அல்லாஹ்வுடைய வல்லமையிலிருந்து நேரடியாகப் பலனடைந்து கொள்ள அல்லாஹ்வின் கட்டளைகளை ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழி முறைப்படி நிறைவேற்றுவதில் மிக முக்கியப் பங்குவகிக்கும் அடிப்படையான செயல் தொழுகை.

ஃபர்ளான தொழுகைகள்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (إِنَّ الصَّلوةَ تَنْهي عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ۞)
العنكبوت:٤٥.
1. நிச்சயமாகத் தொழுகை, மானக்கேடானதை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் (தொழுபவரைத்) தடுக்கும்.
(அல் அன்கபூத்:45)
وَقَالَ تَعَالي: (إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصّلِحتِ وَأَقَامُوا الصَّلوةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ج وَلاَخَوْفٌ عَلَيْهِمْ وَلاَهُمْ يَحْزَنُونَ۞).
البقرة: ٢٧٧
2. நிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது – இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல் பகரா:277)
وَقَالَ تَعَالي: (قُلْ لِّعِبَادِيَ الَّذِينَ آمَنُوا يُقِيمُوا الصَّلوةَ وَيُنْفِقُوا مِمَّا رَزَقْنهُمْ سِرّاً وَّعَلاَنِيَةً مِّنْ قَبْلِ أَنْ يَّأْتِيَ يَوْمٌ لاَّبَيْعٌ فِيهِ وَلاَخِلاَلٌ۞).
إبراهيم: ٣١
3. (உண்மையாக) நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களுக்கு; “எந்நாளில் கொடுக்கல் வாங்கலும் நட்பும் (பலனளிக்கக் கூடியதாக) இல்லையோ, அந்த ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, தொழுகையை அவர்கள் கடைப்பிடிக்கவும்; அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்யவும்‘ என்று (நபியே,) நீர் கூறுவீராக!
(இப்ராஹீம்:31)
وَقَالَ تَعَالي: (رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلوةِ وَمِنْ ذُرِّيَّتِي ق رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ۞)
ابراهيم:٤٠
4. என்னுடைய ரப்பே என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் தொழுகையை நிலை நிறுத்துவோராக ஆக்குவாயாயக! எங்களுடைய ரப்பே! (இந்த) என்னுடைய பிரார்த்தனையை நீ ஏற்றுக் கொள்வாயாக!
(இப்ராஹீம்:4٠)
وَقَالَ تَعَالي: (أَقِمِ الصَّلوةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَي غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ط إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا۞)
بني اسرائيل:٧٨.
5. (நபியே,) சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (யுள்ள லுஹர், அஸர், மஃரிப், இஷா முதலிய) தொழுகையையும் இன்னும் பஜ்ருத் தொழுகையையும் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை (மலக்குகளின்) வருகைக்குரியதாக இருக்கிறது.
(பனீஇஸ்ராயீல்:78)
وَقَالَ تَعَالي: (وَالَّذِينَ هُمْ عَلَي صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ۞)
المؤمنون:٩.
6. இன்னும், அவர்கள் தம் தொழுகைகளின் மீது கவனமுள்ளவர்கள்.
(அல்முஃமினூன்:9)
وَقَالَ تَعَالي: (يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ للِصَّلوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَي ذِكْرِ اللهِ وَذَرُوا الْبَيْعَ ط ذلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ۞)
. الجمعة: ٩
7. விசுவாசங் கொண்டோரே, வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக (நீங்கள்) அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள்; இன்னும் அந்நேரத்தில்) வாணிபத்தை விட்டுவிடுங்கள் – நீங்கள் (இதன் பலனை) அறிந்தவர்களாயிருந்தால் இதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
(அல்ஜூமுஆ:9)
١ – عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: بُنِيَ اْلإِسْلاَمُ عَلَي خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَّ إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ.
رواه البخاري باب دعاؤكم ايمانكم…. رقم:٨
1. “இஸ்லாத்தின் அஸ்திவாரம் ஐந்து தூண்களின் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது, லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி என்று சாட்சி சொல்வது, (வணங்கப்படுவதற்கும் அடிமைப்பட்டுப் பணிந்து நடப்பதற்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்கள் என்ற உண்மை நிலையைச் சாட்சி சொல்வது) தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத்தை நிறைவேற்றுவது, ஹஜ்ஜி செய்வது, ரமலான் நோன்பு நோற்பது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢– عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ؒ مُرْسَلاً قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أُوحِيَ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ، وَلكِنْ أُوحِيَ إِلَيَّ أَنْ سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّي يَأْتِيَكَ الْيَقِينُ.
رواه البغوي في شرح السنة مشكوة المصابيح رقم: ٥٢٠٦
2. “செல்வத்தைத் திரட்ட வேண்டும்; வியாபாரியாக ஆகவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்படவில்லை. மாறாக, “நீர் உமது இரட்சகனைத் துதித்துக் கொண்டு தொழக் கூடியவர்களுடன் சேர்ந்து இருங்கள். மேலும், தங்களுக்கு மரணம் வரும்வரை உம் இரட்சகனின் வணக்கத்தில், ஈடுபட்டிருப்பீராக‘ என்றே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜூபைரிப்னு நுஃபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஷரஹுஸ்ஸுன்னா, மிஷ்காதுல் மஸாபீஹ்)
٣– عَنِ ابْنِ عُمَرَؓ عَنِ النَّبِيِّ ﷺ فِي سُؤَالِ جِبْرِيلَؑ إِيَّاهُ عَنِ اْلإِسْلاَمِ فَقَالَ: اَلْإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لآ إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَأَنْ تُقِيمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَحُجَّ الْبَيْتَ وَتَعْتَمِرَ، وَتَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ، وَأَنْ تُتِمَّ الْوُضُوءَ، وَتَصُومَ رَمَضَانَ، قَالَ: فَإِذَا فَعَلْتُ ذلِكَ فَأَنَا مُسْلِمٌ؟ قَالَ: نَعَمْ قَالَ صَدَقْتَ.
رواه ابن خزيمة:١/٤
3. ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஹஜ்ரத் ஜிப்ரயில் (அலை) அவர்கள், (ஒருமுறை அந்நிய மனிதரின் தோற்றத்தில் வந்து) நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார்கள்.”இஸ்லாம் என்பது, “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர், என்று (நாவாலும், மனதாலும்) நீர் சாட்சி சொல்வது, தொழுகையை நிலைநிறுத்துவது, ஜகாத்தை நிறைவேற்றுவது, ஹஜ்ஜூம் உம்ராவும் செய்வது, உடலுறவுக்குப்பின் தூய்மை பெறக் குளிப்பது, உளூவைப் பரிபூரணமாகச் செய்வது, ரமலான் மாத நோன்பு நோற்பது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் ஜிப்ரயில் (அலை) அவர்கள், “இக்காரியங்களை நிறை வேற்றிவிட்டால் நான் முஸ்லிமாகிவிடுவேனா?” என்று கேட்க, “ஆம்‘ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்”, “தாங்கள் உண்மையே கூறினீர்கள்‘ என ஹஜ்ரத் ஜிப்ரயில் (அலை) அவர்கள் கூறினார்கள்.
(இப்னு குஸைமா)
٤– عَنْ قُرَّةَ بْنِ دَعْمُوصٍؓ قَالَ: أَلْفَيْنَا النَّبِيَّ ﷺ فِي حَجَّةِ الْوَدَاعِ: فَقُلْنَا يَارَسُولَ اللهِﷺ مَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ: أَعْهَدُ إِلَيْكُمْ أَنْ تُقِيمُوا الصَّلاَةَ، وَتُؤْتُوا الزَّكَوةَ، وَتَحُجُّوا الْبَيْتَ الْحَرَامَ، وَتَصُومُوا رَمَضَانَ، فَإِنَّ فِيهِ لَيْلَةً خَيْرٌ مِنْ اَلْفِ شَهْرٍ، وَتُحَرِّمُوا دَمَ الْمُسْلِمِ وَمَالَهُ وَالْمُعَاهِدَ إِلاَّ بِحَقِّهِ، وَتَعْتَصِمُوا بِاللهِ وَالطَّاعَةِ.
رواه البيهقي في شعب الايمان:٤/٣٤٢
4. “நாங்கள் ஹஜ்ஜதுல் வதாவில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைச் சந்தித்த பொழுது, “யாரஸூலல்லாஹ்! எக்காரியம் செய்ய தாங்கள் எங்களுக்கு உபதேசிக்கின்றீர்கள்?” என்று கேட்டோம். “தொழுகையை நிலை நாட்டவும், ஜகாத்தை நிறைவேற்றவும், பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜிச் செய்யவும், ரமளான் நோன்பு நோற்கவும், அம்மாதத்தில் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவொன்று உள்ளது. முஸ்லிம், மற்றும் திம்மீ (யாருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதோ அவர்)களைக் கொலை செய்வதையும், அவர்களது பொருட்களை அபகரித்துக் கொள்வதையும் ஹராமெனக் கருதுங்கள். ஆனால், ஏதேனும் குற்றம் செய்தால் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர்கள் தண்டிக்கப்படுவர், மேலும் நான் உங்களுக்கு உபதேசிப்பதாவது, “நீங்கள், அல்லாஹ் வையும், அவனுக்கு வழிப்பட்டு நடப்பதையும், உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், (மற்றவர்களின் திருப்தி, அதிருப்தியைப் பொருட்படுத்தாமல் தைரியமாக தீனுடைய வேலைகளில் ஈடுபட்டிருங்கள்)” என்றும் உபதேசிக்கிறேன் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஹஜ்ரத் குர்ரத்துப்னு தஃமூஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٥– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلاَةُ وَمِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ.
رواه احمد: ٣ /٣٤٠
5. “சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் உளூ” என்று ரஸூலல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத். அஹ்மத்)
٦– عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: جُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلاَةِ.
(وهو بعض الحديث) رواه النسائي باب حب النساء رقم:٣٣٩١
6. ”என் கண்களின் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٧– عَنْ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: الصَّلاَةُ عَمُودُ الدِّينِ.
رواه ابو نعيم في الحلية وهو حديث حسن الجامع الصغير:٢ /١٢٠
7. “தொழுகை தீனின் தூண்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஹில்யத்துல் அவ்லியா, ஜாமிஉஸ்ஸஙீர்)
٨– عَنْ عَلِيٍّؓ قَالَ: كَانَ آخِرُ كَلاَمِ رَسُولُ اللهِ ﷺ: اَلصَّلاَةَ اَلصَّلاَةَ اِتَّقُوا اللهَ فِيمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ.
رواه ابوداؤد باب في حق المملوك رقم:٥١٥٦
8. “தொழுகை! தொழுகை! உங்களின் அடிமைகள் மற்றும் உங்கள் கண்காணிப்பின் கீழ் இருப்போரின் காரியத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்”, (அவர்களுக்குரிய உரிமைகளை நிறைவேற்றுங்கள்), என்பது நபி (ஸல்) அவர்களின் இறுதி உபதேசதமாக இருந்தது‘ என ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٩– عَنْ أَبِي أُمَامَةَ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ أَقْبَلَ مِنْ خَيْبَرَ وَمَعَهُ غُلاَمَانِ فَقَالَ عَلِيٌّ: يَا رَسُولَ اللهِﷺ أَخْدِمْنَا قَالَ: خُذْ أَيَّهُمَا شِئْتَ قَالَ: خِرْ لِي قَالَ: خُذْ هذَا وَلاَ تَضْرِبْهُ فَإِنِّي قَدْ رَأَيْتُهُ يُصَلِّي مَقْفِلَنَا مِنْ خَيْبَرَ وَإِنِّي قَدْ نُهِيتُ عَنْ ضَرْبِ أَهْلِ الصَّلوةِ.
(وهو بعض الحديث) رواه احمد والطبراني مجمع الزوائد:٤ /٤٣٣
9. ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் கைபர் போர் முடிந்து திரும்பி வந்தார்கள். அன்னாருடன் அடிமைகள் இருவர் இருந்தனர், ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள், “யாரஸூலல்லாஹ்! எங்களுக்குப் பணிவிடை செய்ய ஓர் அடிமையைத் தாருங்கள்!’ என்று வேண்டினார்கள், “இவ்விருவரில் நீர் விரும்பியவரை எடுத்துக்கொள்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். “தாங்களே தேர்ந்தெடுத்துத் தாருங்கள்” என்று ஹஜ்ரத் அலீ (ரலி) கூற, நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரில் ஒருவரின் பக்கம் சைகை செய்து, “இவரை எடுத்துக் கொள்வீராக! ஆனால், இவரை அடிக்காதீர், ஏனேனில் கைபரிலிருந்து திரும்பிவரும் போது இவர் தொழக் கண்டேன், தொழுகையாளிகளை அடிப்பதை எனக்கு விலக்கப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: خَمْسُ صَلَوَاتٍ اِفْتَرَضَهُنَّ اللهُ ، مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلاَّهُنَّ لِوَقْتِهِنَّ وَأَتَمَّ رُكُوعَهُنَّ وَخُشُوعَهُنَّ، كَانَ لَهُ عَلَي اللهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ، وَمَنْ لَّمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عَلَي اللهِ عَهْدٌ، إِنْ شَاءَ غَفَرَ لَهُ، وَإِنْ شَاءَ عَذَّبَهُ.
رواه ابوداؤد باب المحافظة علي الصلوات رقم:٤٢٥
10. “அல்லாஹ் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான்.”எவர் இத்தொழுகைகளுக்காக, நல்ல முறையில் உளூச் செய்து விரும்பத்தக்க நேரத்தில் தொழுது, அமைதியான முறையில் ருகூ (ஸஜ்தா)வைச் செய்து, பயபக்தியுடன் தொழுகிறாரோ, அவரை அவசியம் மன்னிப்பேன்” என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். “எவர் இத்தொழுகைகளை அந்தந்த நேரத்தில் நிறைவேற்றாமல், பயபக்தியின்றித் தொழுகிறாரோ அவருக்கு மன்னிப்பின் எந்த வாக்குறுதியும் இல்லை, அவன் விரும்பினால் மன்னிக்கலாம், விரும்பினால் தண்டிக்கலாம்‘ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உபாதத்துப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١١– عَنْ حَنْظَلَةَ اْلأُسَيْدِيِّؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ حَافَظَ عَلَي الصَّلَوَاتِ الْخَمْسِ عَلَي وُضُوءِهَا وَمَوَاقِيتِهَا وَرُكُوعِهَا وَسُجُودِهَا يَرَاهَا حَقّاً لِلّهِ عَلَيْهِ حُرِّمَ عَلَي النَّارِ.
رواه احمد:٤/٢٦٧
11. “உளூவைப் பேணுதலாகச் செய்து தொழுகையின் நேரங்களையும் பேணி ருகூஉ, ஸுஜூதுகளைச் சரியான முறையில் நிறைவேற்றி, “இவ்வாறு ஐவேளைத் தொழுவதை அல்லாஹ் என் மீது கடமையாக்கி யுள்ளான்‘ என்று கருதி எவர் தொழுவாரோ, அவர் மீது நரக நெருப்பு ஹராமாக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹன்ளலதுல் உஸைதிய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٢– عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: قَالَ اللهُ: إِنِّي فَرَضْتُ عَلَي أُمَّتِكَ خَمْسَ صَلَوَاتٍ، وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا أَنَّهُ مَنْ جَاءَ يُحَافِظُ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهِنَّ فَلاَ عَهْدَ لَهُ عِنْدِي.
رواه ابوداؤد باب المحافظة علي الصلوات رقم:٤٣٠
12. (நபியே) “நான் உமது உம்மத்தின் மீது, ஐந்து நேரத் தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளேன். மேலும், எவர் ஐந்து நேரத் தொழுகைகளை அவற்றிற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் பேணுதலாக இருப்பாரோ, அவரைச் சொர்க்கத்தில் நுழையவைக்க நான் பொறுப்பேற்றுள்ளேன். எவர் தொழுகைகளில் பேணுதலாக இல்லையோ, அவருக்காக என் மீது எந்தப் பொறுப்பும் இல்லை” (விரும்பினால், மன்னிப்பேன், விரும்பினால் தண்டிப்பேன்) என்று அல்லாஹ் கூறுவதாக‘, நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூ கதாததுப்னு ரிப்இய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٣– عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ عَلِمَ أَنَّ الصَّلاَةَ حَقٌّ وَاجِبٌ دَخَلَ الْجَنَّةَ.
رواه عبد اللّه بن احمد في زياداته وابو يعلي الا انه قال: حَقٌّ مَكْتُوبٌ وَاجِبٌ. والبزار بنحوه ورجاله موثقون مجمع الزوائد:٢/١٥
13. “எவர் தொழுவதைக் கடமையெனக் கருதுவாரோ அவர் சுவனத்தில் நுழைவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத் அபூயஃலா மஜ்மஉஸ்ஸவாயித்)
١٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ قُرْطٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلاَةُ فَإِنْ صَلُحَتْ صَلُحَ سَائِرُ عَمَلِهِ، وَإِنْ فَسَدَتْ فَسَدَ سَائِرُ عَمَلِهِ.
رواه الآلطبراني في الاوسط ولا باس باسناده ان شاء اللّه الترغيب:١/٢٤٥
14. “கியாமத் நாளில் முதன் முதலாகத் தொழுகையைப் பற்றி விசாரணை செய்யப் படும், தொழுகை சரியாக இருந்தால், மற்ற அமல்களும் சரியாக இருக்கும், தொழுகை சீர் குலைந்து இருந்தால் இதர அமல்களும் சீர் குலைந்து இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு குர்த் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ தர்ஃஙீப்)
١٥– عَنْ جَابِرٍؓقَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ ﷺ: إِنَّ فُلاَناً يُصَلِّي فَإِذَا أَصْبَحَ سَرَقَ قَالَ: إِنَّهُ سَيَنْهَاهُ مَا يَقُولُ.
رواه أحمد رقم:٩٣٠٢ والبزار ورجالهما ثقات. مجمع الزوائد: ٢/٥٣١
15. ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “இன்ன மனிதர் (இரவில்) தொழுகிறார், காலைப் பொழுது ஆனதும் திருடுகிறார்” என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார், “அவரது தொழுகை அவரை அத்தீமையிலிருந்து விரைவில் தடுத்துவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٦– عَنْ سَلْمَانَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ الْمُسْلِمَ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ صَلَّي الصَّلَوَاتِ الْخَمْسَ تَحَاتَّتْ خَطَايَاهُ كَمَا يَتَحَاتُّ هذَا الْوَرَقُ وَقَالَ: (وَأَقِمِ الصَّلوةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفاً مِّنَ اللَّيْلِ ط إِنَّ الْحَسَنتِ يُذْهِبْنَ السَّيِّاتِ ط ذلِكَ ذِكْرَي لِلذَّاكِرِينَ۞).
هود:١١٤. (وهو جزء من الحديث) رواه احمد:5/٤٣٧
16. “ஒரு முஸ்லிம், சிறந்த முறையில் உளூச் செய்து, ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால், இந்த இலைகள் உதிர்வது போல், அவரது பாவங்கள் உதிர்ந்து விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின், (وَأَقِمِ الصَّلوةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفاً مِّنَ اللَّيْلِ ط إِنَّ الْحَسَنتِ يُذْهِبْنَ السَّيِّاتِ ط ذلِكَ ذِكْرَي لِلذَّاكِرِينَ) “முஹம்மதே! நீர் பகலின் இரு ஓரங்களிலும், இரவின் சில பகுதியிலும், தொழுகையை நிலை நாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடுகின்றன, உபதேசத்தை ஏற்பவர்களுக்கு இவைகள் நிறைவான உபதேசமாகும்” என்ற ஆயத்தை ஓதினார்கள், என்று ஹஜ்ரத் ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- “இரு ஓரங்கள் என்பது இரு பகுதிகள். முதல் பகுதியில் சுபுஹுத் தொழுகை, இரண்டாம் பகுதியில் லுஹர், அஸர்த் தொழுகைள். இரவின் சில பகுதிகளில் தொழுதல் என்பதன் பொருள்: மஃரிப், இஷா தொழுகைகள்” என்று சில விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளர்கள்.
(தஃப்ஸீர் இப்னுகஸீர்)
١٧– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ كَانَ يَقُولُ: اَلصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمُعَةُ إِلَي الْجُمُعَةِ، وَرَمَضَانُ إِلَي رَمَضَانَ، مُكَفِّرَاتُ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ.
رواه مسلم باب الصلوات الخمس…. رقم:٥٥٢
17. “ஒருவர் பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருந்தால் அவரது ஐந்து நேரத் தொழுகைகளும், ஒரு ஜும்ஆத் தொழுகை, மறு ஜும்ஆ வரை ஒரு ரமலானின் நோன்பு மறு ரமலான் வரை, இவைகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ حَافَظَ عَلَي هؤُلاَءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ.
(الحديث) رواه ابن خزيمة في صحيحة:٢ /١٨٠
18. “எவர், இந்த ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணுதலாகத் தொழுது வருகிறாரோ, அவர் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறந்த மறதியாளர்களில் கணிக்கப்படமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு குஸைமா)
١٩– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ ذَكَرَ الصَّلاَةَ يَوْماً فَقَالَ: مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَاناً وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَّمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورٌ وَلاَ بُرْهَانٌ وَلاَ نَجَاةٌ، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ فِرْعَوْنَ وَهَامَانَ وَأُبَيِّ ابْنِ خَلَفٍ.
رواه احمد والطبراني في الكبير والاوسط ورجال احمد ثقات مجمع الزوائد:٢/٢١
19. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஒரு முறை, நபி (ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றிக் கூறும் பொழுது, “எவர் தொழுகையைப் பேணுதலாகத் தொழுது வருவாரோ அவருக்கு அத்தொழுகை கியாமத் நாளில் ஒளியாகிவிடும். (அவர் முழுமையான விசுவாசி என்பதற்கு) அது ஆதாரமாகும், கியாமத் நாளின் வேதனையிளிருந்து பாதுகாப்புப் பெறக் காரணமாகும், யார் தொழுகையில் பேணுதலாக இல்லையோ, அவருக்கு அது கியாமத் நாளில் ஒளியாகவும், ஆகாது, அவன் முழுமையான முஃமின் என்பதற்கு ஆதாரமும் ஆகாது, வேதனையிலிருந்து தப்பிக்கக் காரணமாகவும் ஆகாது. மேலும், அவர் கியாமத் நாளில் பிர்அவ்ன், ஹாமான் மற்றும் உபையிப்னுகலப் உடன் இருப்பார்” என்று கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத் தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٠– عَنْ أَبِي مَالِكِ نِ اْلاَشْجَعِيِّ عَنْ أَبِيهِ ؓ قَالَ: كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَي عَهْدِ النَّبِيِّ ﷺ عَلَّمُوهُ الصَّلاَةَ.
رواه الطبراني في الكبير: ٨/٣٨٠. وفي الحاشية: قال في المجمع ١/٢٩٣: رواه الطبراني والبزار ورجاله رجال الصحيح.
20. “நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எவரேனும் முஸ்லிமாகிவிட்டால் (ஸஹாபாக்கள்) முதன் முதலில் அவருக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள்” என்று ஹஜ்ரத் அபூமாலிக் அஷ்ஜஇய்யி (ரலி) அவர்கள் தம் தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ)
٢١– عَنْ أَبِي أُمَامَةَ ؓ قَالَ: قِيلَ: يَارَسُولَ اللهِﷺ أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: جَوْفَ اللَّيْلِ اْلآخِرِ وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ.
رواه الترمذي وقال هذا حديث حسن باب حديث ينزل ربنا كل ليلة… رقم:٣٤٩٩
21. ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ்! எந்த நேரத்தில் கேட்கும் துஆ அதிகம் ஒப்புக் கொள்ளப்படுகிறது?” என்று கேட்கப்பட்டது, “இரவின் கடைசிப் பகுதியில் கேட்கும் துஆவும், பர்ளுத் தொழுகைகளுக்குப் பிறகு கேட்கும் துஆவும்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(திர்மிதீ)
٢٢– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ ؓ أَنَّهُ سَمِعَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: الصَّلَوَاتُ الْخَمْسُ كَفَّارَةٌ لِمَا بَيْنَهَا، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلاً كَانَ يَعْتَمِلُ فَكَانَ بَيْنَ مَنْزِلِهِ وَمُعْتَمَلِهِ خَمْسَةُ أَنْهَارٍ، فَإِذَا أَتَي مُعْتَمَلَهُ عَمِلَ فِيهِ مَا شَاءَ اللهُ فَأَصَابَهُ الْوَسَخُ أَوِ الْعَرَقُ فَكُلَّمَا مَرَّ بِنَهَرٍ اِغْتَسَلَ مَا كَانَ ذلِكَ يُبْقِي مِنْ دَرَنِه، فَكَذلِكَ الصَّلاَةُ كُلَّمَا عَمِلَ خَطِيئَةً فَدَعَا وَاسْتَغْفَرَ غُفِرَ لَهُ مَا كَانَ قَبْلَهَا.
رواه البزار والطبراني في الاوسط والكبير وزاد فيه. ثُمَّ صَلَّي صَلاَةً اِسْتَغْفَرَ غَفَرَ اللّهُ لَهُ مَا كَانَ قَبْلَهَا. وفيه عبد الله بن قريظ ذكره ابن حبان في الثقات وبقية رجاله رجال الصحيح مجمع الزوائد:٢/٣٢
22. “ஐந்து நேரத் தொழுகைகள், அதற்கு இடைப்பட்ட நேரங்களுக்குப் பரிகாரம் ஆகும், (ஒரு தொழுகையிலிருந்து மறு தொழுகைவரை ஏற்படும் சிறிய பாவங்கள் அந்தத் தொழுகையின் பரக்கத்தினால், மன்னிக்கப்பட்டு விடுகின்றன. “ஒருவருக்குத் தொழிற்சாலை ஒன்று உள்ளது, அதில் அவர் பணிபுரிகிறார், அவருடைய தொழிற்சாலைக்கும், வீட்டுக்கும் இடையே ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. தொழிற்சாலையில் வேலை செய்வதால், அவரது உடலில் அழுக்குப் படிகிறது, அல்லது வியர்வை வருகிறது. பிறகு, வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒவ்வோர் ஆற்றிலும் குளித்துவிட்டுச் செல்கிறார் (இவ்வாறு பலமுறை குளிப்பதால் அவருடைய உடலில் அழுக்கு இருக்காது). இதேபோன்று தான் தொழுகையும், ஏதேனும் பாவம் செய்துவிடும்போது, துஆ, இஸ்திஃபார் செய்வதால், தொழுகைக்கு முன்னால் நிகழ்ந்த எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ் ஸவாயித், தப்ரானீ)
٢٣– عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ؓ قَالَ: أُمِرْنَا أَنْ نُسَبِّحَ دُبُرَ كُلِّ صَلاَةٍ ثَلاَثاً وَّثَلاَثِينَ وَنَحْمَدَهُ ثَلاَثاً وَّثَلاَثِينَ وَنُكَبِّرَهُ أَرْبَعاً وَّثَلاَثِينَ قَالَ: فَرَأَي رَجُلٌ مِنَ اْلاَنْصَارِ فِي الْمَنَامِ، فَقَالَ: أَمَرَكُمْ رَسُولُ اللهِ ﷺ أَنْ تُسَبِّحُوا فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ ثَلاَثاً وَّ ثَلاَثِينَ وَتَحْمَدُوا اللهَ ثَلاَثاً وَّ ثَلاَثِينَ وَتُكَبِّرُوا أَرْبَعاً وَّ ثَلاَثِينَ؟ قَالَ: نَعَمْ قَالَ: فَاجْعَلُوا خَمْساً وَّعِشْرِينَ وَاجْعَلُوا التَّهْلِيلَ مَعَهُنَّ فَغَدَا عَلَي النَّبِيِّ ﷺ فَحَدَّثَهُ فَقَالَ: افْعَلُوا.
رواه الترمذي وقال: هذا حديث صحيح باب منه ما جاء في التسبيح والتكبير والتحميد عند المنام رقم:٣٤١٣. الجامع الصحيح وهو سنن الترمذي طبع دار الكتب العلمية
23. ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் சுப்ஹானல்லாஹ் 33 முறை, அல்ஹம்துலில்லாஹ் 33 முறை, அல்லாஹுஅக்பர் 34 முறை, ஓதிவர வேண்டுமென்று எங்களுக்கு (நபி (ஸல்) அவர்கள் மூலம்) ஏவப்பட்டுள்ளது. அன்ஸாரி ஸஹாபியொருவர் கனவு கண்டார். கனவில் அந்த அன்ஸாரி ஸஹாபியிடம், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், சுப்ஹானல்லாஹ் 33 முறை, அல்ஹம்துலில்லாஹ் 33 முறை, அல்லாஹு அக்பர் 34 முறை ஓதி வர உங்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்களா?” என்று ஒருவர் கேட்க, அவர் “ஆம்‘ அவ்வாறே எங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது என்று சொன்னார். “ஒவ்வொரு வார்த்தைகளையும் 25 முறையாக ஆக்கிக் கொள்ளுங்கள், அத்துடன் 25 முறை லாஇலாஹ இல்லல்லாஹ் வையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் சொன்னாராம், அந்த ஸஹாபி காலையில், நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து தமது கனவைப் பற்றி கூறியபொழுது, அப்படியே செய்து கொள்ளுங்கள்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (கனவில் சொல்லப்பட்டது போல் அமல் செய்ய அனுமதி வழங்கிவிட்டார்கள்).
(திர்மிதீ)
٢٤– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ فُقَرَاءَ الْمُهاجِرِينَ أَتَوْا رَسُولُ اللهِ ﷺ فَقَالُوا: قَدْ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ الْعُلَي وَالنَّعِيمِ الْمُقِيمِ فَقَالَ: وَمَا ذَاكَ؟ قَالُوا: يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ وَلاَ نَتَصَدَّقُ وَيُعْتِقُونَ وَلاَ نُعْتِقُ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: أَفَلاَ أُعَلِّمُكُمْ شَيْئاً تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعَدَكُمْ وَلاَ يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلاَّ مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ؟ قَالُوا: بَلَي يَارَسُولَ اللهِﷺ قَالَ: تُسَبِّحُونَ وَتُكَبِّرُونَ وَتَحْمَدُونَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ ثَلاَثاً وَّ ثَلاَثِينَ مَرَّةً، قَالَ أَبُو صَالِحٍ: فَرَجَعَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ إِلَي رَسُولُ اللهِ ﷺ فَقَالُوا: سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ اْلاَمْوَالِ بِمَا فَعَلْنَا فَفَعَلُوا مِثْلَهُ فَقالَ رَسُولُ اللهِ ﷺ: ذلِكَ فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَنْ يَّشَاءُ.
رواه مسلم باب استحباب الذكر بعدالصلاة… رقم:١٣٤٧
24. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை ஏழை முஹாஜிர்கள் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “சீமான்கள் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிரந்தரமான பாக்கியங்களையும் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள்.”அது எவ்வாறு?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “நாங்கள் தொழுவதைப் போல் அவர்களும் தொழுகிறார்கள், நாங்கள் நோன்பு நோற்பது போல் அவர்களும் நோன்பு நோற்கிறார்கள், (ஆனால்) அவர்கள் தர்மம் செய்கிறார்கள், எங்களால் தர்மம் செய்ய முடிவதில்லை, அவர்கள் அடிமைகளை உரிமை விடுகிறார்கள், அது எங்களால் இயலவில்லை” என்று ஸஹாபாக்கள் கூறினர். “உங்களைவிட அமலால் முந்தியவரை நீங்கள் அடைந்து கொள்ளும்படியும் உங்களைவிடப் பிந்தியவரை முந்திச் செல்லும்படியுமான, மேலும் உங்களைப் போன்று அமல் செய்யாத வரை உங்களைவிடச் சிறந்தவர்களாக யாரும் ஆகமுடியாத ஒரு அமலை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் வினவ, “யாரஸூலல்லாஹ்! அவசியம் அறிவித்துத் தாருங்கள்” என ஸஹாபாக்கள் வேண்டினர்.”ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் “சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், ஒவ்வொன்றையும் 33 முறை ஓதிவாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதன்படியே அவர்கள் அமல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தந்ததை வசதிபடைத்த ஸஹாபாக்கள் அறிந்ததும், அவர்களும் அமல் செய்ய ஆரம்பித்தார்கள்) மீண்டும் ஏழை முஹாஜிர்கள் வந்து, “எங்களில் வசதிபடைத்த சகோதரர்களும் இதைக் கேள்விப்பட்டு அவர்களும் இவ்வாறே அமல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்!’ என்று கூறினர்.”இது அல்லாஹ்வின் அருள், அவன் நாடியவருக்கு வழங்குகிறான்‘ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(முஸ்லிம்)
٢٥– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ: مَنْ سَبَّحَ اللهَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ ثَلاَثاً وَّ ثَلاَثِينَ وَحَمِدَ اللهَ ثَلاَثاً وَّ ثَلاَثِينَ وَكَبَّرَ اللهَ ثَلاَثاً وَّثَلاَثِينَ فَتِلْكَ تِسْعَةٌ وَّ تِسْعُونَ، وَقَالَ تَمَامَ الْمِائَةِ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَي كُلِّ شَيْيءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ.
رواه مسلم باب استحباب الذكر بعد الصلاة وبيان صفته رقم:١٣٥٢
25. “எவரொருவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் சுப்ஹானல்லாஹ் 33 முறை, அல்ஹம்துலில்லாஹ் 33 முறை, அல்லாஹு அக்பர் 33 முறை ஓதுவாரோ இவை 99 ஆகின்றன, நூறைப் பூர்த்தியாக்க, “லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலாகுல்லி ஷைஇன் கதீர்” என்று ஒரு முறை ஓதினால், அவர் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٦– عَنِ الْفَضْلِ بْنِ الْحَسَنِ الضَّمْرِيِّ أَنَّ أُمَّ الْحَكَمِ أَوْ ضُبَاعَةَ ابْنَتَيْ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ؓ حَدَّثَتْهُ عَنْ إِحْدَاهُمَا أَنَّهَا قَالَتْ: أَصَابَ رَسُولُ اللهِ ﷺ سَبْياً فَذَهَبْتُ أَنَا وَأُخْتِي وَفَاطِمَةُ بِنْتُ رَسُولُ اللهِ ﷺ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَحْنُ فِيهِ وَسَاَلْنَاهُ أَنْ يَاْمُرَ لَنَا بِشَيْيءٍ مِنَ السَّبْيِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: سَبَقَكُنَّ يَتَامَي بَدْرٍ وَلكِنْ سَأَدُلُّكُنَّ عَلَي مَا هُوَ خَيْرٌ لَّكُنَّ مِنْ ذلِكَ تُكَبِّرْنَ اللهَ عَلَي إِثْرِ كُلِّ صَلاَةٍ ثَلاَثاً وَّ ثَلاَثِينَ تَكْبِيرَةً وَّ ثَلاَثاً وَثَلاَثِينَ تَسْبِيحَةً وَثَلاَثاً وَّ ثَلاَثِينَ تَحْمِيدَةً وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
رواه ابوداؤد باب في مواضع قسم الخمس…. رقم:٢٩٨٧
26. ஹஜ்ரத் ஃபழ்லுப்னு ஹசன் ழம்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஜுபைரிப்னு அப்துல்முத்தலிபின் மகள்கள் இருவரில், ஹஜ்ரத் உம்முஹகம் அல்லது ஹஜ்ரத் ழுபாஆ (ரலி) அவர்கள் கீழ்க்காணும் நிகழ்ச்சியைக் கூறுகிறார்கள், நபி (ஸல்) அவர்களிடம் சில கைதிகள் கொண்டுவரப்பட்டனர், நான் எனது சகோதரி, நபி (ஸல்) அவர்களின் மகளார் ஹஜ்ரத் பாத்திமா (ரலி) ஆகிய நாங்கள் மூவரும் அன்னாரின் சமுகத்திற்கு வந்து, தங்களது சிரமங்களைச் சொல்லி கைதிகளில் சிலரைப் பணிவிடைக்காக வேண்டினோம்.”அடிமைகளைப் பெறுவதற்கு உங்களைவிட பத்ருடைய அனாதைகள் முன்னுரிமை பெற்றவர்கள்‘; எனினும், பணியாளர்களைவிடச் சிறந்ததொரு காரியத்தை உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகியவற்றை தலா 33, 33 முறையும், (لاَ إِلهَ إِلاَّ اللّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ) என்று ஒரு முறையும் ஓதிவாருங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
٢٧– عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مُعَقِّبَاتٌ لاَ يَخِيبُ قَائِلُهُنَّ أَوْ فَاعِلُهُنَّ ثَلاَثاً وَّثَلاَثِينَ تَسْبِيحَةً وَثَلاَثاً وَثَلاَثِينَ تَحْمِيدَةً وَأَرْبَعاً وَثَلاَثِينَ تَكْبِيرَةً فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ.
رواه مسلم باب استحباب الذكر بعدالصلاة…. رقم: ١٣٥٠
27. “தொழுகைக்குப் பிறகு ஓதப்படக் கூடிய கலிமாக்ககள் சில உள்ளன, அவைகளை ஓதிவருபவர் ஒருக்காலும் நஷ்டமடையமாட்டார். அவை, ஒவ்வொரு பர்ளுத் தொழுகைக்குப் பிறகும், 33 முறை சுப்ஹானல்லாஹ், 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 34 முறை அல்லாஹு அக்பர் என்ற கலிமாக்களை கூறுவதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் கஅபிப்னு உஜ்ரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
٢٨– عَنِ السَّائِبِ عَنْ عَلِيٍّ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ لَمَّا زَوَّجَهُ فَاطِمَةَ بَعَثَ مَعَهَا بِخَمِيلَةٍ وَوِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ وَرَحَيَيْنِ وَسِقَاءٍ وَجَرَّتَيْنِ، فَقَالَ عَلِيٌّ ؓ لِفَاطِمَةَ ؓ ذَاتَ يَوْمٍ: وَاللهِ لَقَدْ سَنَوْتُ حَتَّي لَقَدْ اشْتَكَيْتُ صَدْرِي قَالَ: وَقَدْ جَاءَ اللهُ أَبَاكِ بِسَبْيٍ فَاذْهَبِي فَاسْتَخْدِمِيهِ، فَقَالَتْ: وَأَنَا وَاللهِ قَدْ طَحَنْتُ حَتَّي مَجِلَتْ يَدَايَ فَأَتَتِ النَّبِيَّ ﷺ، فَقَالَ، مَا جَاءَ بِكِ أَيْ بُنَيَّةُ؟ قَالَتْ: جِئْتُ لِأُسَلِّمَ عَلَيْكَ وَاسْتَحْيَتْ أَنْ تَسْاَلَهُ وَرَجَعَتْ فَقَالَ: مَا فَعَلْتِ قَالَتْ: إِسْتَحْيَيْتُ أَنْ أَسْاَلَهُ فَأَتَيْنَاهُ جَمِيعاً، فَقَالَ عَلِيٌّ ؓ: يَارَسُولَ اللهِﷺ لَقَدْ سَنَوْتُ حَتَّي اشْتَكَيْتُ صَدْرِي وَقَالَتْ فَاطِمَةُ ؓ: قَدْ طَحَنْتُ حَتَّي مَجِلَتْ يَدَايَ وَقَدْ جَاءَكَ اللهُ بِسَبْيٍ وَسَعَةٍ فَأَخْدِمْنَا، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: وَاللهِ لاَ أُعْطِيكُمَا وَأَدَعُ أَهْلَ الصُّفَّةِ تُطْوَي بُطُونُهُمْ لاَ أَجِدُ مَا أُنْفِقُ عَلَيْهِمْ وَلكِنِّي أَبِيعُهُمْ وَأُنْفِقُ عَلَيْهِمْ أَثْمَانَهُمْ، فَرَجَعَا فَأَتَاهُمَا النَّبِيُّ ﷺ وَقَدْ دَخَلاَ فِي قَطِيفَتِهِمَا إِذَا غَطَّيَا رُؤُوسَهُمَا تَكَشَّفَتْ أَقْدَامُهُمَا وَإِذَا غَطَّيَا أَقْدَامَهُمَا تَكَشَّفَتْ رُؤُوسُهُمَا فَثَارَا، فَقَالَ: مَكَانَكُمَا ثُمَّ قَالَ: أَلاَ أُخْبِرُكُمَا بِخَيْرٍ مِمَّا سَاَلْتُمَانِي؟ قَالاَ: بَلَي، فَقَالَ: كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ جِبْرِيلُ ^ فَقَالَ: تُسَبِّحَانِ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَتَحْمَدَانِ عَشْرًا وَتُكَبِّرَانِ عَشْرًا وَإِذَا أَوَيْتُمَا إِلَي فِرَاشِكُمَا فَسَبِّحَا ثَلاَثاً وَثَلاَثِينَ وَاحْمَدَا ثَلاَثاً وَثَلاَثِينَ وَكَبِّرَا أَرْبَعاً وَّثَلاَثِينَ، قَالَ: فَوَ اللهِ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: فَقَالَ لَهُ ابْنُ الْكَوَاءِ: وَلاَ لَيْلَةَ صِفِّينَ؟ فَقَالَ: قَاتَلَكُمُ اللهُ يَا أَهْلَ الْعِرَاقِ نَعَمْ، وَلاَ لَيْلَةَ صِفِّينَ.
رواه احــمــد:١ /١٠٦
28. ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸாயிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களை எனக்குத் திருமணம் செய்து வைத்த பொழுது, ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுடன் ஒரு போர்வை, பேரீச்ச ஓலைகளால் நிரப்பப்பட்ட ஒரு தோல் தலையணை, இரு திருகைகள், ஒரு தோல் துருத்தி, இரு குடங்கள் ஆகியவைகளை அனுப்பி வைத்தார்கள்”. ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ஒரு நாள் நான், பாத்திமா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! கிணற்றிலிருந்து வாலியால் நீர் இறைத்து, இறைத்து எனது நெஞ்சில் வலி உண்டாகிவிட்டது. உமது தந்தையிடம் சில கைதிகளை அல்லாஹ் அனுப்பி வைத்துள்ளான். அவர்களிடம் சென்று பணியாளர் ஒருவரைக் கேட்டுவாரும்!” என்று கூறினேன். ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள் “நான் திருகையில் மாவு அரைத்து, அரைத்து எனது கையிலும் தழும்பு உண்டாகிவிட்டது” எனக் கூறினார்கள், அவர்கள் நபியவர்களின் சமுகம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “அருமை மகளே! என்ன காரியமாக வந்தீர்?” என்று கேட்டார்கள். ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள், “ஸலாம் சொல்வதற்காக வந்தேன்” என்று சொல்லிவிட்டு, வெட்கத்தினால் வந்த நோக்கத்தைச் சொல்லாமல் வீடு திரும்பிவிட்டார்கள். “நபி (ஸல்) அவர்களிடம் சென்று வந்ததைப் பற்றி நான் அவர்களிடம் வினவியதற்கு, “வெட்கத்தினால் பணியாளரைக் கேட்கவில்லை‘ என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து நபி (ஸல்) அவர்களின் சமுகம் வந்தோம். “யாரஸூலல்லாஹ், கிணற்றிலிருந்து நீர் இறைத்து, இறைத்து எனது நெஞ்சில் வலி ஏற்பட்டுவிட்டது” என்று நான் சொல்ல, “திருகை அரைத்து அரைத்து எனது கைகளில் தழும்பு ஏற்பட்டுவிட்டது. அல்லாஹ் தங்களிடம் கைதிகளை அனுப்பிவைத்துள்ளான், சிறிது வசதியையும் செய்துள்ளான். ஆகவே எங்களுக்கும் ஒரு பணியாளரைத் தாருங்கள்!” என்று ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள், வேண்டினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! திண்ணைத் தோழர்கள் பட்டினியாக இருந்ததினால் அவர்களின் வயிற்றில் சுருக்கத்தின் அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு கொடுக்க என்னிடம் வேறு எதுமில்லை. அதனால், இந்த அடிமைகளை விற்று அப்பணத்தைத் திண்ணைத் தோழர்களுக்குச் செலவிடுவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இருவரும் திரும்பி வந்துவிட்டோம், (அன்று) இரவில் நாங்கள் இருவரும் சிறிய கம்பளியொன்றில் படுத்திருந்தோம். அக்கம்பளியால் தலையை மூடினால் கால்பகுதி திறந்துகொள்ளும். கால் பகுதியை மூடினால் தலைப்பகுதி திறந்து கொள்ளும், அச்சமயம் எதிர்பாராதவிதமாக நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நாங்கள் இருவரும் உடனடியாக எழுந்து கொள்ள முயன்றோம், “அப்படியே படுத்திருங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, பிறகு “நீங்கள் என்னிடம் வேளையாள் கேட்டீர்கள், அதைவிடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் சொல்லித்தரட்டுமா?” எனக் கேட்டார்கள். “அவசியம் அறிவியுங்கள்! என்றோம், “ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் சில கலிமாக்களை எனக்குக் கற்றுத் தந்தார்கள். நீங்கள் இருவரும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை அல்லாஹு அக்பர் என்று ஓதி வாருங்கள். உறங்கும் போது 33 முறை சுப்ஹானல்லாஹ், 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 34 முறை அல்லாஹு அக்பர் என்று சொல்லி வாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் இக்கலிமாக்களைக் கற்றுத் தந்த நாளிலிருந்து, இதை ஓதி வருவதை என்றும் நான் விட்டதில்லை” இப்னு கவாஃ (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கலிடம் (நீங்கள்) இக்கலிமாக்களை “ஸிஃப்பீன்‘ போரின் போது இரவிலும் ஓதுவதை விட்டதில்லையா?” எனக் கேட்க, “ஈராக் வாசிகளே! உங்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!, ஸிஃப்பீன் போரின் இரவிலும் இக்கலிமாக்களை விடவில்லை” என்பதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٩– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: خَصْلَتَانِ لاَ يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، يُسَبِّحُ اللهَ دُبُرَ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَيَحْمَدُهُ عَشْرًا وَيُكَبِّرُهُ عَشْرًا قَالَ: فَأَنَا رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَعْقِدُهَا بِيَدِهِ قَالَ: فَقَالَ: خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَي إِلَي فِرَاشِهِ سَبَّحَ وَحَمِدَ وَكَبَّرَ مِائَةً فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ وَاَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ الْوَاحِدِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ قَالَ: كَيْفَ لاَ يُحْصِيهِمَا؟ قَالَ: يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ وَهُوَ فِي صَلاَةٍ فَيَقُولُ: اذْكُرْ كَذَا اُذْكُرْ كَذَا حَتَّي شَغَلَهُ وَلَعَلَّهُ أَنْ لاَ يَعْقِلَ، وَيَأْتِيهِ فِي مَضْجَعِهِ فَلاَ يَزَالُ يُنَوِّمُهُ حَتَّي يَنَامَ.
رواه ابن حبان حديث صحيح:٥/٣٥٤
29. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘”எந்த முஸ்லிம் இரு காரியங்களைத் தம் வாழ்நாளில் வழக்கமாக்கிக் கொள்வாரோ அவர் சொர்க்கத்தில் நிச்சயம் நுழைந்திடுவார், அவ்விரண்டு காரியங்களும் (செய்வதற்கு) எளிதானவை, ஆனால் அதைக் கடைபிடிப்பவர்கள் மிகக் குறைவு, அவை ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை அல்லாஹு அக்பர் என்று சொல்வது”. ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: “நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது, தமது கை விரல்களால் எண்ணிக் கொண்டிருந்தார்கள், பின்பு கூறினார்கள். “பத்துப் பத்து தடவை சொல்வதால் (இம்மூன்று கலிமாக்களை பத்து பத்து தடவை ஐந்து நேரத் தொழுகைக்குப் பின் ஓதுவதால்) 150 முறை ஆகிறது. ஆனால் அமல்களின் தராசில் (பத்து மடங்காகி) 1500 ஆக ஆகிவிடும், மற்றொரு காரியம், படுக்கச் செல்லும் போது, சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று 100 முறை ஓதிக் கொள்ளுங்கள், (சுப்ஹானல்லாஹ் 33 முறை, அல்ஹம்துலில்லாஹ் 33 முறை, அல்லாஹு அக்பர் 34 முறை ஓதி வரவும்) இதை மொழிவதில் நூறு கலிமாக்கள் ஆயின, அதன் நன்மை 1000 ஆகின்றன, (இதனுடையவும் நாள் முழுவதும் தொழுகைகளுக்குப் பிறகு ஓதியவைகளையும் சேர்த்து மொத்தம் 2500 நன்மைகள் ஆகின்றன). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒரு நாளில் 2500 பாவங்களைச் செய்பவர் யார் இருக்க முடியும்?’ அதாவது இவ்வளவு பாவங்கள் நிகழ முடியாது, 2500 நன்மைகள் எழுதப்படுகின்றன, “யாரஸூலல்லாஹ்! இதன் படி அமல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதின் காரணம் என்ன?” என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கேட்டதற்கு, “இக்கலிமாக்களை ஓதும் சிந்தனை வரக்கூடாது என்பதற்காக, தொழுகையில் ஷைத்தான் இன்னின்ன தேவையை, இன்னின்ன காரியங்களை ஞாபகமூட்டுவான். இறுதியில் அந்த எண்ணங்களிலேயே மூழ்கடித்து வேறு வேலைகளில் ஈடுபடுத்திவிடுவான். மேலும், அவன் படுக்கையில் வந்து அவனைத் தூங்கவைத்து விடுகிறான், கடைசியில் இக்கலிமாக்களை ஓதமுடியாமலேயே அவன் தூங்கிவிடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் கூறினார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٣٠– عَنْ مُعَـاذِ بْنِ جَبَلٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ أَخَذَ بِيَدِهِ وَقَالَ: يَا مُعَاذُ وَاللهِ إِنِّي لأُحِبُّكَ فَقَالَ: أُوصِيكَ يَا مُعَاذُ! لاَ تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ تَقُولُ: اَللّهُمَّ أَعِنِّي عَلَي ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ.
رواه ابوداؤد باب في الاستغفار رقم:١٥٢٢
30. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் முஆது (ரலி) அவர்களின், கரங்களைப் பிடித்துக் கொண்டு “முஆதே, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உம்மை நேசிக்கிறேன்”. மேலும், நீர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் (اَللّهُمَّ أَعِنِّي عَلَي ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ) யா அல்லாஹ்! “நான் உன்னை திக்ரு செய்யவும், உனக்கு நன்றி செலுத்தவும் நல்ல முறையில் உன்னை வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக! என்று ஓதிவருவதை நீர் விட்டுவிட வேண்டாம்” என உமக்கு உபதேசிக்கிறேன்” என்று கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣١–عَنْ أَبِي أُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلاَّ أَنْ يَمُوتَ.
رواه النسائي في عمل اليوم والليلة رقم:١٠٠، وفي رواية: وَقُلْ هُوَ اللّهُ أَحَدٌ. رواه الطبراني في الكبير والاوسط باسانيد واحدها جيد مجمع الزوائد:١٠/١٢٨
31. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “எவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் “ஆயத்துல் குர்ஸீ‘ ஓதி வருகிறாரோ, அவர் சுவனம் செல்வதற்கு மரணம் ஒன்றே தடையாக இருக்கிறது”. மற்றொரு அறிவிப்பில், “ஆயத்துல்குர்ஸீயுடன் “குல்ஹுவல்லாஹ்‘ சூரா ஓதுவதையும்” கூறப்பட்டுள்ளது.
(அமலுல்யவ்மு, வல்லைலா, தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٢– عَنْ حَسَنِ بْنِ عَلِيٍّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ الصَّلاَةِ الْمَكْتُوبَةِ كَانَ فِي ذِمَّةِ اللهِ إِلَي الصَّلاَةِ اْلأُخْرَي.
رواه الطبراني واسناده حسن مجمع الزوائد:١٠ /١٢٨
32. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஸனிப்னு அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “பர்ளுத் தொழுகைக்குப் பிறகு “எவர் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அடுத்த பர்ளுத் தொழுகை வரை அவர் அல்லாஹ் வின் பாதுகாப்பில் இருக்கிறார்”.
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٣– عَنْ أَبِي أَيُّوبَ ؓ قَالَ: مَا صَلّيْتُ خَلْفَ نَبِيِّكُمْ ﷺ إِلاَّ سَمِعْتُهُ يَقُولُ حِينَ يَنْصَرِفُ: اَللّهُمَّ اغْفِرْ خَطَايَايَ وَذُنُوبِي كُلَّهَا، اَللّهُمَّ انْعَشْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي لِصَالِحِ اْلاَعْمَالِ وَاْلاَخْلاَقِ لاَ يَهْدِي لِصَالِحِهَا وَلاَ يَصْرِفُ سَيِّئَهَا إِلاَّ أَنْتَ.
رواه الطبراني في الصغير والاوسط واسناده جيد مجمع الزوائد:١٠/١٤٥
33. ஹஜ்ரத் அபூஅய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தொழுத போதெல்லாம் அவர்கள் தொழுத பிறகு (اَللّهُمَّ اغْفِرْ خَطَايَايَ وَذُنُوبِي كُلَّهَا، اَللّهُمَّ انْعَشْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي لِصَالِحِ اْلاَعْمَالِ وَاْلاَخْلاَقِ لاَ يَهْدِي لِصَالِحِهَا وَلاَ يَصْرِفُ سَيِّئَهَا إِلاَّ أَنْتَ) “யா அல்லாஹ் என்னுடைய அனைத்துத் தவறுகளையும், பாவங்களையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனக்கு உயர்வைக் கொடுப்பாயாக! எனது குறைகளை நீக்கிவிடுவாயாக! நற்காரியங்களுக்கும், நற்குணங்களுக்கும் எனக்கு நல்லுதவி செய்வாயாக! நற்செயல்கள், நற்குணங்களுக்கு உன்னைத்தவிர வேறுயாரும் வழிகாட்ட முடியாது. தீயசெயல்கள், தீயகுணங்களை உன்னைத்தவிர வேறுயாராலும் அகற்ற முடியாது” என்ற துஆவை ஓதக் கேட்காமல் தொழுததில்லை.
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٤– عَنْ أَبِي مُوسَي ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ صَلَّي الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ.
رواه البخاري باب فضل صلوة الفجر رقم:٥٧٤
34. “குளுமையான இரண்டு தொழுகைகளைத் தொழுபவர் சுவனத்தில் நுழைவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- இரு குளுமையான தொழுகை என்பது பஜ்ரும் அஸ்ரும் ஆகும். குளிர்ந்த நேரத்தின் முடிவில் பஜ்ரும், குளிர்ந்த நேரத்தின் தொடக்கத்தில் அஸ்ரும் நிறைவேற்றப்படுகின்றன. இவ்விரு தொழுகைகளையும் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், காலை நேரத்தில் தூக்கம் மிகைப்பதால் பஜ்ருத் தொழுகையையும் மாலை நேரத்தில் வேலைகளின் ஈடுபாட்டினால் அஸ்ருத் தொழுகையையும் நிறைவேற்றுவது சிரமமாகி விடுகிறது. எனவே, இவ்விரு தொழுகைகளையும் பேணுதலாக நிறைவேற்றுபவர் நிச்சயமாக மீதியுள்ள மூன்று நேரத் தொழுகைகளையும் பேணுதலாக நிறைவேற்றுவார் என்பதாம்.
(மிர்காத்)
٣٥– عَنْ رُوَيْبَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّي قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا يَعْنِي الْفَجْرَ وَالْعَصْرَ.
رواه مسلم باب فضل صلاتي الصبح والعصر..رقم:١٤٣٦
35. “சூரிய உதயத்திற்கு முன்பும், சூரியன் மறைவதற்கு முன்பும், அதாவது, பஜ்ரும், அஸ்ரும் தொழுபவர் நரகத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ருவைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٦– عَنْ أَبِي ذَرٍّ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ قَالَ فِي دُبُرِ صَلاَةِ الْفَجْرِ وَهُوَ ثَانٍ رِجْلَيْهِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ، كُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَمُحِيَ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ وَكَانَ يَوْمُهُ ذَلِكَ كُلُّهُ فِي حِرْزٍ مِنْ كُلِّ مَكْرُوهٍ وَحَرْسٍ مِنَ الشَّيْطَانِ وَلَمْ يَنْبَغِ لِذَنْبٍ أَنْ يُدْرِكَهُ فِي ذلِكَ الْيَوْمِ إِلاَّ الشِّرْكَ بِاللهِ .
رواه الترمذي وقال هذا حديث حسن صحيح غريب باب في ثواب كلمة التوحيد.. رقم:٣٤٧٤. ورواه النسائي في عمل اليوم والليلة رقم:١١٧. وذكر بِيَدِهِ الْخَيْرُ مكان يُحْيِي وَيُمِيتُ وزاد فيه وَكَانَ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ قَالَهَا عِتْقُ رَقَبَةٍ رقم:١٢٧. ورواه النسائي ايضا في عمل اليوم والليلة من حديث معاذ وزادفيه: وَمَنْ قَالَهُنَّ حِينَ يَنْصَرِفُ مِنْ صَلاَةِ الْعَصْرِ أُعْطِيَ مِثْلَ ذلِكَ فِي لَيْلَتِهِ. رقم:١٢
36. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “எவர் பஜ்ருத் தொழுகைக்குப்பின் (தொழுகையில் உட்கார்ந்திருப்பது போல்) இரு கால்களின் மீது அமர்ந்து பேசுவதற்கு முன் பத்து முறை, (لاَ إِلهَ إِلاَّ اللّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَي كُلِّ شَيْءٍ قَدِيرٌ) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனது உள்ளமை, உயர்பண்புகளில் தனித்தவன், அவனுக்கு இணை யாருமில்லை, இம்மை, மறுமையின் ஆட்சி யாவும் அவனுக்கே உரியன, அனைத்து நன்மைகளும் அவன் கைவசமே உள்ளன, நன்மை அனைத்தும் அவனுக்கே சொந்தமானது, அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான், அவன் யாவற்றின் மீதும் சக்தி பெற்றவன் என்னும் கலிமாக்களை ஓதுகிறாரோ, அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன, பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன, பத்து அந்தஸ்துகள் உயர்த்தப் படுகின்றன, அன்று முழுவதும் விரும்பத்தகாத, எல்லாவகையான காரியங்களை விட்டும் பாதுகாப்பாக இருப்பார். மேலும் இக்கலிமாக்கள், ஷைத்தானிடமிருந்து காப்பாற்றும் காவலாளியின் வேலையைச் செய்யும், அன்றய தினம், ஷிர்க்கைத் தவிர வேறு எந்தப் பாவமும் அவரை நாசமாக்க முடியாது”.மற்றொர் அறிவிப்பில், “ஓதக்கூடிய ஒவ்வொரு கலிமாவுக்கும் ஓர் அடிமையை உரிமைவிட்ட நன்மை கிடைக்கும்” என்றும், அஸ்ருக்குப் பிறகு இதை ஓதுவதாலும், பஜ்ரில் கிடைப்பது போல் அதே அளவு நன்மைகள் இரவு முழுவதும் கிடைக்கிறது என்று வந்துள்ளது. மற்றொரு அறிவிப்பில் (يُحْيِي وَيُمِيتُ) என்பதற்குப் பதிலாக (بِيَدِهِ الْخَيْرُ) என்று உள்ளது.
(திர்மிதீ, அமலுல்யவ்ம் வல்லைலா)
٣٧– عَنْ جُنْدُبِ نِ الْقَسْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلَّي صَلاَةَ الصُّبْحِ فَهُوَ فِي ذِمَّةِ اللهِ فَلاَ يَطْلُبَنَّكُمُ اللهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْيءٍ فَإِنَّهُ مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ يُدْرِكْهُ ثُمَّ يَكُبَّهُ عَلَي وَجْهِهِ فِي نَارِ جَهَنَّمَ.
رواه مسلم باب فضل صلاة العشاء… رقم:١٤٩٤
37. “எவர் பஜ்ருத் தொழுதாரோ அவர் அல்லாஹ் வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார். (எனவே அவரைத் துன்புறுத்தாதீர்கள்), அல்லாஹ் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட மனிதரைத் துன்புறுத்தியதற்காக, உங்களிடம் எவ்வித விசாரணையும் செய்யப்படாமல் இருக்க நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். காரணம், அல்லாஹ் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மனிதரை எவர் துன்புறுத்துகிறாரோ அவரிடம் அல்லாஹ் விசாரணை செய்தால் அவரை நிச்சயம் தண்டிப்பான். பிறகு, அவரை முகங்குப்புற நரகத்தீயில் வீசிவிடுவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ˜ஜுன்துப் கஸ்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٣٨– عَنْ مُسْلِمِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيِّ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ أَنَّهُ أَسَرَّ إِلَيْهِ فَقَالَ: إِذَا انْصَرَفْتَ مِنْ صَلاَةِ الْمَغْرِبِ فَقُلْ: اَللّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِذَا قُلْتَ ذلِكَ ثُمَّ مُتَّ فِي لَيْلَتِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا، وَإِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَقُلْ كَذلِكَ فَإِنَّكَ إِنْ مُتَّ فِي يَوْمِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا.
رواه ابوداؤد باب ما يقول اذا اصبح رقم:٥٠٧٩
38. “நீர் மஃரிபுத் தொழுகைக்குப் பின் (اَللّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ) யா அல்லாஹ்! என்னை நரகிலிருந்து காப்பாயாக என்று ஏழு முறை ஓதி வருவீராக! அன்று இரவே நீர் மரணித்துவிட்டால் நரகிலிருந்து பாதுகாக்கப்படுவீர்! அதே போல் இந்த துஆவை சுபுஹுக்குப் பின்னும் ஏழுமுறை ஓதி வருவீராக. அன்றைய பகலில் நீர் மரணித்துவிட்டால் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்படுவீர்” என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் இரகசியமாகக் கூறியதாக ஹஜ்ரத் முஸ்லிமிப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை: நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னது, கேட்பவருடைய மனதில் சொல்லப்படும் செய்தியின் முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்பதற்காம்.
(பத்லுல் மஜ்ஹூத்)
٣٩– عَنْ أُمِّ فَرْوَةَ ؓ قَالَتْ: سُئِلَ رَسُولُ اللهِ ﷺ أَيُّ اْلاَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: اَلصَّلاَةُ فِي أَوَّلِ وَقْتِهَا.
رواه ابوداؤد باب المحافظة علي الصلوات رقم:٤٢٦
39. ஹஜ்ரத் உம்மு பஃர்வா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அமல்களில் சிறந்தது எது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது “தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது” என்று பதிலளித்தார்கள்.
(அபூதாவூத்)
٤٠– عَنْ عَلِيٍّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يَا أَهْلَ الْقُرْآنِ! أَوْتِرُوا فَإِنَّ اللهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ.
رواه ابوداؤد باب استحباب الوتر رقم:١٤١٦
40. “குர்ஆன் உடையவர்களே! (முஸ்லிம்களே!) நீங்கள் “வித்ரு‘ தொழுகையைத் தொழுது வாருங்கள். ஏனென்றால், அல்லாஹ் “வித்ரு‘ ஆக இருக்கிறான். அவன் வித்ரு தொழுபவர்களை நேசிக்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- ஒற்றைப்படை எண்ணுக்கு “வித்ரு‘ என்று சொல்லப்படும். அல்லாஹ் “வித்ரு‘ ஆக உள்ளான் என்பதன் பொருள் அவனுக்கு இணையாக யாருமில்லை என்பதாகும். வித்ரு தொழுகையின் ரக்அத்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருப்பதும், வித்ரு தொழுவதை அல்லாஹ் நேசிப்பதற்குக் காரணமாகும்.
(மஜ்மஃ பிஹாருல் அன்வார்)
٤١– عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ ؓ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ ﷺ فَقَالَ: إِنَّ اللهَ تَعَالَي قَدْ أَمَدَّكُمْ بِصَلاَةٍ وَهِيَ خَيْرٌ لَّكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ، وَهِيَ الْوِتْرُ فَجَعَلَهَا لَكُمْ فِيمَا بَيْنَ الْعِشَاءِ إِلَي طُلُوعِ الْفَجْرِ.
رواه ابوداؤد باب استحباب الوتر رقم: ١٤١٨
41. ஹஜ்ரத் ஹாரிஜதுப்னு ஹுதாபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அல்லாஹ் “இன்னுமொரு தொழுகையை உங்களுக்குக் கொடுத்துள்ளான். அது சிவப்பு நிற ஒட்டகைகளைவிட உங்களுக்குச் சிறந்தது, அது “வித்ரு‘ தொழுகையாகும், அதற்குரிய நேரம் இஷாத் தொழுகையிலிருந்து பஜ்ரு உதயமாகும்வரை என்று அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்” என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை: அரபியர்களிடம், சிவப்பு நிற ஒட்டகம் மிக்க விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டு வந்தது.
٤٢– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: أَوْصَانِي خَلِيلِي ! بِثَلاَثٍ: بِصَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَالْوِتْرِ قَبْلَ النَّوْمِ، وَرَكْعَتَيِ الْفَجْرِ.
رواه الطبراني في الكبير ورجاله رجال الصحيح مجمع الزوائد:٢/٤٦٠
42. ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, “எனது நேசர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று காரியங்கள் செய்யும்படி உபதேசித்தார்கள். “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைக்கும்படியும், தூங்கும் முன் வித்ரு தொழும் படியும், பஜ்ரின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழும்படியும் உபதேசித்தார்கள்”.
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- இரவில் எழும் பழக்கமுள்ளோருக்கு தூங்கி எழுந்த பிறகு வித்ரு தொழுவது சிறந்தது. இரவில் எழும் பழக்கமில்லையென்றால், தூங்குவதற்கு முன்பே தொழுதுவிட வேண்டும்.
٤٣– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ إِيمَانَ لِمَنْ لاَ أَمَانَةَ لَهُ، وَلاَ صَلاَةَ لِمَنْ لاَ طُهُورَ لَهُ، وَلاَ دِينَ لِمَنْ لاَ صَلاَةَ لَهُ، إِنَّمَا مَوْضِعُ الصَّلاَةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ.
رواه الطبراني في الاوسط والصغير وقال تفرد به الحسين بن الحكم الحبري الترغيب:١/٢٤٦
43. “பாதுகாக்க ஒப்படைக்கப்பட்ட பொருளை (அமானிதத்தை) உரியவரிடம் எவர் திருப்பி ஒப்படைக்கவில்லையோ, அவர் பூரண ஈமான் இல்லாதவர். எவருக்கு உளூ இல்லையோ அவருக்கு தொழுகையில்லை. எவரிடம் தொழுகை இல்லையோ அவருக்கு தீன் இல்லை, தீனில் தொழுகையின் அந்தஸ்து உடலில் தலையின் அந்தஸ்தைப் போன்றதாகும்” (தலையின்றி மனிதன் உயிர் வாழ இயலாதது போல் தொழுகையின்றி தீன் எஞ்சி இருக்காது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ, தர்ஙீப்)
٤٤– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ يَقُولُ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكُ الصَّلاَةِ.
رواه مسلم باب بيان اطلاق اسم الكفر…..، رقم: ٢٤٧
44. “தொழுகையை விடுவது, மனிதனை குப்ரு (இறை நிராகரிப்பு), ஷிர்க் (இறைவனுக்கு இணை வைத்தல்) வரை சேர்த்துவிடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஆலிம்கள் இந்த ஹதீஸிற்குப் பல விளக்கங்கள் கூறியுள்ளனர் அவற்றில் ஒன்று, தொழுகையில்லாதவன், பாவமான செயல்களை தைரியமாக செய்துவிடுகிறான். அதனால் அவன் குஃப்ரில் விழுந்துவிடும் அபாயம் இருக்கிறது என்பதாம், தொழுகை இல்லாதவனுக்குக் தீய மரணம் வரும் வாய்ப்பு உள்ளது என்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது.
(மிர்காத்)
٤٥– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: إِنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ تَرَكَ الصَّلاَةَ لَقِيَ اللهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ.
رواه البزار والطبراني في الكبير وفيه سهل بن محمود ذكره ابن ابي حاتم وقال: روي عنه احمد بن ابراهيم الدورقي وسعدان بن يزيد قلت: وروي عنه محمد بن عبد اللّه المخرمي ولم يتكلم فيه احد وبقية رجاله رجال الصحيح مجمع الزوائد:٢ /٢٦
45. “தொழுகையைவிட்ட மனிதன், அவன் மீது அல்லாஹ் கடுங் கோபம் கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ்வைச் சந்திப்பான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்).
٤٦– عَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ فَاتَتْهُ الصَّلاَةُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلُهُ وَمَالُهُ.
رواه ابن حبان (واسناده صحيح):٤/٣٣٠
46. “ஒருவருக்கு ஒரு நேரத் தொழுகை தவறிவிடுவது, அவரது வீட்டார், பொருட்கள், செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டது போலாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நவ்ஃபல் இப்னு முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٤٧– عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ.
رواه ابوداؤد باب متي يؤمر الغلام بالصلاة رقم: ٤٩٥
47. “உங்கள் குழந்தைகளை, ஏழு வயதில் தொழும்படி ஏவுங்கள், பத்து வயதில், தொழாவிட்டால் அடியுங்கள். மேலும், அவர்களை (சகோதர, சகோதரிகளைத்) தனித்தனிப் படுக்கைகளில் உறங்கவையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்ருப்னு ஷுஐப் (ரலி) அவர்கள் தம் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- உடம்பில் குறை ஏற்பட்டுவிடாமல் அடிக்கவேண்டும்.


ஜமாஅத்துத் தொழுகை

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالى: (وَأَقِيمُوا الصَّلوةَ وَآتُوا الزَّكوةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ۞).
البقرة:٤٣
1. மேலும், நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் நீங்கள் கொடுங்கள், ருகூ செய்பவர்களுடன் நீங்களும் ருகூ செய்யுங்கள்.
(அல்பகரா:43)
ஹதீஸ்கள்:-
٤٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ مَدَي صَوْتِهِ، وَيَشْهَدُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ، وَشَاهِدُ الصَّلاَةِ يُكْتَبُ لَهُ خَمْسٌ وَعِشْرُونَ صَلاَةً، وَيُكَفَّرُ عَنْهُ مَا بَيْنَهُمَا.
رواه ابوداؤد باب رفع الصوت بالاذان رقم:٥١٥
48. “முஅத்தினுடைய குரல் கேட்கும் தொலைவு வரை அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்”, (அவருடைய குரல் கேட்கும் தொலைவுவரை உள்ள இடங்கள் பாவங்களால் நிரம்பி இருந்தாலும், அவை யாவும் மன்னிக்கப்பட்டுவிடும்). அவரது பாங்குச் சப்தத்தைக் கேட்கும் உயிருள்ளவை, உயிரற்றவை யாவும் கியாமத் நாளில் அவருக்காகச் சாட்சி சொல்லும், முஅத்தினுடைய பாங்குச் சப்தத்தைக் கேட்டுத் தொழ வருவோருக்கு 25 தொழுகைகளின் நன்மை எழுதப்படுகிறது. ஒரு தொழுகையிலிருந்து மறு தொழுகைவரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- “25 தொழுகைகளின் நன்மைகள் முஅத்தினுக்கு எழுதப்படுகிறது என்றும் ஒரு பாங்கிலிருந்து மறு பாங்குவரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட முஅத்தினுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று ஆலிம்களில் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.
(பத்லுல் மஜ்ஹூத்)
٤٩– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: يُغْفَرُ لِلْمُؤَذِّنِ مُنْتَهَي أَذَانِهِ، وَيَسْتَغْفِرُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ سَمِعَ صَوْتَهُ.
رواه احمد والطبراني في الكبير والبزار الا انه قال: وَيُـجِيبُهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ. ورجاله رجال الصحيح مـجمع الزوائد:٢ /٨١
49. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “முஅத்தின் உடைய குரல் கேட்கும் பகுதிவரை அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. அவரது குரலைக் கேட்கும் உயிருள்ள, உயிரற்ற படைப்பினங்கள் யாவும் அவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுகின்றன‘ உயிருள்ள, உயிரற்றவை யாவும் அவரது பாங்குக்குப் பதில் கூறுகின்றன” என்று மற்றொர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(முஸ்னத் அஹ்மத், தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித், பஸ்ஸார்)
٥٠– عَنْ أَبِي صَعْصَعَةَ ؓ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ ؓ: إِذَا كُنْتَ فِي الْبَوَادِي فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ فَإِنِّي سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: لاَ يَسْمَعُ صَوْتَهُ شَجَرٌ وَلاَ مَدَرٌ وَلاَ حَجَرٌ وَلاَجِنٌّ وَلاَإِنْسٌ إِلاَّشَهِدَ لَهُ.
رواه ابن خزيمة:١/٢٠٣
50. ஹஜ்ரத் அபூஸஃஸஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நீங்கள் காட்டுப் பகுதியில் இருக்கும்போது, உரத்த குரலில் பாங்கு சொல்லுங்கள். ஏனேனில் “முஅத்தின் உடைய பாங்கு சப்தத்தைக் கேட்கும் மரம், மண்கட்டி, கல், ஜின், மனிதன் யாவரும் கியாமத் நாளில் அவருக்காகச் சாட்சி சொல்வர் ” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்.
(இப்னு குஸைமா)
٥١– عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ؓ أَنَّ نَبِيَّ اللهِ ﷺ قَالَ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الصَّفِّ الْمُقَدَّمِ، وَالْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ بِمَدِّ صَوْتِهِ وَيُصَدِّقُهُ مَنْ سَمِعَهُ مِنْ رَطْبٍ وَّيَابِسٍ، وَلَهُ مِثْلُ أَجْرِ مَنْ صَلَّي مَعَهُ.
رواه النسائي باب رفع الصوت بالاذان رقم:٦٤٧
51. “நிச்சயமாக அல்லாஹ் முதல் வரிசையில் இருப்போரின் மீது அருள் மாரி பொழிகிறான். மலக்குகள், அவர்களுக்கு ரஹ்மத்துக்காக துஆச் செய்கின்றனர். முஅத்தினுடைய சப்தம் எவ்வளவு தூரம் வரை கேட்குமோ, அவ்வளவு அதிகமாகப் பாவம் மன்னிக்கப்படுகிறது. அவரது சப்தத்தைச் செவியுறும் உயிருள்ளவை, உயிரற்றவை யாவும், அவருடைய சொல்லை உண்மைப்படுத்துகின்றன. மேலும், அவருடன் சேர்ந்து தொழுதவர்கள் யாவருக்கும் கிடைக்கும் நன்மைக்குச் சமமான கூலி அவருக்கும் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் பராஇப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸயீ)
தெளிவுரை:- இந்த ஹதீஸின் இரண்டாம் வாக்கியத்திற்கு, “முஅத்தின் பாங்கு சொல்லும் இடத்திலிருந்து பாங்கு சப்தம் போய்ச் சேரும் வரையில் உள்ள இடைப்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த முஅத்தினுடைய பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன” என்று ஆலிம்களில் சிலரும் முஅத்தினின் பாங்கு சப்தம் போய்ச் சேரும் வரையுள்ள பகுதிகளில் வசிப்போரின் பாவங்கள், முஅத்தின் பரிந்து பேசுவதன் மூலம் மன்னிக்கப்படும்” என்று வேறு சிலரும் விளக்கம் அளித்துள்ளனர்.
(பத்லுல் மஜ்ஹூத்)
٥٢– عَنْ مُعَاوِيَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: اَلْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقاً يَوْمَ الْقِيَامَةِ.
رواه مسلم باب فضل الاذان…، رقم: ٨٥٢
52. “முஅத்தின் கியாமத் நாளில் யாவரையும் விட நீண்ட கழுத்து உடையவராக இருப்பார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஆலிம்கள் இந்த ஹதீஸிற்குப் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர், அவற்றில் ஒன்று முஅத்தினுடைய பாங்குச் சப்தம் கேட்டு மக்கள் பள்ளிக்குத் தொழ வருகின்றனர். தொழுகையாளி பின்தொடரக் கூடியவர் ஆகவும், முஅத்தின் முதன்மை யானவராக (அசலாக)வும் ஆகிவிடுகிறார், முதன்மையாக இருப்பவர் தலைவராக இருக்கிறார். அதனால் அவரது தலை அனைவரும் காணும்படியாக அவரது கழுத்து உயரமாக இருக்கும் என்பதாம்.
இரண்டாவது கருத்து: முஅத்தினுக்கு அதிகமான நன்மை கிடைக்கும். அவர் தன்னுடைய அதிகமான நன்மைகளைப் பெற்ற ஆர்வத்தில், கழுத்தை உயர்த்தி, உயர்த்திப் பார்ப்பார். அதனால் அவரது கழுத்து உயரமாகத் தெரியும் என்பதாம்.
மூன்றாவது கருத்து: முஅத்தின் தனது அமல்களினால் கைசேதப் படமாட்டார் என்பதால் அவரது கழுத்து நீண்டிருக்கும். கைதேசப்படுபவரின் கழுத்து தாழ்ந்திருக்கும் என்பதாம்.
நான்காவது கருத்து: கழுத்து நீளமாக இருக்கும் என்பதன் பொருள், மஹ்ஷர் மைதானத்தில் முஅத்தின் எல்லாரையும் விடத் தனித்தன்மை மிக்கவராகக் காட்சி தருவார் என்பதாம். இன்னும் சில ஆலிம்கள் “கியாமத் நாளில் முஅத்தின் சுவனத்தை நோக்கி, விரைந்து செல்வார்” என்பதாக இந்த ஹதீஸிற்கு பொருள் கூறியுள்ளனர்.
(நவவீ)
٥٣– عَنِ ابْنِ عُمَرَ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ أَذَّنَ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَكُتِبَ لَهُ فِي كُلِّ مَرَّةٍ بِتَأْذِينِهِ سِتُّونَ حَسَنَةً وَبِإِقَامَتِهِ ثَلاَثُونَ حَسَنَةً.
رواه الحاكم وقال هذا حديث صحيح علي شرط البخاري:١/٢٠٥
53. “எவர் பனிரெண்டு வருடங்கள் பாங்கு சொல்வாரோ அவருக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது, ஒவ்வொரு பாங்குக்குப் பகரமாக, 60 நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன, ஒவ்வொரு இகாமத்திற்குப் பகரமாக 30 நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٥٤– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثَلاَثَةٌ لاَ يَهُولُهُمُ الْفَزَعُ اْلاَكْبَرُ، وَلاَ يَنَالُهُمُ الْحِسَابُ، هُمْ عَلَي كَثِيبٍ مِنْ مِسْكٍ حَتَّي يُفْرَغَ مِنْ حِسَابِ الْخَلاَئِقِ: رَجُلٌ قَرَأَ الْقُرَانَ ابْتِغَاءَ وَجْهِ اللهِ وَأَمَّ بِهِ قَوْماً وَهُمْ رَاضُونَ بِهِ، وَدَاعٍ يَدْعُو إِلَي الصَّلَوَاتِ ابْتِغَاءَ وَجْهِ اللهِ، وَعَبْدٌ أَحْسَنَ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ رَبِّهِ وَفِيمَا بَيْنَهُ وَبَيْنَ مَوَالِيهِ.
رواه الترمذي باختصار وقد رواه الطبراني في الاوسط والصغير وفيه عبد الصمد بن عبد العزيز المقري ذكره ابن حبان في الثقات مجمع الزوائد:٢/٨٥
54. “மூன்று மனிதர்களுக்கு கியாமத் நாளின் கடும் திடுக்கத்தின் பயமோ, கேள்வி கணக்கோ கிடையாது. படைப்பினங்கள் யாவும் தமது கேள்வி கணக்குகளை முடித்துக் கொள்ளும் வரை அவர்கள் கஸ்தூரி மேடைகளின் மேல் உல்லாசமாகச் சுற்றித் திரிவார்கள். அவர்கலில் முதலாமவர், அல்லாஹ் வின் பொருத்தத்திற்காக குர்ஆன் ஓதி, அவருக்குப் பின் நின்று தொழுதவர்கள் அவர் மீது திருப்தியுற்ற நிலையில் தொழவைத்த இமாம். இரண்டாமவர், அல்லாஹ் வின் பொருத்தத்திற்காக மக்களைத் தொழுகைக்கு அழைத்தவர். மூன்றாமவர், தன் இரட்சகனின் கடமைகளையும் நல்ல முறையில் ஆற்றி–தன் எஜமானின் கடமைகளையும் நன்முறையில் நிறைவேற்றிய அடிமை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ, தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٥٥– عَنْ عَبْدِاللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثَلاَثَةٌ عَلَي كُثْبَانِ الْمِسْكِ – أُرَاهُ قَالَ – يَوْمَ الْقِيَامَةِ يَغْبِطُهُمُ اْلاَوَّلُونَ وَاْلآخِرُونَ: رَجُلٌ يُنَادِي بِالصَّلَوَاتِ الْخَمْسِ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، وَرَجُلٌ يَؤُمُّ قَوْماً وَهُمْ بِهِ رَاضُونَ، وَعَبْدٌ أَدَّي حَقَّ اللهِ وَحَقَّ مَوَالِيهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب احاديث في صفة الثلاثة الذين يحبهم اللّه رقم:٢٥٦٦
55. “மூன்று வகை மனிதர்கள் கியாமத் நாளில் கஸ்தூரி மேடைகலில் அமர்ந்திருப்பர், அவர்களைக் கண்டு முன்னோர், பின்னோர் யாவரும் பொறாமை கொள்வர், முதல் வகை மனிதர், இரவு பகலில் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு பாங்கு சொல்லி வந்தவர். இரண்டாம் வகை மனிதர், மக்கள் திருப்தியுற்ற நிலையில் மக்களுக்குத் தொழ வைத்த இமாம். மூன்றாம் வகை மனிதர், அல்லாஹ் வின் கடமைகளையும் நிறைவேற்றி தனது எஜமானனுடைய கடமைகளையும் நிறைவேற்றி வந்த அடிமை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٥٦– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْإِمَامُ ضَامِنٌ وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ، اَللّهُمَّ! أَرْشِدِ اْلاَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِينَ.
رواه ابوداؤد باب ما يجب علي المؤذن ….، رقم:٥١٧
56. “இமாம் பொறுப்பாளியாவார், முஅத்தின் நம்பிக்கைக்குரியவர், “யா அல்லாஹ் இமாம்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக, முஅத்தின்களின் பாவங்களை மன்னிப்பாயாக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- “இமாம் பொறுப்பாளி‘ என்பதன் பொருள் இமாமின் மீது தன்னுடைய தொழுகை மட்டுமல்லாமல் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகையுடைய பொறுப்பும் இருக்கிறது. எனவே எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு இமாம் வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் நன்முறையில் தொழுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகத் துஆவும் செய்துள்ளார்கள். “முஅத்தின் நம்பிக்கைக்குரியவர்‘ என்பதன் பொருள் மக்கள், தொழுகை, நோன்புடைய நேரங்களில் இவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே முஅத்தின் சரியான நேரத்தில் பாங்கு சொல்வது அவசியமாகும், சில சமயங்களில் பாங்குடைய நேரங்களில் முஅத்தினால் தவறு ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அவருடைய பாவத்தை மன்னிக்கும்படி வேண்டியுள்ளார்கள்.
(பத்லுல் மஜ்ஹூத்)
٥٧– عَنْ جَابِرٍ ؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلاَةِ ذَهَبَ حَتَّي يَكُونَ مَكَانَ الرَّوْحَاءِ، قَالَ سُلَيْمَانُ رَحِمَهُ اللهُ: فَسَاَلْتُهُ عَنِ الرَّوْحَاءِ؟ فَقَالَ: هِيَ مِنَ الْمَدِينَةِ سِتَّةٌ وَّثَلاَثُونَ مِيلاً.
رواه مسلم باب فضل الاذان ….،رقم:٨٥٤
57. “ஷைத்தான், பாங்கு சப்தத்தைக் கேட்டதும், “ரவ்ஹா” என்ற இடம் வரை சென்றுவிடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.”நான், ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ரவ்ஹாவைப் பற்றிக் கேட்டேன் அது மதீனாவிளிருந்து 36 மைல் தூரத்தில், உள்ளது என்று கூறினார்கள்” என ஹஜ்ரத் சுலைமான் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.
(முஸ்லிம்)
٥٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّي لاَيَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قُضِيَ التَّأْذِينُ أَقْبَلَ حَتَّي إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّي إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ، حَتَّي يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ لَهُ: اُذْكُرْ كَذَا وَاذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ مِنْ قَبْلُ، حَتَّي يَظَلَّ الرَّجُلُ مَا يَدْرِي كَمْ صَلَّي.
رواه مسلم باب فضل الاذان ….، رقم:٨٥٩
58. “தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால், பாங்கு சப்தம் தன் காதில் விழாமலிருக்க சப்தமாக காற்றை வெளியாக்கியவாறு ஷைத்தான் புற முதுகிட்டு ஓடிவிடுகிறான், பிறகு பாங்கு சொல்லி முடிக்கப்பட்டதும் திரும்பி வந்துவிடுகிறான். இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடிக்கப்பட்டதும் தொழுகையாளியின் மனதில் ஊசலாட்டத்தைப் போடத் திரும்பி வந்து விடுகிறான். தொழுகையாளியிடம், “இன்ன, இன்ன காரியத்தை நினைத்துப்பார்‘ என்று சொல்கிறான். தொழுகையாளிக்கு தொழுகைக்கு முன் நினைவில் இல்லாத காரியங்களையெல்லாம் ஞாபக மூட்டிவிடுகிறான். இறுதியில் தொழுகையாளிக்கு எத்தனை ரக்அத் தொழுதேன் என்பது கூடத் தெரியாமல் போய்விடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூடியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٥٩– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: لَوْ يَعْلَمُ النَّاسُ مَافِي النِّدَاءِ وَالصَّفِّ اْلاَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْـتَهَمُوا.
(وهو جزء من الحـــديث) رواه البخــــاري بـاب الاستهام في الاذان، رقم:٦١٥
59. “பாங்கு சொல்வதின் நன்மை மற்றும் முதல் வரிசையில் தொழுவதின் நன்மை மக்களுக்கு தெரிந்துவிட்டால், சீட்டு குலுக்கிப் போடுவதன் மூலம் தான் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் சீட்டு குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٦٠– عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا كَانَ الرَّجُلُ بِأَرْضِ قِيٍّ فَحَانَتِ الصَّلاَةُ فَلْيَتَوَضَّأْ، فَإِنْ لَمْ يَجِدْ مَاءً فَلْيَتَيَمَّمْ فَإِنْ أَقَامَ صَلَّي مَعَهُ مَلَكَاهُ، وَإِنْ أَذَّنَ وَأَقَامَ صَلَّي خَلْفَهُ مِنْ جُنُودِ اللهِ مَالاَ يُرَي طَرَفَاهُ.
رواه عبدالرزاق في مصنفه:١/٥١٠
60. “எவரொருவர் காட்டில் இருக்கும்போது தொழுகை நேரம் வந்துவிட்டால் உளூச் செய்து கொள்ளவும், தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளவும். பிறகு அவர் இகாமத் சொல்லித் தொழும்போது, அவருடைய இரு புறங்களிலும் உள்ள (நன்மை, தீமை எழுதும்) இரு மலக்குகள் அவருடன் தொழுகின்றனர். அவர் பாங்கு சொல்லிவிட்டு இகாமத் சொல்லித் தொழும்போது அவருக்குப் பின் அல்லாஹ் வின் படையினரின், (மலக்குகளின்) பெரும் கூட்டத்தினர் தொழுகின்றனர். அவர்களின் வரிசையின் இரு முனைகளையும் பார்க்க இயலாத அளவு பெரும் தொகையினராக இருப்பர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்)
٦١– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَاْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ يُؤَذِّنُ للِصَّلاَةِ وَيُصَلِّي فَيَقُولُ اللهُ : أُنْظُرُوا إِلَي عَبْدِي هذَا يُؤَذِّنُ وَيُقِيمُ للِصَّلاَةِ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ.
رواه ابوداؤد باب الاذان في السفر، رقم:١٢٠٣
61. “மலை உச்சியில் ஆடு மேய்க்கும் ஒருவர் பாங்கு சொல்லித் தொழும் போது, அளவற்ற ஆனந்தமடையும் உமது இரட்சகன், மலக்குகளிடம், பாங்கு சொல்லித் தொழும் எனது அடியானைப் பாருங்கள், எனது பயத்தினால் இவையனைத்தையும் செய்கிறான், நான் எனது அடியானை மன்னித்துவிட்டேன். மேலும் அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்ய முடிவு செய்துவிட்டேன்” என்று கூறுவதாக ரஸூலுல்லாஹி (ரலி) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٦٢–عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثِنْتَانِ لاَتُرَدَّانِ أَوْ قَلَّمَا تُرَدَّانِ: الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ، وَعِنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُ بَعْضاً.
رواه ابوداؤد، باب الدعاء عند اللقاء، رقم:٢٥٤٠
62. “இரு நேரங்களில் கேட்கப்படும் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை, ஒன்று, பாங்கு சொல்லும் நேரத்தில், மற்றொன்று கடுமையான யுத்தம் தொடங்கிய நேரத்தில்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٦٣– عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لاَّ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبّاً وَّبِمُحَمَّدٍ رَسُولاً وَبِالْإِسْلاَمِ دِيناً، غُفِرَ لَهُ ذَنْبُهُ.
رواه مسلم باب استحباب القول مثل قول المؤذن لمن سمعه ….، رقم: ٨5١
63. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃதுப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “எவர் முஅஃத்தினின் பாங்குச் சப்தத்தைக் கேட்டு, (وَأَنَا أَشْهَدُ أَنْ لاَّ إِلهَ إِلاَّ اللّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللّهِ رَبّاً وَّبِمُحَمَّدٍ رَسُولاً وَبِالْإِسْلاَمِ دِيناً) “அல்லாஹ் வைத் தவிர வேறு எந்த நாயனும் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாரும் இணையில்லை”. மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹுதலாவின் அடியாரும், தூதருமாவார் என்று நானும் சாட்சி சொல்கிறேன். மேலும், நான் அல்லாஹ் வை இரட்சகனாகவும், முஹம்மது, (ஸல்) அவர்களை அல்லாஹ் வின் அடியாராகவும், ரஸூலாகவும், இஸ்லாத்தை தீனாகவும் ஏற்று அதை நான் பொருந்திக் கொண்டேன்” என்று சொல்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
(முஸ்லிம்)
٦٤– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ يَقُولُ: كُنَّا مَعَ رَسُولُ اللهِ ﷺ، فَقَامَ بِلاَلٌ يُنَادِي فَلَمَّا سَكَتَ قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ مِثْلَ هذَا يَقِيناً دَخَلَ الْجَنَّةَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه هكذا ووافقه الذهبي:١/٢٠٤
64. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்ல எழுந்தார்கள், பாங்கு சொல்லி முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “எவர் உறுதியான நம்பிக்கையுடன் முஅஃத்தின் சொல்லும் வார்த்தைகளைத் தானும் சொல்கிறாரோ அவர் சுவனத்தில் நுழைவார்” என்று சொன்னார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
தெளிவுரை:- பாங்குக்கு பதில் சொல்பவர் முஅஃத்தின் கூறும் வார்த்தைகளையே திரும்பச் சொல்லவேண்டும் என்று இந்த அறிவிப்பின் மூலம் விளங்குகிறது. ஆயினும், ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஹய்ய அலஸ்ஸலாஹ் மற்றும் ஹய்ய அலல்ஃபலாஹ்விற்கு பதிலாக லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லா என்று சொல்லவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
(முஸ்லிம்)
٦٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ أَنَّ رَجُلاً قَالَ: يَارَسُولَ اللهِﷺ إِنَّ الْمُؤَذِّنِينَ يَفْضُلُونَنَا، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: قُلْ كَمَا يَقُولُونَ فَإِذَا انْتَهَيْتَ فَسَلْ تُعْطَهُ.
رواه ابوداؤد باب مايقول اذا سمع المؤذن، رقم:٥٢٤
65. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள், ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “யா ரஸூலல்லாஹ், பாங்கு சொல்பவர்கள், எங்களைவிட நன்மையிலும் கூலியிலும் முந்திவிட்டனர்!’ (நாங்களும் பாங்கு சொல்பவரின் சிறப்பை அடைய ஏதேனும் அமல் உண்டா?) என்று கேட்டார். “முஅத்தின் சொல்லும் வார்த்தைகளை நீரும் சொல்லும், பாங்குக்கு பதில் சொல்லி முடிந்ததும் துஆக்கேளும்‘ (எதைக் கேட்டீரோ) அது கொடுக்கப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(அபூதாவூத்)
٦٦– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَايَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّي عَلَيَّ صَلاَةً صَلَّي اللهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لاَ تَنْبَغِي إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِيَ الْوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ.
رواه مسلم باب استحباب القول مثل قول المؤذن لمن سمعه…، رقم:٨٤٩
66. “முஅஃத்தினுடைய சப்தத்தை நீங்கள் கேட்டால், முஅஃத்தின் கூறுவது போன்று நீங்களும் கூறுங்கள், பிறகு என் மீது ஸலவாத் சொல்லுங்கள். என் மீது ஒரு முறை ஸலவாத் சொன்னால் அல்லாஹ் அவர் மீது பத்து ரஹ்மத்துகளைப் பொழிவான். பிறகு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள், ஏனேனில், வஸீலா என்பது அல்லாஹ் வின் அடியார்களில் ஓர் அடியாருக்காக சுவனத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பான தகுதியாகும். அந்த அடியான் நானாகவே இருப்பேன் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறேன், எவர் எனக்காக வஸீலாவைக் கேட்பாரோ நான் அவருக்காகப் பரிந்து பேசுவதற்குரிய (சிபாரிசு பெறுவதற்குரிய) தகுதியைப் பெறுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னுஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٦٧– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اَللّهُمَّ رَبَّ هذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدَا نِ الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَاماً مَّحْمُودَانِ الّذِي وَعَدْتَّهُ حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ.
رواه البخاري باب الدعاء عند النداء رقم:٦١٤. ورواه البيهقي في سننه الكبري وزاد في آخره: إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ:١/٤١٠
67. “எவர் பாங்கு சப்தம் கேட்டதும், (اَللّهُمَّ رَبَّ هذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدَا نِ الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَاماً مَّحْمُودَانِ الّذِي وَعَدْتَّهُ) “யா அல்லாஹ்! இந்த முழுமையான அழைப்புடையவும், (பாங்கிற்குப் பிறகு) நிறைவேற்றப்படும் தொழுகையுடையவும் இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு “வஸீலா”வை வழங்குவாயாக! சிறப்பையும் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த “மகாமே மஹ்மூதில்” அவர்களைச் சேர்த்து வைப்பாயாக! சந்தேகமின்றி நீ வாக்கு மாற மாட்டாய்”, என்று அல்லாஹ் விடம் யார் துஆச் செய்கிறாரோ, அவருக்கு கியாமத் நாளில் பரிந்துரைப்பது என் மீது கடமையாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி, பைஹகீ)
٦٨–عَنْ جَابِرٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ قَالَ حِينَ يُنَادِي الْمُنَادِي: اَللّهُمَّ رَبَّ هذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ النَّافِعَةِ صَلِّ عَلَي مُحَمَّدٍ وَارْضَ عَنْهُ رِضاً لاَ تَسْخَطُ بَعْدَهُ اسْتَجَابَ اللهُ لَهُ دَعْوَتَهُ.
رواه احمد: ٣ /٣٣٧
68. “பாங்கு சப்தத்தைக் கேட்டதும், (اَللّهُمَّ رَبَّ هذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ النَّافِعَةِ صَلِّ عَلَي مُحَمَّدٍ وَارْضَ عَنْهُ رِضاً لاَ تَسْخَطُ بَعْدَهُ) “யா அல்லாஹ்! இந்த முழுமையான அழைப்பு (பாங்கு) மற்றும் பலன் தரும் தொழுகையின் இரட்சகனே! ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது ரஹ்மத்தைப் பொழிவாயாக! இதற்குப் பிறகு எப்போதும் கோபப்படாதவாறு நீ அவர்களைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று யார் துஆக் கேட்பாரோ, அவரது துஆவை அல்லாஹ் ஒப்புக் கொள்வான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٦٩– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ اْلاَذَانِ واْلإِقَامَةِ، قَالُوا: فَمَاذَا نَقُولُ يَارَسُولُ اللهِ؟ قَالَ: سَلُوا اللهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب في العفو والعافية، رقم:٣٥٩٤
69. ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “பாங்குக்கும், இகாமதுக்குமிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படுவதில்லை, (ஒப்புக் கொள்ளப்படுகிறது)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, “யாரஸூலல்லாஹ்! நாங்கள் எதைக் கேட்க வேண்டும்?” என ஸஹாபாக்கள் கேட்டனர். “அல்லாஹ்விடம் இம்மை, மறுமையின் சுகத்தைக் கேளுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(திர்மிதீ)
٧٠– عَنْ جَابِرٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ فُتِحَتْ أَبْوَابُ السَّمَاءِ وَاسْتُجِيبَ الدُّعَاءُ.
رواه احمد: ٣ /٣٤٢
70. “தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٧١– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ يَقُولُ: مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَي الصَّلاَةِ فَإِنَّهُ فِي صَلاَةٍ مَاكَانَ يَعْمِدُ إِلَي الصَّلاَةِ، وَإِنَّهُ يُكْتَبُ لَهُ بِإِحْدَي خُطْوَتَيْهِ حَسَنَةٌ، وَيُمْحَي عَنْهُ بِاْلأُخْرَي سَيِّئَةٌ، فَإِذَا سَمِعَ أَحَدُكُمُ اْلإِقَامَةَ فَلاَ يَسْعَ، فَإِنَّ أَعْظَمَكُمْ أَجْرًا أَبْعَدُكُمْ دَارًا قَالُوا: لِمَ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: مِنْ أَجْلِ كَثْرَةِ الْخُطَا.
رواه الامام مالك في الموطا، جامع الوضوء ص:٢٢
71. “எவர் நல்ல முறையில் உளூச் செய்து, தொழுகையை நாடியவராக பள்ளிக்குச் செல்கிறாரோ, அவர் தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் வரை அவருக்குத் தொழுகையின் நன்மை கிடைத்துக் கொண்டிருக்கும். அவரது ஓர் எட்டுக்கு ஒரு நன்மை எழுதப்பட்டு, அடுத்த எட்டுக்கு ஒரு தீமை அழிக்கப்படுகிறது, உங்களில் யாரேனும் இகாமத் சொல்லக் கேட்டால் பள்ளிக்கு ஓடிச் செல்லவேண்டாம், உங்களில் யாருடைய இல்லம் பள்ளியிலிருந்து எந்த அளவு தூரமாக இருக்குமோ, அந்தளவு அவருக்கு அதிகமான நன்மை கிடைக்கும்” என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய பொழுது, “அபூஹுரைரா! வீடு தூரமாக இருப்பதால் அதிகமான நன்மை ஏன் கிடைக்கிறது?” என்று அவர்களது மாணவர்கள், கேட்டனர். “அதிகமான எட்டுகள் வைத்து நடந்து வருவதனால்!” என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(முஅத்தா இமாம் மாலிக்)
٧٢– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ أَبُوالْقَاسِمِ ﷺ: إِذَاتَوَضَّأَ أَحَدُكُمْ فِي بَيْتِهِ، ثُمَّ أَتَي الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ حَتَّي يَرْجِعَ فَلاَ يَقُلْ هكَذَا، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط الشيخين ولم يخرجاه ووافقه الذهبي:١ /٢٠٦
72. “உங்களில் ஒருவர், தமது வீட்டிலிருந்து உளூச் செய்துவிட்டு பள்ளி வாசலுக்கு வந்தால் அவர் திரும்ப வீட்டிற்குச் செல்லும் வரை அவருக்குத் தொழுகையின் நன்மை கிடைக்கும்” என்று கூறிய ரஸூலுல்லாஹி (ரலி) அவர்கள், தமது கைவிரல்களில் ஒன்றோடு மற்றொன்றைக் கோர்த்துக் காட்டி, “அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்‘ என்று கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
தெளிவுரை:- எவ்வாறு தொழுகையில் தனது கைவிரல்களை ஒன்றோடு மற்றொன்றைக் கோர்ப்பது கூடாதோ, தேவையின்றி இவ்வாறு செய்வது விரும்பத்தக்க செயல் இல்லையோ. அவ்வாறே வீட்டிலிருந்து உளூச் செய்து பள்ளிக்குத் தொழ வருபவருக்கும் இது முறையில்லாத செயலாகும். காரணம், இவர் தொழுகையின் நன்மையைப் பெறுவதால் இவர் தொழுகையில் இருப்பவரைப் போன்று ஆகிவிடுகிறார், இது பற்றி மற்றொரு அறிவிப்புகளில் விபரமாகக் கூறப்பட்டுள்ளது.
٧٣– عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ؒ عَنْ رَجُلٍ مِنَ اْلأَنْصَارِ أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ خَرَجَ إِلَي الصَّلاَةِ، لَمْ يَرْفَعْ قَدَمَهُ الْيُمْنَي إِلاَّ كَتَبَ اللهُ لَهُ حَسَنَةً، وَلَمْ يَضَعْ قَدَمَهُ الْيُسْرَي إِلاَّحَطَّ اللهُ عَنْهُ سَيِّئَةً، فَلْيُقَرِّبْ أَحَدُكُمْ أَوْ لِيُبَعِّدْ، فَإِنْ أَتَي الْمَسْجِدَ فَصَلَّي فِي جَمَاعَةٍ غُفِرَ لَهُ، فَإِنْ أَتَي الْمَسْجِدَ وَقَدْ صَلَّوْا بَعْضاً وَبَقِيَ بَعْضٌ صَلَّي مَاأَدْرَكَ وَأَتَمَّ مَابَقِيَ، كَانَ كَذلِكَ، فَإِنْ أَتَي الْمَسْجِدَ وَقَدْ صَلَّوْا فَأَتَمَّ الصَّلاَةَ، كَانَ كَذلِكَ.
رواه ابوداؤد باب ماجاء في الهدي في المشي الي الصلاة، رقم:٥٦٣
73. “உங்களில் ஒருவர் நல்ல முறையில் உளூச் செய்து பின் தொழச் சென்றால், அவர் தன் வலது காலை ஒவ்வொரு முறை உயர்த்தும் பொழுதும் அல்லாஹ் அவருக்கு ஒவ்வொரு நன்மையை எழுதுகிறான். அவர் எடுத்து வைக்கும் இடது பாதத்துடைய ஒவ்வொரு எட்டுக்கும் ஒவ்வொரு தீமையை அழிக்கிறான். (சிறுசிறு எட்டுகள் எடுத்து வைப்பது, அல்லது நீள, நீளமான எட்டுகள் எடுத்து வைப்பது அவரது விருப்பம்) அவர் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. அவர் பள்ளிவாசலுக்கு வருகிறார்; ஜமாஅத் நடந்து கொண்டிருக்கிறது; மக்கள் தொழுகையின் ஒரு பகுதியை தொழுதுவிட்டு மேலும் மறுபகுதி தொழுகை மீதமிருக்கிறது, தனக்குக் கிடைத்த ரக்அத்தை (ஜமாத்துடன்) தொழுதுவிட்டு மீதமுள்ளதைத் தனியாகப் பூர்த்தி செய்தால், அவருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது. அவர் பள்ளிவாசலுக்கு வந்து மக்கள் தொழுதுவிட்டதைப் பார்த்து, தனது தொழுகையைத் தனியாக அவர் நிறைவேற்றினால் அவருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்ஸாரி ஸஹாபி (ரலி) ஒருவர் மூலம் ஹஜ்ரத் ஸஈத் இப்னு முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(அபூதாவூத்)
٧٤– عَنْ أَبِي أُمَامَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَي صَلاَةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ، وَمَنْ خَرَجَ إِلَي تَسْبِيحِ الضُّحَي لاَ يُنْصِبُهُ إِلاَّإِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِالْمُعْتَمِرِ، وَصَلاَةٌ عَلَي إِثْرِ صَلاَةٍ لاَ لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ.
رواه ابوداود باب ما جاء في فضل المشي الي الصلوة، رقم:٥٥٨
74. “எவர் தமது வீட்டிலிருந்து உளூச் செய்துவிட்டு பர்ளுத் தொழுகையை நாடி வெளியேறுகிறாரோ, அவருக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜிக்குச் செல்பவரின் நன்மையைப் போன்று கிடைக்கிறது. எம்மனிதர், ளுஹாத் தொழுகைக்காகச் சிரமமெடுத்துத் தம் இடத்தைவிட்டு வெளியேறுகிறாரோ, அவருக்கு உம்ரா செய்பவருக்கு சமமான நன்மை கிடைக்கிறது. ஒரு தொழுகைக்கு பிறகு எவ்வித வீண் வேலையும் செய்யாமல், எந்த பயனற்ற பேச்சும் பேசாமல், மறுதொழுகையை நிறைவேற்றுவது, உயர் பதவிகளுக்குரிய ஏட்டில் எழுதப்படுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٧٥– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَتَوَضَّأُ أَحَدُكُمْ فَيُحْسِنُ وُضُوءَهُ وَيُسْبِغُهُ، ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ فِيهِ إِلاَّ تَبَشْبَشَ اللهُ إِلَيْهِ كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ بِطَلْعَتِهِ.
رواه ابن خزيمة في صحيحه:٢ /٣٧٤
75. “உங்களில் எவர் நல்ல முறையில் உளூச் செய்து, அந்த உளூவைப் பரிபூரணமான முறையில் செய்து, பிறகு தொழுகைக்காக மட்டும் பள்ளிக்கு வருவாரோ, தலைமறைவாகிவிட்ட ஒருவர் திடீரென வருகை தந்தால் அவரது வீட்டார் மகிழ்ச்சி அடைவது போன்று அல்லாஹ் அவரைப் பார்த்து மகிழ்ச்சி அடைவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு குஸைமா)
٧٦– عَنْ سَلْمَانَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ تَوَضَّأَ فِي بَيْتِهِ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَي الْمَسْجِدَ، فَهُوَ زَائِرُ اللهِ، وَحَقٌّ عَلَي الْمَزُورِ أَنْ يُكْرِمَ الزَّائِرَ.
رواه الطبراني في الكبير واحد اسناديه رجاله رجال الصحيح، مجمع الزوائد:٢ /١٤٩
76. “எவர், தமது வீட்டில் நல்ல முறையில் உளூச் செய்து பள்ளிவாசலுக்கு வருகிறாரோ, அவர் அல்லாஹ்வின் விருந்தாளி (அல்லாஹ் உபசரிப்பவன்) விருந்தாளியைக் கண்ணியப்படுத்துவது விருந்துபசரிப்பவரின் கடமை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٧٧– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: خَلَتِ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ، فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَي قُرْبِ الْمَسْجِدِ، فَبَلَغَ ذلِكَ رَسُولُ اللهِ ﷺ، فَقَالَ لَهُمْ: إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ، قَالُوا: نَعَمْ، يَارَسُولَ اللهِﷺ قَدْ أَرَدْنَا ذلِكَ فَقَالَ: يَابَنِي سَلِمَةَ! دِيَارَكُمْ! تُكْتَبْ آثَارُكُمْ، دِيَارَكُمْ! تُكْتَبْ آثَارُكُمْ.
رواه مسلم باب فضل كثرة الخطا الي المساجد، رقم:١٥١٩
77. ஹஜ்ரத் ஜாபிருப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “மஸ்ஜிதுந்நபவியைச் சுற்றிலும் சிறிது காலியிடம் இருந்தது. பனூஸலமா என்ற கோத்திரத்தார் (பள்ளிவாசலுக்கு வெகு தொலைவில் குடியிருந்தனர்) பள்ளி வாசலுக்கு அருகில் குடியேற விரும்பினர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும், அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் குடிவர விரும்புகிறீர்கள் என்று எனக்குச் செய்தி கிடைத்ததே? என்று கேட்டதற்கு “ஆம்! யாரஸூலல்லாஹ், நிச்சயமாக நாங்கள் அதையே விரும்புகிறோம்!” என்று பதில் சொன்னார்கள். “பனூஸலமா கோத்திரத்தினரே! நீங்கள் அங்கேயே இருங்கள், (பள்ளி வரை எடுத்து வைக்கும்) உங்களது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்படுகின்றன. அங்கேயே இருங்கள், (பள்ளி வரை எடுத்துவைக்கும்) உங்களது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மைகள் எழுதப்படுகின்றன” என்று ரஸூலுல்லாஹி (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
٧٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مِنْ حِينَ يَخْرُجُ أَحَدُكُمْ مِنْ مَنْزِلِهِ إِلَي مَسْجِدِي فَرِجْلٌ تُكْتَبُ لَهُ حَسَنَةٌ، وَرِجْلٌ تُحَطُّ عَنْهُ سَيِّئَةٌ حَتَّي يَرْجِعَ.
رواه ابن حبان (واسناده صحيح): ٤/٥٠٣
78. உங்களில் ஒருவர் தமது வீட்டிலிருந்து எனது பள்ளிக்கு வந்ததிலிருந்து அவர் வீடு திரும்பும்வரை ஒவ்வொரு எட்டுக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது, ஒவ்வொரு மறு எட்டுக்கு ஒரு பாவம் அழிக்கப்படுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٧٩– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: كُلُّ سُلاَمَي مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ قَالَ: تَعْدِلُ بَيْنَ اْلاِثْنَيْنِ صَدَقَةٌ، وَتُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ فَتَحْمِلُهُ عَلَيْهَا، أَوْ تَرْفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ. قَالَ: وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ تَمْشِيهَا إِلَي الصَّلاَةِ صَدَقَةٌ، وَتُمِيطُ اْلأَذَي عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ.
رواه مسلم، باب بيان ان اسم الصدقة يقع علي كل نوع من المعروف..، رقم:٢٣٣٥
79. “சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளும், தனது உடம்பின் ஒவ்வோர் இணைப்புக்கும் (அது ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நன்றிக்கடனாக) தருமம் செய்வது ஒவ்வொருவரின் மீதும் கடமை. நீங்கள் இரு மனிதர்களுக்கிடையே நீதி வழங்குவதும் தருமம். ஒருவரை அவரது வாகனத்தில் உட்கார வைப்பதற்கோ, அவரது பொருள்களை அதன் மீது ஏற்றி வைப்பதற்கோ நீங்கள் உதவுவதும் தருமம். நீங்கள் நல்லவைகளை பேசுவதும் தருமம். தொழுகைக்கு எடுத்துவைக்கப்படும் ஒவ்வொரு எட்டும் தருமம் மக்களுக்கு இடையூறாக இருக்கும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் தருமம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٨٠– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: إِنَّ اللهَ لَيُضِيءُ لِلَّذِينَ يَتَخَلَّلُونَ إِلَي الْمَسَاجِدِ فِي الظُّلَمِ بِنُورٍ سَاطِعٍ يَوْمَ الْقِيَامَةِ.
رواه الطبراني في الاوسط واسناده حسن، مجمع الزوائد:٢ /١٤٨
80. “இருளில் பள்ளிக்குச் செல்பவர்களை கியாமத் நாளில் அல்லாஹ், (நாலாபுறமும்) பரவும் ஒளியால் பிரகாசிக்கச் செய்வான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٨١– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلْمَشَّاءُونَ إِلَي الْمَسَاجِدِ فِي الظُّلَمِ، أُولئِكَ الْخَوَّاضُونَ فِي رَحْمَةِ الله.
رواه ابن ماجه وفي اسناده اسماعيل بن رافع تكلم فيه الناس، وقال الترمذي: ضعفه بعض اهل العلم وسمعت محمدا يعني البخاري يقول هو ثقة مقارب الحديث، الترغيب:١/٢١٣
81. “இருளில் அதிகமாகப் பள்ளிக்குச் செல்லக் கூடியவர்கள் தான் அல்லாஹ்வுடைய அருளில் மூழ்கி எழக் கூடியவர்கள்” என்று நபி (ரலி) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா, தர்ஃஙீப்)
٨٢– عَنْ بُرَيْدَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَي الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ.
رواه ابوداؤد باب ما جاء في المشي الي الصلوة في الظلم، رقم:٥٦١
82. “இருளில் அதிகமாகப் பள்ளிக்குச் செல்வோருக்கு, நியாயத் தீர்ப்பு நாளன்று பூரணமான ஒளி கிடைக்கும் என்ற நற்செய்தியைக் கூறி விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٨٣– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَلاَ أَدُلُّكُمْ عَلَي شَيْءٍ يُكَفِّرُ الْخَطَايَا، وَيَزِيدُ فِي الْحَسَنَاتِ؟ قَالُوا: بَلي، يَارَسُولَ اللهِ، قَالَ: إِسْبَاغُ الْوُضُوءِ أَوِالطُّهُورِ فِي الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلي هذَا الْمَسْجِدِ، وَالصَّلاَةُ بَعْد َالصَّلاَةِ، وَمَامِنْ أَحَدٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا حَتَّي يَاْتِيَ الْمَسْجِدَ فَيُصَلِّي مَعَ الْمُسْلِمِينَ أَوْمَعَ اْلإِمَامِ ثُمَّ يَنْتَظِرُ الصَّلاَةَ الَّتِي بَعْدَهَا إِلاَّ قَالَتِ الْمَلاَئِكَةُ: اَللّهُمَّ اغْفِرْلَهُ اَللّهُمَّ ارْحَمْهُ.
(الحديث) رواه ابن حبان (واسناده صحيح):٢/١٢٧
83. “உங்களுடைய பாவங்களை அழித்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் ஒரு செயலை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்ட பொழுது “யாரஸூலல்லாஹ், அவசியம் அறிவித்துத் தாருங்கள்!” என்று ஸஹாபாக்கள் வேண்டினார்கள். “மனம் விரும்பாத பொழுது (குளிர் காலத்தில்) நல்ல முறையில் உளூச் செய்வது, பள்ளியை நோக்கி அதிகமாக நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப் பிறகு மறுதொழுகைக்காக காத்திருப்பது, எவர் தமது வீட்டில் உளூச் செய்து பள்ளிக்குச் சென்று முஸ்லிம்களுடன் ஜமாஅத்தாகத் தொழுதுவிட்டு, அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பாரோ அவருக்காக மலக்குகள், “யா அல்லாஹ், அவரை மன்னிப்பாயாக! யா அல்லாஹ், அவர் மீது அருள் புரிவாயாக!” என்று துஆச் செய்கின்றனர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٨٤– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: أَلاَ أَدُلُّكُمْ عَلَي مَا يَمْحُو اللهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟ قَالُوا: بَلَي، يَارَسُولَ اللهِﷺ قَالَ: إِسْبَاغُ الْوُضُوءِ عَلَي الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَي الْمَسَاجِدِ، وَانْتِظَارُالصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ ، فَذلِكُمُ الرِّبَاطُ.
رواه مسلم، باب فضل اسباغ الوضوء علي المكاره، رقم:٥٨٧
84. “அல்லாஹ், உங்களுடைய பாவங்களை அழித்து அந்தஸ்துகளை உயர்த்துவதற்குக் காரணமாகும் அமலை உங்களுக்குச் சொல்லித்தரட்டுமா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “யாரஸூலல்லாஹ்! அவசியம் சொல்லித் தாருங்கள்! என்று ஸஹாபாக்கள் வேண்டினார்கள். “சிரமமான நேரத்திலும் பரிபூரணமாக உளூச் செய்வது, பள்ளிகளை நோக்கி அதிகமாக நடப்பது, ஒரு தொழுகைக்குப் பிறகு மறு தொழுகைக்காகக் காத்திருப்பது இவைகள் தான் உண்மையில் ரிபாத்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- “ரிபாத்” என்பதன் பொருள், “இஸ்லாமிய நாட்டின் எல்லையில் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கக் கூடாரமடித்துத் தங்குவது என்பதாம். ரிபாத் என்ற வார்த்தைக்கு இதுதான் பிரபல்யமான பொருள். இது மிகப்பெரும் அமல். எல்லைப்புறத்தில் படையில் தங்கிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது போன்று இந்த அமல்கள் மூலம் நப்ஸ், ஷைத்தானின் தாக்குதலிளிருந்து தற்காத்துக் கொள்வதால் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் இந்த அமல்களுக்கு “ரிபாத்‘ என்று கூறியிருக்கலாம்.
(மிர்காத்)
٨٥– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ؓ يُحَدِّثُ عَنْ رَسُولُ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: إِذَا تَطَهَّرَ الرَّجُلُ ثُمَّ أَتَي الْمَسْجِدَ يَرْعَي الصَّلاَةَ كَتَبَ لَهُ كَاتِبَاهُ أَوْكَاتِبُهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَي الْمَسْجِدِ عَشَرَ حَسَنَاتٍ، وَالْقَاعِدُ يَرْعَي الصَّلاَةَ كَالْقَانِتِ، وَيُكْتَبُ مِنَ الْمُصَلِّينَ مِنْ حِينَ يَخْرُجُ مِنْ بَيْتِهِ حَتَّي يَرْجِعَ إِلَيْهِ.
رواه احمد:٤/١٥٧
85. “எவர் நல்ல முறையில் உளூச் செய்து பள்ளிக்கு வந்து தொழுகைக்காக காத்திருப்பாரோ அவருடைய அமல்களை எழுதும் மலக்குகள் அவர் பள்ளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பத்து நன்மைகளை எழுதுகின்றனர். தொழுகைக்குக் காத்திருப்பவர் இபாதத் செய்பவராகக் கணிக்கப்படுவார், வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் வீடு திரும்பும்வரை அவர் தொழுகையாளிகளில் கணிக்கப்படுவார்” என்று ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(முஸ்னத் அஹ்மத்)
٨٦– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ قَالَ اللهُ تَعَالَي: يَا مُحَمَّدُ! قُلْتُ: لَبَّيْكَ رَبِّ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ الْمَلأُ الأَعْلَي؟ قُلْتُ: فِي الْكَفَّارَاتِ، قَالَ: مَاهُنَّ؟ قُلْتُ: مَشْيُ اْلاَقْدَامِ إِلَي الْجَمَاعَاتِ، وَالْجُلُوسُ فِي الْمَسَاجِدِ بَعْد َالصَّلوةِ، وَإِسْبَاغُ الْوُضُوءِ فِي الْمَكْرُوهَاتِ، قَالَ: ثُمَّ فِيمَ؟ قُلْتُ: إِطْعَامُ الطَّعَامِ، وَلِينُ الْكَلاَمِ، وَالصَّلاَةُ بِالَّليْلِ وَالنَّاسُ نِيَامٌ، قَالَ: سَلْ، قُلْتُ: اَللّهُمَّ إِنِّي أَسْاَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ، وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَّ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأَسْاَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَي حُبِّكَ، قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّهَا حَقٌّ فَادْرُسُوهَا ثُمَّ تَعَلَّمُوهَا.
(وهو بعض الحديث) رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ومن سورة ص، رقم:٣٢٣٥
86. கனவில் (ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்ளிடம்) அல்லாஹுதஆலா “முஹம்மதே! என்று கூப்பிட்டான். “இரட்சகா! வந்து விட்டேன்” என்று கூறினேன். “எனக்கு நெருக்கமான மலக்குகள் தங்களுக்கிடையே (எதைப் பற்றி) விவாதித்துக் கொள்கின்றனர்? என அல்லாஹ் என்று கேட்டான், “பாவங்களுக்குப் பரிகாரமாகும் அமல்கள் பற்றி விவாதிக்கின்றனர்” என்று கூறினேன், “அந்த அமல்கள் யாவை?” அல்லாஹ் கேட்டான். “ஜமாஅத் தொழுகைக்கு நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப் பிறகு மறு தொழுகைக்காக காத்திருப்பது, மனம் விரும்பாத போதும் (குளிர்காலத்தில்) நல்ல முறையில் உளூச் செய்வது ஆகியவை” என்று நான் பதில் கூறினேன். பிறகு அல்லாஹ், “எந்த அமல்கள் சிறந்தது என்பது பற்றி விவாதிக்கின்றனர்?” என்று கேட்டான். “உணவளிப்பது, மென்மையாகப் பேசுவது, இரவில் மக்கள் உறங்கும்போது தொழுவது‘ ஆகிய அமல்கள் சிறந்தது என்பது பற்றி விவாதிக்கின்றனர் என்று நான் கூறினேன். பிறகு, “கேளுங்கள்!” என்று அல்லாஹ் கூறினான், (اَللّهُمَّ إِنِّي أَسْاَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ، وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَّ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأَسْاَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَي حُبِّكَ) “யாஅல்லாஹ்! நான் உன்னிடம் நற்செயல்கள் செய்வதையும் தீமைகளை விடுவதையும், ஏழைகளை நேசிப்பதையும் கேட்கிறேன். நீ என்னை மன்னிப்பதையும், என் மீது அருள் புரிவதையும் கேட்கிறேன். ஏதேனும் ஒரு கூட்டத்தாரைச் சோதனையில் ஆழ்த்தவோ, வேதனையில் பீடிக்கச் செய்யவோ நீ முடிவு செய்தால், என்னை சோதனையில் ஆழ்த்தாமல் உன்னிடம் அழைத்துக் கொள்வாயாக! யாஅல்லாஹ்! உன்னுடைய நேசத்தையும், உன்னை நேசிப்பவரின் நேசத்தையும், உனது நேசத்தை நெருக்கமாக்கி வைக்கும் செயலுடைய நேசத்தையும் உன்னிடம் கேட்கிறேன்” என்று துஆச் செய்தேன். இந்த துஆ உண்மையானது‘, இதைக் கற்றுக் கொள்ளப் பலமுறை ஓதுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٨٧– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَادَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، وَالْمَلاَئِكَةُ تَقُولُ: اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، مَالَمْ يَقُمْ مِنْ صَلاَتِهِ أَوْ يُحْدِثْ.
رواه البخاري باب اذاقال:احدكم امين….،رقم:٣٢٢٩
87. “உங்களில் ஒருவர் தொழுகைக்காக எதிர்பார்த்திருக்கும் வரை அவர் தொழுகையின் நன்மையைப் பெற்றுக் கொண்டிருப்பார், மலக்குகள் அவருக்காக “யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக, இவர் மீது அருள் புரிவாயாக!” என்று துஆச் செய்து கொண்டிருப்பார்கள், (தொழுகைக்குப் பிறகும்) தொழுத இடத்தில் உளூவுடன் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், மலக்குகள் அவருக்காக இதே துஆவை செய்து கொண்டிருக்கின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٨٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مُنْتَظِرُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ، كَفَارِسِ نِ اشْتَدَّ بِهِ فَرَسُهُ فِي سَبِيلِ اللهِ عَلَي كَشْحِهِ وَهُوَ فِي الرِّبَاطِ اْلاَكْبَرِ.
رواه احمد والطبراني في الاوسط، واسناد احمد صالح، الترغيب:١/٢٨٤
88. “ஒரு தொழுகைக்குப் பிறகு மறு தொழுகைக்காகக் காத்திருப்பவர், குதிரை வீரரைப் போன்றவர். அவரது குதிரை அவரை சுமந்து கொண்டு அல்லாஹ் வின் பாதையில் மிக விரைவாகச் செல்கிறது. தொழுகைக்காக எதிர்பார்த்திருப்பவர், (நப்ஸ், ஷைத்தானுக்கு எதிர் அணியில்) மிகப் பெரிய படையுடன் உள்ளார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ, முஸ்னத் அஹ்மத், தர்ஙீப்)
٨٩– عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ كَانَ يَسْتَغْفِرُ للِصَّفِّ الْمُقَدَّمِ، ثَلاَثاً، وَللِثَّانِي مَرَّةً.
رواه ابن ماجه، باب فضل الصف المقدم، رقم:٩٩٦
89. ஹஜ்ரத் இர்பாழிப்னு ஸாரியா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “முதல் வரிசையில் இருப்போருக்காக மூன்று முறையும், இரண்டாம் வரிசையில் இருப்போருக்காக ஒரு முறையும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பாவமன்னிப்பு வேண்டி துஆச் செய்து வந்தார்கள்.
(இப்னு மாஜா)
٩٠– عَنْ أَبِي أُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الصَّفِّ اْلاَوَّلِ، قَالُوا: يَارَسُولَ اللهِ، وَعَلَي الثَّانِي؟ قَالَ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الصَّفِّ اْلاَوَّلِ، قَالُوا: يَارَسُولَ اللهِ، وَعَلَي الثَّانِي؟ قَالَ: وَعَلَي الثَّانِي! وقَالَ رَسُولُ اللهِ ﷺ: سَوُّوا صُفُوفَكُمْ، وَحَاذُوا بَيْنَ مَنَاكِبِكُمْ، وَلِينُوا فِي أَيْدِي إِخْوَانِكُمْ، وَسُدُّوا الْخَلَلَ، فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ فِيمَا بَيْنَكُمْ بِمَنْزِلَةِ الْحَذَفِ يَعْنِي أَوْلاَدَ الضَّأْنِ الصِّغَارِ.
رواه احمد والطبراني في الكبير ورجال احمد موثقون مجمع الزوائد:٢/٢٥٢
90. “அல்லாஹ் முதல் வரிசையில் நிற்போரின் மீது அருள் புரிகிறான், அவனது மலக்குகள் அவர்களுக்காக ரஹ்மத் கிடைக்க துஆச் செய்கின்றனர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! இரண்டாம் வரிசையில் நிற்பவர்களுக்கும் இந்தச் சிறப்பு உண்டா?” என்று ஸஹாபாக்கள் வினவினர். “முதல் வரிசையினர் மீது அல்லாஹ் ரஹ்மத்தைப் பொழிகிறான், அவனது மலக்குகள் அவர்களுக்காக ரஹ்மத்துக்கு துஆச் செய்கின்றனர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹாபாக்கள் (மீண்டும்) “யாரஸூலல்லாஹ், இரண்டாம் வரிசையில் இருப்போருக்கும் இந்தச் சிறப்பு கிடைக்குமா? என்று கேட்டனர். “இரண்டாம் வரிசையில் இருப்போருக்கும் இச்சிறப்பு உண்டு‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் உங்கள் வரிசைகளை நேராக ஆக்கிக்கொள்ளுங்கள், தோள்களோடு தோள்களை நேராக்கிக் கொள்ளுங்கள், வரிசைகளைச் சீர் செய்யும் காரியத்தில் “உங்கள் சகோதரர்களுக்காக மென்மையாக ஆகுங்கள், வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புங்கள், காரணம் (வரிசைகளின் இடைவெளியில்) செம்மறி ஆட்டுக் குட்டியைப் போல் ஷைத்தான் நுழைந்துவிடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்”.
(முஸ்னத் அஹ்மத் தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- “சகோதரர்களுக்கு மென்மையாக ஆகுதல்‘ என்பதன் பொருள், ஒருவர் வரிசையைச் சரிசெய்ய உங்கள் தோளில் கை வைத்து முன், பின் நகரச் சொன்னால் அவருக்கு வழிப்படுங்கள் என்பதாம்.
٩١–عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا.
رواه مسلم، باب تسوية الصفوف….،رقم:٩٨٥
91. “ஆண்களின் வரிசைகளில் அதிகமான நன்மை முதல் வரிசையில் கிடைக்கிறது, ஆண்களின் வரிசைகளில் மிகக் குறைவான நன்மை கடைசி வரிசையில் இருப்போருக்கு கிடைக்கிறது. பெண்களின் வரிசைகளில் அதிகமான நன்மை கடைசி வரிசையில் கிடைக்கிறது, குறைவான நன்மை பெண்களின் வரிசைகளில் முதல் வரிசையில் இருப்பவருக்கு கிடைக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٩٢– عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يَتَخَلَّلُ الصَّفَّ مِنْ نَاحِيَةٍ إِلَي نَاحِيَةٍ، يَمْسَحُ صُدُورَنَا وَمَنَاكِبَنَا وَيَقُولُ: لاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ وَكَانَ يَقُولُ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الصُّفُوفِ اْلأُوَلِ.
رواه ابوداؤد، باب تسوية الصفوف، رقم:٦٦٤
92. ஹஜ்ரத் பராஇப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், வரிசையில் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை சென்று எங்களது நெஞ்சங்கள், தோள்களைத் தமது திருக்கரத்தால் தடவியவாறு ஸஃப்புகளைச் சரிசெய்வார்கள். மேலும் “(வரிசைகளில்) முன், பின், ஆகிவிடாதீர்கள், வரிசை சீராகவில்லையெனில் உங்களது உள்ளங்களில் ஒருவர் மற்றவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடும், முன் வரிசைகளில் இருப்போரின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான், அவர்களுக்காக மலக்குகள் பாவ மன்னிப்பு வேண்டி துஆச் செய்கின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
(அபூதாவூத்)
٩٣– عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الَّذِينَ يَلُونَ الصُّفُوفَ اْلأُوَلَ، وَمَامِنْ خُطْوَةٍ أَحَبُّ إِلَي اللهِ مِنْ خُطْوَةٍ يَمْشِيهَا يَصِلُ بِهَا صَفّاً.
رواه ابوداؤد، باب في الصلوة تقام….، رقم: ٥٤٣
93. “முன் வரிசைகளுக்கு அடுத்துள்ள வரிசையில் இருப்போர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான், மலக்குகள் அவர்களுக்காகப் துஆச் செய்கின்றனர். வரிசையிலுள்ள காலியிடத்தை நிரப்ப எடுத்துவைக்கப்படும் எட்டைவிட வேறு எந்த எட்டும் அல்லாஹ்வுக்குப் பிரியமானது இல்லை” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٩٤– عَنْ عَائِشَةَ ؓ قَالَـتْ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي مَيَامِنِ الصُّفُوفِ.
رواه ابوداؤد باب من يستحب ان يلي الامام في الصف…..، رقم:٦٧٦
94. “வரிசைகளில் வலப்புறமாக நிற்போர் மீது, அல்லாஹ் அருள் புரிகிறான், மலக்குகள் அவர்களுடைய பாவமன்னிப்புக்கு துஆச் செய்கின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٩٥– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ عَمَّرَ جَانِبَ الْمَسْجِدِ اْلأَيْسَرِ لِقِلَّةِ أَهْلِهِ فَلَهُ أَجْرَانَ.
رواه الطبراني في الكبير، وفيه: بقية وهو مدلس وقد عنعنه ولكنه ثقة مجمع الزوائد:٢ /٢٥٧
95. “வரிசையின் இடப் புறத்தில் மக்கள் குறைவாக நிற்கின்றனர் என்பதால் வரிசையின் இடப் புறத்தை நிரப்பும் மனிதருக்கு இரண்டு கூலி கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- இடது பக்கமாக நிற்பதைவிட வலது பக்கமாக நிற்பதால் அதிக நன்மைகள் உண்டு என்றசெய்தி ஸஹாபாக்களுக்குத் தெரிந்தபோது, அணைவரும் வலது புறத்தில் நிற்க ஆசைப்பட்டனர். அதனால் இடது புறம் காலியாகத் தொடங்கியது. இடது புறம் காலியாகமல் இருப்பதற்காக வேண்டி நபி (ஸல்) அவர்கள், இடது புறமாக நிற்பதின் மேன்மையைப் பற்றியும் கூறினார்கள்.
٩٦– عَنْ عَائِشَةَ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ قَالَ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذاهبي:١/٢١٤
96. “வரிசைகளிலுள்ள காலியிடங்களை நிரப்புவோர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான், மலக்குகள் அவர்களது பாவமன்னிப்புக்கு துஆச் செய்கின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தக்ரக் ஹாகிம்)
٩٧– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: لاَيَصِلُ عَبْدٌ صَفّاً إِلاَّرَفَعَهُ اللهُ بِهِ دَرَجَةً، وَذَرَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ مِنَ الْبِرِّ.
(وهو بعض الحديث) رواه الطبراني في الاوسط ولاباس باسناده الترغيب:١/٣٢٢
97. “ஒருவர், ஒரு வரிசையில் காலியான இடத்தை இணைப்பதின் காரணமாக அல்லாஹ் அவரது ஒரு படித்தரத்தை உயர்த்துகிறான், மலக்குகள் அவர் மீது ரஹ்மத்துகளைத் தூவுகிறார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தப்ரானீ, தர்ஙீப்)
٩٨– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلوةِ، وَمَا مِنْ خَطْوَةٍ أَعْظَمُ أَجْرًا مِنْ خَطْوَةٍ مَشَاهَا رَجُلٌ إِلَي فُرْجَةٍ فِي الصَّفِّ فَسَدَّهَا.
رواه البزار باسناد حسن، وابن حبان في صحيحه كلاهما بالشطر الاول ورواه بتمامه الطبراني في الاوسط الترغيب:١/٣٢٢
98. “தொழுகையில் தங்களது தோள்களை மிருதுவாக வைத்திருப்பவரே உங்களில் சிறந்தவர், அணியிலுள்ள காலியிடத்தை நிரப்ப மனிதன் எடுத்து வைக்கும் எட்டே மிக அதிகமான நன்மையைத் சேர்க்கும்”, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், இப்னுஹிப்பான், தப்ரானீ, தர்ஙீப்)
தெளிவுரை:- தொழுகையில் தோள்களை மிருதுவாக வைத்திருப்பது என்பதன் பொருள், ஒருவர் அணியில் சேரவிரும்பினால் அவருக்கு வலப் புற, இடப் புறத்திலுள்ள தொழுகையாளிகள் அவர் அணியில் இணைந்து கொள்ள தங்களது தோள்களை மிருதுவாக்கி இடம் கொடுக்கவேண்டும் என்பதாம்.
٩٩– عَنْ أَبِي جُحَيْفَةَ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ سَدَّ فُرْجَةً فِي الصَّفِّ غُفِرَ لَهُ.
رواه البزار واسناده حسن مجمع الزوائد:٢ /٢٥١
99. “எவர் வரிசையிலுள்ள காலியிடத்தை நிரப்புகிறாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠٠– عَنِ ابْنِ عُمَرَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ وَصَلَ صَفّاً وَصَلَهُ اللهُ، وَمَنْ قَطَعَ صَفّاً قَطَعَهُ اللهُ.
(وهو بعض الحديث) رواه ابوداؤد، باب تسوية الصفوف رقم:٦٦٦
100. “எவர் வரிசையை இணைப்பாரோ அல்லாஹ் தனது அருளுடன் அவரை இணைத்துக் கொள்வான், எவர் வரிசையைத் துண்டிப்பாரோ அல்லாஹ் தனது ரஹ்மத்தைவிட்டும் அவரை தூரமாக்கி விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- வரிசையைத் துண்டிப்பது என்பதன் பொருள் வரிசையை நிரப்பாமல் வரிசைக்கிடையே ஏதேனும் பொருளை வைத்துவிடுவது, அல்லது வரிசையில் காலியிடத்தைக் கண்டும், அதை நிரப்பாமல் விட்டுவிடுவது என்பதாம்.
(மிர்காத்)
١٠١–عَنْ أَنَسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ: سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلوةِ.
رواه البخاري باب اقامة الصف من تمام الصلاة رقم:٧٢٣
101. “உங்கள் வரிசைகளைச் சீராக்கிக் கொள்ளுங்கள் ஏனேனில், வரிசைகளைச் சரி செய்வதும் சீரான முறையில் தொழுகையை நிலைநாட்டுவதைச் சார்ந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٠٢– عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ تَوَضَّأَ للِصَّلاَةِ فَأَسْبَغَ الْوُضُوءَ، ثُمَّ مَشَي إِلَي الصَّلاَةِ الْمَكْتُوبَةِ، فَصَلاَّهَا مَعَ النَّاسِ أَوْمَعَ الْجَمَاعَةِ أَوْ فِي الْمَسْجِدِ، غَفَرَ اللهُ لَهُ ذُنُوبَهُ.
رواه مسلم باب فضل الوضوء والصلوة عقبه، رقم:٥٤٩
102. “எவர் பரிபூரணமாக உளூச் செய்து, பர்ளுத் தொழுகைக்காக நடந்து சென்று மக்களுடன் அல்லது ஜமாஅத்துடன் அல்லது பள்ளிவாசலில் தொழுவாரோ, அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٠٣– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ؓ قَالَ سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَي لَيَعْجَبُ مِنَ الصَّلاَةِ فِي الْجَمْعِ.
رواه احمد واسناده حسن مجمع الزوائد:٢ /١٦٣
103. “ஜமாஅத்துடன் தொழுவதால் அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: فَضْلُ صَلاَةِ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ عَلَي صَلاَتِهِ وَحْدَهُ بِضْعٌ وَّعِشْرُونَ دَرَجَةً.
رواه احمد:١ /٣٧٦
104. “ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான அந்தஸ்து (தகுதி) கிடைக்கிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٠٥– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: صَلاَةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَي صَلاَتِهِ فِي بَيْتِهِ وَفِي سُوقِهِ خَمْساً وَّعِشْرِينَ ضِعْفاً.
(الحديث) رواه البخاري باب فضل صلوة الجماعة رقم:٦٤٧
105. “ஒருவர் தமது வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தைந்து மடங்கு நன்மை தரக்கூடியது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٠٦– عَنِ ابْنِ عُمَرَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: صَلاَةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلاَةِ الْفَذِّ بِسَبْعٍ وَّعِشْرِينَ دَرَجَةً.
رواه مسلم باب فضل صلوة الجماعة….، رقم:١٤٧٧
106. “ஜமாஅத்துடன் தொழுவது தனியாகத் தொழுவதைவிட இருபத்தேழு படித்தரம் நன்மை தரக்கூடியது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٠٧– عَنْ قُبَاثِ بْنِ أَشْيَمَ اللَّيْثِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: صَلاَةُ الرَّجُلَيْنِ يَؤُمُّ أَحَدُهُمَا صَاحِبَهُ أَزْكَي عِنْدَ اللهِ مِنْ صَلاَةِ أَرْبَعَةٍ تَتْرَي، وَصَلاَةُ أَرْبَعَةٍ يَؤُمُّ أَحَدُهُمْ أَزْكَي عِنْدَ اللهِ مِنْ صَلاَةِ ثَمَانِيَةٍ تَتْرَي، وَصَلاَةُ ثَمَانِيَةٍ يَؤُمُّ أَحَدُهُمُ أَزْكَي عِنْدَ اللهِ مِنْ مِائَةٍ تَتْرَي.
رواه البزار والطبراني في الكبير ورجال الطبراني موثقون مجمع الزوائد: ٢/١٦٣
107. “நான்கு நபர்கள் தனித்தனியாகத் தொழுவதைவிட ஒருவர் இமாமாகவும், மற்றொருவர் அவரைப் பின்பற்றியும், இரண்டு பேர் ஜமாஅத்தாகத் தொழுவது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானது. எட்டு நபர்கள் தனித்தனியாகத் தொழுவதைவிட நான்கு நபர்கள் கூட்டாகத் தொழுவது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானது. நூறு நபர்கள் தனித்தனியாகத் தொழுவதைவிட எட்டு நபர்கள் ஜமாத்துடன் தொழுவது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் குபாஃதிப்னு அஷ்யம் லைஃதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٠٨– عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ صَلاَةَ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَي مِنْ صَلاَتِهِ وَحْدَهُ، وَصَلاَتَهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَي مِنْ صَلاَتِهِ مَعَ الرَّجُلِ، وَمَاكَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَي اللهِ .
(وهوبعض الحديث) رواه ابوداؤد باب في فضل صلوة الجماعة رقم:٥٥٤. سنن ابي داؤد طبع دار الباز للنشر والتوزيع
108. “ஒருவர் மற்றொருவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுவது அவர் தனியாகத் தொழுவதைவிடச் சிறந்தது. மூன்று நபர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது இரண்டு நபர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைவிடச் சிறந்தது. இவ்வாறே ஜமாஅத்துத் தொழுகையில் எவ்வளவு கூட்டம் அதிகமாகுமோ அது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உபையிப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٠٩– عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: اَلصَّلاَةُ فِي جَمَاعَةٍ تَعْدِلُ خَمْساً وَّعِشْرِينَ صَلاَةً فَإِذَا صَلاَّهَا فِي فَلاَةٍ فَأَتَمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا بَلَغَتْ خَمْسِينَ صَلاَةً.
رواه ابوداؤد باب ماجاء في فضل المشي الي الصلوة رقم:٥٦٠
109. “ஜமாஅத்தாகத் தொழுவதன் நன்மை இருபத்தைந்து தொழுகைகளுக்குச் சமமானது, ஒருவர் காட்டில், ருகூ, ஸுஜூதைப் பூரணமாகச் செய்து (நிம்மதியாகத் தஸ்பீஹ்களை ஓதி), தொழுதால் அவரது தொழுகையின் நன்மை ஐம்பது தொழுகைகளை அடைந்துவிடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١١٠– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَا مِنْ ثَلاَثَةٍ فِي قَرْيَةٍ وَلاَ بَدْوٍ لاَ تُقَامُ فِيهِمُ الصَّلاَةُ إِلاَّ قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ، فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ، فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ.
رواه ابو داؤد، باب التشديد في ترك الجماعة، رقم:٥٤٧
110. “ஒரு கிராமத்திலோ அல்லது காட்டிலோ மூன்று நபர்கள் இருந்து, அங்கு ஜமாஅத்தாகத் தொழுகை நடைபெறவில்லையென்றால், அவர்கள் மீது ஷைத்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறான், ஆகவே ஜமாஅத்துடன் தொழுவதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள், தனித்த ஆட்டைத்தான் ஓநாய் தின்றுவிடும்” (மனிதர்களின் ஓநாய் ஷைத்தான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١١١– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: لَمَّا ثَقُلَ النَّبِيُّ ﷺ وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي فَأَذِنَّ لَهُ فَخَرَجَ النَّبِيُّ ﷺ بَيْنَ رَجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ فِي اْلاَرْضِ.
رواه البخاري، باب الغسل والوضوء في المخضب… ، رقم:١٩٨
111. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற சமயம், அன்னாருக்கு நோய் அதிகரித்ததும், எனது இல்லத்தில் தங்கி நோய்க்குரிய பணிவிடை செய்யப்பட தங்களது மற்ற மனைவியரிடத்தில் அனுமதி வேண்டினார்கள். மனைவியர் அனைவரும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி வழங்கினர். (பிறகு தொழுகை நேரம் வந்ததும்) நபி (ஸல்) அவர்கள் இருவரின் உதவியுடன் கைத்தாங்கலாகப் (பள்ளிக்குப்) புறப்பட்ட பொழுது (பலவீனத்தினால்) ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் பாதங்கள் பூமியில் கோடிட்டவாறு இருந்தன.
(புகாரி)
١١٢– عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ كَانَ إِذَا صَلَّي بِالنَّاسِ يَخِرُّ رِجَالٌ مِنْ قَامَتِهِمْ فِي الصَّلاَةِ مِنَ الْخَصَاصَةِ وَهُمْ أَصْحَابُ الصُّفَّةِ حَتَّي تَقُولَ اْلاَعْرَابُ: هؤُلاَءِ مَجَانِينُ أَوْ مَجَانُونُ، فَإِذَا صَلَّي رَسُولُ اللهِ ﷺ انْصَرَفَ إِلَيْهِمْ، فَقَالَ: لَوْ تَعْلَمُونَ مَا لَكُمْ عِنْدَ اللهِ لَأَحْبَبْتُمْ أَنْ تَزْدَادُوا فَاقَةً وَحَاجَةً قَالَ فَضَالَةُ: وَأَنَا يَوْمَئِذٍ مَعَ رَسُولُ اللهِ ﷺ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح ، باب ما جاء في معيشة اصحاب النبي ﷺ، رقم:٢٣٦٨
112. ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தொழவைக்கும் போது, வரிசையிலிருக்கும் திண்ணைத் தோழர்களில் சிலர் பசியின் காரணமாகக் கீழே விழுந்துவிடுவார்கள். கிராமவாசிகள் அவர்களைப் பார்த்து, “இவர்கள் பைத்தியக்காரர்கள்” என்று எண்ணுவர், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தொழவைத்த பின் அவர்களின் பக்கம் திரும்பி, “அல்லாஹ்விடம் உங்களுக்கு இருக்கும் நன்மையை நீங்கள் அறிந்து கொண்டால் இதைவிடவும் அதிக வறுமையிலும், ஏழ்மையிலும் இருப்பதை விரும்புவீர்கள்” என்று கூறினார்கள், “அன்றய தினம் நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன்” என்று ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
١١٣– عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ صَلَّي الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ، وَمَنْ صَلَّي الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّي اللَّيْلَ كُلَّهُ.
رواه مسلم باب فضل صلاة العشاء والصبح في جماعة رقم:١٤٩١
113. “எவர் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதாரோ அவர் பாதி இரவு வணங்கிய வரைப் போன்றவர் ஆவார். எவர் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதரோ அவர் முழு இரவும் வணங்கியவரைப் போன்றவர் ஆவார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
குறிப்பு:- இஷாத் தொழுகையையும், ஃபஜ்ரு தொழுகையையும் ஜமாத்தாக தொழுதால் முழு இரவு வணங்கிய நன்மை கிடைக்கும் என்று சில உலமாக்கள் வேறு அறிவிப்புகளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளனர்.
١١٤– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ أَثْقَلَ صَلاَةٍ عَلَي الْمُنَافِقِينَ صَلاَةُ الْعِشَاءِ وَصَلاَةُ الْفَجْرِ.
(الحديث) رواه مسلم باب فضل صلاة الجماعة…،رقم:١٤٨٢
114. “நயவஞ்சகர்களுக்கு தொழுகைகளில் மிகப் பாரமானது இஷா தொழுகையும், ஃபஜ்ருத் தொழுகையுமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١١٥– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْواً.
(وهو طرف من الحديث) رواه البخاري باب الاستهام في الاذان، رقم:٦١٥
115. “ளுஹர் தொழுகைக்காக வெய்யிலில் பள்ளிக்கு நடந்து சென்று தொழுவதன் சிறப்பை மக்கள் அறிந்து கொண்டால், ளுஹர் தொழுகைக்காக போட்டி போட்டுக் கொண்டு ஓடி வருவார்கள். மேலும் இஷா, பஜ்ருத் தொழுகைகளின் சிறப்பு அவர்களுக்குத் தெரிந்துவிட்டால், (நோயின் காரணமாக) பூமியில் தவழ்ந்த வண்ணமாகச் செல்ல நேர்ந்தாலும் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றப் பள்ளிக்கு வருவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١١٦– عَنْ أَبِي بَكْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلَّي الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَهُوَ فِي ذِمَّةِ اللهِ فَمَنْ أَخْفَرَ ذِمَّةَ اللهِ كَبَّهُ اللهُ فِي النَّارِ لِوَجْهِهِ.
رواه الطبراني في الكبير ورجاله رجال الصحيح مجمع الزوائد: ٢ /٢٩
116. “எவர் சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்துவிடுவார், எவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்துவிட்டவருக்கு தீங்கு விளைவிப்பாரோ அவரை அல்லாஹ் முகங்குப்புற நரகில் தூக்கியெறிவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١١٧– عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلَّي لِلّهِ أَرْبَعِينَ يَوْماً فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ اْلأُولَي كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ.
رواه الترمذي باب ماجاء في فضل التكبيرة الاولي رقم:٢٤١ قال الحافظ المنذري: رواه الترمذي وقال: لااعلم احدا رفعه الاماروي مسلم بن قتيبة عن طعمة بن عمرو قال المملي رحمه اللّه: ومسلم وطعمة وبقية رواته ثقات الترغيب:١/٢٦٣
117. “எவர் மனத்தூய்மையுடன், நாற்பது நாட்கள் ஜமாஅத்தாக முதல் தக்பீருடன் தொழுவாரோ அவருக்கு இரண்டு உரிமைச் சீட்டுகள் கிடைக்கின்றன. ஒன்று, நரகத்திலிருந்து விடுதலை பெற்றதற்கான உரிமைச் சீட்டு, மற்றோன்று, நயவஞ்சகத்திலிருந்து விடுதலை பெற்றதற்கான உரிமைச் சீட்டு” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١١٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَتِي فَيَجْمَعُ حُزَماً مِنْ حَطَبٍ ثُمَّ آتِي قَوْماً يُصَلُّونَ فِي بُيُوتِهِمْ لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ فَأُحَرِّقَهَا عَلَيْهِمْ.
رواه ابوداؤد باب التشديد في ترك الجماعة رقم:٥٤٩
118. “சில வாலிபர்களை ஏவி ஏராளமான விறகுகளைச் சேகரித்து காரணமின்றித் தங்கள் இல்லங்களிலேயே தொழுது கொள்வோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களது இல்லங்களைத் தீ வைத்து எரித்துவிட எனது உள்ளம் நாடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١١٩– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَي الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ، غُفِرَلَهُ مَابَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاَثَةِ أَيَّامٍ، وَمَنْ مَسَّ الْحَصَي فَقَدْ لَغَا.
رواه مسلم باب فضل من استمع وانصت في الخطبة، رقم:١٩٨٨
119. “எவர் நல்ல முறையில் உளூச் செய்து ஜும்ஆத் தொழுகைக்கு வந்து, குத்பாவின் போது அமைதிகாத்து மன ஓர்மையுடன் குத்பாவைக் கேட்பாரோ, அவருடைய அந்த ஜும்ஆவிலிருந்து சென்ற ஜும்ஆ வரையும், மேலும் அதிகமாக மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. எவர் சிறு கற்களை வைத்து (குத்பாவின் போது) விளையாடுவாரோ (அல்லது கை, பாய், துணி போன்றவற்றில் விளையாடுவாரோ) அவர் வீண் வேலையைச் செய்துவிட்டார்” (அதனால் ஜும்ஆவின் தனிப்பட்ட நன்மையை இழந்துவிடுவார்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٢٠– عَنْ أَبِي أَيُّوبَ اْلاَنْصَارِيِّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَمَسَّ مِنْ طِيبٍ إِنْ كَانَ عِنْدَهُ، وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ، ثُمَّ خَرَجَ حَتَّي يَأْتِيَ الْمَسْجِدَ فَيَرْكَعَ إِنْ بَدَا لَهُ وَلَمْ يُؤْذِ أَحَدًا، ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّي يُصَلِّيَ، كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ اْلأُخْرَي.
رواه احمد:٥/٤٢٠
120. “எவர் ஜும்ஆ நாளில் குளித்து அவரிடம் நறுமணம் இருந்தால் அதையும் பூசி, நல்ல ஆடைகளை அணிந்து பள்ளிக்குச் சென்று, சந்தர்ப்பம் கிடைத்தால் நஃபில் தொழுது யாருக்கும் சிரமம் தராமல் (மக்களின் பிடரிகளைத் தாண்டிச் செல்லாமல்). இமாம் குத்பா ஓத வந்ததிலிருந்து தொழுகை முடியும் வரை அமைதியாக (எதும் பேசாமல்) இருந்தால், அவரது இந்தச் செயல்கள் அந்த ஜும்ஆவிலிருந்து சென்ற ஜும்ஆவரை ஏற்பட்ட பாவங்கள் அணைத்தும் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாகிவிடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٢١– عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ ؓ قَالَ : قَالَ النَّبِيُّ ﷺ: لاَيَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنَ الطُّهْرِ، وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ، ثُمَّ يَخْرُجُ فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ اْلإِمَامُ إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ اْلأُخْرَي.
رواه البخاري باب الدهن للجمعة رقم:٨٨٣
121. “ஒருவர் ஜும்ஆ நாளன்று குளித்து, தன்னால் முடிந்தவரை தூய்மையைப் பேணி, தன்னிடமுள்ள எண்ணெயைத் தேய்த்து அல்லது தன் வீட்டிலிருக்கும் நறுமணத்தை பூசி பின் பள்ளிக்குச் சென்று, இணைந்து அமர்ந்திருக்கும் இருவருக்கிடையே அமராமல், தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தின் அளவு ஜும்ஆவுக்கு முன்புள்ள தொழுகைகளை தொழுது, இமாம் குத்பா பிரசங்கம் செய்யும் போது அமைதியாகவும் கவனமாகவும் கேட்டால், அந்த ஜும்ஆவிலிருந்து சென்ற ஜும்ஆவரை நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٢٢– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ فِي جُمُعَةٍ مِنَ الْجُمَعِ: مَعَاشِرَ الْمُسْلِمِينَ! إِنَّ هذَا يَوْمٌ جَعَلَهُ اللهُ لَكُمْ عِيدًا فَاغْتَسِلُوا وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ.
رواه الطبراني في الاوسط والصغير ورجاله ثقات مجمع الزوائد:٢ /٣٨٨
122. “ஒரு முறை ஜும்ஆ நாளன்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ”முஸ்லிம்களே! இன்றைய நாளை உங்களுக்கு ஈது (பெருநாள்) ஆக அல்லாஹ் ஆக்கியுள்ளான், எனவே, இந்நாளில் குளித்துக் கொள்ளுங்கள், மிஸ்வாக்கைக் கொண்டு பல் துலக்குவதை அவசியமாக செய்து வாருங்கள்” என்று கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٢٣– عَنْ أَبِي أُمَامَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ لَيَسُلُّ الْخَطَايَا مِنْ أُصُولِ الشَّعْرِ اِسْتِلاَلاً.
رواه الطبراني في الكبير ورجاله ثقات مجمع الزوائد:٢ /٣٩١
123. “ஜும்ஆ நாளன்று குளிப்பது, முடிகளின் வேர்களிலிருந்து பாவங்களை அடியோடு நீக்கிவிடுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٢٤– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ وَقَفَتِ الْمَلاَئِكَةُ عَلَي بَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ اْلاَوَّلَ فَالأَوَّلَ، وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً، ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً، ثُمَّ كَبْشاً، ثُمَّ دَجَاجَةً، ثُمَّ بَيْضَةً، فَإِذَا خَرَجَ اْلإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ وَيَسْتَمِعُونَ الذِّكْرَ.
رواه البخاري باب الاستماع الي الخطبة يوم الجمعة، رقم:٩٢٩
124. “ஜும்ஆ நாள் வந்துவிட்டால் மலக்குகள் பள்ளியின் வாசலில் நின்று கொள்கிறார்கள், முதலில் வருவோரின் பெயரை முதலிலும், அடுத்து வருவோரின் பெயரை அடுத்தும் எழுதுகிறார்கள் (இவ்வாறே வருவோரின் பெயர்களை வரிசைக் கிரமமாக எழுதுகின்றனர்). ஜும்ஆத் தொழுகைக்காக அதிகாலையில் வருபவருக்கு ஒட்டகம் தருமம் செய்த நன்மையும், அடுத்து வருபவருக்கு மாடு தருமம் செய்த நன்மையும், அதற்குப் பிறகு வருபவருக்கு ஆடு, அதையடுத்து வருபவருக்கு கோழி, அதையடுத்து வருபவருக்கு முட்டை தருமம் செய்த நன்மையும் கிடைக்கிறது. இமாம் குத்பா ஓத வந்ததும் மலக்குகள் வருவோரின் பெயர்களை எழுதிய பதிவேட்டை சுருட்டி வைத்துவிட்டு குத்பாவை கேட்பதில் ஈடுபட்டுவிடுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
١٢٥– عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ ؒ قَالَ: لَحِقَنِي عَبَايَةُ بْنُ رِفَاعَةَ بْنِ رَافِعٍ ؒ وَأَنَا مَاشٍ إِلَي الْجُمُعَةِ فَقَالَ: أَبْشِرْ فَإِنَّ خُطَاكَ هذِهِ فِي سَبِيلِ اللهِ سَمِعْتُ أَبَا عَبْسٍ ؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللهِ فَهُمَا حَرَامٌ عَلَي النَّارِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب باب ماجاء في فضل من اغبرت قدماه في سبيل اللّه، رقم:١٦٣٢
125. “நான் ஜும்ஆத் தொழுகைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஹஜ்ரத் அபாயா இப்னு ரிஃபாஆ (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன், அவர்கள், “உமக்கு ஒரு நற்செய்தி! நீர் எடுத்து வைக்கும் கால் எட்டு அல்லாஹ்வின் பாதையில் எடுத்து வைக்கிறீர்‘ என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் பாதையில் எவருடைய பாதங்களின் மீது புழுதி படிகிறதோ அந்தப் பாதத்தை நரக நெருப்புத் தீண்டுவது விலக்காகி விட்டது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅப்ஸ் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்பதாக ஹஜ்ரத் யஸீதுப்னு அபூமர்யம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(திர்மிதீ)
١٢٦– عَنْ أَوْسِ بْنِ أَوْسِ نِ الثَّقَفِيِّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ وَمَشَي وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ اْلإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا.
رواه ابوداؤد باب في الغسل للجمعة،رقم:٣٤٥
126. “எவர் ஜும்ஆ நாளன்று மிக நல்ல முறையில் குளித்து காலை நேரத்தில் வாகனத்தில் செல்லாமல் நடந்து பள்ளிக்கு சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து, குத்பாவைக் கவனத்துடன் கேட்டு, அச்சமயம் எந்த விதப் பேச்சும் பேசாமல் இருக்கிறாரோ, அவர் ஜும்ஆத் தொழுகைக்கு எத்தனை எட்டுக்கள் எடுத்துவைத்து வந்தாரோ, அந்த ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பு வைத்த நன்மையும், ஒரு வருடம் இரவு நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அவ்ஸிப்னு அவ்ஸ் ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்)
١٢٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ وَغَدَا وَابْتَكَرَ وَدَنَا فَاقْتَرَبَ وَاسْتَمَعَ وَأَنْصَتَ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا أَجْرُ قِيَامِ سَنَةٍ وَصِيَامِهَا.
رواه احمد:٢ /٢٠٩
127. “எவர் ஜும்ஆ நாளன்று நல்ல விதமாகக் குளித்து, காலை வேளையில் ஜும்ஆத் தொழுகைக்குச் சென்று, இமாமுக்கு மிக அருகில் அமர்ந்து, குத்பாவைக் கவனமாகக் கேட்டு, அச்சமயம் அமைதியாக இருக்கிறாரோ, அவர் எத்தனை எட்டுக்கள் நடந்து பள்ளிக்கு வந்தாரோ, அவரது ஒவ்வொரு எட்டுக்குப் பகரமாக வருடம் முழுவதும் தஹஜ்ஜுத் தொழுத நன்மையும், வருடம் முழுவதும் நோன்பு வைத்த நன்மையும் அவருக்கு கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٢٨– عَنْ أَبِي لُبَابَةَ بْنِ عَبْدِ الْمُنْذِرِ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: إِنَّ يَوْمَ الْجُمُعَةِ سَيِّدُ اْلاَيَّامِ وَأَعْظَمُهَا عِنْدَ اللهِ، وَهُوَ أَعْظَمُ عِنْدَ اللهِ مِنْ يَوْمِ اْلاَضْحَي وَيَوَمِ الْفِطْرِ، وَفِيهِ خَمْسُ خِلاَلٍ: خَلَقَ اللهُ فِيهِ آدَمَؑ، وَأَهْبَطَ اللهُ فِيهِ آدَمَ إِلَي اْلاَرْضِ، وَفِيهِ تَوَفَّي اللهُ آدَمَ، وَفِيهِ سَاعَةٌ لاَيَسْأَلُ اللهَ فِيهَا الْعَبْدُ شَيْئاً إِلاَّ أَعْطَاهُ مَا لَمْ يَسْأَلْ حَرَاماً، وَفِيهِ تَقُومُ السَّاعَةُ، مَامِنْ مَلَكٍ مُقَرَّبٍ وَلاَسَمَاءٍ وَلاَ أَرْضٍ وَلاَرِيَاحٍ وَلاَجِبَالٍ وَلاَ بَحْرٍ إِلاَّ وَهُنَّ يُشْفِقْنَ مِنْ يَوْمِ الْجُمُعَةِ.
رواه ابن ماجه باب في فضل الجمعة،رقم:١٠٨٤
128. “ஜும்ஆ நாள் அணைத்து நாட்களுக்கும் தலைமையான நாள், அந்நாள் மற்ற நாட்களைவிட அல்லாஹ்விடம் மகத்துவமிக்க நாளாகும், அந்த நாள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெரு நாளைவிட அல்லாஹ்விடம் மிக அந்தஸ்துள்ள நாளாகும். அந்நாளில் ஐந்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, அந்த நாளில் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான், அதே நாளில் தான் அவர்களை பூமியில் இறக்கிறான், அதே நாளில் தான் அவர்களை மரணிக்கச் செய்தான், அந்த நாளில் குறிப்பான நேரமொன்று உண்டு, அடியான் அந்நேரத்தில் ஹராமானதைக் கேட்காதவரை எதைக் கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு வழங்கிவிடுகிறான். மேலும் அந்த நாளில் தான் கியாமத் நாள் ஏற்படும், அணைத்து நெருக்கமான மலக்குகளும், வானம், பூமி, காற்று, மலை, கடல் யாவும் ஜும்ஆ நாளை பயப்படுகின்றன, (காரணம் உலக அழிவு ஜும்ஆ நாளன்று தான் உண்டாகும்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூலுபாபா இப்னு அப்துல்முன்திர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(இப்னுமாஜா)
١٢٩–عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: لاَ تَطْلُعُ الشَّمْسُ وَلاَ تَغْرُبُ عَلَي يَوْمٍ أَفْضَلَ مِنْ يَوْمِ الْجُمُعَةِ، وَمَامِنْ دَابَّةٍ إِلاَّوَهِيَ تَفْزَعُ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّهذَيْنِ الثَّقَلَيْنِ الْجِنَّ وَاْلإِنْسَ.
رواه ابن حبان (واسناده صحيح):٧ /٥
129. “சூரியன் உதயமாகி, மறையும் நாட்களில் எந்த ஒரு நாளும் ஜும்ஆ நாளைவிடச் சிறந்த நாளாக இல்லை, (ஜும்ஆ நாள் எல்லா நாட்களைவிட சிறந்த நாள்) ஜும்ஆ நாளன்று மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற உயிரினங்கள் யாவும் (கியாமத் நாள் வந்துவிடுமோ என்று) பயந்து நடுங்குகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
١٣٠– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولَ اللهِﷺ قَالَ: إِنَّ فيِ الْجُمُعَةِ سَاعَةً لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللهَ فِيهَا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَهِيَ بَعْدَ الْعَصْرِ.
رواه احمد
130. “ஜும்ஆ நாளில் ஒரு நேரமுண்டு, அந்நேரத்தில் முஸ்லிமான அடியான் எதைக் கேட்டாலும் அதை அல்லாஹ் அவனுக்கு நிச்சயம் கொடுத்துவிடுவான், அந்நேரம் அஸருக்குப் பிறகு உள்ள நேரம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
١٣١– عَنْ أَبِي مُوسَي اْلاَشْعَرِيِّؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِﷺ يَقُولُ: هِيَ مَابَيْنَ أَنْ يَجْلِسَ اْلإِمَامُ إِلَي أَنْ تُقْضَي الصَّلاَةُ.
رواه مسلم باب في الساعة التي في يوم الجمعة،رقم:١٩٧٥
131. “அந்த நேரம் இமாம் மிம்பரில் அமர்ந்ததிலிருந்து தொழுகை முடியும் வரைக்கும் இடைப்பட்ட நேரமாகும்” என்று ஜும்ஆ நாளின் (அந்த குறிப்பான) நேரத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஜும்ஆ நாளில் (துஆ) ஒப்புக் கொள்ளப்படும் நேரம் எது என்பது பற்றி இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே அந்த நாள் முழுவதும் துஆக்கள், இபாதத்துகள் மிக அதிகமாக செய்வது அவசியம்.
(நவவீ)


தஸ்பீஹ் தொழுகை

ஹதீஸ்கள்:-
١٨٣– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ لِلْعَبَّاسِ ابْنِ عَبْدِ الْمُطَّلِبِ: يَاعَبَّاسُ! يَاعَمَّاهُ! أَلاَ أُعْطِيكَ؟ أَلاَ أَمْنَحُكَ؟ أَلاَ أَحْبُوكَ؟ أَلاَ أَفْعَلُ بِكَ عَشْرَ خِصَالٍ إِذَا أَنْتَ فَعَلْتَ ذلِكَ غَفَرَ اللهُ لَكَ ذَنْبَكَ أَوَّلَهُ وَآخِرَهُ، قَدِيمَهُ وَحَدِيثَهُ، خَطَأَهُ وَعَمْدَهُ، صَغِيرَهُ وَكَبِيرَهُ، سِرَّهُ وَعَلاَنِيَتَهُ: عَشْرَ خِصَالٍ أَنْ تُصَلِّيَ أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ فَاتِحَةَ الْكِتَابِ وَسُورَةً، فَإِذَا فَرَغْتَ مِنَ الْقِرَاءَةِ فِي أَوَّلِ رَكْعَةٍ وَأَنْتَ قَائِمٌ قُلْتَ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ خَمْسَ عَشَرَةَ مَرَّةً، ثُمَّ تَرْكَعُ فَتَقُولُهَا وَأَنْتَ رَاكِعٌ عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنَ الرُّكُوعِ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَهْوِي سَاجِدًا فَتَقُولُهَا وَأَنْتَ سَاجِدٌ عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنَ السُّجُودِ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ فَتَقُولُهَا عَشْرًا، فَذلِكَ خَمْسٌ وَسَبْعُونَ فِي كُلِّ رَكْعَةٍ تَفْعَلُ ذلِكَ فِي أَرْبَعِ رَكَعَاتٍ، إِنِ اسْتَطَعْتَ أَنْ تُصَلِّيَهَا فِي كُلِّ يَوْمٍ مَرَّةً فَافْعَلْ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ جُمُعَةٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ شَهْرٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ سَنَةٍ مَرَّةً، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي عُمُرِكَ مَرَّةً.
رواه ابوداؤد باب صلوة التسبيح،رقم:١٢٩٧
183. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அப்பாஸ் அவர்களே! எனது சிறிய தந்தையே! நான் உங்களுக்கு ஒரு நன்கொடை வழங்கட்டுமா? ஓர் அன்பளிப்பைக் கொடுக்கட்டுமா? ஒரு வெகுமதியை அளிக்கட்டுமா?” பத்துப் பலன்களை உங்களுக்கு ஈட்டித்தரும் ஓர் அமலை அறிவிக்கட்டுமா? அதைச் செய்தால் அல்லாஹ் உங்களுடைய முந்தியது பிந்தியது, பழையது புதியது, அறிந்து செய்தது அறியாமல் செய்தது, சிறியது பெரியது, இரகசியமாக செய்தது பகிரங்கமாக செய்தது அணைத்தையும் மன்னித்துவிடுவான். அந்த அமலாவது:- நீர், நான்கு ரக்அத்துகள் (தஸ்பீஹ் தொழுகை) தொழுவதாகும்! ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாதிஹாவுடன் மற்றொரு சூராவும் ஓதுவீராக. முதல் ரக்அத்தில் கிராஅத் ஓதி முடித்ததும் ருகூ செய்தவற்கு முன் (سُبْحَانَ اللّهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللّهُ وَاللّهُ أَكْبَرُ) என்று 15 முறை ஓதுவீராக. பிறகு ருகூ செய்து, அதிலும் 10 முறை இந்த கலிமாக்களை ஓதுவீராக. பிறகு ருகூவிலிருந்து எழுந்து நின்ற நிலையில் 10 முறை ஓதுவீராக. பின்பு ஸஜ்தாச் செய்வீராக. ஸஜ்தாவிலும் இக்கலிமாக்களைப் 10 முறை ஓதுவீராக. ஸஜ்தாவிலிருந்து எழுந்தமர்ந்து 10 முறையும், பிறகு இரண்டாம் ஸஜ்தாவில் 10 முறையும், இரண்டாம் ஸஜ்தாவிலிருந்து எழுந்து உட்கார்ந்த நிலையில் 10 முறையும் ஓதுவீராக. இவ்வாறே நான்கு ரக்அத்துகளும் தொழுவீராக. இந்த முறையில் ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தைந்து முறை இக்கலிமாக்களை ஓதிக் கொள்வீராக (சிறிய தந்தையே!) உங்களால் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு முறை, இத் தொழுகையைத் தொழவும், ஒவ்வொரு நாளும் தொழ இயலாவிட்டால் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும் தொழவும். அதும் இயலாவிட்டால் மாதம் ஒருமுறை தொழவும், அதற்கும் இயலாவிட்டால் வருடம் ஒரு முறை தொழவும். அதற்கும் இயலாவிட்டால் வாழ் நாளில் ஒருமுறையாவது தொழவும்” என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
١٨٤– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: وَجَّهَ رَسُولُ اللهِ ﷺ جَعْفَرَبْنَ أَبِي طَالِبٍ ؓ إِلَي بِلاَدِ الْحَبَشَةِ فَلَمَّا قَدِمَ إِعْتَنَقَهُ، وَقَبَّلَ بَيْنَ عَيْنَيْهِ ثُمَّ قَالَ: أَلاَ أَهَبُ لَكَ، أَلاَ أُبَشِّرُكَ، أَلاَ أَمْنَحُكَ، أَلاَ أُتْحِفُكَ؟ قَالَ: نَعَمْ: يَارَسُولُ اللهِ ﷺثُمَّ ذَكَرَ نَحْوَمَا تَقَدَّمَ.
اخرجه الحاكم وقال:هذا اسناد صحيح لاغبار عليه ومما يستدل به علي صحة هذاالحديث استعمال الائمة من اتباع التابعين الي عصرنا هذا اياه ومواظبتهم عليه وتعليمهم الناس منهم عبد الله بن المبارك رحمه الله قال الذهبي هذا اسناد صحيح لاغبار عليه:١ /٣١٩
184. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள், ஹஜ்ரத் ஜஃபரிப்னு அபூதாலிப் (ரலி) அவர்களை ஹபஷா (அபீஸினியா) நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள், அவர்கள் அங்கிருந்து மதீனாவுக்குத் திரும்பி வந்ததும், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவர்களைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தார்கள். பிறகு, “உமக்கு ஓர் அன்பளிப்பை வழங்கவா? நற்செய்தியொன்றைக் கூறவா? வெகுமதியொன்றைக் கொடுக்கவா?” என்று கேட்டார்கள், “ஆம்! யாரஸூலல்லாஹ்! அவசியம் தாருங்கள்!” என்று ஹஜ்ரத் ஜஃபர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தஸ்பீஹ் தொழுகையின் விபரத்தைக் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
١٨٥– عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ؓ قَالَ: بَيْنَا رَسُولُ اللهِ ﷺ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّي فَقَالَ: اَللّهُمَّ اغْفِرْلِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ، قَالَ: ثُمَّ صَلَّي رَجُلٌ آخَرُ بَعْدَ ذلِكَ فَحَمِدَ اللهَ وَصَلَّي عَلَي النَّبِيِّ ﷺ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ: أَيُّهَا الْمُصَلِّي اُدْعُ تُجَبْ.
رواه الترمذي وقال:هذاحديث حسن باب في ايجاب الدعاء …،رقم:٣٤٧٦
185. ஹஜ்ரத் ஃபழாலத்திப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் பள்ளிக்கு வந்து தொழுதார். தொழுத பிறகு, “யாஅல்லாஹ், என்னை மன்னிப்பாயாக! என் மீது அருள் புரிவாயாக!” என்று துஆச் செய்தார். இதைக் கேட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “தொழுகையாளியே, நீர் துஆக் கேட்பதில் அவசரப்பட்டுவிட்டீர், நீர் தொழுது முடித்ததும், முதலில் அல்லாஹ்வை அவனது அந்தஸ்துக்குத் தக்கவாறு புகழ்வீராக! அடுத்து என் மீது ஸலவாத் சொல்லியபின் துஆச் செய்வீராக!” என்று சொன்னார்கள். ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள், “மற்றொருவர் தொழுதார், அவர் தொழுது முடித்துவிட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்னார்‘. நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “இப்பொழுது துஆக் கேளும், ஏற்றுக் கொள்ளப்படும்‘, என்று கூறினார்கள்.
(திர்மிதீ)
١٨٦– عَنْ أَنَسٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ مَرَّ بِأَعْرَابِيٍّ وَهُوَ يَدْعُو فِي صَلاَتِهِ وَهُوَ يَقُولُ: يَامَنْ لاَ تَرَاهُ الْعُيُونُ، وَلاَ تُخَالِطُهُ الظُّنُونُ، وَلاَ يَصِفُهُ الْوَاصِفُونَ، وَلاَ تُغَيِّرُهُ الْحَوَادِثُ، وَلاَ يَخْشَي الدَّوَائِرَ، يَعْلَمُ مَثَاقِيلَ الْجِبَالِ، وَمَكَايِيلَ الْبِحَارِ، وَعَدَدَ قَطْرِ اْلاَمْطَارِ، وَعَدَدَ وَرَقِ اْلاَشْجَارِ، وَعَدَدَ مَا أَظْلَمَ عَلَيْهِ اللَّيْلُ وَأَشْرَقَ عَلَيْهِ النَّهَارُ، وَلاَ تُوَارِي مِنْهُ سَمَاءٌ سَمَاءً، وَلاَ أَرْضٌ أَرْضاً، وَلاَ بَحْرٌ مَافِي قَعْرِهِ، وَلاَ جَبَلٌ مَا فِي وَعْرِهِ، اجْعَلْ خَيْرَ عُمْرِي آخِرَهُ، وَخَيْرَ عَمَلِي خَوَاتِيمَهُ، وَخَيْرَ أَيَّامِي يَوْمَ اَلْقَاكَ فِيهِ، فَوَكَّلَ رَسُولُ اللهِ ﷺ بِاْلاَعْرَابِيِّ رَجُلاً فَقَالَ: إِذَا صَلَّي فَائْتِنِي بِهِ فلَمَّا صَلَّي أَتَاهُ وَقَدْ كَانَ أُهْدِيَ لِرَسُولُ اللهِ ﷺ ذَهَبٌ مِنْ بَعْضِ الْمَعَادِنِ فَلَمَّا أَتَاهُ اْلاَعْرَابِيُّ وَهَبَ لَهُ الذَّهَبَ وَقَالَ: مِمَّنْ أَنْتَ يَا أَعْرَابِيُّ؟ قَالَ: مِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ يَارَسُولُ اللهِ ﷺقَالَ: هَلْ تَدْرِي لِمَ وَهَبْتُ لَكَ الذَّهَبَ؟ قَالَ: للِرَّحِمِ بَيْنَنَا وَبَيْنَكَ يَارَسُولُ اللهِ ﷺقَالَ: إِنَّ للِرَّحِمِ حَقّاً وَلكِنْ وَهَبْتُ لَكَ الذَّهَبَ بِحُسْنِ ثَنَاءِكَ عَلَي اللهِ .
رواه الطبراني في الاوسط ورجاله رجال الصحيح غير عبدالله بن محمد بن ابي عبدالرحمن الاذرمي وهوثقة مجمع الزوائد:١٠/٢٤٢
186. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒருவரைக் கடந்து சென்றார்கள், அப்போது, அவர் தொழுகையில், (يَامَنْ لاَ تَرَاهُ الْعُيُونُ، وَلاَ تُخَالِطُهُ الظُّنُونُ، وَلاَ يَصِفُهُ الْوَاصِفُونَ، وَلاَ تُغَيِّرُهُ الْحَوَادِثُ، وَلاَ يَخْشَي الدَّوَائِرَ، يَعْلَمُ مَثَاقِيلَ الْجِبَالِ، وَمَكَايِيلَ الْبِحَارِ، وَعَدَدَ قَطْرِ اْلاَمْطَارِ، وَعَدَدَ وَرَقِ اْلاَشْجَارِ، وَعَدَدَ مَا أَظْلَمَ عَلَيْهِ اللَّيْلُ وَأَشْرَقَ عَلَيْهِ النَّهَارُ، وَلاَ تُوَارِي مِنْهُ سَمَاءٌ سَمَاءً، وَلاَ أَرْضٌ أَرْضاً، وَلاَ بَحْرٌ مَافِي قَعْرِهِ، وَلاَ جَبَلٌ مَا فِي وَعْرِهِ، اجْعَلْ خَيْرَ عُمْرِي آخِرَهُ، وَخَيْرَ عَمَلِي خَوَاتِيمَهُ، وَخَيْرَ أَيَّامِي يَوْمَ اَلْقَاكَ فِيهِ) “கண்களால் பார்க்கப்பட முடியாதவனே! எண்ணங்களால் எட்டப்பட முடியாதவனே! வர்ணிப்பவர்களின் வர்ணனையால் வர்ணிக்கப்பட முடியாதவனே! காலத்தின் சோதனைகளால் மாற்றப்பட முடியாதவனே! காலத்தின் ஆபத்துகளுக்கு அஞ்சாதவனே! மலைகளின் கன எடைகளை, கடல்களின் கொள்ளவுகளை, மழைத்துளிகளின் எண்ணிக்கைகளை, மரங்களின் இலைகளின் எண்ணிக்கைகளை அறிந்தவனே! மேலும், இரவின் இருளில் மறைந்திருப்பவைகள் இன்னும் பகலின் ஒளியில் பிரகாசிப்பவைகளின் எண்ணிக்கைகளை அறிந்தவனே! அவனை விட்டும் எந்த வானமும், மற்ற வானத்தை மறைத்துவிட முடியாது, எந்தப் பூமியும் மற்ற பூமியை அவனை விட்டும் மறைத்துவிட முடியாது, எந்தக் கடலும் அதன் ஆழத்தில் இருப்பவற்றை அவனை விட்டும் மறைத்துவிட முடியாது, எந்த மலையும் அதன் உறுதியான பாறையினுள் இருப்பவற்றை அவனை விட்டும் மறைத்துவிட முடியாது. என் வாழ் நாளின் கடைசிப் பகுதியை மிகச் சிறந்ததாக ஆக்கிவிடு! எனது கடைசி அமலை மிகச்சிறந்த அமலாக ஆக்கிவிடு! உன்னைச் சந்திக்கும் (மவ்த்தாகும்) நாளை சிறப்பான நாளாக ஆக்கிவிடு!” என்று துஆச் செய்து கொண்டிருந்தார். அவர் தொழுது முடித்ததும் அவரைத் தம்மிடம் அழைத்து வர நபி (ஸல்) அவர்கள் ஒருவரை நியமித்தார்கள். அவ்வாறே அவர் தொழுதபின், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். நபி (ஸல்) அவர்களுக்கு தங்கச் சுரங்கத்திலிருந்து சிறிது தங்கம் அன்பளிப்பாக வந்திருந்தது, அதை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அவரிடம், “நீர் எந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவர்?” என்று வினவினார்கள். “யாரஸூலல்லாஹ்! நான் “பனூஆமிர்‘ கோத்திரத்தைச் சார்ந்தவன்“‘ என்றார். “நான் உமக்குத் தங்கத்தை பரிசளித்தது ஏன் என்று அறிவீரா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “யாரஸூலல்லாஹ்! தங்களுக்கும், எங்களுக்குமிடையே உள்ள உறவு முறையின் காரணமாக பரிசளித்தீர்கள்” என்றார் அவர், “உறவு முறைக்கான கடமையுண்டு, ஆயினும், உமக்கு நான் தங்கம் கொடுத்தது நீர் மிகவும் அழகிய முறையில் அல்லாஹ்வைப் புகழ்ந்தீர் என்பதற்கே!” என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் சொன்னார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- நஃபில் தொழுகையில், ஒவ்வொரு நிலையிலும், இவ்வாறான துஆக்கள் ஓதலாம்.
١٨٧– عَنْ أَبِي بَكْرٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْباً فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَسْتَغْفِرُ اللهَ إِلاَّ غَفَرَ اللهُ لَهُ ثُمَّ قَرَأَ هذِهِ اْلآيَةَ: (وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْظَلَمُوا أَنْفُسَهُمْ) إِلَي آخِرِ اْلآيَةَ.
(آل عمران:١٣٥). رواه ابوداؤد باب في الاستغفار رقم:١٥٢١
187. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், எவரேனும் பாவம் செய்துவிட்டால் அவர் நல்லமுறையில் உளூச் செய்து எழுந்து நின்று இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டினால், அவரை அல்லாஹ் மன்னித்துவிடுவான். இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் (وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْظَلَمُوا أَنْفُسَهُمْ) “அந்த அடியார்கள், (அவர்கள் நிலை என்னவென்றால்) ஒரு பாவம் செய்துவிட்டாலோ, தீமை செய்து தன் மீது அநியாயம் இழைத்துக் கொண்டாலோ, உடனடியாக அவர்களுக்கு அல்லாஹ்வின் நினைவு வந்துவிடுகிறது. பிறகு அல்லாஹ்விடம் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறார்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்கமுடியும்? (ஆலு இம்ரான்:135) மேலும், அவர்கள் பாவம் செய்யத் துணியமாட்டார்கள். (தவ்பாவினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று) அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்” என்ற ஆயத்தை ஓதினார்கள்.
(அபூதாவூத்)
١٨٨– عَنِ الْحَسَنِ ؒ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أَذْنَبَ عَبْدٌ ذَنْباً ثُمَّ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ خَرَجَ إِلَي بَرَازٍ مِنَ اْلاَرْضِ فَصَلَّي فِيهِ رَكْعَتَيْنِ وَاسْتَغْفَرَ اللهَ مِنْ ذلِكَ الذَّنْبِ إِلاَّ غَفَرَ اللهُ لَهُ.
رواه البيهقي في شعب الايمان:٥ /٤٠٣
188. “ஒருவரிடம் ஏதேனும் பாவம் நிகழ்ந்துவிட்டால், அவர் நல்ல முறையில் உளூச் செய்து, ஒரு திறந்த மைதானத்திற்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுது, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால், அல்லாஹ் அவருடைய பாவத்தை நிச்சயம் மன்னித்துவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
١٨٩– عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِﷺ يُعَلِّمُنَا اْلاِسْتِخَارَةَ فِي اْلأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ: إِذَاهَمَّ أَحَدُكُمْ بِاْلاَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِالْفَرِيضَةِ ثُمَّ لْيَقُلْ: اَللّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ خَيْرٌلِّي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ: عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ. فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْلِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ قَالَ: وَيُسَمِّي حَاجَتَهُ.
رواه البخاري با ب ماجاء في التطوع مثني مثني رقم:١١٦٢
189. ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “குர்ஆனிலுள்ள சூராக்களை முக்கியத்துவத்துடன் எங்களுக்குக் கற்றுக் கொடுப்பதுபோல், எங்கள் காரியங்களில் இஸ்திகாரா செய்வதையும் முக்கியத்துவத்துடன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். மேலும், உங்களில் எவரேனும் ஏதேனும் ஒரு காரியம் செய்ய நாடினால், (அதன் முடிவு நன்மையாக இருக்குமா இருக்காதா என்ற கவலை ஏற்பட்டால் அவர் இவ்விதம் இஸ்திகாரா செய்யவேண்டும்) முதலில் அவர் இரண்டு ரக்அத் நஃபில் தொழுதுவிட்டுப் பிறகு (اَللّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ خَيْرٌلِّي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ: عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ. فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْلِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ) என்ற துஆவை ஓதவேண்டும். யாஅல்லாஹ்! உன் அறிவின் பொருட்டால், உன்னிடம் நான் நன்மையைத் தேடுகிறேன், உன் வல்லமையின் பொருட்டால் சக்தியை வேண்டுகிறேன், மகத்தான உன்னுடைய கருணையை உன்னிடம் கேட்கிறேன். ஏனேனில், நீ எல்லாக் காரியங்களின் மீதும் சக்தி பெற்றவன், நான் எந்தக் காரியத்துக்கும் சக்தியற்றவன், நீ அணைத்தையும் அறிந்திருக்கிறாய், நான் எதையும் அறியாதவன், நீதான் மறைவானவற்றை நன்கு அறிந்தவன். யாஅல்லாஹ்! இந்தக் காரியம் என்னுடைய தீனுக்கும், உலக வாழ்விற்கும், என்னுடைய வாழ்வின் முடிவுக்கும் நல்லதென நீ அறிந்திருந்தால், அதை எனக்குத் தந்து இலகுவாக்கி வைப்பாயாக! பிறகு அதில் பரக்கத்தும் செய்வாயாக! இந்தக் காரியம் என்னுடைய தீனுக்கும், உலக வாழ்விற்கும் என் வாழ்வின் முடிவுக்கும் சிறந்ததல்ல என்று நீ அறிந்திருந்தால், என்னைவிட்டு இக்காரியத்தையும் இக்காரியத்தை விட்டு என்னையும் தடுத்துவிடுவாயாக! எனக்கு எந்த காரியம் நல்லதோ அது எங்கிருந்தாலும் அதை எனக்கு அளிப்பாயாக! பிறகு அக்காரியத்தைப் பொருந்திக் கொண்டவனாகவும், நிம்மதி பெற்றவனாகவும் என்னை ஆக்குவாயாக!”, துஆவில் தான் நாடியுள்ள காரியத்தை இன்ன காரியம் என்று சொல்ல வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
(புகாரி)
குறிப்பு:- பிராயாணத்துக்காக இஸ்திகாரா செய்ய வேண்டும் என்றால் ஹாதஸ்ஸஃபர் என்றோ அல்லது திருமணத்துக்காக இஸ்திகாரா செய்ய வேண்டும் என்றால் ஹாதன்னிகாஹ் என்றோ சொல்ல வேண்டும். அரபியில் சொல்லத் தெரியவில்லை என்றால் துஆவில் ஹாதல் அம்ர் என்று வரும் இரு இடங்களிலும் எந்தக் காரியத்துக்காக இஸ்திகாரா செய்கிறாரோ அந்தக் காரியத்தை நினைவில் கொண்டுவரவேண்டும்.
١٩٠– عَنْ أَبِي بَكْرَةَ ؓ قَالَ: خَسَفَتِ الشَّمْسُ عَلَي عَهْدِ النَّبِيِّ ﷺ فَخَرَجَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّي انْتَهَي إِلَي الْمَسْجِدِ وَثَابَ النَّاسُ إِلَيْهِ فَصَلَّي بِهِمْ رَكْعَتَيْنِ، فَانْجَلَتِ الشَّمْسُ فَقَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ وَإِنَّهُمَا لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَإِذَا كَانَ ذلِكَ فَصَلُّوا وَادْعُوا حَتَّي يَنْكَشِفَ مَا بِكُمْ، وَذلِكَ أَنَّ ابْناً للِنَّبِيِّ ﷺ مَاتَ يُقَالُ لَهُ: إِبْرَاهِيمُ فَقَالَ النَّاسُ فِي ذلِكَ.
رواه البخاري باب الصلاة في كسوف القمر رقم:١٠٦٣
190. ஹஜ்ரத் அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபியவர்கள் தமது போர்வையை இழுத்தவாறு (விரைவாக) பள்ளிக்குச் சென்றார்கள். ஸஹாபாக்கள் அன்னாரிடம் ஒன்று கூடினார்கள். ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழவைத்தார்கள், அதே சமயம் கிரகணமும் நீங்கிவிட்டது. அதன் பிறகு, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், “சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும். யாருடைய மரணத்தின் காரணமாகவும் கிரகணம் ஏற்படுவதில்லை (மாறாக வானம், பூமியிலுள்ள இதர படைப்பினங்களைப் போல இவற்றின் மீதும் அல்லாஹ் தன் ஆதிக்கத்தை செலுத்துகிறான். அவை பிரகாசிப்பதும் அவை இருள்மயமாவதும் அவன் வசம் உள்ளது) ஆகையால், சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டால் கிரகணம் நீங்கும் வரை தொழுகையிலும், துஆவிலும் ஈடுபட்டிருங்கள்” என்று சொன்னார்கள். (அன்றைய தினம் தான்) ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் மகனார் ஹஜ்ரத் இப்ராஹீம் (ரலி) அவர்களின் மரணம் சம்பவித்தது. அச்சமயம் மக்களில் சிலர், “இவரது இறப்பால் தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசத் தொடங்கினர், அதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
(புகாரி)
١٩١– عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدِ نِ الْمَازِنِيِّ ؓ يَقُولُ: خَرَجَ رَسُولُ اللهِ ﷺ إِلَي الْمُصَلَّي فَاسْتَسْقَي وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ.
رواه مسلم باب كتاب صلاة الاستسقاء رقم:٢٠٧٠
191. ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு ஸைத் மாஸினீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஈத்காவுக்குச் சென்றார்கள், அங்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மழைக்காக துஆச் செய்தார்கள், கிப்லாவை முன்னோக்கியவாறு தங்கள் போர்வையை புரட்டிப் போட்டுக் கொண்டார்கள், (இவ்வாறே நம்முடைய நிலையையும் அல்லாஹ் மாற்றட்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உணர்த்தினார்கள்).
(முஸ்லிம்)
١٩٢– عَنْ حُذَيْفَةَ ؓ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا حَزَبَهُ أَمْرٌ صَلَّي.
رواه ابوداؤد باب وقت قيام النبي ﷺ من الليل رقم:١٣١٩
192. “ஏதேனும் முக்கியமான பிரச்சனை ஏற்பட்டால், உடனே தொழுகையில் ஈடுபட்டுவிடுவது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது வழக்கமாக இருந்து வந்தது” என்று ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
١٩٣– عَنْ مَعْمَرٍؒ عَنْ رَجُلٍ مِنْ قُرَيْشٍ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا دَخَلَ عَلَي أَهْلِهِ بَعْضُ الضِّيقِ فِي الرِّزْقِ أَمَرَ أَهْلَهُ بِالصَّلوةِ ثُمَّ قَرَأَ هذِهِ اْلآيَةَ (وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلوةِ۞).
اتحاف السادة المتقين عن مصنف عبدالرزاق:٣ /١١
193. “நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாரின் செலவினங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால், குடும்பத்தார்களைத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவுவார்கள். பிறகு, (وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلوةِ) “(நபியே!) உமது வீட்டாரைத் தொழுமாறு ஏவுவீராக! நீரும் தொழுகையைக் கடைபிடித்து வருவீராக, நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை, உமக்குத் தேவையானவற்றை நாமே தருகிறோம், நல்ல முடிவு பயபக்தி உள்ளவருக்கே!” (சூரா தாஹா:132) என்ற ஆயத்தை ஓதிக்காட்டுவார்கள்” என்று குறைஷி கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் வாயிலாக ஹஜ்ரத் மஃமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக், இத்ஹாப்புஸ்ஸாதா)
١٩٤– عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَي اْلاَسْلَمِيِّ ؓ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ ﷺ فَقَالَ: مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَي اللهِ أَوْ إِلَي أَحَدٍ مِنْ خَلْقِهِ فَلْيَتَوَضَّأْ وَلْيُصَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ لْيَقُلْ: لاَ إِلهَ إِلاَّ اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللّهُمَّ إِنِّي أَسْئَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ أَسْئَلُكَ أَلاَّ تَدَعَ لِي ذَنْباً إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضاً إِلاَّ قَضَيْتَهَا لِي، ثُمَّ يَسْأَلُ اللهَ مِنْ أَمْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ مَاشَاءَ فَإِنَّهُ يُقَدَّرُ.
رواه ابن ماجه باب ماجاء في صلوة الحاجة رقم:١٣٤٨. قال البوصيري: قلت: رواه الترمذي من طريق فائد به دون قوله: ثُمَّ يَسْاَلُ اللّهَ مِنْ أَمْرِ الدُّنْيَا. الي اخره ورواه الحاكم في المستدرك باختصار وزاد بعد قوله: وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْعِصْمَةَ مِنْ كُلِّ ذَنْبٍ.وله شاهد من حديث انس رواه الاصبهاني ورواه ابويعلي الموصلي في مسنده من طريق فائدة به …،مصباح الزجاجة:١ /٢٤٦
194. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள், “எவருக்கேனும் ஏதேனும் தேவை ஏற்பட்டால், அத்தேவை அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, அல்லது படைப்பினங்களுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, அவர் உளூச் செய்து இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, (لاَ إِلهَ إِلاَّ اللّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللّهُمَّ إِنِّي أَسْئَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ أَسْئَلُكَ أَلاَّ تَدَعَ لِي ذَنْباً إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضاً إِلاَّ قَضَيْتَهَا لِي) “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற் குரியவன் யாருமில்லை, அவன் மிகவும் சகிப்புத் தன்மையுடையவன், சங்கைக்குரியவன், அல்லாஹ் எல்லாக் குறைகளைவிட்டும் தூய்மையானவன். மகத்தான அர்ஷின் அதிபதி. அகிலத்திற்கெல்லாம் இரட்சகனான அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்‘. யாஅல்லாஹ், நான் உன்னிடம் உன் ரஹ்மத்தைத் கட்டாயமாக்கும் எல்லாக் காரியங்களையும் உன்னுடைய பிழை பொறுத்தலை உறுதியாக்குபவற்றையும் கேட்கிறேன். எல்லா நன்மையிலும் பங்கையும் பாவத்திலிருந்து பாதுகாப்பையும் கேட்கிறேன். எனது எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே! எந்தக் கவலையையும் நீக்காமல் விடாதே! உனக்குப் பொருத்தமாக உள்ள எனது எந்தத் தேவையையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே!” என்று துஆச் செய்தபின் அல்லாஹ்விடம் இம்மை, மறுமையின் எந்தக் காரியத்தைக் கேட்டாலும் அது அவருக்குக் கிடைக்கும்” என்று எங்களிடம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என்பதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அபீ அவ்ஃபா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
١٩٥– عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ إِلَي الْبَحْرَيْنِ فِي تِجَارَةٍ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: صَلِّ رَكْعَتَيْنِ.
رواه الطبراني في الكبير ورجاله موثقون مجمع الزوائد:٢/٥٧٢
195. “ஒருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து, “யாரஸூலல்லாஹ்! நான் வியாபாரம் செய்ய பஹ்ரைன் செல்ல விரும்புகிறேன்” என்றார். “(பயணம் தொடங்கு முன்) இரண்டு ரக்அத் தொழுது கொள்வீராக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவரிடம் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٩٦– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِذَا دَخَلْتَ مَنْزِلَكَ فَصَلِّ رَكَعَتَيْنِ تَمْنَعَانِكَ مَدْخَلَ السُّوءِ، وَإِذَا خَرَجْتَ مِنْ مَنْزِلِكَ فَصَلِّ رَكْعَتَيْنِ تَمْنَعَانِكَ مَخْرَجَ السُّوءِ.
رواه البزار ورجاله موثقون مجمع الزوائد:٢ /٥٧٢
196. “நீர் உமது வீட்டில் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழுது கொள்வீராக. இந்த இரு ரக்அத்தும் நீர் வீட்டில் நுழைந்த பின் ஏற்படும் தீங்கிலிருந்து உம்மைக் காக்கும். இவ்வாறே வீட்டைவிட்டு வெளியேறும் முன் இரண்டு ரக்அத் தொழுது கொள்வீராக. இந்த இரு ரக்அத்தும் வீட்டைவிட்டு வெளியேறிய பின் ஏற்படும் தீங்கிலிருந்து உம்மைக் காக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதை ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
١٩٧– عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ لَهُ: كَيْفَ تَقْرَأُ فِي الصَّلاَةِ؟ فَقَرَأْتُ عَلَيْهِ أُمَّ الْقُرْآنِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَاأَنْزَلَ اللهُ فِي التَّوْرَاةِ وَلاَفِي اْلاِنْجِيلِ وَلاِفِي الزَّبُورِ وَلاِفِي الْقُرْآنِ مِثْلَهَا وَإِنَّهَا لَلسَّبْعُ الْمَثَانِي.
رواه احمد (الفتح الرباني):١٨/٦٥
197. நபி (ஸல்) அவர்கள், என்னிடம் “நீர் தொழுகையின் ஆரம்பத்தில் என்ன ஓதுகிறீர்?” என்று கேட்டார்கள், சூரத்துல் ஃபாத்திஹாவை அவர்களிடம் நான் ஓதிக் காட்டினேன். “என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! தவ்ராத்திலோ, இன்ஜீலிலோ, ஸபூரிலோ, குர்ஆனிலுள்ள இதர பகுதிகளிலோ இதை போன்ற ஒரு சூராவை அல்லாஹ் இறக்கவில்லை. (ஸூரத்துல் பாத்திஹாவான) இதுதான் ஒவ்வொரு தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு ஆயத்துகளாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் உபய்யிப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத், அஹ்மத், பத்ஹுர் ரப்பானி)
١٩٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: قَالَ اللهُ تَعَالَي: قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ وَلِعَبْدِي مَاسَأَلَ، فَإِذَا قَالَ الْعَبْدُ: (اَلْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ۞) قَالَ اللهُ تَعَالَي: حَمِدَنِي عَبْدِي، وَإِذَا قَالَ: (اَلرَّحْمنِ الرَّحِيمِ۞) قَالَ اللهُ تَعَالَي: أَثْنَي عَلَيَّ عَبْدِي، فَإِذَا قَالَ: (مَالِكِ يَوْمِ الدِّينِ۞) قَالَ: مَجَّدَنِي عَبْدِي وَقَالَ مَرَّةً: فَوَّضَ إِلَيَّ عَبْدِي، فَإِذَا قَالَ: (إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَُ۞) قَالَ: هذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَاسَأَلَ، فَإِذَا قَالَ: (اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ.صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ۞) قَالَ: هذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَاسَاَلَ.
(وهو جزء من الحديث) رواه مسلم باب وجوب قراءة الفاتحة في كل ركعة…. رقم:٨٧٨
198. “நான் சூரத்துல் பாத்திஹாவை எனக்கும் எனது அடியானுக்குமிடையே பாதி பாதியாக பங்கு வைத்துவிட்டேன், (சூராவின் முதல் பாதி என் சம்பந்தப்பட்டது, மறுபாதி என் அடியான் சம்பந்தப்பட்டது). என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும். எனது அடியான் (اَلْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ) “எல்லாப் புகழும் உலகத்தின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது!” என்று சொன்னால், எனது அடியான் என்னைப் புகழ்ந்தான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான் (اَلرَّحْمنِ الرَّحِيمِ) ‘அவன் பெரும் அருளாளன், நிகரற்ற அன்பாளன்‘ என்று சொன்னால், “என் அடியான் என்னை நல்ல பண்புகளைக் கொண்டு வர்ணித்தான்‘ என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், (مَالِكِ يَوْمِ الدِّينِ) “அவன் அமலுக்குப் பிரதிபலன் வழங்கும் நாளின் அதிபதி‘ என்று சொன்னால், “எனது அடியான் என்னைப் பெருமைப்படுத்தினான்‘ என்று கூறுகிறான். அடியான் (إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَُ) “உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்‘, என்று சொன்னால், “இது நானும் என் அடியானும் சம்பந்தப்பட்டது, வணக்கம் எனக்குரியது, உதவி தேடுவது என் அடியானுக்கு உரியது), அவன் எதைக் கேட்கிறானோ, அது அவனுக்குக் கொடுக்கப்படும்‘ என்று அல்லாஹ் சொல்கிறான். (اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ.صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ) “உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழியான நேரான வழியில் எங்களை நடத்துவாயாக! எவர்கள் மீது உன் கோபம் இறங்கியதோ, அவர்களுடைய வழியிலோ, வழி தவறியவர்களின் வழியிலோ அல்ல‘ என்று ஓதியதும், “இந்தப் பகுதி என் அடியானுக்கே சொந்தமானது, அவன் எதைக் கேட்டானோ அது அவனுக்குக் கிடைத்துவிட்டது‘ என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
١٩٩– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: إِذَا قَالَ اْلإِمَامُ (غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ۞) فَقُولُوا: آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
رواه البخاري باب جهرالماموم بالتامين رقم:٧٨٢
199. “இமாம் (غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ) என்று சொன்னதும் “ஆமீன்‘ என்று கூறுங்கள், ஏனேனில் எவருடைய ஆமீன் மலக்குகளின் ஆமீனுடன் சேர்ந்துவிடுகிறதோ, (இருவரும் ஒரே நேரத்தில் ஆமீன் என்று கூறினால்) அவருடைய முந்திய பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன‘ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٠٠– عَنْ أَبِي مُوسَي اْلاَشْعَرِيّ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ فِي حَدِيثِ طَوِيلٍ: وَإِذَا قَالَ: (غَيْرِالْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ۞) فَقُولُوا آمِينَ، يُجِبْكُمُ اللهُ.
رواه مسلم باب التشهد في الصلاة رقم:٩٠٤
200. “இமாம் (غَيْرِالْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ) என்று சொன்னதும், நீங்கள் “ஆமீன்‘ என்று கூறுங்கள். அல்லாஹ் உங்கள் துஆவுக்குப் பதிலளிப்பான்‘ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
٢٠١– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَي أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلاَثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ؟ قُلْنَا: نَعَمْ قَالَ: فَثَلاَثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثِ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ.
رواه مسلم باب فضل قراءة القران …رقم:١٨٧٢
201. “உங்களில் ஒருவர் தமது வீட்டிற்குச் சென்றால், அங்கு பருத்த பெரிய மூன்று கர்ப்பமான ஒட்டகங்கள் இருப்பதை விரும்புவாரா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வினவியதற்கு, “ஆம்!’ என்று நாங்கள் சொன்னோம். “மூன்று ஆயத்துகளைத் தொழுகையில் ஓதுவது மூன்று கர்ப்பமான பெரிய பருத்த ஒட்டகங்கள் கிடைப்பதைவிடச் சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஒட்டகங்கள் அரபியர்களுக்கு மிகப் பிரியமான பிராணி, குறிப்பாக திமில் பெருத்த ஒட்டகங்களை மிக அதிகமாக விரும்புவர். எனவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தை உதாரணங்காட்டி, குர்ஆன் ஓதுவது பிரியமான அந்தச் செல்வங்களை விட மேலானது என்று கூறினார்கள்.
٢٠٢– عَنْ أَبِي ذَرٍّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ رَكَعَ رَكَعَةً أَوْ سَجَدَ سَجْدَةً رُفِعَ بِهَا دَرَجَةً وَحُطَّتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ.
رواه كله احمد والبزار بنحوه باسانيد وبعضها رجاله رجال الصحيح ورواه الطبراني في الاوسط مجمع الزوائد:٢ /٥١٥
202. “எவரொருவர் ஒரு ருகூஃ அல்லது ஒரு ஸுஜூது செய்வாரோ அவருக்கு ஒரு தகுதி உயர்த்தப்படுகிறது, ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத், அஹ்மத், பஸ்ஸார், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٠٣–عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعِ نِ الزُّرَقِيِّ ؓ قَالَ: كُنَّا نُصَلِّي يَوْماً وَرَاءَ النَّبِيِّ ﷺ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ قَالَ رَجُلٌ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّباً مُبَارَكاً فِيهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ: مَنِ الْمُتَكَلِّمُ؟ قَالَ: أَنَا قَالَ: رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكاً يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ.
رواه البخاري كتاب الاذان رقم:٧٩٩
203. “ஒரு நாள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம், நபி (ஸல்) அவர்கள் ருகூ செய்துவிட்டுத் தலையை உயர்த்தி (سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَهُ) என்று சொன்னதும், ஒருவர் (رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّباً مُبَارَكاً فِيهِ) என்று கூறினார்”. நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், “இக்கலிமாக்களைக் கூறியவர் யார்?’ என்று கேட்டார்கள், “நான் கூறினேன்‘ என்று அவர் சொன்னார், “முப்பதுக்கும் அதிகமான மலக்குகள் ஒவ்வொருவரும் இக்கலிமாக்களின் நன்மைகளை முதலில் யார் எழுதுவது என்று போட்டியிடுவதை நான் கண்டேன்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் ரிபாஅத்திப்னு ராஃபிஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٠٤– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: إِذَا قَالَ اْلإِمَامُ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا: اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَلَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
رواه مسلم باب التسميع والتحميد والتامين رقم:٩١٣
204. “இமாம் (ருகூவிலிருந்து எழுந்து) (سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَهُ) என்று சொன்னதும் நீங்கள் (رَبَّنَا لَكَ الْحَمْدُ) என்று சொல்லுங்கள். எவருடைய சொல்லுடன் மலக்குகளுடைய சொல்லும் ஒன்றுபடுமோ, அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٠٥– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ.
رواه مسلم باب مايقال في الركوع والسجود رقم:١٠٨٣
205. “அடியான் தொழுகையில் இருக்கும் சமயம் ஸஜ்தாவின் நிலையில் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமாகிவிடுகிறான். எனவே (ஸஜ்தாவுடைய நிலையில்) அதிகமாக துஆச் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- நஃபில் தொழுகைகளில் குறிப்பாக ஸஜ்தாவின் போது துஆக்களை முக்கியத்துவத்துடன் ஓதி வரவேண்டும்.
٢٠٦– عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؓ أَنَّهُ سَمِعَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَامِنْ عَبْدٍ يَسْجُدُ لِلّهِ سَجْدَةً إِلاَّ كَتَبَ اللهُ لَهُ بِهَا حَسَنَةً وَمَحَا عَنْهُ بِهَا سَيِّئَةً، وَرَفَعَ لَهُ بِهَا دَرَجَةً، فَاسْتَكْثِرُوا مِنَ السُّجُودِ.
رواه ابن ماجه باب ماجاء في كثرة السجود رقم:١٤٢٤
206. “யாரேனும் ஓர் அடியான் அல்லாஹ்வுக்காக ஸஜ்தாச் செய்தால், அதன் காரணமாக அல்லாஹ் ஒரு நன்மையை நிச்சயமாக எழுதுகிறான். ஒரு பாவத்தை மன்னிக்கிறான். ஒரு பதவியை உயர்த்துகிறான். ஆகவே, மிக அதிகமாக ஸஜ்தாச் செய்யுங்கள். (தொழுது வாருங்கள்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உபாதத்திப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٢٠٧– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ، اِعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي يَقُولُ: يَاوَيْلِي! أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ.
رواه مسلم باب بيان اطلاق اسم الكفر…رقم:٢٤٤
207. “ஆதமுடைய மகன் ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தால் ஷைத்தான் அழுதவாறு ஒரு பக்கம் ஒதுங்கிவிடுகிறான்.”ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்யக் கட்டளையிடப்பட்டது, அவன் ஸஜ்தா செய்து சுவனத்திற்கு உரியவனாகி விட்டான். “எனக்கும் ஸஜ்தாச் செய்யக் கட்டளையிடப்பட்டது, ஆனால் ஸஜ்தா செய்ய நான் மறுத்தேன், நரகத்திற்குரியவனாகி விட்டேனே! அந்தோ! கைசேதமே!’ என்று ஒப்பாரிவைக்கிறான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٠٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ (فِي حَدِيثٍ طَوِيلٍ): إِذَا فَرَغَ اللهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ، وَأَرَادَ أَنْ يُخْرِجَ بِرَحْمَتِهِ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ، أَمَرَ الْمَلاَئِكَةَ أَنْ يُخْرِجُوا مِنَ النَّارِمَنْ كَانَ لاَ يُشْرِكُ بِاللهِ شَيْئاً مِمَّنْ أَرَادَ اللهُ تَعَالَي أَنْ يَرْحَمَهُ مِمَّنْ يَقُولُ: لاَ إِلهَ إِلاَّ اللهُ فَيَعْرِفُونَهُمْ فِي النَّارِ يَعْرِفُونَهُمْ بِأَثَرِ السُّجُودِ، تَأْكُلُ النَّارُ مِنَ ابْنِ آدَمَ إِلاَّ أَثَرَ السُّجُودِ، حَرَّمَ اللهُ عَلَي النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ، فَيُخْرَجُونَ مِنَ النَّارِ.
رواه مسلم باب معرفة طريق الرؤية رقم:٤٥١
208. “அல்லாஹ் அடியார்களுக்குரிய தீர்ப்பை செய்து முடித்த பின், தனது ரஹ்மத்தின் மூலம் தான் விரும்பியவரை நரகத்திலிருந்து வெளியேற்ற எண்ணி, “எவர்கள் உலகில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் “லா இலாஹ இல்லல்லாஹ்‘ என்று சொன்னார்களோ, அவர்களை நரகிலிருந்து வெளியேற்றுங்கள் என்று கூறுவான்”, மலக்குகள் அவர்களை ஸஜ்தாவின் அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள். ஸஜ்தாவுடைய அடையாளங்களைத் தவிர உடம்பின் பிற பகுதிகளை நரக நெருப்பு எரித்துவிடும். ஏனேனில், அல்லாஹ் நரக நெருப்புக்கு ஸஜ்தாவின் அடையாளங்களை எரிப்பதை ஹராமாக்கி விட்டான். (எவர்களை வெளியேற்ற மலக்குகளுக்குக் கட்டளையிடப் பட்டதோ) அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஸஜ்தாவின் அடையாளங்கள் என்பது, மனிதன் ஸஜ்தாச் செய்ய பயன்படுத்தும் ஏழு உறுப்புகளாகும். அவை நெற்றி, இருகைகள், இருமுழங்கால்கள், இரு கால்கள் ஆகியனவாம்.
(நவவீ)
٢٠٩–عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ.
رواه مسلم باب التشهد في الصلاة رقم:٩٠٣
209. ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களுக்கு, குர்ஆனின் சூராக்களைக் கற்றுக் கொடுப்பதைப் போல “தஷஹ்ஹு”தை கற்றுக் கொடுத்தார்கள்‘.
(முஸ்லிம்)
٢١٠– عَنْ خَفَّافِ بْنِ إِيمَاءَ بْنِ رَحَضَةَ الْغِفَارِيِّ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا جَلَسَ فِي آخِرِ صَلاَتِهِ يُشِيرُ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ، وَكَانَ الْمُشْرِكُونَ يَقُولُونَ يَسْحَرُبِهَا، وَكَذَبُوا وَلكِنَّهُ التَّوْحِيدُ.
رواه احمد مطولا والطبراني في الكبير ورجاله ثقات مجمع الزوائد:٢ /٣٣٣
210. ஹஜ்ரத் கஃப்பாஃபிப்னு ஈமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் கடைசியில் (கடைசி இருப்பில்) அமர்ந்ததும் தமது ஆட்காட்டி விரலால் சைக்கினை செய்வார்கள். இதைக் காணும் முஷ்ரிக்குகள், “இவர் இச்சைக்கினையினால் சூனியம் செய்கிறார் என்று கூறிக்கொண்டிருந்தனர், (அல்லாஹ் காப்பாற்றுவானாக) அவர்கள் பொய்யே கூறிவந்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் ஏகத்துவத்தை சாடைகாட்டி வந்தார்கள்” (அல்லாஹ் ஒருவன் என்பதை இந்த சாடை உணர்த்துகிறது).
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢١١– عَنْ نَافِعٍ ؒ قَالَ: كَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ ؓ إِذَا جَلَسَ فِي الصَّلاَةِ وَضَعَ يَدَيْهِ عَلَي رُكْبَتَيْهِ وَأَشَارَ بِإِصْبَعِهِ وَأَتْبَعَهَا بَصَرَهُ ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَهِيَ أَشَدُّ عَلَي الشَّيْطَانِ مِنَ الْحَدِيدِ يَعْنِي السَّبَّابَةَ.
رواه احمد:٢ /١١٩
211. “ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் அமர்ந்ததும் தமது இருகைகளையும் தம் இரு முழங்காலின் மீது வைப்பார்கள், (ஆள்காட்டி) விரலால் சைகை செய்தவாறு அந்த விரல் மீது தன் பார்வையை செலுத்துவார்கள். தொழுத பிறகு, “தஷஹ்ஹுதுடைய நிலையில் ஆட்காட்டி விரல் ஷைத்தானுக்கு இரும்பை விடக் கடினமானது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்கள் என்று ஹஜ்ரத் நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், (தஷஹ்ஹுத் இருப்பில் ஆட்காட்டி விரலால் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை சமிக்ஞை செய்வது ஷைத்தானுக்கு அவன் மீது ஈட்டி போன்றவைகளால் எறியப்படுவதைவிடவும் மிகக் கடினமானது.
(முஸ்னத் அஹ்மத்)


இறையச்சம்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (حَافِظُوا عَلَي الصَّلَوَاتِ وَالصَّلوةِ الْوُسْطَي ق وَقُومُوا للّهِ قنِتِينَ۞).
البقرة:٢٣٨
1. (ஐந்து நேரத்) தொழுகைகளையும் (குறிப்பாக அஸர் தொழுகையாகிய) நடுத்தொழுகையையும் (விடாமல் தொழுது) பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள்.
(அல்பகரா:238)
وَقَالَ تَعَالي: (وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلوةِ ط وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَي الْخشِعِينَ۞).
البقرة:٤٥
2. மேலும், பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவருக்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும்.
(அல்பகரா:45)
குறிப்பு:- பொறுமை என்பது மன இச்சையை அடக்குவது, அல்லாஹ்வுடைய அணைத்து கட்டளைகளையும் நிறைவேற்றுவதுமாகும். மேலும் சிரமத்தின் போது சகித்துக் கொள்வதும் பொறுமையே (கஷ்ஃபுர்ரஹ்மான்) தீனின்படி அமல் செய்ய பொறுமை தொழுகையின் மூலம் உதவி தேடும்படி இந்த ஆயத்தின் மூலம் கட்டளையிடப்பட்டுள்ளது.
(ஃபத்ஹுல் முல்ஹிம்)
وَقَالَ تَعَالي: (قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ ۞ الَّذِينَ هُمْ فِي صَلاَتِهِمْ خشِعُونَ۞).
المؤمنون:٢،١
3. (ஓரிறை) நம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றியடைந்துவிட்டனர் – அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுடைய தொழுகையில் அவர்கள் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பர்.
(அல்முஃமினூன்:1,2)
ஹதீஸ்கள்:-
٢١٢– عَنْ عُثْمَانَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَا مِنِ امْرِئئٍ مُسْلِمٍ تَحْضُرُهُ صَلاَةٌ مَكْتُوبَةٌ فَيُحْسِنُ وُضُوءَهَا وَخُشُوعَهَا وَرُكُوعَهَا إِلاَّ كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنَ الذُّنُوبِ مَالَمْ يُؤْتِ كَبِيرَةً، وَذلِكَ الدَّهْرَ كُلَّهُ.
رواه مسلم باب فضل الوضوء …صحيح مسلم:١ /٢٠٦. طبع داراحيا ءالتراث العر بي
212. “எந்த முஸ்லிம் பர்ளுத் தொழுகையின் நேரம் வந்ததும் நல்ல முறையில் உளூச் செய்து மிக்க பயபக்தியுடன் தொழுது அதில் நல்ல முறையில் ருகூம் செய்கிறாரோ, அவர் பெரும் பாவங்களில் ஈடுபடாதவரை அத்தொழுகை அவரது முந்தைய பாவங்களுக்குப் பரிகாரமாகிவிடும். இச்சிறப்பு அவருக்கு என்றோன்றும் கிடைத்துக் கொண்டிருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- தொழுகையில் உள்ளச்சம் என்பது, உள்ளத்தில் அல்லாஹ்வின் கண்ணியமும், பயமும் இருப்பதோடு உடலுறுப்புகளும் அமைதி பெற்றிருக்கவேண்டும். பக்தி என்பது நிலையில் நிற்கும்போது ஸஜ்தாச் செய்யும் இடத்திலும், ருகூவில் கால் விரல்களின் மீதும், ஸஜ்தாவில் மூக்கின் மீதும், இருப்பில் மடியின் மீதும் பார்வையைச் செலுத்துவது உள்ளச்சத்தைச் சார்ந்தது.
(பயானுல் குர்ஆன், ஷரஹ் ஸுனன் அபூதாவூத்)
٢١٣– عَنْ زَيْدِ بْنِ خَالِدِنِ الْجُهَنِيِّ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ صَلَّي رَكْعَتَيْنِ لاَ يَسْهُو فِيهِمَا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
رواه ابوداؤد باب كراهية الوسوسة …رقم:٩٠٥
213. “எவர் நன்றாக உளூச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது அதில் மறதி ஏற்படாமல் (அல்லாஹ்வின் பக்கம் முழுமையான கவனம் செலுத்தி), தொழுகிறாரோ, அவரது முந்திய பாவங்கள் யாவும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸைதிப்னு காலித் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்)
٢١٤–عَنْ عُقْبَةَ بْنِ عَامِرِنِ الْجُهَنِيِّ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُسْبِغُ الْوُضُوءَ، ثُمَّ يَقُومُ فِي صَلاَتِهِ فَيَعْلَمُ مَا يَقُولُ إِلاَّ انْفَتَلَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ مِنَ الْخَطَايَا لَيْسَ عَلَيْهِ ذَنْبٌ.
(الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح وله طرق عن ابي اسحاق ولم يخرجاه ووافقه الذهبي:٢ / ٣٩٩
214. “ஒரு முஸ்லிம் பூரணமான முறையில் உளூச் செய்து பின்பு தொழ நின்று தன் தொழுகையில் தான் என்ன ஓதுகிறோம் என்பதை விளங்கியவாறு தொழுதால், அன்று பிறந்த பாலகனைப் போன்று அவர் பாவத்தை விட்டு நீங்கி தொழுகையை முடித்து வெளியாகிறார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢١٥– عَنْ حُمْرَانَ مَوْلَي عُثْمَانَ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ ؓ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ، فَغَسَلَ كَفَّيْهِ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَي إِلَي الْمِرْفَقِ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَي مِثْلَ ذلِكَ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَي إِلَي الْكَعْبَيْنِ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ الْيُسْرَي مِثْلَ ذلِكَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولُ اللهِ ﷺ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هذَا، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هذَا، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكَعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ قَالَ ابْنُ شِهَابٍ: وَكَانَ عُلَمَاؤُنَا يَقُولُونَ: هذَا الْوُضُوءُ أَسْبَغُ مَا يَتَوَضَّأُ بِهِ أَحَدٌ للِصَّلاَةِ.
رواه مسلم باب صفة الوضوء وكماله رقم:٥٣٨
215. ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களால் உரிமைவிடப்பட்ட அடிமை ஹஜ்ரத் ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் உளூச் செய்யத் தண்ணீர் தருவித்தார்கள், உளூச் செய்ய ஆரம்பித்தார்கள். முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) மூன்று முறை கழுவினார்கள், வாய் கொப்பளித்தார்கள், மூக்கைச் சுத்தம் செய்தார்கள், தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள், தமது வலக்கையை முழங்கை உட்பட மூன்று முறையும், இடக்கையை மூன்று முறையும் கழுவினார்கள், தலைக்கு மஸஹு செய்தார்கள், வலக்காலைக் கரண்டைக்கால் உட்பட மூன்று முறையும், அவ்வாறே” இடக்காலை மூன்று முறையும் கழுவினார்கள். அதன் பிறகு, “நான் உளூச் செய்ததைப் போன்று நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் கண்டேன்” என்று சொன்னார்கள். உளூச் செய்து முடித்தபின், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் “நான் உளூச் செய்தது போன்று உளூச் செய்து தொழுகையில் வேறு எந்தவித சிந்தனையும் கொண்டுவராமல் யார் இரண்டு ரக்அத்துகள் தொழுகிறாரோ, அவரது முந்திய பாவங்கள் அணைத்தும் மன்னிக்கப்படுகின்றன” என்று கூறினார்கள். “இந்த முறையில் உளூச் செய்வது தொழுகைக்குரிய முழுமையான உளூவாகுமென நமது ஆலிம்கள் கூறுகிறார்கள்” என்று ஹஜ்ரத் இப்னுஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢١٦– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَامَ فَصَلَّي رَكْعَتَيْنِ أَوْ أَرْبَعاً – شَكَّ سَهْلٌ – يُحْسِنُ فِيهِمَا الرُّكُوعَ وَالْخُشُوعَ، ثُمَّ اسْتَغْفَرَ اللهَ غُفِرَ لَهُ.
رواه احمد واسناده حسن مجمع الزوائد:٢ /٥٦٤
216. “ஒருவர் நன்றாக உளூச் செய்து இரண்டோ, நான்கோ ரக்அத்துககள் (இந்த ஹதீஸை அறிவிக்கும் ராவிக்கு இரண்டு ரக்அத்தா? நான்கு ரக்அத்தா? என்பது சந்தேகம்) தொழுது அதில் நன்றாக ருகூ செய்து, பயபக்தியுடன் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டால், அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢١٧–عَنْ عُقْبَةَ بْنِ عَامِرِ نِ الْجُهَنِيِّ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ وَيُصَلِّي رَكْعَتَيْنِ يُقْبِلُ بِقَلْبِهِ وَوَجْهِهِ عَلَيْهِمَا إِلاَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ.
رواه ابوداؤد باب كراهية الوسوسة …رقم:٩٠٦
217. “எவர் நல்ல முறையில் உளூச் செய்து தொழுகையில் உள்ளத்தை முழுமையாக ஈடுபடுத்தி உறுப்புகளையும் அமைதியாக வைத்து இரண்டு ரக்அத் தொழுவாரோ, அவருக்கு நிச்சயம் சொர்க்கம் கடமையாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்)
٢١٨– عَنْ جَابِرٍ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَي رَسُولُ اللهِ ﷺ فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ أَيُّ الصَّلاَةِ أَفْضَلُ؟ قَالَ: طُولُ الْقُنُوتِ.
رواه ابن حبان (واسناده صحيح):٥/٥٤
218. ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து, “யாரஸூலல்லாஹ்! சிறந்த தொழுகை எது?” என்று கேட்டதற்கு “நீண்ட நேரம் நின்று தொழும் தொழுகை” என்று பதில் கூறினார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٢١٩– عَنْ مُغِيرَةَ ؓ قَالَ: قَامَ النَّبِيُّ ﷺ حَتَّي تَوَرَّمَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ: غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، قَالَ: أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا؟
رواه البخاري باب قوله:ليغفرلك الله ماتقدم من ذنبك …رقم:٤٨٣٦
219. ஹஜ்ரத் முஙீரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் தங்களின் பாதங்கள் வீங்கும் வரை நீண்ட நேரம் நின்று தொழுவார்கள்.”அல்லாஹ் தங்களது முன் பின் பாவங்களை (நிகழ்ந்து இருந்தாலும்) மன்னித்துவிட்டானே!’ (ஏன் இவ்வளவு சிரமம் மேற்கொள்ளவேண்டும்?) என்று அன்னாரிடம் கேட்கப்பட்டது”. “நான் நன்றியுள்ள அடியானக ஆகவேண்டாமா?” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(புகாரி)
٢٢٠– عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ الرَّجُلَ لَيَنْصَرِفُ وَمَا كُتِبَ لَهُ إِلاَّ عُشْرُ صَلاَتِهِ تُسْعُهَا ثُمُنُهَا سُبُعُهَا سُدُسُهَا خُمُسُهَا رُبُعُهَا ثُلُثُهَا نِصْفُهَا.
رواه ابوداؤد باب ماجاء في نقصان الصلوة رقم:٧٩٦
220. “ஒரு மனிதர் தொழுது முடித்ததும், அவருக்குப் பத்தில் ஒரு நன்மை எழுதப்படுகிறது. இவ்வாறே சிலருக்கு ஒன்பதில் ஒன்று, எட்டில் ஒன்று, ஏழில் ஒன்று, ஆறில் ஒன்று, ஐந்தில் ஒன்று, நான்கில் ஒன்று, மூன்றில் ஒன்று, சிலருக்குப் பாதி நன்மையும் எழுதப்படுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அம்மாரிப்னு யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- எந்த அளவு தொழுகையின் வெளிரங்கமும் அந்தரங்கமும் சுன்னத்துக்கு ஏற்றவாறு அமைந்திருக்குமோ அந்த அளவு அதிகமாகக் கூலியும், நன்மையும் கிடைக்கும் என்பது ஹதீஸின் கருத்தாகும்.
(பத்லுல் மஜ்ஹூத்)
٢٢١– عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ قَالَ: الصَّلاَةُ مَثْنَي مَثْنَي تَشَهَّدُ فِي كُلِّ رَكْعَتَيْنِ، وَتَضَرَّعُ، وَتَخَشَّعُ، وتَمَسْكَنُ ثُمَّ تُقَنِّعُ يَدَيْكَ يَقُولُ تَرْفَعُهُمَا إِلَي رَبِّكَ مُسْتَقْبِلاً بِبُطُونِهَما وَجْهَكَ تَقُولُ: يَارَبِّ يَارَبِّ فَمَنْ لَمْ يَفْعَلْ ذلِكَ فَهُوَكَذَاوكَذاَ.
رواه احمد:٤ /١٦٧
221. “இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழும்போது ஒவ்வொரு இரு ரக்அத்தின் இறுதியிலும், “தஷஹ்ஹுத்‘ ஓதுங்கள். தன் இயலாமையை வெளிப்படுத்திப் பணிவுடனும் தாழ்மையுடனும் அமைதியாகவும் தொழுங்கள். தொழுது முடித்த பின், தம் இருகைகளையும் உள்ளங்கை முகத்தை நோக்கியவாறு இருக்க நெஞ்சுவரை உயர்த்தி தமது இரட்சகனிடத்தில் துஆச் செய்யுங்கள். (யாரப்பி, யாரப்பி) “இரட்சகனே! இரட்சகனே!’ என்று சொல்லி துஆச் செய்யுங்கள். இவ்வாறு செய்யாதவரின் தொழுகை (நன்மை, மற்றும் கூலியின் அடிப்படையில்) குறையுள்ள தொழுகையே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஃபழ்லுப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٢٢– عَنْ أَبِي ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَزَالُ اللهُ مُقْبِلاً عَلَي الْعَبْدِ فِي صَلاَتِهِ مَالَمْ يَلْتَفِتْ، فَإِذَا صَرَفَ وَجْهَهُ انْصَرَفَ عَنْهُ.
رواه النسائي باب التشديد في الالتفات في الصلاة رقم:١١٩٦
222. “அடியான் தொழுகையில் வேறு பக்கம் கவனம் செலுத்தாமல் இருக்கும்வரை அல்லாஹ்வும் அடியானின் பக்கம் கவனம் செலுத்துகிறான். அடியான் தன் கவனத்தைத் தொழுகையை விட்டும் திருப்பிவிட்டால், அல்லாஹ்வும் தன் கவனத்தை அடியானை விட்டும் திருப்பிக் கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸயீ)
٢٢٣– عَنْ حُذَيْفَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ الرَّجُلَ إِذَا قَامَ يُصَلِّي أَقْبَلَ اللهُ عَلَيْهِ بِوَجْهِهِ حَتَّي يَنْقَلِبَ أَوْ يُحْدِثَ حَدَثَ سُوءٍ.
رواه ابن ماجه باب المصلي يتنخم رقم:١٠٢٣
223. “ஒருவர் தொழ நின்றால், அவர் தொழுது முடிக்கும்வரை அல்லது (தொழுகையில்) பயபக்திக்கு இடையூறு உண்டாக்கும் காரியங்களில் ஈடுபடாமலிருக்கும் வரை அல்லாஹ்வும் அவர் பக்கம் முழுமையான கவனம் செலுத்துகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
٢٢4- عَنْ أَبِي ذَرٍّ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَي الصَّلوةِ فَلاَ يَمْسَحِ الْحَصَي فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ.
رواه الترمذي وقال:حديث ابي ذر حديث حسن باب ماجاء في كراهية مسح الحصي ….رقم:٣٧٩
224. “உங்களில் ஒருவர் தொழ நின்றால், தொழுகையில் தேவையின்றி பொடிக் கற்களை நகர்த்த வேண்டாம். ஏனேனில், தொழுகை நேரத்தில் அல்லாஹ்வின் தனிப்பட்ட ரஹ்மத் அவரை முன்னோக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை: இஸ்லாமின் ஆரம்பக் காலத்தில் பள்ளிவாசல்களில் பொடிக்கற்கள் பரத்தப்பட்டிருந்தன, சில சமயங்களில் கற்கள் நட்டிய நிலையில் இருக்கும்போது ஸஜ்தாச் செய்வது சிரமமாக இருந்து வந்தது, (தொழும்) அந்த நேரம் அல்லாஹ்வின் ரஹ்மத் முன்னோக்கும் நேரம். அச்சமயம் கற்களை நகர்த்துவதால் அல்லது இதுபோன்ற வேறு செயல்களில் ஈடுபடுவதால், அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்காமல் போய்விடும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி கற்களை நகர்த்துவதைத் தடுத்தார்கள்.
٢٢٥– عَنْ سَمُرَةَ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يَاْمُرُنَا إِذَا كُنَّا فِي الصَّلوةِ وَرَفَعْنَا رُؤُوسَنَا مِنَ السُّجُودِ أَنْ نَطْمَئِنَّ عَلَي اْلاَرْضِ جُلُوساً وَلاَ نَسْتَوْفِزَ عَلَي أَطْرَافِ اْلاَقْدَامِ.
رواه بتمامه هكذا الطبراني في الكبير واسناده حسن وقد تكلم الازدي وابن حزم في بعض رجاله بما لايقدح مجمع الزوائد:٢/٣٢٥
225. “நாங்கள் தொழுகையில் இருக்கும்போது ஸஜ்தா செய்துவிட்டுத் தலையை உயர்த்தியதும் அமைதியாகத் தரையில் அமருமாறும், உள்ளங்காலின் மீது அமராமலிருக்குமாறும்”, நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தனர் என்று ஹஜ்ரத் ஸமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٢٦– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: أُحَدِّثُكُمْ حَدِيثاً سَمِعْتُهُ مِنْ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: اُعْبُدِ اللهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ، وَاعْدُدْ نَفْسَكَ فِي الْمَوْتَي، وَإِيَّاكَ وَدَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا تُسْتَجَابُ، وَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَشْهَدَ الصَّلاَتَيْنِ الْعِشَاءَ وَالصُّبْحَ وَلَوْ حَبْواً فَلْيَفْعَلْ.
رواه الطبراني في الكبير والرجل الذي من النخع لم اجد من ذكره وقد ورد من وجه اخر وسماه جابرا وفي الحاشية:وله شواهد يتقوي به مجمع الزوائد:٢ /١٦٥
226. ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் தமது மரண நேரத்தில் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட, ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்கிறேன், “அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பதைப் போன்று வணங்குங்கள். இந்நிலை உங்களுக்கு ஏற்படவில்லையெனில், அல்லாஹ் உங்களைப் பார்க்கிறான் என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள், தன்னை இறந்தவர்களில் ஒருவராக எண்ணிக் கொள்ளவும் (தன்னை உயிருள்ளோரில் ஒருவராகக் கருதவேண்டாம், அந்நிலையில் மகிழ்ச்சி, கவலைக்குரிய நிகழ்ச்சி எது நிகழ்ந்தாலும் மகிழ்ச்சியோ கவலையோ ஏற்படாது) அநீதி இழைக்கப்பட்டோரின் சாபத்தை விட்டும் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள், ஏனேனில், அது விரைவில் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படுகிறது, தவழ்ந்து சென்றாவது இஷா, பஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்தில் கலந்து கொள்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٢٧– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ صَلِّ صَلاَةَ مُوَدِّعٍ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ كُنْتَ لاَ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ.
(الحديث) وراه ابو محمدالابراهيمي في كتاب الصلوة وابن النجار عن ابن عمر وهو حديث حسن الجامع الصغير:٢ /٩٦
227. “அனைவரிடமும் இறுதி விடை பெற்றுச் செல்லும் மனிதரைப் போன்று தொழுவீராக, (இது என் வாழ் நாளின் கடைசித் தொழுகை என்று நினைத்துத் தொழவும்). மேலும், நீர் அல்லாஹ்வைப் பார்ப்பது போன்று தொழுவீராக! இந்நிலை ஏற்படாவிட்டால் குறைந்தபட்சம் அல்லாஹ் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையாவது மனதில் அவசியம் இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஜாமிஃஸஃஙீர்)
٢٢٨– عَنْ عَبْدِ اللهِ ؓ قَالَ: كُنَّا نُسَلِّمُ عَلَي رَسُولُ اللهِ ﷺ وَهُوَ فِي الصَّلاَةِ، فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا فَقُلْنَا: يَارَسُولَ اللهِﷺ كُنَّا نُسَلِّمُ عَلَيْكَ فِي الصَّلاَةِ فَتَرُدُّ عَلَيْنَا، فَقَالَ: إِنَّ فِي الصَّلاَةِ شُغْلاً.
رواه مسلم باب تحريم الكلام في الصلاة …رقم:١٢٠١
228. ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “(இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்லி வந்தோம். நபி (ஸல்) அவர்களும் எங்களுக்கு பதில் சொல்லுவார்கள். நஜாஷி மன்னரிடமிருந்து நாங்கள் திரும்பி வந்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு (வழக்கம் போல்) ஸலாம் சொன்னோம், அன்னார் பதில் சொல்லவில்லை. “யாரஸூலல்லாஹ், தாங்கள் தொழுது கொண்டிருக்கும் போது முன்பு தங்களுக்கு ஸலாம் சொல்வோம், தாங்களும் பதில் சொல்வீர்கள்.(ஆனால் இம்முறை தாங்கள் பதில் சொல்லவில்லையே) என்று நாங்கள் கேட்டோம், “தொழும்போது தொழுகையில் மட்டும்தான் ஈடுபடவேண்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
٢٢٩– عَنْ عَبْدِ اللهِ ؓ قَالَ: رَأَيْتُ رَسُولُ اللهِ ﷺ يُصَلِّي وَفِي صَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الرَّحَي مِنَ الْبُكَاءِ.
رواه ابوداؤد باب البكاء في الصلاة رقم:٩٠٤
229. “நபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களின் புனிதமான நெஞ்சிலிருந்து அழும் சப்தம் (சுவாசம் தடைபடுவதால்) திருகையின் சப்தத்தைப் போல், அழும் சப்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٣٠– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ مَرْفُوعاً قَالَ: مَثَلُ الصَّلاَةِ الْمَكْتُوبَةِ كَمَثَلِ الْمِيزَانِ مَنْ أَوْفَي اسْتَوْفَي.
رواه البيهقي هكذا ورواه غيره عن الحسن مرسلا وهوالصواب الترغيب:١/٣٥١
230. “பர்ளுத் தொழுகைக்கு உதாரணம் தராசைப் போன்றது, தொழுகையை முழுமையாக நிறைவேற்றுபவருக்கு முழுக் கூலியும் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ, தர்ஃஙீப்)
٢٣١– عَنْ عُثْمَانَ بْنِ أَبِي دَهْرِشَ مُرْسَلاً قَالَ: لاَ يَقْبَلُ اللهُ مِنْ عَبْدٍ عَمَلاً حَتَّي يُحْضِرَ قَلْبَهُ مَعَ بَدَنِهِ.
إتحاف السادة:٣ /١١٢. قال المنذري: رواه محمدبن نصرالمروزي في كتاب الصلاة هكذا مرسلا ووصله ابو منصور الديلمي في مسندالفردوس من حديث ابي بن كعب والمرسل اصح الترغيب: ١/ ٣٤٦
231. “அடியான் தன் உடலுடன் தன் உள்ளத்தையும் ஈடுபடுத்திச் செய்யும் செயலையே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அபூதஹ்ரிஷ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இத்ஹாப்)
٢٣٢– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: الصَّلاَةُ ثَلاَثَةُ أَثْلاَثٍ: الطُّهُورُ ثُلُثٌ، وَالرُّكُوعُ ثُلُثٌ، وَالسُّجُودُ ثُلُثٌ، فَمَنْ أَدَّاهَا بِحَقِّهَا قُبِلَتْ مِنْهُ وَقُبِلَ مِنْهُ سَائِرُ عَمَلِهِ، وَمَنْ رُدَّتْ عَلَيْهِ صَلاَتُهُ رُدَّ عَلَيْهِ سَائِرُ عَمَلِهِ.
رواه البزار وقال:لانعلمه مرفوعا الا عن المغيرة ابن مسلم قلت: والمغيرة ثقة واسناده حسن مجمع الزوائد:٢ /٣٤٥
232. “தொழுகைக்கு மூன்று பகுதிகள் உள்ளன, (அம்மூன்று பகுதிகளைச் சரியாக நிறைவேற்றினால் தொழுகையின் நன்மைகள் பூரணமாகக் கிடைக்கும்) சுத்தமாக இருப்பதுது மூன்றில் ஒரு பகுதி, ருகூ செய்வது மூன்றில் ஒரு பகுதி, ஸஜ்தாச் செய்வது மூன்றில் ஒரு பகுதி, எவர் ஒழுக்கங்களைப் பேணித் தொழுகிறாரோ, அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அவரது மற்ற அமல்களும் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. எவரது தொழுகை (சரியில்லாததால்) ஏற்றுக் கொள்ளப்பட வில்லையோ, அவரது மற்ற அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٣٣– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: صَلَّي بِنَا رَسُولُ اللهِ ﷺ الْعَصْرَ، فَبَصَرَ بِرَجُلٍ يُصَلِّي، فَقَالَ: يَا فُلاَنُ اتَّقِ اللهَ أَحْسِنْ صَلاَتَكَ أَتَرَوْنَ أَنِّي لاَ أَرَاكُمْ، إِنِّي لأَرَي مِنْ خَلْفِي كَمَا أَرَي مِنْ بَيْنِ يَدَيَّ، أَحْسِنُوا صَلاَتَكُمْ وَأَتِمُّوا رُكُوعَكُمْ وَسُجُودَكُمْ.
رواه ابن خزيمة:١/٣٣٢
233. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழ வைத்தார்கள். அதற்குப் பிறகு ஒருவர் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். நண்பரே, அல்லாஹ்வைப் பயப்படுவீராக! அழகிய முறையில் தொழுவீராக!” நான் உங்களைப் பார்ப்பதில்லையென்று நினைத்துக் கொண்டீர்களா? நான் எனக்கு முன்னால் உள்ளவற்றைப் பார்ப்பது போல எனக்குப் பின்னால் உள்ளவற்றையும் பார்க்கிறேன். உங்கள் தொழுகைகளை அழகு படுத்துங்கள், ருகூ, ஸுஜூதையும் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்”.
(இப்னு குஸைமா)
தெளிவுரை:- நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் உள்ளவற்றையும் பார்ப்பது, நபி (ஸல்) அவர்களின் “முஃஜிஸா” எனும் அற்புதங்களைச் சார்ந்தது.
٢٣٤– عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا رَكَعَ فَرَّجَ أَصَابِعَهُ وَإِذَا سَجَدَ ضَمَّ أَصَابِعَهُ.
رواه الطبراني في الكبير واسناده حسن مجمع الزوائد:٢ /٣٢٥
234. “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ருகூச் செய்யும் பொழுது (கை) விரல்களை விரித்தவாறும் ஸஜ்தா செய்யும் பொழுது விரல்களைச் சேர்த்தவாறும் வைத்திருப்பார்கள்” என்று ஹஜ்ரத் வாயிலுப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٣٥– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: مَنْ صَلَّي رَكْعَتَيْنِ يُتِمُّ رُكُوعَهُ وَسُجُودَهُ لَمْ يَسْأَلِ اللهَ تَعَالَي شَيْئاً إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ عَاجِلاً أَوْ آجِلاً.
اتحاف السادة المتقين عن الطبراني في الكبير:٣ /٢١
235. “எவர் ருகூ, ஸுஜூதுகளைப் பூரணமாக நிறைவேற்றியவாறு இரண்டு ரக்அத்துகள் தொழுது அல்லாஹ்விடம் கேட்பாரோ, அல்லாஹ் அவர் கேட்டதை அவருக்கு உடனடியாகவோ அல்லது (அவருடைய நலனைக் கருதி) தாமதித்தோ நிச்சயம் கொடுப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(தபரானீ, இத்ஹாப்)
٢٣٦– عَنْ أَبِي عَبْدِ اللهِ اْلأَشْعَرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَثَلُ الَّذِي لاَ يُتِمُّ رُكُوعَهُ وَيَنْقُرُ فِي سُجُودِهِ مَثَلُ الْجَائِعِ يَأْكُلُ التَّمْرَةَ وَالتَّمْرَتَيْنِ لاَ تُغْنِيَانِ عَنْهُ شَيْئاً.
رواه الطبراني في الكبير وابويعلي واسناده حسن مجمع الزوائد:٢ / ٣٠٣
236. “ருகூவையும் பூர்த்தியாகச் செய்யாமல், ஸஜ்தாவின் போதும் பறவைகள் தன் அலகால் கொத்துவதைப் போலத் தொழுபவர், ஓரிரு பேரீத்தம் பழங்களைச் சாப்பிட்டுவிட்டுப் பசி தீராமல் இருக்கும் பசித்திருப்பவனைப் போன்றவராவார் (இப்படிப்பட்ட தொழுகை அற்றது)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅப்துல்லாஹ் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٣٧– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أَوَّلُ شَيْءٍ يُرْفَعُ مِنْ هذِهِ اْلأُمَّةِ الْخُشُوعُ حَتَّي لاَ تَرَي فِيهَا خَاشِعاً.
رواه الطبراني في الكبير واسناده حسن مجمع الزوائد:٢ /٣٢٦
237. “இந்தச் சமுதாயத்திலிருந்து முதன் முதலில் உள்ளச்சம் எடுக்கப்பட்டுவிடும், இச்சமுதாயத்தில் உள்ளச்சமுடைய ஒருவரைக் கூட நீர் காணமாட்டீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٣٨– عَنْ أَبِي قَتَادَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَسْوَأُ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ مِنْ صَلاَتِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِﷺ كَيْفَ يَسْرِقُ مِنْ صَلاَتِهِ؟ قَالَ: لاَ يُتِمُّ رُكُوعَهَا وَلاَ سُجُودَهَا، أَوْلاَ يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَلاَ فِي السُّجُودِ.
رواه احمد والطبراني في الكبير والاوسط ورجاله رجال الصحيح مجمع الزوائد:٢/٣٠٠
238. “தொழுகையில் திருடுபவனே, மிக மோசமான திருடன்!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, “யாரஸூலல்லாஹ்! தொழுகையில் எவ்வாறு திருடுவான்?” என்று ஸஹாபாக்கள் கேட்டனர். “ருகூ, ஸுஜூதைச் சரிவர நிறைவேற்றாதவன் அல்லது ருகூஉ, ஸுஜூதுவில் தன் இடுப்பை சீராக வைக்காதவன்” என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூகதாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٣٩– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَنْظُرُ اللهُ إِلَي صَلاَةِ رَجُلٍ لاَ يُقِيمُ صُلْبَهُ بَيْنَ رُكُوعِهِ وَسُجُودِهِ.
رواه احمد (الفتح الرباني):٣ /٢٦٧
239. “ருகூக்கும் ஸுஜூதுக்கும் இடையே (நிலையில்) இடுப்பை நேராக வைக்காதவரின் தொழுகையின் பக்கம் அல்லாஹ் ஏறிட்டும் பார்ப்பதில்லை” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், பத்ஹுர் ரப்பானி)
٢٤٠– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: سَأَلْتُ رَسُولُ اللهِ ﷺ عَنِ اْلاِلْتِفَاتِ فِي الصَّلاَةِ قَالَ: هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطانُ مِنْ صَلاَةِ الرَّجُلِ.
رواه الترمذي وقال:هذاحديث حسن غريب باب ماذكر في الالتفات في الصلاة رقم:٥٩٠
240. ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், தொழுகையில் அங்குமிங்கும் பார்ப்பதைப் பற்றிக் கேட்டேன், “அது தொழுகையை விட்டும் மனிதனை ஷைத்தான் ஏமாற்றி அபகரிப்பதாகும்”, என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
(திர்மிதீ)
٢٤١– عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَي السَّمَاءِ فِي الصَّلاَةِ أَوْلاَ تَرْجِعُ إِلَيْهِمْ.
رواه مسلم باب النهي عن رفع البصر ….رقم:٩٦٦
241. “தொழுகையில் வானத்தின் பக்கம் பார்ப்பவர்கள், பார்ப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளவும், இல்லையேல், அவர்களது பார்வை மேல் நோக்கியவாறே இருந்துவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٤٢– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّي فَسَلَّمَ عَلَي النَّبِيِّ ﷺ فَرَدَّ، فَقَالَ: اِرْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ، فَرَجَعَ فَصَلَّي كَمَا صَلَّي، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: اِرْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ثَلاَثاً، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ، فَعَلِّمْنِي، فَقَالَ: إِذَا قُمْتَ إِلَي الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَاْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّي تَطْمَئِنَّ رَاكِعاً، ثُمَّ ارْفَعْ حَتَّي تَعْتَدِلَ قَائِماً، ثُمَّ اسْجُدْ حَتَّي تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّي تَطْمَئِنَّ جَالِساً وَافْعَلْ ذلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا.
رواه البخاري باب وجوب القراءة للامام والماموم في الصلوات كلها ….رقم:٧٥٧
242. ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள், மற்றொரு மனிதரும் வந்தார் தொழுதார். (பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து) ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ஸலாமுக்குப் பதில் சொல்லிவிட்டு, “போய்த் தொழுவீராக! நீர் தொழவில்லை” என்றார்கள். அவர் சென்று முன்பு தொழுதது போலவே தொழுதுவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னார், “போய்த் தொழுவீராக! ஏனேன்றால் நீர் தொழவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நிகழ்ந்தது (இறுதியாக) அவர், “சத்தியத்தைக் கொண்டு தங்களை நபியாக அனுப்பியவன் மீது ஆணையாக! நான் இதைவிடச் சிறந்த முறையில் தொழ அறியேன். தாங்களே எனக்குத் தொழுகையைக் கற்றுத்தாருங்கள்” என்று சொன்னார். “நீர் தொழ நிற்கும் போது (முதலில்) தக்பீர் சொல்க, பிறகு குர்ஆனிலிருந்து உம்மால் இயன்றதை ஓதிக் கொள்க, பிறகு நிம்மதியாக ருகூ செய்க, பிறகு ருகூவிலிருந்து எழுந்து நிம்மதியாக நிற்க, பின் ஸஜ்தாவுக்குச் செல்க, அதில் நிம்மதியாக ஸஜ்தாச் செய்க, பிறகு தலையை உயர்த்தி நிம்மதியாக அமர்க, இவையனைத்தையும் உமது முழு தொழுகையிலும் இவ்வாறு செய்து கொள்க” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)


உளூவின் சிறப்புகள்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَي الصَّلوةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَي الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَي الْكَعْبَيْنِ۞).
المائدة:٦.
1. நம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்கு நீங்கள் ஆயத்தமானால், உங்கள் முகங்களையும் உங்கள் இரு கைகளையும் முழங்கைகள் வரைக் கழுவிக் கொள்ளுங்கள், உங்களுடைய தலைகளை (ஈரக் கைகளால்) தடவிக்கொள்ளுங்கள்; உங்களுடைய கால்களையும் இரு கணுக்கால் உட்பட(க் கழுவிக் கொள்ளுங்கள்)
(அல்மாயிதா:6)
وَقَالَ تَعَالي: (وَاللهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ۞).
التوبة:١٠٨
2. அல்லாஹ் தூய்மையானவர்களை (யே) நேசிக்கிறான்.
(அத்தவ்பா:108)

ஹதீஸ்கள்:-
٢٤٣- عَنْ أَبِي مَالِكِ نِ اْلاَشْعَرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: الطُّهُورُ شَطْرُ اْلإِيمَانِ، وَالْحَمْدُ لِلّهِ تَمْلأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ تَمْلآنِ – أَوْ تَمْلأُ – مَا بَيْنَ السَّموَاتِ وَاْلاَرْضِ، وَالصَّلاَةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْعَلَيْكَ.
(الحديث) رواه مسلم باب فضل الوضوء رقم:٥٣٤
243. “உளூ ஈமானின் பாதி, அல்ஹம்துலில்லாஹ் சொல்வது (அமல்களின்) தராசை நன்மைகளால் நிரப்பிவிடும், சுப்ஹானல்லாஹ்வும் அல்ஹம்துலில்லாஹ்வும் வானம், பூமிக்கிடையே உள்ள இடைவெளியை நன்மையால் நிரப்பிவிடும், தொழுகை பிரகாசம். ஸதகா ஆதாரம், பொறுமை வெளிச்சம், குர்ஆன் உங்களுக்குச் சாதகமான அல்லது பாதகமான அத்தாட்சி. குர்ஆனை ஓதி, அதன்படி செயல்பட்டால், அது உங்களது வெற்றிக்குக் காரணமாகும், இல்லையெனில், நீங்கள் தண்டிக்கப்படுவதற்குக் காரணமாகி விடும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஈமானால் உள்ளத்திலுள்ள ஷிர்க், குப்ரு என்ற அசுத்தம் நீங்குவதுபோல், உளூவால் உடல் உறுப்புகளின் அசுத்தம் நீங்குகிறது என்பதால் இந்த ஹதீஸில் உளூ ஈமானின் பாதி என்று கூறப்பட்டுள்ளது. ஒளி இருளை விரட்டி விடுவதைப்போல் தொழுகை பாவங்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் தடுப்பதால் தொழுகையை ஒளி என்று சொல்லப்பட்டுள்ளது. மற்றொரு பொருள்: தொழுகையால் தொழுபவரின் முகம் கியாமத் நாளன்று ஒளிமயமாக இருக்கும், உலகத்திலும், தொழுகையாளிகளின் முகம் செழிப்பாக இருக்கும். கப்ரு மற்றும் கியாமத்தின் இருளில் தொழுகை ஒளியாக இருக்கும் என்று தொழுகைக்கு முன்றாவது கருத்தும் கூறப்பட்டுள்ளது. தர்மம் ஆதாரம் என்பதன் கருத்தாவது: பொருள் மனிதனுக்கு விருப்பமான ஒன்றாகும், அதை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதால் அது அவர் ஈமானில் உண்மையாளர் என்பதற்கு ஆதாரமாகிவிடும் என்பதனாலாகும். பொறுமை ஒளி என்பதன் கருத்து, பொறுமையாளர், அல்லாஹ்வின் கட்டளைகளைப் பூர்த்தி செய்தும், அவனுக்கு மாறு செய்யாமலும், சிரமங்களைச் சகித்தும் வருபவர், தமக்குள் ஹிதாயத்தின் ஒளியை வைத்துக் கொண்டுள்ளார் என்பதாம்.
(நவவீ, மிர்காத்)
٢٤٤-عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: سَمِعْتُ خَلِيلِي ! يَقُولُ: تَبْلُغُ الْحِلْيَةُ مِنَ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوُضُوءُ.
رواه مسلم باب تبلغ الحلية… رقم:٥٨٦
244. “உளூவின் தண்ணீர் எட்டும் அளவுக்கு கியாமத் நாளன்று முஃமினுடைய (உளூவின் உறுப்புகளில்) அணிகலன்கள் இருக்கும்”. (உடல் உறுப்புகளில் எந்தப் பகுதி வரை உளூவுடைய தண்ணீர் அடையுமோ அதுவரை அவருக்கு அணிகலன்கள் அணிவிக்கப்படும்) என்று தன்னுடைய நேசர் நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٤٥- عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرّاً مُّحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ.
رواه البخاري باب فضل الوضوء والغرالمحجلون…رقم: ١٣٦
245. “கியாமத் நாளன்று எனது உம்மத்தினரின் கை, கால், முகம் ஆகிய உளூவின் உறுப்புகள் அதிகமாக உளூச் செய்ததின் காரணமாக ஒளிமிக்கதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும் நிலையில் அழைக்கப்படுவர். தமது ஒளியை அதிகரிக்க விரும்புகிறவர் அதிகரித்துக் கொள்ளட்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
தெளிவுரை:- உளூவுடைய உறுப்புகளில் எந்தப் பகுதியும் விடுபடாதவாறு கவனமாக உளூச் செய்யவேண்டும் என்பதாம்.
(மளாஹிர்ஹக்)
٢٤٦- عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّي تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ.
رواه مسلم باب خروج الخطايا ….رقم:٥٧٨
246. “எவர் சுன்னத்துகள், ஒழுக்கங்கள் முஸ்தஹப்புகளைப் பேணி அழகான முறையில் உளூச் செய்கிறாரோ, அவரது பாவங்கள் உடலிளிருந்து வெளியாகத் தொடங்கி, நகங்களின் கீழிலிருந்து வெளியேறிவிடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தெளிவுரை:- உளூ, தொழுகை போன்ற வணக்கங்கள் மூலம் சிறிய பாவங்கள் மட்டுமே மன்னிக்கப்படுகின்றன. பெரும் பாவங்கள் தவ்பா இன்றி மன்னிக்கப்படாது என்பது ஆலிம்களின் திட்டவட்டவமான முடிவாகும். ஆகையால், உளூ தொழுகை போன்ற வணக்கங்களைச் செய்வதோடு தவ்பா, இஸ்திஃபாரையும் பேணுதலாகச் செய்து வரவேண்டும். அதே சமயம், அல்லாஹ் தனது பேரருளால் ஒருவரது பெரும்பாவத்தையும் மன்னித்துவிட்டால் அது அவனுடைய கருணையாகும்.
(நவவீ)
٢٤٧- عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: لاَ يُسْبِغُ عَبْدٌ الْوُضُوءَ إِلاَّ غَفَرَاللهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ.
رواه البزار ورجاله موثقون والحديث حسن ان شاء الله مجمع الزوائد:١/٥٤٢
247. “எந்த அடியான் பூரணமாக உளூச் செய்து (ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை நன்றாக) கழுகிறாரோ, அவரது முன் பின் பாவங்கள் அணைத்தையும் அல்லாஹ் மன்னித்துவிடுவான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதை ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٤٨- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ – أَوْ فَيُسْبِغُ – الْوُضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ، يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ.
رواه مسلم باب الذكر المستحب عقب الوضوء رقم:٥٥٣،
وفي رواية لمسلم عَنْ عُقْبَةَ بْنِ عَامِرِ نِ الْجُهَنِيِّ ؓ: مَنْ تَوَضَّأَ فَقَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
(الحديث) باب الذكر المستحب عقب الوضوء رقم:٥٥٤,
وفي رواية لابن ماجه عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؓ: ثُمَّ قَالَ ثَلاَثَ مَرَّاتٍ …
باب مايقال بعدالوضوء رقم:٤٦٩,
وفي رواية لابي داؤد عَنْ عُقْبَةَ ؓ: فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ رَفَعَ نَظَرَهُ إِلَي السَّمَاءِ
باب مايقول الرجل اذاتوضا رقم:١٧٠
وفي رواية للترمذي عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ؓ: مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اَللّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ.
(الحديث) باب في مايقال بعدالوضوء رقم:٥٥
248. “உங்களில் எவர் முஸ்தஹப்புகள், ஒழுக்கங்களைப் பேணி நல்ல முறையில் உளூச் செய்து (أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ) என்று சொல்கிறாரோ, அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன. அவர் தான் விரும்பிய வாசல் வழியாக நுழைந்து கொள்ளலாம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) சொன்னதை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ஹஜ்ரத் உக்பத்துப்னு ஆமிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில், (أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ) என்று ஓதவேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது. ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பில், இக்கலிமாக்களை மூன்று முறை ஓதவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஹஜ்ரத் உக்பா (ரலி) அவர்களின் மற்றொர் அறிவிப்பில் உளூச் செய்த பிறகு வானத்தைப் பார்த்தவாறு இக்கலிமாக்களைக் கூறவேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் இன்னும் ஓர் அறிவிப்பில், (أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اَللّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ) “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாரும் இல்லை. மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது நல்லடியாரும் திருத்தூதரும் ஆவார்கள் என்று சாட்சி சொல்லுகிறேன். யாஅல்லாஹ்! என்னை தவ்பாச் செய்பவர்களிலும் தூய்மையாளர்களிலும் ஆக்குவாயாக!’ என்று கூறப்பட்டுள்ளது.
(முஸ்லிம், இப்னுமாஜா, அபூதாவூத், திர்மிதீ)
٢٤٩- عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: وَمَنْ تَوَضَّأَ ثُمَّ قَالَ: سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ كُتِبَ فِي رِقٍّ ثُمَّ طُبِعَ بِطَابِعٍ فَلَمْ يُكْسَرْ إِلَي يَوْمِ الْقِيَامَةِ.
(وهو جزء من الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح علي شرط مسلم ولم يخرجاه ووافقه الذهبي:١/٥٦٤
249. “எவர் உளூச் செய்துவிட்டு (سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ) என்று சொல்வாரோ, இக்கலிமாக்களை ஒரு காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மீது முத்திரை இடப்பட்டுவிடும். கியாமத் நாள்வரை உடைக்கப் படமாட்டாது. அதன் நன்மையை மறுமைக்குரிய பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)
٢٥٠- عَنِ ابْنِ عُمَرَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ تَوَضَّأَ وَاحِدَةً فَتِلْكَ وَظِيفَةُ الْوُضُوءِ الَّتِي لاَ بُدَّ مِنْهَا، وَمَنْ تَوَضَّأَ اثْنَتَيْنِ فَلَهُ كِفْلاَنِ، وَمَنْ تَوَضَّأَ ثَلاَثاً فَذلِكَ وُضُوئِي وَوُضُوءُ اْلاَنْبِيَاءِ قَبْلِي.
رواه احمد:٢ /٩٨
250. “எவர் உளூவுடைய ஒவ்வொரு உறுப்பையும் ஒரு முறை கழுவாரோ அது பர்ளுடைய தகுதியில் உள்ளது. எவர் ஒவ்வொரு உறுப்பையும் இரு முறை கழுவாரோ அவருக்கு இரு பங்கு கூலி கிடைக்கும், எவர் ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவாரோ இந்த உளூ என்னுடையதும், எனக்கு முன்னால் வந்த நபிமார்களுடையவும் உளூ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத், அஹ்மத்)
٢٥١- عَنْ عَبْدِ اللهِ الصُّنَابِحِيِّ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ فَتَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ، فَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ حَتَّي تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ حَتَّي تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ، فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ حَتَّي تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ، فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ حَتَّي تَخْرُجَ مِنْ تَحْتِ أَظَفْارِ رِجْلَيْهِ، ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَي الْمَسْجِدِ وَصَلاَتُهُ نَافِلَةً لَهُ.
رواه النسائي باب مسح الاذنين مع الراس …رقم:١٠٣
(وَفِي حَدِيثِ طَوِيلٍ) عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ السُّلَمِيِّ ؓ وَفِيهِ مَكَانَ (ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَي الْمَسْجِدِ وَصَلاَتُهُ نَافِلَةً): فَإِنْ هُوَ قَامَ فَصَلَّي، فَحَمِدَ اللهَ وَأَثْنَي عَلَيْهِ، وَمَجَّدَهُ بِالَّذِي هُوَ لَهُ أَهْلٌ، وَفَرَّغَ قَلْبَهُ لِلّهِ، إِلاَّ انْصَرَفَ مِنْ خَطِيئَتِهِ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ.
رواه مسلم باب اسلام عمرو بن عبسة ١ رقم:١٩٣٠
251. “முஃமினான அடியான் உளூச் செய்யும் சமயம் வாய் கொப்பளித்ததும் அவனுடைய வாயின் அனைத்துப் பாவங்களும் கழுவப்படுகிறது. மூக்கை (நாசித்துவாரத்தை)ச் சுத்தம் செய்ததும் மூக்கின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகிறது, முகத்தைக் கழுவியதும் முகத்தின் பாவங்கள் கழுவப்பட்டு கண் இமை முடிகளின் வேரிலிருந்து வெளியேறிவிடுகிறது. கைகளைக் கழுவியதும் கைகளின் பாவங்கள் கழுவப்பட்டு நகங்களின் கீழிருந்து வெளியேறிவிடுகிறது. தலைக்கு மஸஹ் செய்ததும் தலையின் பாவங்கள் கழுவப்பட்டுக் காதுகளிலிருந்து வெளியேறிவிடுகிறது. கால்களைக் கழுவியதும் கால்களின் பாவங்கள் கழுவப்பட்டுக் கால் விரல் நகங்களின் கீழிலிருந்து வெளியேறிவிடுகிறது. பிறகு, அவர் பள்ளிக்குச் செல்வதும் தொழுவதும் அவருக்கு அதிகப்படியான(சிறப்பிற்குக் காரணமான)தாக இருக்கும்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதை ஹஜ்ரத் அப்துல்லாஹ் ஸுனாபிஹீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “உளூச் செய்துவிட்டுத் தொழ நின்று அல்லாஹ்வின் தகுதிக்கேற்றவாறு அவனைப் புகழ்ந்து மேன்மைப்படுத்தியும் உயர்தன்மையைக் கூறியும் தனது உள்ளத்தை (அனைத்துச் சிந்தனைகளிலிருந்தும்) வெறுமையாக்கி அல்லாஹ்வின் பால் சிந்தனை செலுத்தித் தொழுதால், அவர் தொழுது முடித்ததும் அன்று பிறந்த பாலகனை போன்று பாவங்களிலிருந்து தூய்மையடைந்துவிடுகிறார்” என்று ஹஜ்ரத் அம்ரிப்னு அபஸா ஸுலமி (ரலி) அவர்களின் வாயிலாக மற்றொர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(நஸாயீ, முஸ்லிம்)
தெளிவுரை:- உளூவினால் உடல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. தொழுகையினால் உள்ளம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன என்று சில ஆலிம்கள் முதல் ஹதீஸுக்கு விளக்கம் கூறுகிறார்கள்.
(கஷ்ஃபுல் முஙத்தா)
٢٥٢- عَنْ أَبِي أُمَامَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: أَيُّمَا رَجُلٍ قَامَ إِلَي وُضُوءِهِ يُرِيدُ الصَّلاَةَ، ثُمَّ غَسَلَ كَفَّيْهِ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ كَفَّيْهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ لِسَانِهِ وَشَفَتَيْهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ سَمْعِهِ وَبَصَرِهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ إِلَي الْمِرْفَقَيْنِ وَرِجْلَيْهِ إِليَ الْكَعْبَيْنِ سَلِمَ مِنْ كُلِّ ذَنْبٍ هُوَ لَهُ وَمِنْ كُلِّ خَطِيئَةٍ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ، قَالَ: فَإِذَا قَامَ إِليَ الصَّلاَةِ رَفَعَ اللهُ بِهَا دَرَجَتَهُ وَإِنْ قَعَدَ قَعَدَ سَالِماً.
رواه احمد:٥ /٢٦٣
252. “ஒருவர் தொழ நாடி உளூச் செய்ய எழுந்து தன் இரு கைகளை மணிக்கட்டுவரை கழுவியதும் அவருடைய உள்ளங்கைகளின் பாவங்கள் தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்துவிடுகின்றன. பிறகு வாய் கொப்பளித்து நாசிக்குத் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சுத்தம் செய்ததும் அவரது நாவு, உதடுகளின் பாவங்கள் தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்துவிடுகின்றன. அடுத்து, முகத்தைக் கழுவியதும் அவருடைய காது, மற்றும் கண்களின் பாவங்கள் தண்ணீரின் முதல் சொட்டுடன் உதிர்ந்துவிடுகின்றன. அடுத்து கைகளை முழங்கைவரையும் கால்களைக் கணுக்கால்மொளி வரை கழுவியதும் அன்று பிறந்த பாலகனைப் போன்று தனது எல்லாப் பாவங்களிலிருந்தும் தூய்மையாகிவிடுகிறார். இனி, தொழ நின்றதும் அல்லாஹ் அந்தத் தொழுகையில் அவரது தகுதியை உயர்த்துகிறான், (தொழுகையில் ஈடுபடாமல்) உட்கார்ந்திருந்தாலும் பாவங்களிலிருந்து தூய்மையாகி உட்கார்ந்திருக்கிறார்”, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٥٣- عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ تَوَضَّأَ عَلَي طُهْرٍ كُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ.
رواه ابوداؤد باب الرجل يجدد الوضوء … رقم:٦٢
253. “ஒருவர் தனக்கு உளூ இருந்தும் புதிதாக உளூச் செய்தால் அவருக்குப் பத்து நன்மைகள் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- உளூ இருந்தும் புதிதாக உளூச் செய்வதற்கு முந்திய உளூவைக் கொண்டு ஏதாவது நல்செயல்கள் செய்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்று ஆலிம்கள் கூறி இருக்கிறார்கள்.
(பத்லுல் மஜ்ஹூத்)
٢٥٤- عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَي أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلوةٍ.
رواه مسلم باب السواك رقم:٥٨٩
254. “எனது உம்மத்துக்கு சிரமம் ஏற்படும் என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லையென்றால், ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் பல் துலக்க (மிஸ்வாக் செய்ய) அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٥٥- عَنْ أَبِي أَيُّوبَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: الْحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالسِّوَاكُ، وَالنِّكَاحُ.
رواه الترمذي وقال:حديث ابي ايوب حديث حسن غريب باب ماجاء في فضل التزويج والحث عليه رقم:١٠٨٠
255. “நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது வெட்கம், நறுமணம் பூசுவது, மிஸ்வாக் செய்வது. திருமணம் செய்வது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥٦- عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ ﷺ عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَاسْتِنْشَاقُ الْمَاءِ، وَقَصُّ اْلاَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ اْلإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ، قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌؒ : وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلاَّ أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ.
رواه مسلم باب خصال الفطرة رقم:٦٠٤
256. “பத்து காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது: மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது), மூக்கில் தண்ணீர் செலுத்திச் சுத்தம் செய்வது, நகம் வெட்டுவது, விரல்களின் இணைப்புகளையும் (அதேபோல் உடலில் அழுக்குப் படியும் இடங்களையும்) உதாரணமாக காது, மூக்குத் துவாரங்கள் போன்றவை களைப் பேணுதலாகக் கழுவது, தோள் புஜத்துக்குக் கீழ் உள்ள முடியைப் பிடுங்குவது, தொப்புளுக்குக் கீழுள்ள முடியைச் சிரைப்பது, மல, ஜலம் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்வது ஆகியனவாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “இவற்றில் பத்தாவது காரியம் என்னவென்பதை நான் மறந்துவிட்டேன் பத்தாவது காரியம் வாய் கொப்பளிப்பதாக இருக்கும் என எண்ணுகிறேன்’ என்று ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஜ்ரத் முஸ்அப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(முஸ்லிம்)
٢٥٧- عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلسِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ للِرَّبِّ.
رواه النسائي باب الترغيب في السواك رقم:٥
257. “மிஸ்வாக் (பல் துலக்கும் குச்சி) வாயைச் சுத்தப்படுத்தக் கூடியது. மேலும், அல்லாஹ்வின் திருப்திக்குரிய சாதனம்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
٢٥٨- عَنْ أَبِي أُمَامَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَا جَاءَنِي جِبْرِيلُؑ قَطُّ إِلاَّ أَمَرَنِي بِالسِّوَاكِ، لَقَدْ خَشِيتُ أَنْ أُحْفِيَ مُقَدَّمَ فِيَّ.
رواه احمد:٥ /٢٦٣
258. “ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) என்னிடம் வரும்போதெல்லாம் மிஸ்வாக் செய்வதை வலியுறுத்திக் கூறுவார்கள், அதிகமாக மிஸ்வாக் செய்வதால் என் ஈறுகளைக் காயப்படுத்திவிடுவேனோ என்று பயப்படும் அளவு மிஸ்வாக் செய்து வந்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٥٩- عَنْ عَائِشَةَ ؓ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ لاَ يَرْقُدُ مِنْ لَيْلٍ وَلاَ نَهَارٍ فَيَسْتَيْقِظُ إِلاَّ يَتَسَوَّكُ قَبْلَ أَنْ يَتَوَضَّأَ.
رواه ابوداؤد باب السواك لمن قام بالليل رقم:٥٧
259. “நபி (ஸல்) அவர்கள் இரவிலோ, பகலிலோ எப்பொழுது விழித்தாலும் உளூச் செய்வதற்கு முன் அவசியம் மிஸ்வாக் செய்வார்கள்” என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٦٠- عَنْ عَلِيٍّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ الْعَبْدَ إِذَا تَسَوَّكَ ثُمَّ قَامَ يُصَلِّي قَامَ الْمَلَكُ خَلْفَهُ فَيَسْتَمِعُ لِقِرَاءَ تِهِ فَيَدْنُو مِنْهُ – أَوْكَلِمَةً نَحْوَهَا – حَتَّي يَضَعَ فَاهُ عَلَي فِيهِ، فَمَا يَخْرُجُ مِنْ فِيهِ شَيْءٌ مِنَ الْقُرْآنِ إِلاَّ صَارَ فِي جَوْفِ الْمَلَكِ، فَطَهِّرُوا أَفْوَاهَكُمْ لِلْقُرْآنِ.
رواه البزار ورجاله ثقات مجمع الزوائد:٢ /٢٦٥
260. “ஓர் அடியான் மிஸ்வாக் செய்து தொழுகையில் நின்றதும் ஒரு மலக்கு அவருக்குப் பின்னால் நின்று அவர் ஓதுவதை கவனமாகக் கேட்கிறார். பிறகு, அம்மலக்கு அவருக்கு மிகவும் சமீபமாகி தமது வாயை அவருடைய வாயோடு சேர்க்குமளவு நெருங்கிவிடுகிறார். தொழுபவரின் நாவிலிருந்து வெளிப்படும் குர்ஆனின் வார்த்தை நேராக மலக்கின் வயிற்றுக்குள் சென்றுவிடுகிறது. (இவ்வாறு இவர் மலக்கின் நேசத்திற்கு உரியவர் ஆகிவிடுகிறார்). எனவே நீங்கள் குர்ஆன் ஓதுவதற்காக உங்கள் வாய்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். மிஸ்வாக் செய்வதைப் பேணுதலாகக் கடைப்பிடித்து வாருங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٦١- عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: رَكَعَتَانِ بِسِوَاكٍ أَفْضَلُ مِنْ سَبْعِينَ رَكَعَةً بِغَيْرِ سِوَاكٍ.
رواه البزار ورجاله موثقون مجمع الزوائد:٢ /٢٦٣
261. “மிஸ்வாக் செய்து இரண்டு ரக்அத்துகள் தொழுவது மிஸ்வாக் செய்யாமல் எழுபது ரக்அத்துகள் தொழுவதைவிடச் சிறந்தது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٦٢- عَنْ حُذَيْفَةَ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا قَامَ لِيَتَهَجَّدَ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ.
رواه مسلم باب السواك رقم:٥٩٣
262. “நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழ எழுந்ததும், மிஸ்வாக்கைக் கொண்டு தமது வாயை நல்ல முறையில் தேய்த்துச் சுத்தம் செய்வார்கள்” என்று ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٦٣- عَنْ شُرَيْحٍ ؒ قَالَ: سَاَلْتُ عَائِشَةَ ؓ قُلْتُ: بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ ﷺ إِذَا دَخَلَ بَيْتَهُ ؟ قَالَتْ: بِالسِّوَاكِ.
رواه مسلم باب السواك رقم:٥٩٠
263. ஹஜ்ரத் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், நான் உம்முல் முஃமினீன் ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்ததும் முதன் முதலில் என்ன செய்வார்கள்?” என்று கேட்டேன், “முதன் முதலில் மிஸ்வாக் செய்வார்கள்” என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லிம்)
٢٦٤- عَنْ زَيْدِ بْنِ خَالِدِ نِ الْجُهَنِيِّ ؓ قَالَ: مَا كَانَ رَسُولُ اللهِ ﷺ يَخْرُجُ مِنْ بَيْتِهِ لِشَيْءٍ مِنَ الصَّلَوَاتِ حَتَّي يَسْتَاكَ.
رواه الطبراني في الكبير ورجاله موثقون مجمع الزوائد:٢ /٢٦٦
26٤. “நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்யாதவரையில் எந்தத் தொழுகைக்காகவும் தமது வீட்டிலிருந்து வெளியேற மாட்டார்கள்” என்று ஹஜ்ரத் ஸைதுப்னு காலித் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٦٥- عَنْ أَبِي خَيْرَةَ الصُّبَاحِيِّ ؓ قَالَ: كُنْتُ فِي الْوَفْدِ الَّذِينَ أَتَوْا رَسُولُ اللهِ ﷺ فَزَوَّدَنَا اْلاَرَاكَ نَسْتَاكُ بِهِ، فَقُلْنَا: يَارَسُولُ اللهِ ﷺعِنْدَنَا الْجَرِيدُ، وَلكِنَّا نَقْبَلُ كَرَامَتَكَ وَعَطِيَّتَكَ.
(الحديث) رواه الطبراني في الكبير واسناده حسن مجمع الزوائد:٢ /٢٦٨
265. ஹஜ்ரத் அபூகைரா சுபாஹீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் வந்திருந்த தூதுக் குழுவினரில் நானும் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு “உஹா” மரக்குச்சிகளை மிஸ்வாக் செய்ய பயணத்தில் பயன்படுத்த (அன்பளிப்பாக)த் தந்தார்கள். “யாரஸூலல்லாஹ்! எங்களிடம் (மிஸ்வாக் செய்ய) பேரீச்சந் தோகைகளின் குச்சிகள் உள்ளன, ஆயினும் தங்களது வெகுமதியை, சன்மானத்தை ஏற்றுக் கொள்கிறோம்” என்று நாங்கள் கூறினோம்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
குறிப்பு:-“உஹா’ மரக்குச்சியையே மிஸ்வாக் குச்சி என்று சொல்லப்படும்.


பள்ளிவாசளின் சிறப்புகளும், அதில் ஆற்ற வேண்டிய அமல்களும்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (إِنَّمَا يَعْمُرُ مَسجِدَ اللهِ مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ وَأَقَامَ الصَّلوةَ وَآتَي الزَّكوةَ وَلَمْ يَخْشَ إِلاَّ اللهَ قف فَعَسَي أُولئِكَ أَنْ يَّكُونُوا مِنَ الْمُهْتَدِينَ۞).
التوبة:١٨
1. அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்பவர்கள், (யாரெனில்) அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர (வேறு எதையும், எவரையும்) அஞ்சவில்லையே அவர்கள்தாம் – அத்தகையோர் நேர்வழி பெற்றவர்களில் நின்றும் இருக்கப் போதுமானவர்கள்.
(அத்தவ்பா:18)
தெளிவுரை: பள்ளியை பரிபாலனம் செய்வது என்பது, நபி (ஸல்) அவர்களின் பள்ளியில் நடைபெற்ற எல்லா அமல்களும் தம் பள்ளியிலும் நடைபெறச் செய்வது என்பதாம். ஈமானின் பால் அழைப்பது, மறைவானவற்றைப் பற்றி பேசும் சபையை அமைப்பது, ஜமாஅத்துகளின் வருகை புறப்பாடு, அமல்களின் பால் மக்களை ஆர்வமூட்டும் சபைகளை உருவாக்குவது, கல்வி கற்பது, திக்ரு செய்வது, வெளியிலிருந்து வருவோரின் கல்வி, பயிற்சிக்காக ஏற்பாடு செய்வது, வணக்க வழிபாடுகள் புரிவது, விருந்தினரை உபசரிப்பது முதலியன.
وَقَالَ تَعَالي: (فيِ بُيُوتٍ أَذِنَ اللهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ لا يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَاْلآصَالِ ۞ رِجَالٌ لا لاَّ تُلْهِيهِمْ تِجَارَةٌ وَّلاَ بَيْعٌ عَنْ ذِكْرِ اللهِ وَإِقَامِ الصَّلوةِ وَإِيتَاءِ الزَّكوةِ لا يَخَافُونَ يَوْماً تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَاْلاَبْصَارُ۞).
النور:٣٧، ٣٦
2. (அல்லாஹ்வின்) இல்லங்களில் (வணக்க வழிபாடுகளின் மூலம்) அவை உயர்த் (தி கண்ணியப்படுத்)தப்படவும் அவற்றில் அவனது திருப்பெயர் கூறப்படவேண்டுமெனவும் அல்லாஹ் கட்டளையிடுகிறான், அவற்றில் காலையில் மாலையில் அவனை (நல்லடியார்கள்) துதி செய்வர். (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்கள் அவர்களை – வியாபாரமோ, (வாங்குவது) விற்பதோ, அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தொழுகையைக் கடைப்பிடிப்பதைவிட்டும் ஜகாத்துக் கொடுப்பதை விட்டும் – பராமுகமாக்காது; இன்னும் ஒரு நாளை அவர்கள் பயப்படுவார்கள்; அதில் இதயங்களும் பார்வைகளும் (திடுக்கத்தால்) புரண்டுவிடும்.
(அந்நூர்:36,37)
குறிப்பு:- வீடுகள் என்று கூறப்பட்டது, பள்ளிவாசல்களை குறிக்கும் பள்ளிகளுக்குரிய கண்ணியம், குளிப்பு கடமையானவர் பள்ளியில் நுழையாமல் இருப்பது, அசுத்தமான பொருளை பள்ளியில் கொண்டு செல்லாமல் இருப்பது, கூச்சல் குழப்பம் செய்யாமல் இருப்பது, உலக சம்பந்தமான பேச்சுக்களை பேசுவதோ, உலக சம்பந்தமான வேலைகளை செய்வதோ கூடாது, துர்வாடை வரும் பொருள்களை சாப்பிட்டு பள்ளியில் நுழைவதும் கூடாது.
(பயானுல் குர்ஆன்)
ஹதீஸ்கள்:-
٢٦٦– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: أَحَبُّ الْبِلاَدِ إِلَي اللهِ تَعَالَي مَسَاجِدُهَا، وَأَبْغَضُ الْبِلاَدِ إِلَي اللهِ أَسْوَاقُهَا.
رواه مسلم باب فضل الجلوس في مصلاه …رقم:١٥٢٨
266. “எல்லா இடங்களைக் காட்டிலும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடம் பள்ளிவாசல்கள், மிக வெறுப்பான இடம் கடைவீதிகள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)
٢٦٧– عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: اَلْمَسَاجِدُ بُيُوتُ اللهِ فِي اْلاَرْضِ تُضِيءُ لأَهْلِ السَّمَاءِ كَمَا تُضِيءُ نُجُومُ السَّمَاءِ لأَهْلِ اْلاَرْضِ.
رواه الطبراني في الكبير ورجاله موثقون مجمع الزوائد:٢ /١١٠
267. “பூமியில் அல்லாஹ்வின் வீடுகள் மஸ்ஜிதுகள், பூமியில் இருப்போருக்கு நட்சத்திரங்கள் மின்னுவது போல் வானில் உள்ளோருக்கு பள்ளிகள் மின்னுகின்றன” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٦٨– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ؓ أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ بَنَي مَسْجِدًا يُذْكَرُ فِيهِ اسْمُ اللهِ بَنَي اللهُ لَهُ بَيْتاً فِي الْجَنَّةِ.
رواه ابن حبان (واسناده صحيح):4/٤٨٦
268. “அல்லாஹ்வை நினைவுகூரக்கூடிய பள்ளியொன்றை எவரொருவர் கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்றைக் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” என ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
٢٦٩– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ غَدَا إِلَي الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ.
رواه البخاري باب فضل من غدا الي المسجد …رقم:٦٦٢
269. “எவர் காலை, மாலை பள்ளிக்குச் செல்வாரோ, அவருக்கு சொர்க்கத்தில் விருந்து உபசாரம் செய்ய அல்லாஹ் ஏற்பாடு செய்கிறான். காலையோ, மாலையோ எத்தனை முறை பள்ளிக்குச் செல்கிறாரோ, அத்தனை முறை விருந்து உபசாரத்துக்கு ஏற்பாடு செய்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٧٠– عَنْ أَبِي أُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: الْغُدُوُّ وَالرَّوَاحُ إِلَي الْمَسْجِدِ مِنَ الْجِهَادِ فِي سَبِيلِ اللهِ.
رواه الطبراني في الكبير وفيه القاسم ابوعبد الرحمن ثقة وفيه اختلاف مجمع الزوائد:٢ /١٤٧
270. “காலை, மாலை பள்ளிக்குச் செல்வது அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வதைச் சார்ந்தது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٧١– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَالَ: أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ قَالَ: أَقَطْ؟ قُلْتُ: نَعَمْ فَإِذَا قَالَ ذلِكَ، قَالَ الشَّيْطَانُ: حُفِظَ مِنِّي سَائِرَ الْيَوْمِ.
رواه ابوداؤد باب مايقول الرجل عند دخوله المسجد رقم:٤٦٦
271. “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்ததும் (أَعُوذُ بِاللّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ) நான் மகத்துவம் மிக்க அல்லாஹ்வைக் கொண்டும், அவனது சங்கைமிக்க உள்ளமையைக் கொண்டும், முடிவுறாத அவனது ஆட்சியைக் கொண்டும் தூக்கியெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்ற துஆவை ஓதுவார்கள்.”இந்த துஆ ஒதப்பட்டதும், “(இவர்) என்னை விட்டும் இன்றைய நாள் முழுதும் பாதுகாப்புப் பெற்றுவிட்டார்” என ஷைத்தான் சொல்கிறான்‘ என்று ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٢٧٢– عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ أَلِفَ الْمَسْجِدَ أَلِفَهُ اللهُ.
رواه الطبراني في الاوسط وفيه: ابن لهيعة وفيه كلام مجمع الزوائد:٢ /١٣٥.
272. “எவர் பள்ளியை நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٧٣– عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: اَلْمَسْجِدُ بَيْتُ كُلِّ تَقِيٍّ، وَتَكَفَّلَ اللهُ لِمَنْ كَانَ الْمَسْجِدُ بَيْتَهُ بِالرَّوْحِ وَالرَّحْمَةِ وَالْجَوَازِ عَلَي الصِّرَاطِ إِلَي رِضْوَانِ اللهِ إِلَي الْجَنَّةِ.
رواه الطبراني في الكبير والاوسط والبزار وقال: اسناده حسن قلت ورجال البزار كلهم رجال الصحيح مجمع الزوائد:٢/١٣٤
273. “பள்ளிவாசல் ஒவ்வொரு பயபக்தியாளரின் வீடு, எவருடைய வீடு பள்ளியாக இருக்குமோ, அவருக்கு சுகத்தைத் கொடுக்கவும், ரஹ்மத்தைக் கொடுக்கவும், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பதை எளிதாக்கவும் தன் பொருத்தத்தை அளிக்கவும் சொர்க்கத்தைத் தரவும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நான் செவியுற்றேன் என்று ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٧٤– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ أَنَّ نَبِيَّ اللهِ ﷺ قَالَ: إِنَّ الشَّيْطَانَ ذِئْبُ اْلإِنْسَانِ كَذِئْبِ الْغَنَمِ، يَأْخُذُ الشَّاةَ الْقَاصِيَةَ وَالنَّاحِيَةَ، فَإِيَّاكُمْ وَالشِّعَابَ، وَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ وَالْعَامَّةِ وَالْمَسْجِدِ .
رواه احمد:٥/٢٣٢
274. “ஆடுகளை வேட்டையாடும் ஓநாயைப் போல, மனிதனை வேட்டையாடும் ஓநாய் ஷைத்தான். மந்தையைவிட்டும் தனித்து (தூரமாக) இருக்கின்ற ஆட்டை ஓநாய் பிடித்துக் கொள்ளும். ஆகையால் பள்ளத்தாக்குகளில் தனித்து இருப்பதைத் தவிர்ந்து கொள்ளுங்கள், கூட்டாக இருப்பது, பொது மக்களுடன் சேர்ந்து இருப்பது, பள்ளியில் இருப்பது ஆகியவற்றை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதிப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٧٥– عَنْ أَبِي سَعِيدٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَعْتَادُ الْمَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالإِيمَانِ، قَالَ اللهُ تَعَالَي: (إِنَّمَا يَعْمُرُ مَسجِدَ اللهِ مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ۞).
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ومن سورة التوبة رقم:٣٠٩٣
275. “அதிகமாகப் பள்ளிக்குச் செல்பவரைக் கண்டால் அவர், ஈமான் உள்ளவர் என்று சாட்சி சொல்லுங்கள் (إِنَّمَا يَعْمُرُ مَسجِدَ اللّهِ مَنْ آمَنَ بِاللّهِ وَالْيَوْمِ اْلآخِرِ) “அல்லாஹ் வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டவர்களே பள்ளிகளைச் செழிப்பாக்கி வைப்பார்கள்” என்று அல்லாஹ் கூறியுள்ளான், என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٧٦– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا تَوَطَّنَ رَجُلٌ مُسْلِمٌ الْمَسَاجِدَ لِلصَّلاَةِ وَالذِّكْرِ، إِلاَّ تَبَشْبَشَ اللهُ لَهُ كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ بِغَائِبِهِمْ إِذَا قَدِمَ عَلَيْهِمْ.
رواه ابن ماجه باب لزوم المساجد وانتظار الصلوة رقم:٨٠٠
276. “நீண்டகாலமாக வெளியூரிலிருந்த உறவினரைக் கண்டு வீட்டார் மகிழ்வது போன்று தொழுவதற்கும் திக்ரு செய்வதற்கும் பள்ளியைத் தங்குமிடமாக ஆக்கிக் கொண்டவரைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
தெளிவுரை:- பள்ளியைத் தங்குமிடமாக்கிக் கொள்வதன் கருத்து, குறிப்பாக பள்ளியுடன் தொடர்பு கொண்டு பள்ளிக்கு அதிகம் செல்வதாம்.
٢٧٧– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ رَجُلٍ كَانَ يُوَطِّنُ الْمَسَاجِدَ فَشَغَلَهُ أَمْرٌ أَوْ عِلَّةٌ، ثُمَّ عَادَ إِلَي مَا كَانَ إِلاَّ تَبَشْبَشَ اللهُ إِلَيْهِ كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ بِغَائِبِهِمْ إِذَا قَدِمَ.
رواه ابن خزيمة:١ /١٨٦
277. “ஒருவர் பள்ளியைத் தமது தங்குமிடமாக வைத்திருந்தார், (அடிக்கடி பள்ளிக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்) சில வேலையின் காரணமாகவோ, நோயின் காரணமாகவோ அவரால் பள்ளிக்கு வரமுடியாமல் ஆகிவிட்டது. பிறகு மீண்டும் பழையபடி பள்ளியைத் தம் தங்குமிடமாக ஆக்கிக் கொண்டார் எனில், எவ்வாறு வெளியூர் சென்று திரும்பியவரைப் பார்த்துத் அவரது வீட்டார் மகிழ்ச்சியடைவார்களோ, அவ்வாறே அல்லாஹ் வும் அவரைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு குஸைமா)
٢٧٨– عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا، اَلْمَلاَئِكَةُ جُلَسَاؤُهُمْ، إِنْ غَابُوا يَفْتَقِدُونَهُمْ، وَإِنْ مَرِضُوا عَادُوهُمْ، وَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ، وَقَالَ! : جَلِيسُ الْمَسْجِدِ عَلَي ثَلاَثِ خِصَالٍ: أَخٌ مُسْتَفَادٌ، أَوْ كَلِمَةٌ مُحْكَمَةٌ، أَوْ رَحْمَةٌ مُنْتَظَرَةٌ.
رواه احمد:٢ /٤١٨
278. “மஸ்ஜிதுகளுக்கென முளைக்கம்புகள் உள்ளன, எம்மக்கள் பள்ளியில் ஒன்று கூடுவதை வழமையாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் பள்ளியில் முளைக்கம்புகள் மலக்குகள் அவர்களுடன் அமர்கிறார்கள், பள்ளியில் அவர்கள் இல்லையென்றால் மலக்குகள் அவர்களைத் தேடுகின்றனர். அவர்கள் நோயுற்றால் மலக்குகள் அவர்களை சுகம் விசாரிக்கின்றனர். ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியில் சென்றால் அவர்களுக்கு மலக்குகள் உதவுகின்றனர். பள்ளியில் இருப்பவர்கள் மூன்று பலன்களில் ஏதேனும் ஒன்றை அடைந்து கொள்கின்றனர். (இஸ்லாமிய) சகோதரரைச் சந்தித்து மார்க்கப் பலன் அடைந்து கொள்கின்றனர், அல்லது மார்க்க ஞானம் கேட்டுப் பெறுகின்றனர் அல்லது ஒவ்வொரு முஸ்லிமும் எதிர்பார்க்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٧٩– عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: أَمَرَ رَسُولُ اللهِ ﷺ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ.
رواه ابوداؤد باب اتخاذالمساجد في الدور رقم:٤٥٥
279. “நபி (ஸல்) அவர்கள், தத்தமது பகுதிகளில் பள்ளிகள் அமைக்க கட்டளையிட்டார்கள், மேலும் பள்ளியைத் துப்புரவாக வைத்திருக்கவும் அவற்றில் நறுமணம் கமழச் செய்யவும் கட்டளையிட்டார்கள்‘ என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(அபூதாவூத்)
٢٨٠– عَنْ أَنَسٍ ؓ أَنَّ امْرَأَةً كَانَتْ تَلْقُطُ الْقَذَي مِنَ الْمَسْجِدِ فَتُوُفِّيَتْ فَلَمْ يُؤْذَنِ النَّبِيُّ ﷺ بِدَفْنِهَا، فَقَالَ النَّبِيُّ ﷺ: إِذَا مَاتَ لَكُمْ مَيِّتٌ فَآذِنُونِي، وَصَلَّي عَلَيْهَا، وَقَالَ: إِنِّي رَأَيْتُهَا فِي الْجَنَّةِ لِمَا كَانَتْ تَلْقُطُ الْقَذَي مِنَ الْمَسْجِدِ.
رواه الطبراني في الكبير ورجاله رجال الصحيح مجمع الزوائد:٢ /١١٥
280. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு பெண்மணி பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தி வந்தார், அப்பெண்மணி இறந்துவிட்டார், அவரை அடக்கம் செய்த விபரம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, “உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதன் பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு ஜனாஸாத் தொழுகை தொழுதார்கள், “இப்பெண்மணி பள்ளியில் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்துவந்ததால் இவர் சொர்க்கத்தில் இருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)