவிர வேறு எவரது மரணத்திற்கும் மூன்று நாட்களை விட அதிகமாகத் துக்கமாக இருக்கக்கூடாது’ கணவரின் மரணத்திற்காக நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் இருக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (இதனால் தான் நறுமணம், பூசிக் கொண்டேன்)’ என்று ஹஜ்ரத் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜைனப் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

(புகாரி)

தெளிவுரை:- கலூக் என்பது, குங்குமப்பூ அதிகம் சேர்க்கப்பட்ட ஒரு வாசனைப் பொருளின் பெயர்.

١٠٦- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ : مَتَي السَّاعَةُ يَارَسُولَ اللّٰهِ؟ قَالَ: مَا أَعْدَدْتَ لَهَا؟ قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلوةٍ وَلاَ صَوْمٍ وَلاَ صَدَقَةٍ وَلكِنِّي أُحِبُّ اللّٰهَ وَرَسُولَهُ قَالَ: أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ.

رواه البخاري باب علامة الحب في الله ……، رقم:٦١٧١

106. “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “கியாமத் நாள் எப்போது வரும்?’ என்று கேட்டார், “நீர் அதற்காக என்ன தயாரிப்புச் செய்துள்ளீர்?’ என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். “மறுமை நாளுக்காக அதிகமான (நஃபில்) தொழுகைகளையோ, அதிகமான (நஃபில்) நோன்புகளையோ, அதிகமான தான தர்மங்களையோ நான் தயாரித்து வைக்கவில்லை, எனினும், நான் அல்லாஹ்வையும், அவனது ரஸூலையும் ! நேசிக்கிறேன்’ என்று அவர் சொன்னார். “(அவ்வாறென்றால்,) நீர் (உலகில்) எவருடன் நேசம் வைத்திருந்தீரோ (மறுமை நாளில்) அவருடன் இருப்பீர்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதை ஹஜ்ரத் அனஸ்இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

١٠٧- عَنْ عَائِشَةَؓ قَالَتْ: جَاءَ رَجُلٌ إِلَي النَّبِيِّؐ فَقَالَ: يَارَسُولَ اللّٰهِؐ إِنَّكَ لاَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَحَبُّ إِلَيَّ مِنْ أَهْلِي وَمَاِلي وَأَحَبُّ إِلَيَّ مِنْ وَلَدِي، وَإِنِّي لاَكُونُ فِي الْبَيْتِ فَأَذْكُرُكَ فَمَا أَصْبِرُ حَتَّي آتِيَ فَأَنْظُرَ إِلَيْكَ، وَإِذَا ذَكَرْتُ مَوْتِي وَمَوْتَكَ عَرَفْتُ أَنَّكَ إِذَا دَخَلْتَ الْجَنَّةَ رُفِعْتَ مَعَ النَّبِيِّينَ، وَإِنْ دَخَلْتُ الْجَنَّةَ خَشِيتُ أَنْ لاَ أَرَاكَ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ النَّبِيُّؐ شَيْأً حَتَّي نَزَلَ جِبْرِيْلُ ^ بِهذِهِ الْايَةِ (وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُولَ فَأُولئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصّلِحِينَ ج وَحَسُنَ أُولئِكَ رَفِيقاً۞).

تفسير ابن كثير:١ /٥٣٥

107. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஸஹாபி யொருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சமூகத்தில் வந்து, “யா ரஸூலல்லாஹ்! என் உயிரை விடவும் தங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். என் மனைவியை விடவும் என் செல்வத்தை விடவும் தங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். என் பிள்ளைகளை விடவும் தங்களை அதிகமாக நேசிக்கிறேன். நான் வீட்டில் இருக்கும் போது தங்களின் ஞாபகம் வந்து விட்டால், அதன்பின் என்னால் இருப்பு கொள்ள முடிவதில்லை. உடனே நான் (ஓடோடி) வந்து தங்களை பார்த்து விடுகின்றேன். (அதன் பிறகே என் மனம் நிம்மதியடைகின்றது.) எனது மரணத்தையும், தங்களது மரணத்தையும் (அதற்குப் பின்னுள்ள நிலைகளையும்) நான் நினைத்துப் பார்க்கையில் – (மறுமையில்) தாங்கள் சுவனத்தில் நுழைந்ததும் மற்ற நபிமார்களுடன் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள் என்பதையும் நான் உணருகின்றேன். ஆனால் நான் சுவனத்தில் நுழைந்தாலும் (மிக சாதாரண அந்தஸ்தில் இருப்பேன். அந்நேரத்தில் தங்களின் நினைவு வந்தவுடன்) தங்களை காண முடியாதோ என்று நான் அஞ்சுகின்றேன் என்று கூறினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் (அப்பொழுது) எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்குள் கீழ்க்காணும் இறைவசனம் இறங்கியது “எவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவனது) ரஸூலுக்கும் வழிப்பட்டு நடக்கின்றனரோ, அத்தகையோர் – அல்லாஹ் எவர்களின் மீது அருள் புரிந்துள்ளானோ அத்தகைய நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்களுடன் (சுவனத்தில்) இருப்பார்கள்- இவர்கள்தாம் அழகிய தோழர்கள்.’’(அந்நிஸா:69)

(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாஇத்)

١٠٨- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: مِنْ أَشَدِّ أُمَّتِي إِلَيَّ حُبّاً نَاسٌ يَكُونُونَ بَعْدِي يَوَدُّ أَحَدُهُمْ لَوْ رَآنِي بِأَهْلِهِ وَمَالِهِ.

رواه مسلم باب فيمن يود رؤية النبي !…، رقم:٧١٤٥

108. “எனது உம்மத்தில் என் மீது மிகவும் நேசங்கொண்ட மக்களில் சிலர் பின் தோன்றுவார்கள். தமது குடும்பம், செல்வம் அனைத்தையும் அர்ப்பணம் செய்தேனும் என்னைக் காண வேண்டும் என்று அவர்கள் பேராவல் கொள்வார்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

١٠٩- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: فُضِّلْتُ عَلَي اْلاَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ،وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَأُحِلَّتْ لِيَ الْمَغَانِمُ، وَجُعِلَتْ لِيَ اْلاَرْضُ طَهُورًا وَمَسْجِدًا، وَأُرْسِلْتُ إِلَي الْخَلْقِ كَافَّةً، وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ.

رواه مسلم باب المساجد ومواضع الصلوة، رقم:١١٦٧

109. “மற்ற நபிமார்களைவிட ஆறு காரியங்களைக் கொண்டு எனக்குத் தனி சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது, 1. பொருட் செறிவுள்ள வார்த்தைகளை (ஜாமிவுல் கலிமாத்) நான் கொடுக்கப்பட்டுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய) திடுக்க (ம் ஏற்படுவ)தைக் கொண்டு நான் உதவியளிக்கப்பட்டுள்ளேன். 3. போரில் கிடைக்கும் ஙனீமத் (கொள்ளைப்) பொருள் எனக்கு ஹலால் ஆக்கப்பட்டுள்ளது. முந்திய சமுதாயங்களின் ஙனீமத் பொருளை நெருப்பு வந்து எரித்துவிடும் (அவர்களுக்கு ஹலால் ஆக்கப்படவில்லை) 4. பூமி முழுவதையும் எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது. (முன் சென்ற சமுதாயங்களில் குறிப்பிட்ட இடங்களில் தான் வணக்கங்களை நிறைவேற்ற முடியும்) பூமி முழுவதிலும் உள்ள மண்ணை எனக்குச் சுத்தமாக்கித் தரப்பட்டுள்ளது. (எனவே மண்ணைக் கொண்டு தயம்மும் செய்தும் சுத்தம் செய்து கொள்ளலாம்), 5. படைப்புகள் அனைத்திற்கும் நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன். மற்ற நபிமார்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஏதாவதொரு சமுதாயத்தினருக்காக மட்டும் நபியாக அனுப்பப்பட்டனர்). 6. என்னைக் கொண்டு நபிமார்களின் வருகை முடித்துவைக்கப்பட்டது (எனக்கு பிறகு எந்த நபியும், ரஸூலும் வரமாட்டார்கள்)’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

தெளிவுரை:- மிக விரிவான கருத்துக்களைப் பொதிந்திருக்கக்கூடிய; சுருக்கமான வார்த்தைகள் கொண்ட சிறு வாக்கியங்களுக்கு “ஜாமிஉல் கலிமாத்’ என்று சொல்லப்படும்.

١١٠- عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَؓ صَاحِبِ رَسُولِ اللّٰهِ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِنِّي عَبْدُ اللّٰهِ وَخَاتَمُ النَّبِيِّينَ.

(الحدبت) رواه الحاكم وقال هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٢ /٤١٨

110. “நிச்சயமாக நான் அல்லாஹ் வின் அடிமையாகவும், நபிமார்களின் முத்திரையாகவும் (இறுதியாகவும்) இருக்கிறேன்!’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக நபித்தோழர் ஹஜ்ரத் இர்பாள் இப்னு ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்தத்ரக் ஹாகிம்)

١١١- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: إِنَّ مَثَلِي وَمَثَلَ اْلاَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَي بَيْتاً فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ: هَلاَّ وُضِعَتْ هذِهِ اللَّبِنَةُ؟ قَالَ: فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ.

رواه البخاري باب خاتم النبيين، رقم:٣٥٣٥

111. “எனக்கும், எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் உதாரணம், ஒரு மனிதர் ஒரு வீட்டைக் கட்டி அதை எல்லாவகையிலும் அலங்கரித்தார், ஆனால் அவ்வீட்டின் ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவு இடத்தைக் காலியாக விட்டுவிட்டார். அவ்வீட்டைச் சுற்றிப் பார்த்த மக்கள் வீட்டின் அழகை பாராட்டினர். ஆயினும், (காலியான அந்த இடத்தில்) ஒரு செங்கல் வைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே!’ என்றும் சொல்லிச் சென்றனர். “நானே (விடுபட்ட) அந்தச் செங்கலாவேன். நான் இறுதி நபியாக இருக்கிறேன்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

١١٢- عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّؐ يَوْماً فَقَالَ: يَا غُلاَمُ! إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ اِحْفَظِ اللّٰهَ يَحْفَظْكَ، اِحْفَظِ اللّٰهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللّٰهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللّٰهِ، وَاعْلَمْ أَنَّ اْلاُمَّةَ لَوِاجْتَمَعَتْ عَلَي أَنْ يَّنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفُعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ لَكَ، وَإِنِ اجْتَمَعُوا عَلَي أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ عَلَيْكَ، رُفِعَتِ اْلاَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ.

رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب حديث حنظلة……، رقم:٢٥١٦

112. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந்திருந்தேன், “குழந்தாய்! உமக்கு (முக்கியமான) சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன், அல்லாஹ் வின் கட்டளைகளைப் பாதுகாப்பீராக!, அவன் உம்மைப் பாதுகாப்பான், அவனது கடமைகளைப் பேணிவந்தால், அவனை உமக்கு முன்னால் பெற்றுக் கொள்வீர். (அவனுடைய உதவி உமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும்) ஏதேனும் கேட்க நீர் விரும்பினால் அல்லாஹ் விடமே கேட்பீராக!, நீர் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுவீராக!, முழு சமுதாயமும் ஒன்றுசேர்ந்து உமக்கு நன்மை செய்ய நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த நன்மையையும் அவர்கள் உமக்குச் செய்துவிட முடியாது. அனைவரும் ஒன்று சேர்ந்து உமக்குத் தீங்கு விளைவிக்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த தீங்கையும் அவர்கள் உமக்குச் செய்துவிட முடியாது. (விதியை எழுதும்) எழுது கோல்கள் (விதிகளை எழுதி முடித்த பின்) உயர்த்தப்பட்டுவிட்டன. (விதிகள் எழுதப்பட்ட) ஏடுகளின் மை காய்ந்து விட்டது (விதியில் எழுதப்பட்ட முடிவுகளில் சிறிதளவும் மாற்றம் செய்ய முடியாது) என்பதை அறிந்து கொள்வீராக!’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

(திர்மிதீ)

١١٣- عَنْ أَبِي الدَّرْدَاءِؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: لِكُلِّ شَيْءٍ حَقِيقَةٌ وَمَا بَلَغَ عَبْدٌ حَقِيقَةَ اْلإِيمَانِ حَتَّي يَعْلَمَ أَنَّ مَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ وَمَا أَخْطَأَهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ.

رواه احمد والطبراني ورجاله ثقات ورواه الطبراني في الاوسط مجمع الزوائد:٧ /٨٢٤ ٠٤

113. “ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் உண்மை நிலை உண்டு. ஒரு அடியான் (இவ்வுலகில்) தனக்குக் கிடைத்த எந்த ஒரு (நல்ல, தீய) விஷயமும் (எந்நிலையிலும்) தன்னை விட்டும் தவறிப் போகாது என்பதையும், தனக்குக் கிடைக்காத எந்த ஒரு (நல்ல, தீய) விஷயமும் (எந்நிலையிலும்) தனக்குக் கிடைக்க என்பதையும் உறுதியாக நம்பாதவரை ஈமானுடைய உண்மை நிலையை அடையமாட்டான்.!’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத், தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்)

தெளிவுரை:- தனக்கு ஏற்படும் அத்தனை நிலைகளும் – தனது மனம் விரும்பக்கூடியதாக தன் நிலை இருந்தாலும், தனது மனம் விரும்பாத நிலைக்குத்தான் தள்ளப்பட்டாலும் – இவையனைத்தும் அல்லாஹ்வால் முடிவு செய்யப்பட்டவை என்பதை மனிதன் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் சோதனைகள், சிரமங்களின் போதும், சதா புலம்பிக் கொண்டிருக்காமல், இதில் தனக்கு ஏதோவொரு நன்மை மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதாக எண்ண வேண்டும்.

இவ்வாறு தக்தீரின் மீது உறுதியாக நம்பிக்கை கொள்வது, ஈமானுக்கு பாதுகாப்பையும், ஷைத்தானுடைய ஊசலாட்டங்களிலிருந்து மனதிற்கு நிம்மதியையும் அளிக்கக்கூடிய மிக உயரிய சாதனமாகும்.

١١٤- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَمْرِ و بْنِ الْعَاصِؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: كَتَبَ اللّٰهُ مَقَادِيرَ الْخَلاَئِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّموَاتِ وَاْلاَرْضَ بِخَمْسِينَ اَلْفَ سَنَةٍ قَالَ: وَعَرْشُهُ عَلَي الْمَاءِ.

رواه مسلم باب حجاج ادم وموسي صلي الله عليهما وسلم رقم:٦٧٤٨

114. “வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் எல்லாப் படைப்புகளின் விதிகளையும் எழுதிவிட்டான். அப்பொழுது அல்லாஹ் வின் அர்ஷ், நீரின் மீது இருந்தது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

١١٥- عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ إِنَّ اللّٰهَ : فَرَغَ إِلَي كُلِّ عَبْدٍ مِّنْ خَلْقِهِ مِنْ خَمْسٍ مِنْ أَجَلِهِ وَعَمَلِهِ وَمَضْجَعِهِ وَاَثَرِهِ وَرِزْقِهِ.

رواه احمد:٥ /١٩٧

115. “அல்லாஹ் ஒவ்வொரு அடியானுக்கும் (கீழ்க்காணும்) ஐந்து விஷயங்களை முடிவு செய்து விட்டான். 1. அவனது மரண நேரம் 2. அவனது (நல்ல, தீய) செயல்கள் 3. அவனது தங்குங்மிடம், 4. அவனால் ஏற்படிவிருக்கும் விளைவுகள் 5. அவனது வாழ்வாதாரங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

١١٦- عَنْ عَمْرِ و بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: لاَيُؤْمِنُ الْمَرْءُ حَتَّي يُؤْمِنَ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ.

رواه احمد:٢ /١٨١

116. “தனக்கு ஏற்படும் நன்மை, தீமை யாவும் (அல்லாஹ்வுடைய) ஏற்பாட்டின் படியே நடக்கின்றன என்பதை நம்பிக்கை கொள்ளாதவரை எவரும் முஃமினாக ஆக முடியாது!’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அவர்களின் பேரனார் ஹஜ்ரத் அம்ருப்னு ஷுஐப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

١١٧- عَنْ عَلِيٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : لاَ يُؤْمِنُ عَبْدٌ حَتَّي يُؤْمِنَ بِأَرْبَعٍ: يَشْهَدُ أَنْ لآ إِلهَ إِلاَّ اللّٰهُ وَأَنِّي رَسُولُ اللّٰهِؐ بَعَثَنِي بِالْحَقِّ، وَيُؤْمِنُ بِالْمَوْتِ، وَيُؤْمِنُ بِالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ، وَيُؤْمِنُ بِالْقَدْرِ.

رواه الترمذي باب ماجاء ان الايمان بالقدر……، رقم:٢١٤٥

117. “1. வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை, நான் அல்லாஹ் வின் தூதர், அவன் சத்தியத்தைக் கொடுத்து என்னை அனுப்பியுள்ளான் என்று (மனதால் நம்பிக்கை கொண்டு) சாட்சி பகர்வது 2. படைப்புகள் அனைத்திற்கும் ஏற்படவிருக்கும் மரணத்தின் மீது நம்பிக்கை கொள்வது; 3. மரணத்திற்குப் பின் மீண்டும் எழுப்பப்படுவதின் மீது நம்பிக்கை கொள்வது; 4. தக்தீரி(விதியி)ன் மீது நம்பிக்கை கொள்வது!’’ ஆகிய நான்கு காரியங்களின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை எவரும் முஃமினாக ஆக முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

١١٨- عَنْ أَبِي حَفْصَةَؒ قَالَ: قَالَ عُبَادَةُ بْنُ الصَّامِتِؓ لِابْنِهِ: يَابُنَيَّ! إِنَّكَ لَنْ تَجِدَ طَعْمَ حَقِيقَةِ اْلإِيمَانِ حَتَّي تَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَمَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ، سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللّٰهُ تَعَالَي الْقَلَمُ فَقَالَ لَهُ: أُكْتُبْ فَقَالَ: رَبِّ وَمَاذَا أَكْتُبُ؟ قَالَ: أُكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّي تَقُومَ السَّاعَةُ يَابُنَيَّ! إِنِّي سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: مَنْ مَاتَ عَلَي غَيْرِ هذَا فَلَيْسَ مِنِّي.

رواه ابوداؤد باب في القدر، رقم:٤٧ ٠ ٠

118. ஹஜ்ரத் அபூஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, ஹஜ்ரத் உபாததிப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள் தன் மகனிடம் “மகனே! (இவ்வுலகில்) உனக்கு கிடைத்த எந்த ஒரு (நல்ல, தீய) விஷயமும் (எந்நிலையிலும்) உன்னை விட்டும் தவறிப் போகாது என்பதையும், உனக்குக் கிடைக்காத எந்த ஒரு (நல்ல, தீய) விஷயமும் (எந்நிலையிலும்) உனக்குக் கிடைக்காது என்பதையும் நீ உறுதியாக நம்பாத வரை ஈமானுடைய உண்மையான ருசியை நீ சுவைக்க முடியாது. (தொடர்ந்து தனது மகனிடம்) அல்லாஹ் முதலில் படைத்தது எழுதுகோலைத்தான். பின்பு எழுதும்படி அதற்குக் கட்டளையிட்டான், “ரட்சகனே, நான் எதை எழுதுவேன்?’ என்று அது கேட்டது. இறுதி நாள் வரை வரவிருக்கின்ற அத்தனை பொருளுக்குமான (நிர்ணயிக்கப்பட்ட) விதிகள் அனைத்தையும் நீ எழுதுவாயாக!’ என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் மூலம் நான் கேட்டுள்ளேன். “மகனே! எவன் இதற்கு மாற்றமான வேறு நம்பிக்கையுடன் மரணிப்பானோ அவன் என்னைச் சார்ந்தவனல்ல!’’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் உபாதா இப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(அபூதாவூத்)

١١٩- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: وَكَّلَ اللّٰهُ بِالرَّحِمِ مَلَكاً فَيَقُولُ: أَيْ رَبِّ نُطْفَةٌ أَيْ رَبِّ عَلَقَةٌ أَيْ رَبِّ مُضْغَةٌ فَإِذَا أَرَادَ اللّٰهُ أَنْ يَقْضِيَ خَلْقَهَا قَالَ: أَيْ رَبِّ ذَكَرٌ أَمْ أُنْثَي؟ أَشَقِيٌّ أَمْ سَعِيدٌ؟ فَمَا الرِّزْقُ؟ فَمَا اْلاَجَلُ؟ فَيُكْتَبُ كَذلِكَ فِي بَطْنِ أُمِّهِ.

رواه البخاري كتاب القدر رقم:٦٥٩٥

119. “(தாயின்) கர்ப்பப்பையில் அல்லாஹ் ஒரு மலக்கை நியமித்துள்ளான். அவர், “என் இரட்சகனே, (இப்பொழுது இது) விந்துவாக உள்ளது, என் இரட்சகனே! (இப்போது இது) இரத்தக் கட்டியாக உள்ளது, என் இரட்சகனே, (இப்போது இது) சதைக் கட்டியாக உள்ளது!’’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். (அல்லாஹ் வுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் அம்மலக்கு அவனிடம் குழந்தையின் பல்வேறு நிலைகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பார்) அல்லாஹ் அதன் உருவத்தை முழுமைப் படுத்த நாடும் போது, அம்மலக்கு என் இரட்சகனே! (இக்குழந்தை) ஆணா அல்லது பெண்ணா? துர்பாக்கியவானா அல்லது நற்பாக்கியவானா? (இக்குழந்தை இவ்வுலகில் அடையவிருக்கும்) ரிஸ்கின் (வாழ்வாதாரங்களின்) அளவு என்ன? (இக்குழந்தையின்) ஆயுள்காலம் எவ்வளவு? என்று அல்லாஹ்விடம் கேட்பார். (அல்லாஹ் அதற்கு பதிலளித்து உத்தரவிடுவான்.) அதன்படியே அக்குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே (இவையனைத்தும்) எழுதப்பட்டுவிடும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

١٢٠- عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ عِظَمَ الْجَزَاءِ مَعَ عِظَمِ الْبَلاَءِ، وَإِنَّ اللّٰهَ إِذَا أَحَبَّ قَوْماً ابْتَلاَهُمْ، فَمَنْ رَضِيَ فَلَهُ الرِّضَا وَمَنْ سَخِطَ فَلَهُ السَّخَطُ.

رواه الترمذي وقال هذا حديث حسن غريب باب ماجاء في الصبر علي البلاء، رقم:٢٣٩٦

120. “சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ, அதற்குரிய கூலியும் அதேபோன்று அதிகமாக இருக்கும், ஒரு சமூகத்தாரை அல்லாஹ் நேசிக்க நாடிவிட்டால் அவர்களை சோதனைக்கு உள்ளாக்குகிறான். அச்சோதனையைப் பொருந்திக் கொள்பவரை அல்லாஹ் வும் பொருந்திக் கொள்கிறான், யார் அச்சோதனையை வெறுக்கிறார்களோ அல்லாஹ் வும் அவரை வெறுக்கிறான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

١٢١- عَنْ عَائِشَةَؓ زَوْجِ النَّبِيِّؐ قَالَتْ:سَاَلْتُ رَسُولُ اللّٰهِؐ عَنِ الطَّاعُونِ فَأَخْبَرَنِي أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللّٰهُ عَلَي مَنْ يَّشَاءُ، وَأَنَّ اللّٰهَ جَعَلَهُ رَحْمَةً لِّلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِباً يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلاَّ مَاكَتَبَ اللّٰهُ لَهُ إِلاَّكَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ.

رواه البخاري كتاب احاديث الانبياء رقم:٣٤٧٤

121. “நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “கொள்ளை நோயைப் பற்றி வினவினேன், “இது ஒரு வேதனையாகும். அல்லாஹ், தான் நாடியவர்களின் மீது இதனை இறக்குகின்றான். எனினும், அல்லாஹ் இதனை முஃமின்களுக்கு அருளாகவே ஆக்கிவைத்துள்ளான். எவருடைய ஊரிலாவது இந்நோய் பரவி, அப்பகுதியில் வசிக்கும் அவர், பொறுமையுடன் “அல்லாஹ் அவருக்கென எதை எழுதி (முடிவு செய்து) வைத்து விட்டானோ அதைத் தவிர வேறு எதுவும் அவரை வந்தடையாது’ என்று நம்பிக்கை வைத்து நன்மையை ஆதரவு வைத்தவராக தன் பகுதியில் தங்கிவிட்டால் (பிறகு அல்லாஹ் வின் ஏற்பாட்டின் படி கொள்ளை நோயால் அவர் பீடிக்கப்பட்டு இறந்துவிட்டால்) அவருக்கு (அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த) ஷஹீதுக்குச் சமமான நன்மை கிடைக்கும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அன்னாரது பரிசுத்தத் துணைவியார் ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

தெளிவுரை: தாஊன் என்பது கொடிய கொள்ளை நோயாகும், தொடை, அக்குல், அல்லது கழுத்து போன்ற பகுதியில் ஒரு வகையான புண் உண்டாகும். அது கடுமையான வருத்தத்தை உண்டு பண்ணும், மிகுதமானோர் இந்த நோய் வந்த இரண்டு அல்லது மூன்றாவது நாளன்று இறந்து விடுவர். தாஊன் என்பது எல்லாக் கொள்ளை நோய்க்கும் சொல்லப்படும். கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து யாரும் வெளியேறிச் செல்லக் கூடாது. என்பதே மார்க்கச் சட்டமாகும். இதனால் தான் ஹதீஸில் நன்மையை ஆதரவு வைத்து அந்த ஊரிலேயே தங்கிவிடும்படி சொல்லப்பட்டுள்ளது.

(தக்மிலா ஃபத்ஹுல் முல்ஹிம், ஃபத்ஹுல் பாரீ)

١٢٢- عَنْ أَنَسٍؓ قَالَ: خَدَمْتُ رَسُولُ اللّٰهِؐ وَأَنَا ابْنُ ثَمَانِ سِنِينَ خَدَمْتُهُ عَشْرَ سِنِينَ فَمَا لاَمَنِي عَلَي شَيْءٍ قَطُّ أُتِيَ فِيهِ عَلَي يَدَيَّ فَإِنْ لاَمَنِي لاَئِمٌ مِنْ أَهْلِهِ قَالَ: دَعُوهُ فَإِنَّهُ لَوْ قُضِيَ شَيْءٌ كَانَ.

مصابيح السنة للبغوي:٤/٥٧. (وهو من الحسان).

122. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “எனது எட்டாம் வயதில் நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கி பத்து ஆண்டுகள் வரை பணிவிடை செய்தேன். அச்சமயம் என்னால் ஏற்பட்ட எந்த ஒரு குறைக்காகவும் ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடிந்து கொண்டதில்லை. அன்னாரது குடும்பத்தாரில் யாரேனும் என்னைக் கடிந்து கொண்டாலும் அவரை விட்டு விடுங்கள். (எதும் கூறாதீர்கள்) ஏனேனில் (குறையோ, நிறையோ) ஒரு விஷயம் (அல்லாஹ்வால்) தீர்மாணிக்கப்பட்டுவிட்டால் அது நடந்தே தீரும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிடுவார்கள்.

(மஸாபீஹுஸ் ஸுன்னா)

١٢٣- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عُمَرَؓ قَالَ:قَالَ رَسُولُ اللّٰهِؐ :كُلُّ شَيْءٍ بِقَدَرٍ حَتَّي الْعَجْزُ وَالْكَيْسُ.

رواه مسلم باب كل شيء بقدر رقم:٦٧٥١

123. “ஒவ்வொரு காரியமும் தக்தீரில் (விதியில்) எழுதப்பட்டு விட்டது. (மனிதனின்) இயலாமை (விளக்கமற்ற தன்மை) புத்திசாலித்தனம் உட்பட அனைத்தும் விதிப்படியே நடைபெறுகின்றன’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

١٢٤- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : اَلْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَي اللّٰهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، اِحْرِصْ عَلَي مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللّٰهِ وَلاَ تَعْجِزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلاَ تَقُلْ: لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلكِنْ قُلْ قَدَرُ اللّٰهِ وَمَاشَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ.

رواه مسلم باب الايمان بالقدر…،رقم:٦٧٧٤

124. “பலம் வாய்ந்த முஃமின் பலவீனமான முஃமினைவிடச் சிறந்தவர்; அல்லாஹ் வுக்கு மிகப் பிரியமானவர், எனினும், ஒவ்வொரு (முஃமினான)வரிடமும் நன்மை இருக்கத்தான் செய்கிறது, உங்களுக்குப் பலன் தரும் காரியத்தில் பேராசை கொள்ளுங்கள், (அதில்) அல்லாஹ் வின் உதவியை தேடுங்கள், தைரியம் இழந்துவிடாதீர்கள், உங்களுக்கு நஷ்டம் ஏற்படும் சமயம், “நான் இப்படிச் செய்திருந்தால் காரியங்கள் இப்படி ஆகியிருக்கும்!’’ என்று சொல்லாதீர்கள். மாறாக, (இது) அல்லாஹ் நிர்ணயித்து (முடிவு செய்து) விட்ட விஷயமாகும். அவன் தான் நாடியதையே செய்தான்’’ என்று கூறுங்கள். ஏனேனில், “இப்படிச் செய்திருந்தால்’ என்ற வார்த்தை (அல்லது இது போன்ற வார்த்தைகள்) ஷைத்தானுடைய காரியங்களுக்கு கதவைத் திறந்துவிடுகிறது’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

தெளிவுரை:- ஒரு மனிதன், “நான் இவ்வாறு செய்திருந்தால் இப்படி இப்படியெல்லாம் ஆகியிருக்கும்’’ என்று சொன்னால் தக்தீருக்கு மாறாக, தமது திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு தக்தீர் என்ற ஒன்று இல்லை என எண்ணுவது இதன் நோக்கமாக இருந்தால் இவ்வாறான வார்த்தைகளை உபயோகிப்பது தடையாகும். ஏனேனில், இச்சந்தர்ப்பத்தில் தக்தீரின் மீது அவன் கொண்டுள்ள நம்பிக்கையை அகற்றி (குஃப்ரில் தள்ளிவிட) ஷைத்தானுக்கு வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது.

(மளாஹிரூல் ஹக்)

١٢٥- عَنِ ابْنِ مَسْعُودٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ :أَلاَ وَإِنَّ الرُّوحَ اْلاَمِينَ نَفَثَ فِي رُوعِي أَنَّهُ لَيْسَ مِنْ نَفْسٍ تَمُوتُ حَتَّي تَسْتَوْفِيَ رِزْقَهَا، فَاتَّقُوا اللّٰهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ، وَلاَيَحْمِلَنَّكُمْ اِسْتِبْطَاءُ الرِّزْقِ أَنْ تَطْلُبُوا بِمَعَاصِي اللّٰهِ فَإِنَّهُ لاَ يُدْرَكُ مَا عِنْدَ اللّٰهِ إِلاَّبِطَاعَتِهِ.

(وهو طرف من الحديث) شرح السنة للبغوي:١٤/٣ ٠٥، قال المحشي رجاله ثقات وهو مرسل.

125. “எந்த ஒரு ஆன்மாவும் அதற்குரிய (நிர்ணயிக்கப்பட்ட) ரிஸ்கை (வாழ்வாதாரங்களை) முழுமையாக அனுபவிக்காத வரை மரணமடையாது. எனவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். (ரிஸ்க்கைத்) தேடுவதிலே தூய்மையான வழியைக் கையாளுங்கள். ரிஸ்க் கிடைக்க தாமதம் ஆவது, ரிஸ்கைத் தேடுவதில் அல்லாஹ் வுக்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டிவிடவேண்டாம். ஏனேனில், (உங்களுடைய ரிஸ்க் அல்லாஹ் விடம் உள்ளது.) அல்லாஹ்விடமுள்ளதை அவனுக்கு வழிப்படுவது கொண்டே பெற்றுக் கொள்ளமுடியும்! என்ற செய்தியை (அல்லாஹ் வின் கட்டளைப்படி) ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் என்னுடைய உள்ளத்தில் போட்டார்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஷரஹுஸ் ஸுன்னா)

١٢٦- عَنْ عَوْفِ بْنِ مَالِكٍؓ أَنَّ النَّبِيَّؐ قَضَي بَيْنَ رَجُلَيْنِ فَقَالَ الْمَقْضِيُّ عَلَيْهِ لَمَّا أَدْبَرَ: حَسْبِيَ اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ فَقَالَ النَّبِيُّؐ : إِنَّ اللّٰهَ تَعَالَي يَلُومُ عَلَي الْعَجْزِ وَلكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ فَإِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ حَسْبِيَ اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ.

رواه ابوداؤد باب الرجل يحلف علي حقه رقم:٣٦٢٧

126. ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இரு மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கினார்கள். எவருக்குப் பாதகமாகத் தீர்ப்புச் சொல்லப்பட்டதோ அவர் போகும் போது, “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், அவன் காரியங்களை சிறப்புறச் செய்பவன்’’ என்று கவலையுடன் கூறிச் சென்றார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “தகுந்த ஏற்பாடு செய்யாமல் இருப்பதை அல்லாஹ் பழிக்கிறான். எனவே, (இனி எப்பொழுதுமே முதலில், தனது காரியத்தில்) புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். அதன் பிறகும் நிலைமை தனக்குச் சாதகமாக ஆகாவிட்டால், “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். இந்த நிலைமையிலும் அவனே எனது வேலையை சிறப்பாக முடித்துவைப்பவன்’’ என்று கூறுங்கள் (இந்த வாசகத்தின் மூலம் மனதில் நிம்மதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்) என்று கூறினார்கள்.

(அபூதாவூத்)


மரணத்திற்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளை நம்புதல்

குர்ஆன் வசனங்கள்:-

قَالَ اللّٰهُ تَعَالي:۞)يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ ج إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ۞ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّآ أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَي النَّاسَ سُكرَي وَمَاهُمْ بِسُكرَي وَلكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيدٌ۞).
الحج:١,٢
1. மனிதர்களே, உங்களுடைய ரப்பை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மகத்தான காரியமாகும்.அதனை நீங்கள் காணும் நாளில், பாலூட்டுகின்ற ஒவ்வொருத்தியும் அவள் பாலூட்டப்பட்டதை (குழந்தையை) மறந்துவிடுவாள்; கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும் தன் கர்ப்பத்தை இறக்கிவிடுவாள் – (பிரசவித்து விடுவாள்); மனிதர்களை (பீதியின் மிகைப்பால்) மதி மயங்கியவர்களாக (இருக்க நபியே) நீர் காண்பீர்; அவர்கள் (மதுவினால்) மதி மயங்கியவர்களல்லர் – எனினும், அல்லாஹ்வுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்.
(அல்ஹஜ்:1,2)
وَقَالَ تَعَالي: (وَلاَ يَسْئَلُ حَمِيمٌ حَمِيماً ۞ يُّبَصَّرُونَهُمْ ط يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ م بِبَنِيهِ ۞ وَصَاحِبَتِهِ وَأَخِيهِ ۞ وَفَصِيلَتِهِ الَّتِي تُئْوِيهِ ۞ وَمَنْ فِي اْلاَرْضِ جَمِيعاً لا ثُمَّ يُنْجِيهِ ۞ كَلاَّ۞).
المعارج:١٥–١٠
2. ஒரு நண்பன், மற்றோரு நண்பனை விசாரிக்கமாட்டான், அவர்கள் (தங்களின் நண்பர்களுக்குக்) காண்பிக்கப்படுவர் (அந்நாளில், எனினும் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய கவலையால் பிறரிடம் பேசிக் கொள்ள மாட்டார்கள்) மேலும் அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி கொடுக்க விரும்புவான்; தன் மக்களையும் தன்னுடைய மனைவியையும் தன்னுடைய சகோதரனையும் தன்னை அரவணைத்துக் கொண்டிருந்த தன்னுடைய உறவினர்களையும் இன்னும் பூமியிலுள்ளோர் அனைவரையும் (அந்த நாளின் வேதனைக்கு ஈடாகக் கொடுத்துப்) பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவான் (எனினும் அது) ஆகக்கூடியதல்ல.
(அல்மஆரிஜ்:10-15)
وَقَالَ تَعَالي: (وَلاَ تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلاً عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ط إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ اْلاَبْصَارُ۞ مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لاَيَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ج وَأَفْئِدَتُهُمْ هَوَآءٌ۞).
ابراهيم:٤٢
3. (நபியே,) அநியாயக்காரர்கள் செய்கின்ற வற்றைவிட்டும் பராமுகமாயிருக்கிறான் என்று அல்லாஹ்வை நீர் திண்ணமாக எண்ண வேண்டாம்; அவர்களை (அழிக்காமல்) அவன் பிற்படுத்தி வைத்திருப்பதெல்லாம் கண்கள் எதில் விரைத்துப் பார்த்துக் கொண்டிருக்குமோ அந்த (மறுமை) நாளுக்காகத்தான். (அந்நாளில்) தங்களுடைய தலைகளை உயர்த்தியவர்களாக (மேல் நோக்கியவர்களாக) விரைந்தோடுவார்கள்; (நிலைகுத்திய) அவர்களுடைய பார்வை அவர்களின் பக்கம் திரும்பாது – அவர்களுடைய இதயங்கள் (திடுக்கத்தால்) செயலற்றுவிடும்.
(இப்ராஹீம்:42,43)
وَقَالَ تَعَالي: (وَالْوَزْنُ يَوْمَئِذِنِ الْحَقُّ ج فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولئِكَ هُمُ الْمُفْلِحُونَ ۞ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ بِمَا كَانُوا بِآيتِنَا يَظْلِمُونَ ).
الاعراف: ٨,٩
4. (ஒவ்வொருவருடைய செயல்களையும்) எடைபோடுதல் அந்நாளில் உண்மையாகும்; அப்போது, எவர்களுடைய (நன்மையான) எடைகள் கனமாகிவிட்டனவோ – அத்தகையோர் தாம் வெற்றியாளர்கள். எவர்களுடைய (நன்மையின்) எடைகள் இலேசாகி (கனம் குறைந்து) விட்டனவோ, அத்தகையோர் நம்முடைய வசனங்களை மறுத்துக் கொண்டிருந்த காரணத்தால் தமக்குத் தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்களாவார்கள்.
(அல்அஃராஃப்:8,9)
وَقَالَ تَعَالي: (جَنّتُ عَدْنٍ يَّدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤاً ج وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ ۞ وَقَالُوا الْحَمْدُ للّٰهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ ط إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ ۞ اَلَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهِ ج لاَ يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَّلاَ يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ۞).
فاطر:٣٥–٣٣
5. நிலையான சொர்க்கங்கள் (அவர்களுக்கு) உண்டு – அவற்றில் அவர்கள் புகுவார்கள்; அவற்றில் பொன்னால் ஆன கடகங்களும் முத்துக்(களினாலான ஆபரணங்க)ளும் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்; அவற்றில் அவர்களின் ஆடைபட்டாகும்.”எங்களை விட்டும் கவலையைப் போக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியன! நிச்சயமாக எங்களுடைய ரப்பு மிக்க மன்னிக்கிறவன்; நன்றி பாராட்டுகிறவன்’’ என்று அவர்கள் கூறுவார்கள்.அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய அருளினால் நிலையாகத் தங்குகிற வீட்டில் எங்களைக் குடியமர்த்தினான்; அதில் எவ்விதச் சிரமமும் எங்களைத் தொடாது; இன்னும் அதில் எவ்விதக் களைப்பும் எங்களைத் தீண்டாது (என்றும் கூறுவார்கள்).
(ஃபாதிர்:33-35)
وَقَالَ تَعَالي: (إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ۞ فِي جَنّتٍ وَّعُيُونٍ۞ يَّلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَّإِسْتَبْرَقٍ مُّتَقبِلِينَ ۞ كَذلِكَ قف وَزَوَّجْنهُمْ بِحُورٍ عِينٍ ۞ يَّدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ ۞ لاَ يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلاَّ الْمَوْتَةَ اْلاَولَي ج وَوَقهُمْ عَذَابَ الْجَحِيمِ ۞ فَضْلاً مِّنْ رَّبِّكَ ط ذلِكَ هُو َالْفَوْزُ الْعَظِيمُ۞).
الدخان:٥٧–٥١
6. நிச்சயமாக (ரப்பை) அஞ்சியவர்கள் அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சொர்க்கங்களிலும் நீருற்றுகளி(ன் சூழலி)லும் இருப்பார்கள். அவர்கள் ஒருவரையொருவர் முன் நோக்கியவர்களாக மெல்லியதும் திடமானதுமான பட்டாடைகளை அணிந்து கொண்டிருப்பார்கள்.இவ்வாறே (நடைபெறும்); இன்னும் அவர்களுக்கு ஹூருல் ஈன் (என்னும் சுவர்க்கத்துக் கன்னி)யர்களைத் துணைவியராக்கி வைப்போம். அவற்றில் அவர்கள் அச்சமற்றவர்களாயிருக்கும் நிலையில் எல்லா (வித)க் கனிகளையும் கேட்டுப் பெறுவார்கள். நித்திய மரணத்தைத் தவிர (வேறு) மரணத்தை அதில் அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; அவர்களை நரக வேதனையை விட்டும் அவன் காத்துக் கொண்டான். (நபியே,) உமது ரப்பின் அருளாக – காப்பாற்றப் படுகிறார்கள்); அதுதான் மகத்தான வெற்றியாகும்.
(அத்துகான்:51-57)
وَقَالَ تَعَالي: (إِنَّ اْلاَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا۞ عَيْناً يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا ۞ يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْماً كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا ۞ وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَي حُبِّهِ مِسْكِيناً وَّيَتِيماً وَّأَسِيرًا۞ إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لاَ نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَّلاَ شُكُورًا ۞ إِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْماً عَبُوساً قَمْطَرِيرًا ۞ فَوَقهُمُ اللّٰهُ شَرَّ ذلِكَ الْيَوْمِ وَلَقّهُمْ نَضْرَةً وُّسُرُورًا ۞ وَجَزهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَّحَرِيرًا ۞ مُّتَّكِئِينَ فِيهَا عَلَي اْلاَرَآئِكِ ج لاَ يَرَوْنَ فِيهَا شَمْساً وَّلاَ زَمْهَرِيرًا ۞ وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلاَلُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلاً ۞ وَيُطَافُ عَلَيْهِمْ بِآنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَاْ ۞ قَوَارِيرَا مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا ۞ وَيُسْقَوْنَ فِيهَا كَأْساً كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلاً ۞ عَيْناً فِيهَا تُسَمَّي سَلْسَبِيلاً ۞ وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ ج إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤاً مَّنْثُورًا ۞ وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيماً وَّمُلْكاً كَبِيرًا ۞ عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّإِسْتَبْرَقٌ ز وَّحُلُّوآ أَسَاوِرَ مِنْ فِضَّةٍ ج وَسَقهُمْ رَبُّهُمْ شَرَاباً طَهُورًا ۞ إِنَّ هذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُورًا۞).
الدهر:٢٢–٥
7. நிச்சயமாக நல்லோர்கள் குவளையிலிருந்து (சொர்க்க பானத்தை) அருந்துவார்கள்; அதனுடைய கலவை கற்பூரமாக இருக்கும். (அது ஒரு) நீருற்று; அல்லாஹ்வின் (நல்) அடியார்கள் அதிலிருந்து பருகுவார்கள்; அதனை அவர்கள் (விரும்பிய இடத்திற்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள். இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள்; அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும். இன்னும் அவனுடைய அன்பினால் ஏழைக்கும் அநாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள், “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் திருமுகத்திற்க்காகத்தான்; (அதற்காக) உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும் நன்றி செலுத்துதலையும் நாங்கள் நாடவில்லை’’ (என்று கூறுவார்கள்) நிச்சயமாக நாங்கள் கடினமாய் முகங்கடுகடுக்கக்கூடிய ஒரு நாளை எங்கள் ரப்பிடமிருந்து பயப்படுகிறோம் (என்றும் கூறுவார்கள்).ஆகையால், அல்லாஹ் அந்த நாளின் தீங்கைவிட்டும் அவர்களைக் காத்து, அவர்களுக்கு முகச் செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொடுப்பான், இன்னும் அவர்கள் (உலகில்) பொறுமையாக இருந்த காரணத்தினால், சொர்க்கத்தையும் பட்டாடையையும் அவர்களுக்குப் பிரதிபலனாக வழங்குவான், அதில் ஆசனங்களின் மீது அவர்கள் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; வெப்பத்தையும் கடுங்குளிரையும் அதில் அவர்கள் காணமாட்டார்கள், அதனுடைய (மர) நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும், அதனுடைய பழங்கள் மிகத் தாழ்வாக இருக்கும். வெள்ளியிலான பாத்திரங்களும் பளிங்குகளிலான கிண்ணங்களும் அவர்களிடம் (சுற்றிச்) சுற்றிக் கொண்டுவரப்படும். (அவை) வெள்ளியிலான பளிங்குகளாக இருக்கும், அவற்றைத் தக்க அளவாக அவர்கள் அளவிட்டு வைத்திருப்பார்கள். இன்னும் அங்கு குவளையில் அவர்கள் (பானம்) புகட்டப்படுவார்கள்; அதனுடைய கலவை இஞ்சியாக இருக்கும். அங்குள்ள ஓர் ஊற்றிளிருந்து (அதனைப் புகட்டப்படுவார்கள்) ஸல்ஸபீல் (சிரமமில்லாமல் அதன் நீர் உள் செல்லக் கூடியது, மதுரமானது) என்று அதற்குப் பெயர் சொல்லப்படும். என்றேன்றும் (இளமை மாறாமல்) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள்; (நபியே,) நீர் அவர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களென அவர்களைக் கருதுவீர். (மேலும்) அங்க நீர் பார்க்கும் பொழுது சுகபோகத்தையும் பெரும் ஆட்சியையும் காண்பீர். அவர்கள் மீது மெல்லிய பட்டாடைகளும், பச்சைநிற கனமுள்ள பட்டாடைகளும் இருக்கும்; வெள்ளியிலான காப்புகளும் அவர்கள் அணிவிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்களுடைய ரப்பு அவர்களுக்குத் தூய்மையான பானத்தைப் புகட்டுவான். “நிச்சயமாக இது உங்களுக்குரிய பிரதிபலனாகும்; உங்களுடைய உலக முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதாகி விட்டது’’ (என்றும் அவன் கூறுவான்).
(அத்தஹ்ர்:5-22)
وَقَالَ تَعَالي: (وَأَصْحبُ الْيَمِينِ لا مَا أَصْحبُ الْيَمِين ِ۞ فِي سِدْرٍ مَّخْضُودٍ۞ وَّطَلْحٍ مَّنْضُودٍ ۞ وَّظِلٍّ مَّمْدُودٍ ۞ وَّمَاءٍ مَّسْكُوبٍ ۞ وَّفَاكِهَةٍ كَثِيرَةٍ ۞ لاَّ مَقْطُوعَةٍ وَّلاَ مَمْنُوعَةٍ ۞ وَّفُرُشٍ مَّرْفُوعَةٍ ۞ إِنَّا أَنْشَأْنهُنَّ إِنْشَآءً ۞ فَجَعَلْنهُنَّ أَبْكَارًا ۞ عُرُباً أَتْرَاباً ۞ لِّأَصْحبِ الْيَمِينِ ۞ ثُلَّةٌ مِّنَ اْلاَوَّلِينَ ۞ وَثُلَّةٌ مِّنَ اْلآخِرِينَ۞).
الواقعة:٤ ٠–٢٧
8. மேலும் வலப்புறத்தார் – வலப்புறத்தார் நிலைதான் என்ன? (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தி(ன் அடியி)லும், நுனி முதல் அடிவரை (அடுக்கடுக்காகக்) குலைகள் தொங்கும் வாழை மரத்தி(ன் அடியி)லும் விரிந்த நிழலிலும் (அல்லாஹ்வினால்) ஓடவிடப்பட்ட நீரி(ன் அருகாமையி)லும் (இருப்பர்). ஏராளமான பழவகைகளின் மத்தியிலும் இருப்பார்கள். (அவை எக்காலமும் கனி தந்துகொண்டேயிருக்கும்; என்றும் காய்த்து) அற்றுப் போகாதவை; (உண்பதிலிருந்து) தடுக்கப்படாதவை. மேலும் (அவர்கள்) உயர்ந்த விரிப்புகளிலும் (கட்டிலின் மீது வீற்றிருப்பார்கள்) நிச்சயமாக நாம், (அவர்களின் மனைவியர்களான) அவர்களை பிரத்தியேகமாக உண்டாக்கினோம்; அவர்களைக் கன்னியர்களாகவும் ஆக்கியுள்ளோம், (துணைவர்கள் மீது) பாசமுள்ளவர்களாகவும் சமமான வயதுள்ளவர்களாகவும் (ஆக்கியுள்ளோம்). (இவை அனைத்தும்) வலப்புறத்தோருக்கு உரியதாகும், முன்னவர்களின் ஒரு கூட்டமும் இன்னும் பின்னோர்களில் ஒரு கூட்டமும் (இத்தகைய வலப்புறத்தோர் ஆவர்).
(அல் வாகிஆ:27-40)
(தெளிவுரை: முன்னுள்ளோர் என்பது முந்திய சமுதாயத்தினர் என்பதையும், பின்னுள்ளோர் என்பது இந்த சமுதாயத்தினரையும் குறிக்கும்).
وَقَالَ تَعَالي: (وَلَكُمْ فِيهَا مَاتَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ ۞ نُزُلاً مِّنْ غَفُورٍرَّحِيمٍ۞).
حم السجدة: ٣١,٣٢
9. இன்னும் உங்களுடைய மனங்கள் விரும்பியவை அ(ச்சுவனத்)தில் உங்களுக்கு உண்டு; நீங்கள் வேண்டுவதும் அதில் உங்களுக்கு உண்டு. மிக்க மன்னிப்பாளன், மிகக் கிருபையாளனிடமிருந்துள்ள விருந்தாக (அது இருக்கும் என்று மலக்குகள் கூறுவர்).
(ஹாமீம் ஸஜ்தா:(31,32 )
وَقَالَ تَعَالي: (وَإِنَّ للِطّغِينَ لَشَرَّ مَآبٍ ۞ جَهَنَّمَ ج يَصْلَوْنَهَا ج فَبِئْسَ الْمِهَادُ ۞ هذَا لا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَّغَسَّاقٌ ۞ وَّآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ۞).
ص:٥٨–٥٥
10. இன்னும் நிச்சயமாக அழிச்சாட்டியம் செய்பவர்களுக்கு தீய மீளுமிடம் இருக்கிறது, (அதுவே) நரகம், அதில் அவர்கள் புகுவார்கள் – தங்குமிடமான (அ)து மிகக் கெட்டதாகும். இது, (தீயவர்களுக்குரியதாகும்) – எனவே இதனை அவர்கள் சுவைக்கட்டும் – (இதுவே) கடுமையாகக் கொதிக்கும் நீரும் சீழுமாகும், இன்னும் இதே வடிவத்தில் வேறு பலவகை (வேதனை)களும் உண்டு.
(ஸாத்:55-58)
وَقَالَ تَعَالي: (اِنْطَلِقُوآ إِلَي مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ ۞ إِنْطَلِقُوا إِلَي ظِلٍّ ذِي ثَلثِ شُعَبٍ ۞ لَّاظَلِيلٍ وَّلاَ يُغْنِي مِنَ اللّٰهَبِ ۞ إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ ۞ كَأَنَّهُ جِملَتٌ صُفْرٌ۞).
المرسلت: ٣٣–٢٩
11. நீங்கள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம் நடந்து செல்லுங்கள் (என்று கூறப்படும்) மூன்று கிளைகளையுடைய (புகை) நிழலின் பக்கம் நடந்து செல்லுங்கள். (அது சுகமான) நிழல் தரக்கூடியதல்ல; நெருப்பின் அனலை விட்டும் காப்பாற்றக் கூடியதுமல்ல, நிச்சயமாக அது (பெரும்) மாளிகைகளைப் போன்ற தீப்பொறிகளை வீசி எறியும், நிச்சயமாக அது (தீப்பொறி) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போன்றிருக்கும்.
(அல்முர்ஸலாத்:29-33)
وَقَالَ تَعَالي: (لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ط ذلِكَ يُخَوِّفُ اللّٰهُ بِهِ عِبَادَهُ ط يعِبَادِ فَاتَّقُونِ۞).
الزمر:١٦
12. அவர்களுக்கு அவர்களின் மேற்புறத்திலிருந்து நெருப்பினாலான தட்டுகளும் அவர்களுக்குக் கீழ்புறத்திலிருந்து (அவை போன்”) தட்டுகளும் இருக்கும்; அது (ஏனேனில்) “அல்லாஹ் அதன் மூலம் தன் அடியார்களை அச்சுறுத்துகிறான்’’ என்பதாகும், எனவே என்னுடைய அடியார்களே! என்னையே நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.
(அஸ்ஸுமர்:16)
وَقَالَ تَعَالي: (إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ ۞ طَعَامُ اْلاَثِيمِ ۞ كَالْمُهْلِ ج يَغْلِي فِي الْبُطُونِ ۞ كَغَلْيِ الْحَمِيمِ ۞ خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَي سَوَآءِ الْجَحِيمِ ۞ ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ ۞ ذُقْ ج إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ ۞ إِنَّ هذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ۞).
الدخان:٥٠–٤٣
13. நிச்சயமாகக் கள்ளி மரமாகிறது – பாவிகளின் உணவாகும், (அது) உருக்கப் பட்ட செம்பைப் போலிருக்கும்; அது (நரக வாசிகளின்) வயிறுகளில் கொதிக்கும் – கடும் சூடேற்றப்பட்ட நீர் கொதிப்பதைப் போன்று. (பாவியாகிய) “அவனைப் பிடியுங்கள்; நரகத்தின் மையப்பகுதிக்கு அவனை இழுத்துச் செல்லுங்கள், பிறகு வேதனை தரும் கொதிக்கும் நீரை அவன் தலைக்கு மேல் ஊற்றுங்கள்’’ (என்று நரகக் காவலர்களுக்கு கட்டளையிடப்படும்). (இந்த வேதனையைச்) சுவைத்துப்பார்; நிச்சயமாக நீ தான் சிறப்புடையவன்; சங்கைக்குரியவன் (என்று ஆணவச் செருக்கோடு சொல்லிக் கொண்டிருந்தாயோ, என்றும் மலக்குகள் கூறுவர்). நிச்சயமாக இ(ந்த வேதனையான)து எதனை நீங்கள் சந்தேகித்துக் கொண்டு(ம் மறுத்துக் கொண்டும்) இருந்தீர்களோ அதுவாகும் (என்றும் கூறப்படும்).
(அத்துகான்:43-50)
وَقَالَ تَعَالي: (مِنْ وَّرَآئِهِ جَهَنَّمُ وَيُسْقَي مِنْ مَّآءٍ صَدِيدٍ ۞ يَّتَجَرَّعُهُ وَلاَ يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَاهُوَ بِمَيِّتٍ ط وَمِنْ وَّرَائِهِ عَذَابٌ غَلِيظٌ۞).
ابراهيم:١٦.١٧
14. அவனுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; (அங்கு) சீழ் நீரிலிருந்து (அவனுக்குப்) புகட்டப்படும். அதனைச் சிறிது சிறிதாக (சிரமத்துடன்) அவன் விழுங்குவான்; அது அவனுக்கு எளிதாக (உள்ளே) இறங்காது; (உடலின்) ஒவ்வோர் இடத்திலிருந்தும் அவனுக்கு மரணம் வரும்; (ஆனால்) அவன் மரணமடைகிறவனும் அல்லன்; இன்னும் அதற்குப் பிறகும் கடினமான வேதனை உண்டு.
(இப்ராஹீம்:16,17)

ஹதீஸ்கள்:-

١٢٧– عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ:قَالَ أَبُو بَكْرٍؓ: يَارَسُولَ اللّٰهِؐ قَدْ شِبْتَ قَالَ: شَيَّبَتْنِي هُودٌ وَالْوَاقِعَةُ وَالْمُرْسَلاَتُ وَعَمَّ يَتَسَاءَلُونَ وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ.
رواه الترمذي وقال هذا حديث حسن غريب باب ومن سورة الواقعة، رقم:٣٢٩٧
127. ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், “யா ரஸூலல்லாஹ்! தங்களிடம் முதுமையின் அறிகுறி தென்படுகிறதே!’’ என்று கேட்டார்கள், “ஹூத், வாகிஆ, முர்ஸலாத், அம்மயதஸாஅலூன், இதஷ் ஷம்ஸு குவ்விரத் ஆகிய அத்தியாயங்கள் என்னை நரைக்கச் (முதுமை அடையச்) செய்துவிட்டன’’, என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்’ என்று ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தெளிவுரை:- மறுமை நாளின் அதிபயங்கர நிகழ்ச்சிகள் மற்றும் அல்லாஹ் பாவிகளைத் தண்டிப்பது பற்றிய செய்திகள் மேற்கண்ட சூராக்களில் விவரமாகக் கூறப்பட்டுள்ளன, இவைகள் நரை ஏற்படச் செய்துவிட்டன.
(திர்மிதீ)
١٢٨– عَنْ خَالِدِ بْنِ عُمَيْرِنِ الْعَدَوِيِّؓ قَالَ: خَطَبَنَا عُتْبَةُ بْنُ غَزْوَانَؓ ، فَحَمِدَ اللّٰهَ وَأَثْنَي عَلَيْهِ، ثُمَّ قَالَ: أَمَّا بَعْدُ، فَإِنَّ الدُّنْيَا قَدْ آذَنَتْ بِصُرْمٍ، وَوَلَّتْ حَذَّاءَ، وَلَمْ يَبْقَ مِنْهَا إِلاَّ صُبَابَةٌ كَصُبَابَةِ اْلإِنَاءِ يَتَصَابُّهَا صَاحِبُهَا، وَإِنَّكُمْ مُنْتَقِلُونَ مِنْهَا إِلَي دَارٍ لاَزَوَالَ لَهَا، فَانْتَقِلُوا بِخَيْرٍ مَا بِحَضْرَتِكُمْ، فَإِنَّهُ قَدْ ذُكِرَ لَنَا أَنَّ الْحَجَرَ يُلْقَي مِنْ شَفَةِ جَهَنَّمَ فَيَهْوِي فِيهَا سَبْعِينَ عَاماً، لاَ يُدْرِكُ لَهَا قَعْرًا، وَوَاللّٰهِ لَتُمْلاَنَّ، أَفَعَجِبْتُمْ؟ وَلَقَدْ ذُكِرَ لَنَا أَنَّ مَا بَيْنَ مِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ مَسِيرَةُ أَرْبَعِينَ سَنَةً، وَلَيَأْتِيَنَّ عَلَيْهَا يَوْمٌ وَهُوَ كَظِيظٌ مِنَ الزِّحَامِ، وَلَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللّٰهِ ، مَا لَنَا طَعَامٌ إِلاَّ وَرَقُ الشَّجَرِ، حَتَّي قَرِحَتْ أَشْدَاقُنَا فَالْتَقَطْتُ بُرْدَةً فَشَقَقْتُهَا بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ مَالِكٍ، فَاتَّزَرْتُ بِنِصْفِهَا، وَاتَّزَرَ سَعْدٌ بِنِصْفِهَا، فَمَا أَصْبَحَ الْيَوْمَ مِنَّا أَحَدٌ إِلاَّ أَصْبَحَ أَمِيرًا عَلَي مِصْرٍ مِنَ اْلاَمْصَارِ، وَإِنِّي أَعُوذُ بِاللّٰهِ أَنْ أَكُونَ فِي نَفْسِي عَظِيماً وَعِنْدَ اللّٰهِ صَغِيرًا، وَإِنَّهَا لَمْ تَكُنْ نُبُوَّةٌ قَطُّ إِلاَّ تَنَاسَخَتْ، حَتَّي تَكُونَ آخِرُ عَاقِبَتِهَا مُلْكاً، فَسَتَخْبُرُونَ وَتُجَرِّبُونَ اْلاُمَرَاءَ بَعْدَنَا.
رواه مسلم باب الدنيا سجن للمؤمن وجنة للكافر رقم:٧٤٣٥
128. ஹஜ்ரத் காலிதிப்னு உமைர் அதவிய்யி (ரலி) அவர்கள் கூறுவதாவது, “ஒரு முறை எங்களிடையே ஹஜ்ரத் உத்பதுப்னு ஙஸ்வான் (ரலி) அவர்கள் பிரசங்கம் நிகழ்த்தினார்கள். (அன்னார் பஸராவின் கவர்னராக இருந்தார்கள்) அல்லாஹ் வைப் புகழ்ந்து துதித்த பின் சொன்னார்கள், “நிச்சயமாக! உலகம் தான் அழிந்து போவதை அறிவித்துவிட்டது, முதுகைக் காட்டியவண்ணம் விரைந்து செல்கிறது. பாத்திரத்தில் எஞ்சியிருக்கும் பானத்தைப் போல, உலக வாழ்க்கையில் கொஞ்சம் தான் எஞ்சியுள்ளது, அந்த எஞ்சிய பானத்தை மனிதன் உறிஞ்சிவிடுகிறான். நீங்கள் உலகை விட்டும் நிரந்தரமான அழிவில்லாத வீட்டின் பக்கம் செல்ல இருக்கிறீர்கள், எனவே, உங்களிடம் உள்ளவற்றில் மிக மேலானவற்றை (நல்அமல்களை) எடுத்துக் கொண்டு அவ்வீட்டிற்குச் செல்லுங்கள்! “நரகத்தின் ஓரத்திலிருந்து ஒரு கல்லை வீசியெறிந்தால் அது எழுபது ஆண்டுகளாக நரகில் விழுந்து கொண்டிருந்தாலும் அதன் அடித்தளத்தை அக்கல் அடைய முடியாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! (இவ்வளவு விசாலமான) இந்த நரகமும் ஒரு நாள் மனிதர்களால் நிரம்பிவிடும்’. உங்களுக்கு இந்தச் செய்தி வியப்பாக இல்லையா? “மேலும், சொர்க்கவாசலின் இரு ஓரங்களுக்கிடையே உள்ள தூரம் நாற்பது வருடத் தொலை தூரம் என்றும், ஒரு நாள் சுவனவாசிகளின் நெருக்கடியால் இத்தனை விசாலமான வாசலும் நிரம்பிவிடும், என்பதாகவும் எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஏழு நபர்கள் இருந்தோம், நானும் அவர்களில் ஒருவன், நாங்கள் புசிப்பதற்கு இலைகள் தான் கிடைத்தன, தொடர்ந்து இலைகளைச் சாப்பிட்டு வந்ததால் எங்கள் தாடைகள் எல்லாம் காயமாகிவிட்டன. எனக்கு ஒரு போர்வை கிடைத்தது, அதை இரண்டாகக் கிழித்துப் பாதியை நான் ஆடையாக்கிக் கொள்ள, மறுபாதியை ஹஜ்ரத் ஸஃதுப்னு மாலிக் (ரலி) அவர்கள் ஆடையாக உடுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட காலத்தையும் நான் பார்த்திருக்கிறேன், இன்னும், எங்களில் ஒவ்வொருவரும் ஏதாவதொரு நகரத்தின் கவர்னராக இருக்கிறோம். என் பார்வையில் பெரியவனாகவும், அல்லாஹ் விடம் சிறியவனாகவும் ஆகிவிடுவதை விட்டும் அல்லாஹ் விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். நுபுவ்வத்துடைய (நபித்துவ) முறை அழிந்து கொண்டே செல்கிறது. அந்த இடத்தை அரசாட்சி முறை ஆக்கிரமித்துக் கொண்டது, எங்களுக்குப் பிறகு வரும் ஏனைய கவர்னர்கள் மூலம் வெகுவிரைவில் அனுபவம் பெறுவீர்கள்!’ என்பதாகக் கூறினார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- நபித்துவ முறையின் தனிச்சிறப்பு நீதி நேர்மையை நிலைநாட்டும், உலக பற்றின்மை, மறுமையின் மீது ஆசையையும் தூண்டும் அரசாட்சி முறையில் இத்தகைய தன்மைகளை பொதுவாக காணமுடியாது.
(தக்மிலீ ஃபத்ஹுல் முல்ஹிம்)
١٢٩– عَنْ عَائِشَةَؓ أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّٰهِؐ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّٰهِ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَي الْبَقِيعِ فَيَقُولُ: السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ، وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لاَحِقُونَ، اللّٰهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ.
رواه مسلم باب مايقال عند دخول القبور……، رقم:٢٢٥٥
129. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: “என்னிடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கும் முறை வரும் நாளில் எனது இல்லத்திற்கு நபி (ஸல்) அவர்கள் வரும் பொழுதெல்லாம், இரவின் பிற்பகுதியில் எழுந்து கப்ருஸ்தானுக்குச் (ஜன்னத்துல் பகீஃ) சென்று, (السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ، وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لاَحِقُونَ، اللّٰهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ)
“முஸ்லிம்களின் ஊர் வாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும், உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட மரண நாள் உங்களை வந்தடைந்துவிட்டது, இன்ஷா அல்லாஹ் நாமும் உங்களுடன் வர இருக்கிறோம், யாஅல்லாஹ், பகீஃ வாசிகளை மன்னிப்பாயாக!’’ என்ற துஆவை ஓதுவார்கள்.
(முஸ்லிம்)
١٣٠– عَنْ مُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : وَاللّٰهِ مَا الدُّنْيَا فِي اْلآخِرَةِ إِلاَّ مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ هذِهِ فِي الْيَمِّ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ بِمَ تَرْجِعُ؟
رواه مسلم باب فناء الدنيا…، رقم:٧١٩٧
130. நபி (ஸல்) அவர்கள் அருளியதை ஹஜ்ரத் முஸ்தவ்ரிதுப்னு ஷத்தாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ் வின் மீது ஆணையாக! மறுமைக்கு முன் உலகின் உதாரணம், உங்களில் ஒருவர் தன் விரலைக் கடலில் முக்கியெடுத்துப் பிறகு தன் விரலில் எவ்வளவு நீர் ஒட்டிக் கொண்டுள்ளது என்று பார்த்துக் கொள்ளவும்!’’ அதாவது கடலில் இருக்கும் நீரை கவனிக்கும் பட்சத்தில் விரலில் ஒட்டியுள்ள நீர் எவ்வாறு மிகக் குறைவானதோ அவ்வாறே” மறுமையை கவனிக்கும் பட்சத்தில் உலக வாழ்க்கை மிகக் குறைவானது.
(முஸ்லிம்)
١٣١– عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اَلْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّي عَلَي اللّٰهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب حديث الكيس من دان نفسه…، رقم: ٢٤٥٩
131. “எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி – எவர் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ் வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٣٢– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: أَتَيْتُ النَّبِيَّؐ عَاشِرَ عَشْرَةٍ فَقَامَ رَجُلٌ مِنَ اْلاَنْصَارِ فَقَالَ: يَا نَبِيَّ اللّٰهِ! مَنْ أَكْيَسُ النَّاسِ وَأَحْزَمُ النَّاسِ؟ قَالَ: أَكْثَرُهُمْ ذِكْرًا لِّلْمَوْتِ، وَأَكْثَرُهُمْ اسْتِعْدَادًا لِّلْمَوْتِ قَبْلَ نُزُولِ الْمَوْتِ، أُولئِكَ هُمُ اْلاَكْيَاسُ ذَهَبُوا بِشَرَفِ الدُّنْيَا وَكَرَامَةِ اْلآخِرَةِ.
قلت: رواه ابن ماجه باختصار رواه الطبراني في الصغير واسناده حسن مجمع الزوائد:١ ٠ /٥٥٦
132. ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பத்து நபர்கள் கொண்ட ஒரு ஜமாஅத்துடன் நான் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்குச் சென்றேன். அன்ஸாரிகளில் ஒருவர் எழுந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் மிகவும் அறிவுள்ளவர், பேணுதல் மிக்கவர் யார்?’’ என்று வினவினார். “மரணத்தை மிக அதிகமாக நினைப்பவர், மரணத்திற்கு முன் அதற்குரிய தயாரிப்பை மிக அதிகமாகச் செய்து கொண்டவர், (இவ்வாறு செய்பவர்களே அறிவுடையோர்) இவர்கள் தாம் உலகத்தின் சிறப்பையும் மறுமையின் கண்ணியத்தையும் பெற்றுக் கொண்டவர்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
(தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்)
١٣٣– عَنْ عَبْدِ اللّٰهِؓ قَالَ: خَطَّ النَّبِيُّؐ خَطّاً مُرَبَّعاً وَخَطَّ خَطّاً فِي الْوَسَطِ خَارِجاً مِنْهُ، وَخَطَّ خُطَطاً صِغَارًا إِلَي هذَا الَّذِي فِي الْوَسَطِ مِنْ جَانِبِهِ الَّذِي فِي الْوَسَطِ، فَقَالَ: هذَا اْلإِنْسَانُ وَهذَا أَجَلُهُ مُحِيطٌ بِهِ أَوْ قَدْ أَحَاطَ بِهِ، وَهذَا الَّذِي هُوَ خَارِجٌ أَمَلُهُ، وَهذِهِ الْخُطَطُ الصِّغَارُ اْلاَعْرَاضُ فَإِنْ أَخْطَأَهُ هذَا نَهَشَهُ هذَا، وَإِنْ أَخْطَأَهُ هذَا نَهَشَهُ هذَا.
رواه البخاري باب في الامل وطوله، رقم:٦٤١٧
133. ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சதுர வடிவத்தில் ஒரு கோடு வரைந்தார்கள், அச்சதுரத்துக்கு வெளியில் தோன்றிய நிலையில் மற்றோரு கோடு வரைந்தார்கள், பிறகு அந்த சதுரத்திற்குள் சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள், (மார்க்க அறிஞர்கள் அதன் வடிவ அமைப்பைப் பல விதமாக வரைந்துள்ளனர், அவற்றில் ஒன்று இங்கு வரையப்பட்டுள்ளது)
அதன் பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “இந்நடுக்கோடு மனிதன், அவனை நாலாபுறத்திலும் சூழ்ந்துள்ள சதுரக்கோடு அவனது மரணம், அதிலிருந்து அவன் தப்பவே முடியாது, சதுரத்தை விட்டு வெளியே நீண்டிருக்கும் கோடு அவனது உலக ஆசைகள், அவை அவன் வாழ்வின் எல்லையைக் கடந்துள்ளது, சிறிய கோடுகள் யாவும் அவனது நோய்களும் பிரச்சினைகளுமாகும், ஒன்றிலிருந்து தப்பித்தால் மற்றோன்றில் அகப்பட்டுக் கொள்கிறான். அதிலிருந்து தப்பித்துக் கொண்டால் வேறோரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறான்!’’ என்பதாகக் கூறினார்கள்.
(புகாரி)
١٣٤– عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍؓ أَنَّ النَّبِيَّؐ قَالَ: اثْنَتَانِ يَكْرَهُهُمَا ابْنُ آدَمَ الْمَوْتَ وَالْمَوْتُ خَيْرٌ مِنَ الْفِتْنَةِ، وَيَكْرَهُ قِلَّةَ الْمَالِ وَقِلَّةُ الْمَالِ أَقَلُّ لِلْحِسَابِ.
رواه احمد باسنادين ورجال احدهما رجال الصحيح مجمع الزوائد:١ ٠/٤٥٣
134. “இரு காரியங்களை மனிதன் வெறுக்கிறான், (முதலாவது) மரணம் குழப்பத்தைவிட மரணம் மேலானது, தீனுக்கு நஷ்டத்தை உண்டாக்கும் குழப்பங்களை விட்டும் மரணம் அவனை பாதுகாக்கிறது. (இரண்டாவது) செல்வம் குறைவதை மனிதன் விரும்புவதில்லை, செல்வத்தில் குறை ஏற்படுவது மறுமையின் கேள்வி கணக்கை மிகவும் எளிதாக்குகிறது!’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் மஹ்மூதுப்னு லபீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத் மஜ்மஉஸ்ஸவாயித்)
١٣٥– عَنْ أَبِي سَلَمَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: مَنْ لَقِيَ اللّٰهَ يَشْهَدُ أَنْ لآ إِلهَ إِلاَّ اللّٰهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللّٰهِؐ وَآمَنَ بِالْبَعْثِ وَالْحِسَابِ دَخَلَ الْجَنَّةَ.
(الحديث) البداية والنهاية:٥/٣ ٠٤
135. “அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் என்று சாட்சி சொல்லிய நிலையிலும், மேலும் மரணித்தபின் திரும்ப எழுப்பப்படும் என்றும் கேள்விக் கணக்கு உண்டு என்றும் நம்பிக்கை கொண்ட நிலையில் எவர் அல்லாஹ் வைச் சந்திப்பாரோ அவர் சுவனம் செல்வார்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அல்பிதாயா வந்நிஹாயா)
١٣٦– عَنْ أُمِّ الدَّرْدَاءِؓ قَالَتْ: قُلْتُ لأِبِي الدَّرْدَاءِؓ: أَلاَ تَبْتَغِي لأِضْيَافِكَ مَا يَبْتَغِي الرِّجَالُ لأِضْيَافِهِمْ فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِنَّ أَمَامَكُمْ عَقَبَةً كَؤُودًا لاَ يُجَاوِزُهَا الْمُثْقِلُونَ فَأُحِبُّ أَنْ أَتَخَفَّفَ لِتِلْكَ الْعَقَبَةِ.
رواه البيهقي في شعب الايمان:٧ /٣ ٠٩
136. “ஹஜ்ரத் உம்மு தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்களிடம், “தங்களது விருந்தினரை உபசரிக்க மற்றவர்களைப் போல் நீங்களும் ஏன் சம்பாதிப்பதில்லை?’ என்று கேட்டேன். “உங்களுக்கு முன்னால் கடினமான பள்ளத்தாக்கு ஒன்று உண்டு, அதிகச் சுமை உள்ளவர்களால் அதை எளிதில் கடக்க இயலாது’, என நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன், எனவே அப்பள்ளத்தாக்கைக் கடப்பதற்காக என் சுமையைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறேன்’’ என்று கூறினார்கள்.
(பைஹகீ)
١٣٧– عَنْ هَانِيءٍؒ مَوْلَي عُثْمَانَؓ أَنَّهُ قَالَ: كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَي قَبْرٍ بَكَي حَتَّي يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ: تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِي وَتَبْكِي مِنْ هذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ اْلآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ قَالَ: وَقَالَ رَسُولُ اللّٰهِؐ : مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في فظاعة القبر…، رقم:٢٣ ٠٨
137. “ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏதேனும் ஒரு கப்ருக்கருகில் நின்றால், தாடி நனையும் வரை அழுவார்கள். “சொர்க்க, நரகத்தைப் பற்றிக் கூறும் பொழுது கூட இவ்வளவு அழுவதில்லையே, கப்ரைக் கண்டு இந்த அளவு அழுகிறீர்களே?’ என்று அன்னாரிடம் கேட்கப்பட்டது. “மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடம் கப்ரு, அதில் ஈடேற்றம் பெற்றவருக்கு அடுத்தடுத்த தங்குமிடங்கள் அதைவிட மிக எளிதாகிவிடும், அந்தத் தங்குமிடத்தில் ஈடேற்றம் பெறாதவருக்கு பிறகு வரக்கூடிய தங்குமிடங்கள் அதைவிட மிகக் கடினமானதாக ஆகிவிடும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். மேலும், “கப்ரில் நிகழும் காட்சியைவிட பயங்கரமான காட்சியை நான் கண்டதில்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களால் உரிமை விடப்பட்ட அடிமை ஹஜ்ரத் ஹானிஇ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
١٣٨– عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَؓ قَالَ: كَانَ النَّبِيُّؐ إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ فَقَالَ: اِسْتَغْفِرُوا لأِخِيكُمْ وَاسْأَلُوا لَهُ بِالتَّثْبِيتِ فَإِنَّهُ اْلآنَ يُسْأَلُ.
رواه ابوداؤد باب الاستغفار عندالقبر…، رقم:٣٢٢١
138. ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்த பின் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, “உங்களுடைய சகோதருக்காக அல்லாஹ் விடம் மன்னிப்புத் தேடுங்கள், கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது உறுதியான உள்ளத்துடன் இருக்கவும் அல்லாஹ் விடம் கேளுங்கள், ஏனேனில் தற்சமயம் இவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
(அபூதாவூத்)
١٣٩– عَنْ أَبِي سَعِيدٍؓ قَالَ: دَخَلَ رَسُولُ اللّٰهِؐ مُصَلاَّهُ فَرَآي نَاساً كَأَنَّهُمْ يَكْتَشِرُونَ قَالَ: أَمَا إِنَّكُمْ لَوْ أَكْثَرْتُمْ ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ لَشَغَلَكُمْ عَمَّا أَرَي الْمَوْتَ فَأَكْثِرُوا مِنْ ذِكْرِ هَاذِمِ اللَّذَّاتِ الْمَوْتِ فَإِنَّهُ لَمْ يَأْتِ عَلَي الْقَبْرِ يَوْمٌ إِلاَّ تَكَلَّمَ فَيَقُولُ: أَنَا بَيْتُ الْغُرْبَةِ وَأَنَا بَيْتُ الْوَحْدَةِ وَأَنَا بَيْتُ التُّرَابِ وَأَنَا بَيْتُ الدُّودِ فَإِذَا دُفِنَ الْعَبْدُ الْمُؤْمِنُ قَالَ لَهُ الْقَبْرُ: مَرْحَباً وَأَهْلاً أَمَا إِنْ كُنْتَ لاَحَبَّ مَنْ يَمْشِي عَلَي ظَهْرِي إِلَيَّ فَإِذْ وُلِّيتُكَ الْيَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَتَرَي صَنِيعِي بِكَ قَالَ: فَيَتَّسِعُ لَهُ مَدَّ بَصَرِهِ وَيُفْتَحُ لَهُ بَابٌ إِلَي الْجَنَّةِ وَإِذَا دُفِنَ الْعَبْدُ الْفَاجِرُ أَوِ الْكَافِرُ قَالَ لَهُ الْقَبْرُ: لاَ مَرْحَباً وَلاَ أَهْلاً أَمَا إِنْ كُنْتَ لاَبْغَضَ مَنْ يَمْشِي عَلَي ظَهْرِي إِلَيَّ فَإِذْ وُلِّيتُكَ الْيَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَتَرَي صَنِيعِي بِكَ قَالَ: فَيَلْتَئِمُ عَلَيْهِ حَتَّي يَلْتَقِيَ عَلَيْهِ وَتَخْتَلِفَ أَضْلاَعُهُ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ بِأَصَابِعِهِ فَأَدْخَلَ بَعْضَهَا فِي جَوْفِ بَعْضٍ قَالَ: وَيُقَيِّضُ اللّٰهُ لَهُ سَبْعِينَ تِنِّيناً لَوْ أَنَّ وَاحِدًا مِنْهَا نَفَخَ فِي اْلاَرْضِ مَا أَنْبَتَتْ شَيْئاً مَا بَقِيَتِ الدُّنْيَا فَيَنْهَشْنَهُ وَيَخْدِشْنَهُ حَتَّي يُقْضَي بِهِ إِلَي الْحِسَابِ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّمَا الْقَبْرُ رَوْضَةٌ مِّنْ رِّيَاضِ الْجَنَّةِ أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النَّارِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب حديث اكثروا ذكر هاذم اللذات، رقم:٢٤٦ ٠
139. ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருமுறை தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் வந்தபொழுது மக்களில் சிலர் பற்கள் தெரியும்படி சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். “இன்பங்களை முறித்து விடும் மரணத்தை அதிகமாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், உங்களை நான் காணும் இந்த நிலை ஏற்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “எனவே, இன்பங்களை முறிக்கும் மரணத்தை மிகவும் அதிகமாக நினையுங்கள், ஏனேன்றால், “நான் வெருட்சியின் வீடு, நான் தனிமையின் வீடு. நான் மண் வீடு, நான் புழு பூச்சிகளின் வீடு’ என்று ஒவ்வொரு நாளும் கப்ரு கூறிக் கொண்டே இருக்கிறது. முஃமினான அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டதும், கப்ரு அவனிடம், “உன் வரவு நல்வரவாகட்டும்! நீ இங்கு வந்தது மிகவும் நல்லது, என் மீது நடந்து சென்றவர்களில் நீயே எனக்கு மிகப் பிரியமானவனாக இருந்தாய், இன்று நீ என்னிடம் வந்துள்ளாய், எனது சிறந்த உபசரிப்பை நீ கண்டு கொள்வாய்!’ என்று கூறி மய்யித்தின் பார்வை செல்லும் தூரம் வரை கப்ரு விசாலமாகிவிடும், அந்த மைய்யித்திற்காக, சுவனத்தின் பக்கமாக ஒரு கதவு திறக்கப்படும். ஒரு பாவி அல்லது காஃபிர் கப்ரில் வைக்கப்பட்டதும், “உன் வரவு தீய வரவாகட்டும்’, நீ வந்தது மிகவும் தீயதாகிவிட்டது. என் முதுகின் மேல் நடந்து சென்றவர்களில் நீ தான் என்னுடைய அதிக வெறுப்புக்குரியவனாய் இருந்தாய், இன்று நீ என்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளாய். எனவே நான் உன்னுடன் நடந்து கொள்ளும் முறையைக் கண்டுகொள்வாய்!’’ “என்று கூறி விலா எலும்புகள் ஒன்றொடொன்று பின்னிக்கொள்ளும் அளவு கப்ரு அவனை நெருக்கும்!’ என்று சொன்னவர்கள். தமது இரு கைகளின் விரல்களையும் ஒன்றொடொன்று இணைத்துக் காட்டி, இதே போல ஒரு புறத்து விலா எலும்புகள் மறுபுறத்து விலா எலும்புகளுடன் பின்னிப் பிணைந்து கொள்ளும் என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். மேலும், அவன் மீது எழுபது விஷப் பாம்புகளை அல்லாஹ் சாட்டிவிடுகிறான், அவற்றில் ஒன்று பூமியின் மீது மூச்சுவிட்டாலும் அதன் (விஷத்தின்) காரணமாக மறுமை நாள் வரை பூமியில் புற்பூண்டுகளே முளைக்காது, அவைகள் நாள் தோறும் அவனைக் கடித்துக் கொண்டும், கொட்டிக் கொண்டும் இருக்கும், மேலும் நபி (ஸல்) அவர்கள் “கப்ரு ஒன்று சொர்க்கத்தின் பூஞ்சோலை அல்லது நரகத்தின் படுகுழி’’ என்று கூறினார்கள்’’.
(திர்மிதீ)
١٤٠– عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍؓ قَـالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللّٰهِ فِي جَنَازَةِ رَجُلٍ مِنَ اْلاَنْصَارِ فَانْتَهَيْنَا إِلَي الْقَبْرِ وَلَمَّا يُلْحَدْ فَجَلَسَ رَسُولُ اللّٰهِؐ وَجَلَسْنَا حَوْلَهُ كَأَنَّمَا عَلَي رُؤُوسِنَا الطَّيْرُ وَفِي يَدِهِ عُودٌ يَنْكُتُ بِهِ فِي اْلاَرْضِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ إِسْتَعِيذُوا بِاللّٰهِ مِنْ عَذَابِ الْقَبْرِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثاً قَالَ: وَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولاَنِ لَهُ: مَنْ رَبُّكَ؟ فَيَقُولُ: رَبِّيَ اللّٰهُ، فَيَقُولاَنِ لَهُ: مَا دِينُكَ؟ فَيَقُولُ: دِينِيَ اْلإِسْلاَمُ، فَيَقُولاَنِ لَهُ: مَا هذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ؟ قَالَ: فَيَقُولُ: هُوَ رَسُولُ اللّٰهِؐ ، فَيَقُولاَنِ: وَمَا يُدْرِيكَ؟ فَيَقُولُ: قَرَأْتُ كِتَابَ اللّٰهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ قَالَ: فَيُنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ أَنْ قَدْ صَدَقَ عَبْدِي فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَاباً إِلَي الْجَنَّةِ قَالَ: فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيبِهَا قَالَ: وَيُفْتَحُ لَهُ فِيهَا مَدَّ بَصَرِهِ قَالَ: وَإِنَّ الْكَافِرَ فَذَكَرَ مَوْتَهُ قَالَ: وَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ وَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولاَنِ لَهُ: مَنْ رَبُّكَ؟ فَيَقُولُ: هَاهْ هَاهْ لاَ أَدْرِي، فَيَقُولاَنِ لَهُ: مَا دِينُكَ؟ فَيَقُولُ: هَاهْ هَاهْ لاَ أَدْرِي، فَيَقُولاَنِ لَهُ: مَا هذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ؟ فَيَقُولُ: هَاهْ هَاهْ لاَ أَدْرِي، فَيُنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ أَنْ كَذَبَ فَأَفْرِشُوهُ مِنَ النَّارِ وَاَلْبِسُوهُ مِنَ النَّارِ وَافْتَحُوا لَهُ بَاباً إِلَي النَّارِ قَالَ: فَيَأْتِيهِ مِنْ حَرِّهَا وَسَمُومِهَا قَالَ وَيُضَيَّقُ عَلَيْهِ قَبْرُهُ حَتَّي تَخْتَلِفَ فِيهِ أَضْلاَعُهُ.
رواه ابوداؤد باب المسألة في القبر …، رقم:٤٧٥٣
140. ஹஜ்ரத் பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு முறை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் அன்ஸாரி ஸஹாபியின் ஜனாஸாவுடன் கப்ருஸ்தானுக்குச் சென்றிருந்தோம். கப்ருக்கு அருகே நாங்கள் சென்றோம், கப்ரு இன்னும் தோண்டப்படாமல் இருந்தது (கப்ரு தயாராவதை எதிர்பார்த்தவர்களாக) நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து இருக்க, நாங்களும் அன்னாரைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். எங்களின் தலை மேல் பறவைகள் அமர்ந்திருப்பது போன்று அவர்களை முன்னோக்கிய நிலையில் இருந்தோம். நபி (ஸல்) அவர்கள் தம் கையிலிருந்த குச்சியால் (ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நிலையில்) நிலத்தில் கோடிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு தமது புனிதமான தலையை உயர்த்தியவர் களாக, “அல்லாஹ் விடம் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுங்கள்’’ என்று இரு முறையோ அல்லது மூன்று முறையோ சொன்னார்கள் மேலும் சொன்னதாவது, அல்லாஹ்வின் முஃமினான அடியார் இவ்வுலகத்திலிருந்து ஆலமே பர்ஸகுக்கு (மறு உலகுக்கு) இடம் பெயரும்பொழுது, (கப்ரில் வைக்கப்பட்டதும்) அவரிடம் மலக்குகள் வந்து அவரை உட்கார வைத்து, “உன்னுடைய ரப்பு யார்?’’ என்று கேட்பார்கள். “என்னுடைய ரப்பு அல்லாஹ்!’’ என்று கூறுவார். “உன்னுடைய மார்க்கம் எது?’’ என்று வினவர். “என்னுடைய மார்க்கம் இஸ்லாம்’’ என்று அவர் பதில் சொல்வார். பிறகு “உங்களிடம் (நபியாக) அனுப்பப்பட்ட இவரைப் பற்றி, அதாவது நபி (ஸல்) அவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’’ என்று கேட்பார்கள், “அவர் அல்லாஹ் வின் ரஸூல்’’ என்று பதில் சொல்வார். பிறகு மலக்குகள், “இந்த விபரத்தை எவ்வாறு நீ அறிந்து கொண்டாய்? அதாவது அவர் ரஸூலுல்லாஹி என்பது எப்படி உனக்குத் தெரியும்?’’ என்று வினவார். “நான் அல்லாஹ் வின் வேதத்தை ஓதியுள்ளேன் அதன் மீது ஈமான் கொண்டேன், அதை உண்மையென ஏற்றுக் கொண்டேன்’’ என்று அவர் பதில் சொல்வார். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது (முஃமினான அடியான் மலக்குகளின் மேற்கண்ட கேள்விகளுக்கு இவ்வாறு சரியாக பதில் சொன்னதும்) வானத்திலிருந்து ஒர் அழைப்பாளர் அழைப்பார் அல்லாஹ் வின் புறத்திலிருந்து வானத்தில் அறிவிப்பு செய்யப்படுகிறது, “என்னுடைய அடியான் உண்மை சொன்னான், அவனுக்காக சொர்க்கத்தின் விரிப்பை விரியுங்கள், சொர்க்க ஆடையை அவனுக்கு அணிவியுங்கள், சொர்க்கத்தின் ஒரு வாசலை அவனுக்காகத் திறந்துவிடுங்கள்’’ என்று அல்லாஹ் சொல்வான், அவ்வாறே” அந்த வாசல் திறக்கப்படுகிறது. அதிலிருந்து சொர்க்கத்தின் இனிமையான காற்றும், நறுமணங்களும் வந்து கொண்டிருக்கும், அம்மனிதனுக்காக கண்ணுக் கெட்டிய தூரம் வரை கப்ர் விசாலமாக்கப்படும். (இது நபி (ஸல்) அவர்கள் முஃமினானவருக்கு நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்தது) அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் காஃபிருடைய நிலையைப் பற்றிக் கூறினார்கள். “அவனுடைய உயிர் அவனுடைய உடலில் திரும்பக் கொண்டு வரப்படும், பிறகு, அவனிடம், இரு மலக்குகள் வருவர், அவனை அமரவைத்து அவனிடம், “உன்னுடைய இரட்சகன் யார்?’ என்று வினவர். “அந்தோ! கைசேதமே! எனக்கு எதும் தெரியாதே!’ என்று கூறுவான். பிறகு அவ்விரு மலக்குகளும் அவனிடம், “உன்னுடைய மார்க்கம் எது?’ என்று கேட்பார்கள். அவன் “அந்தோ! கைசேதமே எனக்கு ஒன்றும் தெரியாதே’’! என்று கூறுவான். அடுத்து அவனிடம், “உம்மிடம் (நபியாக) அனுப்பப்பட்ட இம்மனிதரைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்று அவ்விருவரும் கேட்பார்கள். அதற்கும் அவன், “அந்தோ! கைசேதமே, எனக்கு யாதொன்றும் தெரியாதே’’ என்று பதில் சொல்வான். (இந்தக் கேள்வி பதிலுக்குப் பிறகு) “இவன் பொய் சொல்கிறான்!’’ என்று வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அறிவிப்புச் செய்வார். பிறகு (அல்லாஹ் விடமிருந்து) ஒர் அறிவிப்பாளர், “இவனுக்கு நெருப்பினால் ஆன விரிப்பை விரியுங்கள், நெருப்பு ஆடையை அணிவியுங்கள், நரகத்தின் ஒரு வாசலை இவனுக்குத் திறந்துவிடுங்கள்’’. என்று அறிவிப்பார் (அவ்வாறே” அனைத்தும் செய்து முடிக்கப்படும்). (நரகத்தின் அந்த வாசலில் இருந்து) நரகத்தின் வெப்பமும், எரித்துக் பொசுக்கிவிடும் அனல் காற்றும் அவனிடம் வந்து கொண்டு இருக்கும். மேலும், இரு விலா எலும்புகளும் ஒன்றொடொன்று பின்னிக் கொள்ளும் அளவு கப்ர் அவனை நெருக்கும்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- காஃபிரைப் பார்த்து “இவன் பொய் சொன்னான்’ என்று மலக்குகள் சொன்னதன் பொருள், அவன் மலக்குகளின் கேள்விக்கு தனக்கு எதும் தெரியாது என்று பதில் சொன்னது பொய்யாகும். ஏனேனில், உண்மையில் அவன் அல்லாஹ் வின் ஏகத்துவத்தையும் அவனுடைய ரஸூலையும் தீனுல் இஸ்லாத்தையும் மறுப்பவனாக இருந்தான்.
குறிப்பு:- ஹதீஸில் குறிப்பிட்டுள்ள “பர்ஸக்’ என்பது மனிதன் இறந்ததிலிருந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரையுள்ள காலத்துக்குச் சொல்லப்படும்.
١٤١– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّي عَنْهُ أَصْحَابُهُ وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَيُقْعِدَانِهِ فَيَقُولاَنِ: مَا كُنْتَ تَقُولُ فِي هذَا الرَّجُلِ لِمُحَمَّدٍ ؟ فَأَمَّا الْمُؤْمِنُ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللّٰهِ وَرَسُولُهُ فَيُقَالُ لَهُ: أُنْظُرْ إِلَي مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللّٰهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ فَيَرَاهُمَا جَمِيعاً وَأَمَّا الْمُنَافِقُ وَالْكَافِرُ فَيُقَالُ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هذَا الرَّجُلِ فَيَقُولُ: لاَ أَدْرِي كُنْتُ أَقُولُ مَا يَقُولُهُ النَّاسُ فَيُقَالُ: لاَ دَرَيْتَ وَلاَ تَلَيْتَ وَيُضْرَبُ بِمَطَارِقَ مِنْ حَدِيدٍ ضَرْبَةً فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ غَيْرَ الثَّقَلَيْنِ.
رواه البخاري باب ماجاء في عذاب القبر، رقم:١٣٧٤
141. “அடியானை அவனது கப்ரில் வைக்கப்பட்டு அவனது ஜனாஸாவுடன் வந்தவர்கள் சென்றுவிட்ட பிறகு (அவர்கள் சற்றுத் தொலைவுதான் சென்றிருப்பார்கள்) அவர்களின் காலணியின் ஓசை காதில் ஒளித்துக் கொண்டிருக்கும். அதற்குள் இரு மலக்குகள் அவனிடம் வந்து, அவனை அமரவைத்து “இம்மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்?’ என்று கேட்பார்கள். அவன் முஃமினாக இருந்தால் “அல்லாஹ் வின் அடியார் அவர் அவனது ரஸூல் என்று நான் சாட்சி சொல்கிறேன்’ என்று சொல்வான். (இப்பதிலைக் கேட்டு) அவனிடம், (நீ ஈமான் கொள்ளாமலிருந்திருந்தால்) நரகில் இருக்க வேண்டிய இடத்தைப் பார், அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் இடம் தந்துள்ளான்’, என்பதாகச் சொல்லப்படும், (சொர்க்க, நரகத்தின் இரு இடங்களும் அவனுக்கு முன் காட்டப்படும்), (ஒரே சமயத்தில் அவ்விரு இடங்களையும் ஒன்றாகக் காண்பான்). அந்த அடியான் முனாபிக்காக, காஃபிராக இருந்தால் (அவன் மரணித்த பின்பு) அவனிடமும் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களைப் பற்றி கேட்கப்படும், “இந்த மனிதரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, மற்ற மனிதர்கள் அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததைத்தான் நான் சொல்லிக் கொண்டிருந்தேன்’, என்று பதில் சொல்வான். (அவனது இந்த பதிலுக்கு) “நீ சுயமாகத் தெரிந்து கொள்ளவுமில்லை, அறிந்தவர்களைப் பின்பற்றவும் இல்லை என்று அவனிடம் கூறப்படும். பிறகு (அவனை வேதனைப் படுத்த) இரும்பினால் ஆன சம்மட்டியைக் கொண்டு அடிக்கப்படும், வேதனை பொறுக்கமுடியாமல் மனிதர்கள், ஜின்களைத் தவிர, அவனுக்கு அருகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அவனது கூச்சலைக் கேட்கும் அளவுக்கு அவன் கதறுவான்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٤٢– عَنْ أَنَسٍؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّي لاَ يُقَالَ فِي اْلاَرْضِ: اللّٰهُ اللّٰهُ وَفِي رِوَايَةٍ: لاَ تَقُومُ السَّاعَةُ عَلَي أَحَدٍ يَقُولُ: اللّٰهُ، اللّٰهُ.
رواه مسلم باب ذهاب الايمان اخر الزمان، رقم: ٣٧٥
142. “உலகில் “அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லப்படாத (முற்றிலும் மோசமான) காலம் வராதவரை கியாமத் நிகழாது’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பில், “அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்பவர் இருக்கும் வரை கியாம நாள் வராது’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஹதீஸின் பொருள், அல்லாஹ் வை நினைப்பதை முற்றிலும் உலகம் மறந்துவிடும்போதுதான் கியாம நாள் ஏற்படும் என்பதாகும். இதே ஹதீஸிற்கு, “மக்களே, அல்லாஹ் வை அஞ்சுங்கள், அவனுக்கு அடிபணிந்து வாழுங்கள்!’ என்று கூறிக் கொண்டிருக்கும் மனிதர் இருக்கும் வரை கியாமத் உண்டாகாது! என்” விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது.
(மிர்காத்)
١٤٣– عَنْ عَبْدِ اللّٰهِؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: لاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ عَلَي شِرَارِالنَّاسِ.
رواه مسلم باب قرب الساعة رقم:٧٤ ٠٢
143. “இறுதித் தீர்ப்பு நாள் மிகத் தீயவர்களுடைய காலத்தில் தான் வரும்’’, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٤٤– عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : يَخْرُجُ الدَّجَّالُ فِي أُمَّتِي فَيَمْكُثُ أَرْبَعِينَ: لاَ أَدْرِي أَرْبَعِينَ يَوْماً، أَوْ أَرْبَعِينَ شَهْرًا، أَوْ أَرْبَعِينَ عَاماً، فَيَبْعَثُ اللّٰهُ عِيسَي بْنَ مَرْيَمَ كَأَنَّهُ عُرْوَةُ بْنُ مَسْعُودٍؓ فَيَطْلُبُهُ فَيُهْلِكُهُ، ثُمَّ يَمْكُثُ النَّاسُ سَبْعَ سِنِينَ لَيْسَ بَيْنَ اثْنَيْنِ عَدَاوَةٌ، ثُمَّ يُرْسِلُ اللّٰهُ رِيحاً بَارِدَةً مِنْ قِبَلِ الشَّامِ فَلاَ يَبْقَي عَلَي وَجْهِ اْلاَرْضِ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ أَوْ إِيمَانٍ إِلاَّ قَبَضَـتْهُ حَتَّي لَوْ أَنَّ أَحَدَكُمْ دَخَلَ فِي كَبِدِ جَبَلٍ لَدَخَلَتْهُ عَلَيْهِ حَتَّي تَقْبِضَهُ، قَالَ: فَيَبْقَي شِرَارُ النَّاسِ فِي خِفَّةِ الطَّيْرِ وَأَحْلاَمِ السِّبَاعِ لاَ يَعْرِفُونَ مَعْرُوفاً وَلاَ يُنْكِرُونَ مُنْكَرًا فَيَتَمَثَّلُ لَهُمُ الشَّيْطَانُ فَيَقُولُ: اَلاَ تَسْتَجِيبُونَ؟ فَيَقُولُونَ: فَمَا تَأْمُرُنَا؟ فَيَأْمُرُهُمْ بِعِبَادَةِ اْلاَوْثَانِ وَهُمْ فِي ذلِكَ دَارٌّ رِزْقُهُمْ حَسَنٌ عَيْشُهُمْ، ثُمَّ يُنْفَخُ فِي الصُّورِ فَلاَ يَسْمَعُهُ أَحَدٌ إِلاَّ أَصْغَي لِيتاً وَرَفَعَ لِيتاً، قَالَ: وَأَوَّلُ مَنْ يَسْمَعُهُ رَجُلٌ يَلُوطُ حَوْضَ إِبِلِهِ، قَالَ: فَيَصْعَقُ وَيَصْعَقُ النَّاسُ، ثُمَّ يُرْسِلُ اللّٰهُ مَطَرًا كَأَنَّهُ الطَّلُّ فَتَنْبُتُ مِنْهُ أَجْسَادُ النَّاسِ، ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَي فَإِذَاهُمْ قِيَامٌ يَّنْظُرُونَ، ثُمَّ يُقَالُ: يأَيُّهَا النَّاسُ! هَلُمُّوا إِلي رَبِّكُمْ وَقِفُوهُمْ إِنَّهُمْ مَسْئُولُونَ، ثُمَّ يُقَالُ: أَخْرِجُوا بَعْثَ النَّارِ، فَيُقَالُ: مِنْ كَمْ؟ فَيُقَالُ: مِنْ كُلِّ اَلْفٍ تِسْعَمِائَةٍ وَتِسْعَةً وَّتِسْعِينَ، قَالَ: فَذَلِكَ يَوْمَ يَجْعَلُ الْوِلْدَانَ شِيباً وَذلِكَ يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ.
وَفِي رِوَايَةٍ:فَشَقَّ ذلِكَ عَلَي النَّاسِ حَتَّي تَغَيَّرَتْ وُجُوهُهُمْ، فَقَالَ النَّبِيُّؐ : مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ تِسْعَمِائَةٍ وَّتِسْعَةً وَّتِسْعِينَ وَمِنْكُمْ وَاحِدٌ.
(الحديث) رواه البخاري باب قوله وتري الناس سكاري رقم:٤٧٤١
144. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதை ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “(கியாமத் நாள் வருவதற்கு முன்) தஜ்ஜால் வெளிப்படுவான் அவன் நாற்பது வரை உலகில் இருப்பான். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர், “நாற்பது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதன் பொருள், நாற்பது நாட்களா? நாற்பது மாதங்களா? நாற்பது வருடங்களா? என்று எனக்குத் தெரியாது என கூறுகிறார்கள், மேலும் கூறுகிறார்கள்’’, “பிறகு அல்லாஹ் ஹஜ்ரத் ஈஸா இப்னு மர்யம் (அலை) அவர்களை (உலகில்) அனுப்புவான், ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களின் முகச்சாயல் ஹஜ்ரத் உர்வதிப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் முகச்சாயல் போன்றிருக்கும்; அவர்களது தோற்றம், உருவ அமைப்பு ஹஜ்ரத் உர்வதிப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் போல அமைந்திருக்கும். ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள், அவனைத் தேடிப் பிடித்த பின் அவனை கொன்றுவிடுவார்கள். அதன் பின், ஏழு ஆண்டுகள் வரை மக்களில் இரு நபருக்கு மத்தியில் கூட எவ்வித விரோமில்லாத நிலையில் வாழ்வார்கள், அதன் பின் அல்லாஹ் சிரியாவிலிருந்து (விசேஷமான) குளிர்ந்த காற்றை வீசச் செய்வான், அந்தக் காற்றுபட்டதும் அணுவளவு ஈமான் உள்ளவர்கள் கூட பூமியில் மிஞ்சியிருக்கமாட்டார்கள். (அந்தக் காற்றால் ஈமான் உள்ளவர்கள் யாவரும் மரணித்து விடுவார்கள்) உங்களில் ஒருவர், ஒரு மலைக் குகைக்குள் நுழைந்து கொண்டாலும் அங்கும் அந்தக் காற்று சென்று அவரையும் மரணிக்கச் செய்யும். அதன் பின் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாவது, “இதற்குப் பின் ஈமானற்ற தீயவர்கள் மட்டும் உலகில் எஞ்சியிருப்பார்கள், பறவைகளின் வேகமும், துடிப்பும் அத்தீயவர்களிடம் காணப்படும்; பறவைகள் துடித்து வேகமாகப் பறப்பதைப் போல அவர்கள் தம் இச்சைகளைப் பூர்த்தி செய்வதில் விரைவாகச் செயல்படுவார்கள். மேலும், (மிருகங்களைப் போன்று பிறர் மீது அநியாயம், அட்டூழியம் புரிவார்கள்) நன்மையை நன்மையாகவோ, தீமையைத் தீமையாகவோ கருதமாட்டார்கள். ஷைத்தான் ஒரு விதமான கோலத்தில் அவர்கள் முன் தோன்றி, “நீங்கள் எனக்கு வழிப்பட மாட்டீர்களா?’’ என்று கேட்பான், “நீ எங்களுக்கு என்ன கட்டளை இடுகின்றாய்?’’, (உன் கட்டளைப்படி நடக்க நாம் தயாராக உள்ளோம்) என்று கூறுவார்கள். சிலைகளை வணங்கும்படி அவர்களுக்கு கட்டளை யிடுவான் (அவன் கட்டளைப்படி செயல்படுவர்) அந்நாளில் அவர்கள் மிகச் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். அவர்களது வாழ்க்கை (வெளித் தோற்றத்தில்) செழிப்பாக சுகபோகத்தில் இருக்கும், பின்பு சூர் ஊதப்படும். யார் அந்தச் சப்தத்தைக் கேட்டாலும் (அதன் பயங்கரம், திடுக்கத்தால் உணர்வற்று விடுவார்கள். மேலும், அதன் காரணமாக அவர்களது தலை, உடலில் நேராக நிற்காது) மாறாக, அவர்களது கழுத்து அங்குமிங்கும் சாயும், முதன் முதலில் ஸூருடைய சப்தத்தைக் கேட்பவர், ஒட்டகத்துக்குத் தண்ணீர் வைக்கும் தொட்டியை மண்ணால் செப்பனிட்டுக் கொண்டிருக்கும் ஒருவர். அவர் தான் முதன் முதலில் ஸூரின் சப்தத்தால் தாக்கப்படுவார். அவர் உணர்வற்று, உயிரற்றுக் கீழே விழுந்து விடுவார், இறந்துவிடுவார். அதுபோல் மற்ற மனிதர்களும் உயிரற்று விழுந்துவிடுவார்கள், பின்பு அல்லாஹ் பனித்துளி போன்ற (லேசான) மழையைப் பொழியச் செய்வான். அதன் காரணமாக மனிதர்களின் உடலுக்குள் உயிர் வந்துவிடும், பின்பு இரண்டாம் முறை ஸூர் ஊதப்பட்டதும் ஒட்டு மொத்தமாக எல்லோரும் எழுந்து நின்று விடுவார்கள். (அங்கும், இங்கும்) பார்த்துக் கொண்டிருப்பார்கள். “மக்களே, உங்கள் இரட்சகனிடம் செல்லுங்கள்!’ என்று அவர்களிடம் கூறப்படும், மேலும் “இவர்களை(க் கேள்வி கணக்கின் மைதானத்தில்) நிறுத்துங்கள்’’ ‘இவர்களிடம் விசாரணை நடைபெறும்!’ (இவர்களது அமல்கள் பற்றி கேள்விக் கணக்குக் கேட்கப்படும் என்று மலக்குகளுக்குக் கட்டளையிடப்படும்). பிறகு, “இவர்களிலிருந்து நரகவாதிகளை, பிரித்துவிடுங்கள்!’ என்று உத்தரவிடப்படும், ‘எத்தனை பேர்களிலிருந்து எத்தனை பேரை?’ என்று வினவப்படும். “ஒவ்வொரு ஆயிரம் நபர்களிலிருந்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது பேரைத் (தனியாகப் பிரியுங்கள்) என்று பதில் கூறப்படும். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறுவதாவது, “அந்நாள் சிறுவர்களை முதுமையடையச் செய்யும் நாளாகும் அந்நாளின் கடினமும், நீண்ட நெடிய காலமும் சிறுவர்களையும் முதியவர்களாக்கிவிடும், ஆனால், உண்மையில் குழந்தைகள் முதுமையடையவில்லை, மேலும், அந்நாள் கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளாகும். அந்நாளில் இந்நிகழ்ச்சி நடைபெறும். அந்நாளில் அல்லாஹ் விசேஷமான ஒரு ஒளியை வெளிப்படுத்துவான்.
(முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில், “ஒவ்வோர் ஆயிரத்திலிருந்தும் 999 நபர்கள் நரகம் செல்வர்’’ என்ற செய்தியைக் கேட்டதும், ஸஹாபாக்கள் அதிர்ச்சியுற்றனர். அவர்களுடைய முகங்களின் நிறம் மாறிவிட்டது. அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள், “நரகத்திற்குச் செல்லும் 999 நபர்கள், யஃஜுஜ் மஃஜுஜ், இன்னும் அவர்களைப் போன்ற அல்லாஹ்வை நிராகரிக்கின்ற, அவனுக்கு இணைவைக்கின்றவர்கள், ஓராயிரத்திலிருந்து (சுவனம் செல்லும்) அந்த ஒரு நபர் உங்களைச் சார்ந்தவர்கள் (உங்கள் வழிமுறையை பின்பற்றுபவர் என்று சொன்னார்கள்.
(புகாரி)
١٤٥– عَنْ أَبِي سَعِيدٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ: كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الْقَرْنِ قَدِ الْتَقَمَ الْقَرْنَ وَاسْتَمَعَ اْلاَذُنَ مَتَي يُؤْمَرُ بِالنَّفْخِ فَيَنْفُخُ فَكَأَنَّ ذلِكَ ثَقُلَ عَلَي أَصْحَابِ النَّبِيِّؐ فَقَالَ لَهُمْ: قُولُوا: حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَي اللّٰهِ تَوَكَّلْنَا.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء في شان الصور رقم:٢٤٣١
145. “ஸூர் ஊதும் மலக்கு ஸூரைத் தம் வாயில் ஏந்திய நிலையில், ஸூர் ஊத தனக்கு எப்போது கட்டளையிடப்படும்? தான் ஊதிவிடலாம் என்று தம் காது தாழ்த்தி அல்லாஹ்வுடைய கட்டளைக்கு அவர் காத்திருக்கும் நிலையில் நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, ஸஹாபாக்களுக்கு மிகவும் பாரமாக இருந்தது. “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் காரியங்களை செம்மையாக நடத்துபவன், அல்லாஹ் வின் மீதே நாங்கள் தவக்குல் வைத்தோம்’’ என்று சொல்லிக் கொண்டிருங்கள் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٤٦– عَنِ الْمِقْدَادِؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: تُدْنَي الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْخَلْقِ حَتَّي تَكُونَ مِنْهُ كَمِقْدَارِ مِيلٍ فَيَكُونُ النَّاسُ عَلَي قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَقِ، فَمِنْهُمْ مَنْ يَّكُونُ إِلَي كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَّكُونُ إِلَي رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَّكُونُ إِلَي حَقْوَيْهِ، وَمِنْهُمْ مَنْ يُّلْجِمُهُ الْعَرَقُ إِلْجَاماً، قَالَ: وَأَشَارَ رَسُولُ اللّٰهِؐ بِيَدِهِ إِلَي فِيهِ.
رواه مسلم باب في صفة يوم القيامة، رقم:٧٢ ٠٦
146. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதைத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மிக்தாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கியாமத் நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிகவும் சமீபமாக இருக்கும், சூரியனுக்கும் இவர்களுக்கும் இடையே ஒரு மைல் தூரம் தான் இடைவெளி இருக்கும், (அதன் வெட்பத்தால்) மக்கள் தங்களுடைய செயல்களுக்குத் தக்கவாறு வியர்வையில் மூழ்கியிருப்பர். ஒருவரின் செயல் எந்த அளவு தீயதாக இருக்குமோ அந்த அளவு வியர்வை அதிகமாக இருக்கும். சிலரின் வியர்வை கரண்டைக் கால் வரை இருக்கும். சிலரின் வியர்வை முழங்கால் வரை இருக்கும், சிலரின் வியர்வை இடுப்புவரை இருக்கும், சிலரின் வியர்வை வாய்வரை இருக்கும்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் தம் வாயின் பக்கம் கையால் சமிக்ஞை செய்து காட்டி சொன்னார்கள் (அவர்களின் வியர்வை வாயை எட்டிவிடும் என்பதாம்).
(முஸ்லிம்)
١٤٧– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلاَثَةَ أَصْنَافٍ: صِنْفاً مُشَاةً، وَصِنْفاً رُكْبَاناً، وَصِنْفًـا عَلَي وُجُوهِهِمْ قِيلَ: يَا رَسُولَ اللّٰهِؐ فَكَيْفَ يَمْشُونَ عَلَي وُجُوهِهِمْ؟ فَقَالَ: إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَي أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَي أَنْ يُمْشِيَهُمْ عَلَي وُجُوهِهِمْ أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَّشَوْكَةٍ.
رواه الترمذي وقال هذاحديث حسن باب ومن سورة بني اسرائيل، رقم:٣١٤٢
147. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “இறுதித் தீர்ப்பு நாள் அன்று மக்கள் மூன்று விதமாக எழுப்பப்படுவார்கள், நடந்த வண்ணமாகவும்; வாகனத்தில் அமர்ந்தவர்களாகவும்; முகங்குப்புற நடந்தவர்களாகவும் எழுப்படுவார்கள்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யா ரஸூலல்லாஹ், முகங்குப்புற எப்படி நடப்பார்கள்?’’ என்று கேட்கப்பட்டது. “கால்களால் நடக்க வைத்தவன், நிச்சயமாக அவர்களை முகங்குப்புற நடக்க வைக்கவும் சக்தி பெற்றவன், கவனமாகக் கேளுங்கள்! இம்மக்கள் தங்கள் முகங்களாலேயே பூமியிலுள்ள, முட்களை விட்டும் மேடு பள்ளங்களை விட்டும் தம்மை தற்காத்துக் கொள்வார்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
١٤٨– عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَي إِلاَّ مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَي إِلاَّ مَا قَدَّمَ وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَي إِلاَّ النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ.
رواه البخاري باب كلام الرب تعالي…..، رقم:٧٥١٢
148. “(இறுதித் தீர்ப்பு நாளில்) அல்லாஹ், உங்களில் ஒவ்வொருவரிடமும் மொழி பெயர்ப்பாளரின் உதவியின்றியே நேரடியாகப் பேசுவான். (அந் நேரத்தில் அடியான் தன் இயலாமையினால் அங்குமிங்கும் பார்ப்பான்) வலதுபுறம் பார்க்கும்பொழுது, தான் செய்த செயல்களைத் தவிர வேறேதும் தென்படாது. இடதுபுறம் பார்க்கும் பொழுது(ம்) தனது செயல்களைத் தவிர வேறேதையும் காணமாட்டான். தனக்கு முன்னால் நெருப்பைத் தவிர வேறேதையும் காணமாட்டான். ஆகவே, காய்ந்த பேரீத்தம் பழத் துண்டை தர்மம் செய்தாவது. நரக நெருப்பை விட்டும் தன்னைத் தற்காத்துக் கொள்ளுங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அதிய்யிப்னு ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
(புகாரி)
١٤٩– عَنْ عَائِشَةَؓ قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّؐ يَقُولُ فِي بَعْضِ صَلاَتِهِ: اللّٰهُمَّ حَاسِبْنِي حِسَاباً يَّسِيرًا فَلَمَّا انْصَرَفَ قُلْتُ: يَا نَبِيَّ اللّٰهِ مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: أَنْ يُنْظَرَ فِي كِتَابِهِ فَيُتَجَاوَزَ عَنْهُ إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ يَا عَائِشَةُ هَلَكَ.
(الحديث) رواه احمد:٦ /٤٨
149. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுகையில் “யாஅல்லாஹ், எனது கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக!’’ என்று துஆச் செய்யக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்தபின் “அல்லாஹ்வின் தூதரே! எளிதான கேள்வி கணக்கு என்றால் என்ன?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். “அடியானின் அமல்களின் பட்டோலையை மேலோட்டமாகப் பார்த்து, அவனை மன்னித்து விடுவதாகும்’’, ஆயிஷாவே! அந்நாளில் எவரிடம் கேள்வி கணக்கு கடினமாகக் கேட்கப்படுமோ, அவர் நாசமாகி விடுவார்’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹமத்)
١٥٠– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓ أَنَّهُ أَتَي رَسُولُ اللّٰهِؐ فَقَالَ: أَخْبِرْنِي مَنْ يَّقْوَي عَلَي الْقِيَـامِ يَوْمَ الْقِيَامَـةِ الَّذِي قَالَ الله ُ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ۞) فَقَالَ: يُخَفَّفُ عَلَي الْمُؤْمِنِ حَتَّي يَكُونَ عَلَيْهِ كَالصَّلوةِ الْمَكْتُوبَةِ.
رواه البيهقي في كتاب البعث والنشورمشكوة المصابيح رقم: ٥٥٦٣
150. ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து “அந்நாளில் மக்கள் அனைவரும் அகிலங்களின் ரட்சகனுக்கு முன் நிற்பார்கள்’ என்று கியாமத் நாளைப் பற்றி அல்லாஹ் கூறியுள்ளான், (ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமான) “கியாமத் நாளில் நிற்க, யார் சக்தி பெறுவார்?’ என்று கேட்டார்கள், “முஃமினுக்காக ஒரு பர்ளுத் தொழுகையை நிறைவேற்றும் நேரமளவு இலகுவாக்கிக் கொடுக்கப்படும்’’, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹஜ்ரத் அபூஸஈதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ, மிஷ்காத்)
١٥١– عَنْ عَوْفِ بْنِ مَالِكِ نِ اْلاَشْجَعِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : أَتَانِي آتٍ مِنْ عِنْدِ رَبِّي فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يُدْخِلَ نِصْفَ أُمَّتِيَ الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ وَهِيَ لِمَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللّٰهِ شَيْئاً.
رواه الترمذي باب منه حديث تخييرالنبي ! …. رقم:٢٤٤١
151. “அல்லாஹ் விடமிருந்து ஒரு மலக்கு என்னிடம் வந்தார். எனது உம்மத்தில் பாதியைச் சொர்க்கத்தில் நுழைய வைப்பது அல்லது (அனைவருக்காகவும்) பரிந்து பேசும் உரிமையை எனக்கு வழங்குவது ஆகிய இரண்டு காரியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சொன்னார், (ஒருவரும் விடுபடாமல் முஸ்லிம்கள் அனைவரும் பயனடைய) நான் அவர்களுக்காக பரிந்து பேசும் உரிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆகவே அல்லாஹ் வுக்கு இணைவைக்காத நிலையில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்அஇய் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٥٢– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب باب منه حديث شفاعتي….،رقم:٢٤٣٥
152. “என் சமுதாயத்தினரில் எனது பரிந்துரை பெரும்பாவங்கள் புரிந்தவர்களுக்கு மட்டுமே, சொந்தமானது (மற்ற உம்மதுதினருக்கு அல்ல)’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٥٣– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ مَاجَ النَّاسُ بَعْضُهُمْ فِي بَعْضٍ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ: اِشْفَعْ لَنَا إِلَي رَبِّكَ، فَيَقُولُ: لَسْتُ لَهَا وَلكِنْ عَلَيْكُمْ بِاِبْرَاهِيمَ فَإِنَّهُ خَلِيلُ الرَّحْمنِ، فَيَأْتُونَ اِبْرَاهِيمَ فَيَقُولُ: لَسْتُ لَهَا وَلكِنْ عَلَيْكُمْ بِمُوسَي فَإِنَّهُ كَلِيمُ اللّٰهِ، فَيَأْتُونَ مُوسَي فَيَقُولُ: لَسْتُ لَهَا وَلكِنْ عَلَيْكُمْ بِعِيسَي فَإِنَّهُ رُوحُ اللّٰهِ وَكَلِمَتُهُ، فَيَأْتُونَ عِيسَي فَيَقُولُ: لَسْتُ لَهَا وَلكِنْ عَلَيْكُمْ بِمُحَمَّدٍ ، فَيَأْتُونِي فَأَقُولُ: أَنَا لَهَا فَأَسْتَأْذِنُ عَلَي رَبِّي فَيُؤْذَنُ لِي وَيُلْهِمُنِي مَحَامِدَ أَحْمَدُهُ بِهَا لاَ تَحْضُرُنِيَ اْلآنَ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ وَأَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ: يَامُحَمَّدُؐ اِرْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَقُولُ: يَارَبِّ! أُمَّتِي أُمَّتِي، فَيُقَالُ: انْطَلِقْ فَأَخْرِجْ مِنْهَا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ شَعِيرَةٍ مِنْ إِيمَانٍ، فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَعُودُ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا، فَيُقَالُ: يَا مُحَمَّدُ! اِرْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَقُولُ: يَارَبِّ أُمَّتِي أُمَّتِي، فَيُقَالُ: إنْطَلِقْ فَأَخْرِجْ مِنْهَا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ أَوْ خَرْدَلَةٍ مِنْ إِيمَانٍ، فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَعُودُ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا، فَيُقَالُ: يَا مُحَمَّدُ! اِرْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَقُولُ: يَارَبِّ أُمَّتِي أُمَّتِي، فَيَقُولُ: انْطَلِقْ فَأَخْرِجْ مَنْ كَانَ فِي قَلْبِهِ أَدْنَي أَدْنَي أَدْنَي مِثْقَالِ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنَ النَّارِ مِنَ النَّارِ مِنَ النَّارِ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ، ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ فَأَحْمَدُهُ بِتِلْكَ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا، فَيُقَالُ: يَا مُحَمَّدُ! اِرْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ وَسَلْ تُعْطَهُ وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَقُولُ: يَارَبِّ! اِئْذَنْ لِي فِيمَنْ قَالَ:لآ إِلهَ إِلاَّ اللّٰهُ فَيَقُولُ: وِعِزَّتِي وَجَلاَلِي وَكِبْرِيَائِي وَعَظَمَتِي لَأُخْرِجَنَّ مِنْهَا مَنْ قَالَ:لآإِلهَ إِلاَّ اللّٰهُ.
رواه البخاري باب كلام الرب تعالي….، رقم:٧٥١ ٠
(وَفِي حَدِيثٍ طَوِيلٍ) عَنْ أَبِي سَعِيدِنِ الخُدْرِيِّؓ فَيَقُولُ اللّٰهُ تَعَالَي: شَفَعَتِ الْمَلاَئِكَةُ وَشَفَعَ النَّبِيُّونَ وَشَفَعَ الْمُؤْمِنُونَ وَلَمْ يَبْقَ إِلاَّ أَرْحَمُ الرَّاحِمِينَ فَيَقْبِضُ قَبْضَةً مِنَ النَّارِ فَيُخْرِجُ مِنْهَا قَوْماً لَمْ يَعْمَلُوا خَيْرًا قَطُّ قَدْعَادُوا حُمَماً فَيُلْقِيهِمْ فِي نَهْرٍ فِي أَفْوَاهِ الْجَنَّةِ يُقَالُ لَهُ نَهْرُ الْحَيَاةِ فَيَخْرُجُونَ كَمَا تَخْرُجُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ قَالَ: فَيَخْرُجُونَ كَاللُّؤْلُؤِ فِي رِقَابِهِمُ الْخَوَاتِمُ يَعْرِفُهُمْ أَهْلُ الْجَنَّةِ هؤُلاَءِ عُتَقَاءُ اللّٰهِ الَّذِينَ أَدْخَلَهُمُ اللّٰهُ الْجَنَّةَ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلاَ خَيْرٍ قَدَّمُوهُ ثُمَّ يَقُولُ: اُدْخُلُوا الْجَنَّةَ فَمَا رَأَيْتُمُوهُ فَهُوَ لَكُمْ فَيَقُولُونَ: رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ فَيَقُولُ: لَكُمْ عِنْدِي أَفْضَلُ مِنْ هذَا فَيَقُولُونَ: يَارَبَّنَا أَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ هذَا؟ فَيَقُولُ: رِضَائِي فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا.
رواه مسلم باب معرفة طريق الرؤية، رقم:٤٥٤
153. நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கியாமத் நாளில் (பீதியினால்) ஜனங்கள் ஒருவர் இன்னோருவரிடம் ஓடிக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, “தாங்கள் தங்கள் இரட்கனிடம் எங்களுக்காக பரிந்து பேசுங்கள்’’ என்று வேண்டுவார்கள். “இதற்கு தகுதியானவன் நான் அல்ல, நீங்கள் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள், அவர் அல்லாஹ் வின் நண்பர்’’ என்று சொல்வார்கள். மக்கள், ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர்கள், “நான் இதற்குத் தகுதியற்றவன், ஆயினும் நீங்கள் ஹஜ்ரத் மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள் அவர் கலீமுல்லாஹ் அல்லாஹ் விடம் பேசுபவர்”’ என்று சொல்வார்கள். மக்கள் ஹஜ்ரத் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள், அவர்களோ “நான் இதற்குத் தகுதியற்றவன், என்றாலும் நீங்கள் ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள், அவர்கள் லூஹுல்லாஹ், கலிமத்துல்லாஹ்’’ என்று சொல்வார்கள். மக்கள் ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள், ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் “நான் இதற்குத் தகுதியற்றவன், நீங்கள் ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’’ என்று கூறுவார்கள். எனவே, அம்மக்கள் என்னிடம் வருவார்கள், (மிகவும் நன்று) “பரிந்து பேசும் உரிமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று சொல்வேன். அதன் பிறகு நான் எனது ரப்பிடம் அனுமதி கேட்பேன், அனுமதி கிடைத்துவிடும், இப்பொழுது சொல்ல இயலாத புகழ் வார்த்தைகளை அல்லாஹ் எனது உள்ளத்தில் அந்நேரத்தில் உதிக்கச் செய்வான். நான் அந்த வார்த்தைகளால் அல்லாஹ் வைப் புகழ்ந்த வண்ணம், ஸஜ்தாவில் வீழ்ந்துவிடுவேன், “முஹம்மதே, ! தலையை உயர்த்துவீராக!’ “சொல்லுங்கள், உங்களின் பேச்சைக் கேட்கப்படும், கேளுங்கள்! கொடுக்கப்படும், சிபாரிசு செய்யுங்கள்! உங்களுடைய பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்’’ என சொல்லப்படும். “என் இரட்சகனே! என் சமுதாயம், என் சமுதாயம் (என்னுடைய சமுதாயத்தை மன்னித்துவிடு)’ என்பேன். “எவருடைய உள்ளத்தில் தொலிக் கோதுமையளவு ஈமான் இருக்குமோ அவரை நரகிலிருந்து வெளியேற்றுங்கள்!’ என்று கூறப்படும், பிறகு எனக்கு இடப்பட்ட கட்டளைப்படிச் செய்து முடிப்பேன், திரும்ப வந்து அதே வார்த்தைகளால் அல்லாஹ் வைப் புகழ்ந்து ஸஜ்தாவில் வீழ்ந்துவிடுவேன். “முஹம்மதே! தலையை உயர்த்துவீராக! சொல்லுங்கள் கேட்கப்படும், கேளுங்கள் தரப்படும், உங்களின் பரிந்துரைத்தல் ஏற்றுக்கொள்ளப்படும்’’ என்று சொல்லப்பட்டதும், என் “இரட்சகனே! என் (உம்மது) சமுதாயம், என் (உம்மது) சமுதாயம்’ என்று கூறுவேன், (என்னை நோக்கி) “செல்வீராக! எவரது உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ளதோ அவரையும் வெளியேற்றுவீராக!’ என்று சொல்லப்படும். நான் சென்று, எனக்கு இட்ட கட்டளையைச் செயல்படுத்துவேன். திரும்ப வந்து, அதே வார்த்தைகளால் அல்லாஹுதஆலாவைப் புகழ்ந்து ஸஜ்தாவில் வீழ்ந்துவிடுவேன். “முஹம்மதே! தலையை உயர்த்துவீராக! சொல்லுங்கள் கேட்கப்படும், கேளுங்கள் தரப்படும், நீங்கள் பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று சொல்லப்படும். “என் இரட்சகனே! என் உம்மது, என் உம்மது என்பேன், “முஹம்மதே! யாருடைய உள்ளத்தில் கடுகளவைவிடவும் குறைந்த அளவு ஈமான் உள்ளதோ அவரையும் வெளியேற்றுங்கள்’ என்பதாகக் கூறப்படும். நான் சென்று எனக்கு இட்ட கட்டளையைச் செயல்படுத்திவிட்டு, நான்காவது முறையாகத் திரும்பி வருவேன். பிறகு அதே வாசகங்களால் அல்லாஹ் வைப் புகழ்வேன், “முஹம்மதே! தலையை உயர்த்துவீராக!” சொல்லுங்கள், உங்கள் பேச்சு கேட்கப்படும், கேளுங்கள், தரப்படும், பரிந்து பேசுங்கள், ஏற்றுக் கொள்ளப்படும்’’ என்று எனக்கு சொல்லப்படும். “எனது இரட்சகனே! “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்னும் திருக்கலிமாவைச் சொன்னவரையும் நரகிலிருந்து வெளியேற்ற எனக்கு அனுமதி தருவாயாக!’’ என்று சொல்வேன். “என் கண்ணியத்தின் மீதும்! என் உயர்ந்த அந்தஸ்தின் மீதும்! என் பெருமையின் மீதும்!, என் உயர்வின் மீதும்! ஆணையாக எவர் இக்கலிமாவைச் சொல்லியிருந்தாலும், நிச்சயமாக நானாகவே அவரை நரகிலிருந்து வெளியேற்றுவேன்’’ என்று அல்லாஹ் கூறுவான்.
(புகாரி)
ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “நபி (ஸல்) அவர்களின் நான்காவது முறையீட்டுக்குப் பதில் கூறும் போது “மலக்குகளும் பரிந்துரைத்துவிட்டனர், நபிமார்களும் பரிந்துரைத்துவிட்டனர், முஃமின்களும் பரிந்துரைத்துவிட்டனர். இப்பொழுது அர்ஹமுர்ராஹிமீனைத் தவிர வேறுயாரும் மீதமாக இல்லை’’ என்று கூறிவிட்டு அல்லாஹ் எம்மக்கள் இதற்குமுன் எப்போதும் நல்அமல் செய்ததே இல்லையோ, மேலும் நரகத்தில் (வெந்து) கரிக்கட்டையைப் போன்றிருப்பார்களோ அத்தகையவர்களிலிருந்து கைப்பிடியளவு நபர்களை நரகிலிருந்து வெளியேற்றுவான், சொர்க்கத்தின் வாசலுக்கருகே, “ஜீவநதி’ என்றோரு நதி ஓடிக்கொண்டிருக்கும், அதில் அல்லாஹ் அவர்களைப் போடுவான். அவர்கள் அதிலிருந்து (உடனே புத்தம் புதியவர்களாக வெளிவருவார்கள்) வெள்ளப் பெருக்கின் கூளங்களில் (நீரும் எரும் கலப்பதால்) விதை முளைத்து வருவது போல இவர்கள் பசுமையாக முளையிட்டு வெளிவருவார்கள். இவர்கள் முத்தைப் போல் பிரகாசமாக இலங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களது கழுத்தில் தங்கப்பட்டி ஒன்று இருக்கும், அதைப் பார்க்கும் சுவனவாசிகள், “இவர்கள் (நரகிலிருந்து) அல்லாஹ்வினால் விடுதலை செய்யப்பட்டவர்கள். எந்த நல்ல அமலும் செய்யாமலேயே அவர்களை அல்லாஹ் சுவனத்தில் புகச் செய்துள்ளான்’ என்பதை விளங்கிக் கொள்வார்கள். பிறகு “சுவனத்தில் நுழைந்துவிடுங்கள், நீங்கள் எதையெல்லாம் (சுவனத்தில்) கண்டீர்களோ அவையெல்லாம் உங்களுக்கே!’’ என்று அல்லாஹ் அவர்களிடம் சொல்வான், “எங்கள் இரட்சகனே! நீ உலகில் யாருக்கும் கொடுக்காததை இங்கு எங்களுக்குக் கொடுத்துள்ளாய்! என்று சொல்வார்கள், “உங்களுக்காக, என்னிடம் இதைவிடச் சிறந்த அருட்கொடை உள்ளது’’ என்று அல்லாஹ் கூறுவான். “எங்கள் இரட்சகனே! இதைவிடச் சிறந்த அருட் கொடை வேறு எதுவாக இருக்கும்?’’ என்று வினவார்கள். “அதுதான் என்னுடைய பொருத்தம், உங்கள் மீது இனி நான் ஒருபோதும் கோபம் கொள்ளமாட்டேன்’ என்று அல்லாஹ் சொல்வான்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- இந்த ஹதீஸில் ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களை “கலிமத்துல்லாஹ்’, “லூஹுல்லாஹ்’, என்று சொல்லக் காரணம், தந்தையின்றி, அல்லாஹ்வின் “குன்’ என்ற கலிமாவை (வார்த்தையை) ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களது தாயின் சட்டையில் ஊதினார்கள். இதன் காரணமாக அவர்கள் ஓர் உயிருள்ள ஜீவனாகிவிட்டார்கள்.
(தப்ஸீர் இப்னுகஸீர்)
١٥٤– عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ فَيَدْخُلُونَ الْجَنَّةَ يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ.
رواه البخاري باب صفة الجنة والنار، رقم:٦٥٦٦
154. “நரக வாசிகள் என்ற புனைப் பெயரை உடைய மக்களில் ஒரு கூட்டம் ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் பரிந்து பேசுவதன் காரணமாக, நரகிலிருந்து வெளியாகி சுவனம் புகுவார்கள்’ என்று நபியவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இம்ரானிப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٥٥– عَنْ أَبِي سَعِيدٍؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: إِنَّ مِنْ أُمَّتِي مَنْ يَشْفَعُ لِلْفِئَامِ مِنَ النَّاسِ، مِنْهُمْ مَنْ يَّشْفَعُ لِلْقَبِيلَةِ، وَمِنْهُمْ مَنْ يَّشْفَعُ لِلْعُصْبَةِ، وَمِنْهُمْ مَنْ يَّشْفَعُ لِلرَّجُلِ حَتَّي يَدْخُلُوا الْجَنَّةَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب منه دخول سبعين الفا…، رقم:٢٤٤ ٠
155. “எனது உம்மத்தில் சிலர் ஒரு பெருங்கூட்டத்தினருக்கு பரிந்துரைக்கும் தகுதி பெற்றிருப்பர் (அவர்களுக்கு பரிந்து பேச அல்லாஹ் அனுமதி வழங்குவான்) இன்னும் சிலர் ஒரு கோத்திரத்தாருக்குப் பரிந்து பேசுவார்கள், இன்னும் சிலர் சிறு (உஸ்பா) கூட்டத்திற்குப் பரிந்து பேசுவார்கள், இன்னும் சிலர் ஒரு நபருக்குப் பரிந்து பேசுவார்கள் (அல்லாஹ் இவர்கள் அனைவரின் பரிந்துரையையும் ஏற்றுக் கொள்வான்) இறுதியாக அனைவரும் சுவனம் சென்றுவிடுவார்கள்’’, என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- பத்திலிருந்து நாற்பது வரையிலான கூட்டத்திற்கு “உஸ்பா’ என்று சொல்லப்படும்.
١٥٦– عَنْ حُذَيْفَةَ وَأَبِي هُرَيْرَةَؓ (فِي حَدِيثٍ طَوِيلٍ) قَالاَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : وَ تُرْسَلُ اْلاَمَانَةُ وَالرَّحِمُ فَتَقُومَانِ جَنْبَتَيِ الصِّرَاطِ يَمِيناً وَشِمَالاً، فَيَمُرُّ أَوَّلُكُمْ كَالْبَرْقِ قَالَ قُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي أَيُّ شَيْءٍ كَمَرِّ الْبَرْقِ؟ قَالَ: اَلَمْ تَرَوْا إِلَي الْبَرْقِ كَيْفَ يَمُرُّ وَيَرْجِعُ فِي طَرْفَةِ عَيْنٍ؟ ثُمَّ كَمَرِّ الرِّيحِ، ثُمَّ كَمَرِّ الطَّيْرِ وَشَدِّ الرِّجَالِ، تَجْرِي بِهِمْ أَعْمَالُهُمْ، وَنَبِيُّكُمْ قَائِمٌ عَلَي الصِّرَاطِ يَقُولُ: رَبِّ سَلِّمْ سَلِّمْ حَتَّي تَعْجِزَ أَعْمَالُ الْعِبَادِ، حَتَّي يَجِيءَ الرَّجُلُ فَلاَ يَسْتَطِيعُ السَّيْرَ إِلاَّ زَحْفاً قَالَ: وَفِي حَافَتَيِ الصِّرَاطِ كَلاَ لِيبُ مُعَلَّقَةٌ مَأْمُورَةٌ تَأْخُذُ مَنْ أُمِرَتْ بِهِ فَمَخْدُوشٌ نَاجٍ وَمَكْدُوسٌ فِي النَّارِ، وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ إِنَّ قَعْرَ جَهَنَّمَ لَسَبْعوْنَ خَرِيفاً.
رواه مسلم باب ادني اهل الجنة منزلة فيها رقم:٤٨٢
156. “கியாமத் நாளில் அமானிதம், உறவுமுறை இவ்விரண்டையும் (அதற்கு உருவம் கொடுத்து) அனுப்பப்படும், இவ்விரண்டும் (தன்னைப் பேணியவர் களுக்காகப் பரிந்து பேசவும், பேணாதவர்களைப் பற்றி முறையிடவும்) “ஸிராத்துல் முஸ்தகீம்’ பாலத்தின் வலது, இடது புறமாக நின்று கொள்ளும், உங்களில் முதல் கூட்டத்தினர், அப்பாலத்தை மின்னல் வேகத்தில் கடந்து செல்வார்கள்.இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் கூறுகிறார், “நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனது தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகவும்! “மின்னலைப் போன்று எவ்வாறு வேகமாகக் கடப்பார்கள்’? என்று வினவினேன். “மின்னல் கண் இமைக்கும் நேரத்திற்குள் சென்று, திரும்பி வந்துவிடுவதை நீர் பார்த்ததில்லையா?’ என்று கேட்டார்கள். “அதற்குப் பிறகு கடந்து செல்பவர்கள், காற்றைப் போன்ற வேகத்தில் கடந்து செல்வார்கள், அதற்குப் பிறகு பறவையின் வேகத்தில் கடப்பர், அதற்குப் பிறகு வேகமாக கடப்பவர்கள் ஓடும் வாலிபர்களின் ஓட்டத்துக்கு ஏற்ப அப்பாலத்தைக் கடப்பார்கள். ஆக, ஒவ்வொருவரின் வேகமும், அவர்களுடைய அமல்களுக்கேற்றவாறு இருக்கும். மேலும், உங்களது நபி (ஸல்) அவர்கள் பாலத்தில் நின்று கொண்டு, “எனது இரட்சகனே, அவர்களை ஈடேற்றம் பெறச் செய்வாயாக!’’ என்று கூறிக் கொண்டிருப்பார்கள். அவர்களில், சிலர் தமது குறைவான செயல்களின் காரணமாக ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் நடக்கச் சக்தியற்றுத் தவழ்ந்தவர்களாகச் செல்வார்கள். அப்பாலத்தின் இருபக்கமும் இரும்புக் கொக்கிகள் தொங்க விடப்பட்டிருக்கும். அவர்களைப் பிடிக்கும் படி அவைகளுக்குக் கட்டளையிடப்படும், அல்லாஹ்வின் ஆணைப்படி அவைகள் சிலரைப் பிடித்துக் கொள்வதால் சிராய்ப்புடன், அவர்கள் ஈடேற்றம் பெற்றுக் கொள்வார்கள், இன்னும் சிலர் நரகத்தில் தள்ளி விடப்படுவார்கள். “அபூஹுரைராவின் உயிர் எவன் வசத்தில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நரகத்தின் ஆழம் எழுபது வருடத் தொலை தூரமாகும்’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் ஹுதைபா, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٥٧– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: بَيْنَمَا أَنَا أَسِيرُ فِي الْجَنَّةِ إِذَا أَنَا بِنَهَرٍ حَافَتَاهُ قِبَابُ الدُّرِّ الْمُجَوَّفِ، قُلْتُ: مَاهذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هذَا الْكَوْثَرُ الَّذِي أَعْطَاكَ رَبُّكَ، فَإِذَا طِينُهُ مِسْكٌ أَذْفَرُ.
رواه البخاري باب في الحوض رقم:٦٥٨١
157. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “சொர்க்கத்தில் நடந்து சென்ற சமயம் ஒரு நதியைக் கடந்து சென்றேன், அதன் இரு ஓரங்களில் குடைந்தெடுக்கப்பட்ட முத்துக்களால் ஆன கோபுரங்கள் இருந்தன. “இது என்னவென்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் வினவினேன், “தங்களுடைய இரட்சகன் தங்களுக்கு கொடுத்துள்ள “கவ்ஸர்’ என்ற நதி இது’ என்று சொன்னார்கள்’, அதன் (கீழுள்ள) மண் நறுமணங்கமழும் கஸ்தூரியாக இருந்தது’’.
(புகாரி)
١٥٨– عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ، وَزَوَايَاهُ سَوَاءٌ، وَمَاؤُهُ أَبْيَضُ مِنَ الْوَرِقِ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ الْمِسْكِ، وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ، فَمَنْ شَرِبَ مِنْهُ فَلاَ يَظْمَأُ بَعْدَهُ أَبَدًا.
رواه مسلم باب اثبات حوض نبينا ..، رقم:٥٩٧١
158. “என்னுடைய தடாகம் (ஹவ்ளு) ஒரு மாதத் தொலை தூரம் உடையது. அதன் இரு மூலைகளும் சரி சமமானவை, அதன் நீளமும், அகலமும் ஒரே அளவானது, அதன் நீர் வெள்ளியை விட மிக்க வெண்மையானது, அதன் நறுமணம் கஸ்தூரியைவிட அதிக நறுமணமானது, அதன் நீர் அருந்தும் குவளைகள் வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையளவு (கணக்கற்று) இருக்கும், அதில் ஒரு முறை நீர் அருந்தினால், பிறகு எக்காலமும் தாகம் ஏற்படாது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- “தடாகம் (குளம்) ஒரு மாதத் தொலை தூரம் உடையதாகும்’’ என்பதன் பொருள், நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள “ஹவ்லுல் கவ்ஸர் என்” குளத்தின் நீள அகலம் ஒரு புறத்திலிருந்து மறு புறம் வரை செல்ல ஒரு மாதத் தொலை தூரம் உடையதாக இருக்கும் என்பதாம்.
١٥٩– عَنْ سَمُرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ لِكُلِّ نَبِيِّ حَوْضاً وَإِنَّهُمْ يَتَبَاهَوْنَ أَيُّهُمْ أَكْثَرُ وَارِدَةً وَإِنِّي أَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمُ وَارِدَةً.
رواه الترمذي باب ماجاء في صفة الحوض، رقم:٢٤٤٣ وقال: هذا حديث حسن غريب
159. “மறுமை நாளில் ஒவ்வொரு நபிக்கும் ஒரு குளம் (ஹவ்ளு) இருக்கும் யாருடைய குளத்தில் நீரருந்த அதிக மக்கள் வருவர் என்பதில் நபிமார்கள் தங்களுக்குள் பெருமை கொள்வார்கள். என்னிடத்தில் தான் அதிகமான மக்கள் நீரருந்த வருவார்கள் என்று ஆதரவு வைக்கிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (மேலும் தாகம் தீர்ந்து செல்வார்கள்).
(திர்மிதீ)
١٦٠– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: مَنْ شَهِدَ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّ عِيسَي عَبْدُ اللّٰهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ اَلْقَاهَا إِلَي مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ،أَدْخَلَهُ اللّٰهُ الْجَنَّةَ عَلَي مَا كَانَ مِنَ الْعَمَلِ زَادَ جُنَادَةُ:مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ أَيِّهَا شَاءَ.
رواه البخاري باب قوله تعالي ياهل الكتاب …، رقم:٣٤٣٥
160. “அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவனது அடியாரும் தூதருமாவார்கள். ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களும், அல்லாஹ் வின் அடியாராகவும் அவனது தூதராகவும், அவனது கலிமாவாகவும் இருக்கிறார்கள் (அல்லாஹ் வின் “குன்’ என்ற கட்டளையின் படி அவர்களின் பிறப்பு தந்தையின்றியே நிகழ்ந்தது) மேலும் அல்லாஹ் வின் புறத்திலிருந்து “லூஹ்’ ஒரு “உயிர்’ (அந்த உயிரை ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் ஊத ஹஜ்ரத் மர்யம் (அலை) அவர்களின் வயிற்றைச் சென்றடைந்தது. ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் ஹஜ்ரத் மர்யம் (அலை) அவர்களின் சட்டையின் நெஞ்சுப்பட்டியில் ஊதினார்கள்), “மேலும் சுவனம் இருப்பது என்பது உண்மை, நரகம் இருப்பது என்பதும் உண்மை’, என்று யார் சாட்சி சொல்கிறாரோ, அவருடைய அமல் எத்தகையதானாலும், அல்லாஹ் நிச்சயமாக அவரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உபாததுப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.”சுவனத்தில் எட்டு வாசல்களில் தாம் விரும்பிய வாசல் வழியே அவர் நுழைவார்’ என்ற வார்த்தையையும் ஹஜ்ரத் ஜுனாதா [ரஹ்] அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(புகாரி)
١٦١– عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : قَالَ اللّٰهُ: أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَالاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَي قَلْبِ بَشَرٍ، فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ (فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ۞).
رواه البخاري باب ماجاء في صفة الجنة …..، رقم:٣٢٤٤
161. “நான் எனது நல்அடியார்களுக்காக, எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எவருடைய உள்ளமும் சிந்தித்திராத அருட்பேறுகளை (நிஃமத்துகளை) தயார் செய்து வைத்துள்ளேன்’’ நீங்கள் விரும்பினால் என்ற (فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ)
இந்த வசனத்தை ஓதுங்கள், (பொருள்: அவ்வடியார்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களின் கண்களைக் குளிரச் செய்யும் சாதன(சன்மான)த்தை எவராலும் அறிந்து கொள்ளமுடியாது’ என்ற ஹதீஸ் குத்ஸியை நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٦٢– عَنْ سَهْلِ بْنِ سَعْدِ نِ السَّاعِدِيِّؓ قَالَ:قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.
رواه البخاري باب ماجاء في صفة الجنة ….، رقم:٣٢٥ ٠
162. “சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுள்ள (மிகக் குறைந்த அளவுள்ள) இடமும் உலகம் அதிலுள்ள எல்லாப் பொருட்களை விடவும் சிறந்தது’, (மதிப்பு மிக்கது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃது ஸாஇதீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٦٣– عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ أَوْ مَوْضِعُ قَدَمٍ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِّسَاءِ أَهْلِ الْجَنَّةِ إِطَّلَعَتْ إِلَي اْلاَرْضِ لاَضَاءَتْ مَا بَيْنَهُمَا، وَلَمَلاَتْ مَا بَيْنَهُمَا رِيحاً، وَلَنَصِيفُهَا يَعْنِي الْخِمَارَ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.
رواه البخاري باب صفة الجنة والنار، رقم:٦٥٦٨
163. “சொர்க்கத்தில் உங்களுடைய ஒரு வில் அளவுள்ள இடம் அல்லது ஒரு பாதத்தின் அளவுள்ள இடம் உலகம், உலகிலுள்ள யாவற்றை விடவும் சிறந்தது, சுவர்க்கக் கன்னிகளில் ஒரு பெண் பூமியை எட்டிப் பார்த்தால், சொர்க்கத்தில் இருந்து பூமிவரை (உள்ள இடைவெளி) ஒளிமயமாகிவிடும், நறுமணத்தால் நிரம்பிவிடும், சுவர்க்கக் கன்னியின் மேலாடையு (முக்காடு) ம் உலகம், உலகிலுள்ளவைகளைவிடவும் மேலானது’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٦٤– عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّؐ قَالَ: إِنَّ فِي الْجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ، لاَ يَقْطَعُهَا، وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ (وَظِلٍّ مَّمْدُودٍ۞).
رواه البخاري باب قوله وظل ممدود، رقم:٤٨٨١
164. “சொர்க்கத்தில் மரம் ஒன்று உண்டு ஒருவர் வாகனத்தில் நூறு ஆண்டுகள் சென்றாலும் அம்மரத்தின் நிழலைக் கடக்க முடியாது’’ நீங்கள் விரும்பினால் “மேலும் (சொர்க்க வாசிகள்) நீண்ட நிழலில் (இருப்பர்)’’ என்ற வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٦٥– عَنْ جَابِرٍؓ قَالَ : سَمِعْتُ النَّبِيَّؐ يَقُولُ : إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَأْكُلُونَ فِيهَا وَيَشْرَبُونَ، وَلاَ يَتْفِلُونَ وَلاَ يَبُولُونَ وَلاَ يَتَغَوَّطُونَ وَلاَ يَمْتَخِطُونَ، قَالُوا: فَمَا بَالُ الطَّعَامِ؟ قَالَ: جُشَاءٌ وَرَشْحٌ كَرَشْحِ الْمِسْكِ، يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالتَّحْمِيدَ كَمَا يُلْهَمُونَ النَّفَسَ.
رواه مسلم باب في صفات الجنة واهلها، رقم:٧١٥٢
165. “சுவனத்தில் சுவனவாசிகள் உண்பார்கள், பருகுவார்கள், (ஆனால் அவர்களுக்கு எச்சில் வராது, மலம் ஜலம் வெளியாகாது மூக்கை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியபோது, “உணவு என்னவாகும்?’’ உணவு (எவ்வாறு ஜீரணமாகும்) என்று ஸஹாபாக்கள் கேட்டனர். “ஏப்பம் மற்றும் கஸ்தூரியைப் போன்ற நறுமணமுள்ள வியர்வை வெளியாவதன் மூலம் உணவு ஜீரணித்துவிடும். சுவாசிப்பதால் இதயம் இயங்கிக் கொண்டிருப்பது போல் சொர்க்க வாசிகளின் நாவு அல்லாஹ் வின் தஸ்பீஹாலும், புகழாலும் இயங்கிக் கொண்டிருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٦٦– عَنْ أَبِي سَعِيدِ نِ الخُدْرِيِّؓ وَأَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلاَ تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلاَ تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلاَ تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلاَ تَبْأَسُوا أَبَدًا، فَذلِكَ قَوْلُهُ :
(وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ۞).
رواه مسلم باب في دوام نعيم اهل الجنة …..، رقم:٧١٥٧
166. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதை ஹஜ்ரத் அபூஸஈதுல் குத்ரி ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள், “ஒரு அறிவிப்பாளர் சுவனவாசிகளே! நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள், இனிமேல் ஒருபோதும் நோய்வாய்ப்படமாட்டீர்கள், மரணமே வராத நிரந்தர வாழ்வு உங்களுக்காக தயாராக உள்ளது, முதுமையே வராத இளமை உங்களுக்கு காத்திருக்கிறது, என்றேன்றும் மகிழ்ச்சியே எக்காலமும் கவலையே இருக்காது’’ என்று அறிவிப்புச் செய்கிறார். இந்த ஹதீஸ் பின்வரும் குர்ஆன் வசனத்தின் விளக்கமாகும் (وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ)
பொருள்: அவர்களை அழைத்து இச்சுவனம் உங்களின் செயல்களுக்கு பகரமாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படும்.
(முஸ்லிம்)
١٦٧– عَنْ صُهَيْبٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، قَالَ: يَقُولُ اللّٰهُ تَعَالَي: تُرِيدُونَ شَيْئاً أَزِيدُكُمْ ؟ فَيَقُولُونَ : اَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا؟ أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنَ النَّارِ؟ قَالَ: فَيَكْشِفُ الْحِجَابَ، فَمَا أُعْطُوا شَيْئاً أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَي رَبِّهِمْ .
رواه مسلم باب اثبات رؤية المؤمنين في الاخرة…، رقم:٤٤٩
167. “சொர்க்கவாசிகள் சொர்க்கம் சென்றதும், மேலதிகமாக ஒன்றை உங்களுக்கு நான் தர நீங்கள் விரும்புகிறீர்களா?’’ (இதுவரை உங்களுக்கு வழங்கப் பட்டதைவிட மேலதிகமாகச் சிறந்த ஒன்றை வழங்கட்டுமா? என்று அல்லாஹ் சொர்க்கவாசிகளிடம் கேட்பான். “எங்களுடைய முகங்களை நீ ஒளிமயமாக்கியுள்ளாய் நரகிலிருந்து விடுதலை செய்து சுவனத்தில் நுழையச் செய்துள்ளாய்’’ (நாம் விரும்புவதற்கு வேறு என்ன பொருள் உள்ளது?) என்று சுவனவாசிகள் அல்லாஹ்விடம் கேட்பார்கள். அடியார்களின் இந்த பதிலுக்குப் பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான் (அதன் பிறகு அல்லாஹ் வின் தரிசனம் அவர்களுக்கு கிடைக்கும்) இதுவரை தமக்குக் கிடைத்த அருட்கொடை களில் மிக விருப்பமானதும், உயர்வானதுமான பாக்கியம் தமது இரட்சகனைத் தரிசிப்பதுதான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٦٨– عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : لاَ تَغْبِطُوا فَاجِرًا بِنِعْمَةٍ، إِنَّكَ لاَ تَدْرِي مَا هُوَ لاَقٍ بَعْدَ مَوْتِهِ، إِنَّ لَهُ عِنْدَ اللّٰهِ قَاتِلاً لاَ يَمُوتُ.
رواه الطبراني في الاوسط ورجاله ثقات مجمع الزوائد:١ ٠/ ٦٤٣. اَلْقَاتِلُ: اَلنَّارُ. قاله البغوي في شرح السنة:١٤/٢٩٥
168. “பாவிக்குக் கிடைக்கும் பாக்கியங்களைக் கண்டு அவன் மீது பொறாமை கொள்ளாதீர், (ஏனேனில்) அவனது மரணத்திற்குப் பிறகு அவனுக்கு என்ன கிடைக்கும் என்று உமக்குத் தெரியாது. அல்லாஹ் விடம் அவனுக்கென்று என்றும் மரணிக்காத கொலையாளி உள்ளான்’’ (கொலையாளி என்பது அவன் தங்க இருக்கும் நரக நெருப்பு) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٦٩– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءاً مِنْ نَارِ جَهَنَّمَ، قِيلَ: يَارَسُولَ اللّٰهِؐ إِنْ كَانَتْ لَكَافِيَةً، قَالَ: فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَّسِتِّينَ جُزْءاً كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا.
رواه البخاري باب صفة النار وانها مخلوقة، رقم:٣٢٦٥
169. “உங்களுடைய இவ்வுலக நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பகுதிகளில் ஒரு பகுதி’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, “யா ரஸூலல்லாஹ்! இதுவே (உலக நெருப்பே) போதுமானதே’’ என்று சொல்லப்பட்டது, “நரக நெருப்பு, உலக நெருப்பைவிட அறுபத்து ஒன்பது பங்கு அதிகமாக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பங்கின் வெப்பமும் உலக நெருப்பின் வெப்பத்துக்குச் சமமானது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٧٠– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : يُؤْتَي بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ، فَيُصْبَغُ فِي النَّارِ صَبْغَةً، ثُمَّ يُقَالُ: يَا ابْنَ آدَمَ! هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ؟ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ؟ فَيَقُولُ: لاَ، وَاللّٰهِ يَارَبِّ! وَيُؤْتَي بِأَشَدِّ النَّاسِ بُؤْساً فِي الدُّنْيَا مِنْ أَهْلِ الْجَنَّةِ،فَيُصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ، فَيُقَالُ لَهُ: يَا ابْنَ آدَمَ! هَلْ رَأَيْتُ بُؤْساً قَطُّ؟ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ؟ فَيَقُولُ:لاَ، وَاللّٰهِ يَارَبِّ! مَا مَرَّبِي بُؤْسٌ قَطُّ وَلاَ رَأَيْتُ شِدَّةً قَطُّ.
رواه مسلم باب صبغ انعم اهل الدنيا في النار، رقم:٧ ٠٨٨
170. “தன்னுடைய உலக வாழ்வைச் சுகபோகமாகக் கழித்த நரகவாசிகளில் ஒரு மனிதனை கியாமத் நாளில் கொண்டு வரப்பட்டு, அவனை நரகத்தீயில் ஒரு முறை முக்கியெடுத்து, “ஆதமுடைய மகனே! எப்பொழுதேனும் உன் வாழ்நாளில் மகிழ்ச்சியை பார்த்தாயா? எப்போதாவது உன் வாழ்நாளைச் சுகபோகமாகக் கழித்தாயா?’’ என்று அவனிடம் வினவப்படும். “எனது இரட்சகா! “இல்லவே இல்லை’, என்று அல்லாஹ் வின் மீது சத்தியமிட்டுக் கூறுவான். இதேபோல், தன் உலகவாழ்வைப் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் கழித்த சுவர்க்க வாசிகளில் ஒரு மனிதரை கொண்டுவரப்பட்டு, அவரைச் சொர்க்கத்தில் ஒருமுறை முக்கியெடுத்து அவரிடம், “ஆதமுடைய மகனே! எப்பொழுதாவது உன் வாழ்நாளில் சிரமத்தை அனுபவித்தாயா? துன்பத்தை பார்த்தாயா?’’ என்று கேட்கப்படும். அல்லாஹ் வின் மீது சத்தியமிட்டு, “இல்லவே இல்லை, என் இரட்சகா! சிரமம் எப்போதும் என்னை வந்தடைந்ததில்லை’ துன்பத்தை நான் அனுபவித்ததுமில்லை’’ என்று சொல்வார் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٧١– عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍؓ أَنَّ نَبِيَّ اللّٰهِ قَالَ: مِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَي كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَي رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَي حُجْزَتِهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَي تَرْقُوَتِهِ.
رواه مسلم باب جهنم رقم:٧١٧ ٠
171. “நரகவாசிகளில் சிலரை அவர்களது கரண்டைக் கால் வரை நெருப்பு பிடித்துக்கொள்ளும், இன்னும் சிலரை, முழங்கால் வரை பிடித்துக் கொள்ளும், மேலும் சிலரை, இடுப்புவரை பிடித்துக் கொள்ளும் இன்னும் சிலரை நெஞ்சு எலும்புவரை பிடித்துக் கொள்ளும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸமுரதுப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிர்கள்.
(முஸ்லிம்)
١٧٢– عَنِ ابْنِ عَبَّاسٍؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَرَأَ هذِهِ اْلآيَةَ (اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقتهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ۞).(البقرة:١٣٢), قَالَ رَسُولُ اللّٰهِؐ : لَوْ أَنَّ قَطْرَةً مِنَ الزَّقُّومِ قُطِرَتْ فِي دَارِ الدُّنْيَا لاَفْسَدَتْ عَلَي أَهْلِ الدُّنْيَامَعَايِشَهُمْ، فَكَيْفَ بِمَنْ يَكُونُ طَعَامُهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في صفة شراب اهل النار، رقم:٢٥٨٥
172. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் تَّقُوا اللّهَ حَقَّ تُقتهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ)
“அல்லாஹ் வை அஞ்சத் தகுந்த முறைப்படி அஞ்சுங்கள், (முழுமையான) முஸ்லிம்களாகவே மரணியுங்கள்’’ என்னும் ஆயத்தை ஓதினார்கள். பிறகு, ஸக்கூம் என்னும் மரத்திலிருந்து ஒரு துளி உலகில் சிந்திவிட்டாலும் உலகில் உள்ள எல்லாப் பொருட்களையும் நாசப் படுத்திவிடும் என்றால், அம்மரத்தையே உணவாக்கிக் கொள்ளும் நரக வாசிகளின் நிலை என்னவாகும்?’’ என்று (அல்லாஹ் வுடைய வேதனையைப் பற்றி) நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- ஸக்கூம் என்பது நரகில் உற்பத்தியாகும் ஒரு வகை கள்ளிச் செடிக்குச் சொல்லப்படும்.
١٧٣– عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: لَمَّا خَلَقَ اللّٰهُ الْجَنَّةَ قَالَ لِجِبْرِيلَ: اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لاَ يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلاَّ دَخَلَهَا، ثُمَّ حَفَّهَا بِالْمَكَارِهِ ثُمَّ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لاَ يَدْخُلَهَا أَحَدٌ قَالَ: فَلَمَّا خَلَقَ اللّٰهُ تَعَالَي النَّارَ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لاَ يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلَهَا، فَحَفَّهَا بِالشَّهَوَاتِ ثُمَّ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ وَجَلاَلِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لاَ يَبْقَي أَحَدٌ إِلاَّ دَخَلَهَا.
رواه ابوداؤد باب في خلق الجنة والنار:٤٧٤٤
173. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ் சொர்க்கத்தைப் படைத்த பின் “சொர்க்கத்தை பார்த்துவாருங்கள்!’’ என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் சொன்னான். அவர்கள் சென்று பார்த்துவிட்டுத் வந்து, “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! இச்சொர்க்கத்தைப் பற்றி யார் கேள்விப்பட்டாலும் இதில் நுழைந்துவிடுவார்’ என்றார்கள், அதை அடைந்து கொள்ள முழு முயற்சி செய்வார், பிறகு அல்லாஹ் அதைச் சிரமங்களைக் கொண்டு மூடினான், ஏற்று நடப்பது மனதிற்கு சிரமத்தைத் தரக் கூடிய ஷரீஅத் சட்டங்கள் என்னும் கட்டுப்பாட்டைக் கொண்டு மூடிவிட்டான். பிறகு, “ஜிப்ரஈலே! இப்பொழுது சென்று பார்ப்பீராக!’ என்று சொன்னான், அவர்கள் சென்று பார்த்தார்கள், பார்த்தபின், “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! அதில் யாரும் நுழையமாட்டார்களோ என பயப்படுகிறேன்’ என்றார்கள். அதன் பிறகு, அல்லாஹ் நரகத்தைப் படைத்தபொழுது ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், “ஜிப்ரயிலே! நரகத்தைப் பார்த்துவாரும்!’’ என்று சொன்னான், பார்த்தபின் அவர்கள், அல்லாஹ் விடம், “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணை! இதைப் பற்றி எவர் கேள்விப்படுவாரோ அவர் அதில் நுழைவதை விட்டும் தன்னைத் தற்காத்துக் கொள்வார், அதைவிட்டும் தப்பிக்க முயற்சி மேற்கொள்வார்’’ என்று சொன்னார்கள். அதன் பிறகு, அல்லாஹ் நரகத்தை மன இச்சைகளால் சூழச் செய்து, “ஜிப்ரஈலே, இப்போது சென்று பாருங்கள்!’’ என்று சொன்னான். அவர்கள் போய்ப் பார்த்தார்கள், திரும்ப வந்து, “எனது இரட்சகா! உனது கண்ணியத்தின் மீது ஆணை! உனது உயர்ந்த அந்தஸ்த்தின் மீது ஆணையாக! “இதில் யாரும் நுழையாமல் தப்பமுடியாது என்று அஞ்சுகிறேன்’ என்றுரைத்தார்கள்.
(அபூதாவூத்)

 


அல்லாஹ்வுக்கு அடிபணிவதே வெற்றிக்கான ஒரே வழி என நம்புதல்

அல்லாஹ் விடமிருந்து நேரடியாகப் பலன் பெற அல்லாஹ் வின் கட்டளைகளை முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறைப்படி நிறைவேற்றுவதில் இம்மை, மறுமையின் அனைத்து வெற்றிகளும் உண்டென்பதை உறுதியாக நம்புவது.

குர்ஆன் வசனங்கள்:-

قَالَ اللّٰهُ تَعَالي: (وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلاَ مُؤْمِنَةٍ إِذَا قَضَي اللّٰهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ط وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَللاً مُّبِيناً۞).

الاحزاب:٣٦

1. இன்னும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால், நம்பிக்கையாளனான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்வதற்கு உரிமையில்லை; எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் திட்டமாக பகிரங்கமான வழிகேடாக வழிகெட்டு விட்டார்.

(அல்அஹ்ஸாப்:36)

وَقَالَ تَعَالي: (وَمَا أَرْسَلْنَا مِنْ رَّسُولٍ إِلاَّ لِيُطَاعَ بِإِذْنِ اللّٰهِ۞).

النساء:٦٤

2. இன்னும், தூதர்களில் எவரையும் – அல்லாஹ்வின் கட்டளைக் கொப்ப (மக்களால்) அவர் பின்பற்றப்படுவதற்காகவே தவிர – நாம் அனுப்பி வைக்கவில்லை.

(அன்னிஸா:64)

وَقَالَ تَعَالي: (وَمَا آتكُمُ الرَّسُولُ فَخُذُوهُ ج وَمَا نَهكُمْ عَنْهُ فَانْتَهُوا۞).

الحشر:٧

3. (மேலும் நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எதனை விட்டும் உங்களை அவர் தடுத்தாரோ (அதனை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்.

(அல்ஹஷ்ர்:7)

وَقَالَ تَعَالي: (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللّٰهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ اْلآخِرَ وَذَكَرَاللّٰهَ كَثِيرًا۞).

الاحزاب:٢١

4. (உங்களில்) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினை கூருபவராக இருப்பவருக்கு – அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்அஹ்ஸாப்:21)

وَقَالَ تَعَالي: (فَلْيَحْذَرِالَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ اَلِيمٌ۞).

النور: ٦٣

5. எனவே, எவர்கள் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் (உலகில்) தங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை, அல்லது (மறுமையில்) நோவினை தரும் வேதனை தங்களுக்கு ஏற்படுவதை பயந்து கொள்ளட்டும்.

(அந்நூர்:63)

وَقَالَ تَعَالي: (مَنْ عَمِلَ صَالِحاً مِّنْ ذَكَرٍ أَوْ أُنْثَي وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيوةً طَيِّبَةً ج وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ۞).

النحل:٩٧

6. ஆணோ அல்லது பெண்ணோ – அவர் (ஓரிறை) நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் எவரொருவர் நற்செயல் செய்தாலும், அவரை (உலகில்) தூய வாழ்வாகத் திண்ணமாக நாம் வாழச் செய்வோம்; (மறுமையில்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியை, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் அழகியதாகத் திண்ணமாக நாம் கூலி வழங்குவோம்.

(அந்நஹ்ல்:97)

وَقَالَ تَعَالي: (وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزاً عَظِيماً۞).

الاحزاب:٧١

7. எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதுருக்கும் கீழ்படிகின்றாரோ, திட்டமாக அவர் மகத்தான வெற்றியாக வெற்றியடைந்துவிட்டார்.

(அல்அஹ்ஸாப்:71)

وَقَالَ تَعَالي: (قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللّٰهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ط وَاللّٰهُ غَفُورٌ رَّحِيمٌ۞).

آل عمران:٣١

8. (நபியே,) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அப்பொழுது) அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான் – அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்’’.

(ஆலுஇம்ரான்:31)

وَقَالَ تَعَالي: (إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصّلِحتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمنُ وُدّاً۞).

مريم:٩٦

9. நிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு அளவற்ற அருளாளன் (எல்லாப் பொருட்களின்) நேசத்தை(யும்) உண்டாக்குவான்.

(மர்யம்:96)

وَقَالَ تَعَالي: (وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّلِحتِ وَهُوَ مُؤْمِنٌ فَلاَ يَخفُ ظُلْماً وَلاَ هَضْماً۞).

طه:١١٢

10. எவரொருவர் (ஓரிறை) நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில், நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் (தமக்கு) அநியாயம் செய்யப்படும் என்றோ (தமக்குரிய நற்கூலி) குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்.

(தாஹா:112)

وَقَالَ تَعَالي: (وَمَنْ يَّتَّقِ اللّٰهَ يَجْعَلْ لَّهُ مَخْرَجاً ۞ وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ۞).

الطلاق: ٣،٢

11. மேலும், எவர் அல்லாஹ்வை அஞ்சுகிறாரோ, அவருக்கு (ஒவ்வொரு சிரமத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஆக்குவான். இன்னும் அவருக்கு அவர் நினையாத புறத்திலிருந்து உணவும் அளித்திடுவான்.

(அத்தலாக்:2,3)

وَقَالَ تَعَالي: (اَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ مَكَّنّهُمْ فِي اْلاَرْضِ مَالَمْ نُمَكِّنْ لَكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا ص وَجَعَلْنَا اْلاَنْهارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِنْ م بَعْدِهِمْ قَرْناً آخَـرِينَ۞).

الانعام: ٦

12. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்துள்ளோம் என்பதை இவர்கள் பார்க்கவில்லையா? உங்களுக்கு நாம் வசதி செய்து தராதவற்றை (யெல்லாம்) இப்பூமியில் அவர்களுக்கு நாம் வசதி செய்து கொடுத்தோம்; இன்னும் அவர்களின் மீது (வானிலிருந்து) தொடராக மழையை நாம் பொழியச் செய்தோம்; இன்னும் அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடும்படி நாம் ஆக்கினோம்; பின்னர் அவர்களுடைய பாவங்களின் காரணத்தினால் அவர்களை நாம் அழித்து, அவர்களுக்குப் பிறகு மற்றோரு தலைமுறையினரை நாம் உண்டாக்கினோம்.

(அல்அன்ஆம்:6)

وَقَالَ تَعَالي: (اَلْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيوةِ الدُّنْيَا ج وَالْبقِيتُ الصّلِحتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَاباً وَّخَيْرٌ أَمَلاً۞).

الكهف: ٤٦

13. செல்வமும் ஆண் மக்களும் இவ்வுலக வாழ்வின் அலங்காரமாகும்; நிலைத்திருக்கும் படியான நற்செயல்கள் தாம் உம்முடைய ரப்பிடத்தில் (மறுமையின் நற்பேறுக்கு) நன்மையால் சிறந்தவையும் ஆதரவு வைப்பதால் சிறந்தவையுமாகும்.

(அல்கஹ்ஃப்:46)

وَقَالَ تَعَالي: (مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللّٰهِ بَاقٍ ط وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ۞).

النحل:٩٦

14. உங்களிடம் உள்ளவை (அனைத்தும்) அழிந்துவிடும்; அல்லாஹ்விடம் உள்ளது நிலைத்திருக்கும்; பொறுமையைக் கடைப்பிடித்தவர்களுக்கு – அவர்களுடைய கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் அழகியதாகத் திண்ணமாக நாம் கூலி வழங்குவோம்.

(அந்நஹ்ல்:96)

وَقَالَ تَعَالي: (وَمَا أُوتِيتُمْ مِّنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيوةِ الدُّنْيَا وَزِينَتُهَاج وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّأَبْقَي ط أَفَلاَ تَعْقِلُونَ۞).

القصص:٦٠

15. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எந்தப் பொருளும் உலக வாழ்வின் சுகமும் அதனுடைய அலங்காரமுமேயாகும்; (ஆனால்) அல்லாஹ்விடத்தில் உள்ளதோ மிகச் சிறந்ததும் நிலையானதுமாகும்; எனவே, நீங்கள் சிந்தித்துப் பார்க்கமாட்டீர்களா?

(அல்கஸஸ்:60)

ஹதீஸ்கள்:-

١٧٤- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: بَادِرُوا بِاْلاَعْمَالِ سَبْعاً، هَلْ تَنْتَظِرُونَ إِلاَّ فَقْرًا مُنْسِياً، أَوْ غِنًي مُطْغِياً، أَوْ مَرَضاً مُفْسِدًا، أَوْ هَرَماً مُفْنِدًا، أَوْ مَوْتاً مُجْهِزاً، أَوِ الدَّجَّالَ فَشَرُّ غَائِبٍ يُّنْتَظَرُ، أَوِ السَّاعَةُ فَالسَّاعَةُ أَدْهَي وَأَمَرُّ.

رواه الترمذي وقال: هذاحديث حسن غريب باب ماجاء في المبادرة بالعمل رقم:٢٣ ٠٦. الجامع الصحيح وهو سنن الترمذي.

174. “ஏழு காரியங்கள் நிகழுமுன் அமல்களை விரைவாகச் செய்து கொள்ளுங்கள். அனைத்தையும் மறக்கடித்துவிடும் வறுமையை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது மமதையில் கொண்டு செல்லும் சீமான் தனத்தை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது செயலிழக்கச் செய்யும் வியாதியை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது அறிவை இழக்கவைக்கும் முதுமையை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது திடீரென்று வந்துவிடும் மரணத்தை எதிர்பார்க்கிறீர்களா? (சில சமயங்கüல் தௌபா செய்வதற்கும் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை) மறைக்கப்பட்ட தீமைகளில் மிகக் கெட்ட தஜ்ஜாலின் வருகையை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது கியாமத் நாளின் வருகையை எதிர்பார்க்கிறீர்களா? அதுவோ, கடுமையானதும் மிகக் கசப்பானதுமாகும்’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

தெளிவுரை:- இந்த ஏழு காரியங்களில் ஏதேனும் ஒன்று நிகழ்வதற்கு முன், நற்செயல்கள் மூலம் மறுமைக்குரிய தயாரிப்பை மனிதன் மேற்கொள்ளவேண்டும். இக்காரியங்களில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து, நற்செயல்கள் செய்ய முடியாமல் ஆகிவிடலாம்.

١٧٥- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : يَتْبَعُ الْمَيِّتَ ثَلاَثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَي وَاحِدٌ، يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ، وَيَبْقَي عَمَلُهُ.

رواه مسلم كتاب الزهد رقم:٧٤٢٤

175. “இறந்தவரை முன்று காரியங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன, அவற்றில் இரண்டு திரும்பிவிடுவம், ஒன்று மட்டும் மைய்யித்துடன் தங்கிவிடும், அவனுடைய உறவினர், அவனுடைய செல்வம், அவனுடைய செயல்கள். அவனுடைய உறவினரும், செல்வமும் திரும்பிவிடுவர், பிறகு அவனுடைய செயல் மட்டும் அவனுடனே தங்கிவிடுகிறது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

١٧٦- عَنْ عَمْرٍوؓ أَنَّ النَّبِيَّؐ خَطَبَ يَوْماً فَقَالَ فِي خُطْبَتِهِ: أَلاَ إِنَّ الدُّنْيَا عَرَضٌ حَاضِرٌ يَأْكُلُ مِنْهَا الْبَرُّ وَالْفَاجِرُ، أَلاَ وَإِنَّ اْلآخِرَةَ أَجَلٌ صَادِقٌ يَقْضِي فِيهَا مَلِكٌ قَادِرٌ، أَلاَ وَإِنَّ الْخَيْرَ كُلَّهُ بِحَذَافِيرِهِ فِي الْجَنَّةِ، أَلاَ وَإِنَّ الشَّرَّ كُلَّهُ بِحَذَافِيرِهِ فِي النَّارِ، أَلاَ فَاعْمَلُوا وَأَنْتُمْ مِنَ اللّٰهِ عَلَي حَذَرٍ، وَاعْلَمُوا أَنَّكُمْ مَّعْرُوضُونَ عَلَي أَعْمَالِكُمْ، فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهُ، وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرَّا يَّرَهُ.

مسندالشافعي:١ /١٤٨

176. ஹஜ்ரத் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது பிரசங்கத்தில், “கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்’’, உலகம் தற்காலிகமான வியாபாரப் பொருளாகும். (அதற்கு எவ்வித விலையும், மதிப்பும் கிடையாது) ஏனேனில், அதில் நல்லோர், தீயோர் அனைவருக்கும் பங்குண்டு, அனைவரும் அதிலிருந்து உண்கின்றனர். நிச்சயமாக மறுமையானது, குறித்த நேரத்தில் வர இருக்கின்ற அந்தரங்கமான உண்மையாகும். அதில் சக்தி மிக்க அரசன் தீர்ப்பு வழங்குவான், கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்! எல்லா நலவுகளும், அதன் அனைத்து வகைகளும் சொர்க்கத்தில் உள்ளன. சகலவித கெடுதிகளும், அதன் எல்லா வகைகளும் நரகத்தில் உள்ளன. நன்றாக அறிந்து கொள்ளுங்கள்! எதைச் செய்தாலும், அல்லாஹ்வை பயந்தவர்களாகச் செய்யுங்கள், நீங்கள் தத்தமது செயல்களுடன் அல்லாஹ் வின் சமூகத்தில் கொண்டுவரப்படுவீர்கள். அணுவளவு நன்மையைச் செய்தவரும் அதைக் கண்டு கொள்வார், அணுவளவு தீமை செய்தவரும் அதைக் கண்டு கொள்வார்’’ என்று கூறினார்கள்.

(முஸ்னத் ஷாஃபிஇய்)

١٧٧- عَنْ أَبِي سَعِيدِنِ الخُدْرِيِّؓ أَنَّهُ سَمِعَ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلاَمُهُ، يُكَفِّرُ اللّٰهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا، وَكَانَ بَعْدَ ذلِكَ الْقِصَاصُ، اَلْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَي سَبْعِ مِائَةِ ضِعْفٍ، وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلاَّ أَنْ يَتَجَاوَزَ اللّٰهُ عَنْهَا.

رواه البخاري باب حسن اسلام المرء رقم:٤١

177. நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக, ஹஜ்ரத் அபூஸஈதுல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுவதாவது, “அடியான் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாத்தின் உயர்வான தன்மைகளை தன் வாழ்க்கையில் பிரதிபலிக்கச் செய்தால், இஸ்லாத்தின் பரக்கத்தால் அவன் வாழ்வில் இதற்கு முன் அவன் செய்த தீமைகளை, அல்லாஹ் மன்னித்துவிடுவான். அதன் பிறகு அவன் ஒரு நன்மையைச் செய்தால், அதற்குப் பகரமாக, பத்திலிருந்து எழுநூறு மடங்கு வரை நன்மை வழங்கப்படுகிறது. ஒரு தீமையைச் செய்தால், அதற்குப் பதிலாக ஒரு பாவம் மட்டும் எழுதப்படுகிறது. ஆயினும் அல்லாஹ் அதையும் மன்னித்து விட்டால் அது வேறு விஷயம்’.

(புகாரி)

தெளிவுரை:- “வாழ்க்கையில் இஸ்லாம் அழகு பெறுவது’ என்பதின் பொருள் ஈமானின் வெளிச்சத்தால் உள்ளம் ஒளிமயமாவதும், அல்லாஹ் வின் வழிபாட்டால் உடல் அழகு பெறுவதும் ஆகும்.

١٧٨- عَنْ عُمَرَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اْلإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَّ إِلهَ إِلاَّ اللّٰهُ وَأَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللّٰهِ ، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَصُومَ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلاً.

(وهو جزء من الحديث) رواه مسلم باب بيان الايمان والاسلام… رقم:٩٣

178. “அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை, (வணங்கப்படுவதற்கும், அடிபணியப்படுவதற்கும் உரிய தகுதி யாருக்கும் இல்லை) முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று (மனதாலும், நாவாலும்) சாட்சி கூறுவது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, சக்தி பெற்றிருந்தால் ஹஜ்ஜிச் செய்வது இவைகளே இஸ்லாத்தின் தூண்களாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

١٧٩- عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اْلإِسْلاَمُ أَنْ تَعْبُدَ اللّٰهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئاً، وَتُقِيمَ الصَّلوةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَصُومَ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ، وَاْلاَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ، وَتَسْلِيمُكَ عَلَي أَهْلِكَ، فَمَنِ انْتَقَصَ شَيْئاً مِنْهُنَّ فَهُوَ سَهْمٌ مِنَ اْلإِسْلاَمِ يَدَعُهُ، وَمَنْ تَرَكَهُنَّ كُلَّهُنَّ فَقَدْ وَلَّي اْلإِسْلاَمَ ظَهْرَهُ.

رواه الحاكم في المستدرك:١/٢١. وقال: هذاالحديث مثل الاول في الاستقامة.

179. “இஸ்லாம் என்பது நீங்கள் அல்லாஹ் வணங்குவது, அவனுக்கு யாரையும் இணையாக்காதிருப்பது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஸகாத் அளிப்பது, ரமழானில் நோன்பு வைப்பது, ஹஜ்ஜிச் செய்வது, நன்மையை ஏவுவது, தீமையைத் தடுப்பது, தமது குடும்பத்தினருக்கு ஸலாம் சொல்வது முதலியவையாகும். இவற்றில் ஏதேனுமொன்றில் எவர் குறை செய்வாரோ, அவர் இஸ்லாத்தின் ஒரு பகுதியை விட்டுவிட்டார். எவர் அனைத்தையும் முழுமையாக விட்டுவிட்டாரோ, அவர் இஸ்லாத்தை விட்டே முகந்திருப்பிக் கொண்டார்’’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்தக்ரக் ஹாகிம்)

١٨٠- عَنْ حُذَيْفَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اْلإِسْلاَمُ ثَمَانِيَةُ أَسْهُمٍ: اْلإِسْلاَمُ سَهْمٌ، وَالصَّلوةُ سَهْمٌ، وَالزَّكَاةُ سَهْمٌ، وَحَجُّ الْبَيْتِ سَهْمٌ، وَالصِّيَامُ سَهْمٌ، وَاْلاَمْرُ بِالْمَعْرُوفِ سَهْمٌ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ سَهْمٌ، وَالْجِهَادُ فِي سَبِيلِ اللّٰهِ سَهْمٌ، وَقَدْ خَابَ مَنْ لاَ سَهْمَ لَهُ.

رواه البزار وفيه يزيدبن عطاء وثقه احمد وغيره وضعفه جماعة وبقية رجاله ثقات مجمع الزوائد:١/١٩١

180. “இஸ்லாத்தில் மிக முக்கியப் பங்குகள் எட்டு உள்ளன: ஈமான் கொள்வது ஒரு பங்கு, தொழுவது ஒரு பங்கு, ஸகாத் கொடுப்பது ஒரு பங்கு, ஹஜ்ஜி செய்வது ஒரு பங்கு, ரமளான் மாதம் நோன்பு நோற்பது ஒரு பங்கு, நன்மையை ஏவுவது ஒரு பங்கு, தீமையை தடுப்பது ஒரு பங்கு, அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவது ஒரு பங்கு, இஸ்லாத்தின் இந்த முக்கியப் பங்குகளில் எந்தப் பங்கும் இல்லாதவர் நிச்சயமாகத் தோல்வியடைந்துவிட்டார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)

١٨١- عَنِ ابْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اْلإِسْلاَمُ أَنْ تُسْلِمَ وَجْهَكَ للّٰهِ، وَتَشْهَدَ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللّٰهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَتُقِيمَ الصَّلاَةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ.

(الحديث) رواه احمد:١/٣١٩

181. இஸ்லாம் என்பது (கொள்கைகள், செயல்களில்) நீங்கள் தம்மைத் தாமே அல்லாஹ் விடம் ஒப்படைத்து விடுவது, அல்லாஹ் வைத் தவிர வேறு எந்த இறைவனும் (அடிபணியப்படுவதற்கும், வணங்கப் படுவதற்கும் தகுதி வாய்ந்தவர்) இல்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார் என்று (மனதாலும், நாவாலும்) சாட்சி சொல்வது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஸகாத் கொடுப்பது ஆகியன வாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

١٨٢- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ أَعْرَابِيّاً أَتَي النَّبِيَّؐ فَقَالَ: دُلَّنِي عَلَي عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: تَعْبُدُ اللّٰهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئاً، وَتُقِيمُ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ، قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَي هذَا، فَلَمَّا وَلَّي قَالَ النَّبِيُّؐ : مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَي رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَي هذَا.

رواه البخاري باب وجوب الزكاة رقم:١٣٩٧

182. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கிராமவாசி யொருவர், அருமை நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து, “அல்லாஹ்வின் திருத்தூதரே, என்னைச் சுவனத்தில் நுழையச் செய்யும் செயலைக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார். “அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு யாரையும் இணையாக்காதிருப்பீராக! பர்ளுத் தொழுகைகளை நிலை நிறுத்துவீராக! பர்ளான ஸகாத்தை நிறைவேற்றுவீராக! ரமளான் மாதம் நோன்பு வைப்பீராக!’ என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி, “என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை! (தாங்கள் கூறிய அமல்களை சொன்னபடி செய்து வருவேன்) இவற்றில் எதையும் அதிகரிக்கமாட்டேன்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். “யாரேனும் சுவனவாசியைக் காணவிரும்பினால் இவரைக் கண்டு கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி)

١٨٣- عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللّٰهِؓ قَالَ جَاءَ رَجُلٌ إِلَي رَسُولِ اللّٰهِ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلاَ نَفْقَهُ مَا يَقُولُ حَتَّي دَنَا فَإِذَا هُوَ يَسْاَلُ عَنِ اْلإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللّٰهِؐ : خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ، قَالَ رَسُولُ اللّٰهِؐ : وَصِيَامُ رَمَضَانَ، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ، قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللّٰهِؐ الزَّكَاةَ قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ، قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللّٰهِ لاَ أَزِيدُ عَلَي هذَا وَلاَ أَنْقُصُ، قَالَ رَسُولُ اللّٰهِؐ : أَفْلَحَ إِنْ صَدَقَ.

رواه البخاري باب الزكاة من الاسلام رقم:٤٦

183. ஹஜ்ரத் தல்ஹதிப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நஜ்து பகுதியைச் சார்ந்த ஒருவர், தலைவிரிகோலமாக நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். (தூரமாக இருந்ததால்) நாங்கள் அவரது பேச்சின் மெல்லிய ஓசையைத் தான் கேட்க முடிந்தது. அவரது பேச்சைத் தெளிவாக விளங்க முடியவில்லை. அதற்குள், அவர் அருமை நபி (ஸல்) அவர்களுக்கு சமீபத்தில் வந்து, “இஸ்லாம் (உடைய அமல்கள்)’ பற்றிக் கேட்டார் என்பதை விளங்கிக் கொண்டோம். நபி (ஸல்) அவர்கள் (அவருடைய கேள்விக்குப் பதில் அளிக்கையில்) “இரவு, பகலில் ஐந்து (பர்ளான) தொழுகைகள்’’ என்றார்கள். அவர், “இதுவல்லாமல் வேறு தொழுகைகள் ஏதேனும் என் மீது பர்ளா? (கடமையா?)’ என்று வினவியதற்கு, “இல்லை! ஆயினும், நஃபில் தொழ விரும்பினால், தொழுது கொள்ளலாம்’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் “ரமளான் உடைய நோன்பு கடமை’ என்று கூறினார்கள். “இதைத் தவிர வேறு நோன்பு என் மீது கடமையா?’’ என்று வினவ, “இல்லை! ஆயினும் நீர் விரும்பினால் நஃபில் நோன்பை நோற்றுக் கொள்ளலாம்’’ என்றார்கள். (இதன் பிறகு) நபி (ஸல்) அவர்கள், ஸகாத்தைப் பற்றி கூறினார்கள். “ஸகாத் அல்லாமல் வேறு ஏதேனும் தர்மம் என் மீது கடமையா?’ என்று வினவ, “இல்லை ஆயினும் நீர் விரும்பினால் நஃபிலான தர்மம் செய்து கொள்ளலாம்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் வின் மீது ஆணை! இந்த அமல்களைவிட எதையும் நான் அதிகப்படுத்தவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்’ என்று சொல்லியவராகத் திரும்பிச் சென்றுவிட்டார். “இவர் உண்மை சொல்லியிருந்தால், வெற்றியடைந்துவிட்டார்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி)

١٨٤- عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ: بَايِعُونِي عَلَي اَلاَّ تُشْرِكُوا بِاللّٰهِ شَيْئاً، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزِنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَي مِنْكُمْ فَأَجْرُهُ عَلَي اللّٰهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذلِكَ شَيْئاً فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَكَفَّارَةٌ لَّهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذلِكَ شَيْئاً ثُمَّ سَتَرَهُ اللّٰهُ فَهُوَ إِلَي اللّٰهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ، فَبَايَعْنَاهُ عَلَي ذلِكَ.

رواه البخاري كتاب الايمان رقم:١٨

184. “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி அமர்ந்திருந்த ஸஹாபிகளின் ஒரு கூட்டத்தாரிடம் “நீங்கள் அல்லாஹ் வுக்கு யாரையும் இணை வைக்கமாட்டீர்கள், திருடமாட்டீர்கள், விபச்சாரம் செய்யமாட்டீர்கள், (வறுமையைப் பயந்து) தமது பிள்ளைகளைக் கொல்லமாட்டீர்கள், வேண்டுமென்றே யார் மீதும் பழி சுமத்தமாட்டீர்கள், மார்க்கச் சட்டங்களை மீறமாட்டீர்கள் என்று என்னிடம் உடன்படிக்கை செய்யுங்கள். உங்களில் யார் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. இவைகளில் எவர் (இணைவைப்பதைத் தவிர) ஏதேனுமொரு பாவத்தில் சிக்குண்டாரோ, அதற்காக உலகிலேயே (கசையடி போன்றவைகளால்) அவருக்குத் தண்டனை வழங்கப்படும். அவரது குற்றத்திற்கு தண்டனை கிடைத்து விட்டால், அந்தத் தண்டனை அவரது பாவத்திற்குப் பரிகாரமாகிவிடும். இவைகளில் ஏதேனுமொரு பாவத்தை அல்லாஹ் மறைத்துவிட்டால், (உலகில் அதற்குரிய தண்டனை கிடைக்காவிட்டால்) அல்லாஹ்வின் விருப்பப்படி அல்லாஹ் அவனுடன் நடந்து கொள்வான். அவன் நாடினால், (தனது கிருபையினால்) மறுமையிலும் மன்னித்துவிடலாம், நாடினால், தண்டனை அளிக்கலாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்தக் காரியங்களின் மீது உடன்படிக்கை செய்தோம்’’ என்று ஹஜ்ரத் உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

١٨٥- عَنْ مُعَاذٍؓ قَالَ: أَوْصَانِي رَسُولُ اللّٰهِؐ بِعَشْرِ كَلِمَاتٍ قَالَ: لاَ تُشْرِكْ بِاللّٰهِ شَيْئاً وَإِنْ قُتِلْتَ وَحُرِّقْتَ، وَلاَ تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ، وَلاَ تَتْرُكَنَّ صَلاَةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَإِنَّ مَنْ تَرَكَ صَلاَةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللّٰهِ، وَلاَ تَشْرَبَنَّ خَمْرًا فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ، وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطُ اللّٰهِ ، وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الزَّحْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ، وَإِذَا أَصَابَ النَّاسَ مَوْتٌ وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ،وَأَنْفِقْ عَلَي عِيَالِكَ مِنْ طَوْلِكَ،وَلاَ تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَباً،وَأَخِفْهُمْ فِي اللّٰهِ.

رواه احمد:٥ /٢٣٨

185. ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள், பத்துக் காரியங்கள் செய்யும்படி எனக்கு உபதேசம் செய்தார்கள். நீர் வெட்டப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும், அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர். உமது பெற்றோருக்கு மாறு செய்யாதீர், மனைவியை விட்டுவிடவும், செல்வம் முழுவதைச் செலவு செய்துவிடவும் சொன்னாலும் சரியே!. பர்ளான தொழுகையை வேண்டுமென்றே விட்டுவிடாதீர், பர்ளான தொழுகையை மனம் விரும்பி விடுபவர் அல்லாஹ்வின் பொறுப்பிலிருந்து நீங்கிவிடுவார். மது அருந்தாதீர், இது பாவங்கள் அனைத்திற்கும் ஆணிவேராகும், அல்லாஹ்வுக்கு மாறு செய்யாதீர், மாறு செய்வதால் அல்லாஹ்வின் கோபம் இறங்குகிறது, போர் வீரர்கள் அனைவரும் இறந்து விட்டாலும் போர்க்களத்தை விட்டும் ஓடாதீர், மக்களுக்கு மத்தியில் (ப்ளேக், காலரா போன்ற) நோய் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் மரணம் எற்பட்டுக் கொண்டிருக்கும் சமயம் அவர்களோடு வசித்துக் கொண்டிருக்கும் நீர் அங்கிருந்து ஓடிவிடாதீர், தமது தகுதிக்குத் தக்கவாறு தமது குடும்பத்தாருக்குச் செலவு செய்வீராக, (ஒழுக்கங் கற்பிக்க) அவர்களை விட்டும் குச்சியை அகற்றிவிட வேண்டாம், அல்லாஹ்வின் காரியத்தில் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பீராக!

தெளிவுரை:- பெற்றோருக்கு வழிப்படுவது பற்றி இந்த ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பது, “பெற்றோருக்கு கீழ்ப்படிவது உயர்ந்த நிலையாகும். வெட்டப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும் அல்லாஹ்வுக்கு, இணைவைக்காதீர்’’ என்று இதே ஹதீஸில் சொல்லப்பட்டதும் அதுபோன்று உயர்ந்த நிலையாகும். உள்ளம் ஈமானின் மீது நிம்மதி பெற்றிருக்க நிர்பந்தமான நிலையில், நாவில் குஃப்ருடைய கலிமா சொல்ல மார்க்கத்தில் இடம்பாடு உள்ளது.

(மிர்காத்)

١٨٦- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : مَنْ آمَنَ بِاللّٰهِ وَبِرَسُولِهِ وَأَقَامَ الصَّلاَةَ وَصَامَ رَمَضَانَ كَانَ حَقّاً عَلَي اللّٰهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، جَاهَدَ فِي سَبِيلِ اللّٰهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا، فَقَالُوا: يَارَسُولَ اللّٰهِ أَفَلاَ نُبَشِّرُ النَّاسَ؟ قَالَ: إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللّٰهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللّٰهِ، مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَاْلاَرْضِ، فَإِذَا سَاَلْتُمُ اللّٰهَ فَاسْاَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَي الْجَنَّةِ وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمنِ وَمِنْهُ تَفَجَّرَ أَنْهَارُ الْجَنَّةِ.

رواه البخاري باب درجات المجاهدين في سبيل الله رقم:٢٧٩ ٠

186. “யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய ரஸூல் மீதும் ஈமான் கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பு நோற்று வருகிறாரோ, அவரை சுவனத்தில் நுழைய வைப்பது, அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது. அவர் அல்லாஹ்வின் பாதையில் பாடுபட்டாலும், அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சி செய்யாமல் தான் பிறந்த ஊரிலேயே தங்கிவிட்டாலும் சரியே!’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, “யா ரஸூலல்லாஹ்! மக்களுக்கு இந்நற்செய்தியை நாங்கள் அறிவித்துவிடவா?’’ என்று ஸஹாபாக்கள் (ரலி) வினவினர், “(இல்லை) சுவர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன, அதை அல்லாஹ் தனது வழியில் தியாகம் செய்பவர்களுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான், அவற்றில் ஒவ்வொரு படித்தரத்திற்கும் இடையில் உள்ள தூரம் வானம், பூமிக்கிடையில் உள்ள தூரமாகும். நீங்கள் அல்லாஹ்விடம் சுவனத்தை வேண்டினால், “ஜன்னத்துல் பிர்தௌஸை’’யே கேளுங்கள், அது சுவர்க்கத்தில் எல்லாவற்றைவிடவும் மிகச் சிறந்தது, முற்றிலும் உயர்ந்த தங்குமிடம். அதன் மீது ரஹ்மானின் “அர்ஷ்’’ உள்ளது, அதிலிருந்து தான் சுவன ஆறுகள் உற்பத்தியாகின்றன’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

١٨٧- عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : خَمْسٌ مَنْ جَاءَ بِهِنَّ مَعَ إِيمَانٍ دَخَلَ الْجَنَّةَ: مَنْ حَافَظَ عَلَي الصَّلَوَاتِ الْخَمْسِ عَلَي وُضُوئِهِنَّ وَرُكُوعِهِنَّ وَسُجُودِهِنَّ وَمَوَاقِيتِهِنَّ، وَصَامَ رَمَضَانَ، وَحَجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً، وَآتَي الزَّكَاةَ طَيَّبِةً بِهَا نَفْسُهُ، وَأَدَّي الاَمَانَةَ، قِيلَ: يَارَسُولَ اللّٰهِؐ وَمَا أَدَاءُ اْلاَمَانَةِ؟ قَالَ الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ إِنَّ اللّٰهَ لَمْ يَأْمَنِ ابْنَ آدَمَ عَلَي شَيْءٍ مِنْ دِينِهِ غَيْرَهَا.

رواه الطبراني باسناد جيد الترغيب:١/٢٤١

187. ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “எம்மனிதர், ஈமானுடன் ஐந்து செயல்களைச் செய்தவராக, (அல்லாஹ்வின் சமுகத்தில்) வருவாரோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிடுவார். ஐவேளைத் தொழுகைகளை அவைகளுடைய உளு, ருகூஉ, ஸுஜுதுகளைச் சரியான முறையில் நிறைவேற்றி அந்தந்த நேரத்தில் பேணுதலாக நிறைவேற்றுதல், ரமளான் மாத நோன்பு நோற்றல், ஹஜ்ஜிச் செய்ய சக்தி பெற்றிருந்தால் ஹஜ்ஜிச் செய்தல், மனப்பூர்வமான ஜகாத்தைக் கொடுத்தல், அமானிதத்தை நிறைவேற்றுதல்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யா ரஸூலல்லாஹ்! அமானிதத்தை நிறைவேற்றல் என்றால் என்ன?’’ என்று கேட்கப்பட்டது. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “கடமையான குளியல்’ என்றார்கள். ஏனேனில், அல்லாஹ், ஆதமுடைய மகனுடைய அமல்களில், கடமையான குளிப்பைத் தவிர வேறு எந்த அமல் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை’’ (ஏனேனில், கடமையான குளியல் யாரும் அறியாத செயலாகும், குளியலை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் பயம்தான் அவனைத் தூண்டும்).

(தப்ரானீ, தர்ஙீப்)

١٨٨- عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدِنِ اْلاَنْصَارِيِّؓ يَقُولُ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: أَنَا زَعِيمٌ لِمَنْ آمَنَ بِي وَأَسْلَمَ وَهَاجَرَ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ وَبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ، وَأَنَا زَعِيمٌ لِمَنْ آمَنَ بِي وَأَسْلَمَ وَجَاهَدَ فِي سَبِيلِ اللّٰهِ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ وَبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ وَبَيْتٍ فِي أَعْلَي غُرَفِ الْجَنَّةِ، فَمَنْ فَعَلَ ذلِكَ لَمْ يَدَعْ لِلْخَيْرِ مَطْلَباً وَلاَ مِنَ الشَّرِّ مَهْرَباً يَمُوتُ حَيْثُ شَاءَ أَنْ يَمُوتَ.

رواه ابن حبان (وإسناده صحيح):١٠/٤٨٠

188. “எவர், என் மீது ஈமான் கொண்டு எனக்கு வழிப்பட்டு நடந்து, ஹிஜ்ரத்தும் (அல்லாஹ்வுக்காக குடிபெயர்ந்து) செல்கிறாரோ, அவருக்காக சுவர்க்கத்தின் எல்லையில் ஒரு வீடும், சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடும் வாங்கித் தர நான் பொறுப்பேற்கிறேன். மேலும், எவர் என் மீது ஈமான் கொண்டு, எனக்கு வழிப்பட்டு நடந்து அல்லாஹ்வுடைய பாதையில் பாடுபடுகிறாரோ, அவருக்காக சுவர்க்கத்தின் எல்லையில் ஒரு வீடும், சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடும், சுவர்க்கத்தின் மேல் பகுதியில் ஒரு வீடும் பெற்றுத் தருவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். எவர் இவ்விதம் செய்தாரோ, அவர் சகலவித நலவுகளையும் பெற்றுக் கொண்டார். சகலவித கெடுதிகளை விட்டும் தவிர்ந்து கொண்டார், இப்பொழுது அவரது மரணம் எந்நிலையில் வந்தாலும் சரியே!’’ (அவர் சுவர்க்கம் செல்லத் தகுதி பெற்றுவிட்டார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னு ஹிப்பான்)

١٨٩- عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: مَنْ لَقِيَ اللّٰهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئاً يُصَلِّي الْخَمْسَ وَيَصُومُ رَمَضَانَ غُفِرَ لَهُ.

(الحديث) رواه احمد:٥/٢٣٢

189. “அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காமலும், ஐவேளை தொழுதும், ரமழான் மாத நோன்பும் வைத்த நிலையில், எம்மனிதர் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

١٩٠- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَنْ لَقِيَ اللّٰهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئاً، وَأَدَّي زَكَاةَ مَالِهِ طَيِّباً بِهَا نَفْسُهُ مُحْتَسِباً وَسَمِعَ وَأَطَاعَ فَلَهُ الْجَنَّةُ.

(الحديث) رواه احمد:٢ /٣٦١

190. “அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காமலும், தனது பொருளுக்குரிய ஸகாத்தை நன்மையை நாடி மனப் பூர்வமாகக் கொடுத்தும், (முஸ்லிம்களுடைய) இமாமின் பேச்சைக் கேட்டு, அதை ஏற்று நடந்த நிலையில், எவர் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவருக்கு சொர்க்கம் உண்டு’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

١٩١- عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ.

رواه الترمذي وقال: حديث فضالة حديث حسن صحيح باب ما جاء في فضل من مات مرابطا رقم:١٦٢١

191. “தனது உள்ளத்துடன் போராடுபவரே முஜாஹித், (மன இச்சைக்கு மாற்றமாக நடக்க முயற்சிப்பவர்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஃபளாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

١٩٢- عَنْ عُتْبَةَ بْنِ عَبْدٍؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: لَوْ أَنَّ رَجُلاً يَخِرُّ عَلَي وَجْهِهِ مِنْ يَوْمِ وُلِدَ إِلَي يَوْمِ يَمُوتُ فِي مَرْضَاةِ اللّٰهِ لَحَقَّرَهُ يَوْمَ الْقِيَامَةِ.

رواه احمد والطبراني في الكبير وفيه بقية وهو مدلس ولكنه صرح بالتحديث وبقية رجاله وثقوا مجمع الزوائد:١/٢١٠

192. “ஒருவர், தான் பிறந்த நாளிலிருந்து மரணமடையும் நாள் வரை, அல்லாஹ்வை திருப்திப்படுத்த முகங்குப்புற (சஜ்தாவில்) இருந்தாலும் கியாமத் நாளில், அவர் தனது இந்த அமலையும் குறைவாகவே கருதுவார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உத்பத்துப்னு அப்த் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத், தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

١٩٣- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَمْرٍوؓ قَالَ سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: خَصْلَتَانِ مَنْ كَانَتَا فِيهِ كَتَبَهُ اللّٰهُ شَاكِرًا صَابِرًا، وَمَنْ لَمْ تَكُونَا فِيهِ لَمْ يَكْتُبْهُ اللّٰهُ شَاكِرًا وَلاَ صَابِرًا: مَنْ نَظَرَ فِي دِينِهِ إِلَي مَنْ هُوَ فَوْقَهُ فَاقْتَدَي بِهِ وَمَنْ نَظَرَ فِي دُنْيَاهُ إِلَي مَنْ هُوَ دُونَهُ فَحَمِدَ اللّٰهَ عَلَي مَا فَضَّلَهُ بِهِ عَلَيْهِ كَتَبَهُ اللّٰهُ شَاكِرًا وَصَابِرًا، وَمَنْ نَظَرَ فِي دِينِهِ إِلَي مَنْ هُوَ دُونَهُ وَنَظَرَ فِي دُنْيَاهُ إِلَي مَنْ هُوَ فَوْقَهُ فَأَسِفَ عَلَي مَا فَاتَهُ مِنْهُ لَمْ يَكْتُبْهُ اللّٰهُ شَاكِرًا وَلاَ صَابِرًا.

رواه الترمذي وقال هذا حديث حسن غريب باب انظروا الي من هو اسفل منكم رقم:٢٥١٢

193. “எவரிடம் இரு குணங்கள் இருக்குமோ, அவரை நன்றி செலுத்துபவர்கள் மற்றும் பொறுமையாளர்கள் கூட்டத்தில் அல்லாஹ் சேர்ப்பான். எவரிடம் இவ்விரு குணமும் இல்லையோ அவரை நன்றி செலுத்துவோர், பொறுமையாளர் கூட்டத்தில் அல்லாஹ் கணிக்கமாட்டான். எம்மனிதர் தீனுடைய காரியங்களில் தனக்கு மேலுள்ளவரைப் பார்த்து, அவரைப் பின்பற்றி, உலக காரியங்களில் தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைப் பார்த்து (அல்லாஹ் தனது அருளாலேயே) அவரை விடச் சிறந்த நிலையில் தன்னை வைத்துள்ளான் என்று கருதி, அவனுக்கு நன்றி செலுத்தவும் செய்கிறாரோ, அவரை நன்றி செலுத்துபவர் மற்றும் பொறுமையாளர் கூட்டத்தில் அல்லாஹ் எழுதிவிடுகிறான், எம்மனிதர் தீனுடைய காரியங்களில் தன்னைவிடக் குறைந்தவரைக் கண்டும், உலக காரியங்களில் தன்னைவிட மேலானவர்களைப் பார்த்தும், தனக்கு உலகம் குறைவாகக் கிடைத்ததற்காகக் கைசேதப்படுவாரோ, அவரை அல்லாஹ் பொறுமையாளர்களிலும் கணிக்கமாட்டான், நன்றியாளர்களிலும் கணிக்கமாட்டான்’’ என்று அருமை, நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

١٩٤- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ.

رواه مسلم باب الدنيا سجن للمؤمن … رقم:٧٤١٧

194, “உலகம் முஃமின்களுக்கு சிறைச்சாலை, காஃபிர்களுக்கு சொர்க்கம்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

தெளிவுரை:- அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோருக்காக சுவனத்தில் இருக்கும் பாக்கியங்களை கவனிக்கும் பட்சத்தில் உலகம் முஃமினுக்குச் சிறை, அதேபோன்று காஃபிருக்கு நரகத்தில் கிடைக்கவிருக்கும் நிரந்தர வேதனைகளை கவனிக்கும் பட்சத்தில் காபிருக்கு இவ்வுலகம் சுவர்க்கம்!

(மிர்காத்)

١٩٥- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِذَا اتُّخِذَ الْفَيْءُ دُوَلاً، وَاْلاَمَانَةُ مَغْنَماً، وَالزَّكَاةُ مَغْرَماً، وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ، وَأَدْنَي صَدِيقَهُ وَأَقْصَي أَبَاهُ، وَظَهَرَتِ اْلاَصْوَاتُ فِي الْمَسَاجِدِ، وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ، وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ، وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ، وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ، وَشُرِبَتِ الْخُمُورُ، وَلَعَنَ آخِرُ هذِهِ اْلاَمَّةِ أَوَّلَهَا، فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذلِكَ رِيحاً حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفاً وَمَسْخاً وَقَذْفاً وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامِ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ.

رواه الترمذي وقال هذا حديث غريب باب ما جاء في علامة حلول المسخ والخسف رقم:٢٢١١

195. “போர்க்களத்தில் கிடைக்கும் ஙனீமத் பொருளைத் தனது செல்வமாகக் கருதப்படுமானால், அமானிதமாக வைக்கப்பட்ட பொருளை ஙனீமத் பொருளாக எண்ணப்படுமானால், தன்னிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்து வைக்கப்பட்ட அமானிதத்தை உரியவரிடம் ஒப்படைக்காமல் தான் உபயோகப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுமானால், ஸகாத்தை வரியாக கருதப்படுமானால், (மனப்பூர்வமாக கொடுக்காமல் வெறுப்போடு கொடுக்கப்படுமானால்), தீனுக்காக இல்லாமல், உலக ஆதாயத்துக்காகக் கல்வி கற்கப்படுமானால், ஒருவர் தன் மனைவிக்கு வழிப்பட்டு, தன் தாய்க்கு மாறு செய்யத் துவங்கினால், தன் நண்பனை நெருக்கமான வனாகவும், தன் தந்தையைத் தனக்குத் தூரமாகவும் கருதுவாயேயானால், பள்ளிவாசல்களில் பகிரங்கமாகக் கூச்சல் போடப்படுமானால், பெரும்பாவி ஒரு சமுதாயத்தினருக்குத் தலைவனாக ஆக்கப்படுவாயேயானால், ஒரு கூட்டத்தினரின் நிர்வாகப் பொறுப்பு மிகக் கேவலமானவனிடம் ஒப்படைக்கப்படுமேயானால், ஒருவனின் கெடுதியைவிட்டும் தப்பிப்பதற்காக அவனுக்குக் கண்ணியமளிக்கப்படுமேயானால், பாடகிகளும், இசைக்கருவிகளும் வழக்கமாக இசைக்கப்படுமேயானால், மது அருந்துவது, சர்வ சாதாரணமாக ஆகிவிடுமேயானால், சமுதாயத்தின் முன்னோர்களை, பின்னோர்கள் தூற்றுவார்களேயானால், செந்நிறக் காற்று, பூமியதிர்ச்சி, பூமியில் புதையுண்டு போதல், மனிதர்களின் முகங்கள் உருமாற்றப்படுதல், வானத்திலிருந்து கல்மாரிப்பொழிதல் ஆகிய வேதனைகளை எதிர்பார்த்திருங்கள்’. அதேபோல், நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்துவிட்டால், ஒன்றின் பின் ஒன்றாய் வேகமாக விழுவதுபோல், தொடர்ச்சியான வேதனைகள் வருவதையும் எதிர்பார்த்திருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

١٩٦- عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ مَثَلَ الَّذِي يَعْمَلُ السَّيِّئَاتِ ثُمَّ يَعْمَلُ الْحَسَنَاتِ، كَمَثَلِ رَجُلٍ كَانَتْ عَلَيْهِ دِرْعٌ ضَيِّقَةٌ قَدْ خَنَقَتْهُ، ثُمَّ عَمِلَ حَسَنَةً فَانْفَكَّتْ حَلَقَةٌ، ثُمَّ عَمِلَ حَسَنَةً أُخْرَي فَانْفَكَّتْ حَلَقَةٌ أُخْرَي، حَتَّي يَخْرُجَ إِلَي اْلاَرْضِ.

رواه احمد:٤/١٤٥

196. “பாவஞ் செய்த பின் தொடர்ந்து நன்மையையும் செய்து வரும் ஒருவனுக்கு உதாரணம், இறுக்கமான இரும்புக் கவசத்தை அணிந்தவனைப் போல! அக்கவசம் அவனது கழுத்தை இறுக்கியிருக்கிறது. அவன் ஒரு நன்மை செய்கிறான், அக்கவசத்தின் ஒரு வளையம் அவிழ்ந்து விடுகிறது. இன்னோரு நன்மை செய்ய இன்னோரு வளையம் அவிழ, (இவ்வாறே நன்மை செய்யச் செய்ய, வளையம் அவிழ) இறுதியில் வளையம் முழுவதும் அவிழ்ந்து பூமியில் விழுந்து விடுகிறது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பத்துப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

தெளிவுரை:- பாவஞ் செய்பவன், பாவங்களால் கட்டுண்டு, நிம்மதியற்று விடுகிறான், நன்மைகளின் காரணமாக, பாவங்களின் கட்டு அவிழ்ந்துவிட அவனை விட்டும் கவலை அகன்றுவிடுகிறது.

١٩٧- عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَبَّاسٍؓ أَنَّهُ قَالَ: مَا ظَهَرَ الْغُلُولُ فِي قَوْمٍ قَطُّ إِلاَّ أُلْقِيَ فِي قُلُوبِهِمُ الرُّعْبُ، وَلاَ فَشَي الزِّنَا فِي قَوْمٍ قَطُّ إِلاَّ كَثُرَ فِيهِمُ الْمَوْتُ، وَلاَ نَقَصَ قَوْمٌ الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ قُطِعَ عَنْهُمُ الرِّزْقُ، وَلاَ حَكَمَ قَوْمٌ بِغَيْرِ الْحَقِّ إِلاَّ فَشَي فِيهِمُ الدَّمُ، وَلاَ خَتَرَ قَوْمٌ بِالْعَهْدِ إِلاَّ سُلِّطَ عَلَيْهِمُ الْعَدُوُّ.

رواه الامام مالك في الموطا باب ما جاء في الغلول ص:٤٧٦

197. “எந்தச் சமுதாயத்தில் ஙனீமத் பொருளில் பகிரங்கமான மோசடி நடைபெறுமோ, அவர்களின் உள்ளங்களில் எதிரியைப் பற்றிய திடுக்கம் போடப்படும், விபச்சாரம் எந்தச் சமுதாயத்தில் பொதுவாகிவிடுமோ, அவர்களில் மரணம் அதிகரித்துவிடும், எந்தச் சமுதாயம் அளவை, நிறுவையில் குறை செய்யுமோ, அவர்களுடைய உணவு எடுக்கப்பட்டுவிடும். அச்சமுதாயத்தினரின் தேவைகள் நிறைவேறாமல் போய்விடும், தீர்ப்பு வழங்குவதில் எந்தச் சமுதாயம் அநியாயம் செய்யுமோ, அவர்களில் ரத்தம் ஓட்டுவது அதிகரித்துவிடும், எந்தச் சமுதாயம் ஒப்பந்தத்தை மீறுமோ, அவர்களின் மீது எதிரிகள் சாட்டப்படுவர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஅத்தா இமாம் மாலிக்)

١٩٨- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّهُ سَمِعَ رَجُلاً يَقُوْلُ: إِنَّ الظَّالِمَ لاَ يَضُرُّ إِلاَّ نَفْسَهُ، فَقَالَ أَبُوْهُرَيْرَةَ 1: بَلَي وَاللّٰهِ حَتَّي الْحُبَارَي لَتَمُوْتُ فيِ وَكْرِهَا هَزْلاً لِظُلْمِ الظَّالِمِ.

رواه البيهقي في شعب الايمان:٦/٥٤

198. “அநியாயக்காரன் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்’’ என்று ஒரு மனிதர் கூறுவதைக் கேட்ட ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் மீது ஆணை! அவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வது மட்டுமல்ல! அவனுடைய அநியாயத்தால், பறவையும் தன்னுடைய கூட்டிலேயே காய்ந்து வரண்டு இறந்துவிடுகிறது’ என்று கூறினார்கள்.

(பைஹகீ)

தெüவுரை:- அநியாயக்காரனின் அநியாயத்தின் விளைவு அவனோடு மட்டும் நிற்பதில்லை. அநியாயத்தின் பீடையினால், விதவிதமான சிரமங்கள், தொல்லைகள் இறங்குகின்றன, மழை நின்றுவிடுகிறது. காடுகளில் வாழும் பறவைகளுக்குக் கூட உண்பதற்குத் தானியங்கள் கிட்டுவதில்லை. இறுதியாக, அவை தமது கூடுகளிலேயே பசியினால் இறந்துவிடுகின்றன.

١٩٩- عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍؓ قَالَ: كَانَ رَسُولُ اللّٰهِؐ يَعْنِي مِمَّا يُكْثِرُ أَنْ يَقُوْلَ لِأَصْحَابِهِ: هَلْ رَأَي أَحَدٌ مِنْكُمْ مِنْ رُؤْيَا؟ قَالَ: فَيَقُصُّ عَلَيْهِ مَا شَاءَ اللّٰهُ أَنْ يَقُصَّ، وَإِنَّهُ قَالَ ذَاتَ غَدَاةٍ: إِنَّهُ أَتَانِيَ اللَّيْلَةَ آتِيَانِ، وَإِنَّهُمَا ابْتَعَثَانِي وَإِنَّهُمَا قَالاَ لِي: انْطَلِقْ وَإِنِّي إِنْطَلَقْتُ مَعَهُمَا، وَإِنَّا أَتَيْنَا عَلَي رَجُلٍ مُضْطَجِعٍ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ فَيَثْلَغُ رَأْسَهُ فَيَتَدَهْدَهُ الْحَجَرُ هَاهُنَا، فَيَتْبَعُ الْحَجَرَ فَيَأْخُذُهُ فَلاَ يَرْجِعُ إِلَيْهِ حَتَّي يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ، ثُمَّ يَعُوْدُ عَلَيْهِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ اْلأَوْلَي، قَالَ: قُلْتُ: سُبْحَانَ اللّٰهِ مَا هذَانِ؟ قَالَ: قَالاَ لِي: انْطَلِقْ انْطَلِقْ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَي رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوْبٍ مِنْ حَدِيدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَي قَفَاهُ، وَمَنْخِرَهُ إِلَي قَفَاهُ، وَعَيْنَهُ إِلَي قَفَاهُ، – قَالَ: وَرُبَّمَا قَالَ أَبُو رَجَاءٍ: فَيَشُقُّ – قَالَ: ثُمَّ يَتَحَوَّلُ إِلَي الْجَانِبِ اْلآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ اْلاَوَّلِ، فَمَا يَفْرُغُ مِنْ ذلِكَ الْجَانِبِ حَتَّي يَصِحَّ ذلِكَ الْجَانِبُ كَمَا كَانَ ثُمَّ يَعُوْدُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ اْلأُوْلَي، قَالَ: قُلْتُ لَهُمَا: سُبْحَانَ اللّٰهِ مَا هذَانِ؟ قَالَ: قَالاَ لِي: انْطَلِقْ انْطَلِقْ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَي مِثْلِ التَّنُّوْرِ قَالَ: وَأَحْسِبُ أَنَّهُ كَانَ يَقُوْلُ – فَإِذَا فِيهِ لَغَطٌ وَأَصْوَاتٌ، قَالَ: فَاطَّلَعْنَا فِيهِ فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ، وَإِذَاهُمْ يِأْتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْفَلَ مِنْهُمْ، فَإِذَا أَتَاهُمْ ذلِكَ اللّٰهَبُ ضَوْضَوْا، قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هؤُلاَءِ؟ قَالَ: قَالاَ لِي: إنْطَلِقْ إنْطَلِقْ قَالَ: فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَي نَهَرٍ – حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُوْلُ – أَحْمَرَ مِثْلِ الدَّمِ، وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ، وَإِذَا عَلَي شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً، وَإِذَا ذلِكَ السَّابِحُ سَبَحَ مَا سَبَحَ، ثُمَّ يَأْتِي ذلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الْحِجَارَةَ فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ، ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَاَلْقَمَهُ حَجَرًا، قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هذَانِ؟ قَالَ: قَالاَ لِي: انْطَلِقْ انْطَلِقْ، قَالَ: فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَي رَجُلٍ كَرِيهِ الْمَرْآةِ كَأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلاً مَرْآةً، فَإِذَا عِنْدَهُ نَارٌ يَحُشُّهَا وَيَسْعَي حَوْلَهَا، قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هذَا؟ قَالَ: قَالاَ لِي: انْطَلِقْ انْطَلِقْ، فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَي رَوْضَةٍ مُعْتَمَّةٍ فِيهَا مِنْ كُلِّ لَوْنِ الرَّبِيعِ، وَإِذَا بَيْنَ ظَهْرَي الرَّوْضَةِ رَجُلٌ طَوِيلٌ لاَ أَكَادُ أَرَي رَأْسَهُ طُوْلاً فِي السَّمَاءِ، وَإِذَا حَوْلَ الرَّجُلِ مِنْ أَكْثَرِ وِلْدَانٍ رَأَيْتُهُمْ قَطُّ، قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هذَا مَا هؤُلاَءِ؟ قَالَ: قَالاَ لِي: انْطَلِقْ يْنَا إِلَي رَوْضَةٍ عَظِيمَةٍ لَمْ أَرَ رَوْضَةً قَطُّ أَعْظَمَ مِنْهَا وَلاَ أَحْسَنَ، قَالَ: قَالاَ لِي: ارْقَ فَارْتَقَيْتُ فِيهَا، قَالَ: فَارْتَقَيْنَا فِيهَا فَانْتَهَيْنَا إِلَي مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ، فَأَتَيْنَا بَابَ الْمَدِينَةِ فَاسْتَفْتَحْنَا فَفُتِحَ لَنَا فَدَخَلْنَاهَا فَتَلَقَّانَا فِيهَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍ، قَالَ: قَالاَ لَهُمْ: اذْهَبُوْا فَقَعُوْا فِي ذلِكَ النَّهَرِ، قَالَ: وَإِذَا نَهَرٌ مُعْتَرِضٌ يَجْرِي كَأَنَّ مَاءَهُ الْمَحْضُ مِنَ الْبَيَاضِ، فَذَهَبُوْا فَوَقَعُوْا فِيهِ، ثُمَّ رَجَعُوْا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذلِكَ السُّوْءُ عَنْهُمْ فَصَارُوْا فِي أَحْسَنِ صُوْرَةٍ، قَالَ: قَالاَ لِي: هذِهِ جَنَّةُ عَدْنٍ وَهذَاكَ مَنْزِلُكَ، قَالَ: فَسَمَا بَصَرِي صُعُدًا فَإِذَا قَصْرٌ مِثْلُ الرَّبَابَةِ الْبَيْضَاءِ، قَالَ: قَالاَ لِي: هذَاكَ مَنْزِلُكَ، قَالَ: قُلْتُ لَهُمَا: بَارَكَ اللّٰهُ فِيكُمَا ذَرَانِي فَأَدْخُلَهُ، قَالاَ: أَمَّا اْلآنَ فَلاَ وَأَنْتَ دَاخِلُهُ، قَالَ: قُلْتُ لَهُمَا: فَإِنِّي قَدْ رَأَيْتُ مُنْذُ اللَّيْلَةِ عَجَباً، فَمَا هذَا الَّذِي رَأَيْتُ؟ قَالَ: قَالاَ لِي: أَمَا إِنَّا سَنُخْبِرُكَ: أَمَّا الرَّجُلُ اْلاَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفِضُهُ وَيَنَامُ عَنِ الصَّلوةِ الْمَكْتُوبَةِ، وَأَمَّا الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُشَرْشَرُ شِدْقُهُ إِلَي قَفَاهُ وَمَنْخِرُهُ إِلَي قَفَاهُ وَعَيْنُهُ إِلَي قَفَاهُ فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الْكَذْبَةَ تَبْلُغُ اْلآفَاقَ، وَأَمَّا الرِّجَالُ وَالنِّسَاءُ الْعُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُّورِ فَهُمُ الزُّنَاةُ وَالزَّوَانِي، وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهَرِ وَيُلْقَمُ الْحِجَارَةُ فَإِنَّهُ آكِلُ الرِّبَا، وَأَمَّا الرَّجُلُ الْكَرِيهُ الْمَرْآةِ الَّذِي عِنْدَ النَّارِ يَحُشُّهَا وَيَسْعَي حَوْلَهَا فَإِنَّهُ مَالِكٌ خَازِنُ جَهَنَّمَ، وَأَمَّا الرَّجُلُ الطَّوِيلُ الَّذِي فِي الرَّوْضَةِ فَإِنَّهُ اِبْرَاهِيمُ ، وَأَمَّا الْوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُوْدٍ مَاتَ عَلَي الْفِطْرَةِ. قَالَ: فَقَالَ بَعْضُ الْمُسْلِمِينَ: يَارَسُوْلَ اللّٰهِ وَأَوْلاَدُ الْمُشْرِكِينَ؟ فَقَالَ رَسُولُ اللّٰهِؐ: وَأَوْلاَدُ الْمُشْرِكِينَ، وَأَمَّا الْقَوْمُ الَّذِينَ كَانُوْا شَطْرًا مِنْهُمْ حَسَنٌ وَشَطْرًا مِنْهُمْ قَبِيحٌ فَإِنَّهُمْ قَوْمٌ خَلَطُوْا عَمَلاً صَالِحاً وَآخَرَ سَيِّئاً تَجَاوَزَ اللّٰهُ عَنْهُمْ.

رواه البخاري باب تعبير الرؤيا بعد صلاة الصبح رقم:٧ ٠٤٧

199. ஹஜ்ரத் ஸமுரதுப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தமது தோழர்களிடம் “உங்களில் யாரேனும் கனவு கண்டீர்களா?’’ என்று கேட்பது வழக்கம். யாரேனும் தாம் கண்ட கனவைச் சொல்வார்கள், (நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் சொல்வார்கள்). ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நேற்றிரவு நான் கனவொன்று கண்டேன், இரு மலக்குகள் என்னிடம் வந்தார்கள், என்னை எழுப்பி, “எங்களுடன் வாருங்கள்’’ என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் சென்றேன், ஒரு மனிதனைக் கடந்து சென்றோம். அவன் படுத்திருக்க, இன்னோருவர் அவனுக்கருகில் தம்கையில் ஒரு பெரும் கல்லைச் சுமந்தவாறு நிற்கின்றார். அவர் படுத்திருப்பவன் தலைமீது வேகமாக அக்கல்லை வீசியெறிய, அவனது தலை சுக்கு நூறாகிவிடுகிறது. கல் ஓரிடத்தில் விழுகிறது. அம்மனிதர் சென்று அக்கல்லை எடுத்து வருவதற்குள், சிதறிய தலை சரியாகிவிட்டது. பிறகு அவர் அதே விதமாய்க் கல்லையெறிய முன்னர் நடந்ததைப் போன்று நடந்தது. நான் வியப்பால் “சுப்ஹானல்லாஹ்’’! இவ்விருவரும் யார்?’’ (இது என்ன நடைபெறுகிறது) என அவ்விரு மலக்குகளிடம் வினவினேன். “முன்னே செல்லுங்கள்’’ என்றார்கள். நாங்கள் முன்னேறினோம், மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதனைக் கடந்து சென்றோம். அவனுக்கருகில் ஒருவர் இரும்புக் கொக்கியை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். அவர், படுத்திருக்கும் மனிதனின் முகத்தின் ஒரு பக்கம் வந்து, (தம்கையிலிருந்த கொக்கியை அவனது ஒரு பக்க கன்னத்தில் புகுத்தி, அவனது பிடரிவரையிலும், ஒரு பக்க மூக்கு துவாரத்தில் நுழைய வைத்து, அவனது பிடரி வரையிலும், ஒரு கண்ணில் நுழையவைத்து பிடரிவரையிலும் பிளக்கிறார். அது எல்லாவற்றையும் கிழித்துக் கொண்டு சென்றுவிடுகிறது. பிறகு மறுபுறம் வந்து அப்படியே செய்கிறார். அதற்குள் முந்திய இடம் முற்றிலும் சீராகிவிடுகிறது, இதேபோல அவர் செய்து கொண்டேயிருக்கிறார். நான், அவ்விருவரிடம் “சுப்ஹானல்லாஹ்’’ இவ்விருவரும் யார்? என்று கேட்டதற்கு, “மேலும் முன்னேறிச் செல்லுங்கள்’’ என்று கூறினார்கள். நாங்கள் முன்னேறிச் சென்று ஒரு நெருப்புக் குண்டத்தை அடைந்தோம். அதில் ஒரே கூச்சலும், கதறலுமாக இருந்தது, நாங்கள் எட்டிப் பார்த்தபொழுது, அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நிர்வாணமாய் இருந்தனர். அவர்களின் கீழிலிருந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பு அவர்களைச் சூழ்ந்துக்கொள்ளஅவர்கள் கூச்சலிட்டனர். நான் அவ்விரு மலக்குகளிடம், “இவர்கள் யார்?’’ என்று வினவியதற்கு, செல்லுங்கள்! முன்னேறிச் செல்லுங்கள்!’’ என்று கூறினார்கள். நாங்கள் முன்னேறி ஓர் ஆற்றை அடைந்தோம். அது ரத்தத்தைப் போல் செந்நிறமாய் இருந்தது. அதில், ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான், ஆற்றங்கரையில் ஒருவர், தமக்கருகில் ஏராளமான கற்களை சேகரித்து வைத்திருந்தார், நீந்திக் கொண்டிருப்பவன், அவரை நோக்கி நீந்திச் சென்று தன் வாயைத் திறந்துகொள்ள, கரையிலிருப்பவர் அவனது வாயில் கல்லைப் போட்டார். அதனால் அவன் (தூரமாகப்) போய்விட்டான். பிறகு நீந்திக் கொண்டு மீண்டும் அதே மனிதரிடம் வந்தான் கரையோரத்தில் நிற்கும் மனிதரிடத்தில் வரும்பொழுதெல்லாம் தன் வாயைத் திறக்கிறான், அவர் கல்லைப் போட்டுவிடுகிறார். நான் இவ்விரு மலக்குகளிடம், “அவ்விருவரும் யார்?’’ என்று கேட்டேன், “செல்லுங்கள்!, முன்னே செல்லுங்கள்!’ என்று அவ்விரு மலக்குகளும் கூறினார்கள். பிறகு நாங்கள் முன்னே சென்றபொழுது நீங்கள் பார்த்த மனிதர்களில் மிகவும் அவலட்சனமான மனிதனைக் கடந்து சென்றோம். அவனுக்கருகில் தீ எரிந்து கொண்டிருந்தது. அதை அவன் எரித்துக் கொண்டு அதைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தான். “இம்மனிதன் யார்?’’ என்று அவர்களிடம் வினவ, “மேலே முன்னேறிச் செல்லுங்கள்’’ என்றார்கள். பிறகு நாங்கள் பச்சைப் பசேலென்”, எல்லாவிதப் பூக்களும் நிறைந்த ஒரு பூஞ்சோலையை அடைந்தோம். அச்சோலையின் நடுவே, உயரமான மனிதர் இருந்தார். அவர் மிகவும் உயரமானவராக இருந்ததால், அவரது தலையைக் காண்பது எனக்குச் சிரமமாக இருந்தது. அவரது அக்கம் பக்கத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்தனர். இவ்வளவு அதிகமான குழந்தைகளை இதற்குமுன் நான் கண்டதில்லை. “இவர் யார்? இந்தக் குழந்தைகள் யார்?’’ என்று நான் கேட்டதற்கு, ‘’முன்னேறிச் செல்லுங்கள்’’ என்று கூறினார்கள். பின்பு நாங்கள் முன்னேறி ஒரு பெரிய தோட்டத்தை அடைந்தோம். இதற்கு முன் இவ்வளவு பெரிய, அழகிய தோட்டத்தை நான் கண்டதில்லை. அவர்கள் என்னிடம் அதன் மேலே ஏறச் சொன்னார்கள். நாங்கள் அதன் மேல் ஏறி, ஒரு செங்கல் தங்கத்தாலும், ஒரு செங்கல் வெள்ளியாலும் கட்டப்பட்ட ஒரு நகரத்தை அடைந்தோம். நகரத்தின் வாயிலை அடைந்து கதவைத் திறக்கும்படி வேண்ட, கதவு திறக்கப்பட்டு நாங்கள் அந்நகரத்துக்குள் நுழைந்தோம். அங்கு நீங்கள் எங்கும் பார்த்திராத பாதி உடல் அழகாகவும், பாதி உடல் அழகற்றும் உள்ள மனிதர்களைச் சந்தித்தோம். அவ்விரு மலக்குகளும், “நீங்கள் அனைவரும் அந்த ஆற்றுக்குச் சென்று அதில் குதியுங்கள்!’’ என்று கூறினார்கள். அங்கு அகலமான ஆறோன்று ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டேன், அதன் நீர் பாலைப் போன்று வெண்மையாய் இருந்தது. அம்மக்கள் அவ்வாற்றில் குதித்தார்கள். பிறகு, அவர்கள் எங்களிடம் திரும்பி வந்தபொழுது, அவர்களின் அழகற்ற நிலை நீங்கி முற்றிலும் அழகு மிக்கவர்களாக மாறிவிட்டனர். அவ்விரு மலக்குகளும் என்னிடம், இது, “அத்ன்’’ என்ற சுவனமாகும். இது தங்களின் வீடு என்றார்கள். அங்கு வெண்ணிற மேகத்தைப் போன்று ஒரு மாளிகையை கண்டேன், “இதுவே உமது வீடு’’, என்று அவர்கள் கூறினார்கள், நான் அவர்களிடம், அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! என்னைவிடுங்கள்!, நான் உள்ளே செல்கிறேன் என்று கூறினேன். “இப்பொழுதல்ல, பிறகு செல்வீர்கள்!’’ என்று அவர்கள் கூறினார்கள். “இன்று இரவு, நான் கண்ட ஆச்சரியமான காட்சிகள் என்ன?’ என்று அவர்களிடம் கேட்டேன். “நாம் அவற்றை விவரிக்கிறோம், நீர் பார்த்த தலை நொறுக்கப்பட்டுக் கொண்டிருந்த முதலாம் மனிதன், குர்ஆனைக் கற்று, அதைவிட்டு விட்டவன். (ஓதவுமில்லை, அமல் செய்யவுமில்லை) பர்ளுத் தொழுகாமல் தூங்கிக் கொண்டிருந்தவன். முகம் கீறிக் கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்த (இரண்டாம்) மனிதன் காலையில் வீட்டை விட்டு வெளியேறி பொய் சொல்கிறவன், அந்தப் பொய் உலகில் பரவி விடுகிறது. (மூன்றாவது) நெருப்புக் குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த அந்த நிர்வாணமான ஆண் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (நான்காவது) ஆற்றில் நீந்திக் கொண்டு, வாயில் கல் போடப்பட்டுக் கொண்டிருந்தவன், வட்டி வாங்குபவன். (ஐந்தாவது) நெருப்பு மூட்டிக் கொண்டு அதைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்த அந்த மனிதர், நரகக் காவலாளி மாலிக். (ஆறாவது) சோலையிலிருந்த அம்மனிதர் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள், அவரைச் சுற்றிலும் இருந்த குழந்தைகள் குழந்தைப் பிராயத்திலேயே இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் மரணித்தவர்கள்,’’ என்று அவர்கள் சொன்னார்கள். அச்சமயம் ஸஹாபி யொருவர், “யா ரஸூலல்லாஹ்! இணைவைப்போரின் குழந்தைகள் நிலை என்னவாகும்?’ என்று கேட்டதற்கு, “இணை வைப்போரின் குழந்தைகளும் இருந்தனர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடலில் பாதி அழகற்றும் மறுபாதி அழகாகவும் இருந்தவர்கள், நல்லமல்களோடு தீமையும் செய்தவர்கள், அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னித்துவிட்டான்’’.

(புகாரி)

٢٠٠- عَنْ أَبِي ذَرٍّ وَأَبِي الدَّرْدَاءِؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: إِنِّي لأَعْرِفُ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ بَيْنَ اْلأَمَمِ، قَالُوْا: يَارَسُولَ اللّٰهِؐ وَكَيْفَ تَعْرِفُ أُمَّتَكَ؟ قَالَ: أَعْرِفُهُمْ يُؤْتَوْنَ كُتُبَهُمْ بِأَيْمَانِهِمْ، وَأَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ فِي وُجُوْهِهِمْ مِنْ أَثَرِ السُّجُوْدِ، وَأَعْرِفُهُمْ بِنُوْرِهِمْ يَسْعَي بَيْنَ أَيْدِيهِمْ.

رواه احمد:٥/١٩٩

200. ஹஜ்ரத் அபூதர் மற்றும் ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள், “கியாமத் நாளில், மற்ற சமுதாயத்தினருக்கு மத்தியில், எனது சமுதாயத்தினரை நான் அறிந்து கொள்வேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, “யா ரஸூலல்லாஹ் தங்களது உம்மத்தை எவ்விதம் அறிந்து கொள்வீர்கள்?’’ என ஸஹாபாக்கள் கேட்டனர். “அவர்களுடைய பட்டோலை (செயல் ஏடு) அவர்களது வலது கையில் கொடுக்கப்படுவதை கொண்டு, அவர்களை அறிந்து கொள்வேன், அதிகமாக “ஸஜ்தா செய்வதின் காரணமாக அவர்களின் முகங்களில் இலங்கிடும் பிரகாசத்தைக் கொண்டு அறிந்துகொள்வேன், அவர்களுக்கு முன் விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு (சிறப்பான) ஒளியைக் கொண்டு அவர்களை அறிந்துகொள்வேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)

தெளிவுரை:- இந்த ஒளி ஒவ்வொரு முஃமினிடமும் இருக்கும் ஈமானின் ஒளியாகும். ஒவ்வொருவருக்கும் அவரவர் ஈமானுடைய சக்தியின் அளவுக்கு அந்த ஒளி கிடைக்கும்.